
“அன்பு” தானப்பா கடவுள்
அன்பு வழி காட்டிட்டு… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாய் செயற்படுபவன்…
1.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
2.பிற உயிர்களையும் தன்னுயிர் போல் நேசிக்கும் செயற்பாடு உடையவனாய் இருத்தல்
3.தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாய் வெளிப்படும் பொழுதே போதனையை ஏற்று
4.தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு உபதேசத்தை ஏற்றவன் அந்த நன்நெறியில் பிறழாமல்
5.அவ்வன்பையே பற்றுக் கோடாய்க் கொண்டிட்ட எண்ண செயலினால்
6.நல் வழிவகைச் செயலைக் கைக் கொள்வோன் மனிதன் என்ற முழுமை பெறுகிறான்.
7.அன்பும் பரி பூரணத்துவம் பெறுகின்றது.
இயேசு காட்டிட்ட அன்பு வழி… “மதம்” என்ற ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. ஆனால் எம்மதத்தினரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம் வழி.
மனித எண்ணத்தையும் அன்பு சாம்ராஜ்யத்தையும் ஆள வந்த அம்மகானுக்கே தந்திட்ட பரிசு “சிலுவை ஏற்றுதல்…” இன்றும் உண்மையைப் புகட்டினாலும் மத வழிச் செயலில் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா…!
அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?
1.குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
2.உலக மக்கள் படும் இன்னல்களுக்காக தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு தாய்மையின் உணர்வு கொண்டே
3.ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி உயர் நிலை பெறவே ஊட்டிட்டார்… ஊட்டிட்டார்… அன்பு கொண்டே ஊட்டிட்டார்.
தாய் முகம் கண்ட குழந்தை தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களை செவிமடுத்தினர் என்றால்… அன்றைய கால கட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயற்படாதொழிந்த குழப்ப சூழ்நிலையில் உண்மையை உணர்த்தி அளித்திட்ட போதனைகள் மக்களுக்கு தெளிந்த சிந்தனை அளித்து ஈர்த்தது என்றால் அன்பின் திறத்தை என்னவென்பது…?
அன்புதானப்பா கடவுள்.
சத்திய நிலை கடைப்பிடித்த மகான்களுக்கே அவச்சொல் என்றால்
1.சிந்தனா சக்தி செல்லும் வழிதான் என்ன…?
2.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா கூட்டங்கள் கூட்டினார்….!
இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகிறது.
ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுவோர் அம்மத வழிதனில் எண்ணிக்கையில் பலர் இருப்பினும்… அவர்களும் வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத வெறி உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.
உண்மை வழியறிந்து அம்மகான் காட்டிட்ட வழிதனை கடைப்பிடிக்க முயலுவோர் முயலட்டும்.
அன்பு கொண்டு குணங்களின் செயலை தன்னுள் கண்ட இயேசுபிரான்
1.’சைத்தான்’ என்று காட்டியது தீய குணங்களைத் தான்.
2.சைத்தானின் குணங்களுக்கு ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி
3.அவைகளைப் பக்குவமாய் விலக்கிடவே தியானத்தின் வழி காட்டியதே “அப்பமும் மீனும்…”

கண்ணன் தேரின் சக்கரத்தை அழுத்தினான் என்றால் உட்பொருள் என்ன…?
அர்ச்சுனன் சகலகலா வல்லவன் என்று காட்டுகின்றார்கள். சகல சக்தியான அந்த வல்லமை பெற்ற நிலைகள் நம் எல்லோருக்கும் உண்டு என்பாதை நினைவுபடுத்திக் கண்ணின் நினைவு கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.
ஒருவன் தீமை செய்கிறான் என்றால் உடனே ஈஸ்வரா…! என்று இங்கே புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி அங்கே தாக்க வருபவர் உள்ளத்திற்குள் அதைப் பாய்ச்ச வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையைத் தன் புலனறிவால் எடுத்து
1.தீமை செய்ய வேண்டும் என்று எவன் எய்ய விரும்புகின்றானோ
2.அவனுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சி
3.என்னுடன் நேசமாக வரும் எண்ணங்கள் அங்கே வளர வேண்டும் என்று
4.இந்த அம்பை நம்மை எய்யச் சொன்னார்கள்.
அதாவது அங்கிருக்கும் தீய அலையின் தன்மையை வீழ்த்தச் சொன்னார்கள் ஞானிகள். ஆனால் ஆளையே வீழ்த்தச் சொன்னார் என்றும் அது தான் வீரம்… வல்லமை…! என்று இங்கே காட்டுகின்றார்.
ஒருவன் நமக்குக் கெட்டது செய்கிறான் என்றால் பதிலுக்கு அவனை அழிக்க வேண்டும் என்று தான் பெரும் பகுதி எண்ணுகின்றோம்.
ஆனால் அதே சமயத்தில் ஈஸ்வரா அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து
1.அறியாத நிலையில் செயல்படுவதிலிருந்து அவன் விடுபட வேண்டும்
2.நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் அவனுக்குள் உதயமாக வேண்டும் என்ற இந்த அம்பை எய்ய வேண்டும்.
இது மனிதனின் தலையாயக் கடமை…!
ஏனென்றால் மனிதன் உருவாக்கும் நிலைகள் பெற்றவன்… பிரம்மாவாகச் சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்றவன். ஒளியின் சிகரமாகச் செல்லக்கூடியவன். இதை அனுபவத்தில் கொண்டு வருவதற்குத் தான் கீதா உபதேசத்தின் நிலைகளைக் காட்டினார்கள்.
எந்தெந்த உணர்வின் தன்மை தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளை நினைவு கொண்டாயோ அந்த உணர்வின் தன்மை கொண்டு
1.சகலத்தையும் உருவாக்கும் ஆற்றலாக இந்த உடலை உருவாக்கினேன்.
2.அனைத்திலும் நான் கலந்துள்ளேன்
3.எதை எடுத்தாலும் எதை நினைத்தாலும் நான் அதிலே கலந்தே வந்தவன்.
4.நீ எதை நினைக்கிறாயோ அதை நான் வழி நடத்திச் செல்கின்றேன் என்று கண்ணன் சொல்வதாக…
5.அதாவது “நம் கண்கள்…!” சொல்வதாகக் கீதையில் அவ்வளவு தெளிவான நிலைகளைத் தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.
இதை நாம் உணர்ந்து கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்ய பழகிக் கொள்ள வேண்டும்… தயவு செய்து அலட்சியப்படுத்தி விடாதீர்கள். ஒவ்வொரு நொடிக்கும் அதை எடுத்துப் பழகுங்கள்.
1.எப்பொழுது ஒருவர் நமக்குத் துன்பம் ஏற்படுத்தும் நிலைகள் ஏற்படுத்துகின்றாரோ
2.அந்தத் துன்பம் நமக்குள் வந்த பின் அவனைத் துன்ப்படுத்த வேண்டும்… அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ
3.அது தான் ஓ…ம் நமசிவாய சிவாய நம ஓ…ம்.
(துன்பம் ஏற்படுத்தியது நமக்குள் சிவமாகி ஓ…ம் நமசிவாய… நம்மிடமிருந்து அதுவே அடுத்தவரைத் துன்ப்பபடுத்தும் சக்தியாக வெளி வருகிறது சிவாய நம ஓ…ம்)
எந்தக் குணத்தை எண்ணுகின்றேனோ அது எனக்குள் ஜீவன் ஆகி ஓ…ம் என்று பிரணவத்தின் சக்தியாக வளர்கின்றது. அந்தச் சக்தி என் உடலுக்குள் சேருகின்றது. அது தான் ஓ…ம் நமசிவாய சிவாய நம ஓ…ம். நான் எதை எண்ணினாலும் அந்த உணர்வு எனக்குள் சிவமாகிறது (உடலாகிறது).
நான் ரோட்டில் நடந்து செல்லும் போது
1.ஒருவன் செய்கையைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி… அந்த உணர்வை எனக்குள் சேர்க்கும் பொழுது உமிழ் நீராகச் சேர்ந்து சிவம் (உடல்) ஆகின்றது.
2.அடுத்து ஒருவன் தவறு செய்கின்றான்… அயோக்கியத்தனம் செய்கின்றான்… என்று பார்த்து அந்த உணர்வை எடுத்தவுடனே அதுவும் உடலாகிறது
இப்படி சதாசிவமாக நம் உடலாக ஆகிக் கொண்டே உள்ளது. வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சையும் உடலாக ஆக்கிக் கொண்டே இருக்கின்றோம்.
கீதையில் சொன்னது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகிந்றாய். நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அந்தச் சுவாசத்தின் வழி அதுவாகிறாய்.
எப்பொழுது தீமை உங்களுக்குள் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மெய் ஒளியின் சக்தியை நமக்குள் சிவமாக ஆக்கிடல் வேண்டும்.
1.எதிரிகள் எத்தகைய நிலைகள் கொண்டு நம்மைத் துன்புறுத்துகின்றனரோ
2.தீய உணர்வுகள் நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறதோ
3.எத்தகைய ஆவியின் தன்மை நமக்குள் தீமையை உருவாக்குகின்றதோ
4.அப்போதெல்லாம் ஈஸ்வரா என்று (புருவ மத்தியில்) குருக்ஷேத்திரப் போரில் நின்று
5.அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எனக்குள் இருக்கக்கூடிய ஆன்மாக்கள் அனைத்தும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்
5.என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்
6.என் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்க வேண்டும்.
யார் நமக்குத் தீமை செய்தாலும் மேலே இந்த உணர்வின் தன்மை அங்கே பாய்ச்சப்பட்டு அவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் பிறருக்கு நன்மை செய்யக்கூடிய சக்தி அங்கே ஓங்கி வளர வேண்டும் என்று
1.இந்த அம்பை அங்கே பாய்ச்ச வேண்டும்
2.அர்ஜுனன் சகலகலா வல்லவன் என்று சொன்னாலும் அந்த அருள் உணர்வின் தன்மை கொண்டு
3.இந்த எண்ணத்தை அந்த ஸ்தலத்திலே நிறுத்திவிடு… குருக்ஷேத்திரப் போராக நடத்து…! என்று காட்டினார்கள்.
ஆனால் போரை நடத்த வேண்டும் என்றாலும் அங்கே என் குருநாதர் இருக்கின்றார் என் சகோதரர்கள் இருக்கிறார்கள் இவர்களை வைத்து நான் எப்படி சண்டையிடுவது…?
உன் சகோதரன் என்று இருந்தாலும் அவனை அறியாத விஷமான எண்ணங்கள் அவனையே அந்த உணர்வுகள் அழித்திடும் எண்ணமாக வருகின்றது. தீமையுடன் சேர்த்துத் தீமையை உருவாக்கும் நிலையாக வருகின்றது.
1.அவன் தீமை செய்யும் எண்ணத்தை அழிக்க நீ எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் சக்தியை
2.உயர்ந்த உணர்வின் அம்பாக அங்கே பாய்ச்சு… அங்கே தீமையை வீழ்த்து…! என்று சொன்னான்.
இதனுடைய ரகசியத்தை அன்று மெய் ஞானியான வியாசன் சொன்ன நிலைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
“கண்ணன் தேரின் சக்கரத்தை அழுத்தினான்…” என்று காட்டினால் அதனுடைய உட்பொருள்
1.அந்தத் தீமையான உணர்வு தனக்குள் வராதபடி அழுத்தி
2.தன் உணர்வின் எண்ண அலைகளை அங்கேயே பாய்ச்சி அந்த உணர்வை அழித்தான்
3.நல்ல உணர்வின் தன்மையை ஊட்டச் செய்தான்… இந்த அம்பைப் பாய்ச்சினான்.
இதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

“அன்பு” தானப்பா கடவுள்
அன்பு வழி காட்டிட்டு… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாய் செயற்படுபவன்…
1.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
2.பிற உயிர்களையும் தன்னுயிர் போல் நேசிக்கும் செயற்பாடு உடையவனாய் இருத்தல்
3.தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாய் வெளிப்படும் பொழுதே போதனையை ஏற்று
4.தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு உபதேசத்தை ஏற்றவன் அந்த நன்நெறியில் பிறழாமல்
5.அவ்வன்பையே பற்றுக் கோடாய்க் கொண்டிட்ட எண்ண செயலினால்
6.நல் வழிவகைச் செயலைக் கைக் கொள்வோன் மனிதன் என்ற முழுமை பெறுகிறான்.
7.அன்பும் பரி பூரணத்துவம் பெறுகின்றது.
இயேசு காட்டிட்ட அன்பு வழி… “மதம்” என்ற ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. ஆனால் எம்மதத்தினரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம் வழி.
மனித எண்ணத்தையும் அன்பு சாம்ராஜ்யத்தையும் ஆள வந்த அம்மகானுக்கே தந்திட்ட பரிசு “சிலுவை ஏற்றுதல்…” இன்றும் உண்மையைப் புகட்டினாலும் மத வழிச் செயலில் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா…!
அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?
1.குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
2.உலக மக்கள் படும் இன்னல்களுக்காக தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு தாய்மையின் உணர்வு கொண்டே
3.ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி உயர் நிலை பெறவே ஊட்டிட்டார்… ஊட்டிட்டார்… அன்பு கொண்டே ஊட்டிட்டார்.
தாய் முகம் கண்ட குழந்தை தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களை செவிமடுத்தினர் என்றால்… அன்றைய கால கட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயற்படாதொழிந்த குழப்ப சூழ்நிலையில் உண்மையை உணர்த்தி அளித்திட்ட போதனைகள் மக்களுக்கு தெளிந்த சிந்தனை அளித்து ஈர்த்தது என்றால் அன்பின் திறத்தை என்னவென்பது…?
அன்புதானப்பா கடவுள்.
சத்திய நிலை கடைப்பிடித்த மகான்களுக்கே அவச்சொல் என்றால்
1.சிந்தனா சக்தி செல்லும் வழிதான் என்ன…?
2.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா கூட்டங்கள் கூட்டினார்….!
இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகிறது.
ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுவோர் அம்மத வழிதனில் எண்ணிக்கையில் பலர் இருப்பினும்… அவர்களும் வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத வெறி உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.
உண்மை வழியறிந்து அம்மகான் காட்டிட்ட வழிதனை கடைப்பிடிக்க முயலுவோர் முயலட்டும்.
அன்பு கொண்டு குணங்களின் செயலை தன்னுள் கண்ட இயேசுபிரான்
1.’சைத்தான்’ என்று காட்டியது தீய குணங்களைத் தான்.
2.சைத்தானின் குணங்களுக்கு ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி
3.அவைகளைப் பக்குவமாய் விலக்கிடவே தியானத்தின் வழி காட்டியதே “அப்பமும் மீனும்…”

இருபத்தியேழு நட்சத்திரங்களும் நவக்கோள்களும்
27 நட்சத்திரங்களும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கத்தின் தன்மை கொண்டது.
அந்த நட்சத்திரத்தின் இயக்கம் கொண்ட எந்தெந்தத் தாவர இனமோ அதனின் உணர்வின் தன்மை விளைந்த பின் தன் இனத்தின் தன்மை இங்கே ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளது.
1.ஒவ்வொரு உயிரும் 27 நட்சத்திரத்தால் இயக்கும் உணர்வின் துணை கொண்டு
2.அந்த நட்சத்திரங்களின் சக்திகள் நமக்குள் ஐக்கியமாகிடல் வேண்டும்.
எப்படி 27 நட்சத்திரங்களுடைய சக்தி ஒருங்கிணைந்து ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி சூரியன் ஒளியின் சுடராக வாழுகின்றதோ இதைப் போல
1.உயிரின் இயக்கத்தால் உணர்வின் எண்ணங்களை வளர்க்கப்பட்டு வாழ்ந்திடும் உணர்வின் தன்மையும்
2.தன் இனத்தின் பெருக்கம் வரும் பொழுது ஒளியின் சிகரமாக ஒளியின் நிலையாக நமக்குள் அந்த இனத்தைப் பெருக்கும் நிலை தான்
3.27 நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற வேண்டும் என்று நமக்குள் ஒருங்கிணைந்த நிலையில் கூட்டச் செய்வதற்கே “இது…”
இப்பொழுது நான் பேசும் நிலையோ நவக்கோள்கள். உயிரணு தோன்றும் பொழுது எந்த கோளின் தன்மையை அதிகரித்துச் சேர்த்திருந்ததோ அதனின் பங்கு விகிதமே மனிதனுக்குள் வரும் பொழுது அந்தக் கோள் முன்னணியில் இருக்கும்.
நவக்கிரகம் என்பதும் இதே தான்…! எந்தக் கோளின் தன்மை நமக்குள் அதிகரித்தோமோ மற்ற கோளின் தன்மை வரும் பொழுது எதிர்மறையான நிலைகள் இயக்கச் சக்திக்கே இது உதவும்.
நம் உடலின் தன்மை உடல் ஒரு கோள்தான்.
1.சகோதர உணர்வு கொண்டு எடுக்கப்படும் பொழுது இது ஓ என்று இயக்கப்பட்டு ஒன்றிட்ட நிலை வரும் போது
2.நவக் கோளின் சக்தியை ஒருக்கினைந்த நிலைகள் கொண்டு நமக்குள் உருவாகும் நிலையே வருகின்றது.
“நான் ஏதோ சாதாரணமாகச் சொல்கிறேன்” என்று எண்ண வேண்டாம்
1.குருநாதர் பித்தரைப் போன்று இருந்து உயர்ந்த நிலைகளை எனக்குள் அனுபவபூர்வமாகக் கொடுத்த நிலைகளை
2.நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.
ஏனென்றால் விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் அழிவின் தன்மை சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மனிதனின் சிந்தனை அழியும் நிலை வருகின்றது.
மனிதனின் சிந்தனையே அழியும் பொழுது இழிநிலையான நிலைகளுக்குச் செல்வதற்கு முன் “நீங்கள் அனைவரும் தயாராகி விட வேண்டும்…”
தயாரானால்…
1.இருண்ட உலகை அப்புறப்படுத்தி விட்டு ஒளி காணும் உணர்வாக
2.உங்கள் பேச்சும் மூச்சும் உலகைக் காத்திடும் நிலையாகப் பெற வேண்டும் என்பதற்குத்தான்
3.என் குரு இட்ட ஆணைப்படி உங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.
4.அந்த நவக் கோள்களின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன்.
இதனின் தொடர் கொண்டு சூரியன் எப்படி ஒளிச் சுடராக இருக்கின்றதோ உயிருடன் நீங்கள் தொடர் கொண்டு… காந்தப் புலனாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிரின் நிலைகள் கொண்டு… மகரிஷிகள் உணர்வைத் தனக்குள் அறிவாக எடுத்து…
1.நாம் அனைவரும்… அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று
2.ஒளியின் சுடராக இணைக்கச் செய்வது தான் உயிரின் நிலைகள்.
சூரியன் எவ்வாறு மற்ற கோள்களின் தன்மையை தனக்குள் எடுத்துச் சமமாக ஒளியாக மாற்றுகின்றதோ இதைப் போல நமக்குள் ஒளியின் சிகரமாக “அந்த மாமகரிஷிகளுடன் நாம் ஒன்றி” உணர்வினை ஒளியாக மாற்ற முடியும்.
இதற்குத் தான் 27 நட்சத்திரங்களின் சக்தியும்… நவக்கோள்களின் சக்தியும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும்… சப்தரிஷிகளின் அருள் சக்தியும்… மனிதனாக உருவாக்கிய நிலைகளில் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு… “ஒளியின் சரீரமாக இருக்கும் அதனை நாம் அனைவரும் பெரும் பாக்கியமாக இணைத்திடும் நிலை தான்… தியானத்திலே இந்த உணர்வினை ஐக்கியப்படுத்துகின்றோம்…”
நவக்கோளின் சக்தி என்றால் வேறு எதுவும் இல்லை…!
இந்த உடலை விட்டு எப்பொழுது வேண்டுமென்றாலும் உயிர் வெளியில் செல்லும் என்பதை மனதில் வைத்து…. அதற்கு முன் அருள் ஒளியைச் சேர்க்க வேண்டும்.
காரணம்… இந்த உடலுக்குள் எதை எல்லாம் இணைத்தோமோ அந்த உணர்வின் துணை கொண்டே அடுத்த உருவை உயிர் உருவாக்கும். இன்று மனிதன் என்ற வெறுப்பு கொண்டால் மனித ஈர்ப்பிற்குள்ளே மீண்டும் இழுத்துச் சென்று விடும்
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அது மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வின் தன்மை கொண்டு
3.நம்மை மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு உயிர் அழைத்துச் செல்லும்.
4.உயிர் நமக்குள் இருந்து அதைச் செயல்படுத்திக் காட்டும்.
உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எமது குருநாதர் காட்டிய அருள் வழி… உங்களுக்கெல்லாம் அது பெற வேண்டும்… இந்த உணர்வின் தன்மை உங்களில் விளைய வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் அதுவாகின்றேன்.
1.நீங்களும் இதைப் போன்று உலக மக்கள் ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ணத்தைக் கூட்டி
2.அந்த ஒளியின் சரீரமாகும் உணர்வைப் பற்றுடன் பற்றி அதன் வழி சென்றால் உங்கள் உயிர் உங்களை அங்கே அழைத்துச் செல்லும்.

மனித சக்திகளைத் தெய்வ சக்தியாக்குங்கள் ஒவ்வொருவருமே
ஆண் பெண் ஆத்மக் கூட்டு ஐக்கியத் தொடருடன் பிறக்கும்… ஒளியின் உயர்வு வட்ட வளர் தொடர் சக்தியான “ஆதிமூலம்” என்று உணர்த்தும் மூலத்தையே
1.ரிஷி பத்தினி மூலத்தால் உருவாகும் வழியில் செல்லும் வழி முறைகளையும்
2.மனித ஆத்மாவின் உணர்வு எண்ண மோதலைக் கொண்டு தெய்வ குண சக்திகளைப் பெறும் நிலைக்கு
3.மனிதனின் எண்ண ஓட்டச் சமைப்பினால் செல்லும் வளர் முறைகளை இது நாள் வரை வழிப்படுத்தி வந்துள்ளேன்.
இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இங்கே காட்டியதைச் செயல் முறைப்படுத்தி வளர்ந்து வரும் தொடரில் தங்களுக்கு ஏற்படும் வினாக்களைத் தெளிவு முறை பெறும் மார்க்கத்திற்கு வழி உண்டு.
அதாவது இதைப் படிக்கும் போது ஏற்படக்கூடிய எண்ண மாற்ற நிலைகளைத் தெளிவு காணும் அறியும் நிலைக்கு… நீங்கள் எதை அறிய விரும்புகின்றீர்களோ
1.அறியும் எண்ணத்துடன் புருவ மத்தியில் நினைவைக் கூர் பாய்ச்சிச் செலுத்துங்கள்..
2.பின் மேல் நோக்கிய சுவாசத் தொடர்பினால் உயர்ந்தோரின் நிலையுடன் எண்ணத்தைச் செலுத்துங்கள்…
3.வளர்ந்த ரிஷிகளுடன் நம் அறியும் எண்ண ஞானத்தைச் செலுத்துங்கள்.
அறிந்து கொள்ளும் உயர் ஞான அறிவாற்றலினால் இவ் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
1.உயர் ஞானம் பெற்ற அலை சக்தியின் தொடர் நமக்குக் கிடைத்து
2.நம் உடலின் காந்த நுண் அலை ஈர்ப்பில்
3.நமக்கு அறிய விரும்பிய அனைத்திற்கும் விடைகள் அனைத்தும் கிடைக்கும்.
வாழ்க்கை, சொந்த பந்த தொழில், சுற்றுப்புற, விஞ்ஞான, வியாபார, மருத்துவ எத்தொடரில் நம் வாழ்க்கை அமைந்திருந்தாலும், வாழ்க்கைத் தொடர் சுழற்சியுடனேயே நாம் தொடர்பு கொண்ட சுழற்சிக்கு நம் வளர்ச்சியின் வலுவைக் கூட்டிக் கொண்டு வாழ்க்கைப் பிடிப்பலைதான் மனிதனின் முற்றிய நிலையென்று இன்பத்தைக் கொள்ளாமல்
1.மனித ஆத்மாவின் உயர்வு வழிக்கு வழிகாட்டி இங்கே உணர்த்திய இத்தொடரில் பல நிலைகளை
2.அந்தந்த இடங்களில் அதைப் படித்துச் செயலாக்கி அதில் விட்டுள்ள… நூலில் உணர்த்தப்படா பல உண்மைகளும்
3.ஞானத்தைப் படிப்பவர்களின் ஞானத்தைக் கொண்டு உணர்த்திய முறையை
4.செயலாக்கிச் செயல்வழிக்கு உயரக்கூடிய சில நிலைகளை இப்பாடத்திலும் “ஆங்காங்கு விட்டுள்ளது…”
வரப்போகும் கால நிலையில் துர்மார்க்க அச்சம் கொள்ளும் அலை உணர்வுதான் காற்றலையின் நச்சுத்தன்மை வளர்ந்தோங்கிச் சுழலும் தருணமாக உள்ளது.
மனிதன் தன்னைத் தான் உணர்ந்து தன் வலுவைக் கூட்டி பிற ஈர்ப்பின் பிடிப்பில் சிக்காமல்… உயர் ஞான வழித் தொடரின் தொடர்பைக் கொண்டு… வளர்ந்த பல கோடி தேவாதி தேவர்களும் செயலில் சக்தியாய் செயல் கொள்ளும் சப்தரிஷிகளின் சகல சக்தியையும் சமைக்கவல்ல ஆற்றல் கொண்ட உயர்ந்தோரின் உயர்வுடன்… பூமிப்பிடிப்பில் பிறப்பெடுத்து வாழும் மனித ஞான உணர்வெண்ணத்தைச் செலுத்தி
1.உயர்ந்தோரின் உயர்வுடன் உயரும் எண்ணத்தில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும்
2.உயர்ந்தே செல்லும் வழிமுறையாய் இங்கே வழிகாட்டிய வழிமுறையின் உண்மையை ஏற்று…
3.ஞானத்தைப் போதனையாக்கி வழிகாட்டிய ஞானகுரு ‘வேணுகோபால சுவாமிகளின் போதனைப் பெற்றும்
4.ஆத்ம ஐக்கியக் கூட்டு வழிமுறை தியானச் செயலில் ஞானவிளக்கப் போதனை நிலைகளை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
5.மனித சக்திகளைத் தெய்வ சக்தியாக்குங்கள் ஒவ்வொருவருமே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எனக்குள் (ஞானகுரு) இருளச் செய்து கொண்டிருக்கும் உணர்வுகளை நான் அறிந்திடும் வண்ணமாக குருநாதர்… அவருக்குள் அறிந்திடும் சக்தியாக வளர்த்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகளைச் சொல்வாக்காக எனக்குள் பதிவு செய்தார்.
அவர் கொடுக்கும் அந்த அருள் சக்திகள் எவ்வாறு இயங்குகின்றது…? என்று எனக்கு உணர்த்தி… அந்த அருள் ஞான வித்துக்களை எனக்குள் குருநாதர் விளையச் செய்திருந்தாலும்
1.என்னுடைய மனித வாழ்க்கையில் நான் ஏற்கனவே வளர்த்துக் கொண்ட உணர்வுகள்
2.அவர் கொடுத்த அருள் சக்தியை நான் அறிய முடியாது இயக்கி
3.மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே மங்கச் செய்து கொண்டு வந்தது.
காரணம்… ஒரு பொருளுடன் நஞ்சு இணைந்து விட்டால் மீண்டும் அதில் எந்தப் பொருளைப் போட்டாலும் அதுவும் நஞ்சின் செயலாகவே மாறிக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துவதற்காக எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.
என்னுடைய இந்த மனித வாழ்க்கையில்
1.நான் வளர்த்துக் கொண்ட ஆசைகள் கொண்டும்
2.எனக்குள் மதிப்பைத் தேட வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டும்
3.சுய கௌரவத்தை மனதில் வைத்துக் கொண்டும் நான் இயக்கப்படும் போது
4.அடுத்தவர்கள் என்னை ஏளனமாகப் பேசுகின்றனர்
5.பைத்தியக்காரனுடன் (ஈஸ்வரபட்டர்) சுற்றிக் கொண்டிருக்கிறான்
6.பிழைக்கத் தெரியாதவன் என்று இழிவான பேச்சுகளாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நான் எங்கே போனாலும் சரி… என் நண்பனே என்னால் அவன் சௌகரியப்பட்டிருந்தாலும் கூட “பைத்தியக்காரன்…” என்று என் கண் முன்னாடியே என்னைப் பேசுகிறான்.
தெரிந்தவர்கள் என்று ஒரு கடையிலே போய் உட்கார்ந்தாலும் கூட பைத்தியத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்… நீயும் ஒரு பைத்தியம்… நீ இங்கே உட்கார்ந்தால் தரித்திரம் பிடித்துவிடும்… போ…! என்று விரட்டி விட்ட நண்பர்களும் உண்டு.
குருநாதரோ… மிகப்பெரிய சக்திகளை எனக்குக் காட்டி அது எவ்வாறெல்லாம் விளைகிறது…? என்ற நிலையையும் பல அற்புதங்களையும் என்னையே செய்யச் சொல்கிறார். அற்புதங்களை என்னை நேரடியாகவே காணச் செய்கிறார்.
அதை எல்லாம் செய்து “பொருளை அறியும் ஆற்றலும்…” அறிந்தபின் அது உருபெற்று அதனால் வாழ்க்கைக்கு எவ்வளவு லாபங்கள் (பணம்) வரும் என்று இந்த உடலின் தன்மையிலேயும் ஆசையை ஊட்டுகிறார்.
அதே சமயத்தில் மகரிஷிகளின் அருள் ஆற்றலைப் பெற்று இந்த உடலில் வந்த இருளை நீக்கிப் “பெரும் செல்வமான பேரானந்த நிலைகள் எவ்வாறு பெறலாம்…?” என்ற நிலையைக் குருநாதர் காட்டினாலும்
1.அவர் கொடுக்கும் சக்திகளை வைத்து
2.இந்த மனித வாழ்க்கையில் என்னை நீங்கள் மதிக்க வேண்டும்
3.எல்லோரும் என்னைப் போற்ற வேண்டும்… என்னைச் செல்வந்தனாக மதிக்க வேண்டும்
4.எனக்குள் பெரும் சக்தி இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் எனக்கு அதிகமாக வந்தது
ஆக… ஒரு பக்கம் பேரும் வரும்… புகழும் வரும்… காசும் வரும்… மகிழ்ச்சியும் ஊட்டுவார். ஆனால் என் வீட்டிற்குள் வந்தால் கடும் தரித்திர நிலையைக் காட்டுவார்.
அப்போது தான் ஒன்றைச் சொல்வார்…!
எதன் வழிகளிலே நீ தேடினாலும் அது இருள் சூழ்ந்த நிலைக்கே இந்த உடலின் பற்றுக்கே வருகிறது. உடலின் பற்றுக்கு வந்தால் நான் கொடுத்த பெரும் சக்திகள் மறைந்து விடும். இருளைப் போக்கும் நிலையை அறுத்துவிடும் என்றார்.
அதே நேரத்தில் இன்னொன்றையும் காட்டுகின்றார் குருநாதர்.
பூமியில் இருந்து மனிதனாகப் பிறந்த நீ
1.இந்த உடலை விட்டு எவ்வாறு வெளியே செல்ல வேண்டும்…?
2.சென்றபின் எந்த நிலையில் நீ நிலைத்திருக்க வேண்டும்…? என்று அதையும் ஒரு பக்கம் காட்டுகின்றார்.
அதாவது…
1.உடலை விட்டுப் பிரியச் செய்கிறார்…
2.ஒளியின் சுடரைக் காட்டுகின்றார்…
3.ஒளியின் சுடராக ஆனபின் அது எந்த நிலையில் இருக்கும்…? என்று
4.இந்த உடலை விட்டுச் சென்றபின் அதையும் நிலைத்துக் காட்டுகின்றார்.
ஒரு பக்கம் ஆசையை ஊட்டுகின்றார். மற்றொரு பக்கம் துன்பத்தையும் கொடுக்கின்றார். இதில் என்ன செய்வதென்றே ஒன்றும் புரியவில்லை.
குருநாதர் பித்தனைப் போன்று இருந்த மாதிரி
1.இதைப் பிடிப்பதா… அல்லது அதைப் பிடிப்பதா…!
2.அல்லது அவர் சொன்னதைப் பிடிப்பதா…? என்ற நிலை எனக்கு வருகின்றது.
அவர் கொடுக்கும் சக்திகளை நான் சரி வரப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல சந்தர்ப்பங்களில் இப்படி அனுபவத்தைக் காட்டி எனக்குள் தெளிந்து தெரியும்படி செய்தார்.
அதிலே முழுமை பெற்ற உணர்வுகளை… உயிருடன் ஒன்றி ஒளியாகப் பெறும் ஆற்றலைத் தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நன்றாகத் தான் இருப்பீர்கள். ஒன்றுக்கும் ஆகாதவன் யாராவது வந்து “நீ என்னய்யா செய்துவிடுவாய்…?” என்பான்.
கேட்டவுடனே “உன்னைத் தொலைத்து விடுகிறேன்…” என்று மனதில் வேகம் வரும். “இவனுக்குக் குசும்பைப் பார்….” என்போம். இப்படி உணர்ச்சி வசப்படும் நிலை வந்து விடுகிறது. அப்பொழுது என்ன செய்கின்றோம்…?
1.அவன் சொல்லக்கூடிய நிலைகளில் அகம் (நான்) என்ற அலைகளில் நாமும் சிக்கி
2.அவனை அழித்து விட வேண்டும் என்றே நினைப்போம்.
3.அதற்குண்டான முயற்சிகளை எல்லாம் எடுத்துக் கொண்டே இருப்போம்
4.அவனை அழித்து விட வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வந்து நம்மை அழித்துவிடும்.
5.நாம் சேர்த்து வைத்த செல்வத்திற்கு வேலை வந்துவிடும்.
செல்வத்தைச் சேமிக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் மேலே சொன்ன மாதிரி “அடுத்தவனை அழிக்க வேண்டும்…” என்று கோர்ட்டு… கேஸ்… சாப்பாடு… அது இது என்று பணத்தை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு
1.என்றைக்கு இதிலிருந்து விடுபடப் போகின்றோமோ…? தெரியவில்லை…! என்பார்கள்.
2.இப்படித்தான் அந்தப் பணம் காணாமல் போகும்.
இவருக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் ஆதரிப்பார்கள் ஆனால் பணம் எல்லாம் போய்க் கொண்டே இருக்கும் சம்பாதித்த பணம் காணாமல் போய்விடும். இந்த அலைகளில் சிக்கி விடுகின்றோம்.
அதே போன்று குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருப்பார்கள். ஒரு பையன் சொன்னபடி ஏதாவது கேட்காது இருப்பான்.
1.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்…
2.இவனுக்குச் சொத்தே கொடுக்கக் கூடாது… என்று மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள்.
“நல்லவனாக நடக்க வேண்டும்” என்று அவன் வந்தாலும் கூட “தொலைந்து போகிறவன் எங்கேயோ போடா… ஒரு காசு கூட உனக்குக் கிடையாது…!” என்று சொல்வோம். இந்த அலைகளில் சிக்கி விடுவோம்.
அவன் மேல் முதலில் பாச அலையாக இருக்கின்றோம். திடீரென்று வெறுப்பலை வந்துவிட்டால் அதில் மூழ்கி விடுகின்றோம்.
இவனை எண்ணி இங்கே மூழ்கினாலும் மற்ற பிள்ளைகளிடமும் அதைப் பேசுவோம். டேய்… அவனை மாதிரி யாரும் ஆகிவிடாதீர்கள்…! என்போம். இந்த அலைகள் அங்கேயும் போய் மோதும்.
என்னுடைய அப்பா எப்பொழுது பார்த்தாலும் அவனை வைத்துக் கொண்டு என்னையும் சும்மா ஜாடை பேசிக் கொண்டே இருக்கிறார் என்று அடுத்த பிள்ளையும் சொல்ல ஆரம்பிப்பான். அங்கேயும் வெறுப்பலைகளில் சிக்கிக் கொள்வோம்… அதிலேயும் மூழ்கிவிடுவோம்.
1.எதை எதைச் சம்பாரிக்க வேண்டும்…?
2.எப்படி எல்லாம் நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டும்…?
3.தான் உயர்வாக எப்படி வர வேண்டும்…?
4.எல்லோரும் என்னை எப்படிக் கௌரவமாக மதிக்க வேண்டும்… போற்ற வேண்டும்…? என்ற
4.பல வகையான எண்ணங்களில் இந்த அலைகளில் சிக்கிக் கொண்டு அப்படியே தத்தளித்துக் கொண்டிருப்போம்…”
எத்தனை சம்பாரித்து வைத்து என்ன பலன்…? இந்த மாதிரிச் செய்கின்றார்களே…! என்று வருவோர் போவோர் அனைவரிடமும் இந்தக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்போம்.
இந்த அலைகளில் தான் மூழ்கிக் கொண்டிருப்போம். மீட்கும் நிலையோ மீளும் வழியோ இல்லாது தத்தளித்துக் கொண்டிருப்போம்.
நிறையக் குடும்பங்களில் இப்படித்தான் இருக்கும். மனிதனுடைய வாழ்க்கையில் மீளாத் துயரத்தில் இப்படிச் சுழன்று கொண்டு இருக்கிறோம்.
காரணம்… உயர்ந்த சரக்குகளை எடுத்து அதிலே நஞ்சினைக் கலந்து விட்டால் நஞ்சின் செயலாக்கம் எவ்வாறு இருக்குமோ… அதைப் போன்றுதான் மனிதனுடைய வாழ்க்கையில்
1.உயர்ந்த குணங்களைக் கொண்டோர் அனைவரும்
2.வாழ்க்கையில் எத்தனையோ அலைகளில் சிக்கி… புயலில் சிக்கி விடுகின்றோம்.
உதாரணமாக ஒரு புயல் அடித்தால் அது சுழன்று பெரும் நிலைகளாகப் பரவி எல்லாவற்றையும் அழித்துச் செல்கின்றது. புயல் ஓய்ந்த பின் பார்த்தோம் என்றால் எதையும் காணவில்லை… அடித்துச் சென்றுவிடுகிறது.
இதைப் போல மனிதனின் உணர்வில் (வாழ்க்கையில்) பெரும் புயல் வீச ஆரம்பித்தால் என்ன ஆகும்…? என்ன வாழ்க்கை…? என்ற நிலையில் கொண்டு தனக்குள் அனைத்தும் இருள் சூழச் செய்து கடைசியில் தற்கொலைக்கே அழைத்துச் செல்கின்றது.
அத்துடன் நமக்குள் வளர்த்த ஆசைகள் அனைத்தும் அழிந்து விடுகிறது. அந்தப் புயலின் நிலைகளில் சிக்கும் பொழுது நமக்குள் என்னென்ன ஆசைகள் இருந்ததோ அது அனைத்தையும் நொறுக்கிவிடுகிறது.
ஆகவே
1.நமக்குள் தீமை செய்து கொண்டிருக்கும்
2.அது போன்ற அலைகளைப் பிளக்கும் தன்மை வரவேண்டும்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழிகள் கொண்டு நம் எல்லையை வகுப்போம்.
மகரிஷிகள் அனைவரும் எத்தகைய இருளையும் ஒளியாக மாற்றிக் கொண்டு உள்ளார்கள் பேரானந்தப் பெரு வாழ்வு என்ற நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலாமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டே உள்ளார்கள்.
அந்த அருள் ஞானிகள் சென்றடைந்த எல்லையை நாம் அனைவரும் அடைவோம்.


ஏவல்
உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண்ணுலகம் (சப்தரிஷி மண்டலம்) ஏற்ற சக்தி தேவை. விண் செலுத்தி விட்டால்
1.அவர்கள் விண் சென்ற பின் அந்த விண்ணினுடைய ஆற்றலை
2.அவர்கள் துணை கொண்டு அருள் ஞானிகளின் உணர்வை எளிதில் பெறலாம்.
3.நம்மை அறியாத வந்த தீமைகளைச் சுட்டுப் பொசுக்க முடியும்.
இது தான் உண்மையான தியானம்.
இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைக் கவரும் நிலைக்கே “உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்ததும் வசியப்படுத்தியதும்…”.
நீங்கள் ஏக்கத்துடன் இருக்கப்படும் பொழுது அந்த அருள் மகரிஷிகள் போதித்த உணர்வையே உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.இந்த உணர்வின் தன்மை கூடும் பொழுது அந்த ஞானிகள் உணர்வைக் கைவல்யப்படுத்த முடியும்
2.உங்களுக்குள் அந்த வசியப்படுத்தும் நிலையாக உற்று நோக்கிய உணர்வுகள்
2.அந்த ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பதிவான பின் வசியம்.
3.அதே சமயத்தில் நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது அது கைவல்யம்…
4.தனக்குள் அந்தச் சக்தியைச் சேர்த்திட முடியும்… பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல்…!
5.யாரைப் பார்த்தாலும் தீமைகள் அகன்றுவிடும் என்று சொல்லால் சொல்லி ஏவல்படுத்தும் பொழுது அங்கிருக்கக்கூடிய தீமைகள் ஒடுங்கும்.
இதைப் பெற வேண்டும் என்றால் வலிமை கொண்டு ஒன்று சேர்ந்து மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.
ஒரு தேரைப் பல நூறு பேர் சேர்ந்து இழுத்து எல்லையைச் சேர்ப்பது போன்று பல ஆயிரம் பேர் சேர்ந்து ஒருக்கிணைந்து இயக்குவோம் என்றால் நமக்கு முன் பரவிக் கிடக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அவரவர்கள் எண்ணி ஏங்கிய பங்கின் விகிதாச்சாரப்படி ஆன்மாவிலே கலக்கும்.
இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வரும் பொழுது தான் கைவல்யமாகும்.
1.முதலில் வசியப்படுத்தும் நிலைக்கே உங்களைத் தயார் செய்கின்றேன்… அதற்கு உபதேசம்.
2.பின் அதனின் உணர்வின் தன்மை ஏங்கப்படும் பொழுது கைவல்யம் உங்களுக்குள் அந்த சக்தியின் தன்மை பெருகுகின்றது.
3.பின் அந்த தீமையை அகற்றும் உணர்வின் தன்மை கொண்டு நினைவால் சொல்லால் ஏவல்…! தீமைகளை அகற்ற முடியும்…!
ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள். எனது குருநாதர் அதைத்தான் கொடுத்தார்
தயவு செய்து இந்த உபதேசத்தைக் கேட்டுணர்வோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்னை அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் கேட்டு பழகுங்கள்.
எதை எண்ணி ஏங்கிக் கேட்கின்றீர்களோ கேட்டுணர்ந்த உணர்வுகள் நீங்கள் எண்ணும் பொழுது
1.நான் கொடுக்கும் வாக்கு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி
2.அந்த நினைவின் ஆற்றல் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளையும்.
3.பல முறை நான் இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆண் பாதி… பெண் பாதி – “சிவ சக்தி…”
ஆண் பெண் இன விருத்தியில் ஆணின் அமில சத்தின் பெண் ஈர்ப்பு ஜீவ நிலையில் சரீர வாழ்க்கை திருமண பந்த சொந்தத்தால் மனிதனின் வம்சத் தொடர் மக்கள் செல்வ நிலை பெற்று வாழும் வழித் தொடர் பூமிப் பிடிப்புச் செயலுடன் ஒன்றிய வாழ்க்கையாக உள்ளது.
இதனை ஒத்த பிறப்பு வளர்ப்பு இறப்புடன் ஒன்றிய சுழற்சியையே எப்படி இரண்டு இரண்டு உறுப்புகளின் உருவ உடல் ஞான ஒன்றிச் செயல்படுகின்றதோ அதற்கொத்த தன்மை போன்றே
1.ஆண் இன அமில ஆத்ம அலையும்
2.பெண் இன ஜீவ வளர்ப்புக்குகந்த ஆத்ம அலையும் ஒன்றாக
3.இரண்டு ஜீவ சரீர பிம்ப ஆத்மாக்களின் தொடர்பு பிறப்பு சிசு பிறப்பதைப் போன்று
4.வலுக் கொண்ட ஆத்ம இணைப்பின் தொடரில் பிறக்கும் நிலைதான் “அர்த்தநாரீஸ்வரர்” என்று காட்டினார்கள்.
ஆண் பாதி… பெண் பாதி… “சிவ சக்தி…” என்றுணர்த்திய தெய்வ நிலையில் வழிகாட்டிய உண்மைத் தத்துவ விளக்க நிலைக்கொத்த… ஆத்ம ஐக்கியத்தில் பிறக்கப்படும் வளர்ச்சி நிலை சுழற்சியுடன்… இச்சுழற்சியுடன் ஒத்த ஆத்ம தொடர் கொண்டோரின் ஈர்ப்பு நிலை மகவுகளை சரீரப் பிறப்பில் சரீர சிசு வளர்வதைப் போன்று… ஆத்மாவினால் ஆண் பெண் இன ஆத்ம உயர் சக்தியைக் கொண்டு கூட்டமைப்பின் ஞானச் சித்தால் “ரிஷி பத்தினி..” என்ற ஒளி நிலை பெறும் ஆத்ம சக்தியைக் கொண்டு “இந்தப் பூமி மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மண்டலங்களுக்கும் உயர்வைக் காட்டிட முடியும்…”
ஞானச் சித்து கொண்டு “இரண்டு ஆத்ம ஐக்கியத்தில் ஒன்றானவர்கள்…”
1.உயர்வு கொள்ளாத் தனித்த நிலையில்
2.சித்து நிலையுடன் வளர்ச்சி பெற முடியா உயர் சக்தி கொண்ட தொடர்புகளும்
3.ஆத்ம இணக்க ஆண் பெண் சரீர இயக்கமுடன் ஒத்த நிலையில்
4.சித்து நிலை கொள்ளக்கூடிய ஜீவ சக்தித் தொடர்புடன் வளரும் ஆத்ம ஐக்கிய வளர் சக்தியின் கூட்டமைப்பில்
5.அந்த வலுவாகும் சக்திகள் ஐக்கியம் கொள்ளும்… தன் வளர்ப்பின் நிலைக்காக…!
பல கோடி உண்மைத் தத்துவ உயர் வளர்ச்சி “இன்பத்தின் கோடி…” என்று உணர்த்துகின்றார்களே அத் தொடருக்கும் உயர்ந்த சக்தி நிலைகளை இச்சரீர வாழ்க்கை பந்த ஆண் பெண் ஆத்ம வலுவைக் கொண்டு உயர முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவோம்… என்றுமே ஏகாந்தமாக வாழ்வோம்
தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்தால் அதை மடியச் செய்யும் சக்தியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும். அதை நீங்கள் எளிதில் பெறலாம்.
நான் (ஞானகுரு) சிரமப்பட்டேன்… பார்த்தேன்… குருநாதர் அருளால் எல்லாவற்றையும் தெரிய முடிந்தது.
1.தீமையான உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயல்படுகிறது…? என்று முதலில் காட்டினார்.
2.பின் அந்தத் தீமையை நீக்கும் வழியையும் காட்டினார்.
அதைப் போன்றுதான் வாழ்க்கையில் நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உங்கள் உடலுக்குள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை உணர முடியும்.
தீமை என்று உணர்ந்தவுடனே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து “அதை மாற்றிக் கொள்ளும் சக்தி” உங்களுக்கு வர வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் பெறக் கூடிய தகுதிக்குத் தான் இதை ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
உதாரணமாக…
1.செல்ஃபோன்களில் எதை எதையெல்லாம் பதிவு செய்கின்றோமோ அதை மீண்டும் திரும்பப் பார்க்க முடிகின்றது….
2.பதிவானதை இன்னொருவருக்குச் செலுத்தவும் முடிகின்றது.
இதைப் போன்றுதான் கேட்ட… பார்த்த உணர்வுகள் எல்லாமே நம் உடலில் எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
தீமை என்று பதிவானால் அந்த உணர்வு தனித்து இயங்காதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதற்கு அருகிலேயே இதைப் பதிவாக்க வேண்டும்.
காரணம்… துருவ நட்சத்திரத்தின் சக்தி அதைக் காட்டிலும் வலுவானது.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுத்துக் கொண்ட பின் அடுத்து
1.அவன் நல்லவனாக வேண்டும் நல்லது செய்ய வேண்டும்
2.நல் வழி வர வேண்டும்… உலகம் நலம் பெற வேண்டும் என்று
3.நாம் இதைப் பதிவாக்கிக் கொண்டால் அதைச் சுற்றி “பெரிய வட்டமாக…” மாறி விடுகின்றது.
ஒரு குழம்பை வைக்கிறோம் என்றால் பல பொருட்களைச் சேர்க்கின்றோம். அதில் எந்தப் பொருள் அதிகமோ அதன் சுவை தான் முன்னணியில் வருகின்றது.
இதைப் போன்று அந்த அருள் ஞானிகள் உணர்வை நாம் சிந்திக்கும் உணர்வுகளுக்குள் கலந்து விட்டால்… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக வளரத் தொடங்கும்.
உங்கள் அனுபவத்தில் நீங்கள் இதைப் பார்க்கலாம்.
இரவில் படுத்துத் தூங்கும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே உறங்கச் செல்லுங்கள்.
காலையில் எழுந்ததும்… கண் விழித்ததும் இதே நிலைகளைச் செயல்படுத்துங்கள். அதற்குப் பின் மற்ற காரியங்களைச் செயல்படுத்துங்கள்.
எந்தக் காரியத்தை ஆரம்பிக்கும் முன்பும் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் சுருக்கமாக இப்படிச் சொல்லிக் கொண்டு வரலாம்.
1.வெளியில் செல்லும் பொழுதும்
2.தொழிலுக்குச் செல்லும் பொழுதும்
3.வீட்டிற்கு வந்தாலும் அமைதியாக இருக்கும் போதும் இதைச் செய்யலாம்
4.எந்தச் சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.
5.காற்று மண்டலத்தில் விஷத் தன்மைகள் நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
6.பேரின்ப வாழ்க்கையாக உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மையாக நாம் மாறுவோம்.
மனிதனாகத் தோன்றிய பின் உயிர் என்ற நிலையில் அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டால் கார்த்திகேயா… அந்த வெளிச்சத்தின் உணர்வாக மதி கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.
ஆகவே ஒளி என்ற மதி கொண்டு நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும். அதைப் பெற்று உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை நாம் அடைவோம்… என்றுமே ஏகாந்தமாக வாழ்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.நோய் எல்லாம் போய்விடும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று யாம் (ஞானகுரு) சொன்னால் எங்கெங்கே…? என்று அதைத்தான் திருப்பிக் கேட்கிறார்கள்.
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கிறது… என்று சொல்வார்கள். “அது எல்லாம் நீங்கிப் போய்விடும்… நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள்…” என்று யாம் சொல்வோம்.
3.நீங்கள் சொல்கிறீர்கள்… என் பையன் எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான்…! என்று சொல்லி
4.யாம் கொடுக்கும் வாக்கினை… அப்பொழுதே அதை ஜீவனற்றதாக மாற்றி விடுகின்றார்கள்.
எவ்வளவோ சிரமப்பட்டுத் “தந்திரமாக…” உங்கள் உடலிலே அருள் உணர்வைப் பாய்ச்சி… அருள் ஞான வித்தை உங்களுக்குள் தங்க வைக்க வேண்டும் என்று யாம் முயற்சி செய்கிறோம்.
ஆனால் விளை நிலத்தில் விதைத்த விதைகளை எறும்புகள் எடுத்துச் சென்று எப்படி முளைக்காமல் செய்து விடுகின்றதோ… அதைப் போல்
1.உங்கள் உடலில் ஏற்கனவே பதிந்த சாப அலைகள் நின்று
2.யாம் கொடுக்கும் உபதேச உணர்வுகளை ஆழமாகப் பதிய விடாதபடி அது தடுத்து விடுகிறது.
எம்மிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள். பின் ஊருக்குப் போய் வருகிறேன் என்பார்கள். ஆனால் அடுத்த கணம் என்னுடைய கஷ்டம் இப்படியெல்லாம் இருந்து கொண்டே இருக்கிறதே என்று திருப்பி
1.நான் கொடுத்த வாக்குகளை விட்டுவிட்டு… கஷ்டத்தைத் தான் எடுத்துக் கொண்டு செல்கின்றார்கள்
2.நான் கொடுத்த அருள் வாக்கை இங்கேயே விட்டுவிட்டு கஷ்டத்தைத் தான் வாங்கிச் செல்கின்றார்கள்.
காரணம் இந்த சாப அலைகளே இதற்கு மூலம் ஆகின்றது. அவருடைய குறை அல்ல. ஆகவே நான் உங்களைக் குறையாக எண்ணவில்லை.
முந்தைய நிலையில் உங்களுக்குள் விளைந்த உணர்வுகள் உங்களை அறியாது எப்படி எல்லாம் இயக்குகின்றது…? அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும்…? என்பதைத்தான் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
உங்கள் வீட்டில் ஒருவர் சொன்னபடி கேட்கவில்லை என்றால் உங்கள் மனது எப்படிச் செல்கின்றது…? நன்றாக இருக்க வேண்டும் என்று ஒருவருக்கு எல்லா உதவியும் செய்து கொடுக்கின்றீர்கள். ஆனால் அவரால் அதைச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை என்றால் உங்கள் மனது அது எப்படி ஆகின்றது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
ஆனால் எண்ணிலடங்காத பேர் என்னிடம் வாக்கினை வாங்கிச் செல்கிறார்கள். நீங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று குருநாதர் கொடுத்த நிலைகளை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
என்னை எத்தனையோ ஆபத்தான நிலையில் எல்லாம் குருநாதர் சிக்க வைத்தார். ஒவ்வொரு நொடியிலும் அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்குள் எப்படி இயங்குகின்றது…? நீ எப்படி இருக்க வேண்டும்…? என்று
1.மூன்று லட்சம் பேரின் குடும்ப நிலைகளைக் காட்டி
2.மனித உடலிலே மாய வாழ்வாகத் தான் இருக்கின்றது
3.இதில் நீ எதைக் காணப் போகின்றாய்…? என்றார்
என்றும் நிலையான நிலைகளில் இருக்கும் மகரிஷிகளின் எல்லையை நீ எப்படி அடைய வேண்டும்…? என்று தெளிவாகச் சொன்னார். இதை எல்லாம் அனுபவ ரீதியில் குருநாதர் காட்டுகின்றார்.
நம்முடைய கடைசி எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான். அவர்கள் ஒளிச் சரீரம் பெற்று வாழும் சப்தரிஷி மண்டல எல்லையில் தான் நாம் இருக்க வேண்டும்.. அதைத் தான் பின்பற்ற வேண்டும்…! என்று குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.


உலகை அழிவிலிருந்து காக்கும் பித்தராகிய குருநாதர் என்னிடம் சொன்னது
“உலகை அழிவிலிருந்து காக்கும்” அன்று பித்தனைப் போன்று இருந்த எமது குருநாதர் பல நிலைகளை எமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.அந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு மனிதனாக உருவாக்கிய நற்குணத்தினை நீ தெய்வமாக மதி.
2.உயர்ந்த உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய்தால்… உனக்குள் அது விளையும்.
3.அந்த உணர்வின் சொல்லாக அந்தக் கடவுளுக்கு மகிழ்ச்சியான உணர்வு கொண்டு ஆராதனை செய் என்றார்.
ஆகவே… உங்கள் உயிரைக் கடவுளாகக் காட்டினார்… உடலைக் கடவுள் அமைத்த கோட்டை என்று காட்டினார். மனிதனாக உருவாக்கிய அந்த உயர்ந்த உணர்வின் ஆக்கச் செயல்களை தெய்வமாக மதிக்கச் சொன்னார். அதைத்தான் உங்களில் நான் பார்க்கின்றேன்.
இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் உங்களை அறியாது சேர்ந்த இன்னல்களில் இருந்து மீண்டு “மகிழ்ச்சி…” என்று வாயில் எப்பொழுது சொல்கின்றீர்களோ அது தான் எனக்குப் பேரானந்தப் பெருநிலையான அந்த சொத்தின் தன்மையாக அந்த மகிழ்ச்சி எனக்குள் விளையும்.
தீமைகள் சுழன்று கொண்டிருக்கும் இந்த வேளையில் அதிலிருந்து விடுபட நான் (குருநாதர்) காட்டிய அருள் சக்தியை
1.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவச் செய்து
2.அங்கே உட்புகுந்த தீமைகளை நீக்கச் செய்து
3.மகிழ்ந்திடும் உணர்வின் எண்ன அலைகள் அங்கே விளையச் செய்து
4.அவர்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் ஒலிபரப்பும் நிலைகளைக் கண்டு நீ ஆனந்தப்பட வேண்டும்.
அதைத்தான் குரு எமக்குச் சொன்னார்.
ஒருவர் நமக்கு எதிரியாகி விட்டால் அவன் வேதனைப்பட வேண்டும் அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… நமக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தான்… அவன் கஷ்டப்பட்டுத் தான் ஆக வேண்டும் என்று ரசிப்பார்கள்.
இப்படி ரசிப்பவருடைய நிலைகள்… தன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை எல்லாம் நஞ்சின் தன்மையாக அது அடையச் செய்துவிடும்.
பின் இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது எந்த நஞ்சு இங்கே விளைந்ததோ மனிதன் சிந்தனை இழக்கப்பட்டு இறந்த பின் பாம்பின் ரூபமாகத்தான் நஞ்சினைப் பாய்ச்சி மற்றதை ரசித்துச் சாப்பிடும் நிலையாகச் செல்ல வேண்டி வரும். நஞ்சுகள் கூடி பாம்பினமாகத் தான் பிறக்க வேண்டும்…
1.அதிலே நீ சென்று விடாதே
2.நஞ்சினை நீக்கி அருள் ஞானிகள் உணர்வுகள் அங்கே பெற வேண்டும் என்று நீ தியானி.
3.அதனின் உணர்வின் தன்மை ஒளியான உணர்வுகளைப் பரப்பு தீமைகளைப் போக்கு அதைக் கண்டு நீ மகிழ்ச்சி பெறு.
குருநாதர் சொன்னது இது தான்.
பித்தனைப் போன்று தான் அவர் இருந்தார். உலகம் அனைத்தும் “அவரைப் பித்தன்” என்று எண்ணினார்கள். ஆனால் “உலக மக்கள் பித்தராக இருக்கிறார்கள்” என்று தான் அவர் சொன்னார்.
உலகம் பித்தின் நிலையில் இருந்து தன்னை அறியாது பல சித்தின் நிலைகள் கொண்டு… அவரவர்கள் உற்பத்தியாகும் நிலை தான் இவ்வாறு உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்… அதிலிருந்து நீ மீள வேண்டும்.
என்னைப் பித்தன் என்று சொல்பவர்கள் அவர்கள் தன்னைப் பித்தன் என்பதை மறந்து விட்டார்கள்.
1.அந்தப் பித்து கொண்ட உணர்வின் தன்மை எனக்குள் எட்டிடாது
2.அந்த மகரிஷிகள் உணர்வை ஒன்றே எனக்குப் போதும் என்று
3.இந்தச் சாக்கடைக்கு மொழி பூச வேண்டாம்… உடல் சாக்கடை என்று உணர்த்திவிட்டு
4.சாக்கடை அருகில் இருந்து தான் இந்த உபதேசங்களை உணர்த்தினார்.
இந்தச் சாக்கடைக்கு முக்கியத்துவம் கொடுக்காதே…! எதை எடுத்தாலும் சாக்கடை கழிவுகள் சேரும். ஆகவே… உயிராக இயக்கப்பட்ட உணர்வின் ஒளியின் தன்மை கொண்டு ஒளியின் சுடராக ஆக வேண்டும்.
வராகன் எப்படி நாற்றத்தைப் பிளந்து சாக்கடைக்குள்ளிருந்து நல்ல உணர்வை எடுத்து மனிதனாக உருவாகக் காரணமானதோ அதைப் போல் அந்த மெய் ஞானிகள் உணர்வை நீ நுகர்ந்து (உனக்குள்) சாக்கடைக்குள் மறைந்து இருக்கும் உயிரின் நிலைகள் கொண்டு அவனுடன் நீ ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு என்றும் நீ வாழ வேண்டும்.
அதை நீ பெற வேண்டும் என்றால் நீ சந்திக்கும் கோடானு கோடி மக்களும் அதாவது முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்… ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலைச் சிருஷ்டித்தது ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு குணத்தின் அடிப்படையில் இயக்குகின்றது
1.யாராக இருந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் ஒருக்கச் சேர்ந்து ஒளியின் சரீரமாகப் பெற வேண்டும்.
2.அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் பெற வேண்டும்… ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்
3.அங்கே மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி நான் உனக்குக் காட்டிய நிலைகள் கொண்டு நீ தியானி.
அதை நீ செய்தால் நீ அதுவாகின்றாய்… ஒளியின் சரீரமாகின்றாய். உன்னைப் பார்ப்பவர்களும் உன்னுடன் அவரும் ஒளியாக ஆகின்றார்கள் என்று இப்படித்தான் எனக்கு வழி காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

தீயதில் இருந்து “நல் முத்தை” எடுக்கும் வழி
உலக வாழ்க்கை… பந்த… கர்ம… காரியங்கள் நடத்திட…
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடி… விழுதின் மூலம் சத்தை எடுத்து அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் “நம் உயர்வின் வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாக” அமைக்க வேண்டும்.
1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல்
2.தீயதில் இருந்து தான் “நல் முத்தை” எடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணதின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.
மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்… நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்த… அலை உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.
ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் – இருட்டில் இருந்து ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை
4.ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.
இத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் நாம் எப்படி முயற்சிக்க வேண்டும்…?
அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் “நடை” போடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல் கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களை… ஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை போன்றும் இருத்தல் வேண்டும்.
ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான் காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.
ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி…
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாகக் காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவி… சுவாசம்… “இவற்றின் இணைப்பு” இந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.
அது மட்டுமல்ல…!
1.“சிவம்” என்ற அமிலமும்..
2.“சக்தி” என்ற ஈர்ப்பும்…
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த “ஆண் பெண் அமில உணர்வு” வளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை (ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஞ்ஞான உலகில் உருவான நச்சுத் தன்மைகள் மனிதனுடைய சிந்தனைகள் முழுமையாக அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியினை எடுத்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
1.உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளப் பத்திரிக்கையையோ டி.வியையோ பார்த்தாலும் போர் முறை தான்
2.வீட்டிலே பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை என்றால் போர் முறை தான்
3.வியாபாரம் செய்யும் இடத்திலும் கொடுக்கல் வாங்கலில் போர் நடக்கின்றது
இப்படி ஒவ்வொரு இடத்திலும் சங்கடம் சலிப்பு கோபம் ஆத்திரம் என்று நாம் எடுத்துக் கொள்ளும் போது அங்கே போர் நடக்கின்றது. கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை என்றால் வேதனை வருகிறது.
அந்த வேதனையான உணர்வுகளுக்கும் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கும் போர் முறையாகி அம்மா… அப்பா… என்று மேல் வலி.. இடுப்பு வலி.. கை கால் வலி… என்று உடலுக்குள் மகாபாரதப் போர் நடக்கின்றது.
உடலுக்குள் நடக்கும் இத்தகைய போரிலிருந்து மீளும் நிலையில்லாது இருக்கும் இதற்கு மாற்றாக நாம் குருக்ஷேத்திரப் போரை நடத்தியே தீர வேண்டும்.
உயிர் தான் நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கிறது. உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாகவும் இருக்கின்றது. ஆகவே
1.புருவ மத்தியில் உயிரான குரு இருக்கும் அந்தச் க்ஷேத்திரத்தில் “குருஷேத்திரப் போராக…”
2.அந்தக் குருவின் (உயிரின்) துணை கொண்டு மெய் ஒளியை நமக்குள் சேர்த்து
3.நமக்குள் இருள் சூழும் நிலையிலிருந்து அந்தப் போரிலே வென்று
4.குருவுடன் ஒன்றி… உயிரைப் போன்று ஒளியாக மாற்றி
5.மெய் ஞானிகள் சென்ற அருள் வழிகளில் நாம் செல்ல வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.
குருசேத்திரப் போரை நாம் நடத்த வேண்டும். அந்த பழக்கம் வர வேண்டும். உயிர் குருவை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நமக்குள் வந்த வெறுப்பு கோபம் ஆத்திரம் இவைகளை அகற்றிட வேண்டும்.
காரணம்… தான் வாழ வேண்டும் என்ற ஆசையில் இரக்கமற்ற நிலையில் ஒருத்தரை வீழ்த்திடும் அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சுவாசிக்கப்படும் பொழுது அது நல்ல உணர்வை வீழ்த்தும் தன்மையாக வருகிறது.
அது போன்ற நிலையை அகற்ற குருவிடமே வேண்டி அந்த மெய் வழி சென்ற அந்த மெய் ஞானியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அடிக்கடி ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.
அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெறுவோம் என்றால் இந்த குருக்ஷேத்திரப் போரில் விஞ்ஞானத்தை வென்று நாம் அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் விண் செல்ல முடியும்.
நாம் எல்லாம் சாதாரணமான மக்கள் என்று எண்ண வேண்டாம்.
இந்தப் பூமியில் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத் தன்மைகளை வீழ்த்தி மெய் ஞானிகளின் அருள் வித்துக்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்ற ஆசையிலே தான் ஆற்றல்மிக்க வித்தை உங்களுக்குள் விளையச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).
வயலைப் பண்டுத்தியது போல் உங்கள் மனதைப் பண்படுத்தி மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியின் வித்தை உங்களுக்குள் விதைக்கச் செய்கின்றேன். அந்த அருள் வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும்.
யாம் பதிவு செய்த ஞான வித்தை வளர்க்க
1.இடைவிடாது குரு அருளை நீங்கள் பெற்று
2.ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் ஒன்றி… அவனுடன் இணைந்து…
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனிடமே வேண்டி
4.உயிர் குருவின் துணை கொண்டு விஞ்ஞான விஷத்தின் தன்மை தனக்குள் இணையாது அதை வீழ்த்தி
5.மெய் வழியில் மெய் ஒளியாகப் பெற்று… சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து
6.கல்கியின் அவதாரமாகப் பறக்கும் நிலை பெற வேண்டும்.
குதிரையைப் போட்டுக் கையிலே வாளைப் போட்டுக் காட்டி இருப்பார்கள். வாளைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன..?
தானியங்கள் மற்ற காய்கறிகளை எல்லாம் வேக வைத்து அதிலிருந்து வரக் கூடிய காரலை நீக்கிவிட்டுப் பக்குவப்படுத்திச் சமைத்துச் சாப்பிடுகின்றோம்.
சுவையான உணவை உட்கொண்டாலும் நம் உடல் அதில் உள்ள விஷத்தைக் கழிவாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகிறது. ஆறாவது அறிவின் செயல் இது.
அந்த நஞ்சுகளை அகற்றுவது போன்றுதான் விஞ்ஞான அறிவினால் வரும் விஷத்தன்மை உடலுக்குள் போவதற்கு முன் உயிரான ஈசனிடம் வேண்டி குருக்ஷேத்திரப் போரை நடத்த வேண்டும்.
1.எப்போது இந்த உடலை விட்டுச் சென்றாலும்
2.இன்னொரு ஆத்மா நம்மைக் கவர்ந்து இழுத்து விடாதபடி அதை வீழ்த்தி (அதற்குத் தான் வாள்)
3.மெய் ஒளியின் தன்மையை விண்ணை நோக்கி அங்கே பறந்து செல்ல வேண்டும்.
பேரண்டத்தில் எண்ணிலடங்காத சூரிய குடும்பங்கள் ஒவ்வொன்றும் அது பல பல நச்சுத் தன்மைகளை உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது. நஞ்சுகள் வந்தாலும் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் அதைத் தன்னுடைய கதிர்வீச்சால் மாய்த்து இங்கே நல்லதாக மாற்றிக் கொடுக்கின்றது.
அதைப்போல
1.நம் உயிராத்மாவின் நிலைகள் அந்த நச்சுத் தன்மைகளை எல்லாம் மாற்றும் ஆற்றலாக
2.தனக்கு தானே அந்த நச்சுத் தன்மையை மாற்றிடும் சக்தியாக
3.உணவுகளைச் சுவைமிக்கதாக ஆக்கி இந்த உடலில் எப்படி மகிழ்ச்சியாகின்றோமோ
4.அதைப் போல ஒளிச் சரீரத்தில் மகிழ்ச்சியாக என்றும் பதினாறாக நீடித்த நாள் வாழ முடியும்
ஆனால் இந்த உடலின் தன்மை “அற்ப நிலை தான்…!” இருந்தாலும் இந்த உடலில் இருக்கும் போது தான் அந்தத் தகுதியை வளர்க்க முடியும்.
துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வலைகளைச் சுவாசித்து… சுவாசித்து…
1.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு பேரண்டத்தில் விண்ணிலே சுழன்று
3.தீயதை வீழ்த்தி உணர்வின் ஒளிச் சுடராக மாற்றி நாம் பேரானந்த நிலை பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று விஞ்ஞான உலகில் ஏற்படுத்தப்பட்ட கொதிகலன்கள் (விஷக் கதிரியக்கங்கள்) சூரியனால் மாற்ற முடியாது. அது எதை எடுத்ததோ சூரியன் அதன் வளர்ச்சியில் அதைத் தான் மாற்றும்.
1.நம் சூரியன் விஷத்தை முறிக்கும் ஆற்றல் முதலிலே பெற்றிருந்தது
2.ஆனால் இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையான கதிரியக்கங்கள் சூரியனுக்குள் கலக்கப்பட்டு
3.அதை மாற்ற முடியாதபடி அந்த விஷத்தையே மீண்டும் உமிழ்த்தும் தன்மை அதிகரித்து விட்டது.
விஷத்தின் தன்மையை நல்லதாக மாற்றும் நிலைகள் அங்கே மாறுபடும்போது விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட கருவிகள் (சூரியனை மையமாக வைத்து வேலை செய்யும் சாதனங்கள்) நாளடைவில் செயலிழந்துவிடும்.
1.இந்தச் சூரியனும் செயலிழந்துவிடும்
2.சூரியனால் ஈர்க்கப்பட்ட மற்ற கோள்களும் அது திசை மாறிவிடும்.
இத்தகைய விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் வெளிப்படும் பொழுது நமது பூமி அதைக் கவர்ந்தாலோ நம் பூமியிலிருக்கும் மனித இனங்களையும் மாற்றிவிடும்.
இவ்வாறு விஷத் தன்மையாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்தே ஆக வேண்டும்.
காரணம் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்திலிருந்து வரும் எத்தகைய விஷத் தன்மையையும் ஒளியாக மாற்றும் ஆற்றல் கொண்டது.
உதாரணமாக பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பலவிதமான ஜந்துக்களை விழுங்கி அதனுடைய விஷமும் இதனுடைய விஷமும் ஒன்றாகும் போது பாம்பின் உடலில் ஒளி கொண்ட நாகரத்தினமாக மிளிரச் செய்கின்றது.
இதைப் போன்றுதான் எத்தனையோ வகையான விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் நமக்குள் இருப்பினும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து
2.நம் உடலுக்குள் அந்த உணர்வின் அறிவாக மாற்றி அறிவின் ஒளியாக மாற்ற வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உயிரைப் போன்றே உணர்வுகளை ஒளியாக மாற்றி எத்தகைய விஷமும் நமக்குள் வராதபடி அதைப் பேரருளாக மாற்றி அந்த ஏகாந்த நிலை என்ற முழுமை அடைய முடியும்.
மின்னல்கள் கடலிலே தாக்கப்பட்டாலும் அது மணலாக மாறுவதை அதற்குள் இருப்பதை விஞ்ஞானிகள் வடிகட்டி கதிரியக்கப் பொறிகளாக மாற்றிப் பல விதமான அணு ஆயுதங்களைத் தயார் செய்துவிட்டார்கள்.
1.உடல் ஆசைக்காக வேண்டி… நாட்டாசைக்காக வேண்டி… உலகையே அழிக்கும் தன்மையாக வந்து விட்டது
2.அதிலே வெளி வந்த கதிரியக்கங்கள் இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.
பூமியிலிருந்து பரவும் அந்தக் கதிரியக்கங்களைச் சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இதைக் கவர்ந்து நமது பிரபஞ்சமே கதிரியக்கமாக மாறிக் கொண்டிருக்கின்றது.
விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த விளைவால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்துவிட்டது சிறுகச் சிறுக சூரியனும் செயலிழந்து கொண்டிருக்கின்றது… அது செயலிழக்க நம் பூமியும் செயலிழக்கும்.
பூமியில் வாழும் மனிதனும் அசுர உணர்வு கொண்டு ஒருவரை ஒருவரை ஒருவர் கொன்று தின்னும் நிலை வருகின்றது.
சூரியன் உருவாக்கும் அந்தப் பாதரசமே (வெயில்) கருகிய விஷத் தன்மையாக மாறும் தன்மை சூரியனுக்குள்ளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சூரியன் செயலிழக்கும் தன்மையினால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் அதே நிலை அடைகின்றது.
நான் (ஞானகுரு) வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.
இந்த உணர்வைப் பதிவாக்கி நீங்கள் நினைவின் தன்மை கொண்டு வந்தால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் தெளிவாக உணர முடியும். சூரியனின் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் உணர முடியும்.
ஆனால் இதிலிருந்து தப்பிய துருவ நட்சத்திரம் என்றும் அழிவதில்லை. எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை மாற்றி விடுகின்றது.
நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம்.
1.அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்தி
2.நினைவாற்றலை உங்களுக்குள் கொண்டு வரச்செய்து அந்த நினைவைக் கூட்டி
3.நஞ்சை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் திறனாக உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.
விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதிலிருந்து மீட்டிக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே பதிவாக்கும் உணர்வுகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். கூட்டுத் தியானங்கள் இருங்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து இதைச் செயல்படுத்துங்கள்.


