“சிரமப்பட்டுத் தயார் செய்த ஞான வித்தை” உங்களுக்குள் வாக்காகக் கொடுத்துப் பதியச் செய்கின்றோம் – பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

Uyir Suvaasam

“சிரமப்பட்டுத் தயார் செய்த ஞான வித்தை” உங்களுக்குள் வாக்காகக் கொடுத்துப் பதியச் செய்கின்றோம் – பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

 

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் தீமைகள் என்று எது வந்தாலும் அந்தத் தீமைகளை அகற்றக்கூடிய வாக்காக ஞானிகளின் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.

திரும்பத் திரும்ப ஞானிகளின் உணர்வுகளை உரமாகக் கொடுத்து அந்த வித்தை உங்களுக்குள் விளையச் செய்கின்றோம்.

அப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோர் எத்தனை பேர் இருக்கின்றார்கள்…!

1.உங்கள் நோய்கள் அகலும்
2.உங்கள் தொழில் சீராகும்
3.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும்
4.எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்
5.நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று தான்
6.யாம் (ஞானகுரு) வாக்கைக் கொடுக்கின்றோம்

இவ்வளவும் சொன்ன பிற்பாடு “எங்கெங்க…! குடும்பத்தில் அல்லது தொழிலில் ஒரே கஷ்டமாக இருக்கிறது…” என்று இதைத்தான் சொல்கிறார்கள்.

அதெல்லாம் நீங்கிப் போகும் நன்றாக இருப்பீர்கள் என்று மறுபடியும் யாம் சொன்னாலும்
1.நீங்கள் சொல்கிறீர்கள்…!
2.ஆனால் என் பையன் எப்போது பார்த்தாலும் என்னிடம் முரண்டு செய்து கொண்டே இருக்கின்றான்
3.வேலை பார்க்கும் இடத்தில் ஒரே பிரச்னையாக வந்து கொண்டே இருக்கின்றது என்று
4.யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை அப்பொழுதே ஜீவனற்றதாக மாற்றி விடுகின்றீர்கள்.

எத்தனையோ சிரமப்பட்டு தந்திரமாக உங்கள் உடலில் இதெல்லாம் பாய்ச்சி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் ஞான வித்தை தங்க வைக்க வேண்டும் என்று யாம் முயற்சி எடுக்கின்றோம். ஆனால்
1.மண்ணிலே விதைத்த விதைகளை எறும்பு எடுத்துப் பொறுக்கிக் கொண்டு போய்
2.எப்படி முளைக்காது செய்து விடுகின்றதோ இதைப்போல
3.உங்கள் உடலில் ஏற்கனவே பதிவான சாப அலைகள்
4.யாம் பதிய வைக்கும் வித்தை உங்களுக்குள் ஆழப் பதியாமல்
5.அதை முளைக்கவிடாது மாற்றிவிடுகின்றது.

ஏனென்றால் இதை எல்லாம் அனுபவரீதியில் தான் குருநாதர் எமக்குக் கொடுத்தார். ஆகையினால் நான் உங்களைக் குறையாக எண்ணவில்லை…! குறையாகச் சொல்லவில்லை…!

முந்திய உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தது அது உங்களை அறியாது எப்படி இயக்குகின்றது, அதிலிருந்து எப்படியும் நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் இதை விளக்கமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

இது ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் ஞான ஞானத்தின் உணர்வைப் பெற்று நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து வாழ வேண்டும்.

உங்களிடமிருந்து மகிழ்ச்சி என்ற நிலைகள் வரவழைப்பதற்கே இதைச் சொல்கிறோம். குருநாதர் இட்ட கட்டளைப்படி இதைச் செய்கின்றோம்.

Leave a Reply