December 2022 உபதேசம்

நெற்றிக் கண்ணை நாம் திறக்க வேண்டும்

 

நண்பராகப் பழகுகிறோம். சந்தர்ப்பத்தில் அவன் தீங்கு செய்தான் என்றால் கண்களால் உற்று நோக்கி அதைப் பதிவாக்கி விடுகின்றோம். அதற்குப் பின் நினைவை நாம் செயல்படுத்தப்படும் பொழுது அந்த நண்பன் அமெரிக்காவில் இருந்தாலும் பதிவான உணர்வின் அலைகள் இதே காற்றிலே தான் உண்டு… அங்கே போய் அவனை இயக்கி விடுகிறது.

நாம் உபயோகப்படுத்தும் செல்ஃபோன்களில் பட்டனை அழுத்தியவுடன் இன்னார் பேசுகிறார் என்று தெரிகின்றது… அது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! அதே போன்று
1.நமது உயிர் எலக்ட்ரிக்
2.நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்
3.நாம் பார்த்த உணர்வுகள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.
4.அதில் எத்தனையோ எண்ணிலடங்காத வகைகளைப் பதிவாக்கலாம்.
5.பட்டனை அழுத்திச் செல்ஃபோனை இயக்குவது போல் பதிவானது அனைத்தும் அந்தந்தச் சந்தர்ப்பத்தின் அழுத்தத்திற்கொப்ப இயக்கும்.

வேறு ஒரு நண்பன் வருகின்றான் என்னப்பா…! உன் நண்பனை அமெரிக்காவில் பார்த்தேன்… அவன் நன்றாக இருக்கின்றான் என்று நம்மிடம் நினைவுபடுத்தினால் போதும்.

அவனா… துரோகி…! எங்கிருந்தாலும் அவன் உருப்பட மாட்டான்..! என்று அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு உடனே சொல்கின்றோம்.
1.அங்கே அமெரிக்காவில் அவன் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் இதே உணர்வு கிராஸ் ஆகி… சிந்தனை குறைந்து ஆக்சிடென்ட் ஆகும்
2.உணவு உட்கொண்டிருந்தால் புரை ஓடும்.
3.நடந்து சென்றாலும் மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விடுவான்.

அன்பால் பண்பால் பரிவால் நண்பன் என்று பழகுகிறோம். நமக்கு அவன் உதவி செய்தான் என்று எண்ணும் பொழுது அங்கே விக்கலாகப் பாய்கின்றது… அவனுக்கு நல்லதாகிறது.

கணவன் மனைவி பாசத்துடன் இருப்பார்கள். வீட்டிலே பையன் சொன்னபடி கேட்கவில்லை… குறும்புத்தனம் செய்கின்றான்… கணவர் வேலை பார்க்கும் இடத்தில் கஷ்டப்படுகின்றார் என்ற இத்தகைய சூழ்நிலையில்…
1.அங்கே தொல்லை படுத்துகின்றார்களே…! என்று மனைவி தன் கணவனை எண்ணினால்.
2.கணவன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாலும் இதே பாச உணர்வு அங்கே இயக்கப்பட்டு
3.மேடு பள்ளம் தெரியாதபடி ஆக்சிடென்ட் ஆகும்…. அல்லது வாகனம் வருவது தெரியாதபடி விபத்தாகும்.

இதெல்லாம் மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்டு இயக்கும் நிலைகள்…! பாசத்தாலும் இயக்குகிறது… பகைமையாலும் இயக்குகிறது…!

இப்படி
1.நம்மை அறியாது நம் உடலுக்குள் எத்தனையோ தீமைகள் இயக்கிக் கொண்டே தான் உள்ளது
2.அதனுடைய வலிமை கொண்டு நமக்குள் எத்தனையோ வகையான நோய்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றது
3.அந்த நோய்களால் நமக்குள் போர் நடந்து கொண்டே இருக்கின்றது
4.அதனதன் உணர்வுக்கொப்ப புறத்திலே நாமும் போர் செய்து கொண்டே தான் இருக்கின்றோம்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…?

மீள்வதற்குத் தான் “கோடிக்கரை…” என்ற இந்தக் கடைசிக் கரையில் இருக்கக்கூடிய நாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை நம் உயிரான ஈசனிடம் வேண்டி அங்கே நிலை நிறுத்த வேண்டும்.

அதைத்தான் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால்… சுட்டுப் பொசுக்கி விடுவான்…!” என்று காட்டினார்கள் ஞானிகள்.

1.தீமை நீக்கும் உணர்வின் சக்திகளைக் கண்ணிலே கவர்ந்து உயிரிலே மோதச் செய்யும் பொழுது “உயிர் வழி அது கவரப்படுகின்றது…”
2.மூக்கு வழி வருவதில்லை… தீமை புகாது அங்கே தடைப்படுத்தி விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் சிறிது நேரம் நிறுத்தி அந்த வலுவைப் பெற வேண்டும் என்று நம் எண்ணங்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் எலும்புக்குள் இருக்கும் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

ஏற்கனவே முதலில் சொன்னது போல் கண்ணின் நினைவு காற்று மண்டலத்தின் வழி ஒருவரை ஒருவர் தாக்கி அது இயக்குவது போல்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து எடுத்து
2.நம் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் பாய்ச்சி…
3.போர் முறைகளை மாற்றிச் சமப்படுத்தும் சக்தியாகக் கொண்டு வர வேண்டும்.

கல்கியைக் காண சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன

 

இன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக… அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.

நாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.

ஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.

இந்தப் பூயின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்… ஜீவன் பிரிந்த உடல்களும்… அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்… “சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்…” கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.

இந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவன்ற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.

இருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே…! அதன் நிலை எப்படி…?

நாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா…!

அது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.

அதன் பிறகுதான்… உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.

1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்…
2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்
3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்
4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.

ஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.

காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.

நம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா…? மற்ற மண்டலங்கள் இல்லயா…? என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.

அதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்
1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று… அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து
2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து
3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து
4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற
5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.

மண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா…? மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.

1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.
2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.

அதைப் போன்று…
1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை
2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.

சப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்… அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்
1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண
2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் நினைவு எதன் மேல் கூர்மையாகச் செல்கின்றதோ அது நமக்குள் அணுவாக உருவாகின்றது – உயிரின் வேலை அது
வீட்டிலே மிளகாயை வறுக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
1.அதிலே கருக்கல் வாசனை வந்து நாம் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டால்
2.நமக்குள் துடிப்பு வருகின்றது… திகைப்பு வருகின்றது.. அந்த இடத்தை விட்டு நகர்ந்து போகும்படிச் செய்கின்றது.

ஆனால் நாம் பார்ப்பதோ மிளகாயின் நெடிதான் என்று எண்ணுகின்றோம். இதைச் சாதாரணமாக நினைக்கின்றோம். இருந்தாலும்…
1.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே பட்டபின்
2.அந்த உணர்வுகள் எரிச்சலாகின்றது அல்லது தும்மலாகின்றது, நமக்குள் நெடி கிளம்புகின்றது.

இது நம் உயிரிலே பட்ட பின் “ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றி விடுகின்றது. எந்த வகையில் நுகர்ந்தாலும் முதல் முதலிலே நுகர்வதை ஜீவ அணுவாக மாற்றுகின்றது.

அந்த அணுவான பின் மீண்டும் அது நினைவாகின்றது. நினைவாகப்படும் பொழுது நம்மை என்ன செய்ய வைக்கின்றது…? “நம்முடைய நினைவினைக் கூர்மையாக எண்ண வைக்கின்றது…”

பக்கத்து வீட்டில் மிளகாய் வறுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் இங்கே பேசிக் கொண்டிருந்தால்
1.அந்த நெடி வந்தபின் இதை விட்டுவிடுவோம்
2.அந்த நெடி மேல் கூர்மையாக நினைவைச் செலுத்துவோம்.

அந்த உணர்வின் தன்மையைச் சிறிது நேரம் அதைப் பாய்ச்சி விட்டால் அது அணுவாகவே மாறிவிடுகின்றது. அதற்கு ஆகாரம் அந்த நெடி கலந்த உணர்வுதான்.

அந்த மாதிரி நெடி கலந்த உணர்வுகள் நமக்குள் சேர்ந்து விட்டால் நம்மையறியாமலே சில நேரங்களில் நமக்குத் தும்மல் வரும். “மூக்கில் தண்ணீராக வரும்…”

அந்த நெடி கலந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது எந்தெந்த உணர்வு வருகின்றதோ இவை அனைத்தும் அணுவாக உருவாகி விட்டால் அதற்கு உணவு தேவை.

நாம் சோர்வடைந்திருக்கும் பொழுது அது உணர்வின் தன்மை உந்தி விட்டால் அந்த அணு அதற்கு வேண்டிய ஆகாரத்திற்கு உந்தும். அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

இந்த உடல் வழியாகக் காற்றிலிருப்பதை அந்த நெடி கலந்த உணர்வை அது கவரும்.

ஏனென்றால் மிளகாயை வறுத்து வைத்தாலும் அந்த உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகத் தான் மாற்றுகின்றது. அதனுடைய வேலை அது.
1.நாம் நுகரப்படும் பொழுது அணுவாக மாற்றுகின்றது நமது உயிர்
2.அந்த அணுவின் மலம் தான் நம் உடலாக மாறுகின்றது… உடலாக மாற்றுகின்றது உயிர்.

ஆகவே…
1.நன்மையானாலும் தீமையானாலும் நமக்குள் எப்படி வருகின்றது…?
2.அது எப்படி உடலுக்குள் விளைகின்றது என்ற நிலைகளை நாம் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

ஐம்புலன்களின் இயக்கம் (பஞ்ச பாண்டவர்கள் – ஐவர்மலை)

 

மான் சாந்தமானது புலியோ கொடூரமானது. புலி மானைத் தாக்க விரும்புகின்றது தன் உணவுக்காக வேண்டி…!

மானைக் கொன்று புசிக்க வேண்டும் என்ற உணர்வுகள் புலியிடமிருந்து வெளிவரப்படும் பொழுது சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய “வெப்பகாந்தம்…” அதைக் கவர்ந்து கொள்கிறது.

புலியின் உணர்வைக் கவர்ந்து கொண்ட பின்
1.மான் புலியைப் பார்த்த பின்… வெப்பகாந்தம் கவர்ந்த உணர்வை மான் நுகர்ந்தபின் அதற்கு அந்த வலிமை வருகின்றது.
2.அது தான் கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருக்ஷேத்திரப் போர் என்று சொல்வது.
3.மான் புலியைப் பார்த்து அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது உயிரிலே மோதப்பட்டு
4.அபாயக் குரல்களை… இந்த உணர்ச்சிகளை எழுப்புகின்றது…
5.கண்ணன் சங்கநாதம் ஊதுகின்றான்… குருக்ஷேத்திரப் போர் அங்கே நடக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் புலியின் உணர்வுகளை அது எடுத்துக் கொண்டு வரும் பொழுது… “அர்ஜுனன் – வலிமைக்க சக்தி…!”

எதைக் கவர்ந்து கொண்டதோ அந்தச் சத்தை இதில் உள்ள விஷம் “அந்த உணர்ச்சியின் வேகத்தை ஊட்டும் – நகுலன்…!”

மான் நுகர்ந்து கொண்ட பின் உயிரிலே குருக்ஷேத்திரப் போராகிறது… ஆனால் அதே சமயத்தில்… எதையுமே குறிவைத்துத் தாக்கும் வல்லமை பெற்றவன் அர்ஜுனன் என்ற நிலையில் “புலியின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி… இரத்தத்தின் வழி சென்று அந்த வலிமையை உடல் முழுவதும் பரவச் செய்கின்றது – அர்ஜுனன்…”

இந்த உடலுக்குள் இந்த உணர்வின் தன்மை ஊடுருவி… குறி வைத்துத் தாக்கப்படும் போது… நகுலன்.
1.அதனுடைய இயக்க உணர்வின் தன்மை மானை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.இந்த வலிமையை ஒன்று சேர்த்து விடுகின்றது… அதாவது அதற்குள் விரிவடையச் செய்கின்றது.

அதனுடன் சேர்த்துக் கொண்ட பின்… இரண்டறக் கலந்து விட்டால் (மானின் உணர்வும் புலியின் உணர்வும்) – “சகாதேவன்…” என்றும் அதனுடன் சேர்த்து வலிமையாகி விட்டால் – “பீமன்…” என்றும் காட்டப்படுகிறது.

மானின் உடலுக்குள் புலியின் உணர்வுகள் வலிமை பெற்றால் அப்போது பீமன் என்ற நிலை வருகிறது. பீமன் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கித் தனது நிலைக்கே அடிமையாக்கி விடுகின்றான் என்று காவியத் தொகுப்புகள் காட்டுகிறது.

புலி தன் பசிக்காக அந்த மானை அடித்து உட்கொண்ட பின் மானின் உயிரான்மா வெளி வருகிறது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்…!

எப்படி…?

கண்கள் தான் உற்று நோக்குகிறது…
1.புலியோ மானின் உடலை இரையாக்குகின்றது
2.புலி மானின் உடலை இரையாக்குவதற்கு முன் “புலியின் உணர்வின் உணர்ச்சிகளை…”
3.மானின் கண்கள் தனக்குள் புலியின் உணர்வுகளை இரையாக்கி விடுகின்றது.

இரையின் உணர்வு செயலாகும் போது… எதன் வலிமை பெற்றதோ அதன் நிலை கொண்டு உருவாகிடும் தன்மை பெறுகின்றது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாக செல்கின்றான்.

அந்த வலிமைக்குத்தக்க சாரதியாகச் சென்று எந்தப் புலியைக் கூர்மையாக உற்றுப் பார்த்ததோ அந்தக் கூர்மைக்குத்தக்க வலிமை கூடி
1.அங்கே இதிலே சேர்ந்த காந்தப்புலன் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில்
2.செல்ஃபோன்களில் நாம் பதிவாக்கி விட்டால்… அதை இயக்கப்படும் பொழுது அது எப்படித் திரும்ப இயங்குகின்றதோ
3.ஒரு செடியில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது எப்படி விளைகின்றதோ
4.அதைப் போன்று எந்தப் புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் சென்றதோ
5.மானின் உயிரான்மா வெளிவந்த பின் புலியின் ஈர்ப்புக்குள் சூட்சமமாக வந்து விடுகின்றது.

புலியோ உடலுடன் இருக்கின்றது… அதைக் (மானின் ஆன்மாவை) கவர்ந்து விடுகின்றது. அதனுடைய கண்கள் இந்த மானை எப்படிப் பார்த்ததோ அதன் உணர்வு கொண்டு அதைக் கவர்ந்து விடுகின்றது.

புலியின் ஈர்ப்புக்குள் சென்று… புலியின் வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! என்று கண்ணன் உபதேசிக்கின்றார்.

பரிணாம வளர்ச்சிக்குக் கண் தான் பெரும்பகுதி வழிகாட்டுகிறது. ஆகவே… நமது வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தில்
1.நாம் நுகரும் தன்னைக் காட்டிலும் வலிமையான உணர்வுகள்
2.நம்மை எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மாற்றியது என்று தான் தெளிவாகக் கூறப்படுகின்றது நமது சாஸ்திரங்கள்.

இப்படி மானின் ஆன்மா புலியின் உடலுக்குள் சென்ற பின் அதனுடைய குட்டியாக உருவாகிவிடுகிறது. “குட்டியாக ஈன்ற பின் – தர்மன்…!”

மானின் உடல் முதலில் புலிக்கு இரையாக்கப்பட்டது. இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் குட்டியான பின் தன் நிலை (புலி) ஆன பின் தர்மன்… “எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு சமாதானப்படுத்துவான்…”

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில்
1.ஒவ்வொரு உணர்வுகளும் உணர்ச்சிகளும் எதன் எதன் வழியில்…
2.எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தான் சாஸ்திர விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

உலகத்திலுள்ள “பொருள் என்ற பொக்கிஷத்தை…” நாடி நாம் செல்லக்கூடாது

 

இந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்… அகழிகளிலும்… சுரங்கப் பாதைகளிலும்…. மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்… பீடங்களுக்குள்ளும்… பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அப்படி வைத்தவர்கள்…
1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்
2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்
3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.

நம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.

ஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன…?

1.பிம்பப் பொருளை அடைந்தால்
2.நாம் பெற வேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்…
3.மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து..
4.இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும்.

“நல்ல நிலை அடையும் வழி இல்லை…!”

இந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வக் கனி வளங்கள்… படிவக் குவியல்கள்… எங்கெங்கு உள்ளன…? என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.

அதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி…
1.எப்பொருளை அடைய வேண்டும்…? என்ற
2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.

சித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு
1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற
2.பலவாக உள்ள உலகத்தில் – ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.

ஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் உருவாக்கினாலும் இந்தப் பேரண்டத்தில் வந்த உணர்வின் துணை கொண்டுதான் ஒரு பிரபஞ்சமாக உருவாகின்றது.

பிரபஞ்சத்தில் உருவானதை ஒரு உயிரணு நுகர்ந்து உணர்வின் எண்ணங்கள் கொண்டு இயக்கும் தன்மை வந்து அதன் வழி கொண்டு மனிதனாக உருவாகின்றது.
1.மனிதனான பின் அகண்ட அண்டத்தில் பரவிக் கிடந்த உணர்வை நுகர்ந்தவர்கள் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
2.அவர்கள் அகண்டு சென்று எந்த அண்டத்திலிருந்து நுகர்ந்ததனரோ அதன் வழி வழி தொடர்ந்து
3.என்றும் அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலையாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தச் சூரியன் அழியலாம். ஆனால் மனித உயிர் இந்த உணர்வின் தன்மையைப் பெற்று விட்டால் என்றும் அழியா நிலைகள் பெறும் தகுதியைப் பெறுகின்றது.

அந்த நிலை பெறுவதற்காகத் தான் ஞானிகள் அனைவரும் சென்றார்கள்.

ஆகவே…
1.இந்த மனித வாழ்க்கையில் பல இன்னல்கள் எப்படிச் சேருகின்றது…?
2.நுகர்ந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது…?
3.இதிலிருந்து நீ விடுபடும் மார்க்கங்கள் என்ன…? என்று எம்மிடம் குருநாதர் வினா எழுப்பினார்.

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீ ஏங்கு. அதன் வலிமையை உனக்குள் சேர்த்துக் கொள். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உனக்குள் வளர்த்து அனைவரும் பெற வேண்டும் என்ற உணர்வை நீ செலுத்து.
1.அவர்கள் வளர நீ அதைக் கண்டு மகிழ்ச்சி பெறு… அதன் நிலைகளே உனக்குள் வளரும்.
2.அதை நீ பெறுவாய்… அனைவரையும் பெறச் செய்வாய் என்று குரு அருளை
3.எமக்குள் பாய்ச்சிய நிலைகளைத் தான் உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றேன்.

இன்றைய செயல் நாளைய சரீரம். இன்று எந்த உணர்வை நாம் சேர்க்கின்றோமோ அடுத்து ஒளிச் சரீரம் பெறலாம்.

அதே சமயத்தில் இன்று வேதனை என்றால் வேதனையை உருவாக்கி அதைக் கொண்டு வேதனையை உணவாக உட்கொள்ளும் அந்தச் சரீரத்தைப் பெறலாம்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு இன்று அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்ப்போம். நாளை ஒளியின் சரீரம் பெறுவோம்.

இந்த உடல் நமக்குச் சதமல்ல. ஆனால், இந்த உடலின் துணை கொண்டு தான் நாம் சப்தரிஷி மண்டலம் செல்ல முடியும்.

எனவே இந்த உடலில் இருக்கும் பொழுதே நம் நினைவின் ஆற்றலை மகரிஷிகளின் பால் செலுத்தி அதன் வலிமையை நமக்குள் வளர்ப்போம். தீமைகள் நம்மை நாடாது தடுத்துக் கொள்வோம். மெய் ஞானிகளுடன் ஒன்றுவோம்.

1.அந்த மெய் ஞானிகளுடன் ஒன்ற வேண்டும் என்றால்
2.முந்திச் செய்யத் தவறிய நிலைகளிலிருந்து நம் மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

கூட்டுத் தியானத்தின் மூலம் ஆயிரக்கணக்கோர் சேர்ந்த உணர்வுகளின் வலிமை கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்.

அவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரையச் செய்வோம்.

அதன் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பெறும் தகுதியைப் பெறுவோம்.
1.அந்த அருள் ஞானத்தைப் பெறுவோம்.
2.அழியா ஒளியின் சரீரம் பெறுவோம் என்று உறுதி கொள்வோம்.

“இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் உடல் இச்சைகளுக்காகத் தியானித்தால் நமக்கு வளர்ச்சி இருக்காது

 

எனக்கு இடைஞ்சல் செய்கின்றான் பாவி…! இப்படிச் செய்தால் அவனெல்லாம் உருப்படுவானா…? என்று நமக்கு ஆகாதவனைப் பற்றி நாம் பேசுகின்றோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் அந்த உணர்வின் தன்மையையே எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால் இடைஞ்சல் செய்தவனின் எண்ணமே நமக்குள் தோன்றுகின்றது. அதன் அணுக்களே நமக்குள் பெருகுகின்றது.

பின் அதற்கப்புறம் ஒன்றும் சொல்ல வேண்டாம். உடலில் அது நோயாக மாறி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி பகைமையை உருவாக்கும் அணுக்களாக விளைய வைத்த பின் உடலை விட்டுச் சென்ற பின் எங்கே போவோம்…?
1.அவர் முன்னாடி இறந்தார் என்றால் அவர் ஆன்மா இங்கே வந்து விடும்.
2.நாம் முதலில் இறந்தால் அவருக்குள் செல்வோம்.
3.இதே உணர்வை அந்த உடலிலும் விளைய வைத்து அந்த உடலையும் வீழ்த்தும்.

அவர்களும் அதேபோல தன் நினைவு கொண்டு மற்றவர்களை எண்ணுவார்கள். அந்த ஆன்மா வேறொரு உடலுக்குள் போகும்.

ஆனால் இந்த உடலை விட்டு வெளி வந்த ஆன்மாவோ நஞ்சு கலந்த உணர்வின் அணுக்கள் எதுவோ இந்த உயிருடன் ஒன்றிய கருவின் ஆன்மாவாக மாறுகின்றது.

அடுத்து உயிராத்மாவில் சேர்ந்த மணம் எதுவோ தேளோ பாம்போ விஷமான ஜெந்துக்களோ அத்தகைய உடலுக்குள் தான் போவோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

புழுவிலிருந்து பாம்பாக தேளாக மற்ற எத்தனையோ விஷ ஜந்துகளாகப் படிப்படியாக உருவாகித் தான் இன்று நாம் மனிதனானோம்.
1.மனிதனான பின் மீண்டும் விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டுமா…?
2.சற்று சிந்தியுங்கள்.

ஆகவே உடல் இச்சைகளுக்கு எண்ணி “இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் வந்தால் மீண்டும் சாதாரண வாழ்க்கையில் இருப்பது போன்று அந்த உணர்வுகளை வளர்த்துக் கீழே தான் போவோம்.

1.பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் மக்கள் மத்தியில் வந்து
2.தோல்வியைக் கண்டு வெறுப்படைந்துதான்
3.இத்தகைய (மனித) ஆன்மாக்களின் மீது பற்று இருந்தால் நம்மையும் இது இழுத்துக் கொண்டு போய்விடும் என்று
4.அவ்வாறு விலகிச் சென்ற ஞானிகள் ஏராளம்.

தீமையை அகற்றிடும் உணர்வை விளையச் செய்து அனைவரையும் ஞானியாக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் அந்த ஞானிகளுக்கு வரப்படும் போது தான் தகுந்த உபாயத்தைக் கொடுக்கின்றனர்.

அவருக்குள் உருபெற்ற இந்த நிலையை அவர் வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வை நுகர்வோருக்கெல்லாம் அது கிடைக்கின்றது. ஆனாலும் உடல் இச்சையுடன் இந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்தால் அது எங்கே கொண்டு செல்கின்றது…?

1.உடல் மீது பற்றின் தன்மை வரப்படும் போது விண்ணின் ஆற்றலை மறக்கச் செய்கின்றது.
2.பின் நாம் எங்கே போகின்றோம்…? கீழே தான் போகின்றோம்…!
3.அப்பறம் தியானத்திற்கு வந்தால் என்ன ஆகும்….?

சிலர் நீங்கள் தியானத்தில் என்ன பார்த்தீர்கள்…? என்ன பார்த்தீர்கள்…! என்று இப்படித் தான் மற்றவர்களைக் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

சாமி (ஞானகுரு) சொன்ன வழியில்தான் இவர் நடக்கிறார்.
1.அப்படி இருந்தும் இப்படித்தான் நடக்கின்றது… ஒன்றும் நல்லதாகவில்லை…! என்று இலேசாகத் தூண்டி விட்டால் போதும்…!
2.ஆமாம்…! என்று தலையாட்டி விட்டு… தான் பெற்றுக் கொண்டிருக்கும் நல்லதைக் கெடுக்கத்தான் உதவும்.
3.ஆக அவரும் பெற முடியாது… இவரும் பெற முடியாது…!

ஏனென்றால் நான் (ஞானகுரு) இவர்களிடமிருந்து ஏதோ சக்தி பெறுவதாகத் தான் அர்த்தமாகின்றது.

எல்லோரும் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்ற என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான் எனக்குள் அது உருபெருகின்றது. அந்த ஆசையைத் தான் நான் பெறுகின்றேன்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உபதேசத்தைத் தான் கொடுக்க முடியும்.

ஞானத்தின் தன்மை விளைந்த அந்த வித்தின் உணர்வுகள் சொல்லாக வரப்படும் போது சீதா. சூரியன் எடுத்து கொண்டால் உணர்வின் அலைகளாகப் படர்கின்றது.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுக்க எடுக்க அந்த உணர்வலைகள் உங்களுக்குள் சென்று
1.உங்களுக்குள்ளும் அருள் ஞானம் பெருகும்…
2.மெய் வழியில் செல்ல முடியும். பேரானந்த நிலை பெற முடியும்.

அதிக வெயில்… அதிக மழை… அதிகக் குளிர்… ஏன் இந்த மாற்றங்கள்…?

 

ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால் கதையாகப் படைக்கப்பட்டு உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால் “அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வடதிசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல்புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனல் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது… அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்துவிட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்..?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால் வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”

எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நாம் மனிதர்களாக இருக்கின்றோம் என்றால் எங்கேயோ ஆக்சிடென்ட் ஆகும் பொழுது சிதைந்த சரீரத்தை உற்றுப் பார்த்து அஞ்சி எண்ணுவோரின் உணர்வுகள் “பார்த்தேன் பயமாகிவிட்டது…” என்று அவர் பார்த்த உணர்வுகள் அவருக்குள் பதிவாகின்றது.

பதிவானாலும் ஓம் நமச் சிவாய… சிவாய நம ஓம்… தன் உடலாக்கிய பின் இந்த உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் இது பதிவாகிவிடுகின்றது.

பின் இந்த உணர்வைப் பதிவாக்கிவிட்டால்
1.எங்கே சிதைந்த உணர்வுகளோ அந்த உணர்வுகள் பரவியிருப்பதை இவர்களும் நுகர்ந்து
2.இவர்கள் அறியாமலேயே அந்த வேதனையும் அச்சுறுத்தும் உணர்வுகளும் இங்கே (எல்லோருக்கும்) வந்துவிடுகின்றது.

இதைப் போன்று நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ இதை நம் உயிர் உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றது. இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் “விடுபட வேண்டுமா இல்லையா..?”

அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரையிலும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் சக்தி வாய்ந்த ஒளியான உணர்வலைகள் நம் பூமியின் துருவப் பகுதி வழியாக வெளி வருகின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதன் தொடர் கொண்ட உணர்வைக் கவர்ந்து நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இந்த உயிரணுவின் தோற்றமும் பிரபஞ்சத்தின் தோற்றமும் உயிரணுவின் வளர்ச்சியும் வளர்ச்சியடைந்த மனிதரில் துருவ மகரிஷி எவ்வாறு உருவானரோ அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அந்தப் பதிவின் நினைவு கொண்டு உங்களுக்குள் உருவாக்கி விட்டால் இந்த உணர்வின் துணை கொண்டு எளிதில் அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

காலை நான்கிலிருந்து ஆறு வரையிலும் நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

பின் அங்கே அடிபட்டவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சுதல் வேண்டும். அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும், உடல் நலம் பெறவேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்ச வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை உடலுக்குள் உள் புகுத்தி விட்டால்
2.தங்கத்தில் திரவகத்தை ஊற்றியவுடன் செம்பையும் வெள்ளியையும் ஆவியாக மாற்றித் தங்கம் எப்படிப் பரிசுத்தமாகின்றதோ
3.அதைப் போல நம் ஆன்மாவில் புகுந்த எத்தகைய கொடுமையான தீமைகளையும் அப்புறப்படுத்திவிடும்.
4.நம் ஆன்மா பரிசுத்தமாகிவிடும்.

கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் உலக மாற்றங்கள்…

 

உதாரணமாக 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய உணர்வலைகள் சூரியனுக்குச் செல்லும் பாதையில் துருவத்தின் வழி நம் பூமிக்குள் கவரப்பட்டால் நம் பூமியின் காற்றழுத்த மண்டலத்தில் மோதிய பின் அந்த உணர்வுகள் எரிக்கப்பட்டு அது பரவப்பட்டு மின்னலாக மாறுகிறது.

1.கடலிலே பட்டால் மணலாக மாறுகின்றது…
2.மரத்தில் பட்டால் மரம் கருகி விடுகின்றது.
3.அந்த மின்கதிர்களின் உணர்வுகள் பூமிக்கு அடியிலே சென்றால் நடு மையத்தில் கொதிகலனாக மாறுகின்றது.
4.இதிலே வந்த துகள்கள் அனைத்தும் பூமியிலே படர்ந்து விடுகின்றது.

ஆனால் இதற்கு எதிர்நிலையான நட்சத்திரங்களின் துகள்கள் நம் பூமியின் ஈர்ப்பிற்குள் வந்தால் அதனுடைய அழுத்தம் அதிகமானால் இந்த உணர்வலைகள் படர்ந்து இருக்கும் பொழுது இது இரண்டும் ஒன்றுக்கொன்று மோதும் போது சூறாவளியும் சுழிக்காற்றுகளும் உருவாகின்றது. இது இயற்கை…!

ஆனால் மின்னல்கள் கடலில் பட்டு மணலாக மாறியதை விஞ்ஞான அறிவு கொண்டு பிரித்து எடுத்து அதை யுரேனியமாக உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை வைத்து அணு உலைகளையும் விஷமான ஆயுதங்களையும் செய்து வைத்துள்ளார்கள்.
1.அதிலிருந்து வெளிப்பட்ட கசிவுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.
2.எங்கெங்கு இது அதிகமாகச் செயல்படுத்தினார்களோ அந்த நாட்டில் உள்ள காற்று மண்டலத்தில் இது அதிகமாகப் படர்ந்து கிடக்கின்றது.

ஆனால் இயற்கையாக நட்சத்திரங்களுடைய உணர்வலைகள் அழுத்தங்கள் வரும் சமயம்… அதனுடன் மனிதன் செயற்கையாக உருவாக்கி வெளிப்படுத்திய அணுக்கதிரியக்கங்கள் மோதும் பொழுது
1.மிக மிகக் கடுமையான சூறாவளியாக
2.எல்லாவற்றையும் துரித கதியில் அழிக்கும் நிலையாக வந்து விடுகிறது
3.(வெயிலோ மழையோ காற்றோ பனியோ எதுவாக இருந்தாலும் அது வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டே போகும்)
4.விஞ்ஞான அறிவால் செயல்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் இத்தகைய தீமைகள் படர்ந்து கொண்டே உள்ளது (TORNADO, CLOUDBURST, BOMB CYCLONE…)

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்கே தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன்… அவன் உடலில் விளைந்த உணர்வுகள் பூமியிலே படர்ந்து கொண்டு தான் உள்ளது.

1.தென்னாட்டின் எல்லையில் அவனுடைய உணர்வுகள் அதிகமாக இருப்பதால்
2.அதை நாம் எளிதில் பெற்று அகஸ்தியனைப் போன்ற அருள் ஞானிகளாக உருவாகி
3.விஷத்தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகை
4.அந்த விஷத்தை நீக்கிடும் ஆற்றலை நாம் பெற வேண்டும்.

எத்தகைய விஷத்தையும் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் செலுத்தி அதை வலுவாக்கி அதன் உணர்வைப் பூமியில் பரப்ப வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை அடர்த்தியாக பூமியில் நாம் படரச் செய்யும் போது விஞ்ஞான அறிவால் உருவான விஷத்தன்மைகளை அகற்றி… இங்கே வாழும் மக்களை நாம் தெளிவாக்க முடியும்.

இதைப் படிப்போர் “அந்தத் தன்னம்பிக்கையுடன் செயல்படுத்துங்கள்…” அதே சமயத்தில் “அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்… உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்…!”

மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஏன் சொல்கிறோம்…?

 

ஓர் மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல்… குணமும்… உடல் உறுப்பும்… உருவமும்… எல்லாமே இருந்திடும்.
1.அதை எல்லாம் எந்த ஒரு தனி மனிதனுக்கும்
2.ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை…! (இது முக்கியம்)

எல்லாமும் ஒன்றாக… ஒன்றிலே எல்லாமும் உள்ள பொழுது.. எதன் அடிப்படைச் சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ… அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு… அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.

ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின் வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் அந்த மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப ஆவிகளின் (பிற ஆன்மாக்கள்) தொடர்பும் ஏற்படுகின்றது.

மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அந்த இயந்திரம் எடுத்து ஓடுகிறது.

அதைப் போல்…
1.எதன் அடிப்படையில்… எதன் விகித நிலைக்கொப்ப..
2.ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணச் சுவாசமும் உள்ளதோ..
3.அதன் சக்தி நிலையைத்தான் அவன் பெற முடியும்.

அதன் செயலில் தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி பல கோவில் ஸ்தலங்களுக்குச் சென்று ஆண்டவனை வணங்கி வந்து “பூஜித்துச் சக்தி பெறுவதல்ல…!”

எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இந்தக் காற்றின் அமிலத்திலிருந்து “நமக்குகந்த அமிலத்தை நாமாக எடுத்துக் கொள்ளலாம்…”

இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும் இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில் நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த மகரிஷிகளின் பால் நம் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

அப்படி மகரிஷிகள் பால் தொடர்பு கொண்டு எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்… இந்த உடலுடன் மனித உலக வாழ்க்கையில் வாழும் நாம்
1.பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும் இந்த வாழ்க்கையிலிருந்து பெற முடியாத “ஞானத்தை”
2.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை மகரிஷிகள்பால் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
4.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும் வழி முறைப் பாதையை அறிந்து கொள்ளலாம்.
5.அந்தப் பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய வழியில் எந்தத் தடங்கலும் இருக்காது.

பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி… “ஓ…ம்” என்ற ஒலியுடன் மகரிஷிகள் பால் நம் எண்ண ஈர்ப்புச் சக்தியை நாம் தந்தோமானால் மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்.

ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.

ஞானிகளும் சப்தரிஷிகளும் நம் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்காவிட்டால் நம் பூமியில் மனித ஞானம் இன்று “ஞானமும் கண்டிருக்காது… விஞ்ஞானமும் கண்டிருக்காது…!”
1.இன்றைய காலகட்டத்தில் நம் மகரிஷிகளின் ஒளி சக்திகள்
2.இந்த உலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் மனித ஞானம் எல்லாமே ஞானத்தின் பால் செல்லும் வழிமுறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தன் வலுவான விந்தை காணத் துடிக்கிறது.

மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுகள் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு… மோதி… உயிர்ப்பலிகள் அதிகமாகி…
1.ஆவியின் சூழ்ச்சியில்.. அல்லலுக்கந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் மனிதன் என்பதை
2.அறியாமல் தான் இன்றைய மனிதர்கள் வாழ்கின்றனர்…!

தானதாக உள்ளது எது…? என்பதும் இம் மனித ஞானத்திற்குப் புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை… “தனியாக” யாருமே எங்கேயுமே வாழ முடியாது.

காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுள் உள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து… வாழும் மனிதன்…
1.தானாக வாழ்கின்றானா..? அந்தத் “தனது” என்ற பேராசைக்கார மனிதன்…?
2.ஒன்றின் துணையில்லாமல்…
3.ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்
4.”நான்…” என்ற நானாக… வாழ்கின்றானாம்..!

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விண்ணிலே அணுவாகத் தோன்றி சூரியன் வரையிலும் வளர்கின்றது. சூரியன் தன் வளர்ச்சியில் உயிரணுக்களை உருவாக்கி மனிதனாக உருவாக்குகின்றது.

மனிதனான பின் மனிதனின் நிலைகளில் பிறவியில்லா நிலைகள் அடைந்த துருவ மகரிஷிகளின் உணர்வுகளை அவர்கள் பெற்ற வழியை குரு காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் உபதேசிக்கின்றோம்.

உணர்வுகளைப் பதிவு செய்த அதன் வழி தியானித்து அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

பெருக்கிய பின்…
1.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து வந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை
2.நாம் அனைவரும் அந்தத் துருவ மகரிஷியின் வலு கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பின் வலு கொண்டு
3.அங்கே சப்தரிஷி மண்டலத்தில் உந்தித் தள்ளப்படும் பொழுது அதன் உணர்வு அங்கே கலக்கப்படுகின்றது.

அதே சமயம் அந்த ஒளிக் கதிர்கள் உயிரான்மாக்கள் மேல் படப்படும் பொழுது உடல் பெறும் உணர்வுகள் கரைக்கப்படுகின்றது. உயிருடன் ஒன்றிய அறிவு நிலைத்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக வளர்ச்சி பெறத் தொடங்கிவிடுகின்றது.

1.அக்காலங்களில் இவ்வாறு சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.
2.அவர்களை முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்.

எண்ணிலடங்காதவர்கள் தனக்குள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு அங்கே பிறவியில்லா நிலைகள் அடைந்தவர்கள்.

ஏனோ காலத்தால் அதைப் பக்தி என்ற நிலைகளில் மாற்றப்பட்டு மனிதன் உடலின் இச்சைக்கே மாற்றிவிட்டார்கள். உண்மையின் உணர்வுகள் மறைந்தே போய்விட்டது. மெய்யை அறிய முடியாத நிலைகளில் தடைப்பட்டுவிட்டது.

அருள் மகரிஷிகளின் துணை கொண்டு என்றும் பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உடலை விட்டுப் பிரிந்த முன்னோர்களின் உயிரான்மாக்களை என்றும் பிறவியில்லா நிலைகளை அடையச் செய்யுங்கள். அவர்கள் முன் சென்றால் நாம் பின் செல்கின்றோம்.

அதன் உணர்வின் துணை கொண்டுதான் அதன் உணர்வை நமக்குள் கூர்மையாக்கப்படும் பொழுது அந்த வலிமை நமக்குள் பெறுகின்றது. ஆகவே,
1.என்றும் பெரு வாழ்வான இந்தப் பேரின்பப் பெரு வாழ்வை அடைவதுதான் மனிதனின் கடைசி எல்லை.
2.அதன் பின் உலகில் நமக்குப் பிறவியில்லை.
3.அகண்ட அண்டத்தில் எங்கும் செல்லலாம். எதனின் உணர்வையும் இருந்த இருப்பிடத்திலிருந்து நுகரலாம்.
4.அருள் ஒளியின் தன்மையை நாம் பெறலாம்.

இதனின் வழி கொண்டு நாம் செயல்படுத்துதல் வேண்டும். இந்த மனித உடலில் நினைவிருக்கும் பொழுதே அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும்.

இதன் உணர்வின் துணை கொண்டு நாம் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

மக்கள் மகிழ வேண்டும்…! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே சிவபதம் முதலிய எப்பதமும் காணலாம்

 

சக்தியின் நிலை பலவற்றில் கலந்திருந்தாலும் அதன் “கூட்டு நிலை…” கொண்டு தான் ஒவ்வொன்றின் பிரகாசமும் ஜொலிக்கின்றது.

தனித்த பூக்களாக இருந்தாலும் அதை எல்லாம் ஒன்றாகக் கோர்த்து ஆரம் கட்டித்தான் ஆண்டவனுக்குச் சூட்டி மகிழ்கின்றோம்.
1.ஒன்றாக உள்ளதைப் பலவாகத் தருவதே இயற்கை…!
2.தாவர வளர்ச்சியின் நிலையிருந்துதான் முன்னோடி நிலை பெறுகின்றது.

தானாக வளரும் தாவரங்களும் சரி… நாமாகப் பயிர் செய்யும் தாவரங்களும் சரி… ஆரம்ப வளர்ச்சியில் அதற்கு வேண்டிய சக்தியை ஈர்த்துத் தன் சேமிப்புச் சக்தியின் பலன்களைத் தருகின்றன.

