இன்றைய உலகில் நல்லதோ… கெட்டதோ… எல்லாமே “அதீத வேகமாக” இயக்கப்படுகிறது – ஈஸ்வரபட்டர்

இன்றைய உலகில் நல்லதோ… கெட்டதோ… எல்லாமே “அதீத வேகமாக” இயக்கப்படுகிறது – ஈஸ்வரபட்டர்

 

சூரிய அலை ஈர்ப்பிலிருந்து (SOLAR) இன்றைய விஞ்ஞானத்திற்காகச் செயற்கை மின் காந்த அலையை மிகத் துரித இயக்கமாக இந்த நூற்றாண்டில் மனித விஞ்ஞானம் பிரித்தெடுத்துக் கொண்டே உள்ளது.

செயற்கை ஒளி காண… சூரிய சக்தியின் அலையை இந்தப் பூமிக்குத் துரிதப்படுத்தியதன் “செயற்கை இயக்க வேகம்…” உயிரினங்களின் ஈர்ப்பு வார்ப்பிலும் இக்காற்றலையின் தொடர்பினால் பெறவல்ல துரித இயக்கத்தினாலும்
1.இக்கலி மனிதர்களின் ஞான ஈர்ப்பும்
2.இயக்கத் துரிதமும் மிக வேகமாக முன்னேறியுள்ளது.

முன்னேறியுள்ளது…! என்பது இயற்கையின் அலை ஈர்ப்பானது உயிரினங்களின் சுவாச ஈர்ப்பிற்குத் துரிதம் கொள்ளும்… காந்த அணுக்களின் மின் ஈர்ப்பு நிலை… உயிரின வளர்ப்பு யாவற்றுக்குமே துரிதப்பட்டுள்ளது இயற்கை.

“செயற்கையின் செயலுக்காக” சூரிய அலையின் மின் காந்த அலைகளைப் பிரித்தெடுக்கும் இயக்கத்தால்… பூமியின் தன்மைக்கே அந்தக் குணம் கூடிவிட்டது.

அத்தகைய வேகத்தின் செயலினால்தான்… இந்நூற்றாண்டில் மனித விஞ்ஞானச் செயல்கள் அனைத்தும்… துரித வேக ஓட்டம் கொண்டு… மிகவும் வளர்ச்சியுற்று ஓடிக் கொண்டுள்ளது இன்று.

இத் துரித ஓட்டத்தையே சீர்படுத்தி வழிப்படுத்தும் ஞான ஈர்ப்பின் இயற்கைச் சக்திக்கு ஆத்ம தொடர்புடன் செயல்படுத்தினோமானால் ஆயிரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ச்சியுற்ற நிலையைக் காட்டிலும் உயர் வளர்ச்சிக்குக் கொண்டு போகலாம்.

அதாவது இன்றைய (இக்கலியின்) மின் அலைச் செயலுக்கு உட்படுத்தப்பட்ட மின் சக்தியின் துரிதம் போன்றே
1.எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தால்… ஞானத்தின் ஈர்ப்பு நிலையினால்…
2.இவ்வாத்ம வார்ப்பை ஒளி நிலையாக்கி…
3.உயர் ரிஷிகளின் தொடர்பில்… சித்து நிலை கொண்ட ரிஷித் தன்மைக்கு உட்படுத்த முடியும்.

அதே சமயத்தில் தீய சக்தியின் செயல்களும் இன்று பல நிலைகளில் துரிதம் கொண்டு மாந்திரீகத்தாரால் அவர்கள் அறியாத நிலையிலேயே அவர்களுக்குள் சில துரித ஆவேச அலை உணர்வு கொண்ட ஆவி ஆத்மாக்கள் அவர்கள் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுகின்றன.

அவ்வாத்மாவின் உந்தலின் சுவைக்கு உகந்த ஆகாரத்தை இவர்கள் தந்து… மந்திரவாதியின் (சூனியக்காரர்களின்) செயலுக்காக அவ்வாவிகள் எச்செயலையும் செய்விக்கும் தன்மையில் பல விபரீதச் செயல்களும் நடை பெற்றுக் கொண்டுள்ளன.

அதிலெல்லாம் சிக்காது… உண்மையின் இயற்கை ஆத்ம வலுவை
1.நாம் நற்குணங்களின் வார்ப்பாக இயக்கவல்ல இயக்கத்தால்
2.இவ்வாத்ம வலுவைக் கொண்டு துரிதமாக ரிஷித் தன்மை பெற முடியும்.

Leave a Reply