அதர்வண வேதம்
ரிக் வேதம் சாம வேதம் யஜுர் வேதம் அதர்வண வேதம் – ஒரு பொருளின் நிலைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது
1.ஒன்றை விழுங்கி… அப்போது நாதத்தின் சுருதிகள் மாறுகின்றது.
2.அதனுடைய இனப்பெருக்கம் இனச்சேர்க்கை இனத்தை உருவாக்கும் என்ற நிலைகள் வேதங்களில் இப்படிப் பிரிக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் விளைவின் தன்மை பெறப்படும் பொழுது அதர்வண வேதத்தைத் தனியாகப் பிரித்துக் காட்டுவார்கள்.
ஒரு புலி மானைப் பார்க்கிறது என்றால் அதனுடைய வேகத்துடிப்புகள்… மான் பார்த்த பின் உடனே அஞ்சி நடுங்க வைக்கின்றது. இது அதர்வண வேதத்தைச் சேர்ந்தது.
புலியின் உணர்வு இதற்குள் சேர்ந்த பின் மான் செயலற்றதாகி அதனைப் புலி விழுங்கி விடுகின்றது. மானின் உணர்வுகள் இயங்காது உயிர் அகன்று வந்த பின் புலி கவர்ந்து கொண்ட பின் தன் இனமாகச் சேர்த்து அதனின் உயிரைத் தன் இனமாக வளர்கின்றது. இதைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதர்வண வேதம் என்ற நிலையில்
1.ஒரு உணர்வின் தன்மை ஒன்றைக் குவித்து உணர்வால் மாற்றப்பட்டு இது வளர்ந்த பின்
2.உயிருடன் இணைந்த பின் இதைக் கொண்டு அது இணைத்துக் கொண்ட
3.அதாவது விழுங்கிய உணர்வின் தன்மை கொண்டு எவ்வாறு ரூபங்கள் மாறுகின்றது…? என்ற நிலையை அதர்வண வேதம் காட்டுகிறது.
வேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் இருக்கலாம். ஆனால் வேதத்தின் நுண்ணிய நிலைகளை அன்று மெய் ஞானிகள் சித்தரித்துக் காட்டினார்களே…!
1.அதனின் உண்மைப் பொருளை இன்று காணாது
2.அதர்வண வேதம் என்ற நிலைகளில் யாகத்தைச் செய்து ஒவ்வொரு தெய்வத்திற்கும் சக்தி ஊட்டுகின்றார்கள்.
யாக வேள்விகளை நாம் பரப்பப்படும் பொழுது அந்த மந்திரங்களைச் சொன்ன பின் இந்தத் தெய்வத்திற்குச் சக்தி ஊட்டப் போகின்றோம் என்ற நிலைகளில் 48 நாட்கள் மந்திரங்களை ஓதுகின்றார்கள்.
அந்த தெய்வத்திற்காகப் பல பொருள்களை இட்டு அவர்கள் சொல்லும் மந்திரங்களும் யாகத் தீயில் போடும் பல மணங்களும் இவையெல்லாம் சேர்த்து சோமபானம் (மது) என்பதையும் ஐதீகத்திற்காக என்று சொல்லி ஊற்றுவார்கள்.
அங்கே அவர்கள் சொல்லும் மந்திரங்களை நாம் கேட்டுணர்ந்தால் இதற்குப் பெயர் வசியம். ஆலயத்தில் உள்ள தெய்வத்திற்கு சக்தியைச் செருகேற்றுகின்றார்கள் என்றால் இப்படிச் சொல்லும் பொழுது மனிதன் இந்த தெய்வம் இன்னது செய்யும் என்று காவியங்களைத் தீட்டுகின்றார்கள்… மந்திரங்களைச் சொல்கிறார்கள் நாம் கேட்டறிகின்றோம்.
அவர்கள் சொல்வதெல்லாம் நமது உயிருக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.
மந்திரத்தைச் சொன்ன பின் வாத்தியங்களை வைத்து இசைகளை இசைப்பார்கள். ஒவ்வொரு மேளத்திற்கும் ஒவ்வொரு விதமான நாதங்கள் உண்டு ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வாத்தியங்களை வாசிப்பார்கள்.
1.கருப்பண்ணசாமி மாடசாமி இவர்களுக்கெல்லாம் டும்…டும்…டும்… என்று அடிப்பார்கள்.
2.அப்படி அடித்தாலே போதும் தன்னை அறியாமலே ஆட்டங்கள் வந்து விடும்.
3.எதைப் பதிவு செய்து வைத்துள்ளதோ அந்த உறுமி மேளச் சத்தத்தைக் கேட்டாலே போதும்…
4.ஆடாத பேயெல்லாம் ஆட ஆரம்பித்து விடும். இது எல்லாம் சுருதிகள் மந்திரத்தால் ஏற்படுத்தப்பட்ட நிலைகள் தான்.
5.யாக வேள்விகளால் வரக்கூடிய சில தீமைகள் இவைதான்.
பக்தி மார்க்கங்களில் யாகத்தைச் செய்து தெய்வத்திற்கு நெய்வேத்தியம் வைத்து அதன் வழிகளில் நாம் சக்தி பெறுவது என்பது “மந்திர ஒலிகள் தான்…”
மந்திரம் இல்லாத மதங்கள் இல்லை. ஒவ்வொரு மதமும் மந்திரத்தை உருவாக்கித் தான்… உருவத்தின் தன்மை கொண்டு ஒவ்வொரு கோயிலுக்கும் சில நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.
இதைப்போல எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் கேட்டறியும் போது
1.நாதங்கள் சுருதிகள் அவர்கள் சொல்லும் வாக்கியங்கள்… இந்தத் தெய்வம் இன்னது செய்யும் என்று பறைசாற்றி…
2.தெய்வ குணங்களைச் சித்தரித்து அது நமக்கு வாரி வழங்கும் என்று ஆசையை ஊட்டி
3.அதனின் நிலைகள் இவர்கள் ஓதும் மந்திரத்தை நாம் செவிகொண்டு கேட்கப்படும் பொழுது ஒலி அலைகள் நமக்குள் பதிவாகின்றது.
அவர்கள் சொல்லும் உணர்வுகள் வந்து நல்ல குணத்தில் அதர்வண வேதமாக “நல்லதுக்குள் தீமைகளாகப் பதிவாகி விடுகின்றது…”
இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் அல்லவா.

செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனி வரும் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்
எண்ணத்தின் உணர்வால் நற்குண சமைப்பான அமிலச் சேர்க்கையின் சமநிலை கொள்ளும் இப் பூமி வாழ்க்கைச் சுழற்சியில் சிக்குண்ட பல குண மோதல் நிலையிலும்… எண்ணத்தின் உணர்வு சமநிலை பெறத்தக்க வழி ஆற்றல் எண்ணம் கொண்டு சூரியனின் அலை சக்தியை காந்த மின் அலை வார்ப்பாக உடல் எலும்புகளின் ஊன் நிலை எடுக்கவல்ல வழிதனை மனித எண்ணத்தால் பெறக்கூடிய ஆத்ம பலத்தின் வலுவைக் கொண்டு…
1.இன்றைய இக்கலியில் சிதறுண்டு சிக்கித் தவிக்கும் மனிதனின் எண்ண உணர்வு வேட்கை
2.மனித ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து ஞான வளர்ச்சி குன்றியுள்ள இக்கலியின் கடைசிக் காலத்தில்
3.மனித ஆத்மா உயரும் ஞான போதனை வழித்தொடர் அற்று
4.மனித எண்ணங்களும் ஆவி உலகில் உள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆவி ஆத்மாக்களும்
5.செயற்கை விஞ்ஞான ஒலி ஈர்ப்பில் உணர்வைச் செலுத்தி இயந்திர அலைத் தொடர்பின் ஒலி மோதலில் மனித ஆத்மா எடுத்து வெளிப்படுத்தும் சுவாச அலையும்
6.இயந்திர அலையில் வெளிப்படும் காந்த சக்தியைச் சமைத்து சமைக்கப்பட்டதின் ஒலி எடுத்து வெளிப்படுத்தும் மனித சுவாச அலை அணுக்கள்
7.அதற்குண்டான அணு வளர்ப்பைத்தான் வளர்க்கும் ஆற்றலைத் தான் பெற்றுள்ளது.
அதனால்… மனித உணர்வின் சுவாசமே இயந்திர கதியின் ஒலி ஈர்ப்பின் உணர்வெடுக்கும் எண்ண சுவாச அணுக்கதிர்கள்தான் சுவாசத்திலிருந்து வளரும்.
இயற்கைத் தாவர நறுமண மூலிகையின் தொடர்பற்ற… இயந்திர ஓட்ட செயற்கை மனித நிலையில் வெளிப்படும் சுவாச அலையின் அணுக்கதிர்களில் இருந்து வளரவல்ல உயிரணுக்களே…
1.கலி மனிதன் வெளிப்படுத்தும் அலைக்குகந்த புதிய புதிய குறுகிய எண்ண வேட்கை ஞானச் செயலற்ற ஜீவ ஜெந்துக்கள் தான்
2.இப்பொழுது வளரும் ஜீவ அணு உயிர் வளர்ப்புகளும் தாவர இன வளர்ப்புகளும்.
3.இத்தொடரிலேயே செல்லும் வழி தான் செல்லும் நிலை தான் “இன்றைய காலமும் இனி வரும் காலமும்…”
பல நூற்றாண்டுகளுக்கு முன் மனித உருவங்களும் மனிதனைக் காட்டிலும் மிருக உருவங்களும் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் உருவத்தில் வளர்ந்து வண்ணமும் பொலிவும் மிக்க ஒளியுடன் மிளிர்ந்தன.
இராமாயண காலத்தில் வால்மீகியார் எழுதிய குணத்தின் அடிப்படைக் கதாபாத்திரமே அந்தந்த குணத்திற்கொப்ப “எண்ணத்தில் குறுகியவருக்குக் கூனி என்றும் சகுனி என்றும்…” எண்ணத்தில் உயர்ந்த இராமருக்கு அவரின் உருவ குண அழகை வழிக்காட்டிப் படைத்த காவியத்திலேயே எண்ணத்தைக் கொண்டு உருவகத்தைச் சித்திரித்துக் காட்டினார் வால்மீகியார்.
வளர்ந்தோடிய இக் கலி ஓட்டத்தில் இயந்திரத் தொடர்பு கொண்ட செயற்கை ஒலி ஈர்ப்பில் வாழக்கூடிய மனித எண்ணங்களின் உணர்வு அதன் தொடர்பில் செலுத்தப்படும் வழித்தொடர் கொண்ட எண்ண வேட்கையின் சுவாசு அலை வீச்சின் சுழற்சிதான்… இக்கலி ஓட்ட பூமி ஜீவ ஜெந்துகளின் உருவக வார்ப்புநிலை வழி கொள்ளும் வளர்ச்சியின் வழிமுறையில் எவ் ஒலி அதிகமாய்க் கேட்டு அவ் ஒலி ஈர்ப்பின் சுழற்சியில் சுழல் கொள்ளும் வார்ப்பக ஞான வளர்ச்சியும் மீண்டும் பிறப்பிற்கு வரும் பொழுது
1.ஞானத்தின் வளர்ச்சி கொண்ட எண்ண உணர்வு மகவு பிறப்பதைக் காட்டிலும்
2.தன் ஞானமற்று விஞ்ஞான வேட்கை வழி தந்த உணர்வு ஈர்ப்பில் கர்ப்பம் கொள்ளும் சிசு நிலையிலேயே
3.விஞ்ஞான செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனிவரும் காலப் பிறப்புகளும் கலிமாற்றப் பிறப்புத் தொடர்புகளும்.
அன்றைய காலங்களில் ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்று பிறக்கும் மகவுகளுக்கே பயில்விக்கும் பயிற்சி ஞான போதனைகள் இன்றைய செயற்கைப் போதனை தன்னைத்தான் நம்பா செயற்கைப் பிடியின் நம்பிக்கை கொண்டு நடைபெறும் காலச் சுழற்சியின் ஓட்ட கதியுடன் மனிதனின் எண்ணம் சென்று கொண்டுள்ளது.
இதிலிருந்து மீண்டிடும் நிலையாக …
1.மனிதனின் ஞானத்தால் ஆத்ம பலத்தின் உயர்வைக் கொண்டு ஜீவ மனித எண்ண உணர்வின் ஞானம் கொண்டு அடையும்
2.இன்ப நிலையின் வழித் தொடரைத்தான் உபதேச போதனையாய் உயரும் வழிகாட்டி
3.ஒவ்வொரு ஆத்மாவும்… மனிதனுக்கடுத்த நிலையான தெய்வநிலை பெறவல்ல வழித் தொடருக்கு இங்கே வழி காட்டுகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விநாயகர் தத்துவத்தை ஞானிகள் மக்களுக்குக் காட்டியிருந்தாலும் அவர்களை நாம் “முன்னே பின்னே பார்த்ததில்லை…”
1.அந்த மெய் ஞானி நல்லதைச் செய்து “தன்னையறிந்தான்…” என்ற நினைவை ஊட்டி
2.சிறுகச் சிறுக அவர்கள் பெற்ற சக்தியை நமக்குள் வலுவை ஏற்றுவதற்கு
3.காலையில் எழுந்தவுடன் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
4.வானை நோக்கி எண்ணி ஒவ்வொருவரும் எடுப்பதற்காக விநாயகரை வைத்தார்கள்.
அப்போது… தன் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி மெய் ஒளியைப் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்ற “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று எண்ண வேண்டும்.
எந்த மகா ஞானி உண்மையை அறிந்தானோ…
1.விண்ணிலே ஒளியின் சுடராக இருக்கும் அவனை நினைவு கொள்ளும் பொழுது
2.சூரியனின் காந்த சக்தி அந்த அலைகளைக் கவர்ந்து கொண்டு வரும் அவனின் உணர்வை நாம் சுவாசித்து
3.நமக்குள் அந்த உணர்வின் வலுவை ஏற்ற வேண்டும்.
விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுகுண்டுகள் செய்து அதை ஹைட்ரஜனைக் (கன நீர் – DUTERIUM) கொண்டு அடக்கி வைக்கின்றனர்.
நீருக்குள் இருக்கக்கூடிய சக்தியை… அதாவது ஒரு அணுவிற்குள் இருக்கும் சக்தியை அணுவின் தன்மை பிளந்தாலும்
1.மற்றதுக்குத் தீமைகளை விளைவிக்காத ஹைட்ரஜன் என்ற கன நீரை
2.அதாவது நீரை வடித்து உப்பின் சக்தியை அதிகமாக்கி வெடிக்க விடாது அதனுடைய ஆற்றலைக் கலந்து கொள்வது.
3.ஏனென்றால் கன நீரின் அழுத்தத்தின் தன்மையால் வெடிக்கும் நிலையைச் செயலற்றதாக மாற்றிவிடும்.
உப்பைப் போட்டால் எப்படி ஊறுகின்றதோ அதைப் போல் ஹைட்ரஜன் கதிரியக்கத்திற்குள் இருக்கும் “பசப்பை நீக்கி” தன் உணர்வின் தன்மை கொண்டு அதை அடக்கிவிடும்.
விஞ்ஞானி அணுப் பிளப்பை இவ்வாறு கட்டுப்படுத்துவது போல் மெய் ஞானி என்பவன் விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சினையும் (கதிரியக்கச் சக்திகளை) அடக்கிடும் கன நீராக… ஹைட்ரஜன் ஆனான்.
அந்த மெய் ஞானியின் உணர்வின் ஆற்றலை நாம் விண்ணிலிருந்து எடுத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் அடக்கச் செய்ய வேண்டும் என்பது தான் விநாயகர் தத்துவம்.
இன்றைய வாழ்க்கையில் நல்லதை எண்ணுகின்றோம்… பிறர்பால் இரக்கமும் படுகிறோம். ஆனால் அவர்கள் உடலில் விளைந்த துன்பமும் துயரமும் குறைகளும் நமக்குள் வந்து அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் மாறித் தீய வினைகளாக விளைந்து விடுகிறது.
அதை நீக்க வேண்டுமல்லவா…!
ஆகவே விநாயகரைப் பார்த்ததும் நாம் விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் அந்த ஆற்றலைச் செலுத்த வேண்டும்.
கருவில் இருக்கும் குழந்தைக்குக் கண்ணன் உபதேசித்தான் என்று காவியங்கள் உண்டு. அதாவது நாம் சுவாசித்தது ஒவ்வொன்றுமே உடலுக்குள் கருவாகி அணுவாக விளைகின்றது.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
1.அந்த நினைவலைகளைச் சிறுகச் சிறுகக் கூட்டிப் பின்
2.மொத்தமாக உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற நினைவைக் கூட்டி
3.உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் அணுக்களுக்குள் எல்லாம்
4.கண்ணின் நினைவு கொண்டு அந்த ஞானியின் நினைவலைகளை இங்கே உபதேசிக்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் ஒளியின் வீரியத் தன்மை கொண்டு அது நமக்குள் ஓங்கி வளரும். தீமையிலிருந்து “நம்மைக் காக்கும் சக்தியாக வளரும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அடுத்தவருக்கு எல்லா உதவிகளையும் செய்வோம். உதவி செய்த பின்… கடைசியில்
1.இந்தப் பாவிப் பயலுக்கு இப்படியெல்லாம் உதவி செய்தேனே…
2.எனக்கு அவன் ஒன்றும் செய்யவில்லையே…! என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம்.
வேதனைப்பட்டவர்களுக்கு எல்லாம் முதலில் உதவி செய்திருப்போம். கஷ்டங்களை எல்லாம் பரிவுடன் கேட்டு அவர்களிடம் இருக்கும் வேதனைகளை எல்லாம் விலைக்கு வாங்கி விடுவோம்.
வேதனையாகி நோயான பின் என்ன சொல்வோம்…?
நான் இங்கே இவ்வளவு உதவி செய்தேனே… அங்கே அவர்களுக்கு அந்த உதவி செய்தேனே…! எனக்கு இப்படி வந்துவிட்டதே…! என்ற இந்தத் துன்பப்படும் உணர்வுதான் மீண்டும் மீண்டும் வரும்.
காரணம்… உதவி செய்த பின் நாம் நினைத்தவுடன் மற்றவர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் அவர்கள் ஏதாவது ஜோலியாகச் செல்வார்கள்.
அன்றைக்கு நான் எப்படி எல்லாம் உதவி செய்தேன்…! இன்று நான் கூப்பிடுகிறேன்… அவர்கள் வரவில்லையே…! என்று அவர்கள் மீதே எண்ணமே இருக்கும்.
1.உதவி செய்தேன் வரவில்லையே… உதவி செய்தேன் வரவில்லையே… என்று
2.பிறரின் உணர்வைத் தான் எண்ணி வேதனையை இங்கே வளர்த்துக் கொண்டிருப்போம்.
அவர்கள் உணர்வு பூராம் இந்த உடலில் சேர்த்து நோயாகி இறந்தபின் எங்கே செல்வோம்…?
நான் அவனுக்கு உதவி தான் செய்தேன். ஆனால் அவனோ எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தான் பாவி…! என்று எண்ணி வேதனையாகி நோயாக மாறி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு யாருக்கு உதவி செய்தோமோ அந்த உடலுக்குள்ளே தான் போவோம்.
இங்கே வேதனைப்பட்டு எரிச்சல் கொண்டு வெளியேறிய உயிரான்மா அந்த உடலுக்குள் போய் மனிதனாகவும் பிறப்பதில்லை.
1.அங்கே சென்று வேதனையை மீண்டும் உருவாக்கி நோயாக மாற்றி
2.அவனை வீழ்த்தத்தான் செய்யும்… குழந்தையாகப் பிறப்பதில்லை.
அந்த உடலிலும் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டபின் உயிரான்மாவில் விஷம் அதிகமாகி விடுகின்றது.
பாலில் விஷத்தைக் கொஞ்சம் போட்டால் குடித்தால் மயக்கம் வரும். அதிகமான விஷத்தைப் போட்டு விட்டால் சுத்தமாகவே நினைவை இழக்கச் செய்துவிடும்
அது போல் கடைசியில் மனிதனுடைய நினைவுகள் எல்லாம் இழந்த பிற்பாடு எந்த அளவிற்கு விஷத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க விஷம் கொண்ட உயிரினமாகப் பிறக்கச் செய்யும் நம் உயிர்.
புழுவிலிருந்து மிருகமாக வரும் வரையிலும் அவைகளின் உடலில் விஷம் அதிகமாக இருக்கும். பூனை விஷமான உயிரினத்தை அடித்துச் சாப்பிடுகிறது. அது போல் மற்ற உயிரினங்களும் விஷத்தைத் தாராளமாக உட்கொள்கிறது. அந்த உடலுக்குள் ஒன்றும் செய்வதில்லை.
ஆனால் சாதாரண ஒரு பல்லியின் எச்சம் நம் மீது பட்டாலே உடலில் கொப்புளம் ஆகிவிடும். விஷம் பட்டவுடனே நம் உடலில் இத்தனை நிலையும் ஏற்படுகிறது.
நாம் விஷத்தை நீக்கும் உடலாகப் பெற்றிருந்தாலும் விஷமான உணர்வு நமக்குள் கலந்து விட்டால் நம்மைச் செயலற்றதாக ஆக்கி விடுகிறது.
ஆனால் மற்ற உயிரினங்கள் விஷத்தைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொண்டால் உடலிலே அது வலுவின் தன்மையாகக் கொண்டு வருகின்றது. அந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை
புழுவிலிருந்து மற்ற எல்லா உயிரினங்களுக்கும் விஷம் உண்டு. தேளுக்கு ஒரு விஷம் பாம்புக்கு ஒரு விஷம் கட்டுவிரியனுக்கு ஒரு விஷம் புலிக்கு ஒரு விஷம் பூனைக்கு ஒரு விஷம் நாய்க்கு ஒரு விஷம் இப்படி எல்லாவற்றிலும் விஷத்தின் வலிமை உண்டு.
ஆனால் மனிதன் எடுத்துக் கொண்ட குணம் அடிக்கடி யாரிடமாவது சள்… சள்… சள்… என்று பேசும் நிலைகள் வந்து விட்டால்
1.“என்னை இப்படிச் செய்து கொண்டே இருக்கின்றான்…” என்று சள்..சள்…சள்… என்று சொல்லச் சொல்ல
2.யாரைக் கண்டாலும் வெறுத்துப் பேசச் செய்யும்.
இப்படிப் பேசி வெறுக்கும் நிலைகள் வளர்ந்தால் அந்த நஞ்சின் தன்மை உடலிலே விளைந்த பின் உடலை விட்டுச் சென்றபின் எங்கே செல்வோம்…?
1.நாயிடம் இருக்கும் விஷமும் இந்த உயிராத்மாவில் வளர்த்துக் கொண்டே விஷமும் ஒன்றாகி
2.உயிர் நம்மை அடுத்து நாயாகப் பிறக்க வைத்துவிடும்.
இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.
நாம் நினைக்கின்றோம் ஒன்றுமே செய்யவில்லை என்று…! ஆனால் உயிரின் வேலை… நாம் சுவாசித்து எடுத்ததை எல்லாம் உடலாக உருவாக்கி உடலில் விளைந்த சத்தை உயிராத்மாவாக மாற்றி அதிலே எது வலுவோ அதற்குத் தக்க அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்தந்த உடலாக மாற்றிவிடும்.
மனிதனாக இன்று இருக்கும் நாம் அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!


அகஸ்தியன் கண்டது அனைத்தையும் “நீங்கள் காணுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”
“அகஸ்தியன் என்று சொல்லும் அக்காலத்தில் வாழ்ந்த அந்தச் சிசு” தன் தாயின் கருவில் இருக்கப்படும் பொழுதே பல உன்னதமான சக்திகளைப் பெறுகின்றது. அவை அனைத்தும் அதற்குப் “பூர்வ புண்ணியமாக” அமைகின்றது
பிறந்து… அந்தக் குழந்தை தனிமையிலே கிடந்தாலும் நஞ்சு கொண்ட உயிரினங்களோ பாம்புகளோ மற்ற பூச்சிகளோ இவனைக் கண்டாலே விலகிச் செல்லும் நிலையே ஏற்படுகின்றது.
1.சூரியனை வணங்கி வந்த அக்காலத்தில் இது கடவுளின் பிள்ளை கடவுளால் கொடுக்கப்பட்டது என்று
2.அவருடைய தாய் தந்தையரே அவனைக் கடவுள் என்றே வணங்கத் தொடங்குகின்றார்கள்.
பல அற்புத நிகழ்ச்சிகள் நடக்கின்றது காட்டு விலங்குகள் அனைத்தும் இவனை அணுகாது விலகிச் செல்கின்றது.
ஆனால் அகஸ்தியனுடைய தாய் தந்தையர் மிருக ஜந்துக்களிடமிருந்து தப்பிப்பதற்கு தாவர இனங்களின் விழுதுகளை அரைத்து உடலில் மூலமாகப் பூசினார்கள்.
அந்த முலாமின் உணர்வுகள் தான் கருவிலே உருப்பெற்ற அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைத்தது.
1.சூரியனின் உணர்வின் ஆற்றலே இவனுக்குள் பெருகிப் பெருகி அதை இவன் நேரடியாகப் பார்க்கின்றான்
2.அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளையும் காணுகின்றான்.
விஞ்ஞான அறிவுப்படி வலிமையான தொலைநோக்கிகளை வைத்து விண்வெளியில் தொலை தூரத்தில் இருக்கும் மண்டலங்களைக் காணுவது போன்று
1.அவனின் உணர்வின் செல்களுக்கும் மற்றதை ஒளி கொண்டு வெகு தூரம் நினைவலைகள் பாய்ச்சப்பட்டு
2.அணுவின் ஆற்றலை அறியும் தன்மையும் இவனுக்குத் தாய் தந்தையினுடைய வடிவிலே கருவிலேயே பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.
இது அவனுடைய சந்தர்ப்பம்.
பிறந்து ஐந்தே வயது ஆகும் பொழுது விண்ணை நோக்கிப் பார்ப்பதும் மற்ற விஷம் கொண்ட மிருகங்கள் இவனைக் கண்டு விலகிச் செல்வதும் பல அற்புத நிகழ்ச்சிகளை அணுவின் சிதைவும்… அணுவின் கூட்டமைப்பும்… அணுவின் ஆற்றலையும்… அவன் நேரடியாக்க் கண் கொண்டு அறியத் தொடங்குகின்றான்.
1.ஒரு உயிரினம் முட்டை இடுக்கிறது என்றால் அது என்ன முட்டை என்றும்
2.அதற்குள் அணுவின் தன்மை எப்படி உருப்பெறுகிறது என்பதையும் அவன் கண்டுணர்கின்றான்.
நமது பூமியிலே மணங்களைக் காணும் (நுகர்ந்து) பொழுது இந்தச் செடியில் இருந்து வந்த மணம் என்று அதைப் பிரித்துச் சொல்லும் தன்மை ஐந்து வயதிலேயே அவனுக்கு வருகின்றது.
இது போன்ற வளர்ச்சி வந்தபின் தாய் தந்தையருக்கு பேரானந்த நிலை வருகின்றது.
இருப்பினும் இந்தக் குழந்தை தன்னிச்சையாக எங்கே சென்றாலும் அச்சமின்றி அவன் செல்கின்றான். மற்றவைகள் தான் இவனைக் கண்டு அஞ்சுகின்றது. ஆனால் அவருடைய தாய் தந்தையரோ தாவர இனத்தின் முலாம்களைப் பூசாமல் சென்றால் மிருகங்கள் அவர்களைக் கொன்றுவிடும்.
இப்படி நடக்கப்படும் பொழுது இவர்கள் பூசிய முலாம்கள் உடலில் அதனின் நஞ்சுகள் பெருகி அது அதிகரித்து நோயாகி மடிகின்றார்கள். அவனுக்கு ஐந்து வயது முடிவதற்கு முன் இருவரும் இறந்து விடுகின்றார்கள்.
இரண்டு பேருமே தன் குழந்தை மீது… இளம் பிஞ்சு உள்ளத்தை எண்ணியே காட்டுக்குள் அவனைத் தனித்து விட்டுச் செல்கிறோமே என்ற ஏக்க உணர்வு அதிகரித்து இருவரும் செயலற்ற நிலை வரும் பொழுது
1.குழந்தையை ஏங்கி அந்த உயிரான்மாக்களும் ஒருமித்த நிலைகள் வெளி வருகின்றது.
2.வெளிவந்த பின் எந்தக் குழந்தை மீது பற்று வைத்தார்களோ அகஸ்தியனின் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.
3.அவர்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் வளர்ச்சி பெற்று வந்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல்கள்
4.”இந்தக் குழந்தையைக் காத்திடும் உணர்வாக” அந்த உடலுக்குள் புகுந்து விடுகின்றது.
அதற்குப்பின் அந்த குழந்தைக்கோ தன் தாய் தந்தை மடிந்ததை எண்ணி அதுவும் ஏக்கத்தால் எண்ணுகின்றது. “அன்னை தந்தையைப் பார்க்க வேண்டும்” என்ற ஏக்கத்திலேயே சூரியனை உற்றுப் பார்க்கின்றான்.
ஏனென்றால் சூரியனைக் கடவுள் என்று காண்பித்த நிலைகளில் இவன் உற்று நோக்கும் போது விண்ணிலே நடக்கும் அதிசயங்களைக் கண்டுணர்கின்றான்.
1.இவன் உடலில் விளைய வைத்த அவை ஒவ்வொன்றும் அறிவின் தன்மையாக விண்ணின் ஆற்றலை அறியும் நிலையாக
2.இவனின்று உமிழ்த்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்து கொண்டுள்ளது.
அதை எல்லாம் நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகிறேன் என்றால்…
1.என் குருநாதர் அதை எடுக்கும் வழியை உணர்த்தியதனால்
2.அதனின் உணர்வின் துணை கொண்டு தான் அறியும் ஆற்றலைப் பெற்று
3.அறிந்த பின் உங்களுக்கும் அதைச் சொல்ல முடிகிறது.
ஏனென்றால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டதை இன்று நம்மால் பார்க்க முடியும்.
1.நீங்கள் அனைவருமே அதைக் காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
2.எனது குருநாதர் எனக்கு எப்படி அதைக் காண்பித்தாரோ அதைப் போல விண்ணுலக ஆற்றலை நீங்கள் ஒவ்வொருவரும் கண்டுணர முடியும்.
மனிதனான பின் முழுமை அடையும் நிலைகளாக உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் நீங்கள் பெற முடியும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன்.

விண்ணிலிருந்து ஒளி அலைகளை எடுத்து “ஜோதி நிலை பெறுவது எப்படி…?”
உந்து விசையின் வேகத்தைக் கொண்டு அதில் செலுத்தும் எரிபொருளின் தன்மைக்கொப்ப அவ்விசையின் எரிபொருள் மோதலிலிருந்து வெளிப்படும் துடிப்பு நிலையைக் கொண்டு வாகனங்களின் ஓட்டத்தை விஞ்ஞானத்தால் வழிப்படுத்துகின்றனர்.
அதைப் போன்றே…
1.உயிரணுவின் ஆத்ம அலையின் வார்ப்புக் கூடான இச்சரீரக் கூட்டு இயந்திரம்
2.சுவாசம் என்ற உந்து விசையைக் கொண்டு உடல் சமைக்கும் ஆத்ம எரிபொருளின் ஜீவத்துடிப்பு நிலை
3.ஒலி ஈர்த்து ஒளி பெற்றுச் சொல்லாற்றி சுவை கண்டு உணருகின்ற எண்ண ஓட்டக்கோளத்தின் வளர்ப்பு நிலையில் அடுத்த நிலை யாது…?
உயிராத்மாவின் வளர்ப்பிற்கு ஜீவ சரீர உணர்வின் எண்ணத்தால் சமைக்கப்படும் வலுவைக் கொண்டுதான்… ஆத்மாவின் வலு நிலை சரீர ஓட்டத்தில் செயல்படும் தன்மை நிலை ஏற்படுகின்றன.
சரீரமற்ற ஆவி ஆத்மாவிற்குச் “சுவாச நிலை இல்லாததனால்” அதனுடைய உண்மைத் துடிப்பு நிலை காற்றின் அலைத் தொடர்புடன் உயிர் ஆத்மாவானது இருக்கின்றது.
அதாவது நாம் எப்படி நட்சத்திரங்களைக் காணும் பொழுது மின்னும் நிலையைக் காணுகின்றோமோ அதைப் போன்றே
1.ஆத்ம அலையின் துடிப்பு நிலையின் செயல் கொண்ட சுழற்சியில் தான்
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா செயல் கொள்கின்றது.
பூமியின் பிடிப்பலை எண்ண உணர்வுடன்… வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ் நாளில் எண்ணத்தின் சுவாசத்தை எடுத்து… அச்சுவாசம் சமைக்கும் தொடர்பு வாழ்க்கையின் வழி முறைப்படி… ஆத்மாவின் உயர் சக்தியை அறியாமல்… வாழ்க்கைப் பிடிப்பில் சிக்கி வாழ்ந்து மடியும் உயிராத்மா… அதன் உயர்வு நிலை பெறாமல்… வளர்ச்சியற்றுப் போய் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலேயேதான் இருக்க முடியும். உயிராத்மா வளர்ச்சி கொள்ள முடியாது…!
ஆகவே…
1.பல கோடி ஆண்டுகளாக வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி கொண்டு வந்த
2.ஆத்ம வளர்ச்சியின் மனிதச் சரீரத்தின் வலுப் பெற்ற வளர்ச்சி நிலையிலிருந்து
3.உயர் நிலை பெற – சுவாசத்தைக் கீழ் நோக்கிய பூமி ஈர்ப்பு எண்ணமுடன் செலுத்தாமல்
4.சூரியனின் சமைப்பின் வழித் தொடர் பல நிலையில் மாறு கொண்டு வளரும் தன்மையில்
5.பூமி சமைத்து வெளிப்படுத்தும் அலையை எடுக்காமல்
6.பூமி சமைப்பினால் சரீரம் பெற்று எண்ணத்தின் உணர்வு நல்ல நினைவு உள்ள காலங்களிலேயே
7.மேல் நோக்கிய சுவாசத்தால் நாம் எடுக்கும் நேரடி காந்த நுண் அலைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
அதாவது ஏழு வகை வண்ணத்தில் சமைக்கப்பட்ட ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை… காந்த ஈர்ப்பு நுண் அலையின் தொடர் வளர்ச்சி நிலை எண்ணத்தின் மோதலினால் நேரடியாகப் பெற வேண்டும்.
இப்படிப் பெற்ற வளர்ச்சியைக் கொண்டு பூமியின் பிடிப்பற்ற நிலைக்கு வர முடியும். அதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் வழி முறையிலிருந்து மனிதனுக்கு அடுத்த நிலையான வளர்க்கும் நிலையான “வண்ண ஒளி ஜோதியாகலாம்…!”
மனிதனின் எண்ணத்தால் எடுக்கும் நிலை கொண்ட வார்ப்பு நிலை தான் ஆத்மாவின் வளர்ச்சி நிலை. ஆகவே இவ்வாத்மாவில் சேமிக்கும் வண்ண ஒளியின் வளர்ச்சி நிலையில் தான் மனித நிலையிலிருந்து வளர்ச்சி பெறும் அடுத்த நிலை உருவாகின்றது.
சீப்பை எடுத்து நாம் தலையை வாரும் பொழுது கீழ் நோக்கி வாரும் பொழுது
1.பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியதாக ரோமக்கால்களின் அணு வளர்ச்சியும்
2.கீழ் நோக்கி வளரும் வளர் நிலைக்கொப்ப ஈர்ப்பில் சீவப்படும் நிலையில் எந்நிலையான பாதிப்பும் தெரிவதில்லை.
3.அதே சீப்பைக் கொண்டு மேல் நோக்கி நம் கூந்தலைச் சீவினோம் என்றால்
4.உடல் நிலையே சிலிர்ப்புத் தன்மை இவ்வுணர்வு பெறுகின்றது.
இதை எப்படி அனுபவத்தில் காணுகின்றோமோ அதைப் போன்ற உண்மை நிலையை சுவாச நிலையால் எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தும் பொழுதும்… நேரடி சுவாசத்தை மேல் நோக்கி எடுக்கும் அலையை இந்த உடல் உடனே பெறுகின்றது…!
இத்தொடர் வளர வளர… மனிதச் சக்தியின் வலுச் சக்தியை இந்த ஆத்மா பெற்று… இவ்வாத்மாவின் ஒளி அலைகளைத் தனித்து இயக்கவல்ல வளர்ச்சி வழி கொள்ள முடியும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
“மகரிஷிகள்…” அவர்கள் வாழ்ந்த காலத்தில் எதனை இனிமை கொண்டு வளர்த்தார்களோ அதைப் போன்று
1.நம்முடைய இந்த மனித உடல் வாழ்க்கை – முதுமையிலும்
2.அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை உடலிலே வளர்த்திடல் வேண்டும்.
3.ஒளியின் சிகரமாக வளர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்…” என்று அந்த மன உறுதி கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
உலக மக்கள் அனைவரும் அத்தகைய நிலைகள் பெற வேண்டும் என்ற அடிப்படையில் கண்ட அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் விளைய வைத்து “ஒளிச் சரீரம் பெறும் அந்த மூச்சலைகளைப் பூமியில் பரவச் செய்வோம்…”
தானியங்களின் வித்தை விளை நிலைங்களில் ஊன்றி பல பல தானியங்களாக விளைய வைத்து எல்லோருடைய பசியைப் போக்குவது போல.. மெய் ஞானிகளின் அருள் ஞான வித்தை நமக்குள் ஊன்றி வளர்த்து அந்த வித்தின் தன்மை பல மகசூலாகப் பெருக்குவோம்.
அதன் மூலம்…
1.பிறருடைய ஆனந்தப் பசியை ஆற்றும் நிலையாக…
2.பேரானந்தப் பசியை ஆற்றும் அருள் வித்தாக நமக்குள் விளைய வைத்து இந்தப் பூமி முழுவதும் பரப்புவோம்.
3.அனைவரும் அதைப் பருகி பேரானந்தப் பெரு நிலை பெறச் செய்வோம்… அதனை வளர்த்திடுவோம்.
முதுமை என்பது உடல் வாழ்க்கையில் வெறும் வயதினால் வரும் முதுமை அல்ல. இந்த உடலின் தன்மை அது முதுமை அடையப்படும் போது… அதாவது ஒரு தானியம் அது முதுமை அடையப்படும் பொழுது வித்தின் தன்மையை அது முதுமையாக்கி அந்த உணர்வினை வித்தாக (பலன்) உருவாக்குகிறது.
அதைப் போல நம் உயிரின் தன்மை மனித உடலை உருவாக்கிய பின்… அறிந்திடும் உணர்வு கொண்ட ஒளியின் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.இந்த உடலை முதுமையாக்கி… (பாம்பு தன் சட்டையைக் கழற்றுவது போல்)
2.உணர்வின் தன்மை என்றும் இளமையாக்கும் நிலைகள் நமக்குள் வளர வேண்டும்.
காரணம்…
1.ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.
2.இளமை பெற்று… அது உடலிலே முதுமை பெறும் போதுதான் முதுமையின் வித்தாக உரு பெற்று
3.உணர்வின் அறிவாக உயிருடன் ஒன்றிய நிலையாக அடுத்த அறிவின் ஞானச் சுடராக உணர்வின் சரீரத்தை வளர்க்கின்றது.
ஆகவே மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு… உயிருடன் ஒன்றி முழுமையின் நிலைகள் பெற்று… முழுமை அடையும் தன்மையாகப் பேரானந்தப் பெரு நிலையை நமக்குள் வளர்த்திடுவோம்.
அனைவரும் பேரானந்த நிலை பெறும் சக்தியாக நமக்குள் விளைவித்த அந்த அருள் உணர்வின் சத்தான வித்துக்களை உலகமெங்கும் பரப்புவோம்.
அதை நுகர்ந்தறிவோர் உணர்வுகளிலும் அந்த வித்துக்கள் படர்ந்து அவருக்குள் பேரானந்தப் பெரு நிலை அடையும் நிலையை அடையட்டும்.
அருள் ஞானிகளின் அரும் பெரும் சக்தியை அனைவரையும் பெறச் செய்வோம் என்று நாம் வாழ்த்தி வளர்த்திடுவோம்… வளர்ந்திடுவோம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் நாட்டிலே தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய எத்தனையோ நிலைகளில் உயர்ந்த சக்திகளை இங்கே படரச் செய்துள்ளனர்.
“தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…” என்பது போல தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியைச் சமப்படுத்தினான்.
பூமியின் துருவத்திலே பனிப் பாறைகள் உறைய உறைய… எடை கூடிக் குடை சாயும் நிலைகளுக்குச் சென்றதை
1.துருவத்தில் உறையும் பனிகளை… வெப்பத்தின் தணல் கொண்டு உருகச் செய்து
2.பூமியிலே நடு மையமாக மனிதனாக உயிர் வாழச் செய்யும் நிலையாக அவன் செயல்படுத்தினான்.
இல்லை என்றால் வியாழன் கோள் பனிப் பாறைகளாக எவ்வாறு பெரிதாக ஆகி இருக்கின்றதோ அதைப் போல சிறிதளவு ஒரு நொடி மாறினாலும் நமது பூமியும் பெரும் பனிப்பாறையாக மாறி உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஆகிவிடும்.
அப்படியே வாழ்ந்தாலும் பனிப் பிரதேசங்களில் மீன் இனங்களும் மற்ற உயிரினங்களும் வாழ்வது போல
1.மனித இனமே அல்லாத மற்ற உயிரினங்களாக மாற்றிவிடும்.
2.பனிக்குள் வாழும் உயிரினமாகத்தான் நாம் திரிய முடியும்.
நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோளும் நம்மைப்போல மனிதர்களாக வாழ்ந்த இடம்தான்.
அங்கே விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியாகி அதற்குண்டான செயற்கைக் கருவிகளை அதிகமாகச் செயல்படுத்தப்பட்டு அதன் வழிகளிலேயே பெரும் பனிப்பாறையாக மாறிச் சுழற்சியின் வேகம் கூடி இன்று ஓடிக் கொண்டுள்ளது.
இப்போது எப்படிப் பனிப்பிரதேசங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவோ அதே போல
1.மனிதனாக இருப்பவரும் வளர்ச்சியற்ற நிலைகள் கொண்டு
2.உயிரினங்களாக இன்றும் வியாழனில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதிலிருந்து வெளிப்படும் சில உணர்வலைகள் இன்றும் இந்த பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டு வருகின்றது. பிரபஞ்சத்தில் மிதந்து வந்தாலும் அவ்வாறு வந்த அந்த நிலைதான் நம் பூமியில் உயிர் அணுக்களாக தோன்றி உயிரணுவின் நிலையிலிருந்து மனிதனாக உருப்பெரும் நிலைகளை நாமும் பெற்றிருக்கின்றோம்.
1.இந்தப் பூமியில் மனித இனம் இன்று வந்ததல்ல…
2.வியாழன் கோளின் நிலைகளில் இருந்து நாம் வந்திருக்கின்றோம்.
3.இதை அறிந்து கொள்வதற்குத் தான் நம் பிரபஞ்சத்திலேயே சூரியன் இயக்கச் சக்தியாக இருந்தாலும்
4.வியாழன் கோளைக் “குருவாக…” வைத்தது.
5.உயிரணுவின் ஆற்றலை உயிர் அணுவாக உடலின் தன்மை பெறச் செய்தும் வியாழனின் நிலை தான்.
இங்கே நம் பூமியில் இன்று இருக்கும் விஞ்ஞான அறிவைக் காட்டிலும் “பல கோடி ஆண்டுகளுக்கு முன்” அன்று வியாழன் கோளில் “விஞ்ஞான அறிவின் வளர்ச்சியால் தான்” மனித இனங்கள் முழுமையாக அழிந்தது.
இங்கே இப்போது அணு ஆயுதங்களைச் செய்து வைத்திருப்பது போல பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளில் வாழ்ந்த மனிதர்கள் அதைச் செய்து தான் இருள் சூழச் செய்து விட்டனர். பனிப் பாறைகளாகிக் பெரும் கோளாக மாறி விட்டது.
அங்கிருந்து தான் உயிரினங்கள் கடக்கப்பட்டு இந்தப் பூமியில் மனிதனாக உருவாகி இருக்கின்றோம். அன்று வியாழனில் மனிதர்கள் உருவானாலும் உயிரணுவின் தோற்றங்கள் இதே சூரியனின் இயக்க நிலைகள் கொண்டு வளர்ந்ததனால் மாற்றம் இல்லாதபடி இதே பிரபஞ்சத்தில் பூமியில் இன்று மனிதனாக வாழ்கின்றோம்.
அது போக… நம் பிரபஞ்சத்தில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் போன்ற ஏனைய பல நட்சத்திரங்கள் தனித்தன்மை கொண்டு தனக்கென்று ஒரு பிரபஞ்சமாக இயக்கும் நிலைகளில் சிறுகச் சிறுக (சுமார் 25 வருடங்களுக்குள்) பிரிந்து விட்டது.
பிரிந்ததனால்…
1.இந்தப் பிரபஞ்சத்தில் உருவான மனிதர்களுக்குக் கிடைக்கும் அறிவின் சிந்தனைக்குரிய நிலைகளும்
2.அனைத்தும் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் குறைந்து கொண்டே இருக்கின்றது.
அதனின் விளைவால் விஞ்ஞான அறிவால் இருள் சூழ்ந்த நிலைகளாக மாறி
1.நம்மையே அழித்துக் கொள்ளும் நிலையும்
2.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் உணர்வாக இன்றைய விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது.
குடிபோதையில் உள்ளவர்களை… என்ன தான் அவர்களை அதை நிறுத்தச் சொன்னாலும் அது தான் அவருக்கு ரசனையாக இருக்கும்… கேட்க மாட்டார்கள்.
உடலின் இன்பத்திற்காக மதுவை அருந்துபவர்களும் மற்ற சிந்தனையற்றுத் தன் நிலைகளில் அதையே தான் செய்து கொண்டிருப்பார்கள்.
அதே போல் விஞ்ஞான அறிவிலே சிக்கிய நாமும் இந்த உடலின் சுகத்திற்காக மற்றதை மறந்து தன் செயலை மறக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.
போதைப் பொருளை உபயோகிப்பது போலவே நாமும் விஞ்ஞான உணர்விலே சிக்குண்டு மனித உணர்வின் செயலைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றோம்.
மனித இனமே பூண்டோடு அழிந்திடும் நிலை வளர்ந்து கொண்டிருக்கின்றது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மகரிஷிகள் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி ஒளியான வித்துக்களாக விளைய வைத்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி இன்றும் அழியாத நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.
நம் பூமியில் உயிரினம் தோன்றிய நிலைகளிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று மனித வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி ஒளி காணும் நிலைகள் பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.
அந்த மகரிஷிகளின் உணர்வுகள் இன்றும் இந்தப் பூமியில் படர்ந்துள்ளது. அதை எவ்வாறெல்லாம் பருக வேண்டும்…? என்று மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) உணர்த்தினார்.
அந்த அருள் ஞான வித்தை வளர்ப்பதற்கு
1.எங்கெங்கெல்லாம் அந்த அருள் ஞான சக்தி தொடர்ந்துள்ளதோ
2.அங்கெல்லாம் கால்நடையாகவும் மற்ற வழிகளிலும் செல்லச் செய்து
3.ஆங்காங்கு பூமியிலே அந்த ஞானிகள் உணர்வு பதிந்து இருப்பதையும்
4.அவர்கள் உடலில் விளைந்த சக்திகள் படர்ந்திருப்பதையும் நுகரும்படி செய்தார்.
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் இந்த உலகம் அனைத்தும் எம்மை அழைத்துச் சென்று அவர் உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்த மெய் ஞானிகள் உணர்வின் ஆற்றலைப் பருகும் முறையைக் காட்டினார்.
அந்த மகரிஷிகளின் உடலில் விளைந்த உணர்வலைகள் பூமியில் பதிந்து இருந்தாலும்
1.அந்த அலைகள் அங்கே படர்ந்திருப்பதை நீ நுகரு
2.அந்த ஆனந்த சக்தியான வித்தை உனக்குள் வளர்த்துக் கொள்…! என்றார்.
குரு காட்டிய நிலைகள் கொண்டு அதனை இந்தப் பூமி முழுவதும் சுழன்று வந்து அந்த அருள் ஞான வித்துக்களை வளர்த்துக் கொண்டேன்.
விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்தில் வெளிப்படுத்திய அந்த அருள் ஞான வித்துக்களைத் தான் குருநாதர் காட்டிய வழிப்படி உங்கள் உள்ளங்களில் இப்போது ஆழமாகப் பதிவு செய்கிறோம்.
1.பதித்த அந்த உணர்வின் சத்தை… குரு வழியில் திரு அருளாக நீங்கள் பெற வேண்டும்
2.அருள் ஞானிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.அருள் ஞானப் பசியை உங்களுக்குள் அது ஆற்றிட வேண்டும்
3.பேரானந்தப் பெருநிலை நீங்கள் பெற்றிட வேண்டும் என்பதற்கே மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
ஒவ்வொரு நிமிடத்திலும் ஞானிகள் அருள் சக்திகளை எடுத்து ஒளியான அணுக்களை உடலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அவர் வாழ்க்கையில் ஒரு பித்தனைப் போன்று
1.இன்னல் என்ற நிலையை அவர் அறியாது
2.இன்னல் எது…? என்றே அறியாத நிலைகள் கொண்டு
3.இன்னல் என்ற நிலையை அவருக்குள் அறியாத நிலையிலே
4.இன்னலைப் போக்கிடும் ஒளியின் சுடராக அவருக்குள் விளைய வைத்து
5.விண்ணின் ஆற்றலை அவருக்குள் ஒளியின் சுடராக மாற்றி
6.ஒளியின் சுடராகப் பெறும் நிலையை அவர் பித்தனாக இருந்து எனக்குள் (ஞானகுரு) ஆழப் பதியச் செய்தார்
7.அருள் ஞான வித்தை வளர்க்கும் முறையையும் வகுத்துக் கொடுத்தார்.
விண்ணின் ஆற்றல் மிக்க நிலையை மகரிஷிகளால் வளர்க்கப்பட்ட அருள் ஞான வித்துக்களை
1.அதை நமக்குள் எவ்வாறு பருகிட வேண்டும்…?
2.அதை நமக்குள் எவ்வாறு வளர்த்திடல் வேண்டும்…?
3.அதை நமக்குள் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்…? என்று உணர்த்தி
4.அந்த ஞான வித்தை எல்லோரும் வளர்க்க வேண்டும் என்றும்
5.அதன் மூலம் அருள் ஞானப் பசியை எல்லோருக்கும் போக்க வேண்டும் என்றும்
6.அதை எனக்குள் உருப் பெறச் செய்து உணர்த்திக் காட்டினார்.
அதை எல்லாம் நான் (ஞானகுரு) அவர் நினைவு கொண்டு… அவருடைய துணை கொண்டு தான் அறிய முடிந்தது… வளர்க்க முடிந்தது.
காரணம்… ஒவ்வொரு மகான்களும் மகரிஷிகளும் தனக்குள் வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகள் தன் இன மக்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் எல்லோரும் மகிழ்ந்திட வேண்டும் என்றும் தனக்குள் விளைய வைத்த அந்த உயர்ந்த உணர்வுகளை ஞான வித்துக்களாக நமக்குள் பதியச் செய்தார்கள்.
ஆனால் காலத்தால் அந்த அருள் ஞானியின் வித்துக்களை அது முளைக்காது தடைப்படுத்தி விட்டோம்.. விரயமாக்கி விட்டோம்.
1.அருள் ஞான வித்துக்கள் அனைத்தும் முளைக்காது சென்ற அந்தக் காரணத்தால்
2.அருள் ஞானிகள் உணர்வுகள் தேங்கி அதற்குண்டான ஊட்டச்சத்து இல்லாது போய்விட்டது.
அப்படிப்பட்ட இந்த நேரத்தில் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளாற்றலால் அதனைப் பெறும் பாக்கியமாக அமைந்தது.
ஆகவே குரு கொடுத்த அந்த அருள் ஞான சக்தியின் துணை கொண்டு
1.எண்ணத்தால் அதை நமக்குள் வளர்த்திடுவோம்
2.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக நமக்குள் வளர்த்திடுவோம்.
3.அருள் ஞானப் பசியைப் போக்கிடுவோம்.
4.அருள் ஞானிகளுடன் ஒன்றிடுவோம்.
அந்த மகரிஷிகள் விளைய வைத்த அந்த அருள் ஞான வித்தை நாம் பருகுவோம்… அது நமக்குள் பெருக வேண்டும்… நாம் பெருக்கிட வேண்டும். அதன் மூலம் எல்லோருடைய அருள் ஞானப் பசியையும் போக்கிட வேண்டும்.


விண்ணின் ஆற்றலைக் கண்ட மெய் ஞானிகளின் நுண்ணிய அறிவினை உங்களையும் பெறச் செய்கின்றோம்
விஞ்ஞான அறிவால் ஒரு மனிதனுக்குள் பதிந்த நிலைகளை… இங்கிருந்து இராக்கெட்களைக் கோள்களுக்குள் ஏவி… அதனின் உணர்வை இங்கே தரையில் இருக்கக்கூடிய எந்திரத்தின் துணை கொண்டு கவர்ந்து விஞ்ஞானி படம் எடுக்கின்றான்… அதை அறிகின்றான்.
ஒளி எவ்வளவு தூரம் பாய்கிறதோ… அதாவது இப்பொழுது லைட் போட்டோம் என்றால் அது எவ்வளவு தூரம் சீறிப் பாய்கின்றது என்ற நிலையைக் கணக்கிட்டு… விஞ்ஞானக் கருவிகளின் மூலம் “ஒளி ஆண்டு” என்று கண்டு சொல்வார்கள்.
ஒரு எரி நட்சத்திரம் வியாழன் கோளில் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம்,
1.அதை அங்கிருந்து படம் எடுத்து இங்கே வருவதற்கே அதனுடைய வேகத்துடிப்பு அதிகமாகி நான்கு நாட்களாவது ஆகும்… குறைந்தபட்சம்.
2.அந்த நான்கு நாள்களில்… படம் எடுத்த இந்த உணர்வுகள் அலைகளாக இங்கே அனுப்பச் செய்து
3.இங்கே எந்திரத்தின் துணை கொண்டு அது சிறிதளவு புள்ளியைப் பெரிதளவாக அதைப் பெருக்குகின்றான்.
4.பின் அது விழுந்த இடத்தினையும் அவன் அறிகின்றான்.
5.இவன் அங்கே படம் எடுத்து வந்தாலும் “இந்த உணர்வலைகள்” பின் வரும் பொழுது “எதிர்நிலையான அலைகளாகப் பட்டால் இது பிரிக்கும்…”
ஆனால் அங்கே படம் எடுத்த உணர்வின் தன்மையை… மீண்டும் அவன் எடுப்பான் என்றால் அவனுக்குள் அங்கு அந்த ஒளியின் தன்மை எடுத்து அலைகளாக அனுப்பும் பொழுது “இங்கே மாற்றங்களே ஏற்படும்…”
ஆக இங்கே ஒரு எல்லையைக் குறித்து இதனின் வேகத் துடிப்பு வரும் பொழுது சுழற்சியின் வேகத்தில் கண்டுணரலாம். மலை போன்ற உள்ள அந்த பெரும் பாறையின் தன்மைகள் அது சுழன்று வரப்படும் பொழுது… வியாழன் கோளிலே வந்து மோதும் வேகமும் வியாழன் சுழற்சியின் வேகம் அதிகரிக்கப்படும் பொழுது… அந்த வியாழனிலோ தனது ஈர்ப்பின் சக்தி அதிகமாகும் பொழுது அது பனிப்பாறைகள் தான் அவை.
சுழற்சியின் வேகம் கூடும் பொழுது அதன் ஈர்ப்புக்குள் வந்தவுடனே இது சுக்குநூறாகத் தெறித்துப் பஸ்பம் ஆக மாறும்.
அதைப் போன்ற எரிகற்கள் பூமியின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது பெரும் பாறாங்கல்லாக இருப்பது சிறு கல்லாகத் தேய்ந்து இங்கே விழுகின்றது.
1.அது இங்கே உராய்வின் தன்மையில் “எரியவில்லை” என்றால்
2.மனிதர்கள் இங்கே பூமியில் வாழவே முடியாது.
ஆக இந்த சுழற்சியின் வேகத்திற்கும் சுழற்சியின் வேகத்தில் வரும் காற்று மண்டலத்தில் உராய்ந்து தான் இந்த இதனுடைய நிலைகள் அது குறைந்து வருகின்றது. ஆக இதைப் போன்று பன் மடங்கு சுழலும் நிலைகளில் அது வருகின்றது.
இதை எல்லாம் விஞ்ஞானிகளும் இன்று கண்டு நமக்குச் சொல்கிறார்கள்.
இதே மாதிரித் தான் மெய் ஞானிகள் அன்று அவர்கள் கண்டுணர்ந்தது.
1.தனக்குள் இருக்கும் ஆற்றலின் தன்மை கொண்டு விண்ணிலே தன் எண்ணங்களைப் பாய்ச்சுகின்றான்…. அனைத்தையும் அறிகின்றான்.
2.அந்த மெய் ஞானத்தின் உணர்வின் தன்மையை உங்களில் பதிவு செய்யும் பொழுது
3.இந்த உணர்வைத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப நாம் எண்ணும் போது
4.கோடிக் கணக்கான சரீரத்தில் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அது பெருகி
5.அது எப்படி நமக்குள் மனிதனாக உருவாக்கியது…? என்ற நிலையை நாம் காண முடியும்.
அந்த மெய் ஞானிகளில் “முதன்மையாக…” 2000 சூரியக் குடும்பத்தையும் கண்டறிந்தவன் அகஸ்தியன்
1.அவன் கண்டுணர்ந்த உணர்வுகள்… அவனில் விளைந்த உணர்வுகள் தான் இன்றும் நம் பூமியில் படர்ந்து கொண்டு உள்ளது.
2.அவன் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் அறிந்து… தீமைகளை அகற்றி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி
3.துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டுள்ளான் அகஸ்தியன்.
அவன் அருளை நாம் பெற்றால் அவன் கண்டதை நாமும் முழுமையாகக் காணலாம்… அறியலாம். பிறவியில்லா நிலை அடையலாம்… ஒளியின் சரீரம் பெறலாம்.

