உலக நிலையையே இவ்வாறறிவு படைத்த மனிதன்தான் மாற்றுகின்றான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Spiriual science

உலக நிலையையே இவ்வாறறிவு படைத்த மனிதன்தான் மாற்றுகின்றான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அனைத்துமே ஆவிதான்… ஆவியிலிருந்து வந்தது தான் அனைத்து உலோகங்களும்… ஜீவராசிகளும்…! அந்நிலையிலிருந்து பிரித்தெடுத்து அதனதன் தன்மையில் அறியும் ஆற்றலைப் பெற்றுள்ளோம்

இப்பூமியில் இயற்கையிலிருந்து எடுத்த நிலைகளிலிருந்து அணுகுண்டு செய்து இப்பூமியில் புதைத்து வைத்துள்ளார்கள். சகல பாதுகாப்புடனும் அவர்கள் பாதுகாத்து வைத்த உலோகத்தினாலான துருப்பிடிக்காத இரும்பைக் கொண்டு பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

பலர் பதப்படுத்தும் நிலையில் பதப்படுத்தி வைத்துள்ளார்கள். இப்பூமியிலிருந்து எடுத்த உலோகத்திலே தன் அறிவினால் விஞ்ஞானம் கொண்டு இவ்வணுகுண்டைச் செய்து வைத்துள்ளார்கள்.

அனைத்துமே ஆவிநிலை ஆகக்கூடியதுதான். உதாரணத்திற்கு தங்கத்தினால் ஓர் ஆபரணத்தைச் செய்து இன்று நீ பார்க்கும் எடைக்கும் பத்தாண்டிற்குப் பிறகு அவ்வாபரணத்தை உபயோகிக்காத நிலையிலேயே நிறுத்திப் பார்த்தால் அதன் நிறையில் ஒரே நிலை இல்லாமல் குறைந்துதான் இருக்கும்.

1.தேய்மானம் என்பார்கள்…!
2.பிற வஸ்துவில் பட்டுத் தேய்வதல்லை
3.இக்காற்றில் கலந்துள்ள ஆவித் தன்மையினால் இப்பூமிக்குள்ள காந்த சக்தியைக் கொண்டு ஈர்ப்பதினால் அதுவும் ஆவியாகிறது.

அனைத்து உலோகங்களின் நிலையும் இதுதான். இவ்வுலக நிலையும் இதுதான். இவ்வுலகம் ஆவியை ஈர்த்து அவ்வாவியையே வெளிப்படுத்துகிறது.

அதனால்தான் இன்று விஞ்ஞானம் கொண்டு செய்திடும் அணுகுண்டைப் பாதுகாக்கும் நிலை கொண்ட அவ்விரும்புக் கவசமே இவ்வுலகம் ஈர்த்து ஆவியை வெளிப்படுத்தும் தன்மையில் அதன் நிலையும் ஆவியாகி… “அதில் ஏற்படும் சிறு துவாரத்தினால் வரப்போகின்றது இவ்வுலக மாற்றமே…!”

இன்று விஞ்ஞானம் கொண்டு சூரியனிலிருந்து வரும் சக்தியினால் பல நிலைகளைச் செய்திடலாம் என்று விஞ்ஞானப் படுத்துகிறான். சூரியனிலிருந்து வந்த அணுக்கதிரினால் பூமியில் ஏற்பட்ட கனி வளங்களையும் பல திரவ வஸ்துக்களையும் தன்னிலைக்கு ஈர்த்து எடுத்துவிட்டான்.

இன்று இவன் செயற்கைக்காக சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிரை ஈர்த்து (SOLAR POWER) அதிலிருந்து பல சாதனை செய்து காட்டுகின்றானாம். இக்காற்றையே கரியாக்கி வாழ்கின்றான்.

1.வரும் சக்தியையே ஒவ்வோர் இடத்திற்கும் தன்னிலைக்குகந்த விஞ்ஞானமாக்கி ஈர்த்து எடுத்து விட்டான்
2.வாழும் மனிதர்கள் இக்காற்றிலிருந்து பிரித்தெடுத்து நல் சுவாசம் எடுப்பதற்குண்டான சக்தியை அழித்து வருகிறான்.
3.இன்றைஅ விஞ்ஞானத்தினால் வந்த வினைதான் இது…!
4.மனிதனுக்கு ஆறறிவு என்று அவன் பெற்ற அறிவினாலேயே உலக நிலையையே இவ்வாறறிவு படைத்த மனிதன்தான் மாற்றுகின்றான்.

இதனால் இவ்வுலகம் மட்டும் மாறப்போகிறதா…? உலகுடன் தொடர்பு கொண்ட எல்லா மண்டலங்களுமே மாறத்தான் போகின்றன.

இன்று இவ்வுலகில் வாழும் மக்களினால் வந்த வினை தான் அது.

1.ஆத்மீக வழியை வழியமைத்தால் ஏற்பதற்கும் ஆளில்லை.
2.இதன் நிலை அறிந்துதான் பல சித்தர்கள் பல உண்மைகளையே மறைத்தார்கள்.

இன்று குழந்தை பெறுவதற்கே செயற்கை முறைப்படுத்திப் பேழையில் கரு வளர்த்து அக்கருவை தாய்க்குச் செலுத்திக் குழந்தையை வளர விடுகின்றானாம்.

இன்று ஒரு சித்தனால் தாயும் தந்தையும் இல்லாமல் இக்காற்றில் உள்ள சகல சக்தியிலும் கலந்துள்ள இம்மனித ஜீவ அணுவிற்கு வேண்டிய ஜீவ அணுவையே பிரித்தெடுத்து அப்பிரித்ததின் ஜீவ அணுவை வளரவிட்டுக் குழந்தையாக்கிக் காட்ட முடியும்.

புராணக் கதைகளில் படித்திருப்பீர்… ஆறுமுகனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள் என்று.

அந்த அறுமுகன் எந்தத் தாயின் கர்ப்பத்தில் இருந்தான் என்பதனைச் சூட்சுமத்தில் மறைத்தார்கள். அனைத்தையுமே இந்நிலையில் வெளியிட்டு நான் என்ற ஆணவத்தை ஏற்படுத்திடவும் விரும்பவில்லை.

நம் சக்தியை நல்வழிக்குச் செலுத்திவிட்டால் அந்நிலையில் என்றுமே நிலைத்திருக்கலாம். சக்தியையே… “நமக்குத் தெரிந்தது…! என்று ஆணவத்தால் செய்து காட்டி என்ன பயன்…? என்றுணர்ந்துதான் அன்றே பல சித்தர்களினால் பலவும் மறைக்கப்பட்டன.

1.எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்தினால்
2.சகல நிலையையும் சகலரும் அறிந்திடலாம்.

Leave a Reply