“துருவ நட்சத்திரத்தின் சக்தியே” நமக்கு அழியாச் சொத்து

“துருவ நட்சத்திரத்தின் சக்தியே” நமக்கு அழியாச் சொத்து

 

வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் செல்வங்களைக் குவித்து வைத்தாலும் சிறிது காலம் வாழ்வதற்குத் தான் அது பயன்படுகின்றது.

இன்றைய காற்று மண்டலத்தில் பரவி வரும் விஷமான அணுக்கள் வைரஸ் மீண்டும் மீண்டும் உற்பத்தியாகிக் கொண்டே தான் உள்ளது… அதைக் குறைக்க முடியவில்லை.

அதற்கு எதிர்ப்பான மருந்துகளைக் கொடுத்தால் தான் அது தணிகின்றது.

1.சர்க்கரைச் சத்து என்று வைத்துக் கொள்வோம் அதை முழுமையாக மாற்ற முடிகிறதா…?
2.இரத்தக் கொதிப்பு என்று வைத்துக் கொள்வோம்… அதை முழுமையாக மாற்ற முடிகின்றதா…?
3.சளி வருகின்றது… முழுமையாக மாற்ற முடிகின்றதா…?

எதிர்ப்பு மருந்துகளைக் கொடுத்து அதை அவ்வப்போது பணத்தை வைத்து நாம் சமாளித்துக் கொள்கின்றோம்.

தேடி செல்வத்தை வைத்து இதையெல்லாம் நாம் சமாளித்துக் கொண்டாலும் “செல்வம் தேடும் பொழுது” நாம் என்னவெல்லாம் செய்கிறோம்…?

பிறருக்கு எத்தனையோ துயரங்களை உருவாக்குகின்றோம்… தொல்லைகளையும் கொடுக்கின்றோம். ஒருவருக்குக் காசு கொடுக்காமல் ஏமாற்றி விடுகின்றோம். என்னை ஒருவன் இவ்வாறு பேசுகின்றான் என்று அவனைத் துன்பப்படுத்துகின்றோம்.

ஆனாலும் அப்பொழுது அவன் கடுமையாக வேதனைப்படுகின்றான்… வேதனையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். அந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் வருகின்றது.
1.பார்க்கலாம்… பலருடைய பகைமைகளைப் பெற்றுக் கொண்டோர் அனைவரும்
2.அவருடைய உடலில் இரத்த நாளங்களில் எவ்வளவு சீர்கேடான நிலைகள் உருவாகின்றது என்று…!

தேடி செல்வத்தைக் கொண்டு நோய்களை மாற்றிக் கொள்ள முடியும் மாற்றிக் கொண்டாலும் நீடித்த நாள் வாழ முடிகின்றதா…?

அதே சமயத்தில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி… தெய்வம் என்னைக் காப்பாற்றும்…! என்று சொன்னாலும் அதன் வழி சொல்பவரும் நீடித்த நாள் இருக்கின்றனரா…?

இப்பொழுது யாம் (ஞானகுரு) சொல்கின்றோம்… நீங்கள் கேட்கின்றீர்கள்.
1.இந்தத் தியானத்தில் வளர்ச்சி பெற்றவர்களும்
2.உடலில் நீடித்த நாள் இருக்கின்றனரா…? என்று கேள்வி கேட்கின்றேன்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் கொடுமையான விளைவுகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து தான் மனிதனாக வந்திருக்கின்றோம்.

1.எந்த உணர்வு எந்த உடலில் இருந்து நுகர்ந்ததோ அந்த வலிமையான உணர்வுகள்
2.நாம் சொல்கின்றோமே வைரஸ் என்று… இது போன்ற புதுப்புது அணுக்கள் உருவாகி
3.அதன் உடலில் இதே போல மாற்றப்பட்டு இறந்த பின் அடுத்த நிலையாகிறது
4.ஏனென்றால் தப்பிக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் உற்றுப் பார்த்த அந்த உடலின் வலிமையை இது நுகர்கின்றது.
5.இது அதிகமாகப்படும் பொழுது அந்த உணர்வுக்கொப்ப இந்த உடல் இழக்கின்றது (இறக்கின்றது)
6.அதன் உணர்வு இரையாகி இங்கே வலுவான பின் உயிர் வெளியே வரும் பொழுது
7.எதன் உணர்வை இந்த உடலில் வளர்த்ததோ அந்த உணர்வின் ஈர்ப்பாகச் சென்று
8.அந்த உடலுக்குள் எதை வலுவாக்கியதோ அங்கே அழைத்துச் சென்று அந்த உடலாக இந்த உயிர் மாற்றி விடுகின்றது.

இப்படித்தான் பல கோடித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகளைப் பெற்றுப் பெற்று… பரிணாம வளர்ச்சி அடைந்து… ஒவ்வொரு உடலிலும் பாதுகாக்கும் உணர்வுகளை எடுத்து… எடுத்து… அந்த உடலில் ஏற்பட்ட இந்த உணர்வின் துணை கொண்டு விளைந்து இன்று மனிதனாக வந்திருக்கிறோம்.

இது தான் மகாபாரதப் போர்…! மனிதனுக்குள் இந்தப் போர் நடக்கின்றது. ஏனென்றால் எத்தனையோ வகையான உணர்வுகள் இந்த மனித உடலுக்குள் உண்டு.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் தங்க ஆபரணத்தில் திரவகத்தை ஊற்றினால் அதில் இருக்கக்கூடிய செம்பு பித்தளையும் அது எப்படி ஆவியாக மாற்றுகின்றதோ… தங்கம் பரிசுத்தமாவது போன்று
1.துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகளை உங்களைப் பெறச் செய்வதற்குத்தான்
2.இப்படி எல்லாம் உபதேசத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.

Leave a Reply