மெய் ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்”
நிழலுக்காகக் குடை தேடுகின்றோம்… வெய்யிலில் நிரந்தரக் குடில் அமைக்கின்றோம். வாழ்க்கையில். அதைப் போன்று தெய்வத்தின் சக்தி நிலையையும்…
1.அவசரக் காலங்களுக்குத் தெய்வம் வந்து காக்குமென்ற நம்பிக்கைக் குடையைத் தேடுகின்றோமே தவிர
2.நிரந்தரக் குடிலமைப்பைப் போல் ஆத்ம தெய்வத்தைத் தெய்வ சக்தியாக்கிக் கொள்வதில்லை.
“சொல்வாக்கு செல்வாக்கு சகல சக்திகளையும்” ஆத்ம ஞான வளர்ச்சியினால் வழிப்படுத்தும் ஆற்றல் எண்ணத்தின் உணர்வினால் வழியமைத்துக் கொள்ள முடியும்.
ஆலயத்தைக் காட்டி எண்ணத்தைக் குவித்து உயர வழி காட்டிய தொடர் நிலை இன்று, ஆலயமென்ற ஸ்தலத்தில்தான் ஆண்டவன் அருள் நிலையை அடையும் பொக்கிஷமாக உணர்வின் மோதலின் உந்தல் பல ஆயிரம் ஆண்டுகளாக மனித உணர்வின் பிறப்புடன் தொடர்பு கொண்டு பக்தி இயக்க அலைத் தொடர்பின் போற்றித் துதித்து “தன்னைத்தான் தாழ்த்தி… தெய்வத்தின் உயர்வைப் புகழ்ந்து வழித் தொடர் பிறப்பில் தான் வந்துள்ளோம்…”
வழித்தொடர் பிறப்பென்பது
1.பிறப்பெடுத்த ஆத்மா பிறப்பில் வளர்த்த எண்ண வேட்கையின் “அலை சக்தியின் இறப்பில்”
2.ஆவி ஆத்ம நிலையின் வேட்கை அலையின் எண்ணம் அதன் பிறப்பு வாழ்க்கையில் வளர்த்த வீரிய பதிவு நிலையின் பக்தி நிலை
3.பிறப்பில் வாழும் மனித ஆத்மாவின் அலை ஈர்ப்புடன் உணர்வின் எண்ணத்தில் மோதி… அத்தொடர்பில் வெளிப்படுத்தும் உண்மைதனை
4.மனிதன் இன்று தெய்வம் பேசுகின்றது முருகன் வந்து அருள் சொல்கின்றார் என்ற தெய்வங்களின் நாமத்தைக் கொண்டு வளர்ந்த அவர்கள்
5.வளர்த்த கவிநயப் போற்றல் கவிதைகளை வழித்தொடரில் உருப்போட்டு ஜெபித்து
6.பல கோடி கோடி ஒன்றின் தொடர்பில் ஒன்று உருண்டு உருண்டு வளரும் ஆதிசக்தியின் வளர்சக்தியின் வீரியத் தொடர்பினை
7.தன் ஞானத்தின் உயர்வு வழித் தொடரில் செலுத்தாமல் ஏட்டுப்படிப்பில் படிக்கும் போதனையின் அறிவு நிலையின் தொடர் வட்டத்தைப் போன்றுதான்
8.இன்றைய பக்தி முறையின் வழிபாட்டு நிலையும் உள்ளது.
ஒன்றுடன் ஒன்று கூட்டி அதன் மாற்று விகிதத்தில் மாறி வரும் உருப்பெறும் தொடர்பினால் பிறிதொரு நிலையை ஆராயும் தன்மை அடிப்படை ஞானத்தில் மனித எண்ணம் செல்ல வேண்டும்.
மிருகங்களின் தன்மையில் ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பில்…
1,ஓர் ஆட்டின் தொடர்பில் ஆட்டு மந்தையே செல்வதைப்போன்ற நிலை தான்
2.இன்றைய மனிதனின் வழித்தொடரும் உள்ளது.
பல கோடி மனிதர்கள் உள்ளனர் என்றால்… ஒன்றுக்கொன்று மாறு கொண்டு சக்தி நிலை கொண்டுதான் உருப்பெற்றுள்ள மனித நிலை…
1.இவ்வெண்ணத்தின் உணர்வைச் செலுத்தக்கூடிய ஞானக்கூட்டுச் சேர்க்கையால்
2.ஒவ்வொரு மனிதனுமே தன்னுள்ளுள்ள சக்திப் படைப்பினை வளர்ப்பின் வளர்ப்பாய் வழித் தொடர்களாகப் படர்ந்துள்ள அமிலக்கூறின் சத்தெடுத்து
3.ஒவ்வொரு மனிதக் கோளத்திலும் அதைச் சமைத்து சமைப்பின் சுவையை ஆத்ம முலாம் சுவைத்து
4.ஆத்மாவின் உயர்வைக் கொண்டு அகில சக்தியின் உன்னத சக்தியாய்ப் பிரித்து உயர்வுப் படைப்புகளைப் படைக்கலாம்.
மனித எண்ண சக்தியின் வளர்ச்சி கொண்டு… எண்ணத்தின் ஞானத்தால் சாதிக்கவல்ல சக்தித் தன்மை உயர்வு தானப்பா “சூரிய சக்தியும் சகல வளர்ந்த சக்தி நிலைகளுமே…”
1.வாழ அமைக்கும் ஜீவாதார பாதுகாப்பு வேலிதான் உயர்வு என்ற உருவகக் கோபுரங்கள் கட்டி உழன்றுள்ள மனிதன்
2.உணர்வின் எண்ண ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்” என்றுணர்ந்து செயல்பட வேண்டுமப்பா.

நமது எல்லை
தேர் என்பது மிகவும் வலிமையானது… பல நூறு பேர் ஒன்று சேர்ந்து இழுத்தால் தான் அது நகர்ந்து ஓடும். ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்தால் தேர் எல்லை வந்து சேராது.
இது போன்றுதான் நமக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான குணங்கள்
1.ஒன்று தீமையின் நிலைகள் இழுத்தால் ஒன்று நன்மையின் நிலைகள் இழுக்கப்படும்போது
2.நம் உணர்வின் தன்மை ஒளியாகும் அறிவின் தன்மைகள்… உயிருடன் ஒன்றி எல்லையைச் சென்றடையாது.
அந்த எல்லையை அடைய… எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்பதுதான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் தெளிவாகப் பதிவு செய்து
1.இந்த உணர்ச்சிகளை உந்தும்படி செய்து அந்த உணர்வின் ஏக்கத்தால்
2.மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதே கூட்டுத் தியானம்.
அதன் வழி கொண்டு நீங்கள் தியானித்த பின் நம் மூதாதையரான குலதெய்வங்களின் உயிரான்மாக்களை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் அவர்களை இணையச் செய்து
1.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்து விசையால் உந்தித் தள்ளினால்
2.சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து ஒளியின் சரீரம் பெறுகின்றனர்.
காரணம் சப்தரிஷிகள் என்பவர்கள் நஞ்சினை வென்றவர்கள் உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் இருளை மாய்த்தவர்கள். அந்த ஒளிக்குள் இந்த உயிரான்மாக்கள் பட்ட பின் இருள் சூழும் உணர்வுகள் கருகி விடுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் அறிவால் தெளிந்த உணர்வுகள் நிலைக்கின்றது… அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்கின்றது
2.இவ்வாறு நாம் செய்தோம் என்றால் சப்தரிஷி மண்டலங்களில் அவரும் ஒன்றாகி விடுகின்றார்கள்… “சப்தரிஷிகளாகின்றார்கள்…”
3.சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் எப்போது எண்ணினாலும்
4.அதைப் பெறக்கூடிய தகுதி நமக்கு அங்கே கிடைக்கின்றது.
அவர்கள் முன் செல்ல வேண்டும்…! காரணம் அவருடைய உணர்வுகள் தான் நமது உடல் அந்த உணர்வினை நினைவு கொண்டு வந்து உந்தித் தள்ளி அந்த உணர்வினை நாம் பெறச் செய்தால்… அவர்கள் முன் சென்றால் நாமும் எளிதில் பின் செல்ல முடியும்.
இந்த மார்க்கத்தைத் தான் விநாயகர் தத்துவத்தில் தெளிந்த நிலைகள் கொண்டு காட்டியுள்ளார்கள். உடலை விட்டுச் சென்றால் ஆறாவது அறிவின் துணை கொண்டு நமது எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.
அப்படி இல்லை என்றால் என் பிள்ளை இப்படிச் சொன்னானே… இந்தச் சொத்தெல்லாம் வைத்திருக்கிறேன்… நாளை அவன் அதை என்ன செய்வானோ…? என்று இப்படி எண்ணினால்
1.நம் எல்லை பையன் உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்
2.நாம் பட்ட கஷ்டம் எல்லாம் அவனுக்குள் விளையத் தொடங்கும்.
ஒருவன் என்னைச் சாபமிட்டான்…! இப்படி செய்தானே அவன் குடும்பம் உருப்படுமா…? என்று நினைத்தால் அவனைப் பழி தீர்க்கும் உணர்வாகச் சேர்ந்தால் “நம்முடைய எல்லை சாபமிட்டவன் இடத்திற்குச் சென்றுவிடும்…”
சாகப் போகும் பொழுது நினைவு எங்கெல்லாம் போகின்றது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லோருக்கும் நான் சுவையான உணவை ஆக்கிப் போட்டேன் எனக்கு நல்ல கறித் துண்டு (மட்டன்) உண்டா…? என்று நினைத்தால் ஆடாகத்தான் போக வேண்டி வரும்… இது நிச்சயம்.. எல்லை அது தான்…!
ஏனென்றால் அன்று நன்றாக இருக்கும் பொழுது எல்லோருக்கும் சுவையாக ருசியாகச் சமைத்து போட்டேன் ஆனால் இப்பொழுது எனக்கு என் ருசிக்காக ஒரு துண்டு கூட கொடுக்கவில்லை பாருங்கள்… எல்லாவற்றையும் அவர்களே சாப்பிடுகின்றார்கள்.
1.இப்படி எண்ணினால்… எல்லை அந்தக் கறித்துண்டின் மேல் ஞாபகம் வந்தால்… அந்த உயிரினத்திடம் தான் இந்த உயிர் செல்லும்.
2.ஆகவே எதனை கடைசி முடிவாக நினைவின் ஆற்றலைக் கொண்டு வருகின்றமோ… எல்லை அதுவாகவே நிர்ணயிக்கப்படுகிறது.
இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆத்மாவின் “விழி நிலையின் ஒளி நிலை”
பிறவா வரம் கொண்டு ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை உணர்ந்தீரானால் உயர்வு கொண்ட “ஒளி நிலையின் உண்மை புரியும்…”
சகல ஜீவசக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித்தன்மையின் “விழி நிலை” ஜீவராசிகளுக்குத் தான் உண்டு.
பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றையத் தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டிருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில்
1.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாய் மாறி மாறி வரும் வளர்ப்பு, அழிவு, வளர்ப்பு என்ற நிலையில்
2.ஒவ்வொன்றின் வார்ப்பு வளர்ப்பில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு
3.உயிரணு தோன்றி ஒவ்வொன்றிலும் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து, அழிந்து சக்தி கொண்டு பல நிலைகளுக்குப் பிறகு
4.ஜீவ சரீரம் பெறும் விழி நிலையாற்றல் ஊர்வன, நீந்துவன, பறப்பன, நடப்பன
5.இத்தொடர் ஜீவராசிகளில் விழி நிலை ஒளிகாணும் உருவ “எதிர் நிலையை அறியும் ஆற்றல்” வழி வருகின்றது.
பலவில் முதிர்ந்து மனித எண்ண செயல் அங்க அவயவங்களின் ஆற்றல் வளர்ப்புநிலை பல கோடி ஆண்டுகளுக்குப் பின் உயிரணு தோன்றி பல வார்ப்பில் மோதுண்டு வளர்ச்சி கொண்டு முற்றிய நிலையில்
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு… விழியின் பாப்பாவில் படம் பிடித்து
2.உணர்வு கொண்ட எண்ணத்தில் அறியும் வாழ்க்கை நிலையிலிருந்து
3.சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவசக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம்தான் உண்டு.
காற்றலையில் இப்பூமி வளர்ப்பில் ஜீவன் பிரிந்த ஆத்ம அலைகள் சுழன்று கொண்டே காற்றலையில் மிதந்து கொண்டே இப்பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் “விழியால் பார்க்கும் நிலை அவ்வாத்மாவிற்கு இல்லை…” சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் சுழலுகின்றது.
ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்… உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது அவ்வலையின் உணர்வு இவர்களின்மேல் மோதி அத்தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவகாந்த அலைத்தொடர்பு கிட்டியவுடன் அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர்கொண்டு பார்க்க முடிகின்றது.
அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு பார்க்கும் நிலையானது
1.எப்படிப் புகைப்படக் கருவியைக் கொண்டு அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்ப தாள்களை அக்கருவியுடன் பொருத்தி
2.அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்து எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று ஆவி ஆத்மாக்களின் செயல் நிலையுண்டு.
எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலைதான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகை தான் காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக் கண்ணாடியிலோ நீரிலோதான் பார்க்கும் நிலை உண்டு.
ஆத்ம தியான சக்தியைக் கொண்டு ஞான திருஷ்டியால் விழியை மூடிக்கொண்டு ஞானத்தால் பெறும் தியான சக்தியில் ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்… இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித்தொடர் கொண்டு… ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலை காட்சிகளை… எண்ணத்தால் எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித்தன்மை இவ்வாத்ம அலையே பெற்று விட்டால்… ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.
இச் சரீரக் கூட்டின் சமைப்பில்…
1.காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக்கூடுகள் பெறும் தன்மை கொண்டுதான்
2.ஆத்மாவின் விழி நிலையின் ஒளி நிலை பெறும் ஆத்ம ஜோதியான ஜோதி நிலை சக்தியினால்
3.ஏகத்தையும் காணும் ஆத்ம நிலையின் ஜோதி நிலை கொண்டு
4.நம் வளர்ப்பின் தொடருக்கு வழிகாட்டிய ரிஷி சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
5.அவர்களின் வளர்ப்பின் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒவ்வொரு நிமிடமும் நம் குருவான உயிரை ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று எண்ண வேண்டும். காரணம் நம் குருநாதர் பெயரும் அது தான்.
1.அவர் தனக்குள் அந்த உயிரின் நிலைகள் ஒன்றி
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாக்கி
3.குருவின் நிலைகள் கொண்டு மெய் உணர்வின் சக்தியைப் பெற்றார்.
அதனால் ஈஸ்வரா குருதேவா…!
அவர் பெயர் ஈஸ்வரா என்று வரும் பொழுது எனக்கு (ஞானகுரு) அந்த உணர்வின் தன்மையைக் கொடுத்ததனால்
1.ஈஸ்வரா குருதேவா என்று என் உயிரை நான் எண்ணினாலும்
2.என் குருவை நான் எண்ணினாலும் இரண்டும் ஒன்று தான்.
குருவாக இருந்து அந்த உணர்வின் தன்மையைப் படைக்கப்படும் பொழுது அது உடலாக உருவாகின்றது ஆகவே “ஈஸ்வரா குருதேவா” என்பது உயிரின் இயக்கம் ஈசன் ஆகிறது.
நமக்குள் உருவாக்கிக் (சிருஷ்டி) கொண்டிருக்கும் அந்த ஈசனின் துணை கொண்டு நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண் செல்வதே குருநாதர் காட்டிய மெய் வழி.
அவர் காட்டிய அருள் வழியில் இந்த உலகத்திற்கு வழிகாட்டிகளாக நாம் வளர வேண்டும். நாம் விடும் மூச்சின் அலைகள் பிறரின் துன்பத்தை மாய்க்கக்கூடிய நிலைகளாகப் படர வேண்டும்.
1.நம் சொல்லின் நிலைகள் பிறரை இன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சியின் உணர்வாக உருவாக்கி
2.மற்றவரை இருள் சூழச் செய்யும் விஷத்தை மாய்த்து
3,ஒளிச் சுடராகப் பெறும் அந்தத் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும்
எனக்குள் (ஞானகுரு) பல இன்னல்களோ அல்லல்களோ வந்தாலும் அதனின் நிலைகள் எனக்குள் சேராத வண்ணம் மெய் ஒளியின் தன்மையை எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று குருநாதர் உபதேசித்து உணர்த்தினார்.
1.அவர் எனக்கு எப்படி அந்த ஆற்றலைப் பெறும் சந்தர்ப்பமாக அதைப் பதிவு செய்தாரோ
2.அவர் சொன்ன வழியில் அவரைத் தொடர்ந்து அந்த உணர்வின் தன்மையை நான் நினைக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் படைக்கப்படுகிறது.
4.அதிலே விளைந்த உணர்வின் சத்தைத் தான் ஞான வித்தாக உங்களுக்குள் செலுத்துகின்றேன்.
வயலைப் பண்படுத்தி அதற்குள் நல்ல விதைகளை விதைத்த பின் அந்த விதையின் தன்மை காற்றிலிருந்து தன் சக்தியை எடுத்துச் செழித்து வளர்கிறது.
அதைப்போல மெய் ஒளியைப் பெறும் தகுதியை நீங்களும் பெற வேண்டும். குருநாதர் அருளிய அந்த அருள் சக்திகளை நாம் எல்லோரும் பெறுவோமேயானால் விஞ்ஞான அழிவில் இருந்து நாம் மீட்டி மெய் ஞானத்தின் வழிகளில் நாம் செல்ல முடியும்.
எதுவாக இருந்தாலும் இயற்கையின் நிலைகள் இனம் இனத்துடன் தான் சேர்க்கும். மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அந்த இனத்துடன் நாம் இணைந்து… அந்த ஆற்றலைப் பெற்று
2.அவர்கள் எங்கே விண் சென்றார்களோ அங்கே செல்ல முடியும்.
ஆகவே…
1.குருநாதர் அருளிய ஆற்றல்மிக்க சக்தி எனக்கு மட்டும் சொந்தமல்ல. நம் அனைவருக்குமே சொந்தம்.
2.ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் செயல்படுகிறது.
நீர் சிறு துளியாக விழுந்தால் பூமிக்குள் பட்டு ஈர்க்கப்பட்டு விடுகின்றது. ஆனால் பெரும் துளிகள் ஒன்றாகச் சேர்ந்து மழையாகப் பொழியும் பொழுது பெரும் வெள்ளமாகப் பாய்ந்து அனைத்தும் சேர்ந்து வலுக் கொண்டதாகக் குப்பை கூளம் செத்தைகள் அனைத்தையும் அடித்துச் செல்கிறது.
அதைப் போல நாம் அனைவரும் அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு ஒரே உணர்வாக ஓ…ம் ஈஸ்வரா… என்ற உணர்வின் குரலை எழுப்பப்படும் பொழுது பெரும் வெள்ளமாக அருள் சக்திகள் நமக்கு முன் குவியும்.
1.அதன் மூலம் நம்மை அறியாமல் ஆட்டிப்படைக்கும் உணர்வுகளையும்
2.இருள் சூழச் செய்யும் உணர்வின் தன்மைகளையும் மாய்த்திட முடியும்.
மெய் ஞானிகளின் அருள் ஒளிகள் பெரும் வெள்ளமாகப் பாயும் போது மெய் வழியில் மெய் ஒளியைப் பெறும் அந்த ஆற்றல் மிகுந்த சக்தியை நாம் அனைவருமே பெற முடியும்.
உங்களை நீங்கள் நம்ப வேண்டும். நமக்குள் ஆற்றல் மிகுந்த சக்தி உண்டு. இந்த மனித உடலில் இருந்துதான் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.
அத்தகைய நிலைகளை நாம் அனைவரும் நிச்சயம் பெறுவோம்…!


நமக்குள் மறைமுகமாக செயல்படும் இயக்கங்கள்
கண்ணுக்குப் புலப்படக்கூடியது அனைத்துமே துவைதம்… அதிலே மறைந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது அத்வைதம்…
1.அந்த உணர்வலைகளை நாம் கவர்ந்து விட்டால் விசிஷ்டாத்வைதம்.
2.எதனின் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோமோ
3.அந்த உணர்வு நம் உடலுக்குள்ளேயே இருந்து மறைந்திருந்து செயல்படுத்துகின்றது.
சந்தர்ப்பத்தில் ஒரு வேதனைப்பட்ட நிலைகளைப் பார்த்தோம்… அது சூட்சமமாக இருக்கின்றது அது.
அவர்கள் வெளிப்படுத்திய அந்த வேதனை உணர்வலைகள் அத்வைதம். அதை நாம் இப்படி செய்கின்றாரே என்று நுகர்ந்தறியப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம். கவர்ந்து கொண்ட உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது.
பின் என்ன செய்கின்றது…?
1.என்னை அறியாமலே அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் வேதனை வருகின்றது.
2.வேதனை வருவது ஏன்…? என்று நமக்குத் தெரிவதில்லை… நம்மை அறியாமலே அப்பொழுது புலம்புகின்றோம்.
ஆகையினால் தான் இதை விசிஷ்டாத்வைதம் என்று காண்பிக்கின்றார்கள்.
1.நீ கவர்ந்து கொண்ட உணர்வு எவ்வாறு உன்னை இயக்குகிறது…? என்பது
2.சாஸ்திர விதிகளில் தெளிவாக இப்படிக் காட்டப்பட்டு இருக்கின்றது.
ஆனால் அத்வைதம் வேறு விசிஷ்டாத்வைதம் வேறு என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொண்டு சண்டை இட்டுக் கொள்கின்றார்கள். இது தான் உண்மை இல்லை இதுதான் உண்மை என்று சொல்கின்றார்கள். மறைமுகமாக இயக்குகிறது என்று சொல்கின்றது… நீங்கள் எப்படி நேரடியாக இயக்கும் என்று சொல்லலாம்…? அவர்களுக்குள் ஒரு போர் முறை.
வியாசகரால் கொடுக்கப்பட்டது தான் இந்த உண்மைகள்…! அதையாவது குறைந்தபட்சம் தெரிந்து கொண்டிருக்கின்றோமா…? என்றால் இல்லை. அதை அறியும் பக்குவமாவது இருக்கிறதா…? என்றால் இல்லை.
மற்றவர்கள் வெளிப்படுத்திய உணர்வலைகள் அத்வைதம்… சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அதை அலைகளாக வைத்துள்ளது. அதே சமயத்தில் அந்த உடலைப் பார்த்து அதே உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம்.
தனக்குள் கவர்ந்து கொண்ட நிலைகள் தன்னை அறியாமலேயே மறைமுகமாக செயல்படுகின்றது… விசிஷ்டாத்வைதம் என்று தெளிவாகவே ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.
இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அல்லவா…!
விநாயகர் தத்துவப் பிரகாரம் வணங்கப்படும் பொழுது நம்மை அறியாது இயக்கும் இந்த நிலைகளை மாற்றி அமைக்க
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்ற இந்த உணர்வை
4.தனக்குள் மறைமுகமாகவே தீமைகளை அகற்றும் நிலையாக உருவாக்குவது – விசிஷ்டாத்வைதம்.
ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்த்துத் தீமை வராதபடி இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கும் மார்க்கமாக இதை நீ வினைக்கு நாயகனாக ஆக்கு “விநாயகா…”
1.அருள் உணர்வுகளுக்கு நாயகனாக நீ இரு
2.அந்த உணர்வின் செயலின் எண்ணத்தை உனக்குள் உருவாக்கு…! என்று தெளிவாக ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.
ஆகவே அந்த ஞானிகள் காட்டிய வழியில் அருள் உணர்வுகளை நுகர்ந்தபின்… அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று
1.இப்படி எண்ணும்படி தான் ஆலயங்களைக் கட்டி
2.அதிலே மறைமுகமாகவே நமக்குள் பல உயர்ந்த சக்திகளைப் பெறும்படி செய்தார்கள் ஞானிகள்.

ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி
நீங்கள் இருவரும் தியானத்தில் எடுத்த அலைத்தொடர்பு அவரவர்களின் உடல் அமிலச் சேர்க்கை உருவக எண்ணத்தின் சக்திக்குகந்த அலையின் தொடர் காட்சிகளை தியான முறையில் தினசரி பார்க்கவும்… பேசவும்… அவ்வழியைக் கொண்டு உங்கள் ஞானத்தை வளரவும் வழி தெரிகின்றது அல்லவா…!
இதன் தொடரைப் போன்றே அமில சக்தியின் வார்ப்பு ஜீவித உயிரணு தோன்றிய ஒவ்வொரு ஜீவ வளர்ச்சிக்கும் அவையவை பெற்ற சுவை, மணம் குணத்துக்குகந்த தனித்தன்மை உருவான உயர் குணங்கள் பல உண்டு.
பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள பல கோடி அமில குணங்கள் அதனதன் சுழற்சி ஓட்டத்தில் அங்கங்கு உள்ள படர்ந்த அமில குணங்களுக்கொப்ப ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தன் தன் இன வளர்ச்சிக்கொப்ப வளர்ந்த மண்டலமாயும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சியில் சுழன்று கொண்டே வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே வழி கொள்ளும் வளர்முறை உள்ளது.
மணலுண்டு நீருண்டு சுண்ணாம்பும் உண்டு மரம் மண் இவை யாவையும் இருந்தாலும்… அதனை நாம் நமக்கு வேண்டிய பக்குவச் செயலுக்காக சுண்ணாம்பையும் மணலையும் நீரையும் கொண்டு நமக்கு உகந்த இல்லங்கள் அமைத்துப் பாதுகாப்பு இடம் தேடி வாழுகிறோம் அல்லவா…!
அதைப் போன்று பால்வெளியில் நிறைந்துள்ள அமிலச் சுழற்சியில் தன்னிச்சையில் வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே சுழலும் வழித் தொடரிலிருந்து எப்படி வீடமைக்கப் பல பொருட்களை வீட்டிற்கு வேண்டிய நிலைக்கு பக்குவப்படுத்தி வீட்டைக்கட்டி வாழுகின்றோமோ அதைப் போன்றுதான்
1.அமிலச் சுழற்சியின் உயர்வு நிலை சக்தி கொண்ட ஆத்ம நிலை கொண்டு
2.எண்ணத்தின் ஞானம் கொண்டு உயர்ந்த ரிஷிக் கோடிகளின் அமைப்புநிலை உருவகங்கள்தான்
3.ஆதிசக்தியின் சக்தி வழி வந்த… ரிஷி வழி மண்டல அமைப்பின்… ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி வளருகின்றது.
அதது எடுத்து வளர்ந்த நிலைக்கொப்ப வளர்ச்சியின் உயர்ந்த தன்மை கூடும் நிலை வழி பெற…
1.மனித ஞான உயர்வினால் மட்டும்தான்
2.உயர்வின் உருவகத்தையே உருவாக்கும் தன்மை உறுப்பெறும் என்பதனை உணர்த்தியுள்ளேன்.
உண்மையின் உன்னத சக்திதனை உணர்த்தினால் உருவாக்கிடலாம் உலக சிருஷ்டியையே…!
இப்பூமிக்கு மனிதக் கரு வர ஆண் பெண் என்ற இரண்டு ரிஷித்தன்மை கொண்ட ஆத்ம சுழற்சி பூமியான இப்பூமியின் நிலைக்கு சிவசக்தி என்ற ஆத்மக் கரு எங்கிருந்து வந்தது…?
இப்பூமியில் மட்டுமல்ல நம்மைக் காட்டிலும் உயர்ந்த ஞான சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள்… நம் சூரியக் குடும்பமல்லா (நாற்பத்தி எட்டு கோளங்கள்) மண்டலங்களில் ஜீவிக்கின்றனர்.
1.ஞானச் சித்து கொண்டு அவர்கள் நம் பூமியுடனும்
2.மற்றெல்லா பூமித் தொடருடனும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் செயல் கொண்டுள்ளனர்.
இன்று மனித ஆத்மாக்களின் பெருக்கத்திலுள்ள இப்பூமியின் எண்ண உணர்வு செயற்கையின் சுழற்சியில் சிக்காமலும்… விஞ்ஞானத்தை நம்பி வாழும் உருநிலை பெறாமலும் இருந்திருந்தால்… வளர்ந்துள்ள ஜீவ வளர்ச்சியின் சொல் செயல் ஞானம் கொண்ட வழித்தொடரினால் தன் ஞானம் உயரும் நிலை பெற்றிருந்ததென்றால்… இப்பூமி பெற்ற உன்னத உயர்ந்த சக்தியே மிகவும் உன்னத சக்தியாய் இன்னும் பல கோடி கோடி ஆண்டுகளுக்குச் சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்ட மனிதர்களாக இருந்திருப்பார்கள்.
மிக உயர்ந்த குண சக்தியின் ஆனந்த அன்பு கொண்ட இனிமை வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையையே இன்றைய வாழ்க்கை முறை இன்னலின் பிடிப்பில் இறுக்கம் கொண்டு…
1.மனிதனை மனிதனே அழித்து… அழித்து என்பதன் பொருள் இல்லற வாழ்க்கையில் கூடி மனிதப் பிறப்புக்கு வரும் சிசுக்களை
2.சிசுவைக் கருவுக்கே வர விடாமல் பல காலமாய் அவை சேமித்த சக்தி நிலையையே கருவில் வந்து மறைக்கப்பட்ட தன்மையிலேயே
3.இம் மனிதனே மனிதக் கருவை அழித்து அதனை ஞானத்தில் வளர விடாமல் இழிநிலையான சுழற்சியில் அமிழ்த்தி விடுகின்றான்.
தான் படும் வாழ்க்கைச் சுழற்சியில் இன்பங்கள் தனக்குச் சொந்தமானதாகவும் துன்பங்கள் ஆண்டவனின் சோதனையாகவும் எண்ணத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை ஓட்ட அலையில்… எண்ணத்தில் ஏக்கமுடனும் பேராசை எதிர் நிலையிலும்தான்… “மக்களை நடத்திச் செல்லும் மத வழி போதனைகளும் அரசியல் சுழற்சிகளும் சுழன்றுள்ளன…”
தன் ஆத்ம ஞானத்தைக் கொண்டு “உலகத்தையே சிருஷ்டிக்கவல்ல ஆதி முதலாம் விநாயக சக்தி கொண்ட சொல் செயல் ஞானம் கொண்ட மனித ஆத்மாக்களை” இப்பூமி சரீர வாழ்க்கையிலிருந்தே அதை உருவாக்க முடியும்.
1.எப்படி ஆண் பெண் வாழ்க்கை இணைப்புச் செயற்கையில் உருவாகி… சரீரம் பெற்று வாழ்க்கை வழித்தொடருக்கு வந்தோமோ…
2.அதே தொடரில் ஆண் பெண் இணைப்பினால் கருநிலை உருவாகி… பூமி ஈர்ப்பு கரு வளர்க்கின்றோமோ அதைப் போன்றே
3.ஆண் பெண் என்ற இரண்டு ஆத்மாக்களும் தன் ஞான சக்தியினால் சித்து நிலை பெற்று ஒளி நிலைத் தன்மையுடன்
4.உடல் இயக்க உறவு நிலையில் கருத் தோன்றி வளர்வதைப் போல்
5.ஆத்ம இணைப்பில் ஒளி வட்டத்தின் ஆத்மச் சேர்க்கையில் இருந்து பிறக்கும் ஒளி நிலையைக் கொண்டு “ஞானவட்டமாய்”
6.அவ்வலைத் தொடரை எம் மண்டலத்திற்கு அனுப்புகின்றோமோ அம் மண்டலத்தில் எல்லாம் ஜீவச் சிசுவை வளர்க்கவும்
7.ஜீவசக்தியை வளர்க்கவல்ல வழிமுறை ஆத்ம சக்தியை ஆத்ம சேர்க்கையைக் கொண்டு
8.அன்று எப்படி இராமாயணக் காலத்தில் இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் சூட்சுமத்தால்
9.லவ குசா என்ற குழந்தைகளின் படைப்பு நிலையை மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்தியதைப் போன்றும்
10.காந்தர்வன் கன்னி நீரில் வாழும் பொழுது
11.மேகக் கூட்டத்திலிருந்து விந்துக்கள் தோன்றி கன்னி கருத்தரித்து ஞான தெய்வக் குழந்தை பிறந்ததென்றும்,
12.கார்த்திகைப் பெண்கள் முருகனை வளர்த்தனர் என்று கதையில் சொல்லும் உண்மைதனை
13.ஒவ்வொரு மனிதனும் ஞானம் கொண்டு அதிலுள்ள சூட்சுமத்தை உணர்ந்தீர்களானால்
14.சிவசக்தி கருத்தரிக்கவில்லை, சிவன் உருவாக்கிய குழந்தை முருகன் என்று
15.மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவற்றில் அடங்கியுள்ளன.
என்றோ நடந்தவை அவை…! அவற்றின் சக்திதான் இன்று நாம் வாழ்வது என்ற எண்ண உலாத்தான் உள்ளதேயன்றி… “இன்று நடப்பவையும் அத்தன்மைதான்…”
ஜீவக் கரு எத்தனை கோடி கோடி ஆண்டுகள் எம்மண்டலத்தில் வளர்ந்து வாழ்ந்தாலும் இன்று உணர்த்திய இத்தொடரின் உண்மை போன்றுதான்
1.ஜீவ சக்தியின் ஆண் பெண் ஆத்ம சக்தியால்தான் ஜீவ ஆத்மாவில் பெறப்படும் சித்துத் தன்மையும்
2.ரிஷித் தன்மையும் கொண்ட ரிஷிபத்தினி… “ரிஷித்தன்மையைக் கொண்டுதான் உருவாகும் ஜீவனுக்கே ஜீவவித்து விருட்சகம்…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் பூமியினுடைய காற்றழுத்த மண்டலத்தில் மோதியபின் நெருப்பாகப் புகையாக மாறுகிறது. அது எந்தப் பக்கம் அதிகமாகப் படர்கிறதோ அந்த இடத்தில் வித்தியாசமான நிலைகள் வரும். அதைத் தான் “வால் நட்சத்திரம்” (COMET) என்று சொல்வது.
இதே மாதிரி நாம் பேசக்கூடிய பேச்சு வெளிப்படுத்தும் மூச்சலைகள் எல்லாமே இங்கே இருக்கிறது. நம் உடலிலும் இருக்கிறது… சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தக் காற்றிலும் இருக்கின்றது.
உதாரணமாக டி.வி. ரேடியாவில் ஒலி/ஒளிபரப்பு செய்தவுடன் எந்த ஸ்டேஷனை நாம் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைகளை இழுக்கின்றது… ஒலியையும் ஒளியையும் காட்டுகின்றது.
அது போல் மனிதன் உயிருடன் வாழும் நிலையில் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்வும் இங்கே சுழன்று கொண்டிருக்கின்றது.
1.இரவிலே நாம் புலனடங்கித் தூங்கினாலும் கூட
2.நாம் பகலில் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அந்த உணர்வுகள் ஆன்மாவில் வந்து சேருகின்றது.
எந்த வேதனையையோ கோபத்தையோ ஆத்திரத்தையோ படுகின்றோமோ அந்த உணர்வெல்லாம் உயிரிலே பட்டுக் கனவுகளாக வருகின்றது.
அந்த உணர்ச்சிகள் திடீரென்று நம்மைத் தூக்கத்திலிருந்து எழும்படி செய்து “என்னை அடிக்க வருகின்றான்…” என்று கத்த வைக்கின்றது. இதையெல்லாம் நாம் பார்க்கின்றோம் அல்லவா.
நமக்குள் இருப்பது… பரமாத்மாவிலிருந்து தான் இதையெல்லாம் இழுக்கின்றது. எதன் வலுவோ அதன் வழி கூடி நம்மை இயக்குகின்றது.
ஆகவே
1.காற்றிலே இது போன்ற நிலைகளை எல்லாம் இல்லாமல் செய்ய வேண்டுமா இல்லையா.
2.அதுதான் விநாயகர் சதுர்த்தி…! தீமை செய்யும் உணர்வுகளை நாம் வராதபடி நிறுத்த வேண்டும்.
நம்முடைய சாஸ்திரங்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாம் யாராவது சிந்திக்கிறோமா…? இல்லை.
நாம் பேசியது இன்னொருவர் உடலிலே ஊழ்வினை என்ற வித்ததாக இருக்கிறது. நாம் பேசியது… நாம் சண்டை போட்டது… அடுத்தவர் சொன்னது… அடுத்தவர் சங்கடப்பட்டது… நோய்வாய்ப்பட்டது எல்லாமே சூரியன் எடுத்து அலைகளாக வைத்திருக்கின்றது.
நம் உடலிலிருக்கும் உணர்ச்சிகள் உந்தியவுடன் அந்த அணுக்களுக்குப் பசிக்கும்போது உயிருக்கு வருகின்றது.. கண் வழி கவர்கின்றோம்… நுகர்கின்றோம்.
1.அதே எண்ணம் வருகின்றது..
2.தீய வினைகளை நம் உடலாக மாற்றுகின்றது… நல்ல உணர்வின் அணுக்கள் ஒடுங்குகின்றது.
3.இதை எல்லாம் கரைக்க வேண்டுமா இல்லையா…?
அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணில் பொம்மையைச் செய்து தீயவினைகளைக் கரைக்க வேண்டும் என்று காட்டப்பட்டது. ஆனால் இன்று நாம் வெறும் களிமண்ணில் பொம்மையைச் செய்து நீரிலே கரைக்கின்றோம்.
ஆனால் நம்மை அறியாது உடலிலே சேர்ந்த… நம் உடலுடன் ஒட்டி இருக்கக் கூடிய அந்தத் தீய வினைகளைக் கரைக்க வேண்டும் என்பது தான் ஞானிகள் சொன்னது.
1.சாப்பாடு இல்லாமல் செய்து விட்டாலே எதுவுமே கரைந்துவிடும்.
2.அது போல் தான் நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்குச் சாப்பாடு இல்லை என்றால் தன்னாலே கரைகின்றது.
அதற்குச் சாப்பாடு எங்கிருந்து எடுக்கின்றது…?
நம் பூமி ஒரு பரம். இந்தப் பரமாத்மாவில் தான் எல்லாமே இருக்கின்றது. அதிலிருந்து எடுத்துத் தான் உடலில் இருப்பது வளர்கிறது.
எந்தச் செடியில் வித்து விளைந்ததோ அதை மீண்டும் பூமியில் ஊன்றினோம் என்றால் பரமாத்மாவில் இருக்கும் தாய்ச் செடி வெளியிட்ட அதனின் சத்தைக் கவர்ந்து விளைகிறது.
இது எல்லாம் செடி கொடிகளுக்குச் தெரியாது.. மிருகங்களுக்கும் தெரியாது. எதனின் உணர்வை நுகர்ந்ததோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் அவை இருக்கும்.
ஆனால் மனிதன் இதை எல்லாம் அறியும் ஆற்றல் பெற்றவன். மாற்றி அமைக்கும் சக்தியும் பெற்றவன்.
ஆகையினால் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அதை எல்லாம் ஞானிகள் உணர்வு கொண்டு வேக வைக்க வேண்டும். ஒரு பருப்பை வேக வைத்த பின் மீண்டும் அதை மண்ணிலே விதைத்தால் அது முளைக்காது.
ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணி
3.உள்முகமாக உடலுக்குள் செலுத்தித் தீய வினைகளை வேக வைத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.


பதிவு எப்படியோ அப்படித்தான் உணர்வின் இயக்கங்கள்
இரண்டு நண்பர்கள் பிரியமாக இருக்கின்றார்கள் ஒருவர் தவறு செய்கின்றார் என்று யாராவது சொன்னால்… நான் சும்மா இருக்கும் பொழுது… “அப்படி இப்படி என்று” எல்லாம் என்னைத் தவறாகச் சொல்கின்றார்கள் என்பார்.
1.நாம் பிரியமாக இருப்பதால் இதைக் கேட்டுப் பதிவு செய்து கொள்கின்றோம்.
2.அடுத்து அவர் தவறு செய்து விட்டு “இல்லை” என்று மறுக்கப்படும் பொழுது அதை ஏற்றுக் கொள்கின்றோம்… நண்பர் என்பதால்…!
இவர்தான் தவறு செய்தார் என்று மற்றவர் வந்து சொன்னாலும் அது எல்லாம் எனக்கு தெரியாதங்க…? என் நண்பருடைய சமாச்சாரம்…! என்போம்.
தவறு செய்தார் என்று சொன்னால் கூட… இல்லை நேரடியாக நான் பார்த்தேன் என்று அவர் சொன்னாலும்
1.அப்படி எல்லாம் செய்யக்கூடிய ஆள் இவர் கிடையாது…! தெரியாமல் ஏதாவது நடந்திருக்கும்.
2.நண்பன் மேல் பிரியம் இருக்கும் பொழுது முதலிலே மறுக்கின்றோம்.
3.இல்லைங்க… நான் நேரடியாக கண்ணிலே பார்த்தேன் என்று இன்னொரு நண்பர் சொன்னால்
4.அசந்தர்ப்பமாகத்தான் அப்படி இருக்குமே தவிர “அவர் தவறு செய்யக்கூடிய ஆளே இல்லைங்க…” என்போம்.
ஏனென்றால் அவர் மீது இருக்கக்கூடிய பற்று தவறை கூட நாம் சுட்டிக் காட்டாதபடி “தெரியாமல் தான் நடந்திருக்கும்…” என்று தான் சொல்கின்றோம்.
இதே போன்று ஒரு குடும்பத்தில் இரண்டு பையன்கள் இருக்கின்றார்கள் ஒருவன் மீது தந்தை பிரியமாக இருக்கின்றார்… இன்னொருவன் மீது வெறுப்பாக இருக்கின்றார்.
அந்த வெறுப்பாக இருக்கக்கூடிய பையன் வெளியே சென்று ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றுகிறான்… ஒரு நல்ல காரியத்தை அவன் செய்கின்றான். அதை மெச்சி அவர் என்ன செய்கின்றார்…?
நீ யார் பெத்த பிள்ளையோ…? உன் தந்தையிடம் நான் நன்றி சொல்ல வேண்டும்…! என்று அழைத்து வருகின்றார். கூப்பிட்டு வந்தவுடன் உங்க பையன் தானுங்களா…? எங்கள் குடும்பத்தையே இவன் காத்தான்…! என்று உயர்வாகச் சொல்கின்றார்.
அப்படியா…! நீங்கள் நாளைக்கு வந்து வேறு விதமாகச் சொல்லி விடாதீர்கள் ஐயா…! என்பார் தந்தை. பையன் செய்த நன்றிக்குச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனது இங்கு தந்தையிடம் இல்லை.
ஆனால் அதே சமயத்தில் பிரியமாக இருக்கும் இன்னொரு பையன் ஒரு இடத்தில் சுட்டித்தனம் செய்கின்றான். அங்கிருந்து வந்து தந்தையிடம் அவனைப் பற்றி முறையிடுகின்றார்கள் “இவன் தவறு செய்கின்றான்” என்று.
1.நீங்கள் இன்னொரு பையனைச் சொன்னால் கூடப் பரவாயில்லை
2.இவன் அந்த மாதிரித் தவறு செய்ய மாட்டான் என்று பிரியமானவனை ஏற்றுக் கொள்கின்றார்கள் எனக்கு தெரியாதுங்களா…? என்று கேட்கின்றார்.
3.உங்கள் பையன் தான் ஏதாவது தவறு செய்திருப்பான் என்று தான் சொல்வார்கள்
ஆனால் அவர்கள் போன பிற்பாடு என்ன கேட்பார்கள் ஏன்டா டேய் அவர்கள் என்ன கேட்கின்றார்கள் பார்த்தாயா…? என்று பையனிடம் கேட்பார்கள்.
இன்னொருவன் நல்லது செய்து வந்தான் அல்லவா…! அவனைப் பார்த்து டேய் இங்கே வாடா…! எத்தனை பேரை நீ ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்…? நாளை என் பெயர் கெட்டுப் போவதற்கு நீ என்ன செய்கின்றாய்…? என்று கேட்பார்.
ஏனென்றால் இந்த உணர்வுக்கொப்ப அப்படித்தான் “அந்த அறிவுகள் வேலை செய்யும்…” எதனின் உணர்வின் தன்மையோ அது தான் இயக்கமாகும்.
1.ஒரு செடி எந்த மணத்தின் தன்மை தனக்குள் வைத்துக் கொண்டதோ
2.மற்ற செடிகளின் மணத்தைத் தன் அருகில் விடாது.
இதைப்போல எந்தச் செடியின் மணத்தை நாம் உணவாக உட்கொண்டு பழகினோமோ அந்த மணத்தின் ஞானமே நமக்கும் வரும்… இது வழி தொடர்ந்து வரும்.
ஆகவே அந்த குணத்தின் இயல்பாகத்தான் நம்முடைய உணர்வின் செயல்களும் அமைகின்றது தாவர இனத்தின் நிலைகள் கொண்டு. இதைப் போன்று தான்
1.எதனை எடுத்து எதனின் வழிகளில் நாம் இணைத்து
2.அதனின் உணர்வின் எண்ணங்களாக மாறுகின்றதோ இதனின் உணர்வு தான் இயக்கம்.
இதற்குத் தான் கடவுளின் அவதாரத்தில் இராமனை மூன்றாவது ஸ்தானத்தில் வைத்துள்ளார்கள். இந்த எண்ணம் சீதாராமா…! ஒரு பையன் மீது எவ்வளவு பிரியமாக இருக்கின்றோமா அந்த சுவை சீதா.
அதே சொல்லை நாம் எடுத்துத் திருப்பிச் சொல்லும் பொழுது இராமன்..!. இராமன் அம்பை எய்தான் என்றால் அந்த கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். இதே பதில் தான் மீண்டும் வரும்.
1.யார் மேல் எதன் உணர்வை வைத்தோமோ இந்த உணர்வின் சொல்லை எடுத்து
2.“மோசமானவன்” என்ற பதிவிருந்தால் மீண்டும் அதே குறையான சொல்லைத்தான் சொல்லும்படிச் செய்யும்.
கடவுளின் அவதாரத்தில் சூரியனின் இயக்கங்கள்
1.அந்தக் காந்தச் சக்தி மற்ற பொருளைக் கவர்ந்த பின்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தச் சுவையைக் கவர்ந்தாலும்
3.அதே எண்ணத்தைக் கொண்டு நுகரப்படும் பொழுது சீதா சுவை
4.இந்த உணர்வின் நிலைகள் நம் தசையாகின்றது… நினைவின் சொல்லாக “அந்தந்த எண்ணங்கள் வருகின்றது…”
இந்த இயற்கையின் தன்மையை நாம் புரிந்து கொள்வதற்காக இராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் சிவபுராணம் என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலின் தன்மை உணர்வுகள் கலந்து அது மனிதனாக உருவாக்கப்படும் பொழுது பழமை எவ்வாறு இன்று புதுமையில் இருக்கின்றது…? என்று காட்டியுள்ளார்கள்.
பழமை கலந்ததின் உணர்வின் மாற்றங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்பதைத்தான்
1.ஒரு மனிதனின் இயல்பு எவ்வாறு மாறுகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

“சித்தர்களும் மகரிஷிகளும்” நம்மைப் பக்குவப்படுத்தி வழி நடத்துவார்கள்
ஆத்மாவின் செயல் உணர்ந்தீர்களா…?
எங்களின் பதில்: தியானத்தில் அமர்ந்து எங்களுக்கு வழிகாட்டிய ஞானகுரு வேணுகோபால சுவாமிகள் உபதேச நிலைக்கொப்ப அத்தொடரில் அவர் காட்டிய எல்லா நிலைகளையும் அறியாவிட்டாலும் சில உண்மைகளைச் செயலாலும் ஞானத்தாலும் அறியும் வழி பெற்றோம்.
1.இந்த மார்க்கத்தில் தொடர்பு கொண்ட பல ஆத்மாக்கள் தன்னைத்தான் உணர்ந்து தன் வழியில் பல உண்மைகளை அறிந்ததையும் கண்டோம்.
2.இச்சரீர பிம்பம் மயங்கிய நிலையோ தன்னைத்தான் மறந்து செயல்படும் முறையன்றி இத்தியானத்தால் அடைந்த உண்மை நிலைகள் பல உண்டு.
அல்லி மலர் காலை உதயசூரியனைக் கண்டவுடன் மலர்ந்து சூரிய ஒளி மறைந்தவுடன் கூம்பிவிடுகின்றது. இன்னும் சில மலர்கள் சூரிய ஒளியின் அலைபாயும் இடத்தில் எல்லாம் அதன் மலர் முகம் காட்டி மலர்ந்து அதன் ஒளி திக்கிலேயே அதன் ஈர்ப்பும் திரும்பிய நிலையில் வாடி விடுகின்றது.
இவையெல்லாம் இயற்கை என்கின்றான் மனிதன். எல்லா சக்தியைக் காட்டிலும் இனி தன் செயற்கைக்கு உதவப் போவது சூரியசக்தி தான் என்ற உண்மை வழியைச் செயற்கைக்கு பாழ்படுத்தும் மனிதன்
1.அடுப்பான இப்பூமியில் பாத்திரமான இச்சரீரத்தில் ஒளியான ஜீவ சக்தி தரவல்ல சூரிய சக்தியைப் போட்டு
2.இவன் சமைக்கும் சுவையில் எச்சுவையையும் பெறவல்ல சக்தி இச்சரீர ஜீவனில் உள்ளதை மனிதன் அறியவில்லை.
இயந்திரத்தின் துணை கொண்டு சூரிய அலையைச் சில உலோகங்களின் தொடர்பைக் கொண்டு சக்தி பெறும் மனிதன் இவ்வெண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு எதனையும் செயல்படுத்தக்கூடிய செயல் தெய்வமாய்
1.தன்னுள் உள்ள ஆத்ம சக்தியைச் செயல்படுத்தி
2.இவ்வாத்மாவின் தொடர்பலையால் எவ்வலையையும் அதன் தொடர்பு கொண்டு
3.தொடர்புப்படுத்தி செயலாக்கக்கூடிய ஆற்றல் இவ்வாத்ம ஞானத்திற்கு உண்டு.
இவ்வுடலின் செயலுக்கொப்ப இவ்வெண்ண ஈர்ப்பு செல்லும் முறையைச் சிறிது மாற்றி
1.இவ்வுடலை இயக்கும் ஆத்மாவை இவ்வெண்ணத்தில் நாம் செலுத்தும் ஞானத்தால்
2.இச்சரீர இயக்க ஆத்மாவையே இது நாள் வரை உணர்த்திய ஞான உபதேசத்தின் தியான வலுவால்
3.இவ்வாத்மாவை சக்தி வாய்ந்த ரிஷிகளின் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தி
4.அவர்கள் பெற்ற சக்தி நிலையை நாமும் பெறவல்லை இயக்க நிலையை இம்மனித ஞானத்தால் செயல்படுத்துங்கள்.
இச்சரீரக்கூடு ஜீவத்துடிப்புடன் இருந்தால்தான் இவ் இயக்கத்தின் காந்த மின் அலையின் வளர்ப்பைக் கொண்டு ஆத்மபலத்தை நாம் பெருக்க முடியும்.
ஆத்ம பலம் பெற்ற நிலையில் வேறு ஒரு ஈர்ப்புப்பிடிக்கு நாம் சிக்காமலும்… இக்காற்றுடன் கலந்துள்ள பல கோடி நிலைகளில் நம் சரீர சுவாச ஈர்ப்பிற்கு எவ்வலையும் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவானாலும் சரி… உடலுடன் உள்ளவர்களின் எண்ண அலைகள் ஆனாலும் சரி… இவ் ஈர்ப்பு வட்டத்தில் சிக்காமல்
1.எப்படி எரியும் நெருப்பில் எது போட்டாலும் அதுவும் பஸ்பம் ஆகி விடுவதைப் போல்
2.இச்சரீர இயக்கத்தால் நாம் பெற்ற ஆத்ம பலம் கூடக் கூட “இவ்வாத்மாவின் வலுவை நாம் தனித்து காண முடியும்…”
வலுப்பெற்ற ஆத்மாவை நாம் உள்ள இடத்திலிருந்தே எங்கும் அனுப்பி எதனையும் அறிந்து வரச் செயல்படுத்த முடியும். தன்னைத்தான் உணர்ந்து தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல்தான் “சித்து வழியில் முதல் சித்து…”
ஆத்ம பலம் பெற்று வேறு ஒரு ஈர்ப்பலைக்கு இவ்வாத்மா செல்லாத வலுவாக நம் எண்ண ஞானம் வளர்ந்திருக்க வேண்டும்.
வாழ்க்கை பந்தத்தில் சுவைக்கும் மற்ற பொருள் நிலை எவற்றிற்கும்… இவ்வெண்ணமானது பேராசைக்கோ ஏக்கத்திற்கோ சஞ்சல சலிப்பு நிலைக்கோ செல்லும் வழிமுறை சிறிது இருந்தாலும்… இவ்வாத்மாவின் செயல் தனித்து தன்னிச்சைக்கு இயங்க இச்சரீர பிம்பத்தின் உணர்வில் “செயல் நிலை தடைப்படும்…”
ஞானத்தின் வளர்ச்சியானது எவ் ஈர்ப்பலையின் பிடியிலும் இவ்வெண்ண செயலின் உணர்வு நிலை செயல் கொள்ளும் பக்குவம் கொண்டுதான்… இவ்வாத்ம பலம் கூடியுள்ள தருணத்தில்…
1.நாம் ஜெபித்த தியானித்த சித்தர்களின்… வளர்ந்த ரிஷிகளின் தொடர்பு வட்ட அலை ஈர்ப்பு
2.நம் ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் பதம் பார்த்து… நம்மை வழி நடத்துவார்கள்.
“ஆத்ம வலுவை மட்டும்” இச்சரீர பிம்ப வாழ்க்கையில் இருந்து தான் இந்த ஞானத்தால் வளர்ச்சியுறச் செய்ய முடியும். ஆத்ம பலம் பெற்ற ஞானத்தால் இவ்வாத்மாவின் பலம் கொண்டே இச்சித்துத் தொடரின் செயல் சித்துக்களை இவ்வாத்மாவினால் தான் வளர்த்துக் காட்ட முடியும்.
முதல் சித்தான ஆதம் பலம் பெற இச்சரீர பிம்ப இயக்கம் இருந்தால் தான் பெற முடியும். இச்சரீர பிம்ப எண்ணத்தின் அறியும் ஞானத்தைக் கொண்டு ஆத்ம பலத்தால் சித்து நிலைத் தொடர் யாவையும் நாம் பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் எண்ணத்தின் கூர்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?
ரோட்டிலே நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அப்போது நெடு நாள் பார்க்காத ஒரு நண்பரைப் பார்க்கின்றோம். அந்த ஆர்வத்தில் செல்கின்றோம்.
இரண்டு பேரும் சந்திக்கக்கூடிய நேரத்திலே அந்த இடம் அசுத்தமாக இருக்கின்றது.. அசூசையாக இருக்கின்றது. ஆனால் “நண்பன்” என்ற ஆர்வத்தில் எண்ணும் பொழுது அதை நுகர்வது இல்லை.
1.பேச்செல்லாம் முடிந்த பின்பு திரும்பிப் பார்க்கும் போதுதான்
2.ஐய்யய்யோ… இங்கே நின்று கொண்டல்லவா இவ்வளவு நேரம் பேசியிருக்கிறோம் என்று தெரிகிறது… நாற்றமும் அப்போது தான் தெரிகிறது.
அப்பொழுது எது இயக்குகின்றது…? அந்தக் கூர்மையான எண்ணங்கள் தான் அப்படி வருகின்றது.
ஒரு சிலர் என்ன செய்வார்கள்…?
எப்பொழுது பார்த்தாலும் குறைகளையே பேசிக் கொண்டிருப்பார்கள் அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் பார்த்தால் ஐயோ… இங்கே ஏதோ நாற்றம் அடிக்கிறது…! என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் நாற்றத்தை எண்ணாதவர்கள் அங்கே வந்த பின் அவர்களுக்கு அது தெரியாது. ஆனால் இவர்கள் சொன்ன பின் அப்படியா… இப்போது தான் தெரிகிறது…! என்றும் சொல்வார்கள்.
அதே உணர்வை நுகர்ந்த பின் அவர் செய்த நிலையை “ஆமாம்” என்று சொல்வார்கள்.
இது எல்லாம் எது இயக்குகின்றது…? கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய்…! என்பது போன்று அதனின் உணர்வு கொண்டே நமக்குள் வளர்கின்றது.
ஆகவே நாம் எதை எண்ண வேண்டும்…?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று சதா எண்ண வேண்டும். அது தான் தியானம்…!
எப்பொழுது கெட்டதைச் சந்திக்கின்றோமோ அந்தக் கெட்டது நமக்குள் வராதபடி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பையனுக்கு உடம்புச் சரியில்லை என்றால் உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் பையன் உடலில் படர வேண்டும். அவன் உடல் நலமாக வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சி பையனுடைய உணர்வு (உடல் நலக்குறைவான) நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும்.
அவனிடமும் இதைச் சொல்லி… “அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடு… உனக்கு நல்லதாகும்…!” என்று நினைவுபடுத்த வேண்டும். நாம் சொல்லிப் பதிவு செய்ததை அவனும் எண்ணி எடுக்கும் பொழுது அவனைப் பாதுகாத்துக் கொள்கின்றான்.
செடி கொடிகள் தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. அதே போல் மாடு ஆடு எல்லாம் முகர்ந்து பார்க்கிறது. தனக்கு உகந்ததாக இல்லை என்றால் விலகிச் சென்று விடுகின்றது.
ஆனால் மனிதனாக இருக்கும் நாம் கருணைக் கிழங்காக இருந்தாலும் அதை வேக வைத்து விஷத்தை நீக்கி விட்டுப் பலசரக்குகளை அதற்குள் போட்டு நமக்கு உகந்ததாகச் சுவையாக உருவாக்கி உட்கொண்டு மகிழ்கின்றோம்.
அதைப் போன்று தான்
1.தீமை என்ற உணர்வு வந்தாலும் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து
2.இருளை நீக்கி ஒளியான அணுவாக நமக்குள் மாற்ற வேண்டும்.
விஞ்ஞானி ஆடு மாடு மற்ற உயிரினங்களின் செல்களை எடுத்துப் புதிது புதிதாக மாற்றுகின்றான். செடி கொடிகளில் ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து வீரிய விதைகளை உருவாக்குகின்றான்.
அது போல் நாமும்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்த்துத் தீய வினைகளை மாற்றி கொள்ள முடியும்.
2.தீமைகளில் இருந்து நாம் விடுபட முடியும் அருள் ஒளியை நமக்குள் பெருக்கவும் முடியும்.


ஈஸ்வரபட்டர் கண்டுணர்ந்த உணர்வுகளை நாம் பருக வேண்டும்
எனது குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது அவருக்குள் கற்றுணர்ந்த அந்த உயர்ந்த உணர்வை எனக்குள் பதிவு செய்தார். அதை நினைவு கொண்டு எடுக்கும்படி சொன்னார்… எடுத்து அதிலே வளர்ச்சி பெற்றேன் (ஞானகுரு).
உடலை விட்டு நான் பிரிந்து சென்ற பின் “எனக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இன்னதுதான்” என்று அவர் சொன்னார்.
1.அருள் ஞானத்தின் உணர்வை எனக்குள் வளர்த்துக் கொண்டதற்கு உயிரான்மா புவியின் ஈர்ப்புக்குள் வராதபடி விண் செல்ல உந்து விசை தேவை.
2.என்னை விண்ணிலே வீசு…!
3.இங்கிருந்து அகன்று சென்றால் தான் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்க முடியும்… ஒளியின் சுடருடன் நான் சுழல முடியும்.
ஞானத்தின் தன்மையை எனக்குள் வளர்த்தாலும் அந்த உணர்வின் தன்மை கொண்டு இங்கே விரிவடைந்து பேசலாம். “தன்னிச்சையாக விண் செல்லும் நிலை எவருக்கும் இல்லை..” வலு கொண்ட பல நிலைகள் உறுதுணை கொண்ட உணர்வின் துணை கொண்டு தான் செல்ல முடியும்.
எடை கூடிய பொருளை ஒரு நூலால் தூக்க வேண்டும் என்றால் கடினம். ஆனால் பல நூல்களை ஒன்றாக்கிக் கயிறாகத் திரிக்கப்படும்பொழுது அதைத் தூக்கும் சக்தி வருகின்றது.
இதைப் போன்று தான்
1.“ஒன்றிய நிலைகள் எங்கே வருகின்றதோ” அந்த வலுவான உணர்வு கொண்டு உந்து விசையால் என்னை உந்தித் தள்ள வேண்டும்.
2.உடல் பெறும் உணர்வுகள் கருகும் எல்லை அதுதான்
3.கருகிய உணர்வு கொண்டு அங்கே நுகர்ந்த உணர்வுகளை ஒளியாக மாற்றும்.
4.அந்த ஒளியின் சுடரே தான் என்றும் நிலைத்து அழியாது கொண்டு இருக்கும்.
5.இங்கே புவியில் வந்தால் உணர்வின் தன்மை மாய்க்கும்.
நஞ்சினை வென்றிடும் உணர்வின் அலைகளுக்குள் செல்லப்படும் பொழுது நஞ்சை வென்றிடும் உணர்வையே நான் பெற முடியும்.
நஞ்சை இந்த வாழ்க்கையில் வென்றாலும் வென்றிடும் உணர்வுகள் பெற்றாலும் இதைக் கடந்து செல்லும் ஈர்ப்பு எனக்கு இல்லை.
1.கடந்து செல்லும் இந்த ஒத்த நிலைகள்
2.இங்கே கீழிருந்து இயக்கப்படும் பொழுதுதான் விண செல்ல முடியும்.
அவர் ஆன்மா வெளியே செல்லும் பொழுது அவர் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை அதற்கென்று என்னென்ன பக்குவத்தைச் செய்தாரோ… அதைப் பக்குவப்படுத்தி “அவர் வழியில் விண் செலுத்திய பின்பு தான் விண்ணுலக ஆற்றலை நான் பருக முடிந்தது…”
விண்ணின் ஆற்றலை எனக்குள் பதிவு செய்திருந்தாலும் நினைவு கொண்டு எடுக்கும் சக்தி அந்தத் திறன் அவரை விண் செலுத்திய பின் தான் எனக்குக் கிடைத்தது.
என் குருவின் இயல்பான நிலைகள் கொண்டு அவர் உணர்த்திய உணர்வின் ஒளி அலைகள் நிலை கொண்டிருக்க அவர் காட்டிய வழிகளில் அவரை விண் செலுத்தினேன்.
1.அதனின் தொடர் கொண்டு தான் அவருடைய தொடர்பும் வருகின்றது
2.இந்த புவியியல் வரக் கூடிய தீமைகளை என்னால் அகற்ற முடிகின்றது.
3.உங்களுக்கும் அந்த ஆற்றலைப் பதிவு செய்ய முடிகின்றது.
4.உங்களுக்குள் விளைந்த தீமைகள் என்னை நாடாத வண்ணம் தப்பித்துக் கொள்ள முடிகின்றது.
இல்லை என்றால் அது முடியாது…! சரியான மார்க்கம் இல்லாதபடி எதையும் செய்ய முடியாது.
சில நேரங்களில் குருநாதர் போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுவார் ஹலோ…! என்பார் நான் போன் செய்கிறேன் என்பார்.
போஸ்ட் கம்பியில் ஏன் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள் சாமி…? என்று நான் கேட்பேன்.
கடவுளுக்கு போன் செய்கிறேன் என்பார். கல்லிலே தட்டுவதை நீதான் ஏன் என்று கேட்டாய்… மற்ற யாரும் கேட்கவில்லை. காரணம் அதிலே வரக்கூடிய நாதங்களைச் சுட்டிக் காட்டி விண்ணிலே நாதங்கள் எப்படி வருகிறது…? என்று பார்…!
விண்ணுலகில் எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றது. மோதியவுடன் சுருதிகள் மாறுகின்றது. அகண்டு சென்ற பின் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “எத்தனையோ உருவங்களாகத் தோற்றம் தருகிறது…” விண்வெளியில் இப்படி உருவாகின்றது.
அத்னுடைய வேகங்கள் வரும் பொழுது நாதங்கள் எப்படி வருகிறது பார் என்றார். அதற்குத் தான் கல்லைக் கொண்டு நான் தட்டிக் காண்பித்தேன்…! என்றார் நாதத்தை நீ பார் என்றார்.
1.இது எல்லாம் அனுபவபூர்வமாக… அவருடைய சக்தி கொண்டு உலகம் எப்படி இருக்கிறது…? என்று
2.அவர் கண்டறிந்த உணர்வு அவருக்குள் இருந்து வருகின்றது.
3.அதை எல்லாம் நாம் பருக வேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துவது.

