
ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்.. ஓமுக்குள் ஓம் என்றால் பொருள் என்ன…?
உதாரணமாக மிளகாயை அரைத்து சப் என்று இருக்கும் மாவிற்குள் இணைத்து விட்டோம் என்றால் மாவின் சுவை காரமாக மாறுகின்றது.
இதைப் போன்று தான்
1.ஒரு புலி மானின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்த சாந்த உணர்வுகள் இதற்குள் அடங்கி விடுகின்றது.
2.ஆனால் சாந்த குணம் கொண்ட மானோ புலியின் உணர்வை நுகரப்படும் பொழுது
3.மானின் சாந்த உணர்வுகள் அந்தப் புலியின் கடுமையான கார குணத்திற்குள் ஒடுங்கி விடுகின்றது அதன் வழியே அது அடக்கம் ஆகின்றது.
அது தான் மூஷிக வாகனா…!
மானோ புல்லைப் பார்த்து அதன் மணத்தை நுகர்ந்து… அதனின் உணர்வு கொண்டு அதே மணம் இதற்கு வாகனமாக அமைந்து புல் இருக்கும் இடத்திற்கு இந்த உடலை நகர்த்திச் செல்கின்றது.
புலியோ கடினமான உணர்வு கொண்ட நிலையில் மானை நுகர்ந்த பின் மானின் சாந்த உணர்வு இதற்குள் ஒடுங்கினாலும்… மான் புலியை நுகரப்படும் பொழுது இதனுடைய கடுமை மானின் சாந்த உணர்வுக்குள் சேர்த்துக் கொண்ட பின் கணங்களுக்கு அதிபதியாகி அதை அடக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.
ஏனென்றால்
1.சாந்த உணர்வின் தன்மை அணுவாக “ஓ…” என்று இயக்கினாலும்
2.ஓமுக்குள் ஓம் – புலியின் உணர்வுகள் அது கடுமையாக்கப்படும் பொழுது சாந்த உணர்வுக்குள் நின்று
3.அதன் அணுவின் தன்மையை இது இயக்கி இதை அடக்கும் போர் முறை கொண்டு
4.இந்த அணுத் தன்மை அதற்குள் துடிப்பின் வேகத்தை அதிகமாகக் கூட்டுகின்றது.
இரத்தக் கொதிப்பு வந்தவர்களை டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்தால் “துடிப்பு நிலையும்… கொதிப்பின் நிலையும்” அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்.
காரணம்… சாந்த குணங்கள் கொண்ட நாம் பிறரைக் கோபிக்கும் உணர்வு கொண்டு அவர்கள் செயல்படும் நிலையோ அல்லது நாம் செயல்படும் எண்ணத்தை சீராக அமைக்கவில்லை என்றால் எதிர்மறையாக தாக்கப்பட்டு விடுகிறது (ஒரு பொருளுடன் ஒரு பொருள் தாக்கப்படுவது போல்)
1.சாந்த உணர்வு கொண்டு மிருதுவான பொருள் மற்றொன்றுடன் மோதினால் அதனில் வேகத்தடிப்பு வருவதில்லை.
2.ஆனால் கடினமான பொருள் மற்றதுடன் தாக்கப்படும் பொழுது துடிப்பாகி வெப்பம் உருவாகின்றது
அதைப் போல் மனிதருக்குள் கடினமான உணர்வு மோதினால் அதனால் உணர்ச்சியின் வேகமும் (துடிப்பு வெப்பம்)… வலியும் வேதனையும் அதிகரிக்கிறது.
1.வேக உணர்வு கொண்டு தாக்கப்படும் பொழுது அந்த அணுக்களுக்குள் ஊடுருவி
2.அணுவின் தன்மை அடைந்து இதை அடக்கும் வல்லமை பெறுகின்றது.
3.அதாவது அந்த அணுவிற்குள் ஓமுக்குள் ஓமாக மாறி இதனை அது அடக்கிடும்… அதற்குள் இது அடங்கி இதனின் செயலாக்கத்தைக் குறைக்கின்றது.
“சாந்த குணமும் சாந்த எண்ணங்களும் அதை வளர்க்கும் தன்மை இழந்து” இந்தக் கோபமான (காரத்தின்) உணர்வை வளர்க்கப்படும் பொழுது… அதற்குள் நாம் பார்க்கும் மற்ற நல்ல குணத்தை எல்லாம் அடக்கிவிடும்.
1.ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்…! என்ற நிலைகளில்
2.இந்தக் கார உணர்வுகள் அதற்குள் ஒடுக்கி விடுகின்றது
3.நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.
நல்ல மனத்தை உருவாக்காத நிலையினைக் கொண்டு வரப்படும் பொழுது மனிதனுக்கு “இரத்தக் கொதிப்பாக” வருகிறது.

ஆசைகளை நிறைவேற்றத் தான் ஆண்டவனை எண்ணுகின்றோம்… “அவனுடைய அருளைப் பெற” ஆசைப்படுகின்றோமா…?
இன்றுள்ள உலக நிலை அனைத்திலுமே
1.தன் புகழ் உயர வேண்டும்
2.புகழ் உயரச் செல்வம் வேண்டும்
3.செல்வம் சம்பாதிக்க இவ்வுடல் எனும் கூடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற
4.ஆசை நிலைக்காகத் தான் அநேகம் பேர் பல வழிகளில் ஆண்டவனை வணங்குவதுவே.
ஆண்டவனிடம் தன் ஆசைக்கும் தன் புகழுக்கும் வேண்டக்கூடாது என்பவர்களை எல்லாம் இன்றைய உலகம் “பெரும் பைத்தியமாக” எண்ணுகின்றது.
ஆண்டவன் எங்குள்ளான்…? என்ற கேள்விக்கும் இன்றைய உலகில் அறிந்து பார்க்கும் தன்மை இல்லையப்பா. ஆண்டவனிடம் வேண்டிக் கேட்காவிட்டால் இவ் உடலுக்கு ஆகாரம் வேண்டியதில்லையா…?
ஆண்டவன் தான் பசி என்ற பெரும் பசியை இவ் உடலுக்கு அளித்துள்ளானே. அப்பசியே அடக்க நாம் உண்டு வாழ்வதற்கு அவ்வாண்டவனை வேண்ட வேண்டாமா…? என்றெல்லாம் பல நிலைகளில் எண்ணுகிறார்கள்.
1.இவ்வெண்ணப் பசியை பேராசை கொண்ட பசியாக அலையவிட்டு
2.அதனால் வரும் பல இன்னல்களுக்கு நாம் அடிபணிகிறோம் என்பதை
3.நம் எண்ணப் பசியில் எண்ணிப் பார்த்தால் புரிந்துவிடும்.
இவ்வாத்ம பசியை யாரும் எண்ணுவதில்லை. இவ்வுடல் பசிக்குத் தான் இவ்வுலகமே இன்றுள்ளது இவ்வுடல் பசியினால் தான் வரும் நிலைகள் எல்லாமே நமக்கு நடப்பவை.
இவ் உடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவும் பிற நிலைகளும் நம் ஆத்மாவிற்கு எந்த நிலையில் ஏற்கிறது…? என்று எண்ணி இவ்வுடல் என்னும் பசியை “மனம் எனும் பசியால்” அடக்கி ஆண்டிட முடியுமப்பா.
இவ்வுலகில் உதித்த எல்லோருமே ரிஷிகளைப் போலவும் ஞானிகளைப் போலவும் இவ் உடலுக்கு உணவு உண்ணாமல்… உடல் பசியை அடக்கி ஆளுங்கள் என்று சொல்லவில்லையப்பா.
என் வழியில் இயற்கையில் நம் உடலின் தன்மையைத்தான் நம் உடல் எந்தெந்த நிலையை ஏற்கிறது…? எந்த நிலையில் உண்டு வாழ்ந்திடலாம்…? என்பதுதான் எல்லோரும் அறிந்ததுவே.
அன்ன ஆகாரம் இல்லாமல் வாழ்ந்திடுங்கள். என்று சொல்லவில்லை.
1.இவ்வுடல் என்னும் கூட்டை
2.”எண்ணம் என்ற ஏவலனால்” எந்த நிலைக்கும் வைத்திருக்க முடியுமப்பா.
உண்ணும் உணவிலிருந்து இவ்வுடலுக்கு எப்படிப் பல நிலைகள் கிடைக்கின்றதோ அதே போலத்தான் அவ்வாத்மாவிற்கும் கிடைக்கின்றது.
நாம் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்ந்திடத் தான் வேண்டும் ஆனால் அந்நிலைக்காகப் பேராசை நிலை கொண்டு “தன் தேவைக்கு மேல் சேமித்து வைப்பவன் ஒவ்வொருவனும்… தனக்குத்தானே எதிரியாகின்றான்…”
இன்று இவ்வுலகில் பெருகி உள்ள மக்கள் நிலையில் அன்பும் ஆதரவும் காட்டி வாழும் நிலைமை மறைந்து விட்டது. தன் உடல் பசி ஒன்றுதான் ஓங்கி நிற்கிறது.
நல்ல உபதேசங்களைக் கேட்பதும் நல்லோர் வழி சொல்வதும் நம் ஆத்மாவிற்குச் செய்யும் நற்பணிகளை நாம் இன்று ஏற்று நடக்கவில்லை. நம் எண்ணங்கள் எல்லாம் இவ்வுடல் என்னும் பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆண்டவனை எண்ணுவதாகவே உள்ளது.
தன் எண்ணமும் செயலும் அமைதி கொண்டு தன் ஆத்மாவை அடக்கி ஆள்பவனுக்கு தன் நிலையில் பதட்டத்தை வளர விடாமல்… தான் என்ற எண்ணம் கொள்ளாமல்… நல்லுணர்வுடன் நம் வாழ்க்கையை நாம் அமைதியுடனும் அன்புடனும் நடத்திச் செல்லும் மனப்பக்குவம் பெற்று… நாம் வாழத்தான் “இன்று நாம் செய்யும் ஜெபமும் தியானமும் இவ்வுபதேசச் சொற்களும்…”
1.இவ் உடல் வேறு என் ஆத்மா வேறு
2.இவ்வுடலில் இவ்வாத்மா தங்கி இருப்பதுவே நாம் பெற்ற பாக்கியமாகக் கொண்டு
3.இவ்வுலக நிலையில் இவ்வியற்கையில் கலந்துள்ள உண்மைகளை அறிந்தே மகரிஷிகளின் சக்தி பெற்று வாழ்ந்திட வேண்டும்.
அச்சத்தி நிலை ஒரே நிலையில் தான் உள்ளது. நாம் எந்த நிலை கொண்டு ஏற்கின்றோமோ அந்த நிலைக்குத்தான் அச்சத்தி நிலை நம்முடன் வரும்.
இன்று வீசும் இக்காற்றையே நாம் எண்ணிப் பார்த்தால் நம் நிலைக்கு எல்லாம் விளங்கும்.
1.கொதிக்க வைத்த தண்ணீரை ஆற்றுவதும் இக்காற்றுதான்
2.அனல் கொண்டு எரியும் விறகை எரிய விடுவதும் அக்காற்று தான்.
ஒரே நிலை கொண்டு வீசும் காற்று தான் இவ்வனலையும் எரிக்க உதவுகின்றது. கொதிக்கும் நீரையும் குளிர வைக்கின்றது அச்சக்தி நிலையும் நம் நிலைக்கு அப்படித்தான் வருகிறது.
1.எந்த நிலை கொண்டு நாம் எங்கு செல்கின்றோமோ அந்த நிலை கொண்டு தான் அச்சக்தி நமக்கு உதவி புரிகின்றது
2.நம் எண்ணத்திற்கு உகந்தபடி தான் ஆண்டவனின் சக்தியையும் நாம் பெற முடியும்.
ஆனால் இவ்வுலகமே இவ் எண்ணம் என்ற பசி நிலையைக் கொண்டு தான் இன்று சுற்றி வருகின்றது
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஓ…ம் ஈஸ்வரா என்று சொல்லும் போது பிரணவம்… நாம் எண்ணியதை உயிர் ஜீவன் பெறச் செய்கின்றது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும் அது எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள்.
கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருங்கள்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உணர்வு
2.அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியைப் பெறச் செய்யும்.
இந்நேரம் வரை உபதேசித்த அந்த ஆற்றல் மிக்க சக்தியை “நீங்கள் எண்ணும் போதெல்லாம் எண்ணியவுடனே அதைக் கிடைக்கச் செய்து…” உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் அனைத்தையும் தாழ் பணியச் செய்வதே “எமது ஆசி” (ஞானகுரு).
ஆகையினால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி” உயிரிடம் வேண்டித் தியானியுங்கள்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்…! என்று இதே மாதிரி நான் சொன்னதை நீங்கள் எண்ணி எடுத்துப் பாருங்கள்.
உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.அது தாள் பணிந்து… உங்களுக்குள் அது ஒத்துழைத்து… உயர்வான எண்ணங்களுக்கு வழி காட்டியாக அது அமையட்டும்.
2.எதுவும் கெட்டதல்ல… உங்களுக்கு அது வலுவூட்டும்… வழி காட்டியாகவும் அது இருக்கும்
3.கெட்டது என்று அது தான் காட்டுகின்றது… அதை நீக்கிவிட்டு நாம் செல்ல வேண்டும்.
கெட்டது என்று வழி காட்டினாலும் அந்த உணர்வின் தன்மை அது எனக்குள் சேர்ந்து விடுகிறது. ஆனால் வழி காட்டிய நிலைகள்
1.எனக்குள் பணிந்து அந்த நல் வழி காட்டியாக இருக்க வேண்டும்.
2.அந்த நல் வழி காட்டிய விஷம்… “என்னை ஆட்கொள்ளக் கூடாது…”
மெய் ஒளி பெறும் அந்தத் தகுதி கொண்டு நாம் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஆசி வாங்குவது. ஆகையினால் இதை மீண்டும் மீண்டும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
1.அரசனுக்குக் கீழ்படிதல் என்பது கௌரவத்திற்காகத் தான்…!
2.ஒரு பெரியவரைக் கண்டால் அடிபணிதல் வேறு.
3.ஆனால் நமக்குள் துன்பங்களைப் பணியச் செய்வது என்பது வேறு.
ஆகவே நாம் பணிய வைக்க வேண்டியது எதை…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


உயிரிலே பட்ட பின் “உணர்வின் ஒலிகள்” எப்படி எழும்புகிறது…?
உதாரணமாக ஒரு கடலைச் செடியில் விழுந்த உயிரணு அதனின் உணர்வின் சத்தை நுகர்ந்தால் அந்தச் சாந்த குணத்தின் அணுக்களாக உருவாகும்… மற்றொன்றைக் கொல்லும் தன்மை இழந்து விடுகின்றது.
1.அணு செல்களாக இருப்பதை ஜீவணுக்களாக இந்த உயிரணு மாற்றப்படும் பொழுது
2.அதனின் அணுவின் மலமாக புழுவின் உடலாக வளர்கின்றது
3.உணர்வின் எண்ணங்களாகத் தோற்றுவிக்கும் நிலை வருகின்றது.
இப்பொழுது மைக் இல்லாமல் நான் (ஞானகுரு) பேசினால் உங்களால் கேட்க முடியுமா…? சப்தம் வராது. மைக் ஆக “எது” அமைகின்றது…?
சூரியணிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் அதற்குள் (செடிக்குள்) வளர்கின்றது அதே வெப்பத்தையும் காந்தத்தையும் ஈர்த்து எந்த மணத்தின் தன்மை வருகின்றதோ செடிக்குள் வருகின்றது.
இந்தச் செடியின் மணம் (சத்து) வெளிவரப்படும் பொழுது
1.சூரியனுடைய காந்த சக்தி அதை எடுத்துக் கொண்டால் தான்
2.இதில் உள்ள விஷத்தின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டவும்
3.வெப்பம் அதனின் உணர்வின் மணத்தைக் கூட்டவும் அது செயல்படும்.
அப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு மைக்கிலே காந்தப் புலனறிவு இல்லை என்றால் ஓசை கேட்குமா…?
1.அந்த காந்த அலைகளின் தன்மைகள்
2.அந்த மேக்னட் இரும்பால் இருந்தாலும்
3.அதிர்வின் ஒலி அலைகளை எளிதாக மெதுவாக (ஒலிகளை வெளிக்கொண்டு வருவதற்காக) ஊட்டுவதற்காக
4.அந்த ஸ்பீக்கரில் காகிதத்தை வைப்பார்கள் அல்லது மெலிதான தகடை வைப்பார்கள்.
5.அந்த காந்தப் புலனை இழுத்து ஒலியின் ஓசையைத் தெளிவாக்குவதற்கு
இது விஞ்ஞான அறிவால் செயல்படும் நிலை.
இதைப் போன்றுதான் இயற்கையின் நியதிகளில் அது எடுத்து வைத்த பின்
1.இந்த உணர்வின் தன்மை (கடலையின் மணத்தை) உயிரணு நுகர்ந்தால் “ஓசையின்” உணர்வாக இயக்கத் தொடங்குகின்றது.
2.செடியாக இருந்தால் இந்த உணர்வின் தன்மைக்கொப்ப அந்த ரூபத்தை அமைக்கும் தன்மை வருகின்றது.
3.ஆனால் மணத்தின் தன்மை கொண்டு அது வெளிப்படும் தன்மை வருகின்றது.
இப்படிப் பல பல உணர்வின் சத்தை எது நுகர்ந்ததோ அதற்குத் தக்கவாறு அதனுடைய சுவைகளும் மாறும். ஆகவே அதனின் மணங்கள் வரும் போது
1.உயிரனங்கள் நுகரும் பொழுது எண்ணங்கள் சீதாராமா
2.அந்த எண்ணங்கள் தோன்றி அதனதன் தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.
இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக்கிப் பதிவாக்கிக் கொடுக்கின்றேன் குருநாதர் எனக்குள் எவ்வாறு பதிவாக்கினாரோ அதனின் உணர்வின் செயலாக்கங்களை அறியும் ஆற்றல் பெற்றேன்.
வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில்… தீமை என்று உணர்ந்து அறிந்தாலும்
1.அதிலிருந்து விடுபடும் வல்லமையை அதை அடக்கும் வல்லமை கொண்ட அருள் மகரிஷிகள் உணர்வுகளை நுகர்கின்றேன்.
2.அது வளர தீமைகள் அதற்குள் அடங்குகின்றது
விஷம் என்பது வலுக் கொண்டது அந்த விஷத்தை அடக்கியவன் அருள் ஞானி. விஷத்தை ஒளியாக மாற்றிக் கொண்டவன் துருவ மகரிஷி
அவன் வழியைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவினை ஏழாவது நிலையாக உருப் பெற்று ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் வருகின்றார்கள்.
ஒவ்வொரு சந்தர்ப்பமும் நிகழ்ந்த சந்தர்ப்பத்திற்கொப்ப உணர்வின் தன்மை வரப்படும் போது
1.பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி பெற்று மனிதனாக எப்படியெல்லாம் வந்தோம்…? என்ற நிலைகளை தெளிவாக்கி உள்ளார்கள் ஞானிகள்.
2.அதைத்தான் உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.

நமக்கு நல்லது செய்யப் “பல பெரியோர்கள் உள்ளனரப்பா…!”
இவ்வுலக வாழ்க்கையிலே நமக்கு எஞ்சி நிற்பது எதுவப்பா…? இவ்வுலகம் என்ற மாயையையே எண்ணி “மயங்கி வாழும் வாழ்க்கை தான் வாழ்கின்றோம்…”
1.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா…? சொத்தும் சுகமும் ஆளுவது யாரப்பா…?
2.இவ்வுலகில் பிறந்தால் நிலைத்திருப்பது பொருளல்ல. நாம் விட்டுச் செல்லும் நம்முடைய மக்கள் தான் (குழந்தைகள்) என்ற எண்ணம் பலருக்குண்டு.
3.நம் பெயர் சொல்ல மக்களின் நிலை எத்தனை காலங்களுக்கு…?
4.அக்குழந்தைக்குக் குழந்தை என்று இப்படி சுற்றிக் கொண்டு வரும் நிலையினிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்…?
“பிறவிப் பயன்… பிறவிப் பயன்…” என்பதைப் புரிந்து வாழ எண்ணிடாமல் இப்புவியில் பிறந்த நாம் எல்லாம் புரிந்து நாம் வாழும் நாட்கள் எங்குள்ளது…? என்று புரிந்து வாழ்ந்திட வேண்டும்.
பூமியில் தோன்றிய “பல புண்ணியவான்கள்”
1.இன்றும் அவர்களுடைய பெயர்கள் நிலைத்திருக்க வாழும் நிலையை
2.நாமும் புரிந்து வாழ்ந்திட வேண்டும்.
இச் சுவாச நிலையில் இருந்து நாம் பெறும் பாக்கியங்களை நாம் பெறும் செல்வங்களை அழியாப் பொக்கிஷமான அச்செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திடப் “பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றார்கள் பல சித்தர்கள்…”
ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல சித்து நிலைகளைப் பெற்று இன்றும் நிலைத்திருக்கவில்லையா…? அவர்கள் பிறந்த பூமியில் பிறந்த நாம் நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றார்கள்.
1.அன்று சித்து பெற்றவர்கள் இவ்வுடலை ஒரு கூடாக வைத்துத் தான்
2.தன் ஆன்மாவை உலகமெங்கும் இம்மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.
இந்நிலையில் வந்தவர் தான் பைரவர் என்னும் ராஜாவும். அவ் அரசர் தான் ஆளும் காலத்தில் தன் உடலை ஒரு கூடாக இருக்கும் நிலையை… தன் சித்து நிலையில் பெற்று அந்நிலையிலேயே பல உடல்களுக்குத் தன் ஆத்மாவைச் செலுத்தி அந்நிலை கொண்டு பல நன்மைகளைத் தன் நாட்டு மக்களுக்காகச் செய்து வந்தார்.
அந்த நிலை கொண்டு அவர் செய்த சித்து நிலை தான் அவர் உடலில் இருந்த ஆத்மா ஒரு நாயின் நிலைக்குச் சென்று அந்நாட்டைக் காவல் காக்கும் நிலையில் செயல்பட்டார்.
இருந்தாலும் அவர் இருந்த நிலையை அறிந்து அவர் உடல் என்னும் கூட்டை அன்று நயவஞ்சகம் படைத்தவர்கள் அழித்த நிலை கொண்டே நாயின் உருவிற்கு ஆத்மா வந்த அப்பைரவ மகாராஜா… இன்றும் அந்நிலை கொண்டே தன் ஆத்மாவை அழியா நிலை பெற்றுப் பிற ஜென்மம் எடுத்திடாமல் “சூட்சும உலகம் சென்று இன்றும் நிலைத்துள்ளாரப்பா…”
அவ் உடல் என்னும் மாயக் கூடு மறைந்தாலும் அவ்உயிர் ஆத்மாவைப் பிற ஜென்மம் எடுத்திடாத நிலை கொண்டு இன்றும் உலகினிலே பல உருவில் வந்து பல நிலையில் மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வருகின்றார்.
நாம் இவ்வுலகினில் கலந்துள்ள பல சித்தர்களின் நிலையை அறிந்து… நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்துதவி… நம் எண்ணத்திற்கும் செயலுக்கும் நல்லணுவாக “நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் பல பெரியோர்கள் உள்ள பொழுது” நம் எண்ணமும் செயலும் பல ஆசை நிலை கொண்ட சுகபோகங்களுக்குத்தான் அடிமைப்பட்டு வாழும் நிலையில் உள்ளது இன்று இவ்வுலகமே.
1.அன்பென்னும் ஆசை வேண்டும்
2.அழியாச் செல்வமான இவ்வாத்மாவை அழித்தே நாம் வாழ்ந்திடாமல்
3.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி அடிபணிந்து வாழ்வதற்கு
4.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தியைக் கொண்டு
5.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே நம் வாழ்க்கை.
ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்… அன்புடன் வாழ்ந்திடுங்கள்… ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
யாராவது கடுமையாக உங்களிடம் பேசிக் கொண்டே இருந்தால் வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம்.
“உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். திட்டிக் கொண்டே இருந்தால் ஆமாம்… ஆமாம்… என்று சொல்லுங்கள்.
ஒரு சிலர் ரொம்பவும் வசனம் பேசிக் கொண்டே இருப்பார்கள்… மோசமான பேச்சுகளையும்… வாயிலே வராத வார்த்தைகளை எல்லாமும் பேசுவார்கள். அவர்கள் சொல்லச் சொல்ல…
ஆமாம்…
ஆமாம்…
சரி…
ஆமாம்..
சரி…! என்றே சொல்லுங்கள்.
உனக்கு அறிவு இருக்கிறதா… கண் இருக்கிறதா..? மூளை இருக்கிறதா…! என்று என்னென்னமோ பேசுவார்கள்.
அது அத்தனையும் நீயே வைத்துக் கொள்… கண் மூக்கு எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… “போ……!” என்று சொல்லிவிடுங்கள்.
மயக்கப்பட்டு அப்படியே சொத்… என்று கீழே விழுவார்கள்.
நீங்கள் அவர்களைத் திட்டவே வேண்டாம்.
1.எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
2.எனக்கு வேண்டாம்… நீங்களே அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லிவிடுங்கள்.
அவர்கள் பேசுவதைக் கேட்டு நீங்கள் வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் உடலில் உள்ள ஆவி இந்த மாதிரி வேலை செய்யும்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் “ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருந்து விட்டு…” எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…! என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவி அப்படியே மயக்கப்பட்டுக் கீழே விழுவதைப் பார்க்கலாம்.
இந்த வாக்கினைச் சொன்னவுடனே அது செயலிழக்கும். இப்படிச் சொல்லும் போது
1.அதற்கு நாம் ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று அர்த்தம்.
2.நாம் தீமை செய்யவில்லை… (சாபம் இடவில்லை)
நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் அங்கே பட்டவுடன் அவர்கள் உடலில் அறியாமல் இருக்கக்கூடிய அந்த ஆவி சோர்வடைந்து கீழே விழுந்து எழுந்தால் அவர்கள் “சுய நினைவு” வரும். அப்பொழுது அவர்களை நாம் காக்கிறோம் என்று அர்த்தம்.
உங்களுக்கு இதை வாக்குடன் நான் (ஞானகுரு) சொல்லிக் கொடுக்கின்றேன்.
ஆனால் வழக்கமான நிலைகளில் “இப்படித் திட்டுகிறாரே… தாங்க முடியவில்லை… பொறுக்க முடியவில்லை…!” என்றால் அவர்கள் எண்ணத்தைத் தான் உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஏனென்றால் விஷம் எதிலே வேண்டுமென்றாலும் ஊடுருவிச் செல்லும். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே அதிகமாகத் திட்டுகிறார்கள் என்றால்
1.“நீயே அதை வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே
2.அந்த உடலில் இருக்கும் ஆவிக்கு இது பலவீனமாகும்… மயக்கமாகும்.
ஆனால் இவர்களுடைய நல்ல சிந்தனை நினைவுக்கு வரும். அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்களையும் காக்கின்றோம்.
ஆனால் இந்த வாக்கின் தன்மை அங்கே இயக்கி அவர்கள் உடலில் வயிற்றால் போகும்… உண்மையை உணர்த்தும்.
இது நடந்த நிகழ்ச்சி. என்னுடைய (ஞானகுரு) பெரிய பிள்ளையை மைசூரிலே கட்டிக் கொடுத்திருந்தது. மாப்பிள்ளையின் தம்பியை வேறொரு இடத்தில் கல்யாணம் செய்திருந்தார்கள்.
அந்தக் குடும்பம் கொஞ்சம் போக்கிரித்தனமாக ரௌடித்தனம் செய்யக் கூடியவர்கள். யார்… என்ன… ஏது…? என்று ஒரு முறை இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள்.
என் பிள்ளையை ரொம்பவும் விரட்டிக் கொண்டே இருந்தார்கள். வாயிலே வராத வார்த்தையைப் பேசித் திட்டிக் கொண்டிருந்தார்கள்.
மாமனாரை ஏமாற்றிச் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டாய்…! என்று எது ஏதோ சொல்லிப் பேசினார்கள். ஆனால் இவர்களோ கஷ்டப்பட்டுச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதை எல்லாம் கேட்டுத் தாங்காதபடி என் பிள்ளை என்னிடம் “ஓ…” என்று அழுது கொண்டு வந்து இந்த விஷயங்களை எல்லாம் சொன்னது.
பின் நான் மேலே சொன்னபடி சொல்லி “இந்த மாதிரிச் சொல்லம்மா…” என்று அனுப்பினேன்.
1.திட்டுவதை எல்லாம் உம்… கொடுத்துக் கேள்… சந்தோஷமாகக் கேள்…
2.கடைசியில் இப்பொழுது சொன்னதை எல்லாம் நீயே வைத்துக் கொள் என்று சொல்லிவிடம்மா…! என்று சொன்னேன்.
அதே மாதிரி இங்கிருந்து போனவுடனே நீ நாசமாகப் போவாய்… உனக்குப் பேதியாகும்… நீ அப்படிப் போவாய்… இப்படிப் போவாய்… என்று அங்கே அந்த அம்மா (மாமியார்) திட்டிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள்.
என் பிள்ளை அவர்கள் திட்டத் திட்ட சிரித்துக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…! என்று சொல்லிவிட்டதும் அங்கே தாங்காது பேதியாகி விட்டது. உடல் எல்லாம் வலி ஆகியது. எழுந்திரிக்க முடியவில்லை.
ஆஸ்பத்திரிக்குச் சென்று எல்லாம் ஆனதும்… “கொஞ்சம் விபூதி இருந்தால் கொடு…” என்று அந்த அம்மா என் பிள்ளையிடம் கேட்கிறது.
1.நான் சொன்னதை நானே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னதும் எனக்கு இப்படி ஆகிவிட்டது
2.இனிமேல் நான் யாரையும் இந்த மாதிரித் திட்ட மாட்டேன்… தப்பாகப் பேச மாட்டேன்…! என்று சொன்னது.
பிறகு என்னிடமும் தேடி வந்தார்கள். உங்கள் பிள்ளையை எல்லாப் பேச்சும் பேசினேன். நான் எதை எல்லாம் சொல்லி அவர்களைத் திட்டினேனோ அது எனக்கே வந்து விட்டது. நீங்கள் விபூதி கொடுங்கள்… எனக்கு ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று கேட்டார்கள்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி நல்ல வாக்கினைக் கொடுத்தால்… அங்கே நன்மை ஏற்படும். அவர்களும் உண்மையை அறியும் தன்மை வரும்.
“பேசியது அனைத்தையும் நீயே வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே
1.அந்த உணர்வுகள் எல்லாம் அவர்களுக்குள்ளேயே சுழன்று
2.தானே அதை அறியப்படும் போது குற்றத்தை உணர்ந்து கொள்வார்கள்.
இதன்படி நடந்தால் யாம் கொடுக்கும் இந்த உயர்ந்த வாக்கின் வன்மை உங்களுக்குள் கூடுகிறது. அதே சமயத்தில் மற்றவர்களும் அறியாமையிலிருந்து விடுபட இது உதவுகிறது.


“பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்
அருள் ஞானிகள் உணர்வைப் பருகுவதற்குத் தான் ஆலயங்களில் விநாயகரை வைத்துக் காட்டினார்கள்.
உடலில் பட்ட அழுக்கினைத் துடைக்க நீரை ஊற்றிக் குளிக்கின்றோம். அதே சமயத்தில்
1.ஆன்மாவிலே பட்ட அழுக்கினைத் துடைப்பதற்கு “விண்ணை நோக்கி ஏகி”
2.உயர்ந்த சக்திகளை எடுக்கப் பழக்கினான் அன்று ஞானி.
அதற்குப்பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று “எந்த நேரம் நினைத்தாலும்” அந்தச் சக்திகள் கிடைக்கின்றது.
ஆலயத்தில் தீப ஆராதனை காட்டப்படும் பொழுதெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற நாங்கள் வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள். அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி அந்தச் சிலையை உற்றுப் பாருங்கள்.
அந்தச் சிலையில் காட்டப்பட்ட குணங்களை… காவியங்களாகத் தீட்டிய அந்த நற்குணங்கள் நாங்கள் பெற வேண்டும்… இதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எங்குங்கள்.
தெய்வத்தின் மேல் போட்டிருக்கும் மலரின் மணம் நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் அந்த முழுவதும் நறுமணங்கள் படர வேண்டும். என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த நறுமணங்கள் படர்ந்து அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும்.
கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும். என் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெற வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் எல்லாம் தெய்வ நிலைகள் பெற வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் அங்கே ஒற்றுமை ஏற்பட வேண்டும் அவர்கள் தொழில் வளர வேண்டும் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.
1.பிறரை நாம் வாழ வைக்க இவ்வாறு எண்ணும் பொழுது
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் வாழ்கின்றன.
3.அப்போது தீமையை அறிவிக்கும் உணர்வுகள் ஒடுங்குகின்றது… அந்தத் தீமையை அறிந்ததோடு அதை நிறுத்திடல் வேண்டும்.
ஆக “பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்.
குழம்பு வைக்கப்படும் பொழுது காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு என்று பல நிலைகளை சேர்த்துத் தான் அதைச் சுவை மிக்கதாக உருவாக்கி உட்கொண்டு மகிழ்கின்றோம்.
இதைப் போன்றே மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். இது தான் ஆலயம்… நம் உடலே ஆலயம்.
நமக்குள் இருக்கும் நன்மை செய்விக்கும் நற்குணங்கள்… காலத்தால் நல்லதைக் காப்பதற்காக நாம் கேட்டறிந்த உணர்வால் தீமைகள் பல சேர்ந்து
1.நல்ல தெய்வமாக இருந்த நிலைகளை மாறுபடச் செய்யாது
2.நல்ல குணங்கள் இருண்டு விடாது… நஞ்சுக்குள் சிக்காது அதைத் துடைக்கும் மார்க்கமாகத்தான் ஆலயங்களிலே காட்டப்பட்டது.
நம் உடலை ஆலயமாக்கி
1.அந்த ஆலயத்திற்குள் ஈசனாக இருந்து உயிர் இயக்கும் நிலைகளையும்
2.எண்ணியதைப் பிரம்மமாக உயிர் படைத்துக் கொண்டிருப்பதையும்
3.அதைச் சிவமாக உருவாக்கி சிவத்திற்குள் சக்தியாக நம்மை இயக்கிக் கொண்டிருப்பதையும்
4.நம் உயிரை நாம் மதித்து நடக்க வேண்டும்.
காரணம்… நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உயிரே. நாம் எண்ணியதை இயக்கும் ஈசனாக இருப்பதும் உயிரே.
தீமைகளைக் கேட்டறிந்தால் தீமைகள் நுகரா வண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து தீமைகளை அப்புறப்படுத்திப் பழக வேண்டும். அதற்குத்தான் ஆலயம்.
1.ஆலயத்திற்குச் சென்றால் “பிறர் வாழ வேண்டும்” என்று எண்ணுங்கள்.
2.கீதையிலே இதைத்தான் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைக் காட்டினார்கள்.
ஞானிகள் உணர்வுகள் அனைத்தும் நமக்கு முன் இங்கே படர்ந்துள்ளது அவர்கள் சொன்ன முறைப்படி நாம் சென்றால் அவர்கள் வாழும் எல்லையை அடைகின்றோம்.

ஈஸ்வரபட்டரின் அருள் வாக்குகள்
அகத்தினை அன்பு கொண்டால்
ஜெகத்தினை வென்று வாழ்ந்திடலாம்
தங்க வந்த கூட்டினில்
தரணி ஆண்ட வாழ்க்கையில்
தரணிதனில் நிலைத்திட
தவமிருந்தே வாழ்ந்திடுவோம்
ஆண்டவன் என்ற ஆத்மாவை
அடக்கி ஆளப் பார்க்காமல்
ஆத்ம லிங்க தேவனை
அறிந்தே நாம் வாழ்ந்திடுவோம்
பகவான் படைத்த படைப்பே நாம்
பகவான் எங்கு உள்ளான் என்று
பகுத்தறியும் ஆற்றலைத் தான்
பகவான் அருளிலே பெற்றுள்ளோமே
உடல் அழுக்கைப் போக்கத் தண்ணீர்
உள்ள அழுக்கை போக்க எந்நீர்…?
திருமானின் எண்ணத்தை எண்ணுவீர்
திருநீறு அணிந்தே
ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாக
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்
நம்மை ஈன்றவர்… படைத்தவர் யார்…?
நம் முற்பிறவி… இப்பிறவி… மறுபிறவியில் யார்…?
நம்மில் பலரும் உள்ள பொழுது
நான் என்பது யார்…?
ஒன்றில்லாமல் ஒன்றில்லை
ஒன்றில் இருந்து ஒன்றாக
ஓங்கி நிற்கும் சக்தியிலே
ஒன்றியே நாம் வாழ்ந்திடுவோம்
பல ஆசை நிலைகளிலே
பல நிலை அடைவதற்கே
பயம் என்ற பேய்க்கு நாம்
பயந்து வாழ்வது எதற்காக…?
நிலையில்லா வாழ்வினிலே
நித்திய நிலை பெற்றிடவே
நிலையான அன்பைக் காட்டி
நிலை பெற்று வாழ்ந்திடுவோம்
எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்
ஏற்றமும் தாழ்வும் அமைவதுவே
எண்ணும் எண்ணக் கூட்டினையே
எண்ணும் எண்ண வடிவினிலே
எண்ணப் பேயாய் அலையவிட்டும்
எண்ணத் தெய்வமாய் எண்ணுவதும் எண்ணமே தான்
வஞ்சனை என்ற உலகமென்று
வஞ்சனை என்று எண்ணிப் பார்த்தால்
வஞ்சனை வாழ்வே நமக்குக் கிட்டும்
வஞ்சம் கொண்டே வாழ்ந்திட்டால்…!
வாழ்க்கைப் பாதை வழியினிலே
வழியறிந்து செல்வதுவே
வழியனுப்பி வைத்தவனுக்கு
வழங்கிடும் வாழ்த்ததுவே
வண்டி என்ற கூடிருக்க
வரும் மழைக்குக் குடை எதற்கு
வழங்கியவன் அவன் இருக்க
வரும் வினையை எண்ணலாமோ…?
வல்லினம் மெல்லினம் கொண்டு பிறக்கவில்லை
வரும் வினைக்கு அஞ்சாதே…!
வரும் இடியும் மழையும்
வரும் காற்றும் மணமும்
வழங்கியவன் அவன்தானே
வழங்கியவன் அவனிருக்க
வரும் வினையை எண்ணலாமோ
வழியறிந்தே நீ வாழ்ந்திட்டால்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நல்ல நேரம் பார்த்துத் தான் நாம் செயல்பட வேண்டும் என்று ஜாதகரீதியாக நம்மைக் கட்டுப்படச் செய்து விட்டார்கள். அதன்படித்தான் இன்று பெரும்பகுதியானவர்கள் வாழ்கிறார்கள்.
ஜாதகங்களை நாம் பார்க்கப்படும் போது
1.அதிலே நல்லது எதுவுமே நடக்காது
2.ஆனால் அவர்கள் சொல்லும் கெட்டது அனைத்துமே நடக்கும்.
உதாரணமாக… பால் சத்தானதாக இருந்தாலும் அதிலே விஷம் பட்டுவிட்டால் அந்த விஷத்தின் தன்மை குடிப்போரை உடனடியாக மாய்த்துவிடும்.
ஜாதகத்தில் நல்லது இருந்தாலும்… எவ்வளவு சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டவராக நாம் இருந்தாலும்…
1.ஒரு வேதனை வந்துவிட்டால் நல்லதைச் சிந்திக்கும் செயல் இழந்து விடுகிறோம்…
2.அந்த வேதனையே நம்மை ஆட்கொண்டு விடுகிறது.
அது போல் தான்… ஜாதகத்தில் சில நிலைகள் கெடுதலைப் பற்றிச் சொல்லும் போது இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் வந்து கொண்டே இருக்கும். அந்த நல்லதும் கெட்டதும் கலந்து கொண்டே இருக்கும்.
நல்லதை அவர்கள் அதிகமாகச் சொல்லியிருந்தாலும்
1.ஒரு வக்கிரம் (புத்தி – திசை) வந்து உங்கள் நல்லதைச் செயல்படவிடாது தடுக்கின்றது
2.அது உங்களுக்குத் துன்பத்தை ஊட்டும் என்று சொல்வார்கள்.
இது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.
எல்லாமே சரியாக இருக்கிறது. ஆனால் “ஏழரை நாட்டான் சனியன்” வந்து உங்களுக்குள் எல்லாவற்றையும் மடக்கிக் கொண்டிருக்கின்றான் என்று ஜாதகக்காரன் சொன்னால் போதும். “இந்தச் சனியனை” நாம் நன்றாகப் பதியச் செய்து கொள்கிறோம்.
அடுத்து எந்த நல்ல குணம் நமக்குள் வந்தாலும் அதற்குள் இந்த உணர்வை மீண்டும் மீண்டும் சேர்த்து… நாம் பேசும் போதெல்லாம் ஜாதகக்காரன் பதிவு செய்த உணர்வு… இந்த விஷத்தின் தன்மை கொண்டு இது முன்னணியிலே வந்துவிடும்.
அந்தச் சனியிலிருந்து மீட்டுவதற்காக வேண்டி இந்த ஆலயத்திற்குப் போ… அந்த ஆலயத்திற்குப் போ…! இவ்வளவு பணத்தை நீ செலவழி… யாகத்தை வளர்த்து மந்திரத்தை ஜெபித்தால் நல்லதாக இருக்கும்… என்று சொல்வார்கள்.
அதன் படி நாம் செய்வோம். அந்த எண்ணத்தைச் சிறிதளவு கட்டுப்படுத்தும்.
ஏனென்றால் ஏழரை நாட்டான் பிடித்துவிட்டான் என்று காதிலே கேட்டோம். அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அதனால் கொஞ்சம் குறைக்க முடிந்தது.
இது அல்லாதபடி இன்னொன்றும் சொல்வார்கள்…! உங்கள் இரண்டாவது பிள்ளைக்கு “ஒரு கண்டம் இருக்கிறது…! அவனைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்…” என்று சொல்லி வைத்துவிடுவார்கள்.
இரண்டாவது பிள்ளைக்கு நான்காவது வயது வரப்படும் போது பஸ்ஸிலேயோ வாகனத்திலேயோ விபத்து இருக்கிறது என்று பதிவு செய்து விடுவார்கள். குழந்தை பிறந்த பிற்பாடு ஏழரை நாட்டான் சனியன் பிடித்ததனால் இப்படிச் சொல்வார்கள்.
அதற்கப்புறம் பார்த்தால் வியாபாரமோ தொழிலோ மற்ற காரியங்களோ எல்லாமே மந்தமாகிவிடும். பஸ்ஸிலே விபத்து வரும் என்ற நினைவு மனதிலே டுக்… டுக்… டுக்.. என்று ஓடிக் கொண்டே இருக்கும்.
பிள்ளை ரோட்டிலே விளையாடப் போனால் போதும்.
1.ஜோசியக்காரன் சொல்லியிருக்கின்றானே… என்ன ஆகுமோ…?
2.அவன் சொன்னது எப்பொழுது நடக்குமோ…? என்று பிள்ளைப் பாசத்தால் தாய் பதறும்.
3.துடுக்.. துடுக்… என்ற பயத்தால் தாயிடமிருந்து இந்த அலைகள் போனவுடனே அவனை ஞாபகமறதியாகச் செல்லச் செய்யும்.
ரோட்டிலே பஸ் போய்க் கொண்டிருக்கும்.
1.தாயின் எண்ணம் பாய்ந்து கவனம் இல்லாது அவன் ரோட்டைக் கடப்பான்… அடிபடுவான்.
2.நான் நினைத்தேன்… கரெக்டாக நடக்கிறது…! என்பார்கள்.
ஏழரை நாட்டான் சனி பிடித்தால் இப்படி நடக்கும் என்று சொன்னான் அல்லவா…! என்று அந்தக் கெட்டது இப்படித் தான் நடக்கும்.
இதுகள் எல்லாம் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது…? என்று நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்ல…! எல்லாம் வக்கிரத்தில் இருக்கிறது அதனால் “உனக்குக் குழந்தை இல்லை…” என்று விஷத்தை ஊட்டிவிடுவார்கள். அதற்கு இன்னென்ன சாஸ்திரம் செய்தால் சரியாகும்…! என்பார்கள்.
1.”குழந்தை இல்லை” என்று இந்த உணர்வை ஊட்டிய பின்
2.அதையே எண்ணத்தில் வளர்த்தால்… பிறகு எங்கே போவது…?
அதை நிவர்த்தி செய்ய இந்தக் கோவிலுக்குப் போ… அங்கே போ… அதைச் செய்… இதைச் செய்… என்று எதை எதையோ சொல்லி அதைச் செய்தால் சரியாகும்…! என்று அவர்கள் சொன்னபடி சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
காரணம் நம் எண்ணத்திற்குள் எதைப் பதிவு செய்கிறோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்த்து விடுகிறோம். அது தான் நம்மை இயக்குகிறது.
மனிதனுக்கு ஜாதகம் இல்லை.. நேரமும் இல்லை… காலமும் இல்லை…! இதை உணர்ந்து கொள்ளுங்கள்…!


மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொள்ள வேண்டிய “சரியான நேரம்”
பல வகையிலும் இம்சைப்பட்டுத் தான் இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் தெரிந்து கொண்டேன் (ஞானகுரு). ஏனென்றால் இது அனுபவம்.
ஒவ்வொரு நேரத்திலும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை எனக்கு உருவாக்கினார் குருநாதர்… சிருஷ்டித்துக் கொடுத்தார்.
1.அந்தத் துன்பங்கள் வரப்படும் பொழுது உன் உடலுக்குள் அது என்ன செய்கின்றது…?
2.பின் விளைவு ஒரு வாரத்திற்குள் உன் உடலில் என்னென்ன வேலைகள் செய்கிறது…?
3.அடுத்து அதை நிவர்த்திப்பதற்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்.
தனித்து அழைத்துச் சென்று எனக்குக் கஷ்டங்களை உண்டு பண்ணி… அந்தக் கஷ்டம் எப்படி வேலை செய்கிறது…? அதை எப்படி மாற்ற வேண்டும்…? என்று தெரிந்து கொண்டு வந்தேன்.
அதே சமயத்தில்… உங்களுக்குக் கஷ்டம் சந்தர்ப்பத்திலே உண்டாகின்றது. அந்தக் கஷ்டத்தை உண்டாக்கக்கூடிய நிலைகளை நிவர்த்தி செய்வதற்கு உடனே கையிலே ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாகக் கொடுக்கின்றோம்.
காரணம்…
1.நாம் எதையுமே மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள் தான்
2.இந்த மனித உடலில் இருந்து நாம் அருள் ஒளியைப் பெருக்குதல் வேண்டும்.
3.இந்த உடலிலிருந்து இன்னொரு சரீரம் பெற்று விடக்கூடாது.
4.அது ஒளிச் சரீரமாகத் தான் இருக்க வேண்டும்.
ஆகவே முடிவாக “அந்த ஒளிச் சரீரம் பெற வேண்டும்” என்ற எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.
மெய் ஞானிகள் அருள் ஒளியைப் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த உணர்வை நீங்கள் ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது நம்முடைய உணர்வின் எண்ணங்கள் இந்தப் பூமிக்குள் சுழலாது.
1.அடிக்கடி இவ்வாறு எண்ணினோம் என்றால்
2.விண்ணின் சப்தரிஷி மண்டலங்களினுடைய உணர்வுகள் நமக்கு அதிகமாகக் கிடைக்கும்.
இதற்காக வேண்டி மணிக் கணக்கில் உட்கார்ந்து ஜெபமிருந்து… “சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்வேன்” என்ற நாள் கணக்கில் அமர்வது அல்ல.
இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் எப்பொழுது… எது… எதிர் கொண்டு
1.நம்மைக் கடுமையான எண்ணங்கள் கொண்டு தாக்குகின்றதோ அப்பொழுது
2.நாம் எடுத்துக் கொண்ட தியானத்தின் வலுக் கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன் என்ற வலுவைக் கூட்ட வேண்டும்.
காரணம் கோபம் வந்து விட்டால் இப்படி ஆகி விட்டதே…! என்று வேக உணர்வு நம்மை இயக்குகிறது. “அதே உணர்ச்சியைத் தூண்டி” அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உணர்வைக் கூட்டுங்கள்.
ஏனென்றால் காரத்தின் உணர்வு நமக்குள் கோபத்தை உண்டாக்கப்படும் பொழுது
1.ஈஸ்வரா…! என்று இந்த வேகத்தைக் கூட்டுங்கள்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
3.இந்த உணர்ச்சி அந்த உயர்ந்த சக்தியை எடுக்க உதவும்.
மற்றவர் திட்டிய உணர்வுகள் உணர்ச்சியைத் தூண்டிய உடனே துருவ நட்சத்திரத்தின் பால் நம் எண்ணங்களைச் செலுத்தப்படும் பொழுது அதை வேகமாக இழுத்துக் கோபத்தை “டபக்…” என்று அடக்கி உங்களுக்குள் ஞானத்தைச் செயலாக்கும் நிலைகள் வரும்.
எங்கிருந்து அந்தக் கோபத்தை யார் தோற்றுவிக்கின்றார்களோ உங்கள் சொல்லாலே சொல்லும் போது அங்கேயும் அடங்கும். இதை நீங்கள் அனுபவத்திலே தெளிவாகப் பார்க்கலாம்.
ஆகவே மனிதனாக உருப்பெற்ற இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாத நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காக்க உங்கள் எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் வலுக் கூட்டுங்கள்.
2.அதற்கு எம்முடைய இந்த உபதேசத்தின் வாக்கினை நீங்கள் பதிவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சகல தேவர்களுடனும் ஐக்கியப்படுங்களப்பா…!
சமமான நிலை நிலைக்க வாழும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள். சமமான நிலையின் வாழ்க்கை ஏன் நமக்கு ஆண்டவன் அருளவில்லை…? என்று எண்ணி வாழ்ந்திடாமல்
1.நாம் இப்புவியில் இப்புண்ணிய பூமியில் அச்சக்தியின் அருள் பெற்று
2.நமக்குத் தந்த இச்சந்தர்ப்பங்கள் எல்லாம் நம் நிலையை நாம் சமமாக்கி வாழ்ந்திடலாம்
3.சகல தேவரையும் கண்டிடலாம் என்ற பேராவலுடன் நாம் செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு பிறவியிலும் அடுத்த பிறவியிலாவது நம் வாழ்க்கையைச் சமமாக்கி நல் நிலை பெறலாம் என்று இருந்தாலும்… பிறவி எடுத்து நிறைவு பெற்ற சமமான வாழ்க்கையை எடுத்திட முடியாமல் தான் “இன்று இவ்வுலகில் உள்ள பாமரர்களின் வாழ்க்கை உள்ளது…”
பிறவி எடுத்த நாளிலேயே ஏழு பிறவிக்கு நம் ஆத்மாவை அலைய விட்டிடாமல்
1.“ஒரே பிறவியிலேயே தன் நிலை உணர்ந்து… சமமான நிலை எய்தி”
2.சகல தேவனாக சூட்சும உலகத்திற்குச் சென்று கற்றுணர்ந்த ஞானிகளும்
3.தன் நிலையைத் தெய்வமாக்கி வாழ்ந்தவர்களும் இன்றும் தெய்வமாக உள்ளார்கள்.
நாம் எடுத்துள்ளோம் இப்படிப் பல பிறவிகளை. இந்தப் பிறவிலும் நிறைவு இல்லாமலே வாழ்கின்றோம்.
சமமான நிலை நிலைக்க அவ்ஆண்டவனின் அருள் கிட்ட நம்முள் இருக்கும் ஆண்டவனைப் புரிந்து கொண்டால் தான் “நான்” என்ற நிலையை “நம்மை ஈசன் இயக்குகின்றான்…!” என்ற உண்மையை உணர்ந்து
1.இவ்வுலக வாழ்க்கையிலே சலிப்பும் சங்கடமும் மேற்கொள்ளாமல்
2.நம்மை நாம் சமமாக நிலைப்படுத்தி வாழ்ந்திடும் வாழ்க்கை தான்
3.அச்சகல தேவர்களுடன் நாமும் ஒருவராக வாழப் போகிறோம் எனும் நிலையை எய்திட முடியும்.
சகல தேவர்கள் யார்…? என்ற கேள்விக்குறி எழுந்திட முடியும்…!
ஈசன் ஒருவன் தான் சகலத்திலும் கலந்துள்ளவன். அவ்ஈசன் தான் என்னும் பொழுது சகல தேவர்கள் என்று பிரித்துக் கூறும் நிலையில் உள்ளவர்கள் யார்…? என்று நம் மனதிற்கு விடை காண எண்ணிடலாம்.
சகல ரூபங்கள் கொண்டு ஒவ்வொரு ரூபத்தின் வடிவினிலும் எண்ணி ஏங்குபவர்களுக்கு ஆண்டவனாக வந்து அருள் புரியும் அந்த ஞான நிலை பெற்ற “சித்தர்களும் ரிஷிகளும் தானப்பா அச்சகல தேவர்கள்…”
அன்று ஆண்ட அரசர்களின் பலர் அன்றே “நான்” என்ற மமதையை… அரசை ஆண்டு கொண்டு இருந்தாலும் நான் என்றால் யார்…? என்பதைப் புரிந்து கொண்டு அன்றே அவ்வரசர்கள் தன் நிலையைச் சமமான நிலை நிலைக்கக் கடும் தவம் இருந்து சகல வித்தைகளையும் பெற்று… அச்சூட்சம நிலை கொண்டு வாழும் நிலையை அறிந்து வாழ்ந்தார்கள்.
நாம் இன்று நம் குழந்தைகளுக்கும் நாமே கேட்பதற்கும் பல நூல்களின் வாயிலாக அன்று ஆண்ட விக்கிரமாதித்த மகாராஜாவின் கதைகளைப் பல கோணங்களில் பல ரூபத்தில் அறிவுக்கு உகந்த வழியில் கேட்டும் படித்தும் வருகின்றோம்.
அன்று ஆண்ட அந்த விக்கிரமாதித்தன் எந்த அரச சபையில் ஆண்டானோ அதே நிலையில் தான் இன்றும் அவ்வுடலுடனே பல மாயாஜாலங்களை இன்று வாழும் மனிதர்களின் மமதையைப் போக்க பல ரூபங்கள் எடுத்து உணர்த்திக் கொண்டும்… பல நன்மைகளைச் செய்து கொண்டும்… இன்றும் அவ்வுடலுடனே சித்தி பெற்ற நிலையில் சூட்சம உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளான்.
அன்று அரசாளும் நிலையிலேயே தன் நிலையைச் சமமான நிலை நிறுத்திச் சகல நிலையையும் தானே உணர்ந்து ஏற்கும் சக்தி பெற்ற நிலையைத் தான் ஏற்றுக் கொண்டான் கடும் தவமிருந்து.
அவன் தவத்தைக் கலைக்கத்தான் அவ் வேதாளம் என்னும் பேய் இவனைத் தூங்கவிடாமல் இவனுக்குப் பல கதைகள் சொன்னதாக ஆயிரத்து ஒரு கதைகள் ஆயிரத்து ஒரு இரவு சொன்னதாகச் சொல்வதெல்லாம் என்னப்பா…?
வேதாளமா வந்து கதை சொன்னது…? வேதாளம் என்னும் உருவத்தில் வந்து கதை புகட்டியவர் வேதாள முனிவரப்பா. வேதத்தையே ஆளும் அம்முனிவர் விக்கிரமாதித்த ராஜாவின் நிலை அறிந்து அவரின் நிலை எத்தன்மையில் அச்சக்தியின் அருளை ஈர்க்கிறது என்று சகல நிலையை அறிந்து தான் விக்கிரமாதித்த ராஜாவுக்கு வேதாள முனிவர் பல கதைகளைச் சொல்லி அவர் மனதில் இருந்து விடை காண ஒவ்வொரு இரவும் அவரைத் தூங்க விடாமல் அக்கதை என்ற ரூபத்தில் பல உண்மை உள்ள கதைகளை எல்லாமே உணர்த்தி அவரின் நிலையை வேதாள மாமுனிவரின் ஆசியால் சகல நிலையையும் அறிந்து சமமான நிலை நிலைத்திடும் பக்குவத்தைப் பெற்றாரப்பா அந்த விக்கிரமாதித்த மகாராஜா.
அன்று அரசாண்ட அந்த ராஜாவிற்கு இந்த நிலைகளை எல்லாம் பெற்றுத்தான் தன் நிலையைச் சமமாக்கி வாழ்ந்திடும் நிலையைப் பெற்று வாழ்ந்திட முடிந்ததப்பா.
இவ்வுலகில் நாம் மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை.
1.நம்மைச் சுற்றிப் பல கோடி ஆன்மாக்கள் உடலில்லாமல் ஆத்மாவுடன் இவ்வுலகில் நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு
2.தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்… தான் தன் ஆன்மா வந்து பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்…
3.எவ்உடலில் ஏறினால் அவ் உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற தன் எண்ணத்தை
4.நன்மையையோ துவேஷத்தையோ பூர்த்தி செய்து கொண்டிட முடியும் என்ற நிலை கொண்டும்
5.இப்படித் தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று ஆத்மாவுடன் வாழும் மனிதர்கள் நிலையுடனே
6.உடலில்லா ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டே உள்ளன.
நாம் நினைக்கின்றோம் நம் எண்ணம் நம் உடல் நம் ஆத்மா என்று. நம் உடலில் நாம் மட்டும் வாழவில்லையப்பா…!
1.நம் மன நிலை எந்தெந்த நிலை கொண்டு மாறுகிறதோ அந்தந்த நிலை கொண்ட ஆவி அணுக்கள்
2.நம் உடலில் எந்தத் திசையிலும் ஏறிக்கொண்டு நம்மையே ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக தான் குடியிருக்கும் கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.
நாம் எண்ணுவதைப் போல் நாம் மட்டும் வாழவில்லை. நம் நிலையை மாற்றிக் கொண்டால்… நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப் “பல அணுக்கள் நம்மைச் சுற்றிக்கொண்டு தான் உள்ளன…” என்று உணர்ந்து
1.நம்முள் அவ் ஆண்டவன் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட முடியும் என்ற உண்மையை உணர்ந்து
2.பல ஆவி உலக அணுக்களுக்கு நாம் அடிமையாகாமல் இவ்வுலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நழுவ விட்டு
3.இக்கடைசி நிலை கொண்ட உடலுக்கு நாம் நம் உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி
4.”அச்சகல தேவர்களுடன் ஐக்கியப்படுத்துவது ஒன்றுதான்… இப்பாட நிலையில் உணர்த்திடும் உத்தம நிலையப்பா…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆதியிலே அகஸ்தியன் நம் பூமியின் துருவத்தை நுகர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி பெற்றவன். அதன் உணர்வே அவனுக்குள் ஒளியாக மாறும் நிலை பெறுகின்றது.
குருநாதர் அகஸ்தியனைப் பற்றி எனக்கு (ஞானகுரு) படிப்படியாக என்னென்ன சொன்னாரோ… அதே வழியில் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றேன். தியானிக்கும் போது அந்தச் சக்திகளை நீங்கள் பெற ஏதுவாகும்.
1.வானுலக ஆற்றலை துருவத்தின் வழியாக நம் பூமி பெறுவதை அகஸ்தியன் இடைமறித்து அந்த உணர்வின் தன்மை நுகர்கின்றான்
2.துருவ மகரிஷி தனக்குள் நுகர்ந்து உருவாக்கிய அந்த உணர்வுகளைப் பெற வேண்டும்…
3.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி
4.பூமியின் துருவப் பகுதியின் வழியாக நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
நம் பூமி சுழல்வது தெரியும். பிரபஞ்சத்தில் உருவாகும் சக்திகள் நம் பூமி செல்லும் பாதையில் அது அணுக்களாக இருப்பதையும்… நம் பூமி அதை எவ்வாறு ஈர்க்கிறது…? என்பதும் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
இந்த உணர்வின் தன்மைகளை எல்லாம்
1.கண்கள் வழி கொண்டு… நினைவின் ஆற்றலை உயிருடன் ஒன்றி
2.அந்த அகக்கண் ஒளி கொண்டு உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
புறக்கண்களால் ஒரு பொருளைப் பார்க்கின்றோம். இருந்தாலும் அருள் ஞானியின் உணர்வுகளை குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். பதியச் செய்வதை நீங்கள் உங்கள் உயிருடன் ஒன்றி அகக்கண்ணுடன் இணைத்து ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
1.பூமி துருவப் பகுதியின் வழி கவரும் இடத்தில் நினைவைச் செலுத்தும் போது
2.அந்த எல்லையிலிருந்து அடுத்து… வானுலகப் பகுதியிலிருந்து பூமி கவரும் சத்து எப்படிப் பூமிக்குள் வருகிறது…? என்ற நிலையும் காட்சியாக வரும்.
பூமி சுழலும் பாதையில்… மற்ற நட்சத்திரங்களும் கோள்களும் உமிழ்த்தும் அந்த உணர்வலைகள் ஒவ்வொரு பகுதிக்கும் அது பரவி வருவதையும்… அது மின்னிக் கொண்டு பல கலர்களாக மாறுவதையும்… நம் பூமியின் துருவ ஈர்ப்புக்குள் அது வருவதையும் உங்களால் நுகர முடியும்.
1.நுகரும் போது புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலிலே பரவும்
2.சில நொடிகளில் நெடி கலந்த நிலைகளும் சில நொடிகளில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்
3.நறுமணம் கொண்ட நிலைகளும் உங்களுக்குள் வந்து கொண்டே இருக்கும்.
உணர்வுகள் உயிருடன் ஒன்றி உள் செல்லும் போது… உடலில் உள்ள குணங்கள் ஒவ்வொன்றிலும் மோதி… உடலுக்குள் பல அதிசயங்களும்… பல பல மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்… ஆனந்த ஒளியும் உடலுக்குள் வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்… மாறிக் கொண்டே இருக்கும்.
சாதாரண எண்ணையில் ஒரு திரியைப் போட்டு எரிக்கும் போது அதிலே எரிச்சல் கலந்த நிலை வருகிறது. ஒரு பெட்ரமாக்ஸ் லைட்டை எரிக்கும் போது… அது எண்ணையின் சத்தினை மாற்றிவிட்டு ஆவியின் தன்மை கொண்டு ஒளியாக மாற்றுகின்றது.
அதைப் போல் இந்நேரம் வரை உபதேசித்த உணர்வுகள்…
1.அந்தத் துருவ மகரிஷி உணர்வுகளுடன் உங்கள் உணர்வுகள் படப்பட்டு
2.எண்ணையின் வாசனையை மாற்றிவிட்டு குளிர்ந்த ஒளியாகக் காணுவது போல்
3.மகிழ்ச்சி பெறும் ஒளியின் சுடராக உங்கள் உடலுக்குள் பரவும்.
ஒவ்வொரு அணுக்களிலும் இது மோதி… அந்த ஞானியின் உணர்வுகள் ஒவ்வொன்றும் உடலுக்குள் “பளீர்… பளீர்…” என்று மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக மாற்றிக் கொண்டே வரும்.
வெல்டிங் வைக்கும் போது பளீர்…பளீர்… என்று மின் ஒளிகள் வருகின்றது. அதே சமயத்தில் அதைக் கண்களால் பார்க்கும்போது அதிலே ஒரு எரிச்சல் கலந்ததாகவும் இருக்கும்.
1.ஆனால் பெட்ரமாக்ஸ் லைட்டை எரிக்கப்படும் போது அது கண்ணுக்கு எப்படிக் குளிர்ந்ததாகப் புலப்படுகின்றதோ
2.அதைப் போன்று உங்கள் உடலுக்குள் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் கலந்து
3.மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக உங்கள் உடலில் ஒளித் தன்மை பெறுவதைக் காணலாம்… உணரலாம்.
புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி உயிருடன் ஒன்றி… கண்ணின் நினைவைத் துருவ மகரிஷியின் பால் செலுத்தி… அவரின் ஆற்றல்கள் அனைத்தும் எங்கள் உடலில் பரவ வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்துங்கள்.
அப்படிச் செலுத்தும் போது…
1.ஒரு ஒளி விளக்கைக் காட்டினால் அதன் மூலம் பொருள்களைக் காண்பது போன்று
2.உங்கள் உடலுக்குள் அந்த வெளிச்சங்கள் ஊடுருவுவதையும்
3.அந்த உணர்வலைகள் மோதும் போது மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்களிலே தோன்றுவதும்
4.ஒளி கண்டபின் இருள் மறைவது போன்று உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இது இணையும்…
5.உட்பொருள் தெளிவாகும்…. ஆற்றல்மிக்க சக்தியாக வளரும்.
துருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் உயிருடன் மோதும் போது
1.மெர்க்குரி போன்று புருவ மத்தியில் வெளிச்சம் வரும்
2.இளம் நீலமாகப் புருவ மத்தியில் ஒளி அலைகள் வரும்.
இந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நினைவைச் செலுத்தும் போது உங்கள் உடலில் மகிழ்ச்சி பெறும் உணர்ச்சிகள் வரும்.
இதற்கு முன் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் அனைத்தும் நீங்க இது உதவும். துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் கலந்து மன பலம்… மன நலம்… பெறுவீர்கள்.
துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற நாம் தியானிக்க வேண்டிய சரியான முறை இது தான்.


