இந்த மனித உடல் நமக்கு என்றுமே சொந்தமில்லை

இந்த மனித உடல் நமக்கு என்றுமே சொந்தமில்லை

 

நியூட்ரான் ஆயுதம் என்று கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள் கம்ப்யூட்டர் சாதனத்தின் மூலம் சில அதிர்வுகளைக் கொடுத்து அதை அடுத்த நாட்டிலே பரப்பினார்கள் என்றால் எந்தெந்த இயந்திரங்களைச் சேமித்து வைத்திருக்கின்றார்களோ அதை எல்லாம் அது செயலற்றதாக ஆக்கிவிடும்

இராக்கெட்டின் மூலமாக அடுத்த நாட்டில் ஒரு ஊரைத் (ஒரு இலக்கை) தாக்கும்படி வைக்கிறார்கள் (எதிரி நாட்டின் முகப்பு). ஆனால் அது தவறான பாதைகள் போகிறது என்றால் திசைகளை மாற்றி எவன் அனுப்பினானோ அவன் ஊரிலேயே வந்து விழுகும்படி செய்வார்கள். அதாவது
1.எவன் செய்தானோ அவன் ஊரிலேயே விழுந்து அவனை அழிக்கும்படி செய்வான்
2.செய்து வைத்த அனைத்து ஆயுதங்களுமே வெடிக்கும் நிலை ஏற்படலாம்.
3.அப்போது இந்த உலகமே விஷத்தன்மையாக மாற கூடிய வாய்ப்புகள் உண்டு
4.பத்து உலகத்தை அழிக்கக்கூடிய அளவிற்கு இந்த ஆயுதங்களைச் சேமித்து வைத்திருக்கின்றனர்
5.எப்படியும் இது வெடிக்கத்தான் செய்யும்… வெளியிலே வந்துவிடும்.

மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கடலிலே மணலாக மாறுகின்றது அதைப் பிரித்து யுரேனியமாக எடுக்கின்றார்கள். அணுகுண்டாகத் தயார் செய்து அதை வெடிக்கச் செய்யப்படும் பொழுது பல கட்டடங்களையும் மற்ற இடங்களையும் நொறுக்கித் தள்ளுகின்றது.

ஆனால் நியூட்ரான் என்ற ஆயுதம் என்ன செய்கிறது…?

“வைரஸ் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது…” என்று அடிக்கடி சொல்கிறோம் அல்லவா. அதைப் போன்று காற்றிலே அதைக் கலக்கி வைத்து விட்டால் மனிதனுடைய சிந்தனைகள் அனைத்துமே இழந்துவிடும்.

என் பிள்ளை எது…? என் வீடு எது…? என்று தெரியாமல் போய்விடும். அந்த அளவிற்கு அதைப் பரப்பி வைத்து இருக்கின்றார்கள்.

இந்த விஷத்தன்மை (நியூட்ரான்) கடலோரத்தில் போனது என்றால்…
1.நட்சத்திரத்தினுடைய கதிரியக்கப் போறிகள் கடலிலே மணலாக இருப்பதுடன்…
2.மின் கதிர்களுடன் மோதிய உடனே வெப்பமாகி… சூறாவளியாக சுழல் காற்றாக மாறுகின்றது.
3.வெகு வேகமாகச் சுற்றி அடர்த்தியாக மாறும்…! கடலோரப் பகுதியில் தான் முதலிலே உற்பத்தியாகும்.

இப்படி உருவான இந்தச் சூறாவளி நகருக்குள் புகுந்து பெரிய பெரிய கட்டிடங்களை எல்லாம் துவம்சம் செய்து கொண்டு போகின்றது

உலகில் எங்கெல்லாம் விஞ்ஞான ஆராய்ச்சி செய்து கதிரியக்கங்களையும் நியூட்ரானின் வெடிப்புகளையும் செயல்படுத்தினார்களோ அங்கெல்லாம் இப்பொழுது இது நடந்து கொண்டே வருகின்றது.

இந்த உடல் நமக்கு என்றுமே சொந்தமில்லை…! இனி நாம் சொந்தமாக்க வேண்டிய அழியாத செல்வம் எது…? என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திதான்.
1.இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அதை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்
2.அது தான் நமக்குப் பெரிய சொத்து.

மனிதனாக மீண்டும் பிறவிக்கு வந்தால் அவஸ்தைகளைத் தான் பட வேண்டி இருக்கும் அத்தகைய நிலை இல்லாதபடி அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் சந்தர்ப்பமாக நாம் உருவாக்க வேண்டும்.

சூரியனே அழியும் காலம் உண்டு. அதற்கு முன் அழியாத அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று இணைய வேண்டும். பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் அதனுடன் இணைந்து சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் இன்று பெரும்பகுதி மகான் (சாமியார்) என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் ஊரை ஏமாற்றுவதற்கும் உடலைக் காப்பதற்கும் உடலில் சுகங்களை அனுபவிப்பதற்கும் தான் ஞானிகள் ஆகின்றனர்.

தெய்வத்தின் பெயரைச் சொல்லியும் ஆன்மீகத்தைச் சொல்லியும் சொத்து சுகத்தைத் தேடுவதற்கும் தான் பார்க்கின்றனர். அத்தகைய நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

Leave a Reply