1.பூவும் காயும் கனியும் சில தாவரங்கள் தருகின்றன.
2.பூவும் கனியும் அளிக்காத புல் பூண்டு இன வர்க்கங்கள் அதன் அமில குணங்கள் முற்றிய பிறகு
3.வேர்களின் அதனின் சக்தி குணத்தை அதிகப்படுத்திக் கனம் கொண்டு தான் சேமித்து
4.வளர்ச்சி நிலையை வளரந்த பிறகு வெளிப்படுத்துகின்றது.

“வளர்ச்சியின் முற்றலை…” ஒவ்வொரு தாவர இன வர்க்கமும் வெளிப்படுத்திய பிறகு தான் அதனின் உயிர் ஜீவ சக்தி மாறுபடுகிறது.

அதன் மாற்றத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவ ஆத்மாக்களுக்கு ஆரம்ப காலத்திலேயே ஒன்றாகப் பல அமில குணத்தை ஈர்க்கும் நிலை பெற்றதனால் மனிதனும் மிருகமும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இன வர்க்கங்களும் தம் உடல் அவய அமைப்பில் பல நிலைக்கேற்ப அங்க அவயங்கள் ஒரே தன்மையில் ஈர்த்து வளரும் நிலை கொண்ட இன குணங்களுடைய ஜீவராசிகளாக வளர்ந்திருக்கின்றோம்.

தாவரங்கள் சக்தியை ஈர்த்துப் பிறகு பலன் தருகிறது. தாவரங்களுக்கு உண்டு கழிக்கும் நிலை இல்லை.

பலவும் ஒன்றாக ஈர்த்துப் பல அவயங்களை ஒன்றுபடுத்தி உருவ அமைப்பு கொண்ட ஜீவன்களுக்கு உண்டு கழித்து வாழும் அவயங்கள் எப்படி அளிக்கப்பட்டன…?

அளிக்கப்பட்டன…! என்பதைக் காட்டிலும் வளர்ச்சியில் முன்னேற்றம் கொண்ட ஜீவ ஜெந்துக்கள் தன் வளர்ச்சியில் உண்டு கழித்துப் பல கோடி உயிரணுக்களை வளர்த்து வாழும் நிலையில்… “பயன் பெறும் பக்குவ நிலை பெறுவது தான்…!” அது.

அதாவது…
1.தன் அவயங்களில் உள்ள பல கோடி அணுக்களை வளர்த்து
2.ஒன்றாக அதைக் கூட்டிப் பேணிக் காக்கும் ஓர் உயிரணுவின் தெய்வ சக்தியில்
3.உயிர் சக்தியான மனித உயிரணுவின் ஞானத்தின் வளர்ச்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டு
4.ஞான வளர்ச்சிக்கு உகந்த தன்மையில் ஒவ்வொரு உயிரணுவும்
5.இதன் தொடருடன் ஐக்கியப்படும் வளர்ச்சி நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான் மனித ஜீவன் பெறும் பலன்.
6.ஆக ஜீவனாக உள்ள ஜீவனின் பலன்… இந்த ஞானம் பெறும் வழி ஞானம் தான்.

பலனற்ற நிலை பெறாத ஜீவ ஞானம் தான் அதனின் தொடரில் ஏற்படும் “மாற்று நிலைகளுக்குச் செயல்படச் சென்றுவிடுகிறது…”

மனிதனின் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் அதனதன் வளர்ச்சியில் வளர்ந்து கொண்டு இருந்தால் தான் அவயங்களில் உள்ள அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமான நிலையில் வளர்ந்து வாழ முடிகின்றது.

அணுக்களுக்கு உகந்த உணவை அதற்குகந்த ஈர்ப்பில் பெற்று வளர்ந்து வாழ்கின்றது.
1.எண்ணத்தின் நிலையை மாற்றிக் கொண்டு செயல்புரியும் நிலை பெற்று விட்டால்
2.ஈர்க்கும் குண நிலையும் அதன் வழித் தொடர் கொண்ட எந்தச் செயல் முறையும் தடைப்படத்தான் செய்யும்.

பலவாக உள்ள பூவை ஒன்றாக்கி ஆரம் கட்டி அதன் அழகை ஆண்டவனுக்கு அணிவித்து இன்பம் காணுவது போல்
1.நம் உடலில் பலவாக உள்ள அணுக்களை ஒன்றாக ஆரம் கட்டி
2.உயிராத்ம ஆண்டவனுக்கு ஞானம் சூட்டி… அழகாக்கி…
3.மனிதன் மகிழ வேண்டும்…! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே
4.சிவபதம் முதலிய எப்பதமும் காணலாமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமைகளை வென்ற துருவ மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து இந்த நினைவினைக் கூர்மையாக எண்ணி அந்த உணர்வைத் தனக்குள் பாய்ச்சித் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று செருகேற்றி அதே போன்று தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவி செலுத்துவதும்…
1.இவ்வாறு செய்தவர்கள் அனைவரும் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக்கி
2.சப்தரிஷிகளாக ஒளியாக மாறி இன்றும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

அதனைப் பெறுவதற்குச் செய்த மார்க்கங்கள் அனைத்தும் அடைப்பட்டுவிட்டது… மதங்களாக மாற்றிவிட்டனர். மதத்தின் உணர்வுகளைச் செருகிவிட்டனர்.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிகளை நாம் இன்றும் தேடிக் கொண்டிருக்கின்றோம்.
1.எத்தனையோ வகையில் நல்லதைத் தேடுகின்றார்கள்… நல்லதைத் தேடி அலைகின்றார்கள்,
2.உண்மை கிடைக்கவில்லை.

ஆனால் அந்தப் பேருண்மையின் நிலைகளை அறிவதற்கு எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் குருநாதர் எமக்குக் கொடுத்தார்.
1.பல விபத்தான இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்… விபரீதங்கள் பல நடப்பதையும் காட்டினார்
2.அந்த விபரீதத்தை நுகரப்படும் பொழுது சிறிது நேரத்திற்குள் உன் உடலுக்குள் அது என்ன செய்கிறது…?
3.உன்னுடைய இருதயம் எப்படித் துடிக்கின்றது…?
4.அணுக்களின் நிலைகள் எப்படி மாற்றமடைகின்றது…?
5.உன்னுடைய எண்ணங்கள் எப்படி மாறுகின்றது…?
6.உணர்வின் அணுக்கள் எப்படி உருவாகின்றது…?
7.இதற்கு மாற்று வழியாக “என்னென்ன வழிகள்…?” என்று அதை மாற்றிடும் மார்க்கங்களையும் காட்டினார்… மாற்றிடவும் செய்தார்.
8.மாற்றிடும் உணர்வை நுகரச் செய்யவும் வைத்தார்… நுகர்ந்தேன், மாற்றினேன்.

குரு வழியில் யாம் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைத் தான் உங்களுக்குள் இங்கே உபதேசித்து வருகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்களைக் கடந்து இன்று மனிதனாக இருந்தாலும் இந்த வாழ்க்கையில் இன்னலைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

வேதனை வெறுப்பு கோபம் கொதிப்பு என்ற உணர்வுகளை அதிகமாக வளர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மனிதன் மீண்டும் தேய்பிறை என்ற நிலைகளுக்கே வருகின்றான்.

எதன் வழிகளில் ஒருவர் நம்மைக் குறை கூறுகின்றனரோ அதை நமக்குள் அதிகமாக வளர்த்து விட்டோம் என்றால் அதன் உணர்வு கூர்மையாகி அதனின் வலிமையானபின் குறை கூறுபவரின் உடலுக்குள் சென்றுவிடுவோம்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட
1.உங்களுடைய கூர்மையின் எண்ணங்கள் அந்த மகரிஷிகளின் பால்
2.சப்தரிஷி மண்டலத்தில் செலுத்தும்படி வேண்டிக் கொள்கின்றோம்.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலும் ஒவ்வொரு உணர்வுகளிலும் இதைப் பாய்ச்சுகின்றேன்.

நீங்கள் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்ததை நினைவுப்படுத்தி அந்தக் கூர்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெறுங்கள். உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

தொடர்ந்து இதைச் செய்தால் பெரு வீடு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைகின்றோம்.

இது நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி.

வியூகத்தைத் தகர்த்து… அதற்குள் சென்று… நீ அதுவாக ஆகு…!

உதாரணமாக செல்ஃபோன்களில் அதற்குள் இயங்கக்கூடிய நிலைகளில் மிகவும் நுண்ணியதாக சிறிதளவே கொடுத்துள்ளார்கள்.
1.ஆனால் அதிலே பல இலட்சக்கணக்கான உணர்வுகளைப் பதிவு செய்கின்றனர்.
2.அதை வைத்து நாம் இயக்கப்படும் பொழுது பலரிடம் நாம் தொடர்பு கொள்கின்றோம்… இயக்குகின்றோம்

இதைப் போன்று தான் நாம் கோபப்பட்டவர் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் அவனை எண்ணியவுடன் நமக்குக் கோபம் வருகிறது. சோர்வடைந்து வேதனைப்படும் பொழுது சிந்தனை குறைகிறது.

இது எல்லாம் நமக்குள் இயக்கும் தன்மைகள்.

ஆனால் அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதன் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது “நாம் எண்ணும் போதெல்லாம்…” உடனே அந்தச் சக்திகளைக் கவர்ந்து நம் உடலில் நல்ல இரத்தங்களாக உருவாக்க முடியும்.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுக்க முடியும்.

வேதனையான உணர்வுகளைச் சுவாசித்த பின் அந்த விஷத்தன்மைகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் பட்ட பின் அவை மயக்கம் அடைகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தத்தில் அதைக் கலக்கச் செய்தோம் என்றால் அது விஷத்தை எல்லாம் ஒடுக்கியது… அப்போது நமக்குள் அது உற்சாகத்தை ஊட்டுகின்றது.

நம் உயிர் எப்படி உலக உணர்வின் தன்மை அறிவிக்கின்றதோ இதைப் போன்று
1.தடையின்றித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
2.உடலுக்கு பின் உயிரைப் போன்று உணர்வுகளை ஒளியாக மாறற முடியும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
3.இப்படித்தான் அகஸ்தியன் ஒளி நிலை அடைந்தான்… அவனுக்குள் கற்றறிந்த உணர்வின் துணை கொண்டு
4.அதே போன்று நாமும் அடைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் (ஞானகுரு) பல காடு மேடேல்லாம் அலையச் செய்தார்.
1.இயற்கையில் சூழ்நிலைகள் எப்படி மாறுகின்றது…?
2.தாவர இனங்கள் எப்படி மாறுகின்றது…?
3.வலுவான தாவரங்களின் மணத்தைக் கண்ட பின் மற்ற வலுவற்ற தாவரங்கள் எப்படி அஞ்சி ஓடுகின்றது…?
4.ஓடிய உணவுகள் மற்றொன்றுடன் மோதிக் கலந்து புதுப்புது வித்துக்களாக எப்படி உருவாகின்றது…?
5.விஷத்தன்மையும் வளர்கின்றது விஷமற்ற உணர்வுகளும் வளர்கின்றது அது எல்லாம் எப்படி…? என்று காட்டினார் குருநாதர்.

அது எப்படியோ அதே போல் தான் ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் உணர்வுகள் எத்தனை வகையான உணர்வுகளாக உடலுக்குள் சென்று அது தொடர்ந்து இயக்கி விடுகின்றது.
1.உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போராக நடக்கின்றது
2.உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராக நடக்கின்றது.
(வேதனை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராகின்றது)

மகாபாரதப் போர் என்றால்… இந்த மனித உடலுக்குள் எத்தனையோ வகையான செய்திகளைக் கேட்கின்றோம் நமக்குள் அந்தப் பதிவுகள் உண்டு.

அதிலே நல்ல அணுக்களும் உண்டு… ஆனால் வேதனைப்படும் உணர்வுகள் அந்தக் கணக்கு அதிகரித்து விட்டால் கலக்கமும் சஞ்சலமும் வெறுப்பும் வேதனையும் கொதிப்படையும் தன்மையும் ஆகி “தன் நிலையை…” சீராக ஆக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.

உற்றுப் பார்த்து நம் கண்களால் கவரப்படும் பொழுது அது எந்த உணர்வோ உயிரிலே படும் பொழுது “கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் குருக்ஷேத்திரப் போர்…”

கண்கள் கவர்ந்தது உயிரிலே பட்ட பின் அந்த நாதங்கள் உடலுக்குள் உணர்ச்சிகளாக இயக்குகின்றது. நல்லது என்றால் மகிழ்ச்சி அடைகின்றது தீமை என்றால் குருக்ஷேத்திரப் போராக நல்ல உணர்வுக்கும் நாம் நுகர்ந்ததற்கும் போர் நடக்கின்றது.

தீமை என்றால் உடலுக்குள் புகுந்து விடுகிறது. உடலுக்குள் சென்றால் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான். அந்த வலுவான உணர்வுகள் அனைத்தையும் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் சேர்த்து விடுகின்றது இதே கண்கள் தான்.

அந்த வெண்ணையைத் திருடிய பின்…
1.எதனுடைய உணர்வு அதிகமோ உடலை விட்டுச் சென்ற பின்
2.அதனுடைய ஈர்ப்பிற்குள் அழைத்துச் சென்று விடுகின்றது உயிர்.

கண்கள் தான் (கூர்மை) அர்ஜுனன் அதாவது அர்ஜுனன் என்பது வலிமை…! எதையும் தாக்கும் வலிமை பெற்றது.. அந்த உணர்வுடனே உடலை விட்டு வெளியிலே செல்கிறது.

அதாவது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாக இருந்து வழி நடத்துகின்றான்…! உடலுக்குள் நாம் நுகர்ந்தவைகளின் வலிமை கொண்டு அடுத்த உடலுக்குள் அழைத்துச் செல்கிறது என்று காவியங்கள் நமக்கு தெளிவாக இந்த உண்மைகளை உணர்த்துகின்றது

1.வியூகத்தைத் தகர்த்து அதற்குள் சென்று நீ அதுவாக ஆகு…! கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது.
2.எதன் உணர்வோ… அதனுடைய வலிமைக்கொப்ப அதனுடைய எல்லையை அடையும் நிலை வருகிறது.

இது எல்லாம் நம்மை நாம் அறிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளை ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

அதிவிரைவில் தன் ஞானத்தை (அருள் ஞானம்) ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள்

 

இவ்வுலகில் மனிதனின் எண்ண சக்தியில் அறிவு நிலையின் வளர்ச்சி குணத்தை ஞானத்தின் பால் செலுத்தும் வழி முறைப் பக்குவத்தை மாற்றிக் கொண்டதால் ஒரு சாரார் ஏற்படுத்திக் கொண்ட அறிவின் ஞான முதிர்ச்சியினால் தன் ஞானம் பெற்றதை விஞ்ஞானம் கண்டு வளர்த்திட்டான் அதன் வழி சக்திகளை.

இப்படி மனித ஞானத்தின் வளர்ச்சியையே விஞ்ஞானம் கொண்டு உணர்ந்து செயலாற்றும் பல நிலைகளை உணர்ந்துள்ளான் மனிதன்.
1.ஆனால் அம்மனித விஞ்ஞானத்தைத் தன் ஞானத்திற்கு எட்டும் பொருளாக மனிதர்கள் யாவரும் உணர்வதில்லை
2.பிறப்புடன் கூடிய “அபூர்வ சக்தியின் வழி பெற்றிட்டான் அந்த மனிதன்…!” என்று
3.போற்றிப் புகழ்ந்து அம்மயக்கத்தில் தான் அடிபணிந்து வாழ்கிறான்,
4.இதே நிலை எல்லா வட்ட நிலைகளிலும் (துறைகளிலும்) உண்டு.

பக்தி மார்க்கத்தில் சித்தன் நிலை கொண்டு செயலாற்றுபவனையும்
1.அவன் தாள் பணிந்து உயர்த்தி – தான் தாழும் செயல் வடிவாக உள்ளான் மனிதன்.
2.வாழ்ந்த வழி பெற்ற நிலையின் தொடரிலும்… பிறரின் புகழ் பாடி வணங்கும் முறையிலும் வாழ்ந்தால் நம் ஆத்ம பலம் வளம் பெறாது.

எந்தச் சக்தியாக இருந்தாலும் இந்தக் காற்றின் ஈர்ப்புக்குச் சொந்தப்பட்டது தான். அதே காற்றின் சுவாச அலையுடன் வாழும் நாம் நம் சக்தியைக் குறைத்து ஒன்றின் தொடர் நிலையில் வாழாமல் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உகந்த ஞான ஒளியின் ஈர்ப்பை நமதாகப் பெற வேண்டும்.

அதிவிரைவில் தன் ஞானத்தை ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள். நம் பூமியின் ஓட்டப் பாதையில் சில மாற்றங்களாகி வழக்கமான பாதையிலிருந்து சிறிது மாற்றமுடன் ஓடிக் கொண்டுள்ளது.

ஆகாயத்தில் கோட்டை கட்டி (INTERNATIONAL SPACE STATION) விஞ்ஞான ரீதியில் செயல் முறைக்கு வந்துவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

அதே போல் இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு மேல் சென்று விட்டால் அதே போல் மற்ற மண்டலங்களும்… ஏன் வளர்ச்சியுற்ற நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்புக்குக் கூட இல்லாத நிலையில்… இங்குள்ள சுவாச நிலையை எடுத்துச் சென்று… அதற்குகந்த மருத்துவ நிலையில் அங்குள்ள அலையின் சுவாச நிலையை ஏற்கும் அமில குணத்தை… சிறுகச் சிறுக வழிப்படுத்தி மனித ஆத்மா சென்றாலும் அங்கேயும் வாழ முடியும்.

1.ஆனால் மனிதன் இன்று செய்யும் இந்த விஞ்ஞானமே
2.நூறு ஆண்டுகளுக்கு முந்திய மார்க்கத்தில் செயல்படுத்தி இருந்தான் என்றால் வெற்றி கண்டிருப்பான்.

இவன் செயல் முறை காலத்திற்குள் “உலக மாற்றமே நிகழப் போகும் நிலையில்… அந்தர வாழ்க்கையில்…!” அதன் நிலையை உணர்த்தப் போகின்றான்.

நூறு மாடிக் கட்டிடம் எழுப்பும் மனிதன் அந்த நூறு மாடிக் கட்டிடத்திற்கு உகந்த “அதே உயரத்திற்கு உகந்த அஸ்திவாரத்தையா…” பூமியில் போடுகின்றான்…?

இந்தப் பூமியில் வாழும் வளரும் பூமியிலிருந்து பிரித்து எடுத்த பொருள்களும்.. நாம் அமைத்த எல்லாமும்… பூமியின் ஈர்ப்பின் பிடிப்புடன் சுழன்று ஓடிடும் நிலையில்
1.சக்தி கொண்ட நிலை மாறு கொண்டதால் தான்
2.இன்று வலுவிழந்த சில கட்டிடங்களும் பாலங்களும் விழுவதின் உண்மையும்.

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் ஏற்கனவே விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டது. பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையைப் பகுதியும் வலு குறைந்து விட்டது.

மேன்மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உயர் மின் அலைகளைக் கடலிலிருந்தும் காற்றிலிருந்தும் இந்த மனிதன் சுகம் காணப் பிரித்து எடுத்துக் கொண்டே இருப்பதால்
1.தன் குறுகிய கால சுகத்திற்காக இந்தப் பேரண்ட உலகையே வலுவிழக்கச் செய்து
2.மீண்டும் வலுப் பெற வைக்கப் போகின்றான்.

இதனின் உண்மை என்ன…? என்பது புரிந்ததா…

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக… நாம் நன்மைகள் பல செய்தாலும் ஒரு நெருப்பு பாய்ந்து வரப்படும் பொழுது நான் நன்மைகள் செய்தேன் என்று சொன்னால் அந்த நெருப்பு நம்மைத் தாக்காமல் விட்டுவிடுகின்றதா…?

அல்லது திரவகம் தவறிக் கீழே விழுகிறது என்றால் நான் நன்மை செய்தேன் என்று எண்ணினால் அந்தத் திரவகம் மனிதன் மேல் தவறி விழுகாமல் இருக்கின்றதா…? பட்ட இடம் வெந்துவிடும், சுட்டு நம் உடலில் பெரிய காயமாகிவிடும்.

இதைப் போன்று தான் நாம் பகைமையற்ற நிலையில் இருந்தாலும்… பல நன்மைகள் செய்தாலும்…
1.சந்தர்ப்பம் நாம் பகைமையூட்டும் அதன் அருகிலே இருக்கப்படும் பொழுது அந்தத் தீமை நம்மைச் விடுகின்றது.
2.சாட்டிய பின்பு “நான் நன்மை செய்தேனே… ஆண்டவன் என்னை இப்படிச் சோதிக்கின்றானே..!” என்று சொன்னால்
3.நம்மை ஆள்வது யார்…? நம்மை உருவாக்கியது யார்…? நம்மை இயக்குவது யார்…?

ஏனென்றால்… நமக்குள் உள் நின்று நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரிடம் வேதனைப்படும் உணர்வுகள் பட்டால் அந்த வேதனை என்ற உணர்வை வேதனையான அணுக்களை உயிர் உருவாக்கிவிடும்.
1.உருவாக்கியபின் அதனையும் ஆளத் தான் செய்யும்.
2.உயிர் அந்த வேதனைப்படும் அணுக்களை வளர்க்கத்தான் செய்யும்.
3.வேதனையான உணர்வுகளை நமக்குள் உயிர் ஊட்டத்தான் செய்யும்.

ஆகவே உயிர் நாம் எண்ணுவதை உருவாக்குகின்றது. உருவாக்கி அந்த உடலுக்குள் இருப்பதை அது ஆண்டு கொண்டும் இருக்கின்றது. நாம் எண்ணியதை இயக்குகின்றது என்பதை உணர்த்துவதற்குத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்.

நம் வாழ்க்கையில் கசந்த நிலைகள் வருவதிலிருந்து விடுபடும் நிலைக்குத்தான் விநாயகர் தத்துவத்தைக் காட்டியுள்ளார்கள்.
1.நீ எந்த வினையைச் சேர்க்க வேண்டும்…?
2.எதை உயிரிலே இணைக்க வேண்டும்…? என்பதையும் உணர்த்தியுள்ளார்கள்.

அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைத் தாங்கி சூரியனின் கதிரியக்கங்கள் வருகின்றது.

அதை நம் பூமி தன் துருவப் பகுதி வழியாகக் கவர்கின்றது. அதனை நாம் பெறக் கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் விநாயகரை நீர் நிலை இருக்கும் பக்கம் வைத்தார்கள்.

ஆற்றிலே குளித்துவிட்டு வந்தபின் அந்த விநாயகரை நாம் உற்றுப் பார்க்கின்றோம். அப்பொழுது…
1.தெரிந்தோ தெரியாமலோ சூரியன் காந்தசக்தி கவர்ந்து வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் நம் உயிரில் பட்டுவிடுகின்றது.
2.உயிரில் படும் துருவ நட்சத்திரத்தின் அலைகள் நமக்குள் அணுவாக உருவாகும் கருவாக உருவாகிவிடுகின்றது.
3.அணுவின் வளர்ச்சியில் துருவ நட்சத்திரம் எப்படித் தீமைகளை ஒடுக்கி ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ அந்த நிலையை நாமும் பெறுகின்றோம்.

நம் வாழ்க்கையில் கசந்த நிலையில் வரும் நிலைகளை அங்கே வேம்பு என்று காட்டி அதன் அருகிலே அரச மரத்தை வைத்து உன் வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளை அரசைப் போன்று மாற்றியமைக்கும் நல் வினைகளை அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொள் என்பதைத் தான் அங்கே காட்டினார்கள் ஞானிகள்.

நம் வாழ்க்கையில் வந்த தீய வினைகள் சாபவினைகள், பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகளை போன்றவைகளை நீக்கிடும் நிலைக்கே அவ்வாறு செய்தார்கள்.

இந்த வினைகளை நீக்கிவிட்டு நல்ல வினைகளாக அருள் ஒளியின் சுடரை நீ சேர்த்துக் கொள் என்பதே விநாகர் தத்துவம்.

இவ்வாறு நம்மை அறியாமலே சாதாரண பாமர மக்களும் ஆற்றல்மிக்க நிலைகளைப் பெறச் செய்தனர் ஞானியர். நாம் அந்த ஞானிகள் காட்டியபடி செய்கின்றோமோ…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழி கூடி இழுக்க வேண்டும்

 

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம்… காய்கறிகளை எல்லாம் வேக வைக்கின்றோம் வேக வைத்துத் தான் உணவாக உட்கொள்கிறோம். வேக வைத்து விட்டால் அந்தக் காய்கள் மீண்டும் முளைப்பதில்லை.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் தீமைகள் வந்தால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடனடியாகச் சேர்த்து
2.அந்தத் தீமைகளைப் பலவீனப்படுத்திப் பழகுதல் வேண்டும்

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான்…! என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்

எத்தனையோ கோபம் ஆத்திரம் குரோதம் வெறுப்பு பயம் வேதனை இவைகளெல்லாம் நாம் அன்றாடம் சந்திக்க நேர்கிறது. இதற்கு வாலி என்று பெயர்.

அத்தகைய குணங்கள் நமக்குள் வந்த பின் அதனுடைய வலிமையைக் காட்டிவிடும்… அப்போது நம் நல்ல குணங்கள் செயல் இழந்துவிடும்.

எப்படி…?

சந்தோஷமாகத் தான் நாம் இருப்போம்… ஆனால் வேதனைப்படும் செயல்களைப் பார்த்து விட்டால் அந்தச் சந்தோஷம் அங்கே இழக்கப்படுகின்றது.

அதே போல் ஒரு கோபப்படுவரைப் பார்த்தவுடன் அந்தச் சந்தோஷம் மாறி அது வாலியாகி அதனின் உணர்வாக நம்மை மாற்றிவிடுகிறது.

இராமன் குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் எய்து அந்த வாலி வெளியே வராதபடி அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான். அப்போது வாலியின் செயல்கள் தடுக்கப்படுகின்றது.

ஆகவே… நம் வாழ்க்கையில் தீமை வந்தால்
1.நமது எண்ணத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து தீமையான உணர்வை அடைத்துப் பழகுதல் வேண்டும்.

உயிரிலே பட்டால் தான் இயக்கும்.

உதாரணமாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்… காற்றடிகிறது. தவறிப்போய் அந்த நெருப்பிலே ஒரு மிளகாய் விழுந்தால் என்ன செய்யும்…?
1.நெருப்பிலே பட்டபின் நெடி வரத்தான் செய்யும்
2.நம்மை அறியாமலே தும்மலும் வரத்தான் செய்யும்.

அதைப் போன்றுதான்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டால் அது அதனின் உணர்ச்சிகளை ஊட்டியேவிடும்.
2.தீமையான உணர்வுகள் பட்டால் அதை உயிர் இயக்கிவிடும்…
3.தெரியாமல் பட்டாலும் அதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…?

அதற்குத்தான் அவ்வப்பொழுது உங்களுக்குத் தியானப் பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

தீமை என்று பார்த்தாலும் நாம் அதை நுகர்கின்றோம்… நுகர்ந்த பின் அதை அறியவும் முடிகின்றது. அறிந்தாலும் உயிரிலே பட்டு உடலுக்குள் சென்றால் கடுமையாகும்.

குழம்பிலே அளவுடன் மிளகாயைப் போட்டால் ருசியாக இருக்கின்றது காரம் அதிகமாகி விட்டால் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகிறது… எரிச்சலாகிறது.

இதைப் போன்று தான் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கோபமோ குரோதமோ வெறுப்போ பயமோ வேதனையோ உயிரிலே பட்ட பின் அறிந்து கொள்கின்றோம்.

அறிந்தாலும்…
1.உடனே அடுத்த கணம் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இடைமறித்து அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.
3.புருவ மத்தி வழி கூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுக்க வேண்டும்… உயிர் வழி…! (இது முக்கியமானது),

இவ்வாறு தீமைகளை அடைத்துப் பழகுதல் வேண்டும் ஏனென்றால் நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டுத் தான் இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் செல்லும்.

ஆனால் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து… உயிருடன் ஒன்றி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதன் வழி இழுத்தால்
2.அங்கே புருவ மத்தியில் வலு கூடுகின்றது
3.அடுத்து அதே நினைவினைக் கண்களை மூடி உடலுக்குள் செலுத்தினால் மிகவும் ஆற்றல்மிக்கதாக மாறுகிறது.

கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் நாம் செலுத்த வேண்டியது:-
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும்
3.எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
4.எங்கள் நரம்புகள் முழுவதிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள்ளும் ஊனை உருவாக்கிய அணுக்களுக்குள்ளும்ம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
6.”ஒரு நொடிக்குள்…” இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி விட்டால்
7.நாம் நுகர்ந்தறிந்த தீமை உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன் இது மாற்றிக் கொண்டு வருகிறது.

நண்பனாகப் பழகுகிறோம்…! இருந்தாலும் சந்தர்ப்பத்தில் பகைமையாகி விடுகிறது. திடீரென்று அந்த நண்பன் நினைவு வந்தது என்றால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் “துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் உருப்பட மாட்டன்,,,!” என்று நம் கண்ணின் நினைவைப் பாய்ச்சினால் அது உடனடியாகப் போய் அவனைத் தாக்குகிறது.

அதே போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி எடுத்து
2.நம் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் அதைப் பாய்ச்சி விட்டால்
3.அதாவது தீமையை நுகர்ந்த அந்தச் சந்தர்ப்பத்திலேயே இதைப் பெருக்கி விட்டால்
4.விஷமான உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ வெளியிலிருந்து அது இழுக்கும் சக்தி குறையும்
5.உடலுக்குள் அத்தகைய அணுக்கள் இருந்தாலும் அதற்குண்டான ஆகாரம் கிடைக்காதபடி தடையாகும்
6.புறத்திலே குழம்பை நாம் சுவையாக்கிக் கொண்டு வந்தது போன்று சுவை மிக்க உணர்வாக நமக்குள் படைக்க முடியும்.

செய்து பாருங்கள்…!

உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதனால் என்ன பயன்…?

 

1.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலால் என்ன பயன்…? என்ற வினாவும்
2.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதனால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.

ஆனால்… பயன் கண்டு இந்தச் சுழற்சி வாழ்க்கை வாழ்ந்து மட்டும் எந்தப் பயனை எந்த ஆத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆன்மா) கண்டது…?

ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை அடைய… உணர… பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.

தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால் அந்தப் பரம்பொருளின் அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தைச் சேமிக்கலாம்.

1.நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து
2.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
3.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு… நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறைக்குக் கூட்டி
4.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எந்த எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
5.அதே சமயத்தில் அதிலிருந்து ஒதுங்கிச் சலிப்புற்றும் வாழாமல்
6.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
7.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத் தொடரில் ஐக்கியம் கொண்டே
8.அப்படி வாழக்கூடிய பக்குவத்தை நாம் பெறுவது தான் “நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை என்பது…!”

நாகப் பாம்பு விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாக இருப்பதனால் அதன் எண்ண நிலை “எதன் நிலைக்கும்” மாறு கொள்வதில்லை.

விஷ ஜெந்துவாக நாம் காணுகின்றோம். ஆனால் அந்த விஷத்தையே அது உரமாக்கி… வைரமாக்கி… மாணிக்கமாகச் சேமித்து வளர்த்து… “ஒரு நிலையில் வாழ்கிறது…” அந்த நாகப் பாம்பு.

பல பல நினைவலைகள் உள்ளவன் தான் மனிதன். இருந்தாலும் அந்தப் பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைப் பெறுதல் வேண்டும். அதைப் பெற்றுத் “தன் பலம் காணுங்கள்…” என்று உணர்த்துகின்றோம்.

இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் வட்டத்தில் தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்த்து வாழுகின்றன.

ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ்ஜீவ ஜெந்துக்களின் நிலையில் தான் பல மாற்ற குணங்கள் உண்டு.

ஆனால்…
1.தன் நிலையுணர்ந்து மனிதன் வாழ்ந்தால்
2.உலக ஞானத்தையும் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும்
3.அந்தப் பரம்பொருளின் உண்மையையும் நிச்சயம் உணர முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உபதேசத்தின் நிலைகளை முன்பு விரிவடைந்த நிலைகளில் கொண்டு வந்தேன் (ஞானகுரு). அவை அனைத்தும் சுருக்கி உங்களுக்குள் அந்த உயர்ந்த சக்திகளைப் பெருக்கச் செய்கின்றோம்.
1.“பெருத்த நிலைகள் கொண்டு சிறுத்த நிலைகளை உருவாக்கப்பட்டு..,
2.சிறுத்த நிலைகளிலிருந்து நாம் பெருத்த நிலைகளைப் பெறும்” சக்தியைப் பெறுகின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் 25 வருட காலமாகப் பெற்று வந்த நிலையை உங்கள் மத்தியில் பரவச் செய்து அந்த உணர்வுகளை நீங்கள் ஏங்கிப் பெறும் தகுதியைப் பெறச் செய்கின்றோம்.

அதற்குகந்த சந்தர்ப்பம் நெருங்கி வரும் நேரத்தில் ஆற்றல்மிக்க சக்திகளை உங்களைப் பெறச் செய்யும் நேரத்தில் நீங்கள் இதை உங்களுக்குள் உருவாக்கத் தவறி விட்டால் இனிமேல் வரும் சிக்கலிலிருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

ஆகவே…
1.என்றும் நமக்குள் அழியாச் செல்வத்தை அருள் சக்தியாக நமக்குள் உருவாக்கி விட்டால்
2.இதை யாரும் தடுக்க முடியாது… அதை அழித்திடவும் முடியாது.

அருள் சக்தியாக நமக்குள் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்திடல் வேண்டும்.

விண்ணின் ஆற்றலைப் பெற்று என்றும் பதினாறு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட அந்த மரணமில்லாப் பெரு வாழ்வை நாமும் பெற முடியும்.

ஊழ் வினை என்ற மூல வித்தை மாற்ற வேண்டியதன் அவசியம்

 

சந்தர்ப்பத்தால் எந்தத் தீய உணர்வுகள் நம் உடலில் உள்ள எலும்புகளில் வித்தாகப் பதிவானதோ
1.அந்த வித்தைச் சுற்றிலும்
2.அடுத்த நிலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்யப்படும் போது
3.அதைச் சுற்றி செல்கள் உருவாகும்.

இதனுடைய வலிமை அதிகமானால் அந்த வேதனை என்ற நிலைகள் தணிந்துவிடும். நாம் எப்படி ஆத்ம சுத்தி செய்து மற்ற உணர்வுகளை மாற்றுகின்றோமோ அதைப் போன்று தான்
1.உங்கள் உடலுக்குள் எலும்பில் உள்ள ஊனுக்குள் விளைந்த தீமையான உணர்வுகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
2.ஞானிகள் கண்ட உண்மைகள் இது…!

அவர்கள் காட்டிய வழியில் நாம் ஊனுக்குள் மாற்றி அமைத்தால் அந்தத் தீமையை நுகரும் உணர்வுகள் அழிக்கப்படுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர நுகர தீமையை நீக்கும் அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி… ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறும் பொழுது நல்ல அணுக்களாக மாறி… நமக்குள் சிந்திக்கும் ஆற்றலும்… உடலுக்குள் இருக்கும் உறுப்புகளைத் தெளிவாக்கும் நிலையும் ஏற்படுகின்றது.

நம் வாழ்நாளில் இதற்கு முன்னாடி நாம் அறியாது சேர்த்த நோய்களை மருந்துகளைக் கொடுத்து நீக்கினாலும் மீண்டும் ஊனுக்குள் பதிவான வித்து (முந்தைய பதிவுகள்) முளைத்துக் கொண்டே இருக்கும்.

அதே சமயத்தில் கடுமையான நோய்கள் வந்திருந்தால் அதைக் கட்டுப்படுத்த அதற்கு வேண்டிய பத்தியங்களையும் டாக்டர்கள் (கட்டுப்பாடுகள்) சொல்வார்கள்.

இந்த பத்தியங்களை நாம் கடைப்பிடிக்க முற்படும் போது என்ன நடக்கிறது…?

உதாரணமாக… சர்க்கரைச் சத்து வந்து விட்டால் அது (இனிப்பு) இல்லாதபடி உணவையோ மற்றவைகளையோ உட்கொள்ளும் பொழுது அந்தக் கசப்பு வருகிறது… அதனால் வேதனை வருகிறது.
அடிக்கடி வேதனைகளைச் சேர்க்கப்படும் பொழுது
1.கட்டுப்பாடாக இருந்து சர்க்கரைச் சத்தை மறைத்து விடலாம்
2.ஆனால் இரத்தத்தில் கசப்பின் உணர்வு புது விதமாக மாறும்.

இருந்தாலும் ருசியாகச் சாப்பிட வேண்டும் என்று ஆசைகள் தூண்டும். ஒரு ஜிலேபியைப் பார்த்தால் “என்னால் சாப்பிட முடியவில்லையே…!” என்று வேதனை வருகின்றது. மற்றொருவர் இனிப்பைச் சாப்பிடுவதைப் பார்த்தால் நம்மால் சாப்பிட முடியவில்லையே என்ற வேதனை வருகிறது.

உடலில் உள்ள சர்க்கரைச் சத்தை நீக்கிவிடலாம். ஆனால் “ருசியாகச் சாப்பிட முடியவில்லையே..” என்ற வேதனையான உணர்வின் தன்மை உமிழ் நீராக மாறி விஷத்தின் தன்மையாக நம் உடலுக்குள் கலக்கின்றது.

இதைப் போன்ற நிலைகள் நம்முடைய வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது. இன்றைய செயல் நாளைய சரீரம்…!

ஆக… பகைமை கொண்ட உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ சந்திக்க நேரும் பொழுது நாம் அவைகளை மாற்றத் தவறினால்
1.எத்தனையோ சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக வந்திருந்தாலும்
2.நான் நுகர்ந்த தீமைகள் இரத்தத்தில் இந்திரலோகமாகி
3.அணுவின் தன்மையாக பிரம்மலோகமாக மாறும் பொழுது
4.நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தின்று விடுகின்றது
5.நல்ல அணுக்களுக்குச் செல்லும் ஆகாரத்தைத் தடைப்படுத்தி விடுகின்றது.

நம் உடலில் இருக்கக்கூடிய இரத்தத்தில் இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

விஞ்ஞான முறைப்படி இரத்தத்தைப் பரிசீலித்துப் பார்த்தால் சோகையாக இருக்கின்றது (ஹீமோகுளோபின் குறைவு)… சர்க்கரை சத்து இருக்கின்றது… உப்புச் சத்து இருக்கின்றது என்றெல்லாம் கண்டறிந்து சொல்வார்கள்.

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இரத்த்த்தில் கலந்த பின் அந்தக் கலவையில் இப்படிப் பிரித்துவிடுகின்றது.

உதாரணமாக… உப்புச்சத்து அதிகமாகி அந்த இரத்தம் நுரையீரலுக்குள் சென்றால்
1.வேர்வையாகி… உப்பு கசிவது போன்று போகும் பக்கமெல்லாம் கசிவாகிறது
2அதனால் உடலில் நீர் அதிகமாகி உடலெல்லாம் “உப்ப ஆரம்பிக்கின்றது…”
3.நல்ல அணுக்களும் உப்புச் சத்தினால் கெட்டுப் போகின்றது
4.கிட்னியும் பலவீனம் அடைந்து விடுகின்றது.

இது எல்லாம் யார் தவறு செய்தது…?

சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இரத்தத்தில் கலந்த பின் நல்ல அணுக்கள் இவ்வாறு மடியத் தொடங்கி விடுகின்றது. இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதற்குத் தக்க டாக்டர்கள் மருந்துகளைக் கொடுத்தாலும் ஊனுக்குள் இருக்கும் மூல வித்தை அவர்களால் மாற்ற முடிவதில்லை.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் ஊனுக்குள் பாய்ச்சி ஒளியான வித்துகளாக மாற்றுவோம்.

எனக்கு (ஞானகுரு) எப்படி அந்த அருளைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினாரோ… அந்தச் சக்திகளைப் பெறும்படி செய்தாரோ… அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன்.

உயர்ந்த சக்திகளைப் பெற உங்களுக்கு “அந்த நினைவு தான் வேண்டும்…”

தீமை என்று தெரிந்து கொண்டாலே…
1.அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிரிலே வலுவாக்கினால்
4.எத்தகைய வேதனையும் உள் புகாது தடுத்து விடுகின்றது.

பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…?

 

இந்தக் காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை விஞ்ஞானிகள் எடுக்கின்றார்கள்.
1.இந்த உலகில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அம்மின் அலை இருந்தால் தான் செயல் கொள்ள முடியும்.

நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.

இந்தப் பூமி பல மண்டலங்களிலிருந்து வரும் ஒளி அலைகளையும் அந்த மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கிறதென்றால் காந்த அலையின் ஈர்ப்பினால் ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகின்றது.

நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும் ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் “காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்து தான் எல்லாமே செயல் கொள்கின்றன…”

1.மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர்.
2.இந்த உடலும் மற்ற எல்லாமே மின் அலையின் கூட்டுத்தான்.

மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்ம கூட்டை இந்த உடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துகின்றோம்.

அது மட்டுமல்லாமல் பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சியில் எல்லாம் நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.

பல கோடி கோடி உயிரணுக்களின் நிலை கொண்டு உயிர் வாழும்
1.நாம் இந்த வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கை வாழ்ந்து
2.மனிதனாக வாழ்ந்த வாழக்கூடிய செயலைப் பெற்ற நாம் இந்த எண்ணச் சுழற்சியிலும்
3.எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்.

கடமை கடமை என்று சொல்கிறோம்…! பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…? பின் அந்தப் பிள்ளைகளும் அவர்களுக்கென்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களும் இறப்பது தான் கடமையா…? இது தான் நித்தியக் கடமையா…?

தாய் தந்தையர் என்ன பலனைப் பெற்றார்கள்..? பிள்ளைகள் என்ன பலனைப் பெற்றார்கள்…? வாழும் வாழ்க்கையில்… படைப்பின் படைப்பில் “பலன் எது…?”

மனிதனாக பிறந்த நிலையில் இந்தப் பிறவிக் கடனைத் தீர்க்க வேண்டுமா இல்லையா..?

தன் சக்தி நிலை கூடக் கூட ஆத்ம பலம் வலுவேறித் தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றி தன் பலம் என்னும் உண்மை பலத்தை இந்த மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெற வேண்டும்.

“தன் பலம்” பெறத்தக்க வழி முறையை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.
1.மண் மணலாகி…
2.மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி..
3.பாறையாகி.. மலையாகி… வாழவில்லையா…?

ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக் கூடி வலுப் பெற்று வளர்ந்து கொண்டே தான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் எல்லாவற்றின் ஐக்கியமும்.

அறிவாற்றல் கொண்ட மனிதன் தன் ஞானத்தை இவ்வழித் தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற… மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி வளரப் பெறுகிறது.

உயிரணுவாக… உயிராத்மாவாக… இந்தச் சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம்… அந்த வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது
1.இயற்கையின் உயர் சக்தியான மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி
2.அவ்வுயிராத்மாவ வளர்க்கக்கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால்
3.இந்த மனிதனின் உண்மையின் உயர்ந்த பலம் கூடி உயர் நிலை பெறலாம்.

காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கிறது.

அத்தகைய செயலைப் போல் மனிதனாக வாழும் நாமும் இந்த இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது
1,நம் எண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால்
2.நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து
3.நம் உயிராத்மா பலம் கொள்ளும் நிலை வருகிறது.
4.அத்தகைய பலம் கொண்டால் அழியாத நிலைகள் கொண்டு எக்காலமும் வாழலாம் ஞானிகளைப் போல… மகரிஷிகளைப் போல…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) எவ்வளவோ உயர்ந்த உணர்வுகளை உபதேசித்தாலும் என்னிடம் வருபவர்கள் குறைகளைப் பேசிக் கொண்டுதான் வருகின்றனர்.

1.அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும்.
2.எங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.நாங்கள் மெய்ப்பொருள் காணும் சக்தி பெறவேண்டும்.
4.எங்கள் பார்வையில் இருளை அகற்றும் திறன் பெறவேண்டும்.
5.இருள் சூழா நிலைகள் நாங்கள் பெற வேண்டும் என்று
6.உயர்ந்ததை வேண்டிப் பெறுங்கள் என்று பல முறை சொல்லியும் பார்த்து விட்டேன்.

இங்கே அணுகி வருகின்றனர். ஆனால்… ஆசை இந்த உடலின் இச்சைக்கே வருகின்றது.

தீமைகளை அகற்றிடும் அருளாற்றல்களை நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ முறைகளைச் சொல்கின்றேன். என்னையும் இருள் சூழும் நிலைகளுக்கே வருவோரெல்லாம் குறைகளைச் சொல்லிக் கொண்டே வருகின்றார்கள்.

“நிவர்த்தி செய்யவேண்டும்…” என்று கேட்போர் இல்லை.

ஏனென்றால் எல்லோரும் இருளிலிருந்து மீள வேண்டும் என்று கூறுகின்றோம். அந்த உணர்வின் சக்தியைப் பெற வேண்டும் என்ற அருள் ஒளியைப் பாய்ச்சுகின்றோம்.

ஏங்கிப் பெற்றாலும் தனக்குள் இருளை வைத்து அதை மறைத்துவிட்டு நல்லதை வளராது செய்யும் நினைவாற்றலே உங்களுக்குள் பெருகுகின்றது. அதைப் பெருக்கிக் கொண்டேதான் இருக்கின்றீர்கள்.

அது போன்று இல்லாதபடி…
1.அருள் சுடரை உங்களுக்குள் உருவாக்கும் ஆறாவது அறிவின் திறனைப் பயன்படுத்துங்கள்.
2.உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் வந்தாலும் “இப்படி ஆகிவிட்டதே… இப்படி வருகின்றதே…” என்று எண்ணாதீர்கள்.
3.வரும் தீமைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள்.
4.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும், அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

தீமையின் பால் நினைவினைச் செலுத்தாமல் புருவ மத்தியில் எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை குருநாதர் எல்லோருக்குள்ளும் பாய்ச்சச் சொன்னதன் நோக்கம்

 

குடும்பத்தில் கருவுற்றிருக்கின்றார்கள் என்று தெரிந்தாலே நீங்கள் ஒரு மகா விரதமாக இருத்தல் வேண்டும்.

பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையோ வேதனைகளையோ கோபங்களையோ பகைமைகளையோ நுகராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். அருள் ஞானம் பெருக வேண்டும்… மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.ஆதியிலே வாழ்ந்த அகஸ்தியன் எந்தச் சக்தியைப் பெற்று அவன் துருவன் ஆனானோ துருவ நட்சத்திரமாக ஆனானோ
2.அதனின்று வரும் பேரருளை கருவுற்ற தாயின் கருவில் வளரும் சிசு பெற வேண்டும் என்று எல்லோரும் தியானிக்க வேண்டும்.
3.உலக ஞானமும் உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வளர்ந்திடவும்
4.உலகில் உள்ள நச்சுத்தன்மைகளைப் போக்கும் சக்தி பெற்றவனாகவும்
5.அவன் பார்வையில் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் சக்தி பெற்றவனாகவும்
6.உலகை ஞான வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞானியாக வளர வேண்டும் மகரிஷியாக வளர வேண்டும்
7.உலகைக் காத்திடும் பேரின்பப் பெரு வாழ்வை உருவாக்கும் அருள் மகானாக உருவாக்க வேண்டும் என்று
8.கருவில் இருக்கப்படும் பொழுது குடும்பத்தில் அந்தப் பத்து மாதமும் மகா விரதமாகச் செயல்படுத்துங்கள்.

எந்தப் பகைமையும் விடாதபடி உங்கள் குடும்பத்தில் இதைச் செயல்படுத்தினால் அவன் பிறந்த பின் குடும்பத்தில் உள்ள தோஷங்களையும் பாவங்களையும் நீக்கக்கூடிய சக்தியாக வருவான்.

உங்கள் குடும்பத்தைக் காப்பது மட்டுமல்ல உலகையே காத்திடும் அருள் ஞானியாக மகரிஷியாக வருவான்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்கிறோமே… அந்த அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான். அதை எந்நாட்டவரும் பெற முடியும்.

1.அவன் எப்படி ஒளியாக மாறினானோ… அவனுடைய உணர்வுகள் இங்கே தென்னாட்டிலே அதிகமாக உண்டு
2.அவன் அருளை நாம் பெற்று நமக்குள் அறியாது புகுந்த இருளைப் போக்குவோம்… மெய்ப்பொருளைக் காணுவோம்
3.உலக மக்கள் அனைவரும் இருளை நீக்கி மெய்ப்பொருள் காணும் நிலை பெறச் செய்வோம்.

சகோதரப் பண்புடன் அரவணைத்து வாழும் சக்தியும் பேரன்புடன் வாழும் உயர்ந்த சக்தியும் எல்லோரும் பெற வேண்டும் என்று குடும்பத்தில் அனைவரும் எண்ணுங்கள்.

கருவில் வளரும் சிசுவிற்கு இத்தகைய உயர்ந்த உணர்வுகளை ஊட்டுங்கள். அந்தப் பத்து மாதமும் கொஞ்சம் பொறுமையாக இதைச் செய்து பழகுங்கள். நம் நாட்டையும் காக்கலாம்… ஊரையும் காக்கலாம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியினைத் தான் இங்கே உணர்த்துகின்றோம். என்னைக் (ஞானகுரு) காடு மேடெல்லாம் அலையச் செய்தார்… உண்மைகளைத் தெரியச் செய்தார்… அனைத்தையும் அறிந்து கொண்டேன்,

நான் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு அலைந்து திரிந்து அறிந்ததை உங்களுக்கு நீங்கள் அமர்ந்த இடத்திலேயே பாய்ச்சுகின்றோம்… அதைப் பெறும்படி செய்கின்றோம். நீங்கள் எளிதில் பெறலாம்

குருநாதர் இட்ட கட்டளைப்படி உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன். மனிதராக உருவாக்கிய அந்த அரும்பெரும் சக்திகளைத் தெய்வங்களாக மதிக்கின்றேன்.

தெய்வம் வீற்றிருக்கும் ஆலயத்தைச் சுத்தப்படுத்த இங்கே கொடுக்கும் உபதேச உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தாலே தீமைகள் அகன்று புனித உணர்வு பெறுவீர்கள்.

ஆகவே…
1.ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலையை இவ்வாறு நீ செய்தால்
2.அனைவருடைய உணர்வுகளும் உயர்ந்ததாக உனக்குக் கிடைக்கும்
3.பல கோடி உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை
4.எத்தனை (இலட்சம்) பேருடைய உணர்வுகளுக்குள் பாய்ச்சுகின்றாயோ…
5.அப்படி நீ அதைச் செய்தால் அனைவருடைய உணர்வுகளை நீ பெறுவாய் என்று
5.குருநாதர் இட்ட கட்டளைப்படித் தான் உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்துகின்றேன்
6.எம்முடைய அருள் உபதேசங்கள் அதற்குப் பயன்படும்…
7.உங்கள் உடலான சிவனுக்கு அது நல் அமுதாகக் கிடைக்கும்.

ஆகவே அருளைப் பெறுவோம்… மெய்ப்பொருள் காண்போம்… பிறவி இல்லா நிலையை அடைவோம் என்று பிரார்த்திப்போம்.

இவ்ஈஸ்வரபட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்

 

இந்த உலக மாற்றத்தினால் இந்த உலகிலுள்ள மனித ஆத்மாக்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் உயிரணுவும்… உயிராத்மாவும்… சப்த அலைகளும்… சகல எண்ணத்தில் விட்ட சுவாச அலைகளும்… பூமியின் சுழற்சியில் சுழன்றுள்ள நிலையில் மீண்டும் கல்கி பிறந்தால் இந்த எண்ண வளர்ச்சி எங்கே செல்லும்…?

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் கலந்துள்ள இந்நிலைகள் எல்லாமே அடுத்த நிலைக்கு வர ஏதுவாகின்றதா…? என்ற வினா எழும்பலாம்..!

இதன் நிலையில் இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் சில நிலைகள் ஏற்படலாம்.

இப்பூமியில் இன்று வாழும் ஆத்மாக்களும்… பல கோடி ஜீவ ஜெந்துக்கள்… தாவரங்கள்.. இன்று பூமியில் வளர்ந்துள்ள கனி வளங்கள்… நீர் நிலைகள்.. மனித உடலை விட்டுப் பிரிந்து வாழும் அனைத்து உயிராத்மாக்கள் உயிரணுக்கள்… இது நாள் வரை நம் பூமியின் காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள சப்த அலைகள் அனைத்து நிலைகளுமே… இந்தப் பூமியின் மாற்றம் நிகழும் தருவாயில் பல நிலைகள் மாறி கலியில் இன்றளவும் வளர்ந்து விட்ட நிலையில் மாற்றம் காணப் போகிறோம்.

இந்தக் கலியில் மாறுகிறது என்றால் இந்த உலக மாற்றத்தில் ஏற்படும் அதிர்வினால் சில ஒளி அலைகள் நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் அனைத்திற்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் கலந்து விடும் நிலை பெறுகின்றது.

இன்னும் பல சப்த அலைகள் இந்தப் பூமியின் ஈர்ப்பில் இந்த அதிர்வினால் மோதுண்டு இந்தப் பூமியுடன் கலக்கும் நிலை பெறுகின்றது.
1.பல பல மாற்ற நிலைகள் இந்தக் கலி மாறிக் கல்கியில் காணப் போகின்றீர்கள்.
2.இவ் ஈஸ்வரபட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்.
3.இனிமேல் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை எல்லாம் தடுமாற்றம் கொள்ளப் போகிறது.

உலகின் பல திரையறியச் செயல்படும் கருவிகளும்… இந்தக் காற்றிலிருந்து ஈர்த்து ஓரிடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு ஒலி அலைகளைப் பரப்பி வாழும் நிலைகளும்… மற்றும் மனிதனால் செயற்கைக் கோள்களை ஏவி விட்டு அதிலிருந்து உணரும் ஒளி அலைகளும்… ஒலி அலைகளும்,,, இன்று செயலாற்றும் முறைப்படிச் செயலாகாது.

இயந்திரத்தின் துணை கொண்டு காற்று மண்டலத்தில் இவர்கள் இன்று பிரித்து எடுக்கும் நிலையெல்லாம் செயல்படுத்தும் முறையில்
1.இன்றுள்ள நிலைக்கொப்ப செயலாக்க முடியாமல்
2.அதற்காக இன்னும் பல புதிய சாதன முறைகளை மனிதன் உருவாக்கப் பார்ப்பான்.

மீண்டும் இந்தக் காற்று மண்டலத்தின் விஷத் தன்மை கூடி… ஆவி உலகில் வாழும் ஆத்மாக்களின் வெறி உணர்வும் அதிகப்பட்டு… “எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர்…” இனி வரப் போகும் காலத்தில் நிகழத் தான் போகின்றது.

மனித ஆத்மாக்களே…!
1.உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்…!
2.என்றிருந்தாலும் “மடியத்தான் போகின்றீர்கள்…!” என்று எண்ணம் கொள்ளாமல்
3.மனித ஆத்மாக்களால் தான்… நிகழப் போகும் சக்தியை மனிதன் உணர்ந்து செயல்படத்தான்… இங்கே பல நிலைகளைப் போதிக்கின்றோம்.
4.மனிதனாக அறிவு கொண்டு… அன்பு பட்டு… ஞானம் பெற்றிட வாருங்கள்.

இந்த மனித ஆத்மாவிற்குத்தான் அறிவாற்றலை வளர்க்கும் ஆற்றல் உண்டு. அறிவு நிலை கொண்ட மிருகங்கள் வாழ்ந்தாலும் மனிதனை ஒத்த ஞான சக்தி பெறும் தன்மையற்ற நிலையில் தான் மிருக இனம் உள்ளது.

தேவனாக வாழக்கூடிய மனிதன் “தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

(1)
நம் உடலே ஆலயம்.
உயிரே ஈசன்.
உடலே சிவம்.

(2)
நமக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் வினை.
வினைக்கு நாயகனாக இயக்குகின்றது.
எதனின் குணத்தை அதிகமாகச் சேர்த்தோமோ அவை அனைத்தும் கணங்களுக்கு அதிபதியாக இயக்குகின்றது.

(3)
கண்களே கண்ணன்.
கண்களின் கருவிழி ருக்மணி.
கண்களுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு சத்தியபாமா, உண்மையை நமக்குள் தெரியப்படுத்துகின்றது.

(4)
உயிரே ஈசன்.
அதற்குள் ஏற்படும் வெப்பமே விஷ்ணு.
அதனால் ஈர்க்கும் காந்தமே லட்சுமி.

(5)
நாம் எண்ணும் உணர்வின் தன்மை உருவாக்கும் அணுவே பிரம்மம்.
அது தன் இனத்தைப் பெருக்கும் நிலையே அது.

உணர்வின் சத்து நம் உடலுடன் ஆகப்படும் பொழுது சிவமாகின்றது.
சிவன் அரவணைக்கின்றான் என்று இந்த நிலை பெறுகின்றது.

இதைப் போன்ற பேருண்மைகளைக் காட்டிய அருள் வழியில் நமக்குள் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

நம்மை நாம் யார் என்று அறிவோம். நாம் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துவோம். இருள் சூழா நிலைகளில் நம்மைக் காப்போம்.

ஆறாவது அறிவு கொண்டு சேனாதிபதியாக்கி அருள் ஞானிகளின் உணர்வைப் பெறக் கூர்மையாக நினைவினைச் செலுத்துவோம். அதன் வலுவை நமக்குள் வளர்ப்போம்.

பேரின்பப் பெருவாழ்வு வாழும் அந்த அவதாரமாகக் கல்கியாக ஒளியின் சரீரமாகப் பெறுவோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஆசைப்பட்டு நுகர வேண்டும்

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

கண்ணின் நினைவைப் “புருவ மத்தியில் வையுங்கள்…” துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று மெதுவாகக் கண்களை மூடுங்கள்.

1.உயிரான ஈசனிடம் வேண்டி உங்கள் நினைவனைத்தும் உயிருடன் இணைக்கப்படும் பொழுது
2.மூக்கின் வழி செல்லாதபடி புருவத்தின் வழி காந்தத்தால் ஈர்த்து உங்களுக்குள் அந்த உயிர் உணர்வின் ஒளி அலைகளாக மாற்றும்.
3.இப்பொழுது அந்த ஈர்க்கும் சக்தி புருவ மத்திக்கே வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிரிலே வைத்து… உயிரான ஈசனிடம் வேண்டி…
1.துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் முழுமையான எண்ணத்தைச் செலுத்தி
2.அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்… ஆசைப்பட்டு அதை நுகருங்கள்.

இவ்வாறு இச்சைப்பட்டு நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் பிரம்மம் ஆனால் பிரம்மகுரு வசிஷ்டரின் மனைவி அருந்ததி…! அந்தச் சக்தியாக நமக்குள் நல்லதை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வையுங்கள். உயிருடன் ஒன்றிய உணர்வை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்தநாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நுகர்ந்தது ஜீவ அணு… ஜீவான்மா…! “ஜீவான்மா…” என்பது இன்னொரு மனிதன் மேல் நாம் பிரியப்பட்டு இருந்தால் “இறந்த பின் அந்த ஆன்மா…” நம் உடலுக்குள் வந்தால் அது இரத்தத்தில் தான் இருக்கும்.

இரத்தத்தின் வழி உணர்வை எடுத்துத் தான் அந்த அணுக்களும் வளரும்.
1.உயிர் பாகம் செல்லும் பொழுது அதன் உணர்ச்சிகளை உந்தி அது உணவாக எடுத்துக் கொள்ளும்…
2.நமக்குத் தீங்கு விளைவிக்கும்.

ஆகையினால் நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் அந்த அருள் உணர்வுகள் பெற நாம் தியானிக்க வேண்டும்.

நண்பனை உற்றுப் பார்த்து அவரை நமக்குள் பதிவு செய்திருந்தால் இறக்கும் போது இறந்ததைப் பாசத்துடன் கண்களால் கவர்ந்திருந்தால் நம் இரத்தத்திற்குள் அது தேங்கி இருக்கும்.
ஆக… ஜீவான்மாக்கள் எதுவாக இருப்பினும் அந்த ஆன்மாக்களுக்கு மாற்றத் தெரியாது. அதனால் மாற்ற முடியாததை துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தத்தில் இருக்கும் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் செலுத்த வேண்டும்.
1.இவ்வாறு செயல்படுத்தினால் அந்த ஜீவான்மாக்களும்
2.ஒளியின் உணர்வாக மாறும் தகுதி பெறுகின்றது.

இப்படித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்துச் சேர்த்து ஒளியின் அறிவாக இயக்கும் அந்த உணர்வை நம் கண்களால் செலுத்தப்படும் பொழுது நல்ல கருக்களாக இரத்தத்தில் உருவாகும்.

இப்பொழுது…
1.உங்கள் உடலில் மின்சாரம் பாய்வது போன்று
2.இரத்த நாளங்களில் மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கலக்கும்
3.மகிழ்ச்சியூட்டும் உணர்வாக உங்களுக்குள் வளரும்.

ஆனால் ஒரு சிலருக்குத் தீமை என்ற உணர்வு உடலில் இருந்தால் அது அடங்கும் பொழுது அதனால் கொஞ்சம் சோர்வடையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் பித்த சுரப்பிகளில் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
1.“விஷத்தைத் தணித்திடும் அருள் சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்…”
2.நாகன் விஷத்தைப் பாய்ச்சித் தன் உணர்வை எடுத்து வளர்த்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ
3.அது போல் நம் உடலில் உள்ள அணுக்களை ஒளியாக மாற்ற முடியும்.

விஷம் இல்லையேல் ஜீரணம் இல்லை…. ஆனால் விஷம் அளவுக்கு அதிகமானால் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் நஞ்சாக மாறி விடுகின்றது.

ஆகவே விஷத்தை மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் பித்த சுரப்பிகளிலே செலுத்தப்படும் பொழுது அது சம அளவாகிச் சாந்தமான அணுக்களாக நல்ல ஜீரணமாக்கும் சக்தி பெறுகிறது.

இதே போல் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள்.

நோய்களை நீக்க விஞ்ஞானிகள் மருந்தைத் தயார் செய்து அதை இரத்தத்தில் தான் கலக்கச் செய்கின்றனர்
1.ஆனால் நோயின் வீரியம் அதிகமாகி விட்டால்
2.நரம்புகளிலே… அந்த வாயு மண்டலங்களிலே அதாவது உடலை இயக்கக்கூடிய நரம்புகளுக்குள்ளேயே மருந்தினைப் பாய்ச்சி விடுவார்கள்.

அதே போன்றுதான் உங்கள் உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கி உங்கள் கண்ணின் நினைவினை உறுப்புகளுக்குள் செலுத்துங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளில் ஒரு அற்புதமான உணர்ச்சிகள் வருவதை உணரலாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் உடலில் அற்புதங்களைச் செயல்படுத்தும்.
2.அந்த அற்புத உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளில் படர்ந்து
3.உடலில் இருக்கக்கூடிய விஷத்தன்மை தணிந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வின் அணுக்கள் விளைய இது உதவும்.

இப்பொழுது உங்கள் உடலிலே புது விதமான உணர்ச்சிகள் பரவும். உடல்களிலே வலியோ… எலும்புகளில் வலியோ… மூட்டுகளில் வலியோ… சிரசில் வலியோ குறையத் தொடங்கும்… வேதனைகள் நீங்கும்.

உடலி இருக்கக்கூடிய நரம்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரும் பொழுது அதிலிருக்கக்கூடிய குறைபாடுகள் குறைந்து அருள் உணர்வுகள் பெருகும்.

1.அழுக்குகளை அகற்ற நந்நீரை விடுவது போன்று
2.கண்ணின் நினைவை எல்லா உறுப்புகளிலும் செலுத்தி
3.உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுக்கும் ஒரு பழக்கமாகக் கொண்டு வர வேண்டும்.

எம்மைப் போன்ற எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயல்கள்

 

வரப்போகும் இந்த உலக மாற்றத்தில் இந்தப் பூமியின் குணத்தில் மாற்றம் ஏற்படப் போகும் நிகழ்ச்சி மனித ஆத்மாவினால் நிகழ்கிறது…! என்ற குற்ற உணர்வை ஏன் காணல் வேண்டும்..?
1.இயற்கையின் உந்தலினால் மனித எண்ணமே செயற்கை காண வழிப்பட்டதற்கு
2.”மனிதனைக் குற்றம் காணலாமா…?” என்ற வினா எழும்பலாம்.

ஆனால் மனிதனால் ஏற்படுத்திக் கொண்ட இந்தத் தீய அமில குணத்தினால் தான் நம் பூமியின் இயற்கை பாழ்பட்டது.

மனிதனால் அரசர்கள் என்றும் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும்
1.மனித ஆத்மாவுக்குகந்த குணத்தைப் பிரித்துக் கண்டு
2.ஒருவனை உயர்த்தி… ஒருவனை அடிமை கொண்டு… வாழ்ந்த எண்ணத்தில்
3.போட்டி பொறாமைகள் ஏற்பட்டு… பேராசையில் அதிகப் பொருள் சேர்த்து
4.ஒருவனை அழிக்க ஒருவன் வாழ்ந்து வந்ததின் நிலையினால் குண அமிலங்களில் மாறுபட்டு
5.அணுகுண்டுகளையும் அணுக்கதிர்களையும் காற்று மண்டலத்தில் கலக்கவிட்டு
6.இயற்கையைப் பாழ்படுத்திய மனிதனால் தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகிறது.

ஆக… இந்தக் கலியில் பூமியை நிலை தடுமாற வைப்பவனும் இம்மனிதன் தான். இந்தப் பூமி நிலைக்க கல்கியுகம் காணச் செயல்படுத்தப் போகிறவனும் இந்த மனிதன் தான்..!

மனிதன் மனித ஞானம் பெற்றால் மனிதனால் மனித ஆத்மாக்களைப் பலவாக நிறுத்த முடியும். நம் பூமியில் மனிதக் கரு வளர… நம் பூமியில் மனித ஆத்மாக்களை வளர்க்கும் தன்மை கொள்ள…
1.வியாழனிலிருந்து மீண்ட ஆன்மாக்கள் இருந்ததனால் தான்
2.நம் பூமி வளர்ந்த பிறகு நம் பூமியில் மனித ஆன்மாக்கள் வாழக்கூடிய கருவே வளர்ந்தது.

பல சப்தரிஷிகளும் அவர்களின் வழித் தொடர் பெற்ற பல நிலை கொண்டவர்கள் இருந்தாலும்… இந்தப் பூமியில் வாழ்ந்த மனித ஆத்மாக்களின் சக்தி நிலை உயர்ந்து தன் ஞானம் பெறும் ஆத்மாக்கள் வளர்ந்து வந்தாலும்… இந்தப் பூமியின் மாற்றக் காலத்தில் என்ன ஆகிறது…?

இந்த மனித வாழ்க்கையில் கொண்டுள்ள ஆசாபாசங்களிலும் நித்தியக் கடன்களிலும் மூழ்கியே… இந்தக் கலியின் மாற்றத்தில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள்… கலி மாறும் தருணத்திலும் அதே சுழற்சி ஓட்டத்தில் இருந்து… “தான் இதிலிருந்து மீள முடியாமல் போகிறது…!”

அத்தகைய நிலையில்… மீண்டும் அறிவு ஞானம் கொள்ளும் மனிதக் கரு வளர்ந்து… அக்கருவின் செயலிலிருந்துதான் மனித உருவங்களே இந்தச் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் வளர்ச்சியில் மனித ஆத்மாக்கள் வாழும் நிலை வரும்…!
1.அதாவது வியாழனுக்குப் பின் நம் பூமியில் மனிதர்கள் வாழுவது போல்
2.இந்தப் பூமிக்கு அடுத்து மனிதர்கள் சந்திரனில் வாழும் நிலை ஏற்படலாம்…!

நம் சூரியனின் சுழற்சியில் பல மண்டலங்கள் ஓடினாலும் நம் பூமியின் நிலைக்கொப்ப மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய இச்சக்தி மண்டலத்தின் இந்தக் கலி மாறி கல்கியுகம் பெற்று நம் பூமி சுழலும் தருணத்தில்
1.இன்றைய நிலையில் வாழும் ஆத்மாக்களின் பல கோடி எண்ணங்களை மாற்றிச் செயல்புரிய
2.பல சக்தி நிலைகள் செயல் கொண்டு செயலாற்றித்தான் கல்கியுகம் வாழ முடியும்.

அதற்குத்தான் எம்மைப் போன்ற எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயல்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனாகப் பிறந்த நாம் விஞ்ஞான முறைப்படி பல செடிகளில் உள்ள அணுக்களை எடுத்து ஒவ்வொரு செடிகளிலும் இணைத்துச் செடிகளின் ரூபங்களை மாற்றுகின்றோம். அதில் வரும் மலர்களின் ரூபங்களையும் மாற்றியமைக்கின்றோம்.

இதே போல ஒரு உடலில் உருவாகும் அணுக்களை எடுத்து இன்னொரு உடலில் இந்த அணுக்களைச் செலுத்தப்படும் பொழுது எத்தனயோ விதமான ஆடு, மாடு, நாய் இவைகளைப் பல ரூபங்களாக நாம் மாற்றியமைக்கின்றோம்.

இதையும் நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.

ஒரு ஆமை கூர்மையாக ஒரு நரியை உற்றுப் பார்த்த பின் அதன் உணர்வைத் தனக்குள் பதிவாக்கப்படும் பொழுது தன் உடலுக்குள் இருக்கும் (ஆமையை உருவாக்கிய) அணுக்களில் இது அதிகமாகச் சேர்ந்த பின் நரியின் உணர்வுகள் ஆமையின் உடலுக்குள் அதிகமாக வலு சேர்ந்துவிடுகின்றது.

1.ஆமையோ தன்னை மறந்து நரியின் நினைவாகவே வந்துவிடுகின்றது.
2.இந்த ஆமையின் உடலுக்குள் நரியாக மாற முடியாது
3.நரியின் உணர்வுகள் ஆமைக்குள் வந்த பின் இந்த உடலை விட்டுப் பிரிந்து
4.நரியின் நினைவாக ஆமையின் உயிரான்மா வெளியில் செல்கின்றது.

அப்படி வெளியில் செல்லப்படும் பொழுது இந்த நரியின் உணர்வுகள் ஆமையின் உடலிலுள்ள அணுக்களுக்குள் பட்டபின் இது வெளிவரப்படும் பொழுது அதற்குக் காரணப் பெயரைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

அர்ச்சுனனுக்குக் கண்ணன் உபதேசித்தான்… அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கிறான் என்று காட்டுகின்றார்கள்.

ஆமையின் கண் எந்த நரியின் உணர்வை வலுவாக எடுத்ததோ…
1.தன் உடலுக்குள் அந்த வலுவின் தன்மை இணைத்து வலுவாக்கிவிட்டால்…
2.அந்த வலுவிற்குப் பெயர் அர்ச்சுனன் என்று வைக்கின்றனர்.

அர்ச்சுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றான். எப்படி…?

எந்த நரியின் வலுவான உணர்வை ஆமையின் உணர்வின் அணுக்களுக்குள் சேர்த்ததோ இந்த உடலை விட்டுச் சென்றபின்
1.எதைத் தன் பார்வையில் கூர்மையாகப் பார்த்ததோ இதுவே (கண்கள்) சாரதியாக அமைந்து
2.அந்த நரியான உடலின் வியூகத்தைத் தகர்த்து அதன் உடலுக்குள் சென்று “நீ அதுவாகு” என்று உபதேசிக்கின்றான்.

இதை நாமெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காகக் கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம் என்ற காவியத்தைப் படைத்துள்ளார்கள்.

பரிணாம வளர்ச்சியில் இப்படி வளர்ந்தது தான் நமது உயிர்.

கடவுளாக நின்று…
1.ஒவ்வொரு சரீரத்திலேயும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து
2.அந்த எண்ணத்தால் இந்த உடலை இயக்கி தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் செய்தது என்று
3.தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது நமது சாஸ்திரங்கள்.

இன்று உயிரே கடவுள் என்று யாம் (ஞானகுரு) சொன்னால் அது எப்படி ஆகும்…? என்று சட்டம் பேசுகிறார்கள்.

ஆனால் ஞானிகளோ ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கு… ஒவ்வொரு நிலைகளுக்குக் காரணப் பெயரை வைத்து… அவைகளின் இயக்கத்தின் பேருண்மைகளை நாமெல்லாம் அறிந்து… இந்த வாழ்க்கையில் நம்மையறியாமல் வரும் தீமைகளிலிருந்து எவ்வாறு மீள வேண்டும்…? என்பதற்குத்தான் இந்தக் காவியத் தொகுப்புகளைத் தெளிவாகக் காட்டினார்கள்.

குருநாதர் எமக்கு உணர்த்திய அந்த உண்மைகளைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் வாழ வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். வெறும் ஞான வித்து அல்ல… அருள் ஞான வித்து…!

இருளை நீக்கும் அருள் ஞான வித்தை… இருளை நீக்கிட்ட அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். உங்கள் மனதில் தான் இனி அதை வளர்த்துக் கொள்ளும் நிலை இருக்கின்றது,

1.இந்த உலகில் நாம் வாழக்கூடிய காலம் மிகக் குறுகியது…
2.எந்த நிமிடத்தில் இனி எது வேண்டுமென்றாலும் நிகழலாம்
3.உலகம் எப்படி இருக்கும்…! என்றும் சொல்ல முடியாது
4.மனிதன் சிந்தனையுடன் இருப்பானா என்பது கேள்விக்குறிதான்…!
5.அதற்குள் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் வழி வாழ வேண்டும் என்று உங்கள் மனதிலே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
6.எந்த நிமிடம் எதுவானாலும் உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக வாழ்வோம்.
7.”பிறவி இல்லா நிலை அடைவோம்…!” என்ற உணர்வுகளுக்கு நீங்கள் திரும்பி ஆக வேண்டும்.
8.ஆகவே உடல் பற்று வைக்காதீர்கள்.
9.யாம் சொல்லும் உணர்வின் தன்மையை உயிரிலே வளர்க்கப்படும் போது உடலைக் காக்கும் உணர்வுகள் தன்னிச்சையாக வரும்
10.அது இல்லை என்றால் உடலை காக்க முடியாது…!
11.காப்பதாக எண்ணுவோம்… ஆனால் வேதனை கொண்டு உடலை அழித்துக் கொண்டுதான் இருப்போம்
12.தன்னைப் பாதுகாக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்

ஆகையினால் இதைப்போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு மெய் ஞானத்தை வளர்க்கும் அருள் சக்தியைப் பெறுங்கள். அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று வளர்த்துக் கொள்ளுங்கள்.

எங்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும். எங்கள் குழந்தைகள் நல்லவர்களாக ஆக வேண்டும். என் கணவர் உயர்ந்தவராக வரவேண்டும்… என் மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும்… நாங்கள் ஒருவருக்கொருவர் மதித்திடும் பண்புகள் வளர வேண்டும்… அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அறியாது சேர்ந்த பகைமைகளை மாற்றுங்கள்… அருளைப் பெருக்குங்கள்.

நீங்கள் எண்ணியவுடனே அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்வதற்குத் தான் இந்நேரம் வரை இதை ஞான வித்தாகப் பதிவாக்குகின்றோம்.

காரணம்…
1.படிக்காதபடி ஒன்றும் செய்ய முடியாது…
2.ஆசிரியர் சொல்லிக் கொடுத்தால் தானே எடுக்க முடியும்
3.ஆசிரியர் சொல்லத் தவறி விட்டால் தவறாகத்தான் போய்விடும்.

நம் குருநாதர் நமக்குத் தெளிவாக காட்டிய வழிப்படித் தான் உங்களுக்கு இதை எல்லாம் எடுத்துக் காட்டுகின்றேன் (ஞானகுரு). உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலை ஆலயமாக மதிக்கின்றேன். மனித உடலை உருவாக்கிய அரும் பெரும் சக்தி கொண்ட ஞான சக்தியான தெய்வங்களை மதிக்கின்றேன். உங்களுக்குள் அமைதியும் சாந்தமும் பெற வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.

என்றுமே இந்த உணர்வுகளை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொண்டால் நீங்கள் எண்ணியது இறையாகி… இறையின் உணர்வு செயலாகும் போது… அதுவே உங்களில் தெய்வமாகிறது.

ஆகவே…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் இறையாகி அதனின் உணர்வு தெய்வமாகி
2.இருளை நீக்கிடும் சக்தியாக உணர்வின் ஒளியாகி பிறவி இல்லா நிலை அடைவீர்கள்…!

இயற்கையைச் செயற்கையில் கண்டு வாழ்ந்து… பூமியையே நிலை தடுமாற வைத்துவிட்டார்கள்

 

உலகிலுள்ள உண்மை இயற்கைத் தன்மைகளை மெய் ஞானம் கொண்டு விளக்குகிறோம்…! இதனை விஞ்ஞானத்தவர்களும் எடுத்து ஆராயலாம்.

நம் பூமியில் மட்டுமல்லாமல் அனைத்துக் கோளங்களுக்கும் பொதுவாக உள்ள பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில குணங்கள்
1.அதனதன் நிலைக்கொப்ப அதனதன் இனத்துடன் சென்று எப்படி ஐக்கியப்படுகிறது…?
2.ஒவ்வொரு மண்டலமும் இயற்கைக் குணத்தில் எப்படியெல்லாம் வளர்ச்சி ஏற்படுத்திக் கொண்டது…?

மழை வரும் காலங்களில் இடியும் மின்னலும் ஏற்பட… ஏற்பட… ஒவ்வொரு பூமியின் வளர்ச்சித் தன்மையும் கூடுகிறது…! என்று அர்த்தம்.

1.இரண்டு அமில குணங்கள் மோதுண்டு வான மண்டலத்தில் சுழலும் தன்மையில்
2.அதன் மேல் மழை நீர் பட்டு இடி ஏற்பட்டு அந்த இடியின் ஈர்ப்பு பூமியில் பதிந்து
3.அதன் நிலையில் வளரும் காளான்களின் வளர்ச்சியிலிருந்து புதிய புதிய இன இயற்கை வளங்கள் வளருகின்றன.

எந்நிலை கொண்டு…?

பூமியில் காளான் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு நாளில் அதன் நிலை மாற்றம் கொள்கிறது. காளானிலிருந்து வெளிப்படும் அமிலத்தினால் அந்த நிலை காற்றாக பூமியில் படரும் பொழுது அதன் அமிலம் காற்றுடன் கலக்கப்பட்டு எந்தெந்த இடங்களில் அக்காற்றினில் அவ்வமிலம் படர்கின்றதோ எங்கெல்லாம் “புதிய இன வளர்ச்சி” ஏற்படும்.

மற்றும் இக்காளான் வகைகளிலேயே கணக்கிலடங்கா குண வகைகள் வளர்கின்றன மழைக் காலங்களில். பூமியில் மட்டுமல்ல. கடல்களிலும் நீர் நிலைகளிலும் பல வகைக் காளான்கள் மழைக் காலங்களில் ஏற்படுகின்றன.

மரங்களில் வளரும் காளான் ஒன்று இரண்டு நாளில் மடிந்து அந்த மரத்தின் மீது அக்காளான் செடி அழுகிய நிலையில் படர்ந்து விடுகிறது.
1.அந்த மரத்திலிருந்து வெளிப்படும் சுவாசக் காற்று அவ்வழுகிய காளான் மேல் பட்டு
2.அக்காளானிலிருந்து ஆவியான அமிலம் மற்றொன்றின் மேல் படும் பொழுது
3.வேறு வகையான இன வளர்ச்சி தோன்றக்கூடிய உண்மை இதன் தொடரில் தான் வருகிறது.
4.இப்படித்தான் இயற்கையின் வளர்ச்சியே உள்ளது.

நம் பூமியில் சூரியன் மேலிருந்து நம் பூமிக்கு வரும் ஒளி அலை ஒன்று போல் உள்ளதா..? என்று முந்தைய கால விஞ்ஞானத்திற்கும் இன்றைய விஞ்ஞானத்திற்கும் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படுகின்றன.

உலகச் சுழற்சியில் ஏற்படும் இந்த ஒளி அலைகள் ஒன்று போல் சுழன்றாலும் பூமி எடுக்கும் விதத்தில் அதனதன் நிலைக்குகந்த ஒளி அலையைத்தான் இந்தப் பூமியினால் எடுக்க முடிகின்றது.

நம் பூமியில் சில இடங்களில் எரிமலை தோன்றுகிறது. சில இடங்களில் பனிமலைகள் உள்ளன. அந்த இடங்களில் உள்ள ஒளி அலைகளை பூமி எப்படி ஈர்க்கிறது…?

எரிமலையாகக் கக்கும் இந்த உஷ்ண பூமியில் அதற்குகந்த ஆகாரத்தை அது அதிகமாகத்தான் எடுத்துக் கொள்கிறது. இந்த ஒளி அலையின் மூலமாகத்தான் நம் பூமியின் ஜீவனே வாழ்கிறது. நம் பூமிக்கும் ஜீவனுண்டு… உணர்வுண்டு… உருவ சதைகளும் உண்டு.

நம் பூமியின் உள் நிலையை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. பூமியின் உள் நிலையில் உள்ள சக்திகளிலும் செயற்கையின் ரூபம் காண நாம் விரயப்படுத்தி வாழ்கிறோம்.

1.வரும் இடியை இடி தாங்கியினால் தடுக்கின்றோம்.
2.இடி இல்லாவிட்டால் இன வளர்ச்சிக்குகந்த இயற்கைத் தன்மையை நாம் பெற முடியாது.
3.இயற்கையின் தாவர வளர்ச்சி அதிகம் கொண்டால் தான் நாம் இந்தப் பூமியில் வாழ முடியும்.