முன்னோர்களை வணங்க “ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…?”
இது நாள் வரை முந்தைய பாடங்களில் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப அமிலங்கள் வளர்கின்றன என்று உணர்த்தினேன்.
இவ்வெண்ண நிலையில் அதிகப்படியான குண நிலைகொண்டு
1.அதே குண எண்ணத்தைக் கொண்ட உடலை விட்டுப் பிரிந்த ஜீவ ஆத்மாக்களும்
2.இன்னும் தன் மகன், மகள் என்ற குடும்பப் பாசத்திலிருந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாவும்
3.இத்தாயின் கருவில்தான் பிறக்க வேண்டுமென்ற பிறப்புத் தொடரில் இருந்தும்
4.முந்தைய காலங்களில் பல ஜென்மங்களாய் விட்ட குறையில் இருக்கும் உயிராத்மாக்களும்
5.இவ் ஆண் பெண் இரு பாலரின் பருவ மாற்ற உடல் வளர்ச்சி ஏற்படும் காலம் தொட்டே
6.அவர்களின் சுவாச அலையுடன் இவ்வாவிகளின் ஈர்ப்பு அவ்வுடலுடன் ஏறிக்கொள்ளுகின்றது.
நம் முன்னோர்கள் பருவம் எய்திய பெண்களை “அதிகமாக வெளியில் செல்லாமல் வைத்திருந்ததற்கு” இதுவும் ஒரு காரணம்.
தன் மண வாழ்க்கையில் தோல்வி கண்ட ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்ற அதே வயதுக்குகந்த அப்பருவநிலை கொண்டோரின் உடலில் ஏறிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் எதிர் நோக்கிப் பல நிலைகளைச் செய்கின்றது.
இதன் சக்தியின் நிலை சூரியனின் ஒளி அலை அதிகமாகப் பாயும் நேரத்தைக் கொண்டு இதன் செயல் நடக்கும் (உச்சி வெய்யிலில்) அதுவுமல்லாமல் இவ்வாவிகள் மற்ற இடங்களில் சுழன்று கொண்டிருப்பதைக் காட்டிலும் “நீர் நிலைகள் உள்ள இடங்களில்தான்” அதன் சுழற்சி அதிகப்பட்டிருக்கும்.
ஜீவனுக்கு வரவேண்டுமென்ற ஆசையிருப்பதினால்
1.தன் உயிரணுவுடன் கூடிய ஆத்ம நிலை சிதறி விடாமல் இருக்க…
2.நீரிலிருந்து சூரிய ஒளிபட்டு அதிகமாக அவ்வொளி அலை உள்ள இடங்களில் இருந்தால்
3.“இவ்வாவிகளுக்கு அதனுடைய ஆத்ம அமிலம் சிதறுபடாமல் காத்திருக்க முடியும்…”
4.முன்னோர்களை வணங்க எதற்காக “ஜீவ நதி உள்ள இடத்திற்குச் செல்லும் பொருள் புரிந்ததா…?”
இப்படிப் பலவாக உள்ள ஆவி ஆத்ம உயிரும், ஜீவ உடல் கொண்ட ஆத்ம உயிருமான மனிதர்களின் நிலையும் கலந்து வாழ்வதினால் தன் பிறப்பின் ஆசைக்காகப் பிறப்பெடுக்கப் பல உடல்களில் “முன் கூட்டியே இவ்வாவி ஆத்மாக்கள் ஏறிக்கொள்கின்றன…”
ஏறிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அவ் உடலிலிருந்து தன் சாதக நிலைக்காக அம்மனிதனின் எண்ணத்தையே இவ்வாவி ஆத்மாக்கள் செயல்புரிகின்றன.
இப்படி உள்ள ஆவி ஆத்மாக்கள் தான் பிறப்பில் வரும் நிலையில் சிலருக்கு ஒன்றுக்கு இரண்டாகவும்… பலவாகவும்… கருவுக்கு வருகின்றது.
மனிதனைக் காட்டிலும் மிருகத்தின் சுவாசத்திற்கு மிருக உடலில் பல உயிர் ஆத்மாக்கள் ஏறிவிடுவதால் ஒரே சூலில் பல குட்டிகளை ஈணுகின்றது. மிருகங்களிலேயே ஒரு நிலை கொண்ட சாந்த குணமுடைய சில பிராணிகளுக்கு ஒரு சூலில் ஒரு கன்று ஈணும் நிலை வழி உள்ளது.
இப்பிறப்பில் நடைபெறும் இச்செயல்களும் எண்ணத்திலிருந்துதான் வழித்தொடர் பெற்று அதனதன் இன நிலையின் அமில குணம் தொட்டு பிறப்பிற்கு வருகின்றது.
1.இதன் தன்மையில் உடலில் ஏறிய அத்தனை உயிராத்மாக்களுக்குமே பிறப்பிற்கு வர முடியாமல்
2.அவ்வுடலிலிருந்து ஆவி பிரிந்த பிறகு அதற்கும் விடுதலை கிடைத்து
3.மீண்டும் தன் பிறப்புக்குகந்த இடம் எடுத்து வருவதற்குள் பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன… இவ்வுடலை விட்ட ஆவி ஆத்மாக்களுக்கு.
இவ்வாவி ஆத்மாக்களின் வழித்தொடரில் தான் பிறப்பு வருகின்றதா…? என்று வினா எழும்பலாம். ஒவ்வொன்றின் நிலை மனிதனிலேயே பலவாக வருகின்றது.
ஆகவே… இப்பொழுது உடலுடன் இருக்கும் நாம்
1.இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி
2.இதிலிருந்தே மெய் ஒளி காணும் மெய் ஒளி பெறும் நிலைக்கு நம் எண்ணத்தை உயர்த்தி
3.சித்தர்களுடனும் ஞானிகளுடன் இணைந்து வாழும் உன்னத நிலையைப் பெறுதல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றைய உலகத்தின் சூழ்நிலையில் நாம் எங்கே இருக்கிறோம் என்றால் “மரண வாயிலில் இருக்கின்றோம்…”
நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வருவதைக் கவர்ந்து வெளிப்படுத்துவதைச் சூரியன் தன்னுடைய பாதரசத்தால் மோதி எலக்ட்ரிக் ஆக மாற்றுகின்றது.
அதனுடைய உணர்வில் வேறு ஏதாவது எடுத்தால் விஷத் தன்மையான எலக்ட்ரானிக் ஆக மாறுகிறது. மாற்றினாலும் கூட விஷத்தின் தன்மை கொண்ட நட்சத்திரங்களின் உணர்வுகளைப் பிரித்து… அடித்து… மோதியவுடனே புது விதமான உணர்வாக விஷத் தன்மையாக மாறுகிறது… “நியூட்ரான்…”
1.நியூட்ரான் என்ற விஷத் தன்மையாக மாறியபின் அது அதிவேகமாக இயக்கும் சக்தியாக மாறுகிறது
2.எதனையுமே துரித கதியில் அது இயக்குகிறது.
எந்தப் பொருளுக்குள்ளும் அது இணைந்த பின் எதிர்நிலையாகி… புரோட்டான் என்று அதனுடைய சக்திக்கே மாறுகின்றது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
விஞ்ஞானிகள் கதிரியக்கங்களை வைத்து நியூட்ரானைப் பிரிக்கின்றார்கள். பிரித்து அந்த விஷத்தின் தன்மையை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அது பரவும் போது
1.நம் உடல்கள் எல்லாம் அப்படியே இருக்கும்
2.கட்டிடங்களும் அப்படியே இருக்கும்
3.ஆனால் மனிதனுடைய சிந்தனைகள் அனைத்தும் அழிந்துவிடும்
விஷத்தைச் சாப்பிட்டால் எப்படி இருப்போம்…? அந்த மாதிரியான குண்டுகளைச் செய்து வைத்திருக்கின்றார்கள். எல்லா நாடுகளிலுமே இது உண்டு. நம் நாட்டிலும் உண்டு. அமெரிக்காவிலும் சீனாவிலும் ஒவ்வொரு நாட்டிலும் வைத்திருக்கின்றார்கள்.
அவன் வைத்திருக்கின்றான்… நாம் ஏன் செய்யக் கூடாது…! என்று இந்த ரகசியம் எல்லோருக்கும் வெளி வந்துவிட்டது உலக மக்களை அழித்துக் கொள்வதற்குத் தான் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.
1.ஒரு பக்கம் மனிதனை உருவாக்குகின்றான்
2.ஒரு பக்கம் மனிதனையே அழித்துக் கொண்டிருக்கின்றான்.
3.இந்த நிலைதான் இன்று பெருகி வருகின்றது.
நட்சத்திரங்களிலிருந்து வருவது மின்னல்களாக மோதுகிறது. கடலில் படுகின்றது. மின்னல் தாக்கும்போது மணலாக மாறுகின்றது.
விஞ்ஞானி அந்த அணுவைப் பிரித்து யுரேனியமாக மாற்றுகின்றான். அதிலேயே பல நட்சத்திரங்களின் தனிமங்களைச் சேர்க்கின்றான். அணுகுண்டாக வெடிக்கச் செய்கின்றான்.
மின்னல் எப்படி வெகு தூரத்திற்குப் போகிறதோ அதனின் இயக்கச் சக்தியைக் துரித கதியில் வெப்பத்தின் தன்மை கூட்டி துரித நிலையில் இயக்கக்கூடிய தன்மைக்குக் கொண்டு வருகின்றார்கள். அதை வைத்து இயந்திரங்களை இயக்குகின்றான்.
1.அதில் வரும் விஷக் கழிவுகளைச் சூரியன் கவர்ந்து வைத்திருக்கின்றது.
2.கழிவாக்கிய இந்த விஷத்தின் தன்மையைச் சூரியன் எடுத்து இந்தக் காற்று மண்டலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.
மனிதன் விஷத்தன்மை கொண்ட சத்துகளைக் கடலிலிருந்து பிரித்து எடுக்கின்றான். அதனின் தரத்தை உயர்த்துகின்றான். ஆனால் கழிவுகள் வருகிறது.
1.சூரியன் எடுத்து இங்கே கழிவாகப் பரவச் செய்கின்றது.
2.இப்படித்தான் அசுத்தமான அலைகள் இங்கே பெருகிக் கொண்டிருக்கின்றது.
இதைச் சுத்தப்படுத்தும் நிலை வேண்டுமல்லவா.
மனிதனுக்குள் இத்தகைய தீமையின் உணர்வுகள் வளராது தடுக்க வேண்டுமென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அந்தக் கழிவு நமக்குள் சேராது சுத்தப்படுத்தினால் ஒழிய நம்மை நாம் காக்க முடியாது. “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்தால் தான் தப்ப முடியும்…”
ஆனால் மனிதன் ஈன்று தன்னுடைய சுகத்திற்காக விஷத் தன்மை வாய்ந்த உணர்வுகளைச் சேர்க்கின்றான். புதுப்புது உணர்வுகள் ஆகி புதுப்புது விஷத் தன்மைகள் இங்கே பரவுகின்றது.
நிமோனியா காய்ச்சல் என்று அக்காலத்தில் கொசுக்கள் மூலம் எல்லாம் வந்தது. அப்படி வந்தால் உடனே மரணம் தான். மூளை சிதைவாகும்… மூளைக் காய்ச்சல் வரும்.
அத்தகைய கொசுக்கள் கடிப்பதால் மனிதன் சிந்தனை இழக்கின்றான்… துரித நிலைகள் கொண்டு மடிகின்றான்…! என்று கண்டுபிடிக்கின்றான்.
காரணம் இவன் எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மை காற்றிலே பரவுகின்றது. ஆனால் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்தக் கழிவும் இதுவும் சேர்க்கப்படும் பொழுது
1.இந்த உணர்வு கலந்து விஷப் பூச்சிகளாக மாறுகிறது. விஷ அணுக்களாக மாறுகின்றது
2.இன்று அதிக அளவில் மாட்டின் மாமிசங்களைச் சாப்பிடுகின்றார்கள்.
3.மாட்டிற்குள் இந்தப் பூச்சிகள் குடைந்து மூளைக்குள் சென்று மாட்டையே வீழ்த்தி விடுகின்றது.
இந்த மாதிரித் தான் மனிதனுக்குள் விளைந்த நிலைகள் இன்று ஏராளமாக உண்டு. இதை எப்பொழுது மாற்றுவது…? ஆக மொத்தம் நம்மைக் காக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஒரு ரோஜாச் செடி மற்ற செடி கொடிகளின் மணங்கள் தனக்குள் வராதபடி தன் மணத்தின் வலுவால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது.
இதைப் போன்றுதான் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து தீமையின் உணர்வுகள் நமக்குள் வராதபடி பாதுகாக்க வேண்டும்.
அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்துப் பழகி நமக்குள் பெருக்கி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். இந்தக் காற்றிலே தான் அந்த நல்ல சக்தியும் இருக்கின்றது.


துருவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரம் அனைத்துமே அகஸ்தியன் தான்…!
விஞ்ஞான அறிவால் வரப்படும் பொழுது மதத்தின் நிலைகள் கொண்டு தன் இனத்தையே அழித்துவிடும் உணர்வுகள் மனிதனுக்குள் விளைந்து விளைந்து
1.இன்று மனிதனின் உணர்வின் நினைவுகள் இழந்து
2.மனித உணர்வே இல்லாது அழியும் தருணம் வந்து கொண்டிருக்கின்றது.
மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவால் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இந்த விண்ணுலகில் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் பெற்றவர்கள் சப்தரிஷிகள்… “சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்…”
விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் விஜயம் செய்து தன் உணர்வின் தன்மை உயிரைப் போன்று உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.
முதல் துருவ மகரிஷி துருவனாக இருந்தாலும் அது துருவ நட்சத்திரமாகி இன்றும் சுழன்று கொண்டிருக்கும் “இந்த வேளை…”
எப்படி நாகம் தன்னுடைய நஞ்சை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சி அவைகளை உணவாக எடுத்தாலும் அந்த உணர்வின் சத்து தனக்குள் விளைந்து விளைந்து “அந்த நஞ்சே வைரமாக விளைகின்றது..”
இதைப் போல அகஸ்தியன் துருவ நட்சத்திரமாகி துருவத்தின் எல்லையை அடைந்து துருவ நட்சத்திரம் ஆகும்பொழுது
1.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அவன் ஆனாலும்
2.உலகிலேயே நஞ்சைத் தனக்குள் உள்ளடக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும்
3.மிக சக்தி வாய்ந்த நட்சத்திரமாக அங்கே அமைந்து விட்டது… அகஸ்தியன் தான்…!
4.அவனைத் துருவ மகரிஷி துருவன் என்றும் சொல்வார்கள்.
ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலை அடைந்தவர்கள் சப்தரிஷி… சிருஷ்டித்துக் கொண்ட ரிஷியின் தன்மை அடைகின்றது.
அதனின்றி விளைந்த உணர்வுகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருப்பதை
1.”எவரெவர் அவர்கள் அணுகி அதை நுகர்கின்றார்களோ”
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு உடலில் உள்ள உணர்வுகளைப் பிளந்து ஒளியின் சிகரமாக மாற்றிக் கொண்டார்கள்.
3.உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
4.அது நமக்கு முன் பரவிக் கொண்டுதான் உள்ளது அனுதினமும்.
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன். ஆகவே நாம் அடைய வேண்டிய எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…?
குருநாதர்:-
உங்களின் தியான ஈர்ப்பின் அருளினால் உங்களின் ஈர்ப்புக்குகந்த போதனையை உணர்த்தி வருகின்றேனம்மா. நீங்கள் இருவரும் செலுத்திய தியானத்தின் ஈர்ப்பிற்கு உங்களுக்கு இப்பொக்கிஷப் பேழையை அளிக்கின்றேன்.
இதிலிருந்து அருளப்பெறும் உண்மைகளை உமதாகப் போற்றி சிவனடியார்கள் என்று உணர்த்திய சித்தர்களும் நாயன்மார்களும் பல பாடல்கள் பக்தி வழி பெற்று எதை அடைய வேண்டும் என்று அதன் நிலை பெற்று இதனை உமதாகப் பிறருக்கு வெளிப்படுத்தாத பொக்கிஷமாய் வைத்துப் பேரின்பப் பெருநிலை என்று அந்நிலையை அடையலாம்.
இன்றைய தியானத்தில் குருநாதர் (சற்குரு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர்) இந்நிலையில் காட்டித் தந்து அருளியவுடன் பேரானந்தம் கொண்டு அவர் தந்த பேழையை நான் பெற்றவுடன்… என் எண்ணத்தில் சில வினாக்கள் தோன்றி அவரிடமே என்ன பயன்…? என்றெல்லாம் வினா எழுப்பினேன்.
பிறகு அவரிடம் அப்பேரின்பப் பெருநிலையை நீங்கள் தந்த அருள் பொக்கிஷத்தை நான் பெற்றால் சுயநலம் என்ற நிலையில் நான் தனிமையாக்கப்படுவேன். அதனால் பெறக்கூடிய பயன் என்ன…? என்ற வினா எழுப்பினேன்.
குருநாதர்:- நம் பூமியில் அதுவும் இவ் இந்திய கண்டத்தில் பல பொக்கிஷங்கள் அரசர்கள் ஆண்ட காலத்திலிருந்து வைக்கப்பட்டு அப்பொருள் உபயோகமற்று நம் பூமியில் உள்ளது.
இன்று உங்களுக்கு என் அருளினால் உலகத்தில் உள்ள எப்பொருள் எங்குள்ளது…? என்று உணர்த்தினால் அதன் பயனை நீங்கள் பெறவும் அதைப் பிறர் எடுக்கவும் உங்களின் தியான அருள் வழி செய்யும்…! என்று உணர்த்தி குருநாதர் பதிலுரைத்தார்.
இவர் எங்களை எங்களின் அருள் நிலையையும் அவர்பால் வைத்துள்ள பக்திக்கும் “பொருளைக் காட்டிச் சோதனைக்குள்ளாக்குகின்றார்” என்பதனை அறிந்து கொண்டோம்.
ஆரம்பத்தில் நீங்கள்தான் பாடத்தில் உணர்த்தியுள்ளீரே…! அரசர்களாலும், அன்றைய மக்களாலும் பூமிக்கடியில் புதைத்து வைத்துள்ள பொக்கிஷங்களை அவர்களின் ஆவியே அங்குள்ள பொழுது அதனை அடைவது நம் சாதனைக்குடையதா…? என்று சபல எண்ணமுடனும் முதலில் வினா எழும்பியது.
அதற்கும் குருதேவர் ஆவி நிலையில் பூதங்களாய் உள்ளவற்றை சப்தரிஷிகள் துணையுடன் எங்கள் துணை கொண்டு இப்பூமியில் எங்கெங்கு எப்படி எப்படி பொருள்கள் புதைக்கப்பட்டுள்ளன எனச் சிலவற்றைக் காட்டி எங்களைச் சோதனைப்படுத்தினார்.
1.அவர் ஒவ்வொரு நாளும் எங்களுக்குச் சில வினாக்களை எழுப்பி அதன் நிலையில்
2.எங்களை எண்ணத்தினால் பல சோதனைகள் வைத்துத்தான் எங்களின் அருள் நெறி தியானத்திற்கு வழிகாட்டித் தருவார்.
எங்கள் குரு வேணுகோபால சுவாமிகள் அடிக்கடி ஈஸ்வரப்பட்டர் அவர்கள் உடலுடன் உள்ள காலத்திலும் இன்றும் அவருக்கு ஏற்படும் சோதனையின் நிலையெல்லாம் ஒரு சில உணர்த்தியுள்ளார்.
இன்று எங்களையும் அதே சோதனைப்படுத்தினார்.
அப்பொழுது
1.”நான் தந்த அருள் பொக்கிஷத்தை நீ ஏற்கவில்லையா…?
2.எங்களின் அருளால் எங்களால் தான் இந்நிலை ஏற்பட்டது என்ற பெயர் நிலைக்கும்.
3.“நாங்களே அருள் தந்த பிறகு நீ எப்படி மறுக்கலாம்…?” என்ற வினாவும் எழுப்பினார்.
உடனே குருதேவர் “உள் நிலையில் இருந்து மட்டும் பதிலளிக்க வேண்டாம். உன் கணவரிடம் இவ்வினாவை எழுப்பு” என்றார்.
அவர் உடனே
1.”இப்பொழுது குருநாதரின் அருளினால் கிடைக்கப்பட்ட ஆத்மீக வழித்தொடரின்
2.ஞான பொக்கிஷத்தின் அருள் நிலையடையும் பக்குவப்பேற்றைத் தந்தால் போதும். பொருளான பொக்கிஷத்தால் எப்பயன்…?” என்றார்.
உடனே குருநாதர் “இதே வட்டத்தில் இருந்தால் போதுமா…? ஜீவாதாரப் பொருள் இருந்தால்தான் உயர்ந்தவனாக உலகம் மதிக்கும்… வாழ்க்கை நடக்கும்” என்று உணர்த்தினார்.
இப்பொழுது நான் எழுப்பிய வினாவிற்கு குருநாதர் கைதட்டிச் சிரித்துவிட்டுச் சில வழிமுறை பாடங்களைத் தந்தார்.
1.பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இவ்வுடலின் பிம்பத்திற்கு
2.“இவ்வுயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற”
3.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வ சக்தியைப் பெறும் பொக்கிஷத்தைப் பெறும் ஞான அருள் பெறுங்களம்மா…!
உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…? என்பதனைத்தான் இன்று உங்களுக்கு சோதனையாக்கிக் காட்டினேன் என்று கூறி அவரால் இன்னும் சில உபதேசங்களும் எங்களுக்கு அளிக்கப்பட்டன.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாமி… சாமியார் சொல்வதை எல்லாம் கேட்கின்றீர்கள் அல்லவா. அதே மாதிரி நல்லதை எண்ணி உங்களால் அதை வளர்க்க முடியாதா…?
1.உங்களுக்கு நான் (ஞானகுரு) பவர் கொடுக்கின்றேன்…!
2.இங்கே உபதேசம் கொடுக்கிறேன் என்றால் அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறுவதற்குண்டான
3.ஊழ்வினை என்ற வித்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) புது வித்தாக எப்படி உருவாக்குகின்றார்களோ அதே மாதிரித்தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
விவசாயப் பண்ணையில் விதைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றார்கள். வாங்கி விதைத்துவிட்டு அதைச் சரியாகக் கவனிக்கவில்லை என்றால் பயிர்கள் பட்டுப் போகின்றது.
விதைகள் கொடுத்தீர்கள்… பட்டுப் போய்விட்டது என்று அங்கே சொல்ல முடியுமா…?
அது போல் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞான வித்தை உற்பத்தி செய்து உங்களுக்குக் கொடுக்கின்றோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்…?
1.அந்த ஆசையை மட்டும் வைத்துக் கொள்கிறீர்கள்
2.செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது இல்லை.
3.எப்படா பலன் கொடுக்கும்…? என்று அதையே எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள்…!
பயிர்களுக்கு அவ்வப்போது தண்ணீர் விட வேண்டும். உரம் கொடுக்க வேண்டும். சாப்பாடு கொடுக்க வேண்டும். அந்தந்தக் காலத்திற்கு அதைச் செயல்படுத்த வேண்டும்.
கஷ்டம் என்று வந்து விட்டாலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
1.இப்படிச் சாப்பாடு கொடுத்தால் கொஞ்சம் ஊக்கமாக இருக்கும்.
2.உங்கள் உணர்வின் எண்ணங்கள் சீராக வரும்
3.அதை வைத்து நீங்கள் நல்லதைச் செயல்படுத்த முடியும்.
“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணும் பொழுது தீய வினைகள் நம் உடலுக்குள் செல்லாதபடி சூரியன் அதைக் கவர்ந்து சென்று விடுகின்றது. நம் ஆன்மா தூய்மை அடைகிறது.
தீய வினைகளை இப்படி நிறுத்திப் பழகவேண்டும்.
கஷ்ட நஷ்டங்களை எண்ணாதபடி… “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்று நுகர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
இன்றைய விஞ்ஞான உலகில் பல பகைமை உணர்வுகளையும் விஷத் தன்மைகளையும் நோய்களையும் உருவாக்கக்கூடிய வினைகள் காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி உள்ளது. அதை எல்லாம் நாம் இழுக்கவில்லை என்றால் சூரியன் எடுத்து மேலே கொண்டு சென்றுவிடும்.
பரமாத்மா தூய்மை அடைகின்றது நமது ஆன்மா தூய்மை அடைகின்றது நம் உடலில் ஜீவான்மா தூய்மை அடைகின்றது. நம்முடைய உணர்வுகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
டிச்சியிலே (சாக்கடை) நாற்றம் வருகிறது. அப்போது அதிலே கொசுக்கள் உண்டாகின்றது. கொசுவை அழிக்க விஷ மருந்துகளை அதிலே தூவிவிட்டுச் சென்று விடுகின்றார்கள். கொசுக்கள் அனைத்தும் இறந்து விடுகின்றது.
ஆனால் கொசுவின் கருவிலிருக்கும் முட்டைகள் அந்த விஷத்தின் தன்மைகளக் கவர்ந்து வெளியே வருகிறது. அப்படி விஷத்தைக் கவர்ந்து வரக்கூடிய கொசு ஒன்று நம்மைக் கடித்தால் போதும். சுரீர்… என்று இருக்கும். அந்த அரிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை.
1.விஷ மருந்தை அடித்துச் சென்றபின் அதற்கப்புறம் உருவாகக்கூடிய கொசுக்கள் இப்படித்தான் வீரியமாக இருக்கும்
2.அரிப்பு அதிகமாக இருக்கும்… உடலில் தடிப்பும் அதிகமாகிறது.
கொசுக்கள் எங்கே சாகின்றது…? இது போன்ற தீமையின் விளைவுகளை நாம் அறிந்திருக்கின்றோமா…?
இதை எல்லாம் மாற்றி அமைக்க
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை மொத்தமாக நாம் எடுத்து
2.அந்த உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது தீமைகளை அகற்றக் கூடிய சக்தி வலுப் பெறுகின்றது…!
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை நாம் அனைவரும் ஏங்கி எடுத்து இந்தப் பூமியில் பரவச் செய்யும் பொழுது பூமியும் தூய்மை அடைகின்றது. ஆகவே இதை நாம் தெளிவாகக் கொண்டு வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆதியிலே அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் அவன் அருகிலே கொசுவோ தேளோ பூரானோ யானையோ புலியோ நரியோ நாயோ எதுவும் வருவதில்லை.
1.காரணம் அவன் உடலிலிருந்து வரக்கூடிய மணம்
2.அந்த மிருகங்களுக்கு எதிர்நிலையாகிறது… அஞ்சி ஓடுகிறது.
தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் பச்சிலைகள் மூலிகைகளின் மணங்கள் அகஸ்தியன் உடலிலே வினையாகிறது. அந்த மணமே வினைக்கு நாயகனாகி அவன் உடலிலிருந்து வெளிப்படுகிறது.
அந்த மணத்தை மற்ற மிருகங்கள் நுகரப்படும் பொழுது அவைகளின் விஷங்கள் ஒடுங்கி விடுகின்றது. அவைகளின் கவனத்தையும் திசை திருப்பி விடுகின்றது. ஆகையினால் மற்ற உயிரினங்கள் அகஸ்தியன் இருக்கும் பக்கம் வருவதில்லை.
1.ஆனால் இந்தக் குழந்தை அவன் ஒன்றும் மந்திரம் கற்றுக் கொள்ளவில்லை.
2.தாய் கருவில் தான் அதைப் பெற்றது.
3.ஏனென்றால் விஷத்தன்மை கொண்ட அந்தத் தாவர இனத்தின் மணங்களை
4.கருவிலிருக்கக்கூடிய குழந்தை கவர்ந்ததால் அதே மணத்தை நுகரும் அணுத்தன்மை இந்தக் குழந்தையின் உடலில் உருவாகி
5.அதனுடைய மணம் சிவமாகின்றது… அதுவே வினையாகிறது.
6.வினைக்கு நாயகனாகத் தீமையை நீக்கிடும் சக்தி பெருகுகிறது அந்தக் குழந்தையிடம்.
இப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்…!
சந்தர்ப்பம்… அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கும் போது அத்தகைய உண்மைகளை உணர்ந்ததனால்… பிறந்த பின்
1.மற்ற விஷத்தன்மை கொண்ட பச்சிலைகளைத் தேடிச் சென்று
2.அவனுடன் அன்று பழகிய மற்றவர்களுக்கும் இதைக் கொடுத்து
3.விஷத்தன்மையிலிருந்து இருந்து மீட்கும் மார்க்கத்தை அவர்களுக்கும் காட்டி வந்துள்ளான்.
அப்படிப்பட்ட அந்த உண்மையான நிலை பெற்றவன் தான் அகஸ்தியன்.
அவன் காடுகளுக்குள் செல்லப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வரக்கூடிய மணங்கள மற்ற உயிரினங்களோ விஷ ஜெந்துக்களோ நுகரும் போது அதனின் விஷத்தை வலுவிழக்கச் செய்துவிடுகிறது. அதனால் அவைகள் இவன் அருகில் வருவதில்லை.
அதே சமயத்தில் மனிதர்களுக்கு வரும் நோய்களையும் மாற்றும் திறன் பெற்றான் அகஸ்தியன்.
1.நோய்கள் எதுவாக இருப்பினும் பல பச்சிலை மூலிகைகளின் துணை கொண்டு
2.மற்றவர்களின் உடல்களை நலமாக்கும் திறன் பெற்றான்.
இப்படி அவனுடைய அனுபவங்கள் பெற பெற அவன் சந்தர்ப்பத்தால் தாவர இனங்கள் எப்படி உருவானது…? சூரியன் எப்படி உருவானது…? பிரபஞ்சம் எப்படி உருவானது…? என்ற நிலையை அவனால் அறிய முடிகின்றது.
அவனுக்குள் விளைந்த உண்மையின் உணர்வுகள் உலகெங்கிலும் இருப்பினும் அகஸ்தியன் கூறிய அந்த உணர்வுகள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது.
மனிதனுக்குத் தேவைப்படும் நிலைகளுக்கு அந்தச் சட்டங்களை மாற்றி அமைத்து விட்டனர்.
1.மனிதன் திருந்தி வாழ்வதற்கு மாறாக தீவினைகளைச் செய்து
2.அதிகமாகத் தீய செயல்கள் கொண்டவராகத் தான் நாம் மாறிக் கொண்டுள்ளோம்.
இது போன்ற நிலையில் இருந்து நாம் தப்ப வேண்டும்.


பல அவஸ்தைகள்… பல இன்னல்கள் பட்டு… “அதிலிருந்து விடுபட்டு விண் சென்றவர்கள் தான் மகரிஷிகள்”
நமது பூமியில் மகரிஷிகளும் சாதாரண மனிதனாகத் தோன்றி
1.சாதாரண மனிதனிலிருந்து மகரிஷியாக வளர்ந்து உணர்வின் சத்தை உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாகவும்
2.துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட அந்த உணர்வின் சக்தியைப் பெற்று சப்தரிஷி மண்டலங்களாகவும்
3.மண்ணுலகில் தோன்றிய மனிதன் விண்ணுலகில் இருக்கின்றார்கள் .
சூரியனிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் கோளாக நட்சத்திரமாக மாறி ஓர் பிரபஞ்சமாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்குள் நமது பூமியும் ஒன்று.
பிரபஞ்சத்தில் உருவாகும் அத்தனை உணர்வுகளும் பூமி தனக்குள் கவர்ந்து நீர் சத்து பிராணவாயு இதைப் போன்ற நிலைகளில் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றதால் இங்கே உயிரினங்கள் வாழ்கின்றன.
இவ்வாறு பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய சக்தியை நமது பூமி எடுத்து… உயிரினங்கள் வாழ்வதற்கும் அது வளர்வதற்கும் அது வளர்ச்சி பெறுவதற்கும் மூல காரணமாக இருப்பது நமது பூமி.
அதிலே தோன்றிய உயிரணு தான் எத்தனையோ கோடி ஜீவணுக்களாக மலர்ந்து வளர்ந்து பல கோடிச் சரீரங்களைப் பெற்று…
1.கடைசியில் மனிதனாகப் பிறந்தபின்
2.மனிதர்களில் பல இன்னல்கள் பல கஷ்டங்கள் பல வேதனைகள் பட்டு அவதிப்பட்டு வந்தாலும்
3.சந்தர்ப்பவசத்தால் அத்தகைய விஷத்தின் தன்மைகளை அழித்து ”மனிதரில் மாணிக்கமாக மகரிஷிகள்”
4.தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்கள்.
நமது உடல் நாம் உணவாக உட்கொள்ளும் நல்ல உணவிற்குள் மறைந்துள்ள நஞ்சினை நீக்கி அதை மலமாக மாற்றுவது போல் ஒவ்வொரு பொருளிலும் மறைந்திருக்கும் நஞ்சினை நீக்கும் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி பெற்றவர்கள் மனிதர்கள்.
இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில்… ஈகை இரக்கம் நல்ல உணர்வு அன்பு பாசம் பரிவு பண்புடன் நீங்கள் செயல்படும் இந்த வேளையில் பிறர் உடலில் அவர்கள் சந்தர்ப்பத்தால் அறியாது உருவாக்கப்பட்ட பல தீய விளைவுகளை நீங்களும் சுவாசிக்க நேர்ந்து… உங்கள் நல்ல உணர்வுகள் அதனால் வலு இழக்க நேருகின்றது.
1.அதை தடுக்கத்தான் ஞானிகள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கச் செய்கின்றோம்.
2.அறியாது சேர்ந்த தீய உணர்வின் ஆற்றலைப் பலவீனப்படுத்தி உணர்வை ஒளியாக மாற்ற செய்யப் பழகிக் கொடுக்கின்றோம்.
அந்த மெய் ஞானிகள் நஞ்சினைப் பிளந்து அதைத் தனக்குள் அடக்கி ஒளியின் சிகரமாக இன்றும் விண்ணுலகில் நிலைத்திருக்கின்றார்கள்.
1.அவர்கள் சென்றடைந்த அந்த எல்லையை அடைவதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய வழியில்
2.தியானப் பயிற்சியாக உங்களுக்கு இந்த உபதேச வாயிலாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

வட துருவம் – ஈஸ்வரன் – புருவ மத்தி
1.தெய்வ சக்தி பெறுவதும் மனிதன் தான்.
2.பேயாக… புழுவாகச் செல்லுபவனும் மனிதன் தான்.
3.மனித எண்ணத்தில் இருந்து தான் மனிதக் கருவின் வளர்ச்சி வாழ்க்கை மண்டலங்களில் வேரூன்றுகின்றது.
நம் பூமியின் ஈர்ப்புக் குணமும் வளர்ச்சி நிலையும் மனித குணத்தின் எண்ணச் செயலுக்குகந்ததாக உள்ளதினால்தான் மனிதன் இங்கு வாழ்கின்றான்.
மனிதன் காணாத அறியாத பல உயிரினங்கள் இப்பூமியில் வாழ்கின்றதென்றாலும் மனிதனின் தொடரிலிருந்து சென்ற வகைகள்தான் அவைகளும்.
இயற்கையில் பல மாற்றங்கள் இருந்தாலும் ஒன்றை ஒட்டி ஒன்று வளர்ந்து பலவாகிச் செயல்படும் நம் பூமியிலே பூமியின் இயற்கைத் தன்மை பலவாக உள்ளதற்கு இப்பூமி ஈர்க்கும் நிலை கொண்டு மனிதனின் தாவரங்களின் எண்ண சுவாச ஈர்ப்பின் நிலை வளர்ச்சி எப்படி மனிதனுக்கு உட்பட்டு வெளிப்படுகின்றதோ அதைப் போன்றுதான் பூமியின் ஈர்ப்பின் நிலைக்கொப்ப அந்தந்த இடங்களில் ஏற்படும் குண சீதோஷ்ண-தட்ப வெட்ப-நிலை என்று பல தடவை முந்தைய நூல்களில் உணர்த்தியுள்ளேன்.
ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.
அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால்
1.கதையாகப் படைக்கப்பட்ட்தன் உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால்
2.“அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”
இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.
இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வட திசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!
“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல் புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.
வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.
நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.
பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்து விட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்…?
நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.
வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?
மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?
அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
1.மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால்
2.வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”
எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.
குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.
1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒவ்வொரு நொடியிலேயும்… எப்பொழுது நமக்குத் தீமை என்று தெரிகிறதோ அது நமக்குள் வராது தடுக்க
1.தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றே ஆக வேண்டும்.
2.அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தோம் என்றால் அதை அடக்கிவிடும்.
பருப்பை வேக வைத்தால் முளைக்காது… சதுர்த்தி…! தீவினையின் உணர்வுகள் நமக்குள் வளராதபடி அப்போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
எதைக் (தீமைகளை) கண்ணிலே பார்த்தோமோ அடுத்த நொடியே அதனுடன் சேர்க்கப்படும் பொழுது அதை அடக்கி… துருவ நட்சத்திரத்தின் சக்தி முன்னாடி வரும்.
1.கண் பார்வை ஒன்று தான் (தீமையை நுகர்ந்ததும்… தீமையை நீக்க நுகர்வதும்)…!
2.ஆனால் அடுத்த கணம் கொண்டு வரும் பொழுது அடுத்த வரிசையில் வருகின்றது
3.அடுத்த வரிசையில் வரப்படும்போது எதிலே பதிவானதோ அதிலேயே சேர்த்துப் பதிவாகின்றது.
அதைத்தான் என்று இராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி மறைவுக்குப் பின்… இராமன் காட்டிற்குச் சென்ற பின்… பரதன் தன் தாயிடம் “அன்றே கொன்றிருந்தால்” எங்கள் சாம்ராஜ்யத்தில் இத்தகைய தீமை வந்திருக்காது…! என்று சொல்கின்றார்.
ஆகவே அந்த அருள் உணர்வை நமக்குள் பதிவாக்கித் தீமைகள் வளராதபடி உடனே செயல்படுத்த வேண்டும்.
ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்படுகின்றோம். இன்ன நோய் என்றும் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இரத்தத்தில் அதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்… “அந்த நிமிடமே…!”
இல்லை என்றால் முன் பகுதி போவது (வேதனையும் நோயும்) முன்னாடி போகும்.
1.உடலில் உள்ள மற்ற தீமையான அணுக்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்… அந்த உணர்ச்சிகள் அதிகமாகும்.
2.நல்லதை எண்ண விடாது நம்மைத் தடுத்துக் கொண்டே இருக்கும்.
அதனால் தான் “அடுத்த கணமே… அப்போதே… அன்றே கொன்றிருந்தால்…” என்று பரதன் சொல்வதாக இராமாயணம் காட்டுகின்றது.
சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ கோபமோ ஆத்திரமோ வந்தால்
1.அடுத்த கணமே “பிரேக்…” போட்ட மாதிரி
2.அவைகளை நிறுத்த வேண்டும்.
ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும. அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நோயுற்றவரின் உடலில் படர வேண்டும். அவர்கள் உடல் நோய் நீங்க வேண்டும். அவர் உடல் நலம் பெற வேண்டும். அவர் நல்லவராக வேண்டும். குடும்பத்தில் உயர்ந்த நிலை பெற வேண்டும். மலரைப் போன்ற மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எத்தனை வேண்டுமென்றாலும் அடுத்து நல்லதுகளைச் சொல்லலாம்.
உதாரணமாக ரோட்டில் செல்கிறறோம். இரண்டு பேர் காரசாரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்… சண்டை போடுகிறார்கள்…!
பார்த்தவுடனே நமக்கும் அந்த ஆத்திரம் வருகிறது… “இப்படிப் பேசுகிறார்களே…” என்று கொதிப்பு வருகிறது.
அதை உடனே அப்போதே நிறுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதை எண்ணி எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பின் அந்த இரண்டு பேரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் அந்த சக்தி அருள் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்
1.அவரிடம் சொல்லக் கூடாது
2.உங்கள் மனதிலே உடலிலே அந்தத் தீமை உருவாகதபடி தடுத்துப் பழக வேண்டும்.
ஆனால் இப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் இந்த ஆத்திரம் வரும்.
1.அந்த உணர்வு கருவாகி விட்டது என்றால் அணுவாகிவிடும்
2.அணுவின் தன்மை அடைந்தால் மலமாகிறது… மலம் நம் உடலாக மாறிவிடும்.
3.அதனின் வளர்ச்சி அதிகமானால் இரத்தக் கொதிப்பாக உடலில் மாறும்.
இதை எல்லாம் தடுத்துப் பழக வேண்டும் என்பதற்காகத் தான் உங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.


உங்களைக் காக்கும் ஆற்றல்மிக்க சக்தி
இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது
1.கூட்டுத் தியானத்தின் மூலமாக மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
2.அதைப் பதிவு செய்வதற்குத் தான் பௌர்ணமி தியானமும் மற்ற அனைத்துமே.
மனிதனின் உணர்வில் கலந்த நஞ்சினை மாற்றி உணர்வுகளை ஒளியாக மாற்றி முதல் மனிதன் அகஸ்தியன் துருவத்தை அடைந்து துருவத்தின் சக்தியைத் தனக்குள் பெற்று ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகம் சென்றது. அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரம் ஆனது
அவர்கள் உடல்களில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட நஞ்சினை வென்றிடும் உணர்வினைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டு உள்ளார்கள்
அங்கிருந்து வெளிப்படும் அந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை நாம் பருக வேண்டும் என்றால்
1.அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நம் உடலில் பதிவு செய்த பின்பு தான்
2.அந்தச் சக்தியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.
இப்பொழுது ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டால் அதைப் பத்து வருடம் கழித்து எண்ணினால் கூட நமக்குள் அந்த எண்ணங்கள் உடனே கோபமும் ஆத்திரமும் வெறுப்பும் இந்த உணர்ச்சிகள் உணர்வுகள் தூண்டப்படுகின்றது.
இதைப்போன்று தான் மகரிஷிகளின் அருள் சக்திகள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்ட பின் ஒவ்வொரு நிமிடமும் மனிதன் வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகள் நமக்குள் அழுக்காகச் சேர்வதை நாம் மாற்றி அமைக்க முடியும்.
கூட்டு தியானங்களின் மூலமாக அனைவரும் நலம் பெற வேண்டும் என்று பதிவாக்கிய ஆற்றல்மிக்க சக்திகள் இங்கே பரவி உள்ளது அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணி “வேறு எண்ணங்கள் இல்லாதபடி”
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.என் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்வேன்
3.என்னை அறியாத வந்த இருளை நீக்கச் செய்வேன்
4.மகரிஷிகளின் ஆற்றலால் இந்த மனித வாழ்வில் நலமும் வளமும் பெறுவேன்
5.என் தொழிலில் மன மகிழ்ச்சி அடைவேன்
6.என் சொல் எல்லோரையும் நலம் பெறச் செய்யும்
7.என் பார்வை அனைத்தையும் நலம் பெறச் செய்யும்
8.என்னைப் பார்ப்பவர்களை அது நல்லவராக்கும் என்ற உணர்வுடன் நீங்கள் ஏங்கித் தியானித்தால் போதுமானது.
9.இந்தக் காற்றிலே பரவி உள்ள அந்த அருள் உணர்வுகள் “உங்களைக் காக்கும் உணர்வாக விளையும்…”
ஏனென்றால் அனைவரும் நலம் பெறும் சக்தியாகத் திகழ வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானம் இருக்கின்றேன்… தவம் இருக்கின்றேன்
இதை மனதில் வைத்து நீங்கள் அனைவருமே தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று… அவ்வப்போது ஆத்ம சக்தி செய்து தீமையை நீக்கும்படி… உணர்வுகளை ஒளியாக மாற்றும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

நம் எண்ண ஈர்ப்பைச் சித்தன் பால் தந்தோமானால்… மெய் ஞானம் பெறலாம்
சூரியனும் சூரியனில் இருந்து வெளிவரும் சக்தி அலையை நம் பூமியும் எடுக்காவிட்டால் பூமியின் வளர்ச்சி… நிலையாய்த் தோன்றி இருக்காது.
வளர்ந்த பின்னும் அதன் ஈர்ப்பில் பூமி எடுத்துக் கொள்ளும் நிலை தொட்டுத்தான் இன்றளவும் உருண்டோடி பலவான ஒன்றாகி… ஒன்றில் பலவாகி வாழுகின்ற இப்பூமியின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அதனதன் ஈர்க்கும் செயல் முறைக்கொப்ப வளர்ச்சி நிலையும் எண்ண நிலையும் அததுவே தான் எடுத்துக் கொள்கிறது.
மனிதனின் ஈர்ப்பு நிலையின் குண நிலை அமைவதுவும் அவன் எடுத்துக் கொண்ட ஆரம்ப வளர்ச்சி நிலை அமில குணத்தின் தொடரினால் ஒவ்வொருவரின் அறிவு நிலையும் அதற்குகந்த செயலாற்றும் திறமையும் அதன் வடிவ வட்டத்துக்குகந்த எண்ண ஓட்டத்தின் ஈர்ப்பை எதில் அவன் அகிகப்பட்டு வளர்த்துக் கொள்கின்றானோ அதன் வளர்ப்பு அமிலத்தின் கூட்டு நிலையின் எண்ண மோதலுடன் இவன் எண்ண மோதலுக்குகந்த மற்ற ஆவிகளின் எண்ண மோதலையும் வளர்ச்சியுடன் ஈர்க்க வேண்டியுள்ளது.
ஒரு மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல் குணமும், உடல் உறுப்பும், உருவமும் இருந்திடும்.
1.எந்த ஆண்டவனும் எந்த ஒரு தனி மனிதனுக்கும் ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை.
2.எல்லாமும் ஒன்றாக ஒன்றிலே எல்லாமும் உள்ள பொழுது எதன் அடிப்படை சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ
3.அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.
ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது… அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின் வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் ஒரு மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப ஆவிகளின் தொடர்பு நிலையும் ஏற்படுகின்றது.
மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அவ் இயந்திரம் எடுத்து ஓடுகின்றது.
அதைப் போல்
1.எதன் அடிப்படையில் எதன் விகித நிலைக்கொப்ப ஒவ்வொரு ஆத்மாவின் எண்ண சுவாசம் உள்ளதோ
2.அதன் சக்தி நிலையைத் தான் அவன் பெற முடியும்.
அதன் செயலில்தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி ஆண்டவனைப் பல கோயில் ஸ்தலங்களுக்குச் சென்று வணங்கி வந்து பூஜித்து சக்தி பெறுவதல்ல.
எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இக்காற்றின் அமிலத்திலிருந்து நமக்குகந்த அமிலத்தை நாமாக எடுத்துக் கொள்ளலாம்.
1.இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும் இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில்
2.நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த சித்தரின் பால் நம் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்
3.உடலுடன் மனித உலக வாழ்க்கையில் பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும் இவ்வாழ்க்கையில் இருந்து பெற முடியாத ஞானத்தை
4.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை சித்தர்பால் செலுத்தி
5.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
6.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும் வழிமுறைப் பாதை தெரிந்து கொள்ளலாம்.
7.பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய வழியில் எத்தடங்கலும் இருக்காது.
பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி ஓ…ம் என்ற ஒலியுடன்… சித்தன் பால் நம் எண்ண ஈர்ப்பு சக்தியை நாம் தந்தோமானால்… “மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்…”
ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.
1.ஞானிகளும் சப்தரிஷிகளும் தம் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு இருக்காவிட்டால்
2.நம் பூமியில் மனிதன் ஞானம் இன்று, ஞானமும் கண்டிருக்காது… விஞ்ஞானமும் கண்டிருக்காது.
3.இன்றைய காலகட்டத்தில் நம் சித்தர்களின் ஒளி சக்திகள் இவ்வுலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
மனித ஞானம் எல்லாமே ஞானத்தின்பால் செல்லும் வழி முறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தான் வலுவான விந்தை காணத் துடிக்கின்றது.
மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுத்தான் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு மோதி உயிர்ப்பலிகள் அதிகமாகி… ஆவியின் சூழ்ச்சியில் அல்லலுக்குகந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் என்பதனை அறியாமல் அல்லவா வாழ்கின்றான் இன்றைய மனிதன்.
தனதாக உள்ளது எது…? என்பதுவும் இம் மனித ஞானத்திற்கு புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை. காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுளுள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து வாழும் மனிதன் தானாக வாழ்கின்றானா…? தனது என்ற பேராசைக்கார மனிதன்?
1.ஒன்றின் துணையில்லாமல் ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்… நான் என்ற நானாக வாழுகின்றானாம்.
2.ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த மனித வாழ்க்கையில் நம்மை இருள் சூழச் செய்யும் பிற உணர்வுகளைத் தாழ் பணியச் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும்.
1.மெய் உணர்வின் தன்மை பெற நம் நினைவை மேலே செலுத்தினால் “இமயமலை…”
2.உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய தகுதி பெற்றது நம் உயிர்.
ஆனால் கீழே நினைவுபடுத்தும் போது அந்தச் செயலின் இயக்கத்தில் வாழ்க்கையை ஓட்டலாம். ஆக வாழ்க்கைக்கு நம் உடலின் உணர்வு கொண்டு செயல்பட்டாலும்
1.இடர்கள் வந்து நம்மை ஆட்டிப் படைக்கும் சந்தர்ப்பம் எல்லாம்
2.ஈஸ்வரா… என்று நமக்குள் உச்சியிலிருக்கும் உயிரை நினைவு கொண்டு
3.அவனின் துணை கொண்டு நினைவை அங்கே செலுத்த வேண்டும்.
இது தான் கீதையின் தத்துவம் குருக்ஷேத்திரப் போர்.
வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள் மகாபாரதப் போராகப் பலருடைய எண்ணங்கள் நம்மிலே மோதுகிறது. அப்போது நம் நல்ல சிந்தனைகள் செயல்படாத நிலையில் நாம் சுவாசித்த உணர்வுகள் பதட்டமாகிறது.
அத்தகைய பதட்டம் ஏற்பட்டால் ஒன்றை அழிக்கக்கூடிய எண்ணம் உருவாகி நல்ல பொருள்களை அழிக்கும் நிலைகள் வருகின்றது.
ஆனால் ஞானிகளோ தீமை செய்யும் உணர்வைத்தான் அழிக்கச் சொன்னார்கள்.
1.நம்மை அறியாமல் வரும் தவறு செய்யும் உணர்வுகளை
2.அதைச் சுவாசிக்கும் நிலையை நாம் மாற்ற வேண்டும்.
பிறர் செய்யும் தவறான உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்து நம்மை அறியாது இழி நிலையான செயல்களைச் செயல்படுத்த வைக்கும் அந்த உணர்வின் தன்மையை மாற்ற ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்.
கண்ணின் புலனறிவு கொண்டு நம் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வின் துணை கொண்டு அந்த உணர்வை நாம் எடுக்கும் பொழுது இது குருக்ஷேத்திரப் போர்.
புற நிலையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது பிறருடைய எண்ணங்கள் நம்மை வெறுப்போ பயமோ ஆத்திரமோ மற்ற நிலைகள் அதனுடைய செயலுக்கு ஆளாக்கிவிடுகிறது.
அக்கணமே ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி இங்கே போர் நடத்த வேண்டும்.
நாம் எவ்வளவு பெரிய வல்லமை கொண்டவராக இருந்தாலும் ஒரு விஷத்தின் ஆற்றல் நம்மை ஆட்டிப் படைத்துவிடும்.
ஒரு சிறு எறும்பு கடித்து விட்டால் உடனே நாம் கை கால்களை உதறுகின்றோம். அதே போன்று அந்தக் கடுகடுப்பான விஷத்தின் ஆற்றல் நம் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் போது உடல் முழுவதும் பதட்டம் ஆகிறது. நல்ல சொல்களைச் சொல்ல முடியாதபடி செயலிழக்கக் கூடிய நிலையும் வந்து விடுகின்றது.
இதைத் தடுப்பதற்கு எந்த நிமிடம் ஆனாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்
2.மெய் ஞானிகளின் அருள் வழி நாங்கள் நடக்க வேண்டும்
3.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
4.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று
5.எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்போதெல்லாம் இத்தகைய குருக்ஷேத்திரப் போராக மாற்றுங்கள்.
அந்த மகரிஷிகள் அருள் ஆற்றலை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம்.


“தயவு செய்து” உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்
நீங்கள் எப்பொழுது தபோவனம் வந்தாலும் சரி…
1.எந்த நன்மைகளை எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தீர்களோ
2.அதை எண்ணி ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி இருந்தால் போதுமானது.
உங்கள் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும்… அவர்களுக்கு நல்ல படிப்பு வர வேண்டும்… எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும்… விவசாயம் செழித்து வளர வேண்டும் என்று எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ ஒரு பத்து நிமிடம் மகரிஷிகளை எண்ணித் தியானித்த பின் இதை எண்ணுங்கள்.
மறுபடியும் ஒரு பத்து நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி…
1.மீண்டும் அந்த நல்லதுகளை எண்ணினீர்கள் என்றால் இந்த உணர்வுகள் விளைந்து
2.உங்கள் நினைவலைகள் உங்கள் கஷ்டங்களை நீக்க இது உதவும்.
3.உங்களுக்கு இதெல்லாம் கிடைக்க வேண்டும் என்று தான்
4.நான் எங்கிருந்தாலும் தியானம் செய்து தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.
ஆகவே எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… என் கஷ்டம் என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது… என்று “அதை இறுக்கிப் பிடித்துக் கொள்ளாதீர்கள்…”
எண்ண வேண்டிய சரியான முறை எது என்றால்…
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் கஷ்டம் எல்லாம் நீங்கி தொழில் வளம் பெருக வேண்டும்
2.நாங்கள் மன பலம் பெற வேண்டும் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும்
3.எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும் என்று கேட்டால்
4.இது எல்லாம் உங்களுக்கு நடக்கும் என்று நான் (ஞானகுரு) ஒரு சொல்லிலே உங்களுக்கு ஆசி கொடுக்க முடியும்.
ஆனால் இவ்வளவும் சொல்லி நல்லது நடக்க வேண்டும் என்று நான் கொடுத்தாலும்… அடுத்தாற்போல் என் பேரன் சரியாகப் படிக்கவில்லை அவனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகின்றது என்று “நான் சொன்ன வாக்கை எடுக்காதபடி இதைச் சொல்கின்றார்கள்… “கஷ்டத்தையே பிடித்துக் கொள்கின்றார்கள்…”
போன தடவை உடல் நலம் சரியில்லாதபடி இங்கே வந்திருப்பார்கள் இப்பொழுது முக்கால்வாசி நன்றாக இருக்கும். ஆஅனால் இப்போது அங்கிருந்து வந்த உடனே என் மேல் வலி என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று கேட்கின்றார்கள்
1.சாமி…! போன தடவை வந்த போது நீங்கள் சொன்னபடி தியானம் செய்தேன் இப்போது பரவாயில்லை
2.இன்னும் கொஞ்சம் இருப்பது நீங்க வேண்டும் அந்த நோய் பூரணமாக விலக வேண்டும்
3.நான் நன்றாக வேண்டும் என்று தான் நீங்கள் கேட்டுப் பழக வேண்டும்.
அந்த மனது தான் உங்களுக்கு வரவேண்டும்.
மகரிஷிகளின் அருள் ஒளியால் நாங்கள் உடல் நலம் பெற வேண்டும்… உடல் வலி நீங்க வேண்டும் என்று தான் நீங்கள் கேட்டுப் பழக வேண்டும். இதைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் பழக்கிக் கொடுக்கிறோம்.
ஏனென்றால் இதற்கு முன்பு… கோவிலுக்குச் சென்று அழுது புலம்பி கஷ்டத்தைச் சொல்லித் தான் வேண்டிப் பழகி இருக்கிறோம்.
அந்த பழக்கத்தை எல்லாம் விடுத்து விட்டு கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நான் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இப்படி நீங்கள் கேட்டுப் பழகுதல் வேண்டும்.
இங்கே கூட்டுத் தியானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு அரை மணி நேரமாவது நல்லதை எண்ணித் தியானம் செய்யுங்கள் உங்கள் மனதில் அமைதி கிடைக்கும் மன பலம் கிடைக்கும் “நீங்கள் எண்ணிய நல்லது நிச்சயம் நடக்கும்…”
1.இந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும் என்று தான் தியான மண்டபத்தைக் கட்டியது.
2.தயவு செய்து உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.
ஞானிகள் சொன்னது நம் உயிர் கடவுளாக இருக்கின்றது… நாம் எண்ணிய எண்ணங்கள் இறையாகின்றது… உடலுக்குள் இறையான பின் அந்த உணர்வுகள் செயலாகும் போது தெய்வமாக இயக்குகின்றது.
எந்தக் குணத்தை எண்ணி எடுக்கின்றோமோ அது எப்படிச் செயலாக்குகிறது என்பதைத் தான் ஆலயங்களில் வைத்துக் காட்டியுள்ளார்கள். அதை எல்லாம் மனதில் வைத்து… அந்த உயர்ந்த நிலைகளை நீங்கள் எண்ணி…
1.நான் கொடுக்கக்கூடிய நல்ல வாக்குகளை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி
2.அருள் வழியிலே அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

குப்பையில் வளர்கின்றது “நல்ல சக்தி மணிகள்”
மாற்றத்தின் வளர்ச்சித் தொடர் அலையினால் இக்காற்றுடன் அதன் சக்தி நிலையும் வளர்ச்சியுறும் நிலையிலிருந்து கூடப் போகின்றது.
காற்றிலிருந்துதான் அத் தீய சக்தி அதன் ஈர்ப்பில் வளர்கிறது. அதனால் இனம் தான் அத்துடன் கலக்கப் பெறுகிறது என்று உணர்த்தியுள்ளீரே… “வளர்ச்சியுறும் நிலை” என்றால் என்ன…? என்று அடிப்படை வினா எழும்பலாம்.
சூரியனிலிருந்தும் பால்வெளி மண்டலத்திலிருந்தும் நம் பூமியின் ஈர்ப்புக்கு வரும் குண அமிலமானது பூமியின் சுவாசத்தில் இழுபட்டு அது வெளிப்படுத்தும் நிலையுடன் பூமியுடன் ஐக்கியப்பட்டு அதன் உயிரணுத் தோன்றி அதன் வளர்ச்சியில் வளரும் செழிப்பிலிருந்து வெளிப்படும் அமில குணங்களின் நிலை வேறுபடுகிறது. அழுத்தமான அமில குணங்கள்தான் சூரியனிலும் பால்வெளி மண்டலத்திலும் உள்ளன.
சுவாசத்தில் பட்டு வெளிப்படும் நிலையில் வளரும் இயற்கையிலிருந்து வெளிப்படும் அமிலத்தின் மாற்றம் உண்டு.
1.இப்பொழுது நாம் பலதரப்பட்ட உணவு வகைகளை உண்டு மீதியைக் குப்பையாக்குகின்றோம்.
2.அக்குப்பையில் இருந்து அதன் ஈர்ப்பில் உள்ள சத்துக்களை மட்டும் எடுத்து உன்னத மணிகளைக் காண்கின்றோம்.
இப்படி இது நாள் வரை அமில குணங்களையும் உயிரணுக்கள் சுவாச நிலைகள் மண்டலத் தன்மைகள் ஒவ்வொன்றின் நிலையையும் உணர்த்தி வந்தோம் என்றால் எதன் அடிப்படைப் பொருள் காண…?
1.நம் உடலில் பல வகை அமிலங்கள் கொண்ட பல கோடி உயிரணுக்கள் உள்ளன.
2.இதிலிருந்து எல்லாம் நம் ஞான மணியை ஈர்த்து ஒளி பெறல் வேண்டும்.
குப்பையில் வளர்கின்றது நல்ல சக்தி மணிகள்.
1.இவ்வுடல் என்ற குப்பைக் கூட்டிலிருந்து நம் மணிக்கான உரம் எடுத்துக் கொள்ள வேண்டிய செயல் முறையை
2.இத்தியானம் என்ற வழிபாட்டு முறையினை ஏற்படுத்திக் கொண்டால் பக்குவச் செயல்படுத்தி
3.நம் உடலில் உள்ள பல அமிலங்களில் கலந்துள்ள பல கோடி உயிரணுக்களில் இருந்து நம் ஞானத்தின் வளர்ச்சிக்கு சத்தெடுத்து
4.தெய்வ ஞானம் பெற்று… ஒவ்வொரு மனிதனும் “தான் அடைய வேண்டும் என்று எண்ணும்…” உன்னத நிலை எது…? என்று அறிந்து ஒளி பெறலாம்.
சக்தி நிலை சகலத்திலும் இருந்தாலும் அதற்குகந்த வழி நிலையில்தான் அச்சக்தி நிலை வளர்கின்றது. மாற்றவோ திருத்தவோ மனித ஞானத்திற்கு வழி தெரிகின்றது.
இருந்தாலும்… தன் ஞானத்தைப் பலவற்றிலும் கலக்கவிட்டுள்ள மனிதன் தன்னைத் தானே உணர்வும் ஞான வழிபாட்டினை அறியாமல் வாழுகின்றான். கால நிலையின் குறைவை… இப்பொழுது உள்ள மனித வாழ்க்கையின் சந்தர்ப்ப காலத்தைப் பயன்படுத்தி வாழுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அன்றாட வாழ்க்கையில் எந்த நிமிடமாக இருந்தாலும் சரி… யாராவது நம்மிடம் சங்கடமாகப் பேசினாலும் சரி… யாம் (ஞானகுரு) சொல்லிக் கொடுத்த ஆத்ம சக்தியை நீங்கள் கடைப்பிடியுங்கள்.
1.ஈஸ்வரா…! என்று வானை நோக்கி எண்ணுங்கள்
2.அந்தச் சங்கடமான உணர்வுகளை அதை வைத்து மறைத்துக் கொள்ளுங்கள்.
“ஈஸ்வரா…’ என்று அதை மறைக்கச் சொல்வது என்ன…?
மனிதனுடைய உணர்வின் அலைகள் “இங்கே இழுக்கின்றது…” கடிகாரம் போன்று இருக்கின்றது. உடல் முழுவதற்கும் இருப்பதை இது முன்னாடி குவித்துக் கொடுக்கும்.
அப்பொழுது ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி… அந்த நினைவை மகரிஷியின் அருள் சக்தி பெற… வானை நோக்கி அங்கே கூட்ட வேண்டும். இல்லை என்றால் இதுவும் கலந்துவிடும். (நல்ல உணர்வுடன் பிறரின் உணர்வும் கலந்துவிடும்)
ஆகையினால் எண்ணத்தை வானிலே செலுத்தி
1.அங்கிருந்து எடுக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் நம் கையிலேயும் பாய்கின்றது.
2.ஈஸ்வரா… என்று ஏங்கி எடுக்கப்படும் போது தீமைகள் இங்கே அமுங்கிவிடுகிறது.
3.ஆகவே அந்த மெய் ஒளியின் தன்மையை “ஈஸ்வரா…” என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
காரம் மிளகாய் உப்பு கசப்பு இதையெல்லாம் தனித்தனியாக உட்கொண்டால் சுவையற்றதாக இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம் சமமாக இணைத்துச் சுவையாக ஆக்கும் பொழுது நாம் ரசித்துச் சாப்பிடும் நிலை வருகின்றது.
அதைப் போல் தான் எத்தனை பேர்… எவ்வளவு சங்கடமாகப் பேசினாலும்… எதிர்த்துப் பேசினாலும் கூட
1.நிச்சயம் அவர்கள் நல்லது பெறுவார்கள்… நல்லது செய்வார்கள்…
2.”என் எண்ணம் அவர்களுக்கு நல்லதைச் செய்யும்” என்று இந்த உணர்வை ஊட்டிக் கொண்டே வாருங்கள்.
என் கடையில் வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை…! என்று சொல்லாதீர்கள்.
என்னிடம் சரக்கு வாங்குவோர் அனைவரும் நலம் பெற வேண்டும்.. அவர்கள் வளம் பெறுவார்கள்… மகரிஷியின் அருள் ஒளி அவர்களுக்குக் கிடைக்கும். என்னிடம் பொருள் வாங்குவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வாருங்கள்.
உங்கள் வியாபாரம் நன்றாகிக் கொண்டே இருக்கும்.
ஒரு தொழிலே புதிதாகச் செய்கிறோம் என்றால் அங்கே தொழில் செய்பவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும். அவர்கள் எதை உற்பத்தி செய்கின்றார்களோ அதைப் பயன்படுத்துபவர் எல்லோருக்கும் நல்லதாக வேண்டுமென்று இதைத் தியானம் செய்யுங்கள்.
ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு அழகாகக் கட்டுகின்றோம். நம் ஆறாவது அறிவின் தன்மை அழகான கட்டிடங்களைக் கட்டச் செய்கிறது.
ஆகவே அந்த ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கக்கூடிய பிற உணர்வுகளைத் தடைப்படுத்த அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வை உடலுக்குள் செலுத்துங்கள்.
1.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி
2.அந்த ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
நமது குருநாதர் காட்டிய மேல் நோக்கிய சுவாசம் இது தான். அதன் மூலம் நாம் விண்ணின் ஆற்றலைப் பெறலாம் அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.


