மனித வித்தின் மகசூலே “ஞான வளர்ப்பின் பலனைக் கூட்டுவது தான்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

human-birth-treasures

மனித வித்தின் மகசூலே “ஞான வளர்ப்பின் பலனைக் கூட்டுவது தான்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கடலைக் காயை நாம் பயிரிடும் பொழுது தனி விதையாகத் தான் பயிரிடுகின்றோம். ஆனால்… செடி வளர்ந்து பலன் தரும்போது அக்கடலைக்காய் “இரண்டு விதையுடன்… பெட்டி போன்ற அமைப்பு பெற்று…” தன் வளர்ப்பின் வளர்ப்புப் பலனாக… அது எடுத்த சத்தின் ஊட்டப்பலனைப் “பலவாய்த் தருகின்றது…”

அப்பலனின் தொடர்பலன் அதன் பயிர் நிலை ஒரே தன்மையில்தான் வளர்ந்து கொண்டுள்ளது. அது எடுத்த அமிலத் தன்மைக்கொப்ப சத்தின் வித்து பலன் தருகின்றது.

அந்தக் கடலையை நம் தேவைக்கொப்ப உணவாகவும்… எண்ணையாகவும்… எடுத்துக் கொள்கின்றோம்…

அதே போல அச்செடியிலிருந்து வெளிப்பட்ட வளர்ப்புத் தன்மை யாவையும் பல நிலைகளில் கலக்கப்படுகின்றன.
1.கடலைச் செடியை மாடுகள் உட்கொண்டாலும்…
2.மாட்டின் சத்தான பாலைத் தான் அது தருகின்றது.

அதே கடலைச் செடியை உரமாக வேறு பயிர்களுக்குச் செலுத்தினோமானால்… எந்தப் பயிருக்கு கடலைச் செடியின் சக்கையை உரமாக இட்டாலும்…
1.நெல்லுக்கோ மற்ற பயிர்களுக்கோ இவ்வுரத்தைத் தந்தாலும்
2அதனுடைய சத்தை எடுத்து நெற் பயிர் தன் பலனைத்தான் தருகின்றது.

அதாவது… ஒரு பொருளின் தன்மை பலவாகப் பலவற்றில் கலக்கப் பெற்றாலும்… பலவற்றில் சேர்ந்தாலும் சேர்க்கப்படும் செயலினால் தன்னுடைய உண்மை நிலையைத் தான் பெறுவதில்லை…! பிற செயலுக்குச் சத்தாய்த்தான் அது அமைகிறது. ஆனால்…
1.தன் வித்தின் பலன்
2.தான் வளரும் பொழுது
2.தன் சக்தின் உண்மை வளர்ச்சியை வளர்த்துக் கொண்டே உள்ளது.

இத்தன்மையைப் போன்றுதான் பூமியின் வளர்ப்பின் வளர்ப்புகளுக்கு மற்றெல்லா வளர் தன்மைகளும்,..!

இதன் தொடரைப் போன்று… மனித ஆத்ம ஞானத்தில் பெறப் பெற்ற ஒலித்தன்மையின் ஒளி ஞானத்தைப் “பிற ஈர்ப்பில் எண்ணத்தைப் பலவாகக் கூட்டப்படும் உணர்வினால்” தன்னுடைய உண்மைத் தன்மையின் சத்துநிலை வளர்க்கும் வளர் தன்மை இழக்கப்படுகின்றது.

கடலைக் காயின் வித்தை மீண்டும் ஊன்றி வளர்க்காது அதை உணவாகவும் எண்ணையாகவும் மற்றவைகளுக்கு உரமாகவும் பயன்படுத்தினால் அதன் வளர்ச்சி தடைப்படுவது போல் மனிதன் உணர்வின் எண்ணத்தைப் பலவாக மோதச் செய்து விட்டால் “ஞானம் என்ற உயர்வின் வளர்ச்சி” தடைப்படுகின்றது.

ஆகவே ஞானம் என்ற உண்மை வித்தை மனிதன் ஊன்றச் செய்து தனக்குள் உள்ள சத்தின் பலனை வளர்ச்சி கொள்ளும் பலனினால்தான்
1.மனித உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவுமே வித்தாகிப்…. பலவாகி…
2.பல ஞான வளர்ப்புகளைத் தன் வளர்ப்பால் வளர்க்க முடியும்.

தன் உணர்வின் எண்ணத்தில் கலக்கப்படும் ஒவ்வொரு சத்திற்கும் இவ்வுடலே செயல் கொள்கின்றது. எண்ணமுடன் மோதும் எவ்வெண்ணமும் உணர்வாகி… இவ்வுடல் தன்மையின் செயலுடன்… அதற்குகந்த வளர்ப்புத் தன்மையில் உருவாகிறது.

இத்தொடரிலிருந்து தன் ஞானத்தை அறியக் கூடிய உருவாக எண்ணத்தில் மோதும் செயலைச் சமமாக்கி…
1.இவ்வாத்ம பிம்ப சரீரக் கோளமெடுத்த ஒலி சக்தியின் ஒளியை…
2.எண்ணமும் பகுத்தறியும் ஆற்றலும் செயல் திறமையும் கொண்ட ஒளி சக்தியை
3.ஞான சக்தியாக உயர் ஞானச் சக்தியாக வளர்க்க வேண்டும்

சூரியனைச் சுற்றி அதனின் குடும்பக் கோளங்கள் சுழன்று ஓடினாலும்… அதன் சத்தைத் தானெடுத்துத் தன் சமைப்பின் ஒளியாகச் சூரியன் தன்னைத்தானே ஒளிப்படுத்தி… தன் ஒளியின் பலனாய்த் தன் தொடர்பில் வளரும் மண்டலங்களை வளர்த்து… தன் ஒளியைக் கொண்டு பிறவற்றையும் வளர்க்கின்றது.

அதைப் போன்று
1.தன்னுள் உள்ள நாத விந்துவை “குருவாக… ஒளி பெறும் ஜோதி நிலையாக்க…”
2.எண்ணத்தின் உணர்வைத் தனக்கேற்ற சத்தாக எடுத்து
3.தான் பெற்ற நாத ஒலியின் உண்மை வளர்ப்பின்… நாத விந்துகள் வளரும் வளர்ப்பில்தான்
4.எண்ணத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.

தாவரங்களுக்கோ… கனிவளங்களுக்கோ… எண்ணத்தின் உணர்வு பகுத்தறியும் செயல் நிலை இல்லாததினால் தன் தன் சத்தின் வளