கண்களைத் திறந்து தியானிக்கச் சொல்வதன் சூட்சமம் என்ன…?

கண்களைத் திறந்து தியானிக்கச் சொல்வதன் சூட்சமம் என்ன…?

 

நாம் தியானம் இருக்கும் போது
1.சில நேரங்களில் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலும் கூட
2.அது திசை மாறிச் சென்று விடும்.

இது எதனால் ஏற்படுகின்றது…?

நாம் இதற்கு முன் நம் உடலில் நுகர்ந்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது தீய அணுக்களாக மாறும் பொழுது அதற்கு அந்த உணவு தேவை.

நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணினால்…
1.அது தனக்காக வேண்டி… எல்லா அணுக்களும் சேர்த்து அதனதன் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடியாதபடி அது தடுக்கும்.

எதனதன் வழிகளில் சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ எதன் மேல் பட்டோமோ அந்த உணர்வுகள் தான் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும். அதன் வழி நம் உடலில் உள்ள அந்தத் தீய அணுக்கள் அதனதன் உணர்வை எடுத்து வளரும்.

ஆக அதைத் தடுப்பதற்கு… உடனே கண்களைத் திறந்து நாம் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று மீண்டும் எண்ணி எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடலிலிருக்கக் கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
1.கட்டாயப்படுத்தி உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்குச் செலுத்தி
2.சிறிது நேரம் ஆன பின் கண்களை மூடி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இதன் வழி புகாதபடி அடைத்து உயிர் வழி நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்வது தான் இந்தப் பயிற்சி. அதாவது
1.நம் நெஞ்சுக்கு முன் இருக்கும் ஆன்மா வழியாக வராதபடி தடுத்து (மூக்கு வழி சுவாசம்)
2.புருவ மத்தி வழி கண்ணினின் நினைவு கொண்டு இழுக்கின்றோம்

ஏனென்றால் நம் உடலில் எத்தனையோ விதமான தீய அணுக்கள் இருப்பதால் அதனுடைய உணர்வுக்கு அதனுடைய வலுவைக் காட்டத்தான் செய்யும்.

அதை நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தி நம் உடலுக்குள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது அது வலிமை பெறுகின்றது.

இரத்தத்தின் வழி சுழன்று வரப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அதை இழுக்கும் சக்தி கிடைக்கின்றது.

ஆக கண்களைத் திறந்து தியானிக்கச் சொல்வதன் சூட்சமம் என்ன…?

உதாரணமாக…
1.நாம் தவறு செய்தவனை கண்ணின் நினைவு கொண்டுதான் எண்ணுகின்றோம்
2.எண்ணியவுடன் அந்த “நிழல் படம்” (தவறு செய்தவன் முகம்) எவ்வாறு தெரிய வருகின்றதோ
3.அந்த நேரம் அவனைப் பற்றிய உணர்ச்சிகளும் பல விதமான வெறுப்புகளும் எப்படித் தோன்றுகிறதோ அதே போன்று…
4.நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு செலுத்துதல் வேண்டும்.

ஏனென்றால் கண்களால் உற்றுப் பார்த்தது தான் நம் உடலுக்குள் அணுவின் தன்மை அடைந்தது. அதே மாதிரி
1.இந்தக் கண்ணின் வழி நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்கு
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று உள் முகமாகச் செலுத்தினால் அதனுடைய உணர்வுகளை எடுத்து நாம் நுகர்ந்து
3.”இரத்தங்களிலே ஈர்க்கும் சக்தி பெருகி” உடலில் உள்ள தீய அணுக்களை எல்லாம் நல்லதாக மாற்றும் சந்தர்ப்பம் வருகின்றது.

இது போன்ற ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

தியானம் இருக்கும் பொழுது நினைவுகள் எங்கெங்கோ அலைக்கழிக்கின்றது எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றது என்று சொல்ல வேண்டியதில்லை.

இதன் உணர்வை மாற்றி மாற்றி மாற்றி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் இரத்தத்தின் வழி செலுத்திப் பழக வேண்டும்… அதனின் வலுவைக் கூட்ட வேண்டும்…!

Leave a Reply