“குறிக்கோளுடன் தான்…” நாம் தியானம் செய்ய வேண்டும்

“குறிக்கோளுடன் தான்…” நாம் தியானம் செய்ய வேண்டும்

 

இன்றைய மனித வாழ்க்கையில் பக்தி வழியில் நந்நெறியில் வாழ வேண்டும் என்று எண்ணி நடந்தாலும் நம் வாழ்க்கை நாம் எண்ணியபடி அமைவதில்லை.
1.அதற்கு ஊழ்வினை காரணம் என்று சொல்லப்படுகின்றது.
2,அதாவது விதி வழித்தான் எல்லாமே நடக்கும் என நம்புகின்றோம்.

துன்பங்களிலிருந்து மீளத் தெய்வ வழிபாடு முதலியன செய்கின்றோம். இருந்தாலும் முழுப் பயன் எவருக்கும் கிட்டுவதில்லை.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களும் மகரிஷிகளும் மனிதன் மெய் ஞானம் கொண்டு “விதியை மதியால் வெல்லலாம்…!” என்று சொல்லியுள்ளார்கள்.

“அந்த வழியில் மனித இனம் இது வரையிலும் கவனம் செலுத்தவில்லை…!” ஆனால்…
1.இன்றைய நிலை முழுக்க முழுக்க விஞ்ஞானத்தைப் போற்றும் நிலைக்கும்
2.விக்ஞான வாழ்க்கைக்கு நம்மை அடிமையாக்கும் நிலைக்கும் வந்துள்ளோம்.

ஏனென்றால் விஞ்ஞான முன்னேற்ற வசதிகள் எல்லாம் இந்த உடல் வாழ்க்கைக்குத் தான் பயன்படும். இன்னும் சொல்லப் போனால் இன்று இந்த விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக “சகல ஜீவராசிகளும் மடிந்து போகும் தருணம்” வந்து விட்டது என்று உலகமே நடுங்கும் நிலைக்கு வந்து விட்டது.

இங்கே பாரத புண்ணிய பூமியில் ஞானிகள் சொன்னதெல்லாம் மறந்து விட்டோம். ஆனால் விஞ்ஞானியால் எதைச் செய்ய முடியுமோ அதை விட அதி அற்புத சக்தி வாய்ந்த எந்தச் செயலையும் மெய் ஞானிகளால் செய்ய முடியும்… அடைய முடியும்.

இப்படி இந்த உலகமே கேள்விக்குறியில் நிற்கும் இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன…?

மாமகரிஷிகள் மனித இனம் உய்ய மெய் வழியைக் காட்டுகின்றார்கள். அதன் வழியில் நடந்திட வேண்டும்.

1.முதலில் தாய் தந்தையரை தெய்வமாக வணங்கி
2.உயிரான ஈஸ்வரனைப் புருவ மத்தியில் எண்ணி வணங்கி
3.உணர்வுடன் கூடிய தியானத்தில் மகரிஷிகளை எண்ணி
4.அனு தினமும் தியானிப்பதன் மூலம் நம் உடலில் உயர் காந்த மின் நுண் அலைகள் பதிவாகும்
5.அதன் வளர்ச்சியைப் பொருத்து நம் ஊழ்வினையான தீய வினைகளைச் சக்தி இழக்கச் செய்ய முடியும்.

முருக குணங்களான அன்பு… பரிவு… பாசம்… வீரம்… ஞானம்… சாந்தம்.. மூலம் உயரிய சக்திகளைப் பெற்று… அதன் மூலம் நம் உயிராத்மாவிற்கு வலுக் கூட்டி… நாம் எண்ணியபடி வாழ்வை அமைத்துக் கொள்ள “மகரிஷிகள் தியானம்” ஒன்றே வழி.

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் தியானிப்பதன் மூலம்
1.நம்மை விட மேம்பட்ட சக்திகளான
2.மாமகரிஷிகளின் நேரடித் தொடர்பு கிடைக்கும்
3.அவர்கள் துணையும் கிடைக்கும்.

ஆனால் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சமம் “எந்தக் குறிக்கோளுடன் தியானம் செய்வது என்பது தான்…!” நம் ஆத்மாவுக்கு வலுக்கூட்டிப் பிறவா நிலை என்னும் “தெய்வ சக்தி” நிலையைப் பெறுவது தான் நம் குறிகோள்.
1.அதற்கு நம் எண்ணம் பரிசுத்தமாக வேண்டும்
2.தியானத்தின் மூலம் எண்ணத்தைப் பரிசுத்தப்படுத்த முடியும்.
3.இத்தகைய முறைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மகரிஷிகளின் துணை எளிதில் கிடைக்கும்.

Leave a Reply