வியாழன் கோளுக்குப் பெயர் “குரு” என்று சொல்கிறோம்? குரு என்று ஞானிகள் ஏன் சொன்னார்கள் என்று அறிந்திருக்கின்றோமா…!

view-of-jupiter

வியாழன் கோளுக்குப் பெயர் “குரு” என்று சொல்கிறோம்? குரு என்று ஞானிகள் ஏன் சொன்னார்கள் என்று அறிந்திருக்கின்றோமா…!

 

 

இந்த பூமியே சீக்கிரம் அழியப் போகின்றது. ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞான உலகில் அணுக் கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவிவிட்டது.

 

அவைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து விட்டது. இந்தப் பூமியின் நடு விட்டத்திற்குள் அணுக்கதிரியக்கங்கள் ஊடுருவிப் போய்விட்டது.

 

அந்த அணுக் கதிரியக்கங்கள் சூரியனின் வெப்ப காந்தங்களுடன் கலந்தவுடனே

1.இந்த உணர்வுகள் அதில் இருக்கக்கூடிய காந்தமும்

2.பூமியில் இருக்கக்கூடிய காந்தமும்

3.ஒரு உலோகத்திற்குள் இருக்கக்கூடிய காந்தங்களுக்குள் மோதியவுடனே

4.புயல் அடித்த மாதிரி இரும்பே உருகுகின்றது.

5.அந்தக் கதிரியக்கங்கள் மீண்டும் அது வளர்ச்சி அடைகின்றது.

 

அது ஓங்கிய நிலைகள் கொண்டு சுழிக் காற்று போன்று எல்லாவற்றையும் பிளந்து அதனின் வீரிய சக்தி அடங்குகின்ற வரையிலும் இங்கிருக்கக்கூடிய செடி கொடி கல் மரம் கட்டிடங்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டுப் போய்க்கொண்டே இருக்கும்.

 

ஏனென்றால் இந்தப் பூமியில் இருக்கக்கூடிய இந்த அணுவின்
விஷத்தை எடுத்துப் பிளந்து (NUCLEAR REACTION) அது செய்து கொண்ட நிலை இது.

 

வேறு வேறு வேலைகளுக்குக் கரண்ட் உற்பத்தி செய்வதற்காக அதைச் செய்கிறோம் என்று விஞ்ஞானிகள் சொல்லலாம். ஆனாலும் இதனுடைய தணிந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

 

பூமிக்குள் அணுவைப் பிளந்தால் விபத்து என்று தெரிந்த பின் பூமியைக் கடந்து வான வீதியிலே இந்த அணுக்களைப் பரீசீலனை செய்து வெடிக்கச் செய்தார்கள்.

 

வான்வீதியிலும் இந்த அணுக்களுடைய தன்மை படர்ந்து விட்டது. மற்ற கோள்களுக்குள்ளும் சூரியனுக்குள்ளும் அது சென்று விட்டது.

 

அதே சமயத்தில் வான்வீதியில் படர்ந்த அந்த அலைகள் பூமியின் ஈர்ப்புக்குள் வந்து நமக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய திரையையும் (OZONE LAYER) பிளந்து மீண்டும் இந்த விஷத்தின் தன்மை பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் வந்து கொண்டு இருக்கின்றது.

 

இவை அனைத்தும் பூமியின் நடு விட்டம் அடைந்து விட்டது. வெப்பத்தின் தணல் கூடிவிட்டது. பனிப் பாறைகள் உருகத் தொடங்கிவிட்டது.

 

உருகிய நீர்கள் பூமியில் இருக்கக்கூடிய நிலத்தை ஒடுக்கச் செய்து கொண்டிருக்கின்றது. மீண்டும் மீண்டும் வெப்பத்தினால் பனிப்பாறைகள் கரைய அந்த நீரின் தன்மை அதிகமாகப் படரும் தன்மை வரப்போகும் போது சூரியனை விட்டு பூமி நகர்ந்து சென்று விடுகின்றது.

 

விலகிச் சென்று மீண்டும் இது குறைந்தவுடனே (பூமி) பனிப்பாறையாக உறைந்துவிடும். நம் உயிர் எல்லாம் அந்த பனிப் பாறைக்குள் சிக்கிவிடும்.

 

இன்று கோழி முட்டைகளை ஐஸ் பெட்டியில் வைத்துவிட்டு அடுத்துத் தேவைப்படும் பொழுது மிஷினில் சூடு செய்து குஞ்சு பொரிப்பார்கள்.

 

இதே மாதிரி முந்தி வியாழன் கோளில் நம் உயிர் எல்லாம் சிக்கப்பட்டு மீண்டும் அதிலிருந்து தெறிக்கப்பட்டு வான வீதிக்கு வந்து இந்தப் பூமிக்குள் வந்து தான் நாம் மனிதனாகப் பிறந்திருக்கின்றோம்.

 

அதனால் தான் வியாழன் கோளை… “குரு…” என்று சொல்வது.

 

அதிலே மனிதர்கள் வாழ்ந்து அதிலேயும் விஞ்ஞான வளர்ச்சியாகி இத்தகைய தவறு செய்து பயன்படுத்திய அந்த ஆயுதங்கள் இன்னும் இருக்கின்றது.

 

அதே உணர்வு வளரப்படும்போது அது வளர வளர இந்தப் பூமியும் குறையப் போகின்றது.

 

பூமியில் இங்கிருக்கும் விஞ்ஞானிகள் செய்து வைத்திருக்கின்ற ஆயுதங்களைக் காட்டிலும் பன் மடங்கு சக்தி வாய்ந்த நுட்பமான ஆயுதங்கள் எல்லாம் அங்கே வியாழன் கோளில் புதைந்து கிடகின்றது.

 

இதைக் குருநாதர் காட்டியிருக்கின்றார்.

 

வியாழன் முழுவதும் பனிப்பாறைகளாகி அதற்குள் சிக்கிய உயிர்கள் அதிலே வந்த அந்த ஒவ்வொரு உயிரணுவினுடைய தன்மையினுடைய நிலைகள்தான் மீண்டும் இது ஜீவன் பெற்றுப் பல நிலைகள் வந்தது.

 

வியாழன் கோளைப் பற்றியும் மற்றும் இருபத்தியேழு நட்சத்திரங்களைப் பற்றியும் சில உண்மை நிலைகள் அது எப்படி வந்தது என்று குருநாதர் காட்டினார்.

 

இதை விஞ்ஞானிகள் கண்டு கொள்ள ரொம்ப நாளாகும். இப்போது நான் சொன்னதை இனிமேல் கண்டுபிடித்து ஒரு காலத்தில் சொல்வார்கள்.

Leave a Reply