பொன்மொழிகள் – Quotes

காட்டிற்குள் சென்றுதான் ஞானத்தைப் பெறமுடியும் என்று கருதுவது தவறு. இல்லறத்திலிருந்தும் மெய்ஞானத்தைப் பெறமுடியும். நமது உடலே ஒரு காடு போன்றதுதான். சிங்கம் போன்ற குணங்களும் மானைப் போன்ற குணங்களும் மற்ற மிருக வகை குணங்கள் அனைத்தும் இந்த உடலுக்குள் உண்டு.

 

எனவே இந்த காடு போன்ற உடலுக்குள் மனதை ஒன்றுபடுத்தி, குருவின் துணையுடன் மெய்ஞானிகளின் அருளைப் பெறும் பொழுதுமெய்ஞானம் அனைத்தும் நாம் பெறமுடியும்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

ஞானிகள் செப்பு மொழிகள் காலத்தால் அழியா போக்கிஷங்கள். அவைகளை அறிய நேரும்போது உங்கள் ஞானக்கதவைத் திறந்து வையுங்கள். அது உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களை, தத்துவங்களைக் கேட்க நேரும் பொழுது நமது கவலைகள், வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும்.

 

வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டுள்ளவர்களிடத்தில் நல் உணர்வுகள் எதுவும் பதியாது.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

மனிதக்கூடு ஒரு ஓலை வேய்ந்த வீடு போன்றது. ஏனெனில் உயிரான்மா இந்த மனிதக் கூட்டில் இருக்கும் பொழுதுதான் தீமையை விளைவைக்கும் உணர்வுகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.

 

எனவே, மனிதப் பிறப்பின் சிறப்பை அறிந்து பயணத்தின் பாதையை அழியா ஒளிச்சரீரம் நோக்கிச் செலுத்துவோம்.

Leave a Reply