உலகையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் உருவான விதம்

virus

உலகையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் உருவான விதம்

1.அணு குண்டும் ஹைட்ரஜன் குண்டும் போய்…
2.மனிதனுக்கு மனிதன் தீவிரவாதம் என்ற நிலைகளும் போய்
3.அவைகளிலிருந்து வந்த விஷத் தன்மைகள் கலந்து மற்ற விஷப் பூச்சிகளில் பட்டு அது இறந்து
4.விஷக் கிருமிகளாக மாறி மனிதனைக் கொல்லும் தன்மைக்கு இன்று வந்து விட்டது.

அதே சமயத்தில் நாம் சுவாசித்த இந்த உணர்வுகளோ நம் உடலுக்குள் போய் நல்ல அணுக்களை எல்லாம் மாற்றி
1.விஷ அணுக்களாக உருவாக்கி நமக்குள் நோயும்
2.நம் உடலிலிருந்து வரக்கூடியது நம்மைச் சார்புடையோர்களுக்கும் பாய்ந்து
3.அவர்களுக்கும் இந்த நோய்கள் வந்துவிடுகின்றது.

உலகம் முழுவதும் இப்படிப் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று நம் உடலுக்குள் நாம் இதைப் பெருக்கி கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பத்திரிக்கை வாயிலாகவோ டி.வியின் நிலைகளாகவோ உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை பதிவாகிக் கொண்டே உள்ளது.

அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த விஷத்தின் தன்மையை உடலில் வளர்த்து நமக்குள் விஷக் கிருமிகளைத் தான் உருவாக்குகின்றோம். அதனா நமக்குள் கடும் நோய்களே வந்து விடுகின்றது.

புதுப் புது நோய்கள் வரக் காரணமே…. இதைப் போன்று கேட்ட உணர்வை நுகர்ந்து… பதிவாக்கி… மீண்டும் அதையே நுகரும் நிலை ஆகி… அது நம் இரத்த நாளங்களிலே விஷக் கிருமிகளாக மாறுகின்றது.

இதன் உணர்வைச் சொல்லாகவோ… செயலாகவோ… நம் பார்வையில் பார்க்கப்படும்போது நமக்குள்ளும்… நம்மை சார்புடையோர் உடல்களிலும்… பாய்ச்ச முடிகின்றது.

இப்படி விஷத்தின் தன்மை கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரான ஈசனைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.

அவன் தான் (உயிர்) நம்மை இந்த உடலை உருவாக்கியவன் என்றும் இந்த மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைக் காக்க
1.ஞானியர் கண்ட உண்மையின் உணர்வை இங்கே உபதேச வாயிலாகப் பதிவு செய்வதை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.விஷக் கிருமிகளை ஒடுக்கி உங்கள் உடலுக்குள் அறியாத சேர்ந்த தீமைகளைத் தூய்மையாக்கிப் பழக வேண்டும்.

தங்கத்திற்குள் செம்பும் வெள்ளியும் வைத்து ஆபரணங்கள் செய்தாலும் அவைகளும் அதிலே இரண்டறக் கலந்து விடுகின்றது. மீண்டும் நகை செய்ய வேண்டும் என்றால் அவைகளைப் பிரிக்க நாம் திரவத்தை ஊற்றித் தங்கத்தைச் சுத்தமாக்குகின்றோம்.

இதைப் போலத்தான் எல்லாவற்றையும் ஒளியாக மாற்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால்… உடலிலுள்ள உறுப்புகளில் அதை அடிக்கடி செலுத்தப்படும்போது
1.விஷக் கிருமிகள் காற்றுடன் வந்து நம்முடன் கலந்திருந்தாலும்
2.அது பலவீனமாகி நல்ல உணர்வின் தன்மையாக மாற்றிவிடும்.

ஆனால் நோய்களையும் கிருமிகளையும் அகற்ற விஞ்ஞான அறிவு கொண்டு உடலில் உள்ள இரத்தங்களில் மருந்துகளைச் செலுத்தப்படுபோது உடல் முழுவதும் பரவி தீமையின் உணர்வை மாற்றுவது போல மாற்றினாலும்
1,கடுமையான மருந்துகளைக் கொடுக்கப்படும் போது
2.உடலில் உள்ள கிட்னிக்கு வரப்படும்போது அதைப் பலவீனப்படுத்தி
3.மறுபடியும் வேறொரு நோய் வருகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முறைப்படி நீங்கள் செயல்படுத்தும் போது உங்களுக்குள் வந்த தீமைகளையும் நோய்களையும் நீக்கும்… நம் கிட்னியையும் வலுவாக்கும்.

வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும்…? எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்ற நிலைகளையும் நாம் பெற முடியும்.

ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான். இருந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வால் வேதனைப்படுவதும் கவலைப்படுவதும் வெறுப்படைவதும் கோபப்படுவதும் தற்கொலை பண்ணுவதும் இந்த மாதிரி நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

ஆக மனிதனின் ஆசைகள் நிறைவேறவில்லை என்றால்…
1.நல்லது செய்து நல்லதைப் பழக்கப்பட்ட மனிதன்…
2.நல்லது செய்தே நொந்து போன மனிதன்
3.இது என்ன வாழ்க்கை…? என்று பேய் மனமாகி
4.இன்னொரு உடலுக்குள் சென்று அதே ஆசையின் உணர்வுகளாகி அவனையும் வீழ்த்தி
5.அதிக வேதனையை உருவாக்கிக் கொண்டு அடுத்து மனிதனல்லாத பிறவிக்கே போய் விடுகின்றது.

இது போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு அருள் உணர்வு பெற்று அருள் வாழ்க்கையில் நீங்கள் வாழ எமது ஆசிகள் (ஞானகுரு) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

குரு அருள் பெற்று… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… சந்தர்ப்பத்தால் அறியாது சேரும் தீய வினைகளை நீக்கி… அருள் உணர்வைப் பெருக்கி… உடல் நலம் பெற்று மன பலம் பெற்று… இந்த வாழ்க்கையில் அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்து… பிறவியில்லா நிலை அடையும் அந்த அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும்.

குடும்பத்தில் பண்பும் பாசமும் பரிவும் வளர்ந்து… தொழிலில் அரவணைத்து அன்புடன் வாழும் அருள் சக்தி பெற்று… தெளிந்த மனமும் மகிழ்ந்த உணர்வும் பெற்று… அருள்வாழ்க்கை வாழ்ந்து பேரின்ப பெருவாழ்வு பெற
1.இங்கே உபதேசித்த உணர்வுகள் உள் நின்று உங்களுக்கு நல்வழி காட்டி
2.அருள்வழி வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள்சக்தி பெற
3.எமது அருளும் குரு அருளும் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்.

Leave a Reply