ஒலி அதிர்வு – எக்கோ – உணர்வு – ஞானம் – இயக்கம்

ஒலி அதிர்வு – எக்கோ – உணர்வு – ஞானம் – இயக்கம்

 

மான் புலியிடமிருந்து தப்பிக்க வலுவான எண்ணங்களை எடுக்கின்றது. மானின் கண்ணோ புலியிடமிருந்து தப்பிக்கும் உபாயத்தின் உணர்வை ஊட்டுகின்றது.

அதனுடைய வலு பெற்ற பின் மானின் தசைகள் புலிக்கு இரையானாலும் புலியின் வலுவான உணர்வைத் தன் உடலுக்குள் கவர்ந்து புலியின் உணர்வை இரையாக்கி இந்த உடலை விட்டுச் சென்ற பின் அதனின் வலுவின் துணை கொண்டு புலியின் உடலுக்குள் சென்று புலியாக உருப் பெறுகின்றது.

வீட்டில் நாம் எலியை[ பார்க்கின்றோம்.. பூனை தன் குரலை எழுப்புகின்றது ஒலியை எழுப்பிய பின் இந்த உணர்வின் நிலைகள் அஞ்சி கடா…புடா… என்று என்று ஓடுகின்றது.

பூனை வருகிறது என்ற எதிரொலியைக் கண்டபின்… அதாவது ஒரு சப்தத்தை இட்டபின் எலிகள் களைந்து ஓடுகிறது.

பூனை அதைப் பார்த்தபின் எலிகள் எந்தத் திசையில் ஓடுகிறது…? என்பதைப் பார்த்த பின் காதுகளை விட்டு மடித்து அதைக் கூர்ந்து கேட்கின்றது.

உதாரணமாக… உங்கள் காதுகளைக் கையை வைத்து மடக்கி மறைத்துக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் பேசினால் அது மைக்கில் பேசுவது போன்று அந்த எக்கோ சப்தம் வரும்… உங்கள் நினைவாற்றல் நீங்கள் பேசினால் அவ்வாறு வரும்.

நீங்கள் ஏதாவது இப்படி பேசிப் பார்த்தீர்கள் என்றால் காதை இப்படி மறைத்துக் கொண்டால் போதும். பெரிய மைக் போன்றே எதிரொலிகள் வரும்.

இதைப் போன்று தான் ஒவ்வொரு உயிரினங்களும் அதில் உள்ள காந்தப் புலனறிவு கவர்ந்து நுண்ணிய அலைகளையும் அறிந்து அதை நுகர்ந்து கொள்கிறது.

அப்படித் தான் இந்தப் பூனை எலிகளை விரட்டி அது ஓடிய பின் எங்கே எப்பகுதிக்குச் செல்கின்றது…? என்ற இந்த உணர்வின் மூச்சலைகளைக் கவர்ந்து அங்கே போய்ப் படுத்துக் கொள்ளும்.

அதே உணர்வின் தன்மை கொண்டு அந்த இனத்தின் (எலியின்) உணர்வைப் பாய்ச்சுகின்றது. எலி வரும் வரையிலும் காத்திருந்து இந்த உணர்வின் தன்மை கொண்ட பின் எலியின் மணத்தை வீசும்.

ஏனென்றால்… பல எலிகளை உணவாக உட்கொண்ட பின் பூனை அந்த மணத்தை வெளிப்படுத்தும் போது தன் இனம் என்று எலி வருகிறது. வந்தபின் அதை லபக் என்று இந்தப் பூனை பிடித்துக் கொள்கின்றது.

ஆக உயிரினங்கள் தன் உணவுக்காக என்னென்ன தந்திரங்களைச் செய்கிறது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.