கீதா உபதேசம் செய்யும் கண்கள்

Hare Krishna hare krishna

கீதா உபதேசம் செய்யும் கண்கள்

 

உதாரணமாக ஒரு ஆமையை உற்றுப் பார்க்கும் நரி அதைத் தன் இரைக்காக விழுங்க எண்ணுகின்றது. நரியைப் பார்த்த உடனே ஆமை தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கின்றது.

இதிலே சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் அந்த நரியின் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வைக் கவர்ந்து கொண்டால் அது வலிமையானது…!

இதை அர்ச்சுனன் என்று காட்டுகின்றனர். அவன் மிகவும் திறமைசாலி ஆனவன். குறி வைத்துத் தாக்கக்கூடிய வல்லமை பெற்றவன்… குறி தவறாது அர்ச்சுனனுக்கு.

அர்ச்சுனனுக்கு யார் கற்றுக் கொடுப்பது…? கண்ணன் தான். அந்த சகல சக்தியும் அர்ச்சுனனுக்குக் காட்டுகின்றான். எதன் வலிமையோ அதனை நிலையை உணர்த்துகின்றான் என்ற நிலையை காவியத் தொகுப்புகள் தெளிவாக கூறுகின்றது.

கீதா உபதேசத்தைப் படிக்கும்போது அதை நீங்கள் நுகர்ந்து இதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் கீதா உபதேசம் கண்ணன் எங்கிருந்தோ கொடுக்கின்றான்…! என்று தான் நீங்கள் படிக்க முடியுமே தவிர
1.ஆமையின் கண்கள் தான் இந்த நரி உன்னை விழுங்கிவிடும் என்ற
2.உபதேசத்தைக் கொடுக்கின்றது என்ற நிலைகளை நீங்கள் இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆகவே இந்தப் புலனறிவான அந்த அர்ச்சுனன் ஆமையைத் தாக்கியபின்… அந்த உணர்வுகள் ஆமையின் உடலுக்குள் சென்ற பின்… அதனுடைய சாந்தமான குணத்தை அது அமிழ்த்தி விடுகின்றது. நரியின் உணர்வே ஆமைக்கு வருகின்றது.

ஆனால் குறி வைத்துத் தாக்கியபின் இந்த சாந்தமான அணுக்குள் காந்தம் உண்டு. அந்தக் காந்தம் இழுத்து நரியின் உணர்வைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளப் போகும்போது சகாதேவன்.

நரியின் உணர்வை ஆமை தனக்குள் இணைத்துக் கொள்கின்றது என்ற நிலையை இந்த உணர்வினை சகாதேவன் என்று கூறுகின்றனர். புலனறிவு ஐந்தையும் இப்படித் தெளிவாக்குகின்றனர்.

அதே சமயத்தில் இந்த நரியின் உணர்வினைச் சாந்தமான ஆமையின் உணர்வுக்குள் சேர்த்த பின் நகுலன்…
1.இந்த நரி எப்படி உருவானதோ அதைப் போல
2.”உணர்வின் பொறிகளை எழுப்பும்” என்பதனை இங்கே காட்டுகின்றனர்.

இது புரியவில்லை என்று விட்டுவிட வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் இதுதான்…!

இது உங்களை நீங்கள் அறிவதற்கும்… பிறர் அவர்கள் வாழ்க்கையில் துயரப்படுவதைக் கேட்டறிந்தால் அதனால் உங்கள் உடலிலே எப்படி மாற்றம் அடைகின்றது…? என்று அறிந்து கொள்ளலாம்.

அறிந்த நிலை கொண்டு இதிலிருந்து மீட்டுவதற்கு உபாயத்தை நாம் கையாளவில்லை என்றால் பரிணாம வளர்ச்சியில் வந்தது போலே நாமும் தேய்பிறையாகச் செல்ல வேண்டியதுதான். இன்று மனிதன்… நாளை மனிதனல்லாத நிலையை உருவாக்கி விடும் நம் உயிர்.

ஆனால் அன்று ஞானிகள் கூறிய அருள் வழியில் நாம் செயல்படுத்த வேண்டும். அதற்குத்தான் இதைக் கூறுகின்றோம் (ஞானகுரு).

அப்பொழுது நரியின் உணர்வுகள் ஆமையின் உடலிலே இணைந்து கொண்டபின் சாந்தமான ஆமையின் உடலுக்குள் இது வலுவாகின்றது. இது பீமன். எதையும் அடித்து நொறுக்கும் உணர்வுகள் அந்த உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அதே சமயத்தில் இது கூர்மையாகப் பார்த்தது. அனால் ஆமையை இந்த நரியால் அடக்க முடியவில்லை. ஏனென்றால் ஓட்டுக்குள் ஒளிந்து விடுகின்றது.

ஆனாலும் நரியின் உணர்வினை இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்டபின் இது வலிமையானபின் வேறு வழியில்லை. புல்லை மேய முடியவில்லை. இந்த உணர்வின் தன்மை அதற்குள் சேர்ந்துவிடுகின்றது.

இந்த உடலை விட்டுச் செல்லும் இந்த உயிரான்மாவிற்கு… அதுதான் கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான்.

1.எதன் வலிமை பெற்றதோ… இந்த உடலை விட்டு இந்த உயிர் செல்லப்படும்போது
2.எந்த நரியின் உணர்வை எடுத்ததோ அதற்குச் சாரதியாக இந்த உயிரான்மாவை நரிக்குள் அழைத்துச் செல்கின்றது.

வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! கீதா உபதேசத்தில் இந்தக் கண்கள் எதன் வலிமை அதனுள் இருந்து கவர்ந்ததோ அதை இணைத்துக் கொடுக்கின்றது.

அதனால்தான் இந்த கண்ணன் பிரம்மத்தைச் சேர்ந்தது என்பார்கள். அது உருவாக்கும் திறன் பெற்றது என்பதனை இங்கே தெளிவாக்கப்படுகின்றது.

இப்படி அந்த நரியின் உடலுக்குள் ஆமையின் உயிரான்மா சென்ற பின் நரியின் ரூபமாக மாற்றுகின்றது. அப்பொழுது ஆமை நரியாகப் பிறந்தபின் அந்த நரி தன் குட்டியைப் பாதுகாக்கின்றது. உன்னைப் பாதுகாக்கும் உடலை அந்த உணர்வைக் கொடுப்பதைத் தான் தர்மன் என்று காட்டுகின்றார்கள்.

1.புலனறிவு ஐந்தானாலும் இதன் வழி சென்ற பின்
2.உன்னைப் பாதுகாக்கும் இடம் அதுதான் என்று அந்த நிலையை
3.வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! என்று கண்ணன் சொல்கிறார்.

அந்த நரியின் உடலுக்குள் ஆமை சென்று அது குட்டியான பின் அந்தக் குட்டியைப் பாதுகாக்கின்றது நரி.
அந்த நரியின் உடலுக்குள் ஆமை சென்று அது குட்டியான பின் அந்தக் குட்டியைப் பாதுகாக்கின்றது நரி.

இந்தk கண்கள் எப்படி எல்லாம் நம்மை வழி நடத்துகிறது என்று நாம் புரிந்து கொள்வதற்கு கீதா உபதேசத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

Leave a Reply