பல காலம் மறைத்து வைத்த உண்மை…!

பல காலம் மறைத்து வைத்த உண்மை…!

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய நிலைகள்…
1.நான் சொன்ன முறைப்படி நீ அருள் ஞானிகள் உணர்வுகளை உனக்குள் எடுத்து அதை விளைய வைத்து
2அந்த உணர்வின் வித்தை மற்றவர்களுக்குள் நீ பதிவு செய்ய வேண்டும்.
3.யாரெல்லாம் கவர்ந்து அதைப் பதிவாக்குகின்றார்களோ… விளையும் பருவத்தை அவர்களுக்குள் ஊட்டி
4.ஞானியின் வித்து அங்கே விளையும்படி என்று நீ உருவாக்குகின்றாயோ
5.அந்த உணர்வின் துணை கொண்டே அவர்களுக்குள் “என்னை நீ காண முடியும்…!” என்றார்.

உங்களை எப்போது எங்கே பார்ப்பது…? என்று நான் (ஞானகுரு) வினா அவரிடம் எழுப்பும் போதெல்லாம்
1.எங்கும் எதிலும் என்னை நீ பார்க்கலாம்…
2.நான் கொடுத்த அருள் உணர்வின் தன்மை பிறரில் இயக்கச் செய்து
3.அதன் வழி தீமைகள் அகன்று எங்கெல்லாம் அது மகிழ்ந்த உணர்வாக வருகின்றதோ
4.அங்கே நான் வருவேன்…! என்றார் குருநாதர்.

குருநாதர் காட்டிய வழியில் யாம் உபதேசிப்பதை நினைவு கொண்டு யாரெல்லாம் அதன் படி செயல்படுத்துகின்றீர்களோ
1.உங்கள் பார்வையால் பிறருடைய கஷ்டங்களும் நோய்களும் என்று அது நீங்குகின்றதோ
2.நான் பார்த்தேன்… சொன்னேன்… அதன் வழி கடைப்பிடித்தார்கள்…
3.இப்போது நாங்கள் நலமாக இருக்கின்றோம் என்று மற்றவர் எப்பொழுது சொல்லுகின்றனரோ
4.அதிலே தான் என் குருவை உங்களில் நான் காண முடியும்.

மணிக்கணக்காக உங்களிடம் நான் பேசினாலும் உங்களில்… குருவைக் காணும் நிலையாக… உங்கள் மகிழ்ச்சியால் பேரானந்த நிலை பெறும் பாக்கியசாலியாக நான் ஆகின்றேன்.

1.உங்களிடம் இருந்து தான் அவரின் சக்தியை என்னைப் பெறும்படி செய்தாரே தவிர
2.தனித்து “நான் மகான் என்று காண்பித்து… மற்றதை அடக்கு…!” என்று அவர் சொல்லவில்லை.

ஆகவே குருநாதர் உணர்த்தியபடி ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம் என்றால்… உண்மையின் உணர்வின் தன்மை கொண்டு மனிதனில் முழுமை அடைந்து… உயிருடன் ஒன்றி என்றும் நிலையான ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இதைத் தெளிந்து கொள்ளுங்கள்… தெரிந்து கொள்ளுங்கள்… அறிந்து கொள்ளுங்கள்…!
1.பல காலம் இதை மறைத்து வைத்திருந்தேன்.
2.விஞ்ஞான அழிவுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்த உண்மையினுடைய நிலைகளை வெளிப்படுத்துகின்றேன்.

இதைக் கேட்டு உணர்ந்தோர் உங்களை அறியாத வந்த தீமைகள் நீங்க வேண்டும். தீமை உங்களை அணுகாது தடுக்கும் சக்தி பெற வேண்டும்.

1.தீமையை நீக்கிட்ட உங்கள் சொல்லின் உணர்வுகள் பிறரின் செவிகளில் உந்தப்பட்டு
2.உங்களை அவர்கள் உற்றுப் பார்க்கும் போது தீமையை அகற்றும் உணர்வுகள் அவர்களுக்குள் புகுந்து
3.அவரில் அறியாது சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்…
4.அந்தச் சக்தி எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே தான் இதை உபதேசிக்கின்றேன்.

உபதேசிக்கும் பொழுதெல்லாம் குருவின் நினைவு எனக்குள் வருகின்றது… அவரின் ஆற்றல் எனக்குள் பெருகுகின்றது… அவர் உணர்வின் அலைகள் இங்கே படர்கின்றது… கேட்டுணர்ந்தோர் உங்கள் உடலிலும் பதிவாகின்றது.

பதிந்த குருவின் ஆற்றல் உங்களுக்குள் நிச்சயம் செயல்படும்…! என்ற நம்பிக்கையிலே உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… மெய் உணர்வின் ஆற்றல் உங்களில் விளைய வேண்டும் என்ற ஆசையில் இதைச் செயல்படுத்துகின்றேன்.

அதன் வழி உங்களுக்குள் மகிழ்ச்சி பெருக வேண்டும். அதுவே எனக்குள் பேரானந்தப் பெரு நிலையை உருவாக்கும்.

தீமை அகற்றிடும் சக்தி பெற்றவரை நான் (ஞானகுரு) காணும் பொழுதெல்லாம்
1.எனக்குள் தீமை அகற்றிடும் சக்தியாக அது விளைந்து
2.குருவின் அருள் எனக்குள் விளைந்து அவருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.என்றும் நிலையான பிறவா நிலை வேகாநிலை என்ற நிலையை நான் உங்களிடமிருந்து பெற முடியும்.

அதைப் போன்று நீங்களும்… பிறருடைய தீமைகளைக் கண்டபின் அதை அவர்கள் நீக்கிடும் நிலையாக நீங்கள் செயல்பட்டு… அவர்கள் தீமைகளை நீக்கி மகிழும் போது… நீங்கள் அதைக் கண்டு பேரானந்த நிலை பெற வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய இந்த வழியில் அனைவரும் செயல்பட வேண்டும் என்பற்கே இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

Leave a Reply