இறந்தவர்களுக்குச் சாங்கியம் எப்படிச் செய்து கொண்டிருக்கின்றோம்…? அதனின் விளைவு என்ன…?

இறந்தவர்களுக்குச் சாங்கியம் எப்படிச் செய்து கொண்டிருக்கின்றோம்…? அதனின் விளைவு என்ன…?

 

அம்மா அப்பா இறந்தால்… சுட்ட சாம்பலை எடுத்துக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைத்து… அதற்காக வேண்டி சில மந்திர ஒலிகளைச் சொல்லி சாங்கியத்தைச் செய்தால்… “மோட்சத்திற்கு அனுப்பி விடலாம்” என்று செய்கிறார்கள்.

காரியம் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடனே… எண்ணெய் தேய்த்துத் தலை முழுகிவிட்டு… மாவிளக்கைச் செய்து நெய் தீபம் இட்டு… அணையாது அதை விநாயகர் கோவிலில் கொண்டு போய் அர்ச்சனை செய்தால் மோட்சத்திற்குச் சென்றுவிடுகிறார்கள் என்கிறார்கள்.

மோட்சம் எங்கே என்று தெரியாதபடி மோட்சத்திற்கு அனுப்புகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் மோட்சம் எங்கே இருக்கிறது…? அந்தச் சொர்க்கம் எங்கே இருக்கிறது…?

அப்பா அம்மாவின் உணர்வுகள் பூராம் பிள்ளைகள் உடலில் இருக்கிறது. வீட்டிலே அல்லது ரோட்டிலே நடந்து செல்வார்கள்…
1.பாதம் பட்ட மண் இருக்கும்… ஆபீஸில் வேலை செய்யும் இடத்திலும் அது இருக்கும்.
2.இவர்கள் அங்கே வேலை செய்யும் போது எப்பொழுது இவர்கள் தலை முடி கீழே உதிரும்…? என்று பார்ப்பார்கள்.
3.தலை முடி உதிர்ந்ததை எடுத்துக் கொள்வார்கள்
4.உடுத்திய சேலையில் இரண்டு மூன்று நூலை எடுத்துக் கொள்வார்கள்.
5.அவர்கள் நடந்து சென்ற பாதையில் வீட்டு வாசல் மண்ணைக் கூட்டி எடுத்துக் கொள்வார்கள்.

ஒருவருக்கொருவர் ஆகவில்லை என்றால் செய்வினை தோஷம் செய்பவர்கள் இந்த வேலையைச் செய்வார்கள்.

இதை எல்லாம் கொண்டு போய் அதற்குண்டான மந்திரம் தந்திரம் செய்பவர்களிடம் கொடுப்பார்கள். அதை வைத்து என்ன செய்வார்கள்…? அம்மா அப்பாவை (ஆன்மாகளை) அவர்கள் கூப்பிட்டு இழுத்துக் கொள்வார்கள்.

எப்படி…?

அமாவாசை அன்று சாப்பாட்டைப் போட்டு எங்கள் அப்பா அம்மாவிற்காக வேண்டி “நினைவு நாள் இருக்கிறோம்” என்று இங்கே கொண்டாடுவார்கள்.

1.கடவுள் பக்தியிலே எந்தெந்த மந்திரத்தைச் சொல்லி உச்சரித்து
2.நம் உடலுக்குள் வாழ் நாள் முழுவதும் அந்த மந்திரங்களை உருவாக்கியிருக்கின்றோமோ
3.எந்தத் தெய்வத்தின் மீது பக்தியை அதிகமாகச் செலுத்தியிருக்கின்றோமோ
4.அந்த உணர்வுகள் இறந்தவர் ஆன்மாவிலே பதிவாகியிருக்கும்.

மந்திரத்தைச் சொன்னால் கடவுள் காப்பாற்றுவார்…! என்று எண்ணித் தான் அதைப் பதிவாக்கியிருப்போம். இந்த உணர்வுகள் இங்கே இருக்கும்.

உடலை விட்டுப் போன பிற்பாடு நாம் இங்கே இறந்தவர்களுக்குச் சாங்கியம் செய்கிறோம். அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் கொண்டு தான் நாம் மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை எல்லாம் நம் பாதம் பட்ட மண்ணிலே பதிந்திருக்கும். அமாவாசை அன்று இங்கே சாப்பாட்டைப் போட்டு அவர்களை நினைவுக்குக் கொண்டு கூப்பிடுவோம். நம் ஈர்ப்புக்கு அந்த அலைகள் வரும்.

அங்கே மந்திரம் செய்பவர்கள் பாத மண்ணை வைத்து மந்திரத்தைச் சொன்னால்
1.அபபா அம்மாவின் ஆன்மா அவர்கள் கையில் குவியும்.
2.குவிந்த பின்னாடி வீட்டில் அம்மா அப்பா என்னென்ன செய்தார்கள்…?
3.எந்தெந்த வகையில் அவர்கள் சாபங்களில் சிக்கினார்கள்…?
4.எந்த நோயினால் செத்தார்கள்…? என்ற இந்த உணர்வெல்லாம் அங்கே அவர்களுக்குக் கிடைக்கும்.

இறந்த உடலில் இருந்தது எல்லாவற்றையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். இறந்து 48 நாளுக்குள் இந்த மாதிரிச் செய்தால் அவர்கள் கைவல்யம் ஆகின்றது. அதற்குப் பின் அந்த ஆன்மாக்களை ஆட்டிப் படைக்கிற ஆள் தான் அவர்கள்…!

1.அம்மாவையும் அப்பாவையும் மோட்சத்திற்கு அனுப்பிவிட்டோம்…! என்று நாம் நினைக்க வேண்டியது தான்.
2.ஆனால் இங்கே மோட்சம் என்ற நிலை இப்படித்தான் இருக்கும்.

இங்கே மட்டுமல்ல… இந்த உலகில் மதங்களால் உருவாக்கப்பட்ட அனைத்திலுமே இந்த நிலை தான். அரசர்கள் அன்று உருவாக்கிய இது போன்ற தீமையான வழிகள் தான் இன்றும் வழி நடந்து கொண்டுள்ளது.

விநாயகர் தத்துவத்தில் காட்டிபடி விண்ணுலக ஆற்றலை எடுத்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களின் முகப்பிலே சப்தரிஷி மண்டல உணர்வை இணைத்து…
1.உடலுடன் இருப்பவர்கள் உந்தித் தள்ளினால் அவர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யலாம்.
2.மீண்டும் பிறவி என்ற நிலைக்கு வராதபடி பேரின்பப் பெருவாழ்வு வாழச் செய்யலாம்.

அவர்கள் முதலிலே விண் செலுத்தினால் நாமும் அடுத்து அதே வழியில் விண் செல்ல முடியும். ஞானிகள் காட்டிய விண் செல்லும் மார்க்கம் இது தான்.

Leave a Reply