கண் வழி கவர்வதும் செவி வழி கேட்பதும் தான் பெரும்பகுதி நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது

கண் வழி கவர்வதும் செவி வழி கேட்பதும் தான் பெரும்பகுதி நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது

 

ஒவ்வொரு நொடிப்பொழுதும்
1.ஒளி… ஒலி… மணம்… இவற்றின் மோதலின் உணர்வு கொண்ட…
2.எண்ண ஓட்டச் சரீர வாழ்க்கை வழி முறையில் தான் நாம் வாழுகின்றோம்.

இத்தகைய தொடர் நிலைக்கொப்ப வாழும் சுழற்சித் தொடர்பில் ஒன்றி அந்தந்த உணர்வைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளோம்.

இதனின் பிடிப்புச் சுழலில் சிக்குண்டு அந்த வழி நிலையிலேயே வாழுகின்றோமே அன்றி அதை மாற்றும் நிலையை நாம் மேற்கொள்வதில்லை.

ஒன்றைப் பார்த்தவுடன் ஒளியின் விழி நிலையின் உணர்வு நிலை செயல் கொள்கிறது. ஒளி கொண்டு காணக்கூடிய விழி நிலையின் ஒளி உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் எண்ணத்தின் உணர்வுடன் மோதிய அலை அணுக்களையே வளர்த்துக் கொள்கின்றது.
1.ஆனால் பார்வையில் எதிர்ப்படும் செயலில் ஏற்படும் நிலைக்கொப்ப
2.“மாற்றி அமைக்க வேண்டும்…” என்ற நிலை வருவதில்லை.

இப்படி… சாதாரண நடைமுறையில் பழக்கப்பட்ட விழி நிலையில் காணும் ஒளி அலை உணர்வு எண்ண வேட்கைக்கொப்ப அணு வளர்க்கும் வளர் தன்மை மிக அழுத்தமான இயக்கம் வந்தால் மாற்றமாகின்றது. எப்படி…?

அதிர்வு…
ஆனந்தம்…
இனிமை…
கடுமை…
இதைப் போன்ற குணம் கொண்ட ஒளியின் விழி ஊடுருவல் செயல்படும் தன்மையால் அதற்குகந்த உனர்வின் எண்ண நிலைக்கொப்ப அணுத்தன்மை இச்சரீரத்தின் (இயந்திர) செயல் மாறிச் செயல்படுகின்றது.

அதாவது ஒளியினால் காணும் விழி நிலையின் உணர்வுக்கொப்ப பல பல ஒலிகளை வெளிப்படுத்துகின்றோம்..

1.அதிர்வு நிலை ஏற்படத்தக்க காட்சிகளைக் காணும் பொழுது
2.நம்மை அறியாமலேயே காணும் காட்சிக்கொப்ப
3.ஆ… இ… இச்.. இச்…! என்ற ஒலிகளை எழுப்புகின்றோம்.
4.இனிமை கலந்த காட்சி நிலையைக் காணும் பொழுது அதற்குகந்த ஆனந்த ஒலியை
5.நம்மை அறியாமலே ஆஹா… ஓஹோ…! என்று இனிமையுடன் கூடிய ஒலியைச் சிரிப்பலையுடன் வெளிப்படுத்துகின்றோம்.

இதன் தொடரிலேயே ஒலி அலையை ஈர்க்கவல்ல… செவி ஈர்ப்பு.. ஒலி கேட்கும் மோதலின் ஈர்ப்புக்கொப்ப… எண்ணத்தின் உணர்வு செயல்படுகின்றது.

ஆக… தான் கேட்கும் ஒலி ஈர்ப்புக்கொப்ப உணர்வின் எண்ணச் சுவாசத்தால் உடலின் அணு வளர்ப்பு நிலையும் ஏற்றத் தாழ்வு பெறுகின்றது.

இதன் தொடர்பைப் போன்றே…
1.சுவாசத்தில் மோதும் மணமும்
2.சுவையில் உண்ணும் உணவும்
3.மனித உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் அந்தந்த குண நிலைக்கொப்ப
4.அமில உணர்வின்… அணு வளர்ப்பின்… இந்திரிய ஆவி நிலையின் உதிர ஓட்டமாக சரீரத்தின் செயல் நடைபெறுகிறது.

இத்தகைய வாழ்க்கைச் செயலில் வாழும் நாம் இவ்வாழ்க்கையின் ஜீவாதார குறுகிய ஆண்டுகளில் பிம்ப உடலில் சமைக்கும் அணு வளர்ப்பின் ஆவி நிலையின்… “ஆத்ம உயிரின் உண்மை நிலை” புரியாமலேயே வாழ்கின்றோம்.

ஏனென்றால் இந்த மனிதத் திட பிம்பத்தின் இயந்திர ஓட்டச் செயல் சமைப்பின் வலுவைக் கொண்டு தான் மனிதனின் ஆரோக்கிய நிலையும்… ஞானத்தின் வழியில் செல்லும் குணச் செயல் முறையும்… அமைகின்றன.

உணர்வின் இந்திரிய ஓட்டத்திற்கொப்ப ஒருவரின் செயல் திறன் ஞானம் வெளிப்படுகின்றது. அந்த ஞானத்திற்கொப்பத்தான் வாழ்க்கையின் மேம்பாட்டு நிலையும் செயல் கொள்கின்றது.

இத்தொடரின் வழி நிலை வாழ்க்கையில் எப்படி ஒன்றியுள்ளதோ அத்தொடரைக் காட்டிலும் மிகத் துரித நிலையில் உயர்வு நிலைக்குச் செல்லக்கூடிய ஞான மார்க்கம்… சித்து மார்க்கம்…! இவ்வழியில் எண்ணத்தின் உணர்வைச் செலுத்திடல் வேண்டும்.

1.விழி ஒளி
2.செவி ஒலி
3.சுவாச மணம்
4.வாயின் சுவை
5.இவ் அலை உணர்வு எண்ணத்தில்
6.உயர்வு வழித் தொடர் நிலையில் செல்லும் செயல் முறைக்கு
7.இவற்றின் செயலால் உந்தப்படும் வேட்கையின் வழி முறையை வழியமைக்கும்
8.ஞான ஒளியை நாம் அறிதல் வேண்டுமப்பா…!

Leave a Reply