மனித ஆத்மாக்கள் குறுகிய காலத்திலே செயற்கைக்கு மிகவும் அடிமைப்பட்டு
1.இயற்கையைச் செயற்கையில் கண்டு வாழ்ந்து
2.இந்தப் பூமியையே நிலை தடுமாற வைக்கின்றார்கள்.

பூமியிலிருந்து எடுக்கப்படும் கனிவளங்களைக் காட்டிலும் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமில சக்தியை மனிதனால் மின்சாரம் காண… காற்று அலையில் உள்ள சக்தியைக் காட்டிலும் “பூமியிலிருந்து” அதிக மின் அலைகளை எடுக்கின்றோம்.

இப்படி பூமியையே நம் செயற்கையின் சோம்பேறி நிலைக்காகக் கொண்டு போய் அதில் உள்ள பல சக்திகளையும் விரயப்படுத்துகின்றோம்.

ஆங்காங்கு உள்ள கனிவளங்களை எடுத்தாலும் வளரும் இயற்கை வளர்ந்து கொண்டே இருந்த நிலையையும் இன்று செயற்கை விஞ்ஞானம் தடைப்படுத்தி விட்டது.

அதாவது… பல ஆயிரம் ஆண்டு காலங்களாகப் பூமியிலிருந்து தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை எடுத்து வந்துள்ளார்கள். எடுக்க எடுக்க இவையும் வளர்ந்தன.

ஆனால் இந்தக் குறுகிய நூற்றாண்டுகளில்…
1.பெட்ரோலிய இனத் திரவத்தையும்
2.மின்சாரம் காண்பதற்காகக் காந்த அலையின் அணு சக்தியையும் நாம் உறிஞ்சி எடுத்ததனால்
3.பூமியில் வளர வேண்டிய கனி வளங்களுக்குகந்த ஆகாரமான இவ்வமில குணங்கள் எல்லாம் தடைப்பட்டவுடன்
4.அவைகளின் வளர்ச்சியும் சுத்தமாகக் குன்றிவிட்டது.

பொன் முட்டையிடும் வாத்தின் கதையைப் போல் ஆகிவிட்டது…!

வாத்து தானாகத் தினசரி இட்ட முட்டைகளைப் பேராசை கொண்டு ஒரு நாள் அந்த வாத்தை அறுத்துப் பார்த்த நிலையைப் போல் இந்தப் பூமியின் நிலையை மனிதர்கள் சிதறடித்துவிட்டனர்.

1.மனிதனின் எண்ண வளர்ச்சியிலும்… அறிவாற்றலிலும்… ஞானத்திலும் வேகமில்லை…!
2.ஆனால் நினைத்தவுடன் நினைத்தது நடக்க வேண்டும் என்ற
3.பேராசையின் வெறி… வேகம்… மனிதர்களிடம் மிகவும் துரிதப்பட்டதனால்
4.இயற்கையின் பொக்கிஷத்தை எல்லாமே அழித்து வாழ்கின்றோம்.

இதனின் விளைவைக் கூடிய சீக்கிரம் நீங்கள் உணர்வீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் காவியங்களில் பேருண்மைகளைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். அந்த ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி நம் உடலுக்குள் இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபடும் எண்ணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தவில்லை என்றால்…
1.நாம் எந்த வேதனை உணர்வை அதிகமாக எடுத்தோமோ
2.அதனின் உணர்வைத் தனக்குள் வளர்த்து மீண்டும் தேய்பிறையாகி
3.எந்த விஷத்திலிருந்து மீண்டு மனிதனாக வந்தோமோ
4.மீண்டும் விஷமான தன்மைக்குச் சென்றுவிடுவோம்.

ஒரு விஷமான பாம்பு தீண்டிவிட்டால் விஷம் நம் உடலுக்குள் பரவிவிட்டால் “ஐயோ… பாம்பு தீண்டிவிட்டது…” என்ற எண்ணங்களை எண்ணினால் போதும்.

இந்த உடலைவிட்டுச் சென்றபின் மனிதனின் நினைவலைகள் இழக்கப்படுகின்றது. மயக்கமடைகின்றது. சிந்தனைகள் முழுமையும் மறைகின்றது. பாம்பின் நினைவே கடைசியில் மிஞ்சுகின்றது.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் பல கோடிச் சரீரங்களில் நாம் தீமைகளை வென்று வென்று தீமைகளை வென்றிடும் உடல் பெற்ற நாம் இந்தப் பாம்பு தீண்டிவிட்டால் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்து உடலை விட்டுச் சென்றபின் பாம்பின் உடலுக்குள் சென்று, ஊர்ந்து செல்லும் அந்தப் பாம்பின் நிலையைத் தான் பெற முடியும்.

விஷத்தின் அணுக்கள் நமக்குள் சென்ற பின் அதன் மேல் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்தப்படும் பொழுது இந்த விஷத்தின் தன்மை அதிகமான பின் அதன் வலுவின் துணை கொண்டு விஷமான அந்த உடலுக்குள் அழைத்துச் சென்று மனித உருவையே மாற்றி விடுகின்றது நமது உயிர்.

அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டியுள்ளார்கள்.

கீதையைச் சொல்வது யார்…? இந்தக் கண்கள் தான்.

இப்பொழுது நாம் ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்று நினைவினைக் காட்டும் பொழுது அந்த எண்ணத்தின் தன்மை கொண்டு நமது கண் இங்கே வழி நடத்திச் செல்கின்றது.

“என்னை இப்படிச் செய்தானே பாவி….” என்று ஒரு மனிதனை எண்ணி எண்ணி அந்த உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டுச் சென்றபின் இதே உணர்வின் துணை கொண்டு அந்த மனித உடலுக்குள் அழைத்துச் சென்று அங்கே விஷத்தை ஊட்டுகின்றது.

மீண்டும் இந்த விஷத்தை ஊட்டி மனிதனல்லாத உருவினைத் தான் அங்கே உருவாக்குகின்றது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் நல்லது.

எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

 

உடல் முழுவதற்கும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுவதற்குத் தான் இங்கே பயிற்சி கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நம் கண்ணின் கரு விழிக்குள் இருக்கும் கருமணி தான் எல்லாவற்றையும் படமாக்கிக் கொடுக்கின்றது…
2.அதனுடன் தான் எல்லா வயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றது…
3.வெளியிலிருந்து எடுத்துக் கொடுப்பது அது தான்.

வேதனை வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நாளடைவில் அந்தக் கருவிழி மாசுபட்டு விடுகின்றது. விஷத்தின் தன்மை முன்னணியில் இருந்தால் அது அதிகரித்து கருமணிகள் விஷத்தன்மை அடைந்து விடுகிறது.

நம்மை அறியாமலே விஷத்தின் தன்மை அடைந்து உடலுக்குள் பரவப்பட்டு உடலில் கடும் நோயையும் உருவாக்கி விடுகின்றது.

கண்ணுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலங்களிலும் விஷத்தின் தன்மை கவர்ந்து கொண்ட பின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமாகி கண் பார்வை மங்கி விடுகின்றது… அல்லது இழந்து விடுகிறது.

எத்தனையோ கோடி உடல்களில் “தான் பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு கொண்டு தான் கண்கள் உருவானது. ஒன்றை ஒன்று பார்த்து வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியானது.

பரிணாம வளர்ச்சி அடைந்த அந்த உணர்வுகளைப் பெற்றால்… நம் கண்கள் மாசுபடும் தன்மைகளை மாற்றலாம். அதை வைத்து மற்ற உடலில் உள்ள உறுப்புகளுக்கும் உயர்ந்த சக்திகளை பாய்ச்ச முடியும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றால்…
1.அந்த எண்ணம் முதலில் கண்ணுக்குத் தான் வரும்… கருவிழி அதைத்தான் கவரும்.
2.ஆகவே முதலில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கண்களில் அதிகமாகப் படரச் செய்ய வேண்டும்.

அதைத்தான் தியானப் பயிற்சியாக இப்போது கொடுக்கின்றோம்.

நம் உடலில் இருக்கக்கூடிய நரம்பு மண்டலங்கள் அனைத்திலும் விஷத்தன்மை பரவி விட்டால் நரம்புகளில் வேதனை வருகின்றது… வாத நோய்கள் வரக் காரணமாகிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நரம்பு மண்டலத்தில் பாய்ச்சி அதைச் சீராக்க முடியும். வாத நோய் வராது தடுக்க முடியும்.

அடிக்கடி வேதனைகளை எடுக்க எடுக்க எலும்பை உருவாக்கிய அணுக்கள் பலவீனமாகின்றது. சில நேரங்களில் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள்
1.வெறுமனே கையை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.
2.நடந்து போனேன்… காலை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.

இது எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள்… உணர்வுகள்… அந்த எலும்பை உருவாக்கிய அணுக்களுக்குண்டான உணவுகளைக் குறைக்கப்படும் போது அந்த எலும்புகளின் மலம் பலவீனமாகி எலும்பின் பலம் குறைந்து விடுகின்றது.

எலும்பில் பலம் குறைந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

நிலத்திற்குள் எத்தனையோ வித்துக்கள் மறைந்துள்ளது. நிலத்தின் அடியில் ஆழத்தில் நீர் இருக்கிறது. இருந்தாலும் அந்த வித்துகள் கீழ் இருக்கும் நீரை எடுப்பதில்லை. நிலங்களில் பரவி இருக்கும் நீரைத் தான் எடுக்கிறது.

ஆனால் பாறைகளோ கற்களோ இருந்தாலும் மரங்களுக்குத் தன் விழுதுகளைப் பாய்ச்சி நீரை எடுத்துக் கொள்ளும் சக்தி இருக்கின்றது… மற்ற செடி கொடிகள் சிறிது காலமே வாழும்… அதற்கு அந்தச் சக்தி இல்லை.

அதைப் போன்று தான் நம் எலும்புக்குள் இருக்கும் ஊழ்வினை என்று வித்துக்களின் இயக்கங்களும். ஆகவே…
1.என்றுமே… எங்கிருந்தும்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துக் கொள்ளக்கூடிய சக்திகளை
2.அந்த ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் நாம் ஆழமாகப் பதிவாக்க வேண்டும்.

நம் பிரபஞ்சத்தின் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதனால் அதன் உணர்வைக் கவர்ந்து உங்களுக்குள் எளிதில் வளர்த்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்தால் கருவிழி இழுத்து இங்கே நெஞ்சின் எலும்புக்குள் தான் பதிவாக்குகின்றது. இங்கே பதிவானால்தான் அந்த நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறியவும் முடிகின்றது

நோயாளியைக் கூர்ந்து கவனித்தால் பதிவாக்குகின்றது.
1.கருவிழி ருக்மணி (கருமணிகள்) உடலுடன் இணைத்துக் கொள்ளும்.. அதாவது ரெக்கார்ட் செய்வதுதான் அதனின் வேலை.
2.பதிவான பிற்பாடு கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிலிருந்து வரும் அதனின் இனமான உணர்வினைக் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகிறது.
3.ஆன்மாவிலிருப்பதை மூக்கின் வழியாக உயிரின் காந்தப்புலன் கவர்ந்து உயிரான்மாவாக மாற்றுகின்றது.
4.இதிலே எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் செயல்படுத்தும்.

எத்தனையோ வருடங்கள் நாம் சேர்த்து வைத்திருந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக இருக்கும்.

ஒரு நிலம் கேட்டு விட்டால் அதைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்து அதன் பின் அதிலே நல்ல பயிரினங்களை வளர்க்கின்றோம். பண்படுத்தவில்லை என்றால் விஷம் கொண்ட பயிரினங்கள் தான் அதிகமாக விளையும்.

இதைப் போன்று நம் உடலான நிலைகளைப் பண்படுத்த…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி
2.அருள் ஞானிகளின் அருள் சக்திகளைப் பதிவாக்கும் திறனுள்ள ஊனாக மாற்றி அமைப்போம்.

மனித உடலுக்குள் உஷ்ணமாக இருப்பது ஏன்…? பூமிக்கு அடியில் உஷ்ணமாக இருப்பது ஏன்…?

 

உடல் பொறுக்கும் சூட்டைக் காட்டிலும் நம் உடலுக்குள் உள்ள உள் உறுப்புகள் அதிகச் சூட்டை ஏற்கும் தன்மை கொண்டுள்ளன.

உடம்பின் மேல் நாம் சூடாக அருந்தும் பானத்தின் சூடு பட்டவுடன் உடம்பின் மேல் அங்கங்கள் அந்நிலைச் சூட்டைப் பொறுப்பதில்லை. ஆனால் உள் உறுப்புகள் அந்தச் சூட்டை ஏற்கின்றன.

1.ஒரே பிம்ப உடல் தான்…
2.ஆனால் ஒவ்வொரு அவயங்களின் நிலைக்கொப்ப உஷ்ணத் தன்மைகள் உள்ளன.
3.இவ் உடலிலிருந்து இச் சுவாசம் ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் நிலைக்கொப்ப நம் உடல் உறுப்பு உள்ளது.

தாவரங்களின் தன்மையிலும் இத்தகைய நிலையுள்ளது. நம் பூமியின் தன்மையிலும் இதுவே தான். பூமியில் உள் நிலை பூமியின் மேல் நிலையை காட்டிலும் சில இடங்களில் அந்த உஷ்ண நிலை மாறு கொள்கின்றது.

கோடை காலங்களில் பூமியைப் பறிக்கும் பொழுது அந்தப் பூமியின் உள் நிலை மேல் நிலையைக் காட்டிலும் உஷ்ணமாகவே உள்ளது. நாம் நினைக்கின்றோம்.. சூரியனின் வெக்கையினால் அந்தப் பூமியில் சூடு உள்ளதென்று.

1.பூமிக்கு உஷ்ணத்தை ஈர்ப்பதுவே
2.பூமியின் சுவாசத்தினால் தான்..!

உள் இழுத்து வெளிக்கக்கி இந்த உலகம் சுழன்று… சுழற்சியின் மோதலில் ஒளி அலையை ஈர்த்து வெளிக் கக்கும் நிலையில் அந்தந்தக் கால நிலைகளில் எந்தெந்த மண்டலங்களின் ஈர்ப்பலையின் சக்தி அதிகமாக ஈர்க்கப்படுகின்றதோ.. அதன் நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறுபடுகிறது.

அதே போல் உஷ்ண அலையின் தன்மையும் மாறு கொண்டே உள்ள நிலைக்கொப்ப மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறு கொண்டுள்ளன.

சனி மண்டலமானது மிகவும் குளிர்ந்த அமிலத் தன்மை கொண்ட மண்டலம். அந்த மண்டலத்தின் ஒளி அலையே நம் பூமியைப் போல் வெளிச்சமானதாக இல்லை.

வளர்ந்த மண்டலம் தான் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது. அதன் தன்மையே மிகவும் குளிர்ச்சி வாய்ந்த அமிலத்தை ஈர்த்து வெளிப்படுத்தி அதன் நிலைக்கொப்பப் பனி மண்டலமாக உருளுகின்றது.

சனி மண்டலத்தின் ஈர்ப்பலையின் காலங்களில் நம் பூமியின் வட துருவ தென் துருவ ஈர்ப்பின் நிலைக்கொப்பக் குளிர் காலங்கள் பூமியில் ஏற்படுகின்றன.

அதே போன்ற நிலை தான் நம் பூமியைக் காட்டிலும் அதிகமான உஷ்ணத்தை ஈர்த்து வெளிப்படுத்தும் ராகு கேது போன்ற சில மண்டலங்களின் தொடர்பினால் நம் பூமியில் கோடையில் ஏற்படும் உஷ்ண நிலை.

ஆகவே உஷ்ண நிலை என்பது…
1.சுவாசிக்கும் சுவாசத்திற்கொப்பவும்
2.வந்து மோதும் பிற உணர்வுகளுக்கொப்பவும் தான் என்பதை
3.நாம் அறிதல் வேண்டும்.
(கோபம் வரும் பொழுது உடலுக்குள் உஷ்ணம் அதிகமாவதையும் பயம் வரும் பொழுது உடல் குளிர்ச்சியாவதையும் நீங்கள் பார்க்கலாம்)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நாம் கோவிலுக்குச் சென்றால் எப்படிச் செல்கிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.தேங்காய் பழத்தை உடைப்பதிலும்
2.சாமிக்கு அபிஷேகம் செய்வதிலும்
3.தன் குறைகளைச் சொல்லி அழுவதிலும் தான் இருக்கின்றோம்.

நான் அப்படியெல்லாம் அழுக மாட்டேன் என்று சொல்வார்கள்.

ஆனால்… இவர்கள் உணர்வுகள் வீட்டில் நடக்கும் கஷ்டங்களைப் பார்த்தவுடன் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…” என்று தன்னாலே இந்த உணர்ச்சி கொண்டு பேசத் தொடங்குவார்கள்.

முதலில் நன்றாக இருப்பார்கள். வீட்டில் கஷ்டம் வந்தவுடன் “என்னை இப்படியெல்லாம் சோதிக்கின்றாயே… நான் உன்னை வணங்காத நாள் இல்லையே…!” என்பார்கள்.

தன்னை அறியாமல் இந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? இதைப் போன்ற கடும் தீமைகளிலிருந்து நாம் எப்படி மீள வேண்டும்…? என்பதற்குத்தான் இந்த உபதேசங்களை உங்களுக்குள் இந்த உணர்வினைச் செலுத்தி அருள் ஞானிகளின் உணர்வுடன் ஒன்றச் செய்து அதனைப் பருகும் நிலைகளுக்கு உபதேசிக்கின்றோம்.

1.உங்களை அறியாது வந்த இருளைப் போக்குவதற்கு
2.துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவினை அங்கே கூர்மையாகச் செலுத்தி
3.அதைப் பெற வேண்டும் என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி நீங்கள் தியானியுங்கள்.

இவ்வாறு தியானித்து அதன் வழியில் பேராற்றல்களை நீங்கள் பெறுவீர்கள் என்றால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி மெய்ஞானிகளின் உணர்வுடன் ஒன்றி இனி நாம் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

அந்த மெய்ஞானிகள் சென்ற பாதையில் நாம் செல்ல முடியும். எத்தகைய கொடுமையான நிலைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள முடியும்.

1.ஒரு புழுவைக் குளவி கொட்டிய பின் புழுவின் ரூபம் இல்லை.
2.கொட்டிய குளவியின் ரூபமே வந்தது.
3.இதைப் போல அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஊட்டிய பின் இந்த உணர்வுகள் ஒளியாகத் தான் மாற்கின்றது.
4.அதன் உணர்வின் நினைவினைக் கூட்டும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.

வேதனைப்படும் உணர்வை நம்முடைய நண்பன் பால் எண்ணி எனக்கு உபகாரம் செய்தான் என்ற எண்ணத்தில் வலு சேர்த்துவிட்டால் அந்த எண்ணத்திற்கு அந்தக் கூட்டிற்குள் அழைத்துச் சென்று நம்முடைய தீமையின் உணர்வைத் தான் அங்கே செலுத்த முடியும்.

ஆகவே இந்த இயற்கையின் நிலைகளிலிருந்து நாம் நம்மை எவ்வாறு மீட்ட வேண்டும் என்பதற்குத்தான் கடவுளின் அவதாரம் பத்து என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நம் உயிர் ஒளியின் தன்மையாக விண்ணிலே உருவானது. அந்த விண்ணிலே தோன்றிய உணர்வுகள் புவியில் வருவதை உணர்வாக நுகர்ந்து உணவாக எடுத்துப் பல உடல்கள் மாறி இன்று மனித உடலாக நம்மை மாற்றி உள்ளது.

மனித உடலாக மாற்றிய நிலையில் உணர்வின் எண்ணங்களாக இயக்கி அந்த எண்ணத்தின் வலிமை கொண்டு
1.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் செருகி
2.அந்த உணர்வின் நினைவு கொண்டு தனக்குள் உருமாற்றும் உணர்வை
3.இந்த மனித உடலில்தான் உருவாக்கிக் கொள்ள முடியுமே தவிர
4.மற்ற உடல்களிலிருந்து நாம் உருவாக்க முடியாது என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள்.

அதன் வழியில் நாம் சென்றோம் என்றால் நிச்சயம் அந்த ஞானிகள் இருக்கும் எல்லையை அடைய முடியும். ஒளியின் சரீரமாக நிலை பெற முடியும். ஏனென்றால் இந்த மனித உடல் நமக்குச் சொந்தமல்ல.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற இச்சைப்படுங்கள்

 

“இக்ஷ்வாகு வம்சம்…!”
1.உயிரின் தன்மை தான் இச்சைப்பட்டு
2.அதன் நிலையில் வளர்ந்தது தான் மனிதன் வரையிலும்.

புழு பூச்சி என்று பல கோடிச் சரீரங்களில் ஒவ்வொரு தீமையைச் சந்திக்கும் போதும் “அதிலிருந்து தான் தப்ப வேண்டும்” என்று இச்சைப்பட்டு அந்த இச்சைப்பட்ட உணர்வுக்கொப்ப மனிதனாக உருவாக்கியது “இக்ஷ்வாகு வம்சத்தின் உயிர்…”

ஆகவே இப்போது இச்சை எதிலே பட வேண்டும்…?

அகஸ்தியன் தாய் கருவிலே விஷத்தை நீக்கிடும் சக்திகளை சந்தர்ப்பத்திலே தான் பெற்றான். அவன் பிறந்த பின் எதிலே இச்சைப்பட்டான்…?
1.தீமையிலிருந்து விடுபட வேண்டும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலையை.
2.தீமை என்ற உணர்வுகள் எது… எது… எது…? என்ற நிலைகளைக் கேள்விகளைக் கேட்டு
3.இந்தக் கேள்விகளுக்கு மத்தியிலே அகஸ்தியன் அறிந்தான்.

தாவர இனங்களுக்கு அதனுடைய உணவு எங்கிருந்து வந்தது…? துருவத்தின் வழியாக வந்தது…! என்று துருவத்தின் ஆற்றலை அறியத் தொடங்கினான்.

துருவத்திற்கு எது வருகின்றது…? 27 நட்சத்திரங்களின் உணர்வு தான் வருகின்றது… அதைச் சூரியன் கவர்கிறது. மற்ற கோள்கள் எதெனதன் உணர்வு பெற்றதோ அது அது உருவாகின்றது.

அதைப் போன்று தான்
1.நாம் நுகரும் (சுவாசிக்கும்) உணர்வுகள் இரத்தத்தில் கலந்தாலும்
2.உடலில் இருக்கக்கூடிய கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் இருதயம் சிறுநீரகம் பித்தசுரபி இவையெல்லாம்
3.இரத்தத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத் தான்… தன் தன் உணர்வை அதிலே வருவதை எடுத்து அவைகள் வளர்கின்றது.

ஆனால் நாம் சுவாசித்ததில் வேதனை என்ற உணர்வு அதிகரித்து விட்டால் வேதனையை உருவாக்கும் அணுக்கள் அதிகமாகி… உடலுக்குள் போர்முறையாகி… மனிதன் சிந்தனைகள் குறைக்கப்படுகின்றது. நம் உடலில் உள்ள உறுப்புகள் பாழாகின்றது.

இதே போல் தான் பிரபஞ்சத்திலும் சில கோள்கள் பாழாகி விடுகின்றது. பிரபஞ்சத்தின் இயக்கம் தடுமாற்றமானால் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் பூமியின் இயக்கத்திலும் மாற்றமாகி
1.தாவர இனங்களின் விளைச்சல் இங்கே குறைவாகும்.
2.தாவர இனங்களை உணவாகப் புசித்த மற்ற உயிரினங்களும் குறைவாகும்
3.இது அனைத்தும் மனிதனாக்கப்படும் பொழுது அவனுடைய சிந்தனைகள் குறையும் என்ற நிலையை
4.அன்றே அகஸ்தியன் உணர்ந்துள்ளான் அணுவின் இயக்கத்தை…!

ஆக… நம் பூமியின் துருவப் பகுதியின் வழியாகத்தான் அனைத்தும் வருகின்றது என்று உணர்ந்து கொண்ட அகஸ்தியன் தான் கண்ட பேருண்மையின் உணர்வுகளை வைத்துப் புது புதுத் தாவர இனங்களை உருவாக்கினான்.

அதை மனிதன் தனக்குள் சுவைத்து மகிழ்ச்சியாக வாழச் செய்யும் தாவர இனங்களாக உருவாக்கினான். அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் பழக்கத்தை விடுத்தான்.

காரணம்… மற்ற உயிரினங்கள் விஷத்தைத் தன் உடலாக ஆக்கும் தன்மை பெற்றது. அவைகளைக் கொன்று புசித்தால் அதே விஷம் நம் உடலில் அணுக்களாகி உறுப்புகளாக மாறிவிடும்… மனிதனல்லாத நிலையாக உருவாக்கிவிடும் என்று உணர்ந்தவன் தான் அணுவின் இயக்கத்தை அறிந்த அகஸ்தியன்.

இதைப்போன்று துருவத்தின் ஆற்றலை தனக்குள் கண்டுனர்ந்து திருமணம் ஆன பின் அதையெல்லாம் தன் மனைவியிடம் சொல்கின்றான். ஆண் பெண் என்ற நிலையில் தான் உருவாக்க முடியும் என்று உணர்கின்றான்.

செடி கொடிகள் கல் மண் எதுவானாலும் ஆண் பெண் நட்சத்திரங்களுடைய உணர்வின் கலவைகளால் தான் உருவாகிறது என்பதை உணர்ந்தான்.
1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையே முழுமையாகக் காணும் திறன் பெற்றான்
2.நம் துருவத்தின் ஆற்றலை உணர்ந்து மக்களுக்கும் அதை எடுத்துக் கூறுகின்றான்… துருவனாகின்றான்.

திருமணமான பின் துருவ மகரிஷியாக மாறுகின்றான் தீமைகளை வென்றிடும் உணர்வு கொண்டு…
1.உயிர் எப்படி உணர்வின் அறிவாக இருக்கின்றதோ
2.உயிரைப் போலவே உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டான்… கணவனும் மனைவியாக.

ஆண் பெண் என்ற நிலை இல்லை என்றால் எதுவுமே நடக்காது… அது வளர்ச்சி அடைய முடியாது.

இப்படி ஆனவன் தான் துருவத்தின் எல்லையில் நின்று… இந்த பிரபஞ்சத்திலும் சரி… மற்ற பிரபஞ்சத்திலிருந்து நம் பூமி கவரும் நிலைகளில் விஷத்தன்மைகள் வந்தாலும்… அதை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம்.

ஆவிகளுக்கு அதனின் பாதம் நிலத்தில் பாவாது… ஏன்…?

 

தேவர்கள்… அசுரர்கள்.. மனிதர்கள்… என்று இனம் பிரித்துக் காட்டினார்கள் நம் முன்னோர்கள். தேவர் என்பவர் யார்…? அசுரர் என்பவர் யார்…? மனிதர் என்பவர் யார்…?

எந்தெந்த வளர்ச்சி செயல் புரிந்து எந்தெந்த எண்ண ஓட்டத்தில் வாழ்கின்றார்களோ அதனை இனம் பிரித்துத் தேவனாகவும் அசுரனாகவும் மனிதனாகவும் காட்டினர்.

இன்று நம்மிலேயே இந்த மூன்று வகைக் குணத்தவர் உள்ளனர். அவரவர்களின் எண்ணப் பயனால் அமைவதுவே இந்தக் குண நிலை. மனித ஆத்மாவுக்கு மட்டுமல்ல. அனைத்து நிலைகளுக்கும் இது உண்டு என்று உணர்த்தியுள்ளேன்.

நம் பூமியின் ஒத்த நிலைகள் மற்ற மண்டலங்களுக்கு மாறுபாடு கொள்கின்றன. சூரியனின் ஒளி அலையை ஈர்த்து நம் பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் சக்தி நிலைப்படி நம் பூமியின் சுழற்சி ஓட்டமும் இயற்கைத் தன்மையும் அமைந்துள்ளன.

அது அல்லாமல் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட விகிதத் தூரத்தைக் கொண்டும் நம் பூமியின் நீர் நிலையின் தன்மை கொண்டும் நம் பூமிக்குத் தொடர்புடைய மண்டலங்களின் ஈர்ப்பு அலைகளின் வெளிக்கக்கும் அமில குணத்தைக் கொண்டும் நம் பூமியின் இன்றைய குண நிலை உள்ளது. இது போல் மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறுபடுகின்றன.

உஷ்ண அலையில் வாழும் நம் பூமியில் பிரிந்து வாழும்… பிரிந்து என்பது
1.இந்தப் பூமியில் வாழ்ந்த ஆன்மாக்கள்
2.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்துடன் எந்த இடத்தில் எந்த எண்ணத்தில் தன் ஆத்மா பிரிந்ததுவோ
3.அதே எண்ண நிலைக்கொப்ப அந்த உஷ்ண அலையின் நிலையுடனே
4.இந்தப் பூமியின் சுழற்சியுடன் இந்தப் பூமியின் ஓட்டத்திலும் இந்தப் பூமியின் ஈர்ப்புடனும் அதன் சுழற்சி நிலை உள்ளது.

நம் பூமி ஓர் இடத்தில் நிற்பதில்லை. சுழன்றே ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் பூமியிலிருந்து பிரிந்த ஆத்மாக்களும் அதன் சுழற்சியிலேயே ஓடிக் கொண்டே சுழன்று கொண்டே வருகின்றன.

ஆத்மா பிரிந்த பிறகு மேலுலகம் சென்றுவிட்டான் என்கிறனர்.
1.மேல் உலகம் என்பது எந்த உலகம்…?
2.இந்தப் பூமிக்கும் மற்ற மண்டலங்களுக்கும் மேல்… கீழ்… என்ற நிலை உள்ளதுவா…?
3.சூரியனின் ஒளி அலைகள் பாயும் மத்திய பாகத்தை மேல் பாகம் என்றாலும் இரவிலே கீழ் பாகத்தில் வாழுகின்றோமா…?

சுழலும் சுழற்சி வட்டத்தில் கீழும் இல்லை… மேலும் இல்லை…!

இந்தப் பூமியின் காந்த ஈர்ப்பின் நிலையுடன் ஒட்டி… பூமியின் சுழற்சியுடன் நாம் எப்படி அதன் ஈர்ப்பில் வாழ்கின்றோமோ அதைப் போல் தான் இந்த உலகில் வாழ்ந்து பிரிந்த உயிராத்மாக்கள் இந்த உலகின் ஈர்ப்பின் வட்டத்திற்குள் காந்த அமில வட்டத்திற்குள்ளேயே நம்முடன் கலந்தே தான் அவர்களின் அமில வட்டக் குணங்களும் உள்ளன.

ஆவி பிரிந்து அந்த ஆத்மா ஆகாயத்தில் சென்று நிற்பதில்லை…!

நம் மூதாதையர்களினால் சொல்லப்பட்ட நடந்த கதைகளில் பேய் பிசாசு வந்ததாகவும்… அதன் பாதம் நிலத்தில் பதியவில்லை…! என்றும் பேய்க்கும் பிசாசிற்கும் பாதம் நிலத்தில் பாவாது…! என்றெல்லாம் கதைகளாகக் கேட்டிருப்பீர்.

இவைகள் எல்லாம் கதைகள் அல்ல…! உண்மை நிலையில் வெளிப்பட்ட சில அர்த்தம் கொண்ட செயல் முறைகள் தான்.

1.பிம்ப உடல் இல்லாததினால் அவற்றின் உடல் பூமியில் பதிவதை நாம் காண முடியாதேயன்றி
2.மனித ஆன்மாக்கள் எப்படிப் பூமியில் வாழ்கின்றனவோ அதைப் போல்
3.ஆவி ஆத்மாக்களும் இந்த ஈர்ப்பின் வட்டத்திற்குள்ளேயே இருக்க முடியும்… இருக்கின்றன…!

இந்த ஈர்ப்பின் வட்டத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்றால் அதற்குகந்த ஞானம் பெற்றிருந்தால் தான்… அந்தப் பக்குவ வழியில் சூட்சமம் கொண்டோர்களினால் தான்… இந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு மேலே (வெளியிலே) செல்ல முடியும்.

1.இந்தப் பூமியின் சக்தி அலையில் இருந்து நம் ஆத்ம நிலை மற்ற நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என்றால்
2.அதற்குகந்த பயிற்சித் திறன் நாம் பெற்றிருந்தால் அதன் செயலில் செல்ல முடியும்.

மனிதனிலிருந்து பிரிந்து சென்ற ஆத்மாக்களினால் இந்த ஈர்ப்பின் தன்மையிலிருந்து பறந்து எங்கே வேண்டுமானாலும் செல்ல முடியாது.

பூமி சுழன்று கொண்டே உள்ள பொழுது பூமி சுழலுவதும் ஓடுவதும் நமக்குத் தெரிகின்றதா..? இல்லை…! அதே போல் அதன் ஈர்ப்பில் ஐக்கியப்பட்டுள்ள நம்மைப் போன்ற நிலைதான் இந்தப் பூமியில் பிறந்து இந்தப் பிம்ப உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்கள் நிலையும் உள்ளது.

ஆக உடலை விட்டுப் பிரிந்த எந்த ஆன்மாவாக இருந்தாலும் இந்தப் பூமியின் பிடிப்பிலே இதனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் இருக்க முடியும். மீண்டும் மீண்டும் உடல் பெற்றுத் தான் ஆக வேண்டும்.

1.இதிலிருந்து தப்பி இந்தப் பூமியின் ஈர்ப்பைக் கடந்து சென்று பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
2.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் சப்தரிஷி மண்டலங்களுடன் நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதற்குத்தான்
3.இந்தப் பாடநிலைகளை விளக்கவுரைகளாகத் தொடர்ந்து கொடுக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாராயணன் என்ற நிலைகள் சூரியன் என்றாலும் சர்வேஸ்வரன் – சர்வத்தையும் உருவாக்கும் உணர்வுகள் அதனின் தொடர் வரிசையாக வருகின்றது.

நமக்குள் உயிர் ஈசனாக இருந்து அதனால் வளர்க்கப்பட்ட நிலைகள் கொண்டு நாம் பேசினாலும் இந்த உணர்வைச் சூரியனின் காந்தசக்தி கவர்கின்றது.

என் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை பதிவானாலும் இதன் உணர்வைத் தனக்குள் உணவாக்குவதற்குச் சூரியனின் இயக்கமே எனக்குள் காரணமாக இருக்கின்றது.

ஆனால் அதற்குள் என் உயிர் ஈசனாக இருந்து என்னை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

1.சர்வேஸ்வரன் என்றும் நாராயணன் என்றும் இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது…? என்றும்
2;.மனிதனானபின் எப்படி ஈசனாக இருந்து மனிதனாக உருவாக்கி இந்த உணர்வின் தன்மை சர்வத்தையும் அறியும் தன்மை எப்படி வருகின்றது…? என்றும் கண்டவன் அந்த மெய் ஞானி.

சூரியன் சர்வேஸ்வரனாக இருப்பினும் நமது உணர்வின் தன்மை உயிரின் துணை கொண்டு சர்வத்தையும் உணரும் தன்மை வருகின்றது… ஈஸ்வரன்.

மனிதனான பின் நாம் எண்ணத்தால் அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கி நாம் முழுமையான நிலையில் உருவாக்கும் தன்மை பெற்றவர்கள்.

அப்படி உருவாக்கிய நிலையை உண்மையை அறிந்தபின் தான் “அரசர்கள்… அவர்கள் இஷ்டத்திற்குத் தக்கவாறு…” மதங்களை உருவாக்கி விட்டார்கள்.

மதத்தின் நிலை கொண்டு அந்த உணர்வின் நிலையைப் பதியச் செய்து அந்த உணர்வின் வழியிலே நமக்குள் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்தச் செய்து அதை நமக்குள் உருவாக்கிவிட்டார்கள்.

பதிந்த உணர்வின் வழிப்படி
1.“இந்த மதம்.. இது தான் எங்கள் கடவுள்…” என்று
2.நமக்குள் பதிந்த அந்த உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்கி விட்டால்
3.“இது எங்கள் கடவுள்.. எங்களுக்குச் சொந்தமாகின்றது…” என்று தான் வருகிறது.

அந்த மதத்திற்குள்ளேயே இன்னொருவர்… அதாவது ஒரு அரசனின் மக்களில் இரண்டு பேருக்குள் போர் முறைகள் வந்து பிரிந்து கொண்டால்
1.அவர் சொன்ன கடவுள் எனக்குத் துரோகம் செய்துவிட்டது.
2.என் தந்தை அவர் வணங்கிய கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டார்
3.இன்னொரு மகனுக்கு அதிகமாகவும் எனக்குத் தாழமையாகவும் கொடுத்தார்.
4.ஆகையினால் அந்தக் கடவுள் பொய்யான கடவுள்…! என்று அதிலே சிறிது பிரித்துவிட்டு
5.இந்தச் சட்டத்தை மாற்றி இதற்குள் இந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிய வைத்து இவர் ஒரு கடவுளை உருவாக்குவார்.

இப்படி மதத்திற்குள் இனமாக இன்றும் ஒவ்வொரு மதத்திலும் நடக்கும் போர் முறைகளைப் பார்க்கலாம்.

1.மனிதனால் உருவாக்கிய உணர்வுகள் தான் கடவுளாக நம் உயிர் உருவாக்கி
2.அந்த உணர்வின் செயலாக எப்படி உருவாக்குகிறது…? என்ற நிலையைத் தெரிந்து கொண்டால் நல்லது.

நாம் மனிதன் எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை நம் உயிர் அந்த இச்சைக்கொப்ப உணர்வை நுகர்ந்து அதன் வழி இந்த உடலை அழைத்துச் செல்கின்றது – மூஷிகவாகனா.

நாம் சுவாசித்த உணர்வுகள் வாகனமாக அமைந்து அந்தந்த வாழ்க்கையிலே அமைக்கின்றது.

இதிலே எந்தெந்த குணங்கள் அதிகமாகச் சந்திக்கும் சந்தர்ப்பமாகி வளர்கின்றதோ… அது கணங்களுக்கு அதிபதியாகி அதன் உணர்வின் ரூபமாக நம்மை மாற்றுகின்றது… என்ற நிலையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஆலயங்களில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யச் சொன்னதன் உள்கருத்து என்ன…?

 

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாது வரக்கூடிய பகைமைகள் மகாபாரதப் போராக நம் உடலுக்குள் எத்தனையோ நடந்து கொண்டுள்ளது.

புறத்திலே நாம் பார்த்ததெல்லாம்… நம்மைச் சந்தோஷப்பட விடாதபடி மனக்கலக்கங்களும் வேதனைகளும் துயரங்களும் உடலுக்குள்ளேயே வருகின்றது

இடுப்பு வலிக்கின்றது தலை வலிக்கின்றது நெஞ்சு வலிக்கின்றது கண் வலிக்கின்றது கை வலிக்கின்றது மூட்டு வலிக்கின்றது என்று சொல்வது… இது எல்லாம் மகாபாரதப் போர் தான்.

ஒவ்வொருவருமே நாம் தெரிந்து கொள்ளலாம்…! வீட்டில் கஷ்டம்… கஷ்டம்… என்று சொல்லி வேதனைப்பட்டுப் பாருங்கள்
1.பையன் வெளியே சென்றால் கீழே விழுந்து விடுவான்
2.கணவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது… என்ன என்று தெரியாதபடி திடீரென்று வேலையிலிருந்து வெளியேற்றி விடுவார்கள்
3.பக்கத்து வீட்டுக்காரர்கள் இனம் புரியாதபடி சண்டையிடுவார்கள்
4.தொழில் செய்யும் இடத்தில் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது உடைந்து நொறுங்கி விட்டது என்று
5.இதை எல்லாம் சில குடும்பங்களில் பார்க்கலாம்.

நமது எண்ணமே… நமக்குள் மட்டுமல்ல நமது உணர்வுகள் நம்மிடம் வேலை செய்பவருக்குள்ளும் அவ்வாறு இயக்கச் செய்கிறது. நம்மைக் காட்டிலும் மேலதிகாரியாக இருந்தாலும் அவரை அறியாமலே மறைமுகமாக அவரையும் இயக்கி விடுகின்றது.

இதையெல்லாம் நமக்கு உணர்த்துவதற்கு ஞானிகள் என்ன செய்தார்கள்…?
1.நல்ல குணங்கள் நமக்குள் எப்படி இருக்கின்றது…?
2.அது எப்படி காக்கப்பட வேண்டும் என்பதற்காகச் சாதாரண ஒரு கல்லைச் சிலையாக வடிக்கின்றார்கள்
3.வீட்டு வாசல் படிக்கும் அந்தக் கல் தான்… அதே கல்லைத் தான் சிலையாகவும் வடிக்கின்றார்கள்
4.அதற்குக் காரணப்பெயர் வைத்து… “தெய்வம் நல்லதைக் காக்கும்…” என்று சொல்கின்றனர்.

கல் சிலைக்கு அபிஷேகம் செய்கின்றோம். ஏன் அபிஷேகம் செய்கிறோம்…? என்று நாம் புரிந்து கொள்வதில்லை.

