“நல்லது நடக்கவில்லையே” என்று உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை – “திறமைசாலிகளாக… ஞானிகளாக” ஆக முடியும்

 

competent.jpg

“நல்லது நடக்கவில்லையே” என்று உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை – “திறமைசாலிகளாக… ஞானிகளாக” ஆக முடியும்

1.ஒரு இயந்திரத்தை இயக்கப்படும்பொழுது
2.சந்தர்ப்பம் வரும்பொழுது எது எதை எந்தந்தக் காலத்தில் இணைத்தால் அது வலுப்பெறும் என்ற நிலையை
3.மனிதன் இன்று அனுபவ ரீதியில்தான் அதைக் காணுகின்றான்.

இதைப்போன்றுதான் ஒரு உணர்வின் தன்மை தாக்குகின்றது என்றால் அந்த உணர்வின் தன்மை நினைவிற்கு கொண்டு வருகின்றோம்.

ஒருவர் திரும்பத் திரும்பச் செய்கின்றார். ஆனால் “அது முடியாது” போகின்றது.

ஒரு இயந்திரம் ஒரு நூல் (ALIGNMENT) சாய்ந்திருக்கும். நமக்குப் புரியாது. அதில் பேரிங் (BEARING) போட்டிருப்போம். எந்தப் பக்கம் அழுத்தமாகின்றதோ அங்கு வெப்பம் ஆகின்றது நாம் அதைத் தொட்டுப் பார்த்தாலும் அது தெரியவில்லை.

மனிதனில் இது செயல்படும் பொழுது
1.“என்ன செய்தாலும் ஆகவில்லை” என்ற உணர்வுகளை  எடுத்துக் கொண்டு “அளவுகோல்” பார்த்தால்
2.நம் உணர்வுக்குத் தக்க சரியாகத்தான் இருக்கின்றது என்று நினைப்போம்.

இதைப் போன்று உணர்வின் அழுத்தத்திற்கொப்ப…, “சரி” என்று ஏற்றுக் கொள்ளும் பருவம் வருகின்றது.

1.சிறிது சிந்தித்து
2.இதனுடைய நிலைகளை “எப்படியும் கண்டுணர வேண்டும்” என்ற உணர்வினைக் கூட்டினால்,
3.அந்தச் “சிறு தவறை” கண்டுகொள்ள முடிகின்றது.

அந்த இயந்திரத்தில் பேரிங் (BEARING) ஓடும் இடத்தில் எந்த பக்கம் வெப்பம் அதிகமாக இருக்கின்றது…? எந்த பக்கம் வெப்பம் குறைவாக இருக்கின்றது…? என்று சிந்தனை வரும்.

அப்பொழுது இந்தப் பக்கம் அழுத்தம் அதிகமாக இருக்கின்றது, இதை மாற்றி அமைத்தால்…, “சரியாக வரும்” என்ற சிந்தனை வரும்.

மனிதனின் வாழ்க்கையில் நுண்ணிய நிலைகள் உண்டு.

இதைத் தெரிந்து கொண்டபின் வாழ்க்கையில் தன் வலிமையின் எண்ணம் கொண்டவர்கள் ஞானியாகி விடுகின்றனர்.  சந்தர்ப்பத்தில், உணர்வின் வலிமை கொண்டு அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றனர்.

தியான வழிகளில் உள்ள அன்பர்கள் சில சந்தர்ப்பங்களில்
1.எண்ண வலுவைக் கூட்டும் பொழுது
2.உண்மையின் நிலையையும்
3.வாழ்க்கையில் எது வந்தது…? என்றும் சிந்தித்துக் கண்டுணர முடியும்.
4.மாறாக…. “உணர்ச்சி வயப்படுவதில்லை…”

இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால்.., பள்ளியில் பாடங்களைப் பயின்றாலும் அளவுகோலைக் காட்டி அனுபவத்தைக் கொண்டு வருகின்றனர்.

பாட நிலையை மட்டும் படித்துவிட்டுச் செயல்படுத்துவதில்லை.

சோப்பு செய்ய இன்னென்னவைகளைக் கலந்தால் சோப்புக் கட்டி உருவாக்கலாம் என்று சொல்லுவார்கள்… புத்தகங்களிலும் போட்டிருக்கும்.

அதையெல்லாம் படித்தபின்… நான் எல்லாம் தெரிந்து கொண்டேன் என்று சரக்குகளை வாங்கி வந்து நாம் செய்தால் எப்படி இருக்கும்.

அதில்,
1.எதை முதலில் சேர்ப்பது…?
2.எதை இடையில் சேர்ப்பது…? என்று இருக்கும்.
3.அப்படிக் கரைத்தாலும் அதனைக் காய்ச்சும் முறை ஒன்று உண்டு.
4.காய்ச்சும் போது வெப்பத்தைக் கொடுக்கும் நிலைகள் உண்டு. அந்த விறகை வைத்து எரித்து வெப்பத்தைக் கொடுப்பதிலும் சில பக்குவம் உண்டு.

அதிலும் கேவன் விறகிலும் நெருப்பு தெரியும். ஆனால், அழுத்தம் குறைவு சீக்கிரம் வேகாது. முருங்கை மரத்தின் விறகில் வெப்பத்தின் தன்மை குறைவு.

சோப்பு உருவாக்குவதென்று இதிலே போனால் அழுத்தம் குறையும், சோப்பின் தன்மை பதம் கெட்டுவிடும். நீண்ட நேரம் ஆகும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து இணைத்துச் செயல்படும் நிலைகள் இல்லாது கட்டி உறையாது.

இதெல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவேண்டிய நிலைகள்.

ஏனென்றால் இதைப்போல சந்தர்ப்பத்தை உருவாக்கி வாழ்க்கையில் வரும் தன்மையை
1.நீங்கள் திறமைசாலியாக வரக்கூடிய அனுபவத்தை உங்களுக்குள் நினைவாக்கும் பொழுது,
2.”உற்றுப் பார்த்தால்” நினைவு வருகின்றது.
3.பிழைகளிலிருந்து மீளச் செய்கின்றது.

தீமைகளிலிருந்து… கஷ்டங்களிலிருந்து… வேதனைகளிலிருந்து… சிக்கல்களிலிருந்து… வரும் அபாயங்களிலிருந்து… மீளக்கூடிய சந்தர்ப்பமாக
1.மறைந்த நிலைகளை அறியும் நுண்ணறிவாக
2.ஞானத்தை ஊட்டும் நிலைகள் வருகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு ஞானியும் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட “சந்தர்ப்பம்…,” தான் சந்தித்த அந்தக் கடுமையான நிலைகளிலிருந்து எப்படியும் மீள வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரும் பொழுது தான் எல்லாவற்றையும் அறிந்துணரும் அறிவாக அவர்களுக்குள் வருகின்றது.

அவர்களைப் போன்றே நாமும் பேருண்மைகளை அறிய முடியும் “அறிய வேண்டும்” என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

Leave a Reply