பொன்மொழிகள் – Quotes

நாளையும் கோளையும் பார்த்து செயல் புரிபவர் தம்மை அறியாதவரே.

 

“எதனையும் மாற்றியமைக்கும் திறன் மனிதருக்கு உண்டு” என்று அறிந்து தன் உணர்வின் ஆற்றலை வளர்ப்பவரை நாளும் கோளும் என்ன செய்துவிட முடியும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

நல் ஞானியர் காண்பித்த தெய்வங்கள் அனைத்தும் பேரண்ட இயக்க சூட்சமத்தை உணர்த்துவதற்குகொடுத்த உருவகங்களே.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

உயிரான ஈசன் இன்றி இந்த உடலில் ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்த்தவே, “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என உரைத்தனர் மெய்ஞானிகள்.

 

http://omeswara.blogspot.in/

Leave a Reply