
தீமைகளை நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்… எப்படி…?
உதாரணமாக நாம் ஒரு இரும்புக் கம்பியைக் காய்ச்சுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.. அதைக் கையிலே பிடிக்கிறோம் என்றால் அதன் வழி சூடு வந்துவிடும்.
1.அந்தச் சூடு கைக்கு வராதபடி ஒரு துணியைச் சுற்றினால் கொஞ்சம் தாங்கிக் கொள்ளலாம்.
2.மனிதன் தான் அந்தச் சூடு தாக்காதபடி இதைச் செயல்படுத்துகின்றான்.
3.இதே மாதிரி ஒரு வேதனைப்படும் உணர்வு நம்மைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் அல்லவா.
காரணம் அந்த வேதனை மீண்டும் நம்மைக் கீழே கொண்டு செல்கின்றது.
பார்க்கிறோம் அல்லவா எத்தனையோ நல்ல பேரை…! எல்லோருடைய கஷ்டத்தையும் கேட்டு அதனால் வேதனைப்படுகின்றார்கள்.
எல்லோருக்கும் நன்மை செய்தேனே… எனக்கு இப்படி இருக்கிறதே… கடவுள் என்னைச் சோதிக்கின்றானே என்று கடவுளைத்தான் திட்டுகின்றோமே தவிர ஏதாவது நம்மால் மாற்றிக் கொள்ள முடிகின்றதா…?
1.ஆனால் இந்த ஆறாவது அறிவால் நாம் மாற்றிக் கொள்ள முடியும். அதற்குச் சக்தி தேவை.
2.ஏனென்றால் இது எல்லாம் உங்கள் அனுபவத்தில் இருக்கும்…
3.ஞாபகப்படுத்தும் போது அந்த உணர்ச்சிகள் வரும்… அப்பொழுது பழைய நினைவுகள் வருகின்றது
4.அதனுடன் சேர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டு வருகின்றேன்.
5.உங்கள் குணங்களில் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதை நீங்கள் பிரித்துப் பார்க்கக் கூடிய நிலை வேண்டும் என்பதற்குத்தான்
6.இதைச் சொல்லி கொண்டு வந்து இணைக்கின்றேன்.
அதையும் நினைக்கின்றீர்கள் இதையும் சேர்த்து இணைத்தவுடன் என்ன செய்கின்றது…?
வேதனைகளைக் குறைக்கும். அப்பொழுது வேதனையான உமிழ் நீர் மாறுவது பலம் குறைந்து நல்ல சக்திகள் கூட வந்து நீங்கள் சாப்பிடுகின்ற ஆகாரத்தை நல்ல முறையில் ஜீரணித்து இரைப்பையில் வரப்படும் பொழுது “நமக்குக் கோளாறு செய்யாது…”
அந்த நிலையைத்தான் உங்களுக்கு செய்து கொடுக்கின்றோம்.
ஆனால் இப்பொழுது நமது வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வே வரப்படும் பொழுது… வரிசையில் வந்து…
1.கடைசியில் உடல் உறுப்புகள் குறைந்து உடல் குறைந்து
2.ஆளே அடையாளம் தெரியாமல் சென்று விடுகின்றது.
இத்தகைய நிலையில்… உயிர் சென்றவுடன் என்ன ஆகிறது…? விஷத்தை உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்களுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது இதை மாற்ற வேண்டும் அல்லவா.
அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் தீமையை நீக்கக்கூடிய அணுக்களை விளைய வைத்திருக்கின்றார்கள் நாம் குழந்தை பிறக்க ஆசைப்படுகின்றோம். அவர்கள் உணர்வின் தன்மை ஒளியின் உடலாக இரண்டு உயிரும் ஒன்றாகக்கூடிய நிலையை ஆசைப்பட்டார்கள்.
1.அவர்கள் உருவாக்கிய குழந்தைதான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது
2.அந்தக் குழந்தையில் ஒன்றை எடுத்துக் கொண்டால் தான் நமக்குச் சரியாக இருக்கும்
3.அதை வளர்த்தோம் என்றால் நமக்கு ஞானத்தை ஊட்டும்.
அகஸ்தியனும் அவன் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனம் ஒன்றி அந்த பேரருள் பெற்று பேரொளி என்ற நிலையாக அடைகின்றார்கள்.
அந்தச் சக்திகளைத்தான் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்
நாம் பற்ற வேண்டிய முக்கியமானது எது…? இந்த உடல் சீராக இயங்க வேண்டும். உடல் சீராக இயங்கவில்லை என்றால் என்ன ஆகும்.
குருநாதர் இமயமலைக்கு என்னை அழைத்துச் செல்கின்றார் நடந்து போய்க் கொண்டிருக்கின்றேன் மலை மாதிரி தெரிந்தது நடந்து சென்றேன் திடீரென்று திரும்பிப் பார்த்தால் திடு…திடு… என்று பனிப் பாறைகள் இடிந்து விழுகின்றது.
அதைப் பார்த்தவுடன்… “திரும்ப எப்படிச் செல்லப் போகின்றேன்…?” என்ற பயம் வருகின்றது.
1.பயம் வந்தவுடன் பலவீனமான எண்ணங்கள் வருகின்றது
2.குடும்பத்தில் பையன் என்ன செய்வான்…?
3.நாம் போய் விட்டோம் என்றால் என்ன செய்வார்கள்…? என்ற எண்ணம் வருகின்றது.
4.போய்விட்டால் என்ன செய்வது…? என்ற மனம் வரப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது.
வெறும் துண்டும் வேஷ்டியும் தான் கட்டி இருக்கின்றேன். அதைத் தவிர வேறு இல்லை.
ஆனால் குருநாதர் சொன்ன முறைப்படி சக்திகளை அணுக்களில் சேர்த்துக் கொண்டிருந்த பொழுது குளிர் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பாதை இடிந்து விழுந்தவுடன் என்ன நடக்கின்றது…?
பயங்கரமான ஓசையாக வருகின்றது பயம் வராமல் இருக்குமா…? நான் நிற்கும் இடமும் விழுந்து விடுமோ…! என்ற பயம் வருகின்றது. வீட்டின் ஞாபகம் வருகிறது. கிர்ர்… என்று இருதயம் இறைய ஆரம்பித்துவிட்டது.
1.அப்புறம் வீட்டைக் கவனிப்பதா…? பையனை காப்பாற்றுவதா…?
2.சொத்து… இந்த உடலையே காக்க முடியவில்லை என்றால் பின் எதை வைத்துச் செய்வது…?
குடும்பத்தில் எல்லாம் தைரியமாகச் செய்கின்றோம். அடிக்கடி கோபமும் வேதனையும் அதிகமாகப் பட்டால் வாத நோய் வருகின்றது கை கால் இழுத்து விடுகின்றது நாம் எதைச் செய்ய முடியும்…?
பனிப் பாறையில் வைத்து இருத\யம் இறைத்தவுடன் நினைவுகள் மாறுகின்றது… அப்படி ஒரு அனுபவத்தைக் கொடுக்கின்றார்.
அப்பொழுதுதான் குருநாதர் காட்சி கொடுத்து மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே என்ற பாடலைப் பாடி வருகின்றார். பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? இப்பொழுது நீ போய்விட்டால் நீ எதை காக்கப் போகின்றாய்…!
1.கொஞ்ச நேரத்தில் நீ ஆசைப்பட்டதெல்லாம் சென்றுவிடுமே
2.மின்னலைப் போல மறைவதைப் பாராய் உன் ஆசை எல்லாம் மறைந்து விடுகின்றது.
3.எதிலே மடிந்தாயோ அங்கே தான் செல்வாய்.
4.ஆக நீ எண்ண வேண்டியது எது…?
5.அவர்களுக்கு அந்த அருள் பெற வேண்டும் இருள் நீக்கிப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அங்கே வலுவாகும்.
ஆனால்… நான் சொல்லிக் கொடுத்த உயர்ந்த குணங்களை எடுக்கத் தவறினால் நீ எங்கே செல்கின்றாய்…? ஏனென்றால் அந்த இடத்தில் மன உறுதி கொண்டு வருவதற்காக இப்படி அனுபவத்தைக் கொடுக்கின்றார்.
அனுபவித்துப் பெற்ற அந்த உயர்ந்த சக்திகளை நீங்களும் பெற முடியும். குருநாதரிடம் கஷ்டப்பட்டு அனுபவித்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நிவர்த்திப்பதற்குச் சக்தி கொடுக்கின்றேன். வீட்டிலிருந்தே அதைப் பெற முடியும்..
ஆனால் நான் காடு மேடெல்லாம் அலைந்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது வீட்டில் இருந்தே அதை நீக்குவதற்கு வழியைச் சொல்லிக் கொடுக்கின்றேன்.
கொடுத்தாலும் கூட… நானும் தியானம் செய்து கொண்டே தான் இருக்கின்றேன்
1,எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது என்று
2.இதையே சொல்லிக் கொண்டிருந்தால் எது வரும்…? அதுதான் ரிமோட் பண்ணிக் கொண்டே இருக்கும்.
சிக்னல் கொடுக்கின்றார்கள்… கரெக்டாக மாற்றிக் கொடுக்கின்றது. அந்த சிக்னலை நிறுத்தி விட்டால் மறுபடியும் சிவப்பு என்றால் சிவப்பைத்தானே கொடுத்துக் கொண்டேயிருக்கும்.
1.அப்போது நமக்கு அந்த உணர்வு டேஞ்சரான… சோர்வான உணர்வைத் தான் ஊட்டும்.
2.இது எல்லாம் நன்றாகத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.
மலை மீது வைத்து எனக்கு அனுபவத்தைக் கொடுத்து அதைத் தெளிவாக்குகின்றார்.
1.எப்படி இருக்கின்றது…?
2.அப்போது எடுக்க வேண்டிய முறை எது…?
3.அவர் கொடுத்த சக்தியை ஏன் எடுக்க முடியாமல் போனது…?
4.ஏன் அந்த மாதிரியானது…? என்று காண்பிக்கின்றார்.
இதுபோல் உங்கள் வாழ்க்கையில் குறைகள் வந்தால் நீங்கள் அதை நீங்கள் மாற்றப் பழக வேண்டும் அல்லவா உங்களுக்கு இந்தப் பவரை எடுப்பதற்குச் சக்தியைக் கொடுத்திருக்கின்றோம்.
அந்தக் கண் கருமணிகளில் பதிவாகி விடுகின்றது. அதன் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சக்திகளைச் செலுத்தும்படி சொல்லுகின்றோம்.
ஆனால்
1.சோர்வான எண்ணங்கள் எடுக்கப்படும் பொழுது
2.அந்தச் சோர்வுக்குத் தக்கவாறு சோர்வடைந்து கொண்டே செல்கின்றோம்.
பையனுக்குக் குறைபாடு என்றால் அவனுக்கு நல்ல நிலை வரவேண்டும் எண்ணினால் அவனுக்கும் உற்சாகம் வருகின்றது நமக்கும் தெளிவாகின்றது நன்றாக இருக்கின்றோம்.
ஆக நமக்குள் காப்பாற்றப்பட வேண்டியது எது…?
1.உங்களுக்கு அந்தப் பவரைக் கொடுக்கின்றோம்.
2.அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

நல்ல சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி… உயிர் அதை இயக்கும்படி செய்ய வேண்டும்
கோபத்தின் உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது நமது நல்ல அணுக்களுக்குள் அது ஊடுருவி நல்ல உணர்ச்சிகளை மாற்றி “ஓமுக்குள் ஓ…ம்…!” பிரணவத்தின் தத்துவத்தை அது மாற்றி விடுகின்றது.
இப்படி மாற்றிக் கொண்ட உணர்வுகளால்…
1.உடலுக்குள் இருக்கும் மற்ற உணர்வுகள் அனைத்தும் இதை நுகர நேர்ந்தால் இரத்தக் கொதிப்பாக ஊடுருவுகின்றது.
2.அதன் மூலம் நல்ல அணுக்கள் இட்ட மலங்கள் மடிய நேர்ந்தால் விஷத்தன்மை கொண்ட நிலையும்
3.கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வுகளும் நம் இரத்தங்களிலே கலந்து
4.இதன் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே ட்ரான்சாக்சன்…! அதாவது உடலுக்குள் பரவச் செய்யும் உணர்வுகள் தான் அது.
எப்படி ஒரு ட்ரான்சிஸ்டர் மோதியபின் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப ஒலிக்கற்றைகளை இணைத்து மைக்கிற்கு அனுப்பி அதன் வழி சப்தங்களை எப்படி நாம் கேட்கின்றோமோ இதைப் போல தான் உணர்வின் ஒலிக்கற்றைகளை நமக்குள் பரப்பப்படும் பொழுது
1.கோபத்தின் உணர்ச்சிகளை நாமே அடக்க முடியாதபடி ஓங்கிச் சப்தமிடுவதும்
2.சத்தமான பேச்சுகளைப் பேசுவதும் கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் செயல்களை நாம் செயல்பட ஆரம்பிக்கின்றோம்.
அப்போது அதைக் கேட்போர் இதைக் கண்டபின் வெறுக்கும் தன்மை வருகின்றது. வெறுக்கும் தன்மை அதிகரிக்க அதிகரிக்க கோபத்தின் தன்மை எல்லை கடந்தே செல்லும்.
யார் மீது வெறுப்பு அதிகமாகின்றதோ அவர்களை நினைத்து நினைத்து கோபத்தின் உணர்வுகள் எல்லை கடந்து சென்று நமது உடலில் கடுமையான நோயாக உருவாகி விடுகின்றது.
பின் சிந்திக்கும் நிலைகள் இழந்து… அழுத்தம் அதிகமாகி விட்டால் அதனால் இரத்த அழுத்தங்கள் அதிகமாகும் பொழுது கண்ணுக்குச் செல்லும் இரத்தத்தின் வழி இந்த உணர்வின் தன்மை இயக்கம் கண்ணுக்குள் இரத்தம் அதிகரித்து விட்டால் “கண்கள் சிவந்து விடும்…”
சிவந்து விட்டால் கொடூர உணர்வாகத்தான் தெரிய வரும். சில பேரைப் பார்த்தோம் என்றால் அந்த கோபத்தின் கனலைக் கண்களிலே கண்டு விடலாம்.
சிவப்பு நிறமாக அதன் உணர்வுகள் இயக்கும். எதைக் கண்டாலும் எதைப் பார்த்தாலும் படித்தாலும் வெறுக்கும் தன்மையாகி… அழிக்கும் உணர்வாகவே வந்துவிடும்.
1.கோபம் வந்துவிட்டால் தன் பிள்ளையானாலும் அடிக்கும் உணர்ச்சி வந்துவிடும்
2.கோபம் வந்துவிட்டால் கண்ணிலே கண்டாலே தட்டியெறியச் செய்யும்… நல்ல பொருள்களை உடைக்கவும் செய்வோம்.
சிந்தனைகள் குறைந்து புலி மற்றதை இரக்கமற்றுக் கொன்று புசிப்பது போன்று நல்ல உணர்வுகள் தென்பட்டாலே… மகிழ்ச்சியாக யாராவது சிரித்தாலோ… அவர்களைப் பார்க்கும் பொழுது வெறுப்பு என்ற உணர்வுகளே தோற்றுவிக்கும்.
அதுதான் நம்மை இயக்கும். இது எல்லாம் காரணம் யார்…?
1.சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!
2.அந்த உணர்ச்சிக்கொப்ப அதை இயக்குவது நம் உயிர்.
ஆகவே இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு
1.அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கும் சந்தர்ப்பங்களையும்
2.அதை வளர்த்திடும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி உயிர் அதை இயக்கும்படி செய்து
3.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியின் தன்மையாக ஞானிகள் மகரிஷிகளைப் போன்று உருவாக்கி
4.நாம் தெளிந்த நிலையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறுதல் வேண்டும்.
கோபம் வரும் பொழுது அதைத் தனக்குள் வளர்த்து விடாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து அருள் வழியில் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
யாம் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்த காலங்களில்
1.இறந்த பக்தி கொண்ட ஆன்மாக்கள் அதே போல் பக்தி கொண்டவர்கள் உடலுக்குள் புகுந்த பின்
2.எப்படி எல்லாம் அவர்கள் அவஸ்தைப்படுகின்றார்கள்…? அவருடைய எண்ணங்கள் எப்படி ஆகின்றது…? என்பதையெல்லாம்
3.குருநாதர் காட்டிய வழியில் அறிந்து கொண்டோம்.
கிராமத்தில் ஒரு அம்மா இருந்தது. அது ஒரு முருக பக்தர். அந்த அம்மாவிற்குச் சொத்து அதிகம் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டது.
என்னை அந்த அம்மா இருந்த வீட்டில் திண்ணையில் உட்காரச் சொன்னார் குருநாதர். அந்த அம்மாவால் எழுந்து நடக்க முடியாது.
அந்த அம்மாவிற்கு வயது எழுபது இருக்கும். அது புலம்பிக் கொண்டே இருந்தது.
என்னிடம் இருந்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, என்னை அநாதையாக்கி விட்டார்கள். செல்வமும் செருக்கும் உள்ள பொழுது என் மடி மேல் உட்கார்ந்து விளையாடுவையே, “முருகா…!”
இப்பொழுது எங்கடா போனாய்…? செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா…? நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன்… என்னைக் காக்கவில்லையா…? நான் அநாதைதானா…? என்று புலம்பிக் கொண்டு உள்ளது.
ஆனால் உடலெல்லாம் மலத்தால் சூழ்ந்து அசிங்கமாக வைத்திருந்தது.
அந்த அம்மா வீடு பெரியது… சொத்துக்களும் அதிகம். ஆனால் நோய்வாய்ப்பட்ட பின் சாலையில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள்.
“முருகா…!” நான் நினைக்கும் பொழுதெல்லாம் வரம் கொடுத்தாய். நான் சொல்கின்றவருக்கு எல்லாம் நல்லது செய்தாய். எனக்கு நல்ல வழியும் காட்டினாய்.. என்னிடம் செல்வம் இல்லையென்று நீ கூட இப்போது வராமல் போய் விட்டாயேடா…! என்று சொல்லிக் கொண்டு இருந்தது.
நான் அவர்களுக்கு எல்லாம் செய்தேனே… எனக்கு இப்படிச் செய்கின்றார்களே…! எனக்குச் சொத்து வேண்டாம்.. நீ இருந்தால் போதும் முருகா…!
என்னை இந்த நிலைக்கு விட்டு விட்டார்கள்… நான் அசிங்கமான நிலையில் இருக்கின்றேன்… என்னைக் கவனிப்பதற்கு நீ கூட வரவில்லையே. இந்த அசிங்கத்தைப் பார்த்து நீ கூட விலகி விட்டாயா…?” என்று கேட்டுக் கொண்டிருந்தது.
இரண்டு மணி நேரம் அந்த அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அந்த அம்மா புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் கதவைத் திறந்து உள்ளே போனேன். அந்த அம்மவைப் பக்கத்தில் இருந்த கிணற்றில் குளிக்க வைத்துத் துணிகளை துவைத்துக் கொடுக்கச் சொன்னார் குருநாதர், செய்தேன்.
பின்பு ஆசீர்வாதம் கொடுத்தேன். மனது தெளிவடைந்து அந்த அம்மா அமர்ந்தது,
“முருகா…! நீ வந்துவிட்டாயா…?” “நீ இந்த ரூபத்தில் வருவாய் என்று எனக்குத் தெரியவில்லையே…” என்று அப்போதும் முருகனைத் தான் நினைக்கின்றது.
என் பிள்ளை மாதிரி என் மடியில் அமர்ந்து விளையாடுவாய். இப்பொழுது பெரிய ஆளாக வந்து இருக்கின்றாய்… “நீ திருடனப்பா…!” என்று சொல்கின்றது.
1.நான் முருகன் இல்லை… சாதாரண மனிதன் தான்…! என்று சொன்னேன்.
2.முதலில் முருகன் வந்தான் என்றால் இப்போது ஏன் வரவில்லை…? என்று கேட்டேன்.
இது எல்லாம் மந்திர வழியால் (மந்திர ஒலிகள்) எடுத்துக் கொண்ட உணர்வுகள் தனக்குள் சிக்கப்பட்டு இதே உணர்வு கொண்டு முருகன் மேல் பக்தியாகச் சென்ற ஆன்மாக்கள் இறந்த பின்
1.உடலுடன் உள்ளவர்கள் அதே பக்தியை யார் கொள்கின்றார்களோ அந்த உடலுக்குள் புகுந்து
2.அவர்கள் வாழ்ந்த காலத்திலே (இறந்தவர்) கடைசியிலே நோய்வாய்ப்படும் பொழுது அவர்களை எப்படிக் கவனிக்காமல் விட்டார்களோ
3.அதே ஆன்மா இங்கே “முருகனைப் போன்று காட்சி தருவதும்…” பல நிலைகளைச் செய்வதும்
4.ஆனால் நாளடைவில் அந்தக் காட்சியின் உணர்வுகள் விளைந்து இப்படிக் கடும் நோயாக மாறுகின்றது.
சமுதாயத்தில் அவர்கள் குடும்பத்திலே இந்த வயதான அம்மா மீது எப்படி வெறுப்படைந்தனாரோ அந்த வெறுப்பினால்… சேர்த்து வைத்த சொத்தைப் பறிக்கத்தான் முடிந்தது… முருகன் காக்கவில்லை…!
செல்வத்தைப் பெற்றோம்… சந்தோஷமாக இருப்போம் என்ற நிலை இல்லை. எப்பொழுது மடிவார்…! என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்… தொலைந்து விட்டால் தன் இஷ்டத்திற்குச் செய்துவிடலாம் அல்லவா…!
காரணம் என்ன என்றால்
1.உயிரோடு இருக்கும் பொழுது சொத்தை எல்லாம்
2.மற்றவர்களுக்கு உயிலாக எழுதி வைத்துவிட்டால் என்ன செய்வது…?
ஏனென்றால் ஒரு சிலர் உயில் எழுதி வைத்ததைத் தெரிந்து கொண்டால்
1.சொத்து தன் கைக்கு வராது… மற்றவர்களுக்குச் சேர்ந்து விடும் என்றால்
2.இப்படி எல்லாம் சில குடும்பங்களில் நடக்கிறது.
செல்வம் இருந்தாலும்… அதைக் கொடுத்துச் சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நிலையில் இருந்தாலும்… அவர்களைக் காக்கும் நிலை கூட மாறி விடுகின்றது.
இந்த அம்மா “யாருக்கோ உயிலை எழுதி வைத்துவிட்டார்…” என்று சொன்னதற்காகறகக வேண்டி இவரைத் தொல்லைப்படுத்திச் சொத்தைப் பறித்து அனாதையாக இப்படி விட்டு விட்டார்கள்.
குடும்பத்தில் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
சொத்து என்று வந்து விட்டால் அம்மா அப்பா என்று கூடப் பார்ப்பதில்லை… சகோதரர்களுக்குள்ளும் பகைமை வருகின்றது…!
1.முருகனை பக்தி கொள்கின்றோம் சிவனை வணங்குகின்றோம் என்று எல்லாம் தான் சொல்கிறோம்.
2.அதே சமயத்தில் அம்மாவோ அப்பாவோ சகோதரர்களோ அவர்கள் எனக்குத் துரோகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்துடன்தான் தெய்வத்தை வணங்குகின்றோம்
3.மந்திரத்தைச் சொல்லி சகோதரன் சாக வேண்டும்.. அல்லது தந்தை சாக வேண்டும் என்ற எண்ணத்துடன் முருகனை வணங்குகின்றார்கள்
4.ஆக பக்தி எந்த அளவிலே இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.
5.உடலின் மேல் இச்சை கொண்டு தெய்வத்தைச் சாட்சியாக வைத்துச் செய்யக்கூடிய செயல்கள் தான் இது.
ஆனால் நல்ல உணர்வுகளை எடுத்துத் தீமைகளை அகற்றும் அந்த உணர்வின் தன்மை பெற்றால் நமக்குள் “நாம் தெய்வமாகலாம்…”
1.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
2.தெய்வீக குணத்தைப் பெற வேண்டும்
3.தெய்வீகப் பண்புடன் இருக்க வேண்டும்
4.தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும்
5.பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்றும்
6.நாம் ஒவ்வொருவரும் எண்ணினால் பகைமை மாறிவிடும் என்பதற்காக
7.ஆலயங்களில் இதைச் சொல்லி இருந்தாலும் இதை யாரும் செயல்படுத்துவதில்லை.
பக்தி என்ற பேரில் ஆலயத்திற்குச் சென்றாலும் தன் ஆசையின் நிலைகள் கொண்டு சந்தர்ப்பவசத்தால் சாமி சிலையையோ அல்லது படத்தையோ திரும்பத் திரும்பப் பார்த்துப் பதிவாக்கி எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் “தெய்வமாகக் காட்சி தருவதும்… மற்ற நிலைகளும்…”
இப்படி மனிதனுடன் பழகிய நிலைகள் இந்த மனித வாழ்க்கைக்குத் தான் அது பயன்படுகிறது. தான் எண்ணியது கிடைக்கவில்லை அல்லது நடக்கவில்லை என்றால் உடனே வேதனை வருகின்றது.
வேதனைகள் அதிகமான பின் அடுத்து மற்ற தெய்வங்களை
1.காளிக்கோ அங்களேஸ்வரிக்கோ மாடசாமிக்கோ முனுசாமிக்கோ ஆடுகளையும் மற்றதையும் பலியிட்டு
2.அந்த இரத்தத்தை அபிஷேகித்து மகிழும் நிலையில் தான் இருக்கின்றது.
இப்படி எல்லாம் செய்தால் அந்தத் தெய்வம் நம் கஷ்டத்தை நீக்கும் என்று தவறான வழிகளைத் தான் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.
அந்த தவறின் நிலைகளில் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்தால் அசுர உணர்வு உண்டு மாடனாகவும் முனியனாகவும் இன்னொரு உடலுக்குள் ஆவியாகச் சென்று ஆட்டிப்படைக்கும்.
ஆகவே நாம் வணங்கும் முறைகள் எதுவோ உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றி வெளியே செல்லப்படும் பொழுது நாம் எந்தத் தெய்வத்தை வணங்கினோமோ அந்த உணர்வு தான் அங்கே காட்சியாக… நோயாக மாறுகின்றது.
இது எல்லாம் மனிதனால் மனிதனுக்குள் உருவாக்கப்பட்ட நிலைகள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
27 நட்சத்திரங்களின் சக்திகளும் கடுமையான விஷத்தன்மை கொண்டது ஏனென்றால் அது பிற மண்டலங்களிலிருந்து எடுத்துக் கொண்டது.
1.நம் பூமிக்குள் வரும் பொழுது மின்னலாக மாறுகின்றது.
2.கடலிலே தாக்கப்படும் பொழுது மணலாக மாறுகின்றது
3.விஷத்தின் தன்மை மற்ற தாவர இனங்களில் எதிர்மறையாக பொழுது மரம் கருகுகின்றது
4.இதன் உணர்வின் ஈர்ப்பு பூமிக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது.
5.பாறைகள் உருகிய பின் நிலநடுக்கம் ஆகின்றது.
இது எல்லாம் 27 நட்சத்திரங்களின் மின்னலால் ஏற்படும் நிலைகள்.
ஆனால் இத்தகைய நஞ்சையும் அடக்கிப் பழகியவன் அகஸ்தியன். தாய் கருவிலிருக்கும் போது பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்தியால் அவனுக்கு அந்த ஆற்றல் கிடைக்கிறது.
மின்னலிலிருந்து வரக்கூடிய ஆற்றல்களை வெள்ளிக் கோள் அந்த ஒளிக்கற்றைகளை எப்படி எடுத்துக் கொள்கின்றதோ… அதைப் போல் அகஸ்தியன் தன் உடலுக்குள் அதைப் பெருக்கி… உயிரைப் போன்ற உணர்வின் அறிவாக “ஒளியாக மாற்றிக் கொள்கின்றான்…”
மின்னல் தாக்கப்படும் பொழுது கடலிலே விழுந்தால் ஒரு பக்கம் மணலாக மாறினாலும்… அந்த மணலுக்கடியில் சந்தர்ப்பத்திலே ஒரு மீன் சென்றால் அதன் மீது மின்னல் தாக்கப்பட்டால் அது “எலக்ட்ரிக் மீனாக…” மாறுகின்றது.
1.எப்படி மின்னல் தாக்கும் பொழுது “ஒளிக்கற்றைகள்…” உருவாகின்றதோ
2.இந்த உணர்வின் தன்மை மீன் இனங்களுக்குள் சென்ற பின்
3.உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகிறது.
இயற்கையின் நிலையில் இவ்வாறு தான் மாற்றங்களாகின்றது என்று அகஸ்தியன் கண்டு கொள்கின்றான்.
அகஸ்தியன் துருவனாகி அவன் பதினாறாவது வயதில் திருமணமான பின் அவன் கண்ட இயற்கையின் உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்குச் சொல்கிறான்.
அகஸ்தியனின் மனைவி தன் உடலுக்குள் அதைப் பதிவாக்கி வளர்த்துக் கொண்ட பின் “தன் கணவன் உயர வேண்டும்…” என்று எண்ணுகின்றது இப்படி இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் உயர்த்திடும் உணர்வு கொண்டு
1.துருவ ரிஷியாக (துருவ மகரிஷி) மாறுகின்றனர்.
2.கணவன் மனைவி ஒன்றிணைந்து ரிஷித் தன்மை பெறுகின்றனர்
3.இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றாகித் துருவ நட்சத்திரமாகின்றனர்.
தாவரங்களோ உயிரினங்களோ எதுவாக இருந்தாலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் அதனுடைய இன வித்துக்களை உருவாக்க முடியும்.
ஆகையினால் தான் கணவன் மனைவியாக இந்த அருள் சக்திகளைப் பெறும்படி சொல்கிறோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவன் தன் மனவி பெற வேண்டும் என்றும்… மனைவி தன் கணவன் பெற வேண்டும் என்றும் ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் சக்திவாய்ந்த உணர்வுகள் உடலுக்குள் செல்லப்படும் பொழுது “ஒரு மின்சாரம் பாய்வது போன்று…” உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
இப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறப்படும் பொழுது
1.உங்கள் புருவ மத்தியிலே மின் அணுக்கள் உருவாகும்
2.உயிர் வழி நுகர்ந்து உடலுக்குள் செல்லும் பொழுது உடலுக்குள் ஒளி மயமான உணர்வுகள் தோன்றும்
3.உடலிலிருந்து வெளிச்சமும் வெளிப்படும்… மகிழ்ச்சியான உணர்வுகளையும் ஊட்டும்.
இதை எல்லாம் தியானத்தில் நீங்கள் காணலாம்… உணரலாம்…!


தீமையைக் காணும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்
இன்றைய நாளில் உங்களுக்கு ஏன் இதை ஞாபகப்படுத்துகிறேன் என்றால் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் “இன்று சந்திரன் மிகவும் பிரகாசமாக இருக்கின்றது…”
1,சந்திரனுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிடைக்கும் பருவம் பெறுகின்றது.
2.வெள்ளிக் கோளின் உணர்வுகளும் மற்ற கோளின் தடையில்லாது வருகின்றது.
3.இத்தருணத்தில் இங்கே துருவ தியானத்தில் எடுக்கும் உணர்வுகள் இருளை அகற்றும் நிலையும்
4.அருள் வழி வாழும் உணர்வுகளும் தெளிந்து வாழும் உணர்வுகளும் நமக்குள் கூட்டுகின்றது.
அதனைப் பருகுவதற்குத் தான் உபதேசிப்பது.
அதே சமயத்தில் இயற்கையில் நாம் விளைந்தாலும் செயற்கையில் தீமையின் உணர்வுகளை எவ்வாறு நுகரச் செய்கின்றது…? செயற்கையினால் நம் உடலுக்குள் பகைமை உணர்வுகள் எவ்வாறு வருகின்றது…? பகைமை எப்படி உருவாகின்றது…? இது போன்ற நிலைகள் மனிதனின் வாழ்க்கையில் வருவதிலிருந்து தடுப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
காரணம் 2000க்கு மேல் கடும் விஷத்தன்மைகள் பரவும் நிலையில் அதை நுகரும் தன்மை வருகின்றது. அதை நுகரும் தன்மை வந்தாலோ விஷத்தன்மைகள் கூடி மிகவும் மிருக நிலையிலான உணர்வுகளுக்கு நாம் சென்று விடுவோம்.
அதிலிருந்து நம்மைக் காக்கத் தீமை உணர்வுகள் வராதபடி தடுக்க இன்றிலிருந்து நாம் தயாராக வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொரு குடும்பத்திலும் தனக்குள் பருகி
2.உலக மக்கள் சேமமாக இருக்க வேண்டும் என்றும் உலகில் நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்றும் நல் பயன் பெற வேண்டும் என்றும்
3.உலக இருளை அகற்றிடும் அருள் சக்தி பரவ வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் தெளிவான நிலைகள் பெற வேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மை நாம் நுகர வேண்டும்.
குரு காட்டிய அருள் வழியினை நமக்குள் பெருக்கி இருள் சூழும் நிலைகளைத் தடுத்து மெய்ப்பொருள் காணும் உணர்வை வளர்த்து நம் மூச்சும் பேச்சும் அத்தகைய நிலையாக இந்த உலகில் பரவச் செய்தல் வேண்டும்.
எத்தகைய கடுமையான தீமையானாலும் நோயானாலும் துருவ தியானத்தின் மூலம் பெற்ற ஆற்றலைப் பெருக்கி… அருள் உணர்வைப் பெருக்கி ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.
1.எப்பொழுதெல்லாம் தீமையைக் காணும் சந்தர்ப்பம் வருகின்றதோ
2.அந்தச் சந்தர்ப்பத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி தீமைகளை அகற்றி
3.அந்த இருளை அகற்றி ஒளி என்ற உணர்வை ஆட்சி புரியும் தன்மையாக
4.தெளிந்த மனம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.
ஆகவே அத்தகைய சீர்படும் உணர்வினை நாம் ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொள்வோம். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆன அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் ஏங்கி இப்பொழுது தியானிப்போம்.
கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து… உயிரான ஈசனிடம் வேண்டி… துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி… அதைப் பெற வேண்டும் என்று “கண்களைத் திறந்தே…” நாம் ஏங்கி தியானிப்போம்.
இப்பொழுது நாம் சுவாசிக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தங்களிலே ஒரு புது விதமான உணர்ச்சிகளாகத் தோன்றும்.
1.அன்று அகஸ்தியன் பல விதமான மூலிகைகளின் மணங்களை நுகர்ந்து
2.தனக்குள் வரும் விஷத்தன்மைகளை அடக்கி ஒளியாக எவ்வாறு மாற்றினானோ
3.அத்தகைய மூலிகை வாசனைகள் இப்பொழுது உங்கள் சுவாசத்திற்குள் வரும்.
அதை நுகரப்படும் பொழுது உடலுக்குள் ஏற்கனவே உள்ள தீய வினைகளை இது மாற்றும்… நல்ல உணர்வினை உருவாக்கும் அந்தச் சக்தியும் பெறுவீர்கள்.
துருவ நட்சத்திரத்தை எண்ணி அதைப் பெற வேண்டும் என்று நுகரப்படும் பொழுது மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் இரத்தநாளங்களில் தோன்றும்.
அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆவதற்கு முன் அவன் உடலில் விளைந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் இந்தப் பூமி முழுவதுமே பரவி உள்ளது. அதை நாம் எளிதில் கவரலாம்.
இப்பொழுது நினைவனைத்தையும் மேல் நோக்கிச் செலுத்துங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்பொழுது சுவைமிக்க உமிழ் நீர் வரும்… அறுசுவையாக அது வரும்
2.அகஸ்தியன் பெற்ற அந்த நறுமணங்கள் அனைத்தும் உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து அதை நீங்கள் சுவாசிக்க நேரும்.
3.நல்ல நறுமணங்களை நுகர்வீர்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவைச் செலுத்துங்கள்.
நண்பர்களாகப் பழகிய பின் அந்த நண்பனை எண்ணிய பின் அவனுடன் இணைந்து கொண்ட உணர்வு விக்கலாக எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று
1.எம்முடைய அருள் உபதேசங்களைப் பதிவாக்கி… அதை நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் இருப்பதனால்
2.கண்ணின் நினைவு கொண்டு உடலில் உள்ள அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உள்முகமாகச் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறும் தகுதி எளிதில் கிடைக்கின்றது.
4.இப்பொழுது புது விதமான ஒளி… ஒரு வெளிச்சம் உங்கள் உடலிலே வரும்… அதை உணரலாம்.
உயிர் வழி நாம் ஏங்கித் தியானிக்கும் போது
1.மின்சாரம் பாய்வது போன்று
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு இரத்தத்திற்குள் “வீரிய உணர்வாக” வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.
விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு டாக்டர் ஊசி மூலம் மருந்தை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அது இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுழன்று விஷத்தன்மையான அணுக்களை வலுவிழக்கச் செய்கின்றது.
அதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து இரத்தநாளங்களில் சேர்க்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் அந்த வீரிய சக்தியைப் பெறும் தகுதி இப்பொழுது பெறுகின்றது. இரத்தத்தில் உள்ள தீமைகள் இப்போது வலு இழக்கின்றது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இரத்தங்களில் துரிதமாக உடல் முழுவதும் பரவும்.
2.இரத்தம் எங்கெல்லாம் செல்கின்றதோ அங்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வேகமாகப் பரவும்.
அத்தகைய உணர்வை உங்கள் இந்த உடலிலே உணரலாம். உடலுக்குள் அந்த இயக்கம் எப்படி இயங்குகிறது…? என்பதையும் நீங்கள் உணரலாம்
துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வுகள்
1.புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் ஊடுருவிச் செல்வதை
2.அந்த ஒளிமயமான உணர்வுகளைக் காணலாம்.
பேரானந்த நிலை பெறுவீர்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உங்கள் வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில் மிகுந்த சிக்கல்கள் ஆகிவிட்டால் என்ன செய்ய வேண்டும்…?
1.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மூலிகைகளின் மணங்கள் நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.யாம் (ஞானகுரு) உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து
4.அதை உங்களுக்குள் சேர்த்து உமிழ் நீருடன் கலந்து ஆகாரத்துடன் கலந்து இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். அகஸ்தியன் பெற்ற சர்வ தோஷங்களை நீக்கிடும்… சர்வ பிணிகளையும் நீக்கிடும்… அந்தப் பச்சிலை மூலிகைகளின் மணங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானியுங்கள்.
அவ்வாறு தியானிக்கும் போது உடலிலே நோய் உள்ளவர்களுக்கு
1.இது எதிர்நிலையான பின் உடலில் வலி கூட அதிகமாகும்.
2.ஏனென்றால் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க விடாது அந்த அணுக்கள் தடுக்கும்.
ஆனாலும் மீண்டும் அதை எண்ணி ஏங்கி எங்கள் உடலில் அந்த அகஸ்தியன் பெற்ற நஞ்சை வெல்லக்கூடிய சக்தி படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படர வேண்டும் நல்ல அணுக்களாக மாற வேண்டும் எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
1.எம்மா… எப்பா…! என்று வேதனையாக எண்ணுவதற்கு மாறாக
2.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல அணுக்களாக மாறுகின்றது.
எப்படித் தான் வாழ்ந்தாலும் குறுகிய காலம் தான் நாம் வாழுகின்றோம். உடலில் சிறிது காலம் தான் நாம் இருக்க முடிகின்றது.
அதற்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் அகஸ்தியன் பெற்ற தீமையை நீக்கிய உணர்வுகளையும் நமக்குள் சேர்த்துச் சேர்த்து… சேர்த்துச் சேர்த்து… இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அதற்குத்தான் இந்த மார்க்கத்தைத் தெளிவாக்குவது.
நான் சம்பாரித்தேன் எல்லாம் செய்தேன் என் குடும்பத்தில் என் பையன் நாளை என்ன செய்வான்…?
அதே போன்று தொழில் செய்யும் இடத்தில் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்… நாளை என்ன ஆகுமோ…? என்று அதை நமக்குள் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த ஏமாற்றும் உணர்வு நமக்குள் நோயாக மாறி
1.இறந்த பின் எவன் ஏமாற்றினானோ அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல முடியும்.
2.மீண்டும் உடலுக்குத் தான் நாம் வருகின்றோம்
3.விண் செல்லும் உணர்வுகளை இழந்து விடுகின்றோம்.
ஆகவே ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையில் எப்போது சிரமம் என்று வந்தாலும் கொடுத்த பயிற்சிப் பிரகாரம் அந்த அகஸ்தியன் பெற்ற சக்திகளைப் பெற்றுப் பாருங்கள். எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்
1.எதனையும் பற்றி “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற சிந்தனை செய்ய வேண்டியது இல்லை.
2.அருளைப் பெறுவேன்… இருளை நீக்குவேன்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்…!
3.என் இரத்த நாளங்களிலே அந்தப் பேரருள் பேரொளியைக் கலக்கச் செய்வேன்
4.என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்த அருள் சக்தியைப் பெறும்படி செய்வேன் என்று எண்ணுங்கள்.
அதே சமயத்தில் அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல விஷத் தன்மைகளை ஒடுக்கினான். அந்த உணர்வுகளைத் தனக்குள் வலிமை மிக்கதாக அவனுக்குள் உருவாக்கிக் கொண்டான்.
அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகளும் இங்கே பரவி உள்ளது. உங்களுக்குள் பதிவு செய்ததை எண்ணத்தால் அதைக் கவர முடியும்.
அகஸ்தியன் பெற்ற நஞ்சை வென்றிட்ட அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்களைத் திறந்து ஏங்குங்கள். உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்…!
இப்போது
1.உமிழ் நீர்கள் வாயிலே சுவை மிக்கதாக பச்சிலை மணம் கலந்ததாகச் சுரந்து உங்கள் உடலுக்குள் செல்லும்
2.உங்கள் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து உடலுக்குள் விஷத்தன்மையை மாற்றும் சக்தியாக நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.காற்றிலே இது உண்டு… உங்களால் அதை எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும்.
அதற்குத் தான் இந்தப் பயிற்சிகள் எல்லாம்…!


சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தை இணைத்துவரும் பகுதியில் ஆலயத்தினை வைத்தார்கள் ஸ்தபதியர்
ஓர் உணர்வின் தன்மை கொண்டு ஒரு கோளின் உணர்வை அதிகரித்து இந்த மனித உடலில் வாழ்ந்தால்
1.அந்தக் கோளுக்கு மாற்றாக நல்ல உணர்வின் தன்மை இணைந்து வாழும் உணர்வின் கணக்கிற்கொப்ப நட்சத்திரங்களின் திசை நோக்கி
2.எந்த கோள்களுக்கும் சிக்காது அதன் உணர்வின் நேர் பார்வையிலே
3.சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தை இணைத்துவரும் பகுதியில் ஆலயத்தினை இணைத்து வைப்பார்கள்.
அப்படி இணைக்கும் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் இணைப்பும் மற்ற கோள்களின் இணைப்பும் இந்த துருவப்பகுதியில் கவரும் உணர்வை அதற்கு நேராக ஆலயம் அமைத்து “தெய்வீகப் பண்பை நாம் பெற வேண்டும்” என்று வைப்பார்கள்.
ஏனென்றால் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பையும்
1.மற்ற வெள்ளிக் கோளின் உணர்வுகளையும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் இரண்டாகச் சேர்க்கும் நிலை வரும் பொழுது
2.அதன் ஒளிக் கற்றைகள் அது விரிவடைந்து அந்த ஆலயத்தின் அமைப்புக்கு
3.சூரியனுடைய நேர் பார்வையில் வரும் போது அதனை மாற்றி அமைத்து அது எதனைக் கவர்கிறது…? என்பதனை அளவுகோலிட்டு
4.முந்தைய காலத்தில் கணக்கிடும் தன்மைகள் வந்தது.
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கால்குலேட்டர் என்ற சாதனங்களை வைத்து மனிதன் சிந்தித்து நுகரும் தன்மை இல்லாது கால்குலேட்டர் வைத்து பதிவு செய்து அதன் மேல் ஞாபகப்படுத்தும் நிலையும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பதிவின் தன்மை கொண்டு ஒன்று ஒன்றுடன் மோதும் பொழுது ஒன்றின் உணர்வுகள் எப்படிக் கணக்கிடுகிறது…? என்ற நிலையில் கணக்கிடுகின்றார்கள்.
இப்படிச் சென்றவன் இதிலே தான் நாட்டம் செல்கின்றதே தவிர மெய்ஞானிகள் உணர்வின் நிலையும் பிரபஞ்சத்தின் உணர்வின் ஆற்றலையோ கணக்கிடும் முறைப்படுத்தி உலக பிரபஞ்சத்துடன் இயக்கும் நிலை காலத்தால் மறைந்து விட்டது. விஞ்ஞான அறிவு ஓங்கி விட்டது. அதன்வழி கம்ப்யூட்டரை இயக்கும் நிலை வந்து விட்டது.
நம் உயிர் எலக்ட்ரிக் உடலுக்குள் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. மாற்றிய உணர்வின் தன்மை கொண்டு மீண்டும் எண்ணுவுமே என்றால் நமது உணர்வுக்கும் நுகர்ந்த உணர்வுக்கும் எதிர்நிலை வரப்படும் பொழுது அதன் உணர்வின் அறிவைப் பிரித்துக் காட்டுகின்றது.
அதே சமயத்தில் கம்ப்யூட்டர் இதைப் போன்ற நிலையில் இயக்கினால் அதனை உடனே மாற்றி அமைக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றார்கள். கணக்கை மாற்றி விடுகின்றனர்.
இதைப்போல
1.நமது உயிரின் தன்மை எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று வரப்படும் பொழுது
2.இதனை துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.
இதைப் போல் மனிதனின் நிலையில் ஓர் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் மாற்றமாகும் பொழுது அதற்குத் தக்க நல்ல குணங்களின் உணர்வுகளைப்
1.பிறிதொரு எதிர் நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட நிலையில் இருந்து
2.தெய்வம் என்று காரணப் பெயராக வைத்து அந்தத் திசை நோக்கி நாம் எண்ணும் பொழுது அதன் உணர்வுகள்
3.வெள்ளிக் கோளின் உணர்வுகளும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகளும் மற்ற கோள்கள் நிலைகளை இணைந்து
3.இந்த உணர்வு மூன்றும் ஒன்றாகச் சேர்க்கும் அத்தகைய நல்ல உணர்வை உருவாக்கும்
4.இத்தகைய உணர்வுகள் பரவும் பொழுது அந்தத் திசை நோக்கி வைப்பார்கள்.
அதை நோக்கி நாம் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டு அது கவர்ந்து வரும் திசையில் நோக்கும் பொழுது “அந்த உயர்ந்த குணத்தின் உணர்வுகள் நமக்குள் கிடைக்கும் படி வைத்தார்கள்…”
இது எல்லாம் வானவியல் சாஸ்திரத்தைக் கடந்த காலம் இயற்கையின் உண்மை உணர்வு கொண்டு உணர்வினைத் தனக்குள் மனிதனால் பதிவு செய்து கொண்ட உணர்வின் தன்மை கொண்டு… கணக்குகளை மனக்கணக்காக வைத்து அந்த மனக்கணக்கின் உணர்வு கொண்டுதான் தெளிவாக்கி தெளிந்த உணர்வு கொண்டு செயலாக்கி
1.அதன்படி வான இயலின் உணர்வின் தன்மைக்கொப்ப ஆலயங்களை அமைப்பதும் அதன் வழி செயலாக்கமும்
2.அன்று ஸ்தபதியர் என்று அவர்களைச் சொல்வார்கள்.
3.இப்படிக் கணக்கிட்டுச் செயல்படுத்தியவர்கள் உலக நிலையில் பெரும் கொண்ட மெய்ஞானிகளாக இருந்தனர்.
மெய்யைப் பெறுவதற்கு செயல்பட்ட இந்த நிலைகள் எல்லாம் இக்காலங்களில் பிறிதொரு தீமையின் நிலைகளால் மறைந்து விட்டது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கோபப்படுபவனைப் பார்த்து இரக்கமற்றுக் கொல்பவனை நாம் பார்க்க நேர்ந்தால் இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு உணர்வின் கருத்தன்மை அடைகின்றது நம் இரத்தங்களிலே. ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!
ஆக… இப்படித் தவறு செய்கின்றானே…! மற்றவனைத் துன்பப்படுத்துகின்றானே… கொல்கின்றானே…! என்ற இந்த உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் அதனின் உணர்வுகள் நமக்குள் பெருகி “இரத்தக் கொதிப்பாக” மாறுகின்றது. நல்ல உடலை உருவாக்கிய அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.
ஆக…
1.எப்படி எல்லாம் உணர்வுகளை இந்த உயிர் இயக்குகிறது…?
2.எத்தனை விதமான உணர்வுகளை நுகருகின்றோமோ உயிர் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதை அறிவதற்குத்தான்
3.நகருக்குள்ளும் நாட்டுக்குள்ளும் காட்டுக்குள்ளும் எம்மைச் செல்லும்படி செய்து
4.அந்த இயற்கையின் உண்மையின் உணர்வலைகள் எப்படி இயங்குகின்றது…?
5.அதிலிருந்தெல்லாம் நீ எப்படி மீள போகின்றாய்…? என்று குருநாதர் காட்டுகின்றார்.
இரவிலே சுற்றும்படி செய்து ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கும்படி செய்வார்.
1.அந்தக் குடும்பத்தில் சாபமிட்டவர் எத்தனையோ பேர்கள்.. தொல்லைப்படுத்துவோர் எத்தனையோ பேர்கள்…
2.தொல்லைப்படுத்துவோர் இறந்தபின் அவர்கள் குடும்பத்தில் என்ன ஆகின்றது…?
3.ஆவியாக பின் அதே பற்றுடன் இன்னொரு உடலுக்குள் சென்று பேயாக அது எப்படி ஆட்டிப் படைக்கின்றது…?
அவர்கள் செல்வந்தராக இருந்தாலும் உடலுக்குள் சென்று அந்தச் செல்வத்தைக் காப்பதற்கு மாறாக தவறின் நிலைகள் இழைக்கப்பட்டு… அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கடும் நோயாக உருவாக்கப்பட்டு… தேடிய செல்வத்தைப் பாதுகாக்க முடியாத நிலையும்… தன் உடலில் கடும் நோயாக அவர்கள் எப்படி வேதனைப்படுகின்றார்கள்…? என்பதையும் ஒவ்வொரு வீட்டிலும் இரவிலே அதைப் பார்ப்பதற்காகச் சுற்றி வரும்படி செய்வார் குருநாதர்.
அவர்கள் வீட்டிற்கு நேராக சில இடத்தில் அமரும்படி செய்து அதைச் செயல்படுத்துவார். ஆனால் இதை உள்ளூரிலே செயல்படுத்துவதில்லை. ஏனென்றால் “என்னை யார்…?” என்று தெரிந்து கொள்வார்கள் அல்லவா…!
ஆகையினால் வெளியூர்லேதான் இதையெல்லாம் அமர்ந்து பார்க்கும்படி சுற்றிப் பார்க்கும்படி செய்வார். தெரியாத இடத்திலே “ஒரு பிச்சைக்காரன்…” போன்று அமர்ந்து அதைப் பார்க்கும்படி சொல்வார்.
இறந்த ஆன்மாக்கள் பழி தீர்க்கும் உணர்வுடன் அந்தக் குடும்பத்திற்குள் சென்றது. அந்த உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…? அந்த உணர்வுகளை நுகரச் செய்வார்.
1.உடலுடன் இருக்கும் பொழுது “பாவிப்பயல்…!” இப்படியெல்லாம் என்னை மோசம் செய்கின்றான்…! என்று எண்ணிய உணர்வுகள்
2.“ஆக இப்படியா…!” என்று இவருக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலிலே விளைந்து அது எப்படிக் கடும் நோயாக மாறுகின்றது…?
3.உறுப்புகள் சிதைந்து போகச் செய்து நல்ல உறுப்புகளை எப்படிப் பாழ்படுத்துகிறது
4.கை கால் அங்கங்கள் வராதபடி எப்படிச் செயல்படுத்துகின்றது…?
இதனின் உணர்வுகள் வளரும் பொழுது…
1.இனம் புரியாதபடி விபத்துகள் ஏற்படுவதும்
2.முந்திய வினைகள் அந்த உணர்வின் வளர்ச்சி பருவம் வரும் பொழுது அதனுடைய இயக்கங்கள் எப்படி இயக்குகின்றது…? என்பதனையும்
3.இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படிச் செய்தார்.
ஏனென்றால்
1.உண்மையின் உணர்வின் இயக்கங்களைப் பற்றி நீ நேரடியாகத் தெரிந்து கொண்டால் தவிர மற்றதை நீ உணர முடியாது
2.காரணம்… உன்னுடைய உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் நீ செல்வாய்.
3.பிறிதொரு உணர்வின் இயக்கம் மனிதனை எப்படி மாற்றுகின்றது…? என்பதனை நீ அறியவில்லை என்றால்
4.உன்னால் உனக்குள் புகும் தீமைகளை நீ மாற்றி அமைக்க முடியாது.
ஆகவே மனித வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை மாற்றி அமைத்த அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகளைப் பெறக்கூடிய தகுதி நீ எப்படிப் பெற வேண்டும்…? என்று இப்படித்தான் எனக்கு உணர்த்திக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் தியானித்து அந்தச் சக்திகளை பெற்றுக் கொண்டே வருகின்றோம்.
1.புதிதாக இந்தத் தியானம் செய்வோரும் சரி…
2.ஏற்கனவே செய்து பழகியோரும் சரி…
3.அதை எவ்வாறு பெற வேண்டும்…? என்றும்
4.அதை எப்படிப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்…? என்பதையும் உணர்ந்து கொள்வது நல்லது.
தியானத்தில் எடுக்கும் பொழுது துருவ நட்சத்திரம் என்று எண்ணினாலும் அது துருவ நட்சத்திரம் என்று தெரியாது. ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகள் நம் உடலுக்குள் மோதும் பொழுது ஒரு வெளிச்சம் வரும்.
2.அங்கே மட்டுமல்ல… நம் உடலுக்குள்ளும் ஒரு விதமான அலைகள் வரும்
3.உடலுக்குள் அந்த உணர்வலைகள் அலை அலையாகப் படர்ந்து அது வெளியேறும் (சீராகத் தியானம் செய்வோர் இதைப் பார்த்திருக்கலாம்)
ஏனென்றால் புதிதாக இருப்பதால் சிலர் இதைப் பார்க்க முடியவில்லை அல்லது தெரிய முடியவில்லை என்றாலும் தொடர்ந்து எடுத்துப் பழகுதல் வேண்டும்.
காரணம்… இந்த வாழ்க்கையில் நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்ட சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் குரோதம் பயம் அதிகமாக நமக்குள் பதிவாகி இருக்கின்றது.
இதை நாம் அமைதிப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஆரம்பத்திலே நாம் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும்
1.அந்த உணர்வுகள் நம் ஆன்மாவிலே முன்னாடி இருப்பதால்
2.அதைப் பிளந்து விட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசித்து எடுக்க முடியாது.
தியானத்தில் கண்களை மூடி இருக்கும் போது அப்போது என்ன நடக்கிறது…?
யார் யாரிடம் சண்டையிட்டோமோ அல்லது கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் ஏற்பட்டதோ… குடும்பத்தில் பையன் சொன்னபடி கேட்கவில்லை அவன் சரியாகப் படிப்பதில்லை ஏதாவது சொன்னால் அவன் அடிக்கடி முறைத்துப் பார்க்கின்றான்… திட்டுகிறான்… சாபமிடுகின்றான்…! என்று இது போன்று எத்தனையோ உணர்வுகள் வரும்.
என்னால் தியானத்தில் அமர முடியவில்லை… ஒருநிலைப்படுத்த முடியவில்லை (CONCENTRATION) என்ற நிலை வரும் இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும் அல்லவா.
அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதெல்லாம்
1.உடனடியாக கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்த வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி
3.எங்கள் உடல் முழுவதும் அது படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
4.கண்களைத் திறந்து இப்படி எடுத்துச் செலுத்தி வலுப்பெற்ற பின் குறுக்கே வரும் சங்கட அலைகளை மற்ற நினைவுகளை விலக்கிச் செல்லும்.
5.அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அமைதி கொண்டு நாம் பெற முடியும்.
ஆனால் அதே சமயத்தில் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த சங்கடமும் மற்ற நிலைகளும் குறுக்கே வந்து கவரும். மீண்டும் அவ்வாறு சிந்தனை இல்லாது வந்தாலும் “உடனே கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்த வேண்டும்…!”
துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிச் சுவாசித்து எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்… எங்கக் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று இந்த உணர்வுகளைச் சேர்த்து அடிக்கடி சுத்தப்படுத்திக் கொண்டு வந்தால்
1.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கும் சிறுகச் சிறுக இந்த வலு ஏற்றப்பட்டு
2.தீமை வராதபடி… பிற உணர்வுகள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
சோப்புப் போட்டு துணியில் உள்ள அழுக்கை நீக்குவது போன்று… ஒரு தடவை செய்து சரியாக வரவில்லை என்றால் இரண்டாவது தடவை மீண்டும் அந்தச் சோப்பைப் போட்டு நீக்குவது போல்… ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் ஆன்மாவை அது துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.
இது தான் தியானப் பயிற்சி…!
தியானம் இருந்தேன்… எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை எங்கே உட்கார்ந்தாலும் எழுந்து செல்லும்படி செய்கின்றது எனக்கு ஒரு எதிரி இருக்கின்றான் அவனை நினைத்தவுடன் தியானம் செய்ய முடியவில்லை என்று அதையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
அதே போல் வியாபாரத்திலோ மற்ற வகைகளிலோ கொடுக்கல் வாங்கலில் சண்டையிட்டிருந்தால் நினைவுகளைத் தூண்டி “அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்…!” என்றெல்லாம் சிலருக்கு தியானத்தில் அமரும் பொழுது அந்த உணர்வுகள் வரும்.
அப்பொழுதெல்லாம் உடனடியாகக் கண்களைத் திறந்து “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.இப்படிச் செலுத்தினால் முன் நின்று சுவாசித்து (துருவ நட்சத்திரத்தின் சக்தியை)
2.உடலில் அந்த தீமை செய்யும் உணர்ச்சிகளை மாற்றிடும் சக்தி நமக்குள் உருவாகின்றது.
பின்.. யார் நமக்குத் தொல்லை கொடுத்தார்களோ… அறியாது செய்யும் தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்… பிறருக்கு நல்லது செய்யும் அந்த எண்ணங்கள் அவர்களுக்குள் தோற்றுவிக்க வேண்டும்…! என்று எண்ண வேண்டும்.
பையன் சொன்னபடி கேட்கவில்லை எதிர்த்துப் பேசுகிறான் என்றால் அந்த உணர்வுகள் தியானத்தை எடுக்க விடாதபடி தடுக்கும்.
அந்த நேரத்தில் உடனே கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு… என் பையன் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும்… சிந்திக்கக்கூடிய ஆற்றல் வரவேண்டும்… உயர்ந்த பண்புகள் வளர வேண்டும் என்று இந்த உணர்வை அங்கே “அவன் மீது பாய்ச்ச வேண்டும்….”
இப்படி எண்ணி எடுத்தால் அவன் உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க முடியும். அதே சமயத்தில் அவனைப் பற்றி உயர்ந்த எண்ணங்களைச் சிந்திக்கும் ஆற்றல் நமக்குள் வலுவான நிலைகளாக உருவாகிறது.
இப்படி எடுத்துப் பழகினால் தான் “தியானத்தில் அந்தச் சக்தி நமக்குள் வளர்ந்து கொண்டே வரும்…”
எடுத்தவுடனே முழுமையாக அந்தச் சக்தியைக் கொண்டு வரமுடியாது.
உடலில் எத்தனையோ வகையான உணர்வுகள் உடலுக்குள் சுழன்று கொண்டிருப்பதால் அதை மாற்றிட
1.கண்களைத் திறந்து மீண்டும் மூடி
2.திரும்பக் கண்களைத் திறந்து மூடி…
3.இப்படி நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுக்கும் ஒரு பழக்கமாக
4.துருவ நட்சத்திரத்தினை இணைத்துக் கலவையாக மாற்றி
5.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுக்கக்கூடிய ஒரு பயிற்சியாக நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.


சப்தரிஷி மண்டலத்தை அடையச் செய்யும் தொடர் வரிசை
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றோமோ…
1.உடலை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்று அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டால்
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவர் வாழ்ந்த காலத்தில் நம்முடன் பழகியதை எண்ணி “ஐயோ… நல்லவராக இருந்தார்… இங்கே எல்லாம் வந்தார்… இப்பொழுது போய்விட்டாரே…!” என்று எண்ணுவதை விடுத்துப் பழக வேண்டும்.
அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால் மனித வாழ்க்கையின் துன்பத்தை அவர் கடந்தார்… இனி பேரின்பப் பெரு வாழ்வு அவர் பெற வேண்டும்…! என்ற இந்தப் பேரின்பத்தைத் தான் எண்ண வேண்டும்.
1.உடலில் வாழ்ந்த காலத்தில் பல துன்பங்களை அனுபவித்தார்
2.உடலை விட்டு அகன்ற பின் இனித் துன்பமில்லா ஏகாந்த நிலையை அவர் அடைய வேண்டும்
3.அவர் அருள் ஒளி பெறுதல் வேண்டும்
4.உலகில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்… அவர் அருளானந்தம் பெற வேண்டும்
5.அந்த ஆன்மா ஏகாந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.
இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உடலிலே நீடித்த நாள் வாழ்ந்தவர் எவரும் இல்லை. ஆகவே நாம் செயல்படுத்த வேண்டியது துன்பத்தைக் கடந்து அவர் செல்கின்றார்… பேரின்பத்தை அவர் அடைய வேண்டும் என்பது தான்.
அவர் உணர்வு நமக்குள் இருப்பதால் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்துதல் வேண்டும்.
1.நமக்குப் பின்னும் இதே போன்று… “பின் உள்ளோர்” நாம் உடலை விட்டுப் பிரிந்த பின்
2.நாம் செய்வது போன்று அவர்கள் செய்தார்கள் என்றால் நாமும் எளிதில் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.
3.அந்தத் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்
அதற்குத் தான் கூட்டமைப்பாக அமைத்துள்ளோம்.
ஏனென்றால் “ஒரு மனிதன் தனித்த நிலைகள் அங்கே செல்ல முடியாது…!” ஒன்றுபட்ட உணர்வினை இயக்கப்பட்டுத் தான் செயல்படுத்த முடியும்.
உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் எப்படி விண் செலுத்துகின்றோமோ… இது போல நம்முடன் தொடர் கொண்டவர்கள்… நம்முடன் இணைந்தவர்கள்… கேள்வியுற்றபின் அங்கே செலுத்த வேண்டும்.
1.இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் சென்று விடாது அருள் ஒளி என்ற நிலைகள் உந்தப்பட்டு
2.என்றும் ஏகாந்த நிலை என்ற ஒளியின் சரீரத்தை நாம் பெற இது உதவும்.
ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழ்கின்றது… ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் உணர்வு ஒன்றுதான் நாம் வாழுகின்றோம்…!
ஆகவே இதை வழிப்படுத்தி நாம் செயல்படுத்துதல் வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவருமே வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழுகின்றது. இயற்கையின் நியதி இது.
அதைப் போன்று ஒரு நண்பரின் துணை கொண்டு தான் நாமும் வாழுகின்றோம். ஆனால் சந்தர்ப்பத்திலே அதிலே வெறுப்பு என்ற உணர்வுகள் வரும் பொழுது
1.இதிலிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுகளைத் தூண்டுகின்றது
2.எதிரியிடமிருந்து மீள வேண்டும் என்று வருகின்றது.
3.எதிரி என்ற உணர்வுகள் இல்லை என்றால் “தன்னைக் காக்கும் நிலை” என்பதே மறந்துவிடும்.
ஆகவே எந்த நிலை ஆனாலும் நமது வாழ்க்கையில் எதிர்ப்பு என்று வரும் பொழுது… அடுத்து சிந்தித்து நாம் அதிலிருந்து மீளும் உணர்வுகளை எடுத்தால்… அந்த வெறுப்பு நமக்குள் வராதபடி தடுக்க முடியும்
1.நஞ்சின் தாக்குதல் இல்லை என்றால் அணு என்ற இயக்கமும் இல்லை
2.நஞ்சின் தாக்குதல் இல்லை என்றால் கோள் அதுவும் உருவாகாது.
3.நஞ்சின் தாக்குதலினால் தான் சுழற்சியின் தன்மை ஆகி அதனால் வெப்பமும் ஈர்க்கும் காந்தமும் அது உருவாகின்றது.
கோள் என்று வரும் பொழுது தான் சுழற்சியில் அது வளர்ச்சி பெற முடியும். சுழற்சியின் வேகம் கூடும் பொழுது தான் சூரியனாகி… நஞ்சை வெல்கின்றது. ஒளியின் தன்மையாகப் பிரகாசிக்கின்றது. நஞ்சு இயக்கினாலும் அந்த நஞ்சை வெல்லக்கூடிய சக்தி சூரியன் பெறுகின்றது.
1.நஞ்சை வென்றாலும் அதனின் தொடர் கொண்டு
2.அந்த இயக்கத்தின் வரிசையில் வாழுகின்றது.
இதைப் போன்று தான் நமக்குள் வரும் உணர்வின் தன்மையும்…! “விருப்பும் வெறுப்பும்” அது எத்தகைய நிலையில் வந்தாலும் அதை நமக்கு நன்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நெருப்பு என்று வரும் பொழுது அதை ஒளியாக… வெளிச்சமாகப் பயன்படுத்தி அதனால் மற்ற பொருளைத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது. அதே சமயத்தில் அந்த நெருப்பை அதிகரித்து கடினமான பொருள்களையும் நாம் உருக்குகின்றோம்.
உணவுப் பதார்த்தங்கள் அனைத்துமே அந்த நெருப்பை வைத்து நாம் சமைக்கின்றோம். அந்தப் பக்குவங்கள் கொண்டு வரும் பொழுது உணவு சுவையாக மாறுகின்றது. அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வெறுப்போ துன்பமோ இவைகள் வரும் பொழுது அதனை நாம் அடக்கி
2.நன்மை பயக்கும் நிலையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அத்தகைய சக்தி பெற்றது தான் நம் ஆறாவது அறிவு. தீமை என்று வந்தாலும் அதைச் சுவைமிக்க நிலையாக மாற்றிக் கொள்ளும் நிலையில் அவ்வாறு சுவை மிக்கதாக மாற்றிக் கொண்ட “அருள் ஞானிகள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி… ஆனந்த நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்…!”
1.நெருப்பை வைத்து உணவைச் சமைத்து நாம் ஆனந்தமாக எப்படி உட்கொள்கின்றோமோ
2.அதே சமயத்தில் இருளை நீக்கி அந்த நெருப்பு ஒளியாகக் காட்டும் போது பொருள்கள் தெரிகிறது என்று எப்படி ஆனந்தப்படுகின்றோமோ
3.சாதாரணமாக உருக்க முடியாத பொருள்களை நெருப்பை வைத்து உருக்க நாம் முற்படும் பொழுது அது உருகி விட்டால் அதைக் கண்டு நாம் எப்படி ஆனந்தப்படுகின்றோமோ
4.எதனை உருக்க எதனின் தன்மை வேண்டும்…? என்ற நிலையில் கடுமையாக இருந்தால் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று நாம் எப்படி அறிந்து கொள்கின்றோமோ இது போன்று…
5.கடுமையான பகைமைகள் வந்தாலும் அது நம்மைத் தாக்காதபடி அருள் ஒளியைக் கூட்டி அந்தப் பகைமைகளை நீக்கி நாம் ஆனந்தப்படுதல் வேண்டும்.
6.நாம் எடுக்கும் உணர்வின் தன்மை கொண்டு அந்த ஆனந்தம் என்ற நிலை வருதல் வேண்டும்.
ஆகவே… நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்தியன் தன் வாழ்நாளில் தீமைகளை நீக்கினான். தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அவன் கருவிலே பெற்றது கருவிலே பெற்ற உணர்வின் துணை கொண்டு தான் அருள் ஞானமே அவன் பெறுகின்றான்.
விஷத்தை முறிக்கும் ஆற்றலைப் பெற்றுப் பிறந்த பின் அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தைக் கண்டு மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகின்றது. இவன் தீமையிலிருந்து விடுபடுகின்றான்.
விஷத்தின் தன்மை முறிக்கும் சக்தி இவன் உடலில் இருப்பதனால் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அந்த விஷங்கள் பிரிகின்றது. விஷங்களைப் பிரிக்கப்படும் பொழுது எப்படி ஒளிக் கற்றைகளை வெள்ளிக்கோள் எடுத்துக் கொள்கிறதோ அது போல்
1.மின்னலில் இருந்து வரக்கூடிய அந்த உணர்வின் ஒளிக் கற்றைகளை அகஸ்தியன் நுகர்கின்றான்
2.தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் அதைச் சேர்த்துக் கொள்கின்றான்.
ஏனென்றால் 27 நட்சத்திரங்களும் கடும் விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும் மோதலில் விஷத்தைப் பிரித்து விட்டு ஒளியின் உணர்வாக வரப்படும் பொழுது அதனை அகஸ்தியன் நுகரும் தன்மை வருகிறது.
1.அப்படி நுகர்ந்த உணர்வுகள் தான்
2.அவன் உடலுக்குள் உயிரைப் போன்றே உணர்வின் தன்மை பெறுகிறது.
27 நட்சத்திரங்களும் ஆண் பெண் என்ற துடிப்பின் நிலைகள் வரும் பொழுது தான் உயிரின் தன்மை ஈர்க்கும் தன்மை வருகின்றது.
27 நட்சத்திரங்களின் சக்திகளை ஒன்றாக இணைத்திடும் உணர்வுகளைத் தெரிந்து கொண்ட பின் அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்…? ஒன்றாக உடலில் இணைக்க வேண்டும்…! என்று அறிந்து கொண்டவன் அகஸ்தியன்.
வியாழன் கோள் 27 நட்சத்திரங்களுடைய சக்திகளை ஒன்றாகச் சேர்த்து குருவாக இருந்து மற்றவைகளுடன் சேர்த்துக் கலவையாக மாற்றுகின்றது என்பதையும் அகஸ்தியன் அறிந்து கொள்கிறான்.
அதே சமயத்தில்
1.நம் உயிரும் வியாழனாக (குருவாக) இருக்கின்றது
2.ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் எல்லாவற்றையும் ஒன்றாக்கிச் சேர்த்துக் கொண்டால் தனுஷ்கோடி
3.தீமைகளை நீக்கும் உணர்வினைச் சேர்த்து பகைமைகள் நமக்குள் வராதபடி உயிருடன் ஒன்றி ஒன்றாக்கப்படும் பொழுது
4.எல்லாம் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது “கோடி…!”
5.உயிர் ஒன்றாகின்றது… ஒளி என்ற உணர்வு ஆகின்றது.
இராமாயணத்தில் எண்ணத்தைக் கொண்டு (உணர்வுகள்) வாழ்க்கை எப்படி நடத்துகிறோம்…? என்று தான் காட்டப்பட்டுள்ளது. நமக்குள் எண்ணங்கள் எப்பொழுதும் உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது. குருக்ஷேத்திரப் போராக உயிரிலே வழி நடத்திக் கொண்டுதான் இருக்கின்றது.
ஆகவே இந்த உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தான் காவியங்களாகப் படைத்துச் சாஸ்திரங்களாகக் காட்டினார்கள் ஞானிகள்.
1.நாம் எதை எதைத் தவிர்க்க வேண்டும்…?
2.எதை எதை வளர்க்க வேண்டும்…? என்ற உண்மைகள் உணர்த்தப்பட்டது.
அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் பொழுது பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் அவருடைய தாய் தந்தையர்கள் படுத்திருக்கும் இடங்களில் பரப்பி வைத்திருந்தனர். அந்த மணங்களை எல்லாம் தாய் நுகர்கின்றது… அப்போது விஷத்தை முறிக்கும் தன்மை வருகின்றது.
உதாரணமாக… ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் விஷம் கொண்ட தேள் நம்மைக் கொட்டுவதில்லை கீழே போட்டால் உடனே கொட்டிவிடும்.
ஒரு பச்சிலையைக் கையில வைத்துக் கொண்டால் விஷமான பாம்பும் நம்மைத் தீண்டாது. ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் தேனீக்களும் கொட்டாது.
இது போன்ற உண்மைகளைக் கண்டுணர்ந்த அகஸ்தியனுடைய தாய் தந்தையர் பல விஷ ஜந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொண்டார்கள்.
மின்னல் தாக்கப்படும் பொழுது அது உடலில் தாக்கப்பட்டால் கருக்கிவிடும். ஆக மொத்தம் அந்த மின்னலின் விஷத்தன்மையை அடக்குவதற்கும் அனுபவரீதியாகப் பச்சிலைகளைக் கண்டறிந்து இரவிலே படுத்துத் தூங்கும் பொழுது அதைப் பரப்பி வைத்துக் கொள்வார்கள்.
அதே சமயத்தில் வெளியிலே செல்லும் போது அந்த மின்னல்களில் இருந்து தப்புவதற்காக
1.பச்சிலைகளைக் குப்பிகளில் போட்டு உடலில் அணிகலன்களாகப் போட்டுக் கொள்வார்கள்.
2.சில கல்லின் (கற்கள்) தன்மை அரைக்கப்பட்டு விஷத்தின் தன்மை நீக்கும் அத்தகைய பாசிகளையும் கழுத்திலே போட்டுக் கொள்வார்கள்.
3.எங்கே சென்றாலும் மின்னல்கள் பாய்ந்தால் தன்னைத் தாக்காதபடி காத்துக் கொள்வதற்கு அக்காலங்களில் இப்படி எல்லாம் செயல்படுத்தினார்கள்.
குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது அன்று வாழ்ந்த மனிதர்கள் இந்த உபாயங்களை எப்படித் தெரிந்து கொண்டார்கள்…? பச்சிலைகள அனுபவபூர்வமாக எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று காட்டுகின்றார்.
அகஸ்தியன் தாய் தந்தையர் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நுகர்ந்த உணர்வுகளும் அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் மணங்களாக வெளிப்பட்டது அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு இன்றும் இந்தப் பூமியில் உண்டு.
1.அதைப் பெறச் செய்வதற்கு குருநாதர் எனக்கு இப்படிக் கொண்டு வந்தார்
2.உங்களுக்குள்ளும் இதைப் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதைப் பதிவாக்குகின்றேன்
3.பதிவானதை நினைவு கொண்டால் உங்கள் எண்ணம் இந்தக் காற்றிலிருந்து அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்யும்.


அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதியுங்கள் அவர்கள் உடலையும் கோவிலாக மதியுங்கள். உடலைச் சிவமாக மதியுங்கள் அவருடைய கண்களைக் கண்ணனாக மதியுங்கள்.
அவர்களை மதிக்கப்படும் பொழுது நமது கண்ணை மதிக்கின்றோம் நமது உயிரை மதிக்கின்றோம் உடலை சிவம் என்று மதிக்கின்றோம் அருள் ஞானிகள் உணர்வு நமக்குள் வரும் பொழுது அந்தக் கணங்களைக் கணபதி என்று மெச்சுவோம். ஆறாவது அறிவை முருகன் என்று மதிப்போம்.
1.அருள் ஒளி கொண்டு தீமைகளை அகற்றிடும் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனையும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்
2.அப்படி நாம் எண்ணினோம் என்றால் ஒரு மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்வை மாற்றிட முடியும்.
3.அவர் மேல் வரும் பகைமைகளைத் தடுத்திட முடியும்
ஒவ்வொரு உயிரையும் ஈசனாகவும் கண்ணைக் கண்ணனாகவும் உடலைச் சிவனாகவும் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு அந்த வினைக்கு நாயகனாக மனித உடல் என்றும் தீமைகளை அகற்றும் சக்தியாக மனித உடல் பெற்றதை ஆறாவது அறிவை முருகன் என்றும் எண்ணுங்கள்.
நம் எண்ணமே இராமன் என்றும் உயிரை ஈசன் என்றும் உயிருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் உயிரால் ஈர்க்கப்படும் காந்தத்தை லட்சுமி என்றும் நாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வே நமக்குள் வளர்ச்சி பெறுகின்றது என்ற நிலையை
1.ஒவ்வொரு மனிதனையும் அத்தகைய சக்தி வாய்ந்தவர்கள் என்று எண்ணினால் நமக்குள்ளும் அதைப் பெறுகின்றோம்.
2.நீங்கள் வாழ வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
4.உங்கள் உயிரை மதிக்கின்றேன் உங்கள் உடலைச் சிவமாக மதிக்கின்றேன் உங்கள் கண்ணைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
5.இப்படி எண்ணும் பொழுது கண்களால் அவர்களைப் பார்க்கப்படும் பொழுது வெறுப்பு வருவதில்லை.
ஒருவர் தவறான நிலைகளைச் செய்து விட்டால் நாம் பார்த்தவுடன் கண்கள் சிவந்து விடுகின்றது. கண்ணனுக்கே நாம் துரோகம் செய்கின்றோம் அந்த உணர்வினை நுகர்ந்து விட்டால் உடலான சிவனுக்குத் துன்பத்தை உருவாக்குகின்றோம்.
ஆகவே நம் ஆறாவது அறிவைத் தெளியும் மனதினை… வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது முருகனுக்கே நாம் துன்பத்தை உருவாக்குகின்றோம் என்று நினைவில் வையுங்கள்.
அருள் ஞானம் பெற்ற இந்த உணர்வு கொண்டு அண்டம் பிண்டத்திற்குள் உருப்பெற்ற உணர்வின் சக்தியை நீங்கள் தெளிந்து ஒவ்வொரு மனிதனையும் இதைப் போல எண்ணி ஏங்குங்கள். மதம் இருக்காது இனம் இருக்காது மொழி பேதம் இருக்காது
1.ஒவ்வொரு நொடியிலும் உங்களை நான் நேசிக்கும் பொழுது என்னை நேசிக்கும் பண்பு வருகின்றது.
2.நான் உங்களைக் கடவுளாக மதிக்கும் பொழுது என்னை நீங்கள் கடவுளாக மதிக்கின்றீர்கள்.
3.கடவுள் என்ற தன்மை வரும் பொழுது பகைமைகள் அகற்றப்படுகின்றது.
குறைகளைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே பெற வேண்டும் ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும். அந்த உடலின் தன்மை சிவனாக வீற்றிருக்கும் அந்த ஆலயம் நல்ல நிலை அடைய வேண்டும் நல்வழி காட்டும் கண்ணன் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அந்தச் சக்தி நமக்குள்ளும் பெருகுகின்றது
ஆகவே
1.இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்.
2.உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் செலுத்துங்கள்
3.பேரின்பப் பெரு வாழ்வு அடையுங்கள்
4.என்றும் பிறவியில்லா நிலை அடைய இந்த வாழ்க்கை அது உதவும்.
5.அருள் ஒளியைப் பெறுங்கள்… அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஓ…ம் ஈஸ்வரா…! புருவ மத்தியில் இருக்கும் உயிர்…
1.நாம் பார்ப்பதை… கேட்பதை… நுகர்வதை எல்லாம் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது..
2.ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.
ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! ஆதிசக்தி என்பது விஷம் அந்த விஷத்தின் தாக்குதலால் ஏற்படுவது தான் வெப்பம் அந்த வெப்பத்தின் தாக்குதலால் அணுக்களாகச் சிதறி ஓடுகின்றது.
சிதறி ஓடும் போது அந்த நேரத்தில் ஈர்க்கும் காந்தம் வருகின்றது. அதற்கு லட்சுமி என்று காரணப் பெயர் வைத்துள்ளார்கள்.
1.நமது உயிர் ஆதி சக்தியின் துடிப்பின் இயக்கமாக நம்மை இயக்கிக் கொண்டுள்ளது
2.அதனால் தான் ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! என்று சொல்கின்றோம்.
குருதேவா…! நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் குணங்களுக்கும் உடலுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது ஆகவே நான் நமது உயிரைக் குருவாக எண்ணி ஏங்குகின்றோம்.
நமது குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்)
1.எதன் வழியில் இந்த வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் அருள் சக்தி பெற்றாரோ அந்தச் சக்திகளையும்
2.அகஸ்தியன் பெற்றதை நமது குரு பெற்று அதன்வழி நமக்குள் உபதேசித்த உணர்வையும்
3.நாம் நுகர்ந்து நமக்குள் பதிவாக்கிக் கொண்ட பின்…
4.அப்படிப் பதிவான அனைத்தையும் நாம் குருவாக மதித்தல் வேண்டும்.
ஒரு மனிதன் கோவிக்கின்றான் என்றால் அந்த கோபத்தின் உணர்வு நமக்குள் பதிவாகி இருக்கும் பொழுது அதை மீண்டும் எண்ணினால் அந்த கோபத்தின் உணர்வே நமக்குள் குருவாக இருக்கும்.
அதே போன்று வேதனையான உணர்வை நுகர்ந்தால் வேதனையை அறிகின்றோம்… அந்த உணர்வு பதிவாகிறது. மீண்டும் அதே வேதனையை எண்ணினால் அதுவே வேதனைப்படுத்தும் உணர்வின் குருவாக நமக்குள் இருக்கும்.
1.ஆனால் நமது குரு மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி பெற்றவர்.
2.அவர் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் அதைக் குருவாக உருவாக்க வேண்டும்.
நமது உயிரும் பல கோடிச் சரீரங்களைக் கடந்து ஈசனாக இருந்து வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் உடலை (மனிதனாக) அமைத்தது… நமக்குக் குருவாக அமைந்திருக்கின்றது அனைத்திற்கும் குருவாக நம் உயிரே இருக்கின்றது.
என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்…! எதை எல்லாம் நாம் எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் இசையாகச் சொல்லாகவும் செயலாகவும் நான் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலாகவும் அமைத்துக் கொண்டு இருப்பது நம் உயிர் தான்.
ஆகவே…
1.இயற்கை நிலைகள் என்னை மனிதனாக உருவாக்கிய
2.இந்த உணர்வின் நினைவு எனக்குள் எப்பொழுதுமே வரவேண்டும்.
அதாவது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் மனித சரீரத்தைக் கொடுத்த “உயிரான ஈசனை… நாம் நினைவில் கொள்தல் வேண்டும்…”
இருளை நீக்கி ஒரு பொருளைக் காணச் செய்வதும்… அந்த உணர்வின் உணர்ச்சியின் இயக்கங்களைக் காணச் செய்வதும்… நமது உயிரே. உணர்வை அறிவாக இயக்கி அறிவின் உணர்வாக நம்மை இயக்குவதும் நமது உயிரே. எப்பொழுதுமே உன் நினைவாகவே நான் இருத்தல் வேண்டும்,
என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்…!
1.உயிராக இருந்து நுகர்ந்த உணர்வுகளை எப்படி எனக்கு அறிவிக்கின்றாயோ
2.இதைப் போன்று ஏகாந்த நிலைகள் கொண்டு அருள் ஒளி பெற்று துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருள் ஒளியைப் பெற்று
3.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக உருவாக்கும் உணர்வு அந்த நினைவு என்னில் வர வேண்டும் ஈஸ்வரா.
உயிரான உணர்வுகள் ஒளியான உணர்வாக உருவாகி… அனைத்தையும் உணர்வின் அறிவாக இயக்குவதும்… மனிதன் ஆன பின் அனைத்து அறிவையும் இயக்கி
1.அறிவின் ஒளியாக ஒளியின் சரீரமாக உருவாக்கும் அந்த (உன்னுடைய) அருள்…
2.உன் நினைவு எனக்குள் வரவேண்டும் என்று தான் பொருள்.
3.உயிரின் நினைவாகவே… நினைவுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றியே நாம் வாழ்தல் வேண்டும்.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகிறது என்று அறிகின்றோம். ஆகவே அருள் ஒளி பெறும் உணர்வினை நாம் எண்ணி நம் எண்ணங்கள் அனைத்தும் உயிருடன் ஒன்றி அவனிடம் அதை வேண்டினால்
1.நாம் வேண்டிய உணர்வுகளை ஒளியாக இயக்குகின்றான்
2.இருளை அகற்றிடும் ஒளியாக மாற்றுகின்றான்.
அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அகஸ்திய மாமகரிஷியின் அருல் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.
இந்த உணர்வுகளை உயிர் வழி செலுத்தப்படும் பொழுது
1.அதன் உணர்வைப் பெறும் நிலையாகவும்…
2.அதன் வழி நுகரச் செய்வதும்…
3.அந்த அருள் ஒளியை நமக்குள் இயக்கச் செய்வதும்…
4.அணுவாக உருவாக்குவதும் அதை உடலாக ஆக்குவதும்…
5.“அருள் வழியில் – அதுவே உயிரின் வேலை…!”
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி… உயிரான ஈசனை மதித்து… உடலில் இருக்கும் அனைத்திற்கும் ஈசனும் அவனே…! குருவும் அவனே…! என்று மதிக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனை வேண்டுவோம்.
பின் கண்களை மூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தநாளங்களில் கலந்து… இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில்
1.தாய் கருவிலே அவன் பெற்ற நஞ்சினை வென்றிடும் உணர்வுகளையும்
2.அவன் பிறந்த பின் சர்வ நஞ்சுகளையும் தனக்குள் ஒடுக்கிடும் சக்திகள் பெற்றதையும்
3.இருளை அகற்றிடும் அருள் சக்திகள் பெற்று மெய்ப் பொருள் கண்டுணர்ந்து வாழ்ந்த… அவனில் விளைந்த உணர்வுகளையும்
4.நாம் நுகர்வோம்…. நம் உடலுக்குள் செலுத்துவோம்
5.அருள் ஒளி பெறும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.
அகஸதிய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
நஞ்சினை வென்றிடும் மின்னணுக்களை அகஸ்தியன் நுகர்ந்து உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியின் கதிராக அவன் எவ்வாறு மாற்றினானோ அதைப் போன்று நாமும்…
1.அந்த அகஸ்தியன் நுகர்ந்த மின்கதிர்களை எடுப்போம் என்றால்
2.இந்த உலகில் வரும் விஷத்தின் தன்மைகளை அடக்கி ஒளியாக ஆக்க முடியும்.
இரு நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் மோதும் பொழுது மின்னலாகப் பாய்கிறது.
1.அந்த ஒளிக் கதிர்களை அகஸ்தியன் வழியில் எடுத்தால்…
2.(அதாவது) மறைமுகமாக எடுத்து உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இரையாகக் கொடுத்தால்
3.நஞ்சை வென்றிடும் சக்திகளை நிச்சயம் பெறுவோம்.
ஆகவே அகஸ்தியன் எப்படித் துருவ நட்சத்திரமாக ஆனானோ… அதனின்று வரும் பேரருள் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் “இந்த உணர்வை ஊட்டி… உங்கள் நினைவை அங்கே அழைத்துச் சென்று… அந்த உணர்வை நுகரும்படி செய்கின்றோம்…”
அதை நீங்கள் எடுத்துக் கொண்டால் உங்கள் உடலில் அது இந்திரீகமாக மாறி அதே உணர்வுகள் அணுவாக விளையத் தொடங்கும். விளைந்த பின் அது தன் இரைக்காக உணர்ச்சிகளை உந்தும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரும் தன்மையாக வரும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படிக் கவரும் போது… அறிவின் தன்மையாக இருளை நீக்கும் எண்ணங்கள் வந்து… உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்த அது உதவும் என்று தெளிவாகக் கூறுகின்றோம் (ஞானகுரு).
நீங்கள் வாழ வேண்டும் அந்த உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்ற இந்த இச்சையில்தான் குருநாதர் இட்ட கட்டளைப்படிதான் அருள் சேவையாக இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.
ஆகவே அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம் அருள் வழியைப் பெறுவோம். இருளை அகற்றிடும் அருள் சக்தியை அனைவரையும் பெறச் செய்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.என்னிடம் (ஞானகுரு) ஆசீர்வாதம் வாங்க விரும்புவோர் உடல் நலம் பெற வேண்டும் “எனக்கு அருளாசி கொடுங்கள்..”
2.என் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் “அந்த அருள் பெற வேண்டும்” என்று கேட்டுப் பழகுங்கள்.
அருள் வழியில் பெற வேண்டிதைக் கேட்டு நீங்கள் வேண்டி வந்தால் அது உங்களுக்குள் பதிவாகும். “யாம் கொடுக்கும் வாக்கு” உங்களுக்குள் அது சீராக இயங்கும்.
குடும்பத்தில் திருமணமோ மற்ற நல்ல நிகழ்ச்சிகளோ நடக்க வேண்டும் என்று அதற்கு அருளாசி வேண்டும் என்று கேட்டால்… அதன் வழியில் நடக்கும் என்று கொடுத்தால்… அதை நீங்கள் பதிவாக்கினால்… சுப நிகழ்ச்சிகள் நிச்சயம் நடக்கும்.
வரன் வரவில்லை… ஒருவரும் கிடைக்கவில்லை…! வந்து பார்த்துவிட்டுச் சென்று விடுகிறார்கள்…! என்று அப்படி எண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் ஒரு சிலர்
1.நான் என்ன செய்தாலும் அது நடக்கவே மாட்டேன் என்கிறது…! என்று எம்மிடம் இப்படிக் கேட்டு விடுகின்றார்கள்.
2.அப்பொழுது நான் எதைச் சொல்வது…?
3.நடக்காது… கிடைக்காது…! என்று சொல்வதா…?
4.நடக்கவே மாட்டேன் என்கிறது என்று அவர்கள் கேட்கும் பொழுது “நான் நடக்கும் என்று சொன்னால்…”
6.அது நடக்கும்…! என்று அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்…?
என் குழந்தைகளுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும்… அவர்கள் எதிர்காலம் சிறந்ததாக இருக்க வேண்டும். சீக்கிரம் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இப்படி வேண்டினால்… யாம் அதன்படி வாக்கு கொடுத்தால் அது செயலாகும். ஏனென்றால் இப்படித்தான் கேட்க வேண்டும்.
நான் வெளியிலே கொடுத்திருக்கக்கூடிய கடன்… பாக்கி பணம் வர வேண்டும். அவர்கள் அதைக் திருப்பி கொடுக்கக்கூடிய சக்தியாக அவர்கள் செய்யும் தொழிலில் வருமானம் வர வேண்டும். எனக்கு அந்த அருளாசி வேண்டும்.
1.நான் பொருளைக் கொடுத்தோர் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும்
2.எனக்கு அவர்கள் பணத்தைக் கொடுக்க வேண்டும் அந்த அருள் வேண்டும் என்று என்னிடம் ஆசி வாங்கினால்
3.அதன் வழி யாம் நடக்கும் என்று சொல்ல முடியும்.
அதே பிரகாரம் நீங்கள் வழி நடந்தால் வர வேண்டிய பணம் சரியாக வந்து சேரும் வாழ்க்கை எதிர்காலமும் நலம் பெற இது உதவும்.
அருள் ஆசியின் தன்மைகள் நாம் எடுத்துக் கொண்ட தவத்தின் தன்மையால் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவான பின்…
1.நீங்கள் அதை எண்ணி வளர்த்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம்… உங்கள் நினைவு… உங்களைக் காக்கும்
3.ஆகவே சீராகப் பயன்படுத்தினால் யாம் கொடுக்கக் கூடிய வாக்கின் பலிதம் சரியாக இருக்கும்.
ஆனால் என்னிடம் கேட்கும் போது கஷ்டமாக இருக்கின்றது… நோய் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… பல காலம் பல டாக்டர்களைப் பார்த்து விட்டேன்…! என்று இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் “நான் எதைச் சொல்வது…?”
என் உடலில் உள்ள சர்வ பிணிகளும் நீங்க வேண்டும் எனக்கு அந்த அருள் ஒளி பெற வேண்டும் நான் உடல் நலம் பெற வேண்டும் அந்த அருள் ஆசி வேண்டும் என்று சொன்னால் “கேட்போர் யாரும் இல்லை…”
ஆகவே அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து நீங்கள் விடுபடுங்கள். குருவிடம் இருந்து பெற வேண்டிய நல்ல வாக்கினை நீங்கள் இழந்து விடக்கூடாது.
ஏனென்றால் எதிர்மறையான எண்ணம் கொண்டு நீங்கள் என்னிடம் கேட்டால்… நீங்கள் சொல்வதை இடைமறித்து நான் வாக்கினைக் கொடுத்தாலும் அது பலிதம் ஆவது சிரமமாகி விடுகின்றது.
நீங்கள் எண்ணிய உணர்வுக்கும் நான் சொல்வதற்கும் எதிர்மறையாகி விடுகின்றது. ஆக மீண்டும் அந்த துன்பத்தைத் தான் நுகருகின்றீர்கள். ஆகவே அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
ஒரு விஷச் செடியின் அருகிலே நல்ல மணம் சென்றால் அது விடுவதில்லை. அது போன்று
1.எந்தக் குணத்தின் தன்மை முன்னணியில் வைத்திருக்கின்றீர்களோ
2.அந்த உணர்வு… நான் கொடுக்கக்கூடிய நல்ல வாக்குகளை ஏற்றுக் கொள்ள விடாதபடி உங்களைத் தடைப்படுத்தி விடுகின்றது.
இதை எல்லாம் நீங்கள் மாற்றிப் பழகுதல் வேண்டும்.
எங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று கேட்டால் பரவாயில்லை.
1.துன்பம் போகவே மாட்டேன் என்கிறது
2.பல தொல்லைகள் வந்து கொண்டிருக்கின்றது
3.நான் என்ன செய்தாலும் ஒன்று முடியவில்லை…” என்று கேட்டால்
4.நான் ஒன்றும் சொல்ல முடியாது.
இதை மாற்றி அமையுங்கள்…! என்று தான் உங்களிடம் சொல்கின்றேன். எப்பொழுது உங்கள் எண்ணம் மாறுகின்றதோ… நல்லதைக் கேட்டு எம்மிடம் ஆசி பெறுகின்றீர்களோ… நாம் கொடுக்கும் வாக்குகள் உங்களுக்குள் பலிதம் ஆகும்.
நான் சொல்லும் முறைப்படி உங்கள் எண்ணங்களை மாற்றிவிட்டு… எதை நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ… அது பதிவாகின்றது. அதன் வழி உங்கள் எண்ணம் உங்கள் நினைவு உங்கள் செயல் அனைத்துமே நல்லவையாக இருக்கும்.
செயல்படுத்திப் பாருங்கள்.


அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)
ஆத்ம சக்தியின் வளர்ச்சிக்கு வானியலாக வழி வகுத்துத் தந்திட்ட “மகரிஷிகள்…” ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வாழ்வின் உண்மை நிலை உணரும் பொருட்டு…
1.நான் என்பது யார்…? என்ற ஞான முகிழ்விப்பு உதயம் காட்டிட
2.ஆத்ம விழிப்பால் பூரணத்துவ நிறைவைத் தன்னுள் கண்டு… தெளிந்து…
3.அன்பெனும் வித்தை ஊன்றி… ஞான நீரை மனமெனும் நெடு வயல் பாய்ச்சி எதிர் மோதல் களைய
4.பலன் எனும் செழுமை வளர்ப்பை ஆகாரமாகப் புசித்து உலக நலன் நாடும் வழிகாட்டியது
5.அளவுகோல் காணா… “பரிவின் வழி பாசமப்பா…”
உம்மை நீ உணர்ந்து கொண்டிட அளவில் சிறிதாகினும் பிடிப்பின் (உலகப்பற்று) நிலை விலக்கிடப்பா…!
முழுமையாக உம்மை ஆட்கொண்டிட்ட பிறகு… உம்மையே இயக்கும் செயல் சித்தம் தொடர்ந்த பிறகு… ஞானக்கண் திறந்திடவில்லை என்றிட்ட எண்ண (உன்னுடைய) உணர்வே எதிர் மோதல் அமில குணங்களாக வாயு பித்த சிலேத்துமம் என்பதில் ஒன்றின் பிரிவே கிளையாகக் கிளைத்து எழுந்தது உடல் நலிவின் காரணம்.
காயத்தைக் கல்வப்படுத்திடும் மூலிகை அன்றோ அருந்தினாய். காயத்திற்கு ஏது நலிவு…? எண்ணத்தின் சோர்வன்றோ விளையாடியது. “பஞ்சமுக ஒளியின்” பாடம்தான்… எண்ணியதை எண்ணியாங்கு நடத்துகின்ற ஆற்றலன்றோ நீ படைத்திட்டது.
பிரம்மனின் ஐந்து முகத்துள் சிரசின் முகம் உச்சியில் ஈஸ்வரரால் களையப்பட்டதாகப் படித்திருப்பாய். உன்னைச் சுற்றிச் சுழன்றோடும் ஒலி நாதத்தில் கலந்திருக்கும் ஒளியின் ஊடாக ஒலி ஒளியை ஈர்த்தே ஒளியில் கலந்தது என்ற சூட்சும உரையின் பதம்.
உரையின் தெளிவை உயர் ஞான வலுவால் அறிந்திடும் சிறு முயற்சி பதத்தின் உரையைக் காட்டும்…! விரித்தே உரைக்கின்றேன்.
பெற்றுக் கொண்டிட்ட சக்தியின் வளர்ச்சி அளவீடு சித்தன் காட்டிட்ட சித்தின் நிகழ்வாக (உலக நலனுக்காக) மழை வேண்டும் என்று எண்ணத்தை உரைத்திட்டானப்பா. உரையைச் செயலில் விளக்கி விட்டாய்.
மனதின் கூறு மேம்பட… ஈர்த்து வெளிக்காட்டிட தொடர்பு என்ன…? சொல்வது அனைத்தும் பாடம் தான். உன்னில் ஊன்றிப் பார். ஞானவழிச் செல்வங்கள் யாராக இருந்தாலும் அவர்களும் காணட்டும்.
உனது எதிர்புறமும் நேர்புறமும் இடது வலது பக்கங்களிலும் ஜோதியாகக் காண்ப்பது உயிராத்ம சக்தியின் வளர்ப்பு. எண்ணத்தில் உன்னையே நீ ஜோதியாகக் காண்கின்றாய்.
பஞ்சமுக ஜோதியாக விளங்கி விட்டால் பிறப்பின் நிலை ஏது…? அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)
ஐம்முகத் தொழிலில் அறிந்து உணர்ந்து செயல் கொள்ளுதல் எல்லாம் விளக்கவொண்ணா ஆனந்த இலயத்தின் பேரருள் செல்வ நிலையில்
1.பிரம்ம சாயுஜ்யம் என்ற உண்மையை உணர்வோன்
2.முத்தொழில் புரியும் படைத்தல் காத்தல் அளித்தல் பிரம்மா விஷ்ணு சிவன் அனைத்தும் தன்னுள்ளே தன்னையே காண்பான்.
3.எண்ணுகின்ற எண்ணம் ஈடேறுதல் சிருஷ்டி – அதுவே படைப்பு
4.எண்ணம் கொண்டு அனுபவித்தல் – காத்தல்
5.தன்னுள் அனைத்தையும் கட்டுக்குள் நிலை நிறுத்தி மோனத்தில் லயித்தல் – அழித்தல்.
6.பின்பு நிலை நிற்பது என்ன…? அதுவே அருளல் என்னும் “ஆதிசக்தியின் சக்தியாகக் கலத்தல் என்பதே… மறைத்தல் தத்துவம்…”
அண்டவெளியின் இயக்க கதியில் ஞானச் செல்வங்கள் உணர்ந்து அனுபவிக்கும் நிலைக்கு வித்திட்டேன்.
1.உயர்ந்து காட்டிடல் வேண்டும் என்ற
2.உமது செயற்பாடே… எமது ஆனந்தக் களி நடனம்.
சொல்லில் மறைபொருள் காட்டுவது… சித்தன் வல்லமை காட்டிய அனுபவித்தல் என்ற எட்டா நிலையை எட்டி விடவே இந்தப் பாடங்கள் அனைத்தும்.

கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை
கணவனைப் பிரிந்தவர்கள் மனைவியைப் பிரிந்தவர்கள் அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும் என்றும் அவர் இட்ட மாங்கல்யம் உங்களிடம் இருக்கிறது என்ற உறுதி கொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும்.
1.அவர் உணர்வுகள் உங்கள் உடலிலே உண்டு
2.அதன் வலுக் கொண்டு அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்,
இப்பொழுது சாங்கியம் சாஸ்திரம் கொண்டு எதைச் செய்கின்றார்கள்…?
கணவன் இறந்துவிட்டால் கணவனை மனைவி மறந்துவிட வேண்டும் என்பதை ஆதாரமாகக் காட்டிக் “கணவனை இழந்தவள்” என்று மற்றவர்களை அறியச் செய்வதற்கு மாங்கல்யத்தைப் பறிக்கின்றார்கள். அங்கேதான் தவறு செய்கின்றார்கள்.
தன் கணவன் தன்னுடன் உண்டு என்ற உணர்வினை நினைவு கொண்டு கணவன் பால் அப்படி நினைவு கொண்டால் அந்த உணர்வின் சக்தி தவறு செய்ய விடாது.
இந்த மத இனங்களில் இப்படித் தவறான நிலைகள் செயல்படுத்தப்பட்டு “கணவனை இழந்தவள் இழந்தவள்” என்று இந்த உணர்வின் தன்மை துக்கமும் துயரமும் கொண்டு வேதனை உணர்வைக் கொண்டு அந்த வேதனையால் பேய் மணமாக மாற்றி… இந்த உணர்வின் துணைகொண்டு தன் குடும்பத்தின் நிலைகள் கொண்டு அது செயல்படும்.
இறந்த பின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலில் சென்று பேய் உணர்வுகளைத் தான் ஊட்டி… அந்தப் பாசத்தால் அந்தக் குடும்பத்திற்கும் தீங்கு தான் செய்ய முடியுமே தவிர ஒளியின் சரீரம் பெற முடியாது… நல்வழி செல்ல முடியாது.
ஞானிகள் காட்டிய நிலைகளில்…
1.வசிஷ்டரும் அருந்ததி போன்று கவர்ந்து கொண்ட உணர்வுகள் என்றும் ஒன்றி மனிதனுக்குள் வாழ்ந்தால்
2.அருள் ஒளி கணவனுக்கு கிடைக்க வேண்டும் என்று அருள் ஒளி மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும்
3.அப்படிப்பட்ட உணர்வுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள் தான் என்றும் பிறவியில்லா நிலை அடைகின்றனர்.
இந்த உடலில் குறுகிய காலமே இருப்பினும் அது மனைவியின் உணர்வின் துணைகொண்டு வலு கொண்டு சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று எண்ணி அந்த வலுவினைச் சேர்த்து விட்டால் அதை நினைவு… அந்த விண்ணை நோக்கிச் செல்கின்றது மனைவியின் எண்ணம்.
1.அந்த உணர்வு கணவன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ந்திருந்ததோ
2.கனாக்களில் மகிழ்ச்சியின் உணர்வையே தோற்றுவிக்கும்.
அருள் ஒளி பெற வேண்டும் என்று அண்டத்தின் நிலைகளில் மிதந்து கொண்டிருக்கும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விட்டால்… அவர் அருள் ஒளிச் சுடர் பெறும் நிலைகள் கொண்டு… நமக்குள் இந்தப் புவியின் பற்றினை நீக்கிடும் அருள் உணர்வுகளை நமக்குள் தோற்றுவித்து நம்மை அந்த எண்ணத்துடன் வாழச் செய்யும். நம் நினைவில் நம் மக்களை வாழ்த்தச் செய்யும்.
இல்லை என்றால் மாங்கல்யத்தைப் பறித்து விட்டால் இழந்து விட்டோம் இழந்து விட்டோம் என்று சர்வத்தையும் இழந்திடும் நிலைகள் கொண்டு வேதனை கொண்டு தான் வாழும் நிலை வரும்.
கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் இனி தவறு செய்யாது
1.உங்களுடன் அவர் வாழ்கின்றார் என்ற நினைவு கொண்டு
2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக உங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது.
அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் இதை ஒவ்வொருவரும் தலையாயக் கடமையாக வைத்து
1.என்று அவர் உங்களுடன் ஒன்றினாரோ அந்த நினைவுகள் வந்து கொண்டே இருக்கும்
2.அந்த அணுக்கள் இருந்து கொண்டே இருக்கும்.
அவர் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணி இதை போன்ற காலங்களில் சப்தரிஷி மண்டலங்களுடன் ஆன்மாக்களை இணைத்து விட்டால் இந்த நினைவு அங்கே செல்லும்.
நம் உணர்வுகள் இங்கே வளரும். அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்லாது தடுக்கும். அருள் ஒளிச் சுடராக மாற்ற நமது எண்ணங்கள் அந்த ஞானிகள் காட்டிய வழியில் செல்ல முடியும்.
ஆகவே கணவனை இழந்துள்ளோம் என்று எண்ண வேண்டாம். அவருடைய உணர்வுகள் உங்களுக்குள் உண்டு.
இதைப் போன்று இந்த உணர்வின் வலுக் கொண்டு இன்னொரு உடலுக்குள் அந்த ஆன்மா சென்று இருந்தாலும் அல்லது இங்கே சுழன்று கொண்டிருந்தாலும் இந்த ஆன்மாக்களைத் தொடர்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
1.காலை துருவ தியானங்களில் செயல்படுத்துவீர்கள் என்றால் அந்த உணர்வுகள் ஒளியாகப் பெறுகின்றது.
2.அவர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுகின்றது
3.அவர் அருள் வழி பெறுகின்றார் ஒளியின் சரீரம் பெறுகின்றார்
4.அந்த உணர்வு உங்களுக்குள் இருளை அகற்றும் நிலையும் ஒன்றி வாழும் உணர்வினை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.
இதைப் போல மனைவியை இழந்தவர்களும் மாற்று மனைவி பெற்றாலும் தவறில்லை. ஆனாலும் முந்திய மனைவியின் உணர்வுகள் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி சரீரம் பெற வேண்டும் என்று எண்ணினால்
1.அந்த ஆன்மா முன் சென்றால் அந்த அருள் ஒளி கொண்டு இணைந்து வாழும் மற்ற மனைவிக்கும் அருள் கொடுக்கும்.
2.அதனால் மக்களும் அருள் ஒளி பெறும் தகுதியும் இந்த வாழ்க்கையில் இருள் சூழா நிலையும் உருவாகும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற உயர்ந்த சக்திகள் கொண்டு தாவர இனங்களுடைய சக்திகளை அறியும் ஆற்றல் பெற்றான்.
1.தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்து நுகர்ந்து தனக்குள் அதை எடுக்கும் பொழுது
2.இந்த தாவர இனங்களுக்கு ஜீவ நீராக ஊட்டும் மேகங்கள் கூடுவதை அறிகின்றான்
3.இவன் எண்ணத்தால் எண்ணினால் அவன் உணர்வுகள் மேகங்களை அழைத்து வருவதும்
4.அப்பகுதியில் அதிகமாக மழை பெய்வதும் போன்ற நிலை உருவாகிறது.
ஏனென்றால் அகஸ்தியன் விஷத்தின் தன்மை கொண்டு அதை ஒடுக்கிடும் தன்மை பெற்றவன். ஆதியிலே பொருள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அடர்த்தியாகி ஆவியாகும் போது தான் மேகத்தின் தன்மை அடைகின்றது. மாறுபட்ட சத்துகள் கலந்ததும் நீராக வடிகிறது.
அந்த ஆற்றலைத் தான் அகஸ்தியனும் பெறுகின்றான். அந்த நீரின் தன்மை மற்ற தாவர இனங்களிலும் படுகின்றது இதைப் போன்ற உணர்வுகள் இவனுக்குள் படரப் படும் பொழுது
1.இவன் எங்கே அமர்ந்து சிறிது காலம் செயல்படுகின்றானோ
2.இவன் உடலில் இருந்து உணர்வுகள் அங்கே படரப்பட்டு
3.மேலே மேகங்கள் படர்ந்து செல்வதை அது கவர்ந்து நீராக மாற்றிடும் நிலை பெறுகிறது.
அதே போல் அகஸ்தியன் மின்னலை உற்றுப் பார்த்தான் என்றால்
1.இவன் உயிர் அதை மின் அணுக்களாக மாற்றுவதும்
2.நுகர்ந்ததை அடக்கி ஒளியின் உணர்வாகப் பெறும் தகுதியும் பெறுகின்றான்.
ஒரு சமயம் குருநாதர் காட்டிய வழியிலே நாசிக் என்ற இடத்திற்கு நான் (ஞானகுரு) செல்லப்படும் பொழுது அங்கே ஒருவனைச் சந்திக்கும்படி செய்தார். அவனுக்கு வயது பதினேழு இருக்கும்.
அவன் வேறொரு மனிதனைக் கோபமாக உற்றுப் பார்த்தால் போதும்…! கண்ணின் ஒளிகள் பாய்ந்து அங்கே ஓட்டையே போட்டு விடும். சுரீர்ர்ர்ர்…! என்று இந்த உணர்வுகள் பாயும். அவன் அலற வேண்டியதன்.
அவனுக்கு இது எப்படி வந்தது…?
தாய் கருவிலே இவன் இருக்கப்படும் பொழுது தாய் மின்னலை எட்டிப் பார்த்தது. அப்போது அந்த மின்னலின் உணர்வுகள் கருவிலே இணைந்து விட்டது. ஆனால் தாய் தன் கண் பார்வையை இழந்துவிட்டது.
1.கருவில் இருக்கும் சிசுவிற்கு அந்த மின்னலின் ஒளிக் கற்றைகள்
2.இரத்தத்தின் வழி கூடி உடலிலே கலந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பெறுகின்றது.
தாய் கண் இழந்த பின் நெற்றியின் உணர்வு கொண்டு பார்க்கும் நிலையும் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கர்ப்ப காலங்களில் இந்த உணர்வுகள் கருவிலே இணைந்து அது விளைந்து கொண்டே வருகின்றது.
குழந்தை பிறந்த பின் அவன் இளம் வயதிலே அதை அறியவில்லை பதினேழாவது வயதை அவன் எட்டப்படும் பொழுது
1.இவன் எண்ணத்தின் கோப உணர்வுகள் பொறிகள் கிளம்புவது போல வருகிறது.
2.ஒரு இரும்பை அவன் பார்த்தால் அது சூடாகும்… அப்படியே வளைக்கலாம்
அதாவது சிறிது நேரம் ஒரு இரும்பை அவனை உற்றுப் பார்க்கும்படி செய்தால் அது சூடாகிவிடும்… வளைத்து விடலாம். இந்த மாதிரி மின் கதிர்கள் அவன் கருவிலே விளயப்படும் பொழுது வந்த சக்தி.
(அவன் நீடித்த நாள் வாழவும் இல்லை சுற்றுப்பயணம் சுற்றி விட்டு இரண்டாவது தடவை நான் அங்கே வரும் பொழுது அவன் இல்லை).
அவன் உணர்வுகள் அந்த அறிவின் தன்மை கொண்டு வெளி வரப்படும் பொழுது மற்றது கெடுகிறது. ஆனால் முதலில் தெரியாது.
1.அடுத்தவனை இவன் உற்றுப் பார்த்தால் அவன் மயங்கி விழுந்து விடுவான்.
2.இவனால் தான் அப்படி ஆனது என்று ஒருவருக்கும் தெரியாது.
இப்படி அவனை அறியாமலே பல நிலைகள் வந்து விபத்துகள் ஆகிறது. பின்னாடி மற்றொருவர் கூறும் பொழுது தான் தெரிய முடியும்.
ஆக… ஒரு மனிதன் மீது மின்னல் பட்டால் அவன் எப்படிக் கருகி விடுவானோ அதே போன்று இவன் பார்வை பட்டால் அடுத்தவர்களை அது கறுக்கி விடுகின்றது.
அனுபவ ரீதியாக குருநாதர் எமக்குக் காட்டிய உண்மை நிலைகள்
மின்னலைப் பார்த்ததால் முதலில் தாய்க்குக் கண்கள் போனது ஆனால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கோ அது வளர்ந்த பின் “ஈர்க்கும் சக்தி பெருகி அணு செல்களாக அது பெருகுகின்றது…”
மின்னலைப் பார்த்துவிட்டு அடுத்தவனைப் பார்த்தால் சுட்டுப் பொசுக்குகின்றது. அப்போது அவனைக் கண்டாலே மற்றவர்கள் அஞ்சி ஓடும் நிலைகள் வந்துவிட்டது.
அவனை வீட்டை விட்டு வெளியே செல்லாதபடி செய்துவிட்டார்கள் எல்லோருக்குமே பயம்… அவன் மீது கோபப்படவும் முடிவதில்லை.
ஆனால் அவனுக்கு எப்போது இந்த நிகழ்ச்சிகள் நடக்கிறது என்றால்
1.மின்னல் பாயும் பொழுது இழுத்து அந்த உணர்வுகள் பார்வைக்குள் வந்து
2.எக்கோ (ECHO) மறுபடியும் அந்த உணர்வுகள் இயக்குகின்றது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன்…
1.அவன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது மின்னலை அடக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது
2.பிறந்த பின் குழந்தை அவன் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில்
3.இவனுக்குள் கதிரியக்கப் பொறிகளை அடக்கிடும் சக்தியும் வருகின்றது.
4.இந்த அணுக்கள் இவனுக்குள் பெருகிப் பெருகி வானுலகை உற்று நோக்கும் அறிவின் தன்மை வந்து வான இயல் ஆற்றலைப் பெறுகின்றான்.
5.அதன் மூலம் எதனையுமே வென்றிடும் சக்திகளும் ஒளியாக மாற்றிடும் ஆற்றலும் அவனுக்குள் பெறுகின்றது
ஆனால் அகஸ்தியன் சக்தி வாய்ந்த நிலைகள் இப்படிப் பெற்றதை மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாதபடி… கிடைக்க முடியாதபடி காலத்தால் அது மறைக்கப்பட்டு… அரசர்கள் தடைப்படுத்தி விட்டனர்.


உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டாலே உங்கள் தீமைகள் அகலும்
ஞானிகள் காட்டிய வழியில் உயிரை மதித்து… இந்த உண்மையை உணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரமாக இருக்கும் இந்த அருள் மகரிஷிகளின் உணர்வு நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.கண் கொண்டு கூர்மையாகப் பார்த்து உணர்வின் தன்மை தனக்குள் பதிவாக்கி
2.மீண்டும் கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏகி உயிருடன் ஒன்றி கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே ஏற்றி
3.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
4.என் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
5.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்
6.அந்த அருள் ஒளி என் உடலில் வளர வேண்டும் என்று எண்ணும் படி செய்தான்.
உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றும் மார்க்கத்தை இவ்வாறு காட்டினான் அருள் ஞானி.
வாழ்க்கையில் எத்தனையோ கோடி வேதனை சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி அதனுடன் தொடர்பு கொண்டு தன் உடலுக்குள் பெற வேண்டும் என்று “ஒவ்வொரு அணுவிலும் ஒரு பாதுகாப்புக் கவசமாக மாற்றும்படி செய்தான்…”
1.வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மை இங்கே அடைபட்டு விட்டால் இழுக்கும் சக்தி குறைகின்றது
2.வேதனை உருவாக்கி உயிரிலே பட்டு இந்த எண்ணங்கள் தோற்றமாவதை மாற்றுகின்றது.
அதுதான் கடைசி நிலை நரசிம்ம அவதாரம்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஒளிச் சரீரம் பெற்ற அவனின் உணர்வை உயிருடன் ஒன்றி நாம் நுகர்ந்து ரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும். ஏனென்றால் அதன் வழி கவர்ந்து தான் மற்ற அணுக்களுக்கு உணவே செல்கின்றது.
மகரிஷிகளின் உணர்வை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்த வேண்டும்.
ஏனென்றால் கண் கொண்டு தான் உற்றுப் பார்த்தோம் மற்றவரை. இந்த உணர்வின் பதிவின் தன்மை கொண்டு தான் ஊழ்வினை என்ற பதிவாக்கி இந்த உணர்வின் துணை கொண்டு தான் கவர்ந்து வருகின்றது.
1.அப்போது நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் கலந்து அதன் வழி வளர்ந்த அந்த அணுக்களின் தன்மை வட்டமிடுதல் வேண்டும்
2.அருள் மகரிஷிகளின் உணர்வு அங்கே செல்லப்படும் பொழுது ஈர்க்கும் வன்மை குறையப்படும் பொழுது
3.காற்றிலிருந்து ஆன்மாவாக மாற்றுவதை அதைத் தடைப்படுத்துகின்றது.
4.அந்த அருள் ஒளி தீமைகளை அகற்றுகின்றது.
கடவுளின் அவதாரம் நரசிம்ம அவதாரம் என்று மடி மீது இரணியனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து இரணியனை பிளந்தான் என்று சூட்சுமத்தில் நடப்பதைக் காவியமாகப் படைத்து இயற்கையின் உண்மை நிலையை அறிவதற்காக விநாயகர் தத்துவத்தைத் தெளிவாகக் காட்டப்பட்டது.
வாழ்க்கையில் சேர்த்த தீமைகள் ஆன்மாவில் வரப்படும் பொழுது அருள் ஒளியை உள் செலுத்தி விட்டால் ஈர்க்கும் வன்மை அந்த அணுக்கள் அடைபடுகின்றது… ஈர்க்கும் வன்மை இழக்கின்றது… அது நீக்கப்படுகின்றது… நமது எண்ணங்கள் மாறுகின்றது.
நுகர்ந்தால் தான் உணர்வின் இயக்கமாக உடல் இயக்குகின்றது. உணர்வின் தன்மை நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது. அதன் வழி உணவை எடுத்து அது வளர்கின்றது.
இப்பொழுது கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம்
1.இத்தருணம் உங்களுக்குள் அரும்பெரும் சக்தி படர்கின்றது.
2.உங்கள் உடலில் இருதயங்களிலோ மற்ற உறுப்புகளிலோ கால் மூட்டுகளிலோ எந்த நோய் இருப்பினும்
3.அருள் உணர்வை நுகர்ந்த பின் அந்த நோயெல்லாம் தணியும் குறையும்.
இந்த உபதேசத்தை நுகரப்படும் பொழுது தீமைகளை விளைவிக்கும் அணுக்களில் கவசமிடும் போது அது ஈர்க்கும் சக்தி குறைந்தால் அதனுடைய வலுவை இழக்கும். இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் “நோயின் வலிமை குறையும்..”

துவர் ஆடை கொண்டு ஞான நீர் அருந்த வேண்டும்
வியாசக பகவான் பார்த்தனுக்குத் தத்துவப் பொருளாகக் கீதையை உபதேசித்து… கண்ணன் என்று பாரத இதிகாசத்தை உலகினுக்கீந்த சூத்திரதாரியாகச் செயல்பட்ட அந்த மாமுனிவர் யாரப்பா…?
இயங்கும் இயக்கம் என்று தத்துவப் பொருள் காட்டிய எத்தனை எத்தனையோ வாழ்க்கை நடைமுறைகள்… அவற்றின் சம்பவங்கள்…
1.ஆத்மா ஐக்கிய நிலை
2.நீதியை நிலைநாட்டும் வேகம்… வேகம் கொண்டிட்ட விவேகம்…
3.இயங்கும் இயக்கமான சம்பவங்களில் நீதியை நிலைநாட்டும் போராட்டம்
4.வாழ்க்கை மோதல் சம்பவங்களின் நன்மை தீமைகளில் இருவினைப் பயனால் செயல்படுத்திடும் தாந்திரீகங்கள்
5.தாந்திரீகத்தால் வெற்றிக்கு வழி தேடும் போராட்டங்கள்
6.ஒலி உச்சாடனங்கள் என்று கைக்கொள்ளும் வாழ்க்கை நிலைகளில் நடைபெறும் செயலாக
7.வேத விளக்கங்கள் காட்டி “உண்மையின் சக்தியே வெற்றி பெறும்…” என்றும்
8.சத்தியத்திற்கு ஏற்படும் சோதனையில் வென்று காட்டிடும் வழியாக
9.பேரருள் பெறும் மனத்தின் பக்குவமே “வானவியல் ஞான திருஷ்டி…!”
சத்தியமே விஸ்வரூபம் காட்டி வினைப் பயன் களைந்திட்ட உபதேசமும்… சத்திய நியாய தர்மத்தை வெறுத்திடும் கலியில் “குருவே (உயிர்) தர்மத்தை நிலை நாட்டும் தர்ம தேவனாக…” மனப்போராட்டத்தையே வென்று காட்டிடும் ஜீவன் முக்தனாக… ஒவ்வொரு ஆத்மாவும் நன்னிலை பெற்று விட்டால்… மனித எண்ணத்தின் உயர்வைக் கைக்கொள்ளும் காரியமாக… நன்னெறி வழிகாட்டிய மகரிஷிகளின் உயர் தத்துவத்தால் ஆத்ம வலு பெற்றிட வேண்டுமப்பா.
கிருஷ்ண லீலைகள் என்று காட்டியவற்றை இன்ப ரசம் என்று எண்ணுகின்றான். அனைத்துமே இன்பம் தான். “ஈஸ்வரரின் சொரூபத்தில்”
1.அனைத்து உயிர்களையும் ஒரே பாவனையாகக் காட்டுபவனவற்றில்,
2.எண்ணத்தால் ஆத்ம ஐக்கியம் பெற்றிடும் சம்பவங்களின் கோவையே கோபியர்கள் கொஞ்சிட்ட லீலைகள்.
“இறை சக்தி” தன்னுள் ஒன்றான தனி சக்தி என்றே…
1.அன்பு மனத்தினோடு நாயகன் நாயகி பாவனையாக
2.ஒன்று கலந்திடும் உயிர் ஆத்ம கலப்பே உயர் ஞானப் பொக்கிஷம்.
கோபியர்களுக்குத் தீங்கிழைக்க வந்துற்ற எத்தனை அசுரர்களைக் கண்ணன் மாய்த்தான்…? என்று காட்டியவற்றில் மனிதன் பெற்று உயர வேண்டிய ஒளி காந்த சக்தி… ஆத்மாவின் அருள்…
1.பேரருள் செல்வத்திடம் பற்று வைத்திடும் உள்ளமாக
2.காக்கப்பட வேண்டிய நிலைகள்… காக்கும் தன்மைகள் அனைத்தும் உணர வேண்டும்.
உயர் ஞான வளர்ப்பின் சித்து… சித்தன் கண்ட செயலாகக் கொண்ட எண்ணத்தின் லட்சியம் எதுவோ… அந்த லட்சியத்தை வென்றுவிடும் திட மனத்தின் சித்தம் எவ்வகையில் செயல் கொண்டிட வேண்டும்…? என்று விளக்கிட்ட காவிய படைப்பின் ஓர் அங்கமாக…
1.ஞானப்பயிர் வளர்க்க மகான்கள் உபதேசமாக மொழிந்த நிலைகளில் எல்லாம்
2.மனிதன் பஞ்சேந்திரியங்கள் கொண்டு செய்யும் தொழில் “கர்மா” என்று சூட்சுமப் பொருள்படுத்தி
3.செய்கின்ற வினைகளுக்கு உரிய நாயகன் எனும் உயர் சக்தி முயற்சி என்ற
4.ஆய்வில் கருத்தினைச் செலுத்திடும் பாங்கில் கண்ட இலச்சினை (அடையாளம் – LANDMARK)
5.அதுவே லட்சியமாகக் கொள்ளும் மனத்தின் திறன் வளர்க்க
5.மனத்திறன் ஈர்ப்பில் ஆத்ம ஒளிப்பயிர் வளர்க்க
6.வியாச பகவான் பெற்று உயர்ந்த அனுபவ ஞானமே… “அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டுமப்பா.
அர்ஜுனன் கைக் கொண்ட “காண்டீபம்” (கூர்மை) லட்சியத்தை அடைந்திட… கருவின் திருவாக உள்ளத்தில் விளைந்தது என்ன…? மரம் தெரிந்ததா…? மரக் கிளைகள் தெரிந்ததா…? கிளைகளில் ஆடும் இலைகள் தெரிந்ததா…?
1.இலை மறைவு… காய் மறைவு… அன்றோ அவன் கண்டது…!
2.மகரிஷி புகட்டிடும் உண்மைத் தத்துவம் இலச்சினை கண்டான்… அடைந்திடும் லட்சியம் கொண்டான்.
லட்சியம் மறைந்திடாத் தன்மையாக அடைய வேண்டிய குறிக்கோள்… அதுவே “உயர் ஞான விழிப்பின் பின் சாந்தம் குடிகொள்ளும் அமைதி…” காப்பிய ரிஷியின் ஒவ்வொரு அனுபவமே “ஆரம் கொண்ட முத்துக்களப்பா…”
நீர் தேடிப் பாலையில் அல்லலுற்ற பேய்த்தேர் என்றும் அலகைத் தேர் என்றும்… அன்று காட்டிட்ட கானல் நீரைக் கண்ட பொழுது… உயிர் வாழப் பதைபதைட்ட “பீமன்” என்னும் பலவான் ஆகும் மனித மனத்தின் பாங்கு… நீர் பருகிடும் அதி அவசரத்தால்… “பாலையின் நீரைப் பருகிட முடிந்திடுமோ…?”
1.நகுல மன உத்தியால் நீர் அருந்த… நீரைச் சுவைத்திட
2.சகாதேவனும் துவர் (துறவியின் ஆடை) ஆடை கொண்டு ஞான நீர் அருந்த
3.வென்றது தர்மம் என்று மனத்தின் பாங்கு பலம் பெறுவதே “ஆத்ம பலம் பெற்றிடும் சீரிய சிந்தனை…”
ஆடையில் நனைத்த நீரினைப் பருகிப் பின்னர் ஆடையை உதறிவிட்டால் பாலையின் ஏடென்ற துர் மணல் நீங்குமப்பா. “ஞானத்தைக் கூட்டி இதைத் தெரிந்து கொள்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கலாம்… போல அணு ஜீன்களை எடுத்து அதைப் பல விதமாக மாற்றி அமைக்கின்றனர். ஒரு தாவர இனத்தில் உள்ள ஜீன்களை எடுத்து மற்ற தாவர இனங்களில் இணைத்துப் புதுப்புதுக் காய்கறிகளையும் கனிகளையும் உருவாக்குகின்றனர்.
1.இது போக நாம் அணியும் உடைகளின் நிறங்களுக்கு உண்டான சாயங்களையும் புதிதாக உருவாக்கக் கற்றுக் கொண்டார்கள்
2.எந்த வகையான நிறம் வேண்டுமோ அந்த நிறத்தைத் தாவரங்களின் வித்துக்களில் இணைத்து விட்டால்
3.அதிலே உருவாகும் பஞ்சு அந்த நிறத்திற்கு வந்து விடும் என்று…!
இவர்கள் நினைத்தனர்… கெமிக்கல் கலந்த சாயத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது… அதில் இருக்கும் விஷத்தன்மைகள் நீரிலும் கலந்து ஆவியாகவும் சென்று காற்று மண்டலமும் நச்சுத்தன்மையாகின்றது… இதை மறைக்க இப்படி நேரடியாக வித்திலிருந்தே மாற்றி விடலாம் என்று…!
எதுவுமே விஷத்தின் தன்மை கொண்டு தான் மற்றதுக்குள் ஊடுருவச் செய்ய முடியும். வித்துக்குள் இந்த ஜீன்களை இணைக்கப்படும் பொழுது இதே விஷத்தின் தன்மை பெருக்கி அதனுடைய மலத்தின் தன்மை பஞ்சின் நிலையும் மாறுகிறது.
ஆனாலும்…
1.இப்படி உற்பத்தி செய்து அந்த உடைகளை நாம் மேலே ஆடையாக அணிந்தால்
2.உடலின் துடிப்பின் வெப்பத்தினால் அதில் துணியிலிருந்து வெளிப்படும் அலைகளால் உடலில் கடும் நோய்களாக வரத் தொடங்கும்.
3.ஆக… அதைச் சுவாசிக்கப்படும் பொழுது உடலுக்குள் விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களாக மாறும் என்பதை விஞ்ஞானிகள் மறந்து விட்டனர்.
எதைச் செயற்கையின் தன்மையில் கொண்டு வருகின்றோமோ இவை அனைத்தும் நமக்குள் பெரும் மாற்றங்களைத் தான் உண்டாக்கும்.
நிறங்களை மாற்ற வேண்டும்… உருவாக்க வேண்டும்… என்றால் விஷத்தின் தன்மை கொண்டு தான் அவைகள் இயங்குகின்றது. மனிதன் இப்படி எத்தனையோ நிலைகளில் அந்த இயற்கையின் நியதிகளை மாற்றிக்கொண்டு வருகின்றான்.
ஆகவே
1.இப்பொழுது நாம் எதை நுகர வேண்டும் எதை உடலுக்குள் அணுவாக மாற்ற வேண்டும் என்று
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உண்மைகளை உணர வேண்டும்.
அக்காலத்தில்… அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும்போது பல விஷத்தை வென்றிடும் ஆற்றல்களைப் பெற்றான். எப்படி…?
அவனுடைய தாய் தந்தையரோ காடுகளில் வாழப்படும் போது விஷ ஜந்துக்களும் கோடூர விலங்குகளும் அவர்களைத் தாக்கி விடாமல் இருக்க
1.விஷத்தை ஒடுக்கும் மூலிகைகளை அரைத்து அதை உடலில் முலாமாகப் பூசிக் கொண்டு
2.அந்த மணத்தால் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.
ஆனால் அவர்கள் கர்ப்பமுறும் காலத்தில் உடலிலிருந்து வெளிப்பட்ட மூலிகைகளின் மணங்கள் சுவாசத்தின் வழி உடலுக்குள் பரவி இரத்தத்தின் வழியாகக் கருவில் இருக்கக்கூடிய அந்தச் சிசுவிற்கும் அது கலந்து விடுகின்றது.
அதாவது முதலில் சொன்னபடி… வித்துகளில் எப்படி விஞ்ஞானிகள் செயற்கையாக ஜீன்களை இணைக்கின்றனரோ அது போல் அகஸ்தியனுக்கு நஞ்சினை வென்றிடும் சக்தி இயற்கையாகவே இப்படிக் கிடைக்கிறது.
ஆனால் விஞ்ஞானிகள் விஷத்தின் ஆற்றலைக் கலந்து ஒரே நிலையை பல நிலைகளாகப் புதிது புதிதாக மாற்றிக் கொண்டு வரும் போது ஒரே வித்தாக இருந்தாலும் அது கலந்த நிலையில் சாயங்களை (நிறங்களை) மாற்றுகின்றது. இருந்தாலும் அதிலே விஷத்தின் தன்மை ஓங்குகிறது.
இத்தகைய சாயத்தை வடித்துக் கொண்ட அந்த வித்துக்களையோ அந்தச் செடிகளையோ (பருத்திச் செடி) மாடுகள் உட்கொண்டால் அதுவும் விஷத்தன்மையாக மாறுகின்றது.
1.மாட்டின் உடலும் விஷமே இதுவும் விஷமே
2.இருந்தாலும் அதனுடைய குணங்கள் மாறுகின்றது
3.பால் கறக்கும் மாடுகளுக்கு இதை கொடுத்தாலும் பால் பச்சையாகக் கறக்கும்.
4.ஆனால் பின்னாடி தான் இதை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
தெரிந்த பின் இதை உரங்களாகக் காட்டுகளுக்கு போட முடியுமே தவிர அதே சமயத்தில் மற்ற உயிரினங்கள் அதை உணவாக உட்கொண்டால் அங்கேயும் வித்தியாசமாக மாறும்.
காளைகளுக்கு இதை கொடுத்தாலும் அதனுடைய உணர்வுகள் அமிலங்களாக மாற்றப்பட்டு அது தன் இனத்தை உருவாக்கும் இணை சேரும் காலங்களில் அது கன்றுகளாக உருவாகும் நிலை வரும் பொழுது “அந்த மாட்டின் கன்றுகளுக்கும் இது மாறத் தொடங்குகின்றது…!”
1.இப்படி ஒரு ஜெனரேஷன் மாற ஆரம்பித்தால்
2.அது மூன்றாவது நிலை நான்காவது நிலை என்று மாடுகளின் உருமாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.
இப்பொழுது நாம் சொல்கிறோம் அல்லவா…! கடந்த காலம் போய் இன்று விஞ்ஞான காலம் வந்துவிட்டது என்று. அது போன்று தான் ரூப மாற்றங்களும்.
விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் இயந்திரங்களிலும் புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் ஏற்கனவே செய்தது பழமை ஆகி விடுகின்றது.
புதிதாகக் கண்டுபிடித்தது வேகத்துடிப்பு அதிகமாகவும் அதனுடைய செயலாக்கங்களும் அதிகமாக வருகிறது. விஷத்தின் சேமிப்பாக இப்படி மாறிக் கொண்டே போகின்றது. இது இன்றைய நிலை.
ஆனால் அக்காலங்களில் நஞ்சினை வென்றிடும் அணு ஜீன்கள் தாய் கருவில் இருக்கும் போது அகஸ்தியன் உடலில் விளைந்தது.
அவன் பிறந்த பின்
1.மற்ற விஷத்தின் தன்மைகள் தனக்குள் நாடாது…
2.அப்படியே வந்தாலும் அதை அடக்கி ஒளியின் உணர்வாக மாற்றும்
3.அறிவின் தெளிவாக இயக்கக்கூடிய சக்தியாக அவனுக்குள் வந்தது.
காரணம் தாய் நுகர்ந்த உணர்வுகள் பூர்வ புண்ணியமாக அமைந்து நஞ்சை வென்றிடும் சக்தியாக வருகின்றது பிறந்த பின்
1.நஞ்சினைக் காணுகின்றான்… அதனின் இயக்கத்தை அறிகின்றான்
2.நஞ்சினை அடக்கிடும் எண்ணங்கள் உருவாகி… அந்த யுக்தியின் தன்மைகள் பெருகுகின்றது.
3.அதன் வழி அந்த உணர்வை அவன் சுவாசிக்கின்றான் நஞ்சினை வென்றிடும் அணுக்கள் அவன் உடலில் அதிகரிக்கின்றது.
இப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்…!
தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்தான். விஷத்தின் தன்மை ஒடுக்கினான். சிந்தித்துச் செயல்படும் தன்மையாக அவனுக்குள் வருகின்றது.
பல விதமான தாவர இனங்களின் சக்திகளை எடுக்கும் பொழுது அதனுடைய உணர்வின் இயக்கம் தெளிந்திடும் உணர்வின் அறிவாக அவனுக்குள் வருகிறது. இது எல்லாம் அவன் இளம் வயதில் பெற்ற சக்திகள்.
1.நஞ்சினை வென்றிடும் சக்தியாக உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது
2.அவன் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அறிவாக அவனை இயக்குவதும்
3.கண்ணுக்குள் இருக்கும் கருவிழி அதன் இனமான உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து
4.அந்த அறிவாகவே அவனை இயக்கத் தொடங்குகிறது.
அகஸ்தியனின் அருள் சக்திகளைப் பெறுவதற்குத் தான் மீண்டும் மீண்டும் அகஸ்தியனைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்வது.
அவன் பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதியை நீங்கள் பெற்று… இனி வரக்கூடிய எத்தகைய கடுமையான நஞ்சாக இருந்தாலும் அதை மாற்றிட வேண்டும் என்று தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).


தன் நிலை அறிதல் வேண்டும்
வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்று நிலை பெறும் பொழுது தான் அது இயக்கச் சக்தி என்று பொருள் வருகிறது.
1.“தனித்து ஒருவன் தான் கடவுள்” என்று சொல்வது பிழை சொல்.
2.ஒன்று என்ற நிலை இல்லை.
3.நமக்குள் உயிர் இருந்து அனைத்தையும் உருவாக்கும் ஒருவனாக இருக்கின்றான் உயிர்.
4.ஆனால் ஒருவன் என்று சொல்லும் பொழுது மூன்று நிலை கொண்டு தான் நம்மை இயக்குகின்றது.
நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் பலவாக மாற்றுகின்றது. அது தன்னுடன் இணைத்து அந்த உணர்வின் தன்மை தனக்குள் சக்தியாக மாற்றப்படும் பொழுது பலவும் ஒன்றாக்குகின்றது.
அப்படிப் பலவும் ஒன்றாக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஒளியின் தன்மை அடைந்தவன் அவன்.
1.அவன் எண்ணத்தில் அவன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்
2.உள் நின்று கடவுளாக நின்று அந்த உணர்வின் தன்மை உருவாக்கியது அதை.
இன்றைய உலகம் குறுகிய உலகமாக மனிதனின் சிந்தனையைக் குறுக்கும் உலகத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
அதிலிருந்து மீண்டிட அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் சுடர் ஒளியாக மாற்றும் வல்லமை பெற வேண்டும். உபதேசித்த உணர்வினை நுகர்ந்து அதனின் அறிவை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு நினைவைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.இன்னொரு பிறவிக்குச் செல்லாமல் இந்த உடலில் ஆறாம் அறிவு இருக்கும் பொழுதே தடுத்துக் கொள்ளுங்கள்… தப்பித்து விடுங்கள்.
உங்களிடம் இருந்து புகழ் பெறுவதற்காக நான் இதைச் சொல்லவில்லை குரு கொடுத்த அருள் ஒளியினை எனக்குள் சேர்ப்பித்து அதில் விளைந்த உணர்வின் “ஞான வித்தை” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
ஒரு மனிதனுக்குள் வேதனை என்ற உணர்வை விளைய வைத்து வேதனையான சொல்லைச் சொல்லும் பொழுது கேட்டறிந்தால் அந்த வித்து உங்களுக்குள் வேதனையை உருவாக்கும் தீமை செய்யும் உணர்வின் வித்தாக விளைகின்றது.
ஆனால் நமது குருநாதர் காட்டிய வழியில் ஞான வித்தினை உங்களுக்குள் உணர்த்தப்படும் பொழுது அருள் ஒளியின் சுடராக வாழும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி இனி பிறவி இல்லாத நிலை அடையச் செய்தல் வேண்டும்.
இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை இந்த உடலின் உணர்வு கொண்டு நமக்குள் உயிரின் உணர்வு கொண்டு ஒளியின் உணர்வாகச் சொந்தமாக்குவது தான் மனிதனின் ஆறாவது நிலை.
1.இந்தச் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டால் மீண்டும் தன்னிலை அறிய முடியாத நிலைகள் கொண்டு
2.தன்னைக் காத்திடும் நிலையே வளர்ச்சி வரும்… தன் நிலையை அறியும் தன்மை வராது.
தன்னிலை என்பது மிருகங்களோ மற்றவைகளோ தன்னிலை அறியும் நிலை இல்லை தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகளே வருகின்றது. மற்றொன்று வலிமையான பின் அதனிடம் அடிமையில் சிக்காது தப்பித்து ஓடும் உணர்வுகள் தான் வருகின்றது.
1.ஆனால் வலிமையான அந்த மிருகங்கள் இதனை வென்றே தீரும்
2.அது இதை இரையாக்கியே தீரும்.
3.இரையாகும் போது இது நரக வேதனைப்பட்டு அனுபவித்தே தீர வேண்டி இருக்கும்.
இப்படிப் பல கோடி நரக வேதனையில் இருந்து மீண்டு வந்தவர்கள் தான் நாம்… நம்மை அப்படி மனிதனாக உருவாக்கியது நமது உயிர்.
1.நமக்குள் உருவாக்கிய ஈசனை மறந்து விட்டு
2.எவனோ செய்வான் என்று அவன் உணர்வை நமக்குள் சேர்த்தால்
3.அவனுக்கு நாம் அடிமை ஆகி அவனுக்கு கீழ் தான் நாம் வர வேண்டுமே தவிர அவர் இச்சைக்கே அடிமையாக முடியும்.
ஆனால் அருள் ஒளியின் சுடரை நமக்குள் சேர்த்தால் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் தன்மை உங்களுக்குள் கடவுளாக நின்று உங்களுக்கு வழிகாட்டும்… மறந்திட வேண்டாம்…!

செம்பான்
பரமேஸ்வரர் மாமகரிஷியின் வாசஸ்தலமாக விளங்கும் கோகர்ணக் கடற்கரையை ஒட்டி மீனவர் குப்பம் தென்படுகின்றது. கடல் ஓடும் மீன்பிடி நாவாய்கள் கூடுதலாக வைத்திருப்பவன் எவனோ அவனே அந்த இனத் தலைவனாக அந்த இனத்தையே ஆளும் தகுதியை பெறுவான்.
வாய்ச் சொல்லின் கட்டளைக்கு ஏற்பக் கட்டுப்பட்டு ஒழுகும் வைராக்கிய இன மக்களின் பிறப்பில் வந்தவன்தான் நாவாய்கள் உடைய “செம்பான்…”
அந்த இனத்தின் முக்கிய குல வழக்கம் கடல் ஓடும் மரக்கலங்களை மறித்து கொள்ளை அடிப்பது தான். இருந்தாலும்… கொள்ளையடிக்க விருப்பம் காட்டும் அந்த மக்களில் தெய்வீக நம்பிக்கை கொண்டே வாழ்ந்தவன் செம்பான்.
இனத்தாரின் வற்புறுத்தல்களை ஏற்றுக்கொண்டு கொள்ளையிடச் சென்றாலும்… மீன் பிடித்தே வாழ்க்கை நடத்தும் லட்சியமாக ஒதுங்கி வாழ்ந்த செம்பானை ஆட்கொள்ளப்பட்ட சக்தி தான் என்ன…?
கொள்ளை இடச் சென்ற சமயத்தில்… ஆயுதம் கொண்டு போர் புரியும் காலத்தே… உடைமைகளைக் காத்திடல் வேண்டும் என்றே போர் புரிந்திடும் இரு குழுக்களின் தன்மைகளை விடுத்து ஒதுங்கி இருந்தான் செம்பான்.
அப்போது தெறித்து வந்த ஒரு ஆயுதம் செம்பான் உடலில் தைத்து சரீரம் மரண காயப்பட்டது. சிறிய படகொன்றில் தப்பிச் சென்றிட முனைந்த பொழுது சூறாவளி ஏற்பட்ட்து.
அங்குள்ள அனைவருமே கடல் கொந்தளிப்பில் மாய்ந்துவிட அந்தச் சூறாவளியில் சிக்கி உயிருக்காக போராடும் அச்செம்பானின் உடலில் செயல்பட வந்திட்ட ரிஷியை நீ அறிவாயப்பா…!
அலை கடலின் சூறாவளியில் சிக்குண்ட செம்பான்… உடல் துன்பமுற ஜீவன் பிரிந்து விடும் அந்தக் காலகட்டத்தில்… இவன் புசித்திட விழைந்த மீன் இனத்தால் அலை கடலில் கரையில் ஒதுக்கப்பட்டான்.
அப்போது
1.அந்தச் சரீரத்தை “சூட்சும முனிவனால்” இயக்கப்பெறும் பேறு பெற்று எழுந்து
2.உயிரின் ஆதி மூலமாகத் தன்னுள்ளே உபதேசம் பெற்று
3.தான் வேறல்ல தன்னுள் இயங்கும் அந்த மாமகான் வேறல்ல என்கின்ற நிலையின் கருத்தொருமித்த கூட்டாகி…
4.தன்னை இயக்க வந்த சக்தியையே உபாசிக்கும் பரமாத்மாவாக உபதேசம் ஏற்ற செம்பான் (ஜீவாத்மா)
5.தான் ஏற்றுக் கொண்ட பக்குவத்தால் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்று சேரக்கூடிய சந்தர்ப்பமாக அது அமைந்த்து.
கடமையைச் செய்தலின் பிரதிபலன் எதிர் நோக்கா மனத்தின் பக்குவம்… ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்திடும் லயத்தின் மெய்யொலி மெய் ஞானமாக… கீதையின் ரசமாக வடித்துத் தந்தவர் யார்…? என்ற உண்மையை… இன்று உம்மை இயக்கிடும் சூட்சமத்தால் தெரிந்து கொள்.
கிருஷ்ணாவதாரக் காலம் நிகழப் பெற்ற சம்பவங்களின் கோர்வையில்… பக்தி ரசம் சொட்டும் லீலைகளாகக் காட்டிடும் கோபியர்கள் என்றிட்ட ஆனந்த லயமாகும் மனத்தின் செயல் காட்டி… அசுர குணத்தன்மைகளை மாய்த்திட்ட உயிர் சக்தி… ஆத்ம பலம் காட்டும் அர்ஜுன உபதேச கீதையில் உணர்த்த வந்திட்டது எது…?
கலியில் உழன்றிடும் மனிதனின் மன நிலை அதி பேராசை உணர்வுகளும்… வினைப் பயன் கூட்டும் விந்தைகளும்… மகாபாரதக் கதை முழுக்க வியாசரின் அனுபவங்கள் பேசுகின்றனவப்பா.
1.சரீரம் கொண்டு வாழும் உலகியல் நிலையில் மனத்தின் கண் எழும் மாபெரும் போராட்டமும்
2.பஞ்சேந்திரியங்கள் அடங்கும் நிலையும்… துர்க்குண சம்காரம் நிகழ்த்தப் பெறும் நிலையில்
3.கலியின் செயல் சூட்சுமம் காட்டிடும் பண்பு நெறி விலக்கிடும் அதர்ம காரியங்கள் நிகழப் பெற்று உயிராத்மா வதைபடும் நிலை உணர்ந்தால்
4.சாதுர்ய அறிவின் ஆற்றலாகத் தன்னைக் காத்துக் கொள்ளும் முழுமையை விளக்குவதில்
5.மகாபாரத வியாசர் பெற்றிட்ட அனுபவங்கள் விரிவாக அறிய வேண்டிய ஒன்று.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கருடன் என்ற பறவையை எடுத்துக் கொண்டால் அதனுடைய கூட்டிலே நாம் ஒரு இரும்புச் சங்கிலியை “விலங்கு போடுவது போல்” முடிந்து வைத்து விட்டால் அது என்ன செய்யும்…?
கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகளை மீட்டுவதற்காக அலைந்து திரிந்து
1.சில செடிகளின் விழுதுகளை அல்லது அந்தக் காம்புகளை எடுத்து அந்தச் சங்கிலி மீது வைத்து அதைத் தெறிக்கச் செய்துவிடும்.
2.இது கருடன் கண்ட உபாயம்… இரும்பு உலோகங்களைக் கத்திரிக்கும் திறன் பெற்றது.
ஆனால் கருடனுக்கு இந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது…?
புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று மனிதனாக ஆன பின் மீண்டும் மடிந்து மடிந்த நிலைகளிலிருந்து “அவன் பட்சிகளாக உருவானால்…” இவனுக்குள் உருவாகிய இந்த உணர்வின் அணுக்கள் அது உணவாக உட்கொள்ளும் பொழுது “அந்த உணர்வின் ஞானங்கள்…” அங்கே கிடைக்கின்றது.
மனிதனாகிப் திருப்பிப் பட்சியாக வந்த பின்…! மனிதனுக்குண்டான சிந்தனைகள் எல்லாம் அந்தப் பட்சிக்கு உண்டு.
எப்படி…?
காடுகளில் மனிதன் ஒரு விஷத்தால் தாக்கப்பட்டுத் தேய்பிறையாகி அவன் மடிந்து கிடந்தால் அந்த உடலிலிருந்து வந்த விஷத்தின் தன்மை மற்ற தாவர இனங்களில் இது கலந்துவிடும்.
விஷம் தீண்டி மடிந்த இவன் உடலில் இருந்து வெளிவரக்கூடிய உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து கவர்ந்து வைத்துக் கொள்கிறது.
அதே சமயத்தில்
1.மற்ற சாந்தமான தாவர இனங்களின் சத்து சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பரவி வருவது இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும்
2.இன்னொரு விஷமான செடியின் மீது அது மோதும் சந்தர்ப்பத்தில் சுழற்சி ஆகுவதும்
3.சுழற்சியான பின் தனக்குள் கவர்ந்து கொண்டு புது விதமான தாவர இனச் சத்தாக செடியாக விளைகின்றது.
ஏனென்றால்… பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின் ஒரு விஷம் தீண்டி மனிதன் மடிந்தால் இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம் மற்ற தாவர இனச் சத்துக்களுடன் கலக்கப்பட்டு… இரண்டறக் கலந்து ஒரு வித்தாக உருவாகி நிலத்தில் பட்டு விட்டால்… கடும் விஷத்தையே முறிக்கும் சக்தி பெறுகின்றது.
இதைத் தான்… அந்த விஷத்தை முறிக்கக் கூடிய சக்தியைக் கருடன் கண்டுள்ளது. அதாவது.. உலோகங்களில் இந்தத் தாவர இனத்தின் சத்து பட்டபின் அது பலவீனமாகி… அந்த உலோகம் தெறிப்பதையும் அது கண்டுள்ளது.
ஏனென்றால் மனிதனாக ஆன பின் இவனுக்குள் விளைய வைத்த சத்துக்கள் தாவர இனத்துடன் கலக்கப்பட்டு இது பட்சியானாலும் கூட…
1.அதற்குள் இருக்கக்கூடிய உணர்வு (ஞானம்) சிக்கலில் இருந்து தீர்க்கும் நிலையாக வருகின்றது
2.இது பட்சி இனமாகத்தான் இருக்கின்றது… ஆனால் இதற்கு எப்படி இந்த அறிவு வந்தது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.
இதே போல் தான் கீரிப்பிள்ளை மீது பாம்பின் விஷம் தீண்டப்பட்ட பின் அது ஓடிச் சென்று அதை முறிக்கும் அந்தத் தாவர இனத்தில் பிரள்கிறது. அந்த மணங்களை நுகர்கிறது. நுகர்ந்து அந்த விஷத்தை நீக்கிய பின் அந்தப் பாம்பினை மீண்டும் அது தாக்குகிறது.
இது போன்று தான்
1.”ஒரு உயிரணு” தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் அணுக்கள்
2.மாறி மாறிப் பல விதமான ஒரு சக்திகள் பெற்று வளர்ச்சிக்கு வருகின்றது.
இப்படி எல்லாவற்றையும் கடந்து மனிதனாக உருப்பெற்ற பின் இத்தகைய தாவர இனங்களுடைய சக்திகளைப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் கண்டறிய நேர்கிறது.
அந்த வழியில் தான் அகஸ்தியன் சர்வ நஞ்சுகளையும் ஒடுக்கிடும் சக்திகளைப் பெற்றான்… ஒளியாக மாற்றிக் கொண்டான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக காலில் மூட்டில் வலி இருக்கிறது… நடக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.கொஞ்ச நேரம் கையை அந்த மூட்டில் வைத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.காலில் இருக்கக்கூடிய மூட்டு வலி நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்
4.அந்த வலி நீங்க வேண்டும்… நல்லதாக வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.
அந்த வலி குறைய ஆரம்பிக்கும்.
இதே போன்றுதான் இருதயத்திலோ மற்ற இடங்களிலோ வலி இருந்தால் இதே மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வை எடுத்து “அங்கே கையை வைத்து… இந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்…”
அங்கே சளி இருந்தாலும் இரண்டு கையையும் நெஞ்சிலே வைத்து அந்தச் சளி நீங்க வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சிப் பழகுங்கள்.
1.சொல்லிக் கொடுக்கின்றோம்… ஆனால் இதை நீங்கள் செய்ய வேண்டும்
2.ஒரு நாளைக்கு வைத்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்.
3.(ஏனென்றால் முதலில் ஆர்வமாக கேட்பார்கள் பின்னாடி அதைச் செயல்படுத்துவதில்லை)
எங்கே வலி இருக்கின்றதோ அந்த இடத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று நினைத்துக் கையை வைத்து அந்த வலி குறைய வேண்டும் என்று உணர்வுகளை
1.இதன் வழி பாய்ச்சி அந்த எண்ணத்தைக் கொண்டு வாருங்கள்
2.வலி குறைவதைக் காணலாம்…!
உதாரணமாக சங்கடமாக இருந்து ஒரு காயையோ அல்லது குழம்பையோ சமையல் செய்து பாருங்கள்… அது ருசி கெட்டுப் போகும். சந்தோஷமாக இருக்கும் பொழுது செய்து பாருங்கள்… நன்றாக இருக்கும்.
காரணம்,,, அன்றன்று உள்ள குணத்திற்குத் தக்க மாதிரித் தான் இதனுடைய செயல்கள் நடக்கும். நீங்கள் சலிப்போடு அரிசியை வேக வைத்துப் பாருங்கள்… சாதம் தண்ணீர் பட்டுப் போகும். இதெல்லாம் நீங்கள் பார்க்கலாம்.
சங்கடமாக இருந்து சமையல் செய்தால் அந்தக் காய்கறிகளை சல…சல… என்று ஆகிவிடும்… குழம்பின் ருசியே மாறிவிடும்.
யாம் (ஞானகுரு) சொல்லும் வழிகளில் நீங்கள் செயல்பட்டால் உங்கள் உடல் நலமாக உதவும். இந்த உடல் நமக்குச் சதமானது அல்ல…! அவ்வப்போது மனது அமைதி பெறுவதற்கு… மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் வலி நீங்க வேண்டும் என்று இந்த எண்ணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐயோ… எனக்கு அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது என்று அதைச் சொல்ல வேண்டியதில்லை.
1.எழுந்திருக்க முடியவில்லை நடக்க முடியவில்லை என்று சொல்லாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… வலி நீங்க வேண்டும்
3.நான் எழுந்து நடக்க வேண்டும்… நடக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று
4.வலி வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசித்து நன்றாக வேண்டும் என்று எண்ணி
5.இதைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்… அந்த வலிகள் நீங்குகிறதா இல்லையா என்று நீங்கள் பாருங்கள்.
சாமி…! நீங்கள் சொன்ன தியானத்தைத் தான் நாங்கள் செய்கிறோம் என்று இப்படித்தான் எண்ணுகின்றார்களே தவிர “தியானம் என்றால் என்ன…?” என்று முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா…!
நீங்கள் சொன்னீர்கள்… ஆனால் நடக்கவில்லை நடக்கவில்லை என்று அந்த இராகத்தைப் பாடக்கூடாது.
1.உடலின் இச்சைக்கு நாம் செல்லக்கூடாது.
2.அருளைப் பெருக்கும் பொழுது இந்த இருள் நிச்சயம் நீங்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்தியன் மூன்று வயதுக்குள் இயற்கையின் உண்மை நிலைகளை அறியும் சக்தி பெறுகின்றான். உயிர் அணுக்களின் தோற்றங்களையும் அதனின் உண்மைகளையும் அறிகின்றான்.
விஷத்தின் தன்மையை அடக்கி… அந்த அருள் ஒளியின் தன்மை கொண்டு தான் எடுக்கும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றான்.
ஒரு மின்னட்டாம் பூச்சியை எடுத்துக் கொண்டால்… மற்ற பூச்சிகளைக் காட்டிலும் அது உணவாக உட்கொள்ளும் பொழுது…
1.பின் பாகம் உணர்வின் மூச்சலைகள் வரப்படும் பொழுது பளீர்…. பளீர்… என்று மின்னும்.
2.இது எடுத்துக் கொண்ட உணவுகள் மெர்குரியாக மாறுகின்றது
3.இது போன்றுதான் அகஸ்தியன் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சுகின்றது.
இதைக் கண்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் அகஸ்தியனை “மகரிஷி” என்ற நிலையிலும் ஒரு “தெய்வீகப் பிறவி” என்றும் “கடவுள்” என்றும் “உயர்ந்த சக்தி வாய்ந்தவன்” என்றும் அவனைப் பின் தொடர்ந்து செல்கின்றனர்.
காட்டுக்குள் அவன் செல்லப்படும் பொழுது விலங்குகளும் இவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது… விஷ ஜந்துக்களும் அஞ்சி ஓடுகின்றது.
இப்படிப் பெற்றவன் தான் ஐந்தாவது வயது வரப்படும் பொழுது பூமிக்குள் துருவத்தின் வழி வரும் சக்திகளை எல்லாம் நுகர்ந்தறிகின்றான். துருவத்தின் ஆற்றலைப் பெறுகின்றான்.
அப்போது அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் அக்காலத்தில் வைக்கின்றார்கள்… அகஸ்தியன் துருவன் ஆகின்றான்.
ஐந்தாவது வயதில் வானுலக இயக்க உண்மைகளையும் அவன் கவர்ந்து… அதை உணர்வைத் தனக்குள் எடுத்து இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளைப் பெறுகின்றான்.
பதினாறாவது வயது வரும் பொழுது அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.
1.தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவி பெற வேண்டும் என்றும்
2.கணவனால் பெற்ற அந்தச் சக்தி கணவனுக்கு அது மேலும் கிடைக்க வேண்டும் என்று மனைவி எண்ணுவதும்
3.இப்படி இருவருமே உணர்வுகள் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றார்கள்.
எந்தத் துருவப் பகுதியைக் கூர்மையாகப் பார்த்து… எதை எல்லையாக வைத்தனரோ… அந்த எல்லையில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.
மனிதனில் தீமைகளை வென்று… பிறவியில்லா நிலை அடைந்து ஒளிச் சரீரம் பெற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களைப் பெறச் செய்வதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம். அது தான் துருவ தியானம்…!
1.அந்தப் பயிற்சியின் பிரகாரம்…
2.யாரெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை முறைப்படுத்தி
3.தனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்கின்றனரோ அவர்கள் இந்த உடலில் பிறவி இல்லா நிலை அடைகின்றனர்.
4.மனிதனான பின் தான் அதைச் செயல்படுத்த முடியும்.
ஆகவே… நாம் சொந்தமாக்க வேண்டியது உயிருடன் ஒன்றி அருள் ஞானிகள் உணர்வை “அருள் செல்வமாக… ஒளிச் செல்வமாக…” நமக்குள் பெருக்கிப் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.


விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதி பெறுவீர்கள்
சாமி (ஞானகுரு) சொல்வதைப் புரியவில்லை என்று நீங்கள் விட்டு விடாதீர்கள்…!
1.அதை அறிய வேண்டும் என்று ஆற்றலுடன் உயர்ந்த நோக்கத்துடன் உணர்வினைப் பதிவு செய்து கொண்டால்
2.இந்த நினைவின் ஆற்றல் உங்களை அறியச் செய்கின்றது.
3.மனிதனாக எவ்வாறு உருவானோம்…? என்ற உணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றது.
4.மனிதனான பின் ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும்
5.துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் எப்படி இயங்குகிறது…? என்ற நிலையை அறியும் வல்லமை பெறுகின்றது.
அந்த உணர்வை நுகர்ந்தால் நமக்குள் ஏற்படும் உருமாற்றத்தையும் இனி பிறவியில்லா நிலைகளை அடையும் மார்க்கத்தையும் நீங்கள் தெரிந்து அந்த நிலை அடைய வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.
1.என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
2.இந்த உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்திடல் வேண்டும் என்பதற்கே இதை உங்களுக்குள் சொல்கின்றேன்.
இயற்கையின் நிலைகள் நமக்குள் எப்படி உருவானது…? என்ற நிலையில் ஆதியில் எப்படி உருவானது…? என்ற நிலையும் அந்த உணர்வின் உணர்ச்சிகளை எப்படி…? என்று நாம் அறிந்து கொள்வதற்கு இது ஏதுவாக இருக்கும்.
ஏனென்றால் விஞ்ஞான உலகில் உலகமே மனிதனின் சிந்தனை அனைத்தும் சிந்திக்கும் திறன் இழக்கும் தருணம் வந்துவிட்டது. சிந்தனையற்ற செயல்களைச் செயல்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து விட்டது.
1.ஒரு மனிதன் ஆயிரம் சிந்தனை கொண்டாலும் விஷம் தாக்கி விட்டால்
2.அந்தச் சிந்தனையை அனைத்தையும் அழித்துவிட்டு ஐய்யய்யோ…! என்ற இருள் சூழ்ந்த நிலைக்கே செல்லச் செய்யும்.
3.இந்த உடலைக் காக்கும் உணர்ச்சியின் தன்மை கூட வராது.
4.எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று அதனுடன் ஒன்றி அது மடியும் தருணமே வருகின்றது.
5.ஆக மனிதனின் நல்ல உணர்வுகள் முழுமையும் மடிந்து விடுகின்றது.
இதைப் போன்று உலகக் காற்று மண்டலம் நச்சுத்தன்மை அடையும் தன்மையும் இந்த சூரியக் குடும்பமே பிரபஞ்சமே மனிதனால் ஏற்படுத்தப்பட்ட விஞ்ஞான அறிவு கொண்டு அகண்ட பிரபஞ்சத்திற்குள் விஷத்தன்மைகள் பரவி… அதிலே சுழலும் தன்மை வந்து சூரியன் கவரும் காந்தப்புலனறிவிலும் விஷத் தன்மைகள் பரவி… அதிலிருந்து வெளிப்படுவதை நம் பூமி கவரப்படும் பொழுது இங்கே பெரும் மாற்றங்களே ஏற்படுகின்றது.
தாவர இனங்களிலும் சரி முந்தி வளர்ச்சி அடைந்த தாவர இனங்கள் உருமாறுகின்றது. சரியான வெள்ளாமை இல்லாது போகின்றது. மனிதனுடைய சிந்தனையும் சீர்குலைந்து வருகின்றது.
இனம் புரியாது புதுப்புது அணுக்கள் (வைரஸ்) உருவாகி மனித உடலில் புதுப் புது நோய்களும் உருவாகின்றது. இதைப் போன்று மனிதன் சிந்தனை இழக்கப்பட்டு மீண்டும் புழு பூச்சியாக பறவையாக பிறக்கும் நிலை வந்துவிடும்.
1.இதிலிருந்து நம்மைக் காத்திடும் நிலை வர வேண்டும்.
2.மனித உணர்வின் தன்மை கொண்டு நாம் விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து வளர்த்துக் கொள்ள முடியும்.
அந்த நம்பிக்கை வர வேண்டும்.
நாம் எண்ணியதை நமது உயிர் உருவாக்குகின்றது. உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது அதன் வழியே நாம் வாழுகின்றோம்.
1.ஆக அவனன்றி அணுவும் அசையாது.
2.நாம் நுகர்ந்த உணர்வை உணர்த்துகின்றது… நம் உடலாக மாற்றுகின்றது
3.மீண்டும் நினைக்கும் போது அந்த வழியே நம்மை இயக்குகின்றது.
ஆகவே நம் உயிர் இவ்வாறு செயல்படும் நிலைகள் வரப்படும் பொழுது
1.விண்ணுலக ஆற்றலை நீங்கள் அறிந்து தீமைகளை அகற்றும் வல்லமை பெற்று
2.அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்த்து இதனை நீங்கள் உங்கள் எண்ணத்தால் உருவாக்கிடல் வேண்டும்.

ஆத்ம பலம் எனும் “சூடாமணி” பெற்றிடவே உரைக்கின்றோம்
மனிதன் பெற்றிட வேண்டியது… சிந்தனைத் தெளிவு… பௌருஷம்… மனோதிடம்… உயர்வைக் கூட்டிக் கொண்டிடும் சித்தன் நிலை ஆகும்.
நன்மை பெறத்தக்க காரியங்களில் வெற்றி… அறிவின் சாதுரியம்… அனைத்தும் கொண்டு,
1.”ஆத்ம பலவான் என்ற ஆஞ்சநேயன்” பெற்று வளர்த்துக் காட்டிய அனுபவ சாரங்களை
2.கொள்கின்றவன் (கடைப்பிடிப்பவன்) ஜெபமாக உணர்ந்து கொண்டிட
3.வாயு புத்திரன் துணை கொண்டு இராமன் “சூடாமணி பெற்றான்” என்றே மாமகரிஷி மறைபொருள் காட்டியவற்றுள்
4.மனித ஞானம் உயர் ஞான வளர்ப்பின் ஆக்கத்தில்
5.மெய்ஞான விழிப்பால்… மெய் அறிவாம் வாலறிவன் (தெய்வ சக்தி) தன்மையாகச் சுடர்தல் எனும் ஜோதித்துவ பூரணமாக
6.தன்னைத்தான் வளர்த்துக் கொள்ளுதல் தன் அனுபவ ஞான வளர்ப்பால்… மெய்யின் முழுமை பெற்றிட
7.சூட்சுமப் பொருள்கள் விரிவாக்கம் பெறுகின்றன.
வெட்டன மறத்தல் (உடனுக்குடன் மாற்ற வேண்டியது) கோபத்தின் குணங்களே. மீண்டும் மீண்டும் புவி ஈர்ப்பின் பிடிப்பில் உழன்றிடவே மனிதன் தனக்குத்தானே விரித்துக் கொள்கின்ற “மாய வலையப்பா” அது.
விண் ஏகும் செயல் சூட்சுமம் காட்டிய வான்மீகி மாமகரிஷி… வாயு புத்திரனாகத் தன்னையே காவியப் படைப்பாக்கி… ஆஞ்சநேயன் கொண்டிட்ட வலு வீரியச் செயலை விளக்குவதே… ககன வழி மார்க்கம் உடல் கொண்டு பிறந்த நிலை.
1.இராமனாகிய உய(யி)ர் சக்தி அளித்திட்டதோ கணையாழியாகக் காட்டப்படும்
2.சூரிய ஜோதியாகத் துலங்கும் ககனமணி (விண்ணில் ஒளிச் சுடராக மிதக்கும் தன்மை).
இக்கலியின் மனிதன் கொண்ட பேராவல் நிலையினால் மெய்யைப் பொருள் உரைப்பதிலும் தாமதம் நாம் சுட்டிக் காட்டிடும் இந்த எளிய தியானத்தின் வழியாக…
1.உயிர் சக்தி வலுக்கூட்டும் செயலில்
2.விண் ஏகும் சூட்சுமம் உள்ளடக்கி
3.ஆத்ம பலம் எனும் “சூடாமணி” பெற்றிடவே உரைக்கின்றோம்.
ஸ்ரீராம ஜெயம் உரைக்கும் இடமமெங்கும் உயர்வைக் கொண்டு உயர்வைக் காட்டும் வான்மீகியாரின் பதிவு செயல் நிலை… “சப்த நாதங்களாக ஈர்ப்பின் வலுக் கூட்டிடுமப்பா…”
ஆஞ்சநேயர் கொண்ட விஸ்வரூபத்தில் ஜெபத்தின் அளவீடு காட்டிட முடிந்திடுமோ…? எண்ணத்தின் அளவீடு கொண்டு உணர்ந்திடப்பார்.
உணர்வுகள் மாற்றிக் கொண்டிட்டே… அந்த வினையின் வழி ஏகல் என்பதில்…
1.இராம காவியத்தில் நாம் கொடியது என உரைத்திடாவிட்டாலும்
2.விளக்கத்தின் பொருள் மோகமும்… கோபமும் குலத்தின் நாசம் (இராவணன்) என்று போதனையை அறிந்து கொண்டிடல் வேண்டும்.

எல்லோரையும் அருள் வழியில் நலம் பெறச் செய்வதற்குத் தான் விநாயகர் தத்துவம்
நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும். எவ்வாறு…?
அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. மகரிஷிகளின் உணர்வுகள் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவு கொண்டு நினைவை விண்ணை நோக்கி ஏகி
2.மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி அந்த நினைவலைகளை உள்ளே பரப்ப வேண்டும்.
3.இப்படிப் பரப்புவோம் என்றால் அந்த உணர்வு வேகமாக உடலில் பரவிவிடும்.
உதாரணமாக நோயாளியைப் பார்த்த உணர்வுகள் நமக்குள் இருந்தால் அந்த மகரிஷிகள் உணர்வுகள் வலு ஆனபின் அந்த நோயாளியின் உணர்வைத் தள்ளிவிடும்.
சந்தோஷமாக இருக்கும் பொழுது மணம் ஜாஸ்தியாக இருக்கும் ஒருவர் வேதனைப்படும் நிலைகளைச் சொல்லி அதை நாம் கேட்டால் சந்தோஷமான மனதில் பட்டவுடன் அப்போது வேதனை தான் தோன்றுகின்றது.
வேதனையாக இருக்கப்படும் போது சந்தோஷமாக யாராவது சொன்னால் அதைத் தள்ளி விடுகின்றது. ஏனென்றால் விஷத்திற்கு வலு அதிகம். ஆனால்
1.இதையெல்லாம் வென்றவன் மகரிஷி
2.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை சொல்லிவிட்டு
4.எந்த நோயாளியைப் பார்த்தீர்களோ மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறுவாய்
5.உன் உடல் நோய்கள் சீக்கிரம் நீங்கும் நீ இதன் வழிப்படி மகரிஷிகளை எண்ணி பார்.
6.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
7.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று சொல்லி அதனை ஏங்கிப் பெறு
8.உன் உடல் நலம் பெறும் நீ நலமாவாய் என்று இந்த வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
நீங்கள் சொன்னதை அவர்கள் பின்பற்றத் தொடங்கினால் அவருடைய எண்ணம் அங்கே போகின்றது தீமைகளை நீக்க அந்த அருள் உணர்வுகள் அவருக்கு உதவுகிறது.
அதே சமயத்தில்
1.நமக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றதனால் தீமையை ஈர்க்கும் சக்தி குறைந்து
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாகக் கூட்டிக் கொள்கின்றோம்.
3.அந்தத் தீமையை அப்பொழுது அடக்கி விடுகின்றோம்.
இப்படிச் செய்வதற்கு தான் விநாயகர் தத்துவத்தை வைத்தார்கள்.
வேதனைப்படுபவர் உணர்வை நுகர்ந்து விட்டால் என்ன நடக்கின்றது…? உதாரணமாக எலி என்ன செய்கின்றது…? தரையிலே வங்கு போடுகின்றது நல்ல மனம் கொண்டு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து விட்டால் உங்கள் நல்ல மனதை அது வங்கு போட்டு விடுகின்றது.
ஆனால் அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் இந்த வேதனைப்படும் அந்த மனிதனின் உணர்வை அடக்கி விடுகின்றது.
வேதனைப்படுவோர் உணர்வைக் கேட்டபின் நல்ல குணத்தை அது அடக்குகின்றது. அதற்குத் தான் எலியைப் போட்டது.
ஆகவே வேதனைப்படுவோர் உணர்வைக் கேட்டபின் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அதை அடக்குதல் வேண்டும்.
அதற்குத்தான் வேம்பையும் அரசையும் போட்டு
1.மனித வாழ்க்கையில்… நீ நல்லவன் “நல்லவனாக இருக்க வேண்டும்”
2.நீ அறிந்து நல்லதைச் செய்தது… உனக்குள் அந்த நல்லது நிலைத்திருக்க வேண்டும்
3.பிறருடைய தீமை உன்னை ஆட்கொள்ளக்கூடாது… அவன் வழியில் நீ சென்று விடக்கூடாது.
4.அருள் ஒளி நீ பெற வேண்டும்… அறியாது வரும் இருளை நீக்கும் சக்தியை நீ அவனுக்குள் ஊட்ட வேண்டும் என்பதற்குத்தான்
5.விநாயகர் தத்துவத்தில் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
காலை துருவ தியானத்தில் மொத்தமாக நாம் பார்த்தவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்… தொழில் செய்யும் இடங்களில் அந்த நண்பர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று எல்லோரையும் நினைத்து இதை எண்ணிப் பழகுதல் வேண்டும்.
1.இதை எண்ணினால் நாமும் நலமடைகின்றோம்… அவர்களும் நலமடைகின்றார்கள்.
2.எல்லோரையும் அருள் வழியில் நலம் பெறச் செய்வதற்கு தான் விநாயகர் தத்துவம்.

