அணுக்கதிரியக்க வெடிப்பு நிலைகளைப் பற்றி படிக்காதவன் சொல்கிறேன் – ஞானகுரு

Radioactive power

அணுக்கதிரியக்க வெடிப்பு நிலைகளைப் பற்றி படிக்காதவன் சொல்கிறேன் – ஞானகுரு

 

சாதாரணமாக ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் துகள்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது மின்னலாக மாறுகின்றது.

அதே மின்னலின் தன்மை புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும்போது எந்த மரமோ எந்த நட்சத்திரத்திலிருந்து வருகின்றதோ
1.அந்த இனம் இந்த மரத்திலிருந்தால் பக்கத்தில் உள்ள மரம் அப்படியே இருக்கும்..
2.ஆனால் இந்த மரம் பொசுங்கிவிடும்.
3.தன் இனத்தை எடுத்துப் பூமிக்குள் ஊடுருவிவிடும்.

அது பூமிக்குள் சென்ற பின் வெப்பத்தின் நிலை அதிகமாகி அது கொதிகலனாகும். இதனுடைய சேமிப்பு அதிகமானால் அது நாளடைவில் நிலநடுக்கமாகும்.

அதாவது அந்த வாயுவின் தன்மை அதிகரித்து வெடிக்கும் தன்மை வரும். அந்த இடம் நேராகக் கீழே இறங்கும். அந்த இடத்தில் மட்டும் தான் நிலநடுக்கமாகும். ஒரு சில நிமிடங்களில் அடங்கிவிடும்.

ஆனால் அதே போல் அந்த நட்சத்திரத்தின் மின் அழுத்தங்களின் நிலைகள் கடலில் படும் போது அங்கே உப்புச் சத்து இருக்கிறது. இந்த பூமிக்குள் ஊடுருவாதபடி கடலிலே அந்த உணர்வின் சத்து பட்டபின் அது யுரேனியமாக மாறுகின்றது.

1.எந்தந்தெந்தப் பகுதியில் எந்தெந்த நட்சத்திரத்தின் தன்மை படருகின்றதோ
2.அதற்குத் தகுந்த மாதிரி எத்தனையோ வகையான யுரேனியத் தனிமங்களாக
3.அதனின் வலுவுக்குத் தக்கவாறு அங்கே உறைந்து மணலாக மாறுகிறது
4.அதற்குப் பல பெயர்களையும் (தோரியம் புலுட்டோனியம்) வைக்கின்றனர்.

பின் என்ன செய்கின்றான்…? அதைப் பிரித்து எடுத்து அந்த அணுவைப் பிளக்கின்றான். அந்தக் கதிரியக்கப் பொறிகளை அடக்குகின்றான்.

கடல் நீரில் உள்ள ஹைட்ரஜன் (கண நீர்) அந்த உணர்வின் தன்மை கொண்டு அழுத்தத்தின் தன்மை கொண்டு அதை வெடிக்காத மாதிரிப் பாதுகாக்கின்றான்.

ஆகவே ஹைட்ரஜன் என்ற நிலைகள் வந்தாலும்… அடர்த்தியின் தன்மை கொண்டு ஒளிக்கதிர்களைச் சேர்த்து மீண்டும் வெடிக்கப்படும்போது (ஹைட்ரஜன் வெடிக்கப்படும் போது) என்ன நடக்கிறது…?

சனிக் கோளிலிருந்து வரக்கூடிய நிலைகள் (நீர் சத்து) ஒவ்வொரு அணுக்களிலும் கலந்துள்ளது. அந்தச் சனிக்கோளிலிருந்து வடிக்கப்படுவது தான் கடலாக மாறுகின்றது.

அந்த உணர்வின் தன்மையுடன் ஹைட்ரஜன் வரப்படும்போது வான்வீதியிலே இது வெடித்த பின் தன் இனத்தின் தன்மை ஜீவ சக்தியை இழக்கச் செய்கின்றது.

1.இங்கே வளரும் தாவர இனங்களுக்குள் ஊடுருவி
2.அதற்குள்ளும் கதிரியக்கப் பொறிகள் வெகு தூரம் பரவப்பட்டு
3.அதிலிருக்கும் ஜீவ சக்தியையே எடுக்கச் செய்து விடுகின்றது
4.இதெல்லாம் இந்த ஹைட்ரஜனின் வேலைகள். விஞ்ஞான அறிவால் இதைக் கண்டு கொண்டார்கள்.

மூன்றாம் வகுப்பு முழுவதும் படிக்காதவன் (ஞானகுரு) இதை எல்லாம் உங்களிடம் சொல்கிறேன். நான் பார்த்து இதைச் சொல்கிறேன். நீங்களும் பார்க்க முடியும். “தன்னம்பிக்கை வேண்டும்…!”

எனென்றால் இயற்கையின் உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உள்ளதையும் அதில் உள்ள அதிர்வின் ஒலிகளைக் கொண்டு அதனின் உருவத்தையே விஞ்ஞானி படமாக இன்று வரைகின்றான்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் உணர்வுகள் பாயப்படும் போது உணர்வுகள் எப்படி இயக்கின்றது என்பதை விஞ்ஞானி இப்படிக் காணுகின்றான்.

அதைப் போன்று தான் அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் உணர்வின் இயக்க உணர்ச்சியின் தூண்டுதலைப் பார்த்தான். எண்ணங்கள் கொண்டு எப்படி உருவானது என்ற நிலையை அவன் கண்டுணர்ந்தது தான் பேரண்டத்தின் உண்மை நிலைகள் அனைத்தும்.

அவனுக்குப் பின் வான்மீகி கண்டான். பின் வியாசகன் கண்டான். அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட நிலைகள எடுத்தார்கள் பின் வந்த ஞானிகள் அனைவருமே…!

Leave a Reply