
நம் குருநாதர் ஜோராகச் சமையல் செய்வார்
எப்பொழுது துயரம் என்று வருகின்றதோ அப்பொழுதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தீமைகள் புகாது தடுத்து நிறுத்துங்கள்… அந்தச் சக்தி பெற ஏங்குங்கள்.
அது வேதனையை உடனே அடக்கிச் சிந்தனையைக் கொடுக்கும்.
1.உங்கள் உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…? என்ற பொறுமையும் அதற்கு என்ன உபாயம்…? என்ற உணர்ச்சிகளும் உங்கள் கூட வரும்.
2.வாழ்க்கையில் வரக்கூடிய ஒவ்வொன்றையும் சமாளிக்கக் கூடிய தன்மையும்
3.நல்ல உணர்வுகளை நமக்குள் விளைய வைக்கும் சக்தியும் நாம் பெற முடியும்.
உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
சீக்கிரமாகச் சமையல் செய்ய வேண்டும் என்று அரிசி பருப்பு காய் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டால் சுவை வருமா…?
கூடுமானவரை அரிசியை வேக வைத்த பின்பு மற்ற பொருள்களைச் சேர்த்தால் சுவையாக இருக்கும். ஆனால் அரிசி வேகுவதற்கு முன் மற்ற பொருள்களைப் போட்டால் அரிசி ஒரு பக்கம் வேகாதபடி இருக்கும்.
ஏனென்றால் சமையலில் பக்குவம் மிகவும் அவசியம் தேவை.
1.சில காய்கறிகள் உப்பை எடுத்துக் கொள்ளும்… சிலது எடுக்காது… அதற்கு நாம் போடும் உப்பு பத்தாது.
2.அந்தப் பக்குவம் தெரியாதபடி உப்பைச் சேர்த்தால் ருசி கெட்டுவிடும்.
காயாக இருந்தாலும் குழம்பாக இருந்தாலும் அது அது ஈர்க்கும் சமமான பருவம் பார்த்து உப்பைப் போட வேண்டும். சமைக்கத் தெரிந்தவர்கள் அந்தப் பக்குவத்தை அறிந்து செயல்படுத்துவார்கள்.
சில பேர் காயைப் போட்ட பின் உப்பையும் சேர்த்துப் போட்டு விடுவார்கள் வெந்த பின் பார்த்தால் உப்பை எல்லாம் காய் எடுத்துக் கொள்ளும்… குழம்பு சப் என்று இருக்கும். காரணம் சில காய்கறிகளில் உப்பை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கும்.
ஆகவே அந்தப் பருவம் தெரிந்து உப்பை இணைத்தால் தான் இரண்டும் ஒன்று போல இருக்கும்.
1.சமையல் வேலையெல்லாம் குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.
2.எந்தெந்த நேரத்தில் எப்பொழுது எதைச் சேர்க்க வேண்டும் ஜோராகச் சமையல் செய்வார் குருநாதர்.
3.நீ இப்படிச் சமைத்துக் கொள்ளடா என்று சொல்வார்.
அதாவது… நீ உன் உடலுக்குள் சுவை மிக்க உணர்வுகளைச் சேர்த்துச் சமைத்துக் கொள் என்பார்.
சமையல் கலையைப் பற்றிச் சொல்லும் பொழுது இன்னென்ன பருவத்தில் எதை எதைச் சேர்த்தால் அது எப்படி ருசி கொடுக்கின்றதோ இதைப் போல உன் உயிர் ஒரு நெருப்பு.
1.அதிலே எந்தெந்த உணர்வுகளைப் போட்டு எந்தெந்த நேரத்தில் அதைச் சேர்க்க வேண்டும்…? என்று இணைத்தால்
2.அந்த உணர்வுப்படி சுவை மிக்க உணர்வுகளை உனக்கு ஊட்டும்.
3.அந்தச் சுவை கொண்ட நிலையில் எல்லோரையும் மகிழக்கூடிய சொல்லாகச் செயல்படும் என்று சொல்வார்.
இதற்கும் அதற்கும் சொல்லி அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.
இயற்கை எவ்வாறு செயலாக்குகின்றது…? செயற்கை எப்படி உருமாறுகின்றது…? மனிதனான பின் எதை உருமாற்றுகின்றோம்…? என்று இப்படி குருநாதர் தெளிந்த நிலைகளை எமக்கு உபதேசித்தார்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.