திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 

பதஞ்சலி அரசனாக இருக்கும் போது அறிதல் அழித்தல் காத்தல் என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் பயந்தே வாழ வேண்டியிருக்கின்றது. என்ற இந்த நிலையைச் சிந்திக்கின்றான்.

எப்போது…?

ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர்.
1.ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை.
2.கூடு விட்டுக் கூடு பாயும் போது பிறிதொருவர் கையில் இவன் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.

உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாக பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள்…? என்று பல செயல்களைக் காண விரும்பினார்.

மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.

அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.

எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டித் தன் உடலைப் பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற உண்மையை… பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான் செய்த தவறை உணர்கின்றான்.
2.ஏழ்மையான மாடு மேய்ப்பவனின் உடலில் புகுந்த பின் அதை முழுமையாக அறிகின்றான்

மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.

ஆக… திருமூலர் என்று சொல்பவன் ஒரு அரசனுடைய உயிரான்மா தான். மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் வந்த பிற்பாடு தான் உண்மைகளை எல்லாம் அவன் அறிகின்றான் – நடராஜா…!

நடராஜா என்றால் நமக்குத் தெரியுமா…? தெரியாது. உருவம் கிடையாது… நடராஜாவை வைத்திருக்கின்றார்கள் நம் பூமி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது… இதற்குப் பெயர் நடராஜா.

இதற்குள் தோன்றிய நிலைகள் கொண்டு “நடனங்கள் பல…” சுழற்சியின் தன்மை கொண்டு அது நிற்காமல் ஓடுகின்றது.

அதே சமயத்தில் அது மோதும் நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு உணர்வின் அணுக்களின் செயல்களும் “ஒலி ஒளி என்ற நிலைக்கே…”
2.இந்த பூமிக்குள் வளர்ச்சியின் தன்மை மாறி மாறிப் பல ஆயிரம் உடல்களாக எடுத்து
3.ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்கி – புலிக்குக் கோபம் மானுக்குச் சாந்தம் எருமைக்கு அசுர குணங்கள் என்று
4.ஒவ்வொரு குணத்தின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டதை 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 நடனங்களைக் காட்டினார் திருமூலர்.

நடராஜா என்கிற பொழுது பூமி ஓங்கார நடனம்…! அதாவது சுற்றும் பொழுது சுற்றும் வேகத்தில் “ஓங்காரக் காளி” தீய சக்திகள் அனைத்தையும் அழித்து விடுகிறது. காலிலே அசுரனைப் போட்டு மிதிப்பதாக அதைக் காட்டுகின்றார்கள்

இங்கே சிவத்தைக் காட்டும் பொழுது நடராஜா…! பூமி சுழலும் போது அதில் ஏற்படக்கூடிய விஷத்தின் சக்தி உள்ளே வடிகட்டி வருவதை அசுரனைக் காலிலே மிதித்து அடக்குவதாக இங்கே காட்டப்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் தவறான செயலைப் பார்த்துக் கோபப்படுகின்றோம். கோபமான உணர்வைச் சுவாசித்து உயிருக்குள் பட்ட பின் எரிச்சலாகின்றது.

ஆனால் அதே சமயம் இந்த உணர்வின் சக்தி உடலுக்குள் பரவி நல்ல குணங்களுக்குள் கலந்தவுடனே அனைத்தும் எரிச்சலாகிறது. அப்போது இந்த உடலான சிவம் என்ன செய்கிறது…?
1.ஓங்கார நடனம்… இரு உன்னை அழித்து விடுகிறேன்…! என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.
2.சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என்றால் அது கோப உணர்வின் சக்தி உடலை இயக்கும் நிலைகள் – ஒலி ஒளி
3.தாவர இனத்தினுடைய மணம்… குணம்… ஆனால் அதனுடைய உணர்வு… இயக்கம்…!

மிளகாயை வாயிலே போட்டால் என்ன செய்கின்றது…? காரம்… ஸ்…ஆ…! என்று அலறுகின்றோம் கசப்பை வாயிலே போட்டால் ஓய்…! உமட்டல் என்ற நிலை வருகிறது.

இதைப் போன்று தான் இந்தப் பூமி நடராஜா… நிற்காமல் சுழல்வதால் அதனின் ஜீவன் கொண்ட நாம் எப்படி இருக்கின்றோம்…? என்பது தான் அந்த ஸ்தல புராணத்தின் தத்துவம்.

சிதம்பரத்தில் தான் இருக்கின்றோம்… இந்த ஸ்தல புராணத்தின் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அன்று பதஞ்சலி மந்திரங்களைக் கற்றுக் கொண்டு தன்னுடைய சுகபோகத்திற்காக எத்தனையோ பாவங்கள் செய்தாலும் பாம்பு உடலில் வந்த பின் மாடு மேய்ப்பவனைத் தீண்டுகின்றான்.

தீண்டி அந்த உடலில் வந்த பின்
1.அங்கே அந்த ஏழ்மையான குடும்பத்தில் மகிழ்ச்சியான ஆனந்தமான உணர்வைக் கண்ட பின்
2.அரச நிலையின் உண்மைகளை உணர்ந்து அரசைத் துறக்கின்றான்
3.இந்த உடலிலிருந்தே மெய் ஒளியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றான்.

தான் பாம்பாக இருக்கும் போது விஷத்தால் தீண்டி அந்த (மூலனின்) உயிரை வெளியேற்றினாலும்… அதையும் தன் அணைப்பின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மை தான் செயலாக்கி வந்தது தான் “நடராஜன்” என்ற திருச்சிற்றம்பலம்…!
1.உடலுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு இந்த உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்
3.திருச்சிற்றம்பலம் என்பது சிறு உடலுக்குள் நின்று அங்கே இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினார் திருமூலர்

அந்தத் திருச்சிற்றம்பலத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

Leave a Reply