படித்தவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள்… படிக்காதவர்கள் பதிவாக்குகிறார்கள்…!

Saamigal upadesam

படித்தவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள்… படிக்காதவர்கள் பதிவாக்குகிறார்கள்…! 

யாம் அருள் ஞானிகள் கண்ட உண்மைகளை உபதேசிக்கின்றோம். அதையெல்லாம் புரியவில்லை என்று எண்ணினீர்கள் என்றால் அது புரியாத அணுவாகத் தான் உங்களுக்குள் மாறும்.

புரிய வேண்டும்… என்று “ஏங்கிப் பெற்றால்” அது கருவாகி உங்களுக்குள் அணுவாக உருவாகும்.

அந்த அண்டமும் அகண்ட அண்டமும் எப்படி உருவானது என்ற நிலையை அந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்த அறிய முடியும்.

அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்து துருவனாகி துருவத்தின் ஆற்றலை அறிந்ததனால் அந்த அறிவின் தன்மையை விளையச் செய்து அவன் உடலை உருவாக்கிய உயிர் ஒளியின் சரீரமாக இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.

அதனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

1.ஆனால் இடைமறித்து
2.சாமி என்ன சொல்கிறார்…!
3.நமக்கு என்ன அர்த்தமாகின்றது?
4.அவர் “என்னென்னமோ” சொல்கிறார் என்றால் என்ன ஆகும்?

“நான் படிக்காதவன் தான்..,” ஆனால் பேசுகின்றேன்.

படித்தவர்கள் சிந்திக்கும் பொழுது படித்ததை வைத்து இது என்னமோ சொல்கின்றார் என்ற நிலைகளில் “விட்டுவிடுவார்கள்”

1.மிகவும் படிக்காதவர்கள்
2.யாம் சொல்வதை “என்ன சொல்கிறார்…” என்று கூர்ந்து கவனித்தால்
3.அந்த உணர்வின் கருவாகிவிட்டால்
4.தன்னையும் அறிகின்றார் அண்டத்தையும் அறிகின்றார் அகண்ட அண்டத்தையும் அறிகின்றார்.
5.துருவ நட்சத்திரம் தனக்குள் எப்படி ஒளியாக மாற்றுகின்றதோ அந்த நிலையை அடைய முடியும்.

ஆக, நான் சொல்கிறேன் என்றால் எதை வைத்துச் சொல்கின்றேன்? நான் எந்தப் பாட நூல்களையும் படிக்கவில்லை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் கண்டுணர்ந்தார். அந்த உணர்வின் அணுக்களை எனக்குள் பதிவு செய்தார். இந்த உணர்வின் நினைவைப் பாய்ச்சினேன். அறிந்து கொண்டேன்.

இந்த அண்டங்கள் எப்படி உருவானது என்ற நிலையை அகஸ்தியன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டான். அவனுக்குள் கண்ட உணர்வுகள் அந்த உணர்ச்சியின் தன்மைகள் இந்தப் பூமியில் உண்டு.

1.அதை நுகரும் ஆற்றல் வரும் பொழுது இந்த உணர்வின் தன்மை
2.உணர்த்தும் தன்மையும்
3.உணரும் தன்மையும் வருகின்றது.

இதையெல்லாம் நீங்களும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன்.

“நாங்கள் ஒன்றும் படிக்கவில்லையே” இதை என்றைக்குத் தெரிந்து கொள்ளப் போகின்றோம்…! என்று எண்ணினால் அதைத் தடைப்படுத்துகின்றீர்கள் என்று அர்த்தம்.

ஆனால் இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் அகஸ்தியன் எப்படி இன்றும் விண்ணிலே என்றும் பதினாறு என்ற நிலையில் மரணமில்லாப் பெரு வாழ்வாக பிறவியில்லா நிலையாக வாழும் நிலைகள் போன்று
1.மனிதான நாம் அவன் வழிகளிலே சென்றால்
2.நிச்சயம் அங்கே செல்ல முடியும்.

Leave a Reply