ஜீவித செடிகள்

ஜீவித செடிகள்

 

மனிதனுடைய தசைகள் பட்ட பின் புதுப் புதுத் தாவர இனங்கள் விளைகின்றது. முந்தைய நிலைகளில் உருவான தாவர இனங்களை மலைப்பகுதியில் பார்க்கின்றோம்.

மனிதன் வாழ்ந்த… அவன் மடிந்த…
1.அவனுக்குள் விழுதுகள் பாய்ச்சிய உணர்வின் செடிகள் வரப்படும் பொழுது
2.மனிதனைக் காத்திடும் உணர்வாக தாவரங்கள் விளைந்தது – சில.

அப்படிக் காத்திடும் செடி கொடிகளாக வளரப்படும் பொழுது மனிதன் அதைப் பக்குவப்படுத்திச் சில நிலைகளைச் செய்யப்படும் பொழுது
1.உடலில் உள்ள விஷத்தன்மையைத் தன் மணத்தால் கவர்ந்திடும் அந்த தாவர இனத்தை
2.உடலில் உள்ள (நோய்களை) ஜீவனுள்ளதை மடியச் செய்து
3.அந்த மனிதனின் தீமையை விளைவிக்கும் உணர்வுகளைக் கவர்ந்து விடுகிறது.

அதாவது அத்தகைய தாவர இனச் சத்தை இவன் உடலிலே மூலமாகப் பூசப்படும் பொழுது அல்லது மணத்தால் நுகரச் செய்யப்படும் பொழுது அந்த உடலில் உள்ள தீமைகளை மாற்றிடச் செய்கின்றது.

குருநாதர் இதையெல்லாம் அனுபவரீதியாகக் குருநாதர் காட்டுகின்றார் உங்களுக்கு அதைத் தெளிவாக்குகின்றேன் (ஞானகுரு).

இப்படிப் பல கோடிச் சரீரங்களைக் கடந்து ஒவ்வொரு சரீரத்திலும் தசைகள் ஆனபின் இதிலே பல அணுக்களின் தன்மை அடைந்த பின் அந்த அணுக்கள் மடிந்த பின் சூரியன் அதையெல்லாம் எடுத்து வைத்துக் கொள்கின்றது.

உடலில் விளைந்த ஜீவணுக்கள் வெளியேறினாலும்…
1.அந்த அணுக்களின் தன்மை மற்ற தாவரங்களுடன் கலந்து
2.பல விதமான ஜீவித செடிகளாக மாற்றுகின்றது

தொட்டால் வாடி என்ற செடிகளைப் பார்த்தால் மனிதன் கை பட்டால் வாடும். தொட்டால் சிணுங்கி என்றால் தொட்டவுடன் அதிலிருந்து நீர் வடியும். மனிதன் அழுவதைப் போன்று அது அழுக ஆரம்பித்துவிடும்.

அதற்குள் இருக்கும் மாறுபட்ட நிலைகளில் மனிதன் ஸ்பரிசம் பட்டால் அது உடனே அழுக ஆரம்பிக்கின்றது.
1.மனிதன் துன்பப்பட்ட சில நிலைகள்…
2.காடுகளில் அவன் வேதனைப்பட்டு எத்தனை நிலைகள் கொண்டு அங்கே அழுதானோ
3.அத்தகைய உணர்வின் சத்துகள் தாவர இனங்களில் கலந்தபின்
4.அதிலே உருப்பெற்று ஒரு செடி கருவாகி வந்திருந்தால்
5.மனிதன் இதைப் தொட்டால் அது சிணுங்கி தண்ணீர் வடிகின்றது.

இப்படி பல விதமான நிலைகள் காடுகளில் உண்டு.

சில செடி கொடிகளை குருநாதர் காட்டுகின்றார். மனிதனின் கை பட்டவுடனேயே இரத்தக் கலராக அந்தச் செடி சிவப்பாக மாறுகின்றது.

பல கோடிச் சரீரங்கள் தாண்டி மனிதன் வந்தபின் இவனின் நிலைகள் இப்படி மாற்றப்பட்டு “ஒவ்வொரு தாவர இனங்களும் உருமாறுகின்றது…”

தாவரங்களை உணவாக உட்கொண்டது.
1.அதை ஜீவ அணுக்களாக உருவாக்கி அந்த உணர்வுக்கொப்ப
2.அந்த மணத்தின் தன்மை கொண்டு உடலானது.
3.பின் அதனின் உணர்வுகள் எப்படி மாறுபட்டது என்ற நிலையை தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

Leave a Reply