நாம் தெய்வம் என்று மட்டும் தான் நினைக்கின்றோம் இந்த உருவத்திலே தெய்வம் இருந்தது என்றும் எண்ணுகின்றோம். ஆனால்…
1.நல்ல குணங்களைச் சித்தரித்துக் காட்டுவதற்குத் தான்
2.அது இன்னது செய்யும்..! என்று உருவத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

சிலையில் பாலை அபிஷேகம் செய்யும் பொழுது என்ன செய்ய வேண்டும்…?

இந்தப் பாலை போன்ற மனம் நான் பெற வேண்டும் எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் இந்த ஆலயத்திற்கு வருவோர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தச் சந்தனத்தை போன்ற நறுமணம் பெற வேண்டும் என்று இப்படி அந்த ஞானிகள் காட்டிய வழியில் எண்ண வேண்டும்.

அது உருவம் தான்… பொருள் தான். கண்களால் நாம் காண முடிகின்றது

சந்தனத்தைப் பார்த்தவுடனே அது நன்றாக மணக்கும் என்றும் தெரிகின்றோம்… உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாலைப் பார்த்த உடனே அதிலே சர்க்கரை போட்டுக் காபித் தூளைப் போட்டுச் சுவையாக்க் குடிக்கின்றோம். பால்கோவாவும் நாம் கிண்டிச் சாப்பிடுகின்றோம்.

நம்முடைய மனதை நல்லதாக்க ஆலயத்தில் அப்படிச் செயல்படுத்துகின்றார்கள்.

ஆனால் அந்தப் பாலிலே சிறிது விஷம் போட்டால் நாம் சாப்பிடுவோமா…!

ஏனென்றால்… நாம் பாலைப் போன்று நல்ல மனதாக இருக்கின்றோம் எதிர்பாராது சந்தர்ப்பவசத்தில் ஒரு தீமையைப் பார்க்க நேர்கின்றது. அல்லது நமக்கு நண்பனாக இருக்கின்றான்… அவன் எல்லோருக்கும் நல்ல உதவிகளைச் செய்கின்றான். இப்பொழுது அவன் வேதனைப்படுகின்றான். அதைப் பார்த்தவுடனே… வேதனை என்ற விஷத்தை நுகர்ந்த பின் நம் உயிரிலே அந்த வேதனை தான் அபிஷேகமாகிறது.

எதன் வழி அபிஷேகம் நடக்கிறது…?

1.நாம் மூக்கு வழி சுவாசித்தது… உயிர் வழி தான் அபிஷேகம் நடக்கிறது
2.உயிரிலே பட்டு அபிஷேகம் ஆகும் போது அந்த வேதனையால் உடலெல்லாம் பலவீனம் அடைகிறது.

ரொம்ப நெருங்கிய நண்பனாக இருந்தால் அவன் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வந்தால் நமக்கு அங்கேயே தலை சுற்றிவிடும். அடுத்து யாராவது ஏதாவது சொன்னால் நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியாது ஒரு பொருளை வைத்து விட்டு அங்கே இங்கே என்று தேட ஆரம்பிப்போம் குழந்தைகளோ மற்ற யாரோ ஏதாவது ஒரு பொருளைக் கீழே போட்டால் நமக்குக் கோபம் பயங்கரமாக வரும்… அடிக்கச் சொல்லும். சிந்தனையற்ற செயலைச் செய்யும்.

யார் அங்கே தவறு செய்தது…? நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை இவ்வாறு தவறு செய்ய வைக்கின்றது… அல்லது மயங்க வைக்கிறது.

அதை மாற்றுவதற்குத் தான் ஞானிகள் ஆலயங்களில் சிலைகளை உருவங்களாக வைத்துக் காட்டினார்கள்.

அந்தப் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும் என்று அப்பொழுது நாம் எண்ண வேண்டும். நாங்கள் பார்க்கும் அனைவரும் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் அதைப் பெற வேண்டும்… என்று எண்ணினால் அதே உணர்ச்சிகள் உயிரிலே படுகின்றது.

இப்படி…
1.நாம் எதை நுகர வேண்டும்…? என்று
2.அந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்யும் போது நாம் நம் உயிர் வழி உயர்ந்த உணர்வுகளைச் சுவாசிக்கும்படி
3.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ளும்படி செய்து
4.அதை வைத்து நமக்குள் வரக்கூடிய தீமைகளை நன்மை செய்யக்கூடிய சக்தியாக மாற்றும்படி செய்கின்றனர்.

எவ்வளவு அழகாக ஞானிகள் நமக்கு இதைக் கொடுத்திருக்கின்றார்கள்…!

முடியாதது என்று எதுவும் இல்லை

 

ஒரு சிறு தீப்பொறி காற்றலையில் அதன் நிலைக்குகந்த பொருளின் மீது படும் பொழுது “தீ..” பற்றிக் கொள்கின்றது.

அதன் தன்மைக்குகந்த பொருள்கள் எல்லாவற்றையும் எரித்து அதன் தன்மைக்குகந்த எரிபொருள் இருக்கும் வரை எரிந்து விட்டு அது தீர்ந்தவுடன் தன் நிலையில் சாம்பலாகிப் பூத்துவிடுகின்றது.

இவ் எரியும் நெருப்பை நம்மால் அணைக்க முடிகிறதா..? நெருப்பிற்கு மேல் சக்தி கொண்ட நீரை அதன் மேல் பாய்ச்சித் தான் அதை அணைக்க முடியும்.

அதைப் போல்…
1.தீய சக்தியான இக்கடும் எண்ணக் கலவையின் இன்றைய மனித ஆத்மாக்கள் வாழும் நிலையில்
2.நம் ஜெப நிலைக்குகந்த ஒளி அலைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்றால்
3.இந்த உலக மாயை எண்ணத்தினால் வாழும் நமக்கு…
4.அந்த மாமகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகளை எடுத்தால் தான் உலக ஞானத்தை நாம் பெற முடியும்.

ஒன்றில்லாமல் ஒன்றில்லை…!

பக்தி கொண்டு வணங்கிப் பிறரின் உபதேசத்தினால் தான் நம் ஞானம் வளருமா…? ஆதி சக்தியின் சக்திக் குழந்தையான நம் சக்தியை பிறரை வணங்கி நாம் ஏன் ஏற்றம் பெற வேண்டும்…? நம் ஞானத்தை நாமே பெறலாகாதா…? என்ற வினா எழும்பலாம்.

அந்த மாமகரிஷிகள் பெற்ற அந்த உன்னத சக்தியின் ஒளி அலையின் சக்தியை நாம் பெற்றால் நாம் அடையக்கூடிய ஞான வழிக்குச் சில வழி முறைப் பாடங்களை “அவர்களின் துணையுடன்” நாம் பெற்றுச் செல்ல முடியும்.

புராணக் கதைகளில் கிருஷ்ணாவதாரத்திலும் இராமாவதாரத்திலும் சில நிலைகளைக் கதை ரூபமாகப் புரியாத வண்ணம் உணர்த்தியிருக்கின்றார்கள்.

கிருஷ்ணர் போர்க்களம் சென்றவுடன் அவரின் மேலிருந்து “ஒளிகள் பாய்ந்தவுடன்…” அனைத்து எதிரிப்படைகளும் நின்றதாக உணர்த்தியிருக்கின்றார்கள்.

இந்நிலை சாத்தியப்படுமா…? ஆண்டவனே வந்து அவதரித்தால் இந்நிலை நடக்கும். கிருஷ்ணர் வாயைத் திறந்து காட்டியவுடன் ஈரேழு உலகமும் கண்டதாக வர்ணிப்புக் கதையும் உண்டு,

கதை அல்ல…! காவியம் தான் என்றாலும்…
1அந்நிலையின் சாத்தியக் கூற்றை ஒவ்வொரு ஆத்மாவினாலும் செய்து காட்டிட முடியும்… அதற்குகந்த ஞானம் பெற்றால்…!
2.முடியாத நிலை என்ற சொல்லுக்கே அர்த்தமற்ற குணத்தைக் காட்டலாம்.

பக்குவ ஞானம் பெற்று… பக்குவமான ஜெபத்தைக் கொண்டு… முதலில் அந்நிலைக்குச் சென்ற மாமகரிஷிகளின் துணையுடன் இந்த உலக நிலையிலே எந்தச் செயலையும் நடத்திடவும்.. நிறுத்திடவும்… நம் ஞானத்தால் முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“திரும்பத் திரும்பச் சாமி சொல்கிறார்.. எனக்கு அர்த்தமாகவில்லை…” என்பார்கள். அர்த்தமாவதற்காக வேண்டித் திருப்பிச் சொன்னால் சாமி திருப்பித் திருப்பிச் சொல்கிறார்…! என்பார்கள்.

ஆனால், தெரிந்தார்களா…? இல்லை.

தெரிந்து கொண்டீர்களா…? இல்லை.

“சாமி திருப்பித் திருப்பிச் சொல்கிறார்…” என்று சொல்பவர்களிடம் திருப்பிக் கேட்டால் தலையைச் சொறிவார்கள். அது தான் தெரியும்.

சொல்லும் பொழுது கேட்பார்கள். அடுத்த கணம் கேட்டால் தெரியவில்லை.

ஆனால் சாமி சொன்னதையே திருப்பிச் சொல்கிறார் என்று சுருக்கத்தில் சொல்லிவிடுவார்கள். சாமி என்ன சொன்னார்..,? என்று கேட்டால் தெரியவில்லை.

எத்தனையோ தடவை திருப்பிச் சொல்கிறேன். ஆனால், இதை இலேசாக நினைத்து உடனே… சாமி இப்பொழுதுதான் சொன்னார் மீண்டும் திருப்பிச் சொல்கிறார் என்பார்கள்.

இது எதற்கு…?

ஒரு பொருளின் (அர்த்தம்) தன்மை தனக்குள் வரவில்லை என்றால் திரும்பப் படித்துத்தான் அதை மீண்டும் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு தடவை படித்துவிட்டேன் என்று வைத்துவிட்டால் நீங்கள் தெரிந்து கொள்வீர்களா…? தெரிந்து கொள்ள முடிகின்றதா…?

1.நான் சொன்னதை நானே திருப்பிச் சொல்ல வேண்டும் என்றாலும் கூட சிறிது சங்கடம் தான்.
2.சொன்ன பாதையிலேயே மீண்டும் முழுவதும் சொல்ல வேண்டும் என்றால் முடியாது.

நான் சொல்வதை நீங்கள் கேட்டு முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்… முடியுமா…?

ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் சொல்லுங்கள். அப்படிச் சொன்னபின் சொன்னதையே மீண்டும் தப்பில்லாமல் நீங்கள் சொல்லிவிடுங்கள்… பார்க்கலாம்.

முடியுமா…? என்றால் முடியாது.

அந்த இயற்கையின் உணர்வுகள் நுகரும் பொழுது உணர்வின் எண்ணங்களாகத் தான் அது இயங்குமே தவிர அவ்வப்பொழுது இயக்கும் இயக்கத்தின் உணர்வுகள் நுகரும் பொழுது உயிர் அதன் உணர்வாக நம்மை இயக்கும், அதன் சொல்லாகத் தான் வெளிப்படும்.

ஒரு புலி வலிமையாக இருக்கப்படும் பொழுது புலியின் உணர்வுகள் ஒரு மானின் உடலுக்குள் பட்டபின் புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் வலிமையாகி மானின் உயிரான்மா அந்தப் புலியின் ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்று மானைப் புலியாக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான்
1.அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால்
2.இந்த உடலை விட்டு அகன்ற பின் அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.
3.உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்கும்… ஒளி பெறும் சரீரம் நிச்சயம் பெற முடியும்.

ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்குள் அந்த மெய்ஞானத்தைப் பெறும் தகுதிகளை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை

 

குருநாதர் சொன்ன முறைப்படி இமயமலையிலே நான் (ஞானகுரு) சென்று கொண்டிருந்தேன். அங்கே பனிப்பாறையைக் கடந்து செல்லும் பொழுது அந்தப் பாதை திடீரென்று இடிந்து விழுந்து விட்டது.

அந்த நேரத்தில் குருநாதர் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சொல்லிக் கொடுத்த அத்தனையும் மறந்து விட்டேன். மரணம் அடையும் நிலையே ஏற்பட்டு விட்டது. என் மனைவி மக்களை எல்லாம் எண்னத் தொடங்கிவிட்டேன்.

குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…
1.பனிப்பாறைகள் நொறுங்கிய பின் திரும்ப எப்படிப் போவது…? என்று பயந்தாய்…
2.உனக்குள் புயலே வந்து விட்டது… தலை சுற்ற ஆரம்பித்து விட்டது
3.உன்னுடன் இணைந்த மனைவி மக்களள் எல்லோரையும் எண்ணத் தொடங்கி விட்டாய்.

அவர்களை எண்ணும்போது இந்தப் பனியின் குளிரிலிருந்து தப்ப முடியவில்லை நீ மரணம் அடையும் நிலைக்கு வந்து விட்டாய்… இப்போது நீ யாரைக் காக்கப் போகின்றாய்…? என்று கேட்டார் குருநாதர்.

ஆகவே மனமே இனியாகிலும் மயங்காதே…! இந்த மனித வாழ்க்கையில் நீ தயங்காதே..
1.இந்த உடல் ஆசையை நீ வைக்காதே
2.எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்
3.ஆனால் நடக்காது தடுப்பதற்கு உனக்குள் சக்தி கொடுத்துள்ளேன்.

அதை எண்ணி எடுக்காதபடி… இந்த உடல் இச்சையை நீ பட்டு விட்டால்… “என் குழந்தை… என் பிள்ளைகள்… என் மனைவி…!” என்று நீ எண்ணினால் இந்த உணர்வின் இச்சைப்பட்டு… உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய்.

உன் குழந்தையின் ஈர்ப்பிற்குள் போகின்றாய்… அல்லது மனைவியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல முடியும். அந்தக் குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க வைக்க முடியுமா…?

“நீ இறந்து விடுகின்றாய்…” என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையுடன் அவர்கள் ஏங்கி இருக்கப்படும் பொழுது அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக்கி… நோயாக்கி விடுகின்றாய்.

1.உன்னை நம்பிய அனைவருக்கும் நீ பட்ட வேதனைகளை உருவாக்கி
2.துரித நிலையில் அவர்களும் மடியும் தன்மையை நீ உருவாக்குகின்றாய்.
3.அந்த வேதனையைத்தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும் அவர்களைக் காக்க முடியாது.

ஆகவே நீ எண்ணிய உணர்வுகள் அவர்கள் உணர்வுடன் நீ மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய். அவர்களையும் அழித்து விடுகின்றாய்.

அந்த உடலுக்குப் பின் எந்த வேதனையும் துயரத்தையும் பட்டாயோ இந்த உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்… அடுத்து நீ எங்கே போகின்றாய்…? என்று தெரியுமா…!

நீ எந்த வேதனை என்ற உணர்வை எடுத்தாயோ… அந்த விஷத்தையே தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாக்கும் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் அழைத்துச் சென்று உயிர் அதற்குத் தக்க உடலை அங்கே உருவாக்கிவிடும்.

இதனை அனுபவபூர்வமாகக் காட்சியாகவே குருநாதர் காட்டுகின்றார்.

அதற்குப் பின் அங்கிருந்து டெல்லி வந்து… சென்னைக்கு விமானத்தில் திரும்பும் போது… குருநாதர் இன்னொரு அனுபவத்தையும் கொடுக்கின்றார்.

விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது “விமானம் கவிழும்…” சந்தர்ப்பம் ஏற்பட்டது.

விமானி முதற்கொண்டு மற்றவர்கள் எல்லாருமே பயந்து கதிகலங்கி விட்டார்கள். நான் மட்டும் அசையாமல் உட்கார்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.

குருநாதர் அங்கே சில விளக்கங்களைக் கொடுக்கின்றார்.

மற்றவர்கள் எல்லாம் பயந்தார்கள்… நீ ஏன் பயப்படவில்லை…?
1.உடலின் இச்சையை நீ படவில்லை… நீ உயிரின் இச்சைப்பட்டாய்.
2.உயிர் ஒளியானது.. அறிவின் தன்மை ஆனது.
3.அதே அறிவின் தன்மை நீ அச்சமில்லாது இருப்பதனால் உனது சக்தியும் சேரலாம் என்று சொல்கிறார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நொடிக்குள் எடுத்து அங்கே செலுத்துகின்றாய்… அவர்களையும் காக்கின்றாய்… உன்னையும் காத்துக் கொண்டாய்…!

அத்தனை பேரிலும் ஒருவன் நீ எண்ணிச் செயல்பட்டதால் “இது உனக்குள் இருக்கக்கூடிய வலு…” என்று சொல்கின்றார். இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று விமானத்தில் வைத்து குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

இருந்தாலும்… எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை.

இன்று நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி… மகான் என்று மக்கள் மத்தியிலே அவரைப் போற்றிக் கொண்டிருந்தாலும் சரி…
1.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்..
2.எதனுடைய அழுத்தம் அதிகமாகின்றதோ இந்த உடல் போய்த்தான் ஆகும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் இந்த மனித உடல் என்ற இச்சையிலிருந்து விடுபட்டு… உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றது.

உடல் வலுவோ மன வலுவோ இன்று நம்மிடம் இல்லை… காரணம் என்ன…?

 

பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இந்தச் சமீப நூற்றாண்டுகளில் மனிதனால் விஞ்ஞானம் கொண்டு செயற்கை யுகத்திற்கு வழி காட்டிய நாளில் உள்ள நமக்குப் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் இன்றைய இயற்கைத் தன்மையின் குண அமில வர்க்கத்திலுள்ள சக்தித் தன்மையே குறைந்து விட்டது.

இது எப்படிக் குறைந்தது…?

பால்வெளி மண்டலத்தில் சுழன்று ஓடும் நம் பூமி அதில் உள்ள காற்று மண்டலத் தன்மை சக்தி குறைந்ததென்றால் அது எப்படிச் சாத்தியப்படும்…?

சூரியனிலிருந்தும் நட்சத்திர மண்டலங்களிலிருந்தும் மற்ற கோளங்களிலிருந்தும் அனைத்து மண்டலங்களுக்கும் பொதுவான பால்வெளி மண்டலத்திலிருந்தும் சக்தித் தன்மை ஒவ்வொரு மண்டலங்களுக்கும் கூடிக் கொண்டுள்ளதா…?

பொது மண்டலம் பால்வெளி மண்டலம். நமக்கு ஒளி தரும் மண்டலம் சூரிய மண்டலம். சூரியனிலிருந்து
1.நம் பூமி எப்படி ஒளி பெறுகின்றது…?
2.நம் பூமியிலுள்ள உஷ்ண விகிதம் மற்ற சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரங்களில் உள்ளனவா…?

நம் பூமியின் சுழற்சியினால்
1.நம் பூமி சுவாசித்து வெளிக்கக்கும் அலையின் அமிலம்
2.சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலத்துடன் மோதும் நிலை கொண்டே
3.நம் பூமிக்கு உஷ்ண விகித நிலை செயல்படுகின்றது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் ஐம்பது மைல் விகித தூர அளவில் ஒளி வட்டம் உள்ளதாக இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. ஒளி வட்டம் உள்ளதனால் தான் நம் பூமிக்கு இந்த உஷ்ண அலை ஏற்படுகிறது.

இந்த உஷ்ண அலையான ஒளி வட்டத்திற்கு மேல் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட வழி எல்லாம் பூமியின் உஷ்ணத் தன்மையைக் காட்டிலும் அங்கே குளிர்ந்த நிலை தான் உள்ளது.

சூரியனுக்கு அருகாமையில் 200, 300 மைல்களுக்கு இப்பாலும் நம் பூமிக்குக் காற்று மண்டலம் ஒளி வட்டம் கொண்ட உஷ்ண அலைகளின் நிலையின் தன்மைக்கு அப்பாலும் பால்வெளி மண்டலத்தின் பொதுவான குளிர்ந்த நிலை தான் சூரியனுக்கும் பூமிக்கும். அதைப் போல் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இடைப்பட்ட பால்வெளி மண்டலம் உள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் அமில குணம் தொட்டு அந்த மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத்துடன் அமிலம் மோதும் நிலை கொண்டே உஷ்ண அலைகளும் அதன் குளிர் நிலைகளும் செயல் கொள்கிறது.

இப்படி இயற்கையில் வளர்ந்து ஓடும் நம் பூமியின் நிலையுடன் கூடிய காற்று மண்டலத்தில்
1.காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள ஒளி வட்டத்தின் ஈர்ப்பினால்
2.காற்று மண்டலத்தில் சேமித்துள்ள இயற்கைக் குணத்தை நம்மால் மாற்றப்படுவதனால் அதனின் நிலைகள் மாறிவிட்டன.

மாறினாலும் இந்தக் காற்றில் தானே எல்லாம் கலந்திருக்கிறது என்பீர்கள். இயற்கையாக மாறும் நிலையைச் “செயற்கையுடன் பிரித்துவிடுவதனால்..” அதன் சக்தியின் வலு குறைந்துவிடுகின்றது.

மலைகளிலும் மடுக்களிலும் இருந்து உற்பத்தியாகி வரும் நீரின் சுவைக்கும்
1.ஆறுகளில் நாம் சேமித்து வைத்து அதிலுள்ள மின்சாரத்தைப் பிரித்து எடுத்த பிறகு
2.அந்த நீரின் அமில குணத்தில் சில சக்திகள் குறைந்ததனால் சுவை குறைந்து விட்டது.

அதே சமயத்தில் அந்நீரினால் வளரும் பயிர்களுக்கு
1.நாம் எந்நிலையான அமிலத்தை அந்த நீரிலிருந்து பிரித்து எடுத்தோமோ
2.அதன் நிலைக்குகந்த உரங்களை இட்டால் தான் அந்தப் பயிர்கள் வளரும்.

இப்படி இயற்கையையே நாம் பல நிலைகளுக்காக மாற்றி அமைக்கும் பொழுது இந்த மண்டலத்தின் காற்று அலைகளில் உள்ள சக்தி நிலைகள் குறைந்து விட்டன. மனிதனின் எண்ண சுவாசமும் இதன் தொடர் அலையினால் மாற்றம் கொண்டு விட்டது.

இந்த நிலையிலிருந்தெல்லாம் நாம் நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தி… ஞானத்தின் வழித் தொடர் பெற… நம்மையே அந்த ஞானமாக்கும் சக்தி செயலில் நம்முடைய ஜெப நிலை இருத்தல் வேண்டும்.

மின் அலையின் தொடரில் ஒளியைக் காண்கின்றோம். அதே மின் அலையினால் ஒலியைக் (வானொலி) கேட்கின்றோம். இவையும் இந்நீரிலிருந்தும் காற்றிலிருந்தும் தான் மனித விஞ்ஞானத்தினால் கண்டறியப் பெற்றோம்.

நம் சுவாசத்தில் எடுக்கும் காற்றலையின் உரு நினைவலையான எண்ணத்தை அந்த ஆண்டவன் மேல் பாய்ச்சி நாம் செயல்படுவோமேயானால்
1.நம் எண்ண நினைவலை எச்சித்தர்களின் நினைவில் பாய்ச்சப்படுகின்றதோ
2.அவர்கள் பெற்ற ஒளி அலைகளின் சக்திகள் நம் எண்ணமுடன் கலந்து
3.சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் செயல்பட்டு நம் ஞானம் வளர்ந்து
4.அதன் தொடரினால் பல சக்தி நிலைகளை இந்த உடல் என்னும் கூட்டிலேயே நாம் கூட்டிக் கொள்ள முடியும்.

அதன் வழி கொண்டு நம்மால் பல உண்மைகளை இந்த உலகம் உணரச் செய்து இன்றுள்ள இந்த உலகின் ஆன்மாக்கள் வாழும் பயம் கொண்ட செயற்கையிலிருந்து மீள வைக்க முடியும்.

இன்றைய கால நிலையில் அங்கங்கு இயற்கை மாற்றங்களும்… விபத்துக்களும்.. போர்களும்… இவற்றால் ஏற்படும் உயிர்ப் பலியின் பீதியிலிருந்தும்… மனிதனால் செய்யப்பட்ட அணுகுண்டு அணுக் கதிர்வீச்சின் பயத்திலிருந்தும்…
1.மனித ஆன்மாக்களை மீட்டு அவர்களின் எண்ணத்தை மேலோங்கச் செய்தால்
2.நடக்கவிருக்கும் உலக மாற்றத்திலிருந்து மனித ஆன்மாக்களை மீளச் செய்யலாம்.

ஒன்று பலவாகி.. பல நூறாகி… நூறு பலவாகிச் செயல்படும் சக்தி அலையாக நாம் செயல்பட வேண்டிய ஞான அலையின் சக்தியை ஈர்க்கும் செயலை முறைப்படுத்திச் செயல்படுத்துங்கள்.

குண அமிலம் என்றால் என்ன…?

 

ஒரு நாள் தோன்றி மறு நாள் மடிகின்றது காளான். அதே போல் ஒவ்வொரு தாவர வர்க்கத்திற்கும் அது அது ஜீவிக்கும் கால நிலைகள் உண்டு. ஆலமரம் பல நூறு ஆண்டுகள் உள்ளது. வைரம் பாய்ந்த ஆயிரம் காலத்து மரங்களும் பல உள்ளன.

ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வாழும் மரம் உருவான ஆரம்பக் கால நிலையே காளானின் வழித் தொடர்ச்சி தான். இயற்கையின் தாவர இன முன்னோடி “காளான் தான்…!”

அவ்உயிரணு அவ்வமில வண்ணமுடன் இடியும் மின்னலும் தோன்றும் காலத்தில் ஒன்றுடன் ஒன்று இன வர்க்கங்கள் மோதும் நிலையில் அதற்கு மேல் இந்த மழை நீர் படும் பொழுது வெடிக்கும் தன்மை உருவாகிறது.

அப்படி வெடிக்கும் தருணத்தில்
1.இரண்டு வகை அமில குணத்தின் வெடிப்பில் தோன்றும் அமிலமானது இந்தப் பூமியில் மோதுண்டவுடன்
2.அதன் மேல் படும் ஒளி அலையின் ஈர்ப்பினால் உயிரணு தோன்றி தாவரம் வளர்ந்து
3.ஒவ்வொரு நிலை கொண்ட தாவர இன வர்க்கங்கள் மாறி மாறித் தோன்றுகிறது.

முதலில் காளான் தோன்றி அதன் ஆயுள் முடிந்தவுடன் அந்தக் காளானது அழுகிய நிலையில் பூமியில் படர பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் வெக்கை அதன் மேல் பட்டு அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தைக் கொண்டு மீண்டும் பூமியில் படர்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் உயிரணுவின் இன வளர்ச்சி சிறிது மாற்றம் கொண்டு மீண்டும் அதிலிருந்து சில வளர்ச்சி நிலைகள் மாறுகிறது.

மாற்றம் ஏற்பட்டு இப்படியே பல இயற்கை வளங்கள் தோன்றி ஒன்றுடன் ஒன்று அமிலத் தன்மைகள் மாறி மாறி உருவாகிப் பல வழிகள்… பலவித உயிரணுக்களும் கனி வளங்களும் வளர்ந்து கொண்டே மாறி மாறி வாழ்ந்து கொண்டே சுழன்று ஓடிக் கொண்டே உள்ளன.

ஓடும் ஓட்டத்தில் வெளிப்படும் அமில குணத்தில் பல உயிரணுக்கள் அந்த மோதலில் வெளிப்படுகின்றன. “ஒன்றில்லாமல் ஒன்றில்லை…” என்பதன் பொருளும் இதுவே..!

1.எந்த அணுவும் உதிக்க வேண்டும் என்றால் “இந்த மோதல் தான்…” காரணம். (இது முக்கியம்)
2.அமில குணங்கள் மோதுண்டு அதன் மேல் படும் மழை நீரின் ஜீவனால் வெடிப்பு நிலைப்பட்டு உருவாகின்றது உயிரணு.
3.அதன் தொடர்ச்சி நிலை சேர்க்கை தான் ஜீவனின் சேர்க்கையினால் இந்த ஜீவ அணு தோன்றுகிறது.

ஆண் பெண் சேர்க்கையினால் இந்த இரண்டு குண நிலை கொண்ட அமிலத்துடன் ஜீவன் கொண்ட மற்றோர் எண்ண அமிலமான உயிராத்மா தனக்குகந்த அமில குணம் கொண்ட தாயின் தந்தையின் பிறப்பில் கருவுக்கு வருகின்றது.

பல வகையான அமில குணங்களின் சேர்க்கை கொண்டது… இவ்வுலகின் ஈர்ப்பு அமில குணம் ஒன்று தான். இவ் ஈர்ப்பு நிலைக்கொப்ப பல நிலைகளை நம் பூமி வளர்த்துக் கொள்கிறது. பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் ஈர்ப்பில் பல குண நிலைகள் மாறு கொள்கின்றன.

பல வகையான அமில குணம் கொண்ட இந்தக் காற்றைத்தான் நாம் சுவாசிக்கின்றோம் என்றாலும்… “நம் எண்ண நிலைக்கொப்ப சுவாச அமிலம் தான்…” நம் சுவாச ஈர்ப்புக்கு வரும்.

1.வெங்காயச் செடி அதன் கார அமிலச் சுவாசத்தை ஈர்க்கின்றது.
2.மிளகாய்ச் செடி நெடி கலந்த கார அமிலத்தை ஈர்க்கின்றது.
3.கருணை சேனை இவற்றின் குண அமிலம் அரிக்கும் தன்மை உடைய அமில குணத்தை ஈர்த்து அவை வளர்கின்றன.

தாவர வர்க்கங்கள் ஒவ்வொன்றிற்கும் அதனதன் நிலைக்கொப்ப ஒரே தன்மையுடைய அமிலத்தைத்தான் ஈர்த்துப் பழக்கப்பட்டு வளரும் தன்மையுடையது.

ஆனால் பலவற்றையும் புசிக்கும் மனித ஆத்மா தான் உண்ணும் உணவின் உணர்வைத் தவிர “எண்ணும் எண்ணத்தின் அமில குணத்தையும்” அறியவல்ல ஆற்றல் கொண்டவன்.

1.உடம்பின் மேல் மிளகாயின் காரம் பட்டவுடன் “எரிகிறது..!” என்று அறிகின்றோம்
2.வெங்காயத்தின் காரத்தினால் “கண்ணில் நீர் வடிகிறது…!”
3.சேனை கருணை போன்ற கிழங்குகளில் அமில நீர் பட்டவுடன் அவ்விடம் “பிய்ப்பு எடுக்கின்றது…”
4.இந்நிலையான அமில குணத்தை நம் உடலும் உணர்வும் ஈர்க்கா விட்டால் அதன் தன்மையின் பாதிப்பை நாம் அறிவோமா…?

மிளகாயின் குணம் நெடி கலந்த குணம்… வெங்காயத்தின் குணம் அதற்குகந்த கார குணத்தினால் அதன் தன்மையை உணரப்படுகின்றோம்.

எல்லாமே இந்தக் காற்றின் ஈர்ப்பில் தன் ஈர்ப்புக்கொப்ப வளர்கிறது. இந்நிலைகளைப் போன்று தான் நம் மனித ஆத்மாவின் எண்ண நிலைக்கொப்ப “அமில குணங்களைச் சேமிக்கிறது…” என்பதை அறியவில்லை.

நம் எண்ண நிலைக்குகந்த ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்தைக் கொண்ட நிலையுடனே எந்த எண்ணத்தில் எல்லாம் நாம் இருந்து கொண்டுள்ளோமோ… அதன் நிலைக்கொப்ப அமில குணங்கள் நம்முள் சேமிதம் கொண்டே வாழ்கின்றோம் நாம் எடுக்கும் சுவாசத்தினால்…!

“குண அமிலம்” என்பதன் நிலை புரிந்ததா…?

இந்தக் குண அமிலத்தின் நிலையை உணர்த்துவதன் உண்மை நிலை என்ன..?

ஒவ்வொரு மண்டலத்திற்கும் நட்சத்திர மண்டலத்திற்கும் பால்வெளி மண்டலங்களுக்கும் அதனதன் தன்மைக்குகந்த குண அமிலம் உண்டு. அதன் வளர்ச்சி வட்டத்திலே தான் இயற்கையின் அமில குணங்கள் செயல் கொண்டு வாழ்கின்றன.
1.இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட குண அமிலத்தைப் பெறவல்ல ஆற்றல்
2.அதாவது தனக்குகந்ததைப் பெறும் சக்தி மனித ஆன்மாவுக்கு உண்டு.

இயற்கை வளங்கள் ஒரு வகையான அமில குணத்தை ஈர்க்க வல்லது. ஆனால் மனித ஆத்மாவோ… எண்ண நிலைக்குகந்த அமில குணத்தை எல்லாம் ஈர்த்து ஈர்த்து வாழ்கின்றான்.

எண்ண நிலை கொண்ட மனிதனால் தனக்குகந்த அமில குணத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்றால்
1.இந்தக் குணங்களிலேயே சிறந்த குணமான
2.“ஆண்டவன்…” என்னும் நிலை கொண்ட குணத்தைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோடிச் செல்வம் தேடி வைத்திருந்தாலும் இந்த உடல் நமக்குச் சொந்தமாவதில்லை.
1.ஆனால்… தேடிய செல்வம் சொந்தமாகின்றதா…? இல்லை.
2.அருள் ஞானச் செல்வம் தான் நமக்குள் என்றும் நிலையாக இருக்கின்றது.

ஆகவே செல்வத்தைக் காக்க வேண்டும் என்றாலும்… இந்த உடலைச் சிறிது காலத்திற்குக் காக்க வேண்டும் என்றாலும்… அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் அவசியம் சேமித்து வைக்க வேண்டும்.

அப்பொழுது இந்த வாழ்க்கை இருக்கும் வரையிலும் அந்தச் சேமிக்கும் தன்மை வரும்.

உதாரணமாக ஒரு குடத்தில் நீர் இருந்தால் அதில் ஒரு ஓட்டை விழுந்து விட்டால் நீங்கள் ஊற்ற… ஊற்ற… வடிந்து கொண்டே இருக்கும்… மிச்சம் இருக்காது…!

இதைப் போல நமது வாழ்க்கையில் சிறிது குறை என்ற நிலை இருந்தாலும் அந்த உணர்வின் தன்மை வளர்ச்சியின் தன்மை தடையாகி நம்முடைய நிலையே தடுமாறச் செய்துவிடும். நாம் ஊற்றும் நன்னீரை அங்கே காண முடியாது.
1.ஓட்டை சிறிது மேலே இருந்தால் அது வரையிலும் கொஞ்சம் தேங்கி இருக்கும்.
2.அது அடி பாகத்தில் இருந்து விட்டால் ஊற்றிய பின் திரும்பிப் பார்த்தால் எல்லாமே காணாமல் போய்விடும்.
3.மனிதனின் வாழ்க்கையில் சேமித்த உணர்வுகள் அனைத்தும் இப்படித் தான் மறைந்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான் உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கி… உங்களுக்குள் அதைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொரு மிருகமும் தன்னைத் தாக்கி உணவுக்காகத் தேடி மற்ற மிருகங்கள் வந்தாலும் அதனைக் கூர்மையாகப் பார்த்து தான் தப்பிக்கும் நிலையாக அதனின் உணர்வின் தன்மையைத் தன் உடலுக்குள் சேர்த்து அதனின் வலிமையைத் தனக்குள் வளர்த்துக் கொள்கிறது.

அந்த வலிமையைத் தனக்குள் வளர்த்து உடலை விட்டு வந்தபின் அந்த அணுவின் மாற்றமாகிப் பரிணாம வளர்ச்சியில் வலுக் கொண்ட உடல்களாக மாறி… அந்த வலுவின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் தன்மைகளைச் சேர்த்துச் சேர்த்து நம்மை மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.

மனிதனான பின் தீமைகளை அகற்றிய அருள் ஞானிகள் இன்றும் துருவ நட்சத்திரமாகவும் அதன் ஈர்ப்பில் சப்தரிஷி மண்டலமாகவும் வீற்றிருக்கின்றார்கள்.

உங்களின் நினைவாற்றலை உங்கள் உணர்வினை அங்கே அழைத்துச் செல்கிறேன்.

உங்களுடைய நினைவின் ஆற்றலை அங்கே துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று சேர்த்துக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் உணர்வை இந்த வாழ்க்கையில் சேமிப்பாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். இது தான் நம் உயிரான்மாவிற்குச் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து.

இதை யாரும் அழிக்க முடியாது. இது என்றுமே வளர்ந்து கொண்டேயிருக்கும்.

நாம் எதனால் இயங்குகின்றோம்… இயக்கப்படுகின்றோம்…? என்பதை அறிய வேண்டியது மிக மிக அவசியம்

 

வாழ்க்கையில் நல்லதைத் தான் எண்ணுகின்றோம். இருந்தாலும் பிறர் தவறு செய்வதையும் பார்த்து தவறு என்று உணர்கின்றோம்.
1.அதற்குத் தக்க விலகிச் செல்கின்றோம் அல்லது
2.அந்த உணர்வுக்கொப்ப நாமும் போருக்குச் (எதிர்நிலையாகி) செல்கின்றோம்.

போர்முறையாகிறது (வெளியில்) என்று வைத்தாலும் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் நம் உயிரிலே பட்டுத் தான் இயக்கமாகிறது. உயிர் தான் உடலுக்குள் குருவாக இருக்கிறது.

அப்போது நாம் நுகர்ந்த உணர்வுகள் (தவறு என்று நுகர்ந்தது) உயிரிலே படும் பொழுது “குருக்ஷேத்திரப் போராகிறது…”
1.என்னை இப்படிப் பேசி விட்டான் என்றோ அல்லது
2.எனக்கு இப்படி இடைஞ்சல் செய்துவிட்டான் என்றோ நாம் எண்ணும்போது
3.அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகள் உடலுக்குள் பரவிய உடனே
4.இந்த உடலைக் காக்க உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் போர்முறைக்கு (அதிகமாக) வருகின்றது – “மகாபாரதப்போர்…”
5.அவனை உதைக்க வேண்டும் என்ற நிலையில் அவன் உணர்வுகள் அவனைத் தாக்கும் நிலைக்கு அழைத்துச் செல்கின்றது
6.அதே சமயத்தில் அவன் நம்மைத் தாக்கி விடுவான் வலுவானவன் என்று சொன்னால் நம்மை விலகிச் செல்லும்படி செய்கின்றது.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். ஒருவன் போக்கிரி என்று தெரிகின்றது வருபவரை எல்லாம் அவன் மிரட்டுகின்றான். நாம் பார்க்கின்றோம்.

உதாரணமாக… வீட்டில் கணவன் மனைவிக்குள் சிறு குறை (எதிர்நிலை) வந்தால் போதும்…! கணவர் என்னை இப்படிப் பேசி விட்டாரே என்று மனைவி சொல்லும்.

ஆனால் ரோட்டிலே செல்லும் பொழுது போக்கிரி நம்மைக் கண்டபடி பேசுகின்றான்… அடிக்க வருகின்றான்.

ஐய்யய்யோ… என்று சொல்லித்தானே ஓடுகின்றோம் அவனைத் திருப்பி அடிக்கும் நிலையோ அல்லது அசிங்கமாகப் பேசுகின்றான் என்று சொல்ல முடிகின்றதா…?

இல்லை.

அடுத்தாற்போல் மற்றவர்கள் விசாரிக்கின்றார்கள். அவன் உன்னை என்ன செய்தான்…? என்று…!

போக்கிரி என்னை அடித்தான்… திட்டினான்… என்று அங்கே அவனுக்கு முன்னாடி சாட்சி சொல்ல முடிகிறதா…! அடித்தாரா…? என்று கேட்டால் நாம் “இல்லை…” என்று தான் சொல்வோம்.

காரணம்… “அடித்தான்” என்று சொன்னால் நம்மை மீண்டும் உதைப்பான். இது தான் நடக்கின்றது.

ஆனால்
1.வீட்டில் “ஏன் இப்படிச் செய்தாய்…?” என்று கணவன் மனைவியிடம் கேட்டால் கணவன் மீது மனைவிக்குக் கோபம் வருகிறது சண்டை வருகிறது அல்லது
2.மனைவி கணவனைக் குறையாகச் சொன்னால் கணவனுக்குக் கோபம் வருகிறது.

ரோட்டிலே நாம் வேடிக்கையாகத் தான் பார்த்தோம். அந்தப் போக்கிரி என்னடா வேடிக்கை பார்க்கின்றாய்…? என்று நம்மை அதட்டிக் கேட்கின்றான். அவன் தவறு செய்தே பழக்கப்பட்டவன்.

வேடிக்கை பார்ப்பதற்கு “என்னடா…” என்று கேட்கின்றான். சும்மா…! என்று சொன்னால் “என்னடா சும்மா…?” என்று அடிக்க வருகின்றார். அடித்தவுடன் என்ன செய்கின்றோம்…? நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை… பேசாமல் இருக்கின்றோம்.

