வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்…!” – ஈஸ்வரபட்டர்

வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்…!” – ஈஸ்வரபட்ர்

 

ஆரம்பக் கல்விக்குக் குழந்தையை நாம் அனுப்பும் பொழுது சில குழந்தைகள் பள்ளி செல்லவே… பயம் கொண்டு அழுது… பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறது.

பள்ளியில் கல்வி போதனையை அந்தந்தக் காலங்களில் வைக்கும் தேர்வு
1.அக்குழந்தைக்கு அதன் எண்ண வளர்ச்சியின்
2.அறிவின் அடிப்படையில் தான் அதன் ஞானம் வளர்ந்திருக்கும்.
3.அதைக் கொண்டு தேர்வு எழுதும் பொழுது… அதற்குகந்த பயம்… அச்சம்… இருந்து கொண்டு தான் இருக்கும்.

வளர… வளர… அதற்குகந்த அறிவின் செயல் ஞானத்திற்கொப்ப முதிர்ச்சியுற்ற பிறகு ஆரம்பக் கல்வியானது மிக மிகச் சுலபமாகவும் குழந்தையின் கல்வி போலவும் வளர்ந்தவர்களுக்குத் தெரிகிறதல்லவா…!

அதைப் போன்று மனிதனின் குண அமிலத்தை நற்குணங்களின் வழித் தொடர் கொள்ள அன்பு பாசம் வீரம் ஞானம் ஆசை என்ற இந்த ஐந்து குணங்களைச் சாந்தமாக்கி நம் குண அமிலத்தையே நற்குண அமிலமாகச் செயல் கொள்தல் வேண்டும்.

அப்படிச் செயல் கொள்ளும் பொழுது நம் உணர்வின் அலைத் தொடர் உயர் சக்தியின் அமில ஈர்ப்பில் இவ்வெண்ணம் செலுத்தும் முறை கொண்டு
1.முருகனின் அழகுடையவன்
2.குணமுடையவன் இனிமை கொண்டவன்
3.மணமுள்ளவன் ஒளியானவன் ஒலியானவன் என்ற தத்துவ உயர் ஞான முருகனாக
4.நம் உணர்வின் எண்ணம் முருகனாகச் செயல் கொள்ளும் நிலைக்கு
5.வளரும் ஐம்புலன்களான நற்குணங்களை ஆறாம் புலனாக வழிப்படுத்தி நாம் முருகனாக உருவாக வேண்டும்.

ஆக… வளர்ந்த கல்வியில் உள்ளவனுக்குப் பள்ளிப் பாடத்தில் முதல் வகுப்புப் பாடம் எப்படி எளிதாக உள்ளதோ… ஒவ்வொரு வகுப்பாகப் பரீட்சையில் தேறிய உயர் கல்வியில் உள்ளவனுக்கு முதல் பாட நூலில் தேர்வு வைத்ததைப் போன்று…
1.வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு இக்கட்டான செயலையும் வரும் இன்னலையும்
2.மாற்றியமைப்பது என்பது இந்த முருக குணம் கொண்டவனுக்கு மிக மிக எளிதாகிவிடும்.

நற்குணங்களின் வழித் தொடர் செயல் ஞான ஈர்ப்பிற்கு… நம் உணர்வைச் செலுத்தும் காலங்களில் ஏற்படும்… வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்…!”

இந்தத் தேர்வில் இருந்தெல்லாம் நாம் பெறும் மதிப்பெண் நிலைக்கொப்ப அடுத்த தேர்விற்கு நாம் உகந்தவர்கள் ஆகின்றோம் என்ற உணர்வின் எண்ணத்தில் சென்று கொண்டே நம் செயல் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஆன வளர்ச்சி இருக்குங்கால் இந்நற்குணங்களின் செயலுடன் ஒன்றிய “முருகனின்… அழகனின் அழகென்ற பட்டத்தை..” நாம் பெற முடியும்… இனிமை என்ற உணர்வின் செயலுடன் நம் எண்ணத்தின் ஈர்ப்பு ஒலியின் ஒளியாகக் கலந்துவிடும்.

இச்சக்தி நிலை கொண்ட உருவம் தானப்பா முருகனேயன்றி தனித்தொரு சக்தி வந்து நற்குணங்களாக அவதரித்து நற்படைப்பைப் படைக்கவில்லை…!

ஆகவே…. இடும்பன் என்ற அரக்க குணத்தை வளரவிட்டு… வாழ்க்கையை இருள் என்ற அழுகையின் ஊடே சோர்வென்ற சக்திதனில் சுழலவிட்டு… உயிர் என்ற ஆத்மலிங்கத்தைச் சதா சர்வ காலமும் நிந்தித்துத் துவேஷித்து… உயர் சக்தியான உயிர் ஆத்மாவை மண்ணுடன் மண்ணாக புழுவாகப் பூச்சியாக சக்திதனில் சுழல விடாமல்…
1.உயர் வழித் தொடர் கொண்டு மனித பிம்பம் பெற்ற நாம்
2.உயர் அலைத் தொடரின் உணர்வின் வழித் தொடர் செல்ல
3.முருகனின் உருவாக நம்மை உருவாக்க வேண்டும்.

உணர்வின் இனிமையையும் உணர்வின் அழகையும் உணர்வின் மணத்தையும் உணர்வின் ஒலியையும் உணர்வின் ஒளியாக உயர் ஞானச் செயலின் ஈர்ப்பில் செயல் செல்ல… இந்த ஐம்புலன் என்ற நற்குணக் கூட்டைச் “சாந்தம்…!” என்ற சக்தி கொண்டு செயலாற்ற வேண்டும்.

Leave a Reply