பரிணாம வளர்ச்சியில் உடல் பெறும் உணர்வுகள் “உயிரால் எப்படி மாற்றப்படுகின்றது…?”
பரிணாம வளர்ச்சியில் தாவர இனங்கள் எப்படி உருமாறி குணங்கள் மாறியதோ இதைப்போல தான் ஒரு உயிரணு தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு மற்ற உடலிலே விளைந்த அந்த உணர்வின் சத்தை நுகர்ந்து அதனிடமிருந்து காத்துக் கொள்ளும் நிலைகள் வந்தது.
அப்படி வந்தாலும்…
1.இந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து உயிர் அதனின் உணர்வாக விளையச் செய்து
2.முதலிலே பெற்ற உணர்வுக்கும் இரண்டாவது மற்றொன்று இதற்குள் சேர்த்தவுடனே நோயாக வந்து
3.சுழிக் காற்று அடிப்பது போல இதனுடைய மணங்கள் பெருகச் செய்து
4.கவர்ந்த உணர்வுகள் ஒன்றாகி… உயிருடன் ஒன்றும் பொழுது
5.முதலிலே உருப் பெற்ற உடலைப் பிரித்துவிட்டு
6.இணைந்து கொண்ட உணர்வுகள் தனியாக விளைந்து அதனின் நிலைகளில் வந்த உணர்வு கொண்டு தான்
7.இந்த உயிர் மற்ற மற்ற உடல்களை உருவாக்கியது என்பதனை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
அகஸ்தியன் இதைத் தெளிவாக எடுத்துரைத்தான். அதாவது இந்தப் பிள்ளை யார்…? என்று அவன் கேள்விக்குறி போட்டு நம்மைத் தெளிவாகச் சிந்திக்கும்படி செய்துள்ளான்.
ஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நாம் எவ்வாறு மனித உடல் பெற்றோம்…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உடல் வலிமை பெற்றது தான் மிருகங்கள். மிருகங்களாக இருக்கும் போது தன்னைக் காத்திடும் உணர்வுகள் பெற்றுப் பெற்று… அந்த உணர்வால் ஈர்க்கப்பட்டு நமது உயிர் மனிதனாக உருவாக்கியுள்ளது.
தன்னைக் காத்திடும் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு
1.தன்னைக் காத்திடும் அங்கங்களும் தன்னைக் காத்திடும் உணர்வின் எண்ணங்களும் அது விளையச் செய்து
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உயிர் ஒளியாக எப்படி ஆனதோ
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது தான் இந்த மனித உடல்.
நமது உயிரே அதை உருவாக்குகின்றது.
1.ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட எண்ணங்களை இந்த உயிரே அது இணைக்கின்றது
2.எடுத்துக் கொண்ட எண்ணத்தை நமது கண்களே வழிகாட்டி
3.அதனின்றி தப்பித்துக் கொள்ளும் நோக்குடன் அதைக் கவர்ந்து அதனின் வலுவை இதற்கு உணர்த்தி
4.அதனின் நிலைகளிலேயே உணர்வுகள் மாறி உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து
5.உடலின் தன்மை மாற்றமானது என்ற நிலையை தெளிவாக எடுத்துரைத்தான் அந்த அகஸ்தியன்.
இவ்வளவு பெரிய தத்துவத்தை மகரிஷிகள் சாதாரண நிலைகளில் விநாயகர் தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.
நாம் எதை எதை எல்லாம் சேர்த்துக் கொண்டோமோ அந்த வினைக்கு நாயகனாக… ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட உணர்வு “எது அதிகமோ” அதற்கு நாயகனாக அந்த உணர்வுகள் நம்மை இயக்கி… அந்த உடலை உருவாக்கி… அந்த எண்ணத்தால் தன்னை எவ்வாறு காத்துக் கொள்கின்றது…? என்பதைத்தான் அன்று அகஸ்தியன் “விநாயகர் தத்துவத்தில்” எடுத்துக் காட்டினார்.

அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்
சக்தியின் அருளில் சக்தி பெற்ற சகல ஜீவராசிகளும் ஜீவன் பெறும் நிலையில் ஒரே நிலையில் தான் ஜீவன் மறுபிறப்பு எடுத்து அப்பிறப்பில் நிறைவு பெற்றிட வேண்டும் என்ற நிலையில் தான் பிறப்பெடுகின்றன… நல்ல ஜீவன்கள் எல்லாம்.
1.நல்ல ஜீவன்கள் எல்லாம் தாம் பிறவி எடுத்ததின் குறிக்கோள்…
2.தான் பிறப்பு எடுத்து அடுத்த பிறப்பு இல்லாத நிலையில் எடுக்கும் பிறப்பில் வாழ்ந்திட வேண்டுமென்ற ஆர்வம் கொண்டு பிறக்கின்றன.
ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பு எனும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது.
எல்லா ஆத்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இவ்உடலுடனே வாழ்கின்றன. அவ் அன்பிற்காகத் தான் அவ்அன்பெனும் நிலை கிடைக்காத நிலையில்
1.எண்ணும் மனம் என்றும் நிறைவைப் பெற்றிடாமல்… பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
2.அம்மனமென்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்கள் ஆக்கி வாழ்ந்திடுகின்றார்கள் மனிதர்கள்.
பரலோகம் எமலோகம் நரகலோகம் பூலோகம் இப்படி பல லோகங்களைச் சொல்லும் லோகங்கள் எல்லாம் எந்த லோகங்களப்பா…?
மனம் என்னும் அன்பு லோகத்தை அவ் அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அவ்ஆத்ம லோகத்திற்கு நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத் தான் நாம் அழிக்கின்றோம்.
அன்பு ஒன்றினால் மட்டுமே இவ்வுலகத்தை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. எந்த நிலை கொண்டும் இன்று இக்கலியின் நிலை கொண்டு
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்.
அன்பினால் நாம் பல நிலைகளை நம் உடலுக்கும் நம் மனதிற்கும் கொடுக்கப்படும் போது… “நம் ஆத்மா பூத்தொளிர் பெற்று வாழ்கிறது” என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.
ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு நம் முன்னோர்கள் உணர்த்தியது என்ன…?
1.நம் மனம் என்ற பல சஞ்சலக் கூடு நிறைந்த இம்மனத்தை
2.அன்பு என்னும் நிலையில்தான் அவ்ஆத்மாவை அமைதிப்படுத்திட முடியும் என்பதற்காகத் தான் ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தி
3.அவ்ஆண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து
4.நம் மனம் என்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட
5.ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழிகாட்டி வந்தார்கள்.
ஆண்டவன் என்னும் ரூபத்தில் நம் அன்பை எதில் மட்டும் செலுத்தி வணங்கிடலாம்…?
அன்பு கொண்டு நாம் வணங்குவது எல்லாமே ஆண்டவன் தான். எல்லா உயிரினங்களிலுமே அவ ஆண்டவன் உள்ளான்.
உன் அன்பை உயிரினங்கள் மட்டுமல்ல…
1.இவ்வானமும் பூமியும் மரம் செடி கொடிகள் மழை காற்று சூரியன் சந்திரன், நட்சத்திர மண்டலங்கள் இப்படி எந்நிலைகொண்டும்
2.உன் மனம் எனும் அன்பைச் செலுத்தி எண்ணி வணங்கிட்டாலே
3.எந்த ரூபத்திலும் உன் உயிராத்மாவிற்கு நீ சேர்க்கும் உன்னதப் பொக்கிஷம் கிட்டுகின்றது.
அவ்அன்பினால் மட்டும் தான் இவ் உயிராத்மாவிற்குக் குளிர்ந்த நிலையை நாம் அளிக்க முடியும்.
இவ் உடல் முழுவதுமே ஒருநிலை கொண்ட வெப்பத்துடன் தான் உள்ளது. ஆனால் இவ் உடலில் உள்ள நம் உயிரணு ஒன்று மட்டும் தான் குளிர்ந்த நிலையில் உள்ளது.
மனம் என்னும் நிலையை நாம் அமைதிப்படுத்தி அன்புடன் வாழும் பொழுது அவ் உயிராத்மா ஒரே நிலை கொண்டு அமைதியுடன் அன்பு கொண்ட நிலையில் ஆனந்த நிலையில் உள்ளது.
ஆனால்
1.இம்மனம் என்னும் நிலையை நாம் பல நிலை கொண்டு அலையவிடும் பொழுது
2.இவ் உடல் நிலையில் அதி உஷ்ண நிலை ஏற்பட்டு
3.உயிராத்மாவிற்குப் தீங்குகளைத் தான் நம்மால் சேர்த்திட முடிகின்றது.
நம்மில் பல பெரியோர் இவ்வன்பையே பல வழிகளில் நமக்கு உணர்த்திட அன்றிலிருந்து இன்று வரை போதித்துச் சென்றார்கள்.
1.அன்பிலார்க்கு இவ்வுலகமே இல்லை என்ற உண்மையை உணர்த்திச் சென்றார்கள்
2.அன்பே தான் கடவுள் என்றார்கள்.
இப்பொழுது வாழ்ந்திடும் மனிதர்களின் நிலையில் ஒரே குறிக்கோள் “தான் செல்வந்தனாகச் செழித்து வாழ்ந்திட வேண்டும்” என்ற குறிக்கோள்தான்.
அந்த நிலைக்காகத் தன்னைத்தானே தன் இனத்தை துவேஷிக்கும் நிலையில் மனிதன் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். அன்பிற்கு மேல் துவேஷத்தினால் தான் இன்று உலகமே உள்ளது. இந்நிலையில் இவ்வுலகில் கலந்துள்ள இக்காற்று மண்டலமே விஷமுடன் உள்ளது.
இனி வாழ்ந்திடும் வாழ்நாட்களை வீண் விரயம் செய்திடாமல்…
1.அன்பு கொண்ட வாழ் நாட்களாக வாழ்ந்து
2.அன்பு என்னும் பொக்கிஷத்தை ஆண்டு வாழ்ந்திடுங்கள் அன்புடனே.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பாலில் நஞ்சு கலந்தால் அதைக் குடித்தால் நம் சிந்திக்கும் தன்மையை எப்படி இழக்கின்றோமோ… அதைப் போலத் தான் இன்றைய உலகில் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் நஞ்சுகள் அதிகரித்துள்ளதால் நல்ல சிந்தனைகளும் குறைந்து கொண்டே வருகிறது.
காரணம்…
1.பூச்சிக் கொல்லி மருந்துகளையும் இரசாயண உரங்களையும் விவசாயப் பயிர்களில் சேர்த்துச் சேர்த்து
2.பெரும்பகுதியான வித்துகளில் அந்த நஞ்சு இணைந்தே உள்ளது
3.அது நம் உடலுடன் இணையும் போது நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்திலும் கலக்ககப்படுகின்றது…
4.அத்தகைய நஞ்சால் நம் சிந்தனை இழக்கப்படுகின்றது… நாம் சிந்தித்தாலும் கூட அது தெரிவதில்லை.
நாம் எண்ணும் கோபமோ வெறுப்போ வேதனையோ இவை எல்லாம் விஷத்தால் இயக்கப்படுவது. உடலில் விஷம் கூடக் கூட “அத்தகைய தீமை செய்யும் சிந்தனையும்… அதனுடைய ஞானமும் தான் அதிகமாகப் பெருகும்…”
உதாரணமாக ஒருவரை நாம் எதிர்பாராது திட்டி விடுகிறோம் அல்லது அவருக்குக் கோபம் வரும்படியாகப் பேசி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அதனால் அவர் மனது புண்பட்டிருந்தாலும் கூட
2.“தான் பேசியது நியாயம் தான்…” என்று வாதிக்கும் திறன் அந்த விஷத்திற்கு உண்டு.
அந்த விஷத்தின் வலுக் கொண்டு செயல்படுத்தும் போது நாம் திட்டியதால் அவர்கள் மனம் புண்பட்டுவிட்டது என்ற சிந்தனையற்ற நிலையும் உருவாக்கிவிடும்.
அவர்கள் தவறு செய்யவில்லை… சந்தர்ப்பவசத்தால் அவர்களைத் திட்டி விட்டோம்…! என்று எண்ணினாலும் அவர்களைத் திட்டியதால் வேதனைப்படுகின்றனர் என்று சிந்தித்து அதைச் சீர்படுத்த முடியாது.
இப்படி மனிதனின் வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் எதுவாக இருந்தாலும் இது போன்ற விஷத் தன்மைகள் பெருகி சிந்தனையில்லாத செயல்களும் இன்று அதிக அளவில் பெருகிக் கொண்டே உள்ளது.
ஆனால்… நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினைப் பிரித்து விட்டு நல்ல உணர்வை உடலாக ஆக்கும் மணமாக மனித உடலில் ஆறாவது அறிவு இருக்கின்றது.
கடந்த காலங்களில் மனித வாழ்க்கையில் எத்தகைய வேதனையான நிலைகள் வந்தாலும் தன் ஆறாவது அறிவின் திறமை கொண்டு அந்த வேதனையை உருவாக்கிடும் செயல்களை நீக்கிடும் ஆற்றல்கள் உண்டு. அதிலே முதன்மை பெற்றவன் அகஸ்தியன்.
ஏனென்றால் மனிதனின் உணர்வுக்குள் ஆறாவது அறிவை ஏழாவதாக மாற்றுவது ஒளி.
1.ஒரு பொருளுக்குள் இருக்கும் நஞ்சினை நீக்கத் தெரிந்து கொள்வது…
2.தீயதை நீக்கி நல்லதை உருவாக்கும் ஆற்றல் பெற்றது நம் ஆறாவது அறிவு.
அதனை அடிப்படை ஆதாரமாக வைத்துப் பண்டைய காலத்தில் வாழ்ந்த அந்த மெய் ஞானி நஞ்சினை நீக்கி உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றினான். ஆக அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.
அந்த மகரிஷியின் ஒளிச் சரீரத்திலிருந்து வெளிப்படும் மிகச் சக்தி வாய்ந்த உணர்வலைகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நம் பூமி வட துருவத்தின் வழியாக அதைக் கவர்கிறது.
அப்படி வரும் வந்த உணர்வுகளைக் கவர்ந்தோர் அனைவரும் அந்த அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை நீக்கினானோ… உணர்வை ஒளியாக மாற்றினானோ… அதைப் போல் ஒளியாக மாற்றிக் கொண்டு… முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில் வேகா நிலை கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
1.ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றி சப்தரிஷி என்ற நிலை அடைந்து
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் தனக்குள் ஒளியாகச் சிருஷ்டித்து ஏழாவது நிலையை அடைந்து சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.
அந்த எல்லையை நாம் அனைவரும் அடைய வேண்டும்.


“எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை…!” என்று இரண்யன் சொல்வதன் உட்பொருள் என்ன…?
இரண்யன் சாகா வரம் பெற்றவன். ஈரேழு 14 லோகத்திலும் எதிலும் எனக்கு இறப்பு இல்லை என்று நாராயணனிடம் வரம் வாங்கிக் கொண்டான். நாராயணன் என்பது சூரியன்.
1.வெப்பமும் காந்தமும் கலந்து விஷத்தின் தன்மை அதனுடன் கவர்ந்து வரப்படும் பொழுது ஒரு அணுவை இயக்கும் சக்தி கொண்டு செயல்படுகின்றது.
2.விஷத்தின் துடிப்பு இல்லை என்றால் “எதனையுமே இயக்க முடியாது”
3.விஷத்தின் துடிப்பு அதிகமாக இருப்பதினால் தான் சூரியனின் சுழற்சியின் வேகமும் அதிகமாகின்றது.
சூரியனின் சுழற்சி வேகம் அதிகமாகி அதிலே உருவான நஞ்சினைப் பிரித்துத் தள்ளினாலும் வெப்பமும் காந்தமும் என்று அணுக்களை உருவாக்கி காந்த புயலாக வெளிக் கக்கினாலும்
1.காந்தப் புயலாக வருவது அந்த விஷத்தினைக் கவர்ந்து வரப்படும் பொழுது அது இறப்பதில்லை.
2.ஆனால் அது இறந்து விட்டால் எதுவுமே இயக்கமில்லை
3.ஆகவே “நான் இல்லாது எதுவுமே இயங்காது” என்று பிரகலாதன் கதையிலே அவ்வாறு காட்டுகின்றார்கள்.
உலக சிருஷ்டிக்கு நான் தான் மூல காரணம் என்று இரண்யன் சொல்கின்றான். சூரியனோ இந்த உலக அனைத்தையும் ரட்சிக்கிறேன் என்று இயக்குகிறது.
1.இரு பிரிவுகளையும் அதாவது விஷத்திற்கும்… ஒன்று சேர்த்து இயக்கக்கூடிய நிலைகளுக்கும்… நாம் கண்டுணர
.இத்தகைய நிலைகளைத் தெளிவாகக் காவியங்களாகப் படைத்துக் கொடுத்துள்ளார்கள்.
இரண்யன் தன் மகனான பிரகலாதனிடம் என் பெயரைத் தான் நீ சொல்ல வேண்டும் என்று கேட்கின்றான். பிரகலாதன் என்றால் இந்த இரு உணர்வும் சேர்த்து உருவான நிலைகள் தான்.
ஒரு ஜீவ அணு உண்டாக வேண்டும் என்றால் இந்த விஷத்தின் துடிப்பு கொண்டு தான் இயங்குகிறது என்றும் அதே சமயத்தில் சூரியனுடைய நிலைகள் வெப்பமும் காந்தமும் மற்றொன்றைக் கவர்ந்து உலகை இரட்சிக்கும் நிலையாக மற்றதை உருவாக்கும் நிலை என்று இதனின் செயல்களை நாம் கண்டுணரக் காவியங்களாகத் தீட்டினார்கள் ஞானிகள்.
சாதாரண பாமர மகனும் அறிந்திடும் நிலையாக… இந்த உலக இயற்கையின் சிருஷ்டியும் அணுவின் இயக்கமும் என்ற தலைப்பில் காவியமாகப் படைத்துச் சூரியனை நாராயணனாக மையமாக வைத்து… அதனின்று வெளிப்படும் உணர்வின் அலைகளைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் மகரிஷிகள்.
இதைப் போன்று அது அது நஞ்சைக் கடந்து வந்தாலும் உலகிலே எனக்கு இறப்பு இல்லை என்று வரம் வாங்கிக் கொண்டான் இரண்யன்.
பாலுக்குள் விஷம் பட்டால் அந்தச் சத்தை அது தனக்குள் அடிமை ஆக்கிக் கொள்கிறது. ஒரு வெப்ப காந்தம் ரோஜாப் பூவின் மணத்தைக் கவர்ந்து கொண்டால் விஷத்தின் துடிப்பால் அந்த மணத்தை வீரிய உணர்வாக (மணம்) உண்டாக்கும்.
அதே சமயத்தில் ஒரு காரமான உணர்வை வெப்ப காந்தம் எடுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அதனுடைய வேகத்துடிப்பாக இயக்கிக் காட்டும். ஆகவே
1.இயக்கத்திற்கு மூலமாக இருப்பது
2.இந்த நஞ்சின் தன்மை தான்…!
ஆதியிலே அணுவின் தன்மை உருவாவதற்கு… ஆவியாகப் படர்ந்துள்ள நிலையில் விஷத்தின் தாக்குதலால் அது தாங்காது… அது பிரிந்து அணுக்களாக நகர்ந்து சென்று… “வெப்பமும் காந்தமும்” என்ற நிலைகள் அடைந்தது.
விஷத்தின் இயக்கம் இல்லை என்றால்
1.பேரண்டத்தில் படர்ந்து கிடந்த நிலைகள் இயக்கமே இல்லாத சூனியமாகத்தான் இருக்கும்
2.விஷம் இதில் தாக்கப்படும் பொழுது தான் “சூனியத்தின் நிலை மாறி… இயக்க நிலையாக மாறுகின்றது…”
ஆகவே தான் இரண்யன் எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை என்ற நிலையில் “அவன் வாதிடுகின்றான்” என்று காட்டுகின்றார்கள்.

எமது உபதேசங்களைப் பதிவாக்கி உங்கள் உயிரான ஈசனிடம் அதை அனுப்புங்கள்
இதற்கு முன் ஐதீகம் ஐதீகம் என்ற நிலையில் நம்மை அறியாமலே செயல்பட்ட சாங்கிய உணர்வுகளிலிருந்து… அதனின் விளைவுகளிலிருந்து விடுபட்டு
1.அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் நேரடியாகப் பற்றி அதனின் உணர்வின் துணை கொண்டு
2.எந்த நிமிடமும் ஒளியின் சரீரமாகி அழியா சரீரமாகி வேக நிலையாக நிச்சயம் நாம் விண்ணுலகம் செல்ல முடியும்.
அந்த நிலைகள் பெறுவதற்குத் தான் இதை உபதேசிப்பது.
எமது உபதேசங்கள் அனைத்தும் புத்தகங்களாகவும் ஒலி நாடாக்களாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் காலத்தைப் போக்க ஒவ்வொரு நாளும் அதைப் படித்து கேட்டு சிறுகச் சிறுக உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.
யாம் உபதேசித்த உணர்வுகளையும் அருள் மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளையும் நிச்சயம் நீங்கள் பெற முடியும். உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.
நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் படைக்கின்றது… உடலாக ஆக்குகின்றது… உணர்வின் இயக்கமாக உங்களைச் செயல்பட வைக்கின்றது.
ஆகவே… உயிரே கடவுள் என்று மதித்து எண்ணுங்கள் அவன் படைத்த ஆலயமான உங்கள் உடலை வணங்குங்கள் அதே சமயத்தில்
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் கோடிக்கணக்கான குணங்களை இந்த உயிரே தெய்வங்களாக அமைத்தது.
2.அந்த நல்ல குணத்தின் நன்மை கொண்டே இந்த மனித உருவை உருவாக்கியது
3.அவன் உருவாக்கிய அந்த நல்ல குணத்தைக் காக்க “அவனுடன் ஒன்றுவோம்…”
மெய் ஒளி கண்டுணர்ந்த மெய் ஞானியின் அருள் சக்திகளை நாம் பெறுவோம். அவன் வழியில் என்றென்றும் அழியா நிலைகளாக மனிதன் முழுமை என்ற நிலை அடைவோம்.
உபதேச வாயிலாக உங்களுக்குள் அருள் உணர்வுகள் பதிவாகின்றது பதிவானதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுகின்றீர்கள்.
1.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த அருள் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்…
3.துரித கதியில் நீங்கள் சக்திகளைப் பெற முடியும்.
குடும்பத்தில் சிக்கல்கள் இருந்தால்… மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் தொழில் வளம் பெருக வேண்டும்… அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
இந்தச் சக்தி உங்களுக்குள் செயலாக்கும்…
1.உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்த உங்கள் எண்ணமே உதவும்… அந்த வலிமை பெறுவீர்கள்.
2.சிக்கலைத் தீர்க்கும் ஞானமும் மன உறுதியும் கிடைக்கும் சிக்கலைத் தீர்க்கும் மனமும் வரும்.
அதே சமயத்தில் உடலில் வந்த நோய்களை நீக்க அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம். நோய் நீக்கும் சக்திகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய்கள் நீங்க வேண்டும் என்று அது என்னென்ன நோயோ அதை நீங்க வேண்டுமென்று அடிக்கடி எண்ணும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியைப் பற்றுடன் பற்றுகின்றீர்கள்… அது அதிகமாக விளைகின்றது.
பாலிலே ஒரு துளி விஷம் பட்டால் நஞ்சாகி விடுகின்றது அதில் ஆயிரம் கூட பாலை விட்டால்… நஞ்சின் தன்மை குறைந்து பாலுக்கே அது ஊட்டசக்தி கொடுக்கின்றது.
இதைப் போன்று தான்
1.அருள் ஞானிகள் என்பவர்கள் பல ஆயிரமாயிரம் குடம் பாலைச் சம்பாதித்தவர்கள்… நஞ்சினை நீக்கும் சக்தி பெற்றவர்கள்.
2.ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் அதை ஆத்ம சுத்தி மூலம் எடுக்கப்படும் பொழுது
3.வாழ்க்கையில் வந்த நோய்களை நீக்க பல ஆயிரம் குடம் பாலின் சக்தியாக நமக்குள் சேர்க்கப்படுகின்றது.
ஆகவே நீங்கள் தியானத்தில் அந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று தியானியுங்கள்… அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று தியானியுங்கள்.
இது தான் வாழ்க்கையை தியானம் என்று சொல்வது. இதை நீங்கள் கடைப்பிடித்துப் பாருங்கள் அனைத்தும் நன்றாகும்.
இந்த உபதேசங்களை உங்களுக்குள் ஆழமாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்
1.அதை உங்கள் உயிரான ஈசனிடம் அனுப்புங்கள்
2.அவன் அந்த உணர்வுகளை வித்தாக விளையயச் செய்வான் அது உங்களுக்குள் விளைகின்றது.
3.விளைந்த நிலைகள் கொண்டு உங்களுக்கு ஆறுதலான மன பலமும் மனவளமும் பெறுவீர்கள்
4.மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் உங்களை அவனே அரவணைத்து அழைத்துச் செல்கின்றான்… தன்னுடன் அணைத்துக் கொள்கின்றான்.
இதைச் செயல்படுத்துங்கள்.

“பறக்கும் நிலை” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
சப்தரிஷிகள் தான் பூமியின் வளர்ச்சியில் மனிதக் கரு தோன்றி மனித ஞானம் பெற வழி வகுத்தனரே…!
1.இக்கலி மாறி கல்கியில் மனிதக் கரு வளரவும் மனித ஞானம் வளரவும்
2.சப்தரிஷிகளே ஏன் மீண்டும் அவர்களின் செயலைச் செயலாக்கிடக் கூடாது..? என்ற வினா எழும்பலாம்.
செடி சிறிதாக உள்ள பொழுது அதற்குகந்த ஆகாரத்தைச் செலுத்தினால் போதும். வளர வளர வளர்ச்சிக்குகந்த ஆகாரம் தேவைப்படுகிறது. வளர்ந்து முதிர்ந்த மரமாக ஆன பிறகு தன் உணவைத் தானாகவே எடுத்துக் கொள்ளும் வளர்ச்சியில் மரமுள்ளது.
சிறிய பயிர்களுக்கு நீர் ஊற்றித் தான் வளர்க்க வேண்டும். முற்றிய மரத்திற்கு அதன் உணவை அதுவே எடுத்துக் கொள்ளும்
அதைப் போன்று சப்தரிஷிகள் அவர்களின் சக்தியைப் பூமியின் கரு வளர்த்துச் செயல்படுத்த ஆரம்ப வளர்ச்சிக்கு ஆரம்ப நிலைக்குகந்த உணவு படைத்தால் போதும்.
வளர்ச்சியின் பெருக்கம் கொண்ட பிறகு வளர்ச்சிக்குகந்த உணர்வலைகளை அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.
இன்று பலவாகப் பெருகியுள்ள மனித எண்ணங்களின் ஈர்ப்பு நிலைக்கும் கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் காலங்களின் (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) எண்ண ஈர்ப்பிற்கும் பல மாற்றங்கள் உண்டு.
1.பெருகியுள்ள இன வளர்ச்சியின் அழிவு நிலை நெருங்கிவிட்டது.
2.மனித ஆத்மாக்களுக்குத் தன் உணர்வைத் தான் அறியும் பக்குவ முறைகள் எல்லாம் மாறிவிட்டது
3.உலகப் பொது எண்ணச் சுழற்சி ஈர்ப்பே நாகரீகம் என்ற உணர்வின் பேராசைப் பிடிப்பில் செயல்பட்டு விட்டது
4.ஆகவே அவ்வாறு பெருகிய மனித இனக்கரு இக்கலி மாற்றத்தில் மாறப் போகின்றது.
இந்த மாற்றக் காலத்திற்குள் சப்தரிஷிகளினால் இவ்வளவு காலங்களும் அங்கங்கு செடியாக உள்ள பயிருக்குகந்த உணவளித்த நிலையில்… அந்தப் பயிரே மரமாகித் தன் உணவை எடுத்துக் கொள்ளக்கூடிய ஞான நெறி முறைக்கு ஈர்த்துச் செல்கின்றனரப்பா…!
பஞ்சாக உள்ள எண்ணங்களை பஞ்சைப் பக்குவப்படுத்தி பதம் பிரித்து அதனதன் குணத்திற்கொப்ப நூற்பு நிலை ஏற்படுத்தி இந்தப் பஞ்சுடன் கலக்கும் அமில வண்ணத்தை ஏற்றி ஆடை நெய்கின்றோம் அல்லவா…!
அதைப் போன்று பஞ்சாக உள்ள பக்தி நெறி முறை உணர்த்தி அந்தந்தக் கால நிலைகளுக்கு ஒப்ப சப்தரிஷிகளின் உணர்வலையால் அவர்களின் உணர்வுக்குகந்த பக்குவ முறைகளை ஏற்றித் தன் ஈர்ப்பின் ஞானச் சுழற்சியுடன் சுழல விட்டுக் கொள்கின்றனர்.
சப்தரிஷிகளின் நிலையை… சப்தரிஷி தான் ஆண்டவன் என்று உணர்த்துகின்றீரே…!
1அப்பொழுது இந்தப் பூமியின் சக்திகளை எல்லாம் தந்தது அவர்கள் தானா…? என்ற வினா எழும்பலாம்.
2.இவ்வினாவிற்கு விடை ஆம் என்பது ஒன்றே தான்.
சப்தரிஷியினால் ஏற்படுத்திக் கொண்ட மண்டலங்களின் நிலையினால் தான் ஒவ்வொரு மண்டலத்தின் தொடர்பைக் கொண்டு… அதனதன் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு… அது வெளிப்படுத்தும் உணர்வு குணத்தினால் தான் மணமும்… மணத்திற்குகந்த சுவையும் வண்ணங்களும் நம் பூமியில் தோன்றின.
பல சக்தி அலைகள் நிறையப் பெற்ற நம் பூமியில் மனித இன ஞானங்கள் வளர்ந்தோட வளர்த்தியதே “பல மண்டலங்களின் ஈர்ப்பு உணர்வினால் தான்…!”
1.ஒவ்வொரு ஞானியும் அவனவன் எடுத்த உணர்வின் குண அமிலத்தை வளர்த்த ஞானத்தால் மண்டல நிலை எய்தி
2.இம்மண்டல வளர்ச்சி ஞானத்தால் இன்றைய இந்நிலை உருப்பெற்றுள்ளது.
அத்தகைய ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பல ஆத்மாக்கள் நிலை என்ன…?
இக்கலி மாறி கல்கி தோன்றி இச்சுழற்சி வட்டத்திலிருந்தே மாறி இம்மனிதக் கரு ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் பிறிதோரு மண்டல வளர்ச்சிக் கருவுடன் பிறப்பில் மனிதக் கரு வளரும் நிலையில்
1.மனிதனின் உருவ அழகுப் பொலிவு பெற்று
2.இன்று பூமியின் ஈர்ப்பில் நடக்கும் மனிதன்
3.நாளை “பறக்கும் நிலை” கொண்ட வளர்ச்சி ஞானம் பெறுகின்றான்.
சப்தரிஷியின் உணர்வின் வட்டத்திலுள்ள மனிதக் கருக்கள் எல்லாம் இந்நிலை பெறுகின்றன. இன்று சித்து நிலையில் சுழன்று ஓடும் பல ஆத்மாக்களும் இவ்வுணர்வின் கூட்டத்துடன் செல்கின்றன.
சப்தரிஷியின் உணர்வின் சுழற்சி ஈர்ப்பில் உள்ளவர்களுக்கே இந்நிலை என்றால்…!
1.சப்தரிஷியின் உணர்வுடனே சப்தரிஷியின் செயலாகச் சுழலப்பெறும் ஆத்மாக்கள்
2.இன்றெப்படி சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றனரோ அந்நிலையின் ஒளி ஞானம் பெற்று
3.ஒவ்வொரு மண்டலத்துக்குமே தன் ஈர்ப்பின் உணர்வு சக்தியைப் பரப்பித் தன் உணர்வின் இன்பத்தை உணர முடியும்.
மனித வாழ்க்கையில் வாழும் இந்தக் குறுகிய காலத்தை “இவ்வாழ்க்கை என்ற… கூட்டுக் குடும்பப் பொருள் சேர்க்கையில் தான் அந்த இன்பம் உண்டு…!” என்பது மனிதனின் எண்ணம்.
1.இந்த மனித வாழ்க்கையில் காணும் இன்பம் சிற்றின்பம் தான்.
2.பேரானந்தப் பெரு நிலை என்னும் உணர்வு ஞான வளர்ச்சி இன்பம் தானப்பா அழியா இன்பம்.
3.ஆனாலும் எவ்வின்பம் பெறவும் இந்த மனித வாழ்க்கை நிலையின் சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலையில் தான் பெற முடியும்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் “சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும்”
போகரின் காலத்திற்குப் பிறகு போகரால் வழிப்படுத்திச் சென்ற பண்டிகை தான் தீபாவளிப் பண்டிகை.
1.நம்முள் உள்ள அசுர குணங்களை அழித்து நற்குணங்களின் ஒளியைப் பெறத் தான்
2.தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் முறை உணர்த்தப்பட்டது.
ஆனால் இன்றைய எண்ண ஓட்டத்தில் அசுரனையே வணங்கும் முறைப்படுத்திச் செயல்படும் வழியில் எண்ண ஓட்டங்கள் வளர்ந்து விட்டன.
தீய குணங்களை அகற்ற வேண்டிய அந்த நந்நாளில் சமமான எண்ணத்தைச் சாந்தமுடன் புத்தாடை புனைந்து… மகிழ்ந்து… தீபமேற்றி… உற்றார் சுற்றமுடன் இனிமையுடன் கலந்துறவாட ஏற்படுத்திய தினத்தைச் “சந்தோஷமுடன் எந்த ஆத்மா எந்த வழியில் கொண்டாடுகிறது…?”
1.இன்றைய சமுதாய இனப் பிடிப்பாக “அந்த நாள்”
2.பல இன்னல்களுக்கு மனித ஆத்மாக்கள் செல்லக்கூடிய உணர்வு ஓட்டத்தில் சுழன்று கொண்டுள்ளது.
3.அன்று சித்தர்களினால் ஒவ்வொன்றையும் உணர்த்திச் சென்றதன் பொருள் வேறு
4.இன்றைய மனித ஆத்மாக்கள் செயலாக்கும் பொருள் வேறு…!
ஒவ்வொரு காலத்திலும் சப்தரிஷிகள் சில உடல்களை ஏற்று எதற்காக அவர்களின் உணர்வலைகளை வெளிப்படுத்திச் செல்கின்றனர்…?
1.படைப்பின் படைப்பையே
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக்க…
3.அவர்களின் செயல் முறை செயலாக்குகின்றதப்பா…!
ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிச் சுழலும் வளர்ச்சியில்
1.சுழற்சி நிலைக்கொப்ப வழி நிலை செல்லாமல்
2.சுழற்சியின் சக்தியைப் படைக்கப்பட்டவனிடம் சமர்ப்பிக்கும் செயலுக்குத் துணை செய்கின்றார்கள் சப்தரிஷிகள்.
நீரில் ஓட்டத்தை நாம் அதன் இச்சையில் (போக்கில்) விடாமல் அந்த நீரைத் தேக்கி வைத்து “அணையைக் கட்டி” அந்த நீரின் சக்தியைப் பல ரூபங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.
அதைப் போல்… பால்வெளி மண்டலத்தில் படர்ந்து சுழன்று நிறைந்துள்ள அமில குணங்களின் ஈர்ப்பை
1.உருவான உலகமாக்கி
2.உலகினிலே கருவைக் கொண்டு உருவாக்கி
3.உருவின் உருக்களாகப் பல உருக்களை வளரச் செய்து
4.தன் ஞானத்தின் சக்தி அலைக்குச் சக்தி எடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்
நாம் பலன் காணத்தான் பலவற்றையும் செய்கிறோம். ஒவ்வொரு மனிதனும் அவன் எண்ணத்திற்குகந்த நிறைவைக் காண நித்தமும் செயலாற்றுகின்றான்.
இருந்தாலும்… எண்ணியோ எண்ணாமலோ எல்லா ஆத்மாக்களும் தன் உணர்வில் வழி பெறுவது எதனை…?
வாழ்க்கையில் தன் உணர்வுக்குகந்த எண்ணச் செயல் நிறைவுறாதவன் விரக்தி என்ற வீண் சலிப்புடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை என்ற நிலைக்கும் தன் உணர்வைச் செயலாக்குகின்றான்.
வெறுப்பு விரக்தி என்ற நிலை மனிதனுக்கு எப்படி ஏற்படுகின்றது..?
தன் உணர்வின் எண்ணத்திற்கொப்ப எண்ணச் செயல் நிறைவுறாத தருணத்தில் சலிப்பும் சோம்பலும் விரக்தியும் உட்பட்டுத் தன் ஆத்மாவையே மாய்த்துக் கொள்ளும் வழிக்குச் செல்கின்றான்.
உணர்வாலும் உருவாலும் தன் நிலையை எண்ணுபவன்…
1.உருவ எண்ணத்தின் சுழற்சியிலேயே சிக்குண்ட வாழ்க்கை உணர்வை மாற்றி
2.எண்ணத்தால் உணரும் ஞான வழிபாட்டில் தன் உணர்வைச் செலுத்தினால்
3.விரக்தியும் சலிப்பும் அற்று விவேகம் பெறலாம்.
இவ்விவேக உணர்வலையின் ஞானத்தை உணர்ந்து வாழ்க்கையில் எண்ணும் நிறைவைப் பல ஆத்மாக்கள் பெறுகின்றனர்.
ஆனால் இன்றைய காலத்தில் மனிதனின் உணர்வலை அனைத்தையுமே அரசர்கள் ஆண்ட காலத்தில் தன் உயர்வை வெளிக்காட்ட
1.“கதைகளையும்… கற்பனைக் காவியங்களையும்…” உண்மை போல் வெளிப்படுத்தியதை…
2.அந்த மாய உணர்வுகளையே உண்மை என்ற வாழ்க்கையின் நெறியில் கலந்து விட்ட
3.அத்தகைய உணர்வலையின் சுழற்சியில் சிக்கி (SOCIAL MEDIA) உழன்று கொண்டுள்ளது.
இந்த நிலை மாறிச் சப்தரிஷிகளின் செயல் வட்டத்திற்குள் சென்றால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே அவர்களின் உணர்வின் உணவு கிடைக்கப் பெறும்.
அதன் வழியில் அவர்களுக்கும் அவர்களின் சக்தி அமிலத்தைக் கூட்டிடல் முடியும். அதன் மூலம்
1.மீண்டும் மனிதக் கரு தோன்றினால் தான்
2.மனிதக் கருவின் பிம்ப உடல் ஞானத்தை வைத்துத்தான் மீண்டும் மனித சமுதாயம் காண முடியும்.
மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும். உணவு இல்லாவிட்டால் அவர்களின் உணர்விற்கு உருவில்லை.
சப்தரிஷிகளின் செயல் அந்தந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்படுகின்றதென்றால் இந்த அடிப்படையில் தான்…!
இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் இன்றுள்ள எண்ண உருவ சுவாச மக்கள் இதே உணர்வலையில் இந்தப் பிம்பங்களை மாற்றி மீண்டும் மனித அமில ஜீவன் தோன்றினால்… இன்றுள்ள ஞானத்தைக் காட்டினாலும்… உருவ பிம்ப அழகைக் காட்டிலும்.. முற்றும் மாறுபட்ட உருவ அமைப்பு ஞான உருவங்கள் தான் அமையப் பெறும்.
அதுவும் கலி மாறி கல்கி மனித ஜீவன் கொள்ளப் பல பல ஆண்டுகள் ஆகிவிடும்.
1.காற்று மண்டலத்தில் உருளும் அமில உயிர்களுக்கெல்லாம்
2.மீண்டும் ஜீவன் கொள்ளும் காலத்திற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.
அதனால் இன்றைய ஞான சக்திகளைச் செயலாக்கக்கூடிய பிம்ப ஜீவன்களான நாம் நம் சப்தரிஷிகளின் உணர்வலையின் சக்தியுடன் ஜெபம் கொண்டால்
1.அவர்களின் செயலின் சக்திக்கு
2.நம் சக்தியும் கூடிச் செயல் கொள்ள முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒவ்வொரு நாளும் நமக்குள் தீமை சாடாதபடி… அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து அந்த உணர்வை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
அதன் வழியில் நாம் இடும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இங்கே பூமியில் படரச் செய்யப்படும் போது
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளை எல்லாம் அடக்க முடியும்…
2.நாம் வாழும் பகுதியிலிருந்து அவைகளை அகலச் செய்யவும் முடியும்.
அதே சமயத்தில் கடந்த காலத்தில் மனிதனுக்கு மனிதன் அரசின் நிலைகள் கொண்டு மத பேதம் இன பேதம் என்ற நிலைகளில் அழித்திட்ட உணர்வுகள் நம் முன் படர்ந்து கொண்டிருந்தாலும்
1.அதனைச் செயலற்றதாக்க…
2.யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம்
3.நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை மூச்சலைகளாக வெளியிடுவீர்கள் என்றால்
4.கடந்த காலத்தில் வெளியிட்ட மனிதனுக்கு மனிதன் பழி தீர்க்கும் உணர்வுகள் இங்கே நிற்காது… அவைகளும் நகர்ந்து சென்றுவிடும்.
மேலும் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும் போது… உங்களிடமிருந்து வெளிப்படும் அந்த உணர்வின் எண்ணங்கள் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு… இந்தக் காற்று மண்டலத்தில் அது ஊடுருவி… அதனின் வலுவாற்றல் கொண்டு தீமையை விளைவிக்கும் தீய உணர்வின் தன்மைகளை எல்லாம் “கடலுக்கே துரத்தியடிக்க முடியும்…”
ஆகவே… தவறே செய்யவில்லை என்றாலும்… ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளாக இருந்தாலும்… மத வெறியால் அவர்களை அழித்திடும் நோக்கத்தில் இரக்கமற்ற செயலாகச் செயல்படும் அந்த உணர்வுகளை நீக்கிட அருள் ஞானிகளின் உணர்வை இந்த உலகம் முழுவதும் நீங்கள் பரவச் செய்யுங்கள்.
அப்படிப் பரவச் செய்தால் தீமையான உணர்வுகளை மற்றவர்கள் நுகரும் தன்மைக்கே இடம் கொடுக்காது “மனிதர்கள் வாழும் இடத்தை விட்டு நகர்ந்து செல்லச் செய்யலாம்…”
இவ்வாறு அதனின் செயலாக்கத்தைக் குறைத்து
1.மக்களுக்குள் அறியாது வரும் தீமையான உணர்வுகளை எண்ண விடாது தடுக்க
2.உங்கள் உணர்வுகள் பயன்பட வேண்டும் என்பதற்குத் தான்
2.இதை உங்களுக்குள் உபதேசிப்பதும்… தியானத்தால் வளர்க்கச் சொல்வதும் (ஞானகுரு).
காரணம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வின் அலையாக யாம் பதிவு செய்யும் போது…
1.உங்கள் நினைவின் ஆற்றலைக் கண்ணுக்குக் கொண்டு வந்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கினால்
3.கண்ணுக்கு எட்டாத தூரத்தில் பல இலட்சம் மைல்களுக்கு அந்தப் பக்கம் இருந்தாலும்
4.துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளி வரும் அந்த உணர்வுகளை எளிதில் கவர முடியும்.
ஆண்டென்னாவின் பவரைக் கூட்டிக் கொண்டு விஞ்ஞான அறிவால் சேடிலைட் டி.வி. என்று தெளிவாக எப்படிக் காணுகின்றனரோ இதைப் போல் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் செலுத்தி ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
பதிவு செய்த அருள் ஞானியின் உணர்வை நினைவுக்குக் கொண்டு வந்து அருள் உணர்வுகளை நீங்கள் பெற்று வாழ்க்கையில் வரும் அறியாத இருளை நீக்கி விட்டு… மெய்ப் பொருள் காணும் நிலையைப் பெற வேண்டும்.
இதன் மூலம்… தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக மகிழ்ந்து வாழும் ஆற்றலாகப் பெறுவீர்கள்… எப்படியும் அதை உங்களுக்குள் பெறச் செய்ய வேண்டும்… என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நமக்குத் தெரியாமலே நம் உடலில் கோபமும் வெறுப்பும் அதிகமாகச் சேர்ந்து விட்டது என்றால் எந்த வேலையைச் செய்தாலும் வெறுப்பாகவே வரும்.
கோபம் வரும் சமயங்களில்… குடும்பத்திலோ அல்லது தொழிலிலோ யாரைப் பார்த்தாலும்
1.ஏதாவது வேலை சொல்லிக் கொண்டிருக்கும்போது திருப்பிக் கேட்டால் உடனே கோபம் வரும்
2.இப்படி அடிக்கடி செய்தோம் என்றால் இரத்தக் கொதிப்பாக மாறும்.
அதே சமயத்தில் இந்தக் கோபமும் வெறுப்பும் வரப்படும் போது ஒருவர் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து… அவர்கள் சிரிப்பதைப் பார்த்தால் உடனே அது எதிர்நிலையாகும்.
எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்…? என்று அடிக்கடி அதைப் பார்த்து அவர்கள் சந்தோஷத்தைக் கண்டு வெறுத்தோம் என்றால் நம் உடலில் சர்க்கரைச் சத்து உண்டாகும். இந்த இனிப்பு பிரிந்துவிடும்.
1.அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்ற அந்த உணர்வை எடுத்து
2.எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்…? என்று இந்த வெறுப்பு வரப்படும் போது
3.மற்ற உணர்வுகள் இங்கே சேர்த்தவுடனே சர்க்கரை பிரிந்துவிடும்.
பொதுவாக… நமக்குள் ஒரு மகிழ்ச்சியை ஊட்டுவதும் ஒரு இயக்கச் சக்தியாக இருக்கக்கூடியதற்கு அந்த (சந்தோஷம்) உணர்வு வந்து தான் சுவை கொடுக்கும்.
ஆனால் மேலே சொன்னபடி நாம் வெறுக்கும் போது
1.அந்தச் சுவை பிரிந்து சென்றால் சர்க்கரைச் சத்து வந்துவிடும்.
2.இந்தக் காரமும் அதுவும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இரண்டும் சண்டை போடும்.
3.சண்டை போடுவதற்கே நேரம் பத்தாது.
இது பெருகினால் உடலில் நிச்சயம் இரத்தக் கொதிப்பு வரும். சர்க்கரைச் சத்துடன் இந்த இரத்தக் கொதிப்பும் சேர்ந்தால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது இருதயம் பலவீனமாகும்.
சண்டை போட்டோம் என்றால் இருதயத்தில் இரத்தம் செல்லும் வால்வுகள் வீக்கமாகி விடும். அப்புறம் அது எடுத்துத் தள்ள முடியாதபடி அந்த வால்வுகள் கெட்டுப் போகும்… இருதய சம்பந்தப்பட்ட நோய் வரும்.
நாம் தவறு செய்யாமலே இப்படி எல்லாம் வரும்.
பெண்கள் நிறையப் பேருக்கு இருதய வலி உண்டு…! நெஞ்சு வலி நெஞ்சு வலி என்று இருதயங்களில் இரத்த வால்வுகளில் பலவீனம் அடையப்படும் போது அது சரியாக வேலை செய்யாது.
1.டாக்டரிடம் சென்றால் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பார்
2.படி மேல் ஏறினால் மூச்சுத் திணறலாகும்… அது ஆகும்… இது ஆகும்…! என்று பயத்தை ஊட்டிவிடுவார்கள்.
இந்த எண்ணங்களைக் கொஞ்சம் வேகமாக எண்ணினால் “இப்படி ஆகிவிட்டதே… பிள்ளை குட்டிகள் இருக்கின்றதே… தொழில் இருக்கிறதே…! என்று வேதனையை வளர்த்துக் கொள்கிறோம். நாம் தவறு செய்யாமலே நமக்குள் இத்தகைய எண்ணங்கள் வந்து விடுகிறது.
டாக்டர்கள் உடலை முழுமையாகப் பரிசீலனை செய்த பின்பு… ஹார்ட் அட்டாக் வரலாம்… மூளையைப் பாதிக்கும்… கை கால் வராது…! என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போவார்கள். இந்தெந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் இல்லை என்றால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள்.
எல்லாவற்றையும் சொன்னவுடன் இன்னும் கொஞ்சம் வேகமாக அதை வளர்க்க ஆரம்பித்துவிடுவோம்.
உதாரணமாக இது எதுவுமே தெரியவில்லை… டாக்டரிடம் செல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். உடலில் மேல் வலி..! கிறு…கிறு… இருக்கிறது என்று சொல்லி சுக்கையோ மிளகையோ எதையாவது எடுத்துச் சாப்பிட்டு விட்டு ஒரு சிலர் பேசாமல் இருப்பார்கள்.
ஆனால் டாக்டரிடம் சென்று இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்த பின் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது… படி மீது ஏறினால் இன்னும் பாதிக்கும் என்று சொன்னால் போதும்.
1.முதலில் சிறிதளவு அதிகமாக இருந்த இரத்த அழுத்தத்தை “இரண்டு பங்காக்கி விடும்…”
2.200… 250க்கு மேல் சென்றுவிடும்… அதற்குப் பின் அவர்கள் சொல்லும் மருத்துவத்தைச் செய்யாமல் இருக்க முடியாது.
3.நம் எண்ணங்கள் பலவீனம் அடைந்தால் இது எல்லாம் ஆகத்தான் செய்யும்.
இப்படித்தான் நம்மை அறியாமல் நம் ஆன்மாவில் எத்தனையோ அழுக்குகள் சேர்கிறது. இதை நாம் துடைக்க வேண்டுமல்லவா… துடைப்பதற்கு என்ன வழி வைத்திருக்கின்றோம்…?


ஈசனுக்குச் செய்யும் தொண்டு
இன்றைய உலக சூழ்நிலையில் மனிதனல்லாது வேறு ஒரு சரீரத்தை உருவாக்கும் செயல் நமக்கு வேண்டாம். ஆகையினால் யாம் உபதேசிப்பதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்து சொர்க்க பூமியான இந்த மனித உடல் கிடைத்த பின் அசுத்த பூமியாக இதை மாற்ற வேண்டாம்.
சொர்க்க பூமியான இந்த மனித சரீரத்தை நாம் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்… சொர்க்கலோகமாக நாம் மாற்றலாம். உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியாக மாற்றும் பொழுது இந்த உடலை விட்டுச் செல்லும் போது ஒளியின் தன்மை பெறலாம்.
1.தியானம் எடுத்த அனைவருக்கும் இருட்டிலே கண்களை விழித்துப் பார்த்தால்
2.நம் உடலில் இருந்து பளீர்…ர்… பளீர்…ர்… என்று வெளிச்சங்ள் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
3.நாம் எந்த அளவிற்குத் தியானம் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் சக்தி நமக்குள் வளர்கின்றது… ஒவ்வொருவரும் இதை உணர முடியும்
சுலபத்தில் கிடைக்கிறது என்று அலட்சியப்படுத்தி விட வேண்டாம்.
எத்தனையோ கடினத்திற்கு பின் தான் இது வருகின்றது. புதுத் துணிகளை நாம் எடுத்து அதைச் சட்டையாகத் தைக்க தெரியாதபடி “நானும் தைப்பேன்” என்று கத்திரித்து வீணாக்கி விடாதபடி நாம் செயல்பட வேண்டும். அதாவது நாம் பயன்படும் நிலைகளுக்கு நம் உணர்வின் ஆற்றலை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.நீங்கள் அனைவருமே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
2.அவர் அருள் துணை கொண்டு மெய்ஞானிகள் அருள் ஒளியைப் பெற்று
3.நம்மை அறியாது இருள் சூழச் செய்யும் இருளை நீக்கி இந்த ஒளியின் நிலைகள் வழியறிந்து செயல்படும் ஆற்றலை நாம் பெற்று
4.நம் பேச்சு மூச்சும் நம்மைப் பார்ப்போர் அனைவருக்கும் நன்மை பயக்கட்டும்.
5.அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது நமக்குள் நல்ல உணர்வாகச் சென்று ஒளியின் சுடராகச் செல்லட்டும்.
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நேரமும் வீண் விரயமாக்காதபடி நம்மை அறியாது இருளச் செய்து கொண்டிருக்கும் சில துன்பங்களை ஊட்டும் உணர்வுகளை நமக்குள் புகாதபடி அந்த உணர்வுகளைத் தடைப்படுத்த வேண்டும்.
அவ்வாறு உட்புகந்தாலும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கடுமைப்படுத்தி அந்த அசுத்தங்களை நீக்கி உங்கள் உடலுக்குள் புனித சக்தியாக மாற்றுங்கள். ஏனென்றால்
1.நம்மை உருவாக்கிய ஈசனின் வீடு இந்த உடல் அவனுடைய ஆலயம் அது.
2.ஆகையினால் அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்
3.எந்த அளவிற்கு நாம் சுத்தப்படுத்துகின்றோமோ “அதற்குண்டான கூலி” கிடைக்கும்.
நமக்குள் வீற்றிருந்து நம்மை உருவாக்கி நல்ல நிலைகளை ஊட்டி நம்மை இயக்கச் செய்யும் அந்த ஈசனுக்குச் செய்யும் தொண்டாகக் கருதி நாம் செயல்பட வேண்டும்.
உங்களுக்குள் யாரும் துன்பத்தை ஊட்டும் எண்ணங்களை உருவாக்கினாலும்
1.அது எனக்கல்ல… அது என்னைச் சாராது.
2.அந்த ஈசனின் அருள் ஒளியை நான் பெறுவேன்
3.அவன் எனக்குள் இருக்க… நல்ல உணர்வை அவன் எனக்கு ஊட்டுவான்
4.”அவன் வழிகளிலே நான் செல்வேன்” என்று இந்த எண்ணங்களை நீங்கள் மாற்றிச் செயல்படுத்திப் பாருங்கள்.
உங்களுக்குள் தெளிவான நிலையாக வரும்.

