ஆதி சக்தியாக இருந்தாலும் சப்தரிஷியாக இருந்தாலும் உணவு இல்லாது வாழ (இயக்க) முடியாது

ஆதி சக்தியாக இருந்தாலும் சப்தரிஷியாக இருந்தாலும் உணவு இல்லாது வாழ (இயக்க) முடியாது

 

பருப்பைப் பயிராக்கினால் பல பருப்பை அந்த ஒரு பருப்பு பலன் தருகிறது. ஒன்று வளர தன் வளர்ப்பின் பலன் தான் ஒவ்வொன்றும். சூரியன் தான் வளரப் மற்றதை வளர்க்கிறது.
1.ஒவ்வொரு இயற்கையின் ஜீவ வளர்ப்பும் தான் வளர…
2.தன் வளர்ப்பில் பிற வளர்கிறதே தவிர…
2.தன் வளர்ப்பில்லாமல் பிற வளர்ப்பு எச்சக்தியும் வளர்த்திக் காட்ட முடியாது.

தன் உணவைத் தான் எடுத்து தான் வளர்த்து தன் வளர்ப்பில் பிறவற்றையும் வளர்க்கச் செய்கிறது சூரியன். மற்ற மண்டலங்களின் ஈர்ப்பைத் தனக்கு உணவாக எடுத்துத் தான் வளர்ந்து தன் வளர்ச்சியின் பலனை வெளிப்படுத்தி அவ்வளர்ச்சியின் நிலையால் பிறவும் வளர்ந்து ஒன்றின் வளர்ப்பில் படர்கின்ற வளர்ப்பின் செயல் தான் எல்லாமே…!

தான் உட்கொண்டு தன் உணர்வை ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ சக்தி கொண்டு உணர்வால் எடுக்கும் முறை கொண்ட வழி கொண்ட தொடர் நிலைப்படி தான் சகல நிலைகளும் உள்ளன.

1.மிகவும் சக்தி வாய்ந்த அகில சக்தியான ஆதி சக்தியின் படைப்பிற்கே
2.தன் படைப்பின் உணவை உட்கொண்டு உட்கொண்டு
3.தன் படைப்பின் படைப்பில் பலவற்றையும் படைக்கின்றான்.

அதே போல்
1.உயிரணு தோன்றி..
2.அவ்வுயிரணுவின் உயிர் தோன்றி..
3.உயிர் செயலின் வழித் தோன்றி…
4.உயர் ஞான சக்தியாகி…
5.சகலமும் காணும் சப்தரிஷியானாலும்…
6.“அந்தச் சப்தரிஷியின் உணர்வுக்கும்…!” தன் வளர்ப்பை வளர்க்க உணவு தேவை.

தான் உண்டு… தான் வாழ… பிறரையும் வாழ வைக்க முடியுமேயன்றி “பிறர் வாழ்ந்தால் தான் வாழ முடியும்…!” என்ற நிலை எதற்குமே இல்லை.

நட்சத்திர மண்டலங்களும்… வளர்ந்து விட்ட சகல மண்டலங்களும்… காற்றினில் கலந்துள்ள பல கோடி அமிலங்களின் ஜீவ சத்துக்களும்… நீரும்… ஒளியும்… அனைத்துமே… தன் உணவை உட்கொண்டு தான் வளர்ந்து கொண்டுள்ளளன.

1.உணர்வின் சுழற்சிக்கு உணவு தேவை
2.உணவில்லாமல் எந்த ஜீவத் துடிப்பும் உயிர் வாழ்வதில்லை.

ஜீவனுடன் கூடிய பிம்ப உடலுடைய மனிதன் “ஜீவ சக்தி கொண்ட நீரையும் திடப்பொருள் உணவையும்” உட்கொண்டு வாழ்கின்றான்.

மிருகங்களும் மனிதனை ஒத்த நிலையில் வாழ்கின்றன. தாவரங்களின் நிலை “ஈர்ப்பின் சுவாசமுடன் உணவை” உட்கொண்டு அவை வாழ்கின்றன.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப தன் உணர்வு அழியாவண்ணம் நுகர்ந்து
1.தான் வாழ்ந்த காலத்தில் உண்டு வாழ்ந்த ஆகாரங்களின் வாசனையின் உணர்வை ஈர்த்து
2.தன் உணர்வுக்குகந்த உணவைக் காற்றிலிருந்து தன் சுற்றத்தாரின் உணர்வுடன் கலந்து
3.தன் உணவை உட்கொண்டுதான் ஆவி நிலையில் உள்ளவர்களும் வாழ்கின்றனர்.

ஆக..
1.ஜீவனற்ற பொருள்களுக்கு எதுவும் தேவையில்லை.
2.ஆனால் ஜீவனற்ற பொருளும் ஆவியாகக் கரைந்து பிறவற்றுக்கு ஆகாரமாகத்தான் செல்கிறது.
3.உணவில்லாமல் எந்த ஜீவ சக்தியும் வாழ்வதில்லை…

Leave a Reply