சுவாசிக்கும் காற்று நம் உடலுக்குள் அணுக்களாக எப்படி உருவாகின்றது…?

Body cells formation

சுவாசிக்கும் காற்று நம் உடலுக்குள் அணுக்களாக எப்படி உருவாகின்றது…?

உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்றால் அந்த அவதிப்படும் வேதனையின் உணர்வலைகள் அவன் உடலிலிருந்து வெளிப்படுகிறது.

அப்படி வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

அதே சமயத்தில் அவர் அவதிப்படுகின்றார் என்பதை நாம் உற்றுப் பார்க்கப்படும் பொழுது நம் கண்களில் உள்ள கரு விழி அவரின் ரூபத்தை நம் எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாக்கி விடுகின்றது.

ஊழ்வினை என்பது வித்து,

பதிவாக்கிய பின் கண்ணின் காந்தப் புலனறிவோ எந்த மனிதன் உடலிலிருந்து வேதனைப்பட்ட உணர்வுகள் வந்ததோ சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும் அந்த வேதனைப்பட்ட உணர்வலைகளைக் கவர்கின்றது.

கவர்ந்த பின் ஆன்மாவாக மாறி நம் சுவாசத்திற்குள் வந்து உயிரில் பட்டு உணர்ச்சிகளாகி வாயிலே உமிழ் நீராக மாறி உடலுக்குள் நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலக்கின்றது.

ஆகாரத்துடன் கலந்த வேதனையான உணர்வுகள் இரத்தமாக மாறி இரத்தநாளங்களில் இணையும் பொழுது அந்த வேதனையை அணுவை உருவாக்கும் கருவாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

அதாவது அந்த வேதனைப்பட்ட உணர்வை நாம் நுகரப்படும் பொழுது நம் உயிரிலே பட்டபின் “ஓ…”என்று அந்த உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றது.

அப்பொழுது அந்த உணர்வலைகள் நம் உடல் முழுவதற்கும் படருகின்றது. நம் உடலில் சுழன்று வருகின்றது. உடலுக்குள் “ம்…” என்று ஐக்கியமாகி விடுகின்றது

நம் உயிரிலே பட்டபின் இரத்த நாளங்களில் அது கலந்து விடுகின்றது.

இரத்த நாளங்களில் கலந்த பின் அவர் வேதனைப்படும் உணர்வைத் திரும்பத் திரும்ப எண்ணினோம் என்றால் அது கருவாக உருவாகி விடுகின்றது.

நாம் இப்பொழுது ரோட்டில் நடந்து போகின்றோம். எல்லாவற்றையும் கூர்ந்து பார்ப்பதில்லை. ஆனால் சாதாரணமாகப் பார்க்கும் பொழுது சிறிது நேரம் போனது என்றால் நாம் பார்த்ததை மறந்து விடுகின்றோம்.

ஆகவே சாதாரணமாக அப்படிப் பார்க்கும் நிலைகள் எல்லாமே நம் உடலுக்குள் வந்து இரத்த நாளங்களில் கருத்தன்மை அடைவதில்லை.

நாம் பற்றுடன் ஒரு வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை ஊழ் வினை என்ற வித்தாகி விடுகின்றது.

ஒரு நண்பனோ அல்லது சொந்தமோ அல்லது பந்தமோ அந்தப் பாச உணர்வுகளால் நுகர்ந்து விட்டால் அந்த உணர்வுகள் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அது கருவாக உருவாகின்றது.

உதாரணமாக ஒரு கோழி “கருவுற்றால்…”
1.அது எந்தெந்தச் சேவலுடன் இணைந்ததோ
2.அந்தச் சேவலை எண்ணி அது “கேரும்…!”

நாட்டுக் கோழி எல்லாம் எடுத்துக் கொண்டால் எந்தெந்தச் சேவலுடன் இணைந்திருந்ததோ அதிலே கருவுற்ற குஞ்சுகளைப் பார்த்தோம் என்றால் குஞ்சுகளில் நிறங்கள் வித்தியாசமாகவே இருக்கும்.

அப்போது இந்த உணர்வின் கேருதல் (பல சேவல்களை எண்ணுவதால்) அந்தந்த உணர்வின் கருவை முழுமையாக்குகின்றது. அதனால் பல நிறத்தில் குஞ்சுகள் உருவாகின்றது. இதைப் போலத்தான்
1.வேதனைப்படுவோரை நாம் திரும்ப திரும்ப எண்ணினோம் என்றால்
2.அது கேருதலுக்குண்டான உணர்வின் நிலை தான்,

வேதனைப்பட்டோரைத் திரும்ப திரும்ப எண்ணும் பொழுது அது நமக்குள் கருவாகின்றது.
சில நாட்களில்… அந்த வேதனைப்பட்டோரின் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் சத்தை
1.அக்குணத்தை அம்மணத்தை நாம் நுகர்ந்தோம் என்றால்
2.அந்த உணர்வின் சத்தாக நமக்குள் இயக்கும்.

இப்படி நம் உடலில் இரண்டற இணைந்து கொண்டால் அதன் ஞானமாக அந்த அணு இயங்க தொடங்கி விடுகின்றது. அதற்குப் பின் நம்மால் சிறிய விஷயமாக இருந்தாலும் வேதனைப்படாமல் இருக்க முடியாது.

ஏனென்றால் வேதனையால் கருவாகி உருவான அணுக்களுக்கு வேதனைப்படும் உணர்வுகளே ஆகாரமாகச் செல்கின்றது. அது வளர்ந்தால் கடைசியில் நோயாகி வேதனைப்பட்டு வாழும் உயிரினங்களாக நம்மை மாற்றிவிடும் நம் உயிர்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகளே உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகி அதனின் பெருக்கமாகி நம் உடலுக்குள் அதனதன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.வானை உற்று நோக்கிப் பார்த்து
2.மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசித்தால்
3.அதற்குத்தக்க அந்த ஒளியான அணுக்கள் உடலுக்குள் பெருகும்.
4.அது பெருகப் பெருக நம்மை அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலே அழைத்துச் செல்லும்.
5.மகரிஷிகளுடன் ஒன்றி வாழச் செய்யும்…!

Leave a Reply