இது போன்றுதான்…
1.நமக்குள் எத்தனையோ நல்ல குணங்கள் இருப்பினும்
2.நாம் பார்த்து நுகர்ந்த தீய உணர்வுகள்… எந்த நல்ல குணத்தோடு நாம் பார்த்தோமோ
3.அந்த உணர்வுகள் நம் நல்ல குணத்தை (போக்கிரியைப் போன்று) அடக்கி விடுகின்றது

அதாவது தீமை செய்யும் உணர்வுகளை நாம் சுவாசித்தால்… சுவாசித்த உணர்வுகள் நம் நல்ல குணங்களை அடக்கி விடுகின்றது. கணங்களுக்கு அதிபதி கணபதி என்று அது அதிபதியாக இருந்து நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

போக்கிரியின் உணர்வுகள் நமக்குள் கூடி… பயம் அதிகரித்து விட்டால் வீட்டில் நமக்கு அமைதியே இருக்காது. சிந்தனை இழந்து… சிந்தனையற்றவர்களாகி விடுகின்றோம்.
1.அடுத்து யார் எதைச் சொன்னாலும் நம்முடைய சொல்லும் கடுமையாகி விடுகின்றது
2.குடும்பத்திற்குள் ஒற்றுமை இழக்கப்படுகின்றது… குடும்பத்திற்குள் மட்டுமல்ல.
3.உயிரிலே குருக்ஷேத்திரப் போராக நடக்கப்பட்டு உடலுக்குள் பார்த்தால் மகாபாரதப் போரே நடக்கின்றது.

நாம் எத்தனையோ நல்லதை எடுத்திருக்கின்றோம். நமக்குள் நல்ல அணுக்கள் உண்டு.. பல கோடி உடல்களில் தீமையை நீக்கிய உணர்வுகள் நமக்குள் இருப்பினும்… இத்தகைய தீமையின் உணர்வு நமக்குள் சென்றால் குருக்ஷேத்திரப்போர் இங்கே போகாது தடுக்கின்றது… உடலை இயக்குகிறது

இருந்தாலும் இந்த உணர்வுகள் உடலுக்குள் போய்விட்டால் அந்த உணர்வுகள் உமிழ்நீருடன் சேர்த்து நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறுகின்றது. இரத்தமாக மாறிவிட்டால் பயமான எண்ணங்களே வருகின்றது.

இப்படி…
1.நமது வாழ்க்கையில் நல்லது என்று நினைத்து வந்தாலும் நல்லது செய்ய முற்பட்டாலும்
2.கேட்ட உணர்வுகள் நமக்குள் நம்மை அறியாமல் ஆட்டிப் படைக்கின்றது.

இதைத் தான் சீதாவை இராவணன் சிறை பிடித்தான் என்று நம் காவியங்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. நாம் உணர்ந்தோமா…?

“நம் உயிர் ஒரு நெருப்பு…” என்பதை உணர்ந்திருக்கின்றோமா…?

 

ஒரு நெருப்பில் நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை நெருப்பிலே போட்டால்… அதை நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.
1.நாம் உடுத்திய உடையை அந்த நெருப்பிலே போட்டால்
2.“மனித உணர்வுடன் கலந்து…” இந்தக் கருகிய மணம் வரும்.

ஒரு மனிதன் சட்டையைப் போட்டிருக்கும் போது அவன் நல்ல மனிதனாக இருந்தால் அதைக் கழட்டி நெருப்பில் போட்டுப் பாருங்கள்.
1.கெட்ட நெடி… அந்தக் கருகிய வாசனை வராது
2.நல்ல வாசனைகள் தான் வரும்.

சந்தேகம் இருந்தால் ஒன்றை நீங்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்.

ஒரு மணி நேரம் நீங்கள் கோபமாக இருந்து பாருங்கள். அதற்குப் பின் நீங்கள் அணிந்திருக்கும் சட்டையை நீங்களே முகர்ந்து பாருங்கள் அதில் நெடி நிச்சயம் வரும்.
1.ஏனென்றால் நாம் எதை நுகர்கின்றோமோ
2.அதுவே உள் நின்று… அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

உதாரணமாக… மிளகாயை நெருப்பிலே போட்டால் என்ன செய்கின்றது…?

இத்தனை பேர் இங்கே கூடி இருக்கின்றோம் பக்கத்திலே சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்… அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம் அனைவரையுமே இரும வைத்துவிடும்.

நெருப்பிலே படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.

ஆனால் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்…?

1.எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத் தர்மத்தை செய்தாலும்
4.நல்ல உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்… அவர்களால் அதைத் தாங்க முடியாது.

அப்பொழுது இதை யார் இயக்குவது…? நமது உயிர்…!

அதனால் தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்…” என்று ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன் உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ…
2.உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.

மிளகாய்த் தூளை நெருப்பில் போட்டால்… நீங்கள் அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது…? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.

இதைப் போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்… அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள் இந்த உடலை ஆளுகின்றது… ஆண்டாள்…!

யார் ஆள்வது…? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்

 

இந்தக் கலி முடிந்து அடுத்து வர இருக்கும் “கல்கி” மாற்றத்தின் சுழற்சியில் மீண்டும் மனிதர்கள் ஜீவனுக்கு வந்தாலும்
1.இந்த உலக மாற்றத்தின் பொழுது நம் உடலிலுள்ள ஆத்மா பிரியும் நிலை கொண்டு
2.அடுத்த பிறப்பிற்கு வரும் தொடரும் அதன் சுழற்சியிலே தான் செயல் கொள்ள முடிந்திடும்.

பிறப்பிற்கு வரும் நிலையில் முதல் கால கட்டத்தில் (கல்கி) வரும் தருவாயிலேயே “அறிவாற்றல் கொண்ட” எண்ணத்தின் நிலைக்கொப்பத் தாயின் கருவிற்கு வர முடியாது.

எல்லாமே மாறிய பிறகு புதிய உயிரணுக்கள் தோன்றும் தருவாயில் அந்த உயிரணுக்கள் ஜீவனின் வளர்ச்சி நிலை பல காலங்கள் தாவர இன வர்க்க வளர்ச்சியிலும் மற்ற கனி வளங்களின் வளர்ச்சி நிலையிலும் செயல் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அவை வளர்ந்து.. மடிந்து… அதிலிருந்து தோன்றும் உயிர்ப் பிராணி நிலை பெற்று மீண்டும் அதன் இன வர்க்க நிலை மாறி பல வளர்ச்சி நிலைகள் தானாக உயிர் பெறும் உயிரணுவிலிருந்து மாறிப் பல அமில குணத்தை ஈர்த்த உயிரணுக்களாக வேண்டும்.

அப்படி ஆன பிறகு உயிராத்மாவாகி அந்த உயிராத்மாக்களின் சேர்க்கைக் குணமுடன் மற்ற உயிரணுவின் பிறப்பு நிலை தோன்றிய பிறகுதான் ஜீவன் பெறும் நிலை கொள்கின்றது.

உயிரணுவிற்கும் உயிராத்மாவிற்கும் வேறுபாடு புரிகின்றதா…?

இந்தப் பூமியிலிருந்து வெளிப்படும் வெப்ப அலையின் அமில குணத்தின் ஈர்ப்பில் படர்ந்து இயற்கை வளங்களாக வளர்பவை எல்லாம் உயிரணுக்கள் கொண்ட நிலை.

உயிராத்மா என்பது… பிறப்பிற்கு வரும் இரண்டு ஜீவ உடல்களின் எண்ணக் கலவையின் சேர்க்கையில்… தன் நிலையை ஜீவிதம் கொள்ளும் ஆசையுடன் கர்ப்ப நிலைக்கு ஜீவன் கொள்வதெல்லாம் ஜீவ ஆத்மா பெறும் நிலை.

இப்படி இம் மாறும் கலியினால் நம் உயிரணு உருவிற்கு வரப் பல்லாயிரம் ஆண்டுகள் செல்லும் (இது முக்கியம்). இந்த உலகச் சுழற்சியில்
1.நம் எண்ணத்தை இவ்வுலகப் பிடியில் அடகு வைத்து விட்டால்
2.அதை மீட்பதற்கு பல ஆயிரம் காலங்கள் செல்லும்.

இவ்வெண்ண நிலையிலேயே பிரியும் ஆத்மாக்கள் தான் சேமித்த குண நிலையுடனே சுழன்று சுழன்று… மீண்டும் அறிவு நிலை கொண்ட ஞானம் பெறக்கூடிய உடல் பெறுவதற்குப் பல காலங்கள் சுழல வேண்டியதிலிருந்து மீட்டிட வேண்டும் என்பதற்குத் தான் இந்த உண்மைகளைப் புகட்டுகின்றேன்.

பரம்பொருளின் ஞானமான அச்சக்தி நிலை கொண்ட ஜோதி ஆத்மாக்களான அந்த மாமகரிஷிகளிடம் நம் எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

அந்தச் சப்தரிஷிகளின் எண்ண வட்டத்திற்குள் நாம் எடுக்கும் சுவாச அலைகள் பாயும் பொழுது அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும்.

மேன்மேலும் அந்தச் சக்தியை நாம் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தின் பொழுது அவர்களின் நிலையுடன் நாம் ஐக்கியப்பட்டு அவர்களைப் போன்று நாமும் சப்தரிஷியாகலாம்.
1.இந்தப் பூமி மட்டுமல்ல… எந்தப் பூமியையும் நமதாக ஏற்று
2.அந்த ஒளி வட்டத்திற்குள் நம் ஒளி பிரகாசிக்கத்தான்
3.யாமறிந்த (ஈஸ்வரபட்டர்) உண்மைகளைப் பலரும் அறிந்து கொள்ளவும்
4.அப்பரம்பொருளின் ஞான சக்தியை வழிப்பெறும் வழி ஆற்றலைப் புகட்டுகின்றோம்.

இவ்வுயிரணு தோன்றி மாறி மாறி எடுக்கும் அமில குணத்தின் வளர்ச்சியினால் ஏற்படுவது தான் சிறு எறும்பு முதல் கொண்டு சூரியன் சந்திரன் அதற்கும் அப்பாற்பட்ட எல்லாமே…!

எந்த உயிரணுவும் மடிவதில்லை. எப்பரம்பொருளிடமும் ஒன்றி நிற்பதுவும் இல்லை.

உயிரணுவாக உலகாய் உருவம் கொண்டே வளர்ந்து கொண்டே கலந்துள்ளது தான் அப்பரம்பொருளான ஆதிசக்தியின் ஒளி சக்தி.
1.ஒன்றுடன் ஒன்று மாறி மாறி உருப்பெற்றே சுழன்றே ஓடும் சிக்கலில்
2.உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகளின் ஞானம் பெறுவது தான் உயர் ஞானம்.

அந்த ஞான நிலை பெறும் வழித் தொடர் தான் இந்த மனித உடல் கொண்ட ஆத்ம ஞானம். மனித உடல் கொண்ட ஞானத்திலிருந்து தான் உயர் ஞானம் பெற முடியும்.

இந்த மனித உடல் கொண்ட அறிவு நிலை பெற பல உருமாற்றம் கொண்ட உருவ நிலையெல்லாம் பெற்றுப் பெற்றுத் தான் இந்த மனித உடலையே பெற்றிருக்கின்றோம்.

செயற்கையின் பிடியில்… கலியான இக்காலத்தில்… சோம்பேறி நிலை கொண்ட வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு மீளத் தெரியாமல் சிக்குண்டு வாழும் நாம்… இந்த மனித ஞானத்தைப் போற்றி நல் வழி பெறும் ஞானத்தைப் பெற்றிடுவோம்.

கண்ணாடியில் உள்ள தூசியைப் போக்கிட அழுக்குத் துணியால் தட்டினால் மீண்டும் இதன் அழுக்குத்தான் அதிகமாகப் படரும். சுத்தமான துணியை கொண்டு துடைத்தால் தான் அந்தக் கண்ணாடியில் உள்ள அழுக்கு நீங்கும்… ஏனென்றால்
1.அழுக்கை அழுக்கு கொண்டு அகற்ற முடியாது.
2.நம் அக அழுக்கை…. பக்தி என்ற பகவான் ஞானத்தைக் கொண்டு போக்கித்தான்… நம் அழகை நாம் காண வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம் இதிலே நம் நினைவினைச் செலுத்தச் செய்கின்றார்கள்.

தன் வாழ்க்கையின் நிலைகளில் மனிதன் நாம் எப்படி உருவானோம்?

மனிதனாக உருவான பின் பரமபதம் என்ற நிலையில் சொர்க்கத்தை அடைந்துள்ளார்கள். பல கோடி இன்னல்களிலிருந்து கடந்து இன்று துருவ நட்சத்திரமும் அதன் வழி பின்பற்றிச் சென்றவர்கள் அனைத்தும் இன்று சப்தரிஷி மண்டலங்களாக ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் அடைந்துள்ளார்கள்.

இதைத் தெளிவாக்குவதற்காக பரமபதம் என்ற அட்டையையே வைத்துக் காட்டியுள்ளார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று இதை விளையாடுவார்கள். அதை எடுத்துத் தாயத்தை உருட்டுவார்கள். விடிய விடிய முழித்துக் கொண்டிருப்பதற்காக இதை விளையாடுவார்கள்.

விடிந்தபின் தூக்கமில்லாமல் சொர்க்க வாசல் என்று கோவிலுக்குள் சென்று தெய்வத்திற்கு அபிஷேகங்கள் செய்து சமையல் செய்து அவனுக்குக் கொடுத்துவிட்டால் சொர்க்கத்திற்கே நம்மை அழைத்துச் செல்வான் என்று செல்வார்கள்.

அதாவது…
1.வழக்கமாகப் போகும் பாதையை விட்டுவிட்டு இடைமறித்துக் குறுக்குப் பாதையில் சென்று
2.சொர்க்க வாசல் என்று அதன் வழியில் சென்று அபிஷேகம் செய்வார்கள்.
3.குறுக்குப்பாதை வழியாகச் செல்வதை… இதுதான் சொர்க்க வாசல் என்று ஆலயங்களில் காட்டியுள்ளார்கள்.
4.தவறாக யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் நம்மைத் தவறான வழிகளில் அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

ஆனால் உண்மையின் இயக்கத்தைத் தெரிந்து கொள்வதற்கு குருநாதர் கடவுளின் அவதாரம் பத்து என்ற நிலைகளை எமக்குத் தெளிவாகக் காட்டினார்.

1.சாக்கடையிலிருந்து ஒரு பன்றி தன் உணவை எப்படி எடுக்கிறது…?
2.இந்தக் கூர்மையின் நிலைகள் எப்படி விளைந்தது…?
3.இந்த உயிரணு உன்னை மனிதனாக்குவதற்கு எத்தனை இன்னல்கள் பட்டது…?
4.நீ எத்தனை வேதனைகள் பட்டாய்…?
5.புழுவிலிருந்து மனிதனாக எப்படி வந்தது…? என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

ஏனென்றால், நாம் புழுவிலிருந்து மனிதனாகப் பெற்ற அந்த ஒவ்வொரு உணர்வுகளும் இன்று இந்தப் பூமியில் உண்டு அது மறைந்துவிடவில்லை.

அதே சமயத்தில் வளர்ச்சியில் அதன் உணர்வின் துணை கொண்டு மனிதனாக வந்தாய். மனிதனாக வந்தாலும்
1.இந்த வாழ்க்கையிலே நீ எதைக் கூர்மையாக எண்ணி உனக்குள் அதிகமாகச் சேர்க்கின்றாயோ
2.அதன் வழி கொண்டு “மீண்டும் கீழே எப்படிப் போகின்றாய் பார்..,” என்று குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டினார், உணர்த்தினார்.

நாம் நினைக்கின்றோம்… மனிதனாகப் பிறந்தபின் வேறு வழிக்குப் போகமாட்டார்கள் என்று சில பேர் சொல்வார்கள்.

இதிலே விஷத்தின் அளவுகோல் எதுவோ அணுவின் தன்மை எப்படி மாற்றுகின்றது…? என்று தெளிவாக எடுத்துக் காட்டினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அதைத்தான் உங்களுக்கு இப்பொழுது உபதேச வாயிலாகச் சொல்லி குரு காட்டிய வழியில் சாஸ்திரங்களில் காட்டிய பேருண்மைகளை உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

1.நமக்குச் சொர்க்கவாசல் நம் உயிர் தான்.
2.குரு காட்டிய அருள் வழியினைப் பின்பற்றி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உயிர் வழியாகச் சுவாசியுங்கள்.
3.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்யுங்கள்
4.அருளாற்றலை உங்களுக்குள் விளையச் செய்யுங்கள்.
5.அருள் உணர்வுகள் நமக்குள் விளைந்தால் நேராக நம்மை அந்த ஞானிகள் இருப்பிடத்திற்கே அழைத்துச் செல்லும்.

அந்த ஞானிகள் காட்டிய வழியில் செல்வது கடினமல்ல… எளிதானது தான்.

மகரிஷிகள் பிறந்த நாட்டில் “நம்முடைய செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?”

 

உலகில் அரசர்கள் தன் சுகபோகங்களுக்காக வேண்டி நாடு பிடிக்கும் ஆசை கொண்டு மற்ற மக்களை இரக்கமற்றுக் கொல்வது தான் அரசர்களின் குணங்கள்.

அரச வம்சங்களை எடுத்துக் கொண்டாலே அவன் போக்கிரியாகத் தான் இருக்கின்றான் அப்படிப் போக்கிரியாக இருப்பவன் முதலில் ஒரு ஊரை அடிமைப்படுத்துகின்றான்… பின் இரண்டு ஊரை அடிமைப்படுத்துகின்றான்… பின் மூன்று ஊர்களை அடிமைப்படுத்துகின்றான்.
1.அப்படியே ஒரு அரசனாகின்றான்… இதைத்தான் அரச வம்சம் என்று சொல்வது
2.கொள்ளையடிப்பதும் மற்றவர்களைக் கொலை செய்வதும் அதன் வழி வாழ்வதும் தான் அரசருடைய நீதிகள்.

சோழ நாட்டை ஆண்ட அரசர்களைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோம். இங்கிருந்து ஜாவா வரை போர் முரசு கொட்டிச் சென்றார்கள்… வெற்றி பெற்றார்கள்…! என்றெல்லாம் சொல்வோம்.

ஆக… நம் நாட்டின் வீரியத்தைப் பற்றிப் பேசலாம். இருந்தாலும் இதைப் போன்று ஒவ்வொரு நாடும்… மற்ற நாடுகளை நாங்கள் இத்தனை பேரை அடிமைப்படுத்தினோம்…! என்று அத்தகைய வீரியம் தான் எல்லோருக்கும் வருகிறது.

நம் நாட்டில் ஒரு கோவிலிலே தெய்வத்தை வணங்குகிறார்கள் என்றால் அதில் முன்னணியில் வரக்கூடியவர் எனக்குத்தான் முதல் மரியாதை தர வேண்டும் என்று விரும்புகின்றான்.

மற்றவர்களோ அது என்ன…? அவன் மட்டும் அங்கே ஆட்சி புரிவது…? என்று தெய்வத்தை வழிபடும் இடங்களிலும் அவர்களுக்குள் எதிர்ப்பாகி ஒரு கோஷ்டி… ரெண்டு கோஷ்டி… மூன்று கோஷ்டி… என்று பிரிவாகி விடுகிறது.

ஆலயத்திற்குச் சென்று நாம் எந்த நல்ல குணங்களைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டோமோ… கோஷ்டிகள் பிரிவினைகள் ஆனபின்
1.என்னை மதிக்கவில்லை அதனால் தெய்வம் இந்தப் பக்கம் வரக்கூடாது
2.இவன் பூஜை செய்யக்கூடாது என்று தான் மக்கள் மத்தியிலும் எண்ணங்கள் இருக்கின்றது.

அதே போல் குடும்பத்திலே எடுத்துக் கொண்டாலும் முந்தைய காலங்களில் ஒற்றுமையாக வேலை செய்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தாலும் நான் தான் பெரியவன்…! நான் தான் இதை எல்லாம் சம்பாதித்துக் கொண்டு வந்தேன்…! என்று சொல்லிக் கொண்டு வந்தால் கடைசியில் எனக்கு இதிலே இரு மடங்கு சொத்து (அந்தப் பங்கு) வேண்டும் என்ற நிலை வருகிறது.

செல்வத்தைச் சேர்த்து வைத்த குடும்பங்களில் எல்லாம் இதைப் பார்க்கலாம். ஒன்றுபட்டு வாழ்ந்து வந்த குணங்கள் இப்படி எல்லாம் பிற்பகுதியில் மாறுகின்றது.

1.நான் தான் சொத்தைத் தேடி வைத்தேன்… அவனுக்கு என்ன கொடுப்பது…?
2.நான் தான் இதற்கெல்லாம் காரணம் என்று
3.இந்த நாடும் அப்படி… வீடும் அப்படி…! என்ற நிலை தான் வருகின்றது.

சகோதரர்களுக்குள் ஓருவன் முதல்வன் ஆனால் எனக்குத் தான் உரிமை உண்டு… நான் தான் இதைச் செய்வேன்…! என்று வருகின்றான். பெரியவன் என்று பார்க்கச் சொன்னாலும் “நான் சொன்னதைக் கேட்கவில்லை…” என்று மறுத்தால் அங்கே போர் முறையாகிப் பகைமை ஆகி விடுகின்றது.

விவசாயம் செய்யும் இடங்களிலும் மாநிலத்திற்கு மாநிலம் மொழித் தகராறு வருகின்றது. வலிமை இருந்தால்… அந்த வலிமை பெற்றவன் செயலே அங்கே ஆளத் தொடங்குகிறது.

ஏனென்றால் அவன் மிக வலிமை பெற்றவன் ஆகின்றான் நான் சொல்வதைத் தான் எல்லோரும் கேட்க வேண்டும் என்ற “அதிகார தோரணை…” வந்து விடுகின்றது.

காட்டு விலங்குகளாக வாழ்ந்து வந்த மனிதர்கள் கூட்டமைப்பாக வாழ்ந்து வந்தாலும்… அந்தக் கூட்டமைப்புக்குத் தலைவனாக வரக்கூடியவன் “தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும்…” என்று அந்த அதிகாரம் முன்னணியில் வந்து விடுகின்றது.

1.நல்லவர்களும் அதைச் செயல்படுத்தி வந்தார்கள்
2.ஒற்றுமையாக இருக்க வேண்டும்… இப்படிச் செய்ய வேண்டும்…! என்று அந்த நல்லவர்கள் சொன்னார்கள்.
3.அதன் வழி பின்பற்றி வாழ்ந்தார்கள்.

அப்படி வாழ்ந்து வந்த மனிதர்களும் தனக்கென்று அறியத் தெரிந்த பின் இதைப் போன்று “தான் வாழலாம்…” என்ற நிலைக்கு வருகின்றனர் அதன் வழி அந்த யோசனைப்படி ஒன்றுபட்டு வருகின்றனர்.

அந்த யோசனைப்படி நடந்து நல்லதைச் செயல்படுத்திக் கொண்டு வந்தவன்… வளர்த்துக் கொண்டு வந்தவன்
1.அவன் காலம் முடிந்தால்… அதற்குப் பின் இதை யார் தலைமை தாங்குவது…? என்ற போர் முறை வந்து விடுகின்றது
2.அதில் ஒருவன் நான் தான் பெரியவன் என்று வந்தால் இன்னொருவன் நான் தான் பெரியவன் என்று வருகின்றான்
3.அப்போது அந்த வலிமைக்குத் தக்கவாறு பிரிந்து சென்று விடுகின்றார்கள்.
4.பிரிந்து சென்றவர்கள் அந்தப் போர் முறையிலிருந்து மாறுவதே இல்லை.
5.இதிலே எனது.. உனது…! என்ற நிலைக்கு இப்படி எல்லாவற்றிலும் போர் முறைகளே வருகின்றது.

ஆனால்
1.ஞானிகள் பிறந்த நாடு… மகரிஷிகள் பிறந்த நாடு நம் இந்திய நாடு
2.உயிரணு தோன்றி மனிதனாகி ஒளி உடலாகப் பெற்ற நாடு நமது தமிழ்நாடு.

இதனை நாம் முதலிலே அறிந்து அதற்குத் தக்க… நமது குரு காட்டிய வழியில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர… கூட்டத்தைக் காட்டும் நிலைக்கு வரக்கூடாது.

முன்னோர்கள் காட்டிய வழியில் நாம் வாழ வேண்டியது மிகவும் அவசியம்

 

மனிதர்களால் பல வினாக்கள் எழுப்பப்படலாம். ஆண்டவனை வணங்கி நம்மையே ஆண்டவனாக்கி ஞானம் பெறும் வழியையெல்லாம் இந்த மனித ஆன்மாக்கள் தானே உணர முடிகின்றது.

மிருகங்களுக்கு ஞான உபதேசங்களோ பக்தி வழிபாடோ இல்லை. அவற்றுக்கு இனி வரப் போகும் உலக மாற்றத்திலிருந்து அழியாமல்… இன்றுள்ள நிலையிலிருந்து விடுபட வழி இல்லையா..? என்ற வினா எழும்பலாம்.

மனிதனுக்குத்தான் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு இவற்றின் நிலை கொண்ட எண்ணத் தொடர் உண்டு. மனிதனால் இன்றைய நிலையில் ஆடை உடுத்தாமல் அம்மணம் கொண்டு வாழ்ந்திட முடியுமா…?

மனிதனுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லறப் பிணைப்பைப் பிணைத்து.. குடும்பம் என்ற குடில் அமைத்து பல நிலைகளை மனித ஞானத்தால் பக்குவ மேம்பாடுபடுத்தி… தானாகப் பெய்யும் மழைக்கு வடிகால் அமைத்து வழிப்படுத்தியவன் மனிதன்.

மனிதன் கல்லைச் சிலையாக வணங்கினான். ஆண்டவன் என்ற பக்தி செலுத்த அதே போல் பல பக்குவ மேம்பாடின் ஞானம் பெற்றான் மனிதன்.
1.மனித அமில குணத்தின் ஞான வளர்ச்சி
2.உயர்ந்தோங்கும் ஆற்றல் கொண்ட “அபரிதமான சக்தியின் ஜோதி வளர்ச்சி ஆகும்…!”

இந்த வழித் தொடரின் அமில குண ஞான அறிவாற்றல் கொண்ட மனித வளர்ச்சியின் நிலைக்கொப்ப மேம்பாட்டின் சக்தி மிருக வர்க்கங்களுக்கு வழிப்படவில்லை.

பல ஆயிரம் ஆண்டுகள் மேல் நோக்கிய சுவாசத்தை ஈர்த்து அந்த ஈர்ப்பின் சக்தி அமிலமான மாணிக்கத்தை ஈர்க்க வல்ல குணமுடைய நாக சர்ப்பத்திற்கே அதன் வட்டத் தொடர்ச்சி அமில குணமானது மனித ஞானத்திற்கொப்ப மேம்பாடு பெறவில்லை,

இதே போல் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் மற்ற ஜீவ ஜெந்துக்களுக்கும் மனிதனைக் காட்டிலும் பல சக்தி அமில குணங்கள் மேம்பட்டு வளர்ச்சியுற்றிருந்தாலும் மனிதனைப் போன்ற செயலாக்க வல்ல ஞான வளர்ச்சியின் செயல் கொள்ளும் வழி முறைகள் அவற்றிடம் இல்லை.

மனிதனிலிருந்து தான் எல்லா மிருக இனங்களும் செயல் கொண்டதா என்றால் அதுவுமில்லை. மிருகத்திலிருந்து மனித இனம் வரவில்லை.

ஆனால் மனிதனாக வாழும் நிலையில்
1.இவன் எடுக்கும் நிலை கொண்ட சுவாசத்தினால்
2.ஏழு பிறவியில் இவன் சேமித்த அமில குணத்தின் நிலைக்கொப்ப ஞான ரிஷியாகவும்…
3.மிருகத்தின் நிலையிலும் சென்று விடுகின்றான். இது தான் உண்மை நிலை.

மிருகங்களிலே ஊரும் ஜெந்துக்களிலே அதனதன் நிலைக்கொப்ப பல அறிவு குணங்கள் நிறைந்துள்ளன. மூட்டைப் பூச்சிக்கு மனிதனின் சுவாசமும் மனிதன் “தன்னைப் பிடிக்கப் போகின்றான்..” என்று அறியும் ஆற்றலும் உண்டு. அதே போல் பல்லியைக் கண்டாலும் “தன்னைப் பிடித்துவிடும்…” என்பதை உணரும் ஆற்றலும் அதற்கு உண்டு.
1.ஒவ்வொரு ஜீவராசிக்கும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலையும்
2.தன் ஆகாரத்தை ஒரே குறியுடன் எடுக்கவல்ல சக்தியும் உண்டு.

ஆனால் மனிதனுக்கு மூட்டைப் பூச்சி அவனைக் கடித்தால் தான் அவனால் உணர முடிகின்றது. மனிதனுக்குத் தன்னைத் தானே தற்காப்புக் கொள்ளும் அமிலத் தன்மை குறைவு.

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு இவற்றின் வழி பெற்றவன் தான் மனிதன். மனிதன் இயற்கைக் குணமே அவன் ஞானத்தை வளர்க்கும் வழி பெற்ற அமில குணமுடையது தான்.

பூனை.. நாய்… இவை எல்லாம் தன் சுவாசத்தைக் கொண்டு நடப்பதற்கு முதலிலேயே வரப் போகும் நிலையை உணரும் மேம்பாட்டுக் குணமுடையது.
1.இப்படி இயற்கையே கலவையாகி
2.அக்கலவையில் வெளியான உலகில் ஏற்படும் பல கோடி நிலைகளில் கலந்துள்ள நாம்
3.நம் ஞானத்தை நம் முன்னோர்களினால் உணர்த்தப்பட்ட உன்னத வழிக்கோலைச் செயல்படுத்திட வேண்டும்.

ஆண்டவனுக்கு (சிலைக்கு) மாலையை முன்னாடி போட்டுத்தான் வணங்குகின்றோம். பின்னாடி போட்டு அழகு காண்கின்றோமா…?

எங்கும் நிறைந்துள்ள ஆண்டவனுக்கே மாலையை முன் போட்டால் என்ன…? பின் பக்கம் போட்டால் என்ன…? என்று செயல்படுத்தாமல் முன்னின்று ஆண்டவனையும் முன்னோரையும் வணங்குகின்றோம்.

அந்நிலைக்கொப்ப
1.நம் முன்னோர்கள் முன்னாடி வழிப்படுத்திய தத்துவ ஞானத்தின் உண்மையை உணர்ந்து…
2.மெய் ஞானத்தின் சக்தியைத் தன் ஞானத்தால் ஈர்க்க வல்ல ஞானம் பெறுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம் நம் கண்ணின் நினைவு புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரிடம் செல்ல வேண்டும்.

உயிர் நம் உடலுக்குள் “ஓ…” என்று இயங்கிக் கொண்டயுள்ளது. நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் “ம்…” என்று ஜீவ அணுவாக மாற்றி அதையும் “ஓ…” என்று இயக்கிக் கொண்டயுள்ளது.

இது தான் ஓம் நமச் சிவாய… ஓம் நமச் சிவாய. அதாவது நாம் சுவாசிப்பது அனைத்தையும் ஜீவன் (ஓ…ம்) பெறச் செய்து நமதாக நம் உடலாக (சிவமாக) மாற்றிக் கொண்டேயுள்ளது நம் உயிர்.

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் அவரவர்கள் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும். அவர்கள் எண்ணிய எண்ணத்தை இறைவனாக மதித்தல் வேண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அது இறையாகி அதன் உணர்வு செயலாகும் போது அதுவே தெய்வமாகின்றது.

அப்படியானால்…
1.நாம் எதை எண்ண வேண்டும்…?
2.உயிருடன் எதை இணைக்க வேண்டும்…?
3.எதை ஜீவ அணுவாக மாற்ற வேண்டும்…?
4.எதை உடலாக மாற்ற வேண்டும்…? என்ற நிலையை
5.நமது சாஸ்திரங்களில் தத்துவங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது… தத்துவப்படி நாம் எப்படி இயக்க வேண்டும்…? இயங்க வேண்டும்…? எதனை எவ்வாறு இயக்க வேண்டும்…? என்பதுதான் அதிலே உள்ளது.

நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளை எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை உயிரிலே இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உயிர் அணுவாக உருவாக்கிவிடும். உடலுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் விளையத் தொடங்கும்.

அந்த ஒளியான உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் போது கல்கி, அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.

சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள பேருண்மை இது.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலுக்குள் துரிதமாகச் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

 

எத்தனையோ பேருக்கு நாம் பல நன்மைகளைச் செய்திருந்தாலும் அதிலே தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாதபடி அவ்வப்பொழுது சுத்தப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

உதாரணமாக… ஊசி மூலம் நம் உடல் இரத்தத்திலே மருந்தை கலக்கச் செய்ய்யும் போது அந்த மருந்து செல்லும் இடங்களில் எல்லாம் தீமைகளை (நோய்களை) நீக்குகிறது.

இந்த மருந்தைக் கண்டவுடன் அந்த அணுக்கள் ஏற்க மறுக்கிறது. மருந்து அணுக்களுக்குள் சேரச் சேர அது பலவீனம் அடைகின்றது.

இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீங்கள் எடுத்துப் புருவ மத்தியில் எண்ணி உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்
2.உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.கண்ணின் நினைவைச் செலுத்தி விட்டால் இது துரிதமாக அந்த அணுக்களிலே போய்ச் சேருகின்றது.
4.மேலே சொந்னது போன்று அறியாது உட்புகும் தீமைகளைப் பலவீனப்படுத்துகிறது.

உதாரணமாக… நண்பர்களுக்குள் பழகப்படும் பொழுது “நன்மை செய்தான்…” என்று எண்ணும் பொழுது அமெரிக்காவில் இருந்தாலும் விக்கல் ஆகிறது.. நன்மை செய்யும் சக்தியாக இயக்குகிறது.

ஆனால் பகைமை என்று ஆகி “துரோகம் செய்தான் பாவி…” என்று வேதனையுடன் எண்ணினால் நண்பன் உணவு உட்கொண்டிருந்தாலும் அங்கே புரை ஓடுகின்றது.

யார் இப்படி எண்ணுகிறாரோ அவருக்கும் இருள் சூழச் செய்து சிந்தனை இழந்து அடுத்து விபத்தாகின்றது. அதே சமயத்தில் யாரை எண்ணினாரோ அங்கேயும் விபத்தாகிறது. ஆக… நாம் எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வின் வழி தான் இயக்கச் சக்தியாக மாறி இயக்குகிறது.

வேதனை வேதனை என்று எண்ணினால் கண்கள் இருண்டு விடுகின்றது.
1.அந்த நேரத்தில் நேரடியாகப் பார்த்தாலும் மேடு பள்ளம் இருப்பதை நம்மால் பார்க்க முடியாது போகின்றது.
2.கரு விழிகளில் அடுத்தடுத்து இந்த வேதனைகள் படப்படும் போது விஷத்தன்மை என்ற மாசுகள் பெருகத் தொடங்கி விடுகின்றது.
3.இப்படிப் பெருகத் தொடங்கினால் கண் கருவிழிக்குள் இருக்கும் கண்மணியும் பலவீனம் அடைகின்றது
4.அது பலவீனம் அடைந்தால் விஷத்தின் தன்மையை அதிகமாகக் கவர்ந்து
5.கண் நரம்பு மண்டலம் முழுவதும் விஷத்தன்மைகள் பரவி விடுகின்றது.
6.விஷத்தன்மை பரவினால் உடல் முழுவதற்கும் அது எளிதில் பரவும் தன்மை வருகிறது.

இது போன்று “ஒன்றுடன் ஒன்று தொடர் கொண்டு” அதன் தொடர் வரிசையில் இயற்கையின் நியதிகள் நம்மை மாற்றிக் கொண்டிருக்கின்றது..

ஆனால் இதையெல்லாம் மனிதன் ஒருவன் தான் மாற்றி அமைக்க முடியும்.

மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று இங்கே கூர்ந்து கவனிக்க வைத்து
2.ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாக்கச் செய்கிறோம் (ஞானகுரு).

பதிவானதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து தீமை என்று வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கப் பெருக்க இந்த உடலுக்கு பின் பிறவி இல்லாத நிலை அடையும் தகுதி பெறுகின்றீர்கள்.

முந்தைய நிலைகள் இதை எல்லாம் செய்யத் தவறி இருந்தாலும் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை நினைவுக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி… துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிர் வழி கவர வேண்டும்.

நமக்கு முன் இருக்கும் ஆன்மாவிலே பலவிதமான உணர்வுகள் உண்டு. அதிலே தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும் நிலையாக
1.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இரத்தத்திலே கலக்கச் செய்து
2.இரத்தத்தின் வழி உடலில் உள்ள அணுக்களில் அதைப் பரவச் செய்யப்படும் பொழுது
3.துரிதமாக நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது.

நம்மை அறியாது கோபப்படும் அல்லது வேதனைப்படும் செயல்களையும்… ஏன்… எதற்கு…? என்று அறியாதபடி செயல்படுத்தும் சில தவறுகளிலிருந்து மீட்பதற்குத் தான் இதை எல்லாம் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை அடிக்கடி இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது தீமைகளை அது ஏற்றுக் கொள்ளாது தடுக்கப்படுகின்றது.

1.நம்முடைய சிறுநீரகங்களும் (KIDNEY) துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் பெற்று
2.இரத்தங்களில் கலந்து வரக்கூடிய மாசுகளைத் தூய்மைப்படுத்தும் சக்தி பெறுகின்றது.
3.அப்போது நல்ல இரத்தம் இருதயத்திற்கும் செல்கின்றது… சிந்திக்கும் ஆற்றலும் வலுப்பெறுகின்றது.

வாழ்க்கையில் தெளிந்த மனம் பெறக்கூடிய உறுதி உங்களுக்குக் கிடைக்கின்றது.

எத்தனையோ ரிஷிகளின் கூட்டு முயற்சி தான் இங்கே கொடுக்கும் போதனைகள்… நான் ஒருவன் மட்டும் அல்ல…

 

இப்பொழுது மெய் ஞானத்தின் தத்துவத்தை யான் (ஈஸ்வரபட்டர்) தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

மாமரத்தில் மரம் முழுவதற்கும் எல்லாக் கிளைகளிலும் கனிகள் ஒன்றைப் போல் கிடைக்கப்படும் நிலையில் மனித ஆத்மாக்கள் ஒத்து வாழ்ந்த நிலை தான் முந்தைய காலங்களில் இருந்தது.

அது மாறி அரசன் என்ற ஒருவரின் கீழ் ஆதிக்கம் பெற்று குடிமக்களாக வழி வந்த வாழையின் நிலையில் ஒரு மரம் ஈனும் குலையில் பல பழங்கள் உள்ள நிலை போன்று வழி வந்தது.

அதுவும் மாறி இப்பொழுதைய நிலையோ பலா மரத்தை ஒத்த ஜாதியின் மரம் ஒன்று தான் அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தில் ஒவ்வொரு பழத்திற்குள்ளும் பல சுளைகள் அடக்கம் பெற்றுள்ள நிலை போல் ஜாதி என்ற ஐக்கியப் பிணைப்புடைய நிலையாக இருக்கின்றது.

அப்படி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் “மெய் ஞான விழிப்பு…” என்ற நிலையில் பேருண்மைகளைக் கூறினாலும் சுழன்று கொண்டேயுள்ள ரங்கராட்டினத்தை உடனே நிறுத்தும் பொழுது அது அப்படியே நிற்காது. ஓர் அசைவு பட்டுப் பின்னோக்கி முன் வந்து தான் அதை நிறுத்துவது போல் தான்
1.சுழன்று கொண்டுள்ள இந்தப் பிணைப்பான வழி முறை மாற்றத்திலிருந்து
2.நம் மனித ஆத்மாக்களை அவர்களின் எண்ணத் தொடரையே சிறுகச் சிறுக வழிப்படுத்தித்தான்
3.உண்மையின் ஸ்வரூபத்தை உணர்த்திக் காட்டிடல் முடியும்.

ஆதிசங்கரரின் காலத்திற்குப் பிறகு… மனித ஆன்மாக்களை ஞான மார்க்கத்திற்கு வழிப்படுத்தும் யோகமார்க்கங்களும் பக்திமார்க்கங்களும் மனிதனைத் தன் இச்சையில் வழிப்படுத்தும் நிலையிலேயே விட்டுவிட்டனர்.

பல மகான்கள் இந்த உலகிற்கு நல்வழி புகட்டப் பல வழிகளைச் செயல்படுத்தி வந்தாலும் ஈர்த்து எடுக்கும் பக்குவ குணமுள்ள மனித ஆன்மாக்களைச் செயலாக்குவது கடினப்பட்டுவிட்டது.

அதனால் தான் அந்த மகான்கள் தான் உணர்ந்த வழிகளை மட்டும் அனுபவக் கதையாக்கி கடைசியில் ஆண்டவன் என்றால் யார்…? என்று ஒரு ஞானத்தைப் புகட்டிவிட்டு இந்நிலை பெற மனித ஆன்மாக்கள் எந்த நிலை பெற வேண்டும் என்பதனை உணர்த்தாமல் சென்றுவிட்டனர்.

