உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் விண் செல்லும் நுணுக்கம்

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் விண் செல்லும் நுணுக்கம்

 

தியானம் இருந்து முடிந்த பின் உடலை விட்டுப் பிரிந்த நம்முடைய முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று… வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்த்து “உந்தித் தள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்…”

1.உங்கள் எண்ணங்கள் அனைத்தும் விண்ணை எட்டி அங்கிருந்து உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு
2.பௌர்ணமி அன்று சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

காரணம்… அன்று சூரியனுடைய காந்த சக்தி சந்திரனில் முழுமையாகப் படுகின்றது
1.உங்கள் எண்ணங்களை மேல் நோக்கிச் செலுத்தச் செய்து
2.சந்திரனையும் பார்க்கச் செய்து… அந்தக் காந்தப் புலனுடன் இழுக்கச் செய்து
அதைத் தாண்டி இருக்கும் சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்கும்படி செய்கிறோம்
4.உங்கள் உணர்வின் எண்ண அலைகளை அங்கே பதியச் செய்கின்றோம்.

உங்கள் குடும்பத்தில் உடலைப் விட்டு பிரிந்தவர்கள் யாராக இருந்தாலும் சரி… “குலதெய்வங்களாக அவர்களை எண்ணி” அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

விஞ்ஞானிகள் இராக்கெட்டை உருவாக்கி அது நூறு டன் எடையாக இருந்தாலும் கூட விண்ணிலே செலுத்துகிறார்கள்.

அங்கேயும் ரேடார் (RADAR) வைக்கின்றனர் பூமியிலும் ரேடாரை வைக்கின்றார்கள். விண்ணில் இருப்பதையும் இங்கு இருப்பதையும் இழுத்து அதே சமயத்தில் லேசரையும் (LASER) கலந்து விண்ணிலே ஏவுகின்றார்கள்.

லேசர் என்றால் எதிலேயும் ஊடுருவி மற்றொன்றுடன் மோதி… அந்த அலை நிற்காமல் ஊடுருவிச் செல்லும் நிலைகள் பெற்றது.

இப்படிச் செய்து எல்லாம் இணைத்து கொண்ட பின் மனிதனுடைய பேச்சைச் சொல்லாலே… இடத்தைக் குறித்து… ஒலிகள் மூலமாகக் கம்ப்யூட்டரில் பதிவு செய்து… அந்த நாடாவிலே போட்ட பின் (COMMANDS) ரேடார் கவனித்துக் கொள்கிறது.

இராக்கெட்டைத் திசை திருப்ப வேண்டும் என்றால் இங்கிருந்து ஆணையிடுகின்றனர்.
1.மனிதனுடைய எண்ண ஒலிகளால் பதியச் செய்த நுண்ணிய அலைகள்
2.இயந்திரத்தில் பதிவு செய்ததன் துணை கொண்டு தொலைதூரத்தில் செல்லும் இராக்கெட்டைத் திசை திருப்புகின்றது.

கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மனிதனுடைய எண்ண ஒலியைப் பதிவு செய்து இயந்திரத்திற்குள் அதை அலை வரிசையை வைத்து இராக்கெட்டில் இணைக்கச் செய்து இயக்குகின்றார்.

அதே போன்று…
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் முன்னோரின் உணர்வுகளின் துணை கொண்டு
2.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை விண்ணிலே உந்திச் செலுத்தப்படும் பொழுது
3.சப்தரிஷி மண்டல அலைகளுடன் கலக்கச் செய்கின்றது.

அந்த அலைகளுக்குள் (ஒளி கங்கையிலே – ஒளிக் கடல்)) இந்த ஆன்மாக்கள் பட்டவுடன்… புவியிலே மனித வாழ்க்கையில் “வாழ வேண்டும்” என்று எடுத்துக் கொண்ட வேதனை சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளை எல்லாம் கருக்கிப் பஸ்பமாக்கி விடுகிறது.

அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக ஒளியாக… ஞானிகளால் படைக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து… ஒளி உடலாக முன்னோர்கள் பெறுகின்றார்கள்.

அனைவருமே ஒருவருக்கொருவர் நாம் பேசிப் பழகி இருக்கின்றோம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை கூட்டுக் குடும்ப தியானமிருந்து மேலே சொன்ன முறைப்படி விண் செலுத்த வேண்டும்.

அப்படி இல்லாதபடி அவர்களை எண்ணி ஏங்கி
1.எல்லாம் சம்பாதித்து வைத்தார்… போய்விட்டாரே…! என்று அழுவதும்
2.மிகவும் நல்லவராக இருந்தார்… போய்விட்டார்…! என்று ஏங்கி இழுத்து விட்டால் போதும்.
3.யார் அதிகமாக எண்ணி ஏங்கினாரோ அந்த உடலுக்குள் புகுந்துவிடும்

எந்த அளவுக்கு அவர் மேல் பாசம் கொண்டு பற்று கொண்டு எண்ணி எடுக்கின்றார்களோ… அந்த உடலில் புகுந்து “நான் வந்து விட்டேன்…” என்ற நிலையில்… உடலை விட்டுப் பிரியும் பொழுது கடைசிக் காலத்தில் அவர் உடலில்பட்ட வேதனை… நோய்… எல்லாவற்றையும் இங்கே உருவாக்கிவிடும்.

ஆகவே… அப்படி அழுக வேண்டும் என்றால் அழுது “இழுத்துக் கொள்ளுங்கள்…” இல்லை… நமது குருநாதர் சொன்ன முறைப்படி மோட்சத்திற்கு – சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் “உந்தித் தள்ளுங்கள்…”

முன்னோர்கள் விண் சென்ற பிற்பாடு அவர்களின் துணை கொண்டு இந்த மனித வாழ்க்கையில் முழுமை பெற்றுப் பிறவியில்லா நிலை அடையலாம்.

Leave a Reply