இன்றைய விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷங்களை மாற்றி அமைப்போம்…! என்று உறுதி கொள்ளுங்கள்

air pollution

இன்றைய விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷங்களை மாற்றி அமைப்போம்…! என்று உறுதி கொள்ளுங்கள்

 

நமது குரு காட்டிய அருள் நெறிகளை இப்பொழுது உங்களிடம் பதிவு செய்கின்றேன். ஏனென்றால் இன்று குரு ஒளி உடல் பெற்ற நாள் தான் வைகுண்ட ஏகாதசி.

1.அவரைப் போலவே நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றுங்கள்
2.இந்த உடலுக்கு பின் இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுங்கள்.

ஆனால் உங்களுக்காக… நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களை மாற்ற முடியாது. சாமி மாற்றுவார்… சாமியார் மாற்றுவார்… என்று சொன்னால்
1.நீங்கள் அந்த உணர்வை எண்ணுகின்றீர்களோ
2.அதை உங்கள் உயிர் தான் உருவாக்குகின்றது.

நீங்கள் எல்லாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டுமென்று எண்ணும்போது முதலில் நான் அதைப் பெறுகின்றேன். நீங்களும் இதே போல இந்த உலக மக்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டுமென்று ஏங்கினால் அதை நீங்களும் பெறலாம்.

நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் இதை எல்லாம் பின்பற்றுவோம். அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால்
1.நான் ஒருவரைப் பார்த்தேன்.. அவர் தீமைகளைக் கேட்டேன்…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நான் பெற்று என் ஆன்மாவைத் தூய்மையாக்கினேன்
3.பின் அந்த அருள் சக்தி அவர்கள் பெற்று அவர்களுக்கும் நல்லாக வேண்டுமென்று சொன்னேன்
4.அதன் வழியில் அவர்கள் நன்றாக ஆனார்கள் என்று இந்த சந்தோஷம் உங்களுக்கு வரும்.

இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

அப்படி அல்லாமல்… ஒருவர் என்னைத் திட்டினார்… இரு நான் உன்னைப் பார்க்கின்றேன் என்று அவனைத் தொலைத்தேன்…! என்ற நிலை வரக்கூடாது.

அந்த அருள் உணர்வைப் பெற்றேன்… அவன் தீமைகளில் இருந்து விடுபட்டான்… அவனும் நல்லவனான்… அந்த உடலில் இருந்த நோய்கள் விலகியது என்று இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வாருங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் (ஞானகுரு) காட்டினார் நான் உங்களுக்கு அந்த நிலையை உணர்த்துகின்றேன்… பதிவாக்குகின்றேன். இதைச் செயலில் ஆக்குவது உங்களுடைய பொறுப்பு தான்.

ஆகவே..
1.பகைமையை மாற்றுங்கள்
2.பண்பை வளர்த்து கொள்ளுங்கள்
3.அன்பை வளர்த்து கொள்ளுங்கள்
4.அரவணைக்கும் சக்தியை உங்களுக்குள் கூட்டிப் பேரன்பை உருவாக்குங்கள்.

பேரிருளை மாற்றுங்கள். பேரன்பைக் கூட்டினால் இருள் என்ற நிலைகள் நமக்குள் வராது தடுக்க முடியும் குருநாதர் பெயரைச் சொல்லித்தான் இந்த தபோவனம் அமைத்துள்ளோம்.

1.அவர் அணியில் தான் நாம் எல்லோரும் இருக்கின்றோம்.
2.நாம் எல்லோரும் அருள் வழியில் செல்வோம்
3.இன்றைய விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷங்களை மாற்றி அமைப்போம்…! என்று உறுதி கொள்ளுங்கள்.

Leave a Reply