நோய்க்குக் காரணமான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது

நோய்க்குக் காரணமான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது

 

உணர்வுடன் கூடிய எண்ணத்தால் வரக்கூடிய வியாதிகள் மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

கை கால் உணர்விழந்து வாதப்பிடிப்பு நோய்கள் எப்படி வருகின்றன…?

1.கோப உணர்வை வளரவிட்டுப் படபடக்கும் உணர்வுடன்
2.சலிப்பு சோம்பல் என்ற சங்கடத்துடன் கோப உணர்வின் அலையை மீண்டும் மீண்டும் எடுத்து அதனை அடக்கி
3.தன் சந்தோஷ உணர்வைக் கூட்டிக் கொள்ள உந்தலை அடக்கி
4.மற்றொரு உணர்வின் ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி
5.கோபத்தினால் வரக்கூடிய விளைவுகளைக் கண்டு அஞ்சி
6.சந்தோஷத்தால் மாற்றியமைக்க முடியும் என்ற தன் எண்ணத்தை மாற்றியமைத்து
7.இன்பம் என்று எதனைச் செயல்படுத்த எண்ணுகின்றானோ
8.இவ்விரண்டு அலைகளும் இவன் உணர்ந்து எண்ணும் எண்ணத்தால் சுவாசமுடன் மோதுண்டு
9.சத்ரு மித்ரு நிலையாகி நரம்புகளின் இயக்கத் தன்மை குறைவாகி உணர்வின் ஈர்ப்பு நரம்புகள் பாதிக்கப்பட்டு
10.சிறு மூளை பெருமூளை நரம்புகள் சரிவர இரத்த ஓட்டங்கள் ஓடப் பெறாமல் சில அடைப்புகளாகி
11.அதனால் வரும் வியாதிகள் தானப்பா இந்த வாத நோய்கள் எல்லாம்.

தோல்களில் ஏற்படும் சர்ம வியாதிகள் எப்படி வருகின்றன…? கட்டிகளும் சில புண்களும் எப்படி வருகின்றன…? உடலில் உள்ள பாக்கித் தன்மை எல்லாம் சரி வர இருந்தாலும் சர்மங்களில் ஏற்படும் ஒரு சில வியாதிகள் எப்படி வருகின்றன…?

உடலில் உள்ள சிறு உறுப்பிற்கும் நகம் முதற் கொண்டு ரோமங்கள் வரை ஜீவ சக்தி இருந்தால் தான் சீராக வளர்கின்றது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்குகந்த அமில ஈர்ப்பை அந்தந்த உறுப்புகளே தனக்குகந்த ஆகாரத்தைத்தான் எடுத்து வளர்கின்றது.

நகத்தின் அமிலமும் பற்கள் ரோமம் எலும்பு சதை எல்லாமே அதனதன் குண அமில ஆகாரத்தைத் தன் ஈர்ப்பின் சுவாசத்தால் எடுத்துத் தான் வாழ்கின்றன.

இப்படி வாழும் நிலையில் சர்மங்களில் அந்தந்த இடங்களின் ஈர்ப்பு ஜீவ சக்தி பாதிக்கும் பொழுது அதற்குகந்த துடிப்பு உணர்வை எடுக்காத முறையில் ஏற்படுவது தான் உடலில் ஏற்படும் சில கொப்பளங்களும் நகங்களின் வெடிப்புத் தன்மையும்.

ஈறுகளில் ஏற்படும் விஷ அணுக்களின் தாக்குதலினால் பற்களில் வியாதியும் சில அமில பாதிப்பால் ரோம (தலை முடி) வளர்ச்சி குன்றி உதிர்வதும் ஏற்படுகின்றன.

மனித எண்ண உணர்வு நிலைக்கொப்ப வியாதிகள் வரும் பொழுது இன்றைய விஞ்ஞானத்தால் சில செயற்கை முறை கொண்ட மருத்துவத்தால் பல சாதனைகளைச் செய்கிறார்கள்.

டி,பி வியாதிக்கெல்லாம் அந்த வியாதிக் கிருமியை அழிக்க அதற்கு மேல் சக்தி கொண்ட சில மருந்துகளைச் செலுத்தி இவ்விஷ விரிய சக்தி உடலைப் பாதிக்காமல் இருக்க அதற்கு மாற்று மருந்தையும் அதனுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.

1.உள்ள வியாதியை மற்றொரு சக்தியினால் அதனை மாற்றி…
2.மாற்றக்கூடிய அச்சக்திக்கு அதன் வீரிய குண படர்ப்பு உடலைப் பாதிக்காமல் இருக்க
3.மற்றொரு மருந்தையும் தந்து தான் விஞ்ஞான மருத்துவம் இன்றுள்ளது.

புற்று நோய்க்கெல்லாம் உறுப்புகளில் எந்தெந்தப் பாகத்தில் அதிகமாகத் தாக்கப்பட்டு அதனை ஆரம்ப காலத்தில் கண்டுணரும் முறை கொண்டு அந்தந்த உறுப்புகளை நீக்கி விடுகின்றனர்.

அதாவது உயிர் வாழக்கூடிய நிலை இருந்தால் கருப்பை மார்பகங்கள் குடல்கள் இவற்றின் நிலையில் புற்று நோய் தாக்கப்பட்ட இடங்களை நீக்கிச் செயல் கொள்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

நீக்கிவிட்டு உயிர் வாழ முடியாத பாகமாக இருந்தால் அத்தகைய தாக்குண்ட இடங்களில் உள்ள புற்று வியாதியை கதிரியக்கம் கொண்டு மின் அலையினால் அந்தந்தப் பாகங்களைச் செயலிழக்கச் செய்து செயல் கொள்ள வைக்கின்றார்கள்.

1.மின் அலையின் சாதனத்தால் உடல் மண்டல நரம்புகள் அனைத்தும் செயல் கொள்ளும் முறைகளையும்
2.உடல் உறுப்பின் உள் நிலைகளைக் காணக்கூடிய சாதனைகளையும் (X RAY, SCAN) இன்றைய விஞ்ஞானம் செய்கிறது.

இன்னும் பல விநோதக் கருவிகளை உருவாக்கி அதன் மூலம் உடல் முழுவதையுமே ஆராய்ந்து உயிர் காக்கும் செயல் ரூபம் அனைத்துமே
1.இன்று பொருளை ஈட்டும் வழியில் தான்…
2.விஞ்ஞான மருத்துவத்தில் வளர்ந்து கொண்டுள்ளதே தவிர
3.உணர்வின் எண்ணம் கொண்டு
4.நாம் எடுக்கும் சுவாசத்திற்கு வலுத் தந்து வளர்க்கும்
5.உன்னத சக்தியின் அலையை ஈர்ப்பார் யாரும் இல்லை…!

உடலில் தசைகளில் உருவான நோய்களை அகற்றினாலும் எண்ணத்தின் உணர்வால் உருவான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது.

Leave a Reply