“தானாக உணர்ந்து செயல்படும் நிலை” இன்றுள்ள மனிதர்களுக்குக் குறைவுபட்டு விட்டது
அறியாதவர்க்கு அரிய எண்ணத்துடனே அறிந்து வாழ வேண்டும் என்ற நிலையை எண்ணிடாமலே வாழ்கின்றார்கள். அறிந்தவர்களோ அந்தமும் ஆதியும் அறிய வேண்டும் என்ற அதிக ஆசையுடன் வாழ்கிறார்கள்.
கற்றவர் கல்லாதவர் அறிந்தவர் அறியாதவர் ஏழை செல்வந்தன் இப்படிப் பல தரப்புள்ள மேடு பள்ளம் கொண்ட உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொண்டு இவ்வுலகமே சுழல்கின்றது.
கற்றவருக்குத் தான் கற்ற வித்தையும் கர்வமும் கல்லாதவருக்குத் தான் கல்லாத நிலை கொண்டு தாழ்வு எண்ணமும் தன் மனதிலுள்ளேயே உலக மக்கள் ஏற்றம் தாழ்வு என்ற இரு நிலை படைத்த மாய ரூபத்தையே மனதினில் எல்லாம் கலக்கவிட்டு வாழ்கின்றார்கள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற உண்மையைத் திருவள்ளுவர் ஆதி காலத்திலேயே உணர்த்தி உள்ளார். இன்றுள்ள நம் மக்களின் மனதில் ஏட்டுப் படிப்பின் எண்ணத்துடன் தான் எண்ணி வாழ்கின்றார்கள்.
ஏட்டுப் படிப்பிற்கு பதவி பணம் என்ற போர்வையைப் போர்த்தி உள்ளதால் அந்நிலைக்காக ஏங்குபவர் பலர் உள்ளனர். படிப்பும் பட்டமும் இன்று அளித்த மாய ரூபங்கள் தான் இவை.
1.தன் எண்ணத்தினால் தன் ஜெபத்தினால் தன்னுள்ளேயே உலக உண்மைகளை ஈர்க்கும் சக்தியைப் பெற்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு
2.எந்தப் பள்ளியில் படித்து யாரால் பட்டமளிக்கப்பட்டதப்பா…?
3.அன்று கம்பர் எழுதிய கவிதை எல்லாம் எந்தப் பட்டிமன்றத்தில் ஏற்று படிக்கப்பட்டதப்பா…?
கம்பரும் திருவள்ளுவரும் வியாசரும் வால்மீகியும் சேக்ஸ்பியரும் இப்படி எண்ணிலடங்காப் பல ஞானிகளும் ரிஷிகளும் எழுதிய நூல்கள் எல்லாம் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று எழுதினார்களப்பா…?
அன்று நமக்குத் தம் சக்தியை உபயோகப்படுத்தி உன்னத நூல்களை அவர்கள் அளித்த நிலை கொண்டு தான் இன்றும் பல போதனா மொழிகளில் பள்ளியிலும் கல்லூரியிலும் சொல்லி வருகிறார்கள்.
அப்படிப்பைக் குழந்தைகள் நிலைக்கு இன்றுள்ள உபாத்தியாயார்கள் மதிப்பெண்ணும் தருகின்றார்கள். இன்றுள்ள இக்கலியுகமே தானாக உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றி வருகிறது.
உலகில் ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய சக்தி நிலை தோன்றிக் கொண்டே வரும் பொழுது இம்மமனிதனின் எண்ணத்தில் மட்டும்தான்… தான் உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றிக் கொண்டு பெரும் பேராசையின் நிலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு வாழுகின்றான் இன்றுள்ள மனிதன்.
1.மனிதர்களின் மனம் எல்லாம் ஏட்டுப் படிப்புடனும்
2.பிறர் சொல்லிய உண்மைகளை ஆராய்ந்து பார்க்கும் நிலையுடனும்
3.அந்த நிலையைக் கொண்டு விவாத நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.
4.இன்று மனிதர்கள் உயிர் வாழும் நிலையே செயற்கையினால் தான் நடந்து வருகின்றது.
ஏன் அச்சூரிய சக்தியின் நிலை ஒரே நிலையில் உள்ள பொழுது நம் உணர்வின் நிலையும் உயிரணுவின் நிலையும் மாறுபட்டுள்ளன என்று மனநிலையில் நீங்கள் எல்லோரும் எண்ணிடலாம்.
நாம் உண்ணும் உணவிலும் தாவரங்களிலும் அதனதன் தன்மை கொண்டு அவைகள் உற்பத்தியாக இன்றுள்ள பூமி நிலை இல்லையப்பா.
இன்று இப்பூமியில் வீசிடும் காற்றே பெரும் விஷத்துடன் வீசும் போது
1.அந்தத் தாவரங்கள் எந்த நிலை கொண்டு வளருமப்பா…?
2.தாவரங்கள் மட்டுமல்ல இன்று வளரும் குழந்தைகளின் நிலையும் எப்படியப்பா இருந்திடும்…?
விஷமான காற்றைச் சுவாசிக்கும் மனிதனின் மனநிலையும்… தாவர நிலைக்கும்… இன்றைய மனிதர்களின் ஆராய்ச்சியில் வந்த “பல வகை மருந்துகளின் நிலை கொண்டு தான்” மனிதனும் தாவரங்களும் வாழ்கின்றதப்பா.
பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் எந்த நிலை கொண்டு வீசுகின்றதோ அந்த நிலை கொண்டு தான் அச்சூரியனின் ஒளி காற்றில் பட்டவுடன் தாவரங்களின் தன்மையும் வளரும் நிலையில் உள்ளது.
இக்காற்றையே நம் செயற்கைக்காக நம்முடைய எண்ணத்தில் எண்ணும் சுகபோகங்களுக்காக நாம் உற்பத்தி செய்திடும் பல செயற்கையின் தன்மையினால் இப்பூமியிலிருந்து எடுத்த பல உன்னதத் திரவியங்களை (பெட்ரோல்) நம் செயற்கைக்காக உபயோகப்படுத்தி… அதை விஷமாக இக்காற்றிலே கலக்க விட்டு அவ்விஷத்தன்மையுள்ள காற்றையே இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் சுவாசிக்கும் நிலையினால் தான்… இன்றைய மனிதர்களின் நிலையும் மற்ற ஜீவராசிகளின் நிலையும் உள்ளதப்பா.
இப்பூமியில் விளைந்திடும் பலவித நறுமணங்கள் கொண்ட நல் மணத்தை நம் சுவாச நிலைக்கு நாம் ஏற்றுக் கொள்ளும் நிலையை நாம் மாற்றிக் கொண்டு வாழ்கின்றோம்.
பல வகைத் தாவரங்களிலிருந்து நம் உடலுக்கும் மனதிற்கும் எந்தெந்த நிலையில் அவை நன்மை அளிக்கின்றன…? அதனால் நம் உடலுக்கும் எண்ணத்திற்கும் எந்த நிலை பெறுகிறது…? என்று உணர்ந்து
1.இன்று பல தாவரங்களை மரம் செடி கொடிகளை நம் தேவைக்காக அழித்து வாழ்ந்திடும் நாம் ஒன்றை அழிக்கும் பொழுது
2.இரண்டை உற்பத்தி செய்யும் நிலைக்கு ஏனப்பா நாம் வரக்கூடாது…?
தாவரங்களினால் தான் இக்காற்றி கலந்துள்ள விஷத் தன்மையை ஈர்த்து இக்காற்றைச் சுத்தமாக்கும் நிலை உள்ளதப்பா. இத்தத் தாவரங்களின் உற்பத்தியை உணர்ந்து ஒவ்வொரு மனிதரும் இச்செயற்கையின் சொரூபத்திற்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாமல் இயற்கையைப் போற்றி வணங்கிடுங்களப்பா.
இயற்கையின் உன்னத அழகைக் கண்டு சுவாசித்து மகிழ்ந்தாலே நம் உயிரணுவிற்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றதப்பா.
ஒவ்வொரு மனிதரும் தன் நிலைக்கும் அச்சக்தியின் நிலை உண்டு. தன்னாலும் இயற்கையின் உண்மையை உணர்ந்து நடந்திட முடியும். தானும் ஒரு திருவள்ளுவராகவும் வான்மீகியாகவும் இயேசு பிரானாகவும் இப்படிப் பல நிலை கொண்ட ஞானிகளைப் போல் தானும் ஆகலாம் என்ற உண்மையை உணர்ந்து ஒன்றிலிருந்து ஒன்றைக் கூட்டி வாழ்ந்திடுங்கள்.
இருந்த உண்மையையே விவாதத்திற்கு ஏற்கும் தன்மையை மாற்றி
1.தான் கற்கும் கல்வி தன் உணர்வினால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஈர்த்து
2.இவ்வுலக நன்மைக்காக இவ்வுயிரணுக்களின் நன்மைக்காக இவ்விஷமான கலியின் கடைசி நிலையை மாற்றி
3.கல்கி எனும் புத்தொளிர் கொண்ட இயற்கைத் தேவனின் இயற்கைச் சக்தியைப் பெற்றிட
4.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம்மையே நாம் அச்சக்திக்காக அடிபணிந்து வாழ்ந்திடலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சந்தர்ப்பவசத்தால் உடலில் சேர்த்துக் கொண்ட தீய உணர்வின் தன்மைகளால் மனிதனுக்குச் சில கடுமையான நோய்கள் வருகின்றது.
சாமியார்களோ அல்லது மந்திரவாதிகளோ மந்திரத்தால் மந்திரத்து சில வேலைகளைச் செய்து அந்த நோயினால் ஏற்பட்ட வலிகளை வேண்டும் என்றால் போக்கலாம். ஆனால் உடலில் விளைந்த நோய்களை மாற்ற முடியாது.
அதே போல் தான் டாக்டர்களால் மருந்து கொடுத்து வேதனைகளை நீக்கினாலும் உடலில் விளைந்த தீய விளைவுகளிலிருந்து மீள முடியாது. காரணம்… மீள வேண்டும் என்று சொன்னாலும் உடலுடன்… உணர்வுடன்… அது கலந்திருக்கும்.
நோயிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால்
1.நம் நினைவின் எண்ண அலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர வேண்டும்.
ஒரு பன்றி சாக்கடைக்குள் அது நாற்றமாக இருந்தாலும் அதைப் பிளந்துவிட்டு அதில் உள்ள நல்ல பருப்பினை (உணவுப் பொருளை) எப்படி எடுக்கின்றதோ அதைப் போல்
1.சாக்கடையாக இருக்கும் இன்றைய காற்று மண்டலத்திலிருந்து
2.அதற்குள் இருக்கும் அருள் ஞானிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை நாம் எண்ணி எடுக்க வேண்டும்.
3.அதை எடுத்து நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
நீங்கள் எண்ணும் போது அந்த ஞானிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசமும் கூட்டுத் தியானமும். கூட்டுத் தியானத்தில் மகரிஷிகள் உணர்த்திய இந்த ஆற்றல் மிக்க நினைவலைகளை உங்கள் உடலில் ஆழமாகப் பதியச் செய்கிறோம் (ஞானகுரு).
பதியச் செய்ததை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கும் போது இந்தக் காற்றிலிருக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.
உங்கள் வீட்டில் இருக்கும் டி.வி.யில் சாதாரண ஆண்டென்னா மூலம் பக்கத்தில் (LOCAL) ஒளி பரப்பாவதை எடுக்க முடியும்.
அதே சமயத்தில் சேடிலைட்டில் அனுப்பக்கூடியதை… அமெரிக்காவில் ஒளி பரப்பு செய்கிறார்கள் என்றால் அதை எடுக்கச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா தேவைப்படுகிறது. அதைக் கொண்டு தான் அங்கிருந்து ஒளிபரப்பு செய்வதை இங்கே தெளிவாகக் காண முடிகின்றது.
அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் உணர்வலைகளை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியை உங்கள் எண்ணத்தால் எண்ணி ஏங்க வைக்கின்றோம்.
இதைக் கேட்டுணரும் போது
1.இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள எலும்புகளுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
2.அப்படிப் பதிவான நிலைகள் கொண்டு கூட்டாகத் தியானிக்கும் போது அந்தச் சக்திகளைப் பெற முடியும்.
சாதாரணமாக ஒரு நூலினை வைத்து ஒரு பொருளைக் கட்டித் தூக்கினால் நூல் அறுந்துவிடும். பல நூல்களை ஒன்றாகத் திரித்தால் தான் அந்தப் பொருளைத் தூக்க முடியும்.
அது போல் தான் தனிப்பட்ட மனிதன் ஒருவர் அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுக்க வேண்டும் என்றால் சாதாரணமாக அது முடியாது.
1.காரணம்… அவர்கள் பிறவா நிலை பெற்று விண்ணுலகம் சென்றவர்கள்
2.பிறப்பின் மேல் ஆசை வைத்த நாம் அந்த உணர்வை அணுகினால் அது நம்மை அறுத்துவிடும்… கிட்டத்திலே நெருங்கவிடாது.
இருப்பினும் அந்த அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண உணர்வின் வேட்கையில் உங்கள் அனைவருக்குள்ளும் ஆழமாக அதைப் பதிவு செய்கின்றோம்.
இங்கே கூட்டுத் தியானத்தில் அதை உபதேசிக்கும் போது
1.அந்த அருள் ஞானிகளின் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு
2.உங்கள் கவனங்கள் அனைத்தையும் ஒருக்கச் சேர்த்து ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றோம்.
3.எல்லோரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் போது வலுவாகிறது
4.அந்த வலு கொண்டு காற்றிலே மறைந்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் சக்தியை
5.நாம் அமர்ந்திருக்கும் (தியானிக்கும்) இடங்களுக்கு அழைத்து வருகின்றோம்.
ஆக பரவலாக அது வரும் நிலைகள் கொண்டு இங்கே குவியப்படும் போது… உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்களை எண்ணி நான் தியானிக்கின்றேன்.
அது சமயம் குரு துணை கொண்டு உங்களால் அந்த மகா ஞானிகளின் பேராற்றல்மிக்க சக்திகளை உங்களால் பெற முடிகிறது. உங்கள் உடலில் அது சக்திவாய்ந்ததாக மாறுகிறது.
துன்பமோ துயரமோ நோயோ எதுவாக இருந்தாலும் அது வலு இழக்கிறது. உங்கள் ஆன்மாவும் மனமும் தூய்மை ஆகிறது. உயிரான்மா ஒளியாக மாறுகிறது.
மகா ஞானிகளின் அருகாமையை உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம் (ஞானகுரு). இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையுங்கள்
அருள் ஞானிகள் காட்டியதை… உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டச் செய்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றோம். அந்த உணர்வின் துணை கொண்டு உங்கள் எண்ணத்தால் பதிவு செய்த நிலைகளை
1.அந்த மகா ஞானியின் உணர்வலைகள்
2.நீங்கள் எண்ணிய உடனே அது கிடைக்கும்.
அந்த உணர்வின் சத்து கொண்டு உங்களை அறியாது வந்து தீமைகளை அகற்றுவதற்கும் கூர்மை அவதாரம் போன்று மனித வாழ்க்கையில் வரும் நிலையை அகற்றுவதற்கும் விண்ணை நோக்கி ஏங்குங்கள். அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றுங்கள்..
மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் கண்டுணர்ந்த இரக்கத்தால் ஈகையால் பரிவால் பண்பால் நாம் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆழப் பதிந்து அதைப் பற்றிடாதபடி… பற்றற்தாக ஆக்கிட அந்த மெய் ஞானி உணர்வுகளைப் பற்றிக் கொள்ளுங்கள்.
தீமைகளைக் கண்டாலும் அந்த அருள் ஞானி அதைச் சுட்டுப் பொசுக்கியது போல நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடல் வேண்டும்.
மெய் உணர்வின் தன்மை வளர்ப்பதற்காக அவன் சுட்டிக்காட்டிய அந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் தான் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்வது.
1.இதை ஊழ் வினையாக்கி வினைக்கு நாயகனாக உங்கள் எண்ணத்தின் வலு கொண்டு எடுப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையலாம்.
அவனின் உணர்வை நீங்கள் பற்றி அவனுடன் இணைந்த நிலைகள் கொண்டு ஒளியின் சுடராக நாமும் வாழ முடியும் என்பதற்குத் தான் இதை உபதேசிப்பது.
1.இந்த மனித வாழ்க்கையில் எந்த ஈகை கொண்டு இருந்தாலும் அந்தப் பற்று உனக்குள் ஊழ்வினையாக விளைந்திடாது
2.அருள் ஞானிகள் உணர்வுகள் கூர்மையாக உனக்குள் விளைந்து
3.அவன் தீமையை அகற்றியது போல உன்னுடைய உணர்வின் எண்ணங்கள் ஒவ்வொரு நொடியும் உன்னைக் காத்திடும் நிலையாக
4.அந்த மகரிஷிகளை எண்ணும் பொழுது என்ன செய்ய வேண்டும்…?
5.அருள் உணர்வினை எவ்வாறு பற்ற வேண்டும் என்று குருநாதர் எனக்குக் காட்டினார்
ஆகவே குருநாதர் என்னை எதைப் பற்றும் படி செய்தாரோ அதை நீங்களும் பற்ற முடியும்.
உங்கள் வாழ்க்கையில் நன்மை செய்யும் நிலையாக பிறருடைய தீமைகளைக் கூர்மையாக எண்ணி அதன் உண்மைகளை அறிந்து தீமைகளை நீக்கினாலும்
1.உங்களுக்குள் அந்தத் தீமை விளையாதபடி காத்திட
2.அந்த அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பற்றிடவும் அந்த பற்றுடனே வாழ்ந்திடஅ செய்திடவும்
3.எமது குருநாதர் காட்டிய நிலையினை நீங்களும் பெற வேண்டும் என்று இதைச் செய்கின்றேன்
மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும் அறியாது சேர்ந்த தீமைகள் நோய்கள் அனைத்தும் அகன்று மகரிஷியின் அருள் வட்டத்தில் என்றென்றும் நாங்கள் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற வேண்டும்.
இவ்வாறு அடிக்கடி கூர்மையாக எண்ணினால் அந்த உணர்வின் சத்து நமக்குள் வந்து வேதனைப்பட்ட உணர்வுகளைப் பற்றற்றதாக ஆக்கச் செய்யும். அருள் ஞானி உணர்வைப் பற்றிக் கொண்டால் நமது வாழ்க்கையும் அடுத்து பிறவா நிலை அடைகின்றது.
1.இங்கே பற்றிக் கொண்டால் புவிக்குள் தான் செல்கிறோம்…
2.அங்கே அருள் ஞானிகளைப் பற்றிக் கொண்டால் அங்கே செல்கிறோம்.
அது தான் பிள்ளையாருக்கு முன் கேள்விக்குறி போட்டுக் காட்டி இந்த வாழ்க்கையில் கண்டுணர்ந்த
1.நஞ்சின் நிலைகளில் சிக்குன்டு இதைப் பற்றி மீண்டும் உடலுக்குச் செல்கின்றாயா…?
2.அல்லது இதைப் பற்றற்றதாக ஆக்கி அருள் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி அங்கே செல்கின்றாயா…? என்று காட்டினார்கள்.
காரணம் நாம் எதை எண்ணுகின்றோமோ நமக்குள் ஆண்டு கொண்டிருப்பது உயிரே. எண்ணியதை ஓ… என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தினை உடலாக்குவது உயிரே.
எந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து விளைய வைத்தோமோ உடலை விட்டு அகன்ற பின்
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அவன் உருவாக்கிய பிள்ளையாக
2.ஒளியின் சுடராக நாம் மகரிஷியுடன் இணைந்து வாழ முடியும்… வேகாநிலை அடைய முடியும்

நம்மை நாமே சரியான பாதையில் பக்குவப்படுத்திக் கொள்ளும் ஞான வழி
ஆசையிலிருந்து வருவது தான் பிறப்பும் வளர்ப்பும் வாழ்வும். அவ்ஆசையிலிருந்தே தான் வேதனையும் வருகின்றது. ஆசையின் உந்தலுக்கு நாம் அடிபணியலாகாது.
1.ஆசையில் எவன் ஒருவன் அவ்வாசைக்கே அடிமையாகிடாமல் நிறைவு பெற்று வாழ்கிறானோ
2.அந்த வாழ்க்கை தான் நிறைவு பெற்ற வாழ்க்கை… நிர்மலமான வாழ்க்கை…!
வாழ்க்கையின் முதல் பாகம் என்னும் அப்பிறப்பின் போதே ஆசையினால் தான் அந்த ஆவி அவ்வுயிரணு அத்தாயின் கருவிற்கே வருகின்றது.
அக்கருவின் நிலையில் வளரும் நிலை கொண்டே அக்கருவிற்கு எல்லாச் சுவாச நிலையும் அறிந்து ஆசை நிலையும் உள்ளது. ஆசை நிலையினால் தான் அக்கரு அத்தாயின் வயிற்றிலேயே… அத்தாயின் எண்ணத்தின் மூலமாகத் தன் சுவாச நிலைக்கு உகந்த… தன் ஆசையை அத்தாயின் மூலமாக எடுத்துக் கொள்கிறது.
கருவில் உள்ள நிலையிலேயே அதனால் தன் நிலைக்கு உகந்தபடி அதன் ஆசைக்கு ஏற்ற எல்லா நிலையையும் எடுத்துக் கொள்ள அத்தாயின் சுவாச நிலைக்கும் உந்தப்படுகின்றது.
ஒவ்வொரு பெண்ணிற்கும்
1.தாய்மை நிலை அடைவதற்கு முதலிலும்
2.தாய்மை நிலை அடைந்திருக்கும் பொழுதும்
3.தாயான பின்னும் அப் பெண்ணின் மனநிலை மாறுபட்டு வருகிறது.
4.அப் பெண்ணின் பிறவியில் வந்த எண்ண அலைகளும்
5.தாய்மைப் பேறில் வந்த எண்ண அலைகளும்
6.அத்தாயான பிறகு வரும் எண்ண அலைகளும் மாறுபடுகின்றன.
ஒவ்வொரு தாய்மைப் பேறிலும் சூலுண்ட நிலையில் அத்தாயின் வயிற்றில் உள்ள கருவிற்கு கருவின் எண்ணத்திற்கு தாய் உந்தப்படுவதால்… அது தாயின் சொல் சுவை இவை எல்லாம் மாறுபடுகின்றன.
அக்கருவின் ஆசை நிலையை அக்கரு ஏற்றுக் கொள்வதால் அத் தாயின் நிலைக்கும் சில ஆசை நிலைகள் உந்தப்படுகின்றன.
அக்குழந்தை பிறந்த பிறகு… எப்படி அக்கரு தாய் வயிற்றில் இருக்கும் பொழுது தன் ஆசையைத் தாயின் மூலமாகப் பெற்றுக் கொண்டதோ… அதைப்போல தாய் அப்பிள்ளை பிறந்த பிறகு அக்குழந்தைக்கு எந்த நிலை கொண்டு எந்த எண்ணமுடன் தாய்ப்பால் தந்து வளர்க்கின்றாளோ… அந்த நிலையெல்லாம் அக்குழந்தையின் எண்ணத்திற்கும் ஊட்டப்படுகிறது.
1.தாயின் எண்ண நிலை அக்குழந்தைக்குப் பால் தரும் பொழுது எந்தெந்த நிலையில் செல்கின்றதோ
2.அந்த ஆசை நிலைகளை எல்லாம் அக்குழந்தைக்கும் தானாகவே வளர்கிறது.
சூலுண்ட நிலையிலும் அத்தாயின் எண்ணங்களும் ஆசை நிலைகளும் வேதனை நிலைகளும் அக்கருவிலேயே கருவின் எண்ண நிலையுடன் அத்தாயின் எண்ண நிலைகளும் கலந்து விடுகின்றன.
தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பு இதுதான்…!
தாய் என்பவள் இந்த நிலை கொண்டு தான் பிள்ளைகளின் நிலைக்கு ஒத்துச் செல்வதெல்லாம். தன் சுவாச நிலைக்கு ஏற்ற உடலைத்தான் அவ் உயிரணுவே தான் உதிக்கும் இடமாக வந்து உதிக்கின்றது.
1.தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள ஒற்றுமை நிலை இது ஒன்று தானப்பா.
2.நம் உடலுக்கும் நம் ஆத்மாவிற்கும் உள்ள சொந்தம் போல் தான் இச்சொந்தமும்.
எண்ணம் என்பதின் வேகம் இவ்வுலகில் உள்ள எல்லா வேகங்களுக்கும் மேல் துரிதமான வேகம் என்று முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். நம் எண்ணத்தைப் பிறரின் எண்ணத்தில் மோத விடும் பொழுது பிறரின் நிலையும் மாறுபட்டுச் செயல்படும் தன்மை வலுக்கிறது.
இவ்வெண்ணத்தை வைத்துத்தான் உலக நிலையும்… உயிர் உதிக்கும் நிலையும்… உடலை விட்டு ஆத்மா பிரியும் நிலையும்… எல்லாமே வருகின்றன. இவ்வெண்ணத்தில் நாம் எந்த நிலையில் ஆசைப்படுகிறோமோ அந்த நிலை கொண்டு தான் வேதனையும் மகிழ்ச்சியும் வருகின்றன.
எண்ணத்தின் ஆசையை வளர விடுவதினால் பல வேதனையான நிலைகளை நம் வாழ்க்கை நிலையில் கண்டு வேதனைப்படுகிறோம்.
இவ்வெண்ணத்தினால் தான் எல்லா நிலைகளுமே வருகின்றன என்றேன். இவ்வண்ணத்தை வைத்து ஒவ்வொரு ஆத்மாவும் அவ்வுடலில் இருக்கும் நிலை கொண்டு
1.அவ்வெண்ணத்தை ஓம் என்ற நாதம் கொண்டு ஒரே நிலையில் ஜெபித்து ஆண்டவனின் சக்தியை நம்முள் எடுத்து
2.இவ்வுடல் வேறு அவ்வாத்மா வேறு என்ற நிலையை நாம் கண்கூடாகக் கண்டிடலாம்.
3.நம் ஆத்மாவின் நிலையை நாம் போற்றிப் பாதுகாத்தால் நாம் வாழ்க்கை நிலையில் பல சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டியதில்லை.
நம்மையே நாம் உணராத நிலையில் பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது பிறரின் அன்புக்கும் நம் ஆத்மாவை அடிமையாக்கிக் கொள்கின்றோம். அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசையின் நிலைதான்.
ஆண்டவனையே ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். அவ்ஆண்டவன் நமக்கு எப்படி அன்பு பொழிவான்…?
1.நம்மையே நாம் வெறுக்காமல்
2.நம்முள் ஆதி ஆசையை வளர விட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
3.நம்முள்ளையே சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
4.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
5.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் ஆத்மா அமைதியுற்று அவ்ஆண்டவனின் சக்தியே நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.
நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடல் ஆகாது.
நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆண்டவனா பொறுப்பாளி…?
1.நம்மில் நாம் ஆண்டவனைக் கண்டிட…
2.நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்வது தான்
3.அவ்வாண்டவனின் ஜெபத்திற்கும் ஆண்டவனின் ஆசிக்கும் உகந்தவர்கள் ஆகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ குழந்தைகளை அனுப்புகிறோம் என்றால் ஆயிரக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்… டாக்டருக்கோ இஞ்சினியருக்கோ என்றால் இலட்சக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்.
தாய் தந்தையர்கள் எப்படியோ அந்தப் பணத்தைக் கட்டிப் படிக்க வைத்து “பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற நிலையில் வீடு வாசல் எல்லாம் வைத்துச் சம்பாரித்து வைத்திருந்தாலும் அதை ஒத்திக்குக் கொடுத்தோ அல்லது விற்றோ தன் பிள்ளைகளை வளர்க்க விரும்புகின்றார்கள்.
ஆனால் டாக்டருக்குப் படிக்கப் போகும் போது பெயிலாகி விட்டான் என்றால் ஐயோ… இவ்வளவு பணம் கொடுத்துப் படிக்க வைத்தேனே… இந்த மாதிரி ஆகி விட்டானே…! தாய் தந்தை வேதனைப்படுகிறார்கள்.
இருபது இலட்சம் ஐம்பது இலட்சம் கொடுத்து டாக்டர் படிப்புக்குச் சேர்த்த பின் தன் பையன் உயர்ந்தவனாக இருப்பான் எதிர்காலத்தில் நன்றாக இருப்பான் நன்றாகச் சம்பாரிப்பான் என்று தாய் தந்தையர் நினைக்கின்றார்கள்.
1.ஆனால் அவன் அங்கே கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுத்தனமாகச் சுற்றுவதும்
2.அங்கே எதாவது பிரச்சினை என்றால் ஸ்ட்ரைக் செய்வதும்
3.அங்கே நல்ல ஒழுக்கங்கள் இல்லாதபடி என்னென்ன கெட்ட பழக்கங்கள் வளர வேண்டுமோ
4.அதை எல்லாம் கற்றுக் கொண்டு வந்து விடுவான்.
பல இலட்சம் கொடுத்துப் படிக்கப் போவோர் நல்ல பழக்கங்கள் அங்கே பெரும்பகுதி இருப்பதில்லை. தன் விருப்பத்தின்படி அங்கே நடப்பதும் ஏம்ப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று தட்டிக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்…? அறிவு கெட்டதனமாகக் கேட்கிறாய்..? என்று தாய் தந்தையரைக் கேட்பதற்கு வந்துவிடுகின்றனர்.
இப்படித் தான் தாய் தந்தையரை ஏசவும் பேசவும் போன்ற நிலைகளுக்குப் பிள்ளைகள் ஆளாக்குகின்றனர். ஆனால் இதைக் கண்டு வேதனைப்பட்டு இறந்து போன பிற்பாடு அவர்கள் ஆன்மா எங்கே போகும்…?
விஷத்தின் தன்மை எல்லை கடந்து சென்று பாம்பாகவோ தேளாகவோ தான் பிறக்க நேரும்.
1.என் பையன் இப்படிச் செய்துவிட்டானே… பேசுகின்றானே…! என்ற
2.சாப அலைகளுடன் அந்த எண்ண அலைகளப் பரப்பினால்
3.பையன் டாக்டராக ஆனாலும் கைராசி டாக்டராக இருக்க முடியாது…
4.அவன் பார்க்கும் வைத்தியங்களும் சீராக வராது… பின் ஒன்றும் செய்ய முடியாது.
ஏனென்றால் தாய் தந்தையரின் “அருள் வாக்கு” இல்லை என்றால் அதைத் தெளிவாகச் செயல்படுத்த முடியாது.
ஒரு இஞ்சினியருக்குப் படிக்க வைக்க எத்தனையோ இலஞ்சம் கொடுத்து அல்லும் பகலும் பாடுபட்டு பட்டினியாக இருந்து இஞ்சினியராகப் படிக்க வைத்த பின் பையன் எல்லாவற்றையும் கற்று உணர்ந்து கொள்வார்.
ஆனால் அதே சமயத்தில் தன் உணர்வின் தன்மையைச் சீராக்காதபடித் தன்னுடைய இஷ்டத்திற்குப் பல நிலைகளைச் செய்வார்.
அதைக் கண்டு தாய் தந்தையர் வேதனைப்படும் போது இந்தத் தீய வினைகள் இவருக்குள் சேர்ந்து அதே தீய வினையால அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை கூட வருகிறது.
1.தன் பையனை எண்ணி வேதனையைச் சேர்த்து உடல் உணர்வுகள் அனைத்திலும் நஞ்சு கலந்து
2.அடுத்து இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த நஞ்சையே அங்கேயும் உருவாக்கி
3.புகுந்த உடலையும் நோயாக்கி அவரையும் விழுத்தாட்டி விடும்.
எந்தப் பையன் தாய் தந்தையருக்குத் துரோகம் செய்தானோ… சொன்னபடி கேட்கவில்லையோ… அதே எண்ணத்தில் போனால் பையன் உடலுக்குள் ஆன்மா போய்விடும்.
அல்லது… குடும்பத்தில் பையன் திருமணமாகிப் போனாலும்
1.“இப்படிச் செய்கின்றானே…” என்ற எண்ணத்தில் தாய் தந்தையர் ஆன்மா பிரிந்தால்
2.அந்த உணர்வுகள் பாய்ந்து… எவ்வளவு பொருள் ஈட்டினாலும் பையனை வாழ விடாத நிலைகள் ஆக்கிவிடும்.
அல்லது… பையன் திருமணமான பின் சம்பாரித்துச் செல்வச் செழிப்போடு இருந்தாலும் அவன் மனைவி கர்ப்பமுற்றிருக்கும் போது அவன் தாய் தந்தையர் எங்களை எப்படி எல்லாம் செய்தாய்…! இடைஞ்சல் செய்துவிட்டு இன்று இப்படி இருக்கின்றாயே…! என்று எண்ணினால் போதும்
1.கர்ப்பமுற்ற தாய்க்கு இந்த உணர்வுகள் சாடப்படும் போது
2.அந்தக் குழந்தைகளின் நிலை சூனியமாகிவிடும்… அறிவற்றதாகவும் வளர்வதைக் காணலாம்.
இதைப் போல் மனிதர்களுக்குள் ஒன்றுக்கொன்று சந்தர்ப்பபேதத்தால் ஏற்படும் நிலைகளால் பல தீய விளைவுகளாகி அவர்கள் எதிர்காலமே இருள் சூழ்ந்த நிலைகளாகி மனித நினைவே இழந்திடும் நிலை வருகிறது.
இதை எல்லாம் அகற்றுவதற்குத்தான் “விநாயகர் சதுர்த்தி” என்று வைத்தார்கள் ஞானிகள். பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று “அருள் ஞானம் பெற வேண்டும்…” என்று தாய் தந்தையர் அன்றைக்கு எண்ண வேண்டும்.
தன் பிள்ளைகள் “இப்படி இருக்கிறார்களே… உன்னை நான் வணங்கினேனே…!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் அந்த வேதனை தான் வளரும்.
ஆகையினாலே
1.பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும்.
2.மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.
பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்…?
எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.
குடும்பத்தில் சந்தர்ப்பத்தால் மேலே சொன்ன பகைமைகள் உண்டானாலும்
1.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
2.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.
பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.
அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.
1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.
காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது. இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.
நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.
1.களிமண்ணால் செய்த விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்…!
ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் தீய வினைகளைக் கரைக்கலாம்.


காந்த சக்திகளைக் (MAGNET POWER) உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்
மகரிஷிகளுடைய அருளாற்றல் மிக்க சக்தியை நாம் நுகர்ந்து எடுக்க வேண்டும் என்றால் “அதற்குத் தகுந்த காந்த சக்தி” நமக்கு முக்கியமாகத் தேவை.
27 நட்சத்திரங்களையும் மற்ற கோள்களையும் ஏன் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அவைகள் விஷத்தினுடைய ஆற்றல் கொண்டது
27 நட்சத்திரங்களும் நவக்கோளின் சக்திகளும் மற்ற அதனுடன் சேர்த்துக் கொண்ட பல சக்திகளும் நம் உடலிலே அந்த சத்தெல்லாம் இருக்கின்றது.
நம்முடைய மனித வாழ்க்கையில் பல எண்ண உணர்வுகளுடன் நாம் இருக்கின்றோம்
1.அந்த உணர்வுகளை எல்லாம் மாற்றுவதற்கு
2.27 நட்சத்திரங்களையும் நவக்கோள்களையும் இந்த விஷமான அந்தச் சத்துக்களை எண்ணும்பொழுது
3.நேரடியாக அந்தச் சக்திகளைப் பெற்று
4.சாதாரண வாழ்க்கையிலே இயக்கச் சக்தியாக இருக்கும் உணர்வலைகளை அது அடக்கும்
5.அதனால்தான் 27 நட்சத்திரங்களையும் நவக் கோளின் சக்திகளையும் எண்ணி எடுக்கும்படி சொல்வது.
6.அதாவது அந்த உணர்வலைகள் நம் உடலுக்கு முன் பரவி இருப்பதை (ஆன்மாவில் இருப்பதை) அது அடக்கும்.
27 நட்சத்திரங்களையும் நவக்கோள்களையும் சூரியன் எடுத்து ஒளிகாந்த சக்தியாக மாற்றி உணர்வலைகளாக வெளிப்படுகின்றது. அதைப்போல
1.நாம் இந்த உணர்வின் எண்ணங்களைத் தூண்டச் செய்து நம் குருநாதரின் உணர்வுடன் கலந்து
2.கலந்த பின் உயிரை எண்ணி உயிருக்குண்டான காந்த சக்தியின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்க்கின்றோம்.
3.அப்படி ஈர்க்கப்படும் பொழுது நமக்குள் காந்த சக்திகள் கூடுகின்றது
சூரியன் எவ்வாறு 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோள்களின் சக்தியையும் அது ஒளி காந்தமாக எப்படி மாற்றுகின்றதோ இதைப் போல நம் உணர்வுக்குள் அதை எடுத்து நாமும் ஒளியாக்க முடியும்.
ஆனால்… சாதாரணமாக நம் உடலில் இருந்து வெளிப்படும் சுவாசம் உயிரிலே படும் பொழுது
1.நாம் எந்தெந்த எண்ணங்கள் கொண்டு எண்ணினோமோ அந்த உணர்வுகள் நம்மை இயக்கிக் கொண்டு
2.மகரிஷிகளையோ துருவ நட்சத்திரத்தையோ எண்ண விடாது.
3.கண்களை மூடி தியானத்திலிருந்தால் மகரிஷிகள் என்று நினைத்துக் கொண்டிருப்போம் அதை நினைத்து நம்மால் இழுக்க முடியாது.
திடீரென்று வருத்தமாக இருக்கும் பொழுது பாருங்கள். நாம் யாரிடம் சண்டையிட்டோமோ அவருடைய உருவம் எல்லாம் தெரியும்
உதாரணமாக நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் “இந்த மாதிரி ஆகிவிட்டது என்று அங்கிருந்து யாராவது சொன்னால்” அடுத்து தியானத்தில் அமர்ந்தால் உடனே அதுதான் முன்னாடி நிற்கும் அந்த இடங்கள் எல்லாம் தெரியவரும் அங்கு என்ன குழப்பங்கள் இருக்கின்றதோ அது எல்லாம் தெரிய வரும்.
மகரிஷிகளின் அருள் சக்திகளை அந்த நேரத்தில் பெற வேண்டும் என்றால் அது எண்ண விடாது
1.அதனுடைய ஆற்றலை மங்கச் செய்வதற்கு தான் 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோளின் சக்திகளையும் பெற வேண்டும் என்று
2.உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அலைகளை உங்களுக்குள் பரப்புகின்றோம்.
3.ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகளை அது அடக்கவல்லது.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு உடனடியாக இப்படி அடங்கச் செய்ய முடியும்.
27 நட்சத்திரங்களும் கதிரியக்கச் சக்திகள் கொண்டது. அந்தச் சக்திகளை உங்களுக்குப் பெற வேண்டும் என்று செயல்படுத்துகின்றோம்.
உங்கள் உடலுக்குள் 27 நட்சத்திரங்களின் சக்தியும் உண்டு நவக்கோளின் சக்தியும் உண்டு.
1.இந்த உணர்ச்சிகளைத் தூண்டி எடுத்து அதனுடைய அலைகளைத் தணித்து…
2.இன்னொன்றுடன் இது கலப்பதற்கு முன்னாடி உங்களைப் பெறும்படி செய்கிறோம் (ஞானகுரு).
தியானத்தின் மூலமாக சிறுகச் சிறுக நீங்கள் எடுக்கப்படும் பொழுது இந்த சக்திகள் நமக்குள் மனித எண்ணங்களை இயக்கச் செய்யும் மற்ற நிலைகளை அடக்குகின்றது.
சூரியன் எவ்வாறு நஞ்சை அடக்கி ஒளியாக மாற்றுகின்றதோ அதைப்போல நம் உயிரின் சுவாசத்திற்குள் செல்லும் போது
1.இந்த உணர்ச்சிகளைத் தூண்டி மெய் ஒளியுடன் நாம் பிரகாசிக்கச் செய்ய முடியும்.
2.நம் உயிரை ஒட்டி இருக்கக்கூடிய காந்த சக்திகளுக்குள்… அதாவது எலும்புக்குள் காந்தங்களாக அடர்த்தி ஆகிவிடும்.
3.ஓ….ம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துடிப்பால் எண்ணி எடுக்கப்படும் பொழுது “அதிகக் காந்தத்தை ஈர்க்கும்…”
ஒரு மோட்டாரில் மேக்னட் அதிகமாக இருந்தால் அதற்குத் தகுந்த மாதிரி ஒரே மாதிரி சுற்றினாலும் அந்தக் காந்தச் சக்திக்கு தக்கவாறு மின்சாரத்தை அது உற்பத்தி செய்யும்.
அதைப்போல நம் உயிரின் துடிப்பு ஒரே சீரான நிலையில் இருந்தாலும் நாம் எடுத்துக் கொண்ட காந்த சக்திகள் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய எழும்புகளின் சில பாகங்களில்
1.உயிரை அணுகி உள்ள இடங்கள்
2.செவி ஓரங்களிலும்
3.கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள்ளும் இந்தக் காந்த சக்திகள் உண்டு.
யாம் இப்பொழுது உபதேசிக்கும் பொழுது புலனறிவுகளில் முக்கியமாக… கண் செவி உயிர் இருக்கும் பாகங்களுக்குக் காந்த சக்திகள் பெருகுகின்றது. எந்த நினைவின் தன்மை பெறுகின்றோமோ கண் விழிகளினுடைய நிலைகளும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்தி கண்ணுக்கு உண்டு.
அதே போல உயிரை அணுகி உள்ள இடத்திலும் காந்த சக்தி அதிகமாகக் கூடும் பொழுது… உயிரின் துடிப்பு லேசாக இருந்தாலும்
1.காந்தத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் பொழுது
2.நாம் எந்த மகரிஷியினுடைய சக்திகளை எண்ணி இருக்கின்றோமோ அதைப் பெற முடியும்.
3.காரணம்… அவர்கள் மிகவும் ஆற்றல் பெற்றவர்கள்… இவ்வாறு காந்தத்தை அதிகமாகக் கூட்டித்தான் அந்த ஆற்றல்களை நாம் பெற முடியும்.
அந்த மகரிஷிகள் அனைவரும் “அதீத காந்த சக்திகளைப் பெற்றுத் தான்… விண் வெளியின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து… உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்…”
அத்தகைய ஆற்றலை நாமும் பெறுதல் வேண்டும்.

பூமியைத் தவிர மற்ற மண்டலத்தில் மனிதர்கள் வாழும் வாய்ப்பே இல்லை
இப்பூவுலகில் நாம் நம் ஜீவ உடலுடன் நம் ஆத்மா எந்த நிலை கொண்டு சுவாசம் எடுத்ததோ… அந்த நிலை கொண்டெல்லாம் சப்த அலைகள் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளனவோ… அதே நிலை கொண்டு தான் இவ் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் “ஆத்மாவைச் சுற்றிச் சப்த அலைகள் சுற்றிக் கொண்டே உள்ளன…”
உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு எந்த நிலையில் அந்த ஆன்மா சுற்றிக் கொண்டுள்ளது…? என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது.
இந்நிலையை வைத்துப் பலர் பல ரூபங்களிலும் பல வித கதைகளிலும் நம் முன்னோர் வாயிலாகவும் கேட்கப் பெறுகின்றோம்.
1.அறிந்த உண்மையை அறிந்த நிலையில் செப்புவதற்கு இன்று யாரும் இல்லை.
2.அன்றைய பெரியோர்கள் தான் அறிந்து செப்பினார்கள். அந்நிலை நமக்கு எதற்கு…?
நம் உடலை விட்டுச் செல்லும் ஆத்மாவிற்கு சுவாசநிலை உடலுடன் இருந்த பொழுது எந்த நிலை கொண்டிருந்ததோ அந்த நிலையிலே தான் அவ்ஆத்மா சுற்றிக் கொண்டே உள்ளது.
1.இவ்ஆத்மா இந்த மண்டலங்களிலேயே சுற்றிக் கொண்டிருந்து இந்நிலை கொண்டே தான் பிறகொரு ஜீவ உடலும் பெற்று ஜென்மம் எடுக்கின்றதா…?
2.இந்நிலையில் இருந்து பிற மண்டலங்களுக்குச் சென்று ஜீவன் எடுப்பது இல்லையா…? என்ற எண்ணம் உள்ளது.
அச்சக்தியின் அருள் பெற்று எந்த நிலையில் அவ் உயிரணு உருவம் பெற்று… எந்த மண்டலத்தில் சுவாச நிலை கொண்டு ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்ததோ… அந்த நிலை கொண்டே தான் அவ் உயிரணுவின் சுவாச நிலைகள் உள்ளன.
1.உடலுடன் அஜ்ஜீவாத்மா இருக்கும் நிலையும்
2.உடலை விட்டு ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையும்
3.பிறகு ஒவ்வொரு ஜென்மங்கள் எடுத்தும்
4.ஒவ்வொரு நிலைகொண்டும் எத்தனை ஜென்மங்கள் எடுத்து அவ்ஆத்மா வாழ்ந்தாலும்
5.அதன் தாய் சக்தியான எந்தச் சக்தி நிலைபெற்று அவ்உயிரணுவிற்கு சுவாச நிலை கிடைத்ததோ அதே நிலை பெற்று
6.மீண்டும் மீண்டும் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்க முடியும் அவ்வ்யிரணு எனும் ஆத்மா எல்லாமே.
அவ்ஆத்மாவின் சுவாசத்தால் எப்பூமியில் அவ் உயிரணுவிற்கு ஊட்டம் தந்ததோ அந்நிலை கொண்டே தான் அவ் உயிரணு எத்தனை காலமானாலும் சுற்றிச் சுற்றிப் பிறவி எடுத்துக் கொண்டே வாழ்ந்திடும் இந்தப் பேருண்மை நிலையை எந்த நிலை கொண்டும் யாரும் செப்பிட முடிந்திடாதப்பா.
பிற மண்டலத்திற்கு சென்று வாழ்ந்திட இன்று விஞ்ஞானத்தில் பல ரூபங்களைச் செய்து சென்றாலும் இவன் தாய் சக்தி தந்த சுவாச நிலையை மாற்றிப் பிற மண்டலத்தில் எப்படி ஜீவிதம் நடந்திட முடியுமப்பா…?
1.இம்மண்டலத்தில் தோன்றியவர் பிற மண்டலத்தில் பிறந்து உயிர் வாழ்ந்திட முடிந்திடாது
2.காரணம் பிற மண்டலங்களின் உயிர் நிலை இம்மண்டலத்திற்கும் அம் மண்டலத்திற்கும் மாறுபடுகின்றது.
அம்மண்டலத்தின் சுவாச நிலை கொண்டே தான் அங்கு தோன்றிய ஜீவணுக்கள் எல்லாமே ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்திட முடியும்.
அங்கு இருப்பவர் இங்கும் இங்கு இருப்பவர் அங்கும் ஜென்மம் மாறிப் பிறந்தாலும் பிறக்கவும் முடிந்திடாது… வாழ்ந்திடவும் முடிந்திடாது,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தாய் என்பவள் யார் என்று இப்பொழுது புரிகிறதா…? நம் சுவாச நிலைக்கு உயிர் தந்த அச்சக்தித் தாய்தான் நம் முதல் தாயப்பா.
பிற மண்டலங்களில் வாழ்ந்து… பிற மண்டலங்களுக்குச் சென்று… அந்நிலையில் இருக்கும் உண்மையைக் கண்டறிய “இச்செயற்கை நிலை எதற்கப்பா…?”
பிற மண்டலங்களின் நிலையை அறிய
1.நம் சுவாச நிலை அளித்த அச்சக்தித் தாயின் ஜெபத்தை எண்ணி
2.நம் உயிரணுவின் உண்மை நிலையை அறிந்து
3.நாம் நம்முள் இருக்கும் அவ்ஈஸ்வர சக்தியை எண்ணி
4.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று நாம் ஜெபிக்கும் பொழுது
5.அவ்ஆண்டவனின் ரூபத்தில் நமக்குப் பல உண்மைகளைப் புகட்டிட அப்பெரியோர்கள் உதவிக்கு வருவார்கள்.
அந்நிலையில் நாம் நம் ஜெப நிலையிலேயே எல்லா மண்டலங்களின் நிலையையும் அறிந்து இம்மண்டலத்தில் வாழ்ந்திடலாம். எம்மண்டலத்திற்கும் சென்று வரும் பாக்கியம் பெற்ற நிலை எய்துபவர்கள் எல்லாம் யார் என்று இப்பொழுது புரிகிறதா…?
இருந்த நிலையிலேயே ஜெப நிலையில் அமர்ந்து எல்லா மண்டலங்களின் தன்மையையும் தன் நிலைக்கு உணர்ந்து கொண்ட பல கோடிச் சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள்… இப்படித் தெய்வத்தன்மை வாய்ந்த நம்மில் பல முன்னோர்கள் சூட்சும உலகம் என்னும் உலகத்தில் “அன்றும்… இன்றும்…” வாழ்ந்து வருகிறார்கள்.
பேராசை என்னும் நிலையில்தான் இன்று கண்டிடும் விஞ்ஞானம் எல்லாம்
1.அங்கிருக்கும் பொக்கிஷத்தை எடுத்து வந்து இன்று தன் நாடு வாழ தன் நிலை உயர
2.தன் நிலையை… சக்தி நிலையைச் சிதறவிட்டு வாழ்ந்து என்ன பயன்…?
3.அவ்ஆத்மாவின் நிலைக்கு அழியாக் கஷ்டத்தைத் தான் அளித்து வாழ்கிறார்கள் இன்றைய விஞ்ஞானம் என்னும் ரூபத்தில்.
தெய்வீகத் தன்மையில் தேவனின் சக்தியை ஜெயித்து வாழ்ந்திட “ஜெபம் (தியானம்) ஒன்றுதான் இஜென்மத்தில் உள்ளது” என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டுமப்பா.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதர்களாக உருவான பின் வாழ்ந்து… கடைசியில் இறந்த பின் அந்த உடலைப் புதைத்தால் அது கரைந்து விடுகிறது… மற்றொன்றுக்கு இரையாகின்றது. (உடலை மண் தின்கிறது என்று சொல்வோம்).
1.இதைப் போல் தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நம் சூரியன் தன் செயலை இழந்தால் கரைந்துவிடும்.
2.காரணம் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் தனித் தனியாக ஒரு சூரியக் குடும்பமாக மாறும் தருணம் வந்துவிட்டது (உபதேசம் செய்த வருடம் 1992).
கார்த்திகை நட்சத்திரம் நம் சூரியனைப் போல் அதுவும் வளர்ச்சிக்கு வருகிறது. ரேவதி நட்சத்திரமும் அதே போல் சூரியனாக மாறுகிறது. அதே போல் இன்னும் இரண்டு மூன்று நட்சத்திரங்கள் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.
இப்படி மாறி விட்டால் நாம் வாழும் இந்தச் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கிறது. இது முதுமை அடைகிறது.
ஆக இப்படி நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களில் சரி பகுதி தனித் தனி சூரியக் குடும்பமாக மாறி விட்டால்
1.நம் சூரியனுக்கு இரையில்லை.
2.இந்தச் சுழற்சியின் தன்மை இதனின் (சூரியனின்) ஈர்ப்பு வட்டம் குறையும்.
இந்த ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் நம் பூமியோ இதைப் போல் அந்த சுழலுக்குள் சிக்கி இதுவும் சுழற்சியான பின் அதற்குள் போய்க் கரைந்துவிடும்… ஆவியாக மாறும்.
மற்ற இந்த 27 நட்சத்திரங்கள் இருக்கிறதல்லவா… இதிலே ஒவ்வொன்றும் சூரியக் குடும்பமாக மாறிப் போகும் உணர்வுகளுக்கு இது உணவாகிவிடும்.
இப்படித் தான் அகண்ட அண்டத்தில் உள்ள இந்த 2000 சூரியக் குடும்பங்களும் ஓர் குடும்பமாக மாறி வளர்ந்து வந்துள்ளது.
அதே சமயத்தில் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் 27 சூரியக் குடும்பமாக மாறிவிட்டால் இது ஒரு வட்டமாகின்றது… பேரண்டம் ஆகிறது.
இதன் வளர்ச்சியில் இதைப் போல் மாறி மாறித் தன் பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளரும்.
ஆகையினால் எமது குருநாதர் கொடுத்த அந்த மெய் உணர்வின் தன்மைகளை நீங்கள் பெற்று அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்து
1.அகண்ட அண்டத்தையும் அறியலாம்
2.இந்தப் பிண்டத்திற்குள் அதனின் ஆற்றலை எடுத்து வளர்க்கவும் செய்யலாம்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையையும் நீங்கள் அடையலாம்.
அதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.


குரு இட்ட கட்டளைப்படி நாட்டைக் காத்திடும் சக்தி பெற வேண்டும் என்று இதை உங்களுக்குள் வினையாகச் சேருங்கள்
ஆலயத்திற்குச் சென்று விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற வினையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆலயம் வருபவர் எல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும். என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
1.நாட்டை ஆட்சி புரிபவர்கள் அனைவருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் இந்த உலகுடன் ஒத்து வாழ வேண்டும்… மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாட்டை வழி நடத்த வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நாட்டை உருவாக்க இது பயன்படும்… மதங்கள் அல்லாதபடி உருவாக்க இது பயன்படும்.
இந்த அரசாங்கத்தில் நிர்வாகம் செய்யும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும் ஒருங்கிணைந்து செயல்படும் அந்தச் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள். அப்போது இங்கே பகைமைகள் வராது. இதைப் போன்று செய்தால்
1.எனக்குச் செய்யவில்லை
2.உனக்குச் செய்யவில்லை என்ற அந்த உணர்வுகள் வராது.
3.அனைவருக்கும் தொழில் வாய்ப்பு உருவாகும் செவ்வனச் செய்யும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஆலயங்களிலே வணங்குங்கள்..
அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.நாட்டில் அரசியல் நடத்துபவர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.அரசாங்கத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.இந்த நாட்டைக் காத்திடும் சக்தியாக அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
அந்த ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வ குணங்கள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
அரசாட்சி செய்வதை நமது அரசு என்று எண்ணி அங்கே நிர்வாகம் செய்பவர்கள் அனைவரும் தெய்வ குணம் பெற வேண்டும் உலகைக் காத்திடும் சக்தியாக அந்த மன பலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
ஞானிகள் காட்டிய அருள் வழியில் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும். பேதங்கள் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆலயங்களில் எண்ணுங்கள். நம் அனைவரையும் ஒருங்கிணைக்க இது உதவும்.
சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… என்னைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அந்தச் சந்தனத்தின் நறுமணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.நாட்டைக் காத்திடும் அனைவருக்கும் (அரசியல்வாதி… அதிகாரிகள்… படை வீர்ர்கள்) இந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும்
2.அங்கே அது வளர வேண்டும் என்று நீங்கள் வேண்டுங்கள்.
3.ஏனென்றால் நாம் அங்கே சென்றாலும் இந்த நிலைதான்… யார் சென்றாலும் இந்த நிலை தான்.
ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கும் பொழுது எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் வருகின்றது. இதையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. அப்பொழுது குடும்ப ஒற்றுமை வர வேண்டும் என்று நாம் எண்ணுவது போல
1.நமது நாட்டைக் காத்திடும் நிர்வாகிகள் அனைவருக்கும் அந்த ஒருங்கிணைக்கும் சக்தி பெற வேண்டும் என்று
2.நாம் அனைவரும் எண்ணும் பொழுது அந்த ஆலய நிர்வாகிகளும் அந்த ஆலயத்திற்கு வருகின்றார்கள்
3.அவர்களும் இதே போன்று எண்ணும் பொழுது மனிதன் என்ற தன்னிலை அடையும் சக்தி வருகின்றது
அதற்குத்தான் தத்துவ ஞானிகள் ஆலயத்தை வைத்தார்கள்…!
பாலைப் போன்ற தூய்மையான மனம் நாங்கள் பெற வேண்டும் என்னைப் பார்ப்போர் எல்லாம் அந்தப் பாலைப் போன்ற தூய்மையான மனம் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவார் எல்லாம் இந்த நிலை பெற வேண்டும்.
1.அரசாங்க நிர்வாகத்தில் உள்ளோர் அனைவரும் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்.
2.அவர்கள் மன பலம் பெற வேண்டும் மக்களுக்கு நல் உணர்வு காட்டும் அந்தச் சக்தி அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நம்முடைய எண்ணம் அவர்களுக்கு வழி காட்டவும் சகோதர உணர்வுடன் வாழவும் இது உதவும்.
ஆகவே மகரிஷியில் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்று இந்த உடலுக்குள் நல்லவைகளும் கெட்டவைகளும் குணங்கள் கலந்து தான் இருக்கின்றது.
நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை நாம் வளர்த்துக் கொள்ள இது உதவும்.
இதே உணர்வின் நிலைகள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று ஒருங்கிணைந்த நிலைகள் நாம் எண்ணும் பொழுது
1.நமது அரசே உலகிற்கு எடுத்துக்காட்டும் அரசாக வளர்ந்து வரும்
2.அதன் கீழ் வாழ்ந்து வரும் மக்களாகிய நாமும் உயர்ந்த நிலை பெற முடியும்.
ஏனென்றால் மன பேதத்தாலும் இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் உலகில் மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் இத்தருணத்தில் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி… எந்த ஆலயத்திற்கு நாம் சென்றாலும் இந்த முறைப்படி ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலையும்… ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் அரசும் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
இப்படி ஒருங்கிணைந்தால் கட்சி பேதமும் வராது இன பேதங்கள் வராது மத பேதங்கள் வராது.
1.நாம் அனைவரும் இந்த ஆட்சி சீராக வளர வேண்டும் என்று எண்ணி அப்படி நடந்தால் நமக்குத் தொல்லை இல்லை.
2.அதற்குப் பதிலாக என்னுடைய வழியில் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் அதற்கடுத்துத் தொல்லைகள் தான் வருகின்றது.
ஆகவே இத்தகைய எண்ணங்கள் நமக்குள் வளராதபடி ஆலயங்களில் அரசை ஒத்தே நாம் பிரார்த்திக்க வேண்டும்.
நமது சக்தி எல்லாம் ஒருங்கிணைந்து சேர்ந்து ஓட்டு போட்டு தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் நல்ல நிலையில் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னால்
1.அவர்களுக்குள் நம்மை காக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.பின் நாம் எண்ணும் எண்ணங்கள் பகைமை இல்லாத உணர்வாக வளர்கின்றது.
இதை நாம் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்து அடுத்தடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நமது நாட்டு மக்கள் அனைவரும் மன பேதமின்றி இன பேதம் இன்றி ஒருங்கிணைந்து வாழ வேண்டும். ஆட்சி புரியும் நிர்வாகிகள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தலையாயக் கடமையாக எண்ணுதல் வேண்டும்.
நம் உடலுக்குள் நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் எப்படிக் கலந்திருக்கின்றதோ இதைப் போன்று
1.நமது நாட்டுக்குள் இருக்கும் எல்லாம் ஒருங்கிணைந்தால் தான்
2.நாடு நலம் பெறும்… மக்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும்.
இதைப் போன்ற தீமைகள் விளைவித்து மக்களை தவறான வழியில் செயல்படச் செய்யும் உணர்வுகளை மாற்ற ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம்… இந்த நாட்டில் பிறந்த மக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் அறியாது செய்யும் தவறுகளில் இருந்து விடுபட வேண்டும்… மக்கள் பேரானந்தப் பெரு நிலை பெற வேண்டும்… அந்த மகரிஷிகள் அருள் வட்டத்திலே மனிதனாகப் பிறந்த முழுமையின் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்துங்கள்.
கட்சி பேதமின்றி மன பேதமின்றி இன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி உலகைச் சிருஷ்டிக்க “நாம் எண்ணும் எண்ணமே தான்” இந்த உலகைச் சிருஷ்டிக்கின்றது.
மத பேதங்களால் போர் எப்படி நடக்கின்றதோ அதைப் போல் கட்சி பேதத்தால் உண்மை நிலைகள் அறியாது பேத உணர்வுகளே வளர்க்கப்பட்டு சீராகச் செயல்படும் தன்மைகள் இந்த உலகெங்கிலும் இப்போது மறைந்து கொண்டே வருகின்றது.
1.அதை போன்ற நிலைகள் நம் நாட்டிலே விளையாது கட்சி என்ற பெயரை அகற்றிவிட்டு
2.நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சி நிலைகள் சீராக வரவேண்டும் என்று ஒருக்கிணைந்து எண்ணினால்
3.எல்லோரும் நல்லவரே…! எல்லோரும் நல்லாட்சியைப் பெற முடியும்.
ஆனால் அரசாங்கத்தைக் குறையாக எண்ணி அதை வளர்த்து விட்டால் அவர்கள் எதைச் செய்தாலும் நாம் குறை கூறிக் கொண்டே தான் இருப்போம். குறைய நிவர்த்திக்கும் எண்ணம் நமக்குள் வராது. குறையைச் சொல்லிவிட்டு நாமும் குறையைத் தான் செய்து கொண்டிருப்போம்.
ஆகையினால் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்ன நிலைகளில்… நமது நாட்டில் ஆட்சி புரியும் அந்த நிலைகளுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து… நமது நாடு சீராக வளர்ந்திடும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் ஒருங்கிணைந்து நினைப்போம்.
பக்தி கொண்ட நிலையில் இருந்து மாந்திரீகம் தாந்திரீகம் என்று சில பேர் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
கடவுளின் பெயரால் மக்களின் மதியை மாற்றிக் கொண்டிருக்கும் அறியாத நிலையில் தீமையை விளைவிக்கும் சாதுக்கள் என்ற பெயர்களால்ம் பல தவறுகள் செய்து கொண்டிருக்கும்
1.அவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவ்வாறு செயல்படும் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று
3.நாம் ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் எண்ண வேண்டும்.
மாயாஜாலத்தாலும் மாந்திரீகத்தாலும் மக்களை மதி மயங்கச் செய்யும் எவராக இருப்பினும் “அவருடைய தீய எண்ணங்கள் மறைந்து…” மக்களைக் காத்திடும் உணர்வுகளும்… ஞானிகள் காட்டிய வழியில் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நல்ல எண்ணங்களும் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.
ஞானிகள் காட்டிய நிலைகளைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு…
1.நான் கடவுளைக் கண்டேன்… கடவுளின் அவதார புருஷன் என்று சொல்லிக் கொண்டு
2.அவர் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று இதைத் தியானியுங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர்ந்தால்தான் இது எல்லாம் சாத்தியமாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடல் பாடிக் கொண்டிருக்கும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் உலகம் அனைத்திற்கும் மெய் ஞானத்தை உணர்த்திச் சென்றான்… ஞானத்தைப் போதித்தான்.
தென்னாட்டிலே வாழும் நாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் ஆற்றலை மதபேதமற்ற நிலையிலும் இனபேதமற்ற நிலையிலும் மொழி பேதமற்ற நிலைகளிலும் இந்த உலக மக்கள் வாழ வேண்டும் என்று
1.தமிழ்நாட்டில் பிறந்த நாம் ஒருங்கிணைந்த நிலை கொண்டு
2.கட்சி பேதமின்றி நாம் செயல்பட வேண்டும்.
ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பார்… ஒருவர் கடவுள் இல்லை என்பார்…! ஒருவருக்கொருவர் போர் செய்து பிழைகள் செய்து கொண்டு குறைகளை உருவாக்க முடிகின்றதே தவிர அதை நீக்கும் நிலை இல்லை.
அது போன்ற நிலைகளை மறந்து விட்டு ஆட்சி பீடங்கள் சீராக இயங்க வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்து இந்த உணர்வின் வலுவை நாம் கூட்டினோம் என்றால் “நமது ஆட்சி நலமாக இருக்கும்… உலகுக்கு எடுத்துக்காட்டாகவும் வரும்.
1.அவர்கள் உயர்ந்த ஆட்சி புரிய வேண்டும் என்று நாமும் ஒத்துழைக்க வேண்டும்
2.குறைகளை மட்டும் கூறிக் கொண்டிருந்தால் குறைகள் தான் வளர்ந்து கொண்டிருக்கும்… அதைத்தான் வளர்க்க முடியுமே தவிர நீக்க முடியாது.
நீங்களே அந்த ஆட்சி பீடத்தில் உட்கார்ந்து பார்த்தால் ஒரு நண்பன் எனக்கு இதைச் செய்து கொடு…! என்று கேட்பான் இன்னொருவன் அவனுக்குச் செய்கின்றான்… எனக்கு செய்ய மாட்டேன் என்கிறான் என்பான்.
ஒருவருக்குச் செய்யும் பொழுது மற்றவர் குறை சொல்லத்தான் வருவார்கள்.
இது போன்ற நிலைகள் இல்லாதபடி அரசியல் பேதம் இல்லாதபடி எத்தகைய பேதம் இல்லாதபடி நாம் அனைவரும் ஒன்று சேர்த்துச் செயல்பட வேண்டும்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னது போன்று இந்த உலக மக்களுக்கு எடுத்துக்காட்டாக வளரச் செய்யும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நாம் அனைவரும் பெற்று இந்த ஒருங்கிணைந்த ஆட்சியாக பேதமற்ற நிலைகளில் சிருஷ்டித்து உலக அரங்கிலே அருள் ஞானத்தைப் பரவச் செய்வோம்.
1.உலகைக் காத்திடும் சக்தியாகக் கொண்டு வருவோம் என்று
2.இதைப் பிரதிக்ஞையாக எடுத்துக் கொள்வோம்.
யார் எந்தக் குறையைக் கூறினாலும் குறைகள் இல்லாத நிலையாக உருவாக வேண்டும்… குற்றமற்ற நிலையாக தமிழ்நாடு உருவாக வேண்டும்.
தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே ஓங்கி வளர வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள். எத்தகைய பேதமும் இல்லாத பேதமற்ற வாழ்க்கையாக நாம் வாழ்ந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வுகள் இங்கே வளர வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்வோம்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் உலகில் வாழும் மக்கள் அனைவரும் முழு முதல் கடவுள் என்று ஞானிகள் உணர்த்திய அருள் வழிப்படி உலகைச் சிருஷ்டிக்கும் மனித உடல் பெற்ற நாம் “பல நன்மைகளை நாம் அனைவருக்கும் உருவாக்குவோம்…”
உடலை விட்டுப் பிரிந்தால் என்றும் பிறவியில்லா நிலை அடைவோம் பகைமையை வளர்த்து புவியின் ஈர்ப்புக்குள் சிக்கிடும் நிலையாக இல்லாதபடி பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்று உறுதிப்படுத்துவோம்.
இதை நாம் அனைவரும் பெற்று உலகிற்கு எடுத்துக்காட்டாக வருவோம்
எவர் எத்தொழில் செய்தாலும் அந்தக் குறைகளைப் பதிவு செய்யாது அவர் அறியாது குறை உணர்வுகள் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் செயல்படுத்துவோம்.
குருநாதர் பித்தரைப் போன்று இருந்துதான் இந்தப் பேருண்மைகளை எல்லாம் அறிந்து உணர்த்திச் சென்றார். சந்தர்ப்ப பேதங்களால் மக்கள் அனைவரும் மன வேதனைப்பட்டு கொடிய நோய்களுக்கும் கொடிய செயல்களுக்கும் ஆளான நிலையில் இருந்து விடுபட வேண்டும். ஆகையினால்…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதித்து
2.ஈசன் கட்டிய உடலான ஆலயத்திற்குள் அருள் ஞான சக்திகளை நீ புகுத்தி விடு என்றார்.
3.அங்கே அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றிடும் நிலையாக அருள் உணர்வு கிடைக்க வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய் என்றார் குருநாதர்.
அதைத்தான் யாம் (ஞானகுரு) செய்கின்றோம்.
இதைக் கேட்டுணர்ந்த அனைவரும் இதை வளர்த்து நமது நாடு என்ற நிலைகளிலும் “உலகம் காக்கப்பட வேண்டும்” என்ற நிலைகளில்
1.அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் பேதமற்ற நிலைகளாக வாழ்வோம்
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழ்வோம்.
3.மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வோம்
4.நாட்டுக்குள் ஒற்றுமையை வளர்ப்போம்
5.தீமையற்ற நாடாக நம் தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
6.இங்கிருந்து உலகைக் காத்திடும் நிலையாக எல்லா நாட்டிற்கும் நாம் அருள் சேவை செய்யும் அந்தப் பண்பினை ஊட்டுவோம்
7.நாம் அனைவரும் சகோதரர் என்ற நிலையைக் கூட்டுவோம்.
ஆகவே இந்த உலகம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற்றால் நாமும் நலம் பெறுவோம் உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்தத் தத்துவம் எந்தத் தென்னாட்டில் இருந்து உலகம் முழுவதும் பரவியதோ மீண்டும் இங்கிருந்து
1,மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவரின் அருளால் உலக மக்களை ஒன்று சேர்த்திடும் நிலையாக
2.மக்களைக் காத்திடும் நிலையாக குரு அருள் உங்கள் அனைவருக்குள்ளும் ஆழமாகப் பதிந்து
3.உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களில் விளைந்து
4.இந்த உலகைக் காப்பீர் உங்களைக் காப்பீர் உங்கள் ஊரைக் காப்பீர் உலக மக்களைக் காப்பீர்கள்.
நிறைந்த மனதுடன் நாம் வாழ்வோம் எல்லோரையும் நிறைவான நிலைகள் பெறச் செய்வோம் அவர்கள் நிறைவடைவதைக் கண்டு நாம மகிழ்வோம். அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கண்டு நாமும் பேரானந்த பேரு நிலை இந்த வாழ்க்கையிலே அடைவோம் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலைகள் இந்த உடலிலேயே வளர்ப்போம் என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.
நாட்டு அரசுக்கு நல்ல உணர்வை நாம் எடுத்துக் காட்டினோம் என்றால் அதுவே நம் அரசாகின்றது நாமே அரசாகின்றோம் அரசே நாம் ஆகின்றோம்.
இந்த உயர்ந்த நிலையில் கொண்டு “நாம் எல்லோரும் வாழ வேண்டும்” என்ற நினைவைச் செலுத்தினால்
1.அந்த அரசும் நலமாக இருக்கும் அந்த அரசால் நாமும் நலமாகின்றோம்.
2.நாம் தான் அரசு அரசுதான் நாம் என்ற நிலையில் கட்சி பேதமின்றி இந்த நாட்டிற்குள் உயர்ந்த ஞானத்தை வளர்ப்போம்.
பேதமற்ற வாழ்க்கை நாம் வாழ்வோம் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு உலகிற்கே எடுத்துக்காட்டாக வரவேண்டும் உலக பேதமற்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்று தெற்கிலே வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வுகளை உலகிலே பரப்புவோம்.
அந்த மெய் ஞானியின் உணர்வுகளை ஒருங்கிணைந்து நமக்குள் வளர்ப்போம். உலகம் நலம் பெற வேண்டும் என்று நமது உணர்வுகளை பரப்புவோம். சகோதர உணர்வுடன் நாம் வாழ்வோம்… பகைமையற்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்
எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டி இதை நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).

