நினைத்தவுடன் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதற்கு “அதற்குண்டான கரண்ட் (காந்த சக்தி) வேண்டும்”

நினைத்தவுடன் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதற்கு “அதற்குண்டான கரண்ட் (காந்த சக்தி) வேண்டும்”

 

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை மிகப் பெரிய சக்தியாக உங்களுக்குக் கொடுத்துள்ளோம். நினைத்தவுடன் அந்தச் சக்தியைப் பெறுவதற்கு
1.நீங்கள் காந்த சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
2.ஒரு விதையை நாம் நிலத்தில் ஊன்றினால் அதற்கு நீர் ஊற்றுவது போன்று காந்தத்தின் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் அந்த மெய் ஞானிகளுடைய அருள் வித்துக்களை உங்களுக்குள் பதியச் செய்யப்படும் பொழுது காந்த சக்தி பெற வேண்டும்… இயக்கச் சக்தி வேண்டும்.

காரணம்… கரண்ட் குறைவானால் வீட்டில் பல்புகள் டிம்மாக (DIM) எரியும்.
1.ஞானிகள் மிகவும் ஆற்றல் மிகுந்த சக்தி பெற்றவர்கள்
2.அவர்கள் பேசி வெளிப்படுத்திய… அவர்கள் உடலில் விளைந்த சக்தி வாய்ந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் கலந்து இருக்கின்றது.
3.எதையுமே அடக்கி விஷத்தை முறியடிக்கும் சக்தி வாய்ந்த ஆற்றல் தான் அது.
4.நாம் சாதாரண நிலையில் எண்ணினால் நம்முடைய எண்ணங்களை அது முறியடித்து விடும்
5.அந்தச் சக்தியை நாம் எடுக்க முடியாது.

அதை எடுப்பதற்குண்டான தகுதி நீங்கள் பெற வேண்டும் என்பதற்காகத் தான் 27 நட்சத்திரங்களுடைய சக்தியும் நவக்கோள்களுடைய சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களையும் சப்த ரிஷிகளின் அருள் ஒளியையும் பெற வேண்டும் என்று
1.முதலில் அதை உங்களுக்குள் பழக்கப்படுத்தி அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
2.அந்த உணர்வின் வித்தாகக் கருவாக… கருவின் உணர்வின் நிலைகள் பெறச் செய்கிறோம்.
3.குருநாதர் எனக்கு எப்படிப் பழக்கிக் கொடுத்தாரோ அதே வழியைத் தான் உங்களுக்கும் காட்டுகின்றோம்.

நீங்கள் எண்ணிய உடனே அந்த மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு கரண்ட் (காந்த சக்தி) தேவை.

நம் பூமியைச் சுழன்று வரும் சந்திரனுக்கோ
1.அதனுடைய காந்த சக்தி (கரண்ட்) கம்மி
2.நிலத்தின் தன்மையும் கம்மி.
3.அதனால் வெளியிலிருந்து புறப் பொருளை அதிகமாக இழுத்துக் கவர்ந்து தனக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது.

அதே சமயத்தில் நீர் இல்லை என்றால் அங்கே ஜீவிதமே இல்லை. இருந்தாலும் அதைப் பெறுவதற்காக… சூரியனிலிருந்து வரக்கூடிய காந்தப் புலன்கள் மற்ற மேகக் கூட்டத்திற்குள் ஊடுருவி வரும் உணர்வின் தன்மையைச் சந்திரன் தனக்குள் கவரப்படும் பொழுது அந்த நீர் சக்தி துணை கொண்டு தான் சந்திரன் வளர்கின்றது.

அந்தச் சந்திரன் காந்தச் சக்தியை எப்படிக் கூட்டிக் கொள்கிறதோ அதே போன்று
1.காந்தப் புலனின் சக்தியை உயிரின் ஓட்டத்திற்குள் கொடுத்து
2.”தனித்து எதிலுமே கலக்காதபடி” காந்தத்தை அதிலே கலக்க வேண்டும்.

சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒவ்வொரு காந்த அலையும் மற்றொன்றுக்குள் பட்டபின் அதைக் கவர்ந்து கொள்கிறது. கவர்ந்த பின் அதனதன் உணர்வை ஏற்றுக் கொண்டதாக வருகின்றது.

அந்தக் குணத்தின் தன்மை எடுத்தால் அதற்குள் இருக்கக்கூடிய காந்தம் அந்த உணர்வின் குணத்தை எனக்குள் இயக்கிவிடும். அதை நுகரக் கூடாது.

ஆகவே…
1.சூரியனைப் பார்க்க வேண்டும் என்று யாம் ஆரம்பத்திலே சொன்னது
2.காந்த சக்தியைக் கூட்டிக் கொள்வதற்குத் தான்.

ஆனால் ஒரு சிலர் மணிக்கணக்காகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சிறிது நேரம் பார்த்தாலே போதுமானது என்று நான் சொன்னதைக் கேட்காமல் கண் கேட்டுவிட்டது என்று வந்து விட்டார்கள். குரு சொன்னதைக் கொஞ்சமாவது கேட்கின்றார்களா என்றால் இல்லை…!

1.ஞானிகள் காட்டிய நிலைகளை மதித்து
2.யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி இந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற்றீர்கள் என்றால்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வலுகொண்டதாக
5.நினைத்த மாத்திரத்தில் எண்ணிய உடனே பெற முடியும்.

அதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்கு மீண்டும் மீண்டும் தெளிவாக்கிக் கொண்டே வருவது.

Leave a Reply