கோலமாமகரிஷி தவமிருந்த இடத்தில் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்

kudajadri

கோலமாமகரிஷி தவமிருந்த இடத்தில் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்

 

இன்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. கருவில் இந்த உயிரணு உடல் பெறும்போது இந்த இன்னொரு உடலில் பெற்ற நிலையோ அல்லது தாய் நுகரும் உணர்வின் தன்மையில் அந்தக் கருவில் இருக்கும் சிசுக்கு இந்த உணர்வுகள் பட்டபின் அந்த கருவும் அந்த வேதனைப்படுகின்றது.

அந்த வேதனை என்ற உணர்வுகளையே அது இயக்குகின்றது. இதை நமது குருநாதர் பல முறை காட்டினார்
1.கருவில் வளரும் குழந்தைகள் தாய் நுகரும் உணர்வால் எவ்வாறு இயங்குகின்றது…?
2.இன்னொரு உடலில் பெற்ற அந்த உயிரணு (உயிராத்மா) தன் உடலுக்குள் சென்ற பின் அந்த உடலை எப்படி ஆட்டிப் படைக்கின்றது..?
3.நாம் கொல்லும் உயிரான்மாக்கள் மனித உடலுக்குள் வந்தபின் மனிதனின் உணர்வை நுகர்ந்து அது கருப்பைக்குள் செல்லும்போது மனித உரு பெறும் தன்மைகள் எப்படி பெறுகின்றது…?

மனித உருப்பெறும்போது அந்தத் தாய் வேதனைப்படுவோரையோ சலிப்புப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ முடமானவர்களையோ கண் இழந்தவர்களையோ பார்க்கும்பொழுது அந்த உடலில் இருந்து வெளிப்படுவதை அந்த உருவத்திலிருந்து வெளிப்படுவதை சூரியனின் காந்தச் சக்தி கவரும்போது கர்ப்பமான தாய் நுகர்ந்து விட்டால் கருவிலே எவ்வாறு அது உருப்பெறுகின்றது…?

இதைப்போல ஒவ்வொரு நொடிகளிலும் ஒரு உயிரணு ஒரு உடலுக்குள் செல்வதும் தாய் மனித உணர்வை நுகர்ந்து மனிதனாகப் பெறும் நிலையும் ஆனால் கருப்பைக்குச் சென்ற பின் அந்தக் கருவிலே வளரும் பொழுது தாய் நுகரும் உணர்வுகள் அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக எவ்வாறு அமைகின்றது…?

இதை எல்லாம் குருநாதர் காட்சியாகவே காண்பித்தார். நான் (ஞானகுரு) இதை எல்லாம் அறிந்து கொள்வதற்காக குறைந்தது “ஒரு லட்சம் உணர்வுகளின் தன்மைகளையாவது..” குருநாதர் காட்டினார். இதற்கு மூன்று வருடம் ஆகிவிட்டது.

அதைக் காணும் போது சரியான ஆகாரம் கிடையாது.. குறித்த நேரங்களில் சில பச்சிலைகளையும் ஒரு பேரீச்சம்பழத்தையும் தான் சாப்பிட வேண்டும். அதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

இதற்கு ஒரு அரை மணி நேரம் விடுபடும்படி செய்வார். அதற்குள் அதைச் சாப்பிட்டுவிட்டு அமர்ந்து அவர் சொன்னதைப் பேசாமல் பார்த்திருக்கும்படி சொல்வார்.

ஏனென்றால் இவை அனைத்தும் கொல்லூர் மூகாம்பிகை என்று சொல்லும் என்று குடசாஸ்திரி மலைக் காட்டில் தான் பார்த்தது.

1.அன்று கோலமாமகரிஷி அவர் தியானமிருந்த இடம் சிறு குகையாக இருக்கும்.
2.அங்கு பெரிய வனமாக இருக்கும்… தபோவனமும் உண்டு.
3.மலை மேலே கொஞ்ச தூரம் இவ்வளவு தூரம் சென்றால் கூடு மாதிரி இருக்கும்
4.அதற்குள் அமர்ந்து அவர்கள் பெற்ற உணர்வுகளை எல்லாம் காணும்படி செய்தார் குருநாதர்.

மற்ற உயிரினங்களை மனிதன் கொல்வான் என்றால் அந்த ஆன்மாக்கள் எல்லாம் அவர்கள் உடலுக்குள் செல்கிறது. இப்பொழுது நாம் செல்லப் பிராணிகளை வளர்க்கின்றோம் ஆடு மாடு எல்லாம் வளர்க்கின்றோம். அவை யார் மேல் பற்றுள்ளதோ அது பற்றுள்ள நிலைகளில் இறந்தால்… அந்த ஆன்மா வளர்த்தவர் உடலுக்குள் சென்று மனிதனாக எப்படிப் பிறக்கின்றது…? என்ற நிலையையும் இதை தெளிவாகக் காட்டியுள்ளார்.

இப்படி எல்லாம் நாம் எத்தனையோ நிலைகள் பட்டுப் பல பிறவிகள் தாண்டித் தான் இன்று மனிதனாக பிறந்திருக்கின்றோம் என்று காட்டுகிறார் குருநாதர்.

இதைப் போல் தான் நம் பூமியில் ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான். அவனைப் பின்பற்றியவர்கள் எல்லாம் சப்தரிஷி மண்டலமாக அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் அவர்கள் எல்லாம் எத்தனையோ இன்னல்கள் பட்டு அந்த நிலையை வளர்த்துக் கொண்டவர்கள். சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த சக்திகள் கொண்டு ஒளியின் சரீரம் பெற்றவர்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படும் உணர்வின் ஒளியை
2.நாம் சுவாசித்து… அதை நாம் நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொண்டோம் என்றால்
3.நம்முடைய இந்தச் சந்தர்ப்பம் நம்மைப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச் செய்கின்றது.

Leave a Reply