குருநாதர் எனக்குக் கொடுத்த முழு சக்தியை நீங்களும் பெற முடியும்

குருநாதர் எனக்குக் கொடுத்த முழு சக்தியை நீங்களும் பெற முடியும்

 

நந்தீஸ்வரா…! என்று சிவனுக்கு முன் நந்தியைப் போட்டுள்ளார்கள்…! நம் உயிர் ஈசனாகின்றது. நாம் எண்ணிய உணர்வுகள் உருவாக்கப்படும் போது அதுவும் ஈசனாக இருந்து உருவாகின்றது. அதை “நந்தீஸ்வரன்” என்று காட்டுகிறார்கள்.

1.நான் எண்ணியது எனக்குள் சென்று எனக்குள்ளேயே உருவாக்கும் நிலை வருகின்றது
2.எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அணுவாக உருவாகப்படும் போது அந்த உணர்வின் தன்மை உடலாகிச் சிவமாகின்றது.
3.அது தான் நந்தீஸ்வரன்… சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.

கண்களால் ஒன்றை உற்றுப் பார்க்கின்றோம்… அது சித்திரம்…! அந்த உணர்வு உடலுக்குள் அதனால் புத்திரனாக (அணுவாக) உருவாகிறது.

அதாவது நாம் பார்ப்பதை எல்லாம் அது எந்தெந்த வழிகளில் அதற்கு இடம் கொடுக்கின்றோமோ
1.என்னை அவன் இப்படித் திட்டினான்
2.எனக்கு அவன் துரோகம் செய்தான்
3.இவன் என்னைத் தொல்லை செய்தான்
4.அவனால் தான் நான் தொழில் செய்ய முடியவில்லை… நஷ்டம் வருகிறது என்று
5.இப்படிப்பட்ட கணக்குகள் அதிகமாகி விட்டால் நாம் செயல்படுத்தும் நல்ல உணர்வின் கணக்குகள் குறையும்.
6.தீமையின் கணக்குகள் அதிகரிக்கப்படும் போது நம் நல்ல உணர்வுகள் செயலற்றதாக மாறும்.

இதைப் போன்று மனிதனை உருவாக்கிய உணர்வுகளில் எந்த அளவுகோலில் நஞ்சினை வளர்த்துக் கொண்டோமோ அந்த உணர்வுக்குத் தக்க உடலில் நோயாக மாறும்.

இது எல்லாம் சாஸ்திரப் பிரகாரம் தப்பு இல்லை. அதிலே வளர்ந்தவர்கள் நாம் இதைப் புரிந்து கொண்டால் போதும்.

தெய்வத்தின் உருவங்களைப் பார்க்கப்படும் போது துவைதம். அதில் காட்டப்பட்ட உண்மைகளை அந்த ஞானிகள் உணர்வுடன் ஒன்றி அந்த நல் வழி காட்டியதை நாம் நுகர்ந்தோம் (அத்வைதம்) என்றால் “தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் வரும்…”

ஏனென்றால் குருநாதர் கொடுத்த அருள் வழிகளைத் தான் இங்கே பதிவு செய்கிறோம்.

உங்களுக்கு (ஞானகுருவிற்கு) ஈஸ்வரபட்டர் எல்லாச் சக்தியும் கொடுத்திருக்கின்றார். நாங்கள் எந்த வழியில் சக்தி பெறுவது…? என்று கேட்கின்றார்கள்.
1.உங்களுக்குத் தான் அவர் கொடுத்தார்… எங்களுக்குக் கொடுக்கவில்லையே…
2.நீங்கள் பெற்று விட்டீர்கள்… எங்களுக்கு நீங்கள் எப்படிக் கொடுக்கின்றீர்கள்…? என்று
3.அந்த விசாலத்தை நீங்கள் கொண்டு வந்தால் தள்ளித் தான் நிற்கும்.

ஒரு கம்ப்யூட்டரில் எந்த அளவுகோலைக் கொடுத்து ஒரு இயந்திரத்தையோ மற்ற வேலைகளையோ இயக்கப்படும் போது சந்தேக உணர்வு வந்தால் அது சரியாக வேலை செய்யாது.

ஆணைகளை இடப்பட்டு அதைச் சீராக இணைத்து “இப்படித்தான் இயக்க வேண்டும்… (PROGRAM)” என்று இணைக்கும் போது தான் அது எலெக்ட்ரானிக்காக மாறுகிறது. மோதிய பின் இயக்குகிறது.

அதைப் போன்று தான்
1.இப்பொழுது யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகக் கொடுக்கும் உணர்வின் தன்மையை நீங்கள் தள்ளி வைத்து விட்டால்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாவது கஷ்டம்.

அதனால் தான் உபதேசிக்கும் உணர்வுகளை உற்று நோக்கி… ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்து கொள்ளுங்கள்…! என்று யாம் திரும்பத் திரும்பச் சொல்வது.

பதிவு செய்தால் கம்ப்யூட்டரில் இருக்கும் எலெக்ட்ரானிக் இயக்குவது போல்
1.அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் குருவாக வந்து
2.தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வரும்.

உயர்ந்த சக்திகளை உபதேச வாயிலாகத் தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

Leave a Reply