சாப விமோசனம்
ஒன்றினுள் இயங்குகின்ற இயக்கம்… அந்த இயக்கமாகச் செயலுறும் சக்தி… உயிர்த் தொகைகள் எதுவாயினும்… பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட மனிதனாகினும் சரி… “சந்தர்ப்பவசம் என்பது”
1.உயிரணுக்கள் உதித்திட
2.இணைந்து கொண்டிடும் உருவாக்கச் செயல் நிகழ்வுகள் ஒன்றினுள் மற்றொன்று ஒன்றி…
3.தத்தமது குண இயல்பு நீங்கப் பெற்றுப் புதிதென உருக்கொள்ளும் செயல் கூறுகள்.
வான் தொடர்பின் சூட்சமங்களை… ஞானம் பெற விழையும் ஞானச் செல்வங்கள் தாம் பெற்று உயர்ந்து கொண்டிட… தம்முள் விளங்கிக் கொள்வதே சந்தர்ப்பவசம்.
உலகோதய நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்களின் “வித்தியாசங்களைக் காட்டவல்லவையப்பா சந்தர்ப்பவசம்…!”
பால்வெளியில் கலந்து இயங்கும் இயக்க கதிகள்… செயல்படுநிலையை படைப்பின் படைப்பாக வளர்ச்சியுறும் ஆக்கமும்… அந்த ஆக்கமே மறைபொருளாகின் இவ்வாழ்க்கை சாகரத்தில் ஜீவன் கொண்ட உயிர் நிலைகள்…
1.சரீர நிலை விடுத்த இயக்கத்தில் ஓடி (இறப்பு)
2.தமக்கொத்த எண்ணத் தொடர்பு கொண்டிட்ட சரீர இயக்க கதி ஜீவனுடன் ஒன்றி விடுவது
3.புவி ஈர்ப்பில் செயலுறும் உயிர்த்தொகைகளின் மறைபொருள் இயக்க சந்தர்ப்பவசம்.
வான் இயக்கம் புவி இயக்கம் இந்த இரண்டு தொடர்களில்… புவி ஈர்ப்பின் இயக்க வான் தொடர்பு… சந்தர்ப்பவசம் ஆக்கும் உயிர் நிலைகாட்டும்.
மாமகரிஷிகள் இந்நிலையை விளக்குவதே “சாப விமோசனம்…”
தாய்மை என்ற அன்பு குணம் வளர்க்கும் மனத்தின் திறன் கொள்ளும் ஜெபம் எதுவோ “அதுவே மந்திரம்…” சகலத்திற்கும் மனத்தின் திறன் விளக்கிக் கொள்ளவே அனுபவ ஞான உதய மெய்ஞான விழிப்பால் வளர்வது.. சுடர்தல் எனும் ஆத்ம பலம் பெற்றிடும் ஒளி நிலையப்பா.
இராம காவியத்தில் நடைமுறை சந்தர்ப்பவச சாபங்கள் என்று
1.இராவணன் பெற்றுக் கொண்டிட்ட சாபம்
2.தசரதன் பெற்றிட்ட சாபம்
3.வாலி பெற்றிட்ட சாபம்
4.கந்தர்வன் பெற்றிட்ட சாபம் என்று
5.பல இடங்கள் சந்தர்ப்பவசம் நிகழ்த்தும் முன் வினைத் தொடர் என்று உணர்த்தினாலும்
6.விமோசனம் என்பதன் பொருள் காண வேண்டுமப்பா.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கடவுள் எப்படி இருக்கின்றான்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் கடவுள் ஒருவனே…! தேவன் ஒருவனே…! என்பதெல்லாம் மதங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள்.
ஒவ்வொருவரும் தனக்குகந்த உணர்வுகளை அது உருவாக்கி மந்திரங்களை உருவாக்கி… அதனை மனிதனுக்குள் பதிவாக்கி… இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் கடவுள் அதற்காக அடிபணிந்து நமக்கு எல்லாம் செய்து தருவான்…! என்று சட்டங்களை இயற்றப்பட்டு… அதற்கென்று வேதங்களை உருவாக்கப்பட்டு… மந்திரங்களை ஒலிக்கச் செய்து கேட்டுணரும்படி செய்து… மனிதனை உருமாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.
மதங்களால் இயற்றப்பட்ட சட்டத்தை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அது தான் கடவுளாக இயக்குகின்றது நம்முள் நின்று…!”
ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்து… தீமை எனக்குச் செய்தான் என்று உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை ஜீவ அணுவாக மாற்றி அது பிரம்மமாக்கி நம் உடலுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது தீமை செய்யும் கடவுளாக அது உருவாகின்றது.
1.தீமை செய்யும் எண்ணங்கள் அதிகமாகச் சேர்த்து விட்டால்
2.அந்த அணுவின் தன்மை தீமையை உருவாக்கும் கடவுளாக உருவாகின்றது.
3.ஆனால் நன்மை செய்யும் உணர்வுகளை உருவாக்கி விட்டால் நல்ல உணர்வை நுகரும் ஆற்றல் பெறுகின்றோம் நமக்குள் கடவுளாக…!
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் விஞ்ஞானம் இன்று இதைத் தெளிவாக நிரூபிக்கின்றது.
உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக்கை வைத்து அதை இயக்கச் செய்கின்றார்கள்.
1.அதிலே பொருத்தப்பட்டுள்ள நாடாக்களில்
2.காந்தப் புலனறிவை ஈர்த்து ஒலி அலைகளைப் பரப்புவதைக் கவர்ந்து
3.மீண்டும் எதிர் நிலைகளில் உருவாக்கும் ஆற்றலை அதிலே மூலமாகப் பூசி உள்ளார்கள்.
அதில் நாம் தட்டெழுத்தால் (KEY BOARD) எப்படி அடிக்கின்றோமோ… அடித்துக் காந்தப் புலனால் ஒலி அலைகளை எழுப்பப்படும் பொழுது
1.எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
2.ஒலி அலைகளைப் படமாக்குகின்றது… அதற்குத்தக்க உருவத்தையும் காட்டுகின்றது
3.ஒரு மனிதனையே உருவாக்கிக் காட்டுகின்றது.
அதைப் போன்று தான் நம் உயிர் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. நாம் எண்ணும் எண்ணங்களை எல்லாம் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. அந்த உணர்வுக்கொப்ப உடலில் உறுப்புகளை இயக்குகின்றது.
மனிதனால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் இயக்கினாலும் அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன்… “தட்டெழுத்தால் அடிக்கும் அந்த உணர்வு கொண்டு…” காந்தப்புலனால் ஈர்க்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்ட நிலைகள்
அதைச் செயல்படுத்தும் பொழுது “இவன் உணர்வும் அதிலே கலந்து…” அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக அந்தக் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.
இதைப் போன்று அது உருவாக்கும் நிலைகள் வரப்படும் பொழுது…
1.அந்தக் கம்ப்யூட்டரை இயக்கப்படுபவனுக்கு குடும்பத்தில் எதிர்மறையான உணர்வுகள் வந்து விட்டால்
2.அது… இவன் தட்டெழுத்தால் அடிக்கும் உணர்வுக்குள் கலந்து “வைரஸ்” என்ற நிலையாக… இது பிழைகள் கொண்டதாக மாற்றி விடுகின்றது.
(இதே நாடாவை மற்றவர்கள் பார்த்து இந்த உணர்வை எடுக்கப்படும் பொழுது தட்டெழுத்துக்களில் இந்த உணர்வின் மாற்றங்கள் அங்கேயும் வைரஸாக வரும்).
பிழைகளை இவன் அழித்து மீண்டும் செயல்படுவான் என்றால்
1.அங்கே திரையில் காட்டும் உணர்வுகளை இவன் நுகர்ந்து உணர்வுக்குத்தக்க மாற்றப்படும் பொழுது
2.இவனுக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து… தன் சிந்தனை இழந்து பிரமை பிடித்தவன் போன்று ஆகிவிடுவான்.
இந்த கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் யார் அதிகமாக அதை இயக்குகின்றார்களோ… அவர்கள் வேறு சிந்தனையே இல்லாது… இதன் உணர்வுகளிலேயே இருப்பார்கள்.
எந்திரத்தின் துணை கொண்டு இந்த உணர்வின் தன்மை இயக்குவது போன்று “மனித உணர்வுக்குள் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு…” மனிதனுக்குள் இயக்கும் இந்த உணர்வுகளுடன் கலந்தே எலக்ட்ரானிக்கின் தன்மை அடைகின்றது.
இவை எல்லாம் விஞ்ஞான அறிவால் உருவானாலும் இயற்கையின் உணர்வுகள் மனிதனான பின் இதனுடன் கலந்தே அது இயக்குகின்றது.
விஞ்ஞான அறிவால் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெற்றிருந்தாலும்
1.எலக்ட்ரானிக் என்ற நிலையில் வருவதை மனிதன் தனக்குள் நுகரப்படும் பொழுது
3.இயற்கையின் நிலைகளை அது மாற்றி விடுகிறது.
ஏனென்றால் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயங்கி நுகருவதை எலக்ட்ரானிக்காக… உடலையே இயக்குகின்றது. (ஏற்கனவே சொன்னோம்)
விஞ்ஞான அறிவின் தன்மைகள் கொண்டு இயந்திரத்தின் துணையால் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இந்த உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது
1.மெய் (தன் நிலை – இயல்பு) உணர்வுகள் மறைகின்றது…
2.மெய் உணர்வுகளை வளர்க்கும் தன்மை அது இழக்கப்படுகின்றது.
இது மட்டுமல்ல…! வானுலக ஆற்றலை… நஞ்சு கலந்த உணர்வுகளை அளவுகோலிட்டு அதைக் கம்ப்யூட்டரில் இயக்கிப் பார்க்கின்றான்…!
1.நஞ்சின் தன்மை பூமிக்குள் வருகின்றது… மனிதனைக் காக்கும் உணர்வுகள் அதிலே இல்லை.
2.மனிதனை அழித்திடும் உணர்வுகள்… கண்டுபிடிப்புகள் இங்கே அதிகமாகின்றது
3.இதை இயக்குவனுக்குள் அந்த அழித்திடும் உணர்வுகள் வளர்ந்து எல்லா இடங்களுக்கும் (காற்று மண்டலம்) பரவுகின்றது.
மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த உணர்வுகள் காற்று மண்டலம் முழுவதும் பரவி
1.மனித இனத்தையே பூண்டோடு அழித்திடும் நிலைகளுக்கு மாற்றிக் கொண்டு வருகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.
ஆக கடவுள் யார்…? நமது உயிர் தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்தியனும் அவர் மனைவியும் இருவருமே நம் பூமியின் துருவத்தின் வழி வரும் உணர்வுகளை அது தாவர இனங்களாக மாறுவதற்கு முன் அதன் உணர்வின் ஒளி அலைகளை நுகர்ந்தறிகின்றனர்.
1.துருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி… பிரபஞ்சத்திலிருந்து வரும் உணர்வினைத் தனக்குள் பெற்று
2.தன் வளர்ச்சியின் முதுமையில் இருவரும் ஒன்றாக இணைந்து
3.அவருடைய தாய் தந்தையரின் உயிரான்மாக்களும் இவர்களுடன் இணைந்து
4.உடலை விட்டுச் சென்ற பின் “ஓர் குடும்பமாக… முதல் துருவ நட்சத்திரமாக அமைக்கப்படுகின்றது…!”
இருவரின் உயிரான்மாக்களும் அங்கே சென்றபின் இவர்கள் உடலுடன் இணைந்த தாய் தந்தை உயிரான்மாக்களும் துருவத்தைச் சென்றடைகின்றனர். அடைந்தபின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சேர்க்கப்படும் போது ஆறாவது அறிவின் தன்மை… ஏழாவது நிலைகள் அடைந்து “சப்தரிஷி மண்டலங்களாக அமையப்படுகின்றது…”
அவர்கள் முதலில் துருவ நட்சத்திரமாக ஆனபின் அவர் ஆற்றலின் துணை கொண்டு தாய் தந்தையர்களும் அவருடைய ஈர்ப்பு வட்டத்திலேயே சுழலத் தொடங்குகின்றார்கள்.
அதன் வளர்ச்சி கொண்டு அக்காலங்களில் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்தவர்களும்… அதைப் பின்பற்றியோரும்… உடலை விட்டுப் பிரிந்த பின் அவர்கள் செய்தது போன்றே இவர்களும் சப்தரிஷி மண்டலங்களாக அமைந்து வளர்ச்சி பெற்று (முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களாக) வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால்…
1.இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இவை அனைத்தும்… ஏன் நான்காயிரம் ஆண்டுகள் என்று கூடச் சொல்லலாம்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் சக்திகள் மனிதனில் குறைவாகி குறைவாகி குறைவாகித் தேய்பிறையாக ஆகி… இன்று மறைந்து விட்டது.
3.வான்மீகி வியாசகர் போன்றவர்கள் கடைசியாக விண் சென்றார்கள்.
4.அதற்குப்பின் ஒன்றொன்றாகக் குறையப்பட்டு… விண்ணுலகம் செல்லும் தன்மைகள் குறைந்து விட்டது.
அரசர்கள் என்ற நிலை முதலில் உருவானதும் அவர்கள் இட்ட சட்டங்களைத் தான் பின் வந்தோர் சிற்றரசர்கள் பேரரசர்கள் என்று உலகெங்கிலும் பரவத் தொடங்கியது.
மனித உடலின் இச்சைக்கும் சுகபோகங்களுக்கும் இது மாற்றப்பட்டு… அதற்குப் பின் விண்ணுலகம் செல்லும் ஆற்றலைப் பெறும் தகுதிகள் இழக்கப்பட்டு விட்டது.
மனிதனில் உயர்ந்த நிலை பெற்றவர்கள்…! என்று
1.அதிலே மந்திரங்களைச் சொல்லித் தன் வாழ்க்கையில் பெருக்குபவர்களை…
2.கடவுளாக எண்ணியும் ரிஷிகளாக எண்ணியும் திசைகள் மாற்றப்பட்டு
3.இன்றளவிலும் விண்ணுலகம் செல்லும் நிலைகள் மறைந்தே போய் விட்டது.
நமது குருநாதர் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்தவர்…!
அன்று அகஸ்தியன் துருவ மகரிஷியாகி விண்ணுலகம் எவ்வாறு சென்றார்…? என்ற நிலைகளை அறியும் வாய்ப்புகள் பெற்ற பின்… அதன் வழி கொண்டு அவருக்குண்டான உணர்வின் துணை கொண்டு
1.விண் செல்லும் மார்க்கங்களை எனக்கு (ஞானகுரு) உபதேசித்து
2.எவ்வாறு விண் சென்றார்…? என்ற அந்த முறைகளையும் எனக்கு உபதேசித்தார்.
குருநாதர் உடலை விட்டுப் பிரியும் சமயம் உற்றுப் பார்க்கும்படி செய்தார் குருநாதர்…!
1.சப்தரிஷி மண்டலத்துடன் அவர் இணையும் ஆற்றலையும்
2.அவர் உடல் பெறும் உணர்வுகள் அங்கே எவ்வாறு கரைகின்றது…? என்பதையும் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.
இப்பொழுது தற்காலத்தில் (1971) விண் சென்றவர் தான் நம் குருநாதர்…!
அவர் உயிரான்மா எவ்வாறு விண் செல்கிறது…? என்று விண் செல்லும் மார்க்கங்களை உபதேசித்தார். அதற்கு என்ன உபாயங்களைச் செய்ய வேண்டும்…? என்றும் சொன்னார்.
அவரைப் பின் தொடரும் நிலையாக… இதை எப்படித் தனக்குள் பெருக்க வேண்டும்…? என்று அவர் காட்டிய அருள் வழிப்படி செய்கின்றேன்.
அன்று அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன… அதன் வழிகளில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு. அதைப் பின்பற்றியோர் சப்தரிஷி மண்டலங்களாக உருப்பெற்ற உணர்வுகளும் உண்டு
அதை எல்லாம் எப்படிப் பெற வேண்டும்…? என்று குரு உபதேசித்த வழிப்படி நுகர்ந்தறிந்து எனக்குள் விளையச் செய்தேன்.
1.அதன் உணர்வின் எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் செவிப்புலனில் இது ஈர்க்கப்பட்டு
2.அதன் உணர்வின் துணை கொண்டு நீங்கள் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.
மனிதனில் உயர்ந்து சென்ற அந்த மெய் ஞானிகள் தீமைகளை அகற்றிட்ட… அந்தத் தீமைகளை அகற்றும் உணர்வுகளை நுகரப்படும் போது தான்
1.நம் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி
2.என்றென்றும் பிறவி இல்லை என்று அடையச் செய்யும் உணர்வுகள் இங்கே உருப்பெறுகிறது.


நாம் எண்ணுவது (சுவாசிப்பது) உடலுக்குள் அணுக்களாகி… அதனின் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது…?
ஒருவன் தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்துக் கோப்ப்படுகின்றோம். கோபத்தை உண்டாக்கும் அணுவாக உருவாக்கி விட்டால் உடலில் என்ன நடக்கிறது…?
கோழிக் குஞ்சு முட்டையை விட்டு வந்த பின் அது கத்துகின்றது… அதற்கு இரை தேடுகின்றது. அந்த உணர்ச்சியைத் தூண்டிய பின் கோழி கூப்பிட்டு இரையைக் கொடுக்கின்றது.
இதைப் போல
1.நம் உடலுக்குள் அந்த அணுவின் தன்மை கரு முட்டை நம் இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
2.எந்த உறுப்புக்குள் அது தேங்கி விடுகின்றதோ தேங்கிய அணு அதனின்று தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.இந்த இரத்தங்கள் நம் மூளை வரையிலும் போய்வரும்.
4.சிறு மூளை பாகம் சென்ற உடனே இந்த உணர்வுகள் உந்திய பின்
5.ஒருவரை உற்றுப் பார்த்து அந்த அலைகளை முதலில் எப்படி நுகர்ந்தோமோ அந்த நினைவு வரும்.
6.அயோக்கியப் பயல்…! இந்த மாதிரித் தவறு செய்தான் பார் என்று…!
7.நம்மை அறியாமலேயே அவன் நினைவு வரும்… அந்த அலைகளை நாம் நுகர நேரும்.
8.நுகர்ந்த பின் அந்த அணுத்தன்மை நம் உடலில் பெருகும்.
9.இரத்தங்களில் கலந்த பின் நமக்குள் அந்த அணு இதை உணவாக எடுத்துக் கொள்ளும்.
கோழி எப்படித் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுக்கின்றதோ இதை போலத் தான்… நமது உயிர் நாம் எண்ணியதைக் கருவாக்கி உருவாக்கி விட்டால் அணுவாகி விட்டால் அந்த உணர்ச்சியைக் கேட்டவுடன் உயிர் எடுத்து அதை உணவாகக் கொடுக்கும்.
ஆனால் உயிரிலே படும் பொழுது அவனை எப்படி நாம் கோபமாகப் பேசினோமோ அந்த உணர்வெல்லாம் கலந்து நம் இரத்தங்களிலே கலக்கும்.
1.இரத்தங்களிலே ஓடிக்கொண்டிருப்பதை அணுக்கள் சாப்பிடும்.
2.நம் உறுப்புடன் ஒட்டி இருக்கப்படும் போது தன் குஞ்சுகளைப் பெருக்க ஆரம்பிக்கும்… தன் இனத்தைப் பெருக்க ஆரம்பித்து விடுகிறது.
3.தன் இனத்தைப் பெருக்கப் பெருக்க நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட நம்முடைய உறுப்புகள்
4.இரத்தக் கொதிப்பு என்று வரும் பொழுது வீரிய உணர்வாக வரும்.
நல்ல அணுக்களில் இது பட்ட பின் புலி எப்படி மற்ற உயிரினங்களைக் கொன்று தன் பசியைத் தீர்த்துக் கொள்கின்றதோ இதைப்போல தசைகளில் இருப்பதைத் தன் பசியைத் தீர்த்துக் கொள்ள அந்த அணுக்கள் விழுங்கத் தொடங்கிவிடுகின்றது.
அப்போது தசைகளில் வலியும் வேதனையும் வீக்கமும் அதிகமாக வரத் தொடங்குகிறது. இந்த மணங்கள் தோன்றத் தோன்ற இனம் புரியாதபடி நம்மை இயக்கும்.
ஏதாவது ஒரு வேலையை செய்வோம் அங்கே ஒருவர் வருவார் அவருடைய செயலைப் பார்த்தபின் இனம் புரியாது கோபப்படுவோம்.
1.அந்த உணர்வு அதைச் சாப்பாடாகக் கேட்டுக் கொண்டே இருக்கும்.
2.இப்படி இந்த உணர்வுகள் நமக்குள் தோன்றி விட்டால் நல்ல ஆணுக்கள் பூராமே செயலிழக்கத் தொடங்கிவிடும்.
கோபமான உணர்வை எடுக்க எடுக்க உடல் எரிச்சல் கண் எரிச்சல் கால் காந்தல் இதை போன்று அந்த அணுக்கள் பரவும் இடங்களில் எல்லாம் இந்த நிலை ஏற்பட்டு விடுகின்றது.
அதே சமயத்தில் மன எரிச்சல்…!
1.நெஞ்சுக்கு முன் அந்தக் கோபமான நிலைகள் இங்கே வந்த உடனே இருதய பாகம் மோதி அங்கே நிறுத்தும்.
2.அந்த உணர்வு வரும் பொழுது கடிகாரம் போன்ற அதை இழுத்து வைக்கும்.
3.இழுத்து வைத்துத் தான் உயிருக்குக் கொடுக்கும் அப்பொழுது இருதய பாகங்கள் எல்லாம் வலி எடுக்கத் தொடங்கிவிடும்… எரிச்சல் ஏற்படும்.
4.நாம் சுவாசிக்கும் போது நமக்குள் எரிச்சல் என்ற உணர்வே வரும்.
இப்படி ஒருவன் தவறாகச் செயல்பட்டதை நாம் நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது நம் உயிர் அந்தக் கருவாக உருவாக்கி விடுகின்றது.
உருவாக்கி விட்டால் நம் கண்கொண்டு பார்த்ததை நமக்குள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாக்கி வைத்திருக்கின்றது.
நீங்கள் மருந்து சாப்பிட்டு நோயைத் தணித்தாலும் வயல்களில் களைகள் முளைத்தால் களைகளை நீக்கினாலும் மறுபடியும் களை முளைக்கும். இதைப்போல நமக்குள் அந்தக் கோபத்தின் உணர்வை ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாக்கப்படும் பொழுது நம் உடலில் இது பதிவாகின்றது.
இரத்தத்தைப் பரிசோதிக்கின்றார்கள். இந்த வாழ்க்கையில் எந்த அளவிற்கு நாம் கோபப்பட்டோமோ ரத்த கொதிப்பிற்குண்டான அணுக்கள் இருக்கின்றது இந்த வாழ்க்கையில் எந்த அளவுக்கு வேதனைப்படுத்தினார்களோ வேதனை உருவாக்கும் அணுக்கள் இருக்கின்றது.
ஏனென்றால் கோபம் வரும் பொழுது எண்ணிய காரியம் நடக்கவில்லை என்றால் வேதனை என்ற நிலை வரும் அதற்கு சாப்பாடு இங்கே தயாராக இருக்கின்றது.
1.இப்படி இது இரண்டும் மோதும் பொழுது இயக்கச் சக்தி மாறிவிட்டால் நமது உமிழ் நீர் கெட்டியாக மாற்றக்கூடிய அணுக்களாக வந்துவிடும்.
2.சாப்பிடுவோம்… தண்ணீர் குடித்த பின் பார்த்தால் கொழ… கொழ… என்று ஆகிவிடும்… சளியாகிவிடும்.
3.இந்த அணுக்கள் உருவான பிற்பாடு நுரையீரல் பக்கம் சென்று விட்டால்… அஹ்..அஹ்ஹ்… என்று மூச்சுத் திணறல் வந்துவிடும்.
இதையே நாம் சுவாசிக்கும் பொழுது சிரசு பாகம் செல்லும் பொழுது இந்த உணர்ச்சிகளைத் தூண்டும்… மூக்கில் தண்ணீராக ஒழுக ஆரம்பிக்கும். இது எல்லாம் எங்கிருந்து வருகின்றது…?
நம்முடைய எண்ணத்தால் வருவது தான்…!
உயிர் என்ன செய்கின்றது…? நாம் எதை எண்ணுகின்றோமோ சீதாலட்சுமியாக இருப்பதை நுகர்ந்த உடனே உயிரிலே பட்ட பின் சீதாராமா நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் (உடலுக்குள் எண்ணங்களாகத் தோன்றுகிறது).
1.ஒரு மனித உடலில் விளைந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் இந்த நிலை.
2.இதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் அல்லவா…!

தெய்வ நிலை பெற்றிடும் மனித(னி)ன் நிலை நின்று கொள்ளும் (தெய்வம் நின்று கொள்ளும்)
மூலத்தில் கலந்து இலயிக்கும் ஆனந்தப் பெருநிலை… மூலப் பிரகிருதி சகலமும் சகலமாகக் கலந்து முகிழ்தலின் செயல் நிலை… சூரியனின் சக்தியே வெப்ப ஒளிக் கதிர்களாக… சிவலிங்க அணுக்களாக… சமைத்திடும் நிலைகள் “பரவெளியில் வீசிப் படர்ந்து செயல்படும் சக்திகள்…”
அதை எல்லாம் பூமி தன் ஈர்ப்பின் சமைப்பில் பெற்று… வளர்த்து… வளர்ந்து வரும் பரிணாம வளர்ச்சி என்னும் செயல் நிகழ்வுகளை எல்லாம் “பிண்டத்தைக் கொண்டு” அன்றே மாமகரிஷிகள் உணர்ந்தனர்.
முத்தொழில் உணர்ந்திடும் உயர்வு கொண்டு… சரீர முச்செயல்களால் தங்கள் மெய்ஞானத்தைக் கூட்டி அறிந்து… அதன் வளர்ப்பாக ஞான விழிப்பார்வை கொண்டு அண்டத்தை அறிந்து கொண்டிடும் ஞான திருஷ்டியின் வழியாக… தெய்வீக நிலை பெற்றிடும் மனிதனின் உயர்வைக் கோளங்களின் செயல்பாட்டில் சூரியனை முதன்மையாகக் காட்டி… பூமியின் ஈர்ப்பில் காலைப் பொழுது நண்பகற் பொழுது இராக்காலப் பொழுது என்றே இவ்வண்டத்தில் நடைபெற்றிடும் சூட்சும இரகசியங்களை… நல்லெண்ண நற்சுவாசம் கொண்டே தியானத்தின் வழியாகப் பெற்று உயர்ந்திட நற்போதனைகளாகக் காட்டியவற்றுள்… மாமகரிஷிகள் வழிகாட்டி உயர்ந்ததைப் போல் இக்கலியின் வேகத்திலும் உண்மை உணரும் ஞானச் செல்வங்கள் “பிறவா நிலை எனும் அதனினும் சிறப்புற்ற பேரானந்தப் பெரு நிலையை எய்திட முடியுமப்பா…”
இராம காவியம் காட்டிய ரிஷி உணர்த்தும் வான் தொடர்பில்…. “மகாலட்சுமி உலவிடும் வேளை…” என்று வாய்மொழிச் சொற்கள் போதிக்கப்பட்டதே… சிருஷ்டியின் முதல் இரகசிய காத்தல் தொழில் எனும் சூரிய சமைப்பு நிலைகள் பூமி பெற்றிடும் காலத்தே… உணர்வலைகள் குணங்களாக ஆத்மா என்றிட்ட பதிவு நிலை பெற்றிடும் தெய்வீக உயர்வைக் கூட்டிக் கொண்டிட… இந்த மனித குலம் பெற்றிடவே “போதனைப்படுத்தப்பட்ட உண்மைகள்…”
1.படைப்பின் படைப்பு செயலுருவே பிரம்மனின் ஹேம அணுக்களாக உலவி ஓடிடும் சிவ சதா மண்டலமும்…
2.சூரியன் சமைப்பில் புலனாக வீசிடும் சிவலிங்க அணுக்களாகக் கலந்து…
3.பூமியின் தொடர்பில் மனிதன் தன் உயர் ஞானத்தால் பெற்றிட…
4.அறிவைத் தூண்டுகின்ற சக்தியாகப் பிரணவ ஆகாச வாணி என்னும் ஒலி சக்தியாக (சரஸ்வதியாக)…
5.தியானத்தில் பெற்றிடும் உண்மைகள் அதி வெப்ப சக்தியால் படைப்பின் ஜீவ ஆதாரம் செயல் கொண்டிடும் சமைப்பு வெப்ப அலைகளால் சமைத்திட்ட சமைப்பு…
6.செயலுறும் மாலை தொடங்கிய இரவின் பொழுதையே சிருஷ்டியின் சமைப்பே ருத்திரனாகவும்
7.அதன் உத்வேக ஊட்டம் அளித்திடும் துர்க்கை என்றே பெயர் நாமமிட்டு அழைத்து…
8.விண்ணின் சக்திகளை இம்மண்ணிலே ஜீவிதம் பெற்றிடும் உயிராத்மாக்கள் பெற்றிடவே…
9.உயிரின் குரு சூரியன் என்றே முதன்மைப்படுத்திட்டு…
10.மாமகான்கள் மெய்யறிவை அறியும் ஞானம் சுடர்ந்திடும் விளக்கைத் தூண்டிடும் தூண்டுகோல் என்றே அளித்த வழி வகைகள்…
11.இந்தக் கலியில் மனிதன் கொண்டிட்ட அறிவின் மெத்தனப் போக்கால்… பாகுபாடு கண்ட செயல்களால்…
12.சிருஷ்டியின் இரகசியங்கள் மாமகான்களால் மறைபொருள் படுத்தப்பட்டன.
“அரசு அன்று கொள்ளும்” என்ற சித்தன் சொல் இம்மனிதனால் “அரசு அன்று கொல்லும்” என்று மாற்றிட்ட சொல் வழக்கு போல் “தெய்வம் நின்று கொள்ளும்…? என்பதில்
1.எது அறிவைத் தூண்டுகின்றதோ
2.எது நின்று நிலை பெற்ற ஒளிப்பொருளோ அப்பொருளை வணங்குதல் மாத்திரம் அன்று
3.அந்த மெய்ப்பொருளாகத் தன்னை வளர்த்து… ஒளி எனும் ஜோதித்துவ நிலை பெற்றிட…
4.எண்ணம் கொள்ளல்… எது பேரருள் ஒளிச்செல்வமோ… அதனைச் சிந்திக்கத் தலைப்படும் எண்ணத்தின் உயர்வால்
5.நற்சுவாச ஒளி நுண்காந்த அலைகள் ஈர்த்திடும் பக்குவத்தால்
6.சிந்தனையில் கொள்ளும் பொருள் எதுவோ… “அதுவாக இவன் ஆதல்…” என்பது
7.”தெய்வ நிலை பெற்றிடும் மனிதன் நிலை நின்று கொள்ளும்…” பாங்கு அதுவே.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கலசம் என்பது யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகள் உயிரான உணர்வுகளில் படப்பட்டு உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் பரப்பும் நிலை தான்.
“கலச நீர்…” என்பது…
1.அருள் ஞானிகளின் அருள் சக்தியை உங்கள் உயிருக்குள் ஊட்ட(ற்ற)ப்பட்டு
2.அதன் வழி உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் நிலைகள் தான்.
ஆகவே… யாம் கொடுக்கும் உபதேசத்தை எந்த அளவிற்குக் கேட்டு உணர்ந்தீர்களோ உங்களுக்குள் இது அரும் பெரும் சக்தியாக வளர்கின்றது… தீமைகளை அகற்றிடும் சக்தியாகப் பரவுகின்றது.
அதற்குத் தான் இந்த துருவ தியான நேரத்தில் இது உபதேசித்தது. அதன் மூலம் இங்கே வைக்கப்பட்டுள்ள கலசத்திற்குள்ளும் நாம் தியானிக்கும் உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது.
மனித உடலுக்குள் இந்த சிரசு (தலை) கோபுரமாக இருக்கின்றது கோபுரத்திற்குள் வீற்றிருக்கும் இந்த உயிரிலே அருள் ஞானிகளின் அருள் சக்திகளை நமக்குள் நீராட்டுவது போன்று…
1.நாம் தியானித்த ஞானிகளின் உணர்வின் சக்தியைக் கலச நீருக்குள் ஊட்டி
2.ஆலயத்தின் கோபுரத்தில் இதை ஊற்றப்படும் பொழுது (கும்பாபிஷேகம்)
3.அதில் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு நாம் பாய்ச்சும் அருள் ஞான உணர்வுகளைக் கவருகின்றது.
இன்று எப்படி ரேடியோ டிவிக்களில் ஏரியல் ஆண்டனாக்களை வைத்து காற்றில் பரவி வருவதை அது இழுத்து நமக்கும் ஒலி ஒளியாகக் கொடுக்கின்றதோ அது போன்று ஞானிகளின் உணர்வை அது நமக்கு இழுத்துக் கொடுக்கும்.
ஏனென்றால்
1.அங்கே வைக்கப்படுள்ள கலசம் அது செம்பு…. அதற்குள் காந்தப் புலன் உண்டு
2.அதே சமயத்தில் ஜீவ அணுக்களாக என்றும் வற்றாத “வரகு…” அதற்குள் போடப்பட்டுள்ளது.
3.உபதேச வாயிலாகக் கொடுக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை எல்லோரும் ஏகோபித்து அங்கே பதியச் செய்யப்படும் போது
4.ஞானிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து அதன் கீழ் இருக்கும் சிலைகளுக்கு அது கிடைக்கச் செய்யும்
5.சிலையை உற்றுப் பார்ப்போர் அனைவரும் அந்த அருள் ஞான சக்திகளைப் பெறுவார்கள்
6.இத்தகைய நெறிகளைத் தான் அன்று தத்துவ ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டினார்கள்.
ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் செய்திருப்போம் என்றால் இன்று உலகில் வரும் தீங்குகளை அடக்கி இருக்கலாம்… அதிக அளவுக்கு விஷத் தன்மை பரவாது நாம் தடுத்தும் இருக்கலாம்.
மாறாக… அன்று ஆண்ட அரசர்கள் ஆலயங்களைக் கைப்பற்றி அவர்களுடைய ஆசைகளை இதற்குள் ஊட்டி… அவர்கள் ஆசையின் உணர்வைத் தான் கலச நீராக மாற்றினார்கள்.
அதே தீமையின் உணர்வுகளை அங்கே பதியச் செய்யப்படும் பொழுது ஆலயத்திற்கு வருவோர் எண்ணங்களிலும் இதே ஆசைகள் தான் தூண்டப்படுகிறது. ஞானிகள் காட்டியது நமக்குக் கிடைக்காது செய்துவிட்டனர்.
ஆக…
1.மனிதர்கள்… தம் ஆசையினால் வரும் விளைவுகளில் இருந்து மீண்டிட வேண்டும்
2.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற தத்துவத்தை
4.ஆறாவது அறிவால் தனக்குள் உருவாக்கும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மை
5.ஞானிகளால் உணர்த்தப்பட்டது காலத்தால் மறைந்து விட்டது.
இனியாவது… இந்த விஞ்ஞான உலகில் பேரழிவாக வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.கலச நீராட்டும் உணர்வின் ஆற்றல் ஆலயத்தில் பெருகி
2.ஆலயம் வருவோர் அனைவரும் இதை நுகர்ந்து… அவருக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் அகன்று
3.மெய் ஞானிகளின் அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உணர்வின் ஒளிகளை நாம் அனைவரும் பரப்புவோம்
ஆலயம் வருபவர் இருள்கள் நீங்கட்டும்…! அருள் ஞானிகள் உணர்வு ஆலயங்கள் முழுவதும் பரவி… வருவோர் அனைவரது குடும்பங்களும் தெளிந்த நிலைகள் கொண்டு வாழ்ந்து… எல்லோரும் நலமாக இருக்க நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்தியன் உடலில் உருவான விண்ணுலக ஆற்றல்…
1.வானவியல் புவியியல் உயிரியல் அடிப்படையில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வுகள்..
2.தன் இன மக்கள் அறிந்து கொள்வதற்காக அவன் வெளிப்படுத்திய அந்த உணர்வுகள் அனைத்தையும்
3.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து இன்றும் அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.
அகஸ்தியனைப் பின் தொடர்ந்து வந்தோர்… நுகர்ந்தவர்கள் இதை அறிய முடியும். அந்த விண்ணுலக ஆற்றலை அவர்களும் அறியும் தன்மை பெறுகின்றார்கள்.
அதன் வழியில் தான்
1.நமது குருநாதரும் பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தார்… தனக்குள் பெற்றார்
2.தனக்குள் பெற்றதை எம்மையும் (ஞானகுரு) பெறச் செய்தார்..
3.சந்தர்ப்பத்தால் அவரைச் சந்திக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது
4.தான் பெற்ற அந்த விண்ணுலக ஆற்றல் ஒவ்வொன்றையும் எனக்குள் ஞான வித்தாகப் பதியச் செய்தார்.
5.பதிந்ததை… நான் நினைவு கொண்டு அதைப் பெற வேண்டும் என்று ஏக்கத்தைத் தூண்டுகின்றார்
6.அவர் சொன்ன முறைப்படி விண்ணிலே என் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அவர் கண்ட உண்மைகளை நானும் காண முடிந்தது.
7.குருவின் தொடர் கொண்டு அந்த அறியும் ஆற்றலை நானும் பெற முடிகின்றது… அகஸ்தியன் உணர்வை நுகர முடிகின்றது
8.உலகம் எப்படி உருவானது…? என்ற நிலையை என்னில் அறிய முடிகின்றது.
அதில் விளைந்த உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும் என்று அதன் உணர்வுகளைத்தான் சொல்லாக இங்கே வெளிப்படுத்துகின்றேன்.
1.செவி வழி உணர்ச்சிகளைத் தூண்டி…
2.உங்கள் கண் பார்வையில் நுகரும் ஈர்ப்பாகக் கொண்டு வருகின்றேன்.
3.நீங்கள் நுகரப்படும் போது… உயிருடன் ஒன்றி உணர்வின் அலையை உங்களில் பரப்பச் செய்து
4.அதை உங்கள் உடலிலே ஊழ்வினை என்ற வித்தாக விதைக்கும் தன்மையாகப் பக்குவப்படுத்துகின்றேன்.
5.அந்த உணர்வுக்குள்ளிருந்து அருள் ஞானி கண்ட உணர்வை நீங்கள் வளர்க்க முடியும்.
ஏனென்றால் குருநாதர் எவ்வாறு எனக்குச் செய்தாரோ அதன் வழியில் தான் உங்களுக்கும் கிடைக்கச் செய்கின்றேன். பிரபஞ்சத்தின் இயக்கத்தை அகஸ்தியன் கண்டதை நீங்களும் நேரடியாகக் காண முடியும். பேரண்டத்தின் நிலைகளையும் உணர முடியும்.
உங்களுக்குள் உருப்பெரும் இந்த உணர்வின் தன்மை கொண்டு “உங்களை நீங்களும் உணர முடியும்…” ஏனென்றால் மனிதரான பின் கார்த்திகேயா…!
எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் பெற்றவன்… உருவாக்கத் தெரிந்து கொண்டவன் மனிதன். அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது. இதையெல்லாம் நம் காவியங்கள் தெளிவாக்குகின்றது.
1.அந்த அருள் ஞானி அகஸ்தியன் கண்ட… நமது குருநாதர் கண்ட அனைத்தையும்
2.நீங்கள் அறிதல் வேண்டும் என்ற நிலைக்கே இதை உருவாக்குகின்றேன்.
அருள் ஞானி அகஸ்தியன் பெற்ற பேருண்மைகள் உங்களுக்குள் வளர வளர மனித இச்சையின் ஆசைகள் உருவாகும் நிலையை அடக்குகின்றது… உங்களை அறியாது வரும் இருள் சூழும் நிலைகளை அடக்குகின்றது… தீமை விளைவிக்கும் நிலையை அது அடக்குகின்றது.
அதற்குத் தான் இந்த உபதேசம்…!
ஆகவே… மெய் ஞானிகள் உணர்வை இந்த உபதேச வாயிலாகக் கேட்கப்படும் பொழுது அதே உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டி
1.அதனின் அறிவாக நீங்கள் நுகரும் தன்மை வருகிறது – நீங்கள் நினைவைச் செலுத்தினால்…!
2.ஆனால் இதையெல்லாம் கேட்டுணர்ந்து… “நன்றாக இருக்கின்றது…!” என்று மறந்து விட்டால் மெய்ப்பொருளைக் காணும் திறனை இழக்கின்றீர்கள்.
யாம் சொல்லும் இணக்கத்தின் உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அந்த உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் பதிவு செய்தால் மீண்டும் நினைவின் ஆற்றல் வருகின்றது.
அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை நுகர முடியும்… அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றும் திறனைப் பெறுகின்றீர்கள்.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!


“எனது நிலை (எல்லை)” பிறவி இல்லா நிலை அடைவது தான்
1.கோடிச் செல்வம் சேர்த்தாலும் அவர்கள் வாழ்க்கையில் மன அமைதி என்பது இல்லை.
2.அழியாச் செல்வம் (அருள் செல்வம்) என்ற நிலையை எடுத்துக் கொண்டால் எச்செல்வம் இருந்தாலும் அதைக் காக்க முடியும்.
3.ஞானம் இல்லை என்றால் செல்வத்தைக் காக்க முடியாது. செல்வத்தைக் காக்க அருள் ஞானம் நமக்குத் தேவை.
இதையெல்லாம் மனதில் வைத்து இந்த வாழ்க்கையில் குறை கூறும் வழக்கத்தை விடுத்து விட்டு குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று உணர்வினை வளர்த்துக் கொள்வோம்.
எங்கிருந்து எதனுடைய நிலைகள் வந்தாலும் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் குறைகள் ஏற்படுவது சகஜம்.
1.அந்தக் குறையை உற்று நோக்கி அதையே திரும்பத் திரும்ப எண்ணுவோம் என்றால்
2.நம்மை அறியாமலேயே அந்தக் குறையான செயல்களைச் செயல்படுத்தும் நிலையும்
3.நம்மை அறியாமலே தவறுகள் செய்யும் உணர்வுகளே வளர்ந்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மாறுதல் வேண்டும்.
குறையின் உணர்வுகள் வளர்ந்து விட்டால் இந்திரலோகத்திற்குள் இரண்யன் சென்று நம்மை நல்வழியில் செயல்படுத்தாத நிலையை உருவாக்குகின்றான் என்று சொல்வார்கள்.
சொர்க்கத்தை அடையும் உணர்வின் தன்மை நமக்குள் இருக்கும் பொழுது பிறருடைய குறைகளை நுகர்ந்து விட்டால் நம் காரியமே செயலற்றதாக ஆகி… நமக்குள் குழப்ப நிலைகள் உருவாகி சிந்தித்துச் செயல்படும் சக்தியும் இழந்து “துருவத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம்…!”
இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் இதன் வழி கொண்டு அந்த வித்தினை குரு காட்டி அருள் வழியில் நாம் பெறுவோம்.
1.இந்த வாழ்க்கையில் இனி பிறவி இல்லாத நிலை அடைவேன்.
2.அரும்பெரும் சக்தியான மகரிஷிகளின் அருள் சக்திகளை எனக்குள் சேர்ப்பேன்.
3.இந்த வாழ்க்கையை அருள் வழியில் நான் வாழ்வேன்
4.இந்த நிலையே எனது கடைசி எல்லை பிறவி இல்லா நிலை என்ற இந்த உணர்வுடன் வாழ்ந்து பழகுங்கள்.
உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
செல்வங்கள் நிலைப்பதில்லை… செல்வம் இருப்பினும் இந்த உடலின் உபாதைக் காலங்களில் கூட செலவழிப்பதற்கு அது பத்துவதில்லை. செல்வம் அதிகமாக இருப்பினும் உபாதைகள் அதிகரிக்கப்படும் பொழுது “நல்ல உணவை உட்கொள்ள முடிவதில்லை…”
இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு இந்த பிறவிக் கடனை அகற்றி… இனி பிறவியில்லா நிலையை அடையும் நிலையினைச் செயல்படுத்துதல் வேண்டும்.
அது தான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. நமது வாழ்க்கையில் அருள் ஒளியின் சக்தியை பெற வேண்டும் என்று நினைத்தால் “அருள் ஒளியே நமக்குள் வளர்கின்றது…”
இல்லை இவன் இப்படி அவன் அப்படி அவன் இப்படி என்று குறை கூறிக் கொண்டே இருந்தால் குறையின் உணர்வு வளர்ச்சியாகி… நோயாகி… நமக்குள் அதுவாகவே நாம் ஆகி விடுகின்றோம்.
நமக்குள் சீர்படும் செயலை இழந்து செயலற்ற நிலைகள் படும்பொழுது நம் தொழிலே குந்தகமாகி… வாழ்க்கையிலே எதிர்ப்பின் உணர்வுகளாக நமக்குள்ளேயே எதிரிகளை உருவாக்கி… மனிதனல்லாத நிலையை உருவாக்கும் நிலை வந்து விடுகிறது.
இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
1.அருள் ஒளி பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
2.அருள் ஞானம் பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
அதற்குத் தகுதியான நேரம் இந்தக் காலை துருவ தியான நேரமே. நான்கிலிருந்து ஆறரைக்குள் விழித்த நேரத்திலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்யத் தவறி விடாதீர்கள்.
1.அருள் ஒளியைப் பரப்புங்கள்… அருள் வழியில் வாழ்க்கை வாழுங்கள்.
2.அருள் சொல்லையே சொல்லுங்கள்… உங்கள் சொல்லைக் கேட்போர் தீமைகள் அகலட்டும்.
3.அருள் ஞான வழியில் நாம் வளருவோம்
4.நம் பார்வையில் அனைவரது தீமைகளையும் அகற்றுவோம் நம்மைப் பார்ப்போர் அனைவரது தீமைகளும் அகலட்டும்.
5.அருள் ஞான வழியில் நாம் வாழ்வோம் வளர்வோம்…!
உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்… தியானிக்கின்றேன் (ஞானகுரு).

யார் அந்தணன்…?
வான்மீகியார் இராமனாக நாம ஜெபம் உபதேசிக்க…
1.அதைத் தன்னுள் ஏற்றுக் கொண்டிட்ட… பூரண முழுமையை உபதேசிக்கத் தகுந்த நிலை பெற்றிடும் விஸ்வாமித்திரன்
2.தனித்துவ தன்மையை உலகினுக்கு உணர்த்தி வழி காட்டவே
3.விஸ்வாமித்திரன் வான் தொடர்பாக பூமியின் ஈர்ப்பில் “அபூர்வ தனித்துவ குணத்தன்மைகள் பெற்றிடவே”
4.நடந்திட்ட யாகத்தை வில்லேந்தும் செம்மல் எண்ணத்தின் பலமே…
5.நற்சுவாச நல்நோக்கு செயல்படும் காலத்தில்
6.எண்ணத்தின் பாங்கே ஆங்கு சக்கர வியூகமாகக் காத்திடும் செயலை உபதேசித்து அருளி
7.நல்வழி செயல் நடத்திடும் மெய் யாகத்தின் தன்மைகள் அன்று மறைபொருள் ஆக்கப்பட்டது.
இன்று உம்மையே (இதைப் படிப்பவர்கள்) அச்செயல் நடத்திடும் பாத்திரப் படைப்பாக்கினேன்.
“அக்னி அஸ்திரம்” என்ற எரி அம்பு பாதுகாவலாக… இராமனாக… வான்மீகியால் விசுவாமித்திரர் பெற்று உயர்ந்திட… யாகம் காக்கப் பெற… அதிலும் “ஓர் சூட்சுமம்” மறைபொருள் காட்டும்.
மூர்க்க குணத்தன்மைகளை வென்று காட்டிய “வான்மீகி” வனவேடு குலத்தினனாக அந்தணர்களும் சத்திரியர்களும் ஒருவரை ஒருவர் அழித்திட முனைந்த செயலை நீக்கிட்டுக் கர்வ சம்ஹார மூர்த்தியாகக் கீர்த்தி பெற்றிட்டதே அவரின் ஆக்கம்.
அந்தணன் என்பவன் யார்…? என்று வழி அமைத்திட்ட வழக்கங்களைப் பழக்கத்தில் கொண்டிட முனைந்தனரா…?
அக்கால நாகரீக மேம்பாட்டிலே அந்தணருக்கு என்று சிறப்பு இடம் உண்டு. அதைத் துஷ்பிரயோக செயல்கள் நடத்திட்டு… பெற்றிட்ட கீர்த்தியை மாய்த்திட்ட நிலைகளும் உண்டு.
1.தனக்கென வாழாதவனும்… பிறருக்காக வாழ்பவனும்… இந்த இரண்டு சொற்களின் கருத்துக்களை கடைப்பிடிப்பவனே அந்தணன்… பிறப்பினாலன்று…!
2.சகல ஜீவர்களுக்கும் தவம் கொண்டு உயர் ஞான சித்தில் திளைத்து
2.சித்தன் நிலையாகப் பெறும் பேறு காந்தப்புல இயற்கையின் சக்தியை சக்தியுறச் செய்திடும் செயலுக்கு
3.இவ்வுலகிற்கு வழிகாட்டுபவன் யாராக இருந்தாலும் அவன் அந்தணனே…!
பிறப்பில் வேடுவன்… செயலில் அவன் அந்தணன்…!
1.விஸ்வாமித்திரர் தான் வெற்றி பெற்றிட்ட சக்தியின் வலிவு கொண்டு அந்தணன் சம்ஹாரச் செயல் நடத்திட முனைந்த போது வான்மீகியால் தடுத்து ஆட்கொண்ட செயலும்…
2.பிறப்பில் அந்தணன்… பரசுராமர் சத்திரிய சம்ஹாரம் செய்திடுவேன் என்று கொண்ட எண்ணத்தின் வஞ்சத்தை மாற்றி அமைத்து
3.சாந்த குணசீலனாக்கிய… வஞ்சம் தவிர்த்த வேடனை வழி நடத்திய அந்தணன்
4.இராம காவியம் இன்று நிலை உலகின் கண் பல இடங்களில் பரப்பிட்ட விஸ்வாமித்திரன் உத்வேக செயலுக்கு வழி நடத்திட்ட மாமகான் – வான்மீகி.
மனிதன் தெய்வநிலை பெற்றிடும் சூட்சம இரகசியங்கள் நாற்பூத புரவிகள் ஐம்பூத சக்தியாகச் செயலுறும்… இயற்கையின் தத்துவ சாரங்களை அனைவரும் பெற்றிடவே… காட்டிட்ட அனுபவ ஞான வழிகள் பல உண்டு.
பாடத்தின் கடினம்… விண்டு உரைப்பதில் தாமதம் ஆகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு பயிற்சி:-
1.நீங்கள் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண் பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.
அப்போது
1.நம் கண் பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
2.நம் நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்
செய்து பாருங்கள்.
இதைப் போன்று தான் ஒருவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
சாபமிட்ட அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம் அங்கே அது முதலில் வந்து விடுகின்றது.
நண்பர் நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ.. நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த நேரத்தில் “நின்று…”
3.அந்தச் சாபமிடுபவன் சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.
“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்.
இந்த மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.
அதே மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.
அவன் உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம். அடுத்தது என்ன எண்ண வேண்டும்…?
1.யாம் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு. ஆனால் நாம் சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு… அதிலிருந்து போன பிற்பாடு நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.நல்ல குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச் சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது…?
3.சாப அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.
அப்பொழுது நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதை… “சொல்லால் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்…!”
சாபமிட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்…?
1.நம் உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள் ஒன்று பட்டு வாழ வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.
இப்படிச் செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்..?
நடு ரோட்டில் சாபமிட்டார்கள்…! என்று நினைக்கும் போதெல்லாம்
1.இவர்கள் விட்ட சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி
2.அவர்களிடம் இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
3.நமக்குள்ளும் இதை வளர்த்துக் கொள்கிறோம்.
“இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் இப்படியெல்லாம் நடக்கின்றது…” இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டால் சாபமிட்ட உணர்வுகளும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளும் தீமையான உணர்வுகளும் அனாதையாகிவிடுகின்றது.
நாம் யாரும் ஈர்க்கவில்லை என்கிற பொழுது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது.
1.எது எது பிடிப்பில் இல்லையோ
2.அதையெல்லாம் சூரியன் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் அதை மாற்றி
3.நல்ல கதிர்களாக உருவாக்கி வெப்பமும் காந்தமுமாக அனுப்புகின்றது.
4.இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் பயிற்சி…” இது தான். செய்து பாருங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று மனிதனின் வாழ்க்கையில் தீமைகள் எப்படி எல்லாம் வருகின்றது…? என்று தெரிந்து கொள்தல் வேண்டும்.
1.இதை மாற்றுவதற்கு உங்களுக்குச் சக்தி வேண்டும்.
2.உங்களுக்குத் தெரியாது… தெரிய வைக்கின்றோம்.
4.அந்தச் சக்தி பெறுவதற்குண்டான ஊக்கத்தையும் கொடுக்கின்றோம்.
5.தெரியக்கூடிய அளவிற்கு அருள் ஞானிகளின் அருள் வித்துக்களைப் பதிய வைக்கின்றோம்.
(1) ஞானம் கிடைக்கும் சந்தர்ப்பம் எது…?
திட்டியவனை நினைத்தவுடன் உடனே நமக்கு ஆத்திரம் வருகின்றது. நம்முடைய காரியங்கள் எல்லாம் தடைப்படுகின்றது.
அப்பொழுது அந்தச் சங்கடம் வரும்போது நான் (ஞானகுரு) உங்களுக்குள் பதிவாக்கியதை எண்ணினால் உங்களுக்குள் ஞானம் வரும். தீமையை விலக்கக்கூடிய யுக்தி வரும்.
உங்கள் சொல் என்ன செய்யும்…?
அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் நாம் பேசும் இந்த உணர்வலைகள் திட்டியவர்கள் மனதிற்குள் போய்… நம் மீது உள்ள கடுப்பைக் கொஞ்சம் குறைக்கச் செய்யும்.
உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
(2) நம் உணர்வு அடுத்தவருக்குள் புகுந்து மீண்டும் நமக்கே திரும்ப வந்து இயக்கும் நிலை
1.“என்னிடம் இப்படிப் பேசினான்” ஆகவே… என்னை இப்படித்தான் எப்போதும் பேசுவான்…! என்ற உணர்வு வந்து
2.நாம் அந்த அச்ச உணர்வோடு பேசும் பொழுது ஏதாவது ஒன்று பதில் சொன்னோம் என்றால்
3.அவர்களுடைய செவியில் பட்டு “நம்முடைய அந்தப் பயப்படும் உணர்வே…” அவர்கள் உடலுக்குள் போய்
4.நம்மை அவர்கள் மிரட்டும் நிலையை உருவாக்கிவிடும்.
ஒருவரிடம் கடன் வாங்கி இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம் திருப்பிச் செலுத்தச் சிறிது கால தாமதம் ஆகின்றது. நாம் எப்படியும் வாங்கிய பணத்தைக் கட்டவேண்டும் என்று விரும்புவோம்.
அப்பொழுது அதை எப்படி எண்ண வேண்டும்…?
ஏனென்றால்… அவன் சரியான நேரத்தில் கொடுத்து உதவினான். அது நியாயம் தான். ஆனால்… நாம் வாங்கினோம் அவனுக்குக் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும்
1.சரியான முறையில் எப்படியும் கொடுக்கக்கூடிய சக்தி எனக்கு வர வேண்டும்.
2.நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்டு அமைதியாக இருந்து
3.எனக்கு அந்த வழி கொடுக்க வேண்டும்… அந்த நிலை பெற வேண்டும்… என்று நாம் எண்ணினோம் என்றால்
4.அந்த வலுவான உணர்வுகள் நாம் எண்ணும்போது மூச்சலைகள் வெளிப்படுகின்றது.
கடன் கொடுத்தவர் நம்மை எண்ணி வரும்போது அதை அவர் சுவாசித்தால் அவர் உடலில் இது இணைந்து நம் மேல் இருக்கக்கூடிய வெறுப்பின் தன்மையை “நிச்சயம் குறைக்கும்…”
இதே மாதிரி தொழிலே ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு… இந்தப் பொருளை வாங்குவோர் நன்றாக இருக்க வேண்டும். அதற்குண்டான மன பலம் பெற வேண்டும்.
நம்மிடம் பழகும் நண்பர்களுக்கும் ஒத்துழைக்கக்கூடிய தன்மை வரவேண்டும். நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நம்முடன் ஒத்துழைக்கும் தன்மை வரவேண்டும் என்று இப்படித்தான் இணைத்துக் கொண்டு போக வேண்டும்.
(3) சங்கடத்தை நீக்குங்கள்
வேலை செய்பவர்களிடம் போய்… சங்கடத்துடன் எண்ணி நீங்கள் ஒரு வேலையைச் சொன்னால் இதே சங்கடம் அவனை இயக்கி அவனைத் தவறு செய்ய வைத்துவிடும்.
நீங்கள் சங்கடத்துடன் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் வாடிப் போகும். நம்மை அறியாமல் இயக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு வலுவான சக்தி வேண்டும். அந்த வழி அறிந்து செயல்படும் நிலைகள் பெற வேண்டும்.
1.ஒரு பள்ளிக்குச் சென்றால் விஞ்ஞானியாக வேண்டும் என்றால் அது எப்படி…? என்ற நிலைகளைச் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.
2.ஒரு இஞ்சினியராக வேண்டும் என்றால் எப்படி…? என்றும்
3.ஒரு ஆசிரியராக வேண்டும் என்றால் எப்படி…? என்றும் சொல்லிக் கொடுக்கின்றார்கள்…
4.அதற்குண்டான பாடங்களைப் படிக்கின்றார்கள்.
இதைப் போன்று தான் குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்த அந்த உணர்வை நினைவுபடுத்தி உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவானது மீண்டும் உங்கள் நினைவுக்கு வரும் பொழுது
1.சங்கடங்களைச் சமாளிக்கும் ஞானம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
2.அந்த ஞானத்திற்குண்டான யுக்தி கிடைக்கச் செய்வதற்குதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் பெற வேண்டும் என்று
3.அடிக்கடி சொல்லி அதை உங்களுக்குள் ரிக்கார்டு செய்து வைத்து விடுகின்றேன்.
அப்பொழுது “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது தீமையை நீக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குள் பெருகத் தொடங்குகின்றது.
(4) தீமையை நல்லதாக மாற்றும் முறை
உதாரணமாக… பாலில் சர்க்கரையைப் போட்டால் இனிப்பாக இருக்கின்றது. அந்தச் சர்க்கரையுடன் சேர்த்துக் காபித் தூளைப் போட்டால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.
சர்க்கரையுடன் கொஞ்சம் புளிப்பைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது. அந்தப் புளிப்புடன் இலேசான காரத்தைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.
மிளகைப் போட்டுப் பாருங்கள் அது ஒரு ருசியாக இருக்கும். மிளகாயைப் போட்டுப் பாருங்கள். அந்தப் புளிப்பு காரம் எல்லாம் சேர்த்து “பானக்கம் கரைத்தால்” அது ஒரு ருசியாக இருக்கும்.
இதைப் போலத்தான் உங்களுக்குள் எத்தகைய தீமையான நிலைகள் வந்தாலும் அதை நல்ல சுவை மிக்கதாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வேண்டும்.
அதற்குத்தான் இந்த வழிமுறைகளைச் சொல்கின்றோம்.