இன்றைய கலியுகத்தை “நாம் தான் கல்கியாக்க வேண்டும்…” ஆண்டவன் வந்து ஆக்குவதல்ல…!
இயேசுபிரான் மக்களுக்கு உணர்த்திய மகத்துவமான உண்மைகளை எண்ணிப் பார்ப்பதற்கே இன்று யாரும் இல்லை.
1.அன்பே கடவுள்
2.அன்பே ஒற்றுமை
3.அன்பே எல்லாம் என்ற நிலையில்
4.எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று பேரானந்த நிலையை ஏற்படுத்தி
5.அன்று வாழ்ந்த எல்லா மக்களுக்குமே அன்பையே தெய்வமாக எண்ணி வணங்கிட நல் உபதேசங்களை உபதேசித்து
6.அன்று வாழ்ந்த மக்களின் மனதை எல்லாம் அன்புடனே நடத்திச் சென்றார் இயேசுபிரான்.
அந்நிலையை மாற்றியவர்கள் அவரின் உடலை அழித்துவிட்டு அவர்கள் தம் புகழுக்காக இயேசுபிரான் என்ற போர்வையைத் தான் எடுத்துப் போர்த்திக் கொண்டு பலர் பல நிலையில் அவ் ஏசுபிரான் பெயரிலேயே வாழுகின்றார்கள்.
அகிம்சா மூர்த்தியான இயேசுபிரானின் போதனை மொழியையே இம்சைப்படுத்தி விட்டார்கள். ஆண்டவனின் அருளையே தன் தன் நிலைக்கு ஏற்ப சாதகமாக்கிக் கொண்டு வாழ்பவர்கள் தான் இயேசுபிரான் காலத்திலிருந்து இன்று வரை உள்ளார்கள்.
இந்நிலை போல் தான் சில நாடுகளில் முகமது நபியின் நிலையும் அவர் எடுத்துச் சொன்ன உண்மை நிலையையும் மாற்றி அவரவர்கள் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டு விட்டனர்.
முகமது நபி வாழ்ந்த காலத்தில் அவர் அருளிய அருள் செல்வம் மக்கள் மனதில் பதியும் தருவாயில்… பலர் பல நிலை கொண்டு அவரின் மேல் பல துவேஷச் சொற்களையும் கற்களையும் வீசி… அவரையே துவேஷப்படுத்தி துவேஷித்து
1.அவர் நற்போதனைகளை உடலுடன் இருந்த பொழுது ஏற்று நடந்திடாமல்
2.இன்று அவர் நாமத்தை வைத்துப் பலர் ஓதுகின்றார்கள்.
பல உன்னத மனிதர்களின் பல மகான்களின் நிலைகள் எல்லாம் அவர்கள் போதித்த காலத்தில் மனிதர்கள் ஏற்று நடக்கவில்லை. அன்றும் இன்றும் மனிதர்களின் நிலை எல்லாம் ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதுவும்… நல் உபதேசத்தை ஏற்கும் மனநிலையையும் மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றனர்.
பல நாளேடுகளிலும் உணர்ச்சியைத் தூண்டும் வகைகளில் ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் கதைகளையும் இப்படிப் பல நிலைகள் கொண்டு மக்களின் மனதையே பெரும் உந்தலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கின்றார்கள்.
அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆளுபவர்களும் உள்ளார்கள்.
காலத்தினால் பல கோடி நன்மைகள் நமக்கு காத்திருப்பதையே மறந்து நாம் பயத்துடன் தான் வாழ்கின்றோம்.
இப்பூமியிலே தோன்றி வாழ்ந்து…
1.உடலுடனும் உயிருடனும் இன்றும் சூட்சம நிலை கொண்டு வாழ்ந்திடும்
2.பல மகரிஷிகளின் ஆசியுடன் நாம் வாழ்கின்றோம் என்ற பேருண்மையே
3.ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலையெல்லாம் மறந்து
4.ஒவ்வொரு மனிதரும் தாம் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழ்ந்திடுங்கள்.
இனி வாழும் காலங்கள் கல்கியுடன் வாழ்ந்திடலாம் கல்கி என்ற பேரானந்தக் காலத்தில் கலந்து வாழ்ந்திடலாம்.
செய்த பாவத்தை மறந்து விட்டு… நடந்தவைகளை நடந்தவையாக விட்டுவிட்டு… நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன் நம் உயிரான்மாவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து…
1.நமக்காக மட்டும் வாழாமல்
2.நம்முடன் தோன்றிய எல்லா உயிராத்மாக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.
அன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள். எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலரும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள்.
கலியை ஆண்டவன் வந்து கல்கி ஆக்குவது இல்லை இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன் எல்லோருமே… ஆண்டவர்கள் என்பது யார் என்று புரிந்ததா…?
1.இக்கலியில் உள்ள உயிராத்மாக்கள் நாம் எல்லோருமே தான்
2.கலியைக் கல்கி ஆக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.
ஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை மனிதர்கள் மனநிலையை வைத்துத்தான் காலநிலையும் மாறுகின்றது. ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்த மனிதரின் மனநிலையை வைத்துத்தான் மாறுபடுகிறது.
இன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இம் மனநிலை மாறுவதற்காகத் தான்.
1.நம் மகரிஷிகள் நிலை கொண்டே நடத்திடும் பெரும் நாடகம்.
2.நாடகத்தின் தொடரினை இனி கண்டு வாழ்ந்திடலாம்
3.இந்நிலையில் இருந்து மக்களின் மனநிலையில் பெரும் மாறுதல் வந்திடுமப்பா.
அந்நிலை நடப்பதற்காகத்தான்… சூட்சும நிலையில் உள்ளவர்கள் “மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி” மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.
இன்றைய செயற்கையின் கோளத்தை அந்நிலையின் உண்மைகளை நாமும் பார்த்திடலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்பது உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உங்கள் உயிரே.
நாம் எண்ணியது அனைத்தையும் நமக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து… மீண்டும் நினைக்கும் போது “அது குருவாக இருந்து” நமக்குள் அந்த ஒவ்வொரு குணமும் செயல்படுகின்றது.
உதாரணமாக குழந்தை மேல் பாசமாக இருக்கின்றேன். அது உயிரிலே பட்ட பின் ஓ… என்று பிரணவமாகிறது. அடுத்து அது ம்… என்று உடலாகிறது.
மீண்டும் அதே குணத்தை நான் எண்ணும் போது அந்தப் பாசத்தால் அவனுக்குச் செய்ய வேண்டிய “குரு நிலையாக” அவனுக்கு வழி காட்டுகிறது.
1.இப்படித்தான் நாம் எண்ணிய குணங்கள் எதுவோ அது குருவாக நமக்குள் இயங்குகிறது.
2.ஆனால் நாம் எதைக் குருவாக ஆக்க வேண்டும்…?
மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த அரும் பெரும் சக்தியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த உணர்வின் சக்தியைத் தான் இங்கே உபதேசிக்கின்றோம். நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.
1.பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவு கூறும் போது
2.அந்த ஞானிகள் உணர்வு குருவாக நின்று உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் நிலையாகப் பெறச் செய்யும்.
4.ஞானிகளின் உணர்வைக் கண் புலனறிவால் ஏகி அதனின் உணர்வைப் பருகி
5.அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்றவர்கள் உணர்வை நமக்குள் எடுக்கப்படும் போது
6.அவர்கள் உணர்வைக் கவர்ந்து கொள்ள முடியும்.
உதாரணமாக ஒரு உயர்ந்த வித்தை நிலத்தில் ஊன்றி அதற்கு நீரை ஊற்றினால் பூமியின் ஈர்ப்புத் துணை கொண்டு காற்றிலிருக்கும் தன் இனச் சக்தியை எடுத்து நல்ல வித்தினைக் கொடுக்கின்றது.
அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அது ஜீவன் பெற உங்கள் நினைவை மீண்டும் கூட்டினால் அந்த உணர்வின் சத்தை காற்றிலிருந்து கவர முடியும்.
அவ்வாறு கவர்ந்து அதனின் உணர்வைத் தனக்குள் வளர்த்து வரும் நஞ்சு கொண்ட உணர்வின் அணுவைப் பிளந்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மெய் ஒளி காணும் மெய் சரீரத்தைக் காண முடியும்.
அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் தான் இதை நான் (ஞானகுரு) உபதேசிக்கின்றேன்.
1.நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்கள் மூச்சு இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கும்.
உங்கள் உணர்வுகள் அனைத்தும் நலமும் வளமும் பெற்று உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அனைவரையும் இருளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுகளாக வளர்ச்சி பெறும்.
அதற்காக வேண்டித் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்… தியானிக்கின்றேன். அந்த உணர்வின் தன்மை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.
அதை மீண்டும் நான் நினைக்கும் போது
1.உங்களுக்கு என்னென்ன உதவி செய்ய வேண்டும்…?
2.நீங்கள் எப்படி மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும்…?
3.உங்களை அறியாது சேர்ந்த இருளை எப்படி நீக்க வேண்டும்…? என்ற
4.அந்த குரு வழிப்படி உங்களுக்கு உபதேசிக்க வேண்டி வருகிறது.
இது “எனக்குள் குருவாக வந்து” என்னை இப்படி இயக்குகிறது. குருநாதர் அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றேன்.


ஒவ்வொரு நேரத்திலும் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறைகள்
படுக்கைக்கு முன்பாக;-
1.இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
2.உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் அருளாற்றலை வலுவேற்றிச் செருகேற்றிக் கொள்ளுங்கள்.
அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் மன பலம் பெறவும் உடல் நலம் பெறவும் தொழில் வளம் பெருகவும் இதன் வழி உங்களை அறியாது சேர்ந்த தீமைகளீலிருந்து விடுபடவும் மன மகிழ்ச்சி பெறவும் இது உதவும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.இரவு படுக்கைக்குச் செல்லும் போதெல்லாம் கண்களை மூடி நூறு முறை இவ்வாறு சொல்லுங்கள்.
2.வெறுமனே வாயால் புற நிலையில் சொல்லக் கூடாது
3.அகநிலைகளுக்கு உங்கள் உடலுக்குள் நினைவினைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடல் முழுவதும் நினைவினைச் செலுத்துங்கள். உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப வரிசைப்படுத்தி
2.உங்கள் நினைவினை “அலை அலையாக” உடலுக்குள் செலுத்துங்கள்.
குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ;-
உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வீடு முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது உணர்வுகளிலும் கலந்து எங்களை அறியாத சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் மன பலத்துடன் மன வளத்துடன் தொழில் வளத்துடன் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று 10 முறை இவ்வாறு நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று இதைப் ;போல் ஒரு பத்து முறை “குடும்பத்திற்குள் ஒற்றுமை வளர வேண்டும்” என்று எண்ணி ஏங்குங்கள்.
பகைமைகள் அகல:-
சகோதர சகோதரிக்குள் கலக்கம் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சகோதர சகோதரிகள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் மன பலம் மன வளம் பெற வேண்டும்.
குடும்பத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழும் அந்த மன பலம் பெற வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த கலக்கங்கள் நீங்கி குடும்பத்தில் பற்றும் பாசமும் வளர்ந்திடும் அச்சக்தி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.
1.உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பகைமை இருப்பினும்
2.அதை நீங்கள் உங்கள் நினைவில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
சகோதர சகோதரிகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு என்னைப் பார்க்கும் போதெல்லாம் அன்பும் பரிவும் பாசமும் அவர்களுக்குள் ஏற்பட வேண்டும் எங்கள் பார்வையில் அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் பாசப்பிணைப்புடன் நாங்கள் ஒன்றி வாழ்ந்திட வேண்டும் என்று இந்த நிலையை நீங்கள் நினைவில் கொண்டு வாருங்கள்.
நம் குழந்தைகளுக்கு;-
குடும்பத்தில் குழந்தைகள் கல்வியில் குறைபாடோ அல்லது உடல் நலக் குறைவோ இருப்பினும் அதை நினைவில் கொள்ளாதீர்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் குழந்தைகள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்
1.அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தியும் நல்ல ஞான சக்தியும் பெற வேண்டும்
2.கல்வியில் சிறந்தவர்களாக வளர வேண்டும்
3.உலகம் போற்றும் உத்தமர்களாக எங்கள் குழந்தைகள் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும்
4.உலகைக் காத்திடும் சக்தி எங்கள் குழந்தைகள் பெற வேண்டும்
5.உலகை அறிந்து வாழும் திறன் எங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்று இவ்வாறு நினைவினைச் செலுத்துங்கள்
6.நீ கல்வியிலே சிறந்த ஞானம் பெறுவாய் உயர்ந்த நிலை பெறுவாய் என்று நல்லதைச் சொல்லி நாம் செயல்படுத்த வேண்டும்.
பேரன்பு கொண்ட நிலைகளில் அந்த குழந்தைகளுக்கு இப்படித்தான் நாம் அருள் வழியைக் காட்ட வேண்டும்
தொழில் செய்யும் இடங்களில்;-
அடுத்து நீங்கள் தொழில் செய்யும் இடங்களை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
1.அங்கு ஏதாவது சிக்கலோ அல்லது மந்தமோ கொடுக்கல் வாங்கலில் ஏதாவது தடைகளோ இருந்தால்
2.அந்தத் தடைகளைக் கருத்தில் வைக்காதீர்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படர்ந்து எங்களிடம் தொழில் செய்யும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அவர்கள் மன பலம் பெற்று அவர்கள் தொழில் சீராக வளர்ச்சி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஒரு பத்து முறை தொழில் செய்யும் இடங்களை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
அடுத்து உங்கள் வாடிக்கையாளர்களை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பத்து முறை நினைவைச் செலுத்துங்கள்.
அவர்கள் குடும்பங்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதைப் போன்று நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
கொடுக்கல் வாங்கலில் ஏதாவது தடைகள் இருந்தால்… எவரால் அந்தத் தடை வந்ததோ ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் தொழில் முழுவதும் படர வேண்டும்
2.அவர்கள் தொழில் சீராகி அவர்களுக்குச் செல்வம் வர வேண்டும்
3.எங்களுக்குக் கொடுக்க வேண்டிய வேண்டிய பணத்தைச் சீராகக் கொடுக்கும் திறன் அவர்களுக்கு வர வேண்டும் என்று
4.இந்த முறைப்படி எண்ணி நினைவினைச் செலுத்துங்கள்.
இவ்வாறு செய்யச் செய்ய அவர்களுக்கும் அந்த நிலைகள் உயர்வு ஏற்படும் உங்கள் பணமும் தடை இல்லாது வந்து சேரும். உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம்.

ஆண்டவன் என்பவன் யார்…?
1.நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத
2.இப்புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலும் கலந்துள்ள சக்தியை
3.யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் நிலைப்படுத்திச் சொல்லிடும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்…?
4.ஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து “அவரவர்கள் வழிக்கு வணங்குகிறார்கள்…”
இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.
இங்கு ஆண்டவனை வணங்கும் முறையே பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து… பொருள் உள்ளவர்கள் மட்டும்தான் ஆண்டவனின் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி…
1.ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை
2.சாஸ்திரங்களின் பெயரால் புரியாத நிலைப்படுத்தி வணங்குகிறார்கள்.
ஏசுபிரானை வணங்கும் நாட்டிலே இயேசு பிறந்தார். பிறக்கும் பொழுதே வானமண்டலத்தில் பல கோடி நட்சத்திரங்கள் தோன்றின. அவ் ஆண்டவனே தான் வந்து அவதரித்தார் என்ற நிலையில் ஆண்டவனே வந்து பிறந்ததாகப் போதிக்கின்றார்கள்.
உலகில் உள்ள எல்லா உயிரணுக்களும் ஆண்டவன் தான். அவ் ஆண்டவனின் சக்தியில் இருந்து பிறந்தவர்தான் அவ் இயேசு பிரானும். நம்மைப் போல் ஒருவராகத் தான் வந்து பிறந்து வளர்ந்தார்.
ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம்.
1.எல்லோருமே ஆண்டவன் தான்…!
2.எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.
இயேசுபிரான் எப்படி ஆண்டவன் அருள் பெற்றார்…? என்ற உண்மையினை நாம் எண்ணிப் போற்றி வணங்கிடல் வேண்டும்.
சாதாரண ஆட்டிடையனாகத் தான் அவரும் வளரும் காலத்தில் வளர்ந்தார். குழந்தை நிலையிலேயே அவரது நிலை எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பைப் பூண்டு அகிம்சையைக் கொண்டு அன்புடனே பழகி வந்தார்.
அன்பையே தெய்வமாக எண்ணி வாழ்ந்தார். அந்த நிலையில் எப்படி அவர் அன்பு காட்டி வாழ்ந்தாரோ அந்த நிலை கொண்டு அச்சக்தியின் நிலையினால் அவரின் நிலையில் அவருக்கு முன் தோன்றிய “ஒரு மாபெரும் முனிவர்” அவரின் நிலையில் தோன்றி… அவரின் நிலையில் தோன்றி என்பது ரிஷிகள் முனிவர்களின் நிலையைத்தான் முதலிலேயே பாடத்தில் சொல்லி உள்ளேன்.
அந்நிலை கொண்டு இவர் சிறு வயது முதற்கொண்டே அன்பு கொண்டு வாழ்ந்த நிலையில்…
1.அம் முனிவரின் சக்தி இவர் உடலில் செயல்பட வந்து இவர் உடலில் சேர்ந்து இவர் உடலிலேயே இருந்து கொண்டு
2.இவ்வுலக மக்களுக்கு இயேசுவின் வாயிலாக பல உன்னதக் கருத்துக்களை மக்களுக்குப் போதித்தும்
3.பல வைத்திய முறைகளை அளித்தும் மக்களுக்கு பல நன்மைகளை எல்லாம் செய்தும் காட்டினார்.
இயேசு பிரானின் ஒரே எண்ணம் அவ்அன்பே தெய்வம் என்ற எண்ணம் தான். மக்களுக்கு நல்வழி புகட்டி… செய்த பாவங்களை மறந்து நல்ல நிலைக்கு வருவதற்காகப் பாவங்களை மறந்து விட்டு “இனி வாழும் நாட்களில் நன்மையுடன் வாழ வேண்டும்” என்பதற்காகப் பல நல்ல உபதேசங்களை எடுத்துரைத்தார்.
இப்படி அவர் நல்வழி நடத்திச் செல்லும் பொழுது மக்களின் நிலை எல்லாம் அவர் நிலையை உணர்ந்து அவரையே ஆண்டவனாக வணங்கி அவர் நிலைக்கு வரும் நிலை வந்தது.
அப்பொழுது அன்று அங்கு ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களின் நிலையில் தன் நிலைக்குப் பணியாமல் “ஆண்டவன் ரூபத்தில் மக்கள் அங்கு செல்வதைப் பார்த்து” அவ் இயேசு பிரானுக்குப் பல இன்னல்களையும் பல கஷ்டங்களையும் தந்து… பல கொடுமைகளை எல்லாம்படுத்தி அவரை அழிக்கின்றேன் என்று அவர் உடலை அழித்தார்கள்.
இவர்கள் மூன்று நாட்கள் கல்லறையில் உடலை வைத்துப் பார்த்ததின் நிலை என்ன…?
இயேசுபிரான் தான் அம் மாபெரும் முனிவரின் அருளைப் பெற்று அழியாச் செல்வமுடன் அனைத்து உலகத்திலும் என்றும் வாழும் சூட்சும நிலையில் வாழும் பாக்கியம் பெற்றவர் ஆயிற்றே.
அவர் உடலை இவர்கள் அழித்தால் மூன்று நாட்கள் என்ன 3000 ஆண்டுகள் என்ன…? இம்மூவுலகத்திலுமே கலந்துள்ள உத்தம நிலை பெற்றவரை அவர் உடலை அழித்தால் அவரையே அழித்த நிலையாக எண்ணி… அன்று ஆண்ட ஆட்சியாளர்கள் பல நிலைகளைச் செய்தார்கள்.
அவர் உடலை அழித்த பிறகு தன் நிலைக்குச் சாதகமாக அவரின் நிலையை வைத்தே பிறகு பல ஆண்டுகள் ஆண்டார்கள்.
செய்த பாவங்களுக்கெல்லாம் அவர்கள் சாமியார்கள் என்ற நிலையில் வைத்திருப்பவர்களிடம் பொருள் தந்து… நம் பாவங்களை எல்லாம் அவர்களிடம் சொல்லிவிட்டால் அவர்கள் ஆண்டவனிடம் நமக்குப் பாவ விமோசனம் வாங்கி பாவத்தை நாம் கழித்திட நமக்கு நல்லாசி வாங்கித் தருகிறார்களாம்.
தினசரி நாம் செய்யும் பாவங்களைக் கழித்திட நமக்கு ஒரு தூதுவனாம். எப்படி இருக்கிறது ஆண்டவனின் நிலை…?
1.”ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்டவன் உள்ளான்” என்ற உண்மை நிலையைப் போதிக்கவோ
2.அவ் இயேசுபிரானின் உண்மை அறிந்து செயல்படவோ இன்றைய மனிதர்களுக்குக் காலமும் நேரமும் இல்லை.
செயற்கையுடன் கலந்துவிட்ட செயற்கையான மனிதர்கள் இயற்கையின் சக்தியை எண்ணுவதற்கே நேரமில்லை. இவர்கள் எண்ணி வாழ்வதற்குள் இவர்களுக்குக் காலமும் இல்லை. காலத்தையே விரயம் பண்ணாமல் செயற்கையுடன் செயல்படுகின்றார்களாம்.
இவ் இயற்கையின் சக்தியை ஒவ்வொருவரும் புரிந்து அன்றைய உலகில் எப்படிப் பல சித்தர்கள் ஞானிகள் ஆண்டவன் நிலை பெற்றுச் சூட்சும உலகத்தில் செயல்படுகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவருமே ஆண்டவனின் நிலை கொண்டு வாழலாம் என்ற நிலையில் வாழ்ந்திட வேண்டுமப்பா.
1.எல்லாமே ஆண்டவனின் சக்தி தான்
2.அந்த ஆண்டவனின் சக்தியைத்தான் நாம் இன்று சிதறவிட்டு வாழுகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டுப் பிரிந்து தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்.
1.அதாவது இந்த உடலிலிருந்தே உயிராத்மா எப்படி ஒளியாக மாறி வெளியிலே செல்கிறது…?
2.வெளியிலே சென்ற பின் மற்ற மனிதர்களின் உணர்வுகள் எப்படி எல்லாம் கவர்கிறது…?
3.அப்படிக் கவரும் போது குருநாதரின் உயிராத்மா சுழற்சியின் நிலைகள் என்ன செய்கிறது…?
4.தன்னை அணுக விடாதபடி எப்படி விலகிச் செல்கிறது…? என்று அதை எனக்குக் (ஞானகுரு) காட்டி உணர்த்தவும் செய்தார்.
வெறும் துண்டு தான் குருநாதர் கட்டி இருப்பார். பெரும்பகுதி டிச்சிலேயே (DITCH) தான் படுத்திருப்பார். குளிர் காலம் என்று நல்ல ஒரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்தோம் என்றால் அதைக் கிழித்துக் காலிலேயும் கையிலேயும் கட்டிக் கொண்டு “பாருடா… எவனோ கிழித்து விட்டான்…!” என்பார்.
என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…! என்று கேட்டால் கிழித்து விட்டுப் போய்விட்டான்… நான் என்ன செய்வது…? என்பார். படுத்திருந்தேன் கிழித்து விட்டான்…! என்பார்.
அவர் அசூசையைப் பற்றி நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் சிந்தித்தார்.
பைத்தியம் போன்ற அவரின் செயல்களைக் காணும் போதெல்லாம் “ஐயோ… இவரிடம் சிக்கிக் கொண்டோமே… பெரிய தொல்லையாக இருக்கின்றதே…!” என்று தான் எண்ணினேன்.
1.உடலை விட்டுப் போன பிற்பாடு பளீர்… பளீர்… என்று ஒளியின் தன்மை கொண்டு
2.மற்றதைத் தள்ளிக் கொண்டு அவருடைய ஆன்மா விண்ணுக்குப் போகிறது.
3.அப்படிப் போனாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிராத்மா என்ன செய்கிறது பார்…? என்று
4,எல்லாவற்றையுமே எனக்கு முதலில் சொல்லிக் கொடுத்துவிட்டார்.
அன்றைக்கு ஞானிகளும் மகரிஷிகளும் எந்தெந்த நிலைகளில் செயல்பட்டார்கள்…? என்று அதையும் காட்டினார் குருநாதர்.
அதாவது உயிராத்மா வெளியிலே போனாலும்… தன் வலுவின் தன்மை கொண்டு பூமியின் ஈர்ப்புக்குள் வராது தடுத்தாலும்… அந்த உணர்வுக்கொத்த விழுதாக இருந்து பூமியிலிருந்து உயிராத்மாவை உந்தித் தள்ள வேண்டும்.
1.அதற்காக வேண்டித் தான் அவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றாலும்
2.சாதாரண மனிதரைத் தேடி ஞானிகள் வருகின்றனர்.
அவனுக்குள் வரும் இருளான துன்பத்தை நீக்கி விட்டு உடலிலே மகிழ்ச்சியை ஊட்டி… அவனிடமிருந்து வரும் நல்ல மூச்சைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றனர்.
ஒருவர் துன்பப்படுகின்றார் என்றால் இவன் (ஞானி) கஷ்டப்பட்டு பச்சிலைகளையும் மூலிகைகளையும் எடுத்து அவனுக்குக் கொடுத்து நோய்களை நீக்கி அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று செய்தார்கள்.
அன்று இதற்கெல்லாம் காசும் வாங்கவில்லை… ஒன்றும் வாங்கவில்லை.
ஒருவன் துன்பப்படுகின்றான் என்றால்
1.உடனே அவனுக்குள் நிவராணமாகும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சி
2.அந்தத் துன்பமான உணர்வுகளை நீக்கி விட்டு மெய் ஒளியின் சுடராகப் பெருக்கச் செய்து
3.அவனுக்குள் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கச் செய்து
4.மருந்தைக் கொடுத்து நோயை நீக்கி அன்று சந்தோஷப்படுத்தினார்கள்.
“இந்த மகான் நல்லது செய்தார்” என்ற எண்ணத்தை ஏங்க வைத்து அதை ரசித்துத் தனக்குள் எடுத்து விண் சென்றார்கள்.
இன்று சகஜ வாழ்க்கையில் துன்பப்பட்டவரைப் பார்த்தோம் என்றால்
1.நாம் பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வேதனையின் தன்மை இங்கே வருகிறது.
2.ஒரு அசுரத்தனமான உணர்வு கொண்டு “அவன் கிடக்கட்டும்…” என்று எண்ணினால்
3.அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து அதே முரட்டுத் தனமான நிலைகள் கொண்டு சிக்கி அடிபடுகின்றான்.
ஆனால் அந்த மெய் ஞானியோ துன்பப்பட்டவனுக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையை நீக்கி… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து… அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி… அந்த உணர்வின் நிலையாகத் தனக்குள் வளர்த்துக் கொண்டவன்.
அதைத் தான் நாம் நமக்குள் வளர்க்க வேண்டும்.


எத்தகைய சூழ்நிலையிலும் நாம் வேதனையை வளர்த்து விடக் கூடாது
இன்று பெரும்பகுதியானவர்கள் குடும்பத்திலே சிறு சிறு சிக்கல்கள் ஏற்பட்டு அதனால் இனம் புரியாத வேதனைகள் பட்டு அடிக்கடி வேதனைகளையே படுவார்கள் என்றால் “என்ன நடக்கிறது…?”
கர்ப்பமான பெண் அந்த வீட்டிலே இருந்தால் அதனின் கருவிலே விளையும் அந்த சிசுவிற்குள் மேலே சொன்ன வேதனை என்ற நஞ்சுகள் விளைந்து விடுகிறது.
பாவிகள்…! ஏனக்கு இப்படி எல்லாம் தொல்லைகள் செய்தார்களே என்று மற்றவர்களை அந்தத் தாய் எண்ணினால் தாய்க்குக் கை கால் குடைச்சல் எரிச்சல் வாத நோய் இரத்த கொதிப்பு எல்லாம் வருகிறது.
1.ஆனால் கருவிலே விளையக்கூடிய குழந்தைக்கு வேதனை விளைந்து
2.அது பிறந்த பின் எடுத்துக் கொண்டால் அதனுடைய பருவம் வரப்படும் போது
3.ஒரு விஷ வித்து எவ்வாறு வளர்ந்து முழுமை அடைகின்றதோ இதைப்போல
4.அந்தச் சிறு குழந்தைக்குக் கூட “இரத்தக் கேன்சர்” என்று வருகின்றது.
தன் வாழ்க்கைச் சூழ்நிலையில் அந்த வேதனையான நிலைகளை எடுத்து வேதனையையே பார்த்து அது தாய்க்கு ஊழ்வினையாகப் பதிவானாலும் தாயின் கருவிலே விளையும் குழந்தைக்கோ இரத்தக் கேன்சராக மாறுகின்றது சில காலங்களில் அணுக்களின் செல்களில் இந்த உணர்வின் தன்மை அதிகமானால் கேன்சர் ஆகிவிடுகிறது.
இன்று பெரும்பகுதியான நிலைகள் எடுத்துக் கொண்டால் கேன்சர் நோய் அதிகமாக வருகின்றது
1.எங்கே திரும்பினாலும் எத்திசையில் திரும்பினாலும் நாம் காணும் பக்கம் எல்லாம் வேதனை வேதனை என்றே நேருகின்றது.
2.ஆனால் மனிதன் கரு இல்லாத பொழுது அது உடலில் நோயாக மாறுகின்றது.
வேதனைகளை அதிகமாக எடுக்கப்படும் பொழுது… அந்த விஷத்தின் தன்மை…
1.இயல்பாக இருக்கும் நரம்புகளில் இயக்கப்படுமே என்றால் விஷத்தன்மைகள் பாய்ந்து
2.நரம்புகளில் இருக்கும் ஆசிட் என்ற பவரை உறிஞ்சி விடும் நிலை வருகின்றது.
இன்று நாம் மனிதனாக இருக்கப்படும் பொழுது உடலிலே திடீரென்று “இரத்தத்தைக் காணோம்” என்று சொல்வார்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கும் ;பொழுது…!
காரணம்…
1.சில எதிர்மறையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்திலே எடுத்துக் கொண்டால்
2.பாலிலே உப்பு பட்டால் எவ்வாறு பிருத்து விடுகின்றதோ இதைப் போன்று
3.இரத்தத்திற்குள் சில உணர்வின் தன்மை மாறுபட்டால் கெட்டியாக இருக்கும் இரத்தம் நீராக மாறிவிடும்… சிறுநீராகப் பிரிந்துவிடும்.
மனித வாழ்க்கையில் தன்னை அறியாது எத்தனையோ நிலைகள் மாறி “சாகாக்கலையாக” இப்படி எல்லாம் வந்து கொண்டிருக்கின்றது
ஆனால் வேகாநிலை பெற்றவன் அகஸ்தியன். தாயின் கருவிலே ஆற்றல்மிக்க சக்திகளைப் பூர்வ புண்ணியமாகப் பெற்று அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையால்
1.விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சினை வென்றிடும் அந்த நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்று
2.எதனையுமே ஒளியாக மாற்றிக் கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வருகின்றான்… அவனுருடைய சந்தர்ப்பம்.
அந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் மேலே சொன்ன கொடுமையான நோய்களிலிருந்து தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.
பிறருடைய வேதனையான எண்ணங்களைப் பதிவு செய்து கொண்டால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் கவரப்பட்டு எப்படி உடலில் நோயாக மாறுகின்றதோ இதைப் போல
1.தீமைகள் அகற்றி விண்ணுலகம் சென்ற அகஸ்தியனின் உணர்வை
2.நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.
ஆகவே… அகஸ்தியனுடைய பேராற்றலை நமக்குள் வளர்த்துக் கொள்வோம். நோய் நெகெகும் சக்தி பெற்று உடல் நலத்துடன் வாழ்வோம் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் வழி
உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.
இது… ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!
“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.
எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி
1.”நம் எண்ணத்தை”
2.அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்.
அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
அப்பொழுது உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம் சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நமக்கு இந்த உடல் சொந்தமா…? நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் நமக்குச் சொந்தமா…? ஆகவே இனி நாம் சேமிக்க வேண்டிய அழியாச் சொத்து எது…? என்பதை முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.இனி இருப்பதாவது நல்லதாக இருக்க வேண்டும்.
3.மற்றவர்களுக்கு ஒரு நல்ல அறிவும் ஞானமும் வர வேண்டும்
4.அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
ஏனென்றால் எல்லாமே செய்கிறோம். ஆனால் இந்த உடலை விட்டு உயிரான ஈசன் போய்விட்டால் என்ன செய்கிறது…? உடல் நீசமாகிறது. முதலில் சிவம் என்று சொல்கிறோம். கடைசியில் இதைச் “சவம்” என்று தான் சொல்கிறோம்.
அப்படி என்றால் நாம் எதை மதிக்க வேண்டும்…?
நம் உயிரை நாம் மதித்தாக வேண்டும்…! அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அதை வலுவாக்கிய பின் இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும்
1.நாம் எப்பொழுதும் அவனுடன் நிலையாக இருக்கலாம்.
2.அவனுடன் அவனாகவும்… “அவனாகவும்” நாம் வாழலாம்.
3.ஏனென்றால் உயிரால் உணர்வால் எடுத்துக் கொண்ட ஒளியின் நிலைகள் அது.
ஆனால் இப்பொழுதும் நாம் அவனுடன் அவனாகத் தான் வாழ்கிறோம். எப்படி…!
அன்றாட வாழ்க்கையில் நாம் எதை எதை எல்லாம் எடுக்கின்றோமோ “அந்த இம்சை எல்லாம்…” இந்த உடலில் இருக்கிறது. எம்மம்மா… ஐய்யய்யோ… அப்பப்பா…! இதுவும் அவனுடன் தான் வாழ்கிறோம்.
ஆகவே இருளை நீக்கிப் பொருள் காணும் உணர்வை உயிருடன் ஒன்றச் செய்யும் போது ஒளியின் சரீரமாகி நிலையான நிலைகள் பெறுகின்றோம்.
நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக இருக்கலாம்.
அது தான் கல்கி…!
1.உயிர் ஒளியாகின்றது… பல நிலைகளை வெல்கிறது.
2.மனிதனாக ஆன பின் நரசிம்மா… தீமைகளைப் பிளக்கின்றது.
3.தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை விளைய வைக்கின்றது.
4.விளைந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி என்றும் நிலைக்கின்றது – கல்கி.
ஆனால் கல்கி எங்கேயோ இருக்கின்றான் என்று நாம் நினைக்கின்றோம்.
நம் உயிர் தான் கல்கியாக… அதிலே உணர்வுகள் வளர்ந்தது போல் எதனை இணைக்கின்றோமோ அதன் நிலை கொண்டு அதுவாகிறது. கார்த்திகேயா (வெளிச்சம்) தெளிந்திடும் அறிவு வருகிறது.
இந்த உடலில் அதைப் பெற்ற பின் இன்பத்தின் உணர்வின் தன்மை கொண்டு அவனுடன் இணைக்கும் போது என்றும் பேரின்பப் பெரு நிலை அடைகின்றது.
இந்த வாழ்க்கையில் கஷ்டம்… நஷ்டம்… துன்பம்… எல்லாம் வரும்.
1.கஷ்டம் வந்தாலும் உயிரின் பிடிப்பை விட்டு விடக் கூடாது.
2.அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அதைச் செயல்படுத்த வேண்டும்.


இன்பமும் துன்பமும் கலந்தே வரும்…! வந்ததை எண்ணியோ… வருவதை எண்ணிக் கொண்டோ இருந்து என்ன பயன்…?
ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லா சக்திகளையும் அளித்துள்ளான் சக்தி தேவன்
1.அந்நிலையை எப்படி ஈர்த்து வாழ்வது…? என்ற நிலையை
2.நாம் தான் வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.
நம் ஞானக் கண்ணினால் நாம் இருந்த நிலை கொண்டே உலக அனைத்திலும் உள்ள நிலைகளை அறிந்து செயல்பட முடியும். நம் ஞானக்கண்ணினால் “நாம் நம்மை மறந்து தியான நிலையில் அமர்ந்து காண்பது அல்ல அந்த ஞானக்கண்ணின் நிலை…”
நாம் சகல நிலை கொண்டும் வாழ்க்கை முறையில் வாழும் பொழுது கோப நிலையில் சாந்த நிலையில் துவேஷ நிலையில் பிறரைப் போற்றும் நிலையில் சோர்வு நிலையில் மகிழ்வு நிலையில் இப்படிப் பல நிலை கொண்ட வாழ்க்கை நிலையில் ஒவ்வொரு நிலைகொண்டும் நாம் இருக்கும் பொழுது நம் சுவாச நிலை நம் உயிரணுவிற்கு எந்த நிலையை ஏற்றுத் தருகின்றதோ அந்நிலையில் இருந்து தான் நம் அகம் புறம் ஞானம் செயல்படுகிறது.
1.நடைமுறையில் சஞ்சலங்களும் இன்பங்களும் நம் வாழ்க்கையுடனே கலந்து தான் வரும்.
2.வந்ததை எண்ணியோ வருவதை எண்ணிக்கொண்டோ இருந்து என்ன பயன்…?
ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு அச்சக்தியில் இருந்து கிடைத்த அந்த ஞானக் கண்ணின் நிலையைப் பெற்று ஆத்மாவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நம் ஆத்மாவை நம் உடலும் நம் எண்ணமும் காத்துக் கொண்டிருக்கவில்லை.
1.நாம் எடுக்கும் சுவாச நிலையினால் தான் சகலமும் நடக்கிறது.
2.சுவாசம் என்பதனை ஒரு பெரும் பொக்கிஷமாக யாரும் எண்ணுவதில்லை.
நம் உடலில் உள்ள எல்லாப் பாகங்களுமே அச்சுவாச நிலையை ஈர்த்து வெளியிடும் தன்மை உள்ளது. இந்நிலையின் உண்மை எல்லாம் அன்றைய சித்தர்கள் தன் ஞான நிலையால் அறிந்து வெளியிட்டார்கள்.
தாவரங்கள் எல்லாவற்றுக்குமே “உயிர் நிலையும்… சுவாச நிலையும் உண்டு…” எல்லாமே அதனதன் தன்மையுடன் தான் இயங்கி ஜீவிக்கின்றன.
பல வகை தாவரங்கள் இவ் ஆறறிவு என்னும் மனிதனால் அழிக்கப்பட்டு விட்டன. அத்தாவரங்களின் மகத்துவத்தை எல்லாம் பல சித்தர்கள் கண்டுணர்ந்து அவற்றை வைத்திய முறைக்கும் வாழ்க்கை முறைக்கும் பயன்படும் நிலையில் எடுத்துரைத்துச் சென்றுள்ளார்கள்.
தாவரங்களிலே உள்ள நிலை கொண்டு தான் “உயிர் காக்கும் மருந்துகளாகப் பயன்படும் எல்லாமே நமக்குக் கிடைத்தன…”
பல கொடிய விஷம் வாய்ந்த தாவரங்களும் உள்ளன. சில வகைப் பச்சிலைகள் கொண்டு நம் சுவாச நிலைக்கு ஈர்க்கும் பொழுது நம்மையே மறக்கச் செய்யும் மயக்க நிலைக்குச் செல்லலாம். இன்னும் சில தாவரங்கள் நாம் காணும் பொழுதே நம்மை ஈர்த்து அந்த நிலைக்கு நம்மைச் சுற்றிக் கொண்டு மனிதன் உடலையே எலும்புக் கூடாக்கி வெளியிடும் தன்மையில் உள்ளன.
இன்னும் சில தாவரங்களின் நிலையைக் கொண்டு அதை அரைத்து நம் உடலில் பூசிக் கொண்டால் இவ் உடல் எந்த நிலையிலும் வயது வித்தியாசம் தெரியாமல்… எந்த வயதில் நாம் பூசிக் கொள்கின்றோமோ அந்த வயதில் இருந்த நிலை போல் என்றும் இருக்க வல்லமை தன்மையுடையது.
இந்நிலை கொண்ட பல வித மூலிகைகளும் நம் உலகிலேயே கலந்து செழித்து வளர்கின்றன. அம் மூலிகையின் உன்னதத் தத்துவத்தை முற்றும் அறிந்தவர் இதுவரை யாரும் இல்லை. அறிந்த நிலையையும் முற்றும் வெளியிட்டவரும் யாரும் இல்லை.
நாமே இந்த பாடத்தில் பல மூலிகைகளின் தன்மையைத் தான் எடுத்துரைத்தோம். அந்த மூலிகையின் பெயரைச் சொல்லவில்லை.
1.முற்றும் சொல்லிவிட்டால் பல சித்தர்களின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டி வரும்.
2.நாம் தனித்த நிலையில் எதையும் வெளியிடவும் முடியாது.
இந்த நிலை போலத் தான் இவ்வுலக நிலை முதற்கண்டு இவ்வுலகில் நடக்கும் எல்லா நிலைகளும் சந்திரனிலிருந்து சூரியன் முதற்கொண்டு மற்ற எல்லாக் கிரகங்களும் சூரியனுக்கு மேல் பல சூரியன்களும் எல்லா நிலைகளுமே…! தனித்த நிலையில் “நான்” என்ற நிலையில் ஒன்றுமே இயங்கவில்லை.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதனின் வாழ்க்கையில் தீமைகளைப் பிளந்து தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து நம் உணர்வின் அறிவால் தெளிந்திட்ட அந்த ஞானிகளின் உணர்வைச் சேர்க்க வேண்டும்.
அப்படிச் சேர்க்கப்படும்போது தீமையான உடலைப் பிளந்துவிட்டு தீமையைப் பிளந்திடும் உணர்வின் சக்தியாக ஒளியின் சரீரம் பெற முடியும்.
1.பரிணாம வளர்ச்சியில் நாம் வளர்ந்து வந்த முறை இது.
2.அதன் வழியில் நாம் எளிதில் விண் செல்ல முடியும்
அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.
1.எல்லோருக்கும் கிடைக்கும்படியாக ஒருக்கிணைந்து சக்தி பெறும் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.
2.இந்த முறைப்படி எல்லோரும் செய்யுங்கள்.
3.எல்லோரையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள்.
எந்தத் தீமையைக் கண்டாலும்…
1.”தீமை…” என்ற வார்த்தையைச் சொல்லாது (இது முக்கியம்)
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
தீமையிலிருந்து மீளவேண்டும் என்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று சொன்னால் போதும்…!
காரணம்… மற்றவர்கள் செய்யும் தீமைகளைத் “தீமை… தீமை” என்று அதை நாம் பதிவு செய்து கொண்டால் அதன் பின் அந்த தீமையின் உணர்வே நமக்குள் விளைந்து இது முன்னாடி வந்துவிடும்… நல்ல குணங்களுக்குள் இது கலந்துவிடும்.
1.ஆகையினால் இதை (தீமைகளை) மறந்து அருள் சக்திகளை எடுத்து
2.அதனின் உணர்வுகளைப் பாய்ச்சக் கற்றுக் கொள்ள வேண்டும்.
3.சிறிது நாளைக்கு இப்படிப் பழகிக் கொண்டால் அது தீமைகளை அகற்றும்… நமக்கு மிகவும் நல்லதாகும்.
குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அலைந்து அதிலே கண்டறிந்ததைத் துணுக்குத் துணுக்காக உங்களுக்குள் சொல்லிக் கொண்டே வருகின்றேன். உயர்ந்த சக்திகளை நீங்கள் பெறுவதற்கு இணைத்து இணைத்துக் கொடுக்கின்றேன்.
நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதி பெற்று எதிர்காலத்தில் எல்லோரையும் காக்கக்கூடிய உணர்வாக உங்களுக்குள் வளர்க்க வேண்டும்.
எங்கே… யாருடைய… கஷ்டங்களைப் பார்த்தாலும் உடனே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் “தியானிக்க வேண்டும்…” மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று கஷ்டங்கள் நீங்கி அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று “தவமிருக்க வேண்டும்…”
நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று “நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்…!” என்ற இந்தத் தவத்தை எடுத்தால் நமக்கு நல்லதாகின்றது… அவர்களும் நலம் அடைகிறார்கள். இந்த முறையை நாம் கடைப்பிடிப்போம்.
வியாபாரம் குறைவாக இருந்தாலும் எப்படியும் இதைச் சீர்படுத்த வேண்டும் என்ற உணர்விலே நாட்டத்தைச் செலுத்தினால் அதற்குண்டான வழி கிடைக்கும்… வியாபாரம் சீராகும்.
ஒருவருக்கு நோய் வந்து விட்டால்
1.மகரிஷிகள் அருள் சக்தியால் சீக்கிரம் அவர் நலம் பெற வேண்டும்… குணமாக வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
2.நோயைப் பற்றி எண்ணி… அதனின் வலுவைக் கூட்டக் கூடாது.
3.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை எல்லாம் ஒவ்வொரு நாளும் நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் கெட்டதை அழுத்தமாகச் சொல்லாதபடி… “நல்லது பெற வேண்டும்” என்பதற்கே அந்த அழுத்தத்தைக் கூட்ட வேண்டும்.


தீமையை அடக்கி ஆளும் சக்தியை நீங்கள் பெறுங்கள்
இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்துணர்ந்து அதனின் செயலை அறிந்து கொண்ட பின் மக்களுக்கு நீ ஓது என்றார் குருநாதர்
1.நாம் அல்ல…! நாம் நுகர்ந்த உணர்வுகள் எப்படி எல்லாம் இயக்குகின்றது…? பார்…! என்று குருநாதர் எனக்குத் தெளிவாக்கினார்
2.அதைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.
கண்ட அனுபவங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் கொண்டே வருகின்றேன். எப்படியோ அருள் உண₹சிகளைத் தூண்டித் தூண்டித் தூண்டித் தூண்டி உங்களுக்குள் அந்தச் சக்தியைப் பெறச் செய்கின்றேன்.
கூர்மையாக உங்களைப் பார்க்க வைக்கின்றேன்.
1.நாளை ஏதாவது சந்தர்ப்பத்தால் ஏற்பட்டால் “உடனே ரிமோட் செய்து”
2.எப்படி இருக்கின்றது…? என்ன செய்கின்றது…? என்பதை உணர்ந்து
3.நீங்கள் திருந்தி வாழ்வதற்கு இது உதவி செய்ய வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறேன்.
உங்களை இயக்காதபடி “அந்தத் தீமையை அடக்கி ஆளும் சக்தி நீங்கள் பெற வேண்டும்” என்பதற்குத்தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பது
குரு அருளைப் பெற முயற்சிப்போம். இந்தச் சக்தி பெற்ற பின் அதன் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்… உடல் பெற்ற நஞ்சுகளைக் கரைப்போம்.
அவர்கள் ஒளியாக மாறினால்… அவர்களை மீண்டும் நாம் எண்ணும் பொழுது நம்முடைய பாதை சீராகச் செல்லும் அதனுடைய உணர்வைப் பெற்று நாம் தீமையிலிருந்து விடுபட முடியும்.
அவர்கள் முன்னாடி விண் சென்றால் நாம் அவர்கள் வழியில் பின்னாடி செல்வது எளிதாகும். அவர்கள் ஒளியான உணர்வை நாம் எடுத்து நாமும் ஒளிச் சரீரமாக முடியும். ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம்.
1.இதை எல்லாம் உருவாக்கிப் பேச வைத்தது… உணர்த்துவது யார்…? உயிரான ஈசன் தான்.
2.இந்நேரம் வரை கேட்டறிந்த உணர்வுகளைக் உடலாக உருவாக்குவது யார்…? உங்கள் உயிர் தான்.
நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி “உங்களை அந்த ஞானிகள் உணர்வு வழி நடத்த வேண்டும்” என்ற உணர்வை வைத்துத் தான் பேசினேன் (ஞானகுரு).
நுகர்ந்த உணர்வுகள் எந்த அளவுக்குப் பதிவாகின்றதோ வசிஷ்டர்…! யாம் உபதேசிப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.
ஏதோ சொல்கின்றார் சாமியிடம் விபூதி வாங்கிச் சென்றால் போதும் என்றால் கவனம் அதிலே தான் இருக்கும். அந்த அறிவின் ஞானம் நமக்குள் வளராது.
ஆகவே உண்மையின் உணர்வின் தன்மையை உணர்ந்து பிறவியில்லா நிலை அடைவோம். இன்னொரு பிறப்பு இல்லாத நிலை அடைய வேண்டும்.
1.எப்படியும் இந்த உடலை விட்டுச் செல்ல வேண்டி வரும்
2.அதற்கு முன் இருளை நீக்கும் அருள் ஒளி என்ற உணர்வை நாம் பெற முற்பட வேண்டும்.
மனிதனின் கடைசி நிலை… அது தான் இராமேஸ்வரத்தில் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தனுசுக்கோடி. தீமைகளை நீக்கி நம் மனதை ஒன்றாக்க வேண்டும் என்ற நிலையில் “இராமன் மனதைக் குவித்து தியானித்தான்” என்று அங்கே காட்டியிருப்பார்கள்.

இன்று நாம் வாழ்வது அனைத்துமே “கனவு தான்…!”
நம் வாழ்க்கையையே நாம் பெரும் கனவாக்கித் தான் வாழ்கின்றோம். கனவும் நினைவும் கலந்த வாழ்க்கையில் வாழ்கின்றோம். நம்மின் நிழல் நம்மையே சுற்றிக் கொண்டுதான் உள்ளது. நம்மை நாம் நிழலில் தான் காண்கின்றோம்.
நம்மை நாம் நம்முடைய சுய ரூபத்தில் என்று காண்கின்றோம்…?
1.நாம் உறங்கும் நிலையில் காணும் கனவும்
2.நாம் இன்று இருக்கும் நிலை நாளை நினைத்துப் பார்க்கும் நிலையும்
3.நாளை நமக்கு நடக்கப் போகும் நிலையை இன்று காண்பதுவும்… பெரும் கனவுதான்.
நம்மில் ஒளிபடும் பொழுது நம் நிழலை நாம் காண்பதுவும் கனவு தான். நாம் வாழ்ந்த காலம் முடிந்து முடிந்தும் முடியாமலும் நம் உடலை விட்டு ஆத்மா பிரிந்த பிறகும் நடந்தது யாவுமே கனவுதான்.
நிலைத்து நிற்பது எதுவப்பா..?
எல்லாமே கனவாக உள்ள பொழுது நிலைத்து உள்ளது ஒன்றே ஒன்றுதான். அவ்வொன்றுக்காக அவ்வொன்று இருப்பதையே நாம் மறந்து விட்டுக் கனவில் தான் வாழ்கின்றோம்.
1.ஆத்மா என்ற பேரானந்த அந்த ஒரே சொத்தை நாம் மறந்து விட்டு
2.இந்தக் கனவுலகத்தில் இன்னும் நம்மை அறியாமல் நாம்… நம் காலத்தையும் நம் சக்தியையும் சிதறவிட்டு
3.நம் ஆத்மாவிற்கு அதிகத் துன்பத்தை மேன்மேலும் சுமக்கச் செய்து
4.நம் காலத்தையும் நமக்குச் சக்தி அளித்த சகல தேவனின் சக்தியையும் சிதறடித்துத் தான் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?
1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.
நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.
நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.
அந்நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.
இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?
பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.
கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் இந்நிலையின் உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.
இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.
இந்நிலையில் இக்காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் கண்டிடும் வண்ணம் “நம் சுவாச நிலையை நாம் ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.
நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.
நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.
ஆகவே அத்தகைய எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.
அந்நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.
கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அந்நிலை கொண்டே தான் கனவிலும் நடக்கின்றது.
நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது. அந்நிலையிலிருந்து…
1.நாம் இதை எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருந்திட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒவ்வொரு சமயத்திலும் குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படி ஞானத்தைப் போதித்தாரோ… அதை அப்படியே உங்களுக்கும் போதிக்கின்றோம்.
அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்தால்…
1.வாழ்க்கையில் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அதுவே உங்களுக்கு வழி காட்டும்
2.அருள் ஞானத்தைப் பெறச் செய்யும்
3.இருளைப் பிளக்கச் செய்யும்… பொருளைக் காணச் செய்யும்.
அறியாது தவறு செய்கிறார்கள் என்றாலும் அதிலே உள்ள பொருளைக் காண முடியும். இருளைப் பிளந்து காட்டும்… உண்மையின் தன்மையை அறிய முடியும்.
அப்பொழுது அருள் ஞானத்தின் சக்திகள் நமக்குள் பெருகுகிறது. நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் தீமைகளை அது பிளக்கிறது. பொருள் காணும் திறனை நாம் பெறுகின்றோம்.
சிறிது காலத்திற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் அனுபவம் பேசும்.
ஏனென்றால் காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாக உள்ளது.
இருந்தாலும் அதை நாம் ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் அதைச் சீக்கிரம் நமக்குள் இழுக்கும். “ஐயோ… நச்சுத் தன்மையாக இருக்கிறது…” என்று அதைப் பதிவு செய்து விட்டால் அடுத்து அந்த நச்சுத் தன்மை தான் நமக்குள் வரும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்
2.எல்லோருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் உயர்வு கிடைக்க வேண்டும் என்ற
4.இந்த உணர்வை எண்ணி எடுத்துக் கவர்ந்து அதை இங்கே பரப்பினால் போதும்.
ஆனால்…
1.நச்சுத் தன்மை… நச்சுத் தன்மை… என்ற அந்த உணர்வையே நுகர்ந்து கொண்டிருந்தால்
2.அதை இழுக்கின்றது… நம் ஆன்மாவாக மாற்றுகின்றது… நம்மையும் நஞ்சாக மாற்றத் தொடங்குகிறது.
இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு மெய்ப் பொருளைக் காணும் நிலைகளுக்கு நாம் வர வேண்டும். நம்மைக் காத்து மற்றவரையும் காக்கும் சக்தியாக அந்த ஞானத்தின் வழித் தொடரில் நாம் செயல்படுத்த வேண்டும்.
அதற்காக வேண்டித் தான் நமது குரு அருளைத் திரு அருளாக உங்களுக்குள் மாற்றும் நிலைகளுக்கு இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு). உங்களை நீங்கள் காத்துக் கொள்ள “குரு அருளை… திரு அருளாகக் கொடுக்கின்றோம்…!”


ஒவ்வொருவருக்குள்ளும் “குருசேத்திரப் போர்” நடந்து கொண்டே இருக்கின்றது
நாம் தொழில் செய்து கொண்டிருக்கின்றோம்… அந்த இடத்தில் ஒருவன் தவறு செய்கிறான். பார்த்த பின் என்ன ஆகிறது…? “கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் குருசேத்திரப் போர்…!”
1.தப்பு செய்தவனைப் பார்த்த உடனே இந்த உணர்வை நுகருகின்றோம்.
2.கண்கள் பார்க்கின்றது… கருவிழி பதிவாக்குகின்றது.
3.அவன் செய்த தவறான உணர்வுகள் சத்தியபாமா உயிரிலே மோதச் செய்கின்றது.
அவன் மிகவும் மோசமானவன் என்று பார்த்தவுடனே குருச்சேத்திரப் போர் நடக்கின்றது உடலுக்குள் ஆனபின் அவனைக் கெட்டவனாகச் சொல்லித் திட்டும்படி செய்கின்றது… வெளியிலே போகச் சொல்கின்றது. குருசேத்திரப் போர் நடக்கின்றது.
1.வெளியில் போடா…! என்று சொல்லி வேதனைப்படுத்தும் போது அதை ரசிக்கின்றோம்.
2.அந்த ரசிக்கும் தன்மை வந்து விட்டால் நமக்குள் வேதனை வருகின்றது.
நாம் தவறு செய்தோமா…? இல்லையே…! ஆனால் சந்தர்ப்பத்தில் இப்படி வந்ததைத் துடைக்க என்ன வைத்திருக்கின்றோம்…?
அடுத்தாற்போல் அவனை திரும்பப் பார்த்த உடனே அவன் செய்த தவறு நமக்குள் பதிவானது மீண்டும் அந்தத் தவறை உணர்த்தி குருசேத்திரப் போர் ஆரம்பிக்கின்றது.
1.நாளை ஏதாவது செய்து விடுவானா…? என்ற இந்த உணர்வுகள் வருகிறது.
2.ஆகாதவனைக் கண்டாலே இப்படித் தான் இந்த உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது
வீட்டில் சிறிது கலக்கமாக இருந்தால் சந்தேக உணர்வு வந்து கொண்டே இருக்கும். ஆகவே குருசேத்திரப் போர் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
பையன் மீது நம்பிக்கையுடன் இருந்து சொத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றீர்கள். அவன் கொஞ்சம் தவறாக நடக்கின்றான் என்றால் அவனை எண்ணும் போதெல்லாம் குருச்சேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது.
அப்பொழுது அரக்கன் என்ற அந்த உணர்வு “சீதா” என்ற நல்லதைச் செய்ய விடாதபடி தடுத்துக் கொண்டே இருக்கின்றது வேதனை என்று வந்தபின் மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்கள் அடக்கப்படுகின்றது.
கலி…! தீமைகளைத் தான் வளர்க்க முடிகின்றது நல்லதை வளர்க்க முடியவில்லை. ஆகவே கலியுகமாக இருக்கின்றது.
ஆனால் அந்த உணர்வின் தன்மைகளைத் தெரிந்து கொண்ட பின் கார்த்திகேயா. தீமை புகாது தடுத்துக் கொள்வது சேனாதிபதி. நமது ஞானிகள் இந்தத் தத்துவங்களைக் கொடுத்துள்ளார்கள் சிறிதளவாவது அதை நாம் பின்பற்றுகின்றோமா…?
நன்றாக யோசனை செய்து பாருங்கள்.
1.உங்களிடம் உபதேசங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவாக்கிப் பதிவாக்கி…
2.அதை நீங்கள் புரிந்து அந்த உணர்வின் தன்மை வளர்ச்சியாகி
3.உங்களை அறியாது ஏதாவது தவறுகள் வந்தாலும் உடனே ரிமோட் செய்து
4.உடனே நல்லதாக மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி வர வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பப் பதிவாக்குவது.
தவறு செய்வதைப் பார்த்தால் கோபமான உணர்ச்சிகள் தோன்றுகின்றது. அந்த உணர்வு நம்மை இயக்காதபடி ரிமோட் செய்து விட்டால் நமக்குள் புகாதபடி தடுக்கப்படும். “அவனுக்கு நல்ல அறிவு வரட்டும்” என்று அந்தத் தீமை நமக்குள் புகாது தடுத்திடும் சேனாதிபதி.
ஆகவே குரு வழி என்ன…? நாம் கவர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வுகள் வலுப்பெறுகின்றது அது தான் வசிஷ்டர் பிரம்மகுரு.
மற்றவர்கள் செய்யும் உபதேசங்களை இவ்வளவு நேரம் உங்களால் கேட்க முடியுமா…? அவர்கள் என்ன பேசுகின்றார்கள்…! இவர்கள் என்ன பேசுகின்றார்கள்…? திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
இப்போது உங்களுக்குள் எப்படியும் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று குரு காட்டிய வழியிலே “ரெக்கார்ட்” செய்கின்றேன்.
1.அதன் பின் சிறிது நேரம் சிந்தித்தீர்கள் என்றால்
2.ஞானிகள் பெற்ற உணர்வு உங்களுக்குள் அந்த ஞானத்தைப் பேசும்.
உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டு சென்றால்… அங்கிருந்து திருடனே வந்தாலும் கூட உடனே அதைத் தெரிந்து கொள்ள முடியும். அந்தச் சுதாரிப்பைக் கொடுக்கும்.
ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு வர வேண்டும் என்பதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.
யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அதனின் வலிமையைக் காட்டி விடுகின்றது.
1.ஆக மொத்தம் அதைக் காட்டிலும் வலிமையான துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்
2.இதன் வலிமையைக் காட்டும் பொழுது தீமையிலிருந்து விடுபட்டு நீங்கள் தெளிந்து வாழ முடியும்.
வேதனை என்ற உணர்வு வந்து விட்டால் கலி. ஆனால் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் கல்கி.
உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி வர வேண்டும் அதைப் பெறச் செய்வதற்கு தான் யாம் உபதேசிப்பது (ஞானகுரு).

