பயப்படுபவர்களை மட்டும் என்றும் நம்ப முடியாது… நம்பக் கூடாது…!

பயப்படுபவர்களை மட்டும் என்றும் நம்ப முடியாது… நம்பக் கூடாது…!

 

சந்தர்ப்பத்தால் ஒருருவருகொருவர் கருத்து வேறுபாடு ஆகி சண்டை வந்து விட்டால் அவரை உதைக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அப்பொழுது அந்த உணர்வை உருவாக்கிக் கொடுக்கின்றது நம் உயிர்.

“உதைக்கப் போகின்றோம்…” என்ற அந்த வார்த்தையை அவர்கள் கேட்டவுடன் அதே உணர்வு அங்கே இயக்கப்பட்டு நம்மைத் திரும்ப உதைக்கச் சொல்கின்றது… அல்லது பயமுறுத்தச் செய்கின்றது…!

1.உதைத்து விடுவோம் என்ற பயமான பின்
2.தன்னைத் தாக்கி விடுவான்…! என்ற நிலையில் “பயந்து தாக்கும் நிலை” வந்து விடுகின்றது.
3.அதாவது… பயமுறுத்துகின்றான்… நம்மைக் கொன்று விடுவான்… என்ற எண்ணத்தில்
4.எதிராளி நம்மைக் கொல்வதற்கு முன் திருப்பி வேகமாக… பயத்தால் கொன்று விட வேண்டும் என்ற உணர்வு இயக்கப்படுகின்றது

ஆகவே பயப்படுபவர்களை மட்டும் என்றும் நம்ப முடியாது…!

தைரியமாக இருப்பவரிடம் நம்பிக்கையுடன் இருக்கலாம். அதை அடித்து விடுவேன்… இவனை அடித்து விடுவேன்… என்று சொல்பவர்களை நம்பலாம்.

ஆனால் ஒருவர் பயப்படுகிறார் என்று சொன்னால்
1.பந்திக்கு முந்து என்று சொல்வது போல் “பட்…” என்று அடித்து விடுவார்
2.பயப்படுபவர்கள் எந்த நிமிடத்தில்… எதைச் செய்வார்கள்…! என்று சொல்ல முடியாது
3.ஏனென்றால் பலம் இல்லை என்கிற போது “நம்மைத் தாக்கி விடுவான்…!” என்று அவன் முந்திவிடுவான்.

மற்றவர்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்க மாட்டார்கள். பயந்த உணர்வு கொண்டு தாக்கிவிடுவார்கள். தனக்கு இடைஞ்சல் செய்து விடுவான்… தன்னைத் தொல்லைப்படுத்துவான்… என்று உணர்வுகள் அவர்களுக்குள் வரப்படும் பொழுது… பயத்தால் தன்னை அறியாது தவறு செய்வார்கள்… நிச்சயமாக…!

ஆனால் “வேண்டும்…” என்று செய்வதில்லை.

உதாரணமாக சமையல் செய்யும் போது சிறிது பயம் ஆகிவிட்டால் குழம்பில் உப்பையோ சீரகத்தையோ காரத்தையோ அளவாகப் போட முடியுமா…? என்று பார்க்கலாம். ஒரு கணக்கையே சரியாக எழுத முடியுமா…? என்று பார்க்கலாம்.

சரியாக எழுத முடியாது.

அப்பொழுது இந்தப் பயம் என்ன செய்கின்றது…?

1.நம்மையும் வாழ விடுவதில்லை
2.சிந்திக்க வேண்டிய செயலையும் செயல்படுத்த முடிவதில்லை
3.பயத்தால் தவறு செய்யும் உணர்வுகளே அதிகமாகின்றது.

ஆகவே பயம் என்ற உணர்வு வந்தாலே மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கொண்டு அதைத் தடுத்துப் பழக வேண்டும். இல்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக்கிக் கொண்டே இருக்கும்.

அதே சமயத்தில் பயமான உணர்வை நமக்குள் அதிகமாக நுகர்ந்து விட்டால் நம் உடலில் உணர்ச்சிகள் கிடு…கிடு… என்று ஆகி நடுக்க வாதமே தோன்றும்.

ஒரு பேனாவை எடுத்துக் கையெழுத்தைக் கூடச் சரியாகப் போட முடியாது. ஒரு சாமானை எடுத்துச் சீராக வைக்க முடியாது.

ஏனென்றால் அந்தப் பய உணர்வுகள்
1.உடலுக்குள் அணுக்களாக விளைந்தால் அணுவின் மலமாகும் பொழுது
2.நம்மை இயக்கும் நரம்பு மண்டலங்களுக்குள் வரக்கூடிய இந்த உணர்ச்சிகள் அது வித்தியாசமாக மாறும்.

பயத்தால் ஒரு பொருளைத் தூக்க முடியவில்லை என்று சொன்னால் அதற்குக் காரணம் “நம் நரம்பு மண்டலங்களில் இழுக்கக்கூடிய இந்த அழுத்தம்… வலு இழந்து இருக்கின்றது…!” என்று அர்த்தம்.

இரத்தத்தில் வருவதைத் தான் அணுக்கள் எடுத்துச் சத்தாகக் குடிக்கின்றது. அந்த அணுக்களின் மலம் அமிலமாக மாறுகின்றது இதைப்போல சில நரம்பு மண்டலங்கள் அது அது மாற்றிக் கொள்ளும் தன்மை வருகின்றது.

பய உணர்வுகள் அதிகமாக வந்தால் நடுக்கத்தின் தன்மை கொண்டு பலவீனமான உணர்ச்சிகளைத் தூண்டும். நரம்பு மண்டலம் கிடு…கிடு… என்று ஆகிவிடுகிறது

எழுந்து ஒழுங்காக நடக்க முடியுமா…? என்றால் முடியாது. அப்போது என்ன செய்கின்றது…? நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் இத்தனை பெரிய பிழைகளை உண்டு பண்ணுகின்றது.

ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.

1.ஆகவே நம் உயிரின் தன்மை கொண்டு
2.நாம் எப்படி நல்ல உணர்வுகளை எடுக்க வேண்டும்…? என்பதைத் தெளிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நான் எதை எடுத்தாலும் எதை எண்ணுகின்றேனோ… அதை நீ உருவாக்கி விடுகின்றாய்… அதை நீ ஆட்சி செய்கின்றாய்..! ஆகவே என இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்…! என்று உயிரிடமே நாம் வேண்டி
1.நீ எப்படி எல்லாவற்றையும் தெரிவிக்கின்றாயோ…
2.அறியச் செய்கின்றாயோ… அறிவை ஊட்டுகின்றாயோ… தெளிவாக்குகின்றாயோ…
3.அந்தத் தெளிவின் தன்மை நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று அவனிடமே வேண்டுகின்றோம்

எண்ணியதை எண்ணியவாறு உருவாக்கித் தருவது நமது உயிர் தான்…! இதை உணர்தல் வேண்டும்.

Leave a Reply