“எனது குருவின் ஆசையை” நீங்களும் பெற வேண்டும்
மனிதன் என்ற நல்ல குணங்கள் இல்லாதபடி அரக்க உணர்வுகள் கொண்டு அழித்திடும் உணர்வுகளாக வளர்ந்து வரும் இக்காலங்களில்
1.நான் அறிவில்லாத மூடனாக இருந்தாலும் மகா ஞானிகள் உணர்வுகள் இயக்கப்பட்டு
2.இந்த தத்துவத்தை அந்த ஞானிகளின் உணர்வலைகளே பேசுகின்றது.
3.நான் பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
இயற்கையின் உணர்வின் அலைகளை அன்று வென்று… தனக்குள் ஒளியாக மாற்றிச் சென்ற மெய் ஞானிகள் உணர்வுகளே அது பேசுகின்றது.
எனது குருநாதர் பித்தனைப் போன்று இருந்தாலும்… சாக்கடைக்கு அருகில் எம்மை அமரச் செய்து… இவ்வளவு பெரிய தத்துவங்களையும் எனக்கு உணர்த்தினார்.
1.அதனை நான் கேட்டறிந்த பின் அவரின் உணர்வுகள் பதிவாகி
2.அவனை நினைவு கொள்ளும் போதெல்லாம் இந்த உணர்வின் நினைவாற்றல் வந்து
3.என்னை அறியாத வந்த இருளை நீக்கவும்
4.இதைக் கேட்டுணர்வோர் அவர்களை அறியாத வந்த இருளைப் போக்கும் உணர்வாகவும் அது வெளிப்படுகின்றது.
இந்த மூச்சலைகளை எடுத்து அந்த உணர்வின் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில்
1.என் குருவின் ஆசையை நீங்களும் பெற வேண்டும் என்ற நோக்கிலே
2.அதன் வழியில் தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
நாம் யாரும் தவறு செய்யவில்லை… சந்தர்ப்பத்தின் நிலைகள் நாம் பரிவுடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் நமக்குள் அறியாது வரும் அத்தகைய தீமைகளை நீக்க வேண்டும் என்ற நோக்கத்திற்குத் தான் இதைச் சொல்வது.
கையிலே அழுக்குப் பட்டால் கையைக் கழுவி விடுகின்றோம் உடையில் அழுக்குப் பட்டால் துவைத்து விடுகின்றோம்.
இதைப் போன்று மனித வாழ்க்கையில் உயர்ந்த பண்பு கொண்டு பிறருக்குச் செய்த சேவையின் தன்மையை “முழுமையாக அனுபவிக்க வேண்டும்” என்றால்… நமக்குள் கேட்டறிந்த தீமைகள் உடலுக்குள் சேராத வண்ணம் அந்த ஞானிகளின் உணர்வலைகள் சேர்ப்பிக்கப்பட்டு… அந்த உணர்வால் துன்பங்கள் நீங்க வேண்டும் என்று எப்போது நாம் சொல்கின்றோமோ அப்போது மனிதன் என்ற முழுமை அடைகின்றோம்.
1.நம்மை அறியாது பட்ட அழுக்கையும் துடைக்கின்றோம்
2.ஞானிகள் அருளாற்றல் நமக்குள் பெருகுகின்றது
3.நம் எண்ணம் கூர்மையாக விண்ணை நோக்கிச் சென்றடைகின்றது.
அந்த விண்ணின் உணர்வுகள் சேரும் பொழுது கூர்மை அவதாரமாக…
1.எதைக் கூர்மையாக எண்ணி இந்த மனித வாழ்க்கையில் தன்னை இயக்கிய தீமைகளை வென்று ஞானிகள் எவ்வாறு விண் சென்றனரோ
2.அந்த உணர்வுகள் சிறுகச் சிறுக விளைந்து நமது உடலிலிருந்து உயிரான்மா பிரிந்து செல்லும் பொழுது
3.இதிலே விளைந்த உணர்வின் ஆற்றல் கொண்டு “விண்ணுலகில் அவர்கள் இருக்கும் இடத்திலே” நாம் சேர்கின்றோம்.
4.அந்த மெய் ஞானிகளுடைய அருள் வட்டத்தில் நாம் இணையும் பொழுது
5.நஞ்சினை வென்று தனக்குள் படைத்து வெளியிட்ட மூச்சலைகளை நாம் உணவாக எடுத்து
6.ஒளியின் சுடராக அவரின் ஈர்ப்பு வட்டதில் என்றும் நிலையாக இணைந்து வாழ முடியும்.
அதற்குத்தான் இந்த உபதேசம். ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் உணர்வை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
திட்டியவனைப் பதிவு செய்த பின் எண்ணும் பொழுது அவருடைய நினைவாற்றல் வந்து எப்படி உங்களுக்குள் கொதிப்படையச் செய்கிறதோ அதைப் போல உங்களுடைய நினைவுகள் எத்தகைய நிலையில் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது உங்கள் வாழ்க்கையிலே வந்த துன்பங்களை நீக்கி நல்லதைப் பெற வேண்டும் என்று ஏங்கி வந்த உங்களுக்குள் இந்த உணர்வுகளைப் பதியச் செய்கிறேன்.
எந்த ஈர்ப்புடன் இதைப் பதிவு செய்கின்றீர்களோ அந்த உணர்வின் எண்ணம் கொண்டு நீங்கள் நினைக்கும் பொழுது
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் சென்று
2.உங்களுக்குள் இருள் சூழச் செய்யும் தீமைகளை நீக்கிவிட்டுப் பொருள் காணும் உணர்வாக விளைந்து
3.ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காத்திடும் எண்ணமாக விளைந்து நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் ஈசனாக இயக்கி
4.அந்த உணர்வினை உங்கள் உடலுக்குள் வினையாக ஒளி பெறும் தன்மையாக ஒளிச்சரீரமாக மாற்றும் நிலையும்
5.அதுவே ஒளி பெறும் சிவனாக “இந்த உடலை நோயற்ற உடலாக உருவாக்கும் நிலையும்”
6.நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி “பேரண்டத்தின் ஆற்றலுடன் இணையச் செய்து”
7.மனிதனை முழுமை அடையச் செய்யும் “அந்த உயிரின் நிலைகள் கொண்டு நாம் இணைந்து செயல்படுவோம்” என்று வேண்டிக் கொள்கின்றேன்.

துருவப் பகுதியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதிகப்படியான மாற்றங்கள்
இது நாள் வரை உள்ள ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பில் உணர்ந்த உண்மைக்கு மேலும் வலுக்கொண்ட பல நிலைகள் இன்று கூடி வருகிறது.
நம் பாட முறையில் யான் உணர்த்திய நிலையில் நம் பூமியின் சுவாச நிலை பெற்று வாழும் உயிர் ஆத்மாக்கள் மற்ற கோள்களில் சென்று வாழ முடியாது… இப்பூமிக்குகந்த ஈர்ப்பு குண அமிலத்தைத்தான் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தி வாழ்கின்றது என்பதனைப் பல இடங்களில் உணர்த்தியுள்ளேன்.
நம் பூமியின் ஓட்டப் பாதை சிறிது மாறு கொண்டுள்ளதாகவும்… மாறு கொண்ட அமிலங்களும் ஓடும் ஓட்டமுடன் நம் பூமியின் ஈர்ப்பு காற்று மண்டல நிலையுடன் சிக்குண்டு மோதிச் சிதறும் நட்சத்திர மண்டலங்களின் அமில குணமும்… “முந்தைய நாட்களைக் காட்டிலும் மாறு கொண்டு வருகின்றது” என்று உணர்த்துகின்றேன்.
மாறு கொண்ட அமிலத்தைத் தான் நம் பூமி ஈர்க்காதே…! அப்படியிருக்க நம் பூமியின் சுவாச நிலை கெடுவதேன்…? என்ற வினா எழும்பலாம்.
1.நம் பூமியின் ஈர்ப்பு வட்டக் காற்று மண்டல நிலைக்கும்
2.நம் பூமியின் வட்டத்திற்கு மேல் காற்று மண்டலத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும்
3.நம் பூமியின் காற்று மண்டல ஈர்ப்பு நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் தான்
4.பல சக்தி நிலைகளும் அமில நிலைகளும் மாறுபட்டு நம் பூமியின் ஈர்ப்பிற்கு வருகின்றன.
நம் பூமி ஈர்த்து விடும் சுவாச அலையும் பால்வெளி மண்டலத்தில் இருந்து நம் பூமிக்கு வரும் (பூமியின் ஈர்ப்பிற்கு வரும்) அமில குணங்களும் இவ்விடைப்பட்ட நிலையில் சுத்திகரிக்கப்பட்டுத் தான் (FILTER) நம் பூமியின் ஈர்ப்பிற்கே வருகிறது.
அப்படி இருக்க மாறு கொண்ட ஓட்ட கதியில் அமில குணங்கள் அதிகப்பட்டு வருகிறது என்றால் அதனின் பொருள் என்ன…?
நாம் சமையல் செய்யும் பொழுது ஒரு வகை மரத்தை கருவேல மரத்தை வைத்து எரிக்கின்றோம். அதனுடன் மற்ற குணவிறகைக் குறைவாக வைக்கும் பொழுது கருவேல மரத்தின் நிலை உயர்ந்ததாக இருக்கும்.
மற்ற விறகைக் கருவேல மரத்தைக் காட்டிலும் அதிகமாக வைத்து எரிக்கும் பொழுது மற்ற விறகின் நிலை அதிகமாகக் கூடி விடுகிறது.
எரிந்து ஆவியாகிக் கலக்கும் நிலையில் அதிகப்படியாக வைத்த விறகின் குண ஆவி நிலையும் கருவேல மரத்தின் ஆவி நிலையும் ஒன்றுடன் ஒன்று கலந்து அதற்குகந்த தனி அமில நிலையாகி மீண்டும் ஒரு நிலையான தன்மை வழிபடுகிறது.
அதைப் போல்
1.நம் பூமியின் ஓட்டக் கதியில் இன்று ஓடும் மாறு கொண்ட ஓட்டத்தினால் ஏற்படும் புதிய அமில குணமானது
2.வழக்கமாக எடுக்கும் நிலையைக் காட்டிலும் அதிகப்பட்டுள்ளதால்
3/நம் பூமியின் ஈர்ப்பு நிலைக்கும் பால்வெளி மண்டலத்திற்கும் இடையிலுள்ள இச்சுத்திகரிப்பு ஆலை
4.”புதிய அமில குணத்தை” நமக்கு அனுப்பி வருகின்றது.
இதன் தன்மை நம் பூமியின் நிலையில் அதிகமாக ஜீவராசியின் சுவாச நிலைக்கு வருவதைக் காட்டிலும் நம் பூமியின் “வட துருவ தென் துருவ” நீர்நிலையின் ஈர்ப்பிற்குத்தான் அதிகமாகச் செல்கின்றது.
முந்தைய பாடத்திலேயே நம் பூமிக்கு உயிர் நாடியாய் வட துருவம் தென் துருவம் அமைந்துள்ளன என்று உணர்த்தினேன். அதுவல்லாமல் நம் பூமிக்குச் சில இடங்களில் சூரியனின் ஒளியே காணாத இடம் உள்ளது என்றும் உணர்த்தினேன்.
ஆனாலும் அங்கு உயிரணுக்கள் உண்டு. சூரியனின் ஒளி படாவிட்டாலும் (நேராக) பூமியின் சுவாச அலையின் வெக்கையும் காற்று மண்டலத்தின் அலையும் அங்கு உள்ளதினால் ஜீவன் உண்டு. ஆனால் கடும் விஷ குணங்கள் நிறைந்துள்ள இடங்களாகத் தான் அவை உள்ளன.
இப்பூமியிலேயே பலதரப்பட்ட வளர்ச்சி நிலைகள் எண்ணிலடங்கா வண்ணம் உள்ளன. அதற்குகந்த நிலையை அவை அவை பிரித்து அவற்றின் வளர்ச்சி நிலை வளர்கின்றது.
இதை உணர்த்தும் நிலை எதற்கு…? என்று எண்ணலாம்.
பூமியின் மாறு கொண்ட ஓட்ட கதியில் இருந்து பூமியின் அலையுடன் அதிகப்பட்டு அவ்வமிலங்கள் நம் பூமியின் ஈர்ப்பிற்கு வந்தாலும்
1.அதன் நிலைக்குகந்த ஈர்ப்பு நிலையான நம் பூமியின் சூரிய ஒளி படாத இருண்ட பகுதியின்
2.அமில குண வர்க்கத்தின் தொடர்புடைய அமில குணமாக அது இருப்பதினால்
3.இருண்ட பகுதியின் ஈர்ப்பிற்கு இப்புதிய நிலை விஷ அமிலம் சென்று விடுகின்றது.
ஆனால் இதன் வளர்ச்சி நிலை அதிகரிப்பினால் இன்றைய காலகட்டத்தில் நம் பூமியின் ஆத்மாக்கள் ஏற்க முடிவதாகத்தான் உள்ளது. காலநிலை கூடக்கூடத் தான் இதன் வளர்ச்சி நிலையில் அதிகரிப்பும் ஏற்படும்.
1.மிளகாய் குறு மிளகு இப்படியுள்ள செடிகள் அதற்குகந்த கார குணத்தையும்
2.கரும்பும் கனிகளும் அதற்குகந்த இனிப்பு குணத்தையும் அதனதன் பழக்கப்பட்ட ஈர்ப்பில் வளர்வதைப் போல்
3.இன்றைய நிலையில் நம் பூமியின் ஓட்ட மாற்றத்தினால் வந்தடைந்த அமிலத்தை எடுக்கக்கூடிய
4.இருண்ட பகுதியில் உள்ள விஷ ஜெந்துக்களுக்கும் தாவரங்களுக்கும் உகந்ததாக உள்ளது.
5.”இதன் வளர்ச்சியினால் தான் மாற்ற நிலை ஏற்படும்…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அன்புடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்து நாம் வாழக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் பட்ட வேதனை நமக்குள்ளும் பதிவாகிறது.
அந்த வேதனையை உருவாக்கும் உணர்வுகள் நமக்குள் வலுப் பெற்று விட்டால்
1.அதனின் உணர்வு நம் ஆன்மாவாக மாறும் பொழுது
2.அதிலிருந்து இழுத்து நாம் சுவாசிக்கும் போது
3.அந்த வேதனையான எண்ணங்கள் தான் மீண்டும் மீண்டும் வரும்.
இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட இங்கே உபதேசத்தின் வாயிலாகக் காட்டும் வழிகளைச் சீராகக் கடைப்பிடித்து வாருங்கள். ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்,
1.சந்தர்ப்பத்தில் இது உங்கள் நினைவுக்கு வரும்
2.உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவும்.
பள்ளிக்கூடத்திற்குச் சென்று முதலில் படிக்கச் செல்லும் பொழுது எல்லாவற்றையும் உடனடியாக நாம் தெரிந்து கொள்வதில்லை. திரும்பத் திரும்பப் படிக்கும்போதுதான் அந்த நினைவாற்றல் நமக்குள் பெருகுகிறது.
அது போல் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் அருள் உரைகளை…
1.ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பதிவு செய்து விட்டாலும்
2.அதைப் பெற வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்தால் தான்
3.திரும்பத் திரும்ப அதை மனதில் பதியச் செய்வோம்… அதை வளர்க்கவும் செய்வோம்
4.திட்டியவர்களை மீண்டும்…மீண்டும்… மீண்டும்…மீண்டும் எண்ணுவது போல்…!
ஆனால் நாம் எல்லாம் ஆரம்பத்தில் பக்தியிலே ஆலயத்திற்குச் சென்று… விநாயகருக்கு அருகம்புல்லை வைத்துச் சூட தீபாராதனை காட்டி… தேங்காய் பழம் வைத்துக் கும்பிட்டுப் பழகியவர்கள். இருந்தாலும்…
1.எங்கோ இருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.ஒரு நிமிடத்திற்குள் எண்ணி எடுக்கும் சக்தியை… அந்த ஆற்றலை இப்பொழுது பெறுகின்றோம்.
இதைச் சொல்லும் போது முதலிலே சிறிது கடினமாகத் தோன்றும். ஆனால் உடனே பெறக்கூடிய தகுதிக்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். ஞான வித்தாக உங்களுக்குள் கொடுக்கின்றோம்.
அதை நீங்கள் வளர்த்துக் கொள்வதில் தான் உங்களுடைய வளர்ச்சி இருக்கின்றது. அதற்குண்டான நீரான அருள் சக்தியை எடுக்கும்போது தான் உங்களுக்குள் அந்த ஞான வித்து ஓங்கி வளரும்.
யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி காலையில் நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை எடுத்துக் கொள்ளலாம்.
1.அந்த நேரத்தில் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.
2.எழுத்து உட்கார்வதற்குச் சோம்பேறித்தனமாக இருந்தாலும் கூட
3.உங்கள் எண்ணத்தை நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கதிராக வருவதைத் தியானித்து எடுத்துக் கொள்ளலாம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் வலிமையாக்குங்கள்.
எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை விண்ணில் செலுத்தி… உடல் முழுவதும் படர வேண்டும் என்ற மீண்டும் உடலுக்குள் செலுத்துங்கள். உள்ளுக்குள் செலுத்தச் செலுத்த… தீமைகள் எல்லாம் கரைந்து விடும்
உடல் அழுக்கைப் போக்கத் தினசரி தண்ணீரை விட்டு எப்படிக் குளிக்கின்றீர்களோ அதை போல் அருள் ஞானிகளின் உணர்வை உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
எங்கோ இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… நினைத்தவுடன் உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றோம்.


சோமபானம் என்ற சோகபானம்
குடும்பங்களில் கடும் சிரமங்கள் ஏற்பட்டால் இன்று லாகிரி வஸ்துகளை (மது) உபயோகப்படுத்துகிறார்கள். அதைப் போட்டு குடும்பக் கவலையே இல்லாதபடி “பல இம்சைகளைச் செயல்படுத்துகின்றார்கள்…”
ஆரம்பத்திலே அன்றைய அரசர்கள் சோமபானம் என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்துத் துஷ்ட தெய்வங்களையும் உருவாக்கி மந்திரங்களையும் சொல்லிப் பழகி இருந்ததனால்
1.அதையே காவல் தெய்வம் என்று வணங்கி சாராயமும் கறியும் வைத்துக் கும்பிடுபவர்களும் இருக்கின்றார்கள்.
2.இப்படிக் கும்பிட்டு ஏற்றுக் கொண்ட பின் இதை ஒத்த ஆன்மாக்கள் உடலுக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது.
ஆதியிலே அரசன் எந்த அடிப்படையில் (செய்வினை ஏவல் தோஷம்) இதை உருவாக்கி மக்களுக்குள் பதிவு செய்தானோ அதுவே இன்று வேரூன்றி வளர்ந்து விட்டது. அவன் உருவாக்கிய மந்திரங்கள் அனைத்தும் மக்களுக்குள் ஊடுருவி விட்டது.
மது மாமிசம் இவைகளை வைத்து இன்று மந்திரத்தை ஜெபித்தால் போதும்…
1.அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலைகள் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் இங்கே வந்து சேரும்… பல கெடுதலைச் செய்யும்.
2.துன்பங்களை மறக்க மதுவை உபயோகப்படுத்தி எதன் வழி அந்த ஜீவன்கள் பிரிந்ததோ அது இன்னொரு உடலுக்குள் சென்ற பின்
3.அதே மதுவைப் பருகச் செய்யும்… அவனைச் செயலற்றதாக ஆக்கும்… அதன் வழியில் வளர்ச்சி ஆகும்.
4.மீண்டும் அதனால் தொடர்படும் சாபங்கள்… அதனால் கடும் வேதனைகள் அங்கே உருவாகும்.
இப்படி உருவாகி விட்டால் அந்த உடலை விட்டுச் சென்ற பின் உயிரானமா… தன் உடலில் எத்தனை வேதனைகள் பட்டதோ அந்த வேதனையை உருவாக்கும் உணர்வுகள் உயிருடன் ஒன்றித் தொக்கிக் (சுற்றி) கொண்டே இருக்கும்.
இந்த உணர்வுகள் தான் உடல்… உடலில் விளைய வைத்த்து தான் உயிர். உயிரின் தன்மை கொண்டு இந்த ஆத்மா அதில் சேர்த்துக் கொண்ட பின்
1.நிலையான வேதனையாக என்றுமே வேதனைப்படும் நிலையாக அமைத்து விடுகின்றது.
2.மதுவைக் குடித்துக் கஷ்டங்களை மறக்கலாம் என்று செய்தாலும் இது எல்லாம் விடாது.
ஆகவே உடலை விட்டுச் சென்ற பிற்பாடு என்ன நடக்கும்…? என்று சற்று தெரிந்து கொள்ளுங்கள்.
உடலில் இருக்கும் பொழுதாவது சமாளித்துக் கொள்ளலாம்… உடலை விட்டுச் சென்றால் சமாளிக்கும் திறனே கிடையாது… வேதனையை அனுபவித்தே தான் தீர வேண்டும்.
1.மீண்டும் எந்த மனிதனுடைய ஈர்ப்புக்குச் சென்றாலும் அங்கே மனிதனாகப் பிறக்க முடியாது
2.அங்கேயும் வேதனையை உருவாக்கி அவனையும் வீழ்த்தி விட்டு
3.எந்தத் தகாத செயலை இவன் செய்தானோ அதையே செய்யச் செய்யும்.
எந்த வேதனை அனுபவித்தானோ அதை அங்கே உருவாக்கி அதில் விளையும் உணர்வின் சத்தை இது எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொள்ளும்.
அந்த உடலை வீழ்த்திய பின் மனிதனுடைய சிந்தனைகள் முழுமையாக அழிந்து உயிர் பாம்பின் ஈர்ப்புக்குள் தான் கொண்டு போய்ச் சேர்க்கும்.
கீதையிலே சொல்வார்கள் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று.
1.எந்தெந்த வேதனையை உருவாக்கி அதை ரசித்தோமோ அந்த வேதனையின் செயலாக நாம் இருந்தோமோ
2.அதனின் அடிப்படையிலேயே உயிர் அடுத்த உடலுக்குள் கொண்டு சேர்க்கும்.
அதாவது விஷத்தைக் கொட்டி உணவாக உட்கொள்ளும் பாம்பின் ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்றுவிடும் ஏனென்றால் அந்த விஷத்தைத் தான் தன் உடலாக அது மாற்றி வைத்திருக்கின்றது.
மனிதனாகப் பிறந்த பின் கொடூர வேதனைகளை அனுபவித்து அதில் வளர்த்துக் கொண்ட விஷம் எதிலே சென்று ஒடுங்கும்…?
இந்த விஷத்தையே உணவாக உட்கொள்ளும் பாம்பின் ஈர்ப்புக்குள் இந்த உயிரான்மா சென்று விஷத்தைத் தாங்கிக் கொள்ளும் உடலாகப் பெற்று அதிலிருந்து தான் மீண்டும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் மீண்டும் விளைகிறது.
1.மதுவை விரும்பிக் குடிப்பவர்களாக இருந்தாலும் சரி… அல்லது கவலையை மறக்க அதைக் குடித்தாலும் சரி
2.இறந்த பின் கடைசியில் அந்த நிலை தான்…!
இதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

நான் சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!
வலுவிழந்து வலு கூட்டிக்கொள்ளப் போகின்றது நம் பூமி என்று உணர்த்தினேன். எதன் அடிப்படைத் தன்மையில்…?
முந்தைய பாடத்தில் நம் பூமியின் ஓட்டமுடன் பூமிக்குகந்த அமில குணங்கள் கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்குகின்றன என்றும் உணர்த்தினேன்.
வலுவிழந்து வலுக்கூடும் நிலை என்பது
1.இன்றைய பூமியின் வலுவிழந்த இந்நிலை…
2.இப்பொழுது பூமியின் மாறு கொண்ட ஓட்டப் பாதையில் சந்திக்கும் நட்சத்திர மண்டலங்களில் சிதறல்களும்…
3.மாறு கொண்ட அமில குணத்தின் சேர்க்கையில் ஏற்படும் நிலையில் ஏற்படும் புதிய அமில வளர்ச்சிக் குணங்களின் அதிகரிப்பும்…
4.நம் பூமியின் ஈர்ப்பில் மோதுண்டு இன்றைய இயற்கைத் தன்மையின் நிலையே
5.மாறு கொண்டு செயல்படும் இன வழிப்பாதை நிலை நம் பூமிக்கு ஏற்பட்டுள்ளது.
வழக்கமான பாதை நிலையிலிருந்து மாறு கொண்டு சுழன்று ஓடும் தன்மையினால் அந்த இடங்களுக்குகந்த அமில குணங்களும் ஏற்கனவே நம் பூமி வளர்த்துக் கொண்ட நம் பூமியின் ஈர்ப்பலையின் காற்று மண்டல அமில குணத்துடன் புதிய அமில குணங்களின் ஈர்ப்பின் நிலை மோதுண்டு இது வெளிப்படுத்தும் அமிலமும் மோதுண்டு ஒன்றுக்கொன்று உராய்ந்து ஏற்கும் நிலை பெறுவதற்கு முன்… ஒளி அலையாகி அதற்குப் பின் தான் பூமியின் ஈர்ப்பலைக்கு… இப்பொழுது ஓடும் பாதையில் சந்திக்கும் “புதிய அமில குணம்” நம் பூமியின் ஈர்ப்பின் காற்று மண்டலத்துடன் கலக்கும் தன்மை பெறுகின்றது.
நம் பூமியின் காற்று மண்டலத்திற்குள் உள்ள அமில குணத்தின் மாற்ற குணங்கள் மோதிடும் நிலையிலேயே மழை வரும் காலங்களில் இடியும் மின்னலும் ஏற்படுகின்றன.
சுழன்று ஓடும் இப்பெரிய நம் பூமியின் கோளத்தைக் காட்டிலும்…
1.நம் பூமி உறிஞ்சி வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் விகித வட்டம் பெரிதாக உள்ள தன்மையில்
2.இவ் ஓட்ட கதியில் ஏற்படும் அமில மோதலில் ஏற்படும் ஒளி வட்டம் தான் என்று பூமியைச் சுற்றியுள்ள ஒளி வட்டம்.
3.முந்தைய காலங்களைக் காட்டிலும் இன்றைய நிலையில் அவ்வொளிப் பிரகாசம் கூடுதலாகத் தெரிகின்றது.
நம் பூமிக்கு என்று ஏற்பட்டுள்ள இந்நிலையினால் அபரிமிதமான அமில சக்திகள் ஓடும் பாதையில் இருந்தும் நட்சத்திர மண்டலங்களின் வெடிப்பு நிலையில் இருந்தும் கூடிக்கொண்டு அதிகமாக பூமியின் சுவாச நிலைக்கு வருகிறது.
அப்படி வருவதினால் வலுவிழந்து வலு கூடும் தன்மை என்பது இக்கலி காலத்தில் மனிதனால் காற்று மண்டலத்தை நஞ்சாக்கி வலுவிழக்கச் செய்த நிலையை…
1.இம்மாற்ற ஓட்டத்தின் நிலையினால் ஏற்பட்டுள்ள மாறு கொண்ட அமில குணத்தை நம் பூமியின் அலையில் கலக்கச் செய்து
2.நம் பூமியின் பழக்கப்படுத்திக் கொண்ட நிலையிலிருந்து அதிகச் சுமை கலக்கப் பெற்று
3.அதை ஏற்கும் பக்குவத்தன்மையை நம் பூமியின் சுவாச நிலை ஏற்றுக் கொள்ளும் இயற்கை நிலை இல்லாததினால்
4.பூமியின் சுவாச நிலையை மனிதனுக்கு எப்படி அதிகமான உணர்ச்சி நிலை ஏற்படும் பொழுது இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறதோ
5.அதைப் போன்ற நிலையில் நம் பூமி உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சிறுகச் சிறுக உள்ள இந்நிலை அதிகப்படும் தருணத்தில் பூமியின் சுவாச அலைகள் மாறு கொண்டவுடன்
1.இன்று மனிதனால் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளின் நிலைக்குகந்த பாதுகாப்பும் குறைந்து
2.முந்தைய பாடத்தில் உணர்த்தியுள்ளதைப் போல் இக்கலியின் மாற்ற நிலையை மனிதன் காணப் போகின்றான்.
சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!
காற்று மண்டலத்தின் ஈர்ப்புக்கு வந்துள்ள புதிய குண அமிலத்தின் வளர்ச்சியின் புதிய சக்திகள் உருவாகலாம். இயற்கையில் விஞ்ஞானத்திற்கும் செயற்கையின் வழி வாழ்க்கைக்கும் இன்றைய ஆராய்ச்சியில் இருந்தும்… பல உண்மைக் குண நிலைகளை எடுக்கலாம்.
ஆராய்ச்சிக்குப் புதிய வழித் தொடரில் சென்று பாருங்கள்… இதன் உண்மைக் குணம் புரியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் குருநாதர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் தன்மையைத் தன்னுள் கண்டுணர்ந்தார்.
1.இந்த மண்ணுலகை வென்று எப்படி விண்ணுலகிற்குச் செல்ல வேண்டும்…? என்று முழுமை பெற்றார்.
2.தான் முழுமை பெறுவதற்குண்டான பாதையைக் கற்றார்.
3.முழுமை பெறுவதற்குத் “தனக்குத் துணை” வேண்டுமென்று எண்ணினார்.
விண்ணுலகம் செல்ல வேண்டும் என்றால் உயிராத்மாவை விண்ணிற்கு உந்தி தள்ளத் தனக்குகந்த ஆதாரங்கள் தேவை.
1.விழுதுகள் இல்லாது எந்த மரமும் வளர்ந்திடாது.
2.ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார்.
தான் பெற்ற சக்திகளை “ஒவ்வொரு உயிரும் பெற வேண்டும்” என்ற நிலையினை அவர் தான் இங்கே செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் இந்த உணர்வலைகள் கொண்டு எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் நமது குரு காட்டிய வழியில் தியானித்து அதைச் செயல்படுத்துவோம்.
1.உங்களுக்கு நான் விழுது… எனக்கு நீங்கள் விழுது…! என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.
2.ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வளர முடியும். ஒன்றில்லாது ஒன்று விளையாது
அனைத்தையும் வெறுத்தேன்… நான் தனித்துச் சக்தி பெறுவேன் என்றால் அது சாத்தியம் இல்லை
அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனும் தனக்குள் அனைத்தையும் இணைத்துத் தான் ஒளியாக்கினான். தனக்குள் அரவணைத்தான்… எதற்கும் தீங்கு செய்யாது அடக்கினான்.
ஆகவே தான் எதனையும் ஒளியாக மாற்றும் திறன் பெற்றான். அவன் பெற்ற அந்த உணர்வுகளைத் தியானத்தின் மூலம் நமக்குள் கவரப்படும்போது நிச்சயம் நாமும் அதைப் பெறலாம்.
துணுக்குத் துணுக்காகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். இதை இப்போது உங்களுக்குள் பதிவு செய்கிறேன். சந்தர்ப்பத்தில் நினைவாக்கித் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளையும்… அப்படி விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.
குருநாதர் எனக்கு எப்படி கற்றுக் கொடுத்தாரோ… பெறும்படி செய்தாரோ… அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்களும் பெற வேண்டும்… உங்களால் அதைப் பெற முடியும் என்ற முழு நம்பிக்கையில் சொல்கின்றேன்.
ஆகவே… உங்களுடைய நினைவுகள் கூர்மையாக இருத்தல் வேண்டும். யாம் உபதேசிப்பதை ஆழமாகப் பதிவு செய்தல் வேண்டும். பதிந்ததை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். அந்த நினைவின் ஆற்றல்… அதுவே உங்களை வளர்க்கும். அதாவது
1.முதலில் அதனை நீங்கள் எடுத்து வளர்க்க வேண்டும்
2.பின் அது உங்களை வளர்க்கும்
3.இந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிக்கும்
4.உங்களை அருள் வழியிலே என்றுமே அழைத்துச் செல்லும்.


ஐம்பெரும் பூதங்கள்
தாவர இனங்களுக்கு ஐந்தறிவு… ஒரு அணுவிற்கு ஐந்தறிவு. ஒரு அணுவிற்குள்
1.”வெப்பம்: ஆக்கும் சக்தி
2.”காந்தம்” அணைக்கும் சக்தி
3.அந்த அறிவு அது தன்னுடன் எதையுமே இணைத்துக் கொள்ளும் சக்தி வருகின்றது.
வெப்பம் எப்பொருளைப் போட்டாலும் அது படைக்கும் சக்தி. காந்தம் தனக்குள் பட்ட… அல்லது எந்த சக்தியை எடுத்துக் கொள்கிறதோ வெப்பத்துடன் இணைக்கப்படும் பொழுது அதனின் சக்தியாக இயக்கும்.
1.”விஷம்…” எந்த உணர்வின் சத்து இதனுடன் கலக்கின்றதோ அது இயக்கச் சக்தி என்ற நிலையும்
2.எந்த மணத்தை இது நுகர்ந்ததோ அந்த மணத்தின் சக்தியாக அறிந்திடும் நிலை “ஞானம்” (மணம்) சரஸ்வதி.
3.புலனறிவு நான்கானாலும் இவை அனைத்தும் கூட்டாகச் சேர்த்து “உணர்வு”
4.அது இயக்கச் சக்தியாக மாறி ஐந்து அறிவுடன் இயக்குகின்றது.
5.மணத்தால் அறிந்து கொள்கிறது… உணர்வால் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.
ஆக ஓர் அணுவை எடுத்துக் கொண்டால் காயத்ரி இதனுடைய சுவை சீதா என்றும் அதனுடைய குணத்தை ஞானம் என்றும் பெயர் வைக்கிறார்கள் ஞானிகள்… அதனின் குணத்திற்கொப்ப எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொள்வதற்காக.
1.புலனறிவு ஐந்து என்றும் ஐந்து பூதங்கள் என்றும் வைக்கின்றார்கள்…
2.ஐந்து நிலைகள் அதைச் செய்யும்.
இதைத் தான் பேரண்டம் ஆகாசம் அது இது என்றெல்லாம் இவர்கள் சொல்கின்றார்களே தவிர அந்த ஆகாசம் எப்படி இதில் இயக்குகின்றது…? என்று தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.
இப்படி ஒவ்வொரு சத்தையும் எடுத்துக் கொண்டு கொண்டால் அந்த ஐந்து புலனறிவு கொண்டது தான் உயிரினங்கள் அனைத்தும். எந்த இலையின் சத்தை ஒரு புழு எடுத்துக் கொண்டதோ அந்த மணத்தின் நிலைகள் கொண்டு தான் அந்த அறிவு கொண்டே அதை எடுத்துக் கொள்ளும்.
ஆனால் மாடு எந்தெந்தத் தாவர இனங்களைச் சாப்பிட்டதோ அந்த உணர்வின் சத்தைக் கொண்டு அதனுடைய ஞானம் தான் வரும்… ஐந்து புலனறிவு தான்.
ஒரு பூனை எந்தெந்த மாமிசத்தைச் சாப்பிட்டுப் பழகியதோ அந்த மாமிசத்தின் உணர்வு கொண்டு தான் அதனுடைய ஐந்து புலனறிவு… வேறு எதையும் அது நாடாது.
ஐந்து புலனறிவு கொண்ட மற்ற உயிரினங்களாக இருந்தாலும் மனிதன் உடலில் வரப்படும் பொழுது ஆறாவது அறிவாகின்றது இயற்கையில் விளைந்த நஞ்சினைப் பிரித்து விடுகின்றது
1.அதாவது நம் உடலில் வரக்கூடிய மணம் கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் நிலை பெறுகின்றது.
2.நஞ்சினை நீக்கிடும் உணர்வின் ஆற்றல் பெற்றது தான் இந்த ஆறாவது அறிவு.
இதைக் கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…?
பூமிக்கடியில் ஆழத்தில் இருக்கக்கூடிய பொருளையும் தோண்டி எடுக்கும் திறனைப் பெறுகின்றோம். அணுவைப் பிளந்து அதை அடக்கி ஆளவும் தெரிந்து கொள்கின்றோம்… அதை ஒளி சுடராக மாற்றவும் அதீத சக்தி கொண்டு அழித்திடவும் முடிகின்றது.
இது மனிதனின் ஆறாவது அறிவு நாம் எதையெல்லாம் செய்கின்றோமோ மாற்றி அமைக்கும் சக்தி அதுதான் முருகு. ஆறாவது அறிவு பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் காட்டிய வழியில் இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இங்கே உபதேசிப்பது.
1.ஒவ்வொரு முறை சொல்லும் போதும் ஒவ்வொரு விளக்கவுரையைக் கொடுத்து
2.உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம் (ஞானகுரு)
குருநாதர் முதலிலே இப்படித்தான் எனக்கும் சொல்வார். பின் ஒவ்வொன்றும் விளக்கவுரையாகக் கொடுத்து என்னைத் தெளிவாக்கிக் கொண்டு வருவார்.
எதையோ ஒன்றைச் சொல்வார். நான் அவர் சொன்ன இடத்திற்குப் போவேன். என்ன…? என்று எனக்கு அர்த்தம் தெரியாது. நான் அவர் சொன்னதைப் பார்த்துவிட்டு நான் திரும்ப வந்தவுடன்…
1.நீ பார்த்தது எல்லாம் என்ன…? என்ற நிலையில் கேள்விகளைக் கேட்பார்
2.அவர் கேட்டதற்குண்டான விடைகளைச் சொல்லத் தெரியவில்லை என்றால்
3.அதன் உணர்வுகளை நீ இவ்வாறு பார்…! இண்னென்னெ வழிகளிலே அது தெரியும்…! என்பார்.
இப்படித்தான் நான் கண்டுணர்ந்தது. குருநாதர் என்னைக் காட்டிற்குள் செல்லச் செய்ததும் இதற்குத் தான். ஆனால் நீங்கள் இங்கே அமர்ந்து இதைக் கேட்டுக் கொண்டுள்ளீர்கள்.
அருள் ஞான வித்தாக குருநாதர் எமக்குள் விளைவித்ததை உங்களுக்குள் பதிவு செய்யப்படும் போது இந்த உணர்வினைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் அதை நீங்கள் கவர முடியும்.
1.விண்ணுலக ஆற்றலை அறிய முடியும்.
2.அந்த அருள் ஞானிகள் பெற்றதை நீங்களும் பார்க்க முடியும்.
ஒரு வெளிச்சத்தைப் போட்டால் அங்கே இருக்கும் பொருள்கள் தெரிகிறது. இதைப் போல் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் கவரப்படும் போது உங்களை அறியாது வந்த இருளை மாய்க்க முடிகிறது…. “உங்களை நீங்கள் அறியும் ஆற்றல்கள் பெருகுகின்றது…” அதனின் உணர்வின் வலிமை கொண்டு இந்தக் காற்று மண்டலத்திற்குள் மறைந்துள்ள தீமைகளை அகற்றவும் முடியும்.
உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சிகரமாக மாற்றிய அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து கவரும்படிச் செய்வதற்கு அந்த அருள் ஞான வித்தாக இந்த உபதேச வாயிலாகப் பதியச் செய்கிறேன்.
குருநாதர் எனக்குள் எவ்வாறு அந்த ஞான வித்தைப் பதிவு செய்தாரோ… அந்த அருள் ஞானிகளின் வித்தை விளைவித்தாரோ… அதை நினைவு கொண்டு வளர்க்கப்படும் போது அதை நான் காண முடிந்தது.
1.முதலில் வெறும் வித்தாக இருக்கும் போது புரியவில்லை
2.பின்னால் அவர் உபதேசித்த உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உருவாக்கப்பட்டு அதை நானும் காண முடிகின்றது.
3.கண்ட உணர்வுகளை எனக்குள்ளும் விளைவிக்க முடிகிறது.
4.அதைச் சொல்லாகச் சொல்லும் போது அந்தச் சொல்லின் தன்மை வினையாகிறது.
5.அதை நீங்கள் நுகர்ந்து வரப்படும் போது வினையாக உங்களுக்குள் பதிவாகிறது.
6.மீண்டும் அதை நீங்கள் நினைக்கப்படும் போது வினைக்கு நாயகனாகவும்
7.உங்களுக்குள் இருக்கும் இருளைப் போக்கிடும் நிலையாகவும் ஆற்றலும் பெருகுகிறது.
உதாரணமாக வைத்தீய ரீதியில் ஒரு மருந்தினைச் செய்தால் “அது இந்த நோயைப் போக்கும்” என்று எப்படிச் செய்கிறோமோ இதைப் போல் மெய்ப் பொருளை உணர்ந்த அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வலைகள் அலைகளாகப் படர்ந்திருப்பதை எம்மைக் கவரச் செய்தார் குருநாதர்.
அவருக்குள் அருள் ஞான வித்தாக விளைவித்தார். அதே வித்தினை எனக்குள் பதியச் செய்தார். அந்த மெய்ப் பொருளைக் குருநாதர் வழிகளில் காண முடிகிறது.
அதே போன்று குருநாதர் கொடுத்த அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள் பதியச் செய்யப்படும் போது உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்க முடியும்… என்றுமே ஒளியாக வாழ முடியும்.


சூரியனின் சக்தியை எடுத்துத் தான் தாவரங்கள் செழித்து வளர்கின்றது
ஜீவ ஜெந்துக்களுக்குத்தான் உண்டு கழிக்கும் குணமுண்டு. இயற்கைக்கு ஜீவன்களைப்போல் உண்டு கழிக்கும் தன்மையில்லை.
1.எல்லாத் தாவரங்களுமே அதற்குகந்த வளர்ச்சிக்கு வேண்டிய சத்தை மட்டும் சூரியனிலிருந்து நேராக எடுத்து வாழ்கின்றன
2.ஆனால் தாவரங்கள் பிறகுதான் ஜீவசக்தி பெறுகின்றன.
எல்லா மண்டலங்களின் சுழற்சியின் கூட்டுடன் சூரியனின் ஒளி அலையை அமிலத் தன்மையைப் பெறும் ஆரம்ப உயிரணு திடமாய் இப்பூமியின் ஈர்ப்பில் படர்ந்து தாவரமாய் வேர் ஊன்றி அதன் தன்மை மாறுபட்டு ஆவியாய் அமிலம் பெற்று மீண்டும் மீண்டும் அதன் வளர்ச்சி நிலை சுழற்சியில் ஏற்படும் உயிரணுக்கள் அதன் சக்தியைக் கொண்டு பூமியின் ஈர்ப்பிற்குச் செல்ல முடியாமல் மற்ற ஜீவனின் கர்ப்ப நிலையில் உண்டு கழிக்கும் வளர்ச்சிக்குகந்த ஜீவிதத்திற்குத்தான் வருகிறது.
இடியிலும் மின்னலிலும் ஏற்படும் அதிர்வினால் பூமியின் ஈர்ப்புத் தன்மையில் வான மண்டலத்திலுள்ள அமில குணங்கள் படர்ந்து காளானாய் புல் பூண்டாய் இன்னும் எப்பலனும் தராத பல தாவர வர்க்கங்களாய் வளர்கிறது.
அதற்குப் பிறகு அதன் நிலை
1.மாறு கொண்ட அமில குணங்களினால் வளரும் தாவரத்தில் இருந்து புஷ்பம் தரவல்ல நிலை பெற்று
2.அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தின் நிலை மீண்டும் வளர்ச்சியுற்றுப் பல பலன் தரத்தக்கக் கனி மரங்களாகின்றன.
பல தாவரங்கள் எப்பலனும் தராத நிலையில் இவற்றின் வளர்ச்சியினால் எப்பலன் நாம் பெறுகின்றோம் என்று எண்ணுகின்றோம். ஒன்றிலிருந்து ஒன்றாகத் தான் வளர்ச்சி நிலை கூடி ஜீவஜெந்து வந்து… மீண்டும் தாவரங்களின் நிலையிலிருந்தே நம் ஜீவனுக்கு உணவாகவும் எடுத்துக் கொள்கின்றோம்.
காளானாய் புல்லாகி, பூண்டாகி, பூவாகி, கனியாகி ஜீவன் பெற்ற நாம் மீண்டும் நம் ஜீவனுக்கு அதையே உணவாக உண்டு கழித்து… அக்கழிவினால் பல வித இன வர்க்கங்கள் புழுவாய், வண்டுகளாய், கொசுக்களாய் வளர்கிறது.
இவற்றின் தொடர் வட்ட வளர்ச்சியில் மாற்ற குணங்கள் பல ஏற்பட்டு ஏற்பட்டு… ஒன்றிலிருந்து ஒன்றாகி இச்சுழற்சி வட்டத்தில் எண்ணிலடங்கா சக்தியுடன் வாழும் நாம்… நமக்கு இச்சக்தியை அளித்துள்ள சூரியனின் ஒளி அலையை நம் சுவாசத்துடன் எடுக்கும் எண்ணம் கொண்டு ஈர்த்து வாழும் வழி பெற்றால் நம் சக்தியின் நிலை கூடும்.
இல்லங்களில் இருந்து கொண்டும் தன்னிச்சையில் வாழும் பொழுதும் சூரியனின் ஒளி அலை ஒன்றின் மேல் பட்டு அது வெளிப்படுத்தும் எதிரலையில் வாழும் நாம்… எல்லாமில் எல்லாமுமாக வளர்க்கும் சூரியனின் ஒளி அலையை நாம் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசத்தில் ஈர்த்து “நல் சக்தியை நமதாகப் பெறும் சக்தியை எடுக்கலாம்…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஞ்ஞானம் எப்படி வளர்ந்தது… ஆனால் ஆதியிலே மெய் ஞானம் எப்படி வந்தது…?
ஒரு எருக்கண் செடி இருக்கிறது என்றால் இரவில் அல்லது இருட்டிலே பார்த்தோம் என்றால் அதில் இருக்கக்கூடிய தோடுகள் பளீர்.. பளீர்… என்று மின்னும்.
அப்படி மின்னுவதைப் பார்க்கும் போது நான் பேயைப் பார்த்தேன்…! என்று ஒருவன் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனிலே அதைப் பதிவு செய்கின்றான்… அடுத்தவனுக்கும் இதைச் சொல்கிறான்.
அது இன்ன உருவமாகக் காட்சி தெரிந்தது என்றால் அங்கே போன பின் இவன் காண்பித்த அந்தக் கற்பனை இவன் உடலிலே உருவாக்கப்பட்டு
1.அந்த எருக்கண் செடி மின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே
2.இங்கே பேய் இருக்கிறது பார்… ஆடுகிறது பார்…! என்று இவனுக்கு அவன் சொன்ன ரூபமே தெரியும்.
அவனுக்குள் பதிவு செய்த உணர்வுகள் இவன் பார்க்கப்படும் பொழுது அவன் பார்த்தது எருக்கண் செடி… ஆனால் இவனுக்குள் கற்பனை செய்து கொண்டது இந்த நிலை.
அதைப் பார்க்கப்படும் போது அதை இவன் சொல்லி அஞ்சி வருகின்றான். இயக்கினாலும் வேறு பக்கம் சென்று விடுகின்றான். ஆனால் அஞ்சிய உணர்வு இவனுக்குள் வளர்த்ததைத் தன் நண்பனுக்கும் சொல்கின்றான்.
அந்த நண்பனும் அந்தப் பக்கம் செல்லும் பொழுது “அவன் சொன்னது உண்மை…” என்று அந்த உணர்வுகள் அவனுக்குள் பதிந்தது… இயக்கத் தொடங்குகிறது.
இதைப் போன்றுதான்…
1.எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அங்கே பதிவாகின்றது
2.அந்த உணர்வின் தன்மை இவனுக்குள் ரூபமாகச் சிருஷ்டிக்கின்றது.
“கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” என்றால் நாம் எண்ணும் எண்ணங்கள் அந்தப் பயத்தின் உணர்வுகள் எண்ணும் பொழுது அதே பயத்தை உருவாக்குகிறது.
1.அதுவாக அவன் மாறுகின்றான்
2.பயத்தின் நிலைகளையே அடைகின்றான்.
அன்று அகஸ்தியன் தனது நிலைகளில் அணுவின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கினாலும் துருவப் பகுதியிலிருந்து புவிக்குள் வரும் உண்மையின் நிலைகளை அறிகின்றான்.
ஏனென்றால் தாயின் கருவிலே இருக்கப்படும் பொழுது “உண்மை எது…?” என்று அறியப்படும் பொழுது அதை அறிய வேண்டுமென்ற நிலையில் பிறந்த பின் விண்ணுலக ஆற்றலை அறிகின்றான்.
ஆனால் நாம் சாதாரணமாக இந்தப் பயத்தின் நிலைகள் வரும் போது இப்படி எண்ணுகின்றோம்.
விஞ்ஞானிகள் அவர்கள் கணக்கின் பிரகாரம் ஆரம்பத்தில் பூமி “தட்டை” என்று தான் சொன்னார்கள். இதுதான் உண்மை என்று அக்காலத்தில் உள்ளோர் ஏற்றுக் கொண்டார்கள்… மறுப்பு கொடுக்கும் பொழுது பின்னாடி வந்தவர்களைப் பைத்தியம் என்றார்கள்
அடுத்து “உருண்டை வடிவம்” என்று சொன்னார்கள் அதற்குப் பின் வந்தவர்கள் “முட்டை வடிவம்” என்று சொன்னார்கள். அவனின் கணக்கின் பிரகாரம் இவன் பதிவு செய்து இவன் கணக்கிற்குள் கொண்டு செல்கின்றான்.
ஆனால் இதே ஆராய்ச்சியில் இருக்கப்படும் போது ஒவ்வொன்றாகத் தெளிவாக்கி அந்த உணர்வின் தன்மையை அவன் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது
1.பூமியின் இயற்கையின் உண்மைகளை இவன் அறியும் தன்மை வருகின்றது
2.அந்த நுண்ணிய அலைகளின் தன்மை கொண்டு விஞ்ஞான அறிவே வளர்கிறது.
3.இப்படித் தான் விஞ்ஞான அறிவு வளர்ந்தது.
மெய் ஞானியான அகஸ்தியனின் நிலைகளோ இளமைப் பருவத்திலே வளர்ந்து அந்த மெய் உணர்வினைக் காணும் நிலைகள் வருகிறது.
ஆனால் தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்குள் எப்படி இயக்க வேண்டும்…? என்ற விஞ்ஞான அறிவைக் காணுகின்றான். மெய் ஞானியோ அவன் மெய் ஞான அறிவினைக் கொண்டு செல்கிறான்.
ஆகவே மெய்யின் உணர்வின் நிலைகள்
1.எப்படி அணுவாக உருவானது…
2.கோளாக எப்படி ஆனது…? நட்சத்திரமாக எப்படி ஆனது…? சூரியனாக எப்படி ஆனது…? என்று
3.மெய் உணர்வின் ஆற்றலைக் கண்டான் அகஸ்தியன்.
சூரியன் ஆன பின் அதன் உணர்வின் இயக்கத்தில் அணுக்களின் தன்மை மற்ற பாறைகளிலும் கற்களிலும் தாவர இனங்களையும் உருவாக்க உதவியது.
ஆனால் இதற்குள் மோதுண்டு வரப்படும் பொழுது உயிரணுக்கள் எப்படித் தோன்றுகின்றது…? என்ற நிலையை அன்று அகஸ்தியன் காண்கின்றான்.
அவன் உணர்வை நாம் பெற்றால் படைக்கும் சக்தி கொண்ட மெய் ஞானியாக நாம் உருவாக முடியும்.


ஓ..ம் நமச்சிவாய என்றால் அபாயம் ஒன்றுமில்லை என்று ஏன் சொன்னார்கள்…?
மனித உணர்வில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ மகரிஷியாக விண் சென்ற அவனை நாம் அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.
இந்தப் பூமியில் வாழும் பொழுது
1.அவன் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த உணர்வின் சக்தி
2.எனக்குள் ஜீவன் பெற்று நாமும் ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.
3.இது தான் ஓம் நமச்சிவாய
ஆனால் அவனின் நினைவலைகளை யாரும் நமக்குச் சொல்லவில்லை. இதை “ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று சொன்னால் உனக்கு அபாயம் ஒன்றும் இல்லை…” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
1.எதைச் சிவமாக்க வேண்டும் என்று அன்று ஞானிகள் சொன்னார்கள்.
2.அதை யாரும் நாம் பெறவில்லை.
தவ யோகிகளும் கொடுத்திருப்பார்கள் சினிமாப் படங்களிலும் கொடுத்திருப்பார்கள் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய. அவன் எதைத் தனதாக… சிவமாக… ஆக்க வேண்டும் என்று சொன்னான்…? என்று யாராவது எண்ணுகின்றார்களா…! என்றால் இல்லை.
சிவனின் அருளைப் பெறப் போகின்றேன் என்றால் அந்தச் சிவன் யார்…? நம் உடல் தான் சிவம்.
1.நாம் எண்ணியதை எல்லாம் உயிர் ஜீவனாக்கிச் சிவமாக மாற்றுகின்றது என்ற நிலையை
2.இந்த உண்மையைக் கண்டு சொல்லி இருந்தாலும் அதை நாம் உணரவே இல்லை
3.யாரும் உணர்த்தவும் இல்லை உணரும்படிச் செய்யவும் இல்லை.
காவியமாகப் படைத்து விட்டார்கள் நாடக மேடையில் வேஷம் போட்ட மாதிரி நம்மை அலைய விட்டு விட்டார்கள்.
உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து மனிதனாக நாம் பரிணாம வளர்ச்சியில் எப்படி வளர்ந்தோம்…? என்று அந்த ஞானிகள் சொன்ன இயற்கையின் உண்மையினை நாம் அறிதல் வேண்டும்.
ஓர் புழு ஒரு உணர்வைச் சுவாசித்தால் ஓ…ம். எந்தச் சத்தை சுவாசித்ததோ அந்த உணர்வின் சத்து அதன் உடலாக மாறுகின்றது ஓம் நமச்சிவாய.
ஆதியிலே ஓர் உயிர் அது தோன்றிய நிலையில் உயிருக்குள் துடிப்பின் இயக்கம் இருந்தால் தன் அருகில் இருக்கக்கூடிய செடியின் சத்தை இந்த உயிருக்குள் துடிப்பின் ஈர்ப்பான காந்தம் இழுத்து அந்த உயிருடன் இணைக்கச் செய்யும்போது ஓ… ம்… ஓம்…! என்கிற பொழுது ம் என்பது பிரம்மம்.
1.சுவாசித்த உணர்வுகள் அதற்குள் ஜீவனாகி அது உடலாகின்றது
2.இந்த உயிரான ஒளி இயக்கப்படும் பொழுது மின்னுகின்றது
3.ஆனால் இழுத்து அந்தச் சத்தான நிலைகள் இதனுடன் இணைக்கப்படும் பொழுது
4.ஒளி மறைக்கப்பட்டு உடலாகின்றது… சிவமாக மாறுகின்றது.
அந்த நந்நாளைத் தான் நாம் சிவன் இராத்திரி என்று சொன்னார்கள். உயிர் முதன் முதலில் தாவர இன சத்தை நுகர்ந்து அது உடலாகி உடலுக்குள் ஒளியின் சிகரமாக இருக்கின்றது.
எந்தத் தாவர இன சத்தை இந்த உயிர் இணைத்து உடல் ஆனதோ அந்த மணம் தான் வினை – விநாயகா. விநாயகன் பிரணவத்திற்கு உரியவன் என்றும் சொல்வார்கள்.
எந்த மணத்தை நாம் சுவாசிக்கிறோமோ அது எனக்குள் பிரணவமாகி இயங்கி ஜீவனாகின்றது. உயிர் இருக்கும் பொழுது தான் எண்ணியது அனைத்தையும் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது… சதா சிவமாக ஆக்கிக் கொண்டே உள்ளது.
1.ஆகவே… அருள் ஞானிகளின் உணர்வை நாம் சதா சிவமாக உடலாக ஆக்கிக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான்
2.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று தெளிவாக ஞானிகள் நமக்கு உணர்த்திச் சென்றார்கள்.

“தன் பலம்” காணுங்கள்
1.தன் சக்தி நிலை கூடக்கூட ஆத்ம பலம் வலுவேறி
2.தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றித் தன் பலம் என்னும் உண்மை பலத்தை
3.இம் மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெற வேண்டும்.
தன் பலம் பெறத்தக்க வழிமுறைகளைப் பல உணர்த்தியுள்ளோம். மண் மணலாகி… மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி… பாறையாகி… மலையாகி வாழவில்லையா…?
ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக்கூடி வலுப்பெற்று வளர்ந்து கொண்டேதான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் “எல்லாவற்றின் ஐக்கியமும்…” அறிவாற்றல் கொண்டுள்ள மனிதன்
1.தன் ஞானத்தை இவ்வழித்தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற
2.மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி நிலை வளரப் பெறுகிறது.
உயிரணுவாய் உயிராத்மாவாய் இச்சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம்… ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது இயற்கையின் உயர் சக்தி மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி அவ்வுயிராத்மாவை வளர்க்கக் கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால்… இம் மனிதனின் உண்மையின் “உயர்ந்த பலம் கூடி” உயர் நிலை பெறலாம்.
காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கும் செயலைப்போல்… மனிதனாய் வாழும் நாமும் நம் எண்ணத்தை இவ் இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது… இவ்வெண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால் நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப… அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து நம் உயிராத்மா பலம் கொள்கின்றது.
இக்காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை எடுக்கின்றார்கள்.
1.இவ்வுலகினில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அம்மின் அலை இருந்தால்தான் செயல் கொள்ள முடியும்.
நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.
இப்பூமி பல மண்டலங்களில் இருந்து வரும் ஒளி அலைகளையும் அம் மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கின்றது என்றால் “காந்த அலையின் ஈர்ப்பினால்” ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகிறது.
நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இவ்வுலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும்… ஒவ்வொரு உயிரணுவுமும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் “காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்துதான்” எல்லாமே செயல் கொள்கின்றன.
மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர். இவ்வுடலும் மற்ற எல்லாமுமே மின் அலையின் கூட்டுத்தான்.
மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்மக்கூட்டை இவ்வுடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துதோடு இல்லாமல்… பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சிகளுக்கெல்லாம்… நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.
பல கோடி கோடி உயிரணுக்களின் துணை கொண்டு உயிர் வாழும் நாம் இவ்வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கையை வாழ்ந்து… இம்மனிதனாய் வாழ்ந்த… வாழக்கூடிய செயல் பெற்ற நாம்…
1.இவ்வெண்ணச் சுழற்சியை “எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்…”
2.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலினால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.
3.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதினால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.
4.பயன் கண்டு இச்சுழற்சி வாழ்க்கையில் வாழ்ந்து மட்டும் எப்பயனை எவ்வாத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆத்மா) கண்டது…?
ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை (அடைய) உணர பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.
தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால்… அப்பரம்பொருளின் சக்தி அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று… நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தை நாம் சேமிக்கலாம்.
நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து…
1.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
2.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறை கூட்டி
3.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
4.அதிலிருந்து ஒதுங்கிச் சலிப்புற்றும் வாழாமல்
5.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
6.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத்தொடரில் ஐக்கியம் கொண்டே வாழக்கூடிய பக்குவம் நாம் பெறுவது தான்
7.நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை.
நாக சர்ப்பம் விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாய் இருப்பதினால் அதன் எண்ண நிலை எதன் நிலைக்கும் மாறு கொள்வதில்லை. விஷ ஜெந்துவாய் நாம் காண்கின்றோம். “அவ்விஷத்தையே உரமாக்கி வைரமாக்கி… மாணிக்கமாய் சேமித்து வளர்த்து… ஒரு நிலையில் வாழ்கின்றது அந்நாக சர்ப்பம்…”
பல நினைவலைகள் பலவும் உள்ளவன் தான் மனிதன்.
1.பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைத் தான் பெறல் வேண்டும்
2.பெற்று “தன் பலம் காணுங்கள்” என்று உணர்த்துகின்றோம்.
இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் குண வட்டத்தில்தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்ந்து வாழுகின்றன. ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ் ஜீவ ஜெந்துக்களின் நிலையில்தான் பல மாற்ற குணங்கள் உண்டு.
1.தன் நிலை உணர்ந்து மனிதன் வாழ்ந்தால் உலக ஞானத்தையும்
2.மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும் அப்பரம்பொருளின் உண்மையையும் உணர முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த வாழ்க்கை என்ற குறியைத் தான் வைக்கின்றோமே தவிர சந்தர்ப்பத்தில் நம்மைத் தாக்கும் உணர்வுகளை மறந்துவிட்டோம்.
நாம் ரோட்டில் செல்லும்போது ரோட்டின் அந்தப் பக்கம் தெரியும் ஒரு நல்ல பொருளின் மீது ஆசைப்படுகின்றோம். எடுக்க வேண்டுமென்ற ஆசை தூண்டப்படுகின்றது. ஆனால் இடையிலே வரும் நிலைகளை… அறிய வேண்டும் என்ற சிந்தனையை மறைத்து விடுகின்றது.
1.நினைவை நாம் அங்கே செலுத்தி அந்தப் பொருளை எடுக்கத் தாவப்படும் பொழுது
2.குறுக்கே வரும் வாகனத்தைப் பற்றிச் சிந்திக்காமல் திரும்பிப் பார்க்காதபடி எடுக்கச் சென்றால்
3.வாகனம் மோதி விட்டால் என்ன ஆகும்…? பொருளைப் பெற முடியாது.
ஆசையின் உணர்வுதான் வருகிறது. இந்த உணர்வினை அறியப்படும் பொழுது “கிடைக்கவில்லை…” என்கிற போது அந்த உணர்வினை வளர்த்து விட்டால்… மடிந்து விட்டால்… அதே உணர்வுடன் தான் அந்த ஆன்மா அங்கே சுழன்று கொண்டிருக்கும்.
இதே ஆசை கொண்ட மனிதர்கள் அங்கே நடமாடும் போது அவருக்குள் இந்த ஆன்மா புகுந்து… தன் ஆசையைத் தூண்டி “அதைப் பெற வேண்டும்… இதைப் பெற வேண்டும்…” என்ற உணர்ச்சிகளையே தான் தூண்டும்.
இப்படிப் பல மனிதர்கள் இருப்பதையும் இன்று காணலாம். ஆனால் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த வலிமையைத் தனக்குள் எடுத்து
2.அதே ஆசை கொண்ட மனிதர்களிடம் விளைந்த உணர்வுகள் காற்றிலே இருக்கிறது.
3.அதன் வழிகளிலே நம்மை அழைத்துச் செல்கின்றது.
இத்தகைய தீமைகளிலிருந்து மனிதன் விடுபடுதல் வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீவினைகளை நீங்கள் நிறுத்துதல் வேண்டும். அது தான் விநாயகர் சதுர்த்தி.
உங்கள் உடலுக்குள் ஊடுருவிய தீமை என்ற நிலைகளை நிறுத்துவதற்குக் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானியின் உணர்வை அருள் ஞான வித்தாக ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.
பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்களுக்கு முன் காற்றில் இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை நுகர்ந்து தீமைகளை அகற்றும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.
என்றென்றும் அதன் வழிகளிலே மெய்ப் பொருளாக இருக்கும் உயிருடன் ஒன்றி நீங்கள் வாழ முடியும்.
1.மெய் என்பது உயிர்… எல்லாவற்றையும் அந்த உண்மையின் உணர்வை நமக்கு அறிவிப்பது மெய் உயிர்.
2.உயிருடன் ஒன்றி எல்லாவற்றையும் மெய்யாக மாற்றும் ஆற்றல் பெற முடியும்.
குருநாதர் எனக்கு இதையெல்லாம் காட்டினார். காட்சிகளாகவும் காண்பித்தார். அதைத் தெளிவாகத் தெரிய முடிந்தது… அதை நுகரவும் முடிந்தது.
எனக்குள் பதிவான அந்த உணர்வின் தன்மையை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது… கடந்த கால நிலைகளை நினைவுபடுத்தி எண்ணங்களாக (உபதேசமாக) வெளி வரப்படும் பொழுது… அந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கப்படும் பொழுது
1.இதே எண்ணம் உங்களைத் தீமைகளிலிருந்து அகற்றச் செய்யும்
2.மெய்ப் பொருள் காணும் நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