ஒரே நிலை கொண்ட ஈர்க்கும் சக்தி பெற வேண்டும்
மிருகங்கள் தன் ஆகாரத்தைத் தேடிச் செல்லும் பொழுது ஆகாரம் இருக்கும் இடத்தைத் “தன் சுவாச நிலையால் உணர்ந்து” அந்த இடத்தை அணுகி ஆகாரத்தை எடுத்துக் கொள்கின்றது.
அதே நிலையில் அது செல்லும் பொழுது “தன் எதிரி உள்ளது” என்பதையும் தன் சுவாச நிலையில் உணர்ந்துதான் தப்பிச் செல்கின்றது. அதே போல… தன் கூட்டமும் எதிரிகளிடமிருந்து விலகிச் சென்று விடுகின்றது.
இந்நிலை மனிதர்களுக்கு இல்லை.
இதைப் போலவே தன்னுடைய ஆகாரத்தைத் தேடிப் போகும் பொழுது தன்னுடைய சுவாச அலைகளைக் கொண்டு தன் ஆகாரம் இருக்கும் இடம் ஈர்த்து அந்த இடத்தை நோக்கிச் செல்கின்றது.
அதே சமயம் அது தான் ஆகாரத்தை எடுக்கச் செல்லும் பொழுது
1.தன் எதிரி வருகிறான் என்று உணரும் பொழுது
2.தான் நாடிச் சென்ற ஆகாரத்தையும் எடுக்காமல் அது திரும்பிச் செல்கின்றது.
பட்சியின் தன்மையில் அதன் ஒளியை கொண்டே அது தன் ஆகாரத்தை எடுக்கும் சக்தி நிலை பெற்றது. அந்த ஒளி ஆகாரத்தின் மேல் பாய்ச்சும் பொழுது
1.அந்த இடத்தில் உள்ள சப்த அலைகளைக் கொண்டு உணரும் தன்மை பெற்று
2.அங்கு எதிரி வரும் தன்மையை அப்பார்வையின் ஒளியினாலேயே அவ்வெதிரியின் சுவாச நிலை அறிந்து
3.ஆகாரத்தை எடுக்காமல் பறந்து செல்கின்றது.
மற்ற ஜெந்துக்களுக்கு மிருகங்கள் பட்சிகள் (ஊரும் ஜந்துக்கள் அல்ல) முன்கூட்டியே மழை இடி பூகம்பம் போன்ற பல ஆபத்தான நிலைகளின் சப்த அலைகளைப் பூமியின் ஈர்ப்பு நிலை கொண்டு அதன் சுவாச நிலைக்கு ஈர்க்கும் தன்மை பெற்று “முன்கூட்டியே” இந்நிலையை அறியும் நிலை அதற்கு உள்ளது.
1.மனிதனுக்கு உள்ள அறிவு சக்தியை விட மிருகங்களுக்கு இயற்கையிலேயே “ஒரே நிலை கொண்ட ஈர்க்கும் சக்தி உள்ளது…”
2.அந்நிலையை மனிதன் பெற வேண்டும் என்றால் தியானத்தால் தான் பெற முடியும்.
இயற்கையிலேயே ஒவ்வொரு மிருகத்திற்கும் இப்படிப்பட்ட சக்தி இருந்தாலும் அதைச் செயல்படுத்த அதற்கான அங்கங்கள் கருவிகள் அதனிடத்தில் இல்லை. எழுதி வைத்தோ செயல்படுத்தவோ முடியாத உடலமைப்பைக் கொண்டது.
மனிதன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தன் எண்ண அலைகள் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு மூன்று மாத காலம் பேசாமல் இருந்துவிட்டு பிறகு பேச முயற்சிக்கும் பொழுது சில சமயம் பேச முடியாத நிலையில் சைகை மூலமாகச் சொல்லும் பொழுது அதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
தனக்கு எவ்வளவோ எண்ண அலைகள் வந்தாலும் கூட தன்னால் சொல்ல முடியாத நிலையில் மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
மிருகங்களுக்கோ பட்சிகளுக்கோ எண்ண உணர்வுகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமலும் செயல்படுத்த முடியாமலும் போய்விடுவதினால் அதற்கு நம்மை ஒத்த அறிவு இல்லை என்று சொல்லிவிட முடியாது.
நம்மைக் காட்டிலும் மேலான அறிவு நிலை பெற்ற பல மிருக ஜந்துக்களும் பட்சிகளும் உள்ளன. அது உண்ணும் உணவிலே தனக்குத் தேவைக்கு மேல் ஒரு அணுவையும் அதிகமாக எடுத்துக் கொள்ளாது.
மனிதனுக்கு அறிவு மிருகத்தை விட அதிகம் என்று சொல்கின்றோம்.
1.ஆனால் உண்மையில் மிருகத்தின் அளவு மனிதனுக்கு அறிவு உண்டா…? என்பதுதான் சந்தேகம்.
2.மனிதனை விட மிருகத்துக்கே அறிவு அதிகம் என்று கூடச் சொல்லலாம் “இன்று மனிதன் இருக்கும் நிலையை வைத்து…”
அன்றைய சித்தர்கள் எந்த நிலை கொண்டெல்லாம் பல உண்மை நிலைகளை அறிந்தார்களோ அந்நிலை கொண்டெல்லாம் சில மிருகங்கள் நாய் நரி பறவைகள் இன்னும் பல மிருகங்கள் பல ஆவி நிலைகளை அறிந்திடும் நிலையில் உள்ளன.
ஒரு வீட்டில் ஏதாவது உடலை விட்டு ஆவி பிரியும் நாள் வருவதற்கு முதலிலேயே… மிருக நிலைக்கு அதன் சுவாச நிலை கொண்டு அதை அறியும் நிலை உள்ளது.
அந்நிலையில் தான் நாயும் நரியும் பூனைகளும் உள்ளன.
1.ஆவி பிரியும் நிலையில் பூனைகள் அங்கும் இங்கும் ஓடுவதைப் பார்த்திடலாம்.
2.ஆவி பிரியும் நிலையில் பூனைகள் அங்கு இருக்காது. அதன் சுவாச நிலைக்கே அது தெரிந்திடும்.
ஆவி நிலை மட்டுமல்ல பெரும் வெள்ளம் வருகிறது என்றாலும் பூனை நாய் நரி இப்படிக் கூரிய அறிவுடைய மிருக ஜந்துகளுக்கு சுவாச நிலையில் எல்லா நிலையுமே அறியும் தன்மை உள்ளது.
இம்மாதிரி மிருகத்தின் நிலைக்குத் தான் கடந்த கால சரீரங்களின் இன்ப துன்ப நிலைகளும் தன்னைச் சுற்றியுள்ள ஆவி நிலைகளும் மனிதனின் எண்ணமும் சுவாச நிலையும் ஒவ்வொன்றும் அறியும் தன்மை மிருகங்களுக்கும் சில பட்சிகள் நிலைக்கும் உள்ளன.
இந்நிலையில் இருந்து எல்லாம் மாறுபட்டு வாழும் நிலை கொண்டவன் தான் மனிதன். இருந்தாலும்
1.மனிதனுக்கு அச்சக்தி நிலை கொண்டு கிடைத்த பாக்கியத்தைச் சிதறவிட்டு
2.மனிதனுக்கு ஆறு அறிவு என்ற அளவை வைத்துப் பிறரிடம் ஜோசியம் கேட்டு
3.அந்த ஜோசியத்தின் நிலை கொண்டே தன் எண்ணத்தை மாற்றிப் பல நூல்களைப் படித்து
4.பல எண்ணத்தைத் தன்னுள் சிதறவிட்டுத் தனக்குள்ள சக்தி நிலையையே மாற்றிக் கொண்டு
5.தன்னைத்தானே நரகமாக்கி வாழுகின்றான் ஆறறிவு படைத்த இன்றைய மனிதன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி
2.“மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்…” என்று
3.நம் கண்ணின் நினைவினை விண்ணிலே செலுத்தி அதைக் கவர்ந்து
4.உள்முகமாக உயிர் வழியாகக் கொண்டு வந்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
5.இப்படிச் செய்தால் இது “நல்லதைச் சிந்திக்க இடம் கொடுக்கும்…”
ஆனால் சிந்தனையற்ற செயலை ஒருவன் செய்கிறான்… நாம் பார்க்க்கின்றோம். அதனால் வரும் எதிர்ப்பு உணர்வையோ வேதனைப்படும் செயலையோ நாம் நுகர்ந்து விட்டால் அடுத்து ஒரு வேலையைச் செய்தால் என்ன ஆகும்…?
ஒரு கணக்கைப் பார்த்தோம் என்றால் கிடக்குது போ…! என்று இந்த உணர்வு தான் வரும்… சரியாக வராது. அந்த வேலையை வெறுக்கும் நிலை தான் வரும்.
அதே சமயத்தில் வெறுப்பால் அந்த வேலையைச் செய்யவில்லை என்றால் மேலதிகாரி வந்தவுடனே “ஏம்பா…? இந்த வேலையைச் செய்யவில்லை…!” என்று சொன்னவுடனே வேதனையான உணர்வு நமக்குள் வரும்.
காரணம்… சந்தர்ப்பம் இவ்வாறு இயக்குகிறது.
இதைப் போன்ற நிலைகளை
1.நாம் உடனுக்குடன் தூய்மைப்படுத்தினால் தான் சிந்தனையும் நிலைக்கும்
2.நம் செயல்களும் சீராக இருக்கும்.
ஆகவே இந்த வாழ்க்கையில் எந்தத் தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று இங்கே புருவ மத்தியில் வேண்ட வேண்டும்.
1.மனிதால் மட்டும் தான் இப்படி எண்ண முடியும்.
2.மற்ற உயிரினங்கள் எதிரிகளைப் பார்த்தால் அதனின்று தப்பிக் கொள்ளத் தான் எண்ணும்
3.விண்ணை நோக்கி எண்ணும் நிலை இல்லை.
உயிரினங்களில் தன்னைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி… அதிலே விளைந்த உணர்வு தான் “ஒட்டு மொத்தமாக” நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது நம் உயிர்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்து இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அகற்றுதல் வேண்டும்.
இதைத் தான் கார்த்திகேயா…! என்று சாஸ்திரப்படி காட்டுகிறார்கள். சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்கு வள்ளி திருமணத்தையும் காட்டுகின்றனர்
ஏனென்றால் வள்ளியை முருகன் காதலிக்கின்றான்.
1.இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.வலிமைமிக்க சக்தியான அந்தப் “பாதுகாக்கும் சக்தியை” தனக்குள் நேசிக்க வேண்டும்.
முருகு… மாற்றி அமைக்கும் உடல் பெற்றவர்கள் நாம்.
1.நம் ஆறாவது அறிவைத் தான் முருகன் என்றும்
2..தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்றும் காவியப் படைப்பு வருகின்றது.
நம்மைப் பாதுகாக்கும் உணர்வை நாம் நேசித்தோம் என்றால் மனிதனாக வளர்ந்த நிலையில் அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோம் என்று பொருள்.
நம்மை ஏசுவோரையோ கேவலப்படுத்துவோரையோ நாம் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைந்து நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை அது தின்றுவிடும்.
வேதனைப்படும்படி ஒருவர் சொன்னார் என்றால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது தின்றுவிடும். பார்க்கலாம் டி.பி. வந்தால் எலும்புகளை எல்லாம் அது தின்கிறது.
அதை எல்லாம் மாற்றுவதற்குத் தான் நம்மைப் பாதுகாக்கும் உணர்வினை எடுக்கும்படி காவியப் படைப்புகள் உணர்த்துகின்றது.
1.மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்தால் அது நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வருகிறது.
2.அந்த அருள் உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் உயிர் அதைத் தெய்வ ஆணையாக
3.நமக்குள் அந்தக் காத்திடும் தெய்வமாக… தெய்வச் செயலாக நம் உடலை இயக்கும்.
தீமைகளிலிருந்து விடுபடுகிறோம்.. அருள் சக்திகளையும் பெறுகின்றோம்… அது பெருகப் பெருக பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு அடுத்த நிலையான ஒளிச் சரீரமும் பெறுகின்றோம்.


ஆத்ம சுத்தி செய்வதன் முக்கியத்துவம்
இராமனைக் கூப்பிட்டு… “நீ காட்டுக்குச் செல்…” உன்னுடைய சகோதரனுக்குப் பட்டம் சூட்ட வேண்டி உன் தந்தை விரும்புகின்றார். உன்னை எப்படிக் காட்டிற்குப் போகச் சொல்வது…? என்று தயங்கிக் கொண்டிருக்கின்றார் நீ காட்டுக்குச் செல்…! என்று கைகேயி சொல்கின்றது.
தந்தை சொல் தட்டாத நிலையில் இராமனும் காட்டுக்குச் செல்கின்றார். காரணம்…
1.தசரதச் சக்கரவர்த்தி அன்று எத்தனை பேரைப் போரில் கொன்றாரோ
2.திட்டமிட்டு அடுத்த நாட்டைத் தான் அபகரிக்க வேண்டும் என்று எத்தனை பேரைக் கொன்றானோ
3.தான் எடுத்துக் கொண்ட எண்ணம் (அந்தச் சக்திகள்) “கைகேயி” பதிவாகி அங்கே இரக்கமற்றுக் கொன்றது.
அப்படிக் கொன்ற உணர்வுகள் இந்த உடலில் விளைந்த பின் என்ன செய்கின்றது…? நல்லது செய்ய முடியவில்லை… நல்லவனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று நினைத்தால் அது முடியவில்லை.
இங்கே இராவணன் சீதாவைச் சிறைப்பிடித்தான் நல்லதைச் செய்ய விடாதபடி உடலின் இச்சை கொண்டு தடுக்கின்றான்.
இங்கே இந்த உணர்வுகள் இயக்கப்படும் பொழுது இவன் உடலுக்குள் அந்த இயக்கம் எப்படி இயங்குகின்றது…?
1.எதை வளர்த்துக் கொண்டோமோ நல்லது இவனால் செய்யவே முடியவில்லை
2.கைகேயிக்குக் கொடுத்த வாக்கின் பிரகாரம் செயல்பட வேண்டி வருகின்றது.
அப்பொழுது தசரதன் வேதனைப்படுகின்றான்.
பிறரை வேதனைப்படுத்திப் போரில் மற்றவரைக் கொன்றான். ஆனால் தனக்குள் வரும்பொழுது நல்லவனுக்குப் பட்டம் சூட்ட முடியவில்லை என்று வேதனைப்படுகின்றான்… வேதனை தாங்காதபடி ஜீவன் பிரிகின்றது.
கண்ணுக்கு முன்னாடி நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகின்றான். ஆனால்
1.உடலுக்குள் இருக்கும் போர் முறை நல்லதைப் பேச விடாதபடி
2.இந்த உணர்வின் தன்மை அவனை இப்படிச் செயல்படுத்த வைத்து விடுகிறது என்பதைக் காட்டுகின்றார்கள்
3.வேதனை உணர்வுகள் இவனை ஒடுக்கி விடுகின்றது.
தாயார் வீட்டுக்கு அனுப்பிய பரதனை மீண்டும் வரச் சொல்லிச் சொல்கின்றார்கள்.
பரதன் வந்து பார்க்கும் பொழுது சாம்ராஜ்யமே சூனியமாகத் தெரிகின்றது தந்தையையும் இராமனையும் காணவில்லை. தந்தையைப் பற்றியும் இராமனைப் பற்றியும் எல்லோரிடம் கேட்கின்றான்… ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை எல்லோரும் சோகமாக இருக்கின்றார்கள்.
கடைசியில் தன் தாயாரிடமே கேட்கின்றான். போர்க்களத்தில் ஜெயிப்பதற்கு நான் தான் காரணமாக இருந்தேன். அதற்கு இரண்டு வரம் கொடுத்தார். அந்த வரத்தைத் தான் நான் கேட்டேன்.
வரப்படி இராமனைக் காட்டிற்குச் செல்லும்படி சொல்லி விட்டார் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று சொன்னேன்… அதற்குள் மனம் தாங்காது இறந்து விட்டார். என்னுடைய குறை இல்லை என்று சொல்கின்றது
பரதன் அப்போது சொல்கிறான்… உன் தாயார் வீட்டிலும் இதே தான் நடந்தது. அதே வழிகளில் தான் இன்று இங்கே வந்திருக்கின்றது.
எந்தக் கோபத்தின் வழியோ அதன் வழி தான் இங்கே நடக்கும் என்ற நிலையை அங்கே காட்டித் தெளிவாக்குகின்றார்கள்
1.அன்றே உன்னைக் கொன்று இருந்தால்
2.எங்களுடைய சாம்ராஜ்யத்திற்கு இந்த நிலை வந்திருக்காது…! என்று பரதன் சொல்கிறான்
அதாவது…
1.எப்பொழுது பிறரை துன்பப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் வருகின்றதோ அதை உடனே… அப்போதே அழித்து விட்டால்
2.நம் உடலில் நோய்களோ மற்ற தீய வினைகளோ தீமைகளோ வராது என்பதைத்தான் அங்கே காட்டுகின்றார்கள்.
பாசத்தால் இருக்கின்றோம்…! நாம் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனை. இந்த உணர்வின் தன்மை உணர்ச்சியான பின் வேதனைப்படும் செயலே வருகின்றது.
இவை எல்லாம் நாம் எடுக்கும் எண்ணங்கள் கொண்டு நடக்க்கூடிய செயல்கள் தான். அதிலிருந்து தப்ப வேண்டும் அல்லவா…!
பத்தாவது நிலை அடையக் கூடிய (தசரதச் சக்கரவர்த்தி) நாம் எந்த வகையில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றோம்.
1.வேதனை என்ற உணர்வும் வரும் போது அந்த விஷம் கலந்து விட்டால்
2.மனிதனல்லாத நிலைக்குத்தான் செல்ல வேண்டி வரும் என்று இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.
அதற்குத்தான் அடிக்கடி உங்களை ஆத்ம சுத்தி செய்யும்படி கட்டாயப்படுத்துகின்றோம். தீமை என்று பார்த்தாலே
1.அடுத்த கணம் அது தனக்குள் வளராதபடி
2.மகரிஷியின் உணர்வு கொண்டு ஆரம்பத்திலேயே அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நல்ல குணங்களை அப்பொழுது தான் நம்மால் காக்க முடியும்.

தேவர்களுடன் தேவர்களாக நாம் ஐக்கியப்பட வேண்டும்
இன்றைய உலகம் பெரும் விஷத்தன்மை வாய்ந்த உலகமாக மாறிக் கொண்டு வருகின்றது… நல்ல பாம்பின் விஷம் கொடும் விஷம் என்கிறார்கள்,
அந்த நல்ல பாம்பிற்கு… அந்த நாக தேவனுக்கு அவ்விஷம் எங்கிருந்தப்பா வந்தது…?
1.இக்காற்றினில் கலந்திருக்கும் கடுமையான விஷ நிலையை…
2.தன் சுவாச நிலைக்குk கடும் விஷத்தை ஈர்த்துத் தன் ஆகாரமாக ஏற்று… அவ்விஷத்தையே உண்டு…
3.பல நூறு ஆண்டு கணக்குகள் தான் சுவாசித்த விஷ அணுக்களைத் தன்னுள்ளையே பல ஆண்டுகள் அடக்கி
4.விஷத்தையே மேலும் மேலும் ஈர்த்து அவ்விஷத்தைக் கொண்டு பெரும் மாணிக்கமாக
5.அதைத் தன் ஜீவன் முடியும் காலத்தில் கக்கி வெளிப்படுத்துகின்றது.
நல்ல பாம்பு… விஷத்தைத் தன் தொண்டைக்குழி இடத்தில் சிறுகச் சிறுகப் பல ஆண்டுகள் சேமிக்கிறது. அச்சூரியனின் சக்தி அந்த நல்ல பாம்பின் மேல் படும்பொழுது அதன் பார்வையைக் கொண்டு தன் நிலைக்கு நேராக ஈர்த்து…
1.தான் எடுக்கும் சுவாச நிலை… மேல் நோக்கி…
2.அச்சூரியனின் சக்தியிலிருந்து தன்னுள் ஈர்ப்பதாக இருக்கின்றது.
இந்நிலை கொண்டு அப்பாம்பு இக்காற்றில் கலந்துள்ள விஷமான காற்றைத் தன் சுவாசத்திற்கு ஈர்த்துக் கொடிய விஷத்தைக் கொண்டே தான் சேமித்து வைத்திடும் விஷத்தையே மாணிக்கக் கல்லாகப் பெறும் பாக்கியத்தைப் பெற்றுள்ளது அந்த நல்ல பாம்பு.
இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.
மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.
இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.
அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.
ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன.
1.தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி
2.அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.
பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.
நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.
அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.
இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.
இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?
நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…! இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி… எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!
இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.
இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”
இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”
பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.
1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக நாம் வாழும் இந்த மனித வாழ்க்கைக் காலங்களில் வேதனை என்ற அணுக்கள் நம் உடலில் வளர்ச்சி அடைந்தால் கடுமையான நோய்களும் அதனால் மேலும் மேலும் வேதனை அதிகரிக்கின்றது.
1.தேடிய செல்வம் எத்தனையோ இருப்பினும்…
2.வைத்தியத்திற்குச் செலவழித்து உடலைப் பாதுகாத்தாலும்
3.உடலில் விளைந்த உணர்வுகள் கடைசி நிலை எதுவோ
4.அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறொரு உடலாக மாற்றிவிடும்.
ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்துப் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி எல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அதை எண்ணி எண்ணி வேதனைப்படுவதோ… அல்லது தன்னைச் சார்ந்தோர் வேதனைப்படுவதை அடிக்கடி நுகர்ந்தாலோ… அதை எல்லாம் தூய்மைப்படுத்தவில்லை என்றால் தீய அணுக்களாக மாறி உடலில் நோய்களாக மாறிவிடும்.
ஆகவே ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் இதைப் போன்ற கஷ்டங்களோ நஷ்டங்களோ அது எது வந்தாலும்… உடலுக்குள் அதை வளர விடாது தடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.
தடுக்க வேண்டும் என்றால் கார்த்திகேயா… என்ற ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைப் புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரில் அடிக்கடி இணைக்க வேண்டும்.
1.கண் வழியாக அந்த அரும் பெரும் சக்திகளைக் கவர்ந்தாலும்
2.கண்ணின் நினைவை உயிரிலே இணைக்கப்படும் போது
3.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் திறன் வருகிறது
4.அப்பொழுது மூக்கின் வழி செல்லும் தீய உணர்வுகளை அது தடைப்படுத்துகின்றது.
அதற்குப்பின் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைச் செலுத்தப்படும் போது அதுவும் வலுப் பெறுகிறது.
1.அப்பொழுது நம் உடலுக்கு முன் முகப்பில் உள்ள
2.விஷத் தன்மைகளைத் தூர ஒதுக்கிச் செல்ல… அங்கிருந்து வெளியே தள்ளி விடுகின்றது.
3.நமது ஆன்மா தூய்மை ஆகிறது.
அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா… ஒரு வட்டம் உண்டு. அந்த ஜீவான்மாக்களும் அப்போது சுத்தமாகிறது.
இப்படி ஒரு பயிற்சி நமக்குள் வளர்ந்துவிட்டால்…
1.உயிரைப் போன்றே நாம் நுகரும் உணர்வின் தன்மைகளும்
2.ஒளியின் அறிவாக அந்த அணுக்கள் வளர்ச்சி பெறும் சக்தி பெறுகின்றது.
அதாவது… உயிருடன் இணைந்து ஒளி என்ற அறிவு எப்படி இருந்ததோ… அதன் அறிவின் தன்மை பெற்ற அணுக்களை இப்படிச் சிறுகச் சிறுக மாற்றி… இந்த உடலுக்குப் பின் நாம் ஒளியின் சரீரமாக மாறுவதே கடைசி நிலை.


“மகரிஷிகள் உணர்வு கொண்டு தான்” எதையுமே நல்லதாக மாற்றி அமைக்க முடியும்
இன்று மனிதனாக இருக்கின்றோம் வேதனை உணர்வுகள் உடலுக்குள் மிகவும் அதிகமானால் இடுப்பு வலிக்கின்றது மேல் வலிக்கின்றது கால் வலிக்கின்றது என்று வந்து விடுகிறது. வேதனையைத் தவிர வேறு நல்லதைச் சுவாசிக்கின்றோமா…?
நம் உடலில் உள்ள மற்ற அணுக்களிலும் வேதனையைச் சேர்த்து விடுகின்றோம். நல்ல உறுப்புகளாக உருவாகி… நஞ்சினை மலமாக மாற்றும் திறன் பெற்று இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு உடல் உறுப்புகளைப் பாழாக்குகின்றோம்.
1.தீமையை மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்
2.வேதனை என்ற உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் இணைந்து சிறுகச் சிறுக அவைகளை மாற்றத் தொடங்குகிறது.
இரத்தம் கல்லீரலுக்கு வந்தால் அதை வடிகட்டும் திறனும் நுரையீரல் மற்றதை வடிகட்டும் திறனும் எல்லாமே சுத்திகரித்து வரப்படும் பொழுது அது சரியாக இயங்கவில்லை என்றால் விஷம் என்ற உணர்வு சென்று அதற்குள் இணைந்து விடுகின்றது.
1.விஷம் ஆகிவிட்டால் நுரையீரல் சரியாக வேலை செய்யாது
2.கல்லீரலுக்குச் சென்றால் வீக்கமாகி விடுகின்றது வடிகட்டும் தன்மை இல்லை.
3.மண்ணீரலுக்குச் சென்றால் இதே மாதிரி ஆகிவிடுகின்றது
4.இதை எல்லாம் கடந்து வரப்படும் பொழுது நுரையீரல் இரத்தத்தை இழுக்கும் திறன் இழந்து “வெறும் காற்று” தான் வருகிறது.
கல்லீரல் தான் இரத்தத்தை வடிகட்டிக் கொடுப்பது அதனுடைய திறன் இழந்துவிட்டால் நுரையீரல் இழுக்கும் பொழுது வெறும் கேஸ் (GAS) தான் செல்லும். அப்போது…
1.நெஞ்சு எப்படியோ எரிகின்றது மூச்சுத் திணறல் ஆகின்றது
2.கல்லீரல் வீங்கி விட்டால் அடுத்து நடந்தால் போதும் மூச்சுத் திணறல் ஆகும்
3.காரணம் அதற்குண்டான இரத்தம் இல்லை.
4.பெட்ரோல் இல்லை என்றால் ஒரு இன்ஜின் லோடை (LOAD) இழுத்து ஓடுமா…?
நுரையீரல் இழுத்து இரத்தத்தை உடல் முழுவதும் சப்ளை செய்து வடிகட்டி சுத்திகரித்து இருதயத்திற்குச் சென்று எல்லாவற்றுக்கும் ஆசிடாக மாற்றி எது எது உணர்வோ அவைகளுக்கு இயக்கச் சக்திக்குக் கொடுக்கும். அது தான் நம் உறுப்புகளின் இயக்கம்.
மருத்துவர்களும் இன்று எத்தனையோ கண்டுபிடிக்கின்றார்கள் சொல்கின்றார்கள்… ஆனால் அவர்களும் ஓரளவுக்கு மேல் தெரிவதில்லை
1.கடவுளைத்தான் நான் வணங்குகிறேன்… அவன் பேரைச் சொல்லி தான் நான் மருத்துவம் செய்கிறேன்
2.விதி இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்பார்கள்
3.பழக்கப்பட்ட முறையைத்தான் சொல்கின்றோமே தவிர ஞானிகள் காட்டிய உணர்வை நாம் பின்பற்றவில்லை.
மருத்துவர்களும் முயற்சி எடுக்கின்றார்கள். இருந்தாலும் விஞ்ஞான அறிவு கொண்டு என்னதான் உடலுக்குள் எலும்பை மாற்றினாலும் உறுப்புகளை மாற்றினாலும் எத்தனை காலம் நாம் நன்றாக வாழ முடிகின்றது…?
முதலிலே நன்றாக இருந்தது இப்பொழுது வலுவான பொருள்களைத் தூக்குவதற்குக் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. அப்போது அங்கே வேதனை வருகின்றது.
இருதயத்தை மாற்றி வைத்திருப்பார்கள் மருத்துவர் சூதானமாக இருக்க வேண்டும் என்பார் ஏதாவது பார்த்தால் சாப்பிட முடிவதில்லை அதற்கு ஒரு மருந்து.
மற்ற மனிதர்களுடைய கிட்னியை எடுத்து மாற்றம் செய்தவர்கள் அது சீராக இயங்குவதற்கு ஒரு மருந்தை கொடுத்துச் சமப்படுத்துவார்கள். மாற்றுவார்கள் ஒரு நாளைக்கு மருந்து கொடுக்கவில்லை என்றால் மரணம் ஆகிவிடும்.
சம்பாதித்த காசை வைத்துச் சிறிது நாட்கள் கூட வாழலாம். பின் சாப்பிட்ட மருந்தின் விஷங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து…
நான் எப்படி எல்லாம் இருந்தேன் கடைசியில் என்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று
2.விஷத்தின் உணர்வு கொண்டு உயிர் வெளியே சென்றால் விஷத்தைச் சேமித்த உணர்வு கொண்டு பாம்பினத்திற்குள் அடுத்து செல்கின்றது.
கோபம் குரோதம் என்ற நிலையில் அடுத்தவரை வேதனைப்படுத்தி அதை ரசித்து வாழ்ந்தால் அடுத்துப் புலியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல வேண்டி வரும். மற்றொன்றைக் கொன்று சாப்பிடும் நிலை தான் வரும்.
இவையெல்லாம் இயற்கையின் சில நியதிகள்…!
இது போன்ற கொடுமைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான்
1.உங்களுக்குத் தொடர்ந்து ஞானிகள் உணர்வை உபதேச வாயிலாகக் கொடுத்து
2.விஷத்தன்மையான உணர்வுகள் உடலுக்குள் சேராத வண்ணம் மாற்றி அமைக்கும் பயிற்சியாக
3.தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் உனர்வுகளைப் பெறும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்துகின்றோம்.

உயிரணுக்கள் சரீரமாக உருவாக்க “உஷ்ண அலைகள்” அவசியம் தேவை
சூரியனிலிருந்து வெளிவரும் ஈஸ்வர சக்தியின் கதிர்ப் பிழம்பினை பூமித்தாய் தன் ஈர்ப்பு சக்தியினால் ஈர்த்துப் பூமியின் உயிரணுக்களாகக் காற்றுடன் கலந்து விடுகிறது.
அந்த உயிரணுக்கள் என்ன செய்கிறது…?
பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள்… ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றவாறு
1.மண்ணின் நிலை… மரம்… செடி… கொடி… நீர் நிலைகள் கழிவுப் பொருட்கள் நிலைக்கு ஏற்றவாறு உஷ்ணக் காற்றலைகளை…
2.நஞ்சான அலைகளையோ அல்லது நறுமணம் கொண்ட அலைகளையோ அந்த உயிரணுக்கள் சுவாசிக்கின்றனவோ
3.அதனையே சுவாசித்துச் சுற்றி வருகின்றன.
எந்த அலைகளை முதலில் இவ் உயிரணு சுவாசிக்கின்றதோ அந்த நச்சு அல்லது நறுமணம் கொண்ட அலைகளையே தொடர்ந்து சுவாசித்து பூமித்தாயைச் சுற்றி வந்து கொண்டே இருக்கும் அவ்வுயிரணு.
உதாரணமாக…
1.முதல் நாள் மாலை வரை பூச்சி புழுக்கள் இல்லாத கடலைச் செடியில்
2.மறுநாள் காலையில் பல கோடிக்கணக்கான புழுக்கள் செடியின் இலைகளை உண்டு அழித்திருப்பதைக் காண்கின்றோம்.
அந்தப் புழுக்கள் எப்படி ஜீவன் பெற்றன…?
மேற்கூறிய காற்றுடன் சுற்றிக் கொண்டே இருக்கும் அந்த உயிரணுக்கள் கடலைச் செடியின் மீது படர்கின்றன.
1.கால நிலைக்கு ஏற்ப பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் செடியின் மீது தாக்கும் பொழுது
2.அச்செடியின் இலையில் உள்ள சத்து கலந்த உஷ்ண அலைகள் வெளிப்படும் பொழுது…
3.இவ்வுயிரணுக்கள் அதைச் சுவாசிக்கும் பொழுது புழுக்களாகச் சரீரம் பெறுகின்றன.
புழுக்களாகச் சரீரம் பெற்ற பின் எந்த மணம்… சத்து… கொண்ட இலையின் உஷ்ண அலைகளைக் கொண்டு சுவாசித்துச் சரீரம் பெற்றதோ… அந்த இலைகளையே அது உணவாக உட்கொள்ளத் தொடங்குகிறது.
இதைப் போலவே எந்தெந்தச் செடி கொடி மரம் முதலியவைகளின் இலைகளில் உள்ள உஷ்ண அலைகளைச் சுவாசித்து… சரீரம் பெறும் உயிரணுக்கள் யாவும் உடல் பெற்ற பின்… அந்தந்தத் தாவர இலைகளையே உணவாக உட்கொள்கின்றன.
பூமித்தாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் மேற்கூறிய உயிரணுக்கள் அசுத்த நீர் அல்லது கழிவுப் பொருளின் மேல் படர்ந்து இருக்கும் பொழுது… பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் அந்த அசுத்தத்தில் படரும் பொழுது
1.அந்த அசுத்த சத்துள்ள ஆவி வெளிப்படும் பொழுது
2.அதை உட்கொண்டு கொசு பூச்சி புழுக்கள் போன்ற சரீரம் பெறுகின்றன.
எந்தச் சுவாச நிலையில் சரீரம் பெற்றதோ அந்தச் சுவாச நிலையிலேயே ஜீவிக்கின்றது… உணவையும் உட்கொள்கின்றது.
எப்படி ஒரு கோழி தான் இடும் முட்டையை அடைகாத்து 21 நாட்களில் குஞ்சு பொரிக்கின்றதோ… அந்த நிலையை இன்றைய விஞ்ஞானத்தில் அதே 21 நாட்களில் கொடுக்கக்கூடிய உஷ்ண சக்தியைக் கருவில் கொடுத்து குஞ்சுகளாக வளர்ச்சி பெற்றுச் சரீரம் பெறச் செய்கின்றனரோ… அதே நிலையில் தான்
1.பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகளைச் சுவாசித்து
2.மேற்கூறிய உயிரணுக்கள் குறுகிய காலத்தில் சரீரம் பெறுகின்றன.
ஒவ்வொரு உயிரினமும் அது அது எடுத்திடும் சுவாச நிலை கொண்டே… அதனுடைய சரீர நிலை பெறுகின்றது. இது போன்று தான்
1.நாம் ஈர்க்கும் சுவாச நிலைக் காற்றுடன் கலந்துள்ள பல கோடி உயிரணுக்கள்
2.நமது சுவாசத்துடன் சென்று நமது உடலில் நிலை கொள்ளுகின்றன.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்திய மாமகரிஷியை நினைவு கொள்ளுங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகளையும் அவன் பிறந்த பின் அவன் பெற்ற சக்திகளையும் பெற வேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணித் தியானியுங்கள்.
1.அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்த உணர்வின் அறிவாகத் தனக்குள் உருபெற்றதை
3.விண்ணிலிருந்து வந்த உணர்வலைகளைத் தனக்குள் வளர்ச்சி பெறச் செய்த அந்த முதல் நிலைகளை எண்ணி
4.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியர் தாயின் கருவிலே பெற்ற சக்தி கொண்டு குழந்தைப் பருவத்தில் முதன் முதலில் விண்ணை நோக்கிப் பார்க்கும் போது சூரியனின் இயக்கத்தைப் பார்க்கின்றார்… கோள்களையும் நட்சத்திரங்களையும் பார்க்கின்றார்… அதை எல்லாம் தனக்குள் உணர்கின்றார்.
அன்று அந்த அகஸ்தியன் பார்த்த இந்தப் பிரபஞ்சத்தின் அதிசயங்களை நாமும் காண வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன் அந்தக் குழந்தைப் பருவத்தில் விண்ணின் ஆற்றலைக் கண்டு மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக வெளிப்படுத்துகின்றான். அதை நீங்கள் நுகரும் போது
1.உங்கள் உடலிலே உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு புத்துயிர் பெற்றது போன்று ஆகிறது
2.மகிழ்ச்சியான உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.அதே சமயத்தில் அந்த அகஸ்தியனின் அருளாற்றல்கள் உங்கள் உடலில் ஊடுருவி
4.உங்கள் நெற்றியில் ஒளியின் சுடராகத் தெரிய வரும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அகஸ்தியன் உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து அந்த உணர்வின் அலையை எமக்குள் (ஞானகுரு) பாய்ச்சினார்.
அகஸ்தியன் பார்த்த விண்ணுலக ஆற்றலை எல்லாம் நம் குருநாதர் நுகர்ந்து இன்றும் அவர் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்,
1.அந்தக் குரு அருளின் துணையால்…
2.அகஸ்தியனின் உணர்வுகளை நீங்களும் பெறும் தகுதியை இப்பொழுது பெறுகின்றீர்கள்.
3.உங்கள் உடலுக்குள் அதை எல்லாம் உணரும் அறிவாகப் பதிவாகிறது.
4.அதனின் நினைவாக நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியையும்… சக்தியும் பெறுகின்றீர்கள்.
5.உங்கள் புருவ மத்தியிலும் சரி… உடலுக்குள்ளும் சரி ஒளிக் கதிர்கள் பரவுவதை உங்களால் உணர முடியும்
6.நீங்கள் ஒளியின் சரீரம் ஆவது போன்று உணர்வீர்கள்.
அகஸ்தியன் குழந்தையாக இருக்கும் போது தன் தாய் தந்தையை உற்றுப் பார்க்கின்றான். தாய் தந்தையர் உடலில் அவர்கள் பூசிய அந்தப் பச்சிலை வாசனைகள் வருவதை அகஸ்தியன் நுகர்கின்றான்.
1.அதை இப்பொழுது நீங்களும் நுகர்ந்து இழுத்துச் சுவாசியுங்கள்.
2.உங்களுக்குள் அந்த மணங்கள் பரவி உங்கள் உடலில் உள்ள பிணிகளைப் போக்கச் செய்யும்.
அகஸ்தியன் அவன் நினைவைத் தன் தாய் தந்தையரின் பால் செலுத்தும் போது அவர்கள் உடலிலிருந்து வந்த மணங்களை நுகரும் போது அவன் மகிழ்ச்சியுற்ற உணர்வுகள் எவ்வாறோ அதைப் போன்று
1.உங்களுக்குள்ளும் அந்த மணங்கள் அனைத்தும் சென்று
2.உங்கள் உடலில் அறியாது சேர்ந்த கடும் தீமைகளை அடக்கும்
3.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்கள் உடலில் பரவும்… அதைப் பார்க்கலாம்… உணரலாம்…!
ஆகவே…
1.அண்டத்தின் அறிவைக் கண்டுணர்ந்து
2.அதன் அறிவின் தொடராக அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த அறிந்துணரும் சக்திகளை அனைவரும் பெற்று
3.அகஸ்தியன் வழியில் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.
முதல் தடவையாக இந்த உணர்வுகள் உங்களுக்குள் கொடுக்கப்படுகிறது (ஞானகுரு). அகஸ்தியன் அருள் மணங்களை நுகர்ந்தால் எத்தகைய நஞ்சினையும் அடக்க முடியும்.


வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம்
பள்ளியில் பாடம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பாசம் கொண்டு சினேகித சினேகிதிகளாகப் பழகி இருப்பார்கள்.
இருந்தாலும்… கல்வியில் சீர்பட வில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை தனக்குள் பெற்ற பின் அவர்கள் ஒருவருக்கொருவர் பழகிய உணர்வு கொண்டு
1.காசைச் செலவழிக்கின்றேன் மற்றவர்களைப் போன்று படிக்காதபடி நீ மக்காக இருக்கின்றாயே என்ற நிலை வருவதும்
2.சிந்திக்கும் திறன் இல்லை என்றால் மற்றவர்கள் இணைத்துப் பார்த்து தன்னையே தான் வெறுக்கும் நிலையும் வருகின்றது.
காரணம் குடும்பத்தில் ஒரு சில நேரங்களில் பணத்திற்காக அவஸ்தைப்படுவார்கள். அந்த மாணவி அல்லது மாணவன் இந்த உணர்வைத் தன் மனதில் எடுத்துக் கொண்டால்
1.அந்த வேதனை உணர்வு கலந்த பின்
2.பள்ளியில் சென்று பாடத்தைப் படித்தாலும்
3.அங்கே சொல்லிக் கொடுப்பதைப் பதிவாக்கிச் சிந்தித்து “மீண்டும் நினைவாக்குவது என்பது” கடினமாகி விடுகின்றது.
அதே சமயத்தில் பள்ளியிலே பிறர் குறும்புத்தனம் செய்வோரையோ தவறு செய்வதையோ உற்றுப் பார்த்தால் அந்த வலிமையான உணர்வுகள் இங்கே அணுவாகி விடுகிறது.
அந்த அணு தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் போது அதையே நுகரப்படும் பொழுது இந்த உணர்வின் வலிமை பெற்ற பின் பாட நிலைகளில் சரியானபடி படித்தாலும்… குறும்புத்தனம் செய்யும் உணர்வு கலந்து அது திரை மறைவாக்கிவிடும். இதுதான் சித்திரை (சிறு திரை) என்பது.
சந்தர்ப்பத்தினால் ஒரு தீமையான உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின்
1.நல்ல ஒழுக்கத்தின் தன்மையை அந்த உணர்வுகள் மறைத்து விடுகின்றது
2.படிப்பைப் பற்றிய நினைவாற்றல்கள் வருவதில்லை.
ஏனென்றால் பாலிலே ஜீனியை போட்டு காஃபியைப் போடும் பொழுது ருசியாக இருக்கின்றது. ஆனால் சிறிது காரத்தை இணைத்து விட்டால் சுவை வருகின்றதோ…? இல்லை.
இதைப் போன்று தான் குழந்தைகள் விளையாடும் பொழுது ஒருவருக்கொருவர் குறும்புத்தனமான செயல்களைச் செய்யும் பொழுது அந்த உணர்வுகள் கலந்து விட்டால் நினைவுகள் அதிலே வலிமையாகச் சென்று விடுகின்றது.
பின் அவர் படிக்கும் பாடங்களை உற்றுப் பார்த்தால் அவருடைய நினைவாற்றல் இங்கே வருவதில்லை ஆகவே அறியாது இவ்வாறு பார்த்துணர்ந்த கேட்டுணர்ந்த தீமைகள் இவன் அறிவின் தன்மையை சித்திரையாக “சிறு திரையாக” மறைத்து விடுகின்றது.
இதை போன்ற நிலைகளை மாற்றுவதற்கு யாம் சொல்லிக் கொடுக்கும் தியானத்தின் மூலம்
1.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு இருளைப் போக்கிப் பொருளைக் காண முடியும்
2.இந்தத் தியானம் அதற்கு உதவும்.
ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ நாம் பார்த்தால் அடுத்த கணமே… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி நம் நல்ல குணத்தை மறைத்திருக்கும் அந்தச் சிறு திரைகளை நீக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இதைப் போல் நீக்கி வந்தால் நம் உடலுக்குள் இருக்கும் அறிவுகள் அனைத்தும் மெய் ஒளியைப் பெறும் தன்மையாக நமக்குள் வளர்ச்சி பெறும்… பூரண நிலவாக மாறுகின்றது.
என்றும் ஒளியின் சரீரமாக பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழும் தன்மை பெறுகின்றது. மனித வாழ்க்கையில் நாம் இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ உடல்களில்
1.தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வைப் பெற்றோம்
2.உயிரின் துணை கொண்டு தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்
3.இதிலிருந்து நாம் அடுத்து எந்த நிலையை பெற வேண்டும் என்பதைத்தான் நமது சாஸ்திரங்கள் காட்டுகின்றது
அதனைக் காட்டுவதற்குத் தான் ஆலயங்களில் சொர்க்க வாசலைக் காட்டுகின்றார்கள். உடலை விட்டுப் பிரிந்த பின் பிறவியில்லா நிலை அடைவது தான் கடைசி எல்லை
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள் “வைகுண்ட ஏகாதசி…!” அன்றைய தினம் சொர்க்கவாசலைத் திறப்பதாகக் காட்டுவார்கள்… அதிகாலையில் திறப்பார்கள்.
வழக்கமாக நேர் வாசலில் சென்றால் அன்றைய தினம் வடக்கு வாசலைத்தான் திறப்பார்கள்.
1.காரணம் நாம் வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம் என்பதனை அவ்வாறு காட்டுகின்றார்கள்
2.வடக்கில் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் சுழன்று கொண்டுள்ளது
3.அந்த ஈர்ப்பு வட்டத்தில் இணைய வேண்டும் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

குருவை நினைத்து நாம் தியானிக்கும் போது “குருவிற்கு அது தெரிந்து” நமக்கு ஆசி வழங்குகின்றார்
பல நாள் தவம் இருந்து தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம்
5.அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.
இப்படிப் பல நிலைகள் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.
வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.
ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?
என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது – நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.
பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தை அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!
ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது
1.உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..!
2.அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.
3.ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும்.
4.உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது… நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.
5.அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது.
6.அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.
7.அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகளை அடிக்கடி அந்தச் சுவாச நிலையில் நம் உயிரணுவிற்கு உயிருக்குக் கிடைக்கப் பெறுகின்றது.
இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.
1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.
இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!
ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.
3.எண்ணத்திலும் செயலிலும் உண்மை நிலையைக் கடைப்பிடியுங்கள்
4.காலத்துடன் கலந்திடுங்கள் கூட்டு நிலையில் கூடித் தியானியுங்கள்.
5.தன் வழிக்கு தெரிந்த உண்மைகளை உன்னத உண்மைகளைப் பிறருக்கு நல்வழி புகட்டித் தியான நிலைக்கு அழைத்திடுங்கள்.
6.நாம் ஜெபிப்பதின் பொருளை உணர்ந்து அச்சக்தியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
அவ்வீஸ்வர சக்தியின் அருளை மாலையில் குறிப்பிடப்பட்ட காலநிலையில் அமர்ந்து தியானம் இருங்கள் என்பதைப் பலர் பல நிலையில் எடுத்துக் கொண்டு இதில் எல்லாம் ஏதோ சித்து வேலைகள் உள்ளன என்ற சில பல எண்ணங்களை எண்ணிக் கொள்கிறார்கள்.
வாழ்க்கை நிலையில் அன்றைய நம் செயல்களை எல்லாம் முடித்துவிட்டு நாம் அமர்வதற்கு அதுதான் உகந்த நேரம். நம் சுவாச நிலைக்கு ஏற்ற நேரமும் அதுதான்.
நாம் ஜெபிக்கும் பொழுது நாம் எண்ணிடும் சித்தர்களின் நிலையில் இருந்து… சித்தர்களின் நிலை மட்டுமல்ல… தியான நிலையில் உள்ள எல்லோருக்குமே நாம் ஒருவரை ஒருவர் எண்ணித் தியானிக்கும் பொழுது அவர்கள் நமக்காக ஜெபித்திட முடியுமப்பா.
ஜெப நிலை ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது நமக்கு குரு வேண்டுமல்லவா. குருவின் நிலையை நாம் எங்கிருந்து தியானம் இருந்தாலும் அவரின் நிலையிலிருந்து நாம் ஆசி பெறத் தான் இந்த நிலை.
எப்படி நாம் நம் வீட்டில் இருக்கும் பொழுது விக்கல் எடுத்திட்டால் யாரோ நம்மை எண்ணுகிறார்கள் என்று எண்ணுகின்றோம். எண்ணுபவர்கள் நினைத்திட்டால் இருவரும் ஒரே நிலையில் எண்ணும் பொழுது அந்த விக்கல் நின்று விடுகின்றது என்கிறோம்.
அதே போல் தான் தியான நிலையிலும் நாம் நினைத்து தியானிக்கும் பொழுது
1.நாம் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்நிலை உடனே அவர்களுக்குத் தெரிந்து
2.அவர்களின் ஆசியை நாம் பெறுகின்றோம்.
ஆகவே இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் தியான நிலையில் இருந்திடுங்கள். ஓம் ஈஸ்வரா என்ற ஒரே நிலையில் சுவாச நிலையை எடுத்து நீங்கள் தியானிக்கும் பொழுது உங்கள் ஜெபத்திற்கு உயர்ந்த சக்திகள் கிடைக்கும்
1.தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும்
2.உங்கள் தியானத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.
நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் போதெல்லாம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.
1.ஈஸ்வரா… என்று சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணி
2.நாம் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ…
3.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அதை ஏங்கிப் பெற வேண்டும்…
4.அப்படி ஏங்கினால் நல்ல முறையில் அது பதிவாகும்.
அகஸ்தியர் பிறந்த பின்… குழந்தைப் பருவத்தில் மல்லாந்து படுத்திருக்கும் போது விண்ணை நோக்கிப் பார்த்து எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்தாரோ… “அதை எல்லாம் பெற வேண்டும்…” என்று நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.
அவர் கருவிலே இருக்கும் போது… தாய் தந்தையர்கள் எதை எதை எல்லாம் எண்ணிப் பெற்றனரோ அது அனைத்தும் அவருக்குள் வளர்ச்சி பெறுகிறது.
அவருடைய தாய் தந்தையர்கள் விஷமான அணுக்கள் தங்களை அணுகாதபடி பாதுகாத்துக் கொள்ள அவர்கள் உடலில் பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் அரைத்துப் பூசிக் கொண்டனர்.
1.அவர்கள் உடலிலிருந்து அந்த மணம் வெளிப்படும் போது
2.நுகர்ந்து தன் உணவுக்காகத் தேடி வரும் மற்ற உயிரினங்களோ கொசுவோ விஷ ஜெந்துக்களோ
3.அவை அனைத்தும் அவர்களை அணுகாது இருந்தது.
அவர்கள் சூரியனைக் கண் கூசாது உற்றுப் பார்க்கின்றனர். சூரியன் தன் முகப்பில் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்களைப் பிரித்து உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு ஒளிக் கதிர்களாக வீசுகிறது.
பிரிக்கப்பட்ட அந்த விஷத் தன்மைகளை சூரியனின் வெப்ப காந்தங்கள் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் உடலிலே விஷ முலாம்களைப் பூசியதால் அதைக் காண்கிறார்கள்.
1.அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் உடல்களில் பதிவானாலும்
2.கருவில் வளரும் அகஸ்தியனுக்குத் தாய் ரூபத்தில் அது பதிவாகிறது.
இவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்தச் சிசுவோ பிறந்த பின் தாய் கண்ட உணர்வுகள் அனைத்தையும் மல்லாந்து படுத்திருக்கப்படும் போது அந்தச் சூரியனின் இயக்கங்களைப் பார்க்கின்றது.
நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவதை மற்ற கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் போது சூரியன் அதை எல்லாம் தனக்குள் கவர்ந்து முகப்பில் அந்த விஷத்தைப் பிரித்துவிட்டுத் தனக்குள் ஒளிக்கதிராக மாற்றி அமைக்கிறது.
1.பிறந்த குழந்தையும் அதைப் பார்க்கின்றது… ஆனால் சொல்ல முடியவில்லை.
2.தனக்குள் கவர்ந்து கொண்ட இந்த உணர்வுகளைச் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில்…!
அதே சமயத்தில் பிறந்த குழந்தை தனியாக இருந்தாலும் கொசுக்களோ விஷ வண்டுகளோ இவன் அருகில் வருவதில்லை.
1.இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது அந்த வண்டுகளும் பூச்சிகளும் மயங்கி விழுகிறது.
2.விஷ ஜெந்துக்களோ மற்ற மிருகங்களோ அப்பால் விலகிச் சென்று விடுகிறது.
3.மயக்கத்திற்கு அஞ்சி எல்லாமே விலகி ஓடுகிறது.
குழந்தை உடலிலிருந்து நிகழ்த்தக் கூடிய இந்த நிலைகளை அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் பார்த்தபின் அவனைக் கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…! என்றே எண்ணுகின்றனர்.
அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியே தான் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன் (ஞானகுரு). இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகும்.
1.இந்த நினைவுடன் மீண்டும் தியானிக்கும் போது அவர் கண்டதை…
2.நம் பூமியில் பதிந்துள்ள அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நுகர்ந்து அதைப் பார்க்க முடியும்
3.அகஸ்தியனின் அருள் ஆற்றல்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இது உதவும்.


இலட்சக் கணக்கான ஞானிகளை நாம் உருவாக்குவோம்
வீட்டிலே கர்ப்பம் என்று தெரிந்தாலே குடும்பத்தில் உள்ள அனைவரும் “விரதம்” போன்று இருக்க வேண்டும். சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ கோபமோ வராதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1.கருவில் வளரும் குழந்தை அகஸ்தியன் பெற்ற அருளைப் பெற வேண்டும்
2.அவன் துருவனான அந்தப் பேரருளைப் பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரமான பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
4.உலக இருளை அகற்றிடும் அருள் ஞானியாக வளர வேண்டும்
5.அவன் பார்வையில் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
6.அவன் சொல்லும் செயலும் மற்றவரைப் புனிதமாக்கும் நிலை பெற வேண்டும்
7.அந்த அருள் ஒளி பெறும் அருள் ஞானி உருவாக வேண்டும் என்று பத்து மாதமும் மற்றதெல்லாம் விட்டு விட்டு இதை எண்ணிப் பழகுங்கள்.
காலையில் ஐந்தரையிலிருந்து ஆறரைக்குள் இந்த மாதிரி எண்ணுங்கள் எல்லோரும் ஒரு விரதமாக இருந்து நாம் கோபிக்கக் கூடாது வெறுப்படையக் கூடாது சலிப்படையக் கூடாது சங்கடப்படக் கூடாது என்ற இந்த உணர்வை எடுத்து… மற்ற தீமையான உணர்வு வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
என் குழந்தை அருள் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணினால் பிறப்பிலிருந்தே அவனுடைய பார்வையால் உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய சர்வ தோஷங்களும் போய்விடும்… உலகையும் காப்பான்.
1.அன்று ஒரு அகஸ்தியன் இந்தப் பூமியைத் திருப்பிச் சமப்படுத்தினான்… அதனால்தான் நாமும் இன்று சுகமாக வாழ முடிகின்றது.
2.அதைப் போன்று இப்பொழுது நாம் பல லட்சம் அகஸ்தியர்களைத் தோன்ற வைக்க வேண்டும்.
அவனைப் போன்று ஞானக் குழந்தைகளை உருவாக்கினால் தான் விஞ்ஞான அறிவால் வரும் கடும் விஷத்தன்மைகளை மாற்றும் தன்மை வரும்.
தங்கத்தில் திரவகத்தை விட்டால் செம்பும் பித்தளையும் எப்படி ஆவியாகப் பிரிகின்றதோ இதைப் போல நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நஞ்சினைப் பிரிக்க வேண்டும்.
ஏனென்றால் அது நஞ்சினை வென்றது அந்த உணர்வுகளைக் குழந்தைகள் உடலிலே பெருகச் செய்து “ஆயிரக்கணக்கான குழந்தைகளை” நாம் இப்படி உருவாக்குதல் வேண்டும்.
அத்தகைய ஆற்றல்மிக்க உணர்வுகள் இந்தப் பூமியிலே படர்ந்தால் தான்
1.விஞ்ஞானத்தினால் வந்த விஷத்தன்மைகளையும்
2.மனிதனுக்குள் ஆசை நிமித்தம் உடலை விட்டுச் சென்று தீய விளைவுகளாகப் பேயாக ஆட்டிப்படைக்கும் நிலைகளையும்
3.சிந்தனையற்ற நிலையில் இயக்கும் தீய நிலைகளையும் மாற்றி அமைக்கும் சக்தி பெற முடியும்.
இதை நீங்கள் அலட்சியப்படுத்தாதபடி செய்து பாருங்கள்.
உங்கள் குடும்பத்தில் அறியாது வந்து சேரும்
1.சாப அலைகள் தீய அலைகள் பூர்வ ஜென்ம அலைகள்
2.கஷ்டம் நஷ்டம் நோய் துன்பம் துயரம் பரம்பரை நோய்கள் எல்லாம் அடியோடு அற்றுப் போய்விடும்.
3.உங்கள் குழந்தை குடும்பத்தைக் காக்க்க் கூடிய சக்தியாக அவன் வருவான்.
“எங்கெங்கோ அலைவதற்குப் பதில்” கர்ப்பிணிக்கு இந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று ஏல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் அந்தக் கருவிலே விளையத் தொடங்கும்.
குழந்தை வளர வளர குடும்பத்தில் பல அதிசயங்களும் நடக்கும்… விவசாயம் செழிக்கும். உங்கள் குடும்பத்தில் செல்வச் செழிப்புடன் நீங்கள் வாழ முடியும் ஞானத்தை எல்லோருக்கும் போதிப்பவனாக அவன் வருவான் அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லும் அருள்ஞானியாக அவன் வளர்ந்து வருவான்
குருநாதர் இட்ட கட்டளைப்படி இத்தகைய நிலைகளை நாம் இன்று செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

செயலாற்றலிலும் எண்ணத்திலும் சொல்லிலும் உயர்ந்தவனாக வரவேண்டுமப்பா…!
நல்லோரின் சக்தி நிலைக்கு… நல்ல எண்ணத்திற்கு… நல்ல மனம் உடையோருக்கு…
1.“அவர்கள் சுவாச நிலையிலேயே ஆண்டவனின் அருளைப் பெறுகிறார்கள்…”
2.அவர்கள் பார்க்கும் பார்வையில் அவர்கள் சொல்லிடும் சொல்லில் அவர்கள் எண்ணத்தில் எல்லாமே அஜ்ஜெப அருள் கலந்துள்ளதினால்
3.அவர்கள் நிலைக்கு எத்தீய சொல்லும் வந்து அண்டுவதில்லை.
அச்சக்தியின் அருள் பெற்றதினால்… பிறரின் நிலைக்கு எண்ண… ஒரு நற்காரியத்திற்கு இவர்கள் ஆசிர்வாதத்தின் மூலமாகத்தான் நடந்திடும் அப்பா.
ஆண்டவன் என்பது யார்…? என்றே இம் மனிதர்களுக்கு இன்னும் புரியவில்லை.
1.தான் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரம் தேடும் இடமாகத்தான் ஆண்டவனை எண்ணுகிறார்கள்.
2.கஷ்ட நிலைக்கு ஆண்டவனை எண்ணுகிறார்கள்.
நம்முடைய குணங்களில் லட்சுமியைப் பார்த்தவுடன் செல்வத்துக்கு உடையவள் சரஸ்வதியைப் பற்றிச் சொல்லும் பொழுது கல்விக்கு உரியவள் பராசக்தியை எண்ணும் பொழுது வீரத்திற்கு உரியவள் என்ற நற்குணங்களை வைத்து இப்படிப் பல ஆலயங்கள் அமைக்கப்பட்டன.
ஆலயங்களுக்கு மக்கள் செல்வதெல்லாம் தன் மனச் சாந்திக்காக. தன் கஷ்டங்களை நீக்கிடவும்… தான் உயர்ந்து வாழ வேண்டும்… உயர்ந்த என்னும் பொழுது “செல்வத்தில் உயர்ந்தவனாக வாழ வேண்டும்” என்ற எண்ணம் தான் இன்றைய மக்களிடம் உள்ளது.
1.செயலாற்றலில் உயர்ந்தவனாக
2.எண்ணத்தால் உயர்ந்தவனாக
3.சொல்லில் உயர்ந்தவனாக
4.தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவனாக ஆலயத்திற்குச் செல்பவன் அரிதிலும் அரிதப்பா.
தன் குறைகளைத் தீர்ப்பதற்கு ஆண்டவன் அக்குறைகளை ஆண்டவன் தீர்த்தால் ஆண்டவனுக்குப் பல காணிக்கைகளை அளிக்கின்றார்கள். வேண்டுதல் என்ற பெயரில் “பல தேங்காய்களை உடைத்து” அங்குள்ள அர்ச்சகருக்கு இவர்களின் செல்வ நிலையைக் காட்டிட… ஆண்டவனை வணங்குகிறார்கள்
இன்றைய மக்களுக்கு நன்மை தீமைகளை வழி வகுத்துச் சென்றிட புரியாத நிலையில் தான் இன்றைய மதங்களும் மக்களும் உள்ளார்கள்.
ஆதியில் மனித ஆரம்ப காலத்திலிருந்தே… உதயத்திலிருந்து வந்த பல சித்தர்கள் சொன்ன பல உண்மை நிலைகளை எல்லாம் அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பிரித்தும் சேர்த்தும் சிதற விட்டு விட்டார்கள்.
பல உண்மை நிலைகளை மதம் என்ற அடிப்படையில் உலகின் பல பாகங்களில் பல சித்தர்களால் வெளியிடப்பட்டதை… அந்தந்த நிலையில் உள்ள மக்களுக்குப் புரியும்படி வெளியிட்டதை… காலத்தின் செயலால் ஒரே அடிப்படையில் ஒவ்வொருவரும் “தன் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள்…”
ஆனால் எல்லோரும் சொல்லும் அடிப்படைக் கருத்து ஒன்றே தான். நம் ஆத்மாவிற்கு நாம் சேமித்து வைத்திடும் நிலை என்ன…? என்பதைத் தான்.
அதை வைத்தே தான் பல பல வழிகளில் பல கதைகளைக்கட்டி உண்மை ரகசியத்தை எல்லாமே மக்களுக்கு உண்மையாகப் போதிக்காமல் கதை வடிவில் அதை வடித்துக் கதையையே கடவுளாகக் காட்டி மக்களுக்குக் கடவுள் என்றாலே கதையில் வடித்த உருவம் தான் என்ற எண்ணம் வரும்படி செய்து விட்டார்கள்.
எல்லா மக்களுமே தான் உயர வேண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு தான் வாழ்கின்றார்கள். அவ்வாழ்க்கையில் வரும் பேராசை நிலையில்தான் பல பாவங்களுக்கு உட்படுகின்றார்கள்.
நல்வழியில் நடத்திச் சென்றிடத் தான் அன்றைய சித்தர்கள் அரும்பாடு பட்டுத் தவம் இருந்து தான் பெற்ற சக்தி நிலைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள்.
இராமாவதாரத்தில் வந்த வால்மீகி முனிவரினால் எழுதப்பட்ட இராமாயணம் என்ற காவியத்தையே அதில் உள்ள உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் அதில் உள்ள குணா அம்சங்களை
1.ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி குணா அம்சங்கள் அமைகிறது…? என்ற தத்துவ உண்மைகளை உணர்த்திடாமல்
2.அக்கதையையே தன் தன் நிலைக்கு உகந்தபடி மாற்றியும் மறுத்தும்
3.இது தான் உண்மை இது எல்லாம் தவறு என்று சுட்டிக் காட்டும் நிலையத்தான் அன்றே சிலர் திருத்தி விட்டார்கள்.
அன்று எழுதிய இராமரின் கதை தான் இன்றும் பல கோணங்களில் திரித்துச் சிதறடித்தாலும் அந்த இராமரின் கதையே தான் உலவிக் கொண்டுள்ளது
இராமாயணத்தின் மகத்துவத்தை மட்டும் இன்றைய உலகில் உள்ள மக்கள் எல்லோரும் அதிலுள்ள உண்மை நிலையைப் புரிந்து கொண்டால்…
1.இன்று நாட்டில் நடந்திடும் குழப்ப நிலைகளும்
2.மனிதனை மனிதன் ஏமாற்றி வாழும் நிலையும் இருந்திடாதப்பா.
எல்லோரும் எல்லோரும் என்னும் பொழுது ஒரு நற்செயலைச் செய்பவரும் நல்ல காரியத்தைச் செய்பவர்களும் இப்பொழுது மதங்களின் வழியில் தன் தன் மதத்துக்கு உகந்தபடி சிதறடித்து விட்டார்கள் பல நல்ல நிலைகளை எல்லாம்.
ஆனால் எல்லோரும் சொல்வது இப்பொழுது உலகெங்குமே ஒரே நிலையில் கூடி வருகின்றது. இந்நிலையே கூடி வந்து
1.ஒருவனே தேவன் ஒன்றே குலம் அத்தேவனில் இருந்து பிரிந்து வந்த பிம்பங்கள் தான் நாம் எல்லோருமே…
2.எந்த மதத்திற்கு யாரும் அடிமை இல்லை…! என்ற சொல்லெல்லாம் இப்பொழுது எந்த மனிதனின் மனதிலும் ஏறவில்லை.
3.ஏட்டிற்கும் எழுத்திற்கும் தான் இந்நிலை எல்லாம் உகந்ததாக உள்ளது இப்பொழுது…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இருதய வலி (நெஞ்சு வலி) போன்ற உபாதைகள் வந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்து சிறிது பின்னுக்கே சாய்ந்து சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவின் ஆற்றலைச் விண்ணிலிருந்து இழுத்துச் சுவாசியுங்கள். (ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக் கூடாது…)
1.மெதுவாக மூச்சை அடக்கி மறுபடியும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற அந்த மூச்சை எடுங்கள்.
2.இரண்டு நொடி உடலுக்குள் நிறுத்துங்கள்… மறுபடியும் மெதுவாக விடுங்கள்.
காரணம் நம் சுவாச நாளங்களில் இரத்தங்கள் போகும் பாதையில் அடைப்புகள் இருக்கும்.
1.நாம் சுவாசிக்கும் நிலைகளில் புகையிலையோ அல்லது
2.பீடி சிகரெட் பிடிப்பவர்கள் புகை விடுவதை நுகர்ந்திருந்தாலோ
3.நாம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த மாதிரிப் பிடிக்கிறார்கள் என்று எண்ணினால் போதும்.
4.அது நம் சுவாசத்தின் வழியாகச் சுவாசப் பைக்குள் சென்று இரத்தங்கள் போகும் பாதைகளில் உறைந்து விடுகின்றது.
உறைந்து விட்டால் இருதத்திலிருந்து இரத்தம் ஒரு பகுதி வழியாகப் போகவில்லை என்றால் அடுத்த பகுதி வழியாகப் போகும்.
நுரையீரலுக்கோ மற்றதுக்கோ இரத்தம் பாயும் நிலைகளைத் தடைப்படுத்தும். இந்தப் பாதையும் அடைபட்டு விட்டால் இதே போல் அடுத்த பக்கமும் அடைபடும்.
மூன்று பாதைகளில் ஏதாவது ஒன்று வழியாகப் போனால் தான்.
இல்லை என்றால் அந்தப் பாதைகள் அடைபட்டு விட்டால் இருதயம் சீராக இயங்காதபடி இருதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்) வந்துவிடும். நெஞ்சு வலி அதிகமாகி மனிதனை மடியச் செய்துவிடும்.
இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இடுப்பிலே கையை வைத்து அந்தச் சுவாசத்தை மேலே சொன்னபடி அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும். அந்த அடைப்புகளை நீக்கிவிடும்.
ஒன்றும் செய்ய முடியவில்லை… மிகவும் தொல்லை கொடுக்கிறது என்றால் தியான வழியில் இருப்பவர்கள் ஒரு ஐந்தாறு பேர் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டமைப்பாக எண்ணுங்கள். அவருக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சுங்கள்.
இங்கே கொடுத்த விபூதியையோ அல்லது தண்ணீரையோ தியானத்திற்கு முன்னாடி வைத்து அதற்குப் பின் அந்தத் தீர்த்தத்தை அவரை அருந்தச் செய்யுங்கள்.
1.அவர் உடலில் உள்ள இருதய வலி நீங்கி… இருதயம் சீராக இயங்கி உடல் நலம் பெறவேண்டும் என்று இந்த எண்ணத்தில் நீங்கள் கொடுங்கள்.
2.அவர் குடிக்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.
இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நீங்கள் சீர்படுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அவர்களுக்குள் இதைப் பாய்ச்சப்படும் போது இது நல்லதாகும்.
இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.


