செவி வழி கேட்டு… கண் வழி கவர்ந்து… உயிர் வழி மகரிஷிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான்… இன்றைய உலக விஷத் தன்மையிலிருந்து தப்ப முடியும்

SOUL PROTECTION UPDATED

செவி வழி கேட்டு… கண் வழி கவர்ந்து… உயிர் வழி மகரிஷிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான்… இன்றைய உலக விஷத் தன்மையிலிருந்து தப்ப முடியும்

குரு உணர்த்திய அருள் வழியில் எந்த நிலையில் நாம் வாழ்ந்தாலும்… எவ்வளவு தர்மத்தின் சிந்தனையில் இருந்தாலும்…
1.பிறர்படும் கஷ்டங்களையோ
2.பிறர்படும் துயரங்களையோ
3.பிறர் செய்யும் தவறுகளையோ எதையும் கேட்டுணராது நாம் இருக்க முடியாது.

பாலிலே சுத்தமான பாதாமைப் போட்டுச் சத்தாக உருவாக்கி உணவாக அதைக் குடித்தாலும் சந்தர்ப்பத்தால் தீமை என்ற உணர்வினை நுகர்ந்தறிந்தால் அந்த பாலின் சத்து நமக்குள் வளராது அதையே அழித்துவிடும்.

அதே போல் எவ்வளவு சத்து கொண்ட உணர்வை உணவாக உட்கொண்டாலும் வேதனையான உணர்வினை அடிக்கடி சுவாசிக்கும் போது வேதனையின் தன்மை வளர்ந்து… நீங்கள் உணவாக உட்கொண்ட சத்தான ஆகாரத்தையும் அது பலியாக்கி விடும்.

இதைப் போன்ற நிலைகளில்…
1.நம்மைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இன்றைய நஞ்சு கொண்ட உலகில்
2.விஞ்ஞான அறிவால் வெளிப்பட்ட சில விஷத் தன்மைகள்
3.தீமையின் உணர்வாக மனிதருக்குள் விளைந்து விட்டது.

அவ்வாறு விளைந்த உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியாலும் கவரப்பட்டு உலகம் முழுமைக்கும் நஞ்சு கொண்ட அலைகளாகச் சேமித்து வைத்துள்ளது. அதே சமயத்தில் நாம் கேட்டறிந்த அந்த உணர்வுகளை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பதிவாக்கி வைத்துள்ளோம்.
1.அப்படிப் பதிந்து கொண்ட உணர்வுகள்
2.மனிதர்கள் வெளி விட்ட நிலைகளை… அது வளர… அது கவரும்.
3.கவர்ந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் நுகரும் போது
4.அந்த உணர்வின் செயலாகவே நம்மை இயக்கும்.
5.அதனின் சத்து நம் உடலுக்குள் விளைந்து தீமையின் நிலைகளே விளையும். (நோயால் இன்றைய உலகம் அவதிப்படும் நிலை)

ஆகவே இதை அகற்ற வேண்டும் என்றால் தீமையை அகற்றிய அந்த அருள் ஞானியின் உணர்வை நாம் நுகர்ந்தே ஆக வேண்டும். அந்த நுகரும் ஆற்றல் பெறச் செய்வதற்குத்தான் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… நமது குருநாதர் காட்டிய நிலைகளில் இந்த உபதேச வாயிலாக உண்மைகளை உரைக்கின்றோம்… உயிரின் ஆக்கங்களைப் பற்றித் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

அருள் மகரிஷிகள் பெற்ற உணர்வினைப் பெற உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டும் நிலைகளாக இந்த உணர்வினைப் பதிவு செய்கின்றோம்.

இப்படிப்பட்ட உணர்வின் இயக்கத்தால் (உபதேசங்கள் மூலம் https://wp.me/p3UBkg-4BE) அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதியினை ஏற்படுத்தினால்தான் தீமைகளை அகற்றிட முடியும்… உங்களால் சாத்தியமாகும். 

தவமோ குண்டலினி யோகமோ மற்ற யோகங்களோ செய்தாலும் இதைப் பெறுவது மிகக் கடினம்.

அந்த மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் அதிகமாச் சேர்த்து… ஒருக்கிணைந்த அதனின் உணர்வின் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்த வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளியுடன் கலக்கச் செய்ய வேண்டும்..

உடல் பெறும் நஞ்சினை அங்கே கரைத்து விட்டு… இந்த வாழ்க்கையில் அறிந்திடும் அறிவின் நிலைகள் நிலைக்கச் செய்து… உயிருடன் ஒன்றி… என்றும் உண்மைப் பொருளாக மெய்ப் பொருளாக ஒன்றி… பிறவா நிலை என்ற பெரு நிலை அடைந்து ஒளியின் சரீரமாக நாம் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

முன்னோர்களின் உயிரான்மாக்களை இப்படி நிலைக்கச் செய்த பின் அவரின் உணர்வைக் கொண்டு நாம் விண்ணை நோக்கி ஏங்கும்போது அந்தச் சப்தரிஷிகளின் அருள் உணர்வை நாம் எளிதில் பெற முடியும்.
1.நம்மை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்
2.இந்த வழி இல்லாதபடி நாம் எதையும் செய்ய முடியாது…!

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி நாம் இதனைச் செயல்படுத்த வேண்டும்.

Leave a Reply