உங்களுக்கு யாம் அடிக்கடி உபதேசிப்பதன் உள் கருத்து
எமது குருநாதர் எமக்கு உபதேசித்தது போன்று
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் நினைவு கூறச் செய்து
2.நீங்கள் கேட்டுணரும் பொழுது மெய் ஞானிகள் கண்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கே உபதேசிப்பது.
3.பதிவு செய்த எண்ணத்தை ஓங்கி வளர்த்து
4.தியானத்தின் மூலம் காற்றுக்குள் மறைந்துள்ள மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாம் கவரப் பழகுதல் வேண்டும்.
ஆலயத்தில் ஒரு தேரை பல ஆயிரம் பேர் சேர்ந்து வடம் பிடித்து எப்படி இழுக்கின்றோமோ இதைப் போல மகா ஞானிகளுடைய உணர்வுகளைப் பலரும் சேர்ந்து கவர்தல் வேண்டும். ஏனென்றால் அது மிக மிக சக்தி வாய்ந்தது.
1.அதனைக் கவர்ந்து ஈர்ப்பதற்கே இப்படி உபதேசித்து
2.உங்கள் நினைவினை விண்ணை நோக்கி செலுத்தும்படிச் செய்வது.
அந்த மகரிஷியின் அருள் சக்திகளை அதன் மூலம் நீங்கள் பெற்று அதை தியானிக்கும் போது அதை நுகர முடியும்
மகரிஷிகள் அனைவருமே பிறவிக் கடனை அறுத்துச் சென்றவர்கள் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது விண் சென்றவர்கள்
1.அவர்கள் உடலில் விளைய வைத்த அந்த உணர்வை சாதாரண மனிதன் எண்ணத்தால் நெருங்க முடியாது.
2.அவர்கள் ஒத்த உணர்வை உங்களுக்குள் செலுத்தி
3.உங்கள் எண்ணங்களை வலு கூட்டச் செய்து
4.நினைவை விண்ணை நோக்கி ஏகும்படிச் செய்து
5.அந்த ஆற்றலைப் பருகும் நிலைக்கு உற்சாகத்தைத் தூண்டி
6.அந்த உணர்வின் நினைவாற்றலை ஏற்படுத்திய பின் தியானத்தில் நாம் இருப்போமேயானால்
7.அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் வலுப்பெறுகின்றது.
இதனின் துணை கொண்டு எப்பொழுது நீங்கள் எண்ணினாலும் “மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா” என்று எண்ணினால் அந்தத் திறனை நீங்கள் பெறுகின்றீர்கள்.
அந்தத் திறன் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம். ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெருக்கி
1.அதன் வழித்தொடர் கொண்டு இந்த வலுவினைச் செருகேற்றிய பின் விண்ணுலக ஆற்றலை எளிதில் பெற முடியும்.
2.எந்த மெய் வழி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி வந்தீர்களோ அவை அனைத்தும் உங்களுக்குள் ஓங்கி வளரும்.
நோய் வராது தடுக்கவும் முடியும்.
உங்கள் நினைவுகள் எல்லாம் இப்போது கூர்மையாக விண்ணை நோக்கிச் செல்லுகின்றது. அதனின் வலுக் கொண்டு உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் இன்னொரு உடல் பெறாதபடி “இந்த உடலிலேயே ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்…”
மகரிஷிகள் கண்ட வழியில் நீங்களும் சென்றடைந்து உங்கள் மூச்சும் பேச்சும்… கூட்டுத் தியானத்தால் வெளிப்படுத்தும் அலைகள் பிறருடைய உணர்வுகளை நல்ல உணர்வுகளாகப் படரச் செய்து… மெய் ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
அதன் மூலம் நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாகப் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது”
இக்கலியில் பூமியின் நிலையையே நிலை தடுமாற வைப்பவனும் இம் மனிதன்தான். இப்பூமி நிலைக்க கல்கி யுகம் காணச் செயல்படுத்தப் போகிறவனும் இம்மனிதன் தான்.
1.மனிதன் மனித ஞானம் பெற்றால்
2.மனிதனால் மனித ஆத்மாக்களை உயர்ந்த நிலையில் நிறுத்த முடியும்.
இன்று நம் பூமியில் மனிதக் கரு வளர நம் பூமி மனித ஆத்மாக்களை வளர்க்கும் தன்மை கொள்ள “வியாழனிலிருந்து மீண்ட மனித ஆத்மாக்கள் இருந்ததினால் தான்” மீண்டும் நம் பூமி வளர்ந்த பிறகு நம் பூமியில் மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய கருவே வளர்ந்தது.
பல சப்தரிஷிகளும் அவர்களின் வழித்தொடர் பெற்ற பல நிலை கொண்டவர்கள் இருந்தாலும்… இப்பூமியில் வாழ்ந்த மனித ஆத்மாக்களின் சக்தி நிலை உயர்ந்து தன் ஞானம் பெறும் ஆத்மாக்கள் வளர்ந்து… இப்பூமியின் மாற்றக் காலத்தில் இம்மனித வாழ்க்கையில் கொண்டுள்ள ஆசாபாசங்களிலும் நித்தியக் கடன்களிலும் மூழ்கியே… இக்கலியின் மாற்றத்தில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் கலி மாறும் தருணத்திலும்… அதே சுழற்சி ஓட்டத்திலிருந்து… தான் இதிலிருந்து மீள முடியாமல் மீண்டும் அறிவு ஞானம் கொள்ளும் மனிதக் கரு வளர்ந்து… அக்கருவின் செயலில் இருந்து தான் மனித உருவங்களே… இச் சூரியனைச் சுற்றியுள்ள “48 மண்டலங்களின் வளர்ச்சியில் மனித ஆத்மாக்கள் வாழும் நிலை பெறும்…”
நம் சூரியனின் சுழற்சியில் பல மண்டலங்கள் ஓடினாலும் நம் பூமியின் நிலைக்கொப்ப மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய இச்சக்தி மண்டலத்தின் கலி மாறி கல்கி யுகம் பெற்று நம் பூமி சுழலும் தருணத்தில்
1.இன்றைய நிலையில் வாழும் ஆத்மாக்களின் பல கோடி எண்ணங்களை மாற்றிச் செயல் புரிய
2.பல சக்தி நிலைகள் செயல் கொண்டு செயலாற்றித்தான் கல்கி யுகம் வாழ முடியும்.
இவ்வுலக மாற்றத்தினால் இவ்வுலகில் உள்ள மனித ஆத்மாக்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் உயிரணுவும் உயிராத்மாவும் சப்த அலைகளும் சகல எண்ணத்தில் விட்ட சுவாச அலைகளும் பூமியின் சுழற்சியில் சுழன்றுள்ள நிலையில் மீண்டும் கலி பிறந்தால் இவ் எண்ண வளர்ச்சி எங்கு செல்லும்…?
இப்பூமியின் காற்று மண்டலத்தில் கலந்துள்ள இந்நிலைகள் எல்லாமே அடுத்த நிலைக்கு வர ஏதுவாகின்றதா? என்ற வினா எழும்பலாம். இதன் நிலையில் இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் சில நிலைகள் ஏற்படலாம், எந்நிலை கொண்டு…?
இப்பூமியின் மாற்றத்தினால் இப்பூமியில் இன்று வாழும் மனித ஆத்மாக்களும் பல கோடி ஜீவஜெந்துக்கள் தாவரங்கள் இன்று பூமியில் வளர்ந்துள்ள கனி வளங்கள் நீர் நிலைகள் மனித உடலை விட்டுப் பிரிந்து வாழும் அனைத்து உயிராத்மாக்கள் உயிரணுக்கள் இது நாள் வரை நம் பூமியின் காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள சப்த அலைகள் அனைத்து நிலைகளுமே இப்பூமியின் மாற்றம் நிகழும் தருவாயில் பல நிலைகள் மாறி கலியில் இன்றளவும் வளர்ந்து விட்ட நிலையில் மாற்றம் காணப் போகின்றோம்.
பல கோடி ஆண்டுகளாய் மாறாமல் சுழன்றுள்ள பலரின் சுவாச அலைகள் எல்லாம் இன்று நாம் எடுக்க முடியும்.
1.இராமாயண காலத்திலும் கிருஷ்ணாவதார காலத்திலும் மச்சாவதார காலத்திலும் மனித ஆத்மாக்கள் விட்ட சப்த அலையை
2.இக்காற்றிலிருந்து அதன் சுழற்சி வட்டத்தில் ஞானம் பெற்றோரினால் ஈர்த்து எடுக்க முடியும்.
ஆனால் இக்கலியின் மாற்றத்தினால் இந்நிலையும் மாறப் போகின்றது. எந்நிலையில்…?
இன்று இக்காற்று மண்டலத்தில் வாழ்ந்தவரின் சப்த அலைகள் அனைத்துமே உள்ளனவா…? என்ற வினா எழும்பலாம்.
இராமாயண காலத்தில் உள்ள நிலைகளைக் காவியமாய்ப் படைத்து இன்றளவும் அந்த இராமாயண கதை மனித ஆத்மாக்களிடம் கலந்துள்ள நிலையில் இச்சப்த அலையின் ஈர்ப்பும் அதன் நினைவு சக்தி சுழன்று உள்ள ஜீவ ஆத்மாக்கள் உள்ளவரை எச் சப்த அலையும் மாறாது.
பல கோடி ஆண்டுகளானாலும் அதன் தொடர் வட்டத்தில் செயல்படும் சப்த அலையின் நிலை சக்தி மாறாது.
இக்கலியில் மாறுகிறது என்றால் இவ்வுலக மாற்றத்தில் ஏற்படும் அதிர்வினால்
1.சில ஒளி அலைகள் நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல்
2.அனைத்திற்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் கலந்து விடும் நிலை பெறுகின்றது.
3.இன்னும் பல சப்த அலைகள் இப்பூமியின் ஈர்ப்பில் இவ்வதிர்வினால் மோதுண்டு இப்பூமியுடன் கலக்கும் நிலை பெறுகின்றது.
4.பல பல மாற்ற நிலைகள் இக்கலி மாறிக் கல்கியில் காணப் போகின்றீர்கள்.
5.இவ் ஈஸ்வரப்பட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்.
6.மனித ஆத்மாக்களின் எண்ண நிலை இன்னும் தடுமாற்றம் கொள்ளப் போகின்றது.
இன்று உலகின் பல திரையறியச் செயல்படும் கருவிகளும் இக்காற்றிலிருந்து ஈர்த்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒலி அலைகளைப் பரப்பி வாழும் நிலையில்…
1.மனிதனால் செயற்கைக் கோள்களை ஏவி விட்டு அதிலிருந்து உணரும் ஒளி அலைகளும் ஒலி அலைகளும்
2.இவர்கள் இன்று செயலாற்றும் முறைப்படி செயலாகாது.
இயந்திரத்தைத் துணைகொண்டு காற்று மண்டலத்தில் இவர்கள் இன்று பிரித்து எடுக்கும் நிலையெல்லாம் செயல்படுத்தும் முறையில் இன்றுள்ள நிலைக்கொப்ப செயலாக்க முடியாமல் அதற்காக இன்னும் பல புதிய சாதன முறைகளை மனிதன் உருவாக்கப் பார்ப்பான்.
இக்காற்று மண்டலத்தின் விஷத்தன்மைகள் கூடி ஆவி உலகில் வாழும் ஆத்மாக்களின் வெறி உணர்வும் அதிகப்பட்டு… எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது…”
மனித ஆத்மாக்களே…! உங்களை நீங்கள் உணர்ந்து
1.என்றிருந்தாலும் மடியத்தான் போகின்றீர்கள் என்று எண்ணம் கொள்ளாமல்
2.மனித ஆத்மாக்களால்தான் நிகழப் போகும் சக்தியை மனிதன் உணர்ந்து செயல்படப் பல நிலைகளைப் போதிக்கின்றோம்.
3.மனிதனாய் அறிவு கொண்டு அன்பு பட்டு ஞானம் பெற்றிட வாருங்கள்.
4.இம்மனித ஆத்மாவிற்குத்தான் அறிவாற்றலை வளர்க்கும் ஆற்றல் உண்டு.
அறிவு நிலை கொண்ட மிருகங்கள் வாழ்ந்தாலும் மனிதனை ஒத்த ஞான சக்தி பெறும் தன்மையற்ற நிலையில் தான் மிருக இனம் உள்ளது. தேவனாய் வாழக்கூடிய மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள்… சூரியன் பால் நினைவினைச் செலுத்தும் போது அதன் அருகில்… விளிம்பில் வரும் விஷத்தன்மைகளை இவர்கள் உற்றுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.
சூரியனின் இயக்கத்தின் தன்மையை அந்தக் காட்டுவாசிகள் காண முடிந்தது. அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளையும் அந்தச் சிசுவிற்கும் (அகஸ்தியன்) படர்கின்றது.
அதன் தொடர் வரிசையாக நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து எவ்வாறு அதனதன் சக்திகளைக் கவர்கிறது…? என்ற நிலையைக் காண்கின்றார்கள்.
1.ஒரு விஷம் எவ்வளவு தூரம் வேகமாக ஊடுருவிச் செல்கின்றதோ
2.அதைப்போல அவர்கள் தன் எண்ணங்களை விண்ணை நோக்கிச் செலுத்தப்படும் பொழுது
3.கண் ஒளியால் மற்றதை ஈர்க்கும் தன்மையை அவர்கள் பெறுகின்றார்கள்
4.வெகு தொலைவில் இருப்பதையும் காணும் சக்தி பெறுகின்றார்கள்.
அவ்வாறு கண்டுணர்ந்த உணர்வின் தன்மை தான்
1.நட்சத்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்கு உணவை எப்படி எடுத்துக் கொள்கின்றது..?
3.அதை நம் பிரபஞ்சத்திற்குள் எப்படிச் செலுத்துகிறது…?
4.மற்ற கோள்கள் தனக்குள் அதை எடுத்து எப்படி வளர்கின்றது…?
5.அது உமிழ்த்தி வெளிப்படுத்தும் சக்தியை சூரியன் எவ்வாறு கவர்ந்து கொள்கிறது…? என்ற பேருண்மைகளை
6.அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் காணுகின்றார்கள்… கருவில் இருக்கும் அந்தச் சிசுவிற்கும் அது பதிவாகின்றது.
தாய் தந்தையர் கொஞ்சம்தான் கண்டார்கள். ஆனால் கருவிலே வளரும் அகஸ்தியனுக்கோ இது வீரிய சத்தாக உருவாகின்றது.
மற்ற மிருகங்களிடமிருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்திட அகஸ்தியன் தாய் தந்தையர்கள் அவர்கள் தங்கள் உடலிலே விஷம் கொண்ட பல தாவர இனங்களை மேலே பூசும் பொழுது அது உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்கிறது… கொல்லும் ஆற்றல் அந்த உடலிலே வளர்கின்றது. ஆனால்…
1.அந்தக் கருவிலே விளையும் சிசுவிற்கோ விஷத்தை அடக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக வளர்கின்றது.
2.இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.
பத்து மாதம் ஆன பின் குழந்தை (அகஸ்தியன்) பிறக்கின்றது. குழந்தைகள் பிறந்தால் பொதுவாக மேலே தான் பார்க்கும். காடுகளில் படுத்திருக்கும்போது வானை நோக்கிப் பார்க்கும் பொழுது சூரியனை உற்று பார்க்கின்றது.
தாய் தந்தையர்கள் எதைப் பெற்று அவர்களுக்குள் பதிவாக்கினார்களோ அந்த நினைவாற்றல் குழந்தையை விண்ணை உற்றுப் பார்க்கவும் வைக்கின்றது.
1.அவர்கள் கண்ட நட்சத்திரங்களை அவன் காண்கின்றான்
2.நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடியதைக் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதும்… துகள்களாக மாற்றுவதையும்
3.கோள்கள் அதைக் கவர்வதையும் அது வெளிப்படுத்துவதைச் சூரியன் கவர்வதையும் இவன் காணுகின்றான்.
அந்த இளம் வயதில் அகஸ்தியனுக்குத் தெரியாது. ஆனாலும் அந்த உணர்வுகளை எல்லாம் காட்சியாகக் காணுகின்றான். அவனுக்குள் அந்த ஆற்றல்கள் வளர்கின்றது.
குருநாதர் இதை எல்லாம் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டினார். அதை எல்லாம் நீங்களும் காண வேண்டும் என்பதற்கே இதைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு நாட்டைச் செர்ந்த தத்துவ ஞானியான நாஸ்டர்டாமஸ் இந்தப் பூமியில் நடக்கப் போகும் சில மாற்றங்களை அன்றே குறிப்பிட்டிருந்தார்.
1.காரணம்… மெய் வழியைக் காணும் ஒரு ஆன்மா அவரிடத்தில் சென்று
2.அவருக்குள் இருந்து வெளிப்படுத்திய நிலைகள் தான் அது.
நம் பூமியின் இயக்கங்களையும் அதனின் உணர்வின் அலைகள் எங்கே மோதுகின்றது… எங்கே இணைகிறது…? ஒவ்வொரு நாட்டின் இயக்கங்கள் எப்படி ஆகின்றது…? உலக மாற்றம் எப்படி ஆகின்றது…? மதத்தின் தன்மைகள் எப்படி உருவாகின்றது…? என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளார்.
அவர் எல்லாவற்றையும் கூறியிருந்தாலும் இங்கே படித்த வர்க்கங்கள் அதை எடுத்து வைத்துக் கொண்டாலும் அதை மீட்டி உண்மையின் உணர்வை உணர்வதற்கில்லை. விஞ்ஞான அறிவில்தான் எண்ணத்தைச் செலுத்துகின்றார்கள்.
பிற்காலத்தில் விஞ்ஞான அறிவுகள் வளரப்படும்போது…
1.அதனால் இன்னென்ன நாடுகள் அழியும்…
2.இன்னென்ன மதங்கள் அழியும்…
3.இன்னென்ன இனங்கள் அழியும்… என்று நாஸ்டர்டாமஸ் அன்றே சொல்லியிருக்கின்றார்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே அன்று தோன்றிய அகஸ்தியன் தான் பெற்ற மெய் உணர்வின் நிலைகளை எந்நாட்டவர்க்கும் பெறும்படியாகப் பரப்பிச் சென்றுள்ளார்.
“தன்னை அறிதல்” என்ற நிலைகள் கொண்டு உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அதனுடைய செயலாக்கம் எப்படி உயர்கிறது…? என்று நிலைகளையும் அகஸ்தியன் தெளிவாக்கிக் காட்டியுள்ளார்.
அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் தான் உலகம் முழுவதற்கும் பரவியது. ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக அகஸ்தியர் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.
ஆக… பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அவருக்குள் விளைந்த உணர்வுகளை யாரெல்லாம் உண்மையின் உணர்வுகளை அறிய வேண்டும் என்று எண்ணி ஏங்குகிறார்களோ… அவர்களுக்குள் அது ஈர்க்கப்பட்டு உணர்வின் அறிவாக மனிதனை வாழச் செய்கின்றது.
உலகத்தின் தன்மையில் விஷத் தன்மைகள் படர்ந்தாலும் தென்னாட்டில் தான் அதை மீட்டிடும் வளர்ச்சியின் தன்மை இருக்கின்றது என்று நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட குறிப்புகளில் உணர்த்திச் சென்றுள்ளார்.
துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள் என்ற நிலையையும் நாஸ்டர்டாமஸ் தெளிவாகக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த அறிவின் தன்மையை உணர்வதற்குக் கல்வி அறிவால் முடியாது.
ஆகவே
1.அத்தகைய அருள் ஞானி தென்னாட்டிலே தான் தோன்றுகின்றான்.
2.தீமைகளில் இருந்து மீட்டுவதற்கு உலகைக் காக்கும் சித்தனாக வருகின்றான்.
நஞ்சு கொண்ட நிலைகள் இன்று வளர்ந்தாலும் அது அழிந்தே தீரும். தவறான நிலைகள் செய்து கொண்டு இந்த உடலிலே இருப்பினும் கற்றுணர்ந்த உணர்வுகள் ஒரு நாள் அழித்தே தீரும்.
அதே சமயத்தில் அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை தனக்குள் வரும்போது தீமை என்ற நிலைகளை நீக்கியே தீரும். தீமையற்ற உணர்வாக உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறத்தான் செய்யும்.
ஆனால் தீமையின் உணர்வுகள் வரும் பொழுது ஒளி பெறும் உணர்வுகளை அழிக்கும்… நல்ல அணுக்களை அழித்தே தீரும்.
1.பின் அசுர உணர்வுகள் கொண்டு தீமையின் நிலைகளே உருபெறும் என்ற நிலைகளை
2.பல பல குறிப்புகளாக அன்றைய பாஷையிலே நாஸ்டர்டாமஸ் எழுதி இருந்தாலும்
3.அதனுடைய விளக்க உரைகளைக் கொண்டு வருவதற்குச் சில காலம் ஆகும்.
எது எப்படி இருந்தாலும்… தென்னாட்டிலே வாழ்ந்த அகஸ்தியனின் கரு உணர்வுகள் இங்கே வீரியம் பெறுகின்றது. கருவிலே வளரும் சிசுக்களுக்கு உயர்வு பெறுகிறது.
அந்த உணர்வின் ஞானம் நிச்சயம் வெளிப்படும்…!.


எந்த மனித இனத்திலிருந்து அகஸ்தியன் வந்தானோ… அந்த மனித இனத்திற்கே “ஒளி பாய்ச்சிக் கொண்டுள்ளான்”
விநாயகர் தத்துவப்படி விநாயகர் அருகில் அரசையும் வேம்பையும் வைத்துக் காட்டி இருப்பார்கள். வேம்பு என்பது வாழ்க்கையில் வரும் கசந்த நிலை. வாழ்க்கையில் வரக்கூடிய அந்தக் கசப்பை வென்றவர்கள் தான் மகரிஷிகள்.
ஒரு பட்சி அரசம் பழத்தை உணவாக எடுத்து அதனுடைய சத்தை உட்கொண்டாலும்… உதாரணமாக ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மீது தன் மலத்தை விடும் பொழுது
1.மலத்திற்குள் சிக்குண்ட இந்த வித்து பாழடைந்த இடத்தில் அது படர்ந்து காற்றில் பரவி இருக்கும் ஈரச்சத்தை நுகர்ந்து
2.தனது சத்தான நிலைகள் கொண்டு கருவுற்று ஜீவனாகி அரசாக (அரச மரமாக) விளைகின்றது.
3.பின் தன் விழுதுகளை ஊன்றி நீரே இல்லாத அந்த இடத்தில் தன் விழுதுகளை ஊன்றி நீர் இருக்கும் பக்கம் தன் விழுதுகளைப் பாய்ச்சுகின்றது.
4.அப்படிப் பாய்ச்சி வளரத் தொடங்குகிறது.
இதைப் போன்று தான் மனிதன் தன் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி பாழடைந்த இடமான பூமியின் வட துருவப் பகுதியில் விண்ணிலே துருவ மகரிஷி “துருவ நட்சத்திரமாக” இருக்கின்றான்.
விண்ணிளிருந்து வரும் நஞ்சினைத் தனக்குள் அடக்கி நஞ்சினை வென்று ஒளியின் சிகரமாக இன்றும் நிலையாக… தன் உணர்வின் அலைகளை முழுதும் பாய்ச்சித் தன் உணர்வின் ஆற்றலால் அதைக் கண்டுணர்ந்த மற்ற மனிதர்களும் அதைப் பின்பற்றி… சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தைச் சுற்றிச் சுழன்று வருகின்றார்கள்.
1.தன் விழுதுகளைப் பாய்ச்சிப் பேரண்டத்திலிருந்து வருவதை தன் உணர்வின் ஆற்றலால் அங்கே பெறும் மனிதன் அவனுக்குள் விளைவதால்
2.அவனைப் பின்பற்றிச் சென்றவரைப் பரிசுத்தப்படுத்தி அவர்களையும் வாழ வைத்து
3.ஒளியின் சரீரமாக இன்றும் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக வாழுகின்றான்.
விண்ணின் ஆற்றலின் நிலைகளை நட்சத்திரங்கள் தனக்குள் அடக்கிப் பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படும் பொழுது கோள்கள் தனது சத்தாக எடுத்து அது உமிழ்த்தும் சத்தைச் சூரியன் கவர்ந்து ஒளியின் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகிறது.
அதைப் போல அகஸ்தியனும் நஞ்சினை ஒடுக்கிடும் ஆற்றல் பெற்று ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக விண்ணிலே வாழுகின்றான்.
சூரியன் எப்படி ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று ஒளியின் சுடராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரம்
1.எந்த மனித இனத்திலிருந்து வந்தானோ அந்த மனித இனத்திற்கே ஒளி பாய்ச்சும் உணர்வினை
2.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதை நாம் நுகர்ந்து
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண் கொண்டு கூர்மையாக எண்ணும் பொழுது
4.அவன் உணர்த்திய உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகுகின்றது… அதனை நாம் பருகுதல் வேண்டும்.
விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ள பேருண்மை இதுதான்.
விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் செலுத்தி… உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கத்தை ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

மனிதனால்தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகின்றது
பூமியின் உள் நிலையை நாம் எப்படி விரயப்படுத்துகின்றோம்…? பூமியிலிருந்து எடுக்கப்படும் கனி வளங்களைக் காட்டிலும் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமில சக்தியை மனிதனால் மின்சாரம் காண, காற்று அலையில் உள்ள சக்தியைக் காட்டிலும் பூமியிலிருந்து அதிக மின் அலைகளை எடுக்கின்றோம்.
இப்படி பூமியையே நம் செயற்கையின் சோம்பேறி நிலைக்காகப் பல சக்திகளை விரையப்படுத்துகின்றோம்.
ஆங்காங்குள்ள கனி வளங்களை எடுத்துவிட்டாலும் வளரும் இயற்கை வளர்ந்து கொண்டே இருக்க இன்றைய செயற்கை விஞ்ஞானம் தடைப்படுத்துகின்றது.
பல ஆயிரம் ஆண்டு காலங்களாக பூமியிலிருந்து தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை எடுத்து வந்தே உள்ளார்கள். எடுக்க எடுக்க இவையும் வளர்ந்தன.
1.ஆனால் இக்குறுகிய நூற்றாண்டுகளில் பெட்ரோலிய இன திரவத்தையும்
2.மின்சாரம் காண்பதற்காக காந்த அலையின் அணுசக்தியையும் நாம் உறிஞ்சி எடுத்ததினால்
3.பூமியில் வளர வேண்டிய கனிவளங்களுக்குகந்த ஆகாரமான இவ்வமில குணங்கள் எல்லாம் தடைப்பட்டவுடன் அதன் வளர்ச்சியும் குன்றிவிட்டது,
பொன் முட்டையிடும் வாத்தின் கதையைப் போல. வாத்து தானாக தினசரி இட்ட முட்டைகளை பேராசை கொண்டு ஒரு நாள் அவ்வாத்தை அறுத்துப் பார்த்த நிலையைப் போல “நம் பூமியின் நிலையை நம் மனிதர்கள் சிதறடித்து விட்டனர்…”
1.மனிதனின் எண்ண வளர்ச்சியிலும் அறிவாற்றலிலும் ஞானத்திலும் வேகமில்லை.
2.ஆனால் நினைத்தவுடன் நினைத்தது நடக்க வேண்டுமென்ற பேராசையின் வெறி வேகம்
3.மனிதனுக்கு மிகவும் துரிதப்பட்டதினால் இயற்கையின் பொக்கிஷத்தை அழித்து வாழ்கின்றோம்.
இயற்கையின் சக்தியே ஒன்றுடன் ஒன்று கலந்து கலந்து ஒன்றிலிருந்து வெளிப்படும் அமிலமானது மற்றொன்றில் மோதி மற்றொன்று புதிய உயிர் ஜீவன் கொண்டு அதிலிருந்து வெளிப்படும் அமிலம் அதற்குகந்த தன்மையில் மாறு கொண்டு மாறி மாறியே வளர்ந்து வருகின்றது தொடர் வளர்ச்சியாக.
உங்களின் வினாவை எழுப்பலாம். இப்பூமியின் அமில குணம் இப்பூமியின் காற்று மண்டலத்திலேயே தான் உள்ளதென்கின்றீர். அப்படி இருக்க பூமியிலிருந்து பிரித்தெடுக்கும் சக்தி குணங்கள் மாறுபட்டால் மீண்டும் நம் பூமியின் ஈர்ப்பில் தானே நிலைபெற வேண்டும் என்று.
ஒன்றிலிருந்து பிரிக்கப்படும் அமிலமானது அதன் இன நிலையில் இருந்து ஆவியாய் காற்று மண்டலத்தில் சுழலும் நிலையில் அவ்வமிலத்துடன் மற்றொரு அமில நிலை மோதுண்டு அது ஏற்காத நிலையில் பிரியும் நிலையில் அதிலிருந்து ஒரு வகை அமிலம் வெளிப்படுகின்றது.
அதுவுமல்லாமல் மழை வரும் காலங்களில் ஏற்படும் இடியினால்தான் இவ்வுலகின் பல இயற்கையின் குண அமில வர்க்கங்கள் மாறுபாடு கொண்டு வளர்கின்றன.
இப்படியே மாறு கொண்டே அமில வளர்ச்சியில் சுழன்று ஓடும் நிலையில் மாறுபடும் இயற்கையின் வழித்தொடர் கொண்டு நாம் வாழ்ந்து வருகின்றோம்.
எல்லா வகை இயற்கை வளங்களுமே உருவிலும் சுவையிலும் வண்ணத்திலும் ஒளியிலும் ஒலியிலும் நீரிலும் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டேதான் உள்ளது. நம் நிலைக்கு ஒன்று போல் உள்ளனவாகத் தெரிபவையும் சிறுகச் சிறுக அதன் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே தான் உள்ளது.
இந்நிலை எல்லா மண்டலங்களின் நிலைக்கும் ஒத்ததுதான்.
1.நம் பூமியின் நிலையில் மட்டும் இப்பூமியின் மாறிடும் தன்மை குணத்தில் ஏற்படப்போகும் நிகழ்ச்சிக்கு
2.மனித ஆத்மாவினால் நிகழுகின்றது என்ற குற்ற உணர்வை ஏன் காணல் வேண்டும்…?
3.இயற்கையின் உந்தலினால் மனித எண்ணமே செயற்கை காண வழிபட்டதற்கு மனிதனைக் குற்றம் காணலாமா…? என்ற வினா எழும்பலாம்.
மனிதனால் ஏற்படுத்திக் கொண்ட இத்தீய அமில குணத்தினால்தான் நம் பூமியின் இயற்கை பாழ்பட்டது.
மனிதனால் அரசர்கள் என்றும் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் மனித ஆத்மாவுக்குகந்த குணத்தைப் பிரித்துக் கண்டு ஒருவனை உயர்த்தி ஒருவனை அடிமை கொண்டு வாழ்ந்த எண்ணத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டு பேராசையில் அதிகப் பொருள் சேர்த்து ஒருவனை அழிக்க ஒருவன் வாழ்ந்து வந்ததின் நிலையினால் குண அமிலங்களில் மாறுபட்டு
1.இயற்கையில் இருந்த அணுகுண்டுகளையும் அணுக்கதிர்களையும் காற்று மண்டலத்தில் கலக்கவிட்டு
2.இயற்கையைப் பாழ்படுத்திய மனிதனால்தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாமி (ஞானகுரு) எனக்கு அருள் வாக்கு கொடுத்தார்… நடக்கவில்லையே…! என்று சிலர் எண்ணுவார்கள்.
காரணம் என்ன…?
1.நீங்கள் இதைச் செய்யுங்கள்… உங்களுக்கு நடக்கும்…! என்று யாம் வாக்காகச் சொல்கின்றோம்
2.ஆனால்… தான் எதை எண்ணிக் கேட்டார்களோ அது மேலே மட்டுமே எண்ணம் இருக்கும்… அதே உணர்வுகள் வரும்…
3.யாம் சொல்லும் உபாயத்தை எடுத்து அதைப் பாய்ச்ச வேண்டுமென்றால் அது வராது.
அந்த நேரத்தில் வேதனை உணர்வுகள் அதிகமான பிற்பாடு “நடக்கவில்லையே…. சாமி..! இப்படி இருக்கின்றதே…!” என்ற வேதனையை எடுத்து எனக்குள் பாய்ச்ச முடிகிறது.
1.அந்த வேதனை உணர்வு நல்ல உணர்வுகளை உங்களுக்குள் அழித்துவிடும்.
2.நான் கொடுத்த வாக்கை அங்கேயே மடியச் செய்து விடுகின்றது.
கடும் நோயாக இருந்தாலும் சரி…
1.உங்களுக்கு நோயில்லை போ…! என்ற வித்தைத் தான் யாம் விதைக்கின்றோம்
2.அதை எடுத்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெருகுகிறது
3.மகரிஷிகள் அருள் சக்தி உள்ளே சென்றால் நோய் நீங்குகிறது
4.இதையே திரும்ப எண்ணுங்கள் என்று சொல்கிறோம்
யார் செய்கின்றார்கள்…? ஒருவரும் இல்லை…!
சாமி நீங்கள் வாக்கு கொடுத்தீர்களே…! அது எங்கே சென்று விட்டது…? இன்று இப்படி என்னைத் தான் (ஞானகுரு) நம்ப முடிகின்றதே தவிர உங்களை நம்புவதே இல்லை.
1.ஆனால் நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ…
2.அதை உங்கள் உயிர் உணர்வின் அணுவாக மாற்றும்…!
விநாயகர் சதுர்த்தி என்ற நிலையில் தீமைகளையும்… தீய வினைகளையும் நிறுத்துதல் வேண்டும். ஆனால் ஆசை நிலைகளில் தான் நாம் இன்று அலைந்து கொண்டிருக்கின்றோம்.
தீமைகளை நிறுத்தும் ஆற்றல் “அங்குசபாசவா” என்ற நிலையில் ஆத்ம சுத்தி என்ற கடுமையான ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம். தீமையைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்து வந்த நிலையின் வல்லமையைக் காட்டுவதற்குத் தான் விநாயகர் கையிலே அங்குசத்தைக் கொடுத்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
“மனிதன் எதனையுமே அடக்கி ஆளும் சக்தி பெற்றவன்” என்ற நிலையில் ஏன் இதைச் செய்ய முடியவில்லை…!
எவ்வளவு பெரிய யானையாக இருந்தாலும் சிறு அங்குசத்தை வைத்துதான் அதை அடக்குகிறார்கள். அதே போல் தான்
1.கடும் நிலையாக வாழ்க்கையில் வந்தாலும்
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வை வைத்து அடக்க முடியும்… அடக்குவீர்கள்.
குறுகிய காலமே மனித உடலில் வாழ்கின்றோம் என்பதை உணர்ந்து வரும் தீமைகள் அனைத்தையும் மகரிஷிகள் உணர்வை வைத்து அடக்கப் பழக வேண்டும். அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.
அது அல்லாது…
1.மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று இந்த உடலையே நாம் பெரிதாக மதித்தால்
2.இந்த உடல் நமக்குச் சொந்தமானது அல்ல…!
3.இதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே யாம் பதிவு செய்யும் அருள் ஞானத்தை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து எத்தகைய தீய வினைகள் வந்தாலும் அதை நிறுத்தும் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்தல் வேண்டும்.


அகஸ்தியன் மின்னலை நுகர்ந்தான்… துருவ நட்சத்திரமாக ஆனான்
அகஸ்தியன் தன் தாய் கருவிலேயே விஷத்தை வெல்லும் சக்தி பெற்றான். பிறந்தபின் அவனை மற்ற மிருகங்கள் பாம்புகளோ நுகர்ந்தால்
1.அதனுடைய விஷத்தன்மைகள் இவனுக்கு முன் ஒடுங்கி விடுகின்றது.
2.விஷத்தன்மைகள் அங்கே ஒடுங்கும் பொழுது இவனுக்குள் சிந்திக்கும் ஆற்றல் பெருகுகின்றது.
விஷத்தை ஒடுக்கிடும் உணர்வுகள் இவனுக்குள் அந்தச் சக்தி இருப்பதனால் மின்னல் வெளிப்படும் பொழுது அதில் விஷத்தன்மை அதிகம் உண்டு
1.அதனையும் நுகர்ந்து அவனுக்குள் அடக்கும் சக்தி வருகின்றது.
2.மின்னலின் ஒளிக் கற்றைகள் எவ்வளவு வீரியமாக இருக்கின்றதோ அதை நுகர்ந்தறிந்து
3.வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி ஒளியாக மாற்றிடும் உணர்வின் அணுக்களாக அவனில் பெருகுகின்றது.
4.மின்னல் தாக்கும் பொழுது அந்த ஒளிக் கற்றைகள் எவ்வளவு தூரம் விரிவடைகின்றதோ
5.அதைப்போல் அவன் எண்ணங்கள் வெகு தூரம் ஊடுருவி இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வாக அறியும் தன்மை பெறுகின்றான்,
6.வான் வீதியின் ஆற்றலையும் மின்னல்களையும் தனக்குள் ஒளிக்கற்றைகளாக மாற்றிக் கொண்டான்
7.அவன் உடலில் உயிரைப் போன்று உணர்வுகள் ஒளியானது.
திருமணமான பின் கணவன் மனைவியாக இணைந்து உயிரும் ஒன்றி துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.
அவர்கள் பெற்ற உணர்வினை நாம் நுகர்ந்தால் நம் வாழ்க்கையில் வரும் இருளை வென்று… பேரருளை இயக்கச் சக்தியாக மாற்றி ஒளி என்ற உணர்வுடன் வாழ்ந்து… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை நாமும் பெற முடியும்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர நுகர
2.நமது உடலில் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் உயிரை ஒத்த ஒளியாக மாற்றி
3.அந்த உணர்வின் துணை கொண்டு உடலை விட்டுச் சென்றால் நம் உயிர் துருவ நட்சத்திரத்தின் பால் ஈர்க்கப்பட்டு
4.நஞ்சை வென்ற உணர்வாக வெளிப்படுத்தும் அந்த உணர்வினை நாம் உணவாக எடுத்து
5.அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.
நம் உடலில் சிருஷ்டித்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இதே உடலை ஒளியாக மாற்றுகின்றது இதற்குப் பின் இன்னொரு உடல் இல்லை.
ஒளியின் சிகரமாகும் போது இருளை மாற்றிப் பேரின்ப நிலை என்று பேரானந்த நிலையாக… ஏகாந்த நிலையாக ஏகாதசி… பத்தாவது நிலையான கல்கி என்ற நிலை அடைய முடியும்.
அந்த மார்க்கத்தைத் தான் நமது ஞானிகள் காட்டினார்கள்.
1.இந்த உண்மையினை நமது குரு அறிந்தார் அதனின் வழியை எனக்கு வழி மொழிந்தார்.
2.அதன் வழி வாழ்க்கையில் நான் பின்பற்றி நடந்தேன்…. காடு மேடெல்லாம் அலைந்தேன்.
மிருகங்கள் எப்படி வாழ்கின்றது தாவரங்கள் எப்படி உருவாகின்றது இதனை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களின் உடல்கள் எப்படி மாறுகின்றது என்று குருநாதர் எம்மை அறியச் செய்தார்.
அதைத் தான் உங்களுக்கு இப்போது உபதேசிக்கின்றேன். இதை நீங்கள் பதிவு செய்து… மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… இருளை அகற்றி நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெறுவீர்கள்.
1.இந்த உடலில் வாழும் காலத்திலேயே அதிகமாக இதைப் பெருக்கி
2.உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டால் என்றும் நிலையான ஒளிச் சரீரம் சரித்திரம் பெற முடியும்.
மனிதனுடைய கடைசி எல்லை இதுதான்.

உலக மாற்றத்திற்குப் பின்…
இப்பூமியில் நிகழப்போகும் மாற்றத்தினால் இப்பூமியில் உள்ள இயற்கைக் குண அமிலத்தில், குண அமிலம் என்பது இப்பூமியின் மேல் பகுதியில் உள்ள அனைத்து ஜீவன் கொண்ட நிலைகள் எல்லாம் மாற்றத்தில் உருமாறும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலை இப்பொழுது பூமியின் தன்மை மாறும் பொழுது இதிலுள்ள எல்லா இயற்கை நிலையும் மாறிய பிறகு (இறந்த பிறகு) அதனுடைய அமில குணங்கள் எப்படி வெளிப்படுகின்றன…?
ஒரு கனி அழுகிவிட்டால் அக்கனியில் உள்ள நீர்ச்சத்தெல்லாம் உஷ்ணம் படப்பட வெளிப்படுகின்றது அல்லவா…? பல நாட்கள் நாட்களுக்குப் பிறகு அது காய்ந்து எதுவுமே இல்லாமல் அதனுடைய சக்கையும் மண்ணுடன் மண்ணாய் கலந்துவிடுகிறது.
அதைப் போன்று இவ்வுலக மாற்றத்தில் அழியப்படும் எல்லா இயற்கை ஜீவன்களும் இப்பூமியின் மேல் ஜீவனற்று உள்ள நிலையில்… இப்பூமியின் சுழற்சியினால் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் உஷ்ண அலைகள் அவற்றின் மேல் மோதுண்டு மோதுண்டு…
1.அதிலிருந்து வெளியாகும் ஆவி அமில குணத்தின் நிலையுடன் இப்பூமியிலிருந்து பிரிந்த உயிரணுக்கள் எல்லாம்
2.மீண்டும் உஷ்ண அலைகள் பட்டவுடன் ஜீவன் பெற வருகின்றன மாறு கொண்ட நிலையுடன்.
அதன் தன் நிலையிலேயே மீண்டும் வர முடியாது. ஒன்றிலிருந்து வெளிப்பட்ட அமில குணமே அதன் சுவாசத்தை ஈர்க்கும் உயிரணுவுடன் மோதுண்டு ஜீவனுக்கு வரும் பொழுது உரு மாறப் பெறுகின்றது.
எப்படி…? என்று வினா எழும்பலாம்.
கொசு எதற்காக இரத்தத்தை உறிஞ்ச மனிதனையும் மிருகத்தையும் மட்டும் கடிக்கின்றது…? தாவரத்திலும் பல நிலைகள் உள்ள பொழுது மனிதனின் இரத்தத்தைத்தானே அக்கொசு விரும்புகிறது.
மனிதனிலிருந்து அவன் இறந்து விட்டால் அவ்வுடலைப் புதைத்த நிலையிலிருந்து வெளிப்படும் பல கோடி அணுக்கள் இக்காற்றுடன் படர்ந்துள்ளன.
அந்நிலையில் மனிதன் உண்டு கழித்த சாக்கடை நீர்களிலும் மனித மலத்திலும் மனிதனால் உண்ணப் பெறும் கனிகளின் அழுகிய பழங்களில் இருந்தும் இக்காற்றில் படர்ந்துள்ள இவ்வுயிரணுக்களுக்கு ஆகாரம் எடுக்க அதன் மேல் மோதுண்டவுடன்… அங்குள்ள ஈரத்தின் உஷ்ண அலையில் இஜ்ஜீவ அணு பட்டவுடன் உருவ நிலை கொண்டு கொசுவாகி புழுவாகி உரு அமைப்புப் பெற்றவுடன் அது சுற்றி வாழும் தருவாயில் மனிதனின் இரத்தத்தையே ருசி காண வருகிறது.
நாய் உள்ள இடத்தில் நாய் உண்ணி என்னும் ஒருவகைக் கொசு இருக்கும். அதைப் போன்று ஒவ்வொரு மிருக இனத்திற்கும் அது அது உள்ள இடத்தில் அதன் இன வர்க்க உடலில் இருந்து வெளிப்பட்ட உயிரணுக்களின் அமில குணத்தில் பிறப்பெடுக்கும் அதன் இன வர்க்க சுவாச குணமுடைய பல உயிர்ப் பிறப்புக்கள் வளர்ச்சி கொள்கின்றன.
ஓர் உயிராத்மா ஓர் ஜீவ உடல் (மனிதனோ, மிருகமோ) அதன் நிலை மாறும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் உயிரணுக்கள் அதன் நிலைக்கொப்ப அமில குணமுடைய உருக்கொண்டு அந்நிலை (அவ் உருவ நிலை) மாறும் பொழுது… அதிலிருந்து சில நிலைகள் ஏற்பட்டு ஏற்பட்டு பல உருவ நிலைகளும் மாறி மாறி வரும் ஜீவ ஜெந்துக்களின் நிலையும் இன்றைய கால நிலையிலேயே ஏற்பட்டு வருகின்றது.
இவ்வுலகமே மாற்றம் கொள்ளும் தருவாயில் எல்லா ஜீவ ஆத்மாக்களின் நிலையும் மாறு கொள்ளும் பொழுது எந்த நிலையான மாற்றம் ஏற்படும் என்று எண்ண முடிகின்றதா…?
1.இன்றளவும் இவ்வுலகினில் நடந்து வந்த நிலையே இக்கலி மாறி கல்கியுகத்தில் எல்லா நிலைகளுமே மாறித்தான் நடக்கும்.
2.ஒன்றிலிருந்து ஒன்று மாறும் பொழுது ஒன்றைப் போல் ஒன்று இருக்காது. கல்கி என்ற புதிய உலகச் சுழற்சி தான் மீண்டும் ஏற்படும்.
இப்புதிய உலகில் இக்கலியில் மாற்றம் கொண்ட இயற்கைத் தன்மையினால் இவ் இயற்கையின் ஜீவ அணுக்களெல்லாம் கல்கி யுகத்தில் உருவ நிலைக்கு வரும்பொழுது “எண்ணிலடங்கா மாற்ற நிலை கொண்ட வளர்ச்சிகள்” ஏற்படப்போகின்றன.
இப்பூமியின் ஈர்ப்பில் ஜீவிக்கும் ஜெந்துக்களுக்கு மட்டுமா…? பறக்கும் பறவைகளின் நிலை எல்லாம் எந்நிலை…? என்ற வினா எழும்பலாம்.
மாற்றத்தினால் அப்பறவைகளின் நிலையும் மாறப் போகின்றது. இப்பூமியின் ஈர்ப்பு சுற்றளவில் உள்ள மண்டலத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் நிலையும் தான் இம்மாற்றத்தினால் மாறப்போகின்றது.
இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையினால் தான் உள்ளது. அந்நிலையில்
1.இம் மாற்றத்தினால் வெளியிடப் போகும் உஷ்ண அலையின் வெக்கையான அமில குணங்கள் மாறும் பொழுது
2.இப்பூமியின் ஈர்ப்பில் சுழன்று ஓடும் காற்று மண்டலத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு வழக்கமாய்ச் சுவாசித்த காற்றின் குண நிலை மாறும் பொழுது
3.அதன் எண்ண நிலையும் மாறு கொண்டு அதன் சுவாசத்தின் நிலையினால் அதன் ஜீவ உடலும் மாறத்தான் போகின்றது.
இந்நிலையினால் பலப் பல மாற்றங்கள் நிகழத்தான் போகின்றன.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் ஒருவருக்கொருவர் எத்தனையோ பேரிடம் பேசினாலும் அவர்களின் உணர்வுகள் நமக்குள் உண்டு. நம்முடைய உணர்வுகள் அவருக்குள் உண்டு. யாரும் பிரிந்து இல்லை.
யாரிடமும் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நாம் தப்பிக்க முடியுமா என்றால் முடியாது.
1.ஒருவர் உங்களைச் சாபமிடுகிறார்…
2.அதைப் பதிவாக்கிக் கொண்டு விட்டீர்கள் அவரிடமிருந்து நீங்கள் விலக முடியாது.
அதே போல் நீங்கள் சாபமிட்டால் அவர்களும் விலக முடியாது. இந்த உணர்வுகள் பதிவாகியிருக்கின்றது
1.உங்களை இணைத்துக் கொண்டே இருக்கும்
2.பாவிப்பயல் இப்படிச் செய்தான்… செய்தான்… செய்தான்… செய்தான்… என்று இணைத்துக் கொண்டே இருக்கும்.
நண்பனாக இருக்கும் பொழுது “எனக்கு உதவி செய்தான்” என்று எண்ணுகின்றோம் அது பதிவாகியிருக்கின்றது. அப்பொழுது இணைந்து தான் இருக்கின்றோம். அந்த நன்மையின் தன்மை வரும் பொழுது இருவருக்குமே அது நல்லதாக விளைகின்றது.
சந்தர்ப்பத்தால் பகைமையாகி… இருவருமே தீமையான உணர்வுகளைப் பதிவு செய்து விட்டால் இரண்டு பேருமே அதிலிருந்து பிரிந்து இல்லை.
இதில் எந்த அடிப்படையில் அதிகமாக அந்த நண்பரின் உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறீர்களோ அந்த உணர்வின் தன்மை வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
இதை எல்லாம் மாற்றிட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நமக்குள் வலுவாக்கிக் கொண்ட பின்
1.நாம் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்
3.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
5.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று அவர்கள் குடும்பங்கள் வாழ வேண்டும்
6.நாளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
7.சாவித்திரி போன்ற இரு உயிரும் ஒன்றி இணைந்த நிலைகள் வளர வேண்டும்
8.அவர்கள் குழந்தைகள் உலக ஞானம் பெற வேண்டும்
9.அவர்கள் தொழில்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
இப்படி நாம் எண்ணினால் நம் தொழிலும் சீராகிறது. அருள் ஞானிகள் உணர்வுகள் இங்கே விளைகின்றது… வளர்கின்றது.
மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் வலுவாக எண்ணும்போது
1.நமக்குள் பதிவான மற்றவரின் தீமையான உணர்வுகளை
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி மறைக்கின்றது.
ஆகவே… நமக்குள் பதிவான பிறருடைய நிலைகளைத் துருவ தியானத்தின் மூலம் குறைத்தல் வேண்டும்… அதைத் தூய்மைப்படுத்துதல் வேண்டும்… பகைமைகளை நிறுத்துதல் வேண்டும்.
தீமை என்ற நிலைகளை எண்ணாது அந்த மகரிஷிகள் சக்தி நாம் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்று அந்த உயர்ந்த நிலைகளை எண்ண வேண்டும். நமக்குள் அது உயர்ந்த நிலைகளாக வளர்கின்றது.
ஒவ்வொரு நாளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி நமக்குள் வரும் தீவினைகளை நிறுத்துதல் வேண்டும்.
இப்படி எல்லோருமே ஏகோபித்த நிலைகள் செயல்பட்டு இந்தப் பூமியில் கலந்துள்ள தீமையின் உணர்வுகளை வளராது நிறுத்துதல் வேண்டும்.
நாம் அனைவரும் இதன் வழி கொண்டு சொல்லப்படும் பொழுது பகைமை உணர்வை உருவாக்கும் அணுக்கள் உருவாவதில்லை. அத்தகைய உணர்வைச் சுவாசிக்கும் தன்மைகளும் அடைபடுகின்றது.
துருவ நட்சத்திரத்திலிருந்து அதிகாலையில் ஒளியான அலைகள் வருகிறது. அந்த ஆற்றலை நமக்குள் பெருக்குகின்றோம். எல்லோரும் ஏகோபித்த நிலைகள் அதைப் பரவச் செய்யும் போது
1.பகைமையை உருவாக்கும் உணர்வுகளுக்கு… அந்த அணுக்களுக்கு ஆகாரம் இல்லாது துரத்தி விடுகின்றோம்.
2.அஞ்சி ஓடும் நிலை வருகின்றது… சூரியனின் காந்த சக்தி கவர்ந்து சென்று விடுகிறது.
மனித உடலில் எடுத்துக் கொண்ட அத்தகைய பகைமை உணர்வுகள் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் செல்லாது. ஆனால் அந்த உணர்வின் தன்மை அதிலிருந்து தோன்றியது தான்.
பூமியின் சுழற்சியின் நிலைகள் கொண்டு கடல் அலைகள் அதை இழுத்துக் கொள்கிறது. பகைமை உணர்வுகளைத் தனக்குள் அணைத்துக் கொள்வதும் (அமிழ்த்தி) தனக்குள் மோதும் வெப்பத்தால் அதை அடக்கி இந்த உணர்வின் தன்மை ஆவியாக மாற்றிவிடும்.
காற்று மண்டலமான இந்தப் பரமாத்மா தூய்மை அடைகின்றது… நம் ஆன்மாவும் தூய்மை அடைகிறது.


உங்களுக்காக நான் பிரார்த்தித்தால்… உங்கள் கஷ்டம் எனக்குள் வராது
சிலர் எனக்காக வேண்டி நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது… எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்பார்கள்.
1.உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்து…
2.”நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று நான் நினைத்தால்
3.நீங்கள் சொன்ன கஷ்டத்தை எனக்குள் வளராதபடி தடுத்து
4.எனக்குள் நல்லதை வளர்த்துக் கொள்ள முடியும்
ஆனால் உங்கள் கஷ்டத்தை மாற்றுவதற்கு நீங்கள் எண்ணினால் தானே நன்றாகும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் இது உங்களுக்குள் நல்லதை உருவாக்கும்.
நிறையப் பேர் எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆக நம்மை இயக்குவது யார்…? நமக்குள் உருவாக்குவது யார்… நம்மை ஆள்வது யார்…?
திருவெங்கடாஜலபதி என்றால் யார்…? “ஏழுகொண்டலவாடா” என்றும் சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு நம்மை ஆள்பவன் வெங்கடாஜலபதி.
திருவெங்கடாஜலபதி – நமது உயிர் தான் நம்மை ஆளுகின்றது. அங்கே தங்க ஆபரணங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்
1.நல்ல மனங்களை கொண்டு இந்த உடலை ஆட்சி புரிய வேண்டும் என்பதற்காகச் சிலையைப் போட்டு வைத்துள்ளார்கள்.
2.நம்மை ஆள்வது நமது உயிர் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.
இங்கே ஸ்ரீவில்லிபுத்தூரில் அரங்கநாதனைக் காட்டுகின்றார்கள்.. மனைவி ஆண்டாள். இந்த உயிரின் தன்மை அரங்கநாதனாக இருக்கின்றது எந்த குணங்களை எண்ணுகின்றோமோ அது தான் நம்மை ஆளுகின்றது.
நான் (ஞானகுரு) இப்போது சொல்லக்கூடிய உணர்வுகளை நீங்கள் கேட்டால் இந்த உணர்வின் தன்மை உங்கள் உயிர் அரங்கநாதன் (உடலான அரங்கத்தில் நாதங்களை எழுப்பி) ஆக இயக்கி… நுகர்வதை இசையாக மாற்றுகின்றது… அந்த உணர்வின் சக்தி கொண்டு தான் உங்களை ஆளுகின்றது.
ஆண்டாள் என்று காரணப் பேர் வைத்து
1.நாம் எதை ஆள வேண்டும்…? எப்படி ஆளச் செய்ய வேண்டும்…? என்று சாதாரண நிலைகள் கொண்டு
2.ஒவ்வொன்றிலும் தெளிந்து தெரிந்து எப்படி வாழ வேண்டும்…?
3.தீமைகள் எப்படி அகற்ற வேண்டும்…?
4.வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.
ஆண்டாள் திருப்பாவையில் என்ன சொல்கின்றார்கள்…?
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…! இந்த உணர்வின் தன்மை நாம் எடுக்கும் பொழுது
1.அந்த மதியின் உணர்வாக நம்மை ஆளும். அதன் செயலாக நம் செயலும் இருக்கும்.
2.நமக்குள் நம் உணர்வின் தன்மை இங்கே அரங்கத்திற்குள் அமைந்திருக்கும் சக்தியாக
3.அதன் இசையாக அதனின் உணர்வின் செயலாக நம்மை இயக்குவான் என்று பொருள்படும்படி தத்துவங்களை எழுதி இருக்கின்றார்கள்.
மனிதன் புரிந்து தன் வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும்…? உயிரின் இயக்கம் எது…? நாம் நுகர்ந்த உணர்வின் சக்தி எது…? அது எப்படி நம்மை ஆளுகின்றது…? என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
1.அந்த ஞானிகள் உணர்வு மக்களைக் காக்கும்.
2.நம்மைக் காக்க உதவும் உலகைக் காக்க உதவும்
3.உலகை அருள் ஒளியாக மாற்ற உதவும்.
ஆகவே… மகரிஷிகள் காட்டிய அருள் உணர்வு வழிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நம் உணர்வுகளை ஒளியாக்கி… நம் சொல்லின் தன்மை பிறரின் இருளைப் போக்கி… உலக மக்கள் அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தைப் பெறும் தகுதியாக நாம் உருவாக்க வேண்டும்.

பூமி பரிசுத்தமடையும் காலம்
மனித ஆத்மாக்களுக்குத் தான் வழிமுறையும் செயல் திறமையும் செய்விக்க உணர்த்துகின்றேன். இவ்வுலக மாற்றத்தில் மிருகங்களின் நிலை என்ன…? மற்ற ஜீவராசிகளின் நிலை என்ன…?
1.இவ்வுலக மாற்றத்தினால் மனிதனின் நிலை மட்டும் மாற்றப்படுவதில்லை.
2.இப்பூமியின் இயற்கைக் குணமே மாற்றம் கொள்ளப் போகின்றது.
நல்ல கனியை அது கெடாத வரைக்கும் சுவை உணர்ந்து உண்ண முடிகின்றது. அதே கனி அழுகிவிட்டால் நாற்றம் அடிக்கின்றது. அதைப் போன்று மாற்றம் கொள்ளும் தருவாயில்… நல் உணர்வு கொண்ட ஆத்மாக்கள் மற்ற ஜீவ ஜெந்துக்கள் இவற்றின் நிலையில் இருந்து “மாறும் அமில குணங்கள் தான்” இவ்வுலகமே கல்கிக்குச் செல்லும் அவதார நிலைப்படுத்துகிறது.
தீய எண்ணத்தை கொண்ட விஷமான அமில குணங்கள் இவ்வுலகினில் இக்கலியுடன் மாறப் போகின்றது. ஜீவராசிகளில் உன்னத சக்தியுடைய
1.நம் மனித ஆத்மாக்கள் காணாத பல கோடி நிலைகள் உண்டு.
2.பல கோடி தாவர வர்க்கங்களுண்டு
3.நாம் கண்டுணரும் பட்சிகளும் மற்ற சாது குணங்கள் கொண்ட பிராணி வர்க்கங்களும் பல உண்டு.
இவ்வுலக மாற்றத்தின் போது அந்தந்த இடங்களின் மாற்ற நிலைக்கொப்ப அங்கங்குள்ள ஜீவன்கள் எல்லாமே இன்றைய நிலை கொண்ட ஜீவநிலை உருமாறி… அவ்வுயிரணுக்கள் அவ்வுருவிலிருந்து பிரிந்தவுடன் அவ்வுருவுக்குண்டான ஆவியான அமில குணங்கள் நற்குணங்கள் எல்லாம் ஆவியான நிலையில் திடப்பட்டுப் பல உன்னத சக்தி கொண்ட பல கனிவளங்கள் இப்பூமியில் தோன்றிட… கலிக்குப் பிறகு கல்கியில் செயல் கொள்ள உதவுகின்றது.
அப்பொழுது அக்கல்கியில் எந்நிலை கொண்ட தன்மையில் உயிரணு வெளிப்பட்டதோ அதன் சக்தி இப்பூமியில் கல்கியில் உருவாக்கும் உயிர்த் துடிப்பின் உன்னத சக்தியில் அவ்வுயிரணுவின் உருவ ஜொலிப்பு இருந்திடும்.
இவ்வுலகம் முழுமைக்கும் இன்றுள்ள உண்மையின் உயிர் ஜீவ நற்சக்திகள் அதிகம். கடலும் மலையும் மடுவும் எல்லாமே. ஜீவத் துடிப்புள்ள சக்திதான்.
1.இத்தீய எண்ணங்களும் தீய செயலும் புரிவதெல்லாம் மனித ஆத்மாக்களின் தொடர் தான்.
2.மனிதனிலிருந்து சென்ற சென்ற மிருகங்களும் சில உள்ளன.
3.இம்மாற்றத்தினால் இத்தீய சக்திகள் மாறப் போகின்றன.
எத்தீய சக்தியும் கல்கிக்கு மருந்தாகச் செல்கின்றது. எந்த நிலையில்?
இப்பொழுது எப்படி இக்காற்றில் உள்ள விஷத்தன்மையை சில விஷச் செடிகள் தன்னுள் ஈர்த்துக் கொண்டு இக்காற்றை சுத்தம் ஆக்குகின்றனவோ அதைப் போல் பல நிலைகளை இன்றுள்ள தீய குணங்களும் இம்மாற்றத்தினால் வளர்ச்சிப் பெறப் போகின்றன கல்கியில்.
இவ்விஷமான காற்று எங்கு செல்லும்…?
இவ்வுலகம் மாற்றம் பெற்றால் எல்லாமே ஆவி நிலையாகி அமில குணப்பட்டு திடப்பட்டு ஒன்றுடன் உராய்ந்து வளர்ந்து கொண்டே தான் உள்ளது. தீய சக்தியையும் அழிக்க முடியாது… நற்சக்திகளையும் அழிக்க முடியாது.
இம்மாற்றத்தினால்…
1.இவ்வுலகத்துடன் கலந்துள்ள காற்று மண்டலத்தின் கரியமில வாயுவின் விஷச் சக்தி
2.இவ்வுலகின் இயற்கைத் தன்மையினால் இவ்வுலகம் மாறும் தருவாயில்
3.இவ் இயற்கைக் குணத்தில் இருந்து வெளிப்படும் ஆவியான அமில சக்தி அதிகப்பட்டு அதன் திடத்தினால்
4.இக்காற்று உலகத்தின் இன்று சுழன்றுள்ள தீய விஷமான அமிலக் குணத்தை இந்நற்சக்திகளின் அமில குணங்கள் மோதுண்ட பொழுது
5.சுழன்று கொண்டுள்ள இக்காற்று மண்டலத் தன்மை மேல் நோக்கி இப்பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் சென்று விடுகின்றது.
இப்பூமியில் ஈர்ப்பின் காற்று குண அமில நிலைக்கு மேல் இத்தீய சக்தி பல நூறு மைல்களுக்கு மேல் நோக்கி உயர்ந்தும் சக்தி பெற்று… பால்வெளி மண்டலத்துடன் பல திசைகளில் பரவி விடுகின்றது. அதன் தொடரில் அந்தந்த குண நிலைக்கொப்ப உள்ள மண்டலங்களில் இந்நிலை சேர்த்து விடுகின்றது.
ஒரு நிலையில் சுழன்று கொண்டுள்ள இச்சக்தி நிலையே பிரிந்து செல்லும் பொழுது அதன் தன்மையிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
கடும் விஷமான வைரம் எப்படி ஜொலிக்கின்றது…? அப்படித்தான் இம்மாற்றத்தினால் பல உன்னதத் தன்மைகள் நிகழப் போகின்றன.
1.இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் புனிதப்படும் பொழுது
2.இப்பூமியில் வளரும் ஜீவனின் நிலை எந்நிலை கொண்ட புனிதத்தன்மை பெறும்…? இதனை உணர்ந்து செயல் கொள்ளுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஞானிகள் காட்டிய நிலையில் இந்து என்றோ முஸ்லீம் என்றோ கிறிஸ்தவர் என்றோ எதுவுமே கிடையாது.
1.உணர்வுக்கொப்ப உணர்ச்சியும்
2.உணர்ச்சிக்கொப்ப அதன் இயக்கமும் என்ற நிலைகள் தான் ஞானிகளால் காட்டப்பட்டது.
எங்களுக்கு ஆண்டவன் இப்படிச் சொல்லி இருக்கின்றார் என்று ஒரு மதத்தின் சாரார் சொல்கின்றார்கள். அதை அவர்கள் பதிவு செய்கின்றார்கள்.
இன்னொரு சாரார் எங்களுக்குக் கடவுள் இப்படிச் சொல்கிறார் என்று சொல்கின்றார்கள். அந்த உணர்வை எடுத்துக் கொண்டபின் இந்த உணர்வுக்கும் அந்த உணர்வுக்கும் ஒத்துக் கொள்ளாது.
கர்த்தர் வான்வீதியிலிருந்து கொண்டு வந்தார் என்று சொல்கின்றார்கள். ஞானிகள் சொன்ன உண்மையின் வழிப்படி கர்த்தர் என்றால் “நமது உயிரே கர்த்தராக இருக்கின்றது…” நாம் எண்ணிய வழிப்படி அது இயக்குகின்றது.
இன்னொரு சாரார் “ஆண்டவா…” என்று சொல்கின்றார்கள். நம்மை ஆள்வது யார்…?
1.எதனின் உணர்வை எடுத்தோமோ அது உடலாக மாறுகின்றது
2.அதை ஆள்வது யார்…? நம் உயிர் தான்.
3.உள் நின்று இயக்கும் சக்தி உடலை உருவாக்குவது கடவுள்.
4.உருவாக்குவதால் அவனுக்குப் பெயர் ஈஸ்வரா… என்று சொல்கின்றோம்.
உருவாக்கிய உணர்வுகள் கொண்டு நம்மை ஆளும் ஆண்டவனாக உயிர் இருக்கின்றான். அவன் தான்… நாம் எண்ணிய உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை இறையாக்குகின்றான்.
1.இறையின் உணர்வு உடலாகின்றது
2.இந்த உணர்வின் இயக்கம் செயலாக மாறுகிறது… தெய்வம் ஆகின்றது…! என்று
3.அகஸ்தியன் இதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்… இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை எல்லாம் உங்களுக்கு இடையில் இடையில் இணைத்துக் கொடுக்கின்றோம். அடுத்து உபதேசம் கொடுக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால்… தெளிவாக ஒன்று போல நீங்கள் உண்மைகளை உணர முடியும்.
உதாரணமாக காரின் உறுப்புகளைத் தனித்தனியாகச் செய்து எடுத்து வைத்திருந்தாலும் இது இன்னது தான் செய்யும்… இது இன்னதுதான் செய்யும்… என்று அது எல்லாவற்றையும் சேர்த்து இணைத்து வந்த பிற்பாடு அதனதன் வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறது. கார் முழுமையாகிறது.
அதே போன்று இங்கே நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்றால் மைக் இருக்கின்றது. அது ஒன்றோடு ஒன்று இணைத்து ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்கின்றது. அப்படிப்பட்ட இடத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் கரா…புரா… என்று சப்தம் போடும்.
அதைப் போன்றுதான் இயற்கையின் உண்மை நிலைகளை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம். அந்த இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்…?
1.தெய்வத்தை நாங்கள் இப்படி எல்லாம் கும்பிட்டு வந்தோம்.
2.ஆனால் இவர் இப்படிச் சொல்கிறாரே…! என்று எண்ணினால் கரா… புரா… ஆகிவிடும்.
விநாயகரை எப்படி எல்லாம் நாம் கும்பிட்டோம்…! களிமண்ணால் செய்து வைத்த விநாயகரைக் கரைத்தோமே. எல்லாமே நன்றாக இருந்தது. ஆனால் சாமி இப்படிச் சொல்கிறார்… என்று
1.இரண்டையும் கிராஸ் (இடைமறித்து) செய்து கொண்டிருந்தால்
2.நான் சொல்வதை நீங்கள் கிராஸ் செய்து கொண்டே இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்
3.கரா… புரா… என்று கடைசியில் எதுவுமே அர்த்தமே ஆகாது.
ஆகவே…
1.யாம் உபதேசிப்பதை முதலில் பதிவு (ரெக்கார்ட்) செய்து கொள்ள வேண்டும்
2.பதிவு செய்த பிற்பாடு அப்புறம் வாழ்க்கையில் எது எப்படி இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ள முடியும்.
கரா..புரா… பண்ண விடாதபடி யாம் சொல்வதை அப்படியே கிரகித்துக் கொண்டு வாருங்கள். ரெக்கார்ட் ஆகிக் கொண்டே இருக்கும்
1.அதற்கு அப்புறம் உங்கள் உடலில் இருக்கக்கூடிய நிலைகள்
2.வாழ்க்கையில் ஒவ்வொன்றும் அது எப்படி வந்தது…? என்று எண்ணிப் பார்த்தீர்கள் என்றால்
3.இது நல்லது… இது கெட்டது… என்று அறிய முடியும்
4.உங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன்.
காரணம் இயற்கை எப்படி வளர்ந்தது…? நாம் எப்படி மனிதனாக வந்துள்ளோம்…? இனி அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்வது.