கோவிலைக் கோவிலாக நாம் மதிக்கின்றோமா…?
1.தெய்வீகப் பண்புகளை வளர்க்கக் கூடியது தான் நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே…!
2.அந்த எண்ணத்துடன் நாம் அங்கே செல்கிறோமா…? என்றால் இல்லை.
ஆனால் கல்லைக் கும்பிடுகின்றார்கள் பிசாசைக் கும்பிடுகின்றார்கள் என்று ஒருவன் சொல்கின்றான்.
தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னால் உடனே அங்கே சென்று விடுகின்றார்கள். ஆவியை ஏவி விட்டு அதன் வழி செயல்படுவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
குழந்தைகள் அங்கே படிப்புக்காகச் சென்றாலும் கூட “நீ பொட்டு வைக்காதே… கோலம் போடாதே…” என்று சொல்கின்றார்கள்.
1.அனைவருடைய மனதையும் ஒன்று சேர்த்து என் குடும்பம் ஒன்றாக வாழ வேண்டும் என்று காலையில் பெண்கள் நெற்றியில் திலகத்தை வைத்து
2.ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் வர வேண்டும் என்று புள்ளிகளை இட்டு அதை இணைத்து
3.குடும்பத்தில் அனைவரையும் இணைத்திடும் நிலையாகத் தான் கோலமிடச் சொன்னார்கள் நம்முடைய ஞானிகள்.
நீ கோலமிடாதே என்று அவ்வாறு சொல்பவர்கள் பின்னாடி செல்லக்கூடிய கூட்டங்களும் இருக்கின்றது. நம் சாஸ்திரங்களைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மனிதன் எப்படிப் பண்பட வேண்டும் என்று ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை மதம் என்ற நிலையில் பிரிக்கின்றார்கள். உயிர் கடவுள் என்று சொன்ன நிலைகளையும் மாற்றி அமைக்கின்றார்கள்.
இன்னொன்று என்ன செய்கிறார்கள் தெரியுமா…!
இந்தப் பள்ளியில் பிள்ளைகள் நன்றாக படிக்கிறது என்று தான் சேர்த்து விடுகின்றார்கள். அங்கே பிக்னிக் போக என்று பஸ்ஸில் அழைத்துச் செல்கின்றார்கள். போய்க் கொண்டிருக்கும் பஸ் திடீரென்று ரிப்பேர் ஆகி நின்று விடுகின்றது.
டிரைவரை “சும்மா” அது இது என்று பார்க்கச் சொல்லி விடுகின்றார்கள்… ஒன்றும் வேலை செய்யவில்லை.
உடனே… எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் “அவரவர் இஷ்ட தெய்வங்களை எண்ணி வணங்கிக் கும்பிடுங்கள்” என்று சொல்கின்றார்கள். பஸ் சரியாகி ஓட வேண்டும் என்று எண்ணுங்கள்…! என்று சொல்கின்றார்கள்
அடுத்து பஸ்ஸை ஓட்டிப் பார்க்கின்றார்கள்… பஸ் ஓடவில்லை.!
இப்பொழுது இயேசு கிறிஸ்துவை எண்ணிப் பார்க்கலாம் ஏல்லோரும் அவரைத் தியானியுங்கள் என்று சொல்கின்றார்கள். அதற்குப்பின் பஸ்ஸை ஓட்டிப் பார்த்தால் பஸ் ஓடுகின்றது.
1.ஆஹா…! கர்த்தர் வந்து இந்த பஸ்ஸை இயக்குகின்றார் ஓடாத பஸ்ஸை ஓடச் செய்கின்றார் என்று இ
2.வ்வாறெல்லாம் மனிதனுடைய எண்ணங்களைத் திசை திருப்பிக் கலாச்சாரங்களையே மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
3.இது போன்ற சம்பவங்களும் இந்த உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது… இது போன்ற நிலையிலிருந்து நாம் எப்பொழுது தப்புவது…?
நம்முடைய ஆலய பண்புகள் எவ்வளவு தெளிவானது…?
1.யாருக்குமே அங்கே வேற்றுமை இல்லை
2.ஆலயம் வருவோர் அனைவரும் தெய்வீக நிலை பெற வேண்டும்
3.மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டு வாழச் செய்ய வேண்டும் என்பதற்கே ஆலயம்.
ஆனால் அந்த ஆலயத்தை இன்று நாம் அவமதித்துத் தான் நடக்கின்றோம். ஏனென்றால் தன் கஷ்டத்தை எல்லாம் அங்கே அங்கே சொல்வது… பணம் கிடைக்கவில்லை என்றால் அந்த தெய்வத்தையே பழிப்பது. இந்த நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.
கோவிலைக் கோவிலாக நாம் மதிக்கின்றோமா…?
நம் உடலே ஒரு கோவில்… அருள் ஞானிகள் உணர்வை இங்கே வளர்க்க வேண்டும். தெய்வ குணத்தை வளர்க்க வேண்டும்.
இதைக் கேட்டறிந்தவர்கள் ஒவ்வொருவரும் இனியாவது
1.அங்கே சென்று அருளைப் பெருக்குவதற்கு
2.தெய்வீகப் பண்புகளைத் தங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கு
3.மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டு வாழச் செய்வதற்கு அந்த ஆலயத்தில் வேண்டுங்கள்.
நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத்தான் ஆலயத்தைக் கட்டினார்கள்.
1.பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
2.எங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் ஈஸ்வரா
3.அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா
4.நாங்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் ஈஸ்வரா
5.அந்த அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நாம் வணங்கினால்
6.மற்றவர்களும் அவ்வாறு அங்கே கும்பிடுகின்றார்கள்.
இங்கே தனித்து இருக்கும் போது அதை எடுக்க முடியவில்லை…! ஆனால்
1.கூட்டாக ஆலயத்திற்குச் சென்று அந்த்த் தெய்வ குணத்தை எண்ணி எடுக்கும்படி செய்கின்றார்கள்
2.இதை நாம் யாராவது செய்கின்றோமா…?
மனிதனுடைய ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலையாக ஒளியாகத் தெளிந்து… தெரிந்து… தெளிவான வாழ்க்கை வாழ்வதற்கு… ஆலயத்தை அமைத்தார்கள் ஞானிகள்.
அதை நாம் புரிந்து நடக்க வேண்டும்.

சுவாச நிலையில் நறுமணங்களைப் பெறுபவன் ஆண்டவனின் ஆசி பெற்றவனாகின்றான்
முதல் பாடத்திலேயே ஆண்டவனுக்கு அறுசுவை உணவு படைப்பது பற்றிச் சில நிலைகளைச் சொல்லி உள்ளேன்… அதன் விளக்கத்தை இன்று தருகின்றேன்.
என்பவர் யார்…? என்று முதலிலேயே சொல்லி உள்ளேன். ஆண்டவனுக்கு அறுசுவை உணவைப் படைக்கும் பொழுது ஆண்டவன் சக்தி பெற்ற முருகனாக உள்ளவரும் வெங்கடாஜலபதியாக உள்ளவரும் இப்படிப் பல ஆண்டவனின் நாமத்தைப் பெற்றுள்ள ரிஷிகள் எல்லாம் அங்கே வருகிறார்கள். எந்த வகையில்…?
நீ ஆண்டவனை வணங்கி அமுது படைக்கும் பொழுது அந்நிலைக்கு அவர்கள் வந்து அம்மணத்தின் ஈர்ப்பு தன்மைக்காக (பதார்த்தங்கள் பல வகை பழங்கள் புஷ்பங்கள் ஊதுபத்தியின் வாசனை கற்பூர சாம்பிராணி வாசனைகள்) அம்மணத்தின்…
1.நாம் படைத்த படையலின் மணத்திற்கு நாம் எண்ணி வணங்கும் பொழுது
2.யாரை நினைத்து எண்ணி வணங்குகின்றோமோ அவர்கள் அந்த நிலைக்கு வந்து
3.நம் சுவாச நிலைக்கு நம் உயிரணுவிற்கு வேண்டிய சில நிலைகளை அவர்கள் அதை எடுத்து நமக்கு அளிக்கிறார்கள்… புரிகிறதா…?
அவர்கள் எடுத்து என்று சொல்லும் பொழுது நாம் படைக்கும் பல வகைப் பதார்த்தங்களை அந்த நல்ல நறுமணங்களை நமக்கு அவர்கள் அளிக்கின்றார்கள்
1.நம் சுவாச நிலைக்கு அதை அளிக்கின்றார்கள்.
2.நம் சுவாச நிலையும் ஒருநிலைப்படுகிறது
3.நம் உயிரணுவும் ஊட்டம் பெறுகிறது.
ஆண்டவனின் நாமத்தைச் சொல்லிப் படைக்கும் உணவெல்லாம் அவ்வாண்டவனின் நாமத்தில் உள்ளவர்களா எடுத்து அள்ளி அள்ளி உண்ணுகிறார்கள்…?
இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி நல்ல மணங்களைத் தன் சுவாச நிலைக்குத் தன் உயிரணுவிக்கு ஊட்டமாக எடுத்துக் கொள்ள அச்சித்தர்களினாலும் ரிஷிகளினாலும் ஞானிகளினாலும் தான் முடியுமப்பா.
இம் மனித உடலில் உள்ள நமக்கு நாம் பூஜை நிலையில் படைக்கும் உணவின் மணத்தை எல்லாம் நறுமணங்களை எல்லாம் நமக்கே தான் அளிக்கிறார்கள் “அவ்வாண்டவனின் நாமத்தில் உள்ள அருட்பெருஞ்ஜோதிகள் எல்லாம்…”
1.நான் எல்லோருக்குமே பொதுவானவன்… சமய வேறுபாடு எனக்கில்லை
2.சகலத்தையும் ஒன்றாக எடுப்பவன் தானப்பா நான்.
இந்துமத முறைப்படி இப்படிப் பல முறைகளில் வணங்குகிறோம். ஆண்டவனை இந்நிலையில் வணங்கும் பொழுது அச்சித்தர்கள் ரிஷிகள் நாம் வணங்கும் முறைக்கு நம் நிலைக்கு நல் உணர்வு தருகின்றார்கள்.
ஆனால் பல கோவில்களில் பலியிட்டு அந்நிலையில் ஆடு கோழி இவைகளை உணவாகப் படைத்து ஆண்டவனை வணங்குகின்றார்கள். அவர்கள் வணங்கும் நிலைக்கும் வருகிறார்கள்… அவர்கள் வணங்கும் தெய்வமான ஆவிகளான நாட்டராயன் முனியப்பன் பேச்சியம்மன் அங்காளி அம்மன் இன்னும் பல நாமங்களுடைய அந்நிலையில் அருள் பெற்ற ஆவிகள்.
ஆண்டவன் சக்தியிலிருந்து அவரவர்கள் நிலைக்குப் பெற்றார்கள் சில சக்திகளை ரிஷிகளும் தவசு முனிவர்களும் என்றேனல்லவா. அவர்கள் பெற்ற சுவாச நிலைக்குத் தகுந்தபடி தான் அவர்கள் நல் சக்தியின் அருளைப் பெறுகின்றார்கள்.
அச்சக்தியின் அருளைப் பெற்றவர்கள் எல்லாம் அவர்கள் சுவாச நிலைக்கு எங்கு ஆகாரம் கிடைக்கிறதோ அங்கு வந்து அருள் தருகிறார்கள் ஆண்டவனாக.
அவர்கள் பெற்ற அருள்… நாட்டராயன் முனியப்பன் பேச்சியம்மன் அங்காளி அம்மன் என்னும் நாமங்களுடைய தேவதைகள் எல்லாம் வந்து அவர்களுக்குகந்த ஆகாரம் கிடைக்கும் பொழுது அவர்கள் சுவாச நிலைக்குகந்த ஆகாரம் கிடைக்கும் பொழுது அந்நிலைக்கு அவர்கள் அருள் புரிகின்றார்கள் அம்மக்களுக்கு.
இன்னும் பல இடத்தில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பலவித வாசனைத் திரவியங்களை தன் மேலே பூசிக்கொண்டு அவர்கள் வணங்கும் ஆண்டவனின் ஆலயத்திற்குச் செல்கிறார்கள்.
அந்நிலையில் அவர்கள் வணங்கும் அல்லாவும் இயேசுவும் வருகிறார்கள் அவரவர்கள் நிலைக்கு தகுந்தபடி ஆசீர்வாதம் அளிக்கிறார்கள்.
1.சுவாச நிலையில் எவன் ஒருவன் நல்ல மணங்களைப் பெறுகின்றானோ
2.அவன் ஆண்டவன் அருளைப் பெற்ற ஆண்டவனின் ஆசியைப் பெற்றவனாகின்றான்.
3.ஆண்டவனின் அருளெல்லாம் இச்சுவாச நிலையிலிருந்து தான் உயிரணுவிற்குக் கிடைத்து மனிதனின் நிலையையே நடத்திச் செல்கிறது.
சுவாச நிலையிலிருந்து வருவது தான் எல்லாமே…!
மனநிலை சோர்வுற்றவனும் மனநிலையில் குழப்பத்துடன் உள்ளவனும் இவ்வாண்டவனை எண்ணி அவ்வாண்டவனுக்குகந்த நிலையில் நறுமணம் உள்ள புஷ்பத்தைச் சூட்டி வணங்கும் பொழுதே மனநிலையில் சில மாற்றங்களைக் காணலாம்.
1.சுவாச நிலையில் இருந்து தானப்பா இவ்வுலக நிலையே உள்ளது
2.இவ்வுலக நிலைக்கு ஊன்றுகோலே சுவாச நிலைதானப்பா.
நீராவியில் எப்படி ரயில் செல்கின்றது என்று சொல்கின்றாயோ அந்நிலையே தானப்பா இவ்வுலகச் சுற்றலும். அச்சக்தியின் சொரூப நிலை மனிதனை மட்டும் தாங்கிக் கொண்டில்லையப்பா.
அவன் படைத்த படைப்பில் எல்லாவற்றிலுமே கலந்துள்ளவனப்பா அவன். அச்சக்தியின் சொரூப நிலையைக் கண்டிடவும் முடியாது சொல்லிடவும் முடியாது.
போற்றிப் போற்றி வணங்கிடத் தானப்பா வேண்டும் இந்த மானிட உடலைப் பெறும் பாக்கியம் பெற்ற நாம் எல்லோருமே.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக காரமான ஒரு பொருளைத் தனித்து உணவாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சியே முன்னணியில் நிற்கும்.
ஆனால் அந்தக் காரத்தை அடக்க “சப்…” என்று இருக்கும் காரம் இல்லாத பொருள்களை அதனுடன் இணைத்து உட்கொண்டால் அந்தக் காரத்தின் தன்மை குறைந்து சுவைமிக்க நிலைகளாக உருவாகின்றது
இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது
1.உயிர் இருக்கும் ஈஸ்வரலோகத்தில் அது உருவாக்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் தான் முன்னணியில் இயக்கும்.
3.மற்ற நல்ல குணங்களின் வலு குறைகிறது.
காரணம் மற்றவர்களுடைய குறைகளையும் துன்பங்களையும் கேட்டறிந்து நுகர்ந்து தான் உதவி செய்கிறோம். நுகரும் போது தான் உயிரும் அதை இயக்குகிறது.
இருந்தாலும் அதைக் கேட்டறிந்த நிமிடத்திலேயே…
1.அவர்கள் கஷ்டங்களைச் சொல்வதற்கு முன் “ஈஸ்வரா…!” என்று நம் உயிரான ஈசனிடமே கேட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
3.அந்த உணர்வை அப்பொழுதே உயிரிலே இணைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
குழம்பு வைக்கும் போது பல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போல் நாம் கேட்டு… நுகர்ந்த மற்றவரின் உணர்வுக்குள் அந்த அருள் ஞானிகளின் உணர்வைக் கூட்டிவிட்டால் அதைத் தணித்து அருள் உணர்வின் அணுக்களாக மாற்ற முடியும்.
நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும்… சந்தர்ப்பத்தில் ஒருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை நமக்குள் அதிகரிக்கப்படும் போது நல்ல குணத்தின் தன்மைகள் குறைந்து விடுகிறது.
1.அப்பொழுது அந்த நல்ல குணத்தின் தன்மையை அதிகமாக்க…
2.அதை வலிமை பெறச் செய்ய வேண்டும் என்றால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அதனின் உணர்வின் கருக்களாக மாறுகிறது. வேதனையை வலுவிழக்கச் செய்கிறது.
“பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலையில் நம்முடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து அந்த உணர்வை நுகர்தல் வேண்டும்…
2.இரத்தத்தில் கலக்கச் செய்தல் வேண்டும்…
3.உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் அதை இணைத்தல் வேண்டும்.
அத்தகைய நிலைகளை நாம் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை வலுப் பெறப்படும் போது வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி விடுகிறது.
உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கிறது…!
1.உடல் பெறும் விஷத் தன்மைகளை அங்கே கரைத்து விடுகின்றது.
2.ஒளியின் சரீரமாக… நம்மை ஒளியாக மாற்றுகின்றது.


சுருங்கச் சொல்லி யாம் பதிவாக்குவதை வளர்த்துக் கொண்டால் “அதன் விரிவாக்கங்களை நீங்கள் உணரலாம்”
ஆதியிலே அகஸ்தியன் தன் வாழ் நாளில் இளமைப் பருவத்திலேயே வானஇயில் புவியியல் தாவரவியல் உயிரியல் ஆற்றலை உணர்ந்தான்.
அணுவின் ஆற்றலை அறிந்ததால் தான் அவனுக்குக் காரணப்பெயர் அகஸ்தியன் உண்மையின் இயக்கத்தை கண்டறிகின்றான் உண்மைகளை உணர்கின்றான்.
தாவர இனங்களுக்கு எங்கிருந்து சத்து வருகிறது…? என்று பார்க்கின்றான் நமது பூமி துருவத்தின் வழியாகக் கவருகிறது (சுவாசம்) என்று காணுகின்றான்.
1.ஃபேன் அது சுழலும் பொழுது பரந்து கிடக்கக்கூடிய காற்றை இழுத்து மொத்தமாகக் குவித்து நமக்கு முன் கொடுக்கின்றது.
2.அதைப் போன்று தான் நமது பூமி சுற்றும் பொழுது அதற்கு நேர் துருவப் பகுதியில் இருப்பதை இழுத்துக் கொண்டு வருகின்றது…
3.பூமிக்குள் படரச் செய்கின்றது என்பதை உணர்ந்தான்.
வானவியல் புவிஇயலாக மாறும்போது தாவர இயலாக மாறுகின்றது. இங்கே பூமிக்குள் உற்பத்தியாகவில்லை… “வானிலிருந்து வந்து உற்பத்தி ஆகின்றது…”
அதிலிருந்து கவர்ந்த உணர்வுகள் தான் மற்ற நிலைகள் ஆனாலும் இதை உணவாக உட்கொண்டு உயிரியல் வளர்கின்றது. வானியல் புவியியல் தாவரவியல் பின் கடைசியில் உயிரியல்.
1.உங்களுக்கு சுருக்கமாகச் சொல்லி அகஸ்தியன் கண்ட உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
என்னால் முடிந்த அளவுக்கு உங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிப்பது. இந்த நினைவு உங்களைக் காக்கும்… உங்களைக் காக்க வேண்டும் என்பதற்குத்தான் சொல்வது.
நான் காப்பேன் என்றால் நான் யார்…? இந்த உணர்வை பதிவு செய்து நீங்கள் மீண்டும் எண்ணினால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும். அருள் உனர்வை வளர்க்க இது உதவும்.
என்னைத் திட்டினார் என்று மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வு உங்களுக்குக் கெடுதல் செய்கின்றது.
1.சாமி சொன்னார்… அவர் சொன்ன வழியில் இப்படிச் செய்தால் நமக்கு நன்மை என்று எண்ணினால் அது உங்களைக் காக்கின்றது…
2.அதாவது அந்த எண்ணம் தான் உங்களைக் காக்கிறது.
3.அத்தகைய எண்ணங்களை உருவாக்குவதற்கு தான் பதிவாக்குவது பதிவை நினைவாக்கினால்
4.உங்களுக்குள் அது நன்மை செய்யக்கூடிய சக்தியாக வரும்.
ஆகையினால் எமது உபதேசங்களைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து
1.வேறு எந்த ஞாபகம் இல்லாதபடி நேரம் ஆகிவிட்டது என்றெல்லாம் எண்ணாதபடி
2.அருள் உணர்வுகளை நீங்கள் பதிவாக்கி நல்ல நிலையில் வளர வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்வது.

வசி…வசி…! என்று வசியம் செய்யும் மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளிடமிருந்து விடுபடுங்களப்பா…!
மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே மும்மூர்த்தியின் வடிவம் என்ன…? என்று வசிய மந்திரம் ஜெபித்த ஒரு அன்பரின் கேள்விக்கு ஈஸ்வரபட்டர் அளித்த பதில் இது.
“வசி… வசி… வசி…” என்று எட்டுத் திசையை நோக்கி எட்டுத் திசையிலும் உள்ள பாலரை வசியம் செய்து உன்னுள் ஈர்க்கப் பார்க்கின்றாய்.
1.”ஈஸ்வர சக்தி” உன்னுள் இருப்பதை அறியாமல்
2.பல பாலரை ஏனப்பா உன் வசியத்தில் ஈர்க்கிறாய்…?
இது ஆவியின் நிலையில் மந்திரவாதிகள் மந்திரிக்கும் ஜெபமப்பா…! ஆவிகளை எல்லாம் தன் வசம் இழுப்பதற்காக இந்த நிலையில் வசியப்படுத்துவான்.
1.உன்னையே நீ யார்…? என்று புரிந்து கொள்ளாமல்
2.பல ஆவிகளை ஏன் இழுக்கின்றாய் உன் வசியத்திற்கு…?
ஆவிகளின் நிலை எல்லாம் தன் எண்ணத்திற்கு… தன் பசிக்கு… எங்கு அதற்கு ஆகாரம் கிடைக்கின்றதோ அந்த நிலைக்கு வந்துவிடும். ஆவிகளை வசியப்படுத்திக் கொண்டு தான் மந்திரவாதிகளின் வேலை எல்லாம் நடக்கின்றதப்பா.
நடுத் தெருவிலும் நடுஜாமத்திலும் அவர்கள் செய்யும் வேலை எல்லாம் இது தானப்பா..!
குடுகுடுப்பை அடித்துக் கொண்டு வருபவன் நடுஜாமத்தில் மயானக் காட்டில் அமர்ந்து தன் வசியத்திற்கு ஆவிகளை அழைப்பான். இந்நிலையில் ஜெபித்துத்தான் அந்நிலையில் அந்த ஆவிகளுக்குப் பிடித்த ஆகாரத்தை அளிப்பான். பல உண்மைகளை அந்த ஆவிகள் இவனுக்கு உணர்த்திடும்.
நடுநிசியிலே அந்தக் குடுகுடுப்பாண்டி நடந்து வீதி உலா வந்திடுவான். அவன் நடப்பதுவும் அவன் சொல்வதும் அவனுக்கு ஒன்றும் தெரியாதப்பா. அந்த ஆவிகள் தான் அவன் உடலில் அவன் வசியப்படுத்திய வழியில் வந்து ஒவ்வொரு இல்லத்திற்கும் சொல்லிக் கொண்டே செல்கிறது.
1.ஆனால் ஈஸ்வர சக்தியின் அருளைப் பெற்றவர்களின் இல்லத்திற்கு
2.இந்த ஆவிகள் சொல்லும் வாக்கெல்லாம் வந்து தாக்காதப்பா…!
நீ வசிய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த ஆவிகளின் நிலையிலிருந்து எப்பொழுது தான் மீளப் போகின்றாய்..? ஜெப நிலையே இன்னும் நீ புரிந்து கொள்ளவே இல்லையப்பா..!
மந்திரக்காரர்ளும் மாந்திரீகம் செய்பவர்களும் அவர்கள் ஜெபிக்கும் இடத்தில் பல வாசனைத் திரவியங்களைப் போட்டுப் புகை மண்டலத்தை எழுப்பிப் பல வகை உணவுப் பதார்த்தங்களையும் ஜீவராசிகளின் உணவுகளையும் வைத்து மந்திரம் ஜெபிக்கின்றார்கள்.
அந்த மந்திரத் தன்மையில் ஜெபிக்கும் பொழுது அதன் நிலைக்குகந்த ஆவிகள்… தீட்சண்ய ஆவிகள்… அகால மரணமடைந்த ஆவேச ஆவிகள்… தற்கொலை செய்த ஆவிகள்… பிறரினால் கொலை செய்யப்பட்ட ஆவிகள்… இந்த நிலையில் உள்ள ஆவிகள் எல்லாம் இவர்கள் படைக்கும் உணவுக்காக வரும்.
இவர்கள் ஜெபிக்கும் ஜெபத்தில் “ஜெபம் என்றால் என்ன…?” என்று எண்ணுகிறாய்…?
ஆவிகளுக்குண்டான உணவை எல்லாம் படைத்துப் புகை மண்டலங்களை எழுப்பி வசி…வசி…! என்று அந்த ஒலியின் நாமத்தை துர்மரண ஆவியின் நாமத்தை வைத்து வசி…வசி…! என்று வசியப்படுத்திக் கொள்கின்றார்கள்.
1.மந்திரம் சொல்வதும் தகட்டில் எழுதுவதும் ஓலையில் எழுதுவதும் எல்லாமே அந்த ஆவிகளின் வசியத்தின் மூலமாகத் தான்.
2.தன் பிழைப்புக்காக தன் உயிர் நிலையையே மாற்றிக் கொண்டு பல ஏவல்கள் செய்வதெல்லாம் அந்த ஆவிகள் தான்.
மாந்திரீகர்களின் மண்டை ஓட்டை வைத்து ஜெபிப்பது என்ன…? என்றால் எந்த ஆவியைத் தான் வசியம் செய்து வைத்துள்ளானோ அந்த ஆவியை தன் உடல் பின்னமாகி எந்த நிலையில் எங்கு அதனின் உடலின் மண்டை ஓடு உறுப்புகள் உள்ளது என்ற நிலையைச் சொல்லிவிடுகிறது.
அதை எடுத்துக் கொண்டு வந்து அவன் ஜெபிக்கும் பொழுது இன்னும் பன்மடங்கு அவனுக்கு அந்த ஆவிகளின் ஒத்துழைப்பு கிடைக்கிறது.
1.மாந்திரீகர்கள் அவர்கள் செய்யும் வேலைகளும்
2.இந்த மண்டை ஓடுகளும் மற்ற எலும்பு உறுப்புகளும்
3.பிறருக்குத் தெரியாத நிலையில் இருக்குமப்பா…!
மன நிலையில் சோர்வுள்ளவர்கள் “மகான்” என்று எண்ணி அவன் போட்டிருக்கும் சாமியார் வேஷத்தை நம்பி அவனை அணுகுகின்றார்கள்.
மனச் சோர்வடைந்த மக்கள் அவனை நாடிச் செல்லும் பொழுது
1.விபூதி வரவழைத்தோ புஷ்பம் வரவழைத்தோ இப்படிப் பல பல பொருள்களை வரவழைத்துக் கொடுப்பான்
2.மக்கள் அவன் அளிப்பதை நம்பி வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலே வைக்கின்றார்கள்.
இல்லத்திற்குள் வைத்தவுடன் முதலில் எல்லாமே நல்லதாகத்தான் நடப்பதாகத் தெரியும். ஆனால் அதன் வேலை எல்லாம் இவன் உடலில் உள்ள அணுக்களை தன் நிலைக்குத் திசை திருப்பி அவன் உடலில் உள்ள அணுக்களைத் தன் வசப்படுத்த அவன் மன நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.
அந்த ஆவி தன் நிலைக்குகந்த ஆகாரத்தையோ தன் நிலைக்குகந்த எண்ணத்தையோ அவனை எண்ண வைத்துக் கொண்டே இருக்கும்.
இந்த ஆவிகளின் நிலை எல்லாம்
1.அவன் உயிரணுவுக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்து அவன் நிலையில் அவனை இருக்க விடாமல்
2.அவனையே தன் வசப்படுத்திக் கொண்டு அவனுக்குள் வந்து குடி அமர்கிறது அந்த ஆவி.
தன்னுள் இருக்கும் சக்தியைப் புரியாமல் மாந்திரீகரிடம் சென்று பல தீட்சண்ய ஆவிகளுக்குத் தன் நிலையையே விற்று விடுகின்றார்கள் புரியாத பாமர மக்கள்.
1.தேவர்களின் தேவனப்பா மனிதர்கள் எல்லாம்.
2.இந்த மனித உடலைப் பெறுவதே பெரும் பாக்கியமப்பா…! என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திடுங்களப்பா…!
3.மந்திர மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளின் இயக்கத்திலிருந்து விடுபடுங்களப்பா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகத்துடன் ஒத்துத் தான் வாழுகிறோம். இதிலே பிரிந்து வாழ முடியாது.
1.நன்மை தீமைகளைக் கேட்டுணர்ந்து தான் செயல்படுகின்றோம்.
2.தீமையை நுகர்ந்து தீமை என்று அறிந்து கொள்கின்றோம்… ஆனால் அந்தத் தீமை நமக்குள் விளையாது தடுக்க வேண்டும்.
உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்து அந்தத் தீமையை நமக்குள் குறைத்துப் பழக வேண்டும்.
மிளகாயைத் தனியாகக் கடித்தால் காரமாகத் தான் இருக்கின்றது. விஷத்தைத் தனியாக உட்கொண்டால் மயக்கம் வருகிறது.
1.ஆனால் அந்த விஷமான சக்தியை ஒரு மருந்துடன் சேர்த்து
2.அதனின் கலவையைச் சிறுக்கப் போகும் போது அந்த உணர்வுகள் மருந்தை நன்மையாக்குகின்றது.
3.உடலுக்குள் வேகமாக மருந்தை எடுத்துச் சென்று நோயை நீக்குகிறது.
இதைப் போன்று தான் தீமைகளை நாம் பார்த்தாலும் அல்லது கேட்டுணர்ந்தாலும் நுகர்ந்த பின் அது நம்மை இயக்குகின்றது.
1.அந்த நேரத்தில் “அதை இடைமறித்து”
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைக்க வேண்டும்…
3.அருள் சக்தி கலந்த அணுவாக அப்போது மாறும்.
இப்படி.. மகரிஷிகளின் அருள் சக்தி கலந்த அணுவாக மாறும் போது நமக்குள் அது தீமையை அடக்கும் சக்தியாக உருப் பெறுகின்றது… அப்படி வலுப் பெறும் போது தீமைகளைப் பிளக்கின்றது.
பார்த்துணர்ந்த உணர்வுகளைக் (எதுவாக இருந்தாலும்) கண்ணின் கரு விழி நமக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ ஆன்மாவாக மாற்றி அந்த உண்மையைச் சொல்லும். ஏனென்றால்…
1.நம் கண்கள் அது வழி காட்டும்.
2.நம் உயிரோ அதை இயக்கிக் காட்டும்.
3.உடலோ தனக்குள் இணைத்துக் காட்டும்.
4.மீண்டும் அதனின் நினைவு வரப்படும் போது அந்த அலைகளே நமக்கு உணர்த்தும்.
இப்படி மற்ற தீமைகளை நாம் எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதே போன்று தான் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்துப் பதிவாக்க வேண்டும். உடலில் உள்ள எல்லாவற்றிலும் இதைக் கலக்க வேண்டும்.
அதாவது தீமைகள் வந்து மோதும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும்.
இதற்கு முன்னாடி இந்த மாதிரி நமக்குத் தூய்மைப்படுத்தத் தெரியாது. ஆகையினால் எத்தனையோ உணர்வுகள் பதிவாகி இருக்கின்றது.
ஒரு எதிரி நமக்கு எப்பொழுதோ இடைஞ்சல் செய்திருப்பான். திடீரென்று அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரும். பார்த்தவுடன் என்ன நடக்கிறது…?
1.அவனைப் பற்றிய பதிவு ஏற்கனவே நமக்குள் இருக்கிறது.
2.அந்த நினைவு வந்த பின் “அயோக்கியப் பயல்… போகின்றான் பார்…! என்ற எண்ணம் டக்… என்று அங்கே வரும்.
அந்தச் சமயத்தில் அவன் மீது வரும் வெறுப்போ கோபமோ பயமோ அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் விளையும். உடலில் ஏற்கனவே இதன் வழியில் ஏற்பட்ட அணுக்கள் தனக்கு வேண்டிய இரையை எடுக்கும்.
அதே போல் அடுத்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் அவர்கள் செய்த தவறின் உணர்வை நினைக்கும் போது அந்தத் தவறின் உணர்வை இந்த அணு சாப்பிட்டு வளர ஆரம்பிக்கும்.
1.இப்படி எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் இது வளரத் தொடங்கினாலும்
2.நாம் அவ்வப்போது ஈஸ்வரா… என்று உயிரிடமே வேண்ட வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் எதைப் பார்த்தோமோ அது ஆன்மாவாகி சுவாசித்து அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அணுவாக அது வளர்க்கப்பட்ட பின் அதற்கு இது உணவாகக் கொடுப்பது உயிரின் வேலை தான். நாம் எண்ணியதை ஜீவ அணுவாக மாற்றுவதும் உயிரின் வேலை தான்.
தாவர இனங்களுக்குச் சூரியன் எப்படி அதனதன் சத்துகளைக் கொடுத்துச் செழித்து வளரச் செய்கிறதோ அதே மாதிரித் தான்
1.நம் உயிரும் சூரியனாக இருந்து உடலில் அணுக்களை உருவாக்குவதும்
2.அதற்கு வேண்டிய இரைகளைக் கொடுப்பதும்
3.அந்த நினைவைக் கவர்ந்து தனக்குள் அதைச் செயலாக்குவதும் போன்ற வேலையைச் செய்கிறது.
ஆனால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றிய உணர்வுகள் விளைந்து மனித உடலுக்குள் வரும் போது ஆறாவது அறிவாக வருகிறது… கார்த்திகேயா.
ஒவ்வொரு சரீரத்திலும் தனக்குள் அறிந்து உணர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்கள் மாற்றி இன்று மனித உடலாக உருவாக்கியது இந்த உயிர்.
நம் ஆறாவது அறிவால் எதனையும் அறிந்திடும் நிலைகள் வருகின்றது. ஆகவே அதை வைத்து இருளைப் போக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.


ஆரம்பத்தில் என்னைச் சமாதியாக்க முயற்சித்தார்கள்
இங்கே எம்மை… (ஞானகுரு) ஆளைக் காணவில்லை என்று சொன்னதும் சாமியம்மா (என் மனைவி) எம்மை தேடிக் கொண்டிருந்தது. நான் பாபநாசம் சென்று விட்டேன் என்று அங்கே சென்று விட்டது. அது மலைக்காடு தண்ணீராக இருக்கின்றது… தனியாகத்தான் சென்றது. அங்கே ஒருவரும் இல்லை என்பதால் அடுத்த பஸ்ஸில் ஏறித் திரும்பிவிட்டது.
ஆக
1.அன்றைக்குச் சரியான நேரத்தில் அந்தம்மா தேடி வந்து எம்மைக் கூட்டிக் கொண்டு வந்ததால் ஆவியாக வந்து எம்மைப் பிடிக்கவில்லை.
2.இல்லையென்றால் இப்பொழுது உங்களிடம் இந்த உபதேசக் கருத்துக்களை நான் பேச முடியாது… நிச்சயமாகப் பேச முடியாது.
காரணம்… ஆரம்பத்தில் நான் பவானியில் (சத்தியத்தின் சக்தி நிலை) இருந்தேன்… பல உண்மைகளை அங்கே அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தேன்.
ஆனால் அவர்களோ எமக்குப் பல பல வகைகளிலும் இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தார்கள். எல்லாம் முடிந்த பிற்பாடு “என்னைச் சமாதியாக்க வேண்டும்” என்று முயற்சித்தார்கள். காரணம்…
1.அவர்கள் தனித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள்.
2.என்னைக் கொன்று விட்டு அவர்கள் தனித்து அதையெல்லாம் அனுபவிக்கலாம் என்று…!
இயற்கையின் உண்மை நிலைகளை எல்லாம் அங்கே தான் வெளி முதலில் உலகத்திற்குத் தெரியப்படுத்தியது. அங்கே தான் சாமியம்மா என்னைத் தேடி வந்தது.
ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சாமியம்மாவிடம்… அங்கே சமாதியாக்கி விடுவார்கள் நீ போ…! என்று சொல்லி இருக்கின்றார். நடந்த நிகழ்ச்சி இது…!
ஏனென்றால் பவானியில் உள்ளவர்களின் திட்டம் இதுதான். அருகிலே மலை ஒன்று இருக்கிறது… அருகிலே இடமும் வாங்கி இருந்தார்கள். அதிலே கட்டடத்தைக் கட்டி விட்டு அங்கேயே என்னைச் சமாதியாக்கி விடலாம் என்று.
இங்கே வந்தார்… திடீரென்று சொர்க்கம் சென்று விட்டார்…! என்று சொல்லி அதை வைத்துச் சம்பாதித்துக் கொள்ளலாம். யாம் கொடுத்த பாட நிலைகள் உலகில் யாருக்கும் சொல்லாது தாங்களே அதை மறைத்துக் கொள்ளலாம் என்று செயல்பட்டார்கள்.
இப்படிப்பட்ட மனிதர்கள் அன்று இருந்தார்கள்… ஏனென்றால் குருவை மறந்து விட்டார்கள். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! அங்கே நடந்த சில உண்மைகளை இப்பொழுது தான் உங்களுக்குச் சொல்கின்றேன்.
ஆகையினால்
1.என் மனைவி அங்கே வந்து “அவசியம் நீ என்னுடன் வந்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது…:
2.நான் சிறிது நாள் இங்கே இருந்து விட்டு வருகின்றேன் என்று சொன்னேன்
3.இல்லை இப்போதே… உடனடியாக வரவேண்டும் என்று சொல்லிவிட்டது
அந்த நேரத்தில் நான் இருந்த இடத்திலே அவர்களுடைய செயல்களும் அதற்குத் தகுந்த மாதிரியே இருந்து விட்டது. பவானியில் எம்மைச் சமாதியாக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள்.
யார்…? எஸ்.எஸ்.எம் என்பவர்…! அங்கே ஆரம்பத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் இது எல்லாம் தெரியும் பணம் இருந்தும் கொடுத்த ஞானத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக… ஆசை கொண்டு என்னைக் கொலை செய்யும் அளவிற்குச் சென்று விட்டார்கள்.
இது வரையில் இதை எங்கேயும் வெளிப்படுத்தவில்லை.
1.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம் சந்தர்ப்பங்கள் வரும் என்பதை
2.நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்
அதற்கப்புறம் தான் இங்கே வந்து தபோவனத்தை ஆரம்பித்தது. என்னுடைய மனைவி அப்பொழுது என்னை இழுத்துக் கொண்டு வரவில்லை என்றால் என்னைச் சமாதியாக்கி இருப்பார்கள்.
1.குருநாதர் அந்தம்மாவின் உடலில் வந்து எல்லாவற்றையும் சரி செய்து என்னை இழுத்து வந்தது
2.காரணம் அன்றைக்கு குருநாதர் யார்…? என்பது அவர்களுக்குத் தெரியாது
3.ஆனால் அவருடைய செயலை யாரும் மறைக்க முடியாது
4.அவர் இட்ட கட்டளையைத் தான் செய்ய வேண்டுமே தவிர சுதந்திரம் எனக்கு இல்லை
5.அவர் இட்ட வேலையை நான் (ஞானகுரு) வேலைக்காரனாகச் செய்து கொண்டிருக்கின்றேன்… அவ்வளவுதான்
6.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும்… உடலைக் கோவிலாக மதிக்க வேண்டும் என்று சொன்னார்
7.அந்த அருள் உணர்வைப் பெற செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்
8.ஆக… நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று உங்களிடம் தான் என் வரம் கேட்கின்றோம்
9.அருள் உணர்வுகளை யாம் பாய்ச்சப்படும் பொழுது நீங்கள் அந்த அருளைப் பெருக்கினால் தான் எனக்கும் அந்த அருள் கிடைக்கின்றது
10.நீங்கள் வளர்ந்தால் தான் நான் வளர முடியும்.
அதாவது… விவசாயம் செய்யும் போது நிலத்தில் நல்ல வித்துக்களைப் போட்டு விளையச் செய்தால் மகசூல் எப்படிக் கிடைக்கின்றதோ அந்த வித்து தான் மற்றவர்களுக்குக் கிடைக்கும்.
ஆகையினால் என் மனைவி தேடி வந்து என்னை அழைத்துக் கொண்டது. நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனம் ஆகி… நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து கொண்டு வருகின்றோம்
1.இதே நிலை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான்
2.நாங்கள் இருவரும் அருள் சேவை செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆண்டவனின் அருளைப் பெற்று “நீ ஆண்டவனாக இருந்துவிடப்பா…!”
பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல்… என்று பாடுகின்றாய் “பரிபக்குவ நிலையை வேண்டுகின்றாய்…”
1.பல நாட்கள் பாடம் கேட்டு உங்கள் மூவரின் நிலை என்னப்பா…?
2.பாரினில் பல கோடி மக்கள் உள்ள நிலையிலும் பூர்வ ஜென்மத்தின் தொடர்பினால்
3.சிலரை (உங்களை) மட்டும் பாட நிலைக்கு ஏனப்பா நான் அழைக்கின்றேன்…!
இராமர் கதையை கேட்டிருப்பாய் இராமர் கதையில் உள்ள தத்துவத்தை எல்லாம் “மறந்துவிட்டு” விடிந்தபின் கேட்ட நிலைதானப்பா உங்கள் மூவரின் நிலையும்.
ஆனாலும் உங்கள் நினைவிலும் எண்ணத்திலும் என் நினைவு கலந்து உள்ளதால் உங்களின் நிலை சிதறிடாமல் காத்திட்டேன். சாமியும் பாடுகின்றார் நீங்களும் பாடுகின்றீர் நீங்களும் ஜெபிக்கின்றீர். உன் எண்ணமும் என்னுள்ளே கலந்தது.
1.எல்லோர் நிலையும் ஒரே சமயத்தில் எப்படி என் நிலைக்கு அந்த எண்ணம் மோதுகிறது…?
2.எல்லோர் நிலைக்கும் எப்படி ஆசீர்வாதம் அளிக்கிறேன்…? என்பது புரிந்ததா…!
சில தியானக் கூடங்களில் ஆயிரம் பேர் அமர்ந்திருந்தாலும் எல்லோரும் ஆண்டவனையே நினைக்கின்றார்கள். அவரவர்களின் நிலைக்கு அந்தக் கடவுளை நினைத்தாலும்… எல்லோர் நிலைக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப தியானக் கூடத்தில் உள்ளவர்களின் எண்ணம் ஆண்டவனை ஜெபிப்பதில் உள்ளது.
ஆனால் அவரவர்களுக்கு வேண்டியதை நினைத்துத் தான் ஜெபிக்கிறார்கள். உடல் நிலைக்கு… தொழில் நிலைக்கு… இப்படிப் பல நிலைகளில் அவரவர்களின் எண்ணத்திற்கு உகந்தபடி தியானக் கூடத்தில்… “அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை ஜெபிக்கிறார்கள்…”
எல்லோருடைய எண்ணத்திற்கு ஒப்ப அவர்கள் எண்ணும் ஆண்டவனால் எப்படி ஆசீர்வதிக்க முடிகின்றது…? இந்த நிலை புரிந்ததா…?
ஆண்டவர் ரூபத்தில் உள்ள எல்லோருமே எப்படியப்பா ஒரே நேரத்தில் அவரவர்கள் எண்ணத்திற்கு ரூபத்திற்கு அருள் புரிகின்றார்கள்.
பழனி மலைக்குப் பல கோடி பக்தர்கள் வருகிறார்கள் முருகா… முருகா… என்று காவடி ஆடிக்கொண்டு பல பல வழிகளில் அவ்ஆண்டவனை அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.
அந்நிலையில் “போகரினால்” எப்படியப்பா எல்லோருக்கும் அருள் புரிய முடிகிறது…?
சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள்… தாம் பெற்ற சூரியனின் சக்தியிலிருந்து ஜோதி ரூபத்தில்… அவர்களுடைய நினைவில்… எல்லோருடைய எண்ணத்தையும் ஈர்த்துக் கொள்கிறார்கள்.
ஈர்த்த நிலையில்
1.அவர்கள் பாய்ச்சும் ஒளிக் கதிர்கள் அவர்கள் நினைக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒலிகள் அவர்களின் உயிர் நிலைக்கே பாய்கிறது.
2.ஒளியைப் பெற்றவர்களுக்கெல்லாம் அவர்கள் எண்ணி வந்த நிலைக்கு அவ்ஒளியின் தன்மையினால் அவ்வாண்டவனின் அருள் கிடைக்கிறது.
3.ஆண்டவன் என்று இப்பொழுது நான் சொல்லியது “என் நிலையில் உள்ள” பல கோடிச் சித்தர்களையும் ஞானிகளையும் ரிஷிகளையும் தான்…!
ஆண்டவன் என்று எண்ணும்பொழுது மக்களுக்கு ஆண்டவன் என்பது யார்…? என்று புரிவதில்லை…!
தன்னையே புரிந்து கொள்ளாத இந்த மக்களுக்கு ஆண்டவன் என்று ஒருவன் இருக்கின்றான் என்ற எண்ணம் இருந்தால்தான் தர்மம் நியாயம் என்ற… இப்பொழுது இருக்கும் சில தன்மைகளாவது… ஆண்டவன் என்ற “ஒரு பயமாவது” இருக்குமப்பா.
அதுவும் சிலரின் மனதில் தான் இருக்கிறது.
இந்நிலை காலம் காலமாக வந்திடும் என்ற நிலையைப் புரிந்து தான் இப்பொழுது சூட்சும உலகத்தில் உள்ள எல்லா ரிஷிகளும் ஞானிகளும் தவம் செய்து
1.அவ்வாண்டவனின் சக்தியைத் தன்னுள் ஈர்த்து அவர்களின் நிலையை ஒருநிலைப்படுத்தி
2.சூட்சம உலகத்தில் இருந்து கொண்டே எல்லா நிலைகளையும் செய்கிறார்கள் இம் மக்களின் தன்மைக்கு.
புத்தனும் இயேசுவும் நபியும் போகரும் கொங்கணவரும் ஐயப்பனும் பெற்ற அருளை எல்லாம் இம்மானிட உலகில் பிறந்த எல்லோருமே பெற்றிடலாம்.
இந்நிலையை ஏன் பெற வேண்டும் என்று எண்ணத்தை இனி எண்ணி விடாதீர்கள்…! இப்பொழுது சொல்லும் பாடம் மிகவும் முக்கியம்
1.சுழன்று கொண்டே உள்ள உலகத்தின் சுழற்சியில் சிக்கிப் பல பல அவதாரங்களை எடுத்து பல உடல்களை எடுத்து
2.உலக ஆரம்ப நிலையில் அல்ல கல்கியில் ஆரம்பித்து கலியில் முடிந்து…
3.திரும்பவும் கல்கிக்கு வந்து திரும்பவும் கலியில் முடிந்து பல பல உடல்களை எடுத்து
4.ஏனப்பா இவ்வுலகத்தில் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.
ஜென்மங்கள் வருவது எதனால் என்பது தெரிந்து விட்டது முதலிலேயே உங்களுக்கு…!
இப்பொழுது பெற்றிருக்கும் இவ்வுடலைக் “கடைசி உடல்…!” என்ற எண்ணம் வைத்து இவ்வுடலிலேயே உன்னுள் இருக்கும் ஆண்டவனை நீ புரிந்து கொண்டு
1.மறு ஜென்மம் எடுத்திடும் நிலைக்கு வந்திடாமல்
2.இக்கலியிலேயே உன் நிலையை ஒரு நிலைப்படுத்தி அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
3.சூட்சும உலகத்திற்கு வந்துவிட்டால் அடுத்த கல்கி பிறந்து கலி வந்து முடியும் வரை பல ஜென்மங்கள் எடுத்து அவதிப்பட வேண்டியதில்லை.
சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே எவ்வுடலையும் உன் நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவ்வுடலில் உன் நிலைக்குச் செய்யும் சேவையை முடித்துக் கொண்டு மறு உடலையும் எடுத்துக் கொள்ளலாம்.
1.பிறந்து வளர்ந்து பல நிலைகளில் மாறுபட வேண்டியதில்லை.
2.அந்நிலைக்கு வந்து வாழ்வது… “என்ன சோம்பேறி வாழ்க்கையா…?” என்று எண்ணிவிடாதே…!
அந்த வாழ்க்கை நிலையில் இம்மனித உடலுக்கு… இம்மானிட மக்களுக்கு… நல் வழி புகட்டி நல்லாசியை அளித்திடத்தான்
1.அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
2.நீ ஆண்டவனாக இருந்திடு…! என்று சொல்வதெல்லாம்.
திரும்பவும் சொல்கின்றேன்……! இக்கலியில் இப்பொழுது பெற்றிருக்கும் கடைசி உடல் தான் உங்களுடைய உடல்கள். இந்நிலையில் இருந்து நீங்கள் மாறுபட்டால்
1.வந்திடும் எதிர்ப்பையும் எண்ணத்தின் மாற்றத்தையும் வைத்து மாறுபட்டால்
2.அடுத்த மானிட உடல் இல்லையப்பா… மனித உடல் இல்லையப்பா…!
3.மிருக உடலுக்குத்தான் செல்ல முடியும்.
உமக்கு ஆண்டவர் எடுத்து கொடுத்த சந்தர்ப்பத்தில் கடைசிச் சந்தர்ப்பம். இது… இந்நிலையை மாற்றி விடாதீர்கள்.
நான் பயமுறுத்துகிறேன்…! என்று எண்ணிடாதீர்கள். உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்துங்கள் நல் வழியில். அழியாத நிலை பெற்றுக் கல்கியில் கலந்திடுங்கள்…!
இந்த ஒரு வாரத்தில் உங்களுடைய எண்ணச் சிதறல்களை வைத்துத் தான் என்றும் வெளியிடாத இரகசியத்தை இன்று வெளியிட்டேன்.
1.”புரிந்ததா… புரிந்ததா… புரிந்ததா…” என்று பல பாடங்களைப் புரிய வைத்தும் எண்ணத்தைஸ் சிதற விட்டீர்கள்
2.இனி சுவாச நிலையை ஒருநிலைப்படுத்துங்கள் உம் வழிக்கு…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மகரிஷிகளின் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து உலகில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுங்கள்
உலகம் முழுவதும் நஞ்சாகப் பரவி இருக்கும் இந்த வேளையில்
1.எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை
2.அந்தக் கலாச்சாரத்தை இங்கே கொண்டு வர வேண்டும்.
சகோதர உணர்வுடன் வாழ வேண்டும்… எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… என்ற அந்த மகரிஷிகளின் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்.
காரணம்… சிந்தனையற்ற நிலையில் மனிதன் இன்று அசுரனாகின்றான். அந்த அசுர சக்தியை மாற்றுவதற்கு நாம் நம் குருநாதர் காட்டிய நிலைகளில் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்துப் பரப்பியே ஆக வேண்டும்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..! என்று நாம் சொல்லும் அந்த அகஸ்தியன் நமது நாட்டில் ஆதியிலே தோன்றிய மனிதன் தான் முதன் முதலிலே விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தவன்.
அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி நம் பூமியின் வடக்குத் திசையில் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.
1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றுமே வாழச் செய்யும் கலாச்சாரம்
2.தென்னாட்டிலே தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானது
3.நம் தென்னாட்டில் மீண்டும் இது தழைக்கின்றது… வேறு எந்த நாட்டிலும் இல்லை.
தெற்கிலே உருவான அந்தக் கலாச்சார அடிப்படையில்தான் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அகஸ்தியன் உணர்வை இப்பொழுது உணர்த்துவதும் உணரச் செய்வதும்.
அத்தகைய சிசுக்கள் வளர்ந்தால் மெய்ப் பொருளின் ஆற்றலை நாமும் பெறலாம். அந்த உணர்வின் தன்மையை எடுத்து உலகம் முழுவதற்கும் பரவும்படிச் செய்யலாம். அதை நாம் வளர்த்தல் வேண்டும்.
தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டாலும் அந்தக் குடும்பத்திலே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவிலிருக்கும் குழந்தைகள் அந்த அகஸ்தியன் உணர்வுகளைப் பெற்று ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவிலேயே விளைய வேண்டும்
3.இருளைப் போக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
4.உலகம் ஒன்றி வாழும் அந்த உணர்வின் சக்தி இந்த கருவிலேயே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.
அகஸ்தியன் உணர்வைப் பெற்றுத் தென்னாட்டிலே வளரும் அத்தகைய குழந்தைகள் எந்த நாட்டவரையும் காத்திடும் சக்தியாக வளரும்.
விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் என்று கண்டுணர்ந்தானோ அதைப் போல எந்நாட்டவரும் விண்ணுலகை ஆற்றலைப் பெறும் தன்மையும்… மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
1.நாம் முன் செல்கின்றோம்.
2.பின் வருவோருடைய நிலைகளும் அதன் வழி செல்லும்.
இனம் இனத்தைத் தான் வளர்க்கும். எதை எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கிறது. தன் இனத்தின் சக்தியைத் தன் வித்திற்கே கொடுக்கின்றது.
இதைப் போலத் தான் தீமையான வினைகள் மனிதனுக்குள் விளைய வைத்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதை ஊட்டி அந்தத் தீமையின் விளைவையே மனிதனுக்குள் இயக்கச் செய்கின்றது “இன்றைய நிலைக்குக் காரணம் இது தான்…!”.
இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்… மக்களை மீட்டுதல் வேண்டும். சிறிது பேர் தான் இருக்கிறோம் என்று எண்ண வேண்டாம். இது வளர வளர பல லட்சங்கள் ஆகும்.. பல கோடிகளாகவும் உருவாக்க முடியும்.
ஆகவே… யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகளைக் கருத்தில் கொள்ளுங்கள். அதைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றுங்கள்.
எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள். அந்த அருளை உலகெங்கிலும் பாய்ச்சுங்கள்.


