இனி இந்தப் பூமியில் மனிதர்களின் கடைசி நிலை எப்படி இருக்கும்…?

இனி இந்தப் பூமியில் மனிதர்களின் கடைசி நிலை எப்படி இருக்கும்…?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உபதேசித்தார். அவரின் துணை கொண்டு நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும். உங்களுக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

1.உங்கள் மூச்சால் பேச்சால் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தோரையும் அவர்களை அறியாது வந்த இருள்களிலிருந்து மீட்க முடியும்.
2.உங்கள் அருகிலே வருவோர் உணர்வுகளையும் தெளிவாக்க முடியும்.
3.தொழில் செய்யும் பகுதிகளிலும் அறியாது சேரும் இருள்களிலிருந்து அவர்களை உங்கள் பார்வையால் மீட்ட முடியும்.
4.அதே சமயத்தில் அவர்களின் தீமையின் நிலைகள் தனக்குள் புகாது தனக்குள் இருக்கும் நல்ல அணுக்களைக் காக்க முடியும்.

இந்த உணர்வின் துணை கொண்டு நாம் வாழ்வில் தெளிந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்திடும் உணர்வுகளை நமக்குள் வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.

இனி வரக்கூடிய காலங்களில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம்… அந்தந்த நாட்டில் அவரவர்கள் சேமித்து வைத்த கதிரியக்கங்களை விஷக் கிடங்குகளில் வெடிக்கச் செய்கின்றனர்.

அத்தகைய அணுக்கதிர்களை வீசப்படும் போது ஆங்காங்கு மனிதன் கதிரியக்கத்தால் (கதிர்வீச்சு) துடிக்கும் நிலை வருகிறது.

துடித்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில்…
1.டாக்டரானாலும் விஞ்ஞான அறிவு கொண்டு செயல்படுத்தி
2.எல்லோரையும் காத்திடுவேன்…! என்ற நிலையைச் சொன்னாலும்
3.இந்த விஷக் கதிரியக்கங்கள் தாக்கப்படும் போது அவனுக்குள்ளும் இந்தத் தீமையின் உணர்வே விளையும்.

அப்போது அவனும் துடிக்கின்றான்… அவனால் செயலாக்க முடியாத போது
1.வேதனையில்லாது இந்த உடலை விட்டு அந்த உயிர்கள் வேளியேற வேண்டும் என்று
2.விஷத் தன்மைகளை வெடிக்கச் செய்யும் போது நாடு முழுவதும் விஷங்கள் பரவுகின்றது.
3.மனிதன் மூச்சுத் திணறுகின்றான்… உடலை விட்டு இந்த உயிரான்மா செல்கிறது.
4.இந்த உயிரான்மாவுடன் சேர்ந்த விஷ அணுக்கள் காற்றிலே பெருகுகின்றது.
5.பின் மனிதன் என்ற நிலைகள் இங்கே மறைகின்றது.

மீண்டும் ஆரம்பக் காலத்தில் எவ்வாறு ஒன்றை ஒன்று விழுங்கி மனிதனாக உருவாக்கியதோ அதைப் போல் ஒன்றை ஒன்று விழுங்கி மனிதனாக உருப்பெரும் காலங்கள் “வெகு காலம்” ஆகும்.

மிஞ்சி உள்ள நிலையில் ஆன்மீக வழியில் உள்ள ஒரு சிலரே தப்பினாலும்… நஞ்சினை வென்றிட இந்த உணர்வுகளைப் பெற்றாலும்..
1.அவர்கள் வாழ் நாளில் பெற்ற இந்த உணர்வுகள் தான் அந்த இன மக்கள் தொக்கி நிற்பதும்
2.அதன் வழி மனிதன் என்ற நிலைகளில் சிதைந்த மனிதனின் உணர்வுகளில் அருள் ஞானிகளின் உணர்வை இங்கே பெற முடியும்.

அதன் வழி நடக்கப் பல காலம்… பல நிலைகள் ஆகும்.

விஷத்திலே சிக்கியவர்கள் அத்தகைய மனிதனின் ஈர்ப்புக்குள் கொசுவாகச் செல்வோம். விஷத்தின் தன்மை தாக்கும் போது அவன் நசுக்கினால் அவன் உடலுக்குள் சென்று நாம் மனிதனாகப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

1.அதைப் போன்ற நிலைகள் பல காலம் அல்லல்படும் நிலையிலிருந்து விடுபட்டு
2.நாம் இனி பிறவியில்லா நிலைகள் அடைதல் வேண்டும்.

பிறவி இல்லா நிலை அடைந்த அருள் மகரிஷி துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான். அதனைப் பின்பற்றியோர் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர்.

அந்த எல்லையை அடையும் மார்க்கமாகத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியை உங்களுக்கு இங்கே அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

Leave a Reply