துருவ நட்சத்திரம் உருவாக்கும் “ஒளியான அண்டம்”
1.பிரபஞ்சத்தில் உயிரணு தோன்றி பூமியில் மனிதனாக உருவான பின் துருவ நட்சத்திரம் ஆன நிலை என்பது…
2.அது அகண்ட அண்டத்தின் நிலைகளைத் தனக்குள் நுகர்ந்து
3.ஒளிச் சரீரமான ஒளியான அண்டத்தை உருவாக்கும்,
இப்படி…
1.ஒளி அண்டங்கள் ஒன்றுடன் ஒன்று நமது சூரியக் குடும்பத்தில் இருப்பது போல பல பல சூரியக் குடும்பங்களில்
2.எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்களில் உயிரணு தோன்றி உணர்வின் ஒளியாக மாறி… அகண்ட அண்டத்தில் சுழன்று கொண்டு தான் உள்ளது.
உயிரணு தோன்றி இந்த உயிர் நுகர்ந்த உணர்வு கொண்டு உணர்ச்சிகள் கொண்டு நாம் இயங்கினாலும்… அதனதன் வழி கொண்டு சந்தர்ப்பத்தில் வேதனை என்ற உணர்வை நுகர்ந்த பின் வேதனையை உருவாக்கும் அணுக்கள் உருவாகி உடலிலே நரக வேதனையைத் தான் அனுபவிக்க நேர்கின்றது.
இப்படி ஒவ்வொரு சரீரத்திலும் நரக வேதனைகளை அனுபவித்து… அதிலிருந்து “தப்பிக்க வேண்டும் தப்பிக்க வேண்டும்” என்ற உணர்வுகளை வளர்த்து வளர்த்துத் தான் இன்று நம்மை மனிதனாக வளர்த்துள்ளது உயிர்.
1.மனிதனான பின் இத்தகைய வேதனைகளிலிருந்து தப்ப வேண்டும் என்று
2.அவ்வாறு தப்பிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் இந்த உடலிலே அது வளர்க்கப்பட்டு
3.உடலை விட்டுச் சென்ற பின் வேதனையற்ற உணர்வும்
4.வேதனை உருவாக்கும் அந்த நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று
5.அகண்ட அண்டத்தில் எங்கும் செல்லும் நிலையும்…
6.எங்கிருந்து எது உருவானாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று ஒளிச் சரீரமாகப் பெறும் தகுதியும் பெறுகின்றது.
அதை இந்த மனித சரீரத்திலே பெறத் தவறினால் மீண்டும் நாம் எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மை கொண்டு விஷ அணுக்கள் உருவாகி… உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தன்மை கொண்ட உடலாக உருவாக்கிவிடும் நமது உயிர்.
மீண்டும் நரக வேதனையில் தான் சுழல நேரும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கினால் உடலில் வரக்கூடிய நோய்களையோ அல்லது வாழ்க்கையில் தொழிலில் வரக்கூடிய சிக்கலையோ அதை நிவர்த்திக்கும் வல்லமை பெறுகின்றோம்.
1.தியானத்தின் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறப்படும் போது
2.நாம் இந்த வன்மை (வலிமை) பெறுகின்றோம்.
நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தும் பொழுது நமது நினைவாற்றல் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றது.
1.அதன் உணர்வை நாம் எளிதில் பெறும் தன்மையும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றிடும் திறனும் பெறுகின்றது.
3.அதே சமயம் இந்த உடலை விட்டு நாம் சென்றால் எளிதில் அந்த சப்தரிஷி மண்டலத்தை அடையும் நிலையும் வருகின்றது.

மாடு மேய்ப்பவன் தலைகீழாக நட்ட செடி
“வான் நோக்கிய நோக்கில்” உயர் ஞான வேதம் உள் நிறைந்து நிலைக்களன் ஆக்கிட… உயர் காந்த ஒளி அணுக்கள் நூறில் ஒருவருக்குப் பாய்ந்திடும் செயல்… உயர்வெண்ண நினைவோட்ட சிந்தனையின் வசத்தால் ஆங்கு கிட்டியது “மெய்ஞான மகிழ்விப்பு…”
பறவையை வீழ்த்திய பின்…
1.“வான்மீகியின் கண்டத்தில் இருந்து எழுந்திட்ட ஒலி நாதம்” திரும்பத் திரும்பக் கீதமாக மனதின் கண் எழ
2.மௌடீக மாயை அகல… மோகத்தை வேரறுக்கும் “மனத்தின் திண்மை” செயலுற்றது.
மெய்ப்பொருளைத் தேடி பரத கண்டம் முழுக்க யாத்திரையாக உலவிப் பற்பல அனுபவ நிலைகளைப் பெற்று…
1.அகத்தின் பொருள் நாடிடும் நிலையாக நாரத மாமகரிஷியின் தொடர்பில்
2.அகத்தினுள் அகண்ட அண்டத்தை அறிதல் என்பதாக மேலாம் நிலை விளக்க
3.கீழாம் அறிவு செயல்படா நிலை பெற “ஆச்சா மரம் வீழ்த்தும் மராமரம்” நாரதரால் உபாசிக்கப்பட்டது.
இரு வித அமில குணங்கள் செயற் கொண்டிடும் மராமரத்தில் வான்மீகி கண்டு கொண்டது மாசற்ற மனம் கொள்ளும் தியானமாக உளநலன் கண்டது மராமரா.
உடலை வறுத்திடும் உணர்வுகள் உள்ளத்தின் உணர்ச்சியாம் மோக நிலைகளை வேருடன் வீழ்த்த… மனிதன் கொண்டிடும் எண்ண உயர்வால் தெய்வீக நிலை கண்டிடும் மராமரா என்றே அதைக் கண்டதும் உண்டு.
புறப் புயலாக எழுந்த கௌசிகனின் கோபம் களைய… அந்த வேந்தனுக்கு உபதேசம் தந்திட வான்மீகி கடைப்பிடித்த உபாயம்… நாட்டரசனை உலகாளும் அரசனாக்கி…
1.உலகையே நேசித்த விசுவாமித்திரன் சமுதாய நலன் பேண
2.இராம காவியத்தை இந்தப் பூமி எங்கும் பரப்பிட்ட செயலுக்கு வித்திட்டதே “வான்மீகி மாமகரிஷி தான்…”
ஜீவன்களுக்கு ஏற்படும் மரணத்தை வென்றிடத் துடித்து எழுந்த “கௌசிகனின் தவ சக்தியைக் காத்திடவே…” மாட்டுக்காரனாகக் கோலூன்றி… வரும் வழியில் காத்திருந்த வான்மீகியாரின் எண்ணம் ஈடேறிற்று.
வேடுவன் ஞானம் வேந்தருக்கு உரைத்தல்
தியாகம் உணர்த்திய யோகம்
பண்டு இணைவென்ற விமோசனம்
ஆறாம் அறிவு உணர்த்திய சாந்தம்
மாடு மேய்ப்பவன் தலைகீழாக நட்ட செடி
ஓர் கிணற்றருகே சிறு தோட்டம். அந்தத் தோட்டத்தின் செடி கொடிகள் வேருடன் பிடுங்கப்பட்டு
1.வேர் மேல் இருக்க கிளைகள் பூமியில் புதைந்திருக்க
2.சகல செடி கொடிகளையும் இதே தன்மையாக அமைவுப்படுத்தி
3.ஓட்டை மண் கலையத்தில் நீர் இறைத்து
4.அந்த மாட்டுக்காரன் நீர் குடத்தைச் சுமந்து கொண்டு செடிகளுக்கு நீர் பாய்ச்சிட ஓடுவான்.
அங்கு நீர் மிஞ்சுமா…? மிஞ்சாது…!
வெறும் கலயத்தை வேர்ப்பாகம் மேலிருக்கும் செடிகளின் மீது கவிழ்ப்பான். “நீர் இல்லையே…” என்று மீண்டும் ஓடுவான். மீண்டும் நீரை இறைப்பான்.
வியர்க்க விறுவிறுக்க மீண்டும் ஓடுவான். காலிக் கலயத்தைக் கவிழ்ப்பான். நீர் இல்லையே…! என்று ஏங்குவான். களைத்துப் போய் மர நிழலில் படுப்பான். விருட்டென எழுந்தே மீண்டும் நீர் சுமக்க ஓடுவான்.
இதுவே செயலாகப் பல முறை நிகழ… சூரியன் உச்சிப் பொழுதைக் காட்டிற்று.
வழிப்பயணத்தில் நடந்து வந்த களைப்பும் தாகமும் மேலிட நீர் தேடி அலைந்த கௌசிகன் இந்த அரிய காட்சியைக் கண்டு தாகவிடாயும் மறந்து இது என்ன விபரீதச் செயல்…? இவன் மாட்டுக்காரனா… அல்லது தோட்டக்காரனா…? இது என்ன புதிர்…! என்று எண்ணிக் கோபம் முற்றும் நீங்கப் பெற்று “இதில் ஏதோ பொருள் உண்டு…” என்று எண்ணி அப்பனே இது என்ன செய்கை…? என்று வினவினான்.
பதில் ஏதும் கூறாமல் கார்மேகக் கண்ணனாக எதையும் காதிலே வாங்கிக் கொள்ளாமல்… பொழுது சாயும் வரை இப்படியே நடைபெற்றது.
கௌசிகனும் விடவில்லை வான்மீகியும் பதில் உரைத்திடவில்லை. நடந்து நடந்து கால் ஓய்ந்தது. கௌசிகனுக்கோ கேள்வி கேட்டுக் கேட்டுக் குரல் ஓய்ந்தது.
இருவரும் அந்த மரத்தடியில் அமர்ந்து ஒருவரை மற்றொருவர் பார்த்துச் சிரிக்க… சிரிப்பின் ஒலி உச்சத்தை அடைய… நீர் மொள்ளும் ஓட்டைக்கலயம் கை தவறி விழுந்து உடைந்தது.
மீண்டும் கௌசிகன் வினா தொடுக்க… “பிச்சி கொண்ட அறிவு இப்படித்தான் செயலுறும்… இது என்ன கூத்து…?” என்று தலைகீழாக நடப்பட்ட செடி கொடிகளைக் காட்டி கேட்கின்றான்.
வான்மீகியோ
1.விரைவாகப் பலன் பெற்றிடவே
2.இயற்கையின் கதியை மாற்றி அமைத்தேன் என்றார்.
இது நடைபெறக்கூடிய காரியமா…? என்றான் கௌசிகன்.
இயற்கையின் கதியை மாற்றி அமைக்க நீ முயலலாம்… ஏன்…? அது என்னால் சாத்தியப்படாது…! என்று எதிர் வினா தொடுக்கின்றார்.
கௌசிகன் வாயை அடைக்கச் செய்து மீண்டும் விளக்குகின்றார் வான்மீகி.
1.மரணத்தை வெல்கின்ற மார்க்கமாகத் தன் சக்தியைக் குறைவு நிலைப்படுத்திக் கொண்டாய் அன்று நீ…!
2.ஆனால் உன் சக்தியை வலுக்கூட்டும் செயலாக… “ஜீவர்களுக்கு உரையாகப் புகட்டி… முறையாக வெல்லுதல் நன்று…”
இயற்கையுடன் ஒன்றியே சக்தியை வளர்ப்பாயாக..!.
1.வளர்ந்து பெறுகின்றவன் தன்னை வளர்ப்பதோடு மட்டுமின்றி
2.இயற்கையின் சக்திக்கே சக்தி அளித்துச் சப்த நாதத்தில் கலந்து இயங்கும் வாழ்வாங்கு வாழ்வான்.
3.நீ இயற்கையின் சத்துரு அன்று…! இயற்கையின் மித்திரன் (நண்பன்)
4.வானில் இயங்கும் ஒளி நிலையை உன் முயற்சியால் தான் பெற முடியும்…! என உபதேசித்தார்.
நாட்டரசனும் காட்டரசனும் சமத்துவ மனோபாவனையாக்க் கலந்தது “ஒன்றின் முழக்கம்… மற்றொன்றின் எதிர் முழக்கம்…”
உணர்வுகளின் தீமை நிலை தாடகை. அது உள்ளத்தில் மூண்டெழுலும் ஞான நெருப்பை அணைத்திடும் மாய நீரூற்று. ஆக… தீமையின் குணத்திற்குப் பேதம் ஏது…?
1.வென்றிட்டவன் அடைவதோ தாய்மையின் பேறு
2.காமத்தை ஆட்சி புரியும் ஞான அரசாட்சி.
3.அதுவே ஞான விழிப்பின் பின் “சுடரும் நிர்விகல்ப… மோன தவ… சாயுஜ்ய… பெரு நிலை மாட்சி…”
வேள்வி காத்த விசுவாமித்திரன் வேதத்தை ஆண்டது எப்படி…? பரசு அஸ்திரம் பலம் குன்றிப் பலன் காட்டியது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வெறுப்பு வேதனை கோபம் என்ற நிலையில் பிறரைக் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் இன்று அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர… குறைகளை நீக்கும் உணர்வுகளை நாம் வளர்க்கவில்லை.
சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து அதில் இருக்கும் நல்லதை நுகரும் வராகனைப் போன்று (பன்றி)
1.நாம் பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும் அதைப் பிளந்து விட்டு
2.அவர்களை அறியாது சேர்ந்த அந்தக் குறைகள் நீங்க வேண்டும் என்ற நல்ல உணர்வை நுகரப் பழக வேண்டும்.
தெளிந்துணர்ந்து செயல்படும் அந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது இந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குறைகளை நீக்கிடும் சக்தியாக அங்கே தோன்றுகின்றது.
இதை எனக்குத் (ஞானகுரு) தெளிவாக்குவதற்குத் தான் சாக்கடை அருகே அமரச் செய்து சாக்கடை உபதேசமாகக் கொடுத்தார் குருநாதர்.
உனக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகவும்… தீமைகள் உனக்குள் புகாத நிலையும் பெற வேண்டும் என்பதற்காகத் தான் சாக்கடை அருகே அமரச் செய்தேன்.
அப்போது நீ எதை நுகர்கின்றாய்…? அந்தச் சாக்கடையை எண்ணி ஐய்யய்யே…ஐய்யய்யே.. என்று நினைக்கும் போதெல்லாம் உனக்குள் அந்தச் சாக்கடை நாற்றமே வருகின்றது.
1.ஆனால் இந்த நாற்றத்தை நீக்க வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது
2.அதை நீக்கும் எண்ணங்களாக உனக்குள் வளர்கின்றது.
இதைப் போன்று தான் நீ யாரைக் கண்டாலும்… எவரைக் கண்டாலும்… அங்கே குறைகள் எதுவாக இருந்தாலும்… அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று உனக்குள் ஏற்றுக் கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும்
2.அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருள் கண்டுணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்று நீ எண்ணுவாய் என்றால்
4.உனக்குள் அறிவித்த இந்த உணர்வுகள் “மெய்ப்பொருள் காணும் நிலையாக உன்னிலே வரும்…” என்று உணர்த்தினார் குருநாதர்.
ஆகவே நாம் இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் காண… அது நமக்குள் அறிவிக்கச் செய்கின்றது
1.அறிவிக்க மட்டும் தான் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.அதற்கு அடுத்து அதைப் பயன்படுத்தக் கூடாது..
ஏனென்றால் அறிவிக்கச் செய்யும் நிலையைத் திரும்பத் திரும்ப எண்ணினால் என்ன ஆகும்…?
இப்படிச் செய்தான்… அப்படிச் சொன்னான்… அப்படிச் செய்தான்… இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்…! என்று எண்ணும் பொழுது
1.அந்த அறிவிக்கும் நிலை நமக்குள் எதைத் தவறு என்று காட்டியதோ
2.அந்தத் தவறின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்து
3.நம்மைத் தவறு செய்வோராகவே வளர்த்து விடும்.
அதற்குப் பதிலாக “தவறை நீக்கும் நிலைகளைக் கொண்டு வந்தோம்…” என்றால் அது தெளிவாக இருக்கும்.
ஏனென்றால் குறையே இல்லாத மனிதர்கள் எவரும் இல்லை.
ஒரு மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வுகள் வரும் பொழுது… அதுவே இயக்கச் சக்தியாக இயக்கப்படும் பொழுது
1.அதிலிருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?
2.குறைகளை எப்படி அகற்ற வேண்டும்…? என்று
3.அந்த அருள் ஞானிகள் உணர்வை வலுவாக ஏற்று நாம் எண்ணுவுமேயானால்
4.”குறைகளை அகற்றிடும் சக்தியாக நாம் மாறுகின்றோம்…”
ஆகவே நாம் யாருடன் பழகியிருந்தாலும் அவரின் உணர்வு நமக்குள் வந்தாலும் அவர் அறியாமல் வந்த தீமைகள் நீங்கி… பொருளறிந்து செயல்படும் ஆற்றல் அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது இருளை நீக்கிடும் நிலையாக… “ரிமோட் கண்ட்ரோல்…” போல் வேலை செய்யும்.
டி.வி. மற்றும் இது போல் உள்ள சாதனங்களில் மூடி மறைத்திருப்பதை “நாம் அந்த சுவிட்சைப் போடும்போது…” தெளிவாகத் தெரிகின்றது. அந்த படங்களைத் திறந்து கவர்ந்திடும் நிலையாக ஆக்குகின்றது.
இதைப் போன்று தான்
1.அருள் ஞானிகள் உணர்வினை நாம் எண்ணும் பொழுது
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் எண்ணத்தை நமக்குள் கொண்டு வரும் பொழுது
3.மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலைகள் “ரிமோட் கண்ட்ரோல்” ஆக நம்மை அங்கே அழைத்துச் செல்லும்
4.நம் சொல்லைக் கேட்பவருடைய நிலைகளும் அங்கே இயக்கும்
5.குறைகளை மாற்றி அமைக்க இது உதவும்.
5.நல்ல குணங்களை நமக்குள் தெளிந்து கொள்ளும் நிலையாகவும் வருகிறது.
இதைத்தான் “மகா சிவன் இராத்திரி – நீ விழித்திரு…!” என்று சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் உடலுக்குள் எத்தகைய விஷம் கொண்ட அணுக்கள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அங்கே செலுத்தச் செலுத்த அந்த அணுக்களை மாற்றி அமைத்து விடலாம்.
நம் உடலில் இடுப்பு வலியோ முதுகு வலியோ எலும்புகள் வலியோ அல்லது தசை மண்டலங்களில் வலியோ அதிலே வேதனைகள் வந்தால்
1.கண்ணின் நினைவு கொண்டு அந்த வலி இருக்கும் இடத்தில் எல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் செலுத்தி வலி நீங்கி அங்கே நலமாகும் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.
ஒரு சிலருக்கு இருதய வலி இருக்கலாம் சிலருக்கு குலை நோய் இருக்கலாம் சிலருக்கு வயிற்றுக்குள் நோய் இருக்கலாம் சிலருக்கு கர்ப்பப்பையில் வலி இருக்கலாம்.
அங்கங்கே வலி வருவதை நம்முடைய கண்ணால் தான் அதை உணர முடிகின்றது. அதன் தொடர் கொண்டு “இன்ன இடத்தில் இப்படி வலிக்கிறது…” என்பதை உணர முடிகின்றது.
ஆகவே நாம் கண்ணிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து கர்ப்பப்பையில் குறைபாடுகள் இருந்தால் அங்கே நினைவைச் செலுத்தி அங்கே இருக்கக்கூடிய கட்டிகள் கரைய வேண்டும்… கர்ப்பப்பை சீராக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
உதிரப்போக்குகள் நிற்காது இருந்தால்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அந்தக் கர்ப்பப்பையை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரருள் பெற்று இந்தப் பை சீராக உருவாக வேண்டும்
3.உதிரப் போக்கு நீங்க வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்று
4.பெண்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவையாவது செய்து செயல்படுத்த வேண்டும்.
5.அதிலே பலவீனமான நிலைகள் மாறும்.
கர்ப்பப்பையை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வுகள் பெறும் பொழுது அதில் உருவான விஷமான அணுக்களின் தன்மை மாறும். நல்ல அணுக்களை அங்கே நாம் உருவாக்க முடியும்.
இப்படி நம் உடல் உறுப்புகளில் எந்தப் பாகத்தில் வலி வந்தாலும் இருதயமோ குடல் பாகங்களோ நுரையீரல் போன்ற உறுப்புகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உறுப்புகளில் செலுத்திக் கொண்டே வரவேண்டும்.
அப்பொழுது அங்கே இருக்கக்கூடிய குறைபாடுகள் அகன்று நல்ல அணுக்களாக உருவாக்க முடியும்.
ஆனால் வலியோ வேதனையோ நோயோ வரக் காரணம் என்ன…?
நாம் நல்லவர்களாகத் தான் இருக்கின்றோம். இருந்தாலும் பிறருடைய வேதனைகளைக் கேட்டு நுகரும் பொழுது நம் உடல் உறுப்புகளுக்குள் அந்த வேதனை பரவி உடல் உறுப்புகளில் அதே வலியும் வேதனை உருவாகின்றது.
1.கண்ணால் பார்த்துக் கவர்ந்த நுகர்ந்த அந்த உணர்வுகள்
2.நம் இரத்தத்தில் கலக்கப்படும் போது இப்படித் தீமைகள் பரவி விடுகின்றது.
கார்த்திகேயா…! எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியாக நமது ஆறாவது அறிவு இருக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
நமது ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
2.உயிரான ஈசனிடம் அதைப் பொருதப்படும் பொழுது
3.இந்த உணர்வின் இயக்கமாக உயிரிலேயும் வலுப் பெறுகின்றது.
ஏற்கனவே நாம் அறியாத நுகர்ந்த வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் சோர்வு வேதனை இவைகளை உள்புகாதபடி அகற்றி விடுகின்றது அல்லது மாற்றி விடுகின்றது.
இப்படி நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு நம் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை உணவாகக் கொடுத்து
1.கண்ணின் நினைவு கொண்டு அங்கே கட்டளை இடப்படும் போது இந்த உறுப்புகள் வலுப்பெறுகின்றது.
2.தீமையிலிருந்து விடுபடக்கூடிய சக்தியும் நோயிலிருந்து விடுபடக்கூடிய சக்தியும்
3.ஆரோக்கியமாக வாழும் நிலைகளும் நாம் பெறுகின்றோம்.
அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லா அணுக்களிலும் சேர்க்கச் சேர்க்க துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழும் அந்தத் தகுதியும் நாம் பெறுகின்றோம்.
இதே மாதிரி யாம் பயிற்சி கொடுத்த முறைப்படி செய்து பழகுங்கள்.


வான்மீகி ஞானம் பெறக் காரணமான “அதிர்ச்சி வைத்தியம்”
மோகத்தைப் பேரின்ப இலயமாக அனுபவித்தல் என்பதே… அதை வென்று காட்டிடும் மனோ தைரிய வலுவை வளர்க்கும் செயல்பாடாக… எவ்வளவு வீரியம் பெற்றிருத்தல் வேண்டும்…?
மோகத்தின் வசமான மனம் கொண்டவன்… அதிலே ஏமாற்றம் கொண்டிட்டால்
1.அப்போது கனன்று எழும் கோபாக்கினியின் உணர்வலைகள்
2.மனோ பீஷ்டம் (விருப்பம்) நிறைவேறிடாத அந்த (தன்) எண்ணமே ஓர் தடைக்கல்.
தடையை அகற்ற முயலும் மனம் “நிதானத்தையும் இழந்து விட்டால்” அறிவுறுத்தும் அனுபவ ஞான உரையால் என்ன பயன் காட்டும்…?
கனன்று எழும் மனத்தின் கோபக்கனல்…
1.அது சுட்டெரிக்கும் விழிப் பார்வையில் காட்டிடும் கோபப் புயலாக எண்ணம் கொண்டவுடன்…
2.நாண் ஏற்றும் உத்வேக கோபாக்கினிப் புயல் என்றே… சம்ஹரிக்கத் துடித்திடும் நிலையாக எழும்.
இதனின் “சூட்சுமம் உணர்ந்து கொள்க…”
மூடனாக அலைந்திடும் வில்வேடனை (வான்மீகி) மோகத்தீயில் மூட்டிய கனல் தகித்தாலும்… அவனுக்குள் சிந்தனா சக்தியைத் தூண்டப் பெறும் அனுகூலமாக… ஞானத்தின் வழி தொடர… அந்த நல்வழியை உணர்த்திட… அவன் எதிர்கொள்ள வந்துற்ற வினையின் செயல் “ஓர் அதிர்ச்சி வைத்தியம்…”
பட்சிகளின் நயன பாஷைகளை அறிந்து கொண்டிடாச் செயலில்… இயற்கையின் அரவணைப்பில் குதூகலமிட்டு ஒன்று கலந்து மகிழ்ச்சியாக இருக்கும் ஆண் பெண் பட்சிகளை வான்மீகி கண்ணுற்றவுடன்… “மோகக்கனல் தகிக்க” இடக்கரம் வில்லை உயர்த்த வலக்கரம் நாணைத் தொடுக்க போடப்பட்டது ஓர் ஏரி அம்பு.
அக்கினி அஸ்திரம் சுட்டெரிக்கும் ஜுவாலையாக பட்டெனத் தைத்து உயிர் குடிக்க இணைப் பறவை துடி துடித்து கீழே விழுந்தது. கண்ணுற்றான் வேடன்.
1.கத்திக் கூக்குரலிட்டு வேதனை ஒலி எழுப்ப…
2.பதறித் துடித்து இணையைச் சுற்றி வரும் அப்பறவையின் நிலை
3.ஏவப்பட்ட கணையைப் போல… பன் மடங்கு வேகமாக வில் வேடன் மனதில் தைக்க…
4.அவன் கண்டத்தில் இருந்து எழுந்த குரல் “ஹா…!”
வேதனையுற வைத்துவிட்டான் வான்மீகி… துயர் துடைக்க வழி என்ன…?
இவ்வொலியின் நாதம் வட்டமிட்டுச் சுழன்றிடும் ஒலி வேக நிலையால்… பதிவு கொண்டிடும் செயலாக எழுந்திட்ட வினாவின் ஏக்கமாக… அதை வென்றிடத் துடித்த அனுபவ ஞான உரையே… “வான்மீகியின் இராம காதை…”
1.அந்த நேரத்தில் வானை நோக்கிய பார்வையின் ஏக்கம்…
2.கொண்ட மோகத்தை வென்றிடும் மார்க்கம்…
3.தெய்வீக இலட்சண அறிவை ஒலி அணுக்களாக
4.வானெழுந்து பாய்ந்த செயல்… அதை வெளியிட அனுமதி இல்லையப்பா…!
கடைபிடிக்கும் வழி முறைகள் கொண்டால் அந்தப் பேருண்மைகளை உங்களுக்குள் உணர்த்தும்.

கணவனும் மனைவியும் தியானத்தில் ஒன்று சேர்ந்து விட்டால் மட்டும் பத்தாது…!
துருவ தியானத்தில் கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடல் வேண்டும் ஒவ்வொரு உயிரிலும் ஆண்பால் பெண்பால் என்ற உணர்வுகள் உண்டு பெண்பால் நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்தால் அது பெண்ணின் உணர்வுகளைத் தூண்டி பெண்ணாகும் உறுப்புகளையும் உணர்வுகளையும் மாற்றுகின்றது.
அதே போல் ஆண்பால் நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமானால் ஆண்களாக மாற்றுகின்றது.
1.ஆண்பால் என்ற நட்சத்திரம் இருந்தாலும் பெண்பாலின் உணர்வுகள் சிறிதளவாது கலந்திருந்தால்தான்
2.இந்த உணர்வே உணர்வாகி அணுவின் தன்மை பெருக்கி உடலை வளர்க்கவே உதவுகின்றது.
பெண்பால் என்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது உடலின் அமைப்பு வந்தாலும் ஆண்பால் என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது கவர்ந்து தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.
இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் கலந்து கொண்ட உணர்வுக்கொப்பத் தான் உடல் அமைப்பும்… மற்றதை வளர்ப்பதும்… தனக்குள் உருவாவதும் என்ற நிலை உருவாகின்றது.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மனிதன் ஒருவனால் தான் உயர்ந்த நிலை பெற முடியும்.
1.முதல் மனிதன் அகஸ்தியன் இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்த பின் மனைவிக்கு அதையெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றான்.
2.கணவன் வழியிலேயே அந்த மனைவியும் செயல்பட்டதனால் அந்த உணர்வுகள் இரண்டும் ஒன்றி வாழ்ந்தது.
3.அதன் வழி தான் அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றார்கள்.
அதிலிருந்து வரும் உணர்வைத்தான் எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்ற நிலையும் அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நுகர்ந்து நாம் இந்த உடலில் வளர்த்து பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.
1.இரத்த நாளங்களிலே துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெருக்கப் பெருக்க நம் உடலில் உள்ள அணுக்களில் சிறுகச் சிறுக அது சேரும்.
2.அதன் உணர்வுக்கொப்ப உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறும்.
3.கணவனும் மனைவியும் இதைப் போன்று எடுத்துக் கொண்ட உணர்வுகள் இனி பிறவி இல்லா நிலை அடையச் செய்யும்.
விஞ்ஞான அறிவால் பேரழிவாகச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் அவன் பெற்ற பேரருளை நாமும் பெற்று அணுவின் இயக்கங்களை அறிந்து சிந்தித்து செயல்படும் தன்மையும் ஒன்றுபட்ட நிலைகள் கணவன் மனைவிக்குள் வரவேண்டும்.
தியானத்தில் ஒன்று சேர்ந்து விட்டால் மட்டும் பத்தாது…!
அதற்குப்பின் ஏற்கனவே சேர்த்துக் கொண்ட விஷத்தன்மைகள் அதற்குக் கொஞ்சம் சந்தர்ப்பத்தை விட்டால் நம்மை அது கணவன் மனைவி நிலைகளை மாற்றிவிடும்.
அது போன்ற நிலைகள் வராதபடி தடுத்து கணவன் மனைவியும் அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று அதிகாலையில் எடுத்துப் பழகுதல் வேண்டும்.
கணவன் மனைவி வேறு வேறு ஊரில் இருந்தாலும்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
2.மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் இருவருமே எண்ணுங்கள்.
3.அதன் உணர்வுப்படி ஒளியான அணுக்களாக மாறும்.
இதன் வழி செய்தால் மூதாதையர்களை விண்ணிலே செலுத்த முடியும். இதற்கு முன் செய்யவில்லை.
இப்பொழுதாவது இதைச் செயல்படுத்தி அவர்களைச் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்து
1.நாமும் அந்த ஞானிகள் சென்ற வழியில் ரிஷி ரிஷிபத்தினி என்ற நிலையில்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சிருஷ்டிக்கும் சக்தியாக உருவாக முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை எதிர்த்துத் தாக்கும் சக்தி நமக்கு வேண்டும். இயற்கையாகவே நமக்கு அது உண்டு.
எப்படி…?
1.நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நிலையை அல்லது
2.நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் தீமையை
3.”பெரு மூளை உருவாக்கும் திரவகத்தை” – சளி என்ற நிலையில் அதை முன் செலுத்தி
4.நாம் நுகரும் உணர்வுகளை வடிகட்டி மற்ற உணர்வுடன் கலக்கச் செய்து
5.தீமையிலிருந்து விடுபடும் சக்தியாக இயற்கையிலேயே பரிணாம வளர்ச்சியில் வந்த மனிதனுக்கு உண்டு.
ஆனால் மற்ற உயிரினங்களோ விஷத்தின் தன்மையைக் கவர்ந்து விஷமான அணுக்களை உருவாக்கும் சக்தியே பெறுகின்றது ஆனால் மனிதனுக்கு இந்த ஆற்றல் உண்டு.
பெரு மூளையிலிருந்து வரும் அந்த அமிலம் உடலுக்குள் எதிர்ப்படும் உணர்வுகளை அதை வடிகட்டிச் சளி வழியாக வெளியேற்றி விடுகின்றது
அதாவது
1.நமது மூக்கின் நேர் பகுதியில் நஞ்சு உள்புகாது தடுத்துக் கொள்ளும் சளி என்ற நிலை உருவாகிறது.
2.சுவாசத்தினை அதிலே வடிகட்டித் தான் உள்ளே அனுப்புகின்றது.
ஆனால் அப்படி வடிகட்டினாலும் சந்தர்ப்பத்தில் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் அதையெல்லாம் அதிகமாக எடுக்கும் பொழுது இந்த உணர்வின் அழுத்தம் வடிகட்டும் நிலையைத் தடுத்து இது வலுப்பெற்று விடுகின்றது.
நாம் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து அதற்குத் தக்க இரத்தமாக மாறி நம் இரத்த நாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.
அப்படிப் பெருகத் தொடங்கினால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கிடும் திறன் பெற்று வந்தாலும்… நம்மை அறியாது நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து நம் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் விஷத் தன்மையாகச் சேர்ந்து விடுகிறது.
1.அப்போது அந்த அணுக்கள் அனைத்தும் செயலிழந்து இந்த மனித உடலை உருக்குலையச் செய்து
2.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது
3.எதனால் இந்த உடல் சுருங்கியதோ… எதன் உணர்ச்சிகளால் அது உருவானதோ… அதற்குத்தக்க உயிர் வெளியே சென்ற பின்
4.பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கி வளர்ந்து வந்த நிலையை மாற்றி
5.இன்று தீமைகளைச் சேர்த்திடும் தன்மை கொண்ட உடலாக மாற்றிவிடும் நமது உயிர்.
இதை எல்லாம் தெளிவாக அறிந்து கொண்ட ஞானி தான் அகஸ்தியன். அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி தன் உடலில் அப்படி வந்த நஞ்சினை மாற்றி… மாற்றி… உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டான்.
அவன் ஒளியாக மாறக் காரணமானது “துருவத்திலிருந்து வரும் நிலை தான்…!”
1.விண்ணுலக ஆற்றலை பூமி அதன் வழியில் எவ்வாறு கவர்கிறது…? என்பதை உணர்ந்து
2.அந்த நஞ்சினை… துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பெற்று அவனுக்குள் பெருக்கி
3.அதன் வலு அதிகமாகும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்றதனால்
4.மனித உடலை மாற்றியமைக்கும் சக்தி பெற்று ஒளியாக மாற்றுகின்றான் அகஸ்தியன்.
அவனுக்குத் திருமணம் ஆன பின் கணவன் மனைவி இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாக ஆன பின்…
1.விண்ணுலக ஆற்றலின் உணர்வின் தன்மையை உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி
2.எதிலிருந்து பூமி கவர்கின்றதோ அதை உற்று நோக்கி அதைத் தனக்குள் கவர்ந்து
3.விஷத்தைப் பிளந்து விஷத்தை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை இருவருமே பெறுகின்றனர்.
அதை நீங்களும் பெறக்கூடிய தகுதிக்குத் தான் இதைத் தெளிவாக உணர்த்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உயிர் ஒளியாக இருக்கின்றது… எல்லாவற்றையும் தெரியச் செய்கின்றது… தெரிவிக்கச் செய்கின்றது…! இந்த உயிரைப் போன்றே உடலில் உள்ள ஜீவணுக்களை உயிர் அணுக்களாக… “ஒளியான அணுக்களாக…” மாற்றிட வேண்டும். அது தான் நம் குருநாதர் நமக்குக் காட்டிய வழி.
1.தேனீக்கள் தேன் கூடுகளை உருவாக்கித் தன் இனங்களைப் பெருக்கி
2.அதில் சுவைமிக்க தேனாக எப்படி உருவாக்குகின்றதோ அதைப் போன்று
3.உயிரைப் போன்று உடலில் இருக்கக்கூடிய அணுக்களை நாம் ஒன்றாக்க வேண்டும்.
4.தேன் கூட்டைப் போல்தான் நம் உடலும் அமைப்பாக இருக்கின்றது
5.அதிலே அருள் ஒளியினைச் சேர்த்து உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக நாம் பெற முடியும்.
ஏனென்றால் அப்படி உருவானது தான் துருவ நட்சத்திரம்…! இந்தப் பூமியிலே வாழ்ந்தவர்கள் யாரெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பின்பற்றிச் சென்றனரோ… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அவர்கள் இணைந்து… பிறவி இல்லா நிலையை அடைந்து அருள் வழியில் இன்றும் வாழுகின்றனர்.
சூரியனே கூட ஒரு காலம் அழியலாம். சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களும் மறையலாம். ஆனால் சூரியக் குடும்பத்தில் உருவான உயிரணுக்களின் தன்மை மனிதனான பின்
1.உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரமோ சப்தரிஷி மண்டலமோ
2.தன் ஆறாவது அறிவை ஏழாவது… ஒளியாக மாற்றியவர்கள் என்றுமே அழிவதில்லை.
3.பேரண்டத்தில் விஷத்தின் தன்மை கலந்தாலும் அதையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள் தான் அவர்கள்.
அதாவது… ஒரு பாம்பினம் தன் வாழ்க்கையில் தன் உடலில் உருவான விஷத்தைப் பாய்ச்சிப் பாய்ச்சி… மற்ற உயிரினங்களின் உடல்களைத் தான் விழுங்கி விழுங்கி… அந்தந்த உடலின் விஷத்தையும் தன் உடலில் உருவான உருவான விஷத்தையும் (அனைத்தையும்) தனக்குள் அடிமையாக்கி… அந்த விஷமெல்லாம் ஒன்றாக ஆன பின் நாகரத்தினமாக அது மாறுகின்றது.
பாம்பு விஷத்தை நாகரத்தினமாக மாற்றுவது போல் தான் துருவ நட்சத்திரமும் விஷத்தை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது. ஆனால் அது கல்.. ஆனால் இது ஒளிக்கற்றைகளாக மின் கதிர்களாக மாற்றுகிறது.
இதை ஏன் சொல்கிறோம் என்றால் நம்முடைய மனித வாழ்க்கையிலும்… விஷத்தின் தன்மை சிறிதளவு நமக்குள் வந்தாலும் அறிந்து கொள்ள முடிகின்றது.
1.அப்போது உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அதை அடக்கி
2.அந்த விஷம் நமக்குள் அடங்கியே வாழும் உணர்வின் தன்மையாக நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
அப்படி மாறினால் துருவ நட்சத்திரம் அழியாத நிலைகள் கொண்டு வாழ்வது போல் நாமும் அழியா வாழ்க்கை வாழலாம். நம் உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு அழைத்துச் சென்று ஏகாந்த நிலை பெறச் செய்யும்.
ஏனென்றால் விஷத்தின் துடிப்பின் தாக்குதலால் தான் வெப்பமும் மற்ற எல்லா இயக்கங்களும் வருகிறது. ஆகவே…
1.எந்த விஷமும் உயிரை இருளச் செய்யாதபடி ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது
2.மனிதனின் ஆறாவது அறிவு… அது தான் கடைசி நிலை…!
இதனைத் தெளிவாக உணர்ந்து குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செயல்படுத்துவோம்.


வான்மீகியின் “பூர்வாங்கம்”
எண்ணுகின்ற எண்ணத்தின் அசைவுகளை அறிந்து கொண்டிடும் ஆற்றலாக… அதை உணர்த்தி அறிவுறுத்தும் மாமகரிஷிகளின் ஒளி காந்தத்துடன் ஒன்றி… உண்மையின் சக்தியாய் இக்காலத்தில் பெறுகின்ற நிலையே “முக்காலமும் உணரும் நிலை…!”
“அகால மரணத்தின் முன்னறிவிப்பை”
1.மெய் ஞான அறிவால் அறிந்து கொண்டிட
2.காட்சிப் புலனாகும் விழிப்படலங்களின் சூட்சுமம் (கண்ணில் உள்ள பாப்பா) பற்றி உரைத்திருந்தோம்.
மனிதன் தான் வாழ்ந்து வரும் வாழ்க்கையில்… உலகோதய தொழில் அறிவு வாழ்வின் ஜீவித செயலுக்கு அவரவர்கள் வழியமைத்துக் கொண்டு செல்லும் அனுபவ உண்மை (அது).
1.இன்று வழக்கு நடையில் உரைத்திட்ட நாட்டரசன் கோட்டை
2.அதுவே வான்மீகி மாமகரிஷி ஞானப்பயிர் வளர்க்க வந்திட்ட ஊர்.
ஏடறிவு அற்ற வில் வேடர் குலத்தில் பிறந்தவன் வான்மீகி. வில் அம்பை வைத்து வேட்டையாடுதல்… கிழங்கு கள்ளி எடுத்தல்…தானியங்கள் பயிரிடுதல்… இதுவே முன்பு வாழ்ந்த வனவேடுவ குலத்தின் வித்து,
வில்வீரன் என்ற பெயர் நாமத்தில் உலவி… தாய்மையின் பேறு… கற்பு நெறி காக்கும் இராமாயண மாகாவியத்தைப் படைத்தது.
வேடுவ குலத்தின் திருமண விழாவில் முக்கிய பங்கு ஏற்பது வில்லும் அம்பு தான். வில்லின் வித்தைகள் பயிற்சிக்கும் செயலில் வீரத்தை உடலின் வலிமையைக் கொண்டு… வெற்றி பெற்றிடத் துடிக்கும் விவேகமற்ற மௌடீக வைராக்கியத்தைக் காட்டி… மணம் முடிக்கத் துடித்த நிலையில்… அவன் வில் ஒடிந்ததால் களரியில் அன்று நாணம் மேலிடத் “தலை குனிந்தான்,..”
தன் வாழ்க்கையில் பங்கேற்கத் தேர்வு செய்த மங்கை… வெற்றி வாகை சூடிய மற்றொருவனுக்கு மாலை சூட்டியதால் ஏற்பட்ட மனத்தின் ஊடல்கள்… மோகத்தின் வசம் எழுந்த கோபமாய் அந்த வித்து அவனுக்குள் (வான்மீகி) வேரூன்றி விளைந்த்து.
அஸ்திரத்தில் ஏவப்படும் பொழுது அக்கினியை உருவாக்கிடும் முறையைக் காண இச்சம்பவமே வழி வகுத்தது.
1.ஐம்புலன்களையும் ஒன்றாக நிறுத்தி… ஐம்புலன் அடக்கம் என்கின்ற நிலை கொண்டு வளர
2.காட்டில் ஒரு சித்தன் மூடனாக உலவிய இந்த வேடனிடம் தானாக முன் வந்து
3.இவனின் உயர்வை அன்றே கண்டு… அஸ்திரங்கள் ஏவுதலின் நாட்டத்திற்கு வழிகாட்டினான்.
தானாக தன் அனுபவத்தில் “தென்னம்பாளையினுள் அக்கினியைக் கண்டது…” எத்தகைய ஞானமப்பா…?
தென்னம்பாளைப் பஞ்சு
அம்பின் நுனிக் குஞ்சு
பாறையின் மோதல் வேக நெருப்பு
காதையின் வழிகொண்டுகொள் விருப்பு
1.தென்னம்பாளையினுள் கிளைத்து ஓடும் காம்புகளை கடின நுனியில் பஞ்சு போல நைத்து…
2.அம்பின் நுனியில் கட்டி வில்லில் அதை நாணேற்றி முழு வேகம் கொண்டு எய்ய
3.காற்றின் உராய்வில் தென்னம்பாளை பற்றி எரியும் சூட்சுமம் அறிந்து கொண்டது ஏகாந்த விளையாட்டிலப்பா.
அத்துடன் சிறு நுனியில் வைக்கப்படும் சில பொருள்கள் எரியூட்டும் குணத்தன்மைகள் கொண்டது. எய்யப்படும் வேகத்தில் பாளைப் பஞ்சில் பற்றி இணைக்கப்பட்டு இருக்கும் எரிபொருளும் பற்றி எரிந்து செயல்படுதல் “அக்கினி அஸ்திரம்” என்று பெயர் சூட்டப்பட்டது.
சிற் சில பாளைகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது அக்கினிப் பொறிகள் வெளிப்படுதலை அறிந்திட்டதைப் போல்… சிற் சில பாறைகளிலும் அதே சூட்சுமத்தைக் கண்டறிந்தவர் வான்மீகி மாமகரிஷி.
சகலத்திலும் சகலமாய்க் கலந்து பரவிப் படர்ந்த
1.ஆதி அமில குண சக்திகள் ஒன்றுடன் ஒன்று கலந்து செயல்படும் செயலின் நிகழ்வுகள் பிரம்மமாக
2.அந்த மறைபொருள் உறைபொருளாக விளைந்து உருக்கோலம் கொண்டிட்ட பிறகு
3.பூமியே சிவலிங்கமாக சுழன்றோடிக் கொண்டிருக்கும் இயக்க கதியில்
4.ஈர்ப்பின் பாசம் சமைத்திடும் சமைப்பு… உள்ளிட்ட நிகழ்வே சக்தியாக… ஒலி ஒளி இணைந்து கொண்டிட்ட சிவ சக்தியாக
5.விண்ணுலக சக்திகள் “வான் எழுந்து ஈர்க்கும் கரு எதுவோ…” அதை நிறைவாக்க
6.தெய்வீக வடிவம் பெற்றிடும் ஜோதியின் உள் குளிர்வு – ”நீல வண்ணமாக”
7.தன்னுள் (வான்மீகி) வான்கொண்டு வானில் ஒளி பெற்றிட்ட செயல் போல் அனைவரும் பெற்றிட
8.ஞான முன்னோடியாகக் காட்டும் நிலை ஞானச் செல்வங்களும் பெற்றிட வேண்டுமப்பா.