தீமை செய்யும் உணர்வுகளை நம் ஆன்மாவிலிருந்து “ஒரு சாணுக்கு வெளியே” தள்ளிப் பழகுதல் வேண்டும்
வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இவை எல்லாவற்றையும் இராமாயணத்தில் வாலியாகக் காட்டுகிறார்கள்… வலிமை மிக்க சக்தி.
அந்த வாலியை இராமன் என்ன செய்தான்…?
1.குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் அடித்து அதை மூடுகின்றான்…
2.வாலியினால் வெளியே வர முடியவில்லை. அவன் திறமைகளைக் காட்ட முடியவில்லை.
ஏனென்றால் வாலி யாரைப் பார்த்தாலும் அவருடைய வலிமையை நுகர்ந்து எல்லாவற்றையும் அடக்கி விடுவான். அவன் நிலைக்குத்தான் நாம் போக வேண்டும் என்பதற்காக “அதை மாற்றியமைக்கும் நிலைக்கு” இதைச் சொல்கின்றார்கள்.
தெளிவாக ரூபமாக்கிக் காவியம் படைத்து இந்த உணர்வை நாம் எண்ணினால் சீதாராமா. இராமன் என்ன செய்கின்றான்…?
1.கெட்டதைப் பார்க்கவில்லை… அதை மூடி விடுகின்றான்.
2.உடலில் உள்ள கெட்ட அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை அது வாடுகின்றது.
இதைப்போல் நாம் என்ன செய்ய வேண்டும்…?
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.நம் தலைக்கு மேல் இருப்பதை… பாறை மாதிரி இருப்பது தான் துருவ நட்சத்திரம்
2.அந்த உணர்வை எடுத்து நினைத்து இங்கே புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.
காலையிலிருந்து நாம் எத்தனை பேரைப் பார்க்கின்றோம். எல்லாம் இந்த வழியில் தான் உள்ளே செல்ல வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இங்கே வலுவாகச் சேர்த்துக் கொண்ட பிற்பாடு அதற்கடுத்து கண்ணின் நினைவு உடலுக்குள் செலுத்தி…
1.உடலில் எத்தனை கோடி குணங்கள் உண்டோ அத்தனை குணங்களுக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.பேரொளியாக மாற வேண்டும் என்று நாம் எண்ணங்களைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
இதைத்தான் கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது கண்ணின் நினைவை உடலில் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் அந்த அணுக்களுக்கு உள்ளே நினைவு செலுத்தி தீமைகளை நிறுத்திப் பழகுதல் வேண்டும்.
அப்போது அதை மறைத்துக் கொள்கின்றது. இந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உள்ளே அணுக்கள் இழுக்கக்கூடியது… அதாவது வேதனைப்படுத்துவது கோபப்படுத்துவதோ சஞ்சலப்படுத்துவது பொறாமைப்படுத்துவது என்னை இப்படி பேசினானே என்ற எண்ணங்கள் கொண்ட உணர்வின் அணுக்களை நிறுத்தி விடுகின்றோம்.
அருள் உணர்வைக் கூட்டக் கூட்ட அது வலுப் பெறுகிறது.
1.உயிர் வழி தான் எல்லாமே உள்ளே செல்ல வேண்டும்
2.ஆனால் அங்கே துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் போட்டு நாம் அடைத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்வை வலுப்படுத்துகின்றோம்… அது வலுவான பிற்பாடு மற்றதைத் தள்ளி விட்டு விடுகின்றது.
வேப்பமரம் பக்கம் ரோஜாப்பூ மணம் சென்றால் விடுமா…? ரோஜாச் செடியின் அருகிலே வேப்பமரம் மணம் சென்றால் விடுமா…?
இதைப் போன்று அருள் உணர்வின் வலிமையை நாம் அதிகமாக்கிக் கொள்கின்றோம். அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் சேர்த்தவுடனே இங்கே அடைத்து விடுகின்றோம்.
உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களுக்குச் சாப்பாடு இல்லை.
1.இந்த உணர்வின் வலுத்தன்மை ஆகி அழுத்தமான பின் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி வருகிறது.
2.தள்ளும் போது ஒரு சாணுக்கு மேலே ஆன்மாவிலிருந்து விலக்கி விட்டால் சூரியன் இழுத்துக் கொண்டு சென்று விடுகிறது.
3.நம் ஆன்மா தூய்மையாகின்றது.
இந்த பழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் கொண்டு வருதல் வேண்டும்.

மற்றவர்கள் நிலையை… உயர்வு கொண்டும் தாழ்வு கொண்டும் எண்ணிடலாகாது
ஞான ஒளி பெறும் பக்குவத்திலும் ஒருவரைப் போல் ஒருவர் நிலை இருந்திடாது. ஒவ்வொரு உடல் அமில குண வளர்ச்சியைக் கொண்ட பக்குவ மேம்பாட்டில் வித்திடும் ஞான வளர்ச்சி தான் அதன் வழித் தொடர் பெறும்.
ஒன்றை ஒத்த விதை நெல்லை இரண்டு தோட்டக்காரர்கள் அவரவர்கள் ஊரில் பயிர் செய்தாலும் அம்மண் நீர் அங்குள்ள சீதோஷ்ண நிலை அதைப் பயிர் செய்யும் மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் வளர்ப்பு முறை இவை கொண்டுதான் அப்பயிர் வளர்ந்து பலன் தரும்.
ஒரு தோட்டத்தில் வளர்ந்த விதை நெல்லையே மாறு கொண்ட ஊரில் பயிர் செய்யும் பொழுது அதன் மகசூலும் சுவையும் வேறு கொண்டுதான் அமைகின்றது. அதைப் போல்
1.ஞானத்தின் ஈர்ப்பும் அதை ஈர்த்துச் செயலாக்கும் முறைப்படித் தான்
2.நம் ஞான ஒளியும் பிரகாசிக்கும்.
ஒருவர் நிலையை வைத்து மற்றவர்கள் நிலையை உயர்வு கொண்டும் தாழ்வு கொண்டும் எண்ணிடலாகாது.
எல்லோரும் (ஞானத்தின் வழித்தொடர் பெற்றவர்கள்) தான் பெற்ற ஞான வளர்ச்சியின் முக்தி நிலை கொண்ட பிறகு… தனித்தனி ஒளிகளாக வளர்ச்சி கொண்ட ஞான ஒளி எல்லாம்… சப்தரிஷிகள் போன்றோரின் நிலை பெற்ற பிறகும் அவரின் வளர்ச்சி நிலை பெற்ற அமில குணத்தின் வட்டச் செயலில் தான் செயல்படுகின்றார்.
1.எல்லோரும் பக்தி கொண்டு வணங்குவதும்… ஒன்றை வைத்து ஒன்று இல்லை
2.ஞான வளர்ச்சி பெறும் நிலையிலும்… ஒன்றை ஒத்த நிலையில் ஒன்று இல்லை.
3.சப்தரிஷியாய் நிலைக்கப் பெற்ற நிலையிலும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை
4.மண்டலங்களாய் உருளும் மண்டலங்களும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை.
ஆனால் ஒன்றின் சக்தி கொண்டு ஒன்றி வாழும் இவ்வெல்லாமில் எல்லாமுமே ஒன்றே சக்தியாக ஆதி சக்தி ஒன்றி உள்ளாள் என்பதனை உணர்ந்து…
1.எவ் ஆத்மாவையும் குறை கண்டும் சலித்தும் வாழாமல்
2.நம் நிலையில் ஏற்பட்டுள்ள அமில குணத்தின் சக்தியின் வீரிய நிலையை
3.எவ்வழியில் அதிகமாகப் பெற்று வழி பெற்றோமோ அதன் வளர்ச்சியில் ஞானத்தை வழிப்படுத்துங்கள்.
நம் முன்னோரின் கூற்றுப்படி விதைத்த விதைத்தானே முளைக்கும் என்பதனை உணர்ந்து ஞானத்தின் வழித்தொடர் பெறுங்கள்.
காட்சி;-
சில கனிகளைப் பறித்து அப்படியே உண்ணுகின்றோம். சில கனிகளைத் தோல் நீக்கப்பட்டு உண்ணுகின்றோம். பலாப்பழம் போன்ற கனிக்கு அதன் முள்ளை அகற்றி அதற்குள் இருக்கும் சதைப் பகுதிகளைப் பிரித்துச் சுவையான பலாச்சுளையை எடுத்து கொட்டை நீக்கித்தான் உண்ணுகின்றோம்.
நம் முன்னோர்களால் “முக்கனியின் சுவையை எடுத்து” என்ற சொல் நாமத்தின் அமுதிசையைக் கேட்டு மகிழ்ந்துள்ளோம். முக்கனியை வைத்து வணங்குகின்றோம்.
மாங்கனியை அப்படியே கடித்துச் சுவைத்து உண்டு அதன் கொட்டையை வீசிவிடுகின்றோம். வாழைப்பழத்தின் தோலை நீக்கி அதை அப்படியே சுவைக்கின்றோம். பலாச்சுளையை எடுக்கப் பல வேலைகளைச் செய்துதான் உண்ண முடிகின்றது.
இதன் உருவ நிலை என்ன…?
விளக்கம்;-
முக்கனிக்கும் சுவை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்குவ நிலை கொண்டு தான் அதனை நாம் உண்ண முடிகின்றது.
அதைப்போல் நம் ஆத்ம ஞானத்தை இவ்வழித்தொடர் எல்லாம் பெறும் நிலைப்படுத்தி
1.மாங்கனியை ஒத்த பூஜை வழிபாட்டைப் பக்தியில் சுவைத்து மற்றவற்றைக் கொட்டையைப் போல் அகற்றி
2.நம் எண்ணத்தைச் சுற்றியுள்ள உலக நிலைகளை வாழைப்பழத்தின் தோலைப் போல் நீக்கி ஞான வழி போல் பழத்தை உண்டு
3.நம்முள் கலந்துள்ள பல அணுக்களின் முட்களை நீக்கிச் சதையான நிலையை எண்ணாமல் நம்முள்ள சுவையான சுளையைச் சுவைத்திட
4.கொட்டை என்ற எதிர்நிலையை நீக்கி சுவைத்திடல் வேண்டும் என்ற பக்குவத்தை உணர்த்த முக்கனியைப் படைத்தார்கள் ஞானிகள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த வாழ்க்கையில் உங்களை அறியாது தீமைகளைச் சந்திக்கும் நேரங்கள் எல்லாம் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் அறியாது வந்த தீமைகள் நீங்க வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று எண்ணி
4.ஒவ்வொரு நொடியிலும் நம்மை அறியாது உட்புகுந்த தீமைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்தால் ஆத்ம சுத்தி என்ற நிலை ஆகின்றது. அருள் ஞானியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்குகிறது.
ஆகவே இந்த மனிதப் பிறவியில் நல்லதை வளர்க்கும் நிலைகள் பெற்ற நாம் அடுத்து இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே சென்றால் கல்கி அவதாரம் என்ற நிலையை அடைய வேண்டும். கல்கி என்பது ஒளிச் சரீரம்.
1.எந்த மனிதனின் ஈர்ப்புக்கும் எந்த மிருகத்தின் ஈர்ப்புக்கும் செல்லாது
2.மெய் ஒளி செல்லும் பாதைகளில் நீங்கள் ஒவ்வொருவரும் சென்று
3.என்றும் பதினாறு என்ற ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பது.
உடலை விட்டுச் சென்றால் எவரின் உடலும் நம்மை ஈர்த்திடாது எவரின் உடலுக்குள்ளும் நாம் சிக்க மாட்டோம். எதிலுமே நாம் சிக்காது அந்த அருள் ஞானியின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று பிறவா நிலை என்னும் அழியா ஒளி சரீரமாக பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம்.
அதை நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் பிரார்த்திக்கிறேன்… உங்களை ஆசீர்வதிக்கின்றேன் (ஞானகுரு).
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற வேண்டும்… நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்… அவர்கள் தொழில்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்…! என்ற எண்ணத்துடன் எம்மை அணுகினால் யாம் கொடுக்கும் ஆசீர்வாதம் நல்ல பலனைத் தரும்.
தீய உணர்வுகள் உங்களுக்குள் அடங்கி நிற்க வேண்டும் என்ற நிலையிலே தான் அருள் வாக்குகளை உங்களைப் பார்த்து ஆசியாகக் கொடுக்கின்றோம்.
1.ஆகவே ஆசி கொடுக்கும்போது சீராக நேராகப் பார்க்க வேண்டும்.
2.என் (ஞானகுரு) கையில் ஆசீர்வதிக்கும் போது இந்தக் கையிலிருந்து வெளிப்படும் உணர்வை நீங்கள் சுவாசிக்க நேர்கிறது.
3.அப்போது தீயது விளையாது தடுத்து நிறுத்த உதவும்
அந்த அருள் ஞானியின் சக்திகளை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் எடுத்தால் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் அடிபணிகின்றது.
அதே சமயத்தில்
1.ஞானிகள் உணர்வுகள் மிகச் சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் வளர்ந்து
2.உங்கள் சொல்லும் உங்கள் உடலிலிருந்து வரக்கூடிய மணமும்
3.பிறிதொருவர் உங்களைப் பார்க்கும் போது இந்த உணர்வுகள் அவர் உடலிலே ஊடுருவி
4.உங்களுக்கு நண்பனாகவும் உதவி செய்வதாகவும் அமைந்து
5.பகைமையை நீக்கிடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
6.பகைமையற்ற நிலைகள் கொண்டு மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிலையில் வாழ முடியும்.
ஆகவே…
1.இந்த மனித வாழ்க்கையில் வரும் தீயவினைகள் எதுவானாலும் அது சந்தர்ப்பத்தால் ஏற்படுவது தான்.
2.மனிதனான நாம் அருள் ஞானியின் நிலையை இப்போது நமக்குள் சேர்ப்பதும் ஒரு சந்தர்ப்பம் தான்.
நாம் வாழ்க்கையில் பிறர் சண்டையிடும் போது நாம் அதைக் கூர்ந்து கவனிப்போம் என்றால் அந்தச் சந்தர்ப்பம் நமக்குள் சண்டையை ஊட்டும் உணர்வாக விளைந்து விடுகிறது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு அதைக் கடந்து சென்ற அந்த ஞானிகள் உணர்வுகள் தீமையற்ற உணர்வாக நமக்குள் விளைய வைத்து அகப்பொருளையும் புறப்பொருளையும் நாம் தெரிந்துணர்தல் வேண்டும்.
அப்படி உணரும் உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பெரு வீடு பெரு நிலைகள் அடைந்து என்றும் அழியா ஒளி சரீரத்தைப் பெறும் நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.


வேக வைக்காது பச்சையாகச் சாப்பிடுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது
சில சாமியார்கள் என்ன சொல்வார்கள்…? என்றால்
1.நான் வேக வைத்து மட்டும் எதையும் சாப்பிடுவதில்லை.
2.அப்படியே பச்சையாகத் தான் சாப்பிடுவேன் என்று சொல்வார்கள்.
பச்சையாகச் சாப்பிட்ட பின் பாருங்கள். கத்திரிக்காயோ முள்ளங்கியோ வெண்டைக்காயோ வெங்காயத்தையோ சாப்பிட்டவர்கள் அருகிலே சென்றோம் என்றால் அதனதன் வாசனை அவர் உடலில் இருந்து நிச்சயம் வரும்.
ஆடு மாடுகள் எல்லாம் என்ன செய்கின்றது…? எந்தத் தழைத் தாம்புகளைத் தின்னுகின்றதோ அதனின் உடலில் அந்தத் தழையின் வாசனை தான் வரும்
செம்மறி ஆட்டுக்கறியைச் சமைத்தால் வெள்ளாட்டுக் கறி மாதிரி வாசனை வராது. மானையும் வெள்ளாட்டுக் கறியும் சமைத்தால் தழைத் தாம்பு வாசனை வரும்.
மனிதனாக இருப்பவர்கள் வேக வைக்காது காய் கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டால் அதனதன் வாசனை தான் உடலில் வரும்
1.இந்த வாசனையுடன் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா இன்னொரு மனித உடலுக்குள் செல்லாது
2.நேராக… அந்த மாடு ஆடுகள் எதையெல்லாம் சாப்பிட்டதோ அதைச் சாப்பிட்டுப் பழகியிருந்தால் அங்கே தான் செல்லும்.
3.நீ அதிலே சென்று பிற என்று உயிர் அழைத்துச் சென்றுவிடும்.
4.அந்த உணர்வுக்குத்தக்க ஆடாக மாற்றிவிடும்
ஆட்டுக்கறியைச் சாப்பிட்டாலும் அந்த ருசி வரப்படும் பொழுது அதைச் சாப்பிட வேண்டும்… அதைச் சாப்பிட வேண்டும்… என்ற எண்ணம் வரும்.
இந்த உணர்வு இங்கே கலந்த பிற்பாடு ஆடு மேய்ந்து கொண்டிருந்தால் ஆட்டின் ஈர்ப்புக்குள் சென்று விடும். கோழிக்கறியை விரும்பிச் சாப்பிட்டிருந்தால் கோழி மேய்ந்து கொண்டிருந்தால்… உயிர் அங்கே தான் நம்மை கொண்டு போய்ச் செலுத்தும்.
இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாக இயக்கப்பட்டு நாம் அதுவாகத்தான் மாறும் நிலையை உருவாக்குகின்றோம்.
தவறாகச் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
1.நான் (ஞானகுரு) யாரையும் மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை
2.சாப்பிட்டால் இந்த மாதிரி தான் உயிர் அழைத்துச் செல்லும் என்று ஒரு காட்டிய வழியில் உணர்த்துகின்றேன்.
அதைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றால் இதை வென்றவன் துருவ மகரிஷி. அகஸ்தியனாக இருக்கும் பொழுது நஞ்சினை வேன்றான். அவன் துருவனாகித் துருவ மகரிஷி ஆனான். ஆகவே
1.அகஸ்தியன் வழியினை நாம் பின்பற்றினால் தீமைகளை நீக்கலாம்.
2.நமது ஞானிகள் நமக்கு இதைத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

“ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற” உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்
வாழ்க்கை என்ற நிலை… அமைதியுடன் செல்லல் வேண்டும். அதுதான் வாழ்க்கையின் முழுமை. ஒருநிலை கொண்ட ஆண்டவனின் ஜெபத்தை மட்டும் ஜெபித்தே ஆண்டவன்பால் செல்வதல்ல வாழ்க்கை. ஒரு நிலை கொள்ள வேண்டும். ஆண்டவனிடம் சென்று ஐக்கியப்பட வேண்டும்.
எங்குள்ளானப்பா நீங்கள் சொல்லும் ஆண்டவன்…?
1.ஒன்றுடன் ஒன்று இணைத்ததுதான் ஆதிசக்தியின் நிலையே
2.காற்றும் நீரும் மோதுண்டால் ஒளி பிறக்கின்றது
3.ஒலியும் ஒளியும் மோதுண்டால் ஜீவன் பிறக்கின்றது
4.ஜீவன் பிறக்கவே இவ் ஒலி நீர் ஒளி ஏறிய பிறகுதான் அஜ்ஜீவனுக்கு சுவாசத் துடிப்பு கொள்ளுகின்றது.
5.சுவாசத் துடிப்பு பெற்றவுடன் அமில குணத்தை அஜ்ஜீவ அணு
6.தன்னுள் மோதுண்டு மோதுண்டு ஈர்க்கும் பக்குவம் பெற்றுச் சுழலுகின்றது.
இப்படியே அதன் ஈர்ப்பின் நிலைக்கொப்ப அது சேமித்த அமில குணத்தின் நிலைக்கொப்பை இப்பூமியில் மோதுண்டு அதன் வளர்ச்சி நிலைக்கு அதன் ஈர்ப்பிற்கொப்ப அதன் சுவாசத்திற்கேற்ற வழித்தொடர் பெறுகின்றது.
எவ்வுயிர் அணு தோன்றி அதன் குண நிலை பெறுவதும் ஒன்றுடன் ஒன்று மோதாத நிலையில் ஜீவனே பெறாது. இரண்டு நிலைகள் கொண்ட நிலையின் மோதலில் மூன்றாகி நான்காகி பலவாகிச் சுழலுவதுதான் ஒவ்வொரு மண்டலமும் மண்டலத்தில் சிக்கியுள்ள எல்லா ஜீவன்களும்.
1.தனித்த ஆண்டவன் எங்குள்ளான்…?
2.அமைதி கொண்ட ஒருநிலை கொண்ட ஆண்டவன் ஜெபம் பெற்று செல்லும் நிலை எதுவப்பா…?
3.முடிவே இல்லாத உண்மையின் ஒளிர் தத்துவ அடக்கமே. இச்சுழலில் தான் உள்ளது.
மோதுண்ட சுழற்சியில் ஜீவன் கொண்ட வளர்ச்சியில் வடிவுகளாகி வழங்கும் மண்டல வளர்ச்சி… “ஜீவ ஆத்மாக்களே…”
1.தனித்த ஆண்டவன் இல்லையப்பா
2.எல்லாமில் எல்லாமாய் ஒளிரும் ஆண்டவன்தான்.
ஞானவழி பெற்றவர்களுக்கு:-
காட்சி:-
ஆட்டுக்கல்லில் அரிசியைப் போட்டு ஆட்டுவதைப் போலவும் ஆட்டும் நிலையில் ஒரே மாதிரி ஆட்டி வந்த நிலையில் ஒரு கல் சிக்குண்டவுடன் ஒலி கிளம்பி “நர நரத்த நிலையுடன்” மீண்டும் முதல் நிலையிலேயே அம்மாவு அரைபடும் பக்குவத்தைக் காட்டுகின்றார்.
விளக்கம்:-
1.ஞானத்தின் வழி பெற்று நாம் சென்றாலும் நம்மை அறியாமல் சில ஊடுருவல்கள் வந்து மோதும்
2.மோதலின் நிலைக்காக நாம் நம் ஞானத்தைச் சஞ்சலப்படுத்தாமல்
3.சுழலும் பொழுது மோதிய நிலையும் நம் ஞானத்துடனே கலந்து தனித்து நிற்காமல்
4.நம் ஞானவழி மீண்டும் செயல் கொள்ளும்.
காட்சி:-
பெரிய ஆலமரம்… அதற்கு அருகில் அடுப்பெரித்து உலை வைத்துச் சமையல் செய்கிறார்கள். அதே சமயத்தில் மற்றோர் இடத்தில் சிறிய ஒரு செடி பகலின் சூரியனின் நேர் உஷ்ணத்தைத் தாங்காமல் வாடி வதங்கி நிற்கின்றது.
விளக்கம்:-
ஆரம்ப ஞானவழிக்குச் சூரியனின் வெப்ப நிலையையே தாக்குப் பெறாத சிறிய செடியின் நிலையில் நாம் இருந்தாலும் ஆலமரத்தின் நிலைக்கொப்ப நம் ஞானத்தின் விழுதுகளை வளர்த்துக் கொண்டால் ஆலமரத்தைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் சூரியனின் இயற்கை ஒளியைக் காட்டிலும் செயற்கையாய் எரிக்கப்படும் இவ் ஏரிகள் ஆலமரத்தை எந்த நிலையிலும் தாக்குவதில்லை.
ஆலமரம் மட்டுமல்ல வளர்ந்த எம்மரமும் தான். அதைப் போல்
1.தன் நிலையில் உயர்ந்த ஞான வழி பெற்ற ஞானிகளை எந்நிலை கொண்ட சஞ்சலங்களோ மற்ற எதிர்படும் எல்லா நிலைகளும்
2.நன்மை தீமை கொண்ட இரண்டு நிலைகளும் அந்த ஞானியின் நிலையில் ஒட்டாமல் அவர் ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கும்.
காட்சி:-
நிலத்திலிருந்து ஓர் ஆத்மலிங்கம் வளர்ந்து வருகிறது. அவ்விலிங்கமே ஓர் மரமாக சப்தரிஷியைப் போல் காட்சியளித்து மேடான நிலையில் நின்று கொண்டு அவர் கையிலிருந்து ஓர் ஒளியான லிங்கத்தைக் காட்டி நிற்கின்றனர்.
மேடான இடத்திற்கு கீழ் பலர் நின்று கொண்டு அவரால் யாருக்கு அவ் ஒளி லிங்கம் அளிக்கப்படும் என்று பலரும் கையேந்தி வேண்டி நிற்கின்றனர்.
இவரோ அவ்வொளி லிங்கத்தை மேலும் கீழும் ஆட்டி ஆட்டி அவ்வொளியைப் பாய்ச்சிக் கொண்டே தான் உள்ளாரேயன்றி “யாருக்கும் தனித்து அவ்வொளி லிங்கம் அளிக்கப்படவில்லை…!”
ஆனால்
1.அவர் உருட்டிய ஒளி அலைகள் பாயப் பெற்ற அவ்வொளியை ஈர்த்து
2.தன் ஒளியை அவ் ஒளியுடன் கலக்கும் நிலைப்படுத்திய ஒளி ஆத்மாக்கள் எல்லாம் அவ் லிங்க ஆத்மாவிடம் சென்று ஐக்கியப்படுகின்றன.
3.மீண்டும் அவர் கையிலிருந்த அவ்வொளியான லிங்கம் முதலில் வீசிய ஒளியைக் காட்டிலும் அதிக ஒளி பரப்பிக் கொண்டே உள்ளது.
அவ்விலிங்கமே கிடைக்கும் என்று கையேந்தி நிற்பவர்கள் நின்று கொண்டே தான் இருக்கிறார்கள். அச்சப்த மகரிஷியும் தான் பெற்ற அவ்வொளி லிங்கத்தைச் சிரித்துக் கொண்டே வளர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்.
விளக்கம்:
ஆண்டவன் அருள் என்பது ஆண்டவனாய் நமக்களிப்பதல்ல. ஆண்டவன் ஒளி வடிவில் எல்லாமில் எல்லாமாய் ஒன்றுபோல் தான் ஒளி வீசுகின்றான்.
1.அவ்வொளி அருளை நாம் பெற்று அவ்வொளியுடன் ஒன்றும் ஒளியாய்த் தான் நம் செயல் இருக்க வேண்டுமே அன்றி
2.ஆண்டவனே வந்து நமக்கு அளிக்கட்டும் என்றால்… ஏங்கி நிற்கும் நாள் வரை காத்துத்தான் இருக்க வேண்டும்.
3.ஏனென்றால் எவ்வளவு காலங்கள் காத்திருந்தாலும் “அவ்வொளியை ஆண்டவனே வந்து நமக்கு அருளப் போவதில்லை”
“அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியப்படுவது தான்” ஞான ஒளி பெறும் ஆண்டவனின் அருள் சக்தி. அவன் ஒளியுடன் நம் ஒளி கலக்கப் பெற்றால் நம் ஒளியைக் கொண்டு பலருக்கு ஒளி பரப்பலாம்.
இதன் நிலையைப் புரிந்து
1.ஆண்டவன் அருளை வேண்டி நிற்காமல்
2.ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை வழி பெற உம் சக்திகளைச் செயல் ஆக்கிடுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு சில குடும்பங்களில் தன் பெண்ணிற்கு அந்தந்தக் காலத்தில் திருமணம் நடக்கவில்லை என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
1.அடிக்கடி வீட்டிற்கு வந்து பெண்ணை விசாரித்துக் கேட்டு விட்டு அல்லது
2.பெண்ணைப் பார்த்து விட்டுச் செல்கின்றார்கள் என்று வேதனைப்படுவோர் உண்டு.
அத்தகைய வேதனையான உணர்வுகள் ஆன்மாவில் சேரும் பொழுது அதை மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்திக் கொண்டால் இது “பிராணாயாமம்…”
பிராணாயாமம் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வளரச் செய்து நம் உடலிலிருந்து வெளி வரும் அந்த அருள் சக்திகளை வைத்துக் “குழந்தைக்குத் திருமணம் ஆகவில்லையே…” என்று வேதனைப்பட்ட இந்த உணர்வைப் பிளக்க வேண்டும்.
1.மகரிஷிகளின் அருளால் சீக்கிரம் என் குழந்தைக்குத் திருமணமாக வேண்டும்
2.எந்தக் குடும்பத்திற்கு என் பெண் திருமணமாகிச் சென்றாலும் அந்தக் குடும்பம் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்
3.அருள் வழியில் ஆனந்தமான வாழ்க்கை அங்கே வாழ வேண்டும்
3.அத்தகைய அருள் சக்தி என் பெண்ணிற்குக் கிடைக்க வேண்டுமென்று தாய் தந்தையர்கள் எண்ண வேண்டும்.
ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலுக்குள் பெற வேண்டுமென்று எண்ணும்போது அப்போது நமது உயிர் நரநாராயணன் ஆகிறது.
அதாவது… நம் உயிரான நிலைகள் கொண்டு நரசிம்ம ரூபம் எடுத்து அந்த நஞ்சினைப் பிளந்துவிட்டுத் தன் குழந்தையின் எதிர்காலம் செழிப்புடன் இருக்க வேண்டுமென்று இந்த நினைவினைக் குழந்தை மேல் பாய்ச்சுதல் வேண்டும்.
இப்படிச் சிறிது நாளைக்குப் பாய்ச்சிப் பழகி விட்டால் அந்த குழந்தைக்கு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடப்பதைப் பார்க்கலாம்
அப்பொழுது நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் ஓ… என்று ஜீவன் பெறச் செய்து உங்கள் உடலுக்குள் அது ம்… என்று அணுவாக உருவாக்கத் தொடங்குகிறது.
இப்படி யாம் (ஞானகுரு) கொடுக்கும் அந்த அருள் வாக்கின் பிரகாரம் அந்த நல்லது நடக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளும் போது அந்த மணம் உங்கள் ஆன்மாவாக மாறுகிறது.
அடுத்தவர்கள் உங்களைப் பார்த்தவுடனே உங்கள் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் அந்த அருள் சக்திகளை இந்த அருள் உணர்வுகள் அவர்களுக்குப் பாயும்.
1.உங்கள் பெண் அது எவ்வளவு உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்… வாழ வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.இந்த உணர்வின் தன்மை பெண்ணைக் கேட்போரின் நிலைகள் அது புகுந்து
3.உங்கள் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்பி
4.அவர்கள் ஏங்கித் திருமணம் செய்து கொண்டு செல்வதைப் பார்க்கலாம்.
உங்கள் அனுபவத்தில் நிச்சயம் பார்க்கலாம்.


வேடிக்கையாகப் பார்த்தாலும்… சாப அலைகள் என்பது சாதாரணமானதல்ல
உதாரணமாக எல்லோருடனும் நாம் பழகுகின்றோம். ரொம்ப நெருங்கி ஒருவருக்கு உதவி செய்கின்றோம் அவர் குடும்பத்தில் கடுமையான சிக்கல்கள் வருகின்றது என்ன வாழ்க்கை…? என்று தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்தக் குடும்பம் எனக்கு இப்படிச் செய்தது… அது உருப்படுமா…? என்று இந்தச் சொல்களைச் சொல்கிறார். இந்த உணர்வலைகள் அவர்கள் உடலில் சாப அலைகளாக மாறுகின்றது.
எப்படி எல்லாம் இந்தக் குடும்பம் நாசமாக வேண்டும் என்று சொன்னாரோ… அந்த உணர்வுகள் எல்லாம் அங்கே பதிவாகி அந்தக் குடும்பத்தைச் சீரழிக்கின்றது.
இது போன்று சாப அலைகள் பட்ட குடும்பங்களை எல்லாம் பார்க்கலாம்
1.அதிகம் சம்பாதிப்பார்கள் கடைசியில் ஒன்றுமே இருக்காது
2.எதை எடுத்தாலும் எங்கே சென்றாலும் முட்டுக்கட்டையாக இருக்கும்… பல தொல்லைகளை அனுபவிப்பார்கள்.
ஒருவர் சாப அலைகளைச் சொல்லப்படும் போது “குடும்பம் நாசமாக வேண்டும்” என்று சொல்வதை நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் கூட அதை நுகர்கின்றோம்.
இப்படிச் சொல்கின்றார் என்று எண்ணும் பொழுது அதே சாப அலை நமக்குள் அணுவாகி அவன் சொன்ன முறைப்படி நம் உடலிலே தவறுகளாகி நமக்குள்ளும் பகைகள் வரும் “சும்மா பார்த்தாலும் கூட…”
ஒரு சாக்கடைத் தண்ணீரை அள்ளி வீசுகின்றார்கள்
1.அருகிலே நல்லவர் இருந்தாலும் அந்தச் சாக்கடை படாமல் இருக்குமா…?
2.கெட்டவன் மீது அள்ளி ஊற்றினாலும் அருகிலே நல்லவன் இருந்தால் அவன் மீதும் படத்தான் செய்யும்
3.இவன் உடலிலும் நாற்றம் ஆகும் அவன் உடலிலும் நாற்றம் ஆகும்.
4.சாக்கடை நல்லவன் என்று பார்க்குமா…? இல்லை…!
இந்தச் சாக்கடையைத் துடைக்கவில்லை என்றால் நாற்றம் இருக்கத்தானே செய்யும். இதைப் போன்று தான் நாம் நல்லவர்களாக இருந்து ஒருவன் சாபம் இடுவதை வேடிக்கையாகப் பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வு நமக்குள் பதிவாகி உள்ளது.
அவன் சாபம் இடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம் இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் சுழலத் தொடங்குகிறது நம் இரத்தங்களில் தேங்கி விடுகின்றது.
பின் அந்தச் சாப அலைகள்… அவன் ஒவ்வொரு நிமிடம் எப்படி கெட்டுப் போக வேண்டும் என்று சொன்ன உணர்ச்சிகள்… அந்த எண்ணம் தோன்றுகின்றது.
1.யாரைப் பார்த்தாலும் “நீ நாசமாகப் போ” என்று நாமும் சொல்ல ஆரம்பிப்போம்
2.தொலைந்து போறவனே என்று சொல்லும்படி வரும் நாசமாக போகட்டும் என்ற அந்த உணர்வுகளை ஊட்டி
3.அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி நம்மையும் அறியாமலேயே சாப அலைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
தெரிகின்றது நமக்கு கோபப்படுகின்றோம் சாபம் விடுகின்றோம் அவன் சாபம் விட்டான் என்று. நாமும் சாபம் இடுவோம் ஏன் இந்த மாதிரிச் சொல்கின்றாய்…? என்று நம்மைக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்…? அவன் செய்வது அப்படி…! என்று நம்மிடம் நல்லதைச் சொல்பவரிடமும் நாம் வம்புக்குத் தான் செல்வோம்.
ஏனென்றால் அந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது என்று தெரிகின்றது… அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்பதைத்தான் குரு வழியில் உங்களுக்குத் தொடர்ந்து உபதேசித்துக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).
இப்படி நமது வாழ்க்கையில் அந்தச் சாப அலைகள் ஆனாலும் அந்த உணர்வுகள் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்குகின்றது… தேடிய செல்வத்தையும் பாதுகாக்க முடியவில்லை.
கல்வி கற்று விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்து எல்லாம் வளர்ச்சி இருக்கலாம் புதுப்புது பொருள்களையும் கண்டுபிடிக்கலாம்… செல்வத்தை அதிகமாகத் தேடக்கூடிய அந்தச் சக்தியும் இருக்கலாம்.
ஆனால் சாபம் இடுவோரைப் நல்ல குணம் கொண்டு பார்த்தபின் அந்த சாப அலையின் உணர்ச்சிகள் நல்ல அணுக்களில் சேர்ந்த பின் இதுவும் அந்த வேலையைச் செய்ய ஆரம்பிக்கும்.
1.நாம் தேடிய செல்வத்தையும் அடுத்து பார்க்க முடியாது
2.யாரோ ஏதோ செய்து விட்டார்கள் நாம் வளர்ந்து வருவது பொறுக்க முடியாமல் ஏதோ செய்து விட்டார்கள்
3.பொறாமையில் எனக்குச் செய்து விட்டார்கள் என்று தான் இந்த உணர்வுகள் அந்தச் சாப அலைக்கு ஜீவன் ஊட்டி
4.நமக்குள் “அந்தச் சாபத்தையும் நிறைவேற்றியே கொடுக்கின்றோம்”. என்று வைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக மிளகாய் நெடி எந்தப் பொருளிலே பட்டாலும் அதனின் உணர்ச்சியை ஊட்டத்தான் செய்யும். ஒரு விஷம் எதிலே பட்டாலும் அதனுடைய உணர்வின் இயக்கத்திற்குத் தான் மாற்றும்.
அதைப் போன்று நம் உடலில் இத்தகைய உணர்வுகள் மாறுகின்றது.. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
எத்தனையோ கோடிச் சரீரங்களில் பல இம்சைகள் பட்டுத் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்துத்தான் மனிதனாக வந்திருக்கின்றோம். பல உயிரினங்கள் இன்று எத்தனையோ இம்சைகள் படுவதைப் பார்க்கின்றோம் அல்லவா.
ஆக… பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம்
1.அருள் ஞானிகள் உணர்வை எடுத்து இனி வரக்கூடிய எத்தகைய தீமையிலிருந்தும் தப்பும் நிலையாக
2.அதை நமக்குள் பெருக்கிப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும்.
அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.

இப்பிறப்பில் நாம் வந்ததுவே “முன் ஜென்மத்தில் விட்ட குறையினால் தான்…”
வீடு கட்ட அதற்கு அஸ்திவாரம் பலம் பெறல் வேண்டும். அதைப்போல் சுவர் எழுப்பவும் அதற்குகந்த கலவைகள் அதற்குகந்த அளவை வைத்துக் கூட்டிச் சுவர் எழுப்பினால்தான் அச்சுவர் உறுதியாய் இருக்கும். அதைப்போல்
1.நம் உடலில் உள்ள அமில நிலைகள் அததற்குகந்த தன்மையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியம் கொள்ளும்
2.இவ்வுடல் ஆரோக்கியம் பெற்றால் “அதுவே எண்ணத்தின் மையக் கோலாகி” ஆத்மீகத்தின் ஆத்ம சக்தியைப் பெற முடியும்.
நாம் சலிப்பு, சங்கடம், கோபம், பேராசை, அதி உல்லாசம் இப்படி உள்ள நிலையில் வாழும் பொழுது “நாம் எடுக்கும் சுவாசமானது கனமாகி”
1.நம் உடலில் சேரும் அமிலத்தன்மைகள் கூடியும் குறைந்தும் அவ்வமில சக்தி சுரப்பி அமிலம் சுரக்கும் பொழுது உடல் நிலையும் பாதிக்கப்பட்டு
2.எண்ண நிலையும் சோர்வு பூண்டு நம் உடல் என்னும் இக் கூடே பல பிணிகளுக்கு ஆளாகின்றது.
சுவர் எழுப்ப அதன் கொள்ளவில் எந்தச் சாமான் அளவு நிலையிலிருந்து மாறுபட்டாலும் அச்சுவருக்குப் பலமில்லை. மணல் அதிகப்பட்டால் உதிரும் நிலையும்… சிமெண்ட் அதிகப்பட்டால் வெடிக்கும் தன்மையும்… நீர் அதிகம் சேர்ந்தால் அதன் பக்குவ முறைக்குச் செயல்படா வண்ணமும்… மனிதனால் எழுப்பப்படும் சுவருக்கே அதன் கலவை குணம் மாறுபடும் பொழுது உரு நிலை கொள்வதில்லை.
இம்மனித உடலுக்கும்… இம் மனிதனின் உடலில் உள்ள “அமில சக்திகள் கூடிக் குறையும் நிலை ஏற்பட்டால்” சக்தி நிலை எப்படி வலுப்பெறும்…? வலுப் பெறாது…!
காட்சி:-
ஆற்றின் கரையும் ஓடமும் துடுப்பும் இருப்பதைப் போலவும் நாங்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல அவ் ஓடத்தில் ஏறி அவ் ஓடக்காரனால் நீரின் போக்குக்குச் செல்லாமல் நீரை எதிர்த்துத் துடுப்புப் போட்டு ஓடத்தை ஓட்டி அக்கரைக்குச் சென்று இறங்குகின்றோம்.
விளக்கம்:-
அதைப் போல் இவ்வுலக பந்தத்தில் பிறந்த நம் ஆத்மாவைக் கரை சேர்க்க இவ்வாழ்க்கை என்ற ஆற்றினைக் கடக்க எதிர்த்து துடுப்புப் போட்டுத் தான் நாம் செல்லும் மார்க்கத்தை இவ்வுலக வாழ்க்கையில் இருந்து மெய் உலக வாழ்க்கைக்குச் செல்ல வேண்டும்.
1.நாம் செல்லும் ஓடமும்… நாம் நம்பி ஏறிய ஓடக்காரனின் திறமையும் நன்றாக அமைந்தால் நாம் செல்லும் வழி எளிதாகின்றது
2.இவ்வுடல் என்ற இக்கூடு ஆரோக்கியமுடன் நல்லெண்ணம் பெற்ற நிலை கொண்ட ஆத்மாவாய் இவ் ஓடம் போல் இருந்தால்
3.அதை ஓட்டுபவனின் திறமையை ஒத்த வாழ்க்கையில் ஒன்றப்பெறும்
4.அவரவர்களுடன் இணையும்… ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அமைதல் வேண்டும்.
நல்ல ஓடமும் திறமை மிக்க ஓடக்காரனும் இருந்தால் செல்லும் வழி எளிதாகின்றது. எதிர்த் துடுப்புச் செலுத்தி நம் வாழ்க்கையில் ஏற்படும் பல நிலைகள் கொண்ட எதிர் நிலைகளை இத்துடுப்புப் போல் “எதிர்த் துடுப்புப் போட்டுத்தான்” அக்கரைக்குச் செல்ல வேண்டும்.
ஓடம் செல்லும் வழியிலும் நாம் செல்ல முடியாது. நீர் தானாக அவ் ஓடத்தை இழுத்துதான் செல்லும்.
1.நடக்கும்படி நடக்கட்டும்… நமக்கு வரும் வினைகள் எல்லாம் ஆண்டவன் அளித்தது அவனே பார்த்துக் கொள்வான் என்ற நிலையில்
2.நீர் போகும் போக்கில் ஓடும் போவதைப் போல் அல்ல.
எந்த ஒரு இன்னலான நிலை ஏற்பட்டாலும் அதன் போக்கில் செல்லாமல்
1.இன்னலிலிருந்து மீளும் வலுவான எதிரான துடுப்பைப் போன்ற வலுக்கொண்ட செயல் செய்தால்தான் இன்னலிலிருந்து மீளவும் முடியும்…
2.நம் வாழ்க்கைப் பாதையும் நன்றாக அமையும்… என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாம் இஜ் ஜென்மப் பிறப்பில் வந்த பயனை… வாழ்க்கை என்ற வடிவில் முழுமை எய்தி நாம் அடைய வேண்டிய அக்கரையின்… அக்கரையில் என்பதற்குப் பொருள்
1.இப்பிறப்பில் நாம் வந்ததுவே முன் ஜென்மத்தில் விட்ட குறையினால் தான்
2.அதற்காகத்தான் அக்கரை என்னும் ஞான ஒளி மார்க்கத்திற்குச் செல்லும் வழி அறிந்து நாம் செயல்பட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தேவர்கள் அசுரர்கள்… நெகடிவ் பாசிடிவ்… நேர்நிலை… எதிர்நிலை…
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவில்லாத அந்தக் காலத்தில் அகஸ்தியனின் உணர்வினை வியாசகர் கண்டுணர்ந்து வெளிப்படுத்தினார்.
அதாவது
1.மேரு என்ற மலையை மத்தாக வைத்து
2.வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்துப் பாற் கடலிலே கடைந்து
3.கடைந்தவற்றில் வந்ததை விழுங்கியது அனைத்தையும் தேவர்கள் என்றும்
4.விழுங்கிய பின் மலமாகக் கழித்ததை எல்லாம் அசுரர்கள் என்றும் காட்டினார்.
மனிதர்களாக இருக்கும் நாம் ஒரு பொருளை உணவாக எடுத்து உட்கொண்ட பின் அதில் உள்ள சத்துகள் நம் உடலாக உருப்பெறும் சக்தியாகிறது.
உடலாக உருவானபின் கழிவின் சத்தை மலமாக வெளிப்படும்போது அது நஞ்சின் தன்மை கொண்டதாக வெளி வருகிறது. அந்த நஞ்சின் தன்மையை விழுங்கிய அனைத்தும் மற்றதைக் அழித்திடும் நிலையாக வருகின்றது.
மனிதனாக இருக்கும் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்த நஞ்சினை அகற்றிய பின் அது வெளியே சென்றாலும் அது இன்னொரு தீமையின் நிலையாக வளர்ந்து அதனின் நிலைகள் வளர்ச்சியாகின்றது.
இதைத் தான்
1.தேவர்கள் அசுரர்கள் என்றும்… நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) என்றும் சொல்வது
2.எந்த ஒரு இயக்கத்தின் தன்மையானாலும் அது எதிர்நிலை மறைகள் இருந்தால்தான் இயங்கும். (இல்லை என்றால் சூனியமாகிவிடும்)
அதைப் போலத்தான் மனித உடலுக்குள்ளும் ஒரு உணர்வின் தன்மை எதிர்நிலை ஆனால்தான் நம் உடலின் அணுக்களின் தன்மை இயங்கும்.
ஆனால் அதே சமயம் எதிர்நிலையான உணர்வின் தன்மை அதிகரித்து விட்டால் நல்ல உணர்வின் தன்மைகள் இங்கே ஒடுங்கி விடுகின்றது.
ஆக நல்ல உணர்வுக்குள் எதிர்நிலைகள் ஓங்கி வளர்ந்தால் அந்தத் தீமையின் நிலைகள் நல்லதை ஒடுக்கி விடுகின்றது.
உதாரணமாக…
1.மிகவும் ஒரு காரமான பொருளை நாம் வாயிலே போட்டால் நம் உமிழ் நீர்கள் அனைத்தும் காணாமல் போய் விடுகின்றது.
2.ஆனால் மற்ற பொருளுடன் இந்தக் காரத்தை இணைத்து உட்கொண்டால் உமிழ் நீரை அதிகமாகச் சுரக்கச் செய்து
3.சாப்பிடும் உணவைத் தாராளமாக இழுத்துச் சென்று சுவைமிக்கதாக மாற்றுகின்றது.
4.ஆக… தீமையின் நிலைகளுக்குள் நல்லவைகள் அதிகரித்து விட்டால் தீமைகள் ஒடுங்குகின்றது.
ஆனால் தீமையின் தன்மை சிறிதாக இருப்பினும் நல்லவைகள் பலவாக இருந்தாலும் இது ஒரு நொடியில் அமுக்கிவிடும்.
அது போல் தீமைகளை ஒடுக்கிய
1.அருள் ஞானியின் உணர்வுகள் மிக மிகச் சக்தி வாய்ந்த அணுக்களாக இங்கே உண்டு
2.அதனை நாம் பருகும் நிலைகள் கொண்டு வந்தால் எத்தகைய தீமையாக இருந்தாலும் அதனைச் செயலிழக்கச் செய்துவிடும்.
ஆகவே நம் வாழ்க்கையில் வரும் எந்தத் தீமையாக இருந்தாலும் அந்த அருள் ஞானிகளின் அருள் சக்தி கொண்டு அதை விழுங்கிடல் வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் பழக்கம் வர வேண்டும்.


அக்கினியில் இறங்குவதல்ல… துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள் நாம் இறங்க வேண்டும்
மாரியம்மன் கோவிலில் அக்கினி குண்டம் இறங்கும்படி வைத்திருப்பார்கள்.
1.ஒருவருக்கொருவர் வேதனைப்படுவோரை நாம் பார்த்தால்
2.அந்த வேதனை மா(றி)ரி நமக்குள் தாயாக வந்து நோயாக அது வராதபடி நாம் தடுத்தல் வேண்டும்.
அவர்களைப் பார்த்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் (நோயாளிகளைப் பார்த்தால்).
சுத்தப்படுத்தவில்லை என்றால் அவருடைய வேதனை உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து நல்ல அணுக்களுடன் இணைந்து விடுகின்றது
தேள் கொட்டுகின்ற மாதிரி… அல்லது குளவி கொட்டி புழு உருமாறுகிற மாதிரி… விஷத்தின் தன்மை வரும்போது அவர்கள் உடல் நலிகின்றது… அதனால் தான் நோயுடன் இருக்கின்றார்கள்.
1.ஆனால் அதே விஷம் நம் உடலில் பட்டபின் நல்ல அணுக்கள் சுருங்கி விடுகின்றது
2.நம் உடலில் அதற்குப் பின் அழகு இருக்குமா…? நாமும் அந்த வேதனையைச் தான் சொல்வோம்.
அதற்காக வேண்டி ஒவ்வொரு ஊருக்கு மத்தியிலும் மாரியம்மன் ஆலயத்தை வைத்திருப்பார்கள்.
வேதனை வந்துவிட்டால் உடனே ஈஸ்வரா என்று உயிரை வேண்டி அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்
இப்படி நுகர்ந்த உணர்வு என்ன செய்கின்றது…?
இராமாயணத்தில் அது தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான் என்று காட்டுவார்கள். ஏனென்றால் அந்த வேதனையான உணர்வுகள் என்பது அது வாலி.
இராமன் வாலியை நேர்முகமாகப் பார்த்தானா…? இல்லை…! அந்த வாலி வெளியே வர முடியாதபடி மேலே இருக்கும் பாறையைத் தள்ளிக் குகையை மூடி விட்டான்.
1.பாறையாக இருப்பது யார்…?
2.துருவ நட்சத்திரம்…!
எப்போது வேதனைப்படும் உணர்வுகளை நுகர்கின்றோமோ உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இழுத்துக் கொண்டு வந்து விட்டோம் என்றால் அவர்கள் பட்ட வேதனை உள்ளுக்குள் செல்லாதபடி இங்கே நிறுத்தப்படுகின்றது.
நிறுத்திய பின் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணிவிட்டு அடுத்தாற்போல் அந்த அருள் சக்தி அந்த நோயாளி பெற வேண்டும் அவர் உடல் நோய் நீங்க வேண்டும் அவர் உடல் நலமாக வேண்டும் என்று நாம் நுகர்ந்த வேதனையை நிறுத்திவிட்டு அருள் உணர்வுகளை உருவாக்குதல் வேண்டும்.
அவர் உடல் நலமாக வேண்டும் என்று நினைத்து எண்ணினால் நாம் நுகர்வது எதுவோ ஓ…ம் நமச்சிவாய…! அது பிரணவமாகி நம் உடலாக மாற்றுகின்றது.
ஏனென்றால் அந்த அந்த நோய் நமக்குள் வரக்கூடாது.
இதை நிறுத்திவிட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தி அந்த நோயாளி பெற வேண்டும் என்று எண்ணினால் நோயை நீக்கிவிடும்.
1.தீமைகளை வேக வைக்கக்கூடிய (அக்கினி) துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதில் நாம் இறங்கினோம் என்றால்
2.அதனின் பால் நாம் நினைவைக் கொண்டு சென்றால் அந்தத் தீமை நமக்குள் வராது என்று
3.அக்கினி குண்டத்தை மாரியம்மன் கோவிலில் அமைத்துள்ளார்கள்.
4.அக்கினியில் இறங்குவதல்ல… துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள் நாம் இறங்க வேண்டும்.

வரும் எதிர்நிலைக்கு அடிமைப்படாமல்… “நல் ஞானத்தின் வழித் தொடரைப் பெறல் வேண்டும்”
ஆவியான இவ்வுலகில் ஒலி, ஒளி, நீர் இவற்றின் சக்தியுடனே சகல திரவியங்கள், பிம்பங்கள் பல கோடி நிலைகள் ஏற்படுகின்றன. அதைப் போல் அவற்றுடனே மனித ஆத்மாக்களின் எண்ண நிலையும் கலந்துறவாடி எடுக்கும் சுவாசம் கொண்டு அனைத்து நிலைகளும் நடக்கின்றன.
ஆவியான ஒலி, ஒளி, நீரில் இருந்து தான் எல்லா ஜீவனுமே.
1.பாலில் நீர் கலந்தாலும் எண்ணெயில் நீர் கலந்தாலும் அந்நீரின் நிலை தன் நிலையைக் காட்டுவதில்லை
2.தனித்து. எதிலும் எதுவாகவும் அந்நீர் எப்படிக் கலக்கின்றதோ அதைப் போல் எல்லாவற்றிலும் எல்லாமாய் ஆண்டவனின் சக்தி கலந்துள்ளது.
நம் எண்ணம் எல்லாவற்றுடனும் கலந்திருந்தாலும் எல்லாமில் எல்லாமாய் இருந்தே நம் ஞானத்தை நாம் பெறல் வேண்டும்.
ஞானம் பெற்று, நான் என்ற நிலை பெற்றுவிட்டால், நம் ஞானமும் செயல்படாது. ஞானம் என்பதுவே நமக்காக மட்டுமல்ல.
1.நம் ஞானத்தைக் கொண்டு பலர் ஞானங்கள் பெறச் செய்ய
2.நமக்கு ஏற்பட்ட நல் ஞானம் என்றுணர்ந்து நீரைப் போல் ஞான சக்தி இருக்க வேண்டும்.
நீர் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை. நீரைப்போல் தான் பெற்ற ஞானத்தை ஞானிகள் வழி நடத்திடல் வேண்டும்.
காட்சி:- இரும்பைப் பழுக்கக் காய்ச்சி தட்டுதல்
விளக்கம்:- எந்த ஒரு பொருளையும் அதனை உருவாக்க எவ்வுருவில் காண உருப்படுத்துகின்றோமோ அதற்குகந்த பக்குவ நிலை ஏற்பட்டால் தான் நாம் காணும் பொருளை நாம் உருவாக்க முடியும்.
அதைப் போல் சக்தியின் அருள் ஞானம் பெறவும்
1.நம் எண்ண ஞானத்தைப் பல நிலைகளில் பக்குவம் கொண்டால் தான்
2.நாம் எண்ணிய ஈசனின் ஞானம் பெற முடியும்.
காட்சி:- சிறிய ஊசியில் அதற்குகந்த நூலைக் கோப்பதைப் போலவும் பெரிய ஊசியில் அதற்குகந்த நூலைக் கோப்பதைப் போலவும் காட்சி.
விளக்கம்:- 1.தன் ஞானம் என்பது குருவின் ஞானத்திலிருந்து
2.எண்ண நிலை வளர்ச்சி கொள்ளும் நிலைப்படி தான் சேர்க்கப்படுகின்றது.
ஊசியில் உள்ள துவார நிலைக்கொப்பத்தான் நூல் கோக்கப்படுமேயன்றி பொருந்தாத நூலைக் கோப்பது எப்படி…?
பக்தி, ஞானம் என்ற வழித்தொடர் பெற்று சத்திய முக்தி நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலை பெற்றே ஈசன்பால் செல்லும் பக்குவத்தை பக்தி மார்க்கத்திலிருந்து நல் ஞானம் பெறும் வழிமுறையை அறிதல் வேண்டும்.
1.எண்ணியவுடன் வந்தடைவதல்ல எல்லா சக்தியும்
2.ஏற்கும் முறைப்படி தான் சக்தி நிலை கூடும்.
குழந்தைக்கு ஆரம்ப பாட அறிவு தாயே புகட்டுகின்றாள். அம்மா, அப்பா, கடவுள் இப்படிப் பேசும் திறனைப் பழக்கிk கல்விச் சாலைக்கு அனுப்புகின்றாள்.
அந்தந்த வயது நிலைக்கொப்ப அறிவின் கல்வி புகட்ட அதற்குகந்த கல்வித்திறன் பெற்ற போதகரினால் அக்குழந்தை போதனைக்குட்பட்டு அதன் வளர்ச்சியின் மூப்பினால் பிறருக்குப் போதிக்கும் பக்குவம் பெற்று விடுகின்றது.
அதைப் போல் பக்தி என்ற வழிப்படுத்தி… பூஜை முறையில் ஆரம்பத் தாயின் கல்வி அறிவைப் போன்றது தான் பக்தி, பூஜை முறை.
பக்தியின் வழித்தொடரில் ஞானம் பெற வேண்டும்.
1.ஞானத்தின் வழியில் சித்தாகி சித்தினால் ரிஷித் தன்மை பெற்றுச் சப்தரிஷி ஆகி
2.அப்பக்தியின் முக்தி கொண்ட நிலை பெற்று மீண்டும் தன் சக்தியைக் கொண்டே பல சக்திகளை ஒளி பெறும் பக்குவம் பெறல் வேண்டும்.
காட்சி:- சாதம் உண்ணுவதைப் போலவும் அதில் ஒரு கல் பட்டு உடம்பு சிலிர்ப்பதைப் போலவும் காட்டுகின்றார்.
விளக்கம்:-
1.நல் நிலையில் நல் உணர்வும் நல்ல ஜெபமும் ஆத்மீக ஞான வழி பெற்றாலும்
2.அமுதான உணவைப்போல் உணவு உண்ணும் பொழுது
3.”கூட வந்த கல்லைப் போல்” நம் நிலையில் நல்ல உணர்வான சக்தி நிலையில் வாழ்ந்தாலும்… நமக்கேற்படும் சில சோதனைகள் வரத்தான் செய்யும்.
4.அந்நிலையில்… உணவுடன் வரும் கல்லுக்காக நாம் உணவையே உண்ணாமல் இருப்பதில்லை.
5.வரும் எதிரான செயலுக்கு நம்மை அடிமைப்படுத்தாமல் “நல் ஞானத் தொடரை வழி பெற்றே” செயல் புரிதல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒன்று சேர்ந்து வாழும் தத்துவம் இல்லை என்றால் இயற்கையில் எதுவுமே வளர்ச்சி அடைய முடியாது
கார்த்திகை நட்சத்திரம் ஒளியின் சுடராக வளர்ந்து தனக்கென்று கோள்களை உருவாக்கிக் கொண்டு தனிச் சூரியக் குடும்பமாகும் பருவம் பெற்று விட்டது.
1.அது தனித்தன்மையாக வாழ ஆரம்பித்து விட்டது.
2.அதனால் நம் பிரபஞ்சத்திற்குக் கிடைக்க வேண்டிய அதனுடைய சக்திகள் கிடைக்காது போய் விட்டது.
ஒரு சூரியக் குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்கள் முதிர்ந்த பின் எப்படித் தனித்துச் சூரியக் குடும்பமாகிறதோ அது போல் மனிதர்கள் குடும்பமாக வாழும் நாமும் ஒரு வெறுப்பின் தன்மையை வளர்த்துக் கொண்டால் பிரித்து வாழும் உணர்வையே நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
இதைப் போல குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் வெறுப்பும் வேதனையும் அதிகமாகி தீய வினையாக வளர்ந்து வருவதை நிறுத்த வேண்டும் அல்லவா.
தொழிலில் வரவு செலவு நடத்துகின்றோம். கடையில் நம்மிடம் வந்து வாங்கிச் செல்வார்கள். பொருளுக்குண்டான பணத்தைக் காலத்திலே வந்து கொடுப்பார்கள்.
ஆனால் ஒருவரின் சந்தர்ப்பம் அவர் குடும்பத்தில் ஏதோ சில சிக்கலாகி விட்டால் வாங்கியதற்குரிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது போய்விடுகிறது.
அது போன்ற ஒரு சந்தர்ப்பத்திலே நாம் என்ன நினைப்போம்…?
1.இதற்கு முன் அவன் யோக்கியனாக இருந்தான்… சரியான முறையிலே பணத்தைக் கொடுத்தான்.
2.இப்பொழுது வர வரக் கெட்டுப் போய்விட்டான்…! என்ற இந்த நிலை வருகின்றது.
இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் நான் அன்றைக்கெல்லாம் உனக்குச் சரியாகக் கொடுத்தேன். நீயும் பணத்தைத் திரும்பக் கொடுத்தாய். ஆனால் இப்போது இருக்க இருக்க நீ கெட்டுப் போய்க் கொண்டே இருக்கிறாய். ஆகையினால் உனக்கு இனிமேல் கடன் இல்லை… போ…! என்ற சொல் வரும்.
ஆனால் அவரோ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்பார்…! “கொடுக்க முடியாது…” என்று சொல்லி விட்டால் கொஞ்சம் முறைப்பார். அந்தச் சமயம் அவரிடமிருந்து வர வேண்டிய பாக்கியும் இருக்கும்.
சரக்கை இவர் என்ன கொடுப்பது…! சரக்கை நாம் அடுத்தவரிடம் வாங்கிச் செல்வோம்…! என்று சென்று விடுவார்.
இதைப் பார்த்தவுடனே… பார்…! அன்று கடன் கொடுத்தேன் என்னிடம் வாங்கினான். இன்று அடுத்தவரிடம் போகின்றான் பார்…! என்று இப்படித்தான் நமக்குள் பகைமை உணர்வு அதிகமாக வளர்ந்து விடுகின்றது.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் நமக்குள் பகைமையாக உருவாகிவிடுகிறது.
வியாபாரத்திலே நாம் எத்தனையோ பேரிடம் பழகி இருப்போம். சந்தர்ப்பத்தில் யாரிடமாவது வெறுப்பாகி இருப்போம். அவரை நினைக்கும் போதெல்லாம் வேதனைப்படுகின்றோம்.
1.அந்த வேதனைப்படும் உணர்வுகளை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பதிவாக்கிக் கொள்கின்றது.
2.அடுத்தாற்போல் அதை நினைக்கும் போதெல்லாம் நமக்குள் வேதனையைத் தூண்டும்.
உதாரணமாக ஒரு வேப்ப மரத்தின் விதையைப் பூமியிலே போட்டபின் அது அந்தத் தாய் மரம் வெளிபடுத்திய கசப்பான சத்தை எடுத்து வளர்ந்து கொண்டே இருக்கும்.
அதே போன்று தான் மனிதனுக்கு மனிதன் வெறுப்பாகி உடலில் அந்த உணர்வின் சத்து எண்ணமாக ஆனால் அது ஒரு வித்தாகி விடுகின்றது. கேட்டறிந்த பின் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
பதிந்த நிலைகள் கொண்டு அவரை நினைத்தோம் என்றால் அவர் மேலே உண்டான வெறுப்பு நம்மிடமும் வெறுப்பான உணர்வாக வளர்கின்றது. நம்மிடம் இருக்கும் நல்ல உணர்வுடன் சண்டையிடுகின்றது.
உடலுக்குள் அது சண்டையிட ஆரம்பித்த பின்…
இடுப்பு வலிக்கிறது…
மேல் வலிக்கிறது…
நெஞ்சு வலிக்கிறது…
முதுகு வலிக்கிறது…
தலை வலிக்கிறது…
கண் எரிகிறது…! என்று சொல்வதைப் பார்க்கலாம்.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நம்முடைய சந்தர்ப்பம் நல்ல உணர்வை இயக்காதபடி தீய வினைகளாக நமக்குள் சேர்கிறது. அதை நிறுத்த வேண்டும் அல்லவா…!
ஆகவே “எப்பொழுதெல்லாம் நம் உணர்வுகள் மாறுகின்றதோ…. அப்பொழுதெல்லாம்…” மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி அந்த உயர்ந்த சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.
பின் யார் மேல் வெறுப்பு வந்ததோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதைத் தியானித்துப் பாருங்கள்.
1.உங்களிடம் கெட்டது வராது
2.மன பலம் வரும்.
3.உடல் நலம் பெறும்.
4.சொல்லில் இனிமை பெறும்.
5.உங்கள் பார்வை எல்லோரையும் நல்லதாக்கும்.


மனப்போராட்டமும்… உடலில் வரும் வலி வேதனைகளும்
சில குடும்பங்களில் ஒருவருக்கொருவர் தேளும் பாம்புமாக இருப்பார்கள். எவ்வளவு தான் இருந்தாலும் உள்ளே ஒன்றுக்கொன்று வெந்து கொண்டு தான் இருக்கும்… ஒருவருக்கொருவர் போராட்டம் அதிகமாக இருக்கும்.
1.அச்சுறுத்தும் உணர்வுகளும் பயமான உணர்வுகளும் அதிகமாகும் பொழுது உடலுக்குள் போர் நடந்து கொண்டிருக்கும்
2.ஏனென்றால் அதற்குச் சாப்பாடு தேவை.
பையன் மீது வெறுப்படைந்து விட்டால் அத்தகைய அணு உண்டாகிவிட்டால் அந்த வெறுப்பின் உணர்வுகளே அதற்குச் சாப்பாடு. அந்த வெறுப்பு வளரப்படும் பொழுது அத்தகைய அணுக்களே பெருகும்.
அந்த அணுக்கள் பெருகும் பொழுது நாம் நுகர்ந்ததற்கும் உடலுக்கும் வெறுப்பாகி போர் முறையாகி உடல் நலியத் தொடங்கும். ஒன்றுக்கொன்று சண்டை போடும்.
1.இங்கே பளீர்…ர் என்று மின்னுகின்றது… இங்கே குத்துகின்றது
2.தலை வலிக்கின்றது பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது கால் வலிக்கின்றது கை வலிக்கின்றது என்று ஆரம்பித்து விடுவார்கள்.
இது எல்லாம் எங்கிருந்து வருகின்றது…?
நாம் நுகர்ந்த உணர்வுகள் அணுவாகி அதற்கு உணவு அது தேடும் பொழுது அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி இந்த உணர்வின் தன்மையாகும் பொழுது பளீர்…ர்.. என்று உடலில் குத்தினால் ஆ…! என்று சொல்வார்கள்.
இப்படி வலி எடுக்கும் பொழுது அந்த நேரத்தில் நீ சந்தோஷமாக இரு என்று யாராவது சொல்லிப் பாருங்கள்… பார்க்கலாம். ஒன்றுமில்லை… நீ சந்தோஷமாக இரு…! என்று இப்படிச் சொல்லச் சொல்லக் கோபம் அதிகமாகும்.
இன்னும் கொஞ்சம் ஆன பிற்பாடு
1.”இவர்களுக்கு என்ன தெரியும்…” நான் படுகின்ற அவஸ்தை…!” என்று
2.அந்த அவஸ்தையைத் தான் எடுத்துக் கொள்வார்களே தவிர நல்ல சொல்களை எடுக்க முடிவதில்லை.
தாயாகவே இருந்தாலும் சரி குழந்தை வேதனைப்படுகிறது என்று “அட கண்ணு… நீ இதைச் சாப்பிடு…” என்று சொன்னாலும் “நீ சொல்லிக் கொண்டே இருந்தாலும் நான் கேட்க மாட்டேன்” என்று தாய் மீது வெறுப்பு தான் இன்னும் அதிகமாகும்.
ஐயோ… தன் பையன் கெட்டுப் போகின்றானே… இந்த மாதிரி இருக்கின்றான் சும்மா இருடா ராஜா…! என்று சந்தோசமாகச் சொல்லிக் கொஞ்சிப் பாருங்கள். உங்களை எப்படிப் பதிலுக்குக் கொஞ்சுகிறான் என்று பாருங்கள்.
இரண்டு தடவை சாப்பாடு கொடுத்துப் பாருங்கள் சிறிய குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவராக இருந்தாலும் சரி எவ்வளவு கோபம் வருகிறது என்று பார்க்கலாம்…! அந்த உணர்வுக்குத் தக்க குணங்கள் வரும்.
1.அப்பொழுது எது இயக்குகின்றது…? அந்த நல்லதை எடுக்க முடியவில்லை…
2.அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?
இதை எல்லாம் சுட்டிக்காட்டுவதற்குத் தான் ஆலயத்தில் காட்டுகின்றார்கள்.
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் அனைவரும் பெற வேண்டும்
3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் தெய்வீக நிலைகள் பெற வேண்டும்.
4.அவர்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்.
5.நான் பார்க்கும் குடும்பம் எல்லாம் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
6.காரணம்… அந்த உலக மக்களுடைய உணர்வுகள் அனைத்தும் நம் உடலில் இருக்கின்றது.
நல்லவர்களையும் பார்த்திருக்கின்றோம். கெட்டவர்களையும் பார்த்திருக்கின்றோம். பார்த்த ஒவ்வொரு குடும்பத்திலும் அந்தத் தெய்வீக நிலைகள் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் புனிதம் பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.
1.இப்படி எண்ணி அந்த அருள் உணர்வுகளை எடுத்தால் தான்
2.நம் உடலுக்குள் வரக்கூடிய போர் முறைகளையும்… ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இயங்கக்கூடிய நிலைகளையும்
3.நாம் நல்லதாக மாற்றி அமைக்க முடியும்.

ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள்
காட்சி:– மீனவன் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போலவும் ஒவ்வொரு மீனாகத் தூண்டிலில் பிடித்துப் பையில் எடுத்துச் செல்வதைப் போலவும் தெரிகின்றது.
விளக்கம்:- மீனவனுக்கு வேண்டியது மீன் தான். அவன் தூண்டிலில் போட்டுத் தரும் ஆகாரத்தை எந்த மீன் எடுக்கின்றதோ அதைத்தான் அவன் எடுத்துச் செல்கின்றான்.
அதைப் போல இவ்வுலக ஞானம் பெற தன் ஒளியை இவ்வுலகத்தில் உள்ள ஆத்மாக்களிடம் செலுத்தி அவ்வொளியை எவ்ஆத்மா ஈர்க்கின்றதோ அவ்ஆத்மாக்களைத் தன் ஞானத்துடன் எடுக்கின்றனர் ஒளியின் பால் உள்ள சப்தரிஷிகள்.
1.குறிப்பிட்ட ஆன்மாவைத் தன் சக்தியின் பால் ஈர்க்கவில்லை
2.எல்லா ஆத்மாக்களுக்குமே அந்த ஒளி பாய்ச்சப்படுகின்றது.
3.எந்த ஆத்மா அந்த ஒளியுடன் கலக்கின்றதோ அவ்வாத்மாவின் சக்தியைத் தன் ஒளியான ஞான வட்டத்தில் சுழல விட்டு
4.அவ்வாத்மாவின் ஒளியிலிருந்து பல சக்திகளைத் தன் ஒளி வட்டத்திற்கு ஈர்த்துச் செயல்படுகின்றார்கள் சப்தரிஷிகள்.
அப்படிப்பட்ட நிலை கொண்டவர் தான் ஞானகுரு வேணுகோபால சுவாமி அவர்கள். அவரின் ஒளியைக் கொண்டு நம் மேல் அந்த ஒளி பாயும் பொழுது நாமும் அவர் பெற்ற ஞான ஒளியில் பங்கு ஏற்கின்றோம்.
இதைப் போலத்தான் “பல சித்தர்கள்” நம்முடன் கலந்து விளையாடுகின்றனர். ஔவைப் பிராட்டி நமக்குக் கிடைத்ததும் இந்த நிலைதான்
காட்சி:– ஔவையார் வரும் நிலை
உலக ஆத்மாக்களுடன் சில காலங்களில் கால நிலைகள் மாறு கொண்டு உருமாறும் தருணத்தில்
1.சப்தரிஷிகளின் சக்தி நிலையை உலகம் உணர்வெய்தி விழிப்புறச் செய்ய
2.மனித ஆத்மாக்கள் நிலையிலிருந்து தான் செயல் கொள்ள முடியும்.
3.அந்நிலையில் தூண்டில் போட்டு எடுத்தவர் தான் ஞானகுரு வேணுகோபால சுவாமிகள்

தான் விதைத்ததன் பலனைப் பொறுக்கி எடுக்கின்றாள் ஆதிசக்தி
ஞானத்தின் சக்தி பெற்று சித்து நிலை பெற்றிடவே நம்முள் உள்ள அமில சக்தியை எல்லாம்… நம் நிலைக்குகந்த அமில குணத்தை இந்த ஞானத்தின் ஈர்ப்பிற்குச் செல்லும் குண அமிலமாக நாம் செயல்படுத்திட்டால்… எவ்வமிலத்தை நாம் எவ்வழித் தொடருக்கு அதிகப்படுத்தி அதன் ஈர்ப்பில் வளர விடுகின்றோமோ அதன் தன்மையின் ஆணைக்குட்பட்டு… மற்ற அமில குணங்களும் இதன் கட்டுப்பாட்டிற்கே அடங்கிச் செயல்படுத்திட வைத்திடலாம்.
1.அதனதன் குணம் என்றுமே மாறாது.
2.ஆனால் அதனை இதனின் கட்டுப்பாட்டிற்குள் அடக்கி வைத்திட முடியும்.
நல்ல அமிலத்தின் செயலைப் போன்றே தீய அமில குணத்தின் செயல் நிலையும் அதன் செயலிலேயே வழி கொண்டிடும்.
1.நமக்குள் உள்ள இப் பன்னிரண்டு வகை அமிலத்தையும் அதன் போக்கில் நாம் செல்ல விட்டிட்டால்
2.அதனதன் தொடரில் எதன் குணம் அதிகப்படுகின்றதோ அதற்குகந்த ஆவி குண அமிலங்களும்
3.இதன் ஈர்ப்பில் அந்த குணத்துக்குடைய இக்காற்றினில் சுற்றிக் கொண்டிருக்கும் உடலை விட்டுப் பிரிந்த
4.மனித ஆத்மா மிருக ஆத்மா என்ற பாகுபாடு இல்லாமல் இக்குண அமிலதத்துடன் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.
இப்படிச் சேரும் ஆவி அமிலங்களில் சில சக்தி வாய்ந்த ஆவி அமிலங்கள் உடலில் ஏறிவிட்டால் அதன் செயல்நிலை அவ் உடலில் உள்ள உயிர் ஆத்மாவைக் காட்டிலும் இதன் தூண்டுதலின் வெறிக்கு உட்பட்டு மென்மேலும் இதன் நிலைக்கே தான் இழுத்துச் சென்று கொண்டே இருக்கும்.
பக்தி ஞானம் சித்து என்ற நல்லுணர்வு அமில சக்தியின் கூட்டு நிலையும் இப்படித்தான். சலிப்பு கோபம் வெறி குரோதம் இப்படிச் செயல்படும் நிலையின் அமில குணமும் அதன் ஈர்ப்பில் தான் இழுத்துச் செல்லும்.
இப்படி இத் தீய அணுவின் அமில குணத்திற்குக் கட்டுப்பட்ட ஆத்மாக்களை அத் தீய அமில சக்தி மென்மேலும் அதனை இழுத்துச் சென்று வஞ்சனை குரோதம் கொலை கொள்ளை இப்படிச் செல்லும் அமில உயிர் ஆத்மாக்கள் அதன் வெறி உணர்வினால் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றாலும் இவ்வெறி உணர்வு அடங்காமல் அதே நிலை கொண்ட உடல்களில் ஏறி தன் வெறிக்குகந்த செயலை மென்மேலும் தூண்டி மனித ஆத்மாவைப் பேயாக்கி விடுகின்றது.
இவ் வெறி கொண்ட ஆவி உலக ஆவி மனித ஜீவ உடல் கொண்ட அதே குணநிலையில் உள்ள ஆத்மாவின் உடலில் ஏறி… மென்மேலும் இவ்வெறி உணர்வு அதிகப்பட்டு… உடலில் உள்ள பொழுதே மாமிச உணவுகளை மிக அதிகமாக உண்டு… அதன் வெறியிலேயே உடல் பிரிந்து சென்றாலும் அவ்வாவிகள் தான் தன் வெறிக்குகந்த உணவைப் பெற இரத்தக் காட்டேறிகளாய் அவ் உதிரத்தின் சுவாசத்தை எடுக்க ஆவி உலகில் இருந்து கொண்டு வெறியாட்டம் நடத்துகின்றன.
இன்று உலகில் எல்லா பாகங்களிலுமே அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றால் எந்த நிலையில்…?
1.இரத்தக்காட்டேறிகளாய் ஆவி உலகில் சூழ்ந்துள்ள இவ்வாத்மாக்களுக்கு அதற்குகந்த ஆகாரத்தை எடுக்கத்தான்
2.அவைகள் செய்யும் வெறிச் செயலினால் இன்றைய உலக ஆத்மாக்கள் மாளுகின்றன.
இம் மனிதனே தான் தெய்வமும் ஆகின்றான். இரத்தக்காட்டேறி ஆகவும் ஆகின்றான். எமனாகவும் செயல்படுகின்றான் தேவனாகவும் செயல்படுகின்றான். எண்ணும் எண்ணத்தைக் கொண்டு நல் அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் தெய்வமாகின்றான். தீய அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் பேயாகின்றான்.
1.நம்க்கு எல்லாம் மீறிய அப்பாற்பட்ட சக்தியான அவ்வாதி சக்தி
2.அவள் விதைத்த விதையில் வளரும் நிலை கொண்டு பலனைக் கண்டு அவளே நகைக்கின்றாள்.
3.எல்லா விதையும் ஒன்று போல் விதைத்து அவ்விதையின் பயனைக் கண்டு மென்மேலும் விதைத்துக் கொண்டே உள்ளாள்.
4.விதையின் நற்பயனைத் தன்னுள் எடுத்துக் கொண்டு வேண்டாத பயனை ஒரு காலகட்டத்தில் மாற்றி அமைத்து விடுகின்றாள்.
5.இக்கலியில் பொறுக்கி எடுக்கின்றாள் தான் விதைத்ததன் பயனை எல்லாம்
6.தனக்குகந்தது எது என்று அவளுக்குத் தெரியும்… மற்றவற்றைத் திரும்பவும் உழுது பயிருக்கு அனுப்புவாள்.
7.மாற்றி மாற்றிப் பலனை எடுத்துக் கொண்டேதான் இருக்கிறாள்.
இதனை உணர்ந்து இரத்தக்காட்டேறிகளாய் அலையும் ஈர்ப்பில் நாம் போய்ச் சிக்காமல் அன்பென்னும் பக்தி நெறியில் நம்முள் உள்ள அமில குணங்களை வழிநடத்தி அந்த ஞானத்தின் சித்தடைவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது வெறுப்பின் தன்மையை நாம் அதிகமாக வளர்த்து விட்டால் அது நம் உடலுக்குள் வந்து எத்தனையோ கெடுதலான வேலைகளைச் செய்யும்.
அதை எல்லாம் முழுவதுமாக நான் (ஞானகுரு) உணர்வதற்காக வேண்டி மூன்று இலட்சம் பேருடைய (அந்தக் குடும்பங்கள்) உணர்வுகளை ஏககாலத்தில் ஒவ்வொன்றாகப் படிப்படியாகக் குருநாதர் காண்பித்தார்.
அவர்களையும்… அந்தக் குடும்பத்தின் உணர்வுகளை எல்லாம் நுகர்ந்தபின் அங்கிருக்கும் கெட்டது எல்லாம் உன்னை என்ன செய்கின்றது… உன் உடலில் என்ன செய்கிறது என்று பார்…! என்று சொன்னார் குருநாதர்.
அந்தக் குடும்பங்களில் நடந்ததை எல்லாம் நீ ஜோதிடம் பார்ப்பது போல் பார்த்து விடாதே… ஆனால் நீ தெரிந்து கொள்கின்றாய். யாராவது வந்து கேட்டால்… உன்னிடம் கஷ்டத்தைச் சொன்னால் நீ கேட்பாய். கேட்ட பின்…
1.ஐயா…! நீங்கள் இன்ன மாதிரியான காரணத்தினால் கஷ்டப்படுகிறீர்கள்
2.உங்கள் வீட்டில் உள்ள சண்டையெல்லாம் போய்விடும் என்று கண்டறிந்து நீ சொன்னால்
3.கடவுளே நீ தான்…! என்று உன்னைப் போற்றுவார்கள்
4.ஆனால் அவன் கஷ்டம் எல்லாம் உன்னிடம் வந்துவிடும் “ஜாக்கிரதை…!” என்று சொல்லி விட்டார்.
காரணம் எல்லாவற்றையும் நீ தெளிவாகத் தெரிந்து கொள்கின்றாய் தெரிந்து கொண்ட பின் “உனக்குக் கஷ்டம் இப்படி இருக்கின்றது… தொழில் நஷ்டமாகி விட்டது…!” என்று நீ அவரிடம் சொல்வாய்.
அந்தக் கஷ்டத்தை எல்லாம் நீ வாங்கிய பின் தான் “நல்லதாகும்” என்று நீ சொல்ல முடியும். ஆக… கஷ்டத்தை நுகர்ந்து அவர்களுக்கு மீண்டும் கஷ்டத்தை தான் கொடுக்க முடியுமே தவிர நல்லதைக் கொடுக்க முடியாது.
ஆனால் உன்னைக் கடவுளாக அவன் போற்றுவான். இவரிடம் போனேன்… என் குடும்பத்தைப் பற்றி எல்லாமே சொன்னார்… இவர் கடவுள்…! என்பான்.
1.ஆனால் அவருடைய நோய் எல்லாம் உன்னிடம் வந்துவிடும்
2.அவனுடைய இந்த கஷ்டமெல்லாம் உன்னிடம் வந்துவிடும் “ஜாக்கிரதை…!” என்று சொல்லிவிட்டார் குருநாதர்.
அதையும் சொல்வார்… இதையும் சொல்வார்… நான் தெரிந்து கொள்ளவும் செய்வேன் (ஞானகுரு).
இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்
1.அவர்களுடைய அந்தக் கஷ்டமான உணர்வுகள் உனக்குள் வராதபடி நீ நிறுத்த வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் ஜீவாத்மாவிலே அந்த அருள் சக்திகள் பெற வேண்டும் என்று இதை முதலில் நீ எடுக்க வேண்டும்.
எடுத்துக் கொண்ட பின் அவரிடம் என்ன சொல்ல வேண்டும்…?
மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்… உங்கள் கஷ்டம் எல்லாம் நீங்கும்…! என்று வாக்கினைப் பதிவு செய்து அந்தக் கஷ்டத்தை நிறுத்த “அவரைப் பழக்கச் செய்ய வேண்டும்…”
கஷ்டம்…! என்று அவர் சொன்னால் ஐயோ… உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்று கேட்டு அதை இழுத்துக் கொள்கிறோம்.
அவருக்குள் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொண்ட பின் “உனக்கு நல்லதாகும்…” என்று நியாயத்தைச் சொல்வாய். ஆனால் அவர்கள் கஷ்டம் எல்லாம் இங்கே வந்துவிடும்.
ரொம்பப் பேர் என்ன செய்வார்கள்…?
1.இரக்க மனமாகப் போய் எல்லோருக்கும் நியாயத்தைச் சொல்வார்கள்
2.ஆனால் தனக்குள் பிறருடைய அந்தக் கஷ்டமான உணர்வுகள் தனக்குள் உட்புகுவதை நிறுத்தத் தெரியாமல் இருப்பார்கள்.
அதை நிறுத்த வேண்டும் என்பது தான் சதுர்த்தி…!
ஏகக்காலத்தில் எல்லோரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஒருவருக்கொருவர் இருக்கும் பகைமை நீங்க வேண்டும் என்று எண்ணிய பின் இந்த அலைகள் போனபின் என்ன செய்கிறது…?
1.மனிதனான நானும் எனக்குள் அந்தப் பிடிப்பை அறுத்து விடுகிறேன்.
2.என் மீது பகைமை கொண்டிருப்பவர்களும் என் மீது வெறுப்பில்லாதபடி அதை அறுத்து விடுகின்றார்கள்.
அப்போது அந்தத் தீமை செய்யும் அலைகள் அனாதையாகப் படர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் முதலிலே ஒருவருக்கொருவர் சண்டை போட்டதெல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது. இருந்தாலும்
1.நாம் இப்போது எண்ணும் இந்த வலுவான உணர்வுகள் என்ன செய்கிறது…?
2.அதைத் துரத்திக் கொண்டு போகிறது.
துரத்திக் கொண்டு சென்றாலும் செடிகள் மரங்கள் இருக்கும் பக்கம் அவைகள் போகாது. நேராகக் கடல் பக்கம் தான் போகும்.
ஏனென்றால் கடல் பக்கம் யாரும் அதிகம் (நடமாட்டம்) போவதில்லை. அங்கே அலைகள் தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கும்.
1.கடல் அலைகள் மாறி மாறி வரும் பொழுது
2.நாம் ஈர்க்க மறுத்த தீய வினைகளை எல்லாம் இழுத்து இழுத்து உள்ளே கொண்டு போய் அமிழ்த்திவிடும்
3.அந்த உப்பு நீர் (ஹைட்ரஜன்) அவைகளைக் கரைத்துவிடும்.
இது எல்லாம் அக்கால மெய் ஞானிகள் கண்டுணர்ந்து நமக்கு வழி காட்டிய பேருண்மைகள். ஞானிகள் காட்டிய வழிப்படி நாம் நடக்க வேண்டும்.


உடலுக்குள் நோய் உருவாகும் விதம்
உதாரணமாக வேதனை என்ற உணர்வினை அதிகமாக நாம் எடுத்தால் கோழி… குஞ்சுகளைப் பொரிப்பது போன்று நம் உடலில் இரத்தத்தில் அணுக்கள் உருவாகி விடுகின்றது.
எந்த வேதனைப்பட்டமோ அது தான் அதற்கு உணவு…! நம் உயிரால் கருவாக்கப்பட்டு அந்த அணுத்தன்மை அடைந்தால் பசிக்காக ஏங்கும் பொழுது உயிருக்கே எட்டுகின்றது.
நாம் எந்தக் கண் வழி வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அதன் உணர்வு உயிரின் நிலை கொண்டு அந்த உணர்வால் உணர்ச்சிகளாக நாம் அறிகின்றோம்.
இருந்தாலும் இரத்த நாளங்களில் அது கருவாக உருவாகி விடுகின்றது. கருவாக உருவானதோ அணுவாகி விடுகின்றது அணுவான பின் உணவுக்காக அது அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது உயிருக்கு வருகின்றது.
1.உயிருக்கு வந்தபின் கண்களுக்கே மீண்டும் வருகின்றது.
2.கண் வழி இந்த பூமியில் படர்ந்துள்ள எந்த மனிதனின் உடலில் இருந்து அந்த வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டதோ
3.அதை நமது கண்ணான காந்தப்புலன் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
4.நமது ஆன்மாவாக மாற்றிய பின் நமது உயிரில் உள்ள காந்தம் இழுத்து அந்த உணர்வினை இரத்தங்களில் கலக்கச் செய்கின்றது.
இரத்தங்களில் கலந்த பின் எத்தகைய வேதனை உணர்வு அணுவானதோ அந்த இரத்தத்திலிருந்து வேதனையான உணர்வுகளை உணவாக உட்கொள்கின்றது.
காற்று மண்டலத்தில் எல்லாச் செடி கொடிகளின் சத்துகளும் கலந்துள்ளது ஆனால் அதனதன் வித்துகளை நிலத்தில் ஊன்றும் பொழுது… எப்படி நிலத்தின் துணை கொண்டு அதனதன் செடியின் சத்தைக் கவர்ந்து செடிகள் விளைந்து அதனதன் வித்துக்களை உருவாக்குகின்றதோ இதைப் போன்று தான்
1.நம் உடலுக்குள் அந்த இரத்தங்களில் சுழன்று வருவதை எந்தெந்த குணங்கள் கொண்டோமோ அந்த அணுக்கள் அதை உணவாக உட்கொள்ளும்.
2.அதன் வழி அது தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்… வேதனை என்ற உணர்வை வளர்த்துக் கொண்டே இருக்கும்.
நம் உடலில் நுரையீரல் இருக்கிறது என்றால் வேதனை என்ற உணர்வுகள் அங்கே அந்த முட்டை வெடித்து அணுவாக உருவானால்… அந்த இடத்திலிருந்தே இரத்தத்திலிருந்து வருவதை அந்த அணு உறிஞ்சி தன் இனத்தைப் பெருக்குகின்றது.
தன் இனமான அணுக்களைப் பெருக்கப்படும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நுரையீரல் பழுதடையத் தொடங்கி விடுகிறது.
நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட அந்த நுரையீரல் சசுருங்கத் தொடங்கினால் அதனால் உடலில் உபாதைகளும் சரியாக சீராக இயங்காதபடி நாளடைவில் இந்த அணுக்கள் பெருகப் பெருகப் உடலும் சுருங்கத் தொடங்கிவிடும்.
1.வேதனையான உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க
2.உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்திலும் விஷங்கள் புகுந்து விடுகின்றது. கடும் நோயாகின்றது.

ஞானம் பெறும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்
அன்று சில உண்மை நிலைகளைக் காவியங்களாக்கி உணர்த்திய நிலையிலிருந்துதான் (சித்தர்களின் நிலை) இன்று விஞ்ஞானம் காண்கின்றோம்.
இப்பூமியின் ஈர்ப்பிற்கு மூலகாரணமாய் ஆணிவேராய் உள்ள ஓ…ம் என்ற நாதத்தினால் ஈர்க்கப்பட்ட அமில குணங்கள் தான் இவ்வுலகனைத்துமே. ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்து அதன் ஒளி அமிலத்தை இப் பூமியே பல நிலைகளில் வளர்த்துக் கொண்டது.
1.இப்பூமியின் அமில சக்தியான ஈர்ப்பின் அலை கொண்டு தான் அனைத்து நிலைகளும் நடக்கின்றன.
2.எதுவுமே ஒதுக்கப்பட்ட சக்தியற்ற ஜீவனில்லா நிலை இப்பூமியில் இல்லை.
3.ஒவ்வொன்றிற்கும் அதன் ஈர்ப்பிற்கு ஏற்ப அதன் குணநிலையுண்டு.
4.அதன் வளர்ச்சியில் மாற்ற நிலைகளும் உண்டு.
இயற்கையுடன் வளர்ந்திட்ட சக்திதனிலேயே உயர்ந்த ஞானம் கொண்ட மனித ஆத்மாவின் உடலைக் கொண்ட நாம் இவ்வுலகின் உண்மை நிலையை உணர்ந்திடாமல் இருந்திடலாகாது என்பதனை அன்று உணர்ந்த சித்தர்கள்… அந்தந்தக் கால நிலைகளுக்கொப்பக் கவிதைகளாக்கி காவியங்களாக்கி பல அபூர்வ நிலைகளை எல்லாம் புரியும் நிலையில் வடித்துச் சென்றார்கள். சென்றார்கள் என்ன…? வடிவாக்கி நின்றார்கள்.
ஆனால் இக்கலியின் கதையின் ரூபமாய்க் கண்டுணர்ந்து விரயப்படுத்தி விடுகின்றோம். ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு தத்துவக் கோளங்கள் உண்டு. நம் முன்னோர்கள் உணர்த்தி ஏற்படுத்திய அரும் பெரும் பொக்கிஷத்தை நாம் கண்டுணர வேண்டும்.
இவ்வுடல் என்ற மாய பிம்பத்தின் அற்ப ஆசைக்காக ஆத்மாண்டவனின் அறிவு ஞான பொக்கிஷத்தைச் சிதறவிட்டே வாழ்கின்றோம்.
அன்று பல சித்தர்களினால் ஆண்டவனாய்ப் பல ரூபப்படுத்தி அவரவர்கள் எண்ணத்திற்குகந்தபடி எல்லாம் ஆண்டவனின் ரூபத்தைக் கண்டுணர்ந்து அவர்களின் ஞானப்பாலை வெளிப்படுத்தினார்கள்.
1.எங்கும் நிறைந்துள்ள ஆண்டவனை எந்த ரூபத்தில் கண்டால் என்ன…? என்ற தத்துவ நிலையை
2.அவரவர்கள் சிவனாகவும் விஷ்ணுவாகவும் பிரம்மாவாகவும் வடிவமைத்துத் தந்தார்கள்
அன்பு நற்பண்பு சத்திய ஜெபம் இவற்றை நாம் மேற்கொண்டால்… அன்றைய சித்தர்களினால் சிவனாகவும் விஷ்ணுவாகவும் பிரம்மாகவும் படைக்கப்பட்ட “ஆத்மாண்டவனை…” இயற்கையின் எல்லாமில் எல்லாமாய் உள்ள ஒளியுடன் கலக்கச் செய்யலாம்.
1.அன்றைய சித்தர்களிலேயே ஒவ்வொரு சித்தனும் பல நிலைகளில் விளக்கியுள்ளான்.
2.பல பாடல்களை இயற்றி இன்றைய கால நிலைக்கும் பொருந்தும் நிலை ஏற்படுத்தியுள்ளான்.
3.ஆனால் இந்த ஞானத்தின் பொக்கிஷத்தை மனித ஆத்மாக்கள் பயன்படுத்தாமல் செயல் கொண்டு வருகின்றன.
கருவூராரின் கருவூலத்தைக் காண்பாரும் இன்றில்லை. கருவூலத்தின் கருவையே கரியூலமாக்கிக் களிப்படையும் காலமப்பா இது.
ஒவ்வோர் ஆத்மாவும் தான் பிறந்த கருவூலத்தின் மகிமையை உணர்ந்து வாழ்ந்திடுங்கள். கனவூலத்தில் களிப்பெய்திக் காணும் சுகம் என்னவோ என்பதனை உணர்ந்து வாழ்ந்திடுங்கள்.
பக்தியையும் ஞானத்தையும் வளரவிட்டு முக்தி என்னும் பக்தி பெறலாம். பக்தியில் வழி எடுத்து முக்தி என்னும் பக்திக்கே செல்லும் மார்க்கத்தை அடையலாம்.
சிற்றின்பம் பேரின்பம் என்றிட்டே ஞான இன்பத்தை நாசப்படுத்திட்ட நிலை ஏனப்பா…?
1.உண்டாலும் உண்ணாவிட்டாலும் இரவும் பகலும் மாறிக்கொண்டு தான் உள்ளன.
2.நாம் பெறப் போகும் ஞானத்திற்காக நாம் பெறப்படும் வரை எதுவுமே நமக்காக நிறுத்தி வைப்பதில்லை.
3.கருவூலத்தின் கருவாகிய நாம் நம் ஞானத்தை பெறும் சக்தியை அடையும் பக்குவத்தைத் திரும்பவும் திரும்பவும் செப்புகின்றேன்
4.நீங்கள் செயல்படுத்திட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக ஒரு வேப்பமரத்தின் கசப்பான உணர்வலைகள் அதிகரித்து விட்டால் அதனருகே ரோஜாச் செடியின் மணங்கள் சிறிதாக இருப்பினும் அதை விரட்டிக் கொண்டே போகும்.
அதே போல் ரோஜாச் செடியின் மணங்கள் அதிகரித்து விட்டால் அதனருகே வேப்பமரத்தின் கசப்பான உணர்வலைகள் சிறிதாக இருந்தால் அதை இது துரத்திக் கொண்டே போகும். ஏனென்றால் ரோஜாவின் மணம் வலு கூடிவிடுகிறது.
இதே மாதிரித் தான் ஒரு விஷச் செடியின் மணங்கள் அதிகரித்து விட்டால் அருகே ரோஜாச் செடியின் மணம் இருந்தால் அதை விரட்டிக்கொண்டு போகும்.
ரோஜாச் செடியின் சத்து அதிகரித்து விட்டால் விஷச் செடியின் மணங்கள் தன்னாலே ஓடிவிடும்.
1.தாவர இனத்தின் மணங்கள் வலு கூடிக் குறையும் போது ஏற்படும் இத்தகைய இயக்கம் போல் தான்
2.மனிதருக்குள் எடுத்துக் கொண்ட அந்தந்த குணங்கள் கொண்ட உணர்வுகளின் இயக்கமும் இருக்கும்.
உதாரணமாக பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. அது நமக்குள் பதிவாகி விட்டால் அந்த உணர்வை இழுத்து இழுத்து நம் ஆன்மாவாகப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.
அதாவது நம் ஆன்மாவில்…
1.முதல் வட்டம்
2.இரண்டாவது வட்டம்
3.மூன்றாவது வட்டம் என்று
4.அந்தந்தக் குணத்தின் உணர்வலைகளாக வரும்.
முதல் வட்டம் நல்லதாக இருக்கின்றது. இரண்டாவது வட்டம் ஒரு வேதனை என்ற கசப்பான உணர்வாக இருக்கின்றது. மூன்றாவது வட்டம் வெறுப்பான உணர்வுகளாக இருக்கிறது.
1.அப்போது வேதனை கோபம் என்று அது தான் முன்னாடி வருகின்றது.
2.அதைக் கடந்துதான் அந்த நல்ல உணர்வு நமக்குள் வரவேண்டும்.
3.இரண்டாவது வட்டம்… மூன்றாவது வட்டத்திற்குள் இருக்கும் வேதனை வெறுப்பு அவைகளுடன் கலந்து நாம் சுவாசித்தோம் என்றால்
4.நல்லதை நம்மால் சீராக இயக்க முடிவதில்லை.
அந்த வெறுப்பும் வேதனையும் கலந்தே பேசத் தொடங்குவோம். யாரிடம் பேசினாலும் என்னத்தைச் சொல்லி… யாருக்கு நல்லதைச் செய்து… என்ன பலன்…? என்ற இந்த உணர்வு முன்னாடி வரும்.
காரணம் நமக்குள் நல்ல குணங்கள் இருந்தாலும்… உள்ளே பதிந்திருந்தாலும்… நம் ஆன்மாவிலிருந்து இழுத்துச் சுவாசிக்கும் போது இடையில் இருக்கும் உணர்வுகளுடன் கலந்து வந்துவிடுகிறது.
1.நம் ஆன்மாவில் இருக்கும் உணர்வலைகளில் ஒரு அடி வித்தியாசத்தில் இபபடி வந்து கொண்டே இருக்கும்.
2.இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது வேதனையும் கோபம் தான் அதிகமாக வரும்.
3.எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் அவைகளைக் கடந்துதான் வர முடியும்.
4.அதைக் கடந்து வரும் பொழுது அதுதான் இயக்குகின்றது.
சூரியன் பல விஷத்தன்மையுள்ள உணர்வுகளை எடுக்கின்றது. அதையெல்லாம் தன் முகப்பிலே மோதி ஒளியாக மாறுகின்றது… காந்தப் புலனாக மாற்றுகின்றது.
சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சைப் பிரித்து விடுகின்றது. ஆனாலும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்தங்கள் அந்த அல்ட்ரா வயலட் என்ற நஞ்சுக்குள் புகுந்து தான் வெளியிலே வருகின்றது.
அந்த உணர்வின் சத்து எதுவோ எந்த மணத்தை இது தாங்கியதோ எதனுடன் தாங்குகிறதோ அந்த உணர்வின் குணம் கொண்டு தான் அதை இயக்கும்.
இதைப் போல தான் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு உள்ளுக்குள் இருந்தாலும் வேதனை வெறுப்பு கோபம் என்ற இந்த குணங்களை எடுத்தால் இது முன்னாடி வந்து விடுகின்றது.
அடுத்து நாம் நல்லதை எண்ணி வந்தாலும் ஆன்மாவில் பட்டு அதனுடன் சேர்த்து அந்த தான் வரும். இது உள்ளே நுழைந்து நமக்குள் எண்ணங்களாக வருவதற்கு முன்னாடி நல்ல குணங்கள் கார குணமாகவே வரும்.
அந்த மாதிரி நேரத்தில் யாராவது நல்லவர்கள் வரட்டும். கொஞ்சம் இனிமையாக அவர் சொன்னால் போதும்.
1.இன்றைக்கு இவர் நல்லது செய்ய வந்து விட்டாராக்கும்…!
2.எந்த எண்ணத்துடன் வந்திருப்பாரோ… யாருக்குத் தெரியும்…? என்ற அந்தக் குறையான எண்ணமே வரும்.
அதே போல் பிரசாதம் கொடுக்கும் இடங்களில் பார்க்கலாம். கொஞ்சம் வெறுப்பாக இருந்தால்… டக்கென்று கையிலே இடித்துத் தான் கொடுக்க வைக்கும். இந்த உணர்வுகளைப் பார்க்கலாம்.
ஒரு பொருளைக் கொடுக்கும் பொழுதே
1.இந்தா…! என்று அழுத்தமாகச் சொல்ல வரும்… கொடுக்கும் பொழுதே பார்க்கலாம்.
2.அந்த உணர்வுகள் எப்படி… அது என்ன எல்லாம் செய்கிறது…? என்று…!
3.நல்ல குணம் நமக்குள் இருந்தாலும் மற்ற உணர்வுடன் சேர்ந்து நம் உடலையே இப்படி இயக்கிக் காட்டும்.
அனுபவத்தில் பார்க்கலாம்.
இதை எல்லாம் நிறுத்துவதற்குத் தான் “சதுர்த்தி…” என்று வைத்தார்கள். தீமைகளை நாம் நிறுத்த வேண்டும்.
யார் மீதெல்லாம் நாம் வெறுப்பைப் பதிவு செய்து வைத்திருந்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… நாங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் வலுவாகத் தியானிக்க வேண்டும்.
1.அப்போது அந்த வெறுப்பான அணுக்களுக்கு நாம் சாப்பாடு கொடுப்பதில்லை.
2.வெறுப்பான எண்ணங்களை நீக்கி விடுகிறோம்.
3.எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கின்றோம்.
நாம் எண்ணிய இந்த உயர்ந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. இந்தக் காற்று மண்டலத்தில்
1.நமக்கு முன்பு இருக்கும் தீமைகளை விரட்டிச் செல்கிறது.
2.நம் ஆன்மாவும் தூய்மை அடைகிறது… பரமாத்மாவும் தூய்மை அடைகிறது.


துருவத்தின் வழி… புருவத்தின் வழி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர வேண்டும்
அகஸ்தியன் துருவனாகி பின் திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து துருவ மகரிஷி ஆகித் தனக்குள் சிருஷ்டித்து இரு உயிரும் ஒன்றாக இணைந்து இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக ஒன்றி வாழ்ந்து ஒளியின் சரீரமாகி எந்த துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.
அகஸ்தியனும் அவன் மனைவிவும் பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினின்று வெளிப்படும் ஒளி அலைகளைச் சூரியன் கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.நமது பூமி துருவத்தின் வழியாக இழுக்கின்றது. இங்கே படர்கின்றது.
2.அதிகமாகப் பாயும் இந்த அதிகாலை நேரத்தில் துருவத்தை உற்று நோக்கி
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதை நாம் நுகர நேர்கின்றது
4.நம் உடலுக்குள் அது பரவுகின்றது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்கும் அது கிடைக்கின்றது.
அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்துக் கொண்டு வந்தால் இந்த உணர்வுகள் சிறுக சிறுக நல்ல அணுக்களின் பெருக்கமாகி தீமையான அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களாக உருவாக்குகின்றது
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவினைச் செலுத்தி அதனுடைய அருள் சக்தி பெற வேண்டும் என்று கண்களை மூடி ஏங்கித் தியானியுங்கள்.
ஈஸ்வரா என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். “ஈஸ்வரன் என்றாலே உயிர் தான்…” அவனிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் இப்பொழுது செலுத்துங்கள்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி திரும்பத் திரும்ப நுகரும் பொழுது
1.புருவ மத்தி வழிதான் உடலுக்குள் அந்த அலைகள் செல்கின்றது.
2.புருவ மத்தியின் வழி வரும் பொழுது “குறு…குறுப்பும்… சிலருக்கு ஒளியும் நல்ல உணர்ச்சிகளும்” தெரிய வரும்.
3.சிலருக்கு அந்தக் “குறு…குறு…” என்று இருக்கும் பொழுது சிறிது வலியும் கூட இருக்கும்.
4.காரணம் நம் உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும் அந்த அரும்பெரும் சக்தி அங்கே படரும் பொழுது
5.தீய அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.
ஆகவே உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள் “திரும்பத் திரும்ப…”
அந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும். ஏங்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசிக்க நேர்கின்றது “புருவ வழியில்…”
1.நமது உணர்வுகள் நுகரும் அல்லது செல்லும் பாதை அந்தப் புருவம் தான்
2.இரண்டு கண்களுக்கு இடையில் புருவ மத்தியில் உயிரின் இயக்கம்…
3.நம் உயிரின் துணை கொண்டு துருவத்தில் இருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
4.புருவத்தின் வழி நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்கு அந்த உயர்ந்த சக்தியினை நாம் ஊட்டுகின்றோம்.
5.நம் இரத்த நாளங்களில் அதைப் பெருக்குகின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
கண்ணின் நினைவலைகளை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உங்கள் உணர்வலைகள் இரத்த நாளங்களில் கலப்பதும்… “உங்கள் உடலில் உள்ள அணுக்களில் பெருகும் அந்த உணர்ச்சிகளை அறியலாம்…”

உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்று இல்லை
இப்படி இப்பூமியில் பல காலமாய் ஏற்பட்டதின் தொடர்ச்சியில் பல பல நிலைகள் நடக்கின்றன. ஒன்றைப் போல் ஒன்றில்லாமல் தான்… ஒன்றை அழித்து ஒன்று சக்தி கொண்டு இவ்வண்டமும் பேரண்டமும் சுழலுகின்றன.
ஆனால் நம் மனித ஆத்மாக்கள் மட்டும் ஒருவரைப் பார்த்து ஒருவர்
1.அவரைப் போல் நாம் வாழ வேண்டும்
2.மற்றவர்களைப் பார்த்து ஆண்டவன் அவர்களுக்கு அபரிமிதமான சக்தியை அளிக்கின்றார் என்ற குறைவான எண்ணம் வேறு.
3.ஒன்றைப் போல் ஒன்றில்லை… ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்ற நிலை இப்பூமிக்கே உள்ள பொழுது (அனைத்திற்குமே)
4.நாம் ஏன் ஒன்றின் எதிரொலியாய் எதிர்ப்பார்க்க வேண்டும்.
ஆதி காலம் தொட்டே ஞானங்கள் உணர்த்தி வந்த நிலையிலும் ஒவ்வொருவரும் அவர்களின் உண்மை நிலையைத்தான் உணர்த்தினார்கள்.
இன்று நம் ஞானத்தின் சக்தி பொதுவானது தான். ஒவ்வொருவருக்கும் அந்த ஞானத்தைப் பெறும் ஆற்றல் உள்ளது என்று உணராமல் “செக்குமாடுகளாய்ப் போல்” சுழன்று கொண்டே உள்ளோம்.
ஞானிகள் வெளிப்படுத்தியதை இப்பூமியில் (இந்தியா) உள்ள பல பாகத்தில் இதன் நிலையை எடுத்து அதில் ஆராயும் நிலையைப் (ஞானோதய நிலை) பெற்று பல விஞ்ஞானத்தைத் தன் ஞானத்துடன் சேர்த்துச் செயலாக்குகின்றார்கள்.
ஆனால் ஞானத்தை வளர்த்த பூமியிலுள்ள ஆத்மாக்கள் இன்று மற்றைய மேலை நாடுகளின் செயற்கையின் வளர்ச்சியில் மயங்கி இங்கிருந்து அங்கு சென்று வந்தால் இவ்வுலக அனுபவம் பெறலாம் என்று அற்ப ஆசையில் ஓடுகின்றார்கள்.
ஞானிகளையே அள்ளி வழங்கிய ஞானச் சுரங்கத்தை எடுக்கும் பக்குவம் இன்றைய காலத்தின் ஜாதியின் அடிப்படையில் சொந்தமாக்கி பக்திக்குப் பொருளைக் கொண்டு ஸ்தானங்கள் அமைக்கப்படும் கோயில்களில் ஏற்படும் இம்மதிப்பு விகிதத்தைக் கொண்டு மங்கச் செய்து விட்டார்கள்.
இராமாயணத்தையும் கீதையையும் இவர்கள் ஜாதியின் அடிப்படையில் சொந்தமாக்கி அதில் உள்ள கருத்துக்களையும் மாற்றிவிட்டனர்.
ஆனால் விக்ரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள வேதாள முனிவர் செப்புவதாக உணர்த்திய அதன் கருத்துக்களை மக்களினால் விளையாட்டாகவும் விரும்பத் தகாத முறையில் பேய் என்ற ஒதுக்கப்பட்ட நிலையிலும் ஒதுக்கிவிட்டவர்கள்…
1.விக்ரமாதித்தன் கதையில் உள்ள கருத்துக்களை ஊன்றி அறிந்தால்
2.இவ்வுலக நடப்பின் உண்மைகளை அன்றே கதையுருவில் ஆவி பேய் என்ற ரூபத்தில் உணர்த்தியுள்ளார்.
3.விக்ரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள நிலைகள் உண்மை நிலைகள்.
ஒவ்வொரு மனிதனின் எண்ணத்திலும் இன்று பல பேயான குணங்களுக்கு இடமளித்துவிட்டு பேய் என்று உருவமில்லாத நம்பப்படாத நிலைக்கு மட்டும்தான் இன்றைய மனிதன் பயப்படுகின்றான்.
உலக நிலை எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா…?
அனைத்துமே ஆவி தான். பக்தி என்று சக்தி மாதா என்று மற்றவர்கள் எழுதி வைத்த மந்திரங்களைப் புரியாமல் உருப்போட்டுப் பல பொருட்களை அச்சக்தி மாதாவுக்குப் படைத்துப் பூஜித்து வணங்கச் சொன்னால் இன்றைய நம் மனிதர்கள் நம்புவார்கள்.
1.“உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஆவி என்றும் பேய் என்றும் சொல்பவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள்…”
2.இன்று இங்குள்ள ஆத்மாக்கள் ஒன்றையே சுற்றிச் செக்கு மாடுகளைப் போல் உழன்று உள்ள நிலையில் மறு சொல் ஏற்படுவது கடினம்தான்.
நம் பூமியின் நிலையே அந்தந்த இடத்திற்குத் தகுந்த அமிலத்தை ஈர்க்கும் குணத்தைக் கொண்டு இப்பூமியின் பல பாகங்களில் அதனதன் இயற்கை வளத்தின் செழிப்புத் தன்மையும் கால நிலைகளும் உருவாகின்றன.
இயற்கைத் தன்மைக்கு மட்டும்தான் அம்மாற்றமா…? இயற்கையின் வளர்ச்சி பெற்ற மனித ஆத்மாவுக்கும் அதுவேதான். அந்தந்தப் பூமியின் காந்த சக்தியைக் கொண்டுதான் மனிதனின் எண்ண ஓட்டம் உருவ வளர்ச்சி உணவு நிலை உறங்கும் நிலை அனைத்துமே இருந்திடும்.
இங்குள்ள மனிதனின் சுறுசுறுப்பிற்கும் மற்ற நாட்டின் சுறுசுறுப்பின் தன்மைக்கும் மாறுபடும். இங்கு காய்க்கும் காய்கறி கனி வளங்களைப் போல் மற்ற நாடுகளில் இருப்பதில்லை.
1.இங்குள்ளவை அங்கு வளர்வதில்லை… அங்குள்ளவை இங்கு வளர்வதில்லை.
2.இதே விதையை அங்கு போட்டாலும் அப்படி அது வளர்ச்சி எய்தினாலும் சுவையில் மாறுபடுகின்றது.
அங்குள்ள மனிதன் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளான். பல நவீன செயற்கையகங்களை உருவாக்கி உள்ளான் என்றால் அது அவன் செயல் மட்டுமல்ல… அவன் பிறந்த பூமியின் அமில குணத்தில் அவன் உருவாக்குகின்றான். அவன் செயல் திறனும் அதன் நிலைக்கொப்பத் தொடருகின்றது.
நம் பூமியில் கலந்துள்ள இந்த ஞான ஒளியை அன்று உணர்ந்த சித்தர்களின் தொடர்பிருந்தும், இன்று நாம் தவற விட்டு சாமான்யர்களாய்ப் பெற முடியாத ஒன்றாக அதனைக் கருத்தில் கொண்டு வாழ்கின்றோம்.
1.இன்னும் சிலர் சித்தும் ஞானமும் எதற்காக…? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா…? என்ற உணர்விலேயே ஞானத்தைத் தவற விட்டு
2.இன்று பக்தி என்ற மமதைப் பிடியிலும் அரசியல் என்ற கோமாளி விளையாட்டிலும் நம் செயலையெல்லாம் விரயமாக்கி வாழ்ந்து வருகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று எவ்வளவோ ஆர்வத்தில் இங்கே வருகின்றார்கள். ஆனால் இங்கே நானா… நீயா…? என்ற நிலைகளில் ஒரு சிலர் செயல்படுகின்றனர்.
ஞானம் பெற வேண்டும் என்று இங்கே எந்தப் பக்குவத்துடன் வருகின்றார்களோ அவர்கள் மனம் புண்பட்டால் அதனுடைய விளைவுகள் நம்முடைய வளர்ச்சியைக் குன்றச் செய்ததுவிடும்.
ஒரு மனிதன் எந்த ஏக்கத்துடன் வருகின்றானோ… அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் வரும் பொழுது… அதற்குத் தடையாக நாம் இருந்தால் அவன் எண்ணங்கள் எவ்வளவு பெரிய நிலையை நமக்கு உருவாக்கும்…! என்று உங்களுக்கே தெரியாது.
இதையெல்லாம் நாம் நம்மிடம் இருந்து அப்புறப்படுத்துதல் வேண்டும். பிறரை நாம் வாழ்த்த வேண்டும்.
1.பிறரை மதித்துத் தான் பழக வேண்டுமே தவிர
2.அவர்களை நாம் தாழ்த்திப் பழகவே கூடாது
குருநாதர் இதைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். தாயாகவும் நீ இரு… சேயாகவும் நீ இரு…! என்றார்.
1.குழந்தை தாயை ஏசிவிட்டாலும் அந்தத் தாய் “தன் குழந்தை” என்று அரவணைத்துத் தான் செயல்படும்
2.அதே சமயத்தில் குழந்தையைத் தாய் அடித்து விட்டாலும் மீண்டும் அந்தக் குழந்தை தாயை அணுகியே தான் வரும்.
தாயாகவும் சேயாகவும் நாம் ஒருங்கிணைந்த நிலையில் கொண்டு வாழ வேண்டும் என்று குருநாதர் எனக்கு இதைத்தான் முதலில் கொடுத்தார்.
எத்தனையோ பேர் உன்னை ஏசுவார்கள் பேசுவார்கள். ஆனால் தாயாக இருந்து அதை நீ ஏற்று… அவர்களுக்கு… சேய்க்கு உபதேசிப்பது போன்று ஒவ்வொரு நிலைகளிலும் நீ காத்தருள வேண்டும். தாய் தன் குழந்தையை எப்படிக் காக்கின்றதோ அதைப் போல நீ வரவேண்டும்.
ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் தாயாக மாற வேண்டும். சேயை எப்படி வளர்க்கின்றோமோ அது போலச் செயல்பட வேண்டும்.
குழந்தையிடம் யார் எதைப் பேசினாலும் அல்லது குழந்தையைத் திட்டிவிட்டு அடுத்து ஒரு பிஸ்கட்டைக் கையில் கொடுத்தால் அது வாங்கிக் கொள்ளும்.
1.அந்தக் குழந்தையின் செயலைப் போல
2.நாமும் பகைமையை மறத்தல் வேண்டும்
அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் உயர்த்த வேண்டும். இதைப் போன்ற நிலைகளை நாம் பின்பற்றுதலே நலம்.
அதற்குத்தான் இந்தக் கூட்டமைப்பை… ஸ்தாபனத்தை அமைத்திருக்கின்றோம். குருவின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்துள்ள நாம் அனைவரும் அதைச் செம்மையான முறையில் கடைப்பிடித்து வழி நடத்துதல் வேண்டும்.
பல்லாயிரக் கணக்கானோர் நல்வழியினை விரும்ப… இதற்குள் இரு நூறு பேர் தடைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்ற நிலையில் நானும் (ஞானகுரு) காட்டிற்குள் சென்று இதைச் செயல்படுத்த முடியும்.
ஏனென்றால் அந்த இடைஞ்சலான இடத்தில் போய் உட்கார்ந்தாலும் அங்கே வருபவர்கள் எத்தனையோ கஷ்டம் என்று ஒரு நான்கு பேர் அந்த “நல்லதைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தில் வருவார்கள்.
அவர்களுக்கு மட்டும் நான் அருள் ஞானத்தைப் பெறச் செய்ய முடியும். கஷ்டப்பட்டு எபப்டியும் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைகளில் வருவோர் நிச்சயம் அதைப் பெறுவார்கள்.
ஆனால் கஷ்டமில்லாமல் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைக்கு வரும் பொழுது எப்படி இருக்கும்…? அது இலேசாகத் தான் தெரியும்.
அது போன்று நீங்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்குத் தான் இதைச் சொல்லி எச்சரிக்கை செய்கிறேன் (ஞானகுரு).


உடல் நலம் பெறுவதற்குத் தான் இந்தத் தியானம் செய்கின்றோமா…? என்றால் இல்லை…!
அன்றாட வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாக ஆனான்… ஒளியின் சரீரமாக இருக்கின்றான் உடலை ஒளியாக மாற்றிச் சென்றான். அப்படி ஒளியாக மாறியது தான் துருவ நட்சத்திரம்.
அதிலிருந்து வருவதைத் தான் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டு வருகின்றது… நம் பூமியிலேயே பரவச் செய்து கொண்டிருக்கின்றது.
1.காலையில் நான்கிலிருந்து ஆறரை மணிக்குள் மொத்தமாகக் குவித்து கொண்டு வருகின்றது.
2.வெயில் வருவதற்கு முன் நாம் அதை எடுத்துப் பழகுதல் வேண்டும்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை நீங்கள் செவிகளில் கேட்கப்படும் பொழுது ஏங்குகிறீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்கு எளிதில் கிடைக்கின்றது.
ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது திடீரென்று விபத்து ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டால் அல்லது பேப்பரிலே அதைப் படித்தால் நம் மனது எப்படி ஆகின்றது…? கொஞ்ச நேரமாவது நம் மனது சோர்வடைகிறது.
இதைப் போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சொல்லப்படும் பொழுது
1.என்னைக் கண்களால் பார்க்கின்றீர்கள். கரு விழி உங்களுக்குள் பதிவாக்குகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றது.
3.இப்படிப் பதிவாக்கி துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வை நுகரச் செய்தால்
4.தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் அதற்குள் மறைந்துள்ள செம்பை பித்தளையும் ஆவியாக மாற்றுவது போல் தீமைகளைக் கரைத்துவிடும்.
ஏனென்றால் தீமைகளை வென்றது துருவ நட்சத்திரம். அதிலிருந்து வரக்கூடியதைத் தான் காலை துருவ தியானத்தில் நீங்கள் பெற்றால் உங்களுக்குள் வலுவாக்கி வளர்த்துக் கொள்ள ஏதுவாகும்.
எப்படி வேதனை என்ற விஷமான உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவி நல்ல குணங்களை அது கெடுக்கின்றதோ… நல்ல அணுக்களை மாற்றுகின்றதோ இதைப்போல
1.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் வளர்க்க அதை நீங்கள் விடாப்பிடியாகச் செய்து வர வேண்டும்,.
2.ஒரு நாளைக்கு செய்துவிட்டு என் கஷ்டம் எல்லாம் போகவில்லையே என் உடலில் உள்ள நோய் போகவில்லையே என்று
3.அப்படி எண்ண வேண்டியதில்லை… நோய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
நாம் அந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வந்தால் இந்த உணர்வின் வளர்ச்சி பெருகும் பொழுது… இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.
இல்லாமல் போனால் கீழே தான் மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்.
1.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்றால்
2.நான் மேலே சொன்ன முறைப்படி செய்யுங்கள்.
நீங்கள் தேடிய சொத்தும் செல்வமும் கையில் வைத்திருக்கிறீர்களா…? வருகின்றது… வளர்கின்றது… பின் தேய்கின்றது… தேய்ந்த பின் வேதனைப்படுகின்றோம்.
சரி சொத்து தான் போகட்டும் இந்த உடலை நல்ல முறையில் அழகாக வளர்த்து வைத்திருக்கிறீர்கள் ஆனால் கடைசியில் இந்த உடல் எவ்வளவு சுருங்குகின்றது… எவ்வளவு வேதனைப்படுகிறது…?
1.உடலைக் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக அழகாக வைத்திருக்க முடிகின்றதா…?
2.அல்லது இந்த உடல் நிரந்தரமாக நம்முடன் இருக்கின்றதா…?
யோசிக்கின்றோம் சொத்துக்காக எத்தனையோ சண்டைகளையும் போடுகின்றோம்… ஆசையும்படுகின்றோம்.
ஆனால் ஒருவன் வந்து பணத்தை எல்லாம் கொள்ளையடிக்கும் பொழுது “பாவிப் பயல்…! இப்படி எடுத்துச் செல்கின்றானே…” என்று அவன் சாபம் இடுகின்றான்.
இவன் சொத்தை அவன் அபகரித்துச் செல்லும் பொழுது இவன் அவன் உடலுக்குள் சென்று சிறிது நாள் அதை அவன் அனுபவித்தாலும்
1.இவனுடைய சாப அலைகள் அவனுக்குள் ஊடுருவி அவனை நாஸ்தியாக்குகின்றது.
2.இப்படித்தான் தொடர்ந்து நடக்கின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் காலையில் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கின்றோம்.
தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டி “நம் எல்லையை அதுவாக்கி… நாம் அனைவரும் பிறவியில்லா நிலை அடைவோம்…”

முற்பிறவி என்று சொல்லும் “சிலருடைய அமானுஷ்ய செயல்கள்”
இன்று இவ்வுலகில்… சில இடங்களில் சில ஆத்மாக்கள் குழந்தைப் பிராயத்திலேயே அதன் வயதுக்கு ஒவ்வாத நிலையில் சில நிலைகளை ஞானோதயம் பெற்று… வயதுக்கு மீறிய சித்தர்களாலும் சப்தரிஷிகளாலும் மட்டுமே உணர்த்தக்கூடிய நிலையில் உணர்த்துகின்றனர் என்றால் அது எந்த நிலையில்…?
அவ்வாத்மாவின் ஒளி அலைகள் அதனுடைய முன் ஜென்மத்தில் சில மகான்களின் தொடர்புடன் வாழ்ந்திருந்து அவர்களின் எண்ணத்திலேயே ஆத்மா பிரிந்து மறு ஜென்மத்திற்கு வரும் பொழுதும் இன்னும் ஒவ்வோர் உடலுக்குள்ளும் பல அணுக்கள் உள்ளன என்று உணர்த்தியுள்ளோம்.
அதைப்போல் பல ஆவிகளும் அவ்வுடலில் ஏறிக் கொண்டுள்ளன.
1.அந்த நிலையில் அம்மகானானவர் அவர் வாழ்ந்து, ஞானம் பெற்றுச் சக்தியின் நிலையில் ஒளியுடன் கலக்கப் பெறும் பொழுது
2.அவர் உடலுடன் உள்ள நிலையிலேயே அவர் எடுத்த ஜெபத்தினால்
3.அவ்வுடலில் இருந்த மற்ற ஆவிகளும் அணுக்களும் (பல கோடி எண்ண அணுக்கள்) அவரின் ஞானத்தினால் இவைகளும் நல்ல நிலை எய்துகிறது.
இம்மகான் உடலை விட்டுச் செயல்படும் நிலையிலேயே இவ்வுடலில் தங்கிய இவ்வாவிகளுக்கும் அவற்றின் எண்ணமெல்லாம் நீங்கி இம்மகானுடன் அவர் உடலில் சாடியதின் பயனால்
1.அவர் பெற்று ஏற்றிய ஞானத்தின் ஒளியில் பங்கு பெற்று மறு ஜென்மத்திற்கு வந்து வாழும் நிலையில்
2.மகானுடன் ஒன்றியதினால் அவ்வொளி அலையை ஈர்க்கும் அமில குணமுடன்
3.இச் சிசு பிறப்பில் வாழும் பொழுது அம் மகானின் சக்தி அலையை இச்சிசுவின் மேல் பாய்ச்சி
4.பல அபூர்வ நிலையெல்லாம் வயதிற்கு மீறிய செயலாக இன்றளவும் நடந்து வருகிறது.
திருஞானசம்பந்தரின் மொழி அமுதை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது இந்த நிலையில் தான்.
இன்று மட்டுமல்ல பல கால கட்டங்களாய் சில சில இடங்களில் இப்படி வியக்கத்தகும் அதிசய நிலைகள் நடந்து வருகின்றன. இதன் வட்ட ஒளியிலேயே ஞானம் பெற்றுச் செயல்பட்டால் “மீண்டும் மீண்டும் சக்தி நிலை பெருகிப் பல நிலைகளைச் செயலாக்கிடலாம்…”
பெற்ற பயனைப் பொருளுக்கும் புகழுக்கும் விரயப்படுத்தி விட்டால் ஞான சக்தியின் வலு குன்றி விடுகின்றது.
திருவையாறு தியாகராஜரின் நிலையும் இந்நிலையில் வந்ததுதான். அவர் தன் உடலை விட்டுப் பிரியும் நாள் வரை அச்சங்கீத ஞானத்துடனே ஐக்கியப்பட்டுத் தான் அடைந்த ஞானத்தின் பொக்கிஷத்தை இம்மியளவும் சிதற விடாமல் செயல் கொண்டதினால் நல் ஒளி பெற்றார்.
இந்த நிலை தெய்வீக நிலையில் மட்டும் ஏற்படுகின்றதா…? மற்ற நிலைகளில் இல்லையா…? என்ற வினா எழும்பலாம்.
இன்று உலகத்தில் பல பாகங்களில் தன் பூர்வ ஜென்மத்தில் இந்த இந்த இடத்தில் வாழ்ந்ததாகவும், இவர் தான் என் தாய், இவர் தான் என் தந்தை என்று சொந்த பந்தங்களை உணர்த்தியும், தன் முந்தைய நாமகரணத்தையும் சொந்த பந்தங்களின் நாமகரணத்தையும் மற்ற எல்லாக் குறிப்புகளையும் மறு ஜென்மம் எய்திய பிறகும் முன் ஜென்மத்தில் நடந்த இடத்தை உணர்த்துகின்றார்களே இவை எந்த நிலையில்…?
ஓர் ஆத்மா வாழுகின்றது. அது வாழும் நிலையில் இன்று பேய் பிடித்து விட்டது, பிசாசு பிடித்து விட்டது என்றெல்லாம் சிலரைச் செப்புகின்றனர்.
எப்பேயும் யாரையும் பிடிப்பதில்லை. ஆனால் இம்மனித ஆத்மாவின் எண்ணச் சிதறலினால்
1.அந்த அந்த எண்ண நிலைக்கொப்ப ஆவி உலக ஆத்மாக்கள் அதன் எண்ணத்தை ஈடேற்றச் சில உடல்களில் ஏறுகின்றன.
2.உடலில் ஏறிய எவ்வாத்மாவுமே அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மா பிரிந்த பிறகுதான் இவ்வாவி ஆத்மாவும் வெளியேற முடிகின்றது.
ஓர் உடலில் இப்படி ஏறிய ஆவி ஆத்மாவானது அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மாவைக் காட்டிலும் சக்தியுடையதாய் ஏறிச் சில செயல்களைப் புரிவதினால் தான்
1.சிலர் (சில உடல் ஆத்மாக்கள்) தன் நிலை பெற முடிந்து தன் எண்ணத்தைக் கொண்டு வாழ்ந்திட முடியாமல்
2.ஆவி ஆத்மாவின் செயலில் வாழ்வதினால்தான் “பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்து விட்டது…” என்கின்றனர்.
இப்படி வீரிய சக்தி கொண்ட ஆவி ஆத்மாக்கள் ஏறிய உடல் ஆத்மாக்கள் நீண்ட நாளும் வாழ்வதில்லை அகால மரணம் எய்துகின்றனர்… தன் நிலை மறந்து.
அந்த நிலையில் அவ்வுடலில் இருந்து உடலுக்குச் சொந்தமான ஆத்மாவும் உடலில் ஏறிய ஆவி ஆத்மாவும் பிரிந்து செல்கின்றது.
இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவிற்கு தன் செயலைச் செயல்படுத்த மற்றோர் உடலில் ஏறியதினால், தன் முந்தைய நிலை மறந்து
1.எவ்வுடலில் ஏறிச் செயல் கொண்டதோ அவ்வுடலின் சொந்த பந்தங்களுடன் தன் எண்ணமும் செயல்பட்டதினால்
2.இவ்வுடலுக்குச் சொந்தமான சொந்த பந்தங்களும் வாழ்ந்த இடங்களையும் தனதாக ஒன்றி விடுகின்றது.
உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா எவ்வாத்மாவானாலும் சரி… உடனே பிறப்பிற்கு வருவதில்லை. தன் உதிரத் தொடர்புடைய தாய் தந்தையார் மக்கள் இவர்கள் உள்ளவரை பிறப்பிற்கு வருவதில்லை.
அப்படி இருக்க… இக் குறுகிய காலத்தில் பிறப்பெய்தி இவர்கள் தான் என் தாய் தந்தையார் சுற்றத்தார் என்றெல்லாம் முன் ஜென்மத்தின் நிலையை உணர்த்துவது எப்படி…?
அதாவது இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவானது, தாயின் கரு நிலைக்கு வந்தவுடன் அதன் இரண்டு நிலை கொண்டு…
1.இரண்டு நிலை என்பது அதன் முந்தைய ஜென்ம நிலையும் ஆவி ஆத்மாவாய் மற்ற உடலில் சாடியதின் நிலையும் கொண்டு
2.கர்ப்பத்திற்கு வந்தவுடன் இவ்வாத்மாக்களுக்கு பன்னிரண்டு வகையான அமிலத்தை ஈர்க்கும் குணமுடைய சக்தியைக் காட்டிலும்
3.மற்றொரு உடலில் ஏறி வெளிப்பட்டதின் நிலையினால் தாயின் கருவில் அதன் நிலையும் மறக்கப் பெற்று
4.பிறப்பிற்கு வந்த பிறகு அது எடுக்கும் சுவாசத்தினால் மற்றோர் உடலில் ஏறி வெளிப்பட்ட ஆவி ஜென்மத்திற்கு வந்து
5.வாழும் வளர்ச்சி பெற்ற எண்ண நினைவுகள் எல்லாம் நினைவில் சாடும் பருவத்திலேயே அதன் பேசி உறவாடும் காலகட்டத்தில்
6.அவை ஏறிய உடல் ஆத்மாவின் சொந்த பந்தங்கள் வாழ்ந்த நினைவலைகள் எல்லாம் இவ்வாத்மா செப்புகின்றது.
மற்றோர் உடலில் குடியேறி… தன் முந்தைய ஆவி நிலையை மறந்து அவ்வுடலின் எண்ணத்தில் வாழ்ந்து செயல்பட்ட ஆவிகளினால்தான்… இப்படி முந்தைய ஜென்மத்தைச் செப்ப முடியும். ஆனால் இவற்றிலேயே எல்லா ஆவிகளும் இப்படி மற்ற உடலில் ஏறிய பிறகு ஜென்மத்திற்கு வர முடியாது.
1.நல்ல ஆத்மாவின் எண்ணமுடன் ஏறிச் செயல்பட்ட ஆத்மாக்களுக்குத்தான் இப்படிப் பிறப்பு எடுக்கும் நிலை பாக்கியமும் வருகின்றது.
2.ஆனால் முந்தைய ஜென்ம வாழ்க்கையை உணர்த்தி வாழும் ஆத்மாக்களும் நீண்ட நாட்கள் வாழ்ந்திடாது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டுமென்பதற்காகச் சுலபமாகக் கொடுக்கிறோம். அதை நீங்கள் நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எந்தச் சங்கடமான உணர்வு வந்தாலும் சரி… உடனே ஆத்ம சுத்தி செய்யுங்கள். உங்களிடம் அந்த அழுக்குச் சேராது.
உங்களிடம் அவ்வளவு பவரைக் கொடுக்கிறோம் என்றால் யாம் அனுபவித்து வந்தது.
1.நொடிக்கு நொடி… எம்மை இம்சை பண்ணியே குருநாதர் சக்திகளைக் கொடுத்தார்.
2.உங்களுக்கு இம்சை வரும்போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
3.ஆத்ம சுத்தி மூலம் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.
ஆனால்… சாமியை எண்ணிக் கொண்டிருந்தோம்… எனக்கு இப்படி இருக்கிறதே…! என்று (சாமியை) நினைத்துக் கொண்டே ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.
ஏதாவது உடலிலே வலித்தால் போதும். எம்மைத் திட்டத்தான் செய்கிறார்கள். சாமி… இப்படி இருக்கிறதே…! தலை வலிக்கிறதே… மேல் வலிக்கிறதே… என்றுதான் எண்ணுகிறார்களே தவிர ஆத்ம சுத்தி செய்யுங்கள் என்றால் எத்தனையோ பேர் விட்டுவிடுகிறார்கள்.
யாம் (ஞானகுரு) உங்களுக்கு லேசாகச் சொல்கிறோம். ஆனால் கஷ்டப்பட்டுத் தான் எல்லாவற்றையும் பார்த்து வந்தோம்.
உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்..! என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றேன். லேசாகச் சொன்னால் சொன்னால் பெரும்பகுதியானோர் அதைச் செய்வதில்லை.
சாமி மீது ரொம்பப் பற்று இருந்தால் போதும்…!
1.அவர்கள் என்ன தவறு செய்தாலும் சரி…
2.“சாமி இருக்கிறார்…” அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்…! என்ற எண்ணத்தில்
3.தன்னைத் திருத்திக் கொள்ள மாட்டார்கள்.
4.சாமி இருக்கிறார்…! என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர
5.சாமி சொன்னதை எடுத்துத் தன்னிடம் வரக்கூடிய தீமைகளைத் தடுப்பதற்கு இல்லை.
கோபத்தையும் ஆத்திரத்தையும் மற்றதையும் தான் எடுத்துக் கொள்கிறார்கள். சாமியிடம் ரொம்ப நெருங்கிப் பழகியவர்கள் இப்படிச் செய்கிறார்கள். நல்லதை எடுப்பதற்கு அவர்கள் எண்ணமே தடையாகிப் போகிறது.
ஐயா இப்படி இருங்கள்… உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஞானிகளின் அருள் சக்தியை எடுங்கள் என்று சொன்னால் “சாமி தான் இருக்கிறாரே… சாமி செய்வார்…” என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
சாமி என்ன செய்வார்…?
ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்து உங்களை அறியாது ஆட்டிப்படைக்கும் தீமையான உணர்வுகள் மாற வேண்டும் என்று யாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
அந்த அடிப்படையிலே நீங்கள் எண்ணினால் தான் உங்களுக்குள் அந்த ஆற்றல்கள் பெருகும். ஆகவே…
1.சாமி சொன்ன உயர்ந்த சக்தியைத் தனக்குள் ஊன்றி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பற்றிப் பேச வேண்டும்… அதை எடுத்துத் தனக்குள் வளர்க்க வேண்டும்.

Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.