இவ்வளவு காலங்களுக்குப் பிறகு உம்மால் (ஈஸ்வரபட்டர்) உணர்த்தப்படும் நிலை என்ன…? என்ற வினா எழும்பலாம்.
1.இந்த நிலையை இப்பொழுது இங்கே உணர்த்துவது என்பது என் ஒருவனின் செயல் மட்டுமல்ல..!
2.இந்தப் பூமியில் அவதரித்து ஆண்டவனான சப்தரிஷிகள் பலரின் ஆவலை
3.இந்தப் பூமியின் ஆத்மாக்கள் உண்மை உணர்ந்து உயர போதனைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.

இதற்கும் வினா எழும்பலாம்… இப்பொழுது மட்டும் அது எப்படி என்று…?

1.எந்தச் சக்தி பரப்பப்பட்டதோ..
2.அந்நிலையில் ஏற்றுக் கொண்ட நிலைப்பட்டவரினால்…
3.பலருக்கும் நிலைப்படுத்த இச்செயல் நடந்து வருகின்றது.

ஒவ்வொரு ஆத்மாவும் “தன்னுள் உள்ள ஜீவத் துடிப்பே தான் ஆண்டவன்…!” என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

அந்த ஜீவனுக்கு ஜீவன் தந்த காற்றும்.. ஒளியும்.. நீரும்… கொண்ட ஜீவ ஆண்டவன்களை ஜோதி கொண்டு வணங்கியே வழித் தொடர் பெறும் நடை முறைச் செயல்களை உணர்த்திடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் அவரவர்கள் உயிரை எண்ணுதல் வேண்டும்.

நம் உயிர் “ஓ” என்று இயக்கி (ஈசனாக இருந்து) நாம் எதையெல்லாம் எண்ணி ஏங்குகின்றோமோ அவை அனைத்தையும் அந்தந்தக் குணத்திற்குத் தகுந்த அணுவாக மாற்றி “ம்” என்று உருவாக்கி நம் உடலாக மாற்றுகின்றது.

நம் உடலுக்குள் அந்த அணுக்கள் எத்தனை வகை குணங்கள் இருக்கின்றதோ இவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக (குருதேவா) இயங்குகின்றது… இயக்குகின்றது.

அது தான் ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வது.

நமது ஞானிகள் தன்னைத்தான் கண்டுணர்ந்து பெற்ற சக்திகளை இராமயாணம், மகாபாரதம், கந்தப்புராணம், சிவபுராணம், விநாயக புராணம் என்று காவியங்களாகத் தொகுத்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அந்தக் காவியங்களில் கூறப்பட்டுள்ள மூலக்கூறுகளை நாம் சீராகப் பயன்படுத்தினால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

இந்த உயிர் தோன்றி பல கோடிச் சரீரங்கள் பெற்றபின் தான் மனிதனாக உருவாக்குகின்றது.

1.மனிதனானபின் இந்த உடலை விட்டு நாம் அகன்றால் எங்கே செல்வது…?
2.நமது எல்லை எது…? என்ற நிலையைத் தன்னில் அறிந்தவன் அகஸ்தியன்.
3.பின் அணுவின் ஆற்றலின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தான்
4.நம் புவியின் நிலைகளில் இருந்து வான்வீதியை உற்று நோக்கினான்.
5.வானில் நடக்கும் வானஇயல் தத்துவத்தையும் கண்டான் அகஸ்தியன்.
6.வானில் விளைந்த உணர்வுகளைத் துருவப் பகுதியின் வழியாக நமது பூமி கவர்ந்து புவிஇயலாக மாற்றுவதையும் கண்டுணர்ந்தான்
7.இங்கே புவிஇயல் நிலைகளில் விளைந்த சத்தினை உயிரியலாக உயிர் அணுக்கள் மாற்றிப் பல கோடிச் சரீரங்கள் எடுத்த பின் மனிதனாக உருவானதையும் அறிந்துணர்ந்தான் அகஸ்தியன்.

மனிதனான பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால் எங்கே செல்ல வேண்டும் என்ற தன் அனுபவத்தில் பெற்ற நிலையை தன்னுள் விளைந்த சக்தியை இன்று அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளார்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து நம் இரத்தங்களிலே அதிக அளவில் கலக்கச் செய்ய வேண்டும்

 

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது…
1.நாளை கடன்காரனுக்கு எப்படிக் கொடுப்பது…
2.குடும்பத்தை எப்படி வழி நடத்துவது… என்று சோர்வின் நிமித்தம் வேதனை என்ற உணர்வுகள் தான் வருகின்றது.

இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தங்களில் அதைக் கலக்கச் செய்தால் உடனே மன உறுதி கிடைக்கும்.

1.நாம் எதைச் செய்ய வேண்டும்…? எப்படிச் செய்ய வேண்டும்…? என்று
2.தனக்குள்ளேயே ஞானங்கள் கிடைக்கின்றது.
3.அதன் வழி நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவும் தொழிலை விருத்தி செய்யவும் மன அமைதி பெறவும் இது உதவும்.

ஆனால் மன அமைதி இழந்து குடும்பத்தில் சிக்கல்கள் அதிகமானால் அந்தக் குடும்பத்தில் இதை நுகர்வோர் உணர்வுகள் அனைத்துமே சோர்வடைகின்றது. சோர்வடைந்து வேதனைப்படும் நிலை வரும் பொழுது சிந்தனை இழக்கப்படுகிறது.

அந்த குடும்பத்தை சார்ந்தவர் வெளியிலே செல்லப்படும் பொழுது
1.அந்தக் கலக்கங்கள் – எதிர்பாராத விபத்துகளை உண்டாக்கி விடுகின்றது
2.பட்ட காலிலே படும்… கெட்ட குடியே கெடும்…! என்ற நிலைகளில்
3.சங்கடங்கள் குடும்பத்தில் பரவப்படும் பொழுது விபரீத விளைவுகள் வந்து விடுகின்றது.

மேலும் மேலும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலையே முடியாது போய் விடுகிறது. தேடிய செல்வங்களையும் பாதுகாக்க முடியாது போய்விடுகிறது. மேலும் வேதனை என்ற உணர்வுகளே அதிகமாக வளர்கின்றது.

இந்த உடலில் அத்தகைய நிலைகளை வளர்த்துக் கொண்டால் இன்று நாம் மனிதர்கள்.

வேதனை என்ற உணர்வு கூடினால் எந்த ஆசை கொண்டோமோ பேய்…! இன்னொரு மனித உடலுக்குள் சென்று பேயாக ஆட்டி அவனையும் வீழ்த்திவிட்டு வேதனையை உருவாக்கி வெளி வந்தபின் அடுத்து “மனிதனல்லாத உடலை இந்த உயிர் உருவாக்கிவிடும்…”

ஆகவே எத்தனையோ உடல்களைக் கடந்து வந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய நம் உயிரைக் கடவுளாக மதித்தல் வேண்டும். அவனால் அமைக்கப்பட்ட இந்த உடலைக் கோவில் என்று மதித்துப் பழக வேண்டும்.

அப்படி மதித்தோம் என்றால்… வாழ்க்கையில் சந்திக்கும் சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் குரோதம் பயம் போன்ற நிலைகள் நமக்குள் புகாது தடுக்க முடியும். நல்ல சிந்தனைகள் நமக்குள் கூடும்.

வாழ்க்கையில் தீமைகளைச் சந்திக்க நேரும் அந்தந்த நேரங்களில் உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நம் உடலில் எத்தகைய கஷ்ட்ங்கள் வரினும் அதைச் சிறுகச் சிறுக நாம் தடுக்க முடியும் உடலுக்குள் நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

காரணம்… தீமைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கியது அந்தத் துருவ நட்சத்திரம்…!

1.கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரில் இணைத்து…
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணை மூடி…
3.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவு அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் பெற வேண்டும் என்று
4.உயிர் வழி கவர்ந்து நம் உடலுக்குள் சேமித்தல் வேண்டும்.
5.நம் இரத்தங்களிலே இதைக் கலக்கச் செய்ய வேண்டும்
6.கண்ணின் நினைவை உள்ளே செலுத்தப்படும் போது நம் இரத்தங்களை அது தூய்மைப்படுத்தி விடுகின்றது.

மனித ஆத்மாவினால் முடியாத சக்தி எச்சக்திக்குமில்லை…!

 

இருட்டில் உள்ள பொழுது வெளிச்சத்தைக் கண்டவுடன் மகிழ்கின்றோம். வெயிலில் உள்ள பொழுது நாம் நிழலுக்கு ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா…? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையில் தான் உழன்று கொண்டுள்ளோம்.

அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலினுள் கூட்டிக் கொண்டுள்ளோம். இந்த நிலையை மாற்றி நம் ஒளியைக் காண முயல்கின்றோமா…?

கண்ணாடியின் தூசியை அகற்றித் தெளிவாக உருவைக் காணுகின்றோம்.
1.இந்த உடலில் உள்ள அசுத்த அலைகளையும் தீய எண்ணங்களையும் மாற்றி
2.நம்மின் உண்மை அழகைக் காண முயல்கின்றோமா…?

நம்மிடமுள்ள அசுத்த அலைகளை அகற்ற நாம் விழையாமல் “ஆண்டவன் வந்து தானாக அகற்றுவான்…! என்று ஆண்டவனை வேண்டி… அக அழகு காண முயல்கிறோம்…”

ஒரு செம்பில் உள்ள நீரில் அதற்கு மேன்மேலும் நல்ல நீர் ஊற்றும் பொழுது நல்ல நீரும் அசுத்த நீரும் கலந்து வெளிப்பட்ட பிறகு தானாக அனைத்தும் நல்ல நீராகி விடுகின்றது.

அதைப் போல் நம்மில் உள்ள தீய அணுக்களை நாம் எடுக்கும் நல் உணர்வின் ஈர்ப்பினால்… மேன்மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வான அமில குணங்கள் அதிகப்படப்பட… இந்தத் தீய அணுக்கள் பல ரூபத்திலும் வெளிப்பட்டுவிடும்.

1.நம் உடலில் இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆவி ஆத்மா ஏறியிருந்தாலும்
2.தீய அமில குணங்கள் வெளிப்படும் பொழுது
3.அதன் குண அமிலத்திற்குகந்த ஆகாரம் கிடைக்காத தன்மையில்
4.அதன் பாதிப்பான குணத் தூண்டுதலும் நம்மை ஒன்றும் செய்திடாது.

இந்நிலையை உணர்த்தும் தத்துவ ஞானத்தை உணர்ந்து இந்த ஆத்மாக்கள் உயர்ந்தால் தான் சக்தி நிலை கூடும்.

உலக சக்தியும்… அண்டசராசரங்கள் என்று உணர்த்துகின்றனரே… அந்த அனைத்துச் சக்தியையும் உணர்த்த வல்ல சக்தி இந்த உலக ஆத்மாக்களுக்குத் தான் உண்டு.

மனித ஆத்மாவினால் முடியாத சக்தி எச்சக்திக்குமில்லை…!

இதை உணர்த்தும் நிலை இந்த உலகம் நம் பூமியின் நிலை கூடிக் கொண்டேயுள்ளது. உலகச் சுழற்சியில் பல அமில சக்திகளை நம் உலகம் ஈர்த்துக் கொண்டே சுழன்றுள்ள நிலையில் உலகின் உள் நிலையில் உள்ள பல அமிலங்கள் வெளிப்பட்டு விட்டது.

1.இயற்கையாக வெளிப்பட்டது மட்டுமின்றி
2.மனிதனால் பூமியிலுள்ள பல பொக்கிஷத்தை ஈர்த்து எடுத்ததினால்
3.மேல் பாகம் கனத்தும் உள் நிலை வலுவிழந்தும் உள்ள நம் பூமியின் நிலை
4.இந்தக் குறுகிய காலப் போக்கில் தன் நிலையைத் தானாக ஒழுங்குபடுத்தும் நிலை வருகின்றது.

அப்பொழுது நம் நிலை எல்லாம் என்னவாகும்..? என்பதனை உணர்ந்து இந்த உடல் என்ற கோளத்தை நம் நிலைக்குகந்த அமிலங்களைச் சேமித்து நம் உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து ஆத்ம ஞானம் பெறும் அறிவின் பொக்கிஷத்தின் வழித் தொடரை உருவாக்குங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உணவை உட்கொள்ளும் பொழுது எந்த எண்ணம் கொண்டு உட்கொள்கிறோம்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?
சுவையான உணவைச் சாப்பிடுகின்றோம். ஆனால் அந்த நேரத்தில் எதையெல்லாம் எண்ணுகின்றோம்…? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் சேர்க்கப்படும் பொழுது உணவாக அந்த வேதனைப்படும் உணர்வுகள் இணைக்கப்படுகின்றது.

இந்த உணர்வின் ஆற்றலை எதனுடன் இணைக்கின்றோமோ அதற்குத் தக்க நமக்குள் உமிழ்நீராகி உடலுக்குள் சென்று அணுக்கள் உருவாகின்றது.

சாப்பிடும் பொழுது ஒரு நான்கு நாளைக்குச் வேதனையாகவே சொல்லிப் பாருங்கள். உணவுடன் கலந்து அந்த இரண்டாவது நாள் வந்தவுடன் “அம்மா… அப்பா…” என்று வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஒரு சில பேர் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பார்த்தால் இதைப் போன்ற வேதனைப்படும் நிலைகளை உற்றுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அடுத்தவர்கள் படும் கஷ்டங்களை எல்லாம் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த உணர்வுகள் சேரச் சேர என்ன ஆகும்…?

கஷ்டமான உணர்வின் சேர்க்கை அமிலமாக மாறி அது உணவுடன் சேர்த்து அவர் எந்தெந்தக் கஷ்டத்தைப் பட்டாரோ அதையெல்லாம் இவருக்குள் உருவாக்கும் தன்மையாக மாற்றிவிடும்.

நண்பராகப் பழகியவர் இப்படி எண்ணினார், திடீரென்று விபத்தாகி இப்படிச் செத்தார், அதனால் குடும்பத்தில் இப்படியெல்லாம் சிரமப்பட்டார்கள், அதனால் ரொம்பவும் வேதனை ஆகிவிட்டது என்று சொன்னால் போதும்.

எல்லாவற்றையும் “உம்” கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார். இதைச் சொல்லும் பொழுது உற்றுக் கேட்டு இரசித்து உணவை உட்கொள்வார்.

இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் போன பிற்பாடு அங்கே அவர் விபத்தில் சிக்கிய உணர்வு இங்கே இயக்கும். இவர் சாப்பிட்டுச் சென்ற பின் விபத்தின் தன்மையை இங்கே உருவாக்கும்.

இந்த இயற்கையின் இயக்கம் எப்படி இருக்கிறது…? என்று நீங்கள் பார்க்கலாம்.

ஆகவே உணவு உட்கொள்ளும் பொழுது கூடுமான வரையிலும் இதைப் போன்ற நிலைகள் வராது தடுத்துக் கொள்தல் வேண்டும். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் சாப்பிடும் இந்த உணவு முழுவதும் படர வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த உணவு அமிர்தமாக என் உடலுக்குள் இணைய வேண்டும் ஈஸ்வரா என்று வேண்டி அந்த ஏக்க உணர்வுடன் உணவை உட்கொண்டால் நமக்குள் அதற்குத்தக்க உமிழ்நீராக மாறி அது நல்ல அமிலமாக உடலுக்குள் இணையச் செய்கின்றது.

அதனால் உடல் உபாதைகளையும், வலிகளையும், அதே சமயத்தில் எதிர்பாராது இயக்கும் தீமையான உணர்வின் நிலைகளிலிருந்தும் நம்மை நாம் மீட்டிக் கொள்ள முடியும்.

இன்னொரு உடல் என்ற நிலையினைக் “கனவிலும் நினைக்க வேண்டாம்…”

 

இன்றைய உலக சூழ்நிலையில் எத்தகைய விஷத்தன்மைகள் வந்தாலும் அதை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடல் உறுப்புகள் அனைத்திலும் கலக்கப்படும் பொழுது விஷத் தன்மைகள் அடங்குகிறது. நம் அறிவு தெளிவாகின்றது.

இதைப் போன்ற உணர்வுகள் வளர்ச்சி அடையப்படும்பொழுது நம் உடலிலுள்ள அணுக்கள் அத்தனையுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றது.

உடலை விட்டுச் சென்றால் உயிரைப் போல் உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது. எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ அதன் உணர்வு உண்டு நம் உயிர் அங்கே அழைத்துச் செல்கின்றது.

1.வேதனைப்படுவோர் உணர்வுகள் நமக்குள் அதிகமானால் அல்லது
2.மந்திரித்து ஒரு தாயத்தைக் கொடுத்தால் அதன் மேலேயே எண்ணம் வருகிறது
3.இதைப் போன்று அது எவரிடத்திலிருந்து வந்ததோ அங்கே இந்த ஆன்மா செல்கின்றது.

இதைப் போன்று தான் நமக்குள் எத்தனையோ தீங்குகள் விளைகிறது.

இத்தகைய தீங்கு விளைவிக்கும் நிலையில் இருந்து தப்பி இந்த விஞ்ஞான உலகில் நச்சுத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில்
1.நாம் எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும்.
2.இன்னொரு உடல் என்ற நிலையினைக் கனவிலும் நினைக்க வேண்டாம்.

இந்த உடலிலிருந்தே ஒளியாக மாறுவது தான் மனிதனின் கடைசி நிலை.

உயிரணு தோன்றி பூமிக்குள் வந்து மனிதரான பின் விஜயதசமி. விஜயம் செய்த இந்த உயிர் பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்றது.

பத்தாவது நிலையை அடையச் செய்யும் தன்மையாக நம் ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று அதனின் துணை கொண்டு நமது வாழ்நாளில் ஒவ்வொரு நொடியிலும் இங்கே யாம் (ஞானகுரு) பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கொண்டு வரும் தீமைகளை மாற்றிட வேண்டும்.

கையிலே அழுக்குப்பட்டால் நன்னீரை விட்டு எப்படிக் கழுவுகின்றோமோ துணியில் பட்டால் அழுக்கைச் சோப்பைப் போட்டு எப்படி நீக்குகின்றோமோ உடலில் உள்ள அழுக்கிப் போக்க எப்படிக் குளிக்கின்றோமோ அதைப் போன்று ஒவ்வொரு நிமிடத்திலும் உயர்ந்த சக்தி கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவில் உள்ள தீமைகளை அழுக்குகளை நீக்கிடல் வேண்டும்.

உடலுக்குள் தீமை புகாது சுத்தப்படுத்தித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கி
1.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைய
2.உங்களுடைய முழுமையான எண்ணங்களும் அதில் வர வேண்டும்.

குடும்பத்தில் கணவன் மனைவியும்… அகஸ்தியனும் அவர் மனைவியும் அவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ்ந்தனரோ அதே போன்று… தன் கணவன் உயர வேண்டும் தன் மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி இருவருமே எடுத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் என் கணவர் பெற வேண்டும் என் மனைவி வரவேண்டும் என்று எடுத்தாலே இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சி அடைந்து பல தீமைகளை நீக்கும் சக்தியாகப் பெருகும்.

ஒவ்வொருவரும் இதை மனதில் வைத்துச் செயல்படுத்துங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற வலுவைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2.ஏனென்றால் இது ஒரு பயிற்சி… தீமையை நீக்கும் உணர்வுகளைப் பயிற்சியாக இப்போது கொடுக்கின்றோம்.
3.அதை நீங்கள் வலுப்படுத்தி உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்துங்கள்.

நல்லதைச் செய்ய மட்டும் “காலமும் நேரமும் வரட்டும்…!” என்று காத்துக் கொண்டே இருக்கின்றோம்

 

தீபத்திற்கு ஓ…ம் என்ற ஒலியின் உருவ எழுத்தினை மேல் வைத்து ஐம்புலனின் ஐக்கிய ஒளியை ஐந்து முகங்களாக்கி தீபமேற்றி வணங்கிட நம் முன்னோர்ககள் வழிப்படுத்திச் சென்றார்கள். ஒவ்வொரு முறைகளுக்கும் தத்துவ மையம் கொண்டே சகல நிலைகளையும் உணர்த்தினார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்படிப் பல முறைகளை உணர்த்தியும் வாழ்க்கை என்ற சுழலிலிருந்து ஞானம் பெறவும் அதற்குகந்த ஜெப முறையை வழிப்படுத்தியதை எல்லாம்
1.“அதற்குகந்த காலங்கள் வரட்டும்…!”
2.இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கை நிறைவுக்குண்டான வழி செயல் முற்றுப் பெற்ற பிறகு தான்
3.ஞான வழிக்கு நம் ஜெப நிலை செல்ல வேண்டும் என்று கால நிலையைக் கடத்தி
4.அதற்குகந்த காலத்தை ஏற்கும் நாளை எண்ணி… வாழும் காலத்தையே கடத்திவிடுகின்றனர்.

பசிக்கு உண்ணுகின்றோம். ஆனால் அதற்குகந்த காலம் வரட்டும்…! என்று காத்திருப்பதில்லை பசிப்பவன்…! அதே போல் எந்தச் செயலில் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும்
1.நம் உடலிலிருந்து வெளிப்படும் கழிவை வெளிப்படுத்த
2.அதற்குரிய “காலம் வரட்டும்…” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…?

உடலில் உள்ள அமிலத்தை உண்டு… கழித்தே… வாழும் நாம் அந்த உடலுக்குகந்த உயர் குணமுடைய அமில ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டி… வரும் நாள்.. என்று எண்ணிக் கடத்தி வருகின்றோம்.

இதனை உணர்த்தத்தான் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்திச் சாந்த குணத்தின் சக்தி அமிலத்தை ஈர்க்கும் ஜெப நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறோம்.

அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதி அன்பினால் வரும் வினையையும்… அதி ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
1.இந்தத் தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை ஏற்று
2.நம் ஆத்ம ஜெபம் இருந்திடல் வேண்டும்.

ஆண்டவனின் அன்பைப் பெற “அன்பே தெய்வம்.. அன்பே சத்தியம்…!” என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நம் ஆத்ம நிலை உயருவது கடினம்.

நம் எண்ணமெல்லாம்…
1.இந்த உலகுடனும் கலந்துள்ள அலையில் உள்ள
2.நல் அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
3.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
4.”நான் நல்லவன்…” என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
5.நம் ஆத்ம நிலை வளருவது கடினம் தான்.

ஜெபம் பெறுங்கள்.. நல் உணர்வு பெறுங்கள்… என்றெல்லாம் வழிப்படுத்துகின்றோம். அந்த நிலையில் நம் எண்ணக் கலவை வழிப்படுத்திக் கொண்டு வரும் நிலையில்
1.நம்மை அறியாமல் பிறர் செய்யும்
2.அவர் எடுத்த அமில குணத்தை ஒத்த அலைகள் நம்மை மோதுண்ட நிலையில்
3.அதே சமயத்தில் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது
4.இவரின் நிலையான அமில மோதலின் நிலையால்
5.பல நாட்கள் நாம் நம்முடன் மோதுண்ட அலைகளை அடக்கிப் பழக்கப்பட்ட நிலையில்
6.மற்றோரின் சொல்லிலிருந்து வெளிப்படும் எந்தக் குண எதிர்நிலை மோதலும் நம்மைச் சாடி
7.”அதே உணர்வுடனே நம்மையும் பேசச் செய்யும்…!”

நாம் பெற்ற ஜெபத்தின் வலு என்ன ஆயிற்று…? எங்கே போனது…?

முதலில் நம் நிலையில் பிறரின் சொல் எண்ணத்தைக் கொண்ட அமிலத்திற்கு அடிபணியலாகாது. பல நாள் நமக்குகந்த குணமுடன் வாழ்ந்த நிலையில்
1.ஒருவர் வந்து மற்றொருவரின் மேல் சொல்லப்படும்
2.எந்நிலை கொண்ட சொல்லின் அமிலங்கள் நம்மிடம் சொல்லும் பொழுதும்
3.நாம் அவர் சொல்லும் நிலையை வைத்து… “நம் எண்ணத்தைச் சிதறவிடலாகாது…!” (இது முக்கியம்)

ஆத்ம ஞானம் பெறும் வழித் தொடரில் பல நிலைகள் உள்ளன.

ஒவ்வொரு தடவை நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலை கொண்டு “அதன் எண்ணத்தை ஒத்த அமிலத் தன்மை உராய்ந்து கொண்டே தான் உள்ளது…” என்பதனை உணர்ந்து நம் ஆத்ம ஞானம் இருந்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்குகந்த உயர் ஞானத்தைப் பெற இன்றைய கலியில் உள்ள ஆத்மாக்களில் வழி பெறும் பக்குவம் இந்த நாகரீக உலகில் மிகவும் குறைந்து விட்டது. இன்று உணர்த்தப்படும் முறையும் ஏற்கப்படும் வடிவில் இல்லை.

1.தன் உண்மை நிலையை… தான் உணர்ந்தால்
2.தன் உயிராத்மாவின் நிலை உயரும்… ஒளிரும்…! என்ற வழித் தொடர் பெற்றே ஜெப நிலை கொண்டிடுங்கள்.

யாம் சொல்வது… ஏதோ விளையாட்டிற்காக அல்ல…!

 

நம் பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்களின் துணை கொண்டு தான் நம் சூரியன் வாழ்கிறது. பிற மண்டலங்களில் இருந்து 27 விதமான உணர்வுகளைக் கவர்ந்து 27 நட்சத்திரங்களும் தனக்குள் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அதிலிருந்து வரக்கூடிய துகள்களைத் தான் நமது சூரியன் கவர்ந்து அது வாழுகின்றது. 27 நட்சத்திரங்களின் துணை இல்லை என்றால் சூரியனும் நாளடைவில் மங்க நேரும்.

நம்முடைய குடும்பத்தில் ஒரு பத்து பேர் இருக்கின்றார்கள் என்றால் மூத்தவர்கள் முதுமை அடைகின்றனர். குழந்தைகளுக்குத் திருமணமாகிறது. ஆனால் திருமணமான பின்
1.அவர்கள் தனித் தனிக் குடும்பங்களாகப் பிரிந்து சென்று விடுகிறார்கள்.
2.அப்போது… அவர்கள் குடும்பத்தைக் கவனிப்பதற்குத் தான் நேரம் இருக்கும்
3.இங்கே இந்தக் குடும்பத்தில் உள்ளவரைக் கவனிப்பதற்கு நேரம் இருக்காது.
4.அப்படியே இருந்தாலும் நம் மீது பற்று வராது.
5.அவர்கள் குடும்பத்தாரைக் காக்கத் தான் நினைவு வரும்.

அதைப் போன்று தான் 27 நட்சத்திரங்களும் நம் சூரியனைப் போலவே தனித் தனிச் சூரியக் குடும்பங்களாக மாறிக் கொண்டிருக்கின்றது. சரி பகுதிக்கு மேல் பிரிந்து சென்று விட்டது.

ஆகையினால்…
1.மற்ற பிரபஞ்சங்களிலிருந்து அது இழுத்துக் கொடுக்கும் உணர்வுகள் இங்கே இந்தச் சூரிய குடும்பத்திற்கு குறைவானதால்
2.மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட கதிரியக்கச் சக்திகளை ஜீரணிக்கக் கூடிய சக்தியை நம் சூரியன் இழந்து
3.சூரியனுக்குள் இந்தக் கதிரியக்கப் பொறிகள் அதிகமாகி சூரியனே கொதிகலனாக மாறி
4.பல மடங்கு விஷக்கதிரியக்கங்களைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றது.
5.(தினசரி பத்திரிக்கை படிப்பவர்களுக்கு இப்போது இது தெரியும் – “SOLAR STORMS” என்று சொல்வார்கள். இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை இது ஏற்பட்டுக் கொண்டுள்ளது)

அதன் விளைவாக… பிரபஞ்சத்தில் வாழும் கோள்கள் அனைத்திலும் இதே போன்று கதிரியக்கங்கள் அதிகமாகச் சேர்ந்து கொண்டுள்ளது.

நம் பூமியில் எப்படிப் பூகம்பங்கள் ஏற்படுகின்றதோ அதே போல் எல்லாக் கோள்களிலும் இதே போன்று கொதிகலனாக எரிமலைகளாகிப் பூகம்பங்கள் ஏற்பட்டு நடு மையம் கரைந்து போகும் நிலை வருகின்றது…! (நாளடைவில் இதையும் பத்திரிக்கைகளில் படிக்கலாம்)

இப்படி… சூரியன் செயலிழந்தால் அது கரைந்து மீண்டும் அமில சக்தி அடையப்படும் பொழுது… இதைத் தொடர்ந்து இதற்கு உணவு கொடுத்த நட்சத்திரங்கள் 27ம் அதைக் கவர்ந்து அது சூரியனாக மாறி விடுகின்றது.

சூரியன் செயலிழக்கும் பொழுது கோள்கள் அனைத்தும் அந்தச் சுழற்சியில் இழுத்துக் கரைத்து ஆவியாக மாறிவிடும்.

இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் வாழ்ந்த மனிதனும் மற்ற உயிரணுக்களும் இந்த உடலை விட்டுச் சிதைந்து சென்றால் பிரபஞ்சத்தில் மீண்டும் அணுத்தன்மையாக படரும்

ஆனால் இந்த மனித உடலில் வாழும் போது எத்தனை வேதனைப்பட்டு அவஸ்தைப்பட்டதோ அதை எல்லாம் உயிருடன் சேர்த்து “அந்த உயிரான்மா…”
1.உடலை விட்டு உயிர் செல்லும் போது எந்த வேதனையை அனுபவித்ததோ
2.எந்த வேதனையும் உணர்வுடன் செல்கின்றதோ அதற்குத் தக்க அடுத்த நிலை பெறும்
3.இருந்தாலும் தாவர இனங்களோ மற்ற நிலை இல்லாத போது அடுத்த உடலைப் பெறும் தகுதி இழந்து
4.மற்ற பிரபஞ்சத்தில் இயக்கப்படும் பொழுது “கடும் நரக வேதனைப்படும்…”

இதைப் போன்ற நிலையில் தான் உலகம் மாறிக் கொண்டிருக்கின்றது.

மிருகங்களைப் போன்று மனிதனுக்கு மனிதன் தீவிரவாதங்கள் என்று பெருகப்பட்டு யாரையோ காக்க… எதற்காகவோ என்று இல்லாதபடி… எல்லோரையும் அழிக்கும் நிலையாக வந்து கொண்டிருக்கின்றது.

1.பெரும் பெரும் கூட்டத்தையே அழித்து விடுகின்றார்கள்… அழிக்க முற்பட்டவனும் மடிந்து விடுகின்றான்
2.தன்னை மறந்து செயல்படும் நிலையில் தான் இன்றைய உலகம் இருக்கின்றது.

சூரியன் அழிந்தால் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் திசை மாறினால் மனித உடல்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பல விபரீதங்கள் ஏற்படத் தான் செய்யும்.

இதிலிருந்து மீள வேண்டும் என்று விரும்பினால் நம் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தே ஆக வேண்டும்.
ஏனென்றால்
1.எது எப்படி மாறினாலும் அது அனைத்தையும் துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
2.அதை நுகர்ந்து நமக்குள் வலிமை சேர்த்துக் கொண்டால் நமக்குள் அறியாது புகுந்த இருளை நீக்கலாம்… அமைதி கொண்டு வாழவும் முடியும்…
3.உடலை விட்டுப் பிரிந்தால் நாம் வலு சேர்த்த துருவ நட்சத்திரத்தின் சக்தியின் துணையால் அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்ல முடியும்.

நம் முன்னோர்கள் பசுவைத் தெய்வமாக்கிக் காட்டினார்கள்.. என்..?

 

மற்ற மிருகங்களைப் போலவும் மனிதனைப் போலவும் பசுவிற்குப் பல எண்ணங்கள் மாறி மாறி வருவதில்லை. பசுவின் குணமே சாந்தமான.. அமைதி கொண்ட குண நலம் கொண்ட நிலை.

பசுவின் பாலை நாம் அருந்தினால்
1.அதன் குண அமிலத்தைக் கொண்ட சுவாசத்தைக் கொண்டு
2.அதன் உடலில் உதிரமான அந்தப் பாலை நாம் அருந்துவதினால்
3.அதற்குகந்த குண அமிலத்தை நாம் பெறுகின்றோம்.

மற்ற மிருகங்களிலிருந்தும் பாலைப் பெறும் சந்தர்ப்பமிருந்தாலும் நம் முன்னோர்கள் “பசுவின் பாலைத்தான்…” உயர்த்தி வழி காட்டிச் சென்றார்கள்.

அதே போல் பசுவின் குண நிலையை ஒத்த ஆவி ஆத்மாக்கள் ஆவி உலகில் இருப்பதில்லை. குறைந்த நிலையில் தான் அவை இருந்தாலும் அதன் வழித் தொடர்ச்சி பிறப்பில் வருகின்றது.

பசுவின் ஈர்ப்பிற்கு துவேஷ குணம் கொண்ட ஆக்ரோஷமான ஆவிகள் அதன் ஈர்ப்பிலும் அதன் எண்ண அணுக்களிலும் இல்லாததினால்
1.பசுவின் ஹோமம் தெளிக்கப்படும் இடத்திற்கும்
2.பசுவின் எரு சாணத்தைக் கொண்டு நடத்தப்படும் யாகங்களின் புகை மண்டலத்திற்கும்
3.பசுவின் நெய் மருத்துவத்திற்கு உயர்ந்ததாகியதற்கும்
4.பசுவின் சாணத்திலிருந்து ஆண்டவனின் விபூதியைத் திருநீறாக்கி நாம் அணிவதற்கும்
5.நம் முன்னோர்கள் பசுவைத் தெய்வமாக்கிக் காட்டினார்கள்.

இப்பொழுது புரிகிறதா பசுவின் உயர்ந்த சக்தி…!

மனிதனைக் காட்டிலும் மிருகங்களில் பலவற்றிற்குப் பல உன்னத சக்தி குணங்கள் இயற்கையிலேயே அதிகமாகப் படைக்கப்பட்டுள்ளன.

ஆனால் எதனையும் அறியும் ஆற்றல் பெற்ற மனிதனோ தன் நிலை மறந்து வாழ்கின்றான். மனித ஆத்மாக்கள் பிற உலக ஆசைகளுக்கு அழகு பெற்று வாழ விரும்புகின்றான்.

1.தன் உள் அழகை அழகாக்கி… அன்பாக்கி…
2.தன் ஆத்மாவை அழகுற வாழ வழி நடத்த வேண்டும் என்ற சத்தியத்தை உணர்ந்த
3.நம் முன்னோர்களான சித்தர்களால் விளக்கப்பட்ட உயர் ஞானத்தை நாம் ஏற்று வாழ்ந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம்… நோயினைப் பற்றி விசாரிக்கின்றோம்… என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கியிருந்தால் அதனின் ஆற்றல் நமக்குள் இருந்தால்
2.இதனைக் கண்ணுக்கு நினைவுக்குக் கொண்டு வந்து இந்த உணர்வின் நிலையை உயிரான ஈசனிடம் ஒன்றுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும், எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி இந்த உணர்வின் வலிமை பெறச் செய்தல் வேண்டும்.

அப்படி வலிமை பெறச் செய்யும் பொழுதுதான் நாம் நுகர்ந்தறிந்த அந்த நோயின் உணர்வின் தன்மையை இங்கே பிளக்கின்றது “நரசிம்மா…” நம் ஆன்மாவில் பட்ட தீமையின் நிலைகளை இது அப்புறப்படுத்துகின்றது.

ஒரு ரோஜாப் பூவின் தன்மை வளரும் பொழுது ஒரு வேம்பின் உணர்வின் தன்மை அருகில் வந்தால் அதை ஒதுக்கி விடுகின்றது.

அது போல்…
1.ஒரு வேதனைப்பட்டவன் உணர்வுக்குள் ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னால்
2.அந்த மகிழ்ச்சியை நீக்கிவிடும்… அந்த வேதனைதான் வரும்.
3.இந்த வேதனையான உணர்வுகள் நமக்குள் வந்துவிட்டால் என்னதான் நல்லதைச் சொன்னாலும்
3.அல்லது நல்லதைக் கண்டாலும் விஷத்திற்குள் அதைக் கலந்தது போன்று ஆகிவிடும்.

அந்த வேதனை என்ற நிலை அந்த நல்ல சொல்லுக்குள் கலந்து அவர்கள் சிந்தனைகளை இழக்கத்தான் செய்யுமே தவிர சிந்தனையை ஊட்டாது. சிந்திக்கும் திறனை விடாது.

“விஷத்தைக் குடித்தபின் நீங்கள் சிந்திப்பீர்களா…?” முடியாது.

ஒரு வேதனையான உணர்வு தனக்குள் வந்தால் வாலி. யார் அவரைப் பார்த்தாலும் அவர்களுடைய சம வலுவைப் பெற்றுக் கொள்வான்… இயக்கத்தின் வலிமை பெறுகிறான்… என்று காரணப் பெயரை வைத்து அன்று தெளிவாகச் சுட்டிக் காட்டினார்கள் ஞானிகள்.

அதைத்தான் சாதாரண வாழ்க்கையில் இருக்கப்படும் பொழுது
1.துயரத்தையும் துன்பத்தையும் தவறு செய்பவர்களையும் வாழ்க்கையில் நாம் அறிந்து
2.அந்த உணர்வுகள் நமக்குள் பதிவானாலும்… நுகர்ந்து தீமை என்று விலகிச் சென்றாலும்
3.அடிக்கடி தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வந்து தீமையை உணர்த்தும் நிலை ஆனாலும்
4.தீமையையே வளர்க்கும் அணுக்கள் பெருகிவிடுகின்றது.

எதைத் தீமை தீமை தீமை என்று எண்ணுகின்றோமோ அதன் உணர்வுகள் தனக்குள் கணங்களுக்கு அதிபதியாகிவிடுகின்றது. இதைத்தான் சிவனுக்குக் கணக்குப் பிள்ளை நந்தீஸ்வரா.

அதிகமான நிலைகளில் அதைச் சுவாசித்தால் அதன் கணக்கின் பிரகாரம் உன்னுடைய செயல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்…? என்று சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நெற்றிக் கண்ணைத் திறந்தால் சிவன் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்று சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

நமக்குள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பதிவாக்கி மீண்டும் கண்ணுக்குள் நினைவுக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று நெற்றிக் கண்ணான உருவாக்கும் அவனிடம் அந்த அருள் உணர்வை உருவாக்கும்படி வேண்டுதல் வேண்டும்.

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்படுதல் வேண்டும், விநாயகருக்கு அங்குசத்தைக் கையில் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக மனிதனாக உருவான பின் அந்தக் கடும் அங்குசத்தை வைத்துத் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்ற இந்த நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்.. ஏன் நாம் ஆக முடியாதா…?

 

வான் வீதியிலே ஜீவ அணுக்கள் உருவாகி இருக்கிறது… நிறைய இருக்கின்றது என்று சுமார் 40 வருடங்களுக்கு முன்பே சொல்லி இருந்தேன் (ஞானகுரு).

பூமிக்குள் வரும் பொழுது அது எதன் எதன் வழிகளில் எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகளில்,,, அதன் உணர்வின் தன்மை மோதப்பட்டதோ வியாழன் கோளுக்குள் வரும்பொழுது ஜீவனுள்ள அணுவின் தன்மையாக மாறுகின்றது.

இன்று விஞ்ஞானிகளும் சொல்கின்றார்கள் வான் வீதியில் வைரஸ் என்ற அணுக்கள் இருக்கிறது… அங்கே ஜீவிக்க முடியும் என்று.

ஆனால் தாவர இனங்கள் இல்லாது மேலே (வான்வீதியில் மற்ற மண்டலங்களில்) வாழ முடியாது.

1.எல்லாக் கோள்களிலும் “வைரஸ்கள்…” அந்த அணுக்களுக்குள் இருக்கத்தான் செய்கின்றது.
2.அங்கிருக்கக்கூடிய உணர்வுகளை எடுத்தாலும் மாற்றிடும் உடலின் நிலைகள் இல்லை… உடல் பருமனம் இல்லை.
3.விஷ அணுக்களின் தன்மை வைரஸ்களாக மாறுமே தவிர உடல் அமைப்புகள் இல்லை.

காற்று மண்டலமாக மாறும் தன்மை… திடப்பொருளாக உருவாகும் தன்மை… சில கோள்களில் தான் உயிரணுக்கள் தோன்றி மடிகின்றது… தோன்றி மீண்டும் மடிகிறது. சிறிது காலம் இருக்கும். எந்த மண்ணை எடுத்ததோ வளர்கிறது… மீண்டும் மடிகிறது.