உடல் நலிந்தாலும்… நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்
மனிதனான பின் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.
அந்தச் சக்திகளை எடுத்து நாம் முன்னோர்களை விண் செலுத்திப் பழகுதல் வேண்டும். சப்தரிஷி மண்டலங்களுடன் அவர்களை இணைக்கப்படும் போது அங்கிருந்து உயர்ந்த சக்திகளை நாம் பெறலாம்.
1.சப்தரிஷி மண்டல உணர்வுகளைக் கவர்ந்தோம் என்றால் அந்த வலிமையை நாம் பெறுகின்றோம்
2.இதை வளர்க்க வளர்க்க இருளை அகற்றும் நிலையும் வலிமையான உணர்ச்சிகள் நமக்குள் தோன்றும்
3.தீமை அகற்றும் வல்லமையும் நமக்குள் பெறுகின்றது.
4.இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை வந்தாலும் “தாங்கும் வலிமை கொண்டு” நல்லதை வளர்க்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம்.
அருள் ஒளி என்ற உணர்வுகள் பெருகுகின்றது எந்த நிமிடம் உடலை விட்டுச் சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து சப்தரிஷி மண்டலத்தில் பிறவியில்லா நிலை அடையலாம்.
சூரியன் ஒரு காலம் அழியலாம். மனிதனுடைய உணர்வுகள் ஒளியான பின் அது அழிவதில்லை. ஏனென்றால் நஞ்சை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
அத்தகைய திறன் பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் போது நமது உடலில் கலந்துள்ள நஞ்சை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.
1.நஞ்சை ஒளியாக மாற்றப்படும் பொழுது
2.நம் உடலில் இப்பொழுது அந்த உணர்வுகள் அதிகமானால்
3.இந்த உடல் நலியத்தான் செய்யும்.
வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது நஞ்சின் தன்மை மாறுகின்றது. ஆனால்
1.அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டப்படும் பொழுது
2.ஐய்யய்யோ… நான் தியானம் இருக்கின்றேனே என் உடல் நலிந்து போய்விட்டதே என்று எண்ண வேண்டியது இல்லை.
ஏனென்றால்
1.விஷத்தின் தன்மை கொண்ட உடலின் தன்மையை மாற்றி அருள் ஒளியைக் கூட்டி இந்த உணர்வு வளர்ந்தால்
2.இந்த உடலை விட்டுச் சென்றால் ஒளியின் சரீரம் ஆகிறது.
வேதனையை எடுத்தால் உடல் நலிந்து வேதனையையே மீண்டும் ஊட்டி மீண்டும் பிறவிக்கு வருகின்றோம் ஆகவே எத்தகைய வேதனைகள் வந்தாலும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினைச் சேர்த்தால் நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.
1.எந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைப் பெற்றோமோ அங்கே செல்கின்றோம்
2.நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்.
எப்போது இருந்தாலும் நாம் இந்த உடலை விட்டுப் பிரியத்தான் வேண்டும். உடலில் வளர்த்த உணர்வு எதுவோ அந்த நிலைக்குண்டான ஈர்ப்புக்குத் தான் அழைத்துச் செல்லும். உயிருடைய வேலை அது தான்.
ஆகவே நமது வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் இருபது வருடம் முப்பது வருடம் காடு மேடெல்லாம் அலைந்தேன்.
1.ஒவ்வொரு நிமிடத்திலும் எதிர் நிலையான உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…?
2.இதற்கு மாற்று நீ என்ன செய்ய வேண்டும்… நீ எப்படி இருக்க வேண்டும்…?
3.தீமைகளை நீ எப்படி மாற்ற வேண்டும்…? என்று தான் குருநாதர் காட்டினார்.
ஏனென்றால் பல தொல்லைகள் பட்டேன்… என் குடும்பத்தையே அனாதையாக விட்டு விட்டுத் தான் சென்றேன்.
அவர்களைப் பற்றி எண்ண விடாதபடி செய்தார் குருநாதர். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றி எண்ணும் பொழுது… பாசத்தால் அவர்களின் உணர்வுகள் உன் உடலுக்குள் எப்படி வேகமாக வருகின்றது…! என்றும் காட்டினார் குருநாதர்.
ஒரு பாத்திரம் சரியாக இருந்தால் அது நலமாக இருக்கும். அதிலே ஓட்டை விழுந்து விட்டால் அதை உபயோகப்படுத்த முடியாது.
அது போல் இந்த உடல் என்ற இந்தப் பாத்திரத்திலே இருக்கக்கூடிய ஓட்டைகளை (பிற தீமையின் உணர்வுகள்) அடைக்க வேண்டும் என்றால்
1,அதைச் சமப்படுத்தினால் தான் நீ உன்னைக் காத்து உன் குடும்பத்தில் உள்ளவரையும் காப்பாற்ற முடியும் என்று
2.இதெல்லாம் அனுபவபூர்வமாகத் தான் குருநாதர் உணர்த்தினார்.
இமயமலையில் பனிப்பாறைகளுக்கு மத்தியில் நான் செல்லப்படும் போது எனக்குள் சில உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கிறார். பழனியில் என் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததை அங்கே நேரடியாகக் காட்டுகிறார்.
அதைக் கண்ட பின் என் குழந்தையை எண்ணும் பொழுது பனிப்பாறையிலே என் இருதயமே இரைச்சலாகின்றது… உறையும் தன்மை வருகின்றது. அப்படியே விட்டு விட்டால் உயிரே போய்விடும்.
அப்போதுதான்… நீ உன் குழந்தையை இங்கிருந்து எப்படிக் காக்கப் போகின்றாய்…? என்று வினா எழுப்பினார்.
உன் குழந்தையைக் காக்க வேண்டும் என்றால்
1.நான் உனக்குச் சொன்ன உணர்வின் வலு கொண்டு
2.உன் எண்ணத்தால்… கண் வழியாக அங்கே அருளைப் பாய்ச்சு
3.அவனைக் காப்பதற்குண்டான நிலைகளை நீ செய்…! என்றார்.
இப்படி என் குடும்பமே பல வகைகளிலும் அல்லல்பட்டது. என்னைச் சார்ந்தோர் அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் தான் நான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ள முடிந்தது… “இப்படித்தான் தெரியச் செய்தார் குருநாதர்…”
அதைப் போன்று தான் இப்போது உங்கள் குடும்பத்திலும் உங்களை அறியாது எத்தனையோ தீமைகள் வருகின்றது. ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை. பிற மனித உடலில் விளைந்த உணர்வுகளை நீங்கள் நுகரும் போது அந்த நிலை ஆகிறது.
பத்திரிக்கை வாயிலாக டி.வி. வாயிலாக உங்களுக்குள் தினசரி எத்தனையோ அதிர்ச்சியான உணர்வுகள் புகுகின்றது.
1.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு உங்கள் உடலை என்னவெல்லாம் அது பாடு படுத்துகின்றது…?
2.அப்போது அந்தத் தீமையே உங்களை ஆட்சி புரிகின்றது… நல்ல குணங்கள் ஆட்சி புரிவதில்லை.
3.உயிரிலே படும் அந்தக் கலக்கமான உணர்வுகளே இயக்கச் சக்தியாக வருகிறது.
காரணம்… நெருப்பிலே எந்தப் பொருளைப் போடுகின்றமோ அந்த மணம் தான் வரும். நம் உயிர் நெருப்புக்குச் சமம்.
ஆனால் நமது ஆறாவது அறிவால் இருளை நீக்கும் ஒளியான உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் அந்த உணர்ச்சிகளை ஊட்டி… எண்ண வலிமை கொண்டு நம் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியும்.
இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அருள் ஞானிகள் உணர்வை நுகர்ந்து உடலில் இருக்கக்கூடிய இரத்தங்களில் செலுத்தி ஒவ்வொரு அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்தால்
1.இருளை நீக்கும் ஆற்றல் பெற்று சிந்தித்துச் செயல்படும் தன்மை வாழ்க்கையில் வரும்
2.அதே சமயத்தில் நம் மீது மோதும் தீமையின் உணர்வுகளை எதிர்கொண்டு நீக்கும் தன்மை வரும்.
எப்படி…?
எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! ஒரு உணர்வின் அழுத்தத்தின் தன்மை எதுவோ அதைக் கொண்டுதான் நவீன இயந்திரங்களை இன்று இயக்குகின்றான் மனிதன்… “விஞ்ஞான அறிவு கொண்டு…!”
இதைப் போன்று தான் நமது உயிர் நமக்குள் எலக்ட்ரிக்காக இருக்கின்றது… நாம் சுவாசிப்பதை எலக்ட்ரானிக்காக மாற்றி இயக்குகிறது. ஆனால் வேதனை என்ற உணர்வுகள் எலக்ட்ரானிக்காக மாறி விட்டால் அந்த வேதனையின் இயக்கமாகத் தான் உயிர் நமக்குள் உருவாக்கும்.
இதையெல்லாம் வென்ற
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எலக்ட்ரானிக்காக நாம் மாற்றினால்
2.இதன் உணர்வுகள் எதிர் கொண்டு அந்த வேதனைகளைத் தள்ளிவிட்டு விடும்
3.நமக்குள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் தன்மையும் வரும்
4.எதிர்வரும் தீமையின் உணர்வின் தன்மையை நமக்கு நாமே உணர்ந்து அந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி தடுக்கவும் முடியும்.
உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவால்… இருளை நீக்கி என்றுமே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழலாம். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழச் செய்ய முடியும்.
1.நீங்கள் ஒருவர் மகிழ்ந்து வாழ்ந்தால் போதும்
2.அதன் உணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் சக்தியாகப் படரும்
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் ஒளியாக மாறும்.
உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு பெறும் பயிற்சியைத் தான் இப்பொழுது யாம் (ஞானகுரு) தந்து கொண்டிருக்கின்றோம்.
இதனைக் கற்றுக் கொண்டு நீங்களும் சரி உங்கள் குடும்பத்தாரும் சரி உங்களைச் சார்ந்தோரும் சரி எல்லா நலமும் வளமும் பெற்று… இந்த பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் நச்சுத்தன்மைகளை நீக்கக்கூடிய அந்த வலிமையை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஷக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அந்த விஷத்தன்மைகள் நமக்குள் வராது தடுத்துப் பழகுதல் வேண்டும் காரணம்… இனி வரும் காலம் மிகக் கடினமாக இருக்கின்றது.
இன்று நாம் வாழக்கூடிய இந்தக் கால கட்டத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இந்தப் பூமி முழுவதும் பரவச் செய்து
2.நம் உடலுக்குள் அதிகமாகப் பெருக்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.நமக்குள் “பெரும் வட்டமாக…” மாற்றிக் கொள்ள வேண்டும்.
எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கும் சக்தியினைப் பெறச் செய்வதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
பதிவானதை நினைவாக்கி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்வதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்
மற்ற மார்க்கங்களில் எல்லாம் இப்படிச் செய்ய மாட்டார்கள். காசைக் கொடுத்துத் தான் அதிலே மெம்பராக வேண்டும். அவர்கள் சொல்கிறபடி எல்லாம் கட்டுப்பட வேண்டும்… கட்டுப்பட்டவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.
ஆனால் யாம் உங்களுக்கு நேரடியாக பப்ளிக்காக (PUBLIC) சொன்னால்…
1.நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…? அலட்சியப்படுத்தி விடுகின்றீர்கள்…!
2.இங்கே இந்தப் பக்கம் கேட்டு விட்டு அந்தப் பக்கம் காது வழியாக வெளியில் விட்டு விட்டுச் செல்கின்றீர்கள்.
என் குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கின்றது. என் பிள்ளைகள் இப்படி இருந்து கொண்டிருக்கின்றது. நான் எதைச் செய்தாலும் அது நஷ்டம் ஆகின்றது…! என்று இதைத்தான் இராகமாகப் பாட ஆரம்பிக்கிறீர்கள்.
“நான் (ஞானகுரு) கொடுத்த சக்தியைப் பயன்படுத்துவோம்…!” என்ற நிலை இல்லாது இருக்கின்றது. எவ்வளவோ சிரமப்பட்டுப் பெற்ற… எனக்குள் விளைய வைத்த… அந்த உயர்ந்த ஞானத்தைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.ஆனால் கொடுத்த வித்தை உதறித் தள்ளிவிட்டு உங்களுக்குள் வேதனையைக் கூட்டிக் கொண்டு
2.என்னையும் வேதனைக்கு உள்ளாக்கும் நிலைக்குத்தான் நீங்கள் வருகின்றீர்கள்
3.உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்
4.இருளை நீக்கும் குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை
5.இருக்கலாம்… மதிப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம்…
6.ஆர்வம் இருக்கும்…! ஆனால் அப்புறம் என்ன செய்வீர்கள்…?
7.அவன் அப்படிப் பேசினான்… இவன் இப்படிச் செய்கின்றான்…! சும்மா விடுவதா…?
8.கடன் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்ப கொடுக்கவில்லையே… என்னை ஏமாற்றுகின்றானே…! என்ற
9.இந்த நினைவுகள் தான் வருகின்றதே தவிர நான் சொல்லும் நிலைகளை எடுக்கும் நிலை இல்லை…!
இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் ஆட்டிப்படைக்கின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க அருள் உணர்வுகளைப் பெருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் முடிவு மிகவும் நெருங்கி விட்டது…!
இன்று இளம் குழந்தையாக இருந்தாலும் சரி… வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி… நம் பூமி கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது… விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றது.
இந்தப் பூமிக்குள் மட்டுமல்ல…! இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே கடும் தீய விளைவுகள் ஆகி அல்லோகலப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றது. யார்… எதைத் தேடி… எதைக் காக்கப் போகின்றோம்…!
1.இது போன்ற நிலைகளை எல்லாம் கடந்து
2.என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
இந்தச் சூரியனே அழிந்தாலும் பிரபஞ்சமே அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய உயிரணு மனிதனாக வளர்ச்சி அடைந்து.. தன் ஆறாவது அறிவை ஏழாவது… ஒளியாக மாற்றி விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக வாழ்வது போல் நாமும் அங்கே வாழ முடியும்…! ஏகாந்த நிலையை அடைய முடியும்… எதிர்ப்பே இல்லாத நிலையும் நஞ்சை ஒளியாக மாற்றிடும் திறனும் பெற முடியும்.
அதைப் பெறக்கூடிய தகுதியைத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இங்கே ஏற்படுத்துகின்றோம்.


விஞ்ஞான அறிவால் பேரழிவு வரும் இந்த நேரத்தில் “அகஸ்தியன் உணர்வு தான் தெற்கிலே வளரப் போகின்றது”
“தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று பாடலைப் பாடுகின்றோம். இந்த உலகமே விஷத்தன்மையில் சிக்கினாலும்
1.அகஸ்தியன் உணர்வு கலந்த இந்தத் தமிழ் நாட்டில் விஷத்தை அகற்றும் சக்தியாகப் பெறுகின்றோம்.
2.நான் இதைப் பேசுகின்றேன் உங்களைப் பெறச் செய்கிறேன் என்றால் நான் அல்ல
3.நமது குருநாதர் காட்டிய வழியில் அந்த அகஸ்தியன் உணர்வையும்
4.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரியஷியாகித் துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் பெருக்கப்படும் பொழுது
5.விஞ்ஞான அறிவால் எத்தகைய பேரழிவுகள் வந்தாலும் “நம் தமிழ்நாடு காக்கக்கூடிய சக்தியாக வரும்… விஷத்தை வெல்லும் சக்தியாக வரும்…”
நீங்கள் இதைச் சாதாரணமாகக் கேட்கிறீர்கள் என்று எண்ண வேண்டாம்…!
அருள் உணர்வுகளைப் பெருக்கப்பட்டு இருளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே… குரு எனக்குக் கொடுத்த அந்த அருள் உணர்வுகளை நீங்களும் பெருக்கி… அதை நீங்கள் உலகமெங்கும் பரவச் செய்யும் பொழுது நம்மைக் காக்க நம் உணர்வுகள் பாதுகாப்பாக வரும்.
நியூட்ரான் என்ற குண்டின் சக்தி அதிகமாகும் பொழுது அது அழுத்தமான நிலையில் மற்றதை எப்படி விரட்டிச் செல்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெருக்கப்படும் பொழுது விஷத்தின் தன்மை ஒடுக்கி ஒளியின் தன்மையாக அது உருவாக்குகின்றது.
1.அந்த உணர்வை நமக்குள் பெருக்கினோம் என்றால் நாளை வரும் விஞ்ஞானப் பேரழிவிலிருந்து தமிழ்நாடு தப்பும்.
2.பெரிய பெரிய தத்துவ ஞானிகள் இதைத்தான் கூறுகின்றனர்.
3.அகஸ்தியனின் உணர்வு தான் இதையெல்லாம் வெளிப்படுத்துகின்றது.
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் அகஸ்தியனுடைய தத்துவங்கள் வரும். ஆனால் முழுமையாக யாரும் அதை விளக்க உரையாகக் கொடுக்கவில்லை. அரசர்களுக்கு உகந்ததாக மட்டுமே மாற்றி விட்டார்கள். உண்மையின் உணர்வை அறிய முடியாது மறைத்து விட்டார்கள்.
இனி வரக்கூடிய எதிர்காலம் மிகவும் சிக்கலாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் தமிழ் மண்ணைக் காக்க வேண்டும். அதன் வழி கொண்டு உலகைக் காக்க வேண்டும்.
உலக மக்களைக் காக்கும் உணர்வு வர வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தை எடுத்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி இங்கே பரவச் செய்து இதன் வழி கொண்டு ஒவ்வொரு நிலையிலும்… அறியாத இருளை நீக்கும் சக்திகள் பரவி அந்த ஞானிகள் காட்டிய பண்புகள் “இங்கிருந்து உலகைக் காத்திடும் நிலைகளாக வர வேண்டும்…”
அன்று ஒரு சமயம் அகஸ்தியன் இந்தப் பூமியைத் திசை திருப்பினான். அதைக் காவியங்களாகப் படைத்துள்ளார்கள். சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் ஆகின்றது. அப்போது அனைவரும் அங்கே திரண்டு வரும் பொழுது பூமி தாங்காது என்பதற்காக அகஸ்தியனை… “நீ தெற்கில் போ…” என்று சிவன் சொன்னார்.
தெற்கிலே அவன் சென்ற பிற்பாடு… தன் எண்ணத்தால் இந்த பூமியைக் கவிழும் நிலையில் இருந்து திசை திருப்பினான்… ஒரு நிலையில் நிலைப்படுத்தினான் அகஸ்தியன்.
விஞ்ஞான அறிவால் பேரழிவு வரும் இந்த நேரங்களில் அதே அகஸ்தியன் உணர்வு தான் தெற்கிலே வளரப் போகின்றது. அதாவது உணர்வுகள் மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.அகஸ்தியன் உணர்வைப் பெருக்கி… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாமும் பெருக்கி
2.இந்த நாட்டைக் காத்திடும் நிலை பெறுதல் வேண்டும்.
3.நாட்டைக் காக்க வேண்டும் என்றால் நம்மை நாம் காக்க முடியும்
4.மற்றவரை காக்க வேண்டும் என்றால் நம்மை நாம் காக்கின்றோம்
ஆனால் நம்மை மட்டும் நம் வீட்டை மட்டும் தனித்துக் காக்க வேண்டும் என்றால் பிறரின் வெறுப்பின் தன்மையைத் தான் கவர நேரும்.
பிறர் காக்கப்பட வேண்டும் என்ற தெளிவான நிலையில் பெற வேண்டும் என்றால் நம்மை நாம் காக்கின்றோம்… வீட்டையும் காக்கின்றோம்… நாட்டையும் காக்கின்றோம்.
இதைப் போன்று அகஸ்தியன் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது அவன் வாழ்ந்த வழியில் நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும். ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
தவறாதீர்கள்… என்னமோ ஏதோ என்று இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

மூடமதி விலகிட “க்ஷண நேர சபலம்… மின்னலின் ஒளி (துருவ நட்சத்திரத்தின் சக்தி) என வித்தாக ஆனது…”
உலகிலே உதித்த உடல் கொண்ட
1.உடல் தொடர்பின் வானியலை வழி வகுத்த மாமகரிஷிகள்
2.மனிதன் பெறுகின்ற பேறு என உண்மைகளை முழுவதும் பெட்டகத்தில் வைத்துப் பூட்டிடவில்லை.
தனித்து இயங்கும் ஆற்றலாக… முகிழ்விக்கும் ஞானம் செயற்கொண்ட வளர்ச்சியின் முதிர்வாக… மெய்ஞான அனுபவங்கள் உலகின் கண் செயல் கொண்ட காலத்தே…
1.உலகோதய வாழ்க்கை நெறி வழி மெய் ஒலி மெய்ஞானம் பிறந்திட…
2.க்ஷண நேர சலனம் அக்கணநேரம் என்பது படி…
3.பலன் உருவாக விளைய மீண்டும் மீண்டும் கூட்டிக் கொண்டிட்ட அனுபவ நிலைக்களன்களே (சான்றோர்) சாட்சி.
காவியமாகப் படைத்து அளித்திட்ட நிலைகள் எதற்கப்பா…?
இன்று சமுதாய சீர்திருத்தம் என்ற நிலையில் மக்கள் நலன் பெற உழைக்கின்றோம் என உரைக்கின்றவர்கள்… வாழ்வின் மாளிகை அமைக்கப் பெறும் அஸ்திவாரத்தைக் கூட அறிந்து கொண்டார்களா…?
வாழ்வின் நலன் காக்கும் ஒழுக்கம்… ஒழுக்கத்தின் வழி நற்பண்புகள்… அப்பண்புகள் நெறி கொண்டு சமைத்த பாசம்… சங்கட நிலை விலக்கி நீதியை நிலைநாட்டும் வீரம்… எதிர் மோதல் குணங்கள் நெருங்கிடாக் கவசம்… என சீரிய சிந்தனையாக தானம்… நெறி முறையை மாற்றிக் கொண்டிடும் செயல்களுக்குத் தக்க ஒறுத்தல் (தண்டனை) என்ற சட்ட நிபுணத்துவங்கள்…! இவை அனைத்தும் உலகிற்கு அன்புடன் அளித்திட்டாலும் “அதில் ஓர் சூட்சமம்” உள்ளது.
1.”ஒளி கொண்டு ஈர்த்தல்” என்றே தன் நிலையின் உயர்வைக் கூட்டிக் கொண்டிட…
2.வெளியிடாத காரியார்த்த உண்மைகளும் உண்டு.
வான்மீகி மாமகரிஷி மனிதன் தெய்வ நிலை பெற்றிடும் வளர்ச்சியின் வழியையே… குணங்கள் நிறங்கள் சூட்சும மணங்கள் என்று மகிழ்ச்சியுடன் அளித்திட்ட உண்மைகளை இனி உரைப்போம்.
அன்றோ காட்டுக்கு அரசன்… இன்றோ இராம ராஜ்ய ஜெப விசால அரசருக்கு அரசன்…! மூடமதி விலகிட “க்ஷண நேர சபலம்… மின்னலின் ஒளி (துருவ நட்சத்திரத்தின் சக்தி) என வித்தாக ஆனது…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சில பேர் என்னிடம் (ஞனகுரு) எதையாவது எதிர்பார்த்து வருவார்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் “என்ன சாமி இவர்…?” என்பார்கள்.
இவர்கள் எண்ணத்தைத் தான் நான் நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால் யாம் சொல்வதை அவர்கள் வழிப்படுத்தி நடப்பதில்லை. அவர்கள் ஆசைக்கு நான் இணங்கி வர வேண்டும். இப்படி வரக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.
1.யாம் சொல்லும் முறைப்படி குருநாதர் காட்டிய நெறிகளை எடுப்பதற்கு இல்லாதபடி
2.தவறின் நிலைகளிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்
சாமியிடம் சென்றேன்… ஏதோ சொன்னார்… பின் நடக்கும் என்றார்…! என்று
1.யாம் சொன்ன முறைப்படி அவர்கள் செய்ய வேண்டியதை விட்டு விட்டு
2.அவர்கள் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இப்படித்தான் இந்தச் சமுதாயம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இங்கே எம்மிடம் வந்து கஷ்டத்தைத் தான் சொல்கிறார்கள். “கஷ்டத்திலிருந்து நான் மீள வேண்டும்…” என்று யாரும் கேட்பதில்லை.
குடும்பத்தில் உள்ள குறைகளையும்… “தொழிலில் கடன் வாங்கியவன் தன்னை ஏமாற்றுகின்றான்…!” என்றும் இதைத் தான் சொல்கிறார்கள்.
1.வாங்கிச் சென்றவர்களுக்கெல்லாம் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் எண்ணம் வர வேண்டும்
2.அதற்கு வேண்டிய வருமானம் அவர்களுக்கு வர வேண்டும் என்று எண்ணும்படி
3.பல முறை சொல்லியிருக்கின்றேன்… அதை யாரும் கேட்பதில்லை.
நீங்கள் சண்டை போட்டாலும் பணம் வரப் போகின்றதா…? இல்லை…! கோர்ட்… கேஸ் என்று அலைந்து… மேற்கொண்டு பணத்தைச் செலவழித்து வேதனையாகி நோயாக ஆனது தான் மிச்சம்.
பாவிகள் இப்படிச் செய்துவிட்டனர்…! அதனால் எனக்கு நோய் வந்து விட்டது… என்று தான் சொல்ல வேண்டி வரும்.
யாம் சொல்லும் முறைப்படி உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றினால் அங்கே நிச்சயம் மாறும்… அமைதி கிடைக்கும்… சாந்தம் கிடைக்கும்.
அவன் உடனடியாகக் காசைக் கொடுக்கவில்லை என்றாலும் கூட நம் எண்ணம் நம் செல்வத்தை வளரச் செய்யும். மன வேதனையாகி நோயாகாமல் தடுத்துக் கொள்ள முடியும். குடும்பத்தையும் சீராகக் காக்க முடியும்.
இப்படி…
1.விஷத்தை ஒதுக்கி விட்டால் அது நம்மை ஒன்றும் செய்யாது
2.ஆனால் நான் நன்றாகத் தானே சமைத்து வைத்தேன்… என் பொருளில் விஷம் விழுந்து விட்டதே…! என்று
3.அத்தனை பொருளையும் வெளியிலே தூக்கி எறிவதா…? என்று விஷம் பட்டதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்…?
4.அந்த விஷம் நம்மைக் கொல்லத்தான் செய்யும்.
ஆக… எல்லோருக்கும் நான் நல்லதைச் செய்தேன். எனக்கு இந்த நிலையைச் செய்கின்றார்களே…! என்ற வேதனை (வேதனை என்பது விஷம்) உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அதைத்தான் செய்யும்
இருபது வருடம் அனுபவத்திலே இதையெல்லாம் தெரிந்து தான் உங்களுக்குச் சொல்கின்றேன். காடு மேடு எல்லாம் அலைந்து… குடும்பத்தில் உள்ள மனைவி பிள்ளைகள் அனைவரையும் விட்டுவிட்டு… குருநாதர் காட்டிய வழியில் உலக உண்மைகளை எல்லாம் தெரிந்த பிற்பாடு தான் இங்கு வந்து இதைச் செயல்படுத்த முடிந்தது.
அது வரையிலும்
1.என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனாதையாக இருந்து
2.செல்வத்தை இழந்து நரக வேதனைப்பட்டுத் தான் வாழ்ந்தார்கள்
ஆனால் இதை எல்லாம் அனுபவபூர்வமாகக் கொடுத்தாலும் குருநாதர் விளக்கத்தையும் கொடுக்கின்றார்.
உன் குடும்பம் நீ இல்லாத போது எத்தனை அவஸ்தைப்பட்டதோ… அதைப் போன்று
1.ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பத்தால் எத்தனையோ தொல்லைகள் ஏற்பட்டு விடுகிறது
2.அதனால் அவர்கள் அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தை (உடலை) அசுத்தப்படுத்துகின்றார்கள்
3.அவர் அறியாமலே அதைப் புண்படுத்துகின்றனர்… அதை நீ அவர்களுக்கு உணர்த்து
4.உயிரான ஈசனை மதிக்கும்படி செய்… அவனால் உருவாக்கப்பட்ட ஆலயத்தை மதிக்கும்படி செய்…
5.உடலைச் சிவமாக மதிக்கச் செய்.
6.அவர்களுக்கு இதை நீ ஓதும் போது… உனக்கு அதிலே அந்தப் பங்கு கிடைக்கும்.
அவர்கள் தன் உடலை மதிக்கவில்லை என்று இருந்தாலும்…
1.மதிக்கக்கூடிய பண்புகள் அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்தால்
2.நீ எண்ணிய உணர்வு (இந்த உயர்ந்த எண்ணம்) உனக்குள் வளர்கின்றது.
ஒரு தீயவன் என்னைத் தவறாகப் பேசுகின்றான் என்றால் “இப்படிப் பேசுகின்றானே…” என்று மீண்டும் மீண்டும் எண்ணினால் அந்த உணர்வு எனக்குள் வளர்ந்து தீமையாகவே வருகின்றது.
அப்போது அந்த நேரத்தில்
1.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் அவன் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.அவனுடைய வேக உணர்வு… அந்தத் தீமையான உணர்வு நமக்குள் வருவதில்லை.
இப்படி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று மனதில் நிறுத்தி… பிறரின் உணர்வை நமக்குள் வளர்க்காதபடி… அந்த உயர்ந்த சக்தியை நாம் வளர்க்கப் பழகுதல் வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வளர்த்துக் கொண்டால் – “ரிமோட் (REMOTE)”
2.தீமை என்ற உணர்வுகள் உங்கள் அருகில் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறைப்படுத்தி கம்ப்யூட்டர் என்ற் சாதனத்தை வைத்து எத்தனையோ வேலைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.
ஒரு இடத்தில் பிழையாகி விட்டால் உடனே அந்தக் கம்ப்யூட்டர் அதைத் திருத்தி எத்தனையோ நிலைகளை மாற்றிச் சீர்படுத்துகின்றது.
அது போன்று தான்… நம் உயிர் எலக்ட்ரிக்காக இருக்கிறது… சுவாசிக்கும் உணர்வுகளை எலெக்ட்ரானிக்காக… (அழுத்தம்) உணர்ச்சிகளால் இயக்குகிறது.
1.நாம் சுவாசிக்கும் போது மாறுபட்ட உணர்வுகள் வந்தால்…
2.அது நம் அழுத்தங்களை மாற்றினால்… அது தவறு என்று தெரிந்தால்…
3.அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் நாங்கள் பெற வேண்டும் என்ற “இந்த அழுத்தத்தைக் கொடுத்து”
5.முதலில் நுகர்ந்த மாறுபட்ட உணர்வின் அழுத்தங்களை மாற்றிக் கொண்டு
6.இனி நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்து வலுவாக்கி…
6.இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்.
நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்… கண்ணின் கரு விழியால் பதிவாக்கிய நிலைகள் கொண்டு… உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து,,, நல்லதாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
உங்களை நீங்கள் நம்புங்கள்…!
1.நல்ல நேரத்தை உருவாக்குவது உங்கள் கையிலே தான் இருக்கின்றது
2.துருவ நட்சத்திரத்தின் அழுத்தத்தைக் கொண்டு எதையுமே நல்லதாக்கும் ஒரு பழக்கம் நமக்கு வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நான் சம்பாதிக்கின்றேன்… நீயும் சம்பாதிக்கின்றாயா…? என்று ஆசைப்பட்டாலும் இனி உலகப் போர் நடந்தால் அணு குண்டு யுத்தம் தான் நடக்கும்.
1.எந்த நிமிடம் அணுகுண்டோ மற்ற நிலைகளோ எங்கே… எப்படி விழுகப் போகிறது…! என்று சொல்ல முடியாது
2.அடுத்தவன் நம் மேல் போடப் போகின்றான்… நாம் அவன் மீது போடப் போகின்றோம்…
3.இது தான் நடக்கப் போகிறது…!
அந்த நிலை ஆவதற்கு முன் இந்த உடலை விட்டுச் செல்லும் முன் “நாம் எதைச் சேமிக்க வேண்டும்…?” என்பதைத்தான் இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.
துருவ நட்சத்திரம் வேகா நிலை பெற்றது. நம் உயிரும் எந்த நெருப்பிலும் வேகுவது இல்லை.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்த்துக் கொண்டு வந்தோம் என்றால் உயிரைப் போன்று வேகா நிலை பெற்றுத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
என் சொத்து உன் சொத்து…! என் காசு உன் காசு…! கௌரவம்…! அனைத்தும் போய்விடும். காரணம் உலக யுத்தம் மிக அருகில் இருக்கின்றது;. ஆரம்பித்தால்…
1.ஒரு பத்து நிமிடம் அல்லது குறைந்தது ஒரு பதினைந்து நாட்களுக்குள் உலகம் முழுவதற்குமே விஷத்தன்மை பரவப் போகின்றது.
2.நாம் என்ன செய்யப் போகின்றோம்…?
உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் மீண்டும் அடுத்த உடலுக்குள் சென்று விடக்கூடாது இன்னொரு பிறவிக்கு வந்து விடக்கூடாது
ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் சாதாரணமாக யார் உடலை விட்டுப் பிரிந்தாலும் நஞ்சின் தன்மையைத் தான் அடைகின்றார்கள்.
ஆக… இந்தக் காற்று மண்டலமே நஞ்சின் தன்மையாக இருந்தாலும் அதை நீக்கக்கூடிய சக்தியை நாம் இப்போதே சேர்த்துக் கொண்டு வரவேண்டும்.
எது எப்படி இருந்தாலும்
1.உயிர் உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் நாம் செல்ல வேண்டும்.
2.தோக்கி உள்ள விஷங்களை அங்கே கரைத்துப் பழகுதல் வேண்டும்
அதற்குத் தான் இப்பொழுது பயிற்சியாக உங்களுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.
எத்தனை பேர் இதை நீங்கள் எடுக்கிறீர்கள்…! என்று தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1.எந்தச் சாமியும்… எந்தச் சாமியாரும்… “உங்களை யாரும் காக்கப் போவதில்லை…”
2.உங்கள் உயிர் தான் உங்களைக் காக்க முடியும்.
உயிரின் துணை கொண்டு எந்த உயர்ந்த சக்தியை நீங்கள் எடுக்கின்றீர்களோ… அந்த உணர்வை வைத்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடவும்… இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதற்கும்… இந்த ஒன்றைத் தவிர வேறு வழி இல்லை.
ஏற்கனவே பல முறை உங்களுக்கு இதை எல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டே தான் வருகின்றோம். இனி எந்த நேரம்… எது நடக்கும்…? என்று சொல்ல முடியாது அந்த அளவுக்குத் தான் இந்த உலகம் இருக்கின்றது. ஆகவே
1.நம் குருநாதர் காட்டிய வழியில் தியானத்தைக் கூட்டுங்கள்
2.ஆத்ம சுத்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் செய்து கொண்டே வாருங்கள்
3.மன அமைதியைக் கொண்டு வாருங்கள்
4.எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டமடையாதபடி மன உறுதி கொண்டு அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றது…!
இதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் என்றால் தியானத்தைச் சரியான முறையில் கடைப்பிடித்து துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்த்துப் பழகுங்கள்.
இதைச் செய்தால் தான் தப்ப முடியும்.


துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் போது உணர்வுகள் ஒளியாகிறது… ஆனால் உடல் நலியத் தான் செய்யும்
மனிதனான பின் ஆரம்ப நிலைகள் எப்படி உயிரணு நுகர்ந்து… நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல்களை மாற்றுகின்றதோ இதைப் போல நாமும்
1.இந்த உடலில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் சக்தியை துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்தோம் என்றால்
2.உடலில் அதிகமாகச் சேர்த்தோம் என்றால் இரத்தங்களில் கலந்து கலந்து
3.நம் உடலில் அடுத்த உடல் பெறும் உணர்வுகளோ அல்லது நாம் நுகர்ந்த உணர்வால் வந்த நோய்களையோ அது வராதபடி தடுக்கலாம்.
அப்படி நோய்கள் வந்தாலும்
1.இந்த உணர்வுகள் ஆனபின் புது விதமான அதற்கு எதிர் நிலையாக ஆகும்பொழுது இதுவும் நோய்தான்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பெறும் பொழுது அதற்கு எதிர் நிலையாகின்றது.
3.இந்த உணர்வுகளைக் கவரப்படும் பொழுது இந்த உடலும் நலியத்தான் செய்யும்.
ஒரு விஷம் கொண்ட உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது அந்த உடலும் நலியத்தான் செய்யும். ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலந்து அந்த அணுக்கள் பெறத் தொடங்கினால்
1.அதையே ஏங்கி துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து நுகர்ந்து
2.உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மை வருகின்றது.
இந்த உடலிலேயே துருவ தியானமும் மற்ற தியானங்களும் நாம் எடுத்து அந்த உணர்வினை வலுப்பெறச் செய்து கொண்டால்… எப்படிப் பட்டுப் பூச்சி தன் உணர்வின் வளர்ச்சியில் இறக்கைகள் முளைத்து வெளிவந்த பின் மற்ற செடியின் உணர்வை எடுத்துக் கொண்ட பின் வண்டாக எப்படி உருமாறுகின்றதோ… இதைப் போல நாம் அந்த அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையை மனிதன் இயற்கையின் உணர்வின் தன்மை மாற்றி ஒளி நிலை அடையலாம்.
அப்படி வளர்ச்சி அடைந்த… நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் இந்த உணர்வுகளைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து வருகின்றது. பூமி துருவத்தின் வழி அதைக் கவர்ந்து பூமிக்குள் கொண்டு வருகிறது.
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்த்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்ற உணர்வை…
2.இப்போது சொல்லும் பொழுது செவி வழி கேட்கப்படும் பொழுது எண்ணங்கள் கண் வழி கவர்ந்து மூக்கு வழி நுகர்ந்து
3.உயிரிலே பட்டு இந்த உணர்வுகளை உடலில் உள்ள இரத்தநாளங்களில் கலக்கச் செய்கின்றது.
அவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உங்கள் இரத்த நாளங்களில் பெருகப் பெருக பெருக அதன் உணர்வை உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.
ஏற்கனவே பலவிதமான உணர்வுகளை எடுத்து உடலை மகிழச் செய்திருக்கலாம். அல்லது வேதனையின் உணர்வு நோயாகவும் உருவாகி இருக்கலாம்.
1.வேதனை உணர்வுகளை எடுத்தாலும் நோயாக மாற்றுகின்றது
2.அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுக்கப்படும் பொழுது
3.விஷத்தின் தன்மை குறையும் பொழுது விஷமற்ற உணர்வின் அணுக்கள் மாறுகின்றது.
4.இருப்பினும் இதைப் போன்று இந்த உடலில் இருந்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகச் சென்றது துருவ நட்சத்திரம்.
5.இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு நமக்குள் அருள் ஒளியை உருவாக்க முடியும்.
நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பேரருள் பேரொளியாக மாற்றி “இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை…” என்ற நிலையை நாம் அடைதல் வேண்டும்.

தேகம் கொண்ட பின் ஆனந்த இலயம் கெட்டது… தன்னை உணர்ந்தபோது பேரானந்த இலயம் ஆட்கொண்டது
வரலாற்றின் தொடர்பு தொடர்ந்து வந்தாலும் அதனுள் காட்டப்படும் சூட்சுமப் பொருட்கள்… “காரண காரிய விளக்கங்கள்” அதனின் ஆய்வில் சிந்தனை செயல் கொண்டிடல் வேண்டும்.
ஏனென்றால் “அனைத்துமே” பால்வெளி எனும் ஆகாய சம்பந்தம் கொண்டது…!
ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் தொடர்பில்
1.பூமியின் ஈர்ப்புப் பிடிப்புக்குள் அகப்பட்டுவிடும் ஜீவன்
2.தேகம் கொண்ட செயலாக ஆனந்த இலயத்தை மாயை மறைக்கின்றது.
வித்து வித்துக்களாக விளைந்திடும் நிலையில்
1.அவ்வானந்த இலயத்தை நாட்டம் கொண்டிடும் மனது
2.”ஆகாய சம்பந்தம்” கொள்கின்றது.
வித்துக்கள் பூமியில் ஊன்றப் பெற்று முளைத்து தழைத்து… பின் கிளைத்து உயர்ந்தோங்கல் எனும் மரமாக வளர்ந்துற்றாலும்… ஊன்றப்பட்ட அதே வித்தே கனிகளாகத் தோன்றி வித்துக்கள் அதன் அடக்கம் கொண்டு தோன்றிட்டாலும்… “மரத்தின் கனியில் உண்டாக்கிய வித்துக்கள் ஆகாய சம்பந்தம் கொண்டது…”
அந்த வித்துக்கள் மரத்துடன் ஒன்றிக் கனிந்து முதிர்ந்த நிலை பெற்றவுடன் அந்த மரத்திலிருந்து வேறுபட்டு பூமிக்கு வருகின்றது. காரணம் மரத்தின் தொடர்புடன் ஆகாய சம்பந்தம் கொண்டது.
அந்த மரமானது புவி ஈர்ப்பின் சக்திக்குள் அடக்கம் பெற்றிட்டதால்… கிளைதனில் விளைந்த “ஆகாய சம்பந்த வித்து…” ஈர்ப்பின் செயலில் வித்தாக வருகின்றது.
1.சரீரம் பெற்ற மனிதன் இதே சூட்சுமத் தத்துவங்களில் தான் பிறப்பின் நிலை கொள்கின்றான்
2.தேகம் கொண்ட பின்… ஆனந்த இலயம் கெட்டது
3.தன்னை உணர்ந்த பொழுது… அப்பேரானந்த இலயம் ஆட்கொண்டது.
வளர்ச்சி கொண்டிட்ட செயல் அனைத்தும் ஜீவனின் வளர்ப்பு தான்.
1.ஞானக்கண் விழிப்பால் பிடரிக் கண் தெளிந்த பொழுது
2.கவனம்… மூலாதார அக்கினியில் இலயிக்கின்றது.
இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று.
மூலாதாரத்தின் சிவலிங்க அணுக்கள்… நீர் சக்தி எனும் விந்து ஒளி கொண்டு மேல் எழுகின்ற செயல் “மூலாதாரத்தில் இலயித்த கவனம்” மேல் எழும்புகின்ற ஊர்த்துவ சக்தியின்.. “உந்துகின்ற எண்ணம் அதுவும் கவனம்…”
மூலமும்… ஆண் பெண் குறி ஸ்தானங்கள் கொண்ட இடமும்… மூல ஆதாரம் எனும் இடமாகத் தோன்றிடும்… தோன்றி நிலை கொண்டிடும் ஜோதி சொரூப சக்தி… மேல் எழுந்திட சிரசின் நெற்றிப் பகுதி என உரைத்திடும் சதாசிவ மண்டலம்… அந்த மண்டலத்தின் ஈர்ப்பிற்கே ஊர்த்துவமாகச் செல்கிறது.
1.நாபியில் நிலை பெற்றுப் பின் இதயத்தில் நிலை கொள்கின்றது
2.பின்னும் மேல் எழுந்து கண்டத்தில் கடைவாய்ப் பற்கள் அமைவு கொண்ட இடத்தில் மறைமுகச் சக்தியில் கலந்து “தேஜோமயமாக” விளங்குகின்றது.
3.அச்சக்தியே அறுகோணச் சக்கரத்தில் நடித்திடும் சிவத்துள் விளக்கம் தோன்றிட
4.முதலில் கண்ட சக்தியுள் கலந்து எழும் சக்தியே நாவின் அடிப்பாகத்தில் ஓ…ம் எனும் பிரணவத்துள் கலந்து
5.ஓமின் அந்த ஒலி நாதத்தை மேலெழும் சக்தியாக… நெற்றிப் பொட்டின் அறுகோணத்துள் அமைவுறச் செய்திடல் வேண்டும்.
ஓ…ம் என்னும் ஒலி நாதம் நாவினுள் கிளர்ந்திடும் பொழுது… உதடுகள் அசைவதும் அன்றி பிரிந்திடவோ செயல் கொள்ளல் தகாது.
1.நெற்றிப் பொட்டில் ஆரோகணிக்கும் அச்சிவசக்தி தியானத்தின் வலு வீரியம் பெற்றிடுங்கால்
2.சரீரத்தில் இருக்கும் கோடான கோடி உயிரணுக்கள் உயிராத்ம சக்தியின் வசப்பட்ட எண்ணத்தின் செயலுக்கொப்ப
3.இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் சக்தி எவ்விடத்திலும் சென்று மீண்டிடும் “சூட்சும சித்து” இதனால் அடக்கம்.
தெளிவாக விளங்கிட இதற்கு ஒரு சித்திரம் காட்டிடல் வேண்டும். நிறைகுடம் தளும்பாது.
கடைபிடிக்கப்படும் காரியங்களில்…
1.எண்ணத்தின் சிதறல் ஊசி முனை அளவாக இருந்தாலும்
2.அந்தச் சிறு துவாரம் வழியாக… பெற்றிடும் சக்தியின் உயர்வைக் குறைத்து விடும்.
அதே போல்…
1.சிதறுகின்ற எண்ணங்களின் அந்தச் சிறு வழியை அடைத்து விட்டால் நிறை குடமாக ஆகும்
2.வாழ்வின் எந்த நிலையிலும்… எத்தனை சந்தர்ப்பங்கள் வசமாயினும் நிறை குடம் தளும்பிடாது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
புதிதாக வாங்கும் போது ஓரு பாத்திரம் அழகாக இருக்கின்றது. ஆனால் அதிலே அழுக்குகள் படிந்து விட்டால் இருண்டு விடுகின்றது. அப்போது அந்தப் பாத்திரத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும்…? நன்றாக இருக்காது.
பாத்திரத்தில் அழுக்குப் படும்போது அவ்வப்பொழுது அதைத் துடைத்துக் கொண்டு அல்லது தூய்மைப்படுத்திக் கொண்டு வந்தால் அது “பளிச்…” என்று இருக்கும்.
ஆனால்
1.அழுக்குகள் ஏறிய பின் தேய்த்துப் பார்த்தால் போகாது… களிம்பு ஏறி இருக்கும்
2.அதிகமான களிம்பு ஏறிவிட்டால் சொர சொரப்பு அதிகமாகிவிடும்
3.மீண்டும் அதைச் சுரண்டி அல்லது சாணை பிடித்துத் தான் சரி செய்ய முடியும்.
இது போன்றுதான் இயற்கையின் நிலைகளில் நாம் சுவாசிக்கும் உணர்வுகளில் நம்மை அறியாது ஆன்மாவில் அழுக்குகள் சேர்கிறது. அதைத் தூய்மைப்படுத்தாது விட்டுவிட்டால் பாத்திரத்தில் களிம்பு ஏறியது போல் தீயவினைகளாக உடலில் சேர்ந்து அதனால் பல பல தொல்லைகள் வந்து சேர்கிறது.
ஆகவே ஆன்மாவை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியானத்திலும் சரி… மற்ற கூட்டுத் தியானத்திலும் சரி… உயர்ந்த சக்தியை எடுத்துப் பழகிக் கொண்டவர்கள் நீங்கள் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தை மறவாது பயன்படுத்துங்கள்.
தீமைகளைச் சந்திக்கும் போதெல்லாம் அல்லது நுகரும் பொழுதெல்லாம்… அல்லது எதிர்பாராது தீமைகள் வந்து மோதும் போதெல்லாம்… அதை மாற்றிக் கொண்டே வாருங்கள்.
1.எத்தனையோ வகைகளில் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று யாம் (ஞானகுரு) அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டேயிருக்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருந்து கொண்டிருக்கின்றோம்.
3.அந்தச் சக்தி உங்களுக்குள் வந்து கொண்டு இருக்கின்றது… வலுவும் கூடுகிறது.
4.நினைத்தவர்களுக்குத் தான்…!
நினைக்காதவர்களுக்கு இல்லை… காரணம் உணவை எடுத்துச் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் தானே உள்ளே போகும்.
எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! வீட்டிலே டிவி.யில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த ஸ்டேஷனில் இருந்து ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் காற்றிலிருந்து அதை இழுத்து நாம் பார்க்கவும் கேட்கவும் முடியும்.
ஆனால் நீங்கள் உங்கள் எண்ணத்திற்குள் எத்தனை ஸ்டேஷனை வைத்திருக்கிறீர்கள்…?
சண்டை போட்டவன் ஏமாற்றியவன் கேலி செய்தவன் திட்டியவன் கொலை செய்ய வந்தவன் என்று இப்படி எல்லா ஸ்டேஷனும் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.
இப்படிப்பட்ட பதிவுகளை வைத்திருக்கும் போது என்ன செய்கிறது…?
சிரமமான நேரத்தில் அவர்களை எண்ணும் பொழுது அந்த ஸ்டேஷனுக்குள் இணைந்த பின் அடுத்து நமக்குள் நல்ல சிந்தனைகள் வருவதில்லை.
1.என்னை இப்படி ஏமாற்றினார்களே… அவர்களை என்ன செய்யலாம்…?
2.என்னை இப்படித் திட்டினார்களே… அவர்களைச் சும்மா விடுவதா… இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று
3.இத்தகைய உணர்வு தான் மனதில் ஓடிக்கொண்டிருக்குமே (டி.வி.யில் படம் ஓடுவது போல்) தவிர நல்ல உணர்வுகள் வருவதில்லை.
அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாம் செயல்படுத்த வேண்டியது எது…?
ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.வரக்கூடிய தீமைகளை மறக்க இதை நாம் எடுத்தால் அதனுடைய வலு குறைகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது
3.ஆகவே இந்த ஸ்டேஷனைத் தான் நாம் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் நண்பரைச் சந்திக்கின்றோம்… பார்த்தால் சோர்வாகத் தெரிகின்றது ஏன் இப்படி இருக்கின்றாய்…? என்று கேட்கின்றோம்.
ஆமாங்க… என் பையன் ஏதேதோ செய்து விட்டான்…! கடன் கொடுத்தது பணம் திரும்ப வரவில்லை… குடும்பத்தில் ஒரே ரகளையாக இருக்கின்றது… என்ன செய்வது என்று தெரியவில்லை…! என்று சொல்கின்றார்கள்.
நம் நண்பர்களிடம் நல்லதைத்தான் விசாரிக்க விரும்புகின்றோம் ஆனால் அவர்கள் படும் கஷ்டத்தை எல்லாம் சொல்கின்றார்கள்.
அப்படிச் சொல்லும் பொழுது “இதையெல்லாம் என்னிடம் சொல்லக் கூடாது.. போங்கள்…!” என்று சொல்ல முடியுமா…?
அப்படி அவர்கள் சொன்னாலும் நாம் அந்த இடத்தில் விழித்திருக்க வேண்டும். அவர் அவருடைய கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாலும்…
1.அவருடைய கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்
2.அவர் தொழில் சீராக வேண்டும்
3.அவர் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த ராகத்தை
4.இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் “அவர் நலம் பெற வேண்டும்… நலம் பெற வேண்டும்…” என்று இதைச் சொல்லிக் கொண்டிருந்தால்
1.அவருடைய கஷ்டம் நமக்குள் புகாது அதை இழுக்காது
2.வெளியில் தான் தேங்கி நிற்கும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும். எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர வேண்டும். எலும்புக்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் இதைச் செலுத்தி வலுவாக்க வேண்டும்.
“ஒரு நிமிடத்திற்குள்” இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த நண்பரிடம் மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள் உங்களுக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும்… உங்கள் தொழில்கள் சீராகும்… “கஷ்டம் என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்…!” என்று சொல்லிப் பாருங்கள்.
அவர் படும் கஷ்டங்கள் உங்களுக்குள் விளையாது. இப்படி நமது சகஜ வாழ்க்கையில் பிற தீமைகள் வந்தால் விழித்திருக்க வேண்டும்.
ரோட்டில் செல்கின்றோம். சந்தர்ப்பம் ஒரு விபத்தைக் காண நேர்கின்றது உற்றுப் பார்த்த பின் நமக்குள் அது வந்து விடுகின்றது… ரெக்கார்ட் ஆகிவிடுகிறது.
இப்படிப் பதிவான அனைத்துமே நாம் எப்பொழுது சோர்வடைகின்றோமோ அப்பொழுது நினைவுக்கு வரும். அந்த மாதிரி நேரங்களிலும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரை எண்ணி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
ஊனை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே இணைத்துப் பழகுதல் வேண்டும்.
1.நாம் கண்ணிலே பார்த்தது இங்கே தான் ரெக்கார்ட் ஆகும்
2.விலா எலும்புகளில் தான் அதிகமாகப் பதிவாகும்…
3.காரணம் அங்கு அதிகமான மேக்னெட் (காந்த சக்தி) இருக்கின்றது.. அங்கே இழுத்து வைத்துக் கொள்ளும் ரெக்கார்ட் ஆகும்
4.பதிவானதன் துணை கொண்டு காற்றிலிருந்து இழுத்துத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்ளும்
5.ஆன்மாவில் எது வலுவாக இருக்கின்றதோ… அது உயிரிலே மோதும்
6.அதனுடைய வேலையைச் செய்யும்… “உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற விடாது…”
தியானத்தில் நீங்கள் இருக்கும் போது இது எல்லாமே தெரியும். எத்தனையோ நினைவுகள் உணர்வுகள் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.
என்னால் ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.
அந்த ஆன்மாவில் வலுவாக இருப்பது முன்னாடி வந்தபின் தியானம் எடுப்பதை மறந்து விட்டு அதற்குள் சென்று விடுவார்கள். பின் “இப்படி வருகிறதே…” என்று எண்ணும் பொழுது
1.அதைக் காட்டிலும் வலுவானது வந்தால் அது இயக்கும்
2.அதற்கடுத்து மனதிலே சோர்வு வந்துவிடும்… நல்ல சக்திகளைப் பெற முடியாது.
இதைச் சீர்படுத்த வேண்டும் என்றால் அவ்வப்பொழுது வரக்கூடிய தீமைகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஆன்மாவைச் சுத்தம் செய்து கொண்டே வர வேண்டும்.
சிறிது நாட்கள் இதைச் செய்து நீங்கள் அனுபவத்திற்கு வந்தால் பின் தன்னிச்சையாகச் (AUTOMATIC) செயல்படுத்த முடியும்… மன நிம்மதி கிடைக்கும்.
கலக்கமான நேரத்தில் யாம் சொன்ன ஆத்ம சுத்தியைச் செய்தால் நல்ல சிந்தனைகள் வரும்
1.அந்த நேரத்திற்கு வேண்டியது – என்ன செய்ய வேண்டும் என்ற உபாயங்களும் வரும்
2.அந்த வழியும் தெரியும்… உள் உணர்வை ஊட்டும்.
ஆனால் இருள் என்ற உணர்வுகள் வரப்படும் போது அதை அப்படியே விட்டு விட்டால் அந்த உள் உணர்வைக் கூட நாம் அறிய முடியாதபடி தடைப்படுத்திவிடும்.
அதற்குத்தான் அந்தந்த சந்தர்ப்பங்களில் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுவதற்கு இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).


