எதுவும் அழிவதில்லை… மாறுகின்றது… மாற்றமடைகின்றது

எதுவும் அழிவதில்லை… மாறுகின்றது… மாற்றமடைகின்றது

 

நரகாசுரனைக் கொல்கிறான் என்றால்… மோட்சத்தைக் கொடுக்கின்றான்
1.அதாவது மறுபடியும் இயக்குவதற்கு அதைக் கொண்டாருகின்றார்கள்.
2.காவியங்களில் இப்படித் தான் எழுதி உள்ளார்கள். அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டுமே…!

கொடுத்த வரப்படி எதுவுமே மடிவதில்லை… மடியச் செய்கிறது.
1.உணர்வை எடுத்தவுடன் இங்கே இயக்கச் செய்கிறது.
2.இங்கேயும் காக்கச் செய்கின்றது மற்றொன்றையும் காக்கச் செய்கின்றது.

வரப்படி எவரையும் கொல்வதில்லை… நாராயணன் யாரையாவது கொல்கின்றானா…? விஷ்ணு யாரையாவது கொகின்றானா…? கடைசியில் எந்த முடிவுக்கு வருகின்றார்கள்…?

காவியத்தினுடைய பொருளை இவ்வளவு அழகான நிலைகளில் காட்டியுள்ளார்கள்.
1.நஞ்சு அகன்றாலும் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்கிறது.
2.எதுவும் அழிவதில்லை… மாறுகின்றது… மாற்றமடைகின்றது.

அதைத்தான் கீதையிலே… உடல் மடிகின்றது உணர்வுகள் வளர்கின்றது அந்த உணர்வுக்கொப்ப உருப் பெற்றது. இன்றைய நிலை நாளை இல்லை. இன்றைய செயல் நாளையச் சரீரம் என்று தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

உயிரே கடவுள்…! இவ்வளவு பெரிய தத்துவத்திற்கு எவ்வளவு நாள் அலைந்து தெரிந்து கொண்டு வந்தது. இதை தெரிந்து கொண்ட நாம் இந்தத் தியான வழியில் உள்ளோர் எத்தனை பேர் இதைச் சீராகக் கடைபிடிக்கின்றோம்.

தீபாவளி அன்று விடிய விடிய முழிக்கின்றோம். அந்த வழக்கத்திற்குத் தான் அடிமையாகி உள்ளோம். ஆனால் தீமைகளை அடிமையாக்குவதற்கு உங்களுக்குச் சக்தி கொடுகின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.