ஞானப் பாதையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

patience importance

ஞானப் பாதையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய மனித வாழ்க்கையில் நாம் பலதரப்பட்டோருடன் ஜீவிதம் நடத்த உறவாட வேண்டியுள்ளது. அப்படிப் பழகுபவர்களின் குணங்களில் தீயகுணம் நற்குணம் என்ற நிலையை அறியக் கூடிய தன்மையை நாம் எப்படிப் பெற முடியும்…?

சாதாரண நிலையில் எல்லாத் தீய குணங்களையும் தீய பழக்கங்களையும் கொண்ட கயவனின் உணர்வின் எண்ணம்
1.தன்னுடைய அதிகப்படியான சிந்தனையின் செயலை
2.எண்ணத்தில் தீயதிற்கு செயல்படுத்தியவனின்
3.சரீர உணர்வின் ஆரோக்கியத்தில் கூட அதிக பாதிப்பு இருக்காது.

ஒரு பித்தளைப் பாத்திரம் அது எப்படி உறுதி கொண்டதாக உள்ளதோ அதைப் போன்று திருடனின் குணத்தில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு அவன் செயல் உறுதி கொண்டதாக இருக்கின்றது.

ஆனால் சமுதாயத்தில் அவன் நல்லவனாகக் காட்டிட
1.அவனுடைய செயல் எல்லாவற்றையும் அவன் பூசிக் கொள்ளும் முலாமாக
2.எதனையும் தன்னுள் கலக்கச் செய்யும் செயலாக
3.அந்தத் தீயவனின் நிலை தான் வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் நிலையாக
4.இன்றைய கலியின் உணர்வு நிலை செயலாகின்றது.

உதாரணமாக… மண் பாண்டத்தில் எதனையும் எந்த முலாமும் பூசாமல் அதிலே சமைத்துச் சாப்பிட முடியும்.
1.எந்தத் தீயநிலையும் மண்பாண்டத்திற்கு இருப்பதில்லை
2.ஆனால் சிறிது கவனப் பிசகு ஏற்பட்டாலும் உடைந்துவிடும் அந்த மண்பாண்டம்.

அதே போல் தான்..
1.நல்லவர்களைத் தீயவர்கள் ஏமாற்றுவது மிகவும் சுலபம்
2.தீயவனை நல்லவனாக்கவோ நல்வழிப்படுத்தவோ மிக மிகக் கடினம்.

சமுதாயத்தில் நல் உணர்வு கொண்டோர் தன் உணர்வுக்கொப்பத் தான் ஒவ்வொருவரும் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தைச் செலுத்தி எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டுமென்ற உணர்வில் அவர்களின் செயல் செல்கிறது.

இருந்தாலும்…
1.தீய நிலைகள் மோதும் பொழுது அவர்களுடைய உணர்வெடுக்கும் அலையால்
2.பதட்டத்தின் சிதறல் மண்பாண்டத்தைப் போன்று உடைந்து விடுகின்றது.

ஆனால் நயவஞ்சகத்திலேயே எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள தீயவர்களின் குணம் எந்த நிலைகள் வந்து மோதினாலும் உடைவதில்லை. அவரின் உணர்வின் அலை பித்தளைப் பாத்திரத்தைப் போன்று.

இதைப் போன்ற ந்நிலையில் இருந்தெல்லாம் மனித ஆத்மாக்கள் எப்படி மீள முடியும்…?

நல் உணர்வு பெறும் பொழுதும் மீண்டும் மீண்டும் எண்ணத்தின் சிதறல்கள் வாழ்க்கையில் மோதும் பொழுதும் எல்லாவற்றையும் துறந்து சந்நியாசம் வாங்கியவர்கள் இந்தப் பூமியில் பலருண்டு.

இந்த நிலையில் மீளும் நிலைதான் சிந்தனையில் சீர்படுத்தும் சிகரமான ஆத்ம ஒளி பெறும் நிலை. அதாவது…
1.பதட்டமான காலங்களில் உணர்வின் எண்ணத்தை அவசர வேகத்தில் சொல் ஆற்றலை வெளிப்படுத்தாமல்
2.ஒவ்வொரு கால தருணத்திலும் எண்ணத்தின் சிந்தனையை நிதானப்படுத்தி
3.அத்தருணத்தில் மோதக்கூடிய எந்தச் செயலாக இருந்தாலும்
4.ஒரு நிமிட சிந்தனையால் உண்மையை அறியக்கூடிய நிதானத்தால்
5.மண்பானையை உபயோகிப்பதைப் போன்று உணர்வின் வேகத்தைப் பாதுகாத்தல் அவசியம்.

ஆகவே… நல்நிலையில் “ஏமாற்றும் தன்மையை..” சிந்தனையில் உணர்ந்துவிட்டோம் என்றால்
1.உணர்வை வேகமாகச் செலுத்தி தீய உணர்வலையுடன் நல்லதை மோதவிடாமல்
2.சிந்தனையில் நிதானப்படுத்தும் சொல் செயலால்
3.நல்வளர்ப்பின் நல் ஆத்மாவுடன் தீயதிலிருந்து விடுபட்டு
4.தன் ஆத்மா சிகரத்திற்கு செல்லும் சீர்படும் சிந்தனையால் ஒவ்வொருவருமே சித்தனாகலாம்…!

Leave a Reply