“தென்னாட்டில் தோன்றிய ஞானிகளின் உணர்வுகளை” நாம் உலகம் முழுவதற்கும் கொண்டு சென்று பரப்ப வேண்டும்
ஒரு சமயம் குருநாதர் எம்மை ஒரு மலை மீது போகச் சொன்னார்.
1.அது அகஸ்தியன் அன்று இருந்த இடம்… அவன் நீர் சக்தியைத் தனக்குள் பெற்றவன்.
2.அவன் பாதம் பட்ட இடங்களில் எல்லாம் மேகங்களைக் குவிக்கின்றது உச்சியிலே தண்ணீர் உருவாகின்றது.
ஆனால் மலைக்குக் கீழே தண்ணீர் இல்லை. மேலே உருவாகின்றது… அங்கே தண்ணீர் உருவாகி ஒரு பக்கம் போகிறது. ஆனால் அடிவாரத்தில் தண்ணீர் இல்லை.
அதே சமயத்தில் ஒரு இடத்திலே குருநாதர் என்னை உட்காரும்படி சொல்கின்றார். அந்த இடத்தில் அமர்ந்து சங்கடமாக வெறுப்பாகப் பேசச் சொல்கிறார்.
அவன் இப்படிச் செய்கின்றான் இவன் மோசம் செய்கின்றான் இவன் இப்படித் தவறு செய்கின்றான் நீ தீமையான நிலைகளை நினைத்துச் சொல்லிக் கொண்டிரு…! என்று சொன்னார்.
சொல்ல ஆரம்பித்ததும் அந்த இடத்திலே மேகங்கள் குவிவது அப்படியே விலகிச் செல்கின்றது… அங்கிருக்கும் ஈரப்பசையே காணாமல் போய் விடுகிறது.
1.மனிதனுடைய உணர்வுகளால் மேகக் கூட்டங்கள் எப்படி விலகுகிறது…? மேகத்தை எவ்வாறு கலைக்கின்றது…?
2.மனிதரின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.
காடு மேடு எல்லாம் அலைந்து திரிந்து உண்மைகளை அறிந்துணர்ந்து அதை நீங்களும் அறிய வேண்டும் என்று சொல்கின்றோம். காரணம் விஞ்ஞான உலகம் கடும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
கூடுமான வரையிலும்
1.நீங்கள் வாழும் ஒவ்வொரு ஊரிலும் அந்த அருள் உணர்வுகள் படர வேண்டும்
2.மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்.
3.நீங்கள் எடுத்துக்காட்டாக வளர வேண்டும்.
அத்தகைய உணர்வுகள் விளைந்து ஒவ்வொருவருமே அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்ப நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
உங்கள் உடலும் நன்றாக இருக்கும்… குடும்பமும் நன்றாக இருக்கும்… தொழிலும் நன்றாக இருக்கும்.
1.நாம் வாழும் தெரு ஊர் நாடு எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
2.தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும்
3.தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய சக்தியாக
4.உயர்ந்த பண்புகளுடன் வளர வேண்டும் என்று நாம் கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால் அதற்காக வேண்டித் தென் இந்தியா வட இந்தியா மற்ற நாடு என்று பிரித்து விடக்கூடாது. நம் நாட்டு மக்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று படிப்படியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.
உலகத்தையே காக்க முடியும். தமிழ்நாடு தான் உலகைக் காக்கப் போகின்றது.
1.இங்கே தருமத்திற்கும் நியாயத்திற்கும் செயல்பட்ட பூமி இது… அதர்ம வழிகளில் அதிகமாக இங்கே செயல்படவில்லை.
2.அதர்ம வழிகள் அதிகமாக இல்லாததால் கூடுமானவரை இங்கே மற்றவரைப் பாதுகாக்க கூடிய நிலைகள் வளர்கின்றது.
ஒருவர் திட்டினாலும் கூட இரக்கம் ஈகை என்ற பண்புகள் இங்கே அதிகமாக உண்டு. மற்ற இடங்களில் இரக்கம் என்ற நிலை இல்லை.
ஆகவே…
1.தென்னாட்டில் தோன்றிய ஞானிகளின் உணர்வுகளை
2.நாம் உலகம் முழுவதற்கும் கொண்டு சென்று பரப்ப வேண்டும்.
3.நம் உடலிலே முதலிலே பெருக்கினால் தான் நம்முடைய உணர்வுகள் இங்கே பரவும்.
நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலைகளை நாம் செயல்படுத்த வேண்டும். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
கஷ்டம் என்பதைத் தூக்கி எறிந்து விட்டு அருள் ஒளி எனக்குள் படர வேண்டும் ஊர் நன்றாக இருக்க வேண்டும் வீடு நன்றாக இருக்க வேண்டும் என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்தால் “அருள் உணர்வுகளை நல்ல முறையில் பெருக்க முடியும்…”
1.இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்… இந்த வழியை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்
2.ஒவ்வொருவரும் உண்மையின் உணர்வுகளை உணர்ந்து அந்த அருள் ஞானத்தைப் பெருக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

“ஓம்காரத்தின்” சூட்சம இரகசியம்
1.”சூட்சும இரகசியங்கள்” செயல்படுகின்ற காரியத்தன்மைகள் அகம் புறம் இரு நிலைகளிலும்
2.நாவின் சூட்சமம்… ஒலி நாத செயலாகச் சிரசின் உச்சியில் நடிக்கின்ற (இயக்கம்) சிவ நடனம் காட்டுவதன் மறைபொருள் என்ன…?
அஷ்டமம் என்பது எட்டாம் இடத்தின் நிலை. எட்டு என்பதே பூரண சந்திரனைக் குறிக்கும். சந்திரன் வியாபகமாக “நீல வண்ண ஒளித்தன்மை நிலைபெற்றிடும் வாழ்வு…”
இதையே இன்றைய காலகட்டத்தில் ஜோதிட விற்பனர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அஷ்டமத்தில் சனி என்றும்… செவ்வாய் என்றும்… சித்தன் காட்டிய பேருண்மைகளை வேறு பொருள் காட்டிவிட்டனரப்பா.
“சரீரத்தின் ஆதிக்க நிலை” – சூரிய சக்தியின் ஒளி பெறும் சந்திரன்… தன் சுயப்பிரகாச நிலையை அதனுள் உள்ளிட்டு (தனக்குள் எடுத்து) வெளிப்படுத்துதல் போல்… அனிமாது (அஷ்டமாசித்து) சித்துக்கள் கொண்டு உயர் நிலை வளர்ச்சி பெறுதல் என்பதில் கடைப்பிடிக்க வேண்டிய காரிய நிகழ்வுகளும் உண்டு.
அறிந்து தெளிந்திட… சிந்தனையை அதன் ஓட்டத்தைச் செலுத்திடத் தான் வேண்டும். பிரம்மத்தின் நின்று சித்து கிளைத்த விந்தையாம் “விந்தை அடக்கு…” என்பார் வேதாள மகரிஷி.
ஓர் கனியினைச் சுவைக்கின்றோம். சுவைத்து அந்தக் கனியின் சுவையின் பொருள் அறிகின்றோம். அந்தக் கனியின் சுவை உண்டான முறையை உணர்தல் என்பதே சூட்சுமம்.
கனிவு என்பது நாம் உரையாடும் வார்த்தைகளினால் வெளிப்போந்து வந்து… உள்ளத்தின் தன்மைகளை உணர்த்துகின்றோம்.
1.இந்நிலை உருவாகின்றதே… உள்ளத்தில் அங்கு இருக்கின்றது சூட்சமம்.
2.உயர் ஞான சக்தியை உணர்ந்து கொண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பக்குவங்கள் அதனில் அடங்கும்.
“விந்தையாம் விந்தை அடக்கு” என உரைத்ததில் பொருள் உண்டு. சித்துக்களின் செயல்பாடு ஒவ்வொரு நிலையைக் காட்டும்.
ஓசை என ஓர் கலை உண்டு.
1.ஓங்காரப் பொருள் காட்டும் அதன் தத்துவம் “நாவின் அடி சூட்சுமம்…” இந்நிலை பிரம்மம் என உரைப்பர்.
2.அதனைச் செயல்படுத்துகின்ற சக்தியானது கண்டத்தின் சூட்சுமத்தில் உள்ளது.
3.நாபிக் கமலத்திலிருந்து மேல் எழுகின்ற பிரம்ம இலய நாதம்
4.கண்டத்தின் சக்தியைத் தூண்டி நாவின் பிரம்ம நிலையில் வியாபித்து
5.ஆக்ஞா சக்கரம் என்ற அறுகோணக் கருவறை நெற்றியினுள் எண்ண சிவம் நடிக்கும் (இயக்கும்).
(6. ஓ…ம்.. என்று நாதத்தை நாம் எழுப்பினால் இதனை (Sl.No.1-5) முழுமையாக உணரலாம்)
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
செல்ஃபோன் எல்லோருமே வைத்திருக்கின்றோம். காந்தப் புலனால் இயக்கும் செல்ஃபோன்… அதற்குள் தொடர்பு என்ன இருக்கின்றது…?
வயர் (WIRE CONNECTION) இல்லை…
1.ஆனால் காந்தப் புலனால் கவரப்பட்ட உணர்வுகள் அது ஈர்க்கும் சக்தி… விஞ்ஞான அறிவால் வைத்த நிலைகள்
2.அதனுடன் தொடர்பு கொண்டு எங்கிருந்தாலும் நாம் இயக்க முடிகின்றது.
3.குறித்த எல்லைகள் வரையும் கொண்டு செல்ல முடிகின்றது.
வெகு தொலைவில் இருந்தால் சேட்டிலைட் மூலமாக அமெரிக்கா மற்ற ஏனைய நாடுகளுக்கும் தொடர்பு கொள்ள முடிகின்றது… பேசவும் முடிகின்றது… பார்க்கவும் முடிகின்றது.
இப்படி எப்போது வேண்டும் என்றாலும்… எங்கே வேண்டுமானாலும் நம்பரைத் தெரிந்து அழுத்தினால் உடனடியாக மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள முடிகின்றது. அவர்களுக்கும் :இன்னார் தான் பேசுகிறார்…” என்று அந்த நம்பரை வைத்து அறிய முடிகிறது.
1.அடுத்து அவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றால் அதை அணைத்துக் கொள்ளவும் (SWITCH OFF)
2.தொடர்பே வேண்டாம் (BLOCK) என்று நிறுத்திக் கொள்ளவும் முடிகின்றது.
இதைப் போன்று தான் சிலருடைய உணர்வுகளை உங்களுக்குள் அது இயக்காமல் தடைப்படுத்த… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.
இது எல்லாம் உணர்வின் இயக்கங்கள் தான்…!
உங்களுக்குள் பதிவான தீமையான உணர்வுகளைத் தடைப்படுத்த “மிக மிகச் சக்தி வாய்ந்த நிலையைத் தான்…” இந்தத் தியானத்தின் மூலம் கொடுப்பது. ஆகவே இதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
துப்பாக்கியைக் கையிலே கொடுத்துப் “புலி வருகிறது… சுட்டு விடுங்கள்…!” என்று சொன்னால்
1.புலி வருகிறது… புலி வருகிறது… என்று சொல்லிக் கொண்டு
2.நீங்கள் சுடாமல் இருந்தால் என்ன ஆகும்…? புலி தாக்கத்தான் செய்யும்…!
அது உங்களைத் தாக்காது பாதுகாப்பதற்குத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம் “அதை நீங்கள் பயன்படுத்தும் முறைகளில் தான் இருக்கின்றது…” (ஞானகுரு)
இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஆசையின் உணர்வுகள் எங்கே அழைத்துச் செல்கின்றது…?
1.நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் உடனே வேதனை வருகின்றது.
2.அந்த வேதனை வந்த பின் சிந்தனை தவறினால் உடனே கோபம் வருகிறது.
3.கோபம் வந்தபின் அதைக் காட்டிலும் வெறுப்பான செயல்களைச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.
இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக்கூடிய செயல்கள்… நாம் செயல்படுத்தவில்லை. நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டுத் தான் அவ்வாறெல்லாம் இயக்குகின்றது.
ஆனால் அதை எல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது. அதை நாம் பயன்படுத்த வேண்டுமா இல்லையா…!
கருணைக்கிழங்கில் இருக்கக்கூடிய விஷத்தை வேக வைத்துப் புளியைக் கரைத்துவிட்டு… காரம் உப்பு என்று பல சுவையான சரக்குகளைப் போட்டு ருசியாக மாற்றுகின்றோம்.
இதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்
2.இல்லையென்றால் மனிதனாகப் பிறந்தும் பயன் இல்லாது தேய்பிறையாகப் போய்
3.இன்று மனிதன்… நாளைக்கு மனிதன் அல்லாத மற்ற உயிரினங்களாக உயிர் உருவாக்கிவிடும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் தப்புவதற்குத் தான் மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகள் கிடைக்க வேண்டும் என்று பதிவு செய்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
யாம் சொன்னதைப் பயன்படுத்தும் போது “தக்க சமயத்தில்” உங்களுக்கு அந்தத் தீமையை நீக்கக்கூடிய உபாயங்களும் உயர்ந்த ஞானங்களும் உதயமாகும். அந்த ஞானத்தை வளர்த்தால் தீமை புகாது தடுக்கும் அந்தச் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.
சாமி தீர்ப்பார் சாமியார் தீர்ப்பார் என்ற எண்ணத்திற்கு மாறாக “யாம் சொன்ன முறைகளைக் கடைப்பிடித்தாலே…”
1.உங்களுக்குள் இருக்கும் சக்திகளை நீங்கள் பயன்படுத்தித் தீமைகள் புகாது தடுத்து
2.உங்களையும் காத்து உங்கள் குடும்பத்தையும் காத்து அனைவரையும் காக்கும் சக்தியாக
3.பண்பை வளர்த்து அன்பை வளர்த்து மற்றவர்களுக்கும் பண்பினை ஊட்டி
4.நீங்கள் இடும் மூச்சுலைகள் காற்றிலே படர்ந்து தீமைகளை அகற்றும் சக்தியாக வரும்.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உயிரான ஈசனை மதித்து அவனால் அமைக்கப்பட்ட உடலை ஆலயமாக மதித்து நடத்தல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நமது வாழ்க்கையில் நல்லதைத் தான் எண்ணுகின்றோம். அதன் படி நடக்கவில்லை என்றால் ஒவ்வொரு செயல்களிலும் வேதனை கலந்தே வருகின்றது. ஆனாலும்…
1.”வேதனைப்படுகிறோம்… கஷ்டப்படுகிறோம்…” என்ற எண்ணங்கள் இப்படி வரும் பொழுதுதான்
2.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சக்தியும் உண்டு.
இருப்பினும் வேதனை வெறுப்பு சோர்வு என்ற உணர்வு அதிகரித்து விட்டால்… எத்தகைய நல்ல செயல்களாக நாம் செயல்படுத்திக் கொண்டிருந்தாலும் அதைச் செயல்படுத்த முடியாதபடி ஒரு சோர்வு வந்து விடுகிறது.
சோர்வடைய… சோர்வடைய… நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் சோர்வடையத் தொடங்குகிறது. சோர்வால் மீண்டும் வேதனை வருகிறது.
1.இப்படி வேதனைகளை நாம் அடுக்கடுக்காக இந்த உடலிலே
2.இப்போது சேர்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் – எந்த நிலையில் யாராக இருந்தாலும் சரி… அப்படித்தான்.
புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் வேதனையிலிருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான எண்ணத்தில் தான் வளர்ச்சியாக வந்தது.
இப்படி எல்லா வகைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்த நாம்… வீட்டிலே ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். அந்த நேரத்தில் ஒரு கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்து விடுகிறது.
நேற்றுத் தான் வாங்கி வந்தேன்… அதற்குள் இப்படி உடைந்து விட்டதே…! என்று மன திருப்தி இல்லாதபடி வேதனைப்படுகின்றோம். அன்றாட வாழ்க்கையில் இப்படி நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனை அல்லது சோர்வு அல்லது சஞ்சலம் என்ற இந்த உணர்வுகளைத் தான் கவர நேர்கின்றது… அதைத்தான் சுவாசிக்கின்றோம்.
இப்படி நுகர நுகர… நம் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் உருவாகத் தொடங்கி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிந்து நாம் விடுபட வேண்டும்.
1.இருந்தாலும் இது எல்லாமே உடலின் இச்சைகள் கொண்டு வருவது தான்.
2.ஆனாலும் இந்த உடல் வேண்டும்
3.இந்த உடல் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நம்மை அறியாது வரும் தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.
ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.
அதாவது
1.பிற உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அது இயக்காதபடி
2.உடலுக்குள் அது அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.
ஏனென்றால் நாம் மூக்கு வழி நுகர்ந்தது (சுவாசித்தது) உயிரிலே பட்டுத்தான் அந்தந்த அறிவின் இயக்கமாக இருக்கின்றது. ஆகவே புருவ மத்தியில் (உயிரில்) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து இந்த வலுவைக் கூட்டி தீமையான உணர்வுகள் புகாதபடி தடுத்தல் வேண்டும்.
பின் கண்களை மூடி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று “ஒரு நொடிக்குள் கண்ணின் நினைவை உள்ளே செலுத்தி விட வேண்டும்…”
இப்படி ஒரு பழக்கம் வந்து விட்டால் உடலுக்குள் தீமை செய்யும் அணுக்கள் உருவாகாதபடி தடுத்துவிடலாம். இதற்கு முன்னாடி பதிவான உணர்வுகள் விளைந்தது… உடலிலிருந்து மீண்டும் அந்த நினைவுகள் வந்தாலும்… அதையும் மாற்றிக் கொள்ளலாம்.
ஆக… இந்த உடலுக்குப் பின் நாம் கொண்டு செல்வது எது…?
செல்வமோ சொத்தோ எல்லாம் இருந்தாலும் கடைசியில் நோயாகி விட்டால் அதை அனுபவிக்க முடியாத நிலை தான் வருகின்றது. முதலிலே சொன்னபடி வேதனைகள் அதிகரிக்கும் சந்தர்ப்பமாகத் தான் ஆகிவிடுகின்றது.
அதைப் போன்ற நிலையிலிருந்து தப்புவதற்கு ஒவ்வொரு நொடிகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த ஆத்ம சுத்தியைக் கையாளுங்கள்.
1.தீமைகளை நீக்குங்கள்
2.அருளைப் பெருக்குங்கள்
3.இருளை அகற்றலாம்
4.அமைதியான வாழ்க்கை வாழலாம்
5.சிந்தித்துச் செயல்பட முடியும்
6.சிந்தனையுடன் வாழ்க்கை நடத்த முடியும்.
இதை எல்லாம் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).


“உயிரான ஈசனுடன் ஒன்றி” அந்த ஈசனின் உணர்வை நாம் பெருக்குதல் வேண்டும்
உலகெங்கிலும் கடும் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா போன்ற பல நாடுகளில் “சூறாவளிகள்” அதிகமாக உருவாகின்றது. பாதுகாப்பிற்காக லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து… ஊரைக் கடந்தே செல்கிறார்கள். எத்தனையோ நகரங்களில்… மக்கள் வாழும் இடங்களை அழித்து விடுகின்றது.
ஆக சூறாவளி எங்கிருந்து வருகின்றது…?
விஞ்ஞான அறிவால் அணு குண்டுகள் ஹைட்ரஜன் குண்டுகள் செய்யும் போது
1.அதில் கசிவான உணர்வுகளைச் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது
2.சூரியன் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கும் அதனுடைய உணர்வுகளுக்கும் எதிர்மறையாகும் பொழுது சூறாவளி உருவாகின்றது.
3.இந்த வீரியத் தன்மைகள் கட்டிடங்களுக்குள் ஊடுருவுகின்றது.
4.எவ்வளவு பெரிய காங்கிரீட் ஆக இருந்தாலும் சுழற்றி வளைத்து நொறுக்கி விடுகின்றது.
இப்படிப்பட்ட உலக நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
பூமிக்குள் இத்தகைய குழம்புகள் அதிகமாகி எங்கே மொத்தமாகச் சேருகின்றதோ அங்கே திடீரென்று இந்த ஆவிகள் வெளியே கிளம்பி நிலநடுக்கமாகிக் கட்டிடங்களையும் மற்றவைகளையும் நொறுக்குகின்றது.
நாம் வாழும் பகுதிகளில் மிகக் குறைவு தான். வட இந்தியாவில் கூட அதிகமாக உண்டு. காரணம்
1.நம் நாட்டில் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று
2.தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் வாழ்ந்த நாட்டில் கூடுமானவரையில் உயர்ந்த சக்திகள் பரவி உள்ளது.
பாருங்கள்…! தமிழ்நாட்டிலே பொதுவாகச் சேதங்கள் அதிகமாக ஆவதில்லை. அருள் மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே இருப்பதால் ஓரளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றது.
1.மீண்டும் அந்த மகரிஷிகளின் அருள் மணங்களை நாம் வலுவாகப் பெருக்கி
2.தமிழ்நாட்டையும் காத்து உலக நிலையை காப்பதற்காக வேண்டி நாம் தியானிக்க வேண்டும்.
நான் சொல்வது சாதாரணமானதல்ல…!
நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து இங்கே பரப்பினோம் என்றால் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கின்றது.
பூமிக்குள்ளே எந்தெந்த இடங்களில் குழம்புகள் அதிகமாகின்றதோ அந்த இடத்தில் வெடிக்கின்றது. ஒரு செகண்டிலே மேலே இருப்பது கீழேயும் கீழே இருப்பது மேலேயும் மாறி எல்லாமே குலுங்கி விடுகின்றது.
அணு உலைகள் எங்கெங்கெல்லாம் உருவாக்கி வைத்துள்ளார்களோ அங்கெல்லாம் நிலநடுக்கம் அதிகமாக உண்டு. இங்கேயும் அணு உலைகளை வைத்துள்ளார்கள்.
நாம் எல்லாம் சேர்ந்து பிரார்த்தனை செய்து நிலநடுக்கம் இங்கே வராதபடி பாதுகாக்க வேண்டும்.
அணு உலைகளை என்று உருவாக்க முற்பட்டார்களோ சூரியனால் அந்தக் கசிவுகள் கவரப்படுகின்றது. மின்னல்கள் வரும் போது ஊடுருவுகின்றது பூமிக்குள் நடு மையம் புகுந்த பின் எந்த இடத்தில் அதிகமாகின்றதோ குழம்பாக மாறுகின்றது… ஆவிகள் உருவாகி வெளிப்படுகின்றது… வெடிக்கின்றது.
மேலே இருப்பது தாங்காது சிறிது கீழே இறங்கி விடுகின்றது. இந்த மாதிரி நிலைகள் இருப்பதால்0 “இந்த உலகில் நாம் எப்படி வாழ வேண்டும்…?” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உடலுக்குப் பின் என்ன…? பிறவியில்லா நிலை அடைய வேண்டும்…! என்று நாம் தெரிந்து கொண்டோம்.
1.எவ்வளவுதான் இந்த உடலை அழகுபடுத்திப் பாதுகாக்க முற்பட்டாலும் கடைசிலே மண்ணிலே தான் இதை விட்டுச் செல்ல வேண்டி வருகின்றது
2.உயிரான ஈசன் இங்கே இருக்கும் வரை தான் எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்… நன்றாக இருக்கின்றோம்.
3.ஈசன் சென்று விட்டால் சிவம் சவமாகி விடுகின்றது.
உயிரால் தான் உடலாக்குகின்றது சிவம். ஈசன் போய்விட்டால் சவமாகி விடுகிறது. பின் அதற்கு ஏன் நாம் இவ்வளவு பாடுபட வேண்டும்…?
1.உயிரான ஈசனுடன் ஒன்றி அந்த ஈசனின் உணர்வை நாம் பெருக்குதல் வேண்டும்.
2.ஆகவே அந்த அருள் சக்தி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்வோம்… அதை வலுப்படுத்துவோம் பேரருள் பேரொளியாக நாம் மாறுவோம்.

கீழ் நோக்கியது – புவி ஈர்ப்பு நிலை… மேல் நோக்கியது – தெய்வீக நிலை
இயற்கையின் படைப்பில்… ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் உலகோதய நடைமுறை நிகழ்த்த பெரும் காரியங்கள் வினைக்கீடாய் (புவி ஈர்ப்பில் சுழலும் நிலை) வினைக்கு ஈடான செயல் கொள்கின்றான்.
புவி ஈர்ப்பு நிலை
1.சரீரமும்…
2.மூச்சு – ஈர்த்திடும் தன்மையாக மனிதனுக்குக் கீழ்நோக்கிப் பாய்தல்
3.வாய் – உண்டிடும் உண்டி… அருந்திடும் நீர்… சரீர கதியில் கீழ்நோக்கிப் பாய்தல்
4.அதுவே ஜீவநோத்பவம் பெற்ற பின்பு மலவாய் வழி கீழ்நோக்கிச் செல்கின்றது
5.சிறுநீர் வெளியேறும் வழியும் அத்தகையதே.
தெய்வீக நிலை
பூமியின் ஈர்ப்பில் செயல்படும் காரியங்கள் எதுவாக இருந்தாலும்
1.ஒளி நெறியாம் உயர்வெண்ண தியானத்தின் வலுவாகச் செயல்படும் காலத்தே
2. மேல் நோக்கிய சுவாசம் கொண்டு மற்ற புற காரிய செயல் நிகழ்வுகள் உயர்வெண்ண உந்துதல்
3.அதுவே தெய்வீக நிலையாகத் தொழில்படும்.
இதையே வேதாள மகரிஷி அலகினால் உணவைக் காட்டிடும் கோழி என்பார். குஞ்சுகளைப் பேணுகின்ற கோழியானது உணவின் தானியங்கள் இருக்கின்ற இடமாகக் கண்டு… தனது அலகினால் தானியத்தைக் கொத்திப் பேணுகின்ற செயலாக… தன் குஞ்சுகளுக்கும் அந்த ஆகாரத்தைப் பெற்றிடும் வழி காட்டுவதைப் போல்…
1.நெறிப்பயிர் ஞான உணவு எடுத்தல் – உயிராத்மா சக்தி பெற்றிடும் செயலில்
2.சரீர உயிரணுக்கள் அனைத்தும் பெற்றுக் கொண்டிடும் – போஜனம் (உணவு கொடுக்கும் நிலை) என்று பேணுதல்.
இந்நிலை பெறுகின்றவர்… நெறிப்பயிர் விளைவாக்கும் “கிழார்” என்றதில் பெற்றுக் கொண்டிட்டதின் முழுமை விளங்கும்.
எண்ணம் கொண்டே மாமகரிஷிகள் காட்டிடும் சூட்சும உணவு பெற்றுக் கொண்டிடும் நியதியில்… சுவாசக் காற்று என்பதின் தொடர்பு… “தூங்காமல் தூங்கி அரிதுயில்” எனும் அறிவியல் தத்துவமாக விளக்குவது எது…?
பிராண வாயு சுவாசமாக உள் நுழைவதும் கரியமில வாயு வெளியேறிடும் செயலும்…
1.இச்சூட்சுமத்தில் பளுவாக இயங்கிடும் இதய கேந்திரங்கள் இலகுவாக…
2.உள் நுழைந்திடும் சுவாசம் குறைவு கொண்டு
3.வெளியேற்றிடும் கரியமில வாயு குறைவு கொண்டு
4.மூப்பு அற்ற நிலையைக் காட்டி
5.அரிதுயில் அழகன் எனும் மால்… (“திருமால்”) எனும் தெய்வ வடிவு தாங்கிடும் பேறு பெறுகின்றான்.
“உயிராத்ம சக்தியை இணைத்துக் கொண்டிடு…!” என உரைப்பதெல்லாம் வேதாள மகரிஷியின் கூற்றாக “இணைப்பறவையின் உறும் (பொருந்தும்) கருத்து” என்பார்.
அதாவது… மகரிஷிகள் உரைத்திடும் இத்தகைய மறைபொருள் தன்மையில் “அநேக விளக்கங்கள்” உண்டு.
இரு பறவைகள் இருந்ததாம். ஆண் பெண் என்ற அவைகள்… கருத்து வேற்றுநிலை பெற்றதாம். உறும் கருத்து வேறுபடின் – மனத்தின் பிரிவு கொண்டதாம்.
இருந்தாலும்… எந்த நிலை ஆயினும் சக்தியாகிய அந்தப் பெண் பறவை… சிவத்தின் நினைவே பிரிவுறா நிலை நினைவால் கொண்டு தான் இருக்கும்.
இறை தேடி இயங்குகின்ற அவைகளின் செயலில்
1.ஒன்றினில் ஒன்றாக மனத்தின் பேதம் நீக்கிட சிவத்துவ நிலை கண்டது தான் உயிராத்ம சக்தியையே பறவைகளாகக் காட்டி
2.உலகோதய நாட்டம் காட்டிடுவதை மனத்தின் பேதம் என்றும்
3.இறை தேடும் செயலுக்கு இணைகின்ற சூட்சுமம்… ஒன்று கலந்திடும் தன்மையாக
4.பேரருள் செல்வத்தைப் பெற்று உயரும் வழிதனை உரைத்திட்ட செயலே அது.
சூட்சுமப் பொருள் காட்டி சித்தின் தொடர்புக்கு… எண்ணம் சொல் செயல் மூன்றும் அனுபவ ஞான விசேஷ குணத்தன்மையாகப் பெற்றிட… அதற்குண்டான பக்குவத்தைக் கனிந்திடச் செய்ய… எல்லோருக்கும் வேதாள மகரிஷி ஆசி வழங்குகின்றார்.
தன்னிடத்தில் ஞானத்தை உரைத்திடும் குழந்தை மற்றவரிடம் அதே ஞான வழியாக நடக்கின்றதா…? அன்பு கொண்டு செல்கின்றதா…? மாயையின் வசம் ஆட்பட்டு… கோபத்தின் குணமாகப் பெற்றுக் கொண்ட சக்திகளை விரயம் செய்கின்றதா…? என்று ஞானிகள் பரிசோதிப்பார்கள்
முகம் காட்டிடும் கண்ணாடி… தான் கொண்டிடும் உயர்வெண்ணத்தைக் காட்டுவது எப்படி…?
1.சாந்தம் என்ற குணத்தால் அமைவு பெற ஆத்ம ஞானி கொண்ட உயர்வைக் காட்டுவது “கண்கள்…”
2.சுவாசத்தின் செயல் சிந்தையைச் சீர்படுத்த உரைப்பது “கனிவு…”
3.கேட்கின்ற ஒலிகள் நாராசமாயினும் ஞானி அதனை சங்கீதமாகக் கொள்வான் “ஓங்காரமாக…”
4.இல்லத்தில் வீசுகின்ற பாசம் மெய் ஞானிக்கு அன்பின் வசமாக “அகில உலகும் பின் தொடரும்…” ஆத்ம பதிவை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.
5.கணவன் மனைவி தொடங்கி… தன்னைச் சார்ந்தவர் தொடங்கி எல்லோரையும் அரவணைத்திடும் அன்பு
6.அகண்ட வியாபகமாய் (எங்கும் நிறைந்திருக்கும்) பேரருள் செல்வத்தைக் கொணரும்.
7.அத்தகைய ஞானவான்… பிரம்மத்தை அறிந்திடும் பிராமணன் ஆகின்றான்.
பக்குவங்களை எல்லாம் மகரிஷிகள் வழிகாட்டிட… குழந்தை தவழ்ந்து தளிர் நடை பயின்று… ஓடியாடி வளர்ந்து… இசைவாக எண்ணம் கொண்டு… உறுதியின் நிலை நிற்றலை…
1.ஞானச் செல்வங்கள் குருதேவருடன் மனம் ஒன்றி வாழ்ந்திடும் அந்த வளர்ப்பு
2.சாஸ்வதம் கொண்டு அனைவருக்கும் அது வழி காட்டும்.
3.இந்தக் குறுகிய கலியில் பிறவியின் தளை விடுத்துப் பேரருள் செல்வத்தில் கலந்திடவே “அனைவரையும் அழைக்கின்றோம்…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எல்லோரையும் தியானிக்கச் சொல்கிறோம். இது ஒன்றும் புதிது அல்ல… சாஸ்திரங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டது தான்…!
1.ஆனால் துருவ நட்சத்திரம் என்றால் என்ன…? என்று கேட்கின்றார்கள் அந்த அளவுக்குத் தான் இருக்கின்றது பிழைப்பு…
2.துருவ நட்சத்திரம் என்றால்… “அது என்ன…? புதிதாகச் சொல்கிறீர்கள்…!” என்று கேட்கின்றார்கள்.
இராமாயணத்தில் இருக்கின்றது… மற்ற எல்லாவற்றிலும் இருக்கின்றது. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் அறுத்துத் துண்டாக்கி விட்டார்கள்… நாம் புரிந்து கொள்ளாதபடி ஆக்கிவிட்டார்கள்.
காலையில் ஒரு அரை மணி நேரமாவது வடகிழக்கிலே விண்ணிலே நினைவைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.
1.வடகிழக்கில் தான் விநாயகரை வைத்திருப்பார்கள்…
2.சிவனுடைய நிலைகளும் சில இடங்களில் அப்படித்தான் அதுவும் வடக்கிழக்கில்தான் இருக்கும்.
வடகிழக்கைப் பார்த்து ஈஸ்வரா…! என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் ஏங்கி… அந்த உணர்வுகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்ப்பிக்க வேண்டும். சாஸ்திரப்படி இது உண்மை…!
உங்களுக்கெல்லாம் இதைப் பதிவாக்கி வைத்துவிட்டோம். நீங்கள் வடகிழக்கைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
1.எப்பொழுது வேண்டுமென்றாலும்… எந்தத் திசையை நோக்கினாலும்… காற்றிலிருந்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற முடியும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் இங்கே மிதந்து கொண்டிருக்கின்றது.
காரணம்… நீங்கள் எண்ணிய உடனே அந்தச் சக்தி கிடைப்பதற்குத் தான் இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).
திட்டியவனை எண்ணியவுடன் எப்படி அவனுடைய நினைவுகள் உங்களுக்கு வருகின்றதோ அது போன்றுதான் என்னைச் சந்தித்து “யாம் சொன்ன முறைப்படி எண்ணுபவர்களுக்கெல்லாம்…”
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அவர்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் துன்பங்கள் துயரங்கள் அகல வேண்டும் என்றும்
3.நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.
நீங்கள் சாதாரண நிலையில் பிறரை எண்ணும் போது உங்களுக்கு எத்தனையோ துன்பங்கள் வருகின்றது. ஆனால் நான் பதிவு செய்யும் ஞானிகள் உணர்வுகள்… கஷ்டம் போக வேண்டும் என்று அந்த உணர்ச்சிகளை யாம் உந்தப்படும் பொழுது அதை நீங்கள் எண்ணினால் உங்களுக்கு அது கஷ்டத்தை நீக்கக்கூடிய சக்தியாக வருகின்றது.
நான் உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது… அதை விடுத்து விட்டு
1.என் பையன் இப்படி இருக்கின்றான்
2.என் தொழில் இப்படி இருக்கின்றது
3.என் குடும்பம் இப்படி இருக்கின்றது
4.கடன் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லையே
5.என் உடலில் ஏதாவது நோய் வந்து கொண்டே இருக்கின்றது என்று இப்படி எண்ணினால் அதைப் பெற முடியாது.
எப்படியும் அந்த உயர்ந்த சக்திகளை கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்று தான் தொடர்ந்து இதை நான் குரு இட்ட கட்டளைப்படி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.
நான் ஆசைப்பட்டு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றேன். ஆனால் நீங்கள் ஆசைப்பட வேண்டுமா… இல்லையா…!
சாமி நன்றாகத் தான் சொல்கின்றார்…! என் கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்று அதன் மீது எண்ணங்களை வலுவாக்கி விட்டால் யாம் சொல்லும் நிலைகளை எண்ணவே வராது.
வேதனை… வேதனை… நோய்…! என்று தான் எண்ண முடியுமே தவிர “அதை நீக்கிப் பழக வேண்டும்…” எண்ணத்திற்கு அது விடுவதில்லை ஆக மொத்தம் தெய்வத்திடம் சென்று முறையிட்டு… என்னை “இப்படிச் சோதிக்கின்றாயே…!” என்று கேட்பது போன்று தான் எண்ணுகிறார்கள்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துன்பங்களிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா…? யாம் சொல்லும் முறைப்படி எண்ணுகின்றார்களா…!
ஆனால் எல்லாவற்றையும் பதிவாக்கிக் கொடுக்கின்றோம்.
1.கஷ்டமான நேரங்களில் தான் “இதை எடுக்க வேண்டும்…” என்று சொல்கின்றோம்
2.ஆனால் கஷ்டமான நேரங்களில் தான் இதை விட்டு விடுகின்றார்கள்…!
ஏனென்றால் குருநாதர் எனக்கு இப்படித்தான் அனுபவங்களைக் கொடுத்து மிக மிக உயர்ந்த சக்தியைப் பெறும்படி தகுதி ஏற்படுத்தினார். அதையே தான் உங்களுக்கும் செயல்படுத்துகிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக நாம் வாழும் இந்தச் 2000 சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் தான் வால் நட்சத்திரம் என்பது. அக்காலங்களில் இதைத் “தூம கேது…” என்றும் சொல்வார்கள்.
சூரியனால் இழுத்து வரப்படும் போது வேகத்தால் வான் வீதியில் மற்ற அணுக்களோடு மோதும் பொழுது “ஒளி வெள்ளமாக… நீளமாக…” அது தெரிகின்றது.
ஆனால் சூரியனுக்குப் போகும் பாதையில் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து விட்டால்… பூமி இழுத்துக் காற்றழுத்த மண்டலத்தில் மோதும் போது நெருப்பாக மாறி… நம் பூமிக்குள் விஷத்தன்மையாகப் பரவி விடுகின்றது… “சுத்திகரிக்கும் நிலை இல்லாது போய் விடுகின்றது…”
எந்தப் பிரதேசத்தில் இது அதிகமாகப் பரவுகின்றதோ
1.அந்த இடத்தில் வாழும் மக்களுக்கு அதிகமான நோய்கள் வரும்
2.தாவர இனங்களுக்கும் மாற்றங்கள் வரும்…
3.விஷத்தன்மை கொண்ட கிருமிகளை உருவாக்கும் சக்தியும் பரவும்.
அரசர்கள் ஆட்சி புரியும் காலத்தில் வால் நட்சத்திரம் (தூமகேது) தெரிந்தாலே அவர்கள் மத ஆச்சாரப்படி அங்கே உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்பட்டு… மனிதர்கள் சிந்தனை குறைந்து… அதனால் சாம்ராஜ்யத்தை ஆட்சி புரியும் நிலையை அரசன் இழந்து விடுகின்றான்… அல்லது அழிகின்றான்.
ஆகவே வால் நட்சத்திரம் எந்தப் பிரதேசத்தில் தென்படுகின்றதோ “அந்த அரசனுக்கு ஆகாது…!” என்று அக்காலங்களில் சொல்வார்கள்.
ஏனென்றால் இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.பிறர் உடலில் விளைந்த தீய உணர்வுகள் (வால் நட்சத்திரம் போல்) சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
2.இந்த பரமாத்மாவில் காற்று மண்டலத்தில் அலைகளாகப் பரவினாலும்
3.நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் ஊழ்வினை என்று வித்தாக நம் செல்களில் பதிவாக்கி விடுகின்றது.
வேதனைப்படும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் தான் “வேதனைப்படுகிறார்…” என்று அறியத் தெரிகின்றது. அதே போல் அதிர்வான செயல்களைக் கண்டு நுகர்ந்த பின் நமக்கு அச்சத்தை ஊட்டி விலகிச் செல்லும்படியும் செய்கிறது… அந்த உணர்வுக்கொப்ப.
உயிரிலே பட்டால் பயம் வருகிறது… வேதனை வருகின்றது. இதைப் போன்ற உணர்வுகளை நுகர்ந்தால் இரத்தத்தில் அது கலந்தால் இதே அணுக்களை உருவாக்கி விடுகின்றது. (அதாவது வால் நட்சத்திரத்தின் விஷத் தன்மைகள் பூமிக்குள் கவரப்பட்டால் அந்தந்த இடத்தில் விஷத்தன்மைகள் பரவுவது போல்).
அதைத் தடுத்து நாம் நல்லதாக மாற்றி அமைக்க வேண்டுமல்லவா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் செலுத்தி
1.எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அது படர வேண்டும்.
2.எங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் படர வேண்டும்
3.ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று
4.முந்தி இது போன்ற உணர்வுகளை எண்ணங்களைச் செலுத்தி விட்டால்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.
இப்படிச் செய்யும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது… இரத்தத்தின் வழி உள்ளே செல்லாதபடி தடுக்கப்படுகிறது.
இப்படி அடிக்கடி நாம் தடுத்துப் பழகும் இந்த உணர்வுகள் தான்… சிறிது நேரம் இதை எடுத்துக் கொண்டால்
1.உள்ளுக்கே இது பிடிக்கவில்லை என்றால்… அதாவது அதன் மீது பற்று இல்லை என்றால் “உள்ளே இழுக்காது…”
2.ஒரு காந்தத்தை (MAGNET) வைக்கும் போது இடையிலே ஒரு காகிதத்தையோ அல்லது ஒரு அட்டையையோ கொடுத்துவிட்டால் அது எப்படி இரும்பை இழுக்காதபடி தடைப்படுத்துகின்றதோ அது போன்று
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இடைமறித்து உள்ளே செலுத்தி விட்டால்
4.அந்த வேதனைப்படும் உணர்வுகளை இழுக்காதபடி அனாதை ஆக்கி விடலாம்.
ஏனென்றால் நம் உடலில் ஏற்கனவே உருவான அல்லது புதிதாக உருவாகும் தீய அணுக்களுக்கு “ஆகாரம் செல்லாதபடி தடைப்படுத்தும் முறை தான் இது…” (மேலே உள்ள Sl No 2 – மிகவும் முக்கியமானது)
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதைச் செய்து பழகினாலே தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி அனாதையாக்கப்படுகின்றது. ஈர்க்கும் சக்தி இவ்வாறு இழக்கப்படும் போது பிடிப்பில் இல்லாத இந்த உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து மாற்றிவிடுகின்றது.
ஏனென்றால் இந்தப் பூமியின் பிடிப்பில் எது இல்லையோ அதை அனைத்துமே சூரியன் கவர்ந்து கொள்ளும். நம் ஆன்மா… ஜீவான்மா… உயிரான்மா… எல்லாமே தூய்மையாகிறது.
1.ஞானிகள் எல்லாம் இத்தகைய ஆற்றலைப் பெற்றவர்கள் தான்.
2.தீமை வராது தடுத்து அவருக்குள் விளைந்த உணர்வுகள் சொல்லாக வரும் பொழுது நாம் கேட்டால்
3.அந்த உணர்வுகள் நமக்கு நிச்சயம் நல்வழி காட்டும்
4.சிந்தித்து செயல்படும் தன்மையும்… தீமைகள் புகாது… நோய்கள் வராது… பாதுகாக்கும் தன்மைகளும் பெறுகின்றோம்.


பாவத்தைப் போக்கும் இடம் எது…?
கடையில் வேலை செய்கின்றார்கள். வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராது அங்கே ரோட்டிலே சம்பவங்கள் நடக்கிறது. அதாவது கடும் வேதனைப்படுகின்றனர். நம்மால் அல்ல…! வேறு யார் கூடேயோ சண்டை போடுகின்றார்கள். அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை நாம் நுகர்ந்து விடுகின்றோம்.
நுகர்ந்த பின் அதே உணர்வு ஓம் நமச்சிவாய என்று உடலில் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது. அந்த நேரத்தில் பயமும் அதிர்ச்சி வருகின்றது.
1.அந்த அதிர்வான உணர்வு வரப்படும் பொழுது கடையிலே இவன் (சண்டையிட்டதைப் பார்த்து நுகர்ந்தவன்) வேலை பார்க்கின்றான்
2.பயமான உணர்வுடன் வேலை செய்யும் போது சரியான முறையில் வேலை செய்யவில்லை.
முதலாளி பார்த்துக் கேட்கும் போது… “ரோட்டில் சண்டை போடுவதை நீ ஏன் பார்க்கின்றாய்…? அதைப் பார்த்து என் தொழிலை நீ கெடுக்கிறாயா…? உனக்கு இங்கே வேலை இல்லை போடா…!” என்று சொல்லி விடுகின்றார்.
இந்த உணர்வுகள் அதைச் சொன்னாலும் ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்…! வேலை செய்பவன் பயப்படும் போது துரத்தி விடுகிறார் முதலாளி. ஆனால் பிழைப்பு போய் விடுகின்றது.
1.இந்தப் பாவத்தைப் போக்குவதற்கு என்ன செய்வது…?
2.வேதனை வந்துவிடுகிறது… அந்த நேரம் இராமேஸ்வரம் போவீர்களா…?
ரோட்டிலே போகின்றோம். திடீரென்று அங்கே விபத்து நடக்கிறது. பார்த்ததும் பாவ நிலைகள் இங்கே வந்து விடுகின்றது. பதட்டம் ஆகின்றது. கடையிலே வந்து வேலை செய்ய முடியவில்லை. வீட்டிற்கு வந்தாலும் சமையல் செய்து சாப்பிட முடியவில்லை…!
1.பயமாக இருக்கின்றது.
2.அதற்காக வேண்டி இங்கிருந்து இராமேஸ்வரம் போவீர்களா…?
தப்பு செய்யவில்லை…! ஆனால் பாவ நிலைகளைப் பார்க்கின்றோம். அவன் வேதனைப்படுகிறான் என்று அந்தப் பாவ நிலையைக் கண்கள் உணர்த்துகின்றது உடல் முழுவதும் பரவச் செய்கிறது… அதனால் நடுக்கம் ஆகிறது.
அப்போது இராமேஸ்வரம் போய் விட்டு வருகின்றீர்களா…? யாராவது அப்படிப் போகின்றோமா…?
இங்கே சோற்றுக்கே வழியில்லை. அப்புறம் இராமேஸ்வரத்திற்குச் சென்று அத்தனை கிணற்றிலும் காசைக் கொடுத்துக் குளித்துவிட்டுச் சுற்றி வந்து முடிந்தால் பாவம் போய்விடுமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.
நாம் என்ன செய்ய வேண்டும்…? பாவத்தைப் போக்க வேண்டும் என்றால் அதைப் போக்கக்கூடிய சக்தி நம்மிடம் இருக்கின்றது.
1.அந்தச் சக்தியைத் தான் தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
2.உங்களுக்குள் அதைப் பதிவு செய்துவிட்டால் போதும்.
ஒரு விபத்தாகின்றது என்னால்
1.அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலே நினைவைக் கொண்டு சென்று
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
4.இதை வலுவாக்கிக் கொண்டால் அந்தப் பாவமான உணர்வுகளை இது மறைத்து விடுகின்றது.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இப்படிச் சுத்தம் செய்து விட்டோம் என்றால் போதும்.
அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷியின் அருள் சக்தி விபத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா பெற வேண்டும்
1.அவர்களும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
2.அந்த ஆன்மாவுக்கு நல்ல மோட்சம் கிடைக்க வேண்டும். என்று நாம் இப்படி எண்ண வேண்டும்.
ஆனால் அடிபட்ட வேதனையால் வாடுகின்றார்கள் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திவிட்டு
1.அவர்களுக்கு இந்தச் சக்தி கிடைக்க வேண்டும்.
2.இனி ஒரு நல்ல நிலையை அவர் அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? ஆ…ஆ…! என்று பயத்தால் பதட்டமடைந்து விடுகின்றோம். அது பாவ நிலையாக உருவாகி விடுகின்றது.
ஆனால் உடனே நமக்குள் துடைக்கும் விதமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தூய்மைப்படுத்தி விட்டு விபத்தில் சிக்கியவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால்
1.“நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் உருவாக்குகின்றது…”
2.இதைப் போன்று நாம் நமக்குள் வரும் பொழுது தீமை வென்றிடும் உணர்வுகள் மன உறுதி கிடைக்கின்றது
3.அருள் ஒளி என்ற உணர்வினை நமக்குள் செலுத்தப்படும் பொழுது இருளை அகற்றுகின்றது.
இப்படி ஒவ்வொரு நேரத்திலும் துருவ நட்சத்திரத்த்தின் சக்தியை எடுத்து நமக்குள் நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாவத்தைப் போக்க இதுதான் சுலபமான வழி… ஞானிகள் காட்டியது…!

பூமியின் உயர் ஞான வித்துக்களைப் பேணிக் காத்திடும் வல்லமை கொண்டவர்கள் சப்தரிஷிகள்
ஒலி கொண்டு ஒளி பெற்று… ஒலி ஒளியாக ஆத்ம வலுக் கொண்டு… சீரிய சுடர்தல் எனும் நிலையாகத் தன்னை வளர்த்து… உயர்நிலை கொண்டிடும் ஒலி(ளி) ஜீவன்கள் ஒன்றாக மிளிர்ந்திடும் சூட்சும உலகே “சதாசிவ மண்டலம்…” (சப்தரிஷி மண்டலம்)
1.ஆதி சக்தியின் வளர்ப்பையே வளப்பாக்கும் செயல் கொண்டு
2.பூமியின் உயர் ஞான வித்துக்களைப் பேணிக் காத்திடும் வல்லமை கொண்டிட்டவர்கள் அவர்கள் தான்…!
அவர்களுடன் இணைந்து…
1.வளர்ப்பின் பக்குவத்தில் தன்னை வளர்த்திடும் உயர் ஞான எண்ணம் கொண்டிடும் ஜீவன்கள்
2.அந்த மகான்கள் அருள் எனும் ஒளி நெறி கண்டு… தாமும் அந்த நிலை பெற்றிடவே
3.பேரருள் பேரொளி கொண்டு சிவமாக… “தான் சமைத்து” சிவ சூரிய நிலை என்னும் உயிராத்ம உயர் ஒளி நிலை பெறுவர்.
இங்கே உபதேசிக்கும் நிலை கொண்டு மெய்ஞான முகிழ்விப்பாக சக்திகளை வளர்த்திடும் ஆத்மாக்கள்
1.அந்த மகான்களுடன் தொடர்பு கொண்டு
2.ஈஸ்வரர் நெறி நின்று வளர்வது கண் கூடு.
மதங்கள் எனும் போர்வை போர்த்திக் கொண்ட பற்பல தத்துவ விசாரங்களும்… “படைப்பின் படைப்பு” எனும் சூட்சுமத்தைக் கூறத்தான் செய்கின்றன.
இருந்தாலும்… தவ நெறியில் நிற்காத தன்மையினால் அதனைக் கொள்பவர் இன்றி… விட்டேத்தியான வாதங்கள் புரிந்து வேடமிடும் நிலையில்… உண்மையின் பொருள் உணர்ந்தார் இல்லை.
இறை சக்தியின் முன்பு உரையாடினார் என்றும்… உலகக் கோட்பாட்டின் மாய இருள் விலக்க உண்மையின் பொருள் கொணர்ந்தார் என்றும்… புர்க்க என அழைக்கப் பெறும் ஓர் வாகனத்தில் பயணம் செய்து ஒளி மண்டலம் கண்டு திரும்பினார் நபி…! என உரைக்கின்ற வேதம் அதனின் சூட்சுமப் பொருள் “இந்தத் தியானத்தின் வழி தான்” என அறிந்து கொண்டிட்டவர் யார்…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட விஷக் கதிரியக்கங்கள் சூரியனுக்குள்ளும் சேர்ந்து அங்கேயும் இப்போது கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது.
எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இருந்தாலும் இரு மடங்கு அழுத்தத்தின் தன்மை சூரியனுக்குள் அதிகமாகப் பாய்ச்சப்பட்டுப் பிரபஞ்சத்தில் அத்தகைய நிலைகள் பரவுமேயானால் “விஞ்ஞான அறிவால் வந்த இவை அனைத்தும் சூனியமாகிவிடும்…!”
இப்பொழுது இரு மடங்கு மின்சாரம் வயர்களில் வந்தால் அதனுடன் சேர்க்கப்பட்ட பல்புகள் அனைத்தும் ஃப்யூஸ் (FUSE) ஆவது போன்று இந்த உணர்வுகள் அதிகமானால்….
1.மனிதனுடைய சிந்தனைகளும் மிருகங்களுடைய உணர்வுகளும் மாறுபட்டு
2.”வெறி பிடித்தது…” போன்று உலகம் முழுவதும் பரவும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.
இதிலிருந்து நாம் மீள்வதற்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
கஷ்டமோ நஷ்டமோ மற்ற எது வந்தாலும் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் உடலில் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி நாளும் வளர்த்துக் கொண்டே வந்தால் மன உறுதி கிடைக்கும். நம்முடைய காரியங்களை எல்லாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற அந்த உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சொல்வார்கள்…
1.பிறருடைய கஷ்ட நஷ்டங்களை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டே வந்தால்
2.அந்தக் கணக்கின் பிரகாரம் அவருக்கு வந்த கஷ்டமெல்லாம் நமக்குள் வந்து நம்மையும் அது பாதிக்கும்.
3.அவர் உடலுக்குள் வந்த அவர் நோய்களும் நமக்கும் வர நேருகிறது.
ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று “இந்தக் கணக்கைக் கூட்டினால்” இந்த உடலில் சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கும்.
ஆக… அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க… மன உறுதி கொண்டு இந்த வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும்… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடையவும் இது உதவும்.
அதே சமயத்தில்
1.நீங்கள் எடுத்துக் கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அனைத்தும்
2.உங்கள் மூச்சலைகள் மூலம் இந்த உலகம் முழுவதும் பரவி
3.நச்சுத்தன்மைகளைப் போக்கக்கூடிய சக்தியாகப் படரும்.
அகஸ்தியன் அன்று தன்னுடைய பார்வையில் இந்தப் பூமி குடை சாயும் நிலையில் இருந்ததைத் திருப்பி… வெப்பத்தின் தன்மை கூடச் செய்து “துருவத்தில் உறைந்த பனிகளைக் கடலாக மாற்றி…” பூமியைக் காக்கும் சக்தியாக அன்று அவன் செயல்படுத்தினான்.
அகஸ்தியனுக்கு முந்திய காலத்தில் இருந்த கடல் நிலைகள் வேறு அகஸ்தியனுக்குப் பின் வந்த கடல் நிலைகள் வேறு.
மனிதன் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் இன்று அதிகமாக… அதிகமாக… நீர் நிலைகள் பெருகி நிலங்கள் குறைந்து கடல் நீர் பெருக்கமாகி… ஊரை அழிக்கும் நிலையாக வருகின்றது.
துருவப் பகுதியில் உள்ள உறைபனிகள் அனைத்தும் உருக உருக கடல்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. இது மட்டுமல்ல…!
பூமிக்குள் வெப்பத்தின் தணல் அதிகமாகும் பொழுது பூகம்பங்களும் எரிமலைகளும் அதிகமாகி உள்ளே கொதிகலன்கள் அதிகமாகி “எந்த நேரத்திலும்…” இந்தப் பூமி சிதையும் நிலைகள் இருக்கின்றது. நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களிலும் இதே நிலைகள் ஆகி கொண்டிருக்கின்றது.
ஒரு கோள் சிதைந்தாலே போதும்…! அதனுடைய விகிதாச்சாரம் மனிதனுடைய நிலைகள் அது கிடைக்காது போனால்
1.மனிதனும் மிருகமாகி விடுகின்றான்… விஞ்ஞானமும் அழிந்து விடுகின்றது…
2.இருளான உணர்வுகளே உலகெங்கும் பரவும் சந்தர்ப்பங்கள் வருகின்றது… இந்த விஞ்ஞானம் பயனற்றதாக ஆகிவிடும்.
3.இன்று செயல்படுத்தும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் பூராமே பாழாகி அதனால் இயங்கும் சாதனங்கள் செயலிழந்து அனைத்தும் திசை திருப்பப்பட்டு
4.“அடுத்து விஞ்ஞான அறிவால் எதுவுமே செயல்படுத்த முடியாதபடி ஆகப் போகின்றது…”.
ஆனால் மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் கவர்ந்து கொண்டால் இந்த உலகைக் காக்கலாம்… உங்களையும் காக்கலாம்… பிறவி இல்லா நிலையும் அடையலாம்.
இதைப் பெறுவதற்கும் செயல்படுத்துவதற்கும் உங்களுக்கு “மன உறுதி தேவை…!”
ஆகவே… ஏதோ என்று இல்லாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வாழும் இடத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அதிகமாகப் பரவச் செய்யுங்கள்.
1.அன்று ஒரு அகஸ்தியன் இந்தப் பூமியைச் சமப்படுத்தினான்.
2.இன்று அவனுடைய அருளைப் பெற்று பல ஆயிரம் அகஸ்தியர்களை உருவாக்குங்கள்.
3.குருநாதர் காட்டிய வழியில் உலகைக் காக்கும் சக்திகளாக இதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வாழ்க்கையில் யாருக்குமே நாம் தொல்லை கொடுக்க வேண்டாம்… “சும்மா தான் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் தொல்லைப்படுவரையும் கஷ்டப்படுபவரையும் வேதனைப்படுபவரையும் வெறுப்படைபவரையும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்காமல் இருக்க முடியாது… அந்தந்த உணர்வுகளை நுகராது இருக்கவும் முடியாது.
1.நாம் நுகர்ந்த அந்த உணர்வுகளை எல்லாம்
2.உயிரிலே பட்ட பின் தான் அதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
கண்களால் பார்க்கின்றோம் பிறருடைய செயல்களை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால் அவர் செயலின் உணர்வுகள் வெளி வருவதை நாம் நுகர்ந்து தான் அவர் இன்ன நிலையில் இருக்கின்றார் என்று அவர் கோபப்படுகின்றாரா.. வேதனைப்படுகின்றாரா…! வேதனைப்படுத்துகின்றாரா…? என்ற உணர்வால் அறிகின்றோம்.
இந்த உணர்வை ஈர்த்து நம் உயிர் சரியாகச் செயல்படுத்தவில்லை என்றால் “என்ன தான் நடந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியாது…”
வாழ்க்கையில் சிலர் மிகவும் விரக்தி ஆகி இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் உள்ளோருக்கு…
1.எதிர்த்தாற்போல் இருக்கக்கூடிய ஒரு பொருளை அறிய முடியாது… காண முடியாது… தெரிய முடியாது… அவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.
2.வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் “தன் வீடு” எங்கே இருக்கிறது…? என்று தெரியாது.
3.அவருடைய நண்பரே அருகில் வந்தாலும் அந்த நண்பரை அவரால் அறிய முடியாது… தெரியாது.
ஏனென்றால் இந்த உணர்வின் அறிவு அங்கே மழுங்கி விட்டால் இந்த உணர்வுகளை அங்கே செயலாக்குவது இல்லை. உதாரணமாக…
1.கண்களிலே பூ விழுந்தால்… அதாவது கண் கருவிழிக்குள் கருமணியில் அழுக்குகள் சேர்ந்து விட்டால் எப்படிப் பார்வை சரியாகத் தெரியாதோ இதே மாதிரி
2.நம் உயிரிலே உணர்வுகள் (நாம் சுவாசிப்பது) மோதும் இடத்தில் ஒரு “தடயம்…” ஒன்று உண்டு
3.அடிக்கடி வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்தால் உயிரைச் சுற்றி அழுக்குகள் அதிகமாகிவிடும்.
அந்த அழுக்கு என்பது வேதனையின் நிலையாக உருவாவது உண்டு. அதிகமான அழுக்குகள் அங்கே சேர்ந்து விட்டால் சோர்வின் தன்மை வந்துவிடும்.
1.எதை நினைத்தாலும் அது சரியான நினைவுகள் வராது
2.என்ன செய்கின்றோம்… ஏது செய்கின்றோம்…? என்று எதையும் அறிந்து கொள்ள முடியாது (தன்னை மறந்த நிலை என்று சொல்கிறோம் அல்லவா)
இத்தகைய உணர்வு கொண்டு இந்த உயிரான்மா வெளியே சென்றால் எங்கே செல்லும்…? மனிதன் யார் மீதும் நினைவில்லை.
ஆனால் இதைப் போன்று சில உயிரினங்கள் அடிக்கடி தன்னை நினைத்து மறந்து போகும். அத்தகைய உடலைப் பெறும் நிலையாக இந்த உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும்.
உயிர் ஒன்றுதான்… பல உடல்களாக எடுத்து எடுத்து இன்று மனிதனாக வந்தது. இருந்தாலும் “உயிர் தான் நம்மை உருவாக்கியது…” என்று மனிதனாக ஆன பின் தான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.
தெரிந்தாலும் அதை மதித்து ஞானிகள் காட்டிய வழியில் நாம் செயல்பட வேண்டுமா இல்லையா…?
1.புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று சொல்லித் துருவ நட்சத்திரத்தைப் அடிக்கடி எண்ணச் சொல்வதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறதா…?
2.தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போது கண்ணின் நினைவு புருவ மத்தியில் இருக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே நிலை நிறுத்த வேண்டும்.
அப்போது தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியாக மாறும். நம் உணர்வுகள் தெளிவாகும்… பேரருளாக பேரொளியாக மாறும்.
இந்தப் பிறவிக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.


அசம்பாவிதங்களிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும்
நாம் எங்கு சென்றாலும் ஆத்ம சக்தி செய்து விட்டுத் தான் வெளியில் செல்தல் வேண்டும். தீமைகள் புகாது தடுக்கும் நிலையாக நம் வாழ்க்கையையே தியானம் ஆக்குதல் வேண்டும்.
தியானம் மட்டும் செய்து விட்டு
1.அதற்குப் பின் மற்றதை எல்லாம் பார்த்துப் பதிவாக்கிக் கொண்டே சென்றால் தீமைகள் தான் அதிகமாகும்.
2.தியானத்தின் பலன் முழுமையாகக் கிடைக்காது..
3.அப்போதைக்கு நன்றாக இருக்கும்… உடலுக்குள் மற்ற அணுக்கள் பெருகி விட்டால் நம்மையே அது மாற்றிவிடும்.
4.ஆகவே… ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையையே தியானமாக்கிப் பழகுதல் வேண்டும்.
தெளிவாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.
ரோட்டிலே செல்லும் பொழுது முதலில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டு… என் சொல் செயல் பார்வை அனைத்தும் புனிதமாக வேண்டும் என்று நினைத்துத் தான் நாம் ரோட்டிலே செல்ல வேண்டும்.
ஒரு வாகனமே ஓட்டுகின்றோம் என்றால் என் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்று நாம் எண்ணிவிட்டுச் செல்தல் வேண்டும்… ஒரு புனிதத் தன்மையாக வரும்.
1.அதன்படி நாம் ரோட்டில் செல்லும் பொழுது நல்ல சிந்தனைகள் வரும்
2.வித்தியாசமான நிலைகள் வந்தால் நம்மை ஒதுங்கிப் போகச் சொல்லும்.
3.அருள் உணர்வுகள் அதிகமாகி விட்டால் நமக்குப் பின்னாடி வாகனத்தில் வந்தாலும் கூட அதையும் ரிமோட் பண்ணி நம்மைக் காக்கும்.
4.நம்முடைய உணர்வுகளை அவர்கள் நுகர்வார்கள்… அப்போது தன்னாலேயே விலக்கி விட்டு விடும்.
சில விபத்துகள் நடக்கும் பொழுது பார்த்தோம் என்றால் எல்லோரும் அதிலே சிக்கி விடுவார்கள். ஆனால் அங்கிருக்கக்கூடிய ஒரு கைக் குழந்தை எந்தப் பின்னமும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்.
1.காரணம் அது பயப்படுவதில்லை… விபத்து என்றால் குழந்தை அது பயப்படுமா…? அடிபட்ட பிற்பாடு தான் பயப்படும்.
2.ஆனால் நாம் அடிபடப் போகும் போது பயந்து விடுகின்றோம்.
குழந்தையின் உணர்வுகள் ரிமோட் செய்து எந்த விதமான ஆபத்தும் இல்லாதபடி தப்பித்துக் கொள்கிறது. நிறைய விபத்துகளைப் பார்த்தால் அங்கே கைக் குழந்தைகள் மட்டும் தப்பியிருப்பதைப் பார்க்கலாம்.
1.குழந்தையின் உள்ளங்கள் வித்தியாசமான எண்ணங்கள் இல்லாது இருக்கின்றது…
2.அந்த உணர்வே அதைப் பாதுகாக்கின்றது.
பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்…! ட்ரெயின் ஒன்று விபத்தானது. அதிலே ஒரு பெட்டியில் உள்ள அனைவரும் இறந்து விட்டார்கள். ஆனால் ஒரு குழந்தை மட்டும் அடித்த பின் ஒரு பலகை மீது அப்படியே பாதுகாப்பாக இருக்கின்றது சிறிதளவு கூட அதற்குப் பின்னமில்லை.
ஒரு சமயம் நான் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ட்ரெயினுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு தாய் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்து வருகின்றது. திடீரென்று ட்ரேயினுக்குக் குறுக்கே சென்றுவிட்டது. தாய் சுக்கு நூறு ஆகிவிட்டது.
ஆனால் குழந்தை அதனின் சந்தர்ப்பம் தண்டவாளத்திற்கு மத்தியிலே அப்படியே எந்த விதமான பாதிப்பில்லாமல் இருக்கிறது. தண்டவாளத்திலிருந்த கல்லில் கூட அடிபடவில்லை. அந்த அளவுக்குப் பாதுகாப்பாகத் தாயின் கையில் அப்படியே படுத்திருக்கின்றது.
நான் கண்ணில் நேரடியாகப் பார்த்த நிகழ்ச்சி.
குருநாதர் இதை என்னிடம் சொல்லி…
1.அந்தக் குழந்தையின் உணர்வுகள் அதன் (அடிபடும் என்ற) மீது அச்சமில்லை
2.இந்த சந்தர்ப்பம் எப்படி அது காக்கப்பட்டது…? என்று காட்டுகின்றார்.
ஆனால் அதே குழந்தை ஆ…! என்று பயந்திருந்தால் அதனுடைய கதியும் பாதிப்பாகி இருக்கும்.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள். அந்தப் பரிசுத்தமான குணமாக இருக்கின்றது. ஆகையினால் அதற்கு அந்த விபத்துகள் கூடுமானவரை வருவதில்லை.
ஆகவே நீங்கள் வெளியில எங்கே சென்றாலும் சரி அல்லது அங்கிருந்து வீட்டுக்குத் திரும்ப வந்தாலும் சரி
1.ஆத்ம சுத்தி செய்யும் ஒரு பழக்கத்திற்கு வந்து விட வேண்டும்.
2.அப்போது தான் நம்மை அறியாது நடக்கும் தீமைகளிலிருந்து காக்கப்பட முடியும்.

தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம்
தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம் பற்றி வேதாள மகரிஷியினால் வலியுறுத்தி உபதேசமாக உரைக்கப்பட்டது.
மனிதச் சரீரத்தினுள்… சிவசக்தி நாடிகள் சுழுமுனை நாடியுடன் இணைந்து மூலாதாரத்தில் இருந்து மேல் எழுந்து… சிரசின் நெற்றிப் பொட்டு என்ற அறுகோணச் சக்கரத்தினுள் “சூலாயுதம் போல் தோன்றும்…”
1.செந்நிற ஒளியும் பொன்னிற ஒளியும் இரு புறம் விளங்க
2.மையத்தில் நீல வண்ண ஒளியாகத் தோன்றிடும் நிலையே அது.
3.உயிர் எனப்படும் குரு… இந்நிலை தருகின்ற செயல் எண்ணம் கொண்ட ஜீவன்… தான் என்று பெறல் வேண்டும்.
4.மகரிஷிகள் உவந்து ஊட்டுகின்ற “சூட்சுமங்களை” முயன்று பெற்றிட வேண்டும்.
இந்த நிலை எதனுள் அடங்கும்…?
சூட்சுமம் அங்கு உள்ளது. செய்கின்ற தொழில் என்பது…
1.கர்ம காரியங்கள் ஆயினும் சரி… உயர் ஞான சக்தி விளைவாக்கிடும் செயலாயினும் சரி…
2.ஒருவர் ஜெபித்து ஒருவருக்கு அளிப்பது அல்ல ஞானம்.
3.செய் தொழில் மேன்மைக்கு… தான்… தனக்கு ஜெபிக்கின்ற நிலை…!
4.அதுவே சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கும்.
முத்தலை சூலாயுதம் ஒளி வடிவாகச் சிரசினுள் உதிக்கும். இதனையும் கடந்த நிலையே சிவம் சூரியப் பிரகாசமாக உச்சியின் மேல் உதயம் காட்டுதல்.
சிவ சூரிய நிலை பெற்று வளர என்னுடைய ஆசிகள்… வேதாள மகரிஷி…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பல காலம் எண்ணிப் பல காலத்திற்குப் பின் தான் மனிதருக்குள் நோய் என்ற விளைவே சாதாரணமாக வருகின்றது.
ஏனென்றால்… நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தீமையான நிலைகளைப் பார்க்க நேருகின்றது. அதனால் தீமை செய்யும் உணர்வுகளின் அணுக்கள் நம்முள் பெருகிவிடுகின்றது.
அந்த அணுக்கள் வளர்ச்சியான பின் அதனின் மலங்கள் நமக்குள் நல்ல அணுக்களில் உள்ள மலங்களில் படப்படும் பொழுது தான் இந்தத் தசைகள் கரைகின்றது.
அப்பொழுது நம் உடலில் வலிகள் வருகின்றது… வேதனையாகின்றது… நோயாகின்றது. வலித்தவுடன்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை வலுக்கொண்டு நமக்குள் கவர்தல் வேண்டும்.
4.இப்படி நம் உடலில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.
ஆனால் தியானத்தைக் கடைப்பிடிக்கும் சிலர் என்ன சொல்வார்கள்…?
இப்படித்தான் நான் எண்ணினேன்… இன்னும் வலி குறையவில்லை, வலி நிற்கவில்லையே…! என்பார்கள். வலி நிற்கவில்லையே என்ற உணர்வைச் சேர்த்தால் என்ன நடக்கும்…?
ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது
1.ஒரு இடத்தில் (நிறுத்திய பின்) “FULL STOP” என்று புரோகிராம் செய்து வைத்தால்
2.அந்த இடம் வந்தவுடன் தன்னாலே நின்றுவிடும்.
அதைப் போன்றுதான் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… வலி நீங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தால் நாம் தொடர்ந்து இதைக் கூட்டும்போது அதனுடைய பருவம் வரும் பொழுது “நிச்சயம் வலி நிற்கும்…”
அதற்குள் நான் “ஐய்யய்யோ அம்மம்மா… இன்னும் நிற்கவில்லையே…” என்று எண்ணிக் கொண்டு என்ன செய்வார்கள்…?
1.அந்த மகரிஷிகளை எண்ணி
2.“வலி நிற்கவில்லையே… வலி நிற்கவில்லையே…” என்று இப்படித்தான் மாற்றுகின்றார்கள்.
அருள் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும், அந்தத் தசைப் பாகம் உள்ள அணுக்களில் அருள் ஞானம் விளைய வேண்டும் என்று இதைக் கலக்க வேண்டும்.
சந்தர்ப்பத்தால் நாம் தீமையைப் பார்த்த உணர்வுகள் அதன் உணர்வு கொண்டு கருவாகிச் சுழன்று வரப்படும் பொழுது… தேங்கிய இடத்தில் வெடித்த உணர்வுகள் அணுவாக உருவாகின்றது.
உருவான அந்த அணு தன் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி அது உணவுக்காக ஏங்கும் நிலைகளில் அது தன் இனத்தைப் பெருக்குகின்றது. தன் இனத்தைப் பெருக்கும் போது நம் உடலில் ஏற்கனவே உருவான அணுக்களுக்கு எதிர்நிலை ஆகின்றது. அப்பொழுது
1.நம் நல்ல அணுக்களின் செயலாக்கங்கள் குறைகின்றது
2.அதனால் அது சோர்வடைகின்றது
3.அதனால் நம் உடலில் வேதனையும் வலியும் ஏற்படுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ஆகவே… இதையெல்லாம் அறிந்துணர்ந்த நீங்கள்
1.ஒவ்வொரு நிமிடத்திலும் எதைச் செய்ய வேண்டும்…? என்பதைச் சற்று சிந்தியுங்கள்
2.“எதை நம்முள் முன்னிலைப்படுத்த வேண்டும்…?” என்ற நிலைக்கு வாருங்கள்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை முன்னிலைப்படுத்தி உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்த்தோம் என்றால் வலியோ… வேதனையோ… நோயோ… எதுவாக இருந்தாலும் அதனின் வீரியத்தை அடக்கி அதைத் தணித்து நம்மை நலம் பெறச் செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா
சப்தரிஷிகள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை அருளாக்கிப் பேரருளாக மாற்றிப் பேரொளியாக மாறி எப்படி பிறவியில்லா நிலை அடைந்தனரோ அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
சப்தரிஷிகள் என்றால் யார்…?
இருளை அகற்றி ஒளியின் உணர்வினைத் தங்களுக்குள் சிருஷ்டித்தவர்கள் தான் சப்தரிஷிகள்.
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் பெற்று
2.ஒளியின் சரீரமாக விண்ணிலே வாழ்பவர்கள் சப்தரிஷிகள்.
அவர்கள் மனிதச் சரீரத்தில் வாழ்ந்த காலத்தில் தங்களுடைய வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்தனர்.
அவர்கள் தங்களிடமிருந்து வெளிப்படுத்திய அருள் உணர்வுகளை நாங்கள் பெற்று அந்த அருள் ஞான வழியினை எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டுதல் வேண்டும்.
உதாரணமாக… பலகாரங்களைச் செய்யும் பொழுது நாம் பல பொருள்களை ஒன்றாக இணைத்துச் சுவைமிக்க நிலைகளை எப்படி உருவாக்குகின்றோமோ இதைப் போன்று சப்தரிஷிகள் ஒன்றென இணைந்து உணர்வுகளைப் பேரருளாகப் பெற்றுப் பேரொளியாக மாற்றிப் பேரொளி என்ற நிலைகள் அடைந்து பிறவியில்லா நிலையாகத் தனக்குள் உருவாக்கி வளர்த்துக் கொண்டவர்கள்.
ஆகவே தான் அந்தச் சப்தரிஷிகள் பெற்ற அந்த அருள் சக்திகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று தியானிக்கச் சொல்கிறோம்.
கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது போன்று குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்பொழுது நாம் எந்தச் சப்தரிஷிகளை எண்ணுகின்றோமோ நாம் அதுவாக ஆகின்றோம்.
சப்தரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக்கிச் சென்ற அந்த அருளைப் பெற வேண்டும் என்ற நினைவினை
1.கண்ணின் வழி கொண்டு உணர்வினை உடலுக்குள் பதிவாக்கி
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
3.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கி இருங்கள்.
அவர்கள் பெற்ற பேரருளின் தன்மையை பேரொளியாக மாற்றிய உணர்வின் தன்மைகளை நாம் ஏங்கும் பொழுது
1.நமது உயிரோ அதை “ஓ…” என்ற நிலையில் அதை கருவாக்கி
2.உயிரான ஈஸ்வரலோகத்தில் சிரசின் பாகத்தில் அதன் அணுவின் தன்மையை உருவாக்கி
3.நம் இரத்த நாளங்களில் அதனின் கருவின் தன்மையாக உருவாக்கச் செய்கிறது.
அத்தகைய கருவினை நமக்குள் உருவாக்கி விட்டால் அணுவாக உருவாகும் போது
1.அதற்கு உணவு அந்த சப்தரிஷிகள் எடுத்த அருள் சக்திகள் தான்…
2.அதையே உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.
உதாரணமாக ஒருவர் வேதனைப்படுவதைப் பற்றுடன் பாசத்துடன் உற்று நோக்கி அதன் உணர்வை நாம் நுகர்ந்தறிகின்றோம்… பின் அவர்களுக்கு உதவியும் செய்கிறோம்.
நாம் உதவி செய்தாலும் நாம் நுகர்ந்த அந்த வேதனையான உணர்வுகளை ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உயிர் ஈசனான ஈஸ்வரலோகத்தில் அந்த வேதனையை உருவாக்கும் அணுவின் கருவாக உருவாக்குகின்றது.
அவனைப் பரிவு கொண்டு உற்று நோக்கி இப்படி அவதிப்படுகிறானே…! எண்ணும் பொழுது நாம் அதுவாக மாறிவிடுகின்றோம்.
அதைப் போன்று தான் சப்தரிஷிகள் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நாம் கண்களால் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
சப்தரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
1.உயிரான ஈசனிடம் ஏங்குகின்றோம்… இந்த உணர்வின் தன்மை அங்கே ஈஸ்வரலோகத்தில் உருவாக்குகின்றது.
2.நம் இரத்தங்களிலே அது இந்திரலோகமாக மாறுகின்றது
3.பின் அந்த அணுவின் தன்மை உருவாகும் பொழுது பிரம்மலோகமாக மாறுகின்றது.
சப்தரிஷிகள் அவர்கள் எப்படி இந்த வாழ்க்கையில் இருளை நீக்கிவிட்டு உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழுகின்றனரோ
1.அந்த அரும்பெரும் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும்பொழுது
2.அந்த ஏக்கம்… நாம் அதுவாக மாறுகின்றோம்.


சாமி சொன்ன வழியைக் கடைப்பிடித்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்த முடிகின்றது… என்று இரண்டு பேர் சொல்லுங்கள் பார்ப்போம்
அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேருடன் பழகுகின்றோம்.
1.அவன் இப்படிச் செய்தான்… இவன் இப்படிச் செய்தான்… மோசம் செய்து விட்டார்கள்… ஏமாற்றி விட்டார்கள்
2.இவன் நல்லவனாக இருந்தான்… எல்லோருக்கும் உதவி செய்தான் ஆனால் நோயால் இப்பொழுது அவதிப்படுகின்றான் என்று
3.இப்படிப்பட்ட எத்தனையோ உணர்வுகளை நாம் நுகருகின்றோம்.
சந்தர்ப்பங்களில் இது போன்று நுகர்ந்து விட்டால் நமக்குள் என்ன நடக்கின்றது…?
இந்த உணர்வு அனைத்து நம் உடலுக்குள் சென்று அது நரகாசுரனாக மாறி நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைக் கொன்று தின்ன ஆரம்பிக்கின்றது.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!
ரோட்டிலே செல்கின்றோம்… திடீரென்று ஒருவன் அங்கே அடிபடுகின்றான். அடப் பாவமே…! என்று கண்களால் உற்றுப் பார்க்கின்றோம்… நுகர்ந்து விடுகின்றோம்… பதட்டம் பயமும் வருகின்றது.
இது போன்று அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ விபரீத உணர்வுகளை அறிய நேருகின்றது… பார்க்க நேருகின்றது நம்மை அறியாமலே நமக்குள் பதிவாகி உடலுக்குள் வந்து விடுகின்றது.
கண்களோ இது அனைத்தையுமே நமக்குத் தெரியச் செய்கின்றது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும் செய்கின்றோம். ஆனால்
1.அப்போது நாம் எடுத்துக் கொண்ட பயமோ பதட்டமோ வேதனையோ அவை எல்லாம் உமிழ் நீராக மாறி
2.நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறி அந்த இரத்தம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குள் செல்லப்படும் பொழுது
3.அந்த நல்ல அணுக்களைக் கொல்லக்கூடிய நரகாசுரனாக மாறி விடுகின்றது
4.அதாவது… நம்மையும் வேதனைப்பட வைக்கிறது என்று காட்டுகின்றார்கள்.
அதைத்தான்
1.தீப ஒளித் திருநாளன்று கண்ணன் (நம் கண்கள்) நரகாசுரனைக் கொன்ற நாள்…! என்று காட்டி நீ விழித்திரு உடலுக்குள் தீமைகள் புகாது தடுத்து நிறுத்து என்றும்
2.விநாயகர் சதுர்த்தி அன்று தீமைகளை நிறுத்திப் பழகு என்றும்
3.இவ்வளவு அழகாக வருடத்தில் 12 மாதங்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.
ஞானிகள் கொடுத்ததை யாராவது நாம் சிறிதளவாவது மதிக்கின்றோமா…? அவர் சொன்னதை நம் வாழ்க்கையில் கடைபிடிக்கின்றோமா…?
இப்பொழுது இதை எல்லாம் நான் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றேன்… எல்லாம் கேட்கின்றீர்கள். எத்தனை பேர் இதைப் பின்பற்றுகின்றீர்கள்…?
“சாமி நன்றாகச் சொன்னார்…” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள்
1.எவ்வளவு அழகாகச் சொல்கின்றார் தெரியுமா…!
2.என்னைப் புகழ் பாடி விட்டுப் பொருள் காணாதபடி… பொருளைத் தனக்குள் வளர்க்கத் தெரியாதபடி
3.இன்றும் தியான வழியில் வருபவர்கள் இருக்கின்றார்கள்.
எங்கள் சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று கேட்பார்கள். ஆனால்
1.நான் கடைப்பிடித்தேன்… நான் செய்து காட்டினேன்…!
2.சாமி சொன்னார்… நான் செய்தேன்… என்னால் நிறுத்த முடிகின்றது… நிறுத்த முடியும்…! என்று
3.ஒரு இரண்டு பேர் நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்…!
ஏனென்றால் யாம் சொன்னபடி நீங்கள் செய்து பழக வேண்டும். தீமையை நீக்கும் அந்தப் பழக்கத்திற்கு நீங்கள் வரவேண்டும். அன்றாட வாழ்க்கையில் அதைச் செயலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான் நான் “மௌன விரதம்…” இருந்தது.
என்னுடைய நோக்கமே எப்படியாவது உங்களுக்குள் அருள் உணர்வுகளைத் தூண்டி அந்த ஞானிகள் உணர்வுகளைக் கவரும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான்.
ஆக…
1.அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்களே உங்கள் எண்ணத்தால் மாற்றி
2.உங்களுக்குள் வரக்கூடிய கெடுதலை நீங்களே தடுத்து நிறுத்திக் கொண்டே வந்தால்
3.பிறவில்லா நிலை அடைய முடியும் என்று உறுதிப்படுத்துவதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பரிணாம வளர்ச்சியில் நாம் தீமைகளை நீக்கி வளர்ந்தோம். அகஸ்தியன் தீமைகளை நீக்கித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அதை நாம் எடுக்க வேண்டும்
2.அதை எடுத்து நம் உடலில் பதிவு செய்து நம் உடலில் உள்ள இரத்தங்களில் பரவச் செய்ய வேண்டும்.
3.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.
உதாரணமாக விஞ்ஞான அறிவுப்படி செல்ஃபோன்களை (AIRCELL) வைத்திருக்கின்றார்கள் அதிலே எங்கிருந்து எல்லாம் பேசுகின்றார்களோ அந்த நம்பர் தெரிந்தால் பேசுகிறோம்.
வருகிறது… ரெக்கார்ட் செய்கிறோம்… மீண்டும் தொடர்பு கொள்கிறோம். திரும்பப் பேசும் போது யார்… யார்…? என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
செல்ஃபோன்களில் யாரிடம் எல்லாம் நாம் பேசுகின்றோமோ பதிவாக்குகின்றோமோ தெரிந்து கொள்கின்றோமோ இது அனைத்துமே பதிவாகி ஒரு ரெக்கார்டு போன்று ஆகிவிடுகின்றது. திரும்பி அவர்களுக்கு ஃபோன் செய்தோம் என்றால் அங்கே போகிறது.
இதே மாதிரித் தான் நம் உடலில் இருக்கக்கூடிய செல்கள் (ஊனுக்குள்) அதைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றது – எலும்புக்குள்.
அதையெல்லாம் நாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
2.எலும்புகளுக்குள் இருக்கும் ஊனுக்குள் (செல்கள்) அங்கே செல்போன்களில் பதிவாக்குவது போன்று இப்பொழுது பதிவாக்கி
3.அதை கூட்டிக் கொண்டே வர வேண்டும்.
அதைப் பெருக்கிக் கொண்டு வந்தால் நமது வாழ்க்கையில் முந்தி இதற்கு முன்னாடி எத்தனை வகையான அறியாத நிலைகள் குறைகளை செய்தோமோ அதை எல்லாம் குறைக்க முடியும்.
இப்படிக் குறைத்துப் பழகுவதற்குத் தான் நாம் இருக்கக்கூடிய தியானம். சுவாமி செய்வார் சாமியார் செய்வார் ஜோதிடம் செய்யும் யாகம் செய்யும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
நாம் கண்களில் பார்க்கின்றோம்… கருவிழி ருக்மணி பதிவாக்குகின்றது… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் மற்றவரிடமிருந்து வெளி வருவதைக் கவர்ந்து இந்த நோய்… இந்த குறைபாடு… இந்தத் தவறு என்று அதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
தெரிந்து கொள்கின்றோம்… கெட்டவன் என்றால் விலகிக் கொள்கிறோம். விலகினாலும் அந்தக் கெட்ட உணர்வுகள் கொண்டு “மோசமானவன்… மோசமானவன்” என்று பேசுகிறோம்.
1.அவன் உடலில் விளைந்த உணர்வுகள் இங்கே நம் எலும்புகளுக்குள் பதிவாகி
2.நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்தில் கலந்து அப்படிப் பேசக்கூடிய அளவிற்கு நம் உணர்வுகளைத் தூண்டி
3.அந்த அணுக்கள் விளைய ஆரம்பிக்கின்றது.
நாம் நினைக்கின்றோம் அவன் தான் தவறு செய்தான் என்று. ஆனால் உடனடியாக அதைத் துடைத்துப் பழகவில்லை என்றால் அவன் உடலில் விளைந்த தீமை நமக்குள் விளைந்த பின்… அவனைப் போன்று நாம் பல மடங்கு தவறு செய்யக்கூடியவர்களாகவே வந்து விடுகின்றது.
இதை நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.
கையிலே அழுக்குப்பட்டால் எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ உடலில் அழுக்குப்பட்டால் எப்படிக் குளிக்கின்றோமோ துணியில் அழுக்குப்பட்டால் எப்படித் துவைக்கின்றோமோ இது போன்று தான் ஆன்மாவில் படக்கூடிய அழுக்குகளை நாம் துடைத்து பழக வேண்டும்.
ஏற்கனவே நம் உடலில் ஜீவ அணுக்களாக அது இருக்கும் பொழுது அதற்கு அந்தத் தீய உணர்வு ஆன்மாவாக இருக்கும். நாம் எடுக்கக்கூடிய இந்த தியானத்தின் மூலம் அந்த ஆன்மாவையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே தியானம் எடுத்துப் பழகியிருக்கின்றோம். அதன் துணை கொண்டு நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்
1.நம் வாழ்க்கையைப் புனிதப்படுத்துவதற்கும்
2.சிந்தித்துச் செயல்படுத்துவதற்கும் அமைதிப்படுத்துவதற்கும்
3.அருள் ஞான வாழ்க்கை வாழ்வதற்கும் இது பயன்படும்.
இல்லையென்றால்…
1.நம் உடலில் உருவான அணுக்கள் அது சாப்பாடுக்கு ஏங்கத்தான் செய்யும்
2.உணர்ச்சியை உயிரிலே ஊட்டத்தான் செய்யும்
3.கண் வழி கவரத் தான் செய்யும்
4.உயிரிலே மோதத் தான் செய்யும்
5.அதே வேதனை உணர்வு நமக்குள் வரத்தான் செய்யும்.
6.அப்படியே விட்டு விட்டால் அதை மாற்றவும் முடியாது அந்த உணர்வு தான் வேலை செய்யும்
ஆகவே நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்குமே வாழ்க்கையை தியானம் என்று நாம் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.
சிறிது காலம் தான் வாழுகின்றோம் நூறு வருடம் வாழ்ந்தாலே அதிகம் தான். சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டுகின்றார்கள் நாம் எதையெல்லாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ நம் உயிர் அதை எல்லாம் உருவாக்கிவிடும்… அந்தக் கணக்குகள் கூடிவிடும்
அதிலே எந்தக் குணத்தை இந்த வாழ்க்கையில் நாம் அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் வேதனை என்றால் அடுத்துப் பாம்பு… கோபம் என்றால் புலி… வெறி என்றால் நாய் நரி போன்ற நிலைகளுக்கு நமது உயிர் இந்த உடலை மாற்றிவிடும்.
நம் உடலில் எத்தனை குணங்கள் இருக்கின்றதோ அதைப் போல பரிணாம வளர்ச்சியில் குணங்கள் கொண்ட உயிரினங்கள் எத்தனையோ உண்டு.
எந்தெந்த உணர்வுகளில் எந்தெந்த விஷம் இயக்குகின்றதோ அதனதன் வழி இயக்குகின்றது. இந்த வாழ்க்கையில் நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ இன்று மனிதன் என்றாலும்… “இன்றைய செயல் நாளைய உடலாக மாறும்…!”
உயிர் மாறுவதில்லை.. உயிர் உணர்வுகளை மாற்றிக் கொண்டே இருக்கும்… உடலை மாற்றிக் கொண்டே இருக்கும்.
உயிரோடு ஒன்றி “ஒரே நிலையாக நிலை கொண்டு இருப்பது…” துருவ நட்சத்திரம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்து நம் உடலில் பெருக்கி
2.நாமும் இனி பிறவியில்லை என்ற நிலையை அடைந்து… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
3.எந்த வேதனையும் நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ளப் பழகுதல் வேண்டும்.


“சப்தரிஷிகளுடன் கலக்கல்” என்பதே மகோன்னத ஜாலம்
“இந்திரஜால வித்தை” என்று கர்ம சித்துக்கள் ஆரம்ப நிலை ஆயினும்… அதனையும் வென்றிட்டவன் சித்தன் நிலையில் சித்துக்கள் பெறுகின்றான்.
ஒரு பொருளை உண்டாக்கிக் காட்டுவதும்… இருக்கின்ற பொருளை வேறு ஒரு பொருளாகக் காட்டுவதும்… அது ஜால நிலையே. அத்தனையும் தத்தம் செய்து கர்ம பல தியாகம் என்று காத்திட்டது வேதாள மகரிஷி கைக் கொண்ட சூட்சமம்,
1.ஞானக்கண் திறந்து… பிடரிக்கண் பார்வை அறிந்திட்ட சக்தியாக…
2.சிவாக்கினி உள்நாக்கின் மேலன்னத்தில் உருவாகி… சூட்சும தேகம் அதனுள் மூழ்கி
3.உலகப் பிடிப்பின் அதி ஆவலால் பொசுங்கிட்ட தன்மையால்
4.கைக்கொண்டிடும் தியானத்திலும் உயர்வாகப் பெறுகின்ற நிலையே சித்துக்கள் கைவரத்தக்க நிலை.
கர்ம தியாகம் கொள்கின்றவன் “மூலக்கறி” சமைத்து உண்கின்ற பேரருளின் பேராற்றல் பெறுகின்றான். உணவு சமைத்து உண்ணுகின்ற கறியால் அதனைக் கொண்டு குடிலை (உடலை மட்டும்) அலங்கரித்து வைப்பதால் பலன் என்ன…?
1.அதனை உண்ணுகின்ற முறை அறிந்து
2.உடல் வளர்த்து… “உயிர் பேணுகின்ற தன்மை உண்டல்லவா…!”
ஆத்ம நிலக் கூடமும் உயிர் மூலக்கறி வளர உண்ணுகின்ற முறை உணர்ந்து சமைப்பின் பலனைச் சமைத்திட்ட உட்பொருள் தன்மையின் தொடர் வழி ஈர்த்து உண்ணுகின்ற உணவு சிதாக்கினியைக் காட்டும்.
அங்கு உருவாகிடும் ஜாலம் எது தெரியுமா…?
1.உயிராத்ம சக்தியினை இணைத்து விழுப்பொருள் என்கின்ற தன்மைக்கு ஊட்டுவித்து…
2.சகலத்தையும் ஆட்டுவிக்கின்ற “சப்தரிஷிகளுடன் கலக்கல்” என்கின்ற சக்தியாகப் பயிர்ப்பித்தல்… அதுவே மகோன்னத ஜாலம்…!
இது எல்லாம்… இன்று புதியனவாக உணர்த்த வந்த நிலை அன்று. அத்திரி மகரிஷியும் அன்று ஊட்டுவித்ததால் பெற்றதே அனிமாது சித்துகளில் ஏழாம் நிலை.
ஒரு நிலை தவற விட்டதால் பிறப்பின் சூட்சுமத்திற்கு அதுவே வித்து எனும் நிலை உண்டாயிற்று. இந்த ஏழு நிலைகளுக்கும் சப்தரிஷிகளினால் “சப்த மாதாக்கள்” என்று பெயர் நாமப்படுத்திட்ட… உருவாக்கிட்ட சக்திகள் உண்டு.
1.சகலத்திலும் சகலமாகக் கலந்து அனுபவித்தல் என்ற பேரின்ப நிகழ்ச்சி
2.அதுவே எட்டாம் நிலை…!

கோலமாமகரிஷி தவமிருந்த குகைக்குள் தியானிக்கும் போது குருநாதர் எனக்கு உணர்த்திய உண்மைகள்
நான் கொல்லும் உயிரினங்களின் உயிரான்மாக்கள் மனித உடலுக்குள் வந்த பின் மனிதனின் உணர்வை நுகர்ந்து அது கருப்பைக்குள் செல்லும்போது மனித உருப்பெறும் தன்மைகள் எப்படிப் பெறுகின்றது…?
மனித உருப் பெறும் பொழுது
1.அந்தத் தாய் வேதனை கொண்டவரையோ சலிப்படைந்தவரையோ சங்கடப்படுவோரையோ
2.கால் முடமானவர்களையோ கண் இழந்தவர்களையோ இதைப் போன்று பார்க்கப்படும் பொழுது
3.அந்த உருவத்திலிருந்து வெளிப்படுவதை சூரியனுடைய காந்த சக்தி கவரும் பொழுது
4.கர்ப்பமான தாய் நுகர்ந்து விட்டால் கருவிலே எவ்வாறு அது உறுபெறுகின்றது…?
ஒவ்வொரு நொடிகளிலும் ஒரு உயிரணு ஒரு உடலுக்குள் செல்வதும் மனித உணர்வை நுகர்ந்து மனிதனாகப் பெறும் நிலையும்… தாயின் கருப்பைக்குச் சென்ற பின் கருவிலே வளரும் பொழுது தாய் நுகரும் உணர்வுகள் அதற்குப் பூர்வ புண்ணியமாக எவ்வாறு அமைகிறது…? என்ற நிலையையும் காட்சியாகக் காட்டினார் குருநாதர்.
1.குறைந்தது ஒரு லட்சம் உணர்வுகளை அறிந்து கொள்வதற்காக
2.மூன்று வருடம் அதைக் காணும்படி செய்தார்.
அப்போது சரியான ஆகாரம் கிடையாது. குறித்த நேரம் விடுபடும் பொழுது பச்சிலைகளைச் சாப்பிட்டு விட்டு பேரீச்சம்பழத்தையும் சாப்பிட்டுவிட்டு வெறும் தண்ணீரைக் குடித்துக் கொள்ளும்படி சொல்வார்.
அரை மணி நேரம் கொடுப்பார்… அதற்குள் அதைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அமர்ந்து அவர் சொல்வதைக் காணும்படி செய்வார்.
இவை அனைத்தையும் கொல்லூர் என்று சொல்லும் முகாம்பிகை மலைக் காட்டில் தான் காட்டினார். அங்கே மேலே தபோவனம் என்று உண்டு.
1.அங்கே கோலமாமகரிஷி தியானமிருந்த இடம் ஒரு குகையாக இருக்கும்.
2.ஆனால் பெரிய வனமாக இருக்கும்… மலை மீது செல்ல வேண்டும்… கூடு மாதிரி இருக்கும்
3.அதற்குள் அமர்ந்து அவர்கள் பெற்ற உணர்வுகளையும் மற்றதையும் அறியும்படிச் செய்தார்.
மற்ற உயிரினங்களை மனிதன் கொல்வான் என்றால் அவர் உடலுக்குள் செல்வதும் அது எப்படி எந்த நிலை ஆகிறது என்பதை உணர்த்தினார்.
செல்ல பிராணிகளை இன்று நாம் வளர்க்கின்றோம் அல்லவா. அவைகள் இறந்த பின் யார் மீது பற்றுள்ளதோ அந்த வளர்த்தவர் உடலுக்குள் சென்று மனிதனாக எப்படிப் பிறக்கிறது என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றார்.
ஏனென்றால் நாம் எத்தனையோ நிலைகள் பட்டு இன்று மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம். அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான இந்த உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்.
1.அவர்கள் எத்தனையோ இன்னல் பட்டு உயர்ந்த உணர்வை வளர்த்துக் கொண்டவர்கள்
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்து ஒளியின் சரீரம் பெற்றவர்கள்.
3.அதை நாம் நுகர்ந்தோம் என்றால் இந்தச் சந்தர்ப்பம் நம்மைப் பிறவி இல்லா நிலையை அடையச் செய்யும்.
அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.

ஞானச் செல்வங்களுக்கு வழிகாட்டுகின்றோம்
1.புகழ் கொண்ட ஜீவன் பல்லக்கில் செல்கின்றது…
2.அதே ஜீவன் சிவத்தின் தன்மை நீக்கம் பெற்று “சவம்” எனப்படும் நிலையில் அதுவும் ஊர்வலம் செல்கின்றது.
இரண்டும் காரண பேதங்கள் என்றாலும்… சுமந்திடும் பல்லக்கு மூங்கிலால் உருவானதே.
கலைஞன் கை பட்டு இளந்தளிர் மூங்கில் அதன் பக்குவம் கொண்ட திடம் என்ற வளர்ச்சியில் அது வளைக்கப்படும் பாங்குகளில் வளைந்து… வளர்ந்து… பல்லக்கு உருவாக்கிடும் கலைஞனின் கைவண்ணத்திற்கொப்ப வளர்ந்து நிற்கின்றது.
வெட்டிடத் தழைக்கும் தழைவுறுகின்ற தன்மை தன்னிச்சையில் மூங்கில் உயர்ந்து வளர்ந்து நின்றாலும் பக்குவத்தின் வளர்ச்சி அற்ற தட்டை எனப்படும் மூங்கிலானது அது வளர்ந்துள்ள புதரின் கண்வாசம் செய்திடும் “இசை வண்டு” வளர்ச்சியின் திடமற்ற மூங்கில்களைத் துளைத்து விட்டு அதனுள்ளும் வாசம் செய்திடும்.
காற்றில் அசைந்திடும் அந்த மூங்கில்கண்
1.அதனுள் நுழைந்திடும் காற்று உண்டாக்கிடும் ஓசை… மூங்கிலை இசை பாட வைக்கின்றது.
2.ஆனால் வண்டு துளைத்த மூங்கில்கள் “இறுதி ஊர்வல நிலைக்கே…”
3.மற்றும் மனிதனின் தேவைப்படும் காரியங்கள் ஆற்றிடக் கொண்டு செல்கின்றான்.
கலைஞன் கைபட்டு உருவாக்கிட்ட பல்லக்கு… தேவ ஆராதனை பெற்றிடும் சிறப்பாகப் பரிணமித்து விளங்குகின்றது. அது போல் ஆத்ம பலம் கூட்டிடும் செயலாக ஜீவன் பெறுகின்ற சத்தியத்தின் சக்தி எனும் வளர்ப்பு பக்குவம் காட்டிடும் உனது பண்பை.
அன்று வேதாள மகரிஷி வேதாந்த நாதனுக்கு உரைத்ததைப் போல்
1.“வண்டு துளைத்திடாப் பக்குவம்” என்றே
2.ஆத்ம பலம் நாடிடும் உயர் ஞானச் சித்தின் நலம் விரும்பும் ஞானச் செல்வங்கள் பக்குவம் கொண்டிடவே
3.”கர்ம தியாகம்” வழி காட்டப்பட்டது
4.இந்தச் சொல்லை வியாசக பகவான் உரைத்தது.
அர்ஜுனனும் கிருஷ்ண பரமாத்மாவும் “நரநாராயண ஐக்கிய நிலை” என்றிட்ட சூட்சுமத்தை அன்று அந்த மகான் உரைத்த நிலையையே இன்று இந்தக் கலியில் அதனை முழுமைப்படுத்திக் காட்டியவர் ஐயப்பன்.
ஐயப்பன் உரைத்தது என்ன…?
1.சிவத்துக்குள் நான் இருக்கின்றேன்…
2.நாராயணன் உள்ளும் நான் இருக்கின்றேன்…!
மத பேதங்கள் கடந்திட்ட தெய்வ நிலை காட்டிடும் ஓர் சிறந்த தத்துவத்தை இந்தக் கலியிலும் மனிதன் கேடுறுத்துகின்றான்.
1.அவர் பெற்று வளர்த்திட்ட ஜோதிஸ்வரூப நிலையை என்றும் காணலாம்
2.அதிலே பல சூட்சுமங்கள் உண்டு…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்து கொள்ள… பக்தி என்ற மார்க்கத்தில் நல்ல ஒழுக்கத்தைக் கடைபிடித்து நல்லதன் நிலைகள் கொண்டு… மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி அருள் உணர்வுகளைத் தனக்குள் கூட்டி… மெய் வழி செல்லும் மார்க்கங்களைச் சாதாரண மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் நன்னாள் தான் “மார்கழி மாதம் பௌர்ணமி…!”
மார்கழி மாதம் ஏகாதசி அன்று தான் உடலை விட்டுக் குருநாதர் விண் சென்றார். விண் சென்றபின் முதல் நிலையாக என்னை இயக்கியதும் பேசச் செய்ததும் அவருடைய ஆன்மாவின் உணர்வின் நிலைகள் தான்.
பல உண்மைகளை உணர்வதற்கு அவர் உணர்வின் தொடர் வழி கொண்டு நான் செல்ல 12 வருட காலம் பல அனுபவங்களைக் கொடுத்துக் கொடுத்து அவர் எப்படிச் சூட்சும நிலைகள் கொண்டு இருக்கின்றாரோ அந்த சூட்சும நிலையைக் கண்டுணரும்படிச் செய்தார்.
1.அவர் ஒளி முன் செல்ல நான் பின் சென்று அவர் காட்டிய அருள் நெறியின் நிலைகள் கொண்டு
2.ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு உடலின் உறுப்புகளும் அது எவ்வாறு உருவானது…?
3.இயற்கையின் நிலைகள் கொண்டு என்பதை இது எல்லாம் எவ்வாறு ஆனது என்ற மெய் உணர்வைக் காட்டி
4.அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய ஆற்றல்மிக்க சக்திகளை எவ்வாறு பெற வேண்டும்…? என்று எனக்குக் காட்டினார்.
அவர் எனக்கு அருளிய அந்த ஆற்றல்மிக்க நிலைகளை நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதை இன்று உபதேசிப்பது. ஆக… மார்கழி மாதம் இந்தப் பௌர்ணமி மிக முக்கியமான நாள்.
ஈஸ்வரபட்டர் என்ற நாமம் கொண்ட உடலிலிருந்து குருநாதர் விண் சென்றாலும்
1.இதற்கு முந்தி எத்தனையோ கோடி லட்சம் ஆண்டுகள் முன்னாடி விண் சென்று சப்தரிஷி மண்டலங்களாக அடைந்தது
2.அவருடைய (ஈஸ்வராய குருதேவர்) உணர்வின் தன்மை அந்த அலைகள் வரும் பொழுது தான்
3.பூமிக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதர்களின் உள்ளத்திலும் இது பட்டு
4.அதன் வழி இந்த மெய் உணர்வின் ஒளிகள் வளர்ந்து வளர்ந்து இன்றும் பரப்பிக் கொண்டிருக்கின்றது
4.இந்த பூமி என்ற நிலையில் பல பாகங்களிலும் இது பரவிக் கொண்டிருக்கின்றது.
உடலை விட்டுச் சென்ற ஒரு உயிரான்மா… பூமியின் பிடிப்பில் இருப்பதை… அதை எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்ற பேருண்மையை எனக்கு உணர்த்தினார் குருநாதர். ஏனென்றால்
1.இந்த மார்கழி மாதம் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்…
2.ஈஸ்வரபட்டராக இருக்கப்படும் பொழுது இந்த உடலில் இருந்து வெளிச் சென்று விண்ணுலகம் சென்றார்.
அவர் உடலுடன் இருக்கப்படும் பொழுது பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகளைச் சொல்லாக சொல்லி… எனக்குள் (ஞானகுரு) அதை உபதேசித்து உணர்த்தி… அவரின் ஆற்றல்மிக்க சக்தியைப் பதிவு செய்தார்.
குருநாதர் உங்களுக்குப் பதிவு செய்தார்… எங்களுக்கு நீங்கள் எப்படிப் பதிவு செய்கிறீர்கள் என்று நிறையப் பேர் கேட்கலாம்.
ஒரு மனிதன் நம்மைத் திட்டுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவன் நமக்குப் பின்புறமாக சுவருக்கு அப்பால் நின்று பேசிக் கொண்டிருந்தாலும்
1.என்ன…? நம்மைப் பற்றி குறை பேசுகிறார்களா…! என்று கூர்ந்து கவனித்தால் போதும்
2.அவன் திட்டியதெல்லாம் இங்கே பதிவாகின்றது.
பதிவான பின் என்ன செய்கின்றோம்…?
ஆகா… அவ்வளவு தூரத்திற்கு ஆகிவிட்டதா…? என்று அந்த உணர்வை ஏற்று அந்த உணர்வையே நாம் தியானிக்கிறோம்.
அதற்கடுத்து அவனுடன் சண்டை செய்வதற்கும் எப்படி எந்தெந்த வகையில் அவனுக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்றும் செயல்படுத்துகின்றோம். சாதாரண நிலையில் இப்படித்தான் இருக்கின்றோம்.
1.இது எல்லாம் காந்தப்புலனின் நிலைகள்
2.நாம் எதன் மேல் கவனத்தைச் செலுத்துகின்றமோ அந்தக் கவனத்தின் உணர்வலைகள் அதற்குள் பதிவாகின்றது.
தெளிவாக இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்…!
குருநாதர் பித்தனைப் போன்று இருந்திருந்தாலும்… பல பல முறைகளிலே பல எண்ணங்களை எனக்குள் சொல்லும் பொழுது நான் முதலில் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தான் இருந்தேன்.
அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை. இப்போது நான் சொல்லும் பொழுது உங்களுக்குப் புரியவில்லை… புரியவில்லை… என்று சொல்கிறீர்கள் அல்லவா. சாமி… நீங்கள் சொல்கிறீர்கள்… எங்களால் திருப்பிச் சொல்ல முடியவில்லை…! என்று சொல்கின்றீர்கள்.
அதைப் போன்று தான் குருநாதர் அவர் உடலுடன் இருக்கும் போது எனக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது நான் செவிகளில் கேட்டாலும்
1.ஒரு நிமிடத்தில் கன்னடத்தில் பேசுவார்
2.ஒரு நிமிடத்தில் மலையாளத்தில் பேசுவார்
3.ஒரு நிமிடத்தில் தமிழில் பேசுவார்
4.ஒரு நிமிடத்தில் தெலுங்கில் பேசுவார்
5.இந்த உலகில் எத்தனை பாஷைகள் இருக்கின்றதோ அத்தனை பாஷைகளிலும் ஒவ்வொரு வார்த்தையைச் சொல்வார்.
அதை நான் எப்படிப் புரிந்து கொள்வது…?
எல்லாம் சொல்லி விட்டு நான் என்ன சொன்னேன்…? என்று கேட்பார்.
“தெரியவில்லை” என்று சொன்னால் ஏன் தெரியவில்லை…? என்று கேட்பார். “தெரிகிறது” என்று சொன்னால் என்ன தெரிந்து கொண்டாய்…? என்று கேட்பார். இரண்டுக்கும் நான் விடை சொல்ல வேண்டும்.
இப்படித்தான் என்னைச் சிக்கலிலே மாட்டிப் பல இம்சைகளைக் கொடுத்துக் கொடுத்துத் தான் பல பல முறைகளைக் கையாண்டு
1.என்னுடைய கவனத்தை அவர்பால் திருப்பச் செய்து
2.அவர் என்ன சொல்கிறார் என்று உற்றுக் கவனிக்கச் செய்து
3.அவருடைய சொல்வாக்கின் நிலைகளைப் பதிவு செய்தார்.
அப்படிப் பதிவு செய்த அந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்தாற்போல் அடித்து விடுவாரோ… திட்டி விடுவாரோ… பிடித்து விடுவாரோ…! என்ற
1.இந்த எண்ணத்தைக் கொண்டு தான் அவரைக் கூர்ந்து கவனித்து
2.அவருடைய சொல்லுக்குள் நான் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
3.அந்த ஆற்றல் மிக்க நிலையை எனக்குள் பதிவு செய்தார்.
ஏனென்றால் அந்த அருள் ஞானி அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை என்றாலும் நான் ஜெபமிருந்து வரம் வாங்கி அதை எடுக்கவில்லை.
அவர் உணர்வின் ஆற்றலை எனக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு அவர் சென்ற வழிகளிலேயே அதன் வழிகளில் பின்னாடி அதைப் பின்பற்றும் பொழுது தான் அந்த ஆற்றலின் சக்தியை நான் உணர முடிந்தது. இப்பொழுது அதை உங்களிடம் பரிமாறிக் கொள்ளவும் முடிகின்றது.
விண்ணுலக ஆற்றலையும் மண்ணுலகத்தின் தன்மையும் மண்ணுலகத்தில் விளைந்தது உயிரியலாக மனித உடலுக்குள் உயிர் நிலைகளில் இருந்து மனிதனுக்குள் விளைந்தது எவ்வாறு…? என்ற நிலையை உணர்த்தினார்.
அதை நான் பின்பற்றுவதற்கு எத்தனையோ முறைகளைக் கையாண்டார்.
குருநாதர் ஆற்றல் பெற்ற நிலைகளில் ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில் செயல்பட்டார். ஆனாலும் பித்தரைப் போன்று தான் பல சரீரங்களில் இருந்துள்ளார்.
“பித்தன்…!” என்றால்
1.புறவாழ்க்கையின் நிலைகளை (அதாவது இன்று நாம் வாழும் வாழ்க்கை என்ற நிலைகளை) அப்புறப்படுத்திவிட்டு
2.மெய் ஒளியையே காண வேண்டும் என்ற உணர்வுடன் தான் அவர் கடந்த காலங்களில் செயல்பட்டுள்ளார்.
மெய் வழியில் செயல்பட வேண்டும் என்று அன்று எண்ணி இருந்தாலும் “அவர் எண்ணங்கள் அனைத்தும்” அவருக்குள் விளைவித்த அனைத்தையும் அக்காலத்தில் வாழ்ந்தோருக்கும் சரி… இக்காலத்தில் வாழ்வோருக்கும் சரி… அவர் எண்ண ஒளிகளைப் பதிவு செய்து அவரவர் எண்ணங்களிலே அதை விளைவிக்கும் ஆற்றலாகத் தான் வெளிப்படுத்திச் சென்றார்.
ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில் இருக்கப்படும் பொழுது அவரை அணுகியவர்கள்… சந்தித்தவர்கள்… அனைவருமே
1.சொத்து வேண்டும்… சுகம் வேண்டும்… நோய் போக வேண்டும்,,, வைத்தியம் பார்த்து அதிலே சம்பாதிக்க வேண்டும்…
2.குருநாதரிடம் ஆசி வாங்கினால் வீடு வாங்கலாம் சொத்து வாங்கலாம் வயல்கள் வாங்கலாம் என்ற இந்த ஆசையில் தான் வந்தார்கள்.
ஆனால் நானோ அவரைப் பார்க்கும் போதும் சரி… அவர் என்னைக் கூப்பிட்டுச் சொல்லும் போதும் சரி… இவர் பெரிய மந்திரக்காரர் போல் இருக்கிறது… பித்துப் பிடித்திருக்கின்றார்…! என்ற எண்ணத்தில் அவரை பார்த்தாலே நான் விலகி ஓடிக்கொண்டு இருந்தேன்.
ஆனால் நகர்ந்து விலகிச் சென்றாலும்… “உன்னை விட்டேனா பார்…!” என்று விரட்டிக் கொண்டு வந்தார். தப்பித்து நான் விலகிச் சென்றாலும் கூட அவருடைய மெய் உணர்வின் தன்மையை பல சக்திகளை எனக்குள் பதிவு செய்தார்.
குருநாதர் மெய் ஒளியைக் கண்டு.. இந்த மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று தான்… அவர் விண் சென்றார்.
ஆகவே அவர் எனக்கு உணர்த்திய நிலைகள் கொண்டு
1.ஞானத்தைப் பெற வேண்டும் என்று உண்மையான நிலைகளில் வருபவருக்கு
2.அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் எல்லோருக்கும்… கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே தான் இதை வெளிப்படுத்துகின்றேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் எனக்கு எப்படி ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்தாரோ அதைப் போல் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் செவி வழி கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து… உங்கள் புலனறிவு கொண்டு ஈர்க்கும் நிலையாக… அந்த மெய் ஞானிகள் உணர்வின் சத்தை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).
இந்த உணர்வின் நினைவை நீங்கள் கூட்டும் போது காற்றிலிருந்து உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.
1.அத்தகைய பழக்கத்தினைக் கொண்டு வருவதற்குத் தான் தியான வழியினைக் காட்டி
2.அதன் மூலம் உங்கள் சிந்தனையைத் தூண்டச் செய்து
3.காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் ஞானிகளின் அருள் சக்திகளையும்
4.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேராற்றல்மிக்க சக்திகளையும் நீங்கள் பெறுவதற்காக இதைச் செய்கின்றோம்.
ஏனென்றால் அறிந்துணர்ந்து… தெரிந்து கொண்டு அதன் வழிகளில் நீங்கள் பின்பற்றும் நிலைகள் வேறு.
“ஒருவர் நம்மைத் திட்டுகிறார்…” என்ற உடனே அந்த உணர்ச்சிகள் பட்டதும்… நம்மை அறியாமலே
1.அவர் மேல் நமக்கு எவ்வளவு எண்ணங்கள் தோன்றி… சிந்தனைகள் தோன்றுகிறதோ…?
2.அவரை எப்படி உதைக்க வேண்டும்…?
3.எதன் எதன் மறைவிலே அதைச் செயல்படுத்த வேண்டும்…? என்ற “அந்த ஞானம் பேசுகிறது….”
அதைப் போன்று தான் மெய் வழி செல்ல வேண்டும் என்ற உணர்வுடன் ஏங்கி இருப்போருக்கு அந்த ஞானிகளின் ஆற்றல்கள் துரித கதியில் கிடைக்கும்.
ஆகவே எல்லாம் தெரிந்து எடுப்பது என்றால் மிகவும் சிரமம்…!
“எதையோ பின்னிப் பின்னிப் பேசுகின்றேன்…” என்று எண்ண வேண்டாம். இந்தப் பின்னலுக்குள் பல நிலைகள் உண்டு. பல நூல்களின் தன்மை பின்னி வரும் பொழுது தான் எத்தனையோ வகையான துணிமணிகளை நாம் ஆடைகளாக அணிகின்றோம்… அழகுபடுத்தும் நிலையாக அது வருகிறது.
ஆகவே இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வரப்படும் பொழுதுதான் சிந்தனைக்குரிய நிலைகள் கூடி
1.யாம் சொல்லும் தியான நிலையில் வரப்படும் பொழுது பல ஆற்றல் மிக்க நிலைகளைக் குவித்து
2.உங்களுக்குள்ளேயே அருள் ஞான வழிகளை அது காண்பிக்கும்… அருள் வழியிலே செல்லவும் இது உதவும்.
காரணம்… குருநாதர் எனக்கு எவ்வழியிலே காட்டினாரோ அதே போன்றுதான் உங்களை அறியாமலேயே மெய் ஞானத்தின் அருள் வழி நீங்கள் சென்று விஞ்ஞான உலகில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை விடுவிக்கும் சக்தியாக… மெய் வழியைப் பெறும் சந்தர்ப்பத்தையும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்யவும் இதைச் செய்கின்றோம்.
“யாம் முழுமையாகச் சொல்லவில்லை…” என்று சிலர் அந்த ஏக்கத்தில் இருக்கலாம். முழுமையாகச் சொல்வது என்று இல்லாதபடி
1.யாம் பதிவு செய்த நிலைகளை எல்லாம்
2.நீங்கள் தியானத்தில் இருக்கும் பொழுது அந்த உண்மையின் நிலைகள் உங்களுக்கு நிச்சயம் தெரிய வரும்.
3.வளர்ச்சியாக… வளர்ச்சியாக… உங்களுக்குள் “உள்ளிருந்தே அது தெரிய வேண்டுமே தவிர…”
4.வெளியிலே முழுமையாகப் பேசிக் கேட்டு அதைத் தெரிந்து கொள்வதால் பலன் ஏதுமில்லை.
எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் விளையப்படும் போது தான் இருள் சூழும் நிலைகள் குறைந்து… மெய் ஒளியின் ஆற்றல்கள் கூடி… உங்களுக்குள் அறியாது வந்த தீமைகள் குறையும்… அருள் ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகும்… அதைக் கவரும் தகுதியும் உங்களுக்குள் வளர்ச்சியாகும்… நீங்கள் வளர்வதற்கு அது பயன்படும்.
அதனால் தான் சுருங்கச் சொல்லி உங்களுக்குள் பதிவு செய்து… அருள் வழியில் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் இதை உணர்த்துகின்றேன்.
1.ஆகவே எனக்குக் கிடைக்குமா…? என்று நீங்கள் சந்தேகப்பட வேண்டியதில்லை
2.சந்தேகத்தின் நிலைகள் கொண்டு வந்தால் இதைச் செயல்படுத்த முடியாது.
விண்வெளியில் எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் இராக்கெட்டை அனுப்புகின்றார்கள். ஆனாலும் இங்கிருந்து தான் அதை அங்கே இயக்குகிறார்கள்… இயக்க முடியுமா…! என்ற சந்தேக நிலை இல்லை.
ஆக அந்த இயந்திரத்தில் இருக்கும் ஆற்றல்களுக்கும் மனிதன் சொல்லிப் பேசி நாடாக்கள் வழி பதிவாக்கிக் கம்ப்யூட்டர் மூலம் ஆணையிடுவதற்கும் (COMPUTER LANGUAGE) “அது செருகப்படுகின்றது…”
அவ்வாறு செருகி அதிலே பதிவு செய்த நிலைகள் கொண்டு நாடாக்கள் வழி ஆணையிட்டு அந்த இராக்கெட்டை இங்கிருந்து திசை திருப்புகின்றார்கள்… அதை இவர்கள் வசதிக்குத் தக்கச் சீராக்கவும் செய்கின்றார்கள்.
இப்படி…
1.ஆயிரம் டன் எடையுள்ள அந்த இயந்திரத்தையும்
2.மனிதனுடைய எண்ண வலுவானது அந்த எண்ண ஒலிகள் அது இயக்குகின்றது (மனிதனின் எண்ண ஒலிகள் மிகவும் வலு கொண்டது)
அதைப் போன்று தான் குருநாதர் காட்டிய வழியில் “உயர்ந்த சக்திகளை” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்… ஒரு கம்ப்யூட்டர் மூலம் அங்கே இராக்கெட்டை இயக்குவது போன்று.
இன்னும் சிலர்… இத்தகைய முக்கியமான விஷயங்களை எல்லோருக்கும் சொல்லி ஏன் இதைத் தெரியப்படுத்தவில்லை…? என்று நினைக்கலாம்.
1.உண்மைகளை வெளிப்படுத்தி… ஆர்வத்தைத் தூண்டி… அதன் மூலம் அவர்கள் வருவதைக் காட்டிலும்
2.”மெய் ஒளியைப் பெற வேண்டும் என்று ஆசையைத் தூண்டி…” அதன் வழி வருவது தான் முக்கியம்.
முக்கியமான நிலைகள் என்று பெறுவதற்குரிய நிலையில் இருந்தாலும் அதை விளம்பரம் செய்யாதபடி
1.”விளம்பரத்தைச் செய்து…” பெரும் ஆசைகளை ஊட்டுவதைக் காட்டிலும்
2.”தான் பெற வேண்டும்…” என்று ஆசை அவரவர்களுக்குள் உந்தப்பட்டு
3.அதை மையமாக வைத்து வரும் பொழுது தான் ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளைக் கிடைக்கப் பெறச் செய்ய முடியும்.
சாமி நமக்கு எல்லாவற்றையும் சொல்வார்… சாமி நமக்குச் செய்து கொடுப்பார்… ஆகையினால் சாமியைச் சந்திக்க வரலாம்…! என்று அத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டி… இந்த உணர்வின் வேட்கைகள் வரும் பொழுது “அது உங்களுக்குள் நிலைத்திருக்காது…”
தான் உள்ளத்தால் உண்மையான நிலையில் வேட்கைகள் உருவாகி அந்த வேட்கையின் அடிப்படையில் வரும் பொழுது தான் அந்த அருள் வழியைப் பெறும் தகுதி பெற முடியும்.
மெய் ஞானிகள் சென்ற அருள் வழி கொண்டு
1.“உங்கள் உணர்வுகளை ஒளியாக மாற்றும் வல்லமை உங்களுக்கே கிடைக்கும்…!”
2.அதைக் கிடைக்கச் செய்வதற்குத் தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு அடிக்கடி உபதேசிப்பது.

Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.