சந்திர மண்டலத்தின் இன்றைய பூகோள வளர்ச்சி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சந்திர மண்டலத்தின் இன்றைய பூகோள வளர்ச்சி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கலியின் மாற்றம் கொண்டு நம் பூமியின் நிலை மாற்றம் கொள்ளப் போகிறது என்று உணர்த்தினேன். அந்நிலை கொண்டு அனைத்து மண்டலங்களின் நிலையும் மாறுவதையும் உணர்த்தியுள்ளேன்.

சந்திரனில் நம் பூமியைப் போல் மழையும் இங்குள்ள காலை பகல் இரவு என்று சூரியனின் ஒளி வீச்சில் கிடைத்திடும் மாற்ற நிலை அங்கில்லை.

சூரியனின் ஒளிக்கதிர் வீச்சின் நிலை ஒரே நிலையில் ஒளி பாய்ச்சிடும் சக்தி நிலையாய்ச் சுழற்சி கொண்டு மூன்று குமிழ் நிலை கொண்ட சக்தியில் சந்திரனின் நிலை உள்ளது.

ஒரே நிலையில் சூரியனின் அணு வீச்சுகள் இருந்தாலும் மையப்பகுதியின் பள்ளத்தினால் சந்திரனின் நிலை சிதறாமல் சுழன்று கொண்டுள்ளது. நம் பூமியின் இயற்கை சக்தியைப் போல் சந்திரனின் இயற்கை வளமும் கூடப் போகின்றது.

இன்று சந்திரனில் நீர் நிலை நம் பூமியில் கடல்கள் உள்ளதைப் போல் ஆழ்ந்த நீர் நிலை அங்கு இல்லை. ஆனால் உருவாகிக் கொண்டுள்ளது.

நம் பூமியில் வட துருவ தென் துருவ நீர் நிலையின் சக்தியினால் இப்பூமி சுழலும் நிலையில் காற்று மண்டலம் இந்நீர் நிலையிலிருந்து வருவதினால் இவ்விரண்டு பக்க நீர் நிலையில் ஒன்றை ஒன்று உலகம் சுழலும் நிலையில் ஈர்க்கும் சக்தியும் ஏற்படுகிறது.

அவ்வாறு ஏற்படுவதனால் நம் பூமிக்கு இக் காற்று மண்டல சக்தியுடன் நான்கு நிலை கொண்ட கால நிலையினால் இங்கு ஏற்படும் மழையும் மற்றச் சீதோஷ்ண நிலைகளின் மாறு கொண்ட சக்தியும் நம் பூமியின் பொக்கிஷமாய் உள்ளதைப் போல் சந்திரனில் வரப் போகிறது.

சந்திரனுக்கு அருகாமையில் நீரை ஏற்படுத்தும் அமில நிலை கொண்ட உப்புக் கலந்த அமில சக்தி கொண்ட நட்சத்திர மண்டலங்கள் அதிகமாய் உள்ளன.

இக் கலியின் மாற்றத்தினால்… மாறும் தருணத்தில்
1.மனிதன் சந்திரனுக்குச் சென்று அவனது சுவாச அலையை அங்கு விட்ட நிலையிலும்
2.இப்பூமியிலிருந்து ஆத்மாக்களில்லா ஏவுகணைகள் பல அந்நிலைக்குச் சென்று பூமியின் சக்தி சந்திரனில் செயல்படும் நிலையிலும்
3.நம் பூமியின் பார்வை நிலையில் நம் பூமியின் ஈர்ப்பு சக்தியும் சந்திரனில் நிறைந்துள்ள நிலையிலும்
4.தெரிந்தோ தெரியாமலோ சந்திர நிலவை… பௌர்ணமி நாளை… நம் ஆத்மாக்களில் பலர் ஆண்டவனாய் வழிப்பட்டதின் நிலையில்
5.நம் பூமியின் ஆத்மாக்களின் எண்ண சக்தியின் அலையும் சந்திரனில் கலந்துள்ள நிலையில்
6.சந்திரனில் நாம் காணும் அப்பள்ள நிலைகளே நம் பூமியின் நிலை போல் சந்திரனில் இரண்டு பக்கங்களிலும் நீர் நிலைகள் கூடப் போகின்றன.

நம் பூமியில் உள்ளதைப்போல் தாவர வளர்ச்சி நிலையும் செயல் கொண்டு நம் பூமியின் சக்தி நிலைக்கொப்ப வளரும் நிலை “சந்திரனுக்குக் கூடப் போகிறது…!”

அந்நிலையிலிருந்து நம் பூமியில் உள்ள ஆத்மாக்கள் நம் பூமியின் இக்கலி மாற்றத்தில் நம் பூமியின் சுவாச நிலையின் சக்தி கொண்ட சந்திரனில் வாழப் போகின்றார்கள்…! எந்த நிலை கொண்டு…

பூமியில் வாழ்ந்த ஆத்மாக்கள் மாறு கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்திட முடியாது… என்று உணர்த்தியுள்ளோம். பூமியின் ஆத்மாக்கள் எப்படிச் சந்திரனுக்குச் சென்று வாழ்ந்திட முடியும்…? என்ற எண்ணம் இதைப் படிப்பவருக்குத் தோன்றிடலாம்.

Leave a Reply