பிரபஞ்சத்தில் உருவாக்கிய உயிரணுக்கள் அனைத்தும் “நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையட்டும்…”

பிரபஞ்சத்தில் உருவாக்கிய உயிரணுக்கள் அனைத்தும் “நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையட்டும்…”

 

இன்றைய சூழ்நிலையில் இந்தப் பிரபஞ்சமும் சரி… நமது சூரியனும் சரி… நம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களிலும் விஷத் தன்மைகள் அதிகமாகப் பரவி…
1.ஏன் நம் உடல்களிலும் அது பரவி… பூமிக்குள்ளும் இது பரவி…
2.பெரும் கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் உருகும் தன்மை கொண்டு சிதறும் தன்மை கொண்டே வருகின்றது. எந்தெந்தப் பூமிகளில் இந்தக் கதிரியக்கங்கள் அதிகமாகின்றதோ… அதனால் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களுக்குள் வெப்பம் அதிகமாகி உருகி விட்டால் அவைகள் சிதறிவிடும்.

அது சிதறி விட்டால் நம் பூமிக்குக் கிடைக்கும் நல்ல சக்திகளும் சிதறிவிடும்.

ஒரு சமயம் அகஸ்தியன்…
1.இந்தப் பூமி நீண்ட நிலையில் நீள வடிவில் வளரும் பொழுது
2.அதை இலேசாகத் திசை திருப்பி ஒரு பக்கம் எடை கூடிக் கவிழாது மாற்றி அமைத்தான்…
3.பூமியைச் சமப்படுத்தினான் ஒரு அகஸ்தியன்.
4.ஆனால் இன்று நாம் பல அகஸ்தியர்களை உருவாக்க வேண்டும்.

கடும் விஷத்தன்மை கொண்ட கதிரியக்கப் பொறிகள் நம் பூமியிலே பரவிக் கொண்டிருப்பதை அகற்றும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும். அத்தகைய ஞானிகளை நாம் உருவாக்குதல் வேண்டும். உருவாக்கினால் இயற்கையிலே அது விளையத் தொடங்கிவிடுகிறது.

நாட்டைக் காத்திடும் நிலையாக… மக்களைக் காத்திடும் நிலையாக… உலகைக் காத்திடும் நிலையாக… பிறவி இல்லா நிலை அடையும் அந்தச் சக்தி பெற
1.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தப் பிரபஞ்சம் நீண்ட நாள் இயக்க வேண்டும்
2.நம் பிரபஞ்சத்தில் உருவாக்கிய உயிரணுக்கள் அனைத்தும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

ஏனென்றால் ஒரு பிரபஞ்சம் ஒளியின் உணர்வானது. அதில் தோன்றிய உயிர் எல்லாவற்றையும் அறியும் தன்மையானது. உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது தான் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

தீயிலே குதித்தால் உயிர் வேகுவது இல்லை. உடலின் உணர்வுகள் கருகிவிட்டால் கருகிய உணர்வு கொண்ட அடுத்த உடலைப் பெறுகின்றோம். காரணம் உயிர் வேகாநிலை… உடல் சாகாக்கலை…! இன்று நாம் எந்த வேதனையை எடுக்கின்றோமோ சாகக்கலையாக அடுத்த உடலாக மாற்றிவிடும்.

ஆகவே நாம் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். வேகா நிலை அடைதல் வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்திலும்… சரி அகண்ட அண்டத்திலும் சரி…
1.இந்த உயிர் எதிலுமே அழிந்திடாது அருள் உணர்வு கொண்டு விஷத்தை ஒளியாக மாற்றி
2.என்றும் ஏகாந்த நிலையாக வாழும் சக்தியை இந்த மனித உடலிலிருந்து தான் பெற வேண்டும்.

ஆகவே… மறவாதீர்கள் உங்கள் உயிரை…!

1.மனிதனாக்கியது உயிர்
2.மனித உடலை உருவாக்கியது உயிர்
3.அனைத்தையும் தெரிந்து கொண்ட உணர்வைப் பெற்றதும் உயிர்,
4.ஆகவே அவன் நமக்குள் இருக்க அவன் துணை கொண்டே நாம் ஞானிகளுடைய அருள் உணர்வைப் பெறுவோம்
5.நம் உடலில் சேரும் அழுக்குகளை மாற்றிப் பேரருளைப் பெறுவோம்.

உங்களுடைய நினைவாற்றல் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தினால் உங்களுக்கும் நல்லது… ஊருக்கும் நல்லது… உலகுக்கும் நல்லது…!

அகஸ்தியன் தாய் கருவிலேயே எப்படி உயர்ந்த சக்திகளைப் பெற்றானோ அதைப் போன்ற ஞானிகளை உருவாக்கினால் இந்த உலகில் வரும் கடுமையான தீமையிலிருந்து விடுபடவும்… நம்மைக் காக்கவும்… நாம் பிறவி இல்லாத நிலை அடையவும் முடியும்.

ஆகவே பல அகஸ்தியர்களை நாம் உருவாக்குவோம்…!

Leave a Reply