மகரிஷிகளின் அருள் சக்திகளை உள் நுகர்ந்து… உள் புகுத்த வேண்டும்…! – பிராணாயாமம்

மகரிஷிகளின் அருள் சக்திகளை உள் நுகர்ந்து… உள் புகுத்த வேண்டும்…! – பிராணாயாமம்

 

அன்றாட வாழ்க்கையில் நாம் பல பல கஷ்டங்களைக் கேட்டு உணர்ந்தாலும் அவை எல்லாம் நம் ஆன்மாவில் முன் வந்து விடுகின்றது. சுவாசிக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை சங்கடமோ சலிப்போ வெறுப்போ கோபமோ வேதனையோ அனைத்தும் வருகின்றது.

இதையெல்லாம் மாற்றி அமைக்கும் தன்மை தான் ஒன்பதாவது நிலையான கடவுளின் அவதாரம் நரசிம்மா என்பது.

எதையுமே சிருஷ்டிக்கும் பண்பு பெற்றது தான் மனிதனின் ஆறாவது அறிவு.
1.உருவாக்கும் தன்மை பெற்ற இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து
3.நாம் உள் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் புகுத்தி
4.நமக்குள் தீமை புகாது பிளத்தல் வேண்டும்… நரசிம்மா…!

தனது வலிமையின் தன்மை கொண்டு சாக்கடையை வராகன் எப்படிப் பிளந்ததோ நல்ல உணர்வை எப்படி உணவாக எடுத்ததோ அதைப் போல ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையைப் பிளந்து தனக்குள் ஒளியாகச் சிருஷ்டித்துக் கொண்ட அந்த மகரிஷியின் உணர்வுகளை நாம் நுகர்ந்திடல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி… “உள் நுகர்ந்து”
2.அதனின் துணை கொண்டு தீமைகள் புகாது தடுத்து
3.நமக்குள் புகக் காத்திருக்கும் அந்தத் தீமையான உணர்வைப் பிளந்து
4.முந்திய நிலையில் புகுந்த தீமைகளையும் அகற்ற வேண்டும்
5.தீமை அகற்றிடும் உணர்வின் தன்மையாக நமக்குள் விளைந்திடல் வேண்டும்.

இந்த உடலை விட்டு நாம் எப்போது… எந்த நேரம் அகன்றாலும்
1.எந்த உடலும் நம்மை இழுத்து விடாது… எதிலும் சிக்காது…
2.எந்த ஞானியின் பால் நம்முடைய கூர்மை சென்றதோ… அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாம் அங்கே நிலை கொள்ள முடியும்.

இது தான் பத்தாவது நிலை தசமி.

வாழும்போது நாம் பிறருக்குத் தீங்கு செய்யவில்லை என்றாலும் கேட்டுணர்ந்த தீமைகள் அதிகமாகி… அதிகமாகி… அதே சமயத்தில் அதிகமான பின்… அதிலிருந்து விடுபட நமக்கு எவர் ஒருவர் உதவி செய்கின்றாரோ அவரின் நினைவே கடைசியில் வரும்.

மகராசன்…! நான் துயரப்படும் நேரத்தில் எல்லாம் எனக்கு நல்லதைச் செய்தான். அவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்…? என்று அவரின் எண்ணத்தைக் கூர்மையாக எண்ணி அதனின் வலுவை நமக்குள் சேர்த்து விட்டால் அவர் இறந்த பின் அவர் உடலுக்குள் தான் புக முடியும்.

1.இந்த உடலில் உருவான நோயான உணர்வின் துணை கொண்டு
2.அவரின் ஈர்ப்புக்குள் சென்று அந்த இனமாக இணைத்து
3.அந்த எல்லைக்குள் நம் உடலில் வந்த தீமைகளை உருவாக்கி
4.நமக்கு உதவி செய்தவரையும் தீமையின் நிலைகளிலேயே அழித்து
5.நமக்கு நல்ல இருப்பிடம் இல்லாதபடி நஞ்சின் தன்மையை வளர்த்து
6.பரிணாம வளர்ச்சியில் கீழிருந்து எப்படி மேலே வளர்ந்து வந்தோமோ
7.அதை மாற்றி மீண்டும் கீழான பிறவிக்கே சென்று விடுகிறோம்… தேய்பிறையாகின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் “தசமி…” பத்தாவது நிலையை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் மீண்டும் மீண்டும் உள் செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் வந்த வேதனையோ கஷ்டமோ துயரமோ எதையெல்லாம் கேட்டறிந்தோமோ… நம் ஆன்மாவில் அவ்வாறு படர்ந்து கொண்டிருக்கும் தீமைகளை எல்லாம் பிளத்தல் வேண்டும்.

அது தான் நரசிம்மா…!

Leave a Reply