“மிக உயர்ந்த சக்திகளை” உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்
அகஸ்தியன் உருவத்தைக் கூழையாகப் போட்டுக் காண்பித்திருப்பார்கள் பின்னாடி வந்த ஞானியர்கள். காரணம்… “இளமையிலேயே முதுமையானவர்கள் செயல்படுத்தும் செயலைச் செய்தவன்…” என்று காட்டுகின்றார்கள். தனது ஐந்தாவது வயதிலேயே வான இயலின் தத்துவத்தை அறிந்தவன் தான் அகஸ்தியன்
இன்றும் விஞ்ஞான உலகில் நாம் பார்க்கலாம் ஐந்து வயதுக் குழந்தை கம்ப்யூட்டர் கால்குலேட்டர் இல்லாமல் எல்லா வேலையும் செய்கிறது… உடனே கணக்குகளைச் சொல்கிறது…! என்று சொல்கின்றோம்.
1.சிறு வயதில் இதையெல்லாம் நன்றாகச் செயல்படுத்தும்
2.ஆனால் வளர்ச்சியில் ஆசையின் நிலை வரப்படும் பொழுது பின்னாட்களில் அந்தத் திறமை முடியாது போகிறது…
3.கடைசிலே ஒன்றும் முடிவதில்லை.
பெரிய தொழிற்சாலையில் கூட முதலில் அவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்கின்றார்கள்.
ஆனால் இளம் வயதில் செய்த்து போன்று செய்திகள் பின் நாட்களில் வருவதில்லை. காரணம் உலக ஆசையின் நிலைகளைச் சேர்க்கப்படும் பொழுது அதனுடன் மறைந்து விடுகின்றது
தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது
1.எடுத்துக் கொண்ட சிந்தனைகளுக்கொப்ப சில அணுக்களின் தன்மை நுகர நேர்ந்தால்
2.ஞானத்தின் தன்மையாக அறியும் நிலை வருகின்றது.
நாளடைவில் ஆசை அதிகமாகும் போது மறைந்து விடுகின்றது. உங்கள் அனுபவத்தில் நீங்கள் இதையெல்லாம் பத்திரிக்கையில் பார்த்து இருப்பீர்கள்.
ஒரு உடலுக்குள் விளைந்தது அந்த ஆன்மா இந்த உடலுக்குள் புகுந்த நிலையில் அதனுடைய இயக்கமாக இப்படி இயக்கும்.
பின் வயது வளர்ச்சியாக…
1.இவனுக்குள் மாற்று உணர்வுகளோ தீமைகளோ அதிகரிக்கப்படும் பொழுது கஷ்டங்களைக் கேட்டுக் கேட்டுக் கேட்டு
2.மற்றவர்களுக்கு இவன் நல்ல விடைகளைச் சொன்னாலும் அந்த ஆன்மாவும் கடைசியிலே நாசமாகிவிடும்.
3.இவனுடைய நல்லதும் கேட்டு… உடலில் நோயாகி மடிந்து விடுவான்.
எல்லோருக்கும் அவன் ஜோசியம் சொன்னான்… நல்லதெல்லாம் சொன்னான் என்று முதலில் பெரிதாகச் சொன்னாலும் அவரும் கடைசியில் இந்த மண்ணுக்குள் தான் போகின்றார் (மடிந்து போகின்றார்).
இப்பொழுது என்னை (ஞானகுரு) எடுத்துக் கொண்டால் உங்கள் எல்லோருக்கும் நல்லதைத் தான் சொல்கின்றேன். ஆனால் ஆயிரக்கணக்கானோர் வந்து “எனக்கு இப்படிக் கஷ்டம்… அப்படிக் கஷ்டம்… நோயாக இருக்கின்றது…!” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தால் எனக்குள் என்ன ஆகும்…?
என்னால் முடிந்த அளவு துடைக்கின்றேன். ஆட்கள் எண்ணிக்கை கூடக் கூட கஷ்டம் என்று கூறுவதைத் துடைக்கத் தவறினால் நானும் அந்த நிலைக்குத் தான் போக வேண்டி வரும். வேறு வழி இல்லை…!
இரவும் பகலும் நான் விழித்திருந்து மகரிஷிகளின் அருள் உணர்வினை எடுத்து… கேட்டறிந்த தீமையின் உணர்களைத் துடைத்துக் கொள்கின்றேன்.
குருநாதர் காட்டிய வழியில்
1.மிக உயர்ந்த சக்திகளை உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்
2.ஆனால் அந்த உயர்ந்த சக்தி எங்களுக்கு வேண்டும் என்று யார் கேட்கின்றார்கள்…?
என்னைப் பார்த்ததுமே… கோவிலிலே அழுவது போன்று தான் கஷ்டத்தைச் சொல்லி அழுக ஆரம்பிக்கின்றார்கள். நான் நல்லது செய்ய வந்தாலும் கூட இப்படி ஆகிவிடுகின்றது.
1.என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
2.என் பிள்ளைகள் ஞானமாக இருக்க வேண்டும்
3.தொழில் சீராக இருக்க வேண்டும்
4.என் வாடிக்கையாளர் அனைவரும் செல்வாக்குடன் வாழ வேண்டும் கடன் பாக்கி எல்லாம் கொடுக்க வேண்டும்
5.அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இப்படி யாராவது கேட்கின்றீர்களா…? இல்லையே…!
வரக்கூடிய தீமைகளிலிருந்து மாற்றி அமைப்பதற்குத் தானே இத்தனையும் சொல்லிக் கொடுக்கின்றோம்.. நான் சொல்வதை நீங்கள் கேட்டு… விரும்பிச் செய்ய வேண்டும்.
ஆனால் இதை எல்லாம் கேட்டாலும் கூட… மறுபடியும் அதற்குத் தானே வந்தேன் என்று “மீண்டும் கஷ்டத்தைச் சொல்வார்கள்…” எத்தனையோ வழிகளில் யாம் அதை மாற்றி அமைப்பதற்குப் பிரயத்தனம் செய்தாலும் எடுத்துக் கொள்வதில்லை.
காட்டிற்குள் செல்லும் போது பல அவஸ்தைகளைக் கொடுத்தார் குருநாதர். அகஸ்தியன் எவ்வாறு சக்தி பெற்றான் என்பதை அறியச் செய்தார். ஆனால்
1.நாட்டிற்குள் வந்து “அகத்திற்குள் இயங்கும் இயக்கங்கள் எவ்வாறு…?” என்பதை உங்களிடம் சொல்லி
2.சக்தி வாய்ந்த வாக்குகளை கொடுக்கின்றோம் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா…!
ஒருவன் திட்டுகிறான் என்றால் அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம். என்னைத் திட்டினான்… அவன் மோசமானவன்… அவன் உருப்படுவானா…? என்று சொன்னால் அங்கே வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவனுக்குப் புரையோடுகின்றது… உணர்வுகள் இப்படி இடைமறிக்கின்றது.
உணர்வின் இயக்கங்கள் இவ்வாறு தான் இருக்கின்றது.
1.தீமையிலிருந்து விடுபடக்கூடிய சக்தி வேண்டும்
2.துன்பங்களை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி வேண்டும்
3.இருளைப் போக்கும் சக்தி வேண்டும் என்று என்னிடம் கேட்டால் “எமக்குத் தெளிவாக இருக்கும்…”
ஆனால் அதை விட்டுவிட்டு… சாமி…! நீங்கள் சொன்னீர்கள் எனக்குச் சரியாகவில்லையே…! என்று தான் சொல்லத் தொடங்குகின்றார்கள். அது எண்னை எப்படித் தாக்கும்…?
ஏனென்றால் ஒவ்வொருவரும் தொடர்பு கொண்ட நிலையில் தான் இயங்குகின்றோம்.
காரணம் உண்மையின் உணர்வுகளை அறிய முடியாத நிலையில் இருப்பதனால் யாம் நன்மைகள் செய்ய வந்தாலும் கூட இன்னொரு ஆன்மா (ஊங்கள்) உடலுக்குள் சென்ற பின் இந்த நிலை ஆகிவிடுகிறது.
இதையெல்லாம் மாற்றிப் பழக வேண்டும் அதற்குத்தான் தொடர்ந்து தொடர்ந்து உங்களுக்கு இந்த உபதேச வாயிலாக ஞாபகப்படுத்தி ஞானிகள் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.
1.யாம் கொடுக்கக்கூடிய வாக்குகளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தினால்
2.அதனுடைய பலன்களை நிச்சயம் நீங்கள் உணர முடியும்.

பூமியைக் காக்கும் சந்திர சூரியர்கள் (மகரிஷிகள்)
இவ்வுலகத்திலே கலந்துள்ள பல விஞ்ஞானிகளும் பல ஜோதிடர்களும் எண்ணத்தாலும் எழுத்தாலும் எண்ணிப் பல நாட்கள் ஆராய்ச்சி செய்து வான மண்டலத்தின் தன்மையை வழிக்குக் கொண்டு வரச் செய்யும் வேலையையே நாமும் செய்யலாம் இன்றைய பாடத்தில்.
இவ்வுலகத் தன்மைக்கு ஒலி ஒளி நீர் இந்நிலைகளை எப்படி அவசியமோ அந்நிலையில் இருந்து எப்படி உலகம் சுழல்கிறதோ அச்சுழலும் தன்மைக்கு இம்மூன்றின் தன்மையுடன் “மற்றொரு தன்மையும் உள்ளதப்பா…”
இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் உயிர் வாழ்ந்திட சூரிய மண்டலத்தில் இருந்து வந்திடும் ஒளிக்கதிர்களினால் இப்பூமியின் தன்மை ஈர்க்கும் நிலையில் உலகம் சுற்றுகிறது என்று சொன்னேன் அல்லவா.
இச்சூரிய மண்டலத்தினைச் சுற்றியுள்ள கிரக நிலைகள் 9 என்று விஞ்ஞானிகள் கணக்கெடுத்து உள்ளார்கள். ஒன்பது மண்டலங்களுமே இந்நிலையில் தான் சுற்றுகிறது என்கின்றனர்.
அப்படி என்றால் இப்பூமியின் நிலையில் உள்ளது போலவே தான் எல்லா மண்டலங்களிலும் ஜீவராசிகள் உள்ளனவா…? ஜீவராசிகளில் மனிதரின் நிலை உள்ளதுவா…?
பூமியின் நிலை போல் அந்நிலைகளும் சுற்றிக்கொண்டு இருந்தால் அந்நிலையில் ஏனப்பா மனித இனம் இல்லை…?
1.நம் பூமியை தவிர வேறு எந்த மண்டலத்திலும் இந்த மனித இனம் இல்லையப்பா.
2.அந்நிலையில் எந்த ஜீவராசிகளும் இருந்திட முடியாதப்பா.
பூமியின் தன்மையில் பெரும் பொக்கிஷம் என்ன என்றால் பூமிக்கு இரண்டு பக்கங்களில்
1.பூமிக்கு மேல் தந்தையை போன்று சூரியனும்
2.மறு பக்கத்தில் தாயைப் போல் சந்திரனும் உள்ளதால்
3.இப்பூமியின் தன்மை குழந்தையைப் போல் சுற்றிச் சுற்றி விளையாடுகிறது.
சூரியன் — பூமி — சந்திரன்
சூரியனைச் சுற்றி இந்த உலகம் உருளும் பொழுது இவ்வுலகத்திற்கு எதிர் நிலையில் உள்ள சந்திரனின் ஒளியும் ஈர்ப்பு நிலையும் இப்பூமிக்குப் பாய்கின்றது.
பூமி எப்படித் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளதோ அந்நிலையில் தான் சந்திரனும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது. சூரியனின் நிலை ஒரு நிலையில் தான் உள்ளது.
பூமி தன்னைத்தானே சுற்றும் பொழுது பகலும் இரவும் வருகிறது அல்லவா சூரிய ஒளி படும்போது பகலாகவும் சூரிய ஒளி படாத பொழுது இரவாகவும் உள்ளதல்லவா.
இந்நிலையில் மாறுதல் இல்லாமல் ஒன்று போலவே உள்ளது. ஆனால் சந்திரனை நாம் மாதத்திற்கு ஒரு தடவை தான் முழு நிலவாகக் காண்கின்றோம் மற்ற நாட்களில் வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் அமாவாசையாகவும் இருக்கின்றது.
இந்நிலை எப்படியப்பா வந்தது…?
உலகைப் போலவே இச்சந்திரனும் சுற்றுவதால் உலகச் சுற்றை விட சந்திரனின் சுற்றல் துரிதமாக உள்ளது. அந்நிலையில் தான் உலகின் மறு பக்கத்தில் அது சுற்றும் பொழுது அதன் நிலையை மாறி மாறிக் காண்கின்றோம்.
இந்த உலகிற்குச் சூரியனின் ஒளி மட்டும் இருந்து விட்டால் ஜீவராசிகள் உயிர் வாழ்ந்திட முடியுமா…? இவ்வுலக நிலையில் உள்ள பல பல வண்ணங்களும் பல கோடி வாசனைகளும் எப்படியப்பா வந்திடும்…?
1.இவ்வுலகில் உள்ள ஜீவராசிகளின் நிலைக்கு
2.”சூரியனின் தன்மையும்… சந்திரனின் தன்மையும்…” கலந்து தான் இருக்கின்றது
சுவாச நிலையில் இருந்து தான் இவ்வுலகமே… இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாமே உள்ளது என்று செப்பிட்டேன் பல முறை.
இவ்வுலக நிலையில் இருந்து பார்க்கும் பொழுது நம் கண்ணுக்குச் சூரியனும் சந்திரனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களையும் தான் பார்த்திட முடிகின்றது.
விஞ்ஞானிகள் சொன்ன வியாழன் புதன் சனி செவ்வாய் ராகு கேது சுக்கிரன் என்ற மற்ற கிரகங்களை நம்மால் பார்த்திட முடிகின்றதா…?
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது.
1.நம் பூமிக்கு நேர் பார்வை சந்திரன்
2.அந்நிலையைப் போலத்தான் சந்திரனுக்கு நேர் பார்வை செவ்வாய்.
3.எல்லா மண்டலத்துக்கும் சூரியனின் பார்வை ஒன்றே தான். சூரியப் பார்வை என்பது சூரிய சக்தி ஒன்றே தான்.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் இச்சக்கி நிலை மாறுபடுகின்றது. சூரிய சக்தி ஒன்றே போல் எல்லா மண்டலத்திற்கும் படிந்தாலும்
1.அம்மண்டலத்தின் எதிர் நிலையில் உள்ள மண்டலத்தின் தன்மை மாறுபடுவதால்
2.அந்நிலையில் நடக்கும் நிலைகள் வேறாக உள்ளன.
சந்திரனுக்கு எதிர் நிலை பூமி தான். சூரிய சக்தியையும் பூமியின் சக்தியையும் சந்திரன் பெறுவதனால் சந்திர மண்டலத்தில் சில உயிரினங்கள் உள்ளன. ஆனாலும் அவைகள் “உருளும்” நிலையில்தான் உள்ளன.
சந்திரனில் பூரண சந்திரனில் “தியானத்தில்… பல ரிஷிகளின் உருவங்கள் தெரிவதெல்லாம்”
1.இப் பூமிக்கு நேர் எதிரில் இருக்கும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் பூமியில் படுவதால்
2.பல ரிஷிகளும் பல ஞானிகளும் அவர்களுடைய தவப்பயனை வைத்துப் பூரண சந்திரனிலிருந்து அவர்கள் பிறந்து வளர்ந்த பூமிக்கு
3.அந்நிலையில் இருந்து அந்தப் பூரண சந்திரனின் ஒளியில் “பல கோடி நறுமணங்களையும்… நல்ல எண்ணங்களையும் பாய்ச்சுகின்றார்கள்…”
அந்நிலையில் இருந்து வந்து தாக்கும் அணுக் கதிர்கள்
1.இம்மானிட உலகில் உள்ள மனிதர்களுக்குப் பெரும் பொக்கிஷம் போன்ற
2.உயிர் காக்கும் அணுக்களப்பா.
சூரியனின் ஒளி மட்டும் இருந்தால் பூமிக்கு உயிர் தன்மைக்கு வாழ்ந்திட முடியாதப்பா… மற்ற மண்டலங்களைப் போலத்தான் இப் பூமியின் நிலையும் இருந்திருக்கும்.
பூமியின் தன்மையை சூரிய ஒளி மட்டும் இருந்திருந்தால் பல பல பாளங்களாக வெடித்து பூமியின் நிலையே சிதறி இருக்கும்.
இப்பூமியின் நிலையைக் காக்கத்தான் எதிர் நிலையில் சந்திர மண்டலம் உள்ளது. சந்திர மண்டலத்தின் நிலை மட்டும் இருந்திருந்தாலும் சூரியனின் நிலை இல்லாமல் இயங்கிட முடியாதப்பா.
இந்நிலையை வைத்துத்தான் தாய் தந்தையரைப் போல என்று பகர்ந்திட்டேன் “சந்திரனையும் சூரியனையும்…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.
1.இப்படிச் செய்தால் அது உண்மையான தவமாக மாறுகின்றது
2.ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.
வெளியிலே எல்லோருக்கும் சொல்லி விடலாம். “தன் குடும்பம்” என்று வரும் போது தான் இதிலே பெரிய சிக்கலே வரும்.
ஏனென்றால்
1.அடிக்கடி சந்திக்கும் நிலையும்… வெறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்வதாலும்…
2.உடனே அந்த உணர்வைத் தூண்டிக் கோபமாகப் பேசச் சொல்லும்.
ஆகவே…. முதலில் வாரத்தில் ஒரு நாளாவது நம் குடும்பத்தில் எல்லோரும் ஒருங்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எண்ணிக் கூட்டுக் குடும்ப தியானம் செய்ய வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும். எங்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும். எங்கள் பார்வையால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். பொருளறிந்து செயல்படும் திறன் அனைவரும் பெற வேண்டும் என்ற இந்த எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இது வளர வளர குடும்பத்திலே மகிழ்ச்சி பெருகும். நம் பார்வையும் சொல்லும் உலக மக்களின் தீமைகளை அகற்றும். நாம் இவ்வாறு எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் நாம் வாழும் பூமியிலேயும் படருகின்றது.
ஆகவே மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகள் அனைத்தும் இங்கே சுழன்று கொண்டுள்ளது… அதைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.
எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்…
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக அணுக்களாக இருப்பினும்
2.அதைப் பருகித் தனக்குள் வளர்க்கும் நிலை இல்லை.
நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு தான் இப்பொழுது அதைக் கவர்ந்து வளர்ப்பதற்குண்டான வழிகளை ஏற்படுத்துகின்றோம்.
அன்று அகஸ்தியனும் அவரைப் பின்பற்றிய வியாசகரும் மற்ற ஏனைய ரிஷிகளும் எடுத்து அவர்கள் விளைய வைத்த ஒளியான உணர்வுகள் இங்கே மறைந்துள்ளது.
அதை நுகர்ந்து நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் மீண்டும் அதைப் பெருக்கும் நிலை வருகின்றது.
1.ஆனால் இதற்கு முன் அதைப் பெருக்கும் நிலை இல்லை
2.மகரிஷிகள் விண்ணிலே ஒளியின் சரீரமாக இருந்தாலும் அவர்கள் உமிழ்த்தும் உணர்வின் தன்மையை இங்கே பருகும் நிலை இல்லை
நாம் விண்ணை நோக்கி ஏங்கித் தியானித்து அந்த மகரிஷிகளின் அருளைப் பருகி எல்லோருக்குள்ளும் அது பெருக வேண்டும் என்று அந்த அலைகளை நாம் பரப்ப வேண்டும்.
1.முன்னாடி அந்த நிலை இல்லை
2.ஆனால் அதை இப்பொழுது நாம் உருவாக்குகின்றோம்
3.உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உணர்வுகளிலும் அதைப் பதிவு செய்கிறோம்.
4.நீங்கள் அதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.


“பச்சிலை மிரட்டி” உருவாகும் விதம்
பச்சிலைகளைக் கண்டபின் மற்ற மிருகங்கள் ஏன் எப்படி எதனால் அஞ்சி ஓடுகிறது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார். உடல் பெற்ற பின் ஆந்த மணங்கள் கண்டு அதனால் விலகிச் செல்கிறது.
கீரிப்பிள்ளையும் பாம்பும் சண்டையிடுகின்றது. அதற்கும் ஒரு பச்சிலை உண்டு. பாம்பு கடித்து விட்டது என்றால் கீரி அந்தப் பச்சிலையில் போய்ப் பிரண்டு கொள்ளும்… அதனின் விஷங்கள் தணிந்து விடும்.
விஷத்தைத் தணித்தபின் மீண்டும் வந்து பாம்பைச் சண்டையிட்டு அது கத்திரித்து விடுகிறது. இதை நேரடியாக என்னிடம் காட்டுகின்றார்.
கீரியும் பாம்பும் சண்டையிடும் போது பக்கத்தில் நின்று தான் நான் (ஞானகுரு) வேடிக்கை பார்க்கின்றேன். இரண்டும் மனிதனைக் கண்டு பயப்படவில்லை.
ஏமாந்து திரும்பி பார்த்தால் அடுத்தது அடித்து விடும் என்ற நிலையில் இந்த முசிடில் தான் இருக்கின்றது.
இதனுடைய எதிர்ப்பு உணர்வுகள் எப்படி இருக்கின்றது…? அந்த மூச்சலைகள் வெளி வரும் போது சூரியனுடைய காந்த சக்தி எப்படிக் கவர்கிறது…?
1.கீரிக்கும் பாம்புக்கும் போர் முறையில் உடலில் விளைந்த உணர்வுகள் இந்த உணர்ச்சிகளை எடுத்து
2.மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்துக்களுடன் இது ஊடுருவி
3.ஒன்றை ஒன்று அஞ்சி ஓடி ஒன்றுடன் மோதி ஒரு சுழல் காற்று போலப் பரவி எடை கூடியது மீண்டும் மண்ணிலே பதிந்து விடுகிறது.
4.அதிலே மின்னல் தாக்கப்படும் பொழுது துடித்து வீரியமாக எழுந்து ஒரு புது விதமான செடியாக உருவாகின்றது
5.செடியாக அது உருவான பின் பாம்பின் அருகில் கொண்டு போய் அதைக் காண்பித்தால் பாம்பு பயந்து விலகிச் சென்று விடுகிறது.
கீரிப்பிள்ளை நஞ்சை முறிக்கும் பச்சிலைக்குச் செல்கின்றது… தப்பி விடுகின்றது ஆனால் அந்தச் செடியைப் பாம்பின் அருகில் வைத்தால் பாம்பு பயப்படுவதில்லை.
எப்படி எல்லாம் கலவை ஏற்பட்டு இந்தச் செடிகள் புதிது புதிதாக உருவாகின்றது என்பதை மலைப்பகுதிகளில் அழைத்துச் சென்று 20 வருடம் குருநாதர் எனக்கு அனுபவத்தைக் கொடுக்கின்றார்.
1.அத்தகைய செடிகள் எப்படி உருவாகின்றது
2.விஷத்தின் தன்மைகள் எப்படி மாறுகின்றது…?
3.ஒன்றை ஒன்று எப்படி மாற்றிக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றார்.
காட்டிற்குள் இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்றார்.
அங்கே பார்த்தால் ஒரு புலி செத்துக் கிடக்கின்றது. உயிர் போனவுடனே புலியினுடைய உடல் அழுகிக் கிடக்கின்றது. புழுக்களாக அரிந்து கொண்டிருக்கின்றது.
அழுகிய அந்தப் புலியின் உடலுக்குப் பக்கத்திலே போய் “உட்காருடா…! என்றார். நாற்றமோ சகிக்க முடியவில்லை.
சாமி… ஒரே நாற்றமாக இருக்கின்றது…! என்று சொன்னேன்.
நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! அதனாலே “உட்கார்ந்து பார்…!” என்று சொல்கிறார்.
உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். எத்தனை நாள்…? ஒரு நாளா… இரண்டு நாட்களா…! ஒரு பத்துப் பதினைந்து நாட்கள் உட்கார்ந்து பார்த்தேன்.
பத்துப் பதினைந்து நாட்கள் வேறு எதுவும் சாப்பிடவே முடியவில்லை. இரண்டு பச்சிலையைக் கொடுத்தார். அதை மென்று சாப்பிட்டுக் கொள் என்றார்.
அதையெல்லாம் எனக்கு விபரமாகக் கணக்குச் சொல்ல வேண்டும் என்கிறார். நான் எந்தக் கணக்கைச் சொல்லட்டும்….?
புலியின் உடலில் உள்ள புழுக்கள் அந்த உடல் முழுவதையும் சாப்பிட்டு விடுகின்றது. கடைசியில் எலும்பும் தோலாகவும் தான் இருக்கிறது.
புலி உயிருடன் இருக்கும்போது எத்தனை வகையான உயிரினங்களைக் கொன்றதோ அந்த உணர்வெல்லாம் உடலுக்குள் அணுக்களாக இது புலியாக உருவாகின்றது.
இந்தப் புலியின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் முதலில் ஜீவ அணுக்களாக இருந்தது. புலியின் உயிர் வெளியே சென்ற பின் ஜீவஅணுக்கள் உயிரணுக்களாக மாறுகின்றது. புழுக்களாக ஆகின்றது.
புழுக்களாக இருந்ததெல்லாம் புலி உடலைத் தின்றவுடன் அடுத்து ஆகாரம் இல்லை என்றால் மடிந்து விடுகின்றது. அந்தப் புழுக்களின் உயிர்களும் வெளி வருகின்றது.
புலி தன் பசிக்காக மாட்டையோ மற்ற எதை எதை அடித்துச் சாப்பிட்டதோ அதன் உடலுக்குள் இந்தப் புழுவின் உயிர்கள் உயிரணுக்களாக விளைகின்றது.
அதாவது உயிரணுக்கள் என்றால் புலியின் உடலில் முதலில் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. பின் உயிரணுக்களாக மாறுகின்றது.
உயிரணுக்களாக மாறியவுடனே மாடு ஆடு மற்ற உயிரினங்களில் பட்டபின் “உண்ணி… ஈ…” போன்ற நிலைகளில் உருவாக்கி அந்த உடலிலுள்ள இரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மை வருகின்றது.
இரத்தத்தை உறிஞ்சி உடல் வளர்த்த அந்தப் புலியின் உணர்வுகள் உயிர் சென்ற பின் அதே அணுக்கள் உயிரணுவாக மாறி மீண்டும் மற்ற உடல்களில் என்னென்ன செய்கின்றது…? என்பதனை உற்றுப் பார்க்கச் சொல்லுகின்றார்.
அதே சமயத்தில் புலி ஒரு உயிரினத்தைக் கடித்துக் குதறும் போது இரத்தங்கள் சிந்துகின்றது. இரத்தங்கள் சிந்தியபின் இரத்தத்திலே மின்னல்கள் தாக்கப்படும் போது இதில் ஜீவக்கருக்கள் உருவாகி அதன் நிலைகள் “அட்டைகளாக…” வளர்கின்றது.
நாம் நடந்து போனால் போதும். அந்த அட்டை தவ்வி நம் உடலிலே அமர்ந்து நம் இரத்தத்தைக் குடிக்கின்றது.
இதைப்போல ஒரு உடலிலிருந்து எத்தனை வகையான நிலைகள் அது உருவாகிறதென்று குருநாதர் காட்டுகின்றார்.
அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிப்படும் அழுகிய ஆவிகள் காற்றிலே போகின்றது. இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்ளுகின்றது. அது அலைகளாக மாறுகின்றது.
அதே சமயத்தில் விஷச் செடியில் இருந்தும் பல மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்தையும் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிப் பரமாத்வில் சுற்றிக் கொண்டிருக்கின்றது.
அழுகிய புலியின் உணர்வைக் கவர்ந்த அலைகளைக் கண்ட பின் மற்ற செடி கொடிகளின் சத்துக்களை கவர்ந்து கொண்ட அலைகள் ஓடுகின்றது.
இவ்வாறு அது ஓடும் பாதையில் இன்னொரு பக்கம் பிற விஷச் செடியில் இருந்து உமிழ்த்தும் உணர்வுகள் மோதிய பின் “கிறு..கிறு..” என்று சுற்றுகின்றது.
அது சுற்றி ஒன்றோடொன்று மோதி அந்த மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மூன்றும் இரண்டறக் கலந்த உணர்வுகள் பூமியில் படர்கின்றது.
1.புலி ரிக். அழுகிய புலி உடலில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை. இந்த நாற்றம் நமக்கு வருகின்றது.
2.செடி கொடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை.
3.ஒரு விஷச் செடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணங்கள் சாம இசை.
4.இது மூன்றும் ஒன்றுக்கொன்று மோதல் ஏற்பட்ட பின் மோதலில் ஒன்றாகக் கலக்கப்படும் போது அதர்வண.
5.ஒன்றோடொன்று மோதி அதன் உணர்வுகள் ஒன்றாக இணைந்த பின் யஜூர். ஒரு வித்தாகி விடுகின்றது.
பல விதமான உணர்வுகளைச் சேர்த்து நாம் ஒரு பலகாரத்தை வேக வைத்தால் அது ஒன்றாகி ஒரு சுவையாக மாறுகின்றது.
இதைப் போல பல உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அது ஒன்றாக அமைகின்றது. மோதியதால் ஏற்படும் ஆவியாக மேலே செல்லுகின்றது.
இரண்டறக் கலந்தது தரையிலே படுகின்றது. தரையிலே பட்டபின் எதிர் நிலையான நட்சத்திரங்களிலிருந்து துகள்கள் நம் பூமிக்குள் மின்னலாகத் தாக்கப்படும் போது
1.இதில் கலந்த நிலைக்கு எதிர் நிலையாக வரும் போது
2.அதிலே தாக்கப்பட்டு இழுக்கும் சக்தியாக வருகின்றது
3.அப்போது அது செடியாக வளர்கின்றது.
4.அவ்வாறு அது செடியாக வெளியில் வரையிலும் என்னைக் குருநாதர் அங்கே உட்கார வைத்துக்கொண்டு இருந்தார்.
இந்த இயற்கை எப்படி மாறுபடுகின்றது…? என்பதனைத் தெரியச் செய்கின்றார். பின் அந்தச் செடி முளைத்து வந்தது. அந்தச் செடியின் அருகில் அடையாளம் தெரிவதற்காகக் கோடு போடச் சொல்கின்றார்.
அந்த இடத்தை விட்டுப் போய் விட்டு ஒரு இரண்டு மாதம் கழித்து வருகிறோம். அந்தச் செடி கொடியாக வளர்ந்திருக்கிறது. கையில் நீ் கத்தியை எடுத்துக் கொண்டு போடா என்றார். கத்தி எதற்கு சாமி…? என்றேன். கத்தியைக் கொண்டு போ என்றார்.
அங்கே மரம் அருகில் அந்தக் கொடி விளைந்திருக்கிறது. அத்ற்கு எதிரிலே உட்கார் என்றார். நான் உட்கார்ந்தவுடனே என்னை நோக்கி அந்தக் கொடி நைசாக நகர்ந்து இருக்கின்றது.
அந்தக் கொடி நகர்ந்து வந்து உன்னைத் தொட்டுவிட்டது என்றால் எப்படிக் கரண்ட் பாய்கின்றதோ அதே மாதிரி பாய்ந்து புத்தியில்லாமல் போய்விடும். உன் இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்றார் குருநாதர்.
கொடி உன்னைத் தொடும் பொழுது “சுரீர்…” என்று வரும். உடனே கத்தியால் அதை “வெட்டுடா…” என்றார்.
நான்கைந்து தரம் வெட்டிய பிற்பாடு அப்புறமும் நீண்டு வருகிறது. வெட்டியபின் அது எட்டாத நிலை ஆகும் போது அடுத்து ஒன்றும் செய்யவில்லை.
பார்த்தயா…! அன்றைக்கு அந்தப் புலி எந்தெந்த உயிரினங்களின் இரத்தத்தை உறிஞ்சியதோ அதனின் உணர்வு செடியுடன் கலந்தது. கொடியாக விளைந்தது.
இப்பொழுது மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை அந்தக் கொடிக்கு வந்துவிட்டது என்று காட்டுகிறார்.
1.நம் மனித வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் எடுத்துக் கொண்ட பின்
2.உடலில் விஷமான அணுக்கள் பெருகியபின் நல்ல அணுக்களைக் கொன்றுவிடும்.
3.விஷமான அந்த அணுக்கள் பெருகி விட்டால் அதைத்தான் கேன்சர் நோய் என்று சொல்கிறோம்
4.மற்ற அணுக்களுக்குள் இருக்கும் இயக்கச் சக்தியையும் அது கவர்ந்து கொள்ளும்.
5.உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்காது. இந்தக் கேன்சர் என்ற நிலை வந்துவிட்டால் எதுவுமே செயல்படுத்த முடியாது போய்விடும்.
அதைக் கொல்ல வேண்டும் என்றால் இதற்கு மருந்து இல்லை.
ஏனெனில் அதைக் கொல்ல வேண்டும் என்றால் வீரியத் தன்மை மருந்தை ஊட்ட வேண்டும்.
வீரியமான மருந்தை ஊட்டினால் நம் உடலிலுள்ள சாந்தமாக இருக்கக்கூடிய அணுக்களெல்லாம் மடிந்து விடும். மருந்து கொடுத்தும் பயன் இல்லை.
கேன்சர் போன்ற நிலைகளுக்கு
1.இந்தக் கொடியை எடுத்து அதில் வேறு சில பச்சிலைகளை இணைத்துப் பக்குவப்படுத்திக் கொடுத்தால்
2.அந்தக் கேன்சர் விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிவிடும்.
3.கேன்சர் நோயை இந்தக் கொடியை வைத்து நீக்கி விடலாம் என்று காட்டுகிறார் குருநாதர்.
காடுகளில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையாக மடிந்த பின் மடிந்த உடலிலிருந்து வரக்கூடிய ஆவிகளும் மற்ற தாவர இனத்தில் ஒன்றோடொன்று மோதும் போதும் புதுப் புது விதமான செடிகள் எப்படி உருவாகின்றது…?
செடிகளைத் தின்று ஒன்று வளர்ந்தாலும் அந்த உயிரினங்களைக் கொன்று வாழ்ந்த இந்த உடல்கள் அது மடிந்து விட்டால் அந்த உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது…?
மீண்டும் ஜீவ அணுக்களாக மாற்றி அது மனிதனுக்கு மருந்தாக உபயோகப்படுத்தும் தன்மை எப்படி வருகின்றது…?
ஏனென்றால் பல உயிரினங்களின் தன்மையானால் இதே மருந்தைச் சேர்க்கப்படும்போது
1.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை அது மாற்றி
2.நம் உடலை எப்படி நலமாக்குகின்றது…? என்பதனைக் குருநாதர் அங்கே காட்டுகின்றார்.
இயற்கையின் உண்மைகள் எப்படியெல்லாம் செயல்படுகின்றது…? இதிலிருந்தெல்லாம் மனிதன் எப்படித் தப்ப வேண்டும்…? என்ற நிலையைக் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்று இவ்வாறு பல உண்மைகளைக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஈசனின் சக்தி
ஆடும் ஆட்டத்தைப் பார்த்தாயா…? எல்லா உயிரினங்களின் உடலிலும் இந்நிலை உள்ளதப்பா. “அருள் வருவதும்… மருள் வருவதும்” இதுவேதானப்பா… இந்நிலையே தானப்பா.
இந்நிலையை இன்று உனக்கு உணர்த்திடவே பாட நிலையில் இருந்து செயல் நிலையில் காட்டிட்டேன் பார்த்தாயா…! இந்நிலையில் உள்ள பொழுது ஓங்கார இசையை எழுப்பும் பொழுது பல பல வாசனைகளை… வாசனைப் புகைகளை எழுப்பும் பொழுது அவ் உடலில் உள்ள ஆவிக்கு நாம் ஆகாரம் கொடுத்த நிலை வருகின்றது.
இந்நிலை நீடித்தால்… தான் பார்த்த நிலையை தன் எண்ணத்தில் மறைத்து வைத்திருக்கும் நிலையை எல்லாமே செப்பிடுவார்கள்… இந்நிலை வந்தவர்கள்.
இவர்களின் நிலையை வைத்துத் தான்
1.பல பல சாமியார்கள் எல்லாம் ஆண்டவனின் பெயரை வைத்து மனிதர்களை மயக்குகின்றார்கள்.
2.இன்று பார்த்தாயல்லவா மறைந்த உண்மை வெளி வந்ததை.
3.இவ்வாவிகள் தான் வருகின்றது அருள் என்ற வடிவினிலே…
4.இனி சிறிது நேரம் இருந்திருந்தால் அவ்ருளின் தன்மை உன் மகளுக்கும் வந்திருக்கும்.
ஆண்டவன் என்பது யார் என்று புரிந்ததா…? இப்பொழுது எல்லா உடல்களிலும் இவ்வணுவின் வேலை உள்ளது.
1.பக்தி கொண்ட ஒருவரின் “ஆவி”
2.அக்குழந்தையின் மேல் உள்ளதால் “ஆண்டவன்” என்று செப்புகிறது.
இந்நிலையில் வந்த சாமியார் ஒருவர் “நானே கடவுள்… நானே தெய்வம்” என்கின்றான். அவ்விடம் உள்ள கருவின் வேலை இருக்கும் வரை தான் அவன் வேலையெல்லாம்.
ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனை கடவுள்…” என்று சொல்லுகின்றான்.
1.ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது.
2.அக்கருவையே அவன் ஆண்டவன் என்கிறான்.
நேற்று இங்கு நடந்த நிலைதான் அவன் நிலையும். இந்நிலையை நீடிக்க வைத்துப் பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்கள் கடந்த கால நிலையும் கண்டிடலாம்.
இந்நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள்… கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது… எல்லாமே. இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவையெல்லாம்.
மை போட்டுக் கேட்கின்றார்கள் ஆண்டவனிடம் பூ கேட்கின்றார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? “இவ்வாவிகளின் வேலைதான் அது எல்லாம்…” அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாம் இந்நிலைக்கு வருகின்றது.
இவ் எல்லா ஆவிகளுமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில். ஆயிரத்தில் கோடியில் ஒன்றுதான் உடனே மறு ஜென்மம் எடுக்கின்றது.
அவசரத்தில் எடுக்கும் மறு ஜென்மத்தினால் அங்கயீனமுடன் குறையாகப் பிறப்பது… குறைப் பிரசவம்… குறையுடன் பிறக்கும் குழந்தைகள்… எல்லாமே இவைகளின் நிலை எல்லாம் அதுதான்.
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை ஆவி உலகில் இருந்தும்
2.அறிந்திட அவகாசம் இல்லாமல் வந்து பிறக்கின்றது குறையுடன்.
நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத் தான் பிறக்கின்றது.
முதலிலேயே செப்பி உள்ளேன் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி… “எந்நிலையில் எப்படிப் பிறக்கின்றன…?” என்று. குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகத்தில் உள்ள வரை அவ்வாவிகளுக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
ஆவி உலகில் உள்ள பொழுது “எந்நிலையில் பிறக்கலாம்…?” என்று தான் தெரியும்.
1.பிறந்த பின் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்திடாது.
2.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகின்றது.
3.இந்நிலையில் தான் ஈசனின் சக்தி விளையாடுகிறது.
4.பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை.
இன்று பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகின்றான் மனிதன்.
இவ் ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அச்சக்தியின் நிலை தெரிந்திருந்தால்… இக்கலியில் வந்த மனிதர்கள் அதையும் தன் வழிக்கு உண்ணக் காசாக்கி இருப்பார்கள்.
அதனால் தான் ரிஷிகள் நிலையில் தன்னையே… தன் உடலையே அச்சத்தின் அருளுக்கு அடிபணிய வைத்து
1.அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…?
2.எந்நிலையில் சக்தி அருளைப் பெற்றிடலாம்…?
3.எந்நிலையில் அச்சக்தியின் அருளைப் பெற்று இம்மக்களுக்கு அருளிடலாம்…? என்று செயல்படுகிறார்கள்.
நம் போகரின் நிலை எல்லாம் அப்படி வந்தது தானப்பா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் தவறே செய்யவில்லை என்றாலும் கூட அடுத்தவர்கள் நம் மீது ஏதாவது குறையாகச் சொல்லி விட்டால் அவர்கள் உணர்வுக்கொப்ப அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.
நமக்குள் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… செய்தானே…!” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் எதிரியை வளர்த்துக் கொண்டே இருக்கின்றது. அப்பொழுது
1.நம் நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை
2.நம் நல்ல குணங்களை ஒடுக்க நாமே காரணமாகின்றோம்
அந்த நல்லதைக் காப்பதற்காகச் சாதாரண நிலைகளில் கொடுக்கப்பட்டது தான் விநாயகர் தத்துவம். அன்று மெய் ஞானியான அகஸ்தியனால் இது உருவாக்கப்பட்டது.
அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்தான்.
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அவனின் ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
2.எத்தகைய தீமைகளையும் அகற்ற முடியும்… ஒடுக்க முடியும்… அதைப் பழக்கப்படுத்த வேண்டும்.
உதாரணமாக ஒருவர் நம்மைத் திட்டி விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை உற்றுப் பார்த்த பின் நமது உயிர் அதை இழுத்து அந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றது.
அடுத்து உடலுக்குள் அதை அணுவாகவும் இதே உயிர் தான் உருவாக்குகின்றது. எவ்வளவு வேதனைப்படும்படி அவன் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது.
இதைத்தான் உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. விஷ்ணுவுக்குப் பிறந்த குழந்தை (பிரம்மா) அந்த விஷத்தின் தன்மையாக உருவாகி விடுகின்றது.
ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான்… அது மீண்டும் தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… அந்த ஞானமாக வேதனையாக இயக்கும்.
எந்த வேதனையை உருவாக்கும்படி முதலிலே சொன்னானோ அதனால் உருவான அந்த உணர்வுகள் பிரம்மமாகத் தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது.
1.வேதனைப்படச் செய்த அந்த அணு மீண்டும் அதே வேதனையை இங்கே உருவாக்குகிறது.
2.அந்த ஞானத்தின் வழிகளிலேயே அது செயல்படும் என்று
3.இவ்வளவு கருத்துடன் அந்த இயற்கையின் நிலைகளை நாம் கண்டுணர இதைக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.
ஒரு விஷமான வித்து காற்றில் இருந்து தன் விஷமான உணர்வின் சத்தை நுகர்ந்து தான் அது விஷச் செடியாக வளர்கின்றது. அதே போல் தான்
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படச் செய்தானோ
2.அவனின்று வரும் இந்த உணர்வை அந்த அணு நமக்குள் அது கிளர்ந்து… சுவாசித்து
3.அதனின் மலத்தை உடலிலே இடும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்த வேதனை தாங்காது
4.அதனுடய செயலைக் குறைக்கச் செய்கின்றது..
5.நம் உடலில் அது நோயாக வருகின்றது
ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்…!
நம்மை வேதனைப்படச் செய்தான்… அவனைச் சும்மா விடுவேனா…? என்று கோபத்துடன் எண்ணும் போது இந்த விஷத் தன்மையான அணுக்கள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது.
மீண்டும் அவர்களை எண்ண… எண்ண… நமக்குள் நோயாகவே விளைகின்றது… எதிரியாகின்றது…!
1.எதிரிக்கு நாம் இடம் கொடுத்து விடுகிறோம்…
2.நம்மை நாம் மறந்து விட்டோம்…! என்ற நிலைதான் இங்கே வருகின்றது.
வெளியிலிருக்கும் எதிரிகளைக் காட்டிலும் நமக்குள் உருவாகும் எதிரிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் இதை எல்லாம் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார். அவர் கொடுத்த அதே வழியில் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளும் அந்த ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆகவே அந்த மெய் ஞானியின் உணர்வைப் பெற நாம் தியானித்தல் வேண்டும்.


புலனறிவின் இயக்கங்கள் சாதாரணமானதல்ல…!
உதாரணமாக… “இந்த இடத்திற்குச் சென்றால் ஆபத்து” என்று சொன்னார்கள் என்றால் அதை எப்படியாவது “கொஞ்சம் பார்ப்போமே…” என்று நம்மைப் பார்க்கும்படி செய்கிறது.
சிறுவர்கள் அங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் பெரியவர்களாக இருக்கக்கூடிய நாம் “அது என்ன…? ஏது…?” என்று வேடிக்கை பார்த்து நுகர்ந்து அதற்குப் பின் தான் ஐய்யய்யோ…! என்று விலகிச் செல்கிறோம்.
சண்டையிடுகின்றார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் வருகின்றது.
1.சரி அது நடக்கிறது…
2.நாம் ஏன் அங்கே செல்ல வேண்டும்…? என்று யாரும் நினைப்பதில்லை.
ரோட்டிலே செல்கின்றோம் ஒரு விபத்து நடக்கின்றது அடிபட்டுக் கீழே விழுகின்றார்கள் உடல்கள் நசுங்கிக் கிடக்கின்றது…! அங்கே என்ன ஒரே கூட்டமாக இருக்கின்றது…? என்று கேட்கின்றோம்.
விபத்தாகி விட்டது அடிபட்டுக் கிடக்கின்றார்கள் என்று சொன்னால்… “அது என்ன…?” என்று தான் பார்த்துவிட்டு வந்து விடுவோமே என்று செல்வோம்.
பய உணர்வுடன் உற்றுப் பார்ப்பார்கள்.
1.அந்த உடல் எப்படி நசுங்கியதோ அந்த உணர்வு இங்கே வந்து விடுகின்றது
2.இரவு தூக்கத்தில் பார்த்தால் எங்கேயோ வண்டியில் போகிற மாதிரி இருக்கிறது… என்னை நசுக்கி அமுக்குகின்ற மாதிரி இருக்கின்றது.
3.அன்றைக்குப் பின் என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றெல்லாம் புலம்புவார்கள்
நான்கு நாளைக்கு இப்படி இருக்கின்றது இது எல்லாம் தெரிகிறது என்றாலும் இப்படித்தான் நம்மை இயக்குகின்றது.
அதே உணர்வு அதிகமான பின் அந்த பயத்தினால் மனிதன் சிந்தனை இழந்தவர்களாக ஆகிவிடுகின்றார்கள் ஏனென்றால் “புலனறிவால் அறிந்தும் கூட… பலவீனமான நிலைகள் இங்கே இயக்கப்படுகிறது….”
அடிபட்டான் என்ற உணர்வை நுகர்ந்தால்
1.அது நமக்குத் தீங்கு என்று நினைத்தாலும் அதை விடுவதில்லை
2.அதை நுகர்ந்து பார்க்கும்படித் தான் செய்கின்றது.
“நம்மை அறியாமலே” இந்த உணர்வுகள் அதை நுகர்ந்து பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளக்கூடிய விருப்பம் தான் வருகின்றது. தெரிந்தாலும் அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் தான் தெரிய முடிகின்றது.
அவன் பயத்தால் எப்படித் துடித்தானோ நுகர்ந்த உணர்வுகள் பய உணர்ச்சிகளை நம் இரத்தத்தில் கலந்து மற்ற உடல் அணுக்களுக்குள் சேர்த்த பின் அந்த மனிதன் எப்படிப் பதட்டம் அடைந்தானோ அதுவும் நம் நல்ல அணுக்களில் கலந்து கண்ட பின் பய உணர்ச்சிகள் ஆகிவிடுகின்றது
மீண்டும் அந்தப் பய அலைகள் வந்தால்
1.யாராவது ஒருவர் சும்மா படுத்து இருந்தாலும் கூட
2.அதைப் பார்த்தால் ஒரு பிரேதமோ என்று பயம் வரும் செத்துப் போய் விட்டானா…? என்ற பயம் வரும்.
வீட்டிற்குள்ளே இருந்தாலும் கூட பார்த்தால் அந்த நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் படுத்திருந்தாலும் இந்த நினைவுகள் வரும்.
ஆக நாம் எதை அறிந்து கொண்டோம்…?
1.இந்த உடலில் நாம் எதைப் பதிவு செய்தோமோ
2.இந்தப் புலனறிவு தான் நம்மை இப்படிச் செயல்படுத்துகின்றது.
இதையெல்லாம் நாம் உடனுக்குடன் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும் மகரிஷிகள் உணர்வை எடுத்து வலுவாக்கி ஆத்ம சுத்தி செய்து தடுத்துப் பழகுதல் வேண்டும்.
உலக நடப்புகளைத் தெரிய வேண்டும் என்று விரும்பினாலும் அதை நாம் உடனுக்குடன் அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு தூய்மைப்படுத்தினால் தான்
1.நம்முடைய நல்ல குணங்களும் காக்கப்படும்
2.நம்முடைய உடல் உறுப்புகளும் காக்கப்படும்
3.நம்முடைய மனதும் அமைதிப்படும்.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு… தெளிந்த நிலைகள் கொண்டு இனி வழி நடப்பதே நல்லது.

“மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்
ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?
இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர ஒரு சக்தி தேவை.
அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!
பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.
தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.
இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால்
1.மீண்டும் பயிர் செய்ய விதை நெல் தேவைப்படுகின்றது.
2.அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும்.
3.இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு
4.அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”
இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.
இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.
தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் “பல மகான்கள்” தோன்றிய நிலை எல்லாம்.
அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து “ஜீவனை வளர்க்க முடியும்…”
சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் “மீண்டும் மனித ஜனனம் தேவை…”
காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.
உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?
ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!
பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.
சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.
அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வேண்டாதவரைப் பார்க்கும் பொழுது எதிரி என்ற நிலையில் அவர் செய்வது தப்பு என்று நினைக்கின்றோம்… அடுத்தவரிடத்திலும் அதைத் தான் சொல்வோம்.
அவன் நல்லதையே செய்தாலும் கூட…
1.அவனை எந்தக் குறிக்கோளுடன் நாம் முதலில் பதிவு செய்திருக்கின்றோமோ
2.பார்த்தவுடனே ஊரை “ஏமாற்றுவதற்கு என்னவோ… அதைச் செய்கின்றான்…” என்று சொல்கிறோம்.
அவன் நல்லதைச் செய்வான். அவன் செய்வதை நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை. அவனைப் பற்றிய தவறான உணர்வுகளையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
அதே சமயம் நமக்கு வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தப்பு செய்து விட்டால்… அது எப்படியோ தெரியாமல் நடந்து விட்டது… “அவர் தப்பே செய்ய மாட்டார்…!” என்று தான் நாம் சொல்கிறோம்.
1.இங்கே பாசத்தால் தவறை மறைக்கின்றோம்… தப்பை வளர்க்கின்றோம்
2.அங்கே வெறுப்பால் நியாயத்தையே மறைக்கின்றோம்… ஆனால் தவறை வளர்க்கின்றோம்
இதைப் போன்று நம்மை அறியாது வரக்கூடிய உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வந்து நமக்குள் இயக்குவதைத் தான் கூனி என்றும் சகுனி என்றும் காவியங்களில் காட்டுகிறார்கள்.
ஒருவர் மீது பற்று இல்லை என்றால் அந்த வெறுப்பின் தன்மை வரும் பொழுது கூனி… பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அது இணைத்து விடுகின்றது.
இவ்வாறு நமக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட…
1.என்ன பெரிதாகச் செய்து விட்டார்…!
2.ஏமாற்றுவதற்குத் தான் இதைச் செய்கிறார்..! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றோம்
இராமாயணத்தில் கூனி என்ன செய்கிறது…?
இராமன் உயர்ந்தவனாக இருந்தாலும் அது பிடிக்காதபடி அவனைப் பகைமையாக ஊட்டுவதற்கு சிற்றன்னையான கைகேயியிடம் அதை உருவாக்குகின்றது.
தசரதன் உன்னுடைய கணவன் தானே… அவனுக்குப் பிறந்த மகன் தானே பரதனும்…! அவனுக்கு ஏன் அந்த அரசில் உரிமை கிடையாது…? என்ற உணர்வை ஊட்டுகிறது.
இராமன் இருந்தால்தான் சாம்ராஜ்யத்தை ஆள முடியும். இங்கிருந்து அவனை அனுப்பி விட்டால் “பரதன் எளிதாக ஆட்சிக்கு வரலாம்…” என்று இந்த ஆசையின் உணர்வுகளைத் தூண்டுகிறது கூனி.
இராமனைப் பிடிக்கவில்லை… அதனால் பகைமையை ஊட்டி அவ்வாறு செயல்படுகிறது. ஏனென்றால்
1.நமக்குள் எதிரியான உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உடலுக்குள் அணுக்களாக விளைந்து விட்டால் அது எதைச் செய்கிறது..?
2.ஆசையினால் குற்றவாளிகளை எப்படி உருவாக்குகின்றது…? என்ற உணர்வைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.
காவியங்களில் மகரிஷிகளால் காட்டப்பட்ட மூலக் கருத்துக்களை நாம் உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எளிதில் விடுபட முடியும்.
பகைமைகளை அகற்றி ஒன்றி வாழும் உணர்வை நமக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி என்றும் ஏகாந்தமாக வாழும் வழியைத் தான் காவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டு…! என்றார் குருநாதர்
விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்ட நிலையில் இன்று நம் சூரியனே பாழடையும் தன்மையில் இருக்கின்றது அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் தான் வாழுகின்றோம். இதிலே வளர்ந்த மனிதன் அணுகுண்டுகளை நான்கு திசையிலும் செலுத்தினான் என்றால் இந்த சூரியனே அழிந்துவிடலாம்.
மற்ற பிரபஞ்சம் சிதைந்து அதிலிருந்து விலகி வரும் கோள் நம் பிரபஞ்சத்திற்குள் வந்தால்… பூமிக்குள் வந்து தாக்கி விடாதபடி இராக்கெட்டுகளைத் தயார் நிலையில் வைத்து… அணுகுண்டுகளையும் வைத்து… அதன் வீரிய உணர்வு சுக்கு நூறாகத் தெறிக்கச் செய்வதற்காக விஞ்ஞானிகள் வைத்திருந்தார்கள்.
ஆனால் அப்படி வந்த அந்தச் சிதைந்த கோள் வியாழன் கோள் ஈர்ப்பு வட்டத்திற்குள் இணைந்ததால் அங்கே விழுந்து… அதனின் சுழற்சியில் கவரப்பட்டு… வெப்பத்தால் கரைந்து ஆவிகளாக மாறி… அந்த ஆவியின் தன்மை உறைபனியாக மாற்றி வைத்துக் கொண்டது.
பூமியை விடப் பெரிதான கோள் தான் வந்தது நம் பூமியிலே அது விழுந்தால் எந்தப் பகுதியில் விழுகின்றதோ மக்கள் தங்கள் அழிக்கப்படுகின்றார்கள்.
இன்னொரு பக்கம் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து விட்டால் பெரிய கோளாக மாறும். இரண்டு மடங்கு ஆகிவிட்டால் சுழற்சியின் வேகம் கூடி ஈர்ப்பின் தன்மை அதிகரித்துவிடும்.
அதிகரித்தால் வியாழன் கோள் போலவே நம் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் மடியும் தன்மை உருவாகிவிடும்.
1.இப்படி பிரபஞ்சங்கள் பலவாறு பல வகைகளிலும் மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
2.நாம் எதைச் செயல்படுத்த வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதையெல்லாம் அடித்து நொறுக்கும் சக்தி பெற்றிருந்தாலும் மக்களைக் காக்கும் நிலை இல்லை.
அன்று ஒரு காலம் அகஸ்தியன் தன்னுடைய பார்வையால் தனது உணர்வின் சக்தி கொண்டு…
1.பூமி நீளமாக வளர்ந்து கொண்டே செல்வதைக் குறைப்பதற்காகத் திசை திருப்பி
2.வட துருவத்தில் உருப் பெற்ற பனிப்பாறைகள் தென் துருவத்தின் வெப்பத்தால் கரைந்து கடல் நீராகப் பெருகச் செய்து சமப்படுத்தினான்
3.இன்று வரை சீராக ஓடிக் கொண்டுள்ளது.
ஆனால் விஞ்ஞானத்தின் நிலையில் பூமியிலே ஒரு பக்கம் அணுகுண்டுகளை வெடித்தார்கள் என்றால் சூரியனுடைய பிடிப்பு… அந்தக் காந்த அலைகளைத் தடுத்து நிறுத்தப்படும் பொழுது ஒரு பக்கம் ஈர்க்கும் தன்மை அதிகரித்துப் பூமி குடை சாயும் நிலை வரும்.
ஆக காலம் கடந்த நிலைகள் கொண்டு
1.இப்போதாவது இந்த உண்மைகளை அறிந்து கொண்டோம்… தவறவிட்டால் தப்பும் மார்க்கம் ஏது…?
2.இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
இத்தகைய உண்மைகளை எல்லாம் அறிவதற்காக வேண்டிக் காடு மலைகளை எல்லாம் குருநாதர் எம்மை (ஞானகுரு) அலைய வைத்தார். பல உணர்வுகளைப் பதிவாக்கினார்.
குருநாதர் காட்டிய அந்தப் பதிவின் நிலைகள் அனைத்தும் அறிந்து கொண்ட பின் நீங்களும் அதைப் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம். குருநாதர் சொன்னது
1.மறைந்த நிலையினை மக்களுக்கு மீண்டும் எடுத்துக்காட்டு.
2.இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும்
3.மக்களின் உணர்வுகள் உனக்குள் உண்டு அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை நீ எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற உணர்வு வருகிறது.
4.நீயும் ஒளியாக ஆகின்றாய் கேட்பவர் உணர்வுகளிலும் ஒளியாகின்றது
5.பிறவி என்ற நிலையை அகற்றுகின்றாய் அருள் ஒளி என்ற நிலையில் வாழ்கின்றாய்.
6.உன்னுடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமைகின்றது.
7.பேரருளை உனக்குள் வளர்த்துவிடு… எல்லோரையும் பேரின்பம் பெறச் செய்.
8.அதுவே உனக்குப் பேரானந்த நிலையில் ஏகாந்த நிலை பெற உனக்கு உதவும் என்று கூறினார்.
அதன் வழி தான் உங்களுக்குள் இருளை அகற்றும் அருள் ஒளியைப் பாய்ச்சி… உங்கள் நினைவு கொண்டு மாற்றிக் கொள்ளும் சக்தியாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
அருள் ஒளியை நீங்கள் பெற்று இருளை அகற்றிடும் ஞானிகளாக நீங்கள் வளர வேண்டும்… விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து அனைவரையும் மீட்டிட வேண்டும்.

ஜீவனுள்ள கனி “எலுமிச்சங்கனி”
1.ஈர்க்கும் கனி…
2.ஈசனின் சக்தியையே ஈர்க்கும் கனி…
3.ஈசனின் கனி எலுமிச்சங்கனி.
இக்கனியின் தன்மையை வைத்துப் பூஜைக்கும் உணவிற்கும் உபயோகப்படுத்துகிறார்கள். நற்காரியங்களுக்கு இக்கனியைத் தருகின்றார்கள்.
பல வழிச் சாமியார்களும் இக்கனியைப் பூஜை செய்து இக்கனியில் மந்திரித்து மக்களுக்கு அளிக்கின்றார்கள். இக்கனியின் தன்மை என்ன…?
இவ் ஈசனின் எலுமிச்சங்கனியின் தன்மை “பெரும் ஈர்க்கும் சக்தி உள்ள கனியப்பா…” இக்கனியைக் கையில் வைத்து நீ சில நிலைகளை நினைக்கும்போது உன் சுவாச நிலையைக் கனி ஈர்க்கிறது.
அந்நிலையில் அக்கனியை நீ முகர்ந்திட்டால் அக்கனியின் மணத்தை வைத்து உன் நிலை என்ன…? என்பதைக் கனியின் மணத்திலிருந்து உன் மன நிலையை நீ அறிந்திடலாம்.
இவ் ஈசனின் கனியைக் கையில் ஏந்தி
1.உன் மன நிலையைச் சந்தோசமாக்கி வேண்டிக் கொண்டால் நீ நினைக்கும் எந்தக் காரியத்தையும் அக்கனி ஈர்க்கிறது.
2.காரியம் முடியும் வரை தன் சக்தியின் அருளை உனக்கு அருள்கின்றது.
ஒரு எலுமிச்சங்கனியை உன் இல்லத்திற்கு வாங்கி வந்து உன் கையில் வைத்து அவ்வாண்டவனை வணங்கி அக்கனிக்குக் கற்பூர ஆராதனை காட்டி… அந்நிலையில் ஒரு காரியத்தை எண்ணிக் கொண்டு நீ வணங்கிடும் தெய்வ நிலையில் உள்ளவர்களை அழைத்திட்டால்… அந்நிலைக்கு அவர்கள் வருகின்றார்கள்.
அவ்வீர்ப்புத்தன்மை அந்தக் கனிக்கு உள்ளது. “காந்தத்தின்” ஈர்ப்பு நிலை போல் அக்கனிக்கும் ஈர்ப்பு நிலை உள்ளது.
பல சாமியார்களைப் பற்றிச் சொன்னேன் அல்லவா…! அவர்கள் நிலையில் எல்லோரும் எலுமிச்சங்கனியை வைத்திருப்பார்கள். அவர்கள் ஜெபத்திற்கும் அக்கருவித்து வேலைக்கும் இந்த எலுமிச்சங்ககனியைத்தான் தன் வசத்திற்கு வைத்துக் கொள்கின்றார்கள். இக்கனியின் தன்மையைப் பற்றி பல பல செப்பிடலாம்.
இக்கனி ஈர்க்கும் நிலையில் தன்னுள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொள்கின்றது.
1.இக்கனிக்குச் சுவாச நிலை உள்ளது
2.இக்கனியைக் கையில் வைத்தால் இவ்வுலக சுற்றலையே அறிந்திடலாம்.
இக்கனியை வீட்டின் முகப்பில் கட்டுவது இக்கனியைக் காண்பவர்கள் எண்ணத்தைத் தன்னுள் ஈர்க்கிறது இக்கனி. அவர்கள் எண்ணம் நம்மை வந்து தாக்குவதில்லை. புரிகிறதா…?
கனியின் தன்மையிலேயே அவர்கள் எண்ணம் அந்த இடத்தில் அடிபடுகிறது. நம்மை வந்து அது அண்டுவதில்லை.
திருஷ்டி என்ற பெயரில் நீ கட்டுகின்றாய்… என்ன என்று புரியாமல்…! ஏன் மற்ற கனிகளை அந்நிலைக்குக் கட்டக்கூடாதா…? இக்கனிதான் சக்திக்கனி. இதனுடைய நிலை எக்கனிக்கும் இல்லை இவ்வுலகம் முழுவதுமே.
இக்கனியை வைத்துதான் பிழைக்கின்றார்கள் பல பல சாமியார்கள் எல்லாம் புரிந்ததா…?
1.இக்கனியின் சாறு எடுத்து மஞ்சளைக் கலந்து புருவத்தின் மத்தியில் இடுவதும் அவ்வீர்ப்பு நிலைக்குத்தான்.
2.நல்ல எண்ணத்துடன் இக்கனியில் செய்த குங்குமத்தை வைத்துக் கொண்டால்
3.தீய துர் ஆவிகள் வந்து அண்டிடாது என்பதெல்லாம் இதன் பொருளே.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நமது குருவின் (ஈஸ்வரபட்டர்) அனுபவங்களையும் அவர் எனக்குக் கொடுத்த அனுபவங்களையும் தொடர்ந்து இந்த உபதேச வாயிலாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.
குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி… நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் அது எனக்குள் நல்லதாகிறது.
ஆகவே… நமக்குள் உள்ள தீமைகள் போக வேண்டும் என்றால் யார் நமக்குத் தீமை செய்தார்களோ… “அவர்களுக்கு நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் வர வேண்டும்…” என்று சொன்னால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராது.
எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். என்று சொன்னோம் என்றால் அவர்களைப் பற்றி வெறுப்பான உணர்வுகள் நம் உடலுக்குள் வளர்வதில்லை.
1.ஆனால் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சும்மா சொன்னால் அந்தக் கெட்டது தான் நல்லதாகும்.
2.அவர் செய்யக்கூடிய கெட்டதற்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகும்.
ஆகையினால்… நல்லது செய்யக் கூடிய எண்ணங்கள் அவருக்குள் வர வேண்டும்… எல்லோருக்கும் பண்பும் பரிவும் காட்டக்கூடிய அருள் ஞானம் அவருக்குள் வர வேண்டும் என்று சொன்னால் அந்தக் கெட்டதை வளர விடுவதில்லை. ஆக அதை வெறுமனே சொல்ல முடியாது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நம் உடலில் அது படர வேண்டும் என்று இதைக் கலந்து
3.நம் எண்ணங்களுக்கு நல்ல வலு கொடுக்க வேண்டும்.
அந்த வலுவின் துணை கொண்டு அந்த அருள் உணர்வுகளை மற்றவருக்குப் பாய்ச்ச வேண்டும். இப்படிச் செய்தால் குடும்பத்தில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் மாற்றி விடலாம்.
திடீரென்று எதிர்பாராது விபத்துக்களோ மற்றதுகளோ உற்றுப் பார்த்தால்… “அடப் பாவமே… இப்படி ஆகிவிட்டதே…!” என்று எண்ணக்கூடாது.
உடனே ஈஸ்வரா… என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று நமக்குள் இந்த வலுவைக் கூட்ட வேண்டும்.
விபத்தில் ஆன்மா பிரிந்திருந்தால் அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அவர் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை உந்தித் தள்ளி அங்கே விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.
உடலில் அடிபட்டிருந்தால் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று பூரண குணமாகி அவர்கள் சீக்கிரம் எழுந்து நடக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் இப்படித் தான் நினைக்க வேண்டும்.
பொதுவாக நம் செயல்கள் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் போகிறது.
1.ஆனால் மேலே சொன்னபடி எண்ணாமல் அவர்களின் வேதனையை எடுத்தால்
2.கிடு கிடு… என்று உடலில் நமக்கு நடுக்கமாகும்.
3.நம் நல்ல குணங்கள் செயல் இழந்து… அவர்கள் அடிபட்ட உணர்வுகள் இரண்யனாகி அதைக் கொல்லும்.
அதனால் தான் அத்தகைய நஞ்சான உணர்வுகளுக்கு இரண்யன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று தான் அதை எல்லாம் காவியங்களாகப் படைத்தனர். ஏனென்றால் இது இயற்கை.
அதை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி இப்படிக் கருத்தினைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்கள் ஞானிகள்.
அந்த இரண்யனைப் பிளக்க வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற பயிற்சி கொடுக்கின்றோம். அதை எடுத்து உங்கள் நல்ல குணங்களைக் காத்து மற்றவருக்கும் அதே நல் உணர்வை ஊட்ட முடியும்.