1.பூமி ஒன்றிலே தான் தாவர இனங்கள் இருப்பதனால் அதன் வழி கொண்டு
2.உயிரணுக்கள் அந்தச் சத்தினைக் கவர்ந்து ஒவ்வொரு உணர்வும் உணர்ச்சி கொண்டு
3.தாவர இனத்திற்கு ஒப்ப எண்ணங்களாகி உணர்வின் சத்தை எடுத்து உடலுக்கொப்ப அணுக்களும் வருகின்றது

இதையெல்லாம் இன்று விஞ்ஞான அறிவு கண்டு கொண்டு தான் உள்ளார்கள். இந்தப் பூமியை விடுத்து “மற்ற மண்டலங்களுக்குச் சென்று அங்கே வாழலாம்…” என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் செல்லும் நிலைகள் இல்லை. உடல் பற்றே வருகின்றது. சொர்க்கலோகமாக இருக்கும் இந்த மனித உடலிலிருந்து என்றுமே அழியாத நிலை பெற முயற்சிக்கவில்லை.

ஏனென்றால்
1.சொர்க்கத்தை அடையும் தகுதி பெற்றது தான் இந்த மனித உடல்.
2.கார்த்திகேயா… என்று ஆறாவது அறிவின் துணை கொண்டு உயிருடன் ஒன்றி என்றும் ஒளியின் உடல் பெறுவது தான் சொர்க்கம் என்பது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் (நாம்) செல்லப்படும் பொழுது என்றும் ஒளியின் உடலாக மாறுகின்றது

இந்தச் சூரியக் குடும்பத்திற்குள் பிறந்தது தான் உயிரணு. அந்த உயிரணு பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சியாகி… மனிதனாக ஆன பின் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிச் சென்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.

1.சூரியனிலிருந்து வரக்கூடிய விபத்துக்களோ அல்லது விபரீதங்களோ…
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரக்கூடிய மற்ற எதுவாக இருந்தாலும்
3.துருவ நட்சத்திரம் அந்த விஷங்களை எல்லாம் மாற்றித் தன்னைச் சீர்படுத்தி ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றது.

அது எப்படி அந்த நிலை பெற்றது…?

இந்த மனித உடலில் இருந்து தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.
1.இந்தப் பூமியில் தோன்றிய மனிதர்களில் விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன்
2.துருவத்தில் நிலை கொண்டு “அவன் தான் துருவ நட்சத்திரமாக உள்ளான்…”

நம்மைப் போன்ற மனிதன் தான் அகஸ்தியன்… அவன் துருவ நட்சத்திரமாக ஆனான். ஏன்… நாம் ஆக முடியாதா…?

யானையின் சுவாச அலைகள் பட்டாலே அந்த இடங்கள் எல்லாம் புனிதம் பெறும்

 

யானையை முதல் தெய்வமாக வணங்கும் விநாயகனுக்கு ஒப்பிட்டு யானையை விநாயகராக வணங்குகிறார்கள்.

யானையின் லத்தியை மிதிப்பதும் யானயிடம் குழந்தைகளைத் தந்து வாங்குவதும் பெரியோர்கள் யானையிடம் ஆசீர்வாதம் பெறுவதுவும் எதற்காக…?

ஆண்டவன் ஊர்வலங்களில் யானையை முன் அழைத்துச் செல்கிறார்கள். யானைக்குகந்த சக்தித் திறன் என்ன…?

இருபது மாதங்கள் கர்ப்பத்திலிருந்து சில நூறு ஆண்டுகள் யானைகள் வாழ்கின்றன. யானைக்குச் சில நல்ல குணங்கள் அபரிதமாக அமைந்துள்ளன.
1.யானையின் எண்ணச் சுழற்சியில் தீய ஆவி உள்ள ஆத்மாக்கள் அதன் எண்ண வட்டத்திற்குள் செல்ல முடியாது.
2.மனித உடலிலிருந்து பிரிந்த ஆத்மாக்களின் உயிரணுவும் யானையின் ஈர்ப்புக்குள் சிக்குவதில்லை.
3.யானையின் பிறப்பே தனியான அமில குணத்தை உடைய பிறப்பின் வட்டத்தில் வந்தது.

உயிரணுக்களின் மனித உருவில் உருப்பெற்று மற்ற உயிர் ஜெந்துக்களுக்கு இந்த மனித ஆத்மாக்கள் சென்றாலும் “யானையின் ஈர்ப்புக்குள் செல்ல முடியாது…!”

இந்த அபரிதமான அமில குண ஈர்ப்பினால் ஜீவனான யானையின் நிலை உள்ள இடங்களில் தீய ஆவிகள் அண்டாது. அதற்காகத்தான் யானையை நல் உணர்வின் பக்தி வழிபாட்டு புண்ணியஸ்தலமான கோவில்களில் வைத்து வணங்குகிறார்கள்.

குழந்தைகளை யானையிடம் தந்து வாங்குவதனால் குழந்தைகளுக்கு அதன் சுவாச அமில குணத்தின் சக்தி பெற்று அக்குழந்தையின் மேல் மற்ற தீய அணுக்கள் பரவாமல் இருக்கும்.

யானையின் லத்தியை மிதிக்கின்றார்கள்.
1.அதிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையினால்
2.நம் உடல்களுக்குச் சில ஆரோக்கிய நிலைகள் கூடப் பெறுகின்றன.

முந்தைய காலங்களில் அரசர்களால் எதற்கும் முதலிடமாக யானையை வைத்தது இந்த அடிப்படையில் தான்,,.! எதிரிகளின் தன்மையிலிருந்து ஏவப்படும் பில்லி சூனியம் துர் மந்திரங்கள் இவை எல்லாம் அன்றாண்ட அரசர்கள் காலத்தில் போர்க்களத்தில் யானையை முன் நடத்தி இவர்கள் போருக்குச் சென்றதுவும் இதன் அடிப்படைக் குணத்தில் தான்…!

சூழ்ச்சியில் ஏவப்படும் மந்திரங்களிலிருந்தும் குட்டிச்சாத்தான்கள் பேய் பிசாசு என்கிறார்களே இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் யானையில் ஏறிச் செல்லும் அரசர்கள் காக்கப்படுகின்றனர்.

காலப்போக்கில் மற்ற மிருக இனங்களும் மனித ஆத்மாக்களும் கூடியுள்ள நிலையில் யானையின் பிறப்பு விகிதம் குறைந்ததற்கும் இதுவும் ஒரு காரணம்.

நம் மனித ஆத்மா உடல் இறந்த பிறகு இந்த உடலிலிருந்து பல அணுக்கள் பிறப்பிற்கு வருகின்றன. யானையின் உடல் அமிலத் தன்மை அந்நிலையைப் பெறும் தன்மை குறைவுடையது.

1.யானையின் சுவாச அலைகள் பட்டாலே அந்த இடங்கள் எல்லாம் புனிதம் பெறும்.
2.இதனை மேற்கொள் கொண்டு தான் நம் முன்னோர்கள் யானையைத் தெய்வமாக வணங்கி வந்தனர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோவிலுக்குச் சென்று நாம் எப்படி வழிபடுகின்றோம்…? காவியத் தொகுப்புக்களில் நம் ஞானிகள் எதைக் காட்டியுள்ளார்கள்…? உண்மையான தவம் எது…? எனக்கு இப்படிச் செய்தார்களே, எனக்கு இப்படி இருக்கிறதே என்ற உணர்வின் தன்மை கொண்டு வேதனையைத் தவமாக எடுத்தால் என்ன செய்யும்…?

என்னை அப்படிப் பேசினார்கள்…! அப்படியெல்லாம் உதவி செய்தேன் எனக்கு இப்படியெல்லாம் தொல்லை வந்தது…! என்ற இந்த உணர்வை நீங்கள் சுவாசித்தால் இதுவும் தவம் தான்.

அந்தத் தவமிருந்தால் நம்மை எங்கே அழைத்துச் செல்லும்…?

இந்த உடலின் பற்று கொண்ட உணர்வின் தன்மை கொண்டு நாம் மீண்டும் மறு பிறவிக்கு இழுக்கும் நிலைகளும் நம் ஆசையின் எல்லை எதுவோ இது சாகாக்கலையாக இந்த மனித உடலில் உருவாகி இன்னொரு உடலுக்குள் செல்லs செய்யும்.

இன்னொரு உடலுக்குள் சென்றவுடன் இந்த உடலில் என்னென்ன ஆசைகளை நினைவில் வைத்தோமோ இதே ஆசை புகுந்த உடலுக்குள் அது உருவாக்கி அந்த உடலையும் கெடுத்து அந்த ஆசையை அங்கே தூண்டச் செய்து அதை வீழ்த்த உதவும்.

இது பேயாகச் சென்று இந்த உணர்வின் ஆசைகளை உருவாக்கி இங்கே நோயை உருவாக்கும். பின் அதை வீழ்த்திய பின் உடலை விட்டு வந்த பின் நமக்குள் தீமையின் விளைவே அங்கே உருவாகும்.

மீண்டும் மனிதனல்லாத உருவைத் தான் நம்மைப் பெறச் செய்யும். ஆகவே இதை மாற்ற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

நம்முடைய காவியத் தொகுப்புகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும். ஆலயத்தில் நாம் எவ்வாறு வழிபடுதல் வேண்டும்…? என்று தெரிந்து கொள்தல் நல்லது.

அந்தப் பேருண்மைகள் உணர்த்தியது அனைத்தும் மகரிஷிகள். அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் பின்பற்றி
1.இந்தத் தெய்வ குணத்தை நாம் பெற வேண்டும்
2.மலரைப் போல் மணம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும்,
4.அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்
5.அவர்கள் தொழிகள் வளம் பெற வேண்டும் என்று பிறரை நீங்கள் இந்த முறைப்படி எண்ணினால் போதும்.

இது பக்தி.

நாம் எடுப்பது தியானம். தியானித்து அதை நமக்குள் பெறுகின்றோம். ஆனால் ஆலயத்திற்குள் வரும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று இதைச் சொன்னால் “தவம்…”

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நம்முடைய சொல் அனைத்துமே தவமாக அமைகின்றது. அப்பொழுது தவத்தின் தன்மை என்ன…?

வலிமை கொண்டு சுவாசித்து நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற தவமிருக்கும் பொழுது நமக்கு நன்மை ஏற்படுகின்றது.

“பயிற்சி…” தியானம் மிக மிக முக்கியமானது

 

துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெறுவதற்குண்டான முறைகள் “எத்தனையோ கொடுத்துள்ளோம்…!” பழக்கத்திற்காக வேண்டித் தியானம் எடுக்கவும் சொன்னோம். ஆனால் ஒரு சிலர் “அது எங்களால் எடுக்க முடியவில்லை ஒன்றும் புரியவில்லை…!” என்று சொன்னார்கள்.

ஆகையினால் அந்தச் சக்தி உங்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் (ஞானகுரு) மௌன விரதம் இருந்து கடும் தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நான் உங்களை எண்ணித் தியானிக்கின்றேன்.
1.அப்போது அடிக்கடி நீங்களும் தியானித்தால்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளவும்
3.தீமை என்ற உணர்வு உங்களுக்குள் பரவாது தடுக்கவும்… உங்களைக் காத்துக் கொள்ளவும் இந்தச் சக்தி பயன்படும்.

பெரிய “சாமி” என்ற நிலையில் என்னை நீங்கள் பார்க்கலாம். நான் வாக்குகளாகச் சொல்லும் போது நீங்கள் அதைக் கேட்கலாம் அதன் மூலம் உங்கள் நோய்களும் நீங்கலாம்.. அல்லது கஷ்டங்களும் போகலாம்…!

அடுத்த கணம் அது வராது தடுக்கும் சக்தி “உங்களிடம் இல்லை…” என்றால்
1.என்னைப் பார்த்த பின்… அன்று ஒரு நாளோ அல்லது சில காலமோ வேண்டும் என்றால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம்.
2.அடுத்தடுத்து வரும் மற்ற உணர்வுகளை நுகர்ந்தால் அவைகளின் வலிமை கூடி
3.நான் கொடுத்த வாக்கும் உங்களுக்குள் செயலற்றதாக மாறிவிடும்.

சிறிது காலம் தான் அது இருக்கும். பின் உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ நீங்கள் சந்திக்கின்றீர்கள். வெறுப்பு வேதனை சங்கடம் சஞ்சலம் வேதனை ஆத்திரம் பயம் இது போன்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது எனது வாக்கு எத்தனை நேரம் நிற்கும்…?

சாமியிடம் போனேன்… சந்தோஷம் கிடைத்தது… எனக்கு நல்லதாக ஆனது…! சாமியிடம் சென்றேன்… என் தொழில் நன்றாக ஆனது…! என்று நீங்கள் எண்ணலாம்.
1.ஆனால் நான் கொடுத்த பயிற்சியை மேற்கொண்டு…
2.அதைக் கடைபிடிக்க வேண்டும் அல்லவா…!

சந்தர்ப்பங்கள் வரும் பொழுது தீமைகள் புகாது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… இதை வலு சேர்த்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பழகிக் கொண்ட பின்… அடுத்தடுத்து உங்கள் வாழ்க்கையில் எது நன்மையோ அதைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நீங்கள் கூட்டினால் தீமைகள் புகாது தடுக்கலாம்… அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கலாம்.

சிந்தித்துச் செயல்படும் சக்தியும் பெறலாம்… அறியாது வரும் வேதனையோ கோபமோ சங்கடமோ அது எல்லாம் வராது தடுக்கவும் செய்யலாம்.

ஏனென்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பு வெள்ளியும் எப்படி ஆவியாக மாறிப் பிரிந்து சென்று விடுகின்றதோ அது போன்று
1.தீய வினைகளை நீக்கிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை
2.உங்கள் உடலுக்குள் நீங்கள் அதிகமாகப் பாய்ச்சிப் பழகிக் கொண்டால் தான்
3.தீமைகள் வராது நீங்கள் தடுத்துக் கொள்ள முடியும்.

பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்

 

புண்ணிய ஸ்தலம் என்பது கோவில்கள் தான்…!

1.அந்தப் புண்ணிய ஸ்தலத்தில் உள்ள மூலவர் உருவினிலே
2.அந்த ஸ்தலத்தை நினைத்து எங்கிருந்தாலும் எவன் ஒருவன் வேண்டுகிறானோ
3.அந்நிலைக்கு அவனுக்கு அருள் புரிகின்றான் அந்நிலையில் அமர்ந்துள்ள “மகான்…”

புண்ணியம் எய்தி… பிறந்த பயனை தன் ஜெப நிலையால் தன் நிலையை ஜோதி நிலையாக்கி…
1.அவன் ஸ்தாபிதம் செய்த சிலையில்…
2.தன் ஜீவனை அந்தச் சிலையின் ஜீவனாக்கி…
3.எண்ணுபவர்களுக்கெல்லாம் அவ்வெண்ணத்தின் வழியினிலே வழியமைக்கின்றான் அந்த மகரிஷி ஜோதி நிலையில்…!

ஆண்டவன் என்பவன் யார்…? என்று பல முறை கேட்டுள்ளேன், ஆண்டவன் என்பது இப்பொழுது புரிந்ததா…?

இறப்பும் பிறப்பும் அவனவன் செய்த கர்ம பயனால் வருவது தான்…! எமனும் வரவில்லை… காலதேவனும் வரவில்லை…! என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

அவனவன் பிறப்பையும் இறப்பையும் அவன் வழியில் உள்ள அவனுள்ளே உள்ள சக்தியின் பயனைப் பெற்றுத்தான் பிறக்கின்றான்… இறக்கின்றான்.

சுவாச நிலையில் தான் வியாதிகள் வருகிறது. அவன் வாழ்க்கை முறையில் உள்ள சுவாச நிலையும் அவனுக்கு வித்திட்டு வியாதியைப் பெருக்கச் செய்கிறது.

1.எண்ணத்தின் பயத்தினால் தான் வியாதி முற்றி
2.அச்சுவாச நிலை பெரும் மாறுபட்டு அந்த அழுகும் தன்மையுள்ள உடலில்
3.அவன் உடலில் உள்ள சிறு சிறு நல்ல அணுக்களும் அவனைக் காத்து வந்த நிலையை மாற்றி அந்த அணுக்களும் அழுகி
4.பெரும் வேதனையில் உள்ள அவன் விடும் சுவாச நிலை அவனையே அழிக்கின்றது பெரும் பயத்தினால்..!

அந்த நிலையில் அவ்வுயிர்… அவனுள் இருக்கும் அவ்வுயிர் சலிப்புடன் அவன் உடலை விட்டு ஆவி உலகம் செல்கிறது. அந்த ஆவிகள் தான் (அடுத்த பிறவியாகப் பிறக்கின்றது.

“எண்ணம் போல் வாழ்வு…!” என்றார்கள் பெரியவர்கள். எண்ணத்தின் எண்ணம் எல்லாம் அவன் விடும் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

பெரும் வேதனை உள்ள மனிதன்…
1.தன்னுள் இருக்கும் ஈசனை நினைத்து “ஈஸ்வர தியானம்” செய்து
2.தான் செய்த பாவ புண்ணியங்களை மறந்து…
3.எப்படியும் வாழ வேண்டும்
4.ஒரு நிலையில் வாழ வேண்டும்…
5.உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்… என்று
6.தன் எண்ணத்தினுள்ளேயே எண்ணிக் கொண்டு அவன் விடும் சுவாச நிலைக்கு அந்தச் சக்தியின் அருள் கிட்டுகிறது.

எண்ணத்தில் சலிப்பு வந்தவனுக்கு வாழ்ந்து என்ன பயன்…! என்ற நிலையில் அந்தச் சுவாசத்தை எடுத்துச் சுற்றுபவனுக்கு அந்த எண்ணமே தான் சுற்றுகிறது அவன் உடலில்.

அந்த எண்ணம் போல் தான் அவன் விடும் சுவாச நிலையில் சுற்றுகிறது அவன் எண்ணம். அந்நிலையே தான் அவனுக்கும் வருகிறது.

எண்ணத்தில்தான் குழந்தை பிறப்பிலிருந்து அதன் எல்லா நிலைகளிலுமே எண்ண வடிவில்தான் அதன் வாழ்க்கையே அமைகிறது.

முடிவில்லா இந்த உலகில்… முடிவில்லா உடலுடன்… “மூவுலகை ஆட்டி வைக்கும் அச்சக்தியைப் பெற்றிட…” இந்த உலகில் உதித்த ஒவ்வொரு உயிரும் காலம் சுற்றும் நிலை போல் அந்நிலை எய்திட முடியும்.

பல பிறவிகள் மாறுபட்டு ஆவி உலகில் படும் அவஸ்தையிலிருந்து விடுபட்டு… ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்திடலாம்… வாழ்ந்திடலாம்.. பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.

முடிவில்லா உலகைப் போலவே முடிவில்லாமல் வாழ்ந்திடலாம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” – தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு பித்தனைப் போன்று உலகெங்கிலும் சுற்றி வந்தவர்.

உலகிலுள்ள சாங்கிய நிலைகளைத் தனக்குள் கண்டுணர்ந்து சாங்கியத்தால் பெற்ற தீமைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்ற உணர்வினைத் தனக்குள் பதியச் செய்து கொண்டார்.

1.விண்ணுலக ஆற்றலைப் பெற்றுணர்ந்த நமது குருநாதர்
2.அந்த உண்மைகள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான்
3.பித்தனைப் போன்று பல காலம் பல நிலைகளிலும் சுழன்று வந்தார்.

என் (ஞானகுரு) தாய் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் அக்காலங்களில் அவருடைய சுழற்சியின் வேகச் சுழல்களில் வரப்படும் போதுதான் என் தாயிற்குக் குருவின் ஆசியும் கிடைத்தது.

அதன் வழிகளிலே தான்…
ஈஸ்வரபட்டர்:-
1.நீ உன் தாயின் கருவில் இருக்கப்படும் பொழுது பூர்வத்தில் பதிந்த உணர்வுகள்
2.வேதனைகளிலிருந்து உன் அன்னை மீண்டிடும் நிலைகள் கொண்டு ஏக்கத்தால் ஏங்கிக் கொண்டிருந்த அத்தருணம்…
3.நான் உன் தாயைச் சந்திக்கும் சந்தர்ப்பமும்… அதற்கு ஆசி கூறும் நிலைகளும் ஏற்பட்டது.
4.அதன் வழிகளிலே பெற்ற ஆசிதான் அதனுள் வளர்ந்து வளர்ந்து
5.நீ எத்தகைய இன்னலிலிருந்தும் உன்னை மீட்டிடும் “எனது உணர்வே உன்னில் வேலை செய்தது…!” என்றார் குருநாதர்.
5.அதனால் பல இன்னல்களிலிருந்து மீளவும் உண்மைப் பொருளை அறிந்திடவும் உனக்குள் நீ அனுபவரீதியிலே பெறும் தகுதியைப் பெற்றாய்.
6.அதன் தொடர் வரிசையிலே தான் பழனியம்பதியில் உன்னை நான் நெருங்கி வந்தேன்.
7.உன்னை என்னுடன் இணைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளில் நீ சிக்காது தப்பினாலும்
8.நான் உன்னை விடவில்லை… உன்னை அணுகினேன் என்று தெளிவுபடுத்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஆனால் ஆரம்பத்தில் பித்தராக அவரைக் கண்டதால் “நான் எனக்கு எதுவும் வேண்டாம் ஆளை விட்டால் போதும்….” என்ற நிலைகளில் குருநாதரிடமிருந்து விலகிச் சென்று கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் என் மனைவி கடும் நோயால் (டி.பி.) பாதிக்கப்பட்டார்.

இதனின் தொடர் வரிசையில் தான் நான் உன்னை அணுகி வந்தேன் என்றார் குருநாதர்.

உனது மனைவியின் நோய்… தீராத நிலைகளில் இருப்பினும் அதைத் தீர்க்கும் நிலைகளுக்கு உன்னை நான் அணுகி எலுமிச்சம்பழத்தையும், திருநீறையும் கொடுத்து அதைக் காக்கும் நிலைக்குச் செயல்படுத்தினேன்.

1.உனது மனைவி நோயிலிருந்து எழுந்தபின் உன்னை நம்பும்படிச் செய்து
2.என்னுடன் அழைத்துக் கொண்டேன் என்ற நிலையினை பின்னாளில் குருநாதர் எனக்குத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

ஒவ்வொரு உண்மையின் நிலையையும் குருநாதர் உணரும்படிச் செய்தார். இன்று இதையெல்லாம் நீங்கள் அமர்ந்து கேட்கிறீர்கள். ஆனால், நான் (ஞானகுரு) காடு மேடெல்லாம் அலைந்து திரிந்துதான் தெரிந்து கொண்டேன்.

காட்டுக்குள் செல்லும் பொழுது பல விலங்குகள் ஒன்றுக்கொன்று தன்னைத் தற்காத்துக் கொள்ள எவ்வளவு இம்சைகள் படுகிறது…? அதன் வழியில் மிருகங்கள் மற்ற உயிரினங்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகின்றது…? என்ற நிலையை அங்கே காட்டுக்குள் சென்று காட்டினார் குருநாதர்.

அதன் வளர்ச்சியில் மனிதனான பின்
1.தனது வாழ்க்கையில் செல்வத்தில் பல வகையில் செழித்திருந்தாலும் பிறருடைய சாபக்கேடுகளில் சிக்கப்பட்டு அவர்கள் எவ்வாறு நலிகின்றனர்…?
2.தான் சேர்த்து வைத்த செல்வத்தால் தன்னைக் காக்க முடியாது பல இன்னல்களில் எவ்வாறு சுழன்று கொண்டுள்ளார்கள்…?
3.தவறு செய்யவில்லை என்றாலும் சாப உணர்வுகள் எவ்வாறு அவர்களைத் தாக்குகின்றது…?
4.அது பின் தொடர்ந்து அவர்களுக்குள் எவ்வாறு விளைகிறது…? என்றும் தெளிவுபடுத்திக் காட்டுகின்றார் குருநாதர்.

நீ உன் தாயின் கருவிலிருக்கப்படும் பொழுது உன் தாய் தீமைகளிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது. அந்த ஏக்கத் தொடரில் நான் கொடுத்த ஆசீர்வாதம் (உனக்குள்) கருவிற்குள் பூர்வ புண்ணியமாக அமைந்தது.

அதனின் வளர்ச்சியின் தொடரில் நீ மெய்ஞானத்தைப் பெறுகின்றாய்.

இதைப் போல ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவர்கள் தவறே செய்யவில்லை என்றாலும் மற்றவர்கள் ஒருவருக்கொருவர் சாபமிடும் பொழுது அதனை உற்று நோக்கும் பொழுது கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அது அமைகின்றது.

தாய் வேடிக்கைதான் பார்த்தது. ஆனால் யாரையோ ஏசிப் பேசி சாபமிட்ட உணர்வுகள் அதைத் தாய் கேட்டறியும் பொழுது அந்த உணர்வுகள் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிடுகிறது.

சாபமிட்ட உணர்வுகள் எந்த வயதில் அவர்கள் இட்டார்களோ அதன் தொடர் வரிசையில் குழந்தைக்கு அந்த வயதில் விளைந்து விடுகின்றது.

அப்பொழுது தவறு இல்லாமலே தவறின் நிலைகள் அவர்களின் வாழ்க்கையில் இயங்கி அதனால் எத்தகைய நிலைகளில் அல்லல்படுகின்றார்கள்…? என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றார் குருநாதர்.

இதைப் போல தனது வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தாய்மார்களும் பிறர் மேல் அன்பு கொண்டு பலருக்குப் பல உதவிகள் செய்தாலும் பிறர்படும் கஷ்டங்களையும் துயரங்களையும் கேட்டறியும் பொழுது அது கருவிலிருக்கும் குழந்தைக்குள் எவ்வாறு பதிவாகின்றது…?

ஒருவர் தாயை ஏசிப் பேசிய அந்த தீமையின் விளைவுகளை செய்து கொண்டிருக்கப்படும் பொழுது ஒரு கர்ப்பிணி உற்றுப் பார்த்தால்…
1.அவர்கள் செய்யும் தீமைகளே கருவிலிருக்கும் குழந்தைக்குள் பதிவாகிவிடுகின்றது.
2.அதனால் குழந்தை வளரும் பருவத்தில் தாய்க்கு எதிரியாக அது உருப்பெறுகிறது.
3.அதனின் வளரும் பருவத்தில் அந்தக் குழந்தை அதே தீமையைச் செய்யும் நிலை வருகின்றது.
4.ஆனால் கருவிலே வளரும் பொழுது அந்தக் குழந்தை தெரிந்து செயல்படுத்தவில்லை.

இதைப் போன்ற நிலைகள் எவ்வாறெல்லாம் உருவாகின்றது…? என்ற நிலைகளைத் தெளிவாக எமக்கு உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இனி நமக்கு இந்த உடல் தேவை இல்லை… உணர்வின் “ஒளியே போதுமானது”

 

உயிரியல் தத்துவத்தில் நமது உயிர் நுகர்ந்த உணர்வை அணுக்களாக மாற்றுகிறது. அணுவின் மலம் நம் உடலாகி உணர்வின் அறிவாக நம்மை இயக்கச் செய்கின்றது.

உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து எத்தனையோ உடல்களைக் கடந்து மனிதனாக வந்த நாம் இன்று விஷத்தன்மை கொண்ட உலகில் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
1.இந்தப் பிரபஞ்சமே இந்தச் சூரியனே விஷத்தன்மையால்… விஞ்ஞானத்தின் கதிரியக்கத் தன்மையால்
2.சீக்கிரம் அழியப் போகின்றது… திசை மாறப் போகின்றது.
3.வாழும் இந்தக் குறுகிய காலத்தில்… சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்…
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களுக்குள் நல்ல சிந்தனைகள் வரும்
5.கஷ்டங்களை எண்ணாதீர்கள்… உடலில் வேதனையோ நோயோ இருந்தால் அதை மறந்து விடுங்கள்
6.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்று இந்த ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

வீட்டிலே பூஜை அறையிலையோ அல்லது இருக்கும் மற்ற இடங்களிலோ இது போன்று செயல்படுத்திப் பாருங்கள்.

உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வதற்கு எம்முடைய (ஞானகுரு) உபதேசங்களைக் கேட்டும் படித்தும் வாருங்கள். அடிக்கடி அதை ஞாபகப்படுத்திக் கொண்டே வாருங்கள். அருள் சக்திகள் உங்களுக்குள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். தீமைகளை அகற்ற முடியும்.

கஷ்டம் என்ற வார்த்தையைத் தூக்கி எறிந்து விடுங்கள்…!

1.“யார்…” எந்த நிலையில் இருந்தாலும் கூட இந்த உடலுடன் இருப்பவர் யாரும் இல்லை
2.உடலுக்காக வேண்டி வேதனைப் பட வேண்டிய அவசியமும் இல்லை.
3.இந்த உடலிலிருந்து வேதனையை நீக்கிவிட்டு வேதனை நீக்கிடும் அருள் சக்தியைப் பெற்றால் தான்
4.உலகில் வரக்கக்கூடிய விஷத்தன்மைகளை நீக்க முடியும்.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பல உயிரினங்களை உணவாக உட்கொண்டு அதிலுள்ள விஷத்தையும் சேர்த்து எப்படி நாகரத்தினமாக மாற்றுகின்றதோ அதே போன்று தான் அகஸ்தியன் அகண்ட அண்டத்தில் வரும் இருளை வென்று… உணர்வை ஒளியாக மாற்றி… ஒளிச் சரீரமாக ஆனான்.

அந்த அகஸ்தியனின் உணர்வுகளை எடுத்து நம் உடலில் வளர்ப்போம்.
1.இனி நமக்கு இந்த உடல் தேவை இல்லை
2.உணர்வின் ஒளியே போதுமானது
3.உயிருடன் ஒன்றி… அவனுடன் அவனாக வாழ்வதே கடைசி நிலை.

அகண்ட அண்டத்தில் எத்தகைய பிரளயங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரமும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழிவதில்லை.

சூரியன் ஒரு காலம் அழியலாம்… அப்படி அழியும் காலம் வந்துவிட்டது. அழிந்து… இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது பூமியில் வாழும் மனிதனின் நிலையும் செயலற்றாக மாறிவிடும்.

“அதற்கு முன் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றடைய வேண்டும்…!”

ஒரு சாரார் கடவுளே இல்லை என்கிறார்கள்… எல்லாமே கடவுள் தான் என்பவர்களோ “தன்னுள் தான் அவன் உள்ளான்…” என்பதை மறந்து விட்டனர்

 

நீ வணங்கும்
1.முருகா என்னும் போகரும்…
2.ஈஸ்வரா என்னும் ஈஸ்வரபட்டரும்…
3.வெங்கடாஜலபதி என்னும் பாலாஜி உருவில் வந்த பல கோடி நாமங்கள் பெற்றிட்ட கொங்கணவரும்…
4.கொங்கண மகாதேவரும்… சித்தர்களும் ஞானிகளும்…
5.உன் அறிவுக்கு எட்டாத இந்த உலகில் எல்லாப் பாகங்களிலும் தோன்றி இந்நிலையில் இருக்கும் சித்தாதி சித்தர்களும் ஞானாதி ஞானியர்களும்
6.ஞான ரிஷிகளும் சப்தரிஷிகளும் அருள் சக்தி பெற்று சூட்சம உலகில் ஒளியாக வாழுபவர்கள் தான்…!

அவர்களின் நல் உபதேசத்தைப் பெற்றவர்கள் மற்றவர்கள் நிலைக்குப் புரிந்திடச் செய்திடாமல் சில உபதேசங்களை மட்டுமே மனிதர்களுக்குப் புகட்டினர்.

1.உண்மையின் உயிர் இரகசியத்தை இந்த உலக மக்களுக்குப் புரிந்திடச் செய்யாமல்
2.ஒருவர் எழுதியதைப் பிறிதொருவர் மாற்றி எழுதி
3.தன் தன் ஜீவ வழிக்குப் பொருள் பெற்றிட
4.உலகத் தன்மையையே மறைத்துவிட்டார்கள்… மாற்றிவிட்டார்கள்.

ஜெப நிலை (தியானம்) என்றாலே பெரும் கடினமானது…! என்றும் எல்லோராலும் அதைப் பெற்றிட முடியாது…! என்ற ஒரு கடினத் தன்மையை மனிதர்களின் மனதிலே ஊன்றச் செய்து விட்டனர்.

சாதாரண வாழ்க்கை வாழும் மனிதனால் அது சாத்தியமில்லை என்ற அளவுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

ஆண்டவன் என்றாலே “யார்” என்று புரியாத நிலையில் தெருவின் மூலைக்கும் ஆற்றுப் படுகையின் படிகளில் எல்லாம் அரச மரத்தை நட்டு விநாயகர் என்ற உருவத்தைப் பதித்து
1.அரச மரத்தைச் சுற்றினால்
2.அருள் பெற்றிடுவாய் என்ற வேதத்தை ஊன்றிவிட்டார்கள்.

கடவுள் என்றாலே கல் தான்…! கல் என்ன செய்யும்..? என்ற நிலையில் கடவுள் இல்லை…! என்று ஒரு சாரார் நம்பும்படிச் செய்து விட்டார்கள்.
1.கடவுளைச் சென்று வேண்டுபவர்களும்
2.தன்னுள் தான் கடவுள் உள்ளான்…! என்பதை மறந்து விட்டனர்.

முருகனுக்கு இரண்டு மனைவிகள் மூத்தவள் வெள்ளை இளையவள் கருப்பு. முருகனுக்கே இரண்டு மனைவிகள் உள்ள பொழுது எனக்கு மட்டும் ஏன் தடை…! என்ற வாதங்களைப் பல ரூபத்தில் எழுப்பிக் கொண்டுதான் அந்தக் கடவுளையே வேண்டுகிறார்கள்.

தன்னுள் இருக்கும் கடவுளையே மறந்து அவன் முன்னோர்கள் கதை கட்டிய கடவுளைத் தான் வணங்குகிறார்கள்… தன் வழிக்கு உகந்தபடி புரிகிறதா…?

1.முருகனின் மூவுலக அருளையே மறந்து.. அவன் உருவில் உள்ள ஆறு குணங்களையும் மறந்து…
2.முருகனுக்குப் போகரின் வழியில் அளித்திட்ட உருவ அமைப்பையே
3.எந்நிலைக்கு அந்த உருவை அப்போகர் நிறுவினார்…? என்ற நிலையையே மறந்து…
4.தன் வழிக்குப் பல கதைகளைச் சொல்லித் தெருத் தெருவாக முருகன் கதையைப் பெரும் கூத்தாக்கிவிட்டார்கள்.
5.இக்கலியில் வந்த – இக்கலியின் மனிதர்கள்…

“இவர்கள் நிலையே இவர்களுக்குப் புரியவில்லை…!” அழியும் உடல்… அழியும் உடல்… என்கிறார்கள். அழியும் உடலல்ல இவ்வாண்டவன் அருளிட்ட இந்த உடல் எல்லாம்.

உலகத் தன்மை அழிவதில்லை. பல நிலைகளைத் தான் இந்த உலகம் பெறுகிறது. உலக நிலையில் மாறுபட்டு மாறுபட்டுச் சுற்றிக் கொண்டே வருகிறது உலகம்.
1.உலகம் என்றென்றும் அழிவதில்லை…
2.காலங்கள் தான் அழிகின்றன… கால நிலைகள் அழிகின்றன.

அழியாத இந்த உலகம் பல அவதாரங்களை மாற்றிக் கொண்டே முதலில் ஆரம்பித்த நிலைக்கே வருகிறது. பிறகும் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டே சுற்றிக் கொண்டு வருகிறது.

அச்சூரியன் நிலை என்று அஸ்தமிக்கின்றதோ அன்று தான் இந்த உலகம் அழியும்… உயிரணுக்களும் அழியும்… மனிதனும் அழிவான்…!

சுவாச நிலை என்ன…? என்று ஒவ்வொரு மனிதனும் புரிந்திட்டால் இவ்வுயிருடனே என்றுமே அழியாத நிலையில் வாழலாம்.

அதற்குத்தான் இந்தப் பாட நிலைகள் எல்லாமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.தீமைகளை வென்ற வலிமையான சக்தியை
2.இந்த மனித வாழ்க்கையில் நாம் எடுப்பதற்காக வேண்டித்தான் “சுக்ரீவன்” என்று அதைக் காட்டுகின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை (சுக்ரீவன்) நாம் நுகர்ந்து வலிமைமிக்க விஷத்தை அடக்குதல் வேண்டும். ஆகவே, வாலியை அடக்கினான். இதுவும் சீதாலட்சுமி தான்.

மனிதன் வேதனைப்படும் பொழுது அந்த வேதனையின் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் சீதா லட்சுமி ஆகின்றது.

அதே சமயத்தில் மனிதனில் தீமைகளை வென்றவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உள்ளான். அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி அலைகளையும் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் ஒளி அலைகளையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக நம் பூமியில் பரவச் செய்கிறது.

அப்படிப் பரவி வருவதை நாம் கவர்ந்து நம் எண்ணத்தால் எண்ணினால் சுக்ரீவன். அவன் உணர்வின் தன்மை கொண்டு அதை நாம் நுகரும் பொழுது அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அந்த உணர்ச்சிகள் நமக்குள் ஊடுருவி அந்த நஞ்சு கொண்ட உணர்வை அடக்குகின்றது.

அதைத்தான் சுக்ரீவன் துணை கொண்டு இராமன் வாலியை அடக்கினான் என்று காட்டப்பட்டது. ஏனென்றால், வாலி அண்ணன் சுக்ரீவன் தம்பி.
1.முதலில் விஷத்தின் இயக்கத்தால் தொடர்ந்து வந்தவன் தான் அண்ணன்.
2.ஆக மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக்கிய பின்… பின்னாடி பிறந்தது தான் ஒளி.
3.விஷத்தின் இயக்கத்தை வாலி என்றும் விஷத்தை அடக்கிய சக்தியைச் சுக்ரீவன் என்றும்
4.இவ்வளவு தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார்கள்.

அதனால்தான் வாலியையும் சுக்ரீவனையும் சகோதரர்கள் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இஞ்செக்சன் செய்வது போல் நம் உடலுக்குள் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

 

வேதனை என்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது நம் நல்ல அணுக்களில் பட்டு உறுப்புகளில் கடுமையான நோய்கள் வருகிறது.

அதை மாற்றிட துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
நம் உடல் உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை உள்ளே செலுத்தினால்
2.ஒரு இன்ஜெக்சன் செய்த மாதிரி இந்த உணர்வு சீக்கிரம் ஊடுருவி
3.நாளுக்கு நாள் அந்த அணுக்கள் வலுப்பெற உங்கள் உடலில் உள்ள நோய்களும் குறையும்.

உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்திற்குச் செல்லும். சிந்திக்கும் ஆற்றல் வரும்… உயர்ந்த பண்புகள் வரும்… கோபத்தைத் தவிர்க்கும்… ஆத்திரத்தைத் தவிர்க்கும்… வேதனையைத் தவிர்க்கும்… அருள் வழியில் உங்களால் வாழ முடியும்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை விட விட அழுக்குத் தண்ணீரும் சிறுகச் சிறுக நல்ல நீராக மாறுவது போல் நம்மை அறியாது சேர்ந்த தீமைகள் குறையத் தொடங்கும்.

எத்தகைய தீமைகளும் புகாதபடி நீங்கள் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால்…
1.எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் உருவாக்கும்.
2.எந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணி வளர்க்கின்றோமோ அங்கே அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.

ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மற்றவர்களுக்கும் இந்தப் பயிற்சியை எடுத்துக் கூறுங்கள்.

அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க உங்கள் வீடுகளில் அற்புதமான வாசனைகள் வரும்… மகிழ்ச்சியான உணர்வுகள் பெருகும். உற்சாகமும் வரும்…!

ஒவ்வொரு உயிரும் கடவுள்… உயிர் வீற்றிருக்கும் உடல் ஆலயம் என்ற நிலைகள் கொண்டு அதைத் தான் நான் (ஞானகுரு) பிரார்த்திக்கின்றேன்.
1.அதன் வழி நீங்கள் வளர நல்ல உணர்வுகள் பெருக
2.உங்கள் மூச்சலைகள் காற்றிலே பரவ
3.காற்று மண்டலம் புனிதம் பெற
4.உலக மக்கள் நலமும் வளமும் பெற இது உதவும்.

27 நட்சத்திரங்கள் 27 விதமான உணர்வுகள் பரப்பப்படும் பொழுது மின்னலாகப் பாய்கிறது… தூசிகளாகப் படர்கிறது.

இதிலே ஏதாவது ஒரு நட்சத்திரம் அதிகமான நிலைகள் துருவத்தின் வழி கவரப்பட்டுப் பூமிக்குள் நுழைந்து விட்டால் காற்று அழுத்த மண்டலத்திலே துகள்கள் அதிகரிக்கின்றது.

அப்படி அதிகரிக்கப்படும் பொழுது மற்ற நட்சத்திரங்களின் தூசுகளுடன் கலந்தவுடன் எதிர்மறையாகிப் பெரும் சூறாவளியாக சுழல் காற்றாக வந்து விடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் உருவானது. நாளுக்கு நாள் இது அதிகரிக்கும் போது அதிலிருந்தெல்லாம் தப்ப வேண்டும். தப்புவதற்குத் தான் மிக மிக வலிமை மிக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எடுக்கும் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.