மனித வாழ்க்கையில் செல்வம் நம்மைக் காக்காது… “அருள் செல்வமே நம்மைக் காக்கும்”
கொசுக்களாகி மனிதனின் இரத்தத்தைக் குடித்துக் கருமுட்டைகளாகி மனிதனாகப் பிறவிக்கு வந்தால் அந்தக் குழந்தைகளின் உணர்வுகளைப் பார்த்தோம் என்றால் மிகவும் மோசமாக இருக்கும்.
இப்படி எத்தனையோ வகையான உயிரணுக்களின் தோற்றத்திலிருந்து சேர்த்துக் கொண்ட நிலையில் இருந்து உரு மாறிக்கொண்டே இருக்கின்றது.
பன்றியாக இருந்து நஞ்சினை நீக்கி மனிதனாக உருவாக்கிய பின்
1.நஞ்சை நீக்கும் சக்தி பெற்ற நிலையில்
2.இந்த மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை துடைக்கத் தவறினால்
3.மீண்டும் பிறவிக் கடனில் தான் உழல்வோம்.
இன்று மனிதனாக இருக்கின்றோம் சமாளிக்கின்றோம்… செல்வத்தையும் தேடி வைத்திருக்கின்றோம். இருந்தாலும் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.
இலட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்தால் உடனே இதயத்தை மாற்றிக் கொடுத்து விடுகின்றார்கள் சிறிது காலத்திற்கு வாழும்படி செய்கின்றார்கள். பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்…?
என்னுடைய (ஞானகுரு) பற்கள் விழுந்துவிட்டது. பல் செட்டைக் கட்டி நிஜப்பல் இருக்கின்ற மாதிரி நான் சாப்பிடுகின்றேன்… விஞ்ஞான அறிவு கொண்டு செய்து கொடுத்து விடுகின்றார்கள்.
பல் இல்லாதவர்கள் சரியாக மென்று சாப்பிடவில்லை என்றால் சத்தை சரி வர நல்ல இரத்தமாக மாற்ற முடியாது. அதனால் உடல் பலவீனம் அடைந்து விடும்.
ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்த உபாயங்ககளைக் கண்டுபிடித்துக் கொண்டு வருகின்றார்கள். ஆனால்
1.இப்போது இந்த மெய்ஞான அறிவைத் தெரிந்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறத் தவறினால்
2.வரும் தீமைகளை அதை வைத்துத் துடைக்கத் தவறினால் நோயாகி
3.மீண்டும் கீழான சரீரங்களுக்குத் தான் செல்ல வேண்டி வரும்.
அதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் அடிக்கடி தியானப் பயிற்சியை உங்களுக்குப் பல வகைகளிலும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
பௌர்ணமி தியானங்களை அமைத்து அந்தத் தியானத்தின் வலுக் கொண்டு குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சூட்சும சரீரத்தைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் போது உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நாம் தியானித்த உணர்வுகள் அங்கே அதற்குள் தொக்கி நிற்கின்றது
2.அதை வைத்து அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றனர்.
அதே சமயத்தில் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோரும் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது அதிலே விளைந்த உணர்வுகள் எளிதில் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றார்கள்… வரக்கூடிய நோயிலிருந்து விடுபடவும் முடிகின்றது… வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. எப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணையும் பருவம் பெறுகின்றனர்.
விஞ்ஞானிகள் இன்றைக்கு எத்தனையோ புதுப்புது உயிரணுக்களை உருவாக்குகின்றார்கள் உடல்களை மாற்றுகின்றார்கள்.
ஆனால் இறந்த பின் தன் உயிரான்மாவைப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய முடியுமா…? என்றால் அது முடிவதில்லை. கண்டுபிடித்த உணர்வின் தன்மை கொண்டு தன் சீடனுக்குக் கற்பித்திருந்தால் இறந்த பின் சீடனின் உடலுக்குள் தான் போக முடியும். தான் கற்ற ஞானத்தை வேண்டுமென்றால் அவனுக்குப் போதிக்கலாம்.
ஆனால் சந்தர்ப்பத்தில் வேதனையும் துன்பங்களும் வந்தால் ஞானிகள் காட்டிய முறைப்படி காலை துருவ தியானத்தினை எடுத்துக் கொண்ட பின்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தூய்மைப்படுத்திக் கொண்டு
2.நோயற்றவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த உணர்வைப் பதிவு செய்து
3.நோய் நீங்கி நீங்கள் நன்றாக வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கும் நம் வாக்கு நல்லதாகின்றது
4.நமக்குள்ளும் தீமை புகாது தடுத்துக் கொள்கின்றோம்.
இப்பொழுது எதன் மீது அதிகமாகப் பற்று கொள்கின்றோம்…? நோயை நீக்கும் அருள் ஞானிகள் உணர்வைப் பற்று கொள்கின்றோம். நோயின் உணர்வைப் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.
பற்று… பற்றற்று இரு…!
ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதன் மீது நாம் பற்று கொள்ளலாகாது. அதைப் பற்றற்றதாக ஆக்க வேண்டும் என்றால் அடுத்த நிமிடமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்த உணர்வினை நமக்குள் எடுத்து அதைப் பற்றுடன் பற்றிட வேண்டும்.
வேதனை உணர்வுகள் நம்மைப் பற்றிடாது பற்றற்றதாக மாற்றி… மற்றவர்களுக்கும் தீமையை நீக்கும் உணர்வுகளை இயக்கும் சக்தியாக அவர்களை அதைப் பற்ற வைத்து… பலவீனத்திலிருந்து மீட்டும் சக்தியாகக் கொண்டு வர வேண்டும். இதை வழிப்படுத்தி நாம் நடக்க வேண்டும்.
1.இந்த மனித வாழ்க்கையில் நம்மைச் செல்வம் காக்காது… அருள் செல்வமே நம்மைக் காக்கும்.
2.எத்தனையோ செல்வத்தை வைத்திருப்பவர்கள்… அவர்கள் குடும்பம் எல்லாம் துயரத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுங்கள்.

நல் மூச்சே விட்டிடுங்கள்
ஓம் என்னும் பதத்திற்கு ஓ…ம் என்ற ஓங்கார இசையில் கலந்திருப்பாய் என்று பாடுகின்றாய். அப்பாடலின் ஆணிவேர் என்னப்பா…?
ஒரு நிமிடம் உன் நிலையில் பகர்கின்றேன்… ஒரு சொல்லில் பகர்ந்திடப்பா…! உதய வழியை அளிக்கத்தான் இந்த நாள் முதல் உன் மனதிற்கு அளிக்கின்றேன்.
உன் வழியில் வந்த எண்ணம் ஒரே எண்ணம் உணர்ந்து விட்டாய் உன் உதயத்திலேயே.
1.தாவரங்களின் உயிர் அவ்வாணி வேரில் உள்ளது… அதன் ஈர்ப்புத் தன்மை சூரிய ஒளி பட்டுக் கீழ் நோக்கி இழுக்கின்றது.
2.மனிதனின் ஆணிவேர் உயிர் சிரசின் முன் பகுதியில் உள்ளது… மனிதனின் சுவாச நிலை சூரிய ஒளி பட்டவுடன் தன்னைத்தானே சுற்றுகின்றது.
3.இவ்வுலகத்தின் ஆணிவேர் அவ்ஓம் என்ற ஓங்கார இசையினிலே சுழல்கின்றது.
உன் உதயத்தில்… உன் ஜெப நிலையில்… அவ்வுலகச் சுழற்சியில் “ஓ…ம்” என்ற ஓங்கார நாதத்தை உணர்ந்திடலாம்.
ஒரு நிமிடம் ஜெப நிலையில் இருந்திட்டால் உன்னைச் சுற்றி உள்ள ஒலிகள் எல்லாம் அடங்கும். ஓ…ம் என்ற ஓங்கார இசையை ஜெப நிலையின் பொருள் நம்மைச் சுற்றியுள்ள ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தை அருளச் செய்யத்தான் இந்த நிலையை உண்டாக்கினேன். வழியமைத்துப் பாடம் புகட்டுகின்றேன்.
ஏட்டுப்படிப்பு மட்டும் தான் ஏற்கின்றாய். செயலில் வரவேண்டுமப்பா. ஓ…ம் என்ற ஒலியின் ஓங்கார இசையில் கலந்திடத்தான் இந்த உண்மைகளை உணர்த்திட்டேன்.
1.ஓ..ம் சக்தி என்ற பாடலை அமைத்திட்டேன்.
2.உருளுகின்ற சக்தியே… உயிரணுவின் சக்தியே… உயர்ந்து நிற்கும் சக்தியே…! பாடலின் பொருளும் பாடத்தின் பொருளும் ஒன்றுதான்.
ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி
சிங்கார இசையினிலும் இருந்திடுவாள் ஓம் சக்தி
சினமெல்லாம் தவிர்த்திடுவாள் ஓம் சக்தி
உலகெல்லாம் ஓங்கி நிற்கும் ஓம் சக்தி
உலகாளும் சக்தியே
உருளுகின்ற சக்தியே
உயர்ந்து நிற்கும் சக்தியே
உயிரணுவின் சக்தியே
உலகாளும் ஈசனின் சக்தியாய்
பூ மழையாகப் பொழிந்திடுவாய் சக்தியே…
பரிபூரணமாக என் மனதில் கலந்திடுவாய் சக்தியே
மனமெல்லாம் மணக்கச் செய்வாய் சக்தியே
ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி.
தியான நிலையில் நினைவெல்லாம் இன்னும் பரிபக்குவ நிலை வர வேண்டும். சுவாச நிலையில் “வாழ்க்கை முறையிலேயே” கலந்து வர வேண்டும் அத்தியான நிலை.
அந்நிலையில் தான் நீ அமரும் தியான நிலையில் இரண்டும் கலந்தால் தான் தியான நிலை கைகூடும்.
1.சுவாச நிலையின் எண்ணம் தான் முதல் படியில் வந்துள்ளது.
2.அடுத்த முதல் படியில் வந்துவிடும் ஓங்கார இசையின் நாதம் உன் செவிக்கு.
3.அத்தியான நிலைக்கு முதல் படி சுவாச நிலை அதைப் புரிந்திட்டாய்.
வரும் முதல் நிலை “ஓங்கார ஒலியைக் கேட்பது தான்…!” அந்நிலையில் நீ விடும் சுவாச நிலையே மறந்துவிடும். ஓங்கார ஒலி தான் உன் செவிக்குள்ளே ஒலித்து வரும்.
உலகத்தன்மையே ஓ…ம் என்ற ஒலியினால் தான் இயங்குகின்றது இவ்வொலிதான் உலகத்துக்கு ஆணிவேர். அவ்வொலியின் மேல் அவ்ஒளி பட்டவுடன் தான் இந்த ஜீவராசிகளின் ஜீவனெவல்லாம் தோன்றுகிறது.
இவ்ஒலியிலிருந்து நல் மனத்தைப் பெற்றிடுங்கள்… நல் மூச்சே விட்டிடுங்கள் என்பதெல்லாம் எந்த நிலையில்…?
நல் மூச்சே விட்டிடுங்கள் என்னும் பொழுது அந்நிலையில் உள்ள புஷ்பங்களையும் நறுமணம் கொண்ட பொருள்களையும் தேடுகின்றாய். அந்நிலையில் வருவதல்ல நல் மூச்சு.
நல் மூச்சு என்பதன் பொருள்…
1.உன் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலிருந்து வருவது தான்.
2.உன் மனநிலையில் மகிழ்ச்சியாக உள்ள நாளில் அவ்விடத்தில் உள்ள அசுத்தக் காற்றுகளும் உன்னை வந்து அடையாது.
3.அந்நிலையில் உன் சுவாச நிலையம் அந்தத் தீய மணத்தை ஏற்றுக் கொள்ளாது.
ஆனால்… உன் மனமும் சுவாச நிலையும் உன் மன நிலையில் சோர்வு வந்துவிட்டால் உன் சுவாச நிலைக்கு எந்த நறுமணங்களும் வந்து அடையாது… புரிந்ததா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அதற்கு மத்தியிலே இடைப்பட்ட நிலைகள் வரப்படும் பொழுது ஒருவர் வந்து அவன் மோசமான ஆள்… உதவி செய்யாதீர்கள்…!” என்று நம்மிடம் சொல்கிறார்.
அப்போது நமக்கு வெறுப்பின் தன்மை வருகிறது.
1.ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எண்ணும் போது மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று சொன்னால்
2.நாம் எண்ணிய எண்ணங்களுக்கு அது எதிரியாகிறது. நமக்குள்ளே போர் வருகிறது.
சந்தர்ப்பத்தில் இதைப் போன்று தான் நமக்குள் அந்த எதிரியின் தன்மைகள் உருவாகி விடுகிறது. இப்படி உருவாகும் அந்தச் சக்திகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.
கைகேயி இராமன் மீது வெறுப்பு காட்டுகிறது… ஏனென்றால்
1.தன் பையன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி
2.இது தன்னிலே வளர்ந்த உணர்வு…. அந்த அணுக்கள் அதை எண்ணுகின்றது
3.அந்த உணர்வின் தன்மை இங்கே உருவாக்குகின்றது
தசரதனுடைய ஆசையோ இராமன் மீது இருக்கின்றது. அதே சமயத்தில் தனக்குள் இருக்கும் சக்தி (தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவி) அதனுடைய பாசத்தால் ஓங்கி வளர்க்கப்படும் பொழுது அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அதாவது தசரதன் அவன் மனைவியின் நிலையை மீற முடியவில்லை.
அன்பு கொண்ட மனைவி கோசலை தியாகம் செய்கிறது…! மூத்த மகன் இராமன்… சீதாராமா ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைகள் இருக்கின்றான்.
சுவைக்கொப்பத் தான் எண்ணங்கள் (சீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணம்) என்று அவனுடைய எண்ண அலைகள் இருப்பினும் தூண்டிய உணர்ச்சிகள் தன் சகோதரனாக இலட்சுமணனாக இருக்கின்றான்.
நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு எந்த உணர்வின் தன்மை எண்ணி எடுக்கின்றோமோ அதன் சக்தியாக இயக்குகிறது. ஆனால் அதிலே இந்த விஷத்தின் தன்மை கலந்தால் எதிலே இது கலக்கின்றதோ அந்த வேகத்தின் தன்மை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
இது எல்லாம்
1.ஒரு அணுவுக்குள் இருக்கும் நிலையும்… அது கவர்ந்து கொண்ட உணர்வின் சக்தியும்
2.அது எவ்வாறு இயக்குகிறது…? என்று தான் இராமாயணம் காட்டுகிறது.
இராமன் காட்டிற்குள் செல்கின்றான். அங்கே புலியும் இருக்கிறது கரடியும் இருக்கிறது. இருந்தாலும் அதைச் சீராக்கிக் கொண்டு வரும் நிலையாக இராமன் என்ன செய்கிறான்…?
1.இந்த உடலுக்குள் வரும் மற்ற ஆசைகளை விடுத்து அமைதியாகச் செல்கிறான்…
2.எல்லாவற்றையும் இவன் சகோதரனாக ஆக்குகின்றான் என்று காட்டுகிறார்கள்.
3.மகிழ்ந்து வாழும் சக்தியாகத் தனக்குள் அரவணைத்துக் கொள்கிறான் என்று காட்டுகின்றார்கள்.


ஒலி நாடாக்கள் மூலம் யாம் (ஞானகுரு) உபதேசித்து வெளிப்படுத்திய கருத்துக்களின்படி நீங்கள் தியானியுங்கள்
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகள் உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் உணர்வு நமக்குள் இருப்பதால் “அவர்கள் பெற வேண்டும்” என்று நாம் எண்ணும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கும் அது கிடைக்கின்றது. நமக்குள் அகந்தை என்ற உணர்வு செயல்படாது ஒடுங்குகின்றது.
அன்று துருவன் (அகஸ்தியன்) காட்டிற்குள் செல்லப்படும் பொழுது துஷ்ட மிருகங்கள் மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை கொண்டு வந்தாலும்…
1.அவன் உடலில் இருந்து வெளிப்படும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் அதை ஒடுங்கச் செய்வது போன்று
2.விஷமான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்து… மற்றொன்றைக் கொன்று புசிக்கும் கடும் நோயாக உருவாக்கும் அந்த உணர்வுகளை
3.நாம் அந்த துருவ மகரிஷிகளின் அருள் ஒளியின் உணர்வைச் சேர்த்து அந்த உணர்வுகளை ஒடுங்கச் செய்ய வேண்டும்.
4.ஆக அதை நுகர்கின்றோம்…! இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைகின்றது.
5.அந்த அணுக்களின் பெருக்கங்களைக் கொண்டு வரும்போது கணங்களுக்கு அதிபதி ஆகிப் பிறவியில்லாப் பெரு நிலை அடைய செய்யும்
“பிரம்மாவைச் சிறை பிடித்தான்…” என்ற நிலையில் அந்த அருள் ஒளியைத் தான் நாம் பெறச் செய்ய வேண்டும்.
ஒருவனை அடிமையாக்க வேண்டும் என்று அகம் கொண்டு… துர்மார்க்க வழியில் அடித்து அவனைக் கைவல்யப்படுத்தி இன்னொருவர் மீது பாய்ச்சி அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் தான் இன்றைய உலகில் வந்து கொண்டிருக்கின்றது.
கடந்த கால நிலைகளில் மந்திர ஒலிகள் கொண்டிருந்தாலும்… உலோக உணர்வுகளை அறியச் செய்தாலும் அதனின் வளர்ச்சியில் அணுக் கதிரியக்கங்களையும் கண்டு கொண்ட பின் “இன்று மீண்டும்” ஆவியின் நிலைகளே தொடர்பு கொள்கின்றது.
அரச உணர்வு பெற்று விஞ்ஞான அறிவு கொண்டாலும் பேயாசை கொண்டு ராட்சச உணர்வு கொண்டு… மனிதன் தான் பெற வேண்டும் என்ற கௌரவ உணர்வு கொண்டு “நான்” என்ற நிலை உருவாக்கப்பட்டு அழித்திடும் உணர்வாகப் பெருகி… மனிதனே அசுரனாக மாறிடும் நிலையாக ஒருவரை ஒருவர் கொன்று புசித்து… அதை ரசித்திடும் நிலைகள் தான் இன்றைய உலகில் பெருகிக் கொண்டுள்ளது.
இது போன்ற உணர்வுகள் நமக்குள் சேர்ந்தாலும் “நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை அடக்கிடல் வேண்டும்…”
நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வைப் பெருக்கி… நம் மூச்சும் பேச்சும் உலக மக்களை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் அதில் அமிழ்ந்திருக்கும் அத்தகைய நிலையில் இருந்து அவர்களை விடுபடச் செய்யும் அருள் சக்தியைப் பெற நாம் தியானிப்போம்.
அனைவருடைய நிலைகளிலும் இருள் நீங்கி… மெய்ப் பொருள் என்ற தேவாதி தேவர்கள் என்ற மனித உரு பெற்ற நிலையினை… அருள் ஒளியின் உணர்வாக மாற்றிடும் நிலைபெறச் செய்வோம்… அருள் ஒளிச் சுடராகப் பெருக்குவோம்.
1.யாம் (ஞானகுரு) உபதேசித்த ஒலி நாடாக்களை ஆங்காங்கே வெளிப்படுத்தி
2.அதன் வழி நீங்கள் தியானியுங்கள்… உங்களுக்குள் இதை மனப்பாடமும் செய்து கொள்ளுங்கள்.
3..உபதேச ஒலி நாடாக்களைப் போட்டு அடிக்கடி அதைக் கேட்டுப் பதிவாக்குங்கள்… அனைவரையும் கேட்கச் செய்யுங்கள்.
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகளை உந்தச் செய்து நினைவை விண்ணிலே செலுத்தி
5.அருள் ஒளியின் உணர்வை உருவாக்கும் உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யுங்கள்.
அறியாது ஆட்டிப் படைக்கும் அசுர உணர்வுகளிலிருந்து உலக மக்களை மீளச் செய்யுங்கள்… அருள் ஞான சக்தியை ஊட்டச் செய்யுங்கள்.
தேவாதி தேவர் என்ற சர்வ வல்லமை பெற்ற அவர்கள் உடலில் நன்மையை ஊட்டும் அருள் ஒளியின் உணர்வை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கச் செய்யுங்கள்.
ஆகவே குறுகிய காலமே இந்த உடலில் வாழும் நாம் அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்திடல் வேண்டும்.
1.மற்றவரிடத்திலிருந்து வரும் தீமைகளை நுகர்ந்தாலும் அதை நாம் அருள் ஒளியாக மாற்றிடும் உணர்வாகப் பெற முடியும்
2.அருள் வழி வாழ்வோம் அனைவரும் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!
கண்டார் விண்டதில்லை… விண்டார் கண்டதில்லை…! இதன் பொருள் என்ன…?
கண்டார்..! என்பதற்கு…
1.இந்த உலகின் உண்மை ஞானத்தைக் கண்டவர்கள் விண்டு…
2.வீண் விரய நிலையில் புரளிகளாக எந்த உண்மையையும் சொல்ல மாட்டார்.
விண்டார் கண்டதில்லை… என்பதன் பொருள்
1.விண்டவன் தன் எண்ணத்தில் ஏற்றிக் கொண்ட செயலைத்தான் விண்டு புகட்டுகின்றான்.
2.இவன் கண்டது எவற்றை…?
3.ஞானப் போர்வையைப் புகழ்படுத்திக் காண்பவன் விண்டு உணர்த்தும் நிலையாகத் தான் அது இருக்கும்.
ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!
ஆக…
1.தன் ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் தியானம் வேண்டும்..
2.தியானம் பெற ஞானம் வேண்டும்.
ஞானம் என்பது மனிதனுக்கு எப்படி வளருகின்றது..?
பல குண நிலையில் வாழும் மனிதன்
1.தன் எண்ண கதியிலேயே… தன் குணமுடனே…
2.ஞானம் பெறல் வேண்டும் என்றால் எந்த ஞானமும் வளராது.
3.பல குணங்களுடன் உள்ளவனால் தியானத்தின் செயல் முறைக்கே வர முடியாது.
தியானம் என்பது… மனிதனின் குணத்தைச் சமமான சாந்த நிலை பெற்ற பிறகு
1.சாந்தத்தினால் இவ்வெண்ணத்தை ஓ…ம் என்ற நாதமுடன் எடுக்கும் முறைப்படுத்தி
2.தன் கவன நிலையை அதன் வழி செலுத்தும் பொழுது தான் ஞானம் பிறக்கின்றது.
மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் இப்படியெல்லாம் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்வது இயற்கையே.
இருந்தாலும்… அந்த இயற்கையின் கதியில்… அதே வேகத்தில்… நம் எண்ணத்தைப் பாய்ச்சி விட்டால் வளரும் நிலையற்று அழிக்கும் நிலைக்குச் செல்கின்றான் மனிதன்.
நம் ஆடையில் ஏற்படும் கறையை…
1.எப்படி அகற்றினால் அது போகும் என்று “பாங்காக…” (பக்குவமாக)
2.மற்ற இடத்தில் கறைபடியாமல்…
3.படிந்த இந்தக் கறையைப் போக்க நம் செயல்கள் இருந்தால்…
4.துணி பாழ்படாமல் சுத்தமாக அகற்றி விடலாம்.
கறை படிந்து விட்டதே…! என்று சலிப்புப் பட்டு அதை அடித்துத் தோய்த்துச் செயல்பட்டால் அந்தக் கறையும் போகாது… துணி தான் நைந்து போகும்.
மின்சாரத்தைப் பாய்ச்சி ஒளியைக் காண்கின்றோம். எந்த அளவு விகிதம் செலுத்தப்படுகின்றதோ அதற்குகந்த வெளிச்சத்தைத் தான் அந்த மின் ஒளி ஏற்றித் தருகின்றது.
அதைப் போல்… இவ்வெண்ணத்தை எந்த ஒரு செயல்முறைக்கும்
1.சாந்தமாக ஞானத்தைக் கொண்டு ஆராய்ந்து செயல்பட்டால்
2.வாழ்க்கையில் ஏற்படும் குறைகளுக்கு வழி முறை அமைத்துக் கொள்ளலாம்.
சலிப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் கோபமும் அழுகையும் தான் ஏற்படும்.
எந்த ஒரு சூழ்நிலையானாலும்…
1.எண்ணத்தால் ஞானத்தைப் பாய்ச்சி அதிலுள்ள சிக்கலை அகற்றிவிட்டால் சாந்தமான சமநிலை பெற முடியும்
2.மேன்மேலும் நம் எண்ணத்தின் சாந்த நிலை கூடக் கூட… நம் எண்ணமே சாந்தமாகி
3.ஞானத்தால் எடுக்கும் வழித் தொடருக்குச் “சக்தி நிலை கூடுகிறது…”
“சாந்தமான நிலை பெற” ஞானத்தால் நம் வாழ்க்கையை வழிப்படுத்திக் கொண்டோமானால் தான்… நாம் எடுக்கும் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொள்ள முடியும்.
எந்த ஒரு சிக்கலுக்கும் எண்ணத்தைத் தெளிவுபடுத்தும் ஆத்மாவினால்… சாந்த நிலை பெறுவது என்பது கடினமல்ல.
1.பல சிக்கல்கள் வந்தாலும்…
2.தன் எண்ணத்தைக் கொண்டு அவர்கள் தெளிவு ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.
ஆனாலும் அவர்களின் குண அமிலத்தில் அவர்கள் வளர்த்துக் கொண்ட “அவர்களுக்குச் சொந்தமான வளர்ச்சி நிலை தான்…” மேலோங்கி நிற்கும்.
எண்ணத்தைச் சாந்தப்படுத்தி சமநிலை பெறும் ஆத்மாவினால் நிச்சயம் ஞான ஒளி ஈர்ப்பின் வழியில் செல்ல முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் அதில் உள்ள சத்துகள் எல்லாம் நம் உடலிலே முதலில் அமிலமாகத்தான் மாறும்.
விஷத்தன்மை கொண்ட நம் பித்த சுரபி…
1.அதனுடைய சுரப்புக்குத் தக்கவாறு சாப்பிடும் ஆகாரத்திற்குள் கலந்து
2.அந்த அமிலத்தன்மையை குளுக்கோஸாக மாற்றுகிறது.
குளுக்கோசாக மாற்றி வரப்படும் பொழுது இரத்தங்களிலே இருக்கக்கூடிய செல்கள்
1.இந்த உணர்வின் தன்மையைச் சுழலச் செய்து சுழலச் செய்து
2.அதைச் சிவப்பணுக்களாக மாற்றி விடுகின்றது.
அப்படி மாற்றும் தன்மை அங்கே இல்லை என்றால் விஷத்தின் தன்மையால் அந்தக் குளுக்கோஸ் சர்க்கரையாக மாற்றி விடுகின்றது. இப்படி அந்தக் குளுக்கோஸ் அதிகமானால் சர்க்கரைச் சத்து இரத்தத்திலே அதிகமாகிவிடும்.
காரணம்… அடிக்கடி வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அல்லது வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது அல்லது வேதனையான உணர்வுகளை எடுக்கும் போது உடலில் விஷத் தன்மைகள் அதிகமாகிறது.
உதாரணமாக ஒருவர் செய்யும் தவறான செயலைப் பார்த்து நம்மால் அதைத் தாங்க முடியவில்லை என்றால் சோர்வான உணர்வைத்தான் நுகர்கின்றோம். அதை நுகரப்படும் பொழுது கோபமான உணர்வுகளைக் கலந்து நாம் சுவாசிக்க நேருகின்றது.
இது நமக்குள் கூடியபின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டு குளுக்கோஸை சிவப்பணுக்களாக மாற்றும் தன்மைக்கு மாறாக இதனுடைய உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பு நோயாக மாறும்.
1.சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கு ரொம்பச் சீக்கிரம் இந்த இரத்தக் கொதிப்பும் வரும்.
2.காரணம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப (சோர்வு வேதனை கோபம்) அணுக்களின் தன்மை வீரியம் அடைகின்றது.
வைத்திய ரீதியில் எடுத்துக் கொண்டாலும் கூட இரத்தத்தைப் பரிசோதித்துத் தான் இரத்தக் கொதிப்பு இருக்கிறது… சர்க்கரைச் சத்து இருக்கின்றது என்பார்கள்.
அதே சமயத்தில் இந்த இரண்டும் மோதும் பொழுது சலிப்புத் தன்மை அடைந்து பிரிக்கப்படும் பொழுது… ஆஸ்த்மா போன்ற சளித் தன்மையும் அதிகமாகின்றது.
சர்க்கரை அதிகமாகும் போது சளி உருவாகி எல்லா இடத்திலும் அது உறைந்து அந்த அமிலங்கள் மாறுகின்றது. உடலுக்குள் ஒவ்வொன்றையும் இப்படி மாற்றுகின்றது.
சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு உப்புச் சத்து மூச்சுத் திணறல் இது எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது தான்…!
பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ காலமாகப் பல சரீரங்கள் பெற்று இன்று மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும்…
1.நாம் இன்று சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மூலம் உடலில் அணுத் தன்மைகள் மாறி
2.கடைசியில் வேதனை என்ற உணர்வே மிஞ்சுகின்றது…
3.மனிதனின் ரூபத்தையே மாற்றும் தன்மைக்கு வந்து விடுகின்றது.
இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும் என்பதற்குத் தான் அருள் உணர்வுகளை உபதேசமாக்கக் கொடுக்கின்றோம்.


கொடிய நஞ்சினையும் கொடிய நோயையும் ஒடுங்கச் செய்யும் துருவனின் அருள் ஆற்றல்கள் – ஒரு பயிற்சி
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று
1.சர்வ நோய்களும் நீக்கிடும் அருள் ஒளி எங்களுக்குள் பெருகி இருளை அகற்றி
2.எங்கள் பேச்சு மூச்சும் சர்வ நோய்களை நீக்கிடும் அருள் சக்தி பெற்று
3.அனைவரையும் ஆனந்தப்படச் செய்யும் அருள் ஒளி எங்களுக்குள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
வேதனையான உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்தால் கண்களில் படும் போது கண் ஒளி மங்கும். உற்றுப் பார்த்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் கலந்து வரப்படும் போது கிட்னி அந்த விஷத்தின் தன்மையால் பாதிக்கப்படுகின்றது.
விஷம் கலந்த அந்த இரத்தம் இருதய வாயில் செல்லும் பொழுது அங்கே அடைப்புகள் போன்ற துன்பங்களை ஏற்படுத்தும். அந்த விஷம் கலந்த இரத்தம் நுரையீரல் கல்லீரல் போன்ற உறுப்புகளில் படரப்படும் போது இந்த விஷத்தின் தன்மையால் அதனை இயக்கும் நல்ல உணர்வுகள் நல்ல அணுக்கள் மடிகின்றது. பின் அதிலே கடும் நோயாக உருவாகும்.
இதைப் போன்ற ஏற்படும் தீமைகளிலிருந்து மீள…
1.நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடலில் எங்கே நோவு காணுகின்றதோ
2.“அந்தப் பகுதிக்கு”
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று உணர்ச்சிகளை
4.”அங்கே” உந்தச் செய்யுங்கள்… அருள் உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.
5.நஞ்சு கொண்ட அந்த உணர்வின் தன்மையை ஒடுங்கச் செய்யுங்கள்.
அருள் மகரிஷிகளின் உணர்வை உங்கள் உடலில் பரவச் செய்து… தீமை செய்யும் அணுக்களைத் தணியச் செய்யுங்கள்.
துருவன் காட்டிற்குள் செல்லும் பொழுது “அவனைக் கண்டு” மற்ற கொடூர உணர்வுகளும் மிருகங்களும் விஷம் கொண்ட விஷ ஜெந்துக்களும்
1.அதனுடைய விஷத்தை முறித்து எப்படிப் பதும்பி இருந்ததோ இதைப்போல
2.அந்தத் துருவனின் உணர்வுகளை துருவ மகரிஷியான உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.”அகஸ்தியன்… துருவன்… துருவ நட்சத்திரம்…” என்ற இந்த மூன்றையும் உங்கள் உணர்வுக்குள் கலக்கச் செய்து
4.உங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்கச் செய்யுங்கள்.
அப்போது…
1.ஒடுங்கும் தன்மை கொண்டு “உங்களிடம் அடங்கி”
2.உங்களில் மன மகிழ்ச்சியை ஓங்கச் செய்யும்
3.அருள் ஒளியின் உணர்வின் தன்மை பெறச் செய்யும்… அருளானந்தம் பெறச் செய்யும்.
ஆகவே… அருள் ஞானத்தை வளர்த்திடும் அந்த அருள் ஞானத்தைப் பெற அகஸ்தியனுடைய உணர்வுகளையும் துருவனின் உணர்வுகளையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற எண்ணத்தில்
1.எங்கே வலி என்ற உணர்ச்சிகளை உந்துகின்றதோ
2.”அவ்விடத்தில்” அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளைப் பாய்ச்சுங்கள்.
அந்த வலியைத் தணியச் செய்யுங்கள் இருளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்.
சந்தர்ப்பத்தால் உங்களை அறியாது எண்ணத்தால் நுகர்ந்த உணர்வுகள்… நஞ்சின் உணர்வு கொண்டு… உடலுக்குள் தேங்கியிருக்கும் இடத்தில் வேதனையக் கொடுக்கும்.
அதே எண்ணத்தால்… உங்கள் உடலில் எங்கே நோவு வருகின்றதோ அந்த இடத்திலே அகஸ்தியன் துருவன் துருவ நட்சத்திரம் என்ற இந்த மூன்று உணர்வுகளையும் உங்கள் நினவாற்றல் கொண்டு பாய்ச்சுங்கள்.
அதனுடைய வீரியத்தைத் தணித்துப் பழகுங்கள்…! அருள் ஒளியைப் பெருக்குங்கள். இப்போது உங்கள் உடலில் அருள் ஒளி படர்ந்து
1.உடலில் எத்தகைய பிணி இருக்கின்றதோ அது ஒடுங்கும்…
2.ஒடுங்கும் உணர்ச்சிகளை நீங்கள் உணரலாம்… அதை ஒடுக்கச் செய்யுங்கள்
அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்து அதை ஒடுங்கச் செய்யுங்கள். உங்களால் முடியும்…!

தியானத்தில் நாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலை”
எண்ணத்தைக் கொண்டு தான் உணர்வை அறிகின்றோம். உணர்வைக் கொண்டு தான் எண்ணம் செயல்படுகின்றது.
இவ்வெண்ணமும் உணர்வும் இயங்க… இந்தப் பன்னிரெண்டு வகை குண அமிலங்களின் நிலையினால்
1.எண்ணத்தைக் கொண்டு உணர்வும்…
2.உணர்வைக் கொண்டு எண்ணமும்… இயங்கி வாழும் ஜீவாத்மாக்கள் எல்லாம்
3.இக்குண அமிலத்தையே ஒருநிலைப்படுத்தி எண்ணத்தைச் செயல்படுத்த வழி பெற்றால் தான்
4.இஜ்ஜீவ உடலுக்குள் உள்ள காந்த மின் அலையின் ஈர்ப்பை அதிகமாகச் சேமிக்க முடியும்.
காற்றிலும்… நீரிலும்… ஒளியிலும்… இக்காந்த மின் அலையின் சக்தி இருப்பதனால் தான் பூமியின் ஜீவித சக்தியே சுழன்று ஓடுகின்றது.
மின்சாரம் காண… “இச்சக்தி அலையை அதிகமாகக் குவித்து” அதனை ஒளியாக்கித் தருகின்றனர் செயலுக்குகந்தபடி எல்லாம். அதே காந்த மின் அலையின் சக்தி தான் ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் உள்ளது.
நம் ஜீவ உடலுக்குள் உள்ள மின் அலையைக் காட்டிலும் மின் அலையைக் குவித்து மின்சாரமாகச் செயலாக்க அந்தக் காந்த மின் அலை உடலில் ஏறும் பொழுது (CURRENT SHOCK) அந்த ஜீவ உடலில் உள்ள அலையையும் எடுத்துக் கொண்டு உடலை ஜீவனற்றதாக்கி விடுகின்றது.
காந்த மின் அலை இல்லாவிட்டால் ஜீவத் துடிப்பே இல்லை.
எந்த வீரிய சக்தி கொண்ட மின் அலையும் உலர்ந்த மரத்திலும் ஜீவ சக்தியைப் பிரித்துப் பல உஷ்ணங்களை ஏற்றி வடிவமைத்த கண்ணாடிகளிலும் பாய்வதில்லை.
இதுவே சிறிது ஈரச்சத்து அதிலிருந்தாலும் உடனே அம்மின் அலை பாய்கிறது. இம்மின் அலையின் சக்தி எல்லா ஜீவ சக்தியிலும் அதனதன் வளர்ச்சிக்கொப்பக் கூடியும் குறைந்தும் உள்ளது.
1.இம்மின் அலையை எடுக்கும் முறையைக் கொண்டு
2.நம் எண்ணத்தை ஞானத்தில் செலுத்தினால் தான்
3.ஞானத்தின் ஈர்ப்பு நமக்கு ஜீவ சக்தியின் சுவாச அலையில் தாக்கி
4.சுவாச அலையினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்டெல்லாம் நம் உயிரணுவுடன் மோதி
5.நாம் எடுக்க வேண்டிய ஞான சக்தியின் ஒளி காந்த மின் அலையை
6.நம் ஜீவ உயிரும் இந்த உடலின் பல கோடி அணுக்களும் எடுக்க முடியும். (இது முக்கியமானது)
இதன் தொடர்ச்சியை மேன்மேலும் கூட்டிச் செயல்பட்டு இந்த உடல் என்ற கூட்டை அழியா உடலாகக் காயகல்பத்தை உண்டு தான் போகனும்… கொங்கணவனும்… இவர்களின் நிலையை ஒத்த பலரும் செயல்பட்டனர்.
இச்சக்தி மின் அலையைப் பெறவே சித்து நிலை பெற்ற சப்தரிஷிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் சென்ற வழி முறையின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் இருந்தாலும்
1.அவ்வழித் தொடர் ஞானத்தில் சுழன்ற பிறகு ஒரே நிலையில் தான்
2.”ஒரே நிலையில் தான்” என்பது ஒரு நிலையான காந்த மின் அலையின் தொடர்ச்சியுடன் தான் கலந்தார்கள்.
ஆண்டவனின் சக்தியை ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…! என்றும் அவ்வாண்டவனுடன் கலப்பதற்கு ஜோதி நிலை கண்டால் அச்சக்தியைப் பெறலாம் என்றும் அன்று உணர்த்தினார்கள்.
அஜ்ஜோதி நிலை பெறும் வழித் தொடர் என்னப்பா…? ஜோதி நிலை பெற்று விட்டால் ஆண்டவனாகி ஆண்டவனுடன் கலந்து நின்று முற்றுப் பெறுவதுவா…?
ஆண்டவனின் சக்தி ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் இக்காந்த மின் அலையின் சக்தியுண்டு. ஆனால் அச்சக்தியை உணர்ந்து நம் ஜீவாத்மா உயிர்ச் சக்தியை நாம் எடுக்கும் எண்ண ஜெபத்தால் கூட்டி இந்த உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் (பன்னிரெண்டு குண அமிலங்களும்) அச்சக்தி அணுவை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.
ஆனால் நம்முள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தை அதனதன் குணத்தின் செயலுக்கே நம் உணர்வையும் எண்ணத்தையும் செலுத்தினோம் ஆனால் இதே சுழற்சி வட்ட வாழ்க்கையில் தான் சுழல முடியுமே அன்றி பூமியின் ஈர்ப்பிலிருந்து மீளும் வழி இல்லை.
ஆக.. இந்த உலக ஆத்மாக்களின் குன்றிய எண்ணச் சுழற்சி பேராசை வாழ்க்கையில் தன்னையே மரித்துக் கொள்வதோடு அல்லாமல்…
1.மெய் ஞானத்தை உணர்த்தி உலகாயும் ஒளியாயும் நீராயும் காற்றாயும் நாம் வாழ வழி அமைத்த சப்தரிஷிகளின் சக்திக்கே…
2.தன்னை வளர்த்துப் படைத்த சக்திக்கே… ஊறு விளைவிக்கின்றான் இன்றைய மனிதன்.
தன் ஞானத்தை இக்காந்த மின் அலையின் ஈர்ப்பைப் பெற வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முடியும். ஆனால் ஞானத்தை வளர்க்கவும் செயலாற்றவும் முடியாத இயற்கையிலே பல சக்திகளை அறிந்த மிருக ஜெந்துக்களுக்கு நமக்குள்ள (மனிதன்) சந்தர்ப்பம் இல்லை.
ஆனால்….
1.நம்மில் நாம் எந்த ஆண்டவனைக் காணத் துடிக்கின்றோமோ
2.அவ்வாண்டவனால் நமக்குள் பல சக்தி அலைகளை படைக்கப் பெற்று வழி வந்த நாம்
3.நம் நிலையை உணராமல் இன்று வாழ்கின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக நாம் வேதனைப்படுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். உயிரால் நுகரப்பட்டு அந்த உணர்வுகள் ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. என்று நம் உடலாக (அணுக்களாக) உருவாகின்றது.
1.ஆனால் அந்த வேதனை என்ற உணர்வு அணுவாக (உடலாக) ஆவதற்கு முன்
2.வேதனையை நுகர்ந்த அடுத்த கணமே அதற்கு ஜீவன் கொடுக்காதபடி அணு உருவாகாதபடி தடுக்க வேண்டும்.
ஏனென்றால் வேதனைப்படுகிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த உணர்வின் தன்மை இரத்தத்தில் கருவாகி விடுகின்றது.
அப்படிக் கருவாகி “ஒரு 48 நாட்கள்” ஆனால் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும்போது வேதனை உருவாக்கும் அணுவாக உருவாகின்றது.
1.எந்த உறுப்பில் அது ஒட்டிக் கொள்கின்றதோ அங்கே அந்த அணு ஜீவன் பெற்ற நிலையில்
2.அதே இரத்தத்தின் வழியாகத்தான் தன் ஆகாரத்தை (வேதனையை) எடுக்கும்.
பூமியில் விளையும் ஒவ்வொரு தாவர இனச் சத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.
ஒரு செடியில் விளைந்த வித்தை மண்ணிலே ஊனறினோம் என்றால் காற்றுடன் காற்றாகக் கலந்து வரும் சூரியன் கவர்ந்து வைத்துள்ள தன் இனமான உணர்வினை அது பிரித்தெடுத்துத் தான் அந்தச் செடி மீண்டும் விளையும்.
இன்று டி.வி. ரேடியோக்களில் ஒளி ஒலி அலைகளாக எண்ணிலடங்காத ஒளிபரப்புகளைச் செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் சாதனத்தை வைத்து
1.அந்தந்த அலை வரிசைகளில் வருவதைத் திருப்பி நமக்கு வேண்டிய ஸ்டேஷனை வைத்தால்
2.அதை மட்டும் கவர்ந்து நாம் பார்க்கின்றோம் அல்லது கேட்கின்றோம்
3.மற்ற அலைகள் வந்தாலும் அதைக் கவர்வதில்லை.
இதைப் போன்று தான் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது… அதை அந்த அணுக்கள் இழுத்தே கவர்கின்றது.
அதாவது…
1.எந்த எண்ணத்தை நாம் கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மையாக
2.நமக்குள் ஒரு கரு முட்டையாக உருவாகின்றது.
3.இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகத்தில் இது இணைந்து விடுகின்றதோ
4.அதனின் பருவமாகும் போது முட்டை வெடித்து அணுவாக மாறுகின்றது… கூட்டை விட்டு வெளியே வந்து விடுகின்றது.
உதாரணமாக நத்தை ஓட்டுடன் ஒட்டி இருந்து பாதுகாப்பாக இருப்பது போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் அணுக்கரு உடலின் உறுப்போடு ஒட்டி
2.எந்த உணர்வின் சத்தை அதை எடுத்ததோ இரத்தத்தில் வருவதை உறிஞ்சி
3.உணவாக எடுத்து வளர்ந்து தன் இனத்தைப் பெருக்கும்.
அந்த அணுவின் (வேதனை) மலம் தசையாகி உறுப்புகளில் சேர்க்கும் பொழுது ஏற்கனவே உருவான நல்ல அணுக்களால் உருவான உறுப்பைச் செயலிழக்கச் செய்யும்.
முதலில் உறுப்புகள் அழகாக இருக்கும். இந்த வேதனை என்ற உணர்வுகள் சேர்ந்து அதனின் அணு வெடித்து நுரையீரலிலோ அல்லது கல்லீரலிலோ இது போன்ற அணுக்கள் தேங்கி விட்டால் விஷத்தின் தன்மை பாய்ந்து விடும். பின் அந்த உறுப்புகளில் எல்லாம் வலி எடுக்க ஆரம்பிக்கும்.
இரத்தங்களை உடல் முழுவதும் பிரித்து அனுப்பும் இருதயத்தில் இது போன்ற வேதனை அணுக்கள் உருவானால் அது இரத்தம் போகும் பாதையே அடைத்துவிடும் (ஹார்ட் அட்டாக்).
நம் இதயத்தில் இயற்கையாகவே மூன்று பிரிவுகள் வழியாக இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது. மேலே சொன்ன வேதனையான அணுக்கள் இதயத்தில் உருவானால் அடைப்பாகி… இரண்டு பாதை வழியாகப் போகும். அதிலும் அடைப்பானால் ஒன்றின் வழியாகப் போகும்.
ஒன்றின் வழியாகப் போகும் போது திணறலாகும். அதுவும் அடைபட்டால் நின்றுவிடும்.
இது எல்லாம் நாம் சந்தர்ப்பத்தால் எடுக்கும் எண்ணங்கள் உணர்வுகளுக்குத் தக்க நம் உடலில் அணுக்கள் உருவாகி அதனால் ஏற்படும் விளைவுகள்.
இதை மாற்ற வேண்டும் என்றால்…
1.நம் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
2.ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
3.தீமையான அணுக்கள் உடலுக்குள் உருவாகாத வண்ணம் தடைப்படுத்தியே ஆக வேண்டும்.


உதயம்
உயிரின் உண்மை நிலை எங்கிருக்கின்றது…? உயிரின் துடிப்பு துடிப்பதற்குச் சுவாச நிலை வேண்டுமப்பா. உயிர் எப்படிச் சுவாச நிலையில் உள்ளதோ அந்தத் தன்மைதான் இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருள்களும்.
1.”நட்ட கல் பேசுமோ.. நாதன் உள் இருக்கையில்…!” என்று படித்திருந்தாலும்
2.அக்கல்லுக்கும் மண்ணிற்கும் உயிர்த் துடிப்பு உள்ளது.
எப்படி மனிதன் சுவாசத்தில் உயிர்த் துடிப்பு உள்ளதோ அதுபோல்தான் மண்ணிற்கும் கல்லிற்கும் மடுவிற்கும் மலைக்கும் பூமியில் இருந்து எடுத்திடும் திரவத் தன்மையில் உள்ள நீர் மற்ற திரவங்களுக்கும் உலோகங்களுக்கும் எல்லா இயற்கைத் தன்மையுள்ள மரம் செடி ஜீவராசிகள் எல்லாவற்றுக்குமே உயிர்த் துடிப்பு உள்ளதப்பா.
அடுப்பு எரிந்து ஆவி செல்லும் பொழுது அந்நிலையிலும் உயிர்த் துடிப்பு உள்ளதப்பா. உயிர்த் துடிப்பு என்பது ஜீவ அணுக்கள்தான்.
1.அவ்வணுக்களின் தன்மையிலே சூரியனின் ஒளியை ஈர்த்து
2.இயற்கைத் தன்மையினால் வந்த எல்லாமே
3.மனிதன் எப்படிச் சுவாச நிலையை இழுத்து விடுகின்றானோ
4.அந்நிலையில்தான் எல்லாமே சுவாச நிலையில் உள்ளதப்பா.
உலோகங்களின் தன்மையெல்லாம் எந்நிலையில் வந்ததப்பா…?
மண்ணில் இருந்து காந்தத்தையும் செம்பு வெள்ளி என்ற பதம் பிரித்தும் நிலக்கரியையும் எப்படி எடுக்கின்றான்..? நிலக்கரிக்கு இவன் சொல்லும் காரணங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலத்துடன் படிந்த (மடிந்த) மரங்கள்தான் நிலக்கரி ஆகிவிட்டது என்று.
அந்த நிலை இல்லையப்பா…!
அந்நிலையில் உள்ள மண்ணின் உயிரணுவின் ஈர்ப்புத் தன்மையினால் அச்சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மண்ணில் தாக்கும் பொழுது அந்நிலையில் உள்ள உயிரணுக்களை அம்மண் ஈர்க்கின்றது.
பல கோடி ஆண்டுகளாக ஈர்த்ததன் விளைவால் நிலக்கரிப் படிவங்கள் அந்நிலையில் உள்ளதப்பா. அப்படிவங்கள் தன்மையில் இயற்கை அப்படியே இருந்து விட்டால் அந்நிலையில் அப்படியே இருந்தால்
1.அந்நிலையில் வளரும் மண் வளங்கள் தாவரங்களின் நிலையில் பெரும் பூரிப்பை அடைந்திருக்கலாம்.
2.அங்கே வளரும் பயிர்கள் பெரும் அமிழ்தமாக இருந்திருக்கும்.
இயற்கையின் தன்மையை உணர்ந்திடாமல் இச்செயற்கை ஆவலின் உந்தலில் மனிதன் வைத்த வினையப்பா… “சுரங்கம் வெட்டுவதெல்லாம்…!”
உன் அறிவிற்கே விடுகின்றேன். இப்பொழுது நிலக்கரி எடுக்கும் இடத்தில் எல்லாம் தாவரங்கள் நிலை அன்று எப்படி இருந்தது…? என்று எண்ணிப்பார்…! நெய்வேலியில் விளைந்த பழங்கள் பலா முந்திரி ருசியின் தன்மை அன்று எப்படி இருந்தது…! இன்று எப்படி உள்ளது…?
சோலைவனத்தை அழிக்கின்றான். பூமியில் உள்ள உலோகத்தை எல்லாம் தோண்டி எடுக்கின்றான்.
1.அவ்வுலோகத்தின் தன்மையிலே மின்சாரம் எடுத்து பூமியைச் சோலையாக்குகின்றானாம்.
2.சுற்றுகின்றான் பார்த்தாயா…… உலகம் போலவே மனிதனும்…!
உலோகத் தன்மையெல்லாம் அந்தந்த இடத்திற்குத் தகுந்த மண் சுவையில் படிவதுதான். தங்கச் சுரங்கம் என்கிறான்.
1.அந்தத் தங்கச் சுரங்கம் உள்ள பூமியில் வளரும் பயிர் அதனுடைய ருசியில்தான் இருந்திடும்.
2.இப்பூமியின் தன்மையிலே இம்மனிதனுக்கு அறிவில் வராத பொக்கிஷங்கள் பல உள்ளன.
3.அப்படிவங்கள் உள்ள நிலையில் தான் அந்நிலையில் வளரும் பயிர்களும் அதனுடைய ருசியும்…! சொல்வது அர்த்தமாகின்றதா…?
மனிதன் சொல்கின்றான் அந்தந்த ஊரில் உள்ள தட்ப வெப்ப நிலை என்று…! அது அல்ல…! இந்த மெய் ஞானப் பாடத்தின் தொடரைச் சிறிதளவு புகட்டிவிட்டால்
1.உன் உதய எண்ணம் அதில் எப்படிச் செல்கின்றது…?
2.அந்நிலையையே ஈர்த்துக் கொள்…! “உதயம்…” கிடைத்து விட்டால் உண்மை நிலை எல்லாம் புரிந்துவிடும்.
ஆகவே தியானம் எடுப்பதெல்லாம் உன்னுள் இருக்கும் அணு உன்னுள் சுற்றிக் கொண்டே இருக்கும் பொழுது உன் நிலையில் கவன ஈர்ப்பு மண்டலத்தின் (புருவ மத்தியில்) தன்மையில் பாய்கிறது.
1.உன் சுவாச நிலையை அங்கே ஒரு நிலைப்படுத்திடும் போது
2.அந்நிலையில் நீ எண்ணும் எண்ணத்திற்கு உதயம் கிடைத்துவிடுகின்றது.
3.உன் வழியில் உண்மை நிலைகள் உணரும் தன்மை உன் உயிரணுவிற்கு
4.அவ்வொளியின் கதிர்கள் ஒளிக்கற்றைகள் அதீதமாகப் பாய்கின்றது.
தியான நிலையின் முறை புரிந்ததா…?
ஒருநிலைப்படுத்தி உன்னுள் இருக்கும் எண்ணத்தில் ஒன்றல்ல இரண்டல்ல உன் பிறப்பிலிருந்து இன்று வரை உன் ஞாபகத்தில் எப்படி வருகின்றது…?
சிறு குழந்தையில் வளர்ந்த நிலையும் படிப்படியாக உனக்குள் வளர்ந்த நிலைகளும் உனக்கு எப்படிப் புரிகின்றதோ… மூளையில் சுற்றி வைத்திருக்கின்றாயோ… அந்நிலைகளை எல்லாம் ஒரு சிறிதளவு சொல்லு பார்க்கலாம்…!
அந்த எண்ணம் உன் எண்ணத்தில் இருப்பதைப் புரிந்து தான் மிக முக்கியமான பாடத்தில் வந்து நிறுத்தி இருக்கின்றேன் “உன் உதயத்திற்கு…”
சுவாச நிலைகள் நாம் இடும் எந்த எண்ண அலைகள்… நாம் வெளிவிடும் சுவாசத்தைக் கொண்டு தான் சிறு குழந்தையில் நீ செய்த ஒரு வேலை உன் ஞாபகத்துக்கு இப்பொழுது வருகிறது.
அவ்வேலை செய்யும் போது நீ விடும் சுவாசம் உன்னைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமான ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அன்று நடந்த நேரம் தேதி இருந்த ஆட்கள் எல்லாம் நினைவுகளும் எப்படி இப்பொழுது நினைவிற்கு வருகிறது…?
1.அன்று நீ விட்ட சுவாச நிலையில் உள்ள அழுத்தத்தில் தங்கி விடுகிறது அந்நிலையெல்லாம்
2.உன்னுள் இருக்கும் அணுவின் சுழற்சியும் நீ விடும் சுவாசத்தில் உன்னுள்ளே நான் சுற்றிக் கொண்டே இருக்கிறது… உன் எண்ண அலைகள்.
நீ நினைக்கிறாய் உன்னைச் சுற்றி இருப்பது இப்பொழுது இருக்கும் பிறவி கொண்டு தான் என்று. இல்லையப்பா… உன் முதல் பிறவியில் நீ வெளியிட்ட எண்ண மூச்சலைகள் எல்லாமே உன்னைச் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது.
இப்பிறவி மட்டும்தான் இப்பிறவி அணுக்களுடன் கலந்திருப்பதால் இப்பிறவியில் விட்ட சுவாசங்கள் அவ்வணுக்களில் கலந்துள்ளன. உன் நினைவோட்டத்தில் இப்பிறவியில் நடந்ததைத் தெரிந்து கொள்கிறாய்.
1.இந்த ஜெப அலையின் தன்மையில் உன்னைச் சுற்றி உள்ள அணுக்களில்
2.உன் முன் ஜென்மங்களையும் தெரிந்திடலாம்…! பாட நிலை புரிந்ததா…?

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
உங்கள் நினைவினைச் சப்தரிஷி மண்டலங்களின் பால் செலுத்துங்கள்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் அக்காலத்தில் சென்ற
2.அனைவரது அருள் உணர்வுகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது.
3.உங்களுக்குள் இருக்கும் முப்பத்து முக்கோடி அணுக்கள்… அதன் முழுமைகளை… அதனதன் இயக்கமாக இருக்கும் நிலையை
4.அவர்கள் அருள் ஒளிச் சுடராக மாற்றிய அருள் ஒளியின் தன்மையை
5.முப்பத்து முக்கோடி அணுக்களின் திறன்களையும் “ஒளியின் உணர்வாக மாற்றிட்ட அந்த அருள் ஒளியை”
6.உங்களுக்குள் அருள் ஒளி பெறும் அணுக்களாக மாற்றும் நிலையாக சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வினை ஒன்றிடச் செய்யுங்கள்.
7.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வாழ்ந்திட ஓர் இருப்பிடமாக இதனை நாம் செயல்படுத்துவோம்.
சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
1.எங்கள் உடலில் உள்ள சர்வ அணுக்களும் அருள் ஒளியைச் சிருஷ்டிக்கும் அருள் ஞானம் பெற்று
2.ஒளியின் உணர்வாக உருவாக்கும் அணுக்களாக மாற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் அருள் ஒளிச் சுடராக… எங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒளியின் உணர்வாக உருப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.உயிர் உடலில் இருக்கும் பொழுது நான்
2.அதுவே ஒளியின் உணர்வாக நமக்குள் நானாக மாற்றுதல் வேண்டும்.
3.உயிர் நானாகின்றது… இப்போது உணர்வை நானாக… “இரண்டையும் கலந்து நானாவதே நான்…”
நான் என்ற நிலைகள் வரும் போது “உயிருடன் ஒன்றினால்” உணர்வை ஒளியாக மாற்றிடும் பிரம்மத்தை அடைகின்றோம் எதனையுமே மாற்றி அமைக்கும் நிலையை நமது உயிரின் தன்மை பிரம்மத்தின் நிலையை அடைவதே அது.
எதை உற்று நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கினோமோ… இந்த உணர்வை நம் உயிர் உருவாக்கி ஒளியின் அணுவாக மாற்றிவிடும். ஆகவே
1.உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
2.பிறவியில்லா நிலை என்னும் ஒளிச் சரீரமாக உயிர் உருவாக்கிவிடும்.
இந்தச் சூரியன் அழிந்தாலும் நமது உயிர் அழிவதில்லை… ஒளியின் உணர்வாக வானுலகில் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றது.
பல சூரியக் குடும்பங்கள் அழிந்தாலும் உயிர் மனிதனான பின் ஒளியின் உணர்வாக மாற்றி விட்டால் எதனின்றும் அழிவதில்லை. எதற்கும் அடிமையாவதில்லை.
அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் அத்தகைய உயிரின் நிலை அடைகின்றது (நாம் ஆகின்றோம்).
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
செடி கொடிகள் வெளிப்படுத்தும் சத்தினை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. செடியிலே விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் தன்மை கொண்டு காற்றிலிருந்து தன் இனச் சத்தை எடுத்துத் தன் வித்தாக வளர்க்கும். அதற்கு ஈரப்பதம் இருந்தால் போதும்.
இது போன்று தான் நம் உடலுக்குள் பல குணங்களின் சத்துக்கள் இருக்கின்றது. அதிலே வேதனைப்படும் உணர்வின் அணுவாக வளர்ந்து விட்டால் உடனே அதனின் உணர்ச்சிகளைத் தூண்டும். இரத்த நாளங்கள் வழி தன் உணவை எடுக்கும்.
காற்று மண்டலத்தில் எப்படி அனைத்துச் சத்துக்களும் இருக்கின்றதோ அதிலிருந்து எடுத்து செடி கொடிகள் எடுத்து வளர்வது போல் தான் நம் உடலில் உருவான அணுவும் வளரும்.
1.அதாவது நம் உடலில் நுகரும் பொழுது (சுவாசிக்கும் போது) வெப்ப மண்டலங்கள் வரும்.
2.பின் 48 நாட்களில் சுவாசித்தது கருவாகி முட்டை ஆகிறது.
3.உடல் முழுவதும் சுற்றும்போது அந்தந்த உறுப்புகளில் போய் ஒட்டிக் கொள்ளும்.
4.முட்டை வெடித்து அணுவாக ஆனபின் தன் உணர்ச்சியைத் தூண்டும்
5.இரத்தத்தின் வழி கூடி சிறு மூளைக்கு (அந்த உணர்வு) வரும். ஏனென்றால் அதனுடைய பசிக்கு அந்தச் சாப்பாடு கேட்கும்.
இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் நம் உயிர் என்ன செய்யும்…?
1.நம் கண் காது மூக்கு நிலைகளுக்கு ஆணையிடும்.
2.எந்த மனித உடலில் இருந்தது தீமைகள் வந்ததோ அதை இழுக்கும்.
3.அதைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த மனிதனின் எண்ணங்கள் நமக்கு வரும்.
பாவிப்பயல்…! அன்றைக்கு இப்படிச் செய்தான் என்று நாம் எண்ணும் பொழுது அதே உணர்வு நமக்குள் வந்து தீமை விளைவிக்கக் கூடிய சந்தர்ப்பமாக அமையும்.
இதை எல்லாம் நமக்குள் அனுபவபூர்வமாகப் பார்க்கலாம் இந்த எண்ணங்கள் எப்படிக் கிளர்ந்து எழுகிறது என்று…! ஆக இத்தகைய எண்ணங்கள் வந்து விட்டால் அந்த நேரத்தில் நம் வியாபாரங்கள் கெடும்.
நம் பையனாக இருந்தாலும் கூட… “இப்படிச் செய்கிறானே” என்று வேதனைப்படுகின்றோம். அது வேதனையை உருவாக்கும் அணுக்களாக விளைகின்றது… நம் உடலாக மாறுகிறது.
இப்படி எல்லாம் நினைத்துவிட்டு ஒரு காரியத்திற்குச் சென்றால் நல்லதாகாது. எந்த வேலையைச் செய்தாலும் நிச்சயம் எதிரியாகி விடும். ஏனென்றால் அந்த வேதனையான உணர்வு வரும் பொழுது நமக்குள் சரியாக இயங்காது.
தொழில் செய்யும் இடங்களில் பகைமை வந்து விடுகின்றது… வியாபாரம் செய்தாலும் வேதனை உணர்வு வந்தபின் நாம் சொல்வதைக் கேட்டால் “சரக்கை வேண்டாம்…” என்று ஒதுக்கி விடுவார்கள்.
இது எல்லாம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள். இதை மாற்ற வேண்டும் அல்லவா…!
அதற்காகத்தான் துருவ தியானத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று காலையில் எண்ண வேண்டும். கணவன் மனைவிக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
நம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று கண்டிப்பாக எண்ண வேண்டும். காலை துருவ தியானத்தில் இதை அவசியம் செய்ய வேண்டும்.
சகஜ வாழ்க்கையில் யாராவது நமக்குத் தீமை செய்தால்
1.பாவிப்பயல் எனக்கு இப்படிச் செய்தானே…! என்று எண்ணுகின்றோம்.
2.அப்போது யாருடைய உதவியுமா கேட்கின்றது…? இல்லையே…!
3.நேராக அவனுடைய உடலுக்குள் தான் இந்த ஆன்மா செல்கின்றது
இங்கே பட்ட வேதனையை அங்கே உருவாக்குகிறது. பழி தீர்க்கும் நிலையாகச் செயல்படுத்துகின்றது.
அதைப் போன்று தான்
1.துருவ தியானத்தின் மூலம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக்கிக் கொண்டால்
2.நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே போய்த் தான் நிற்போம்…!
ஆகவே கணவன் மனைவி அவசியம் இந்த உயர்ந்த சக்திகளை எடுத்தே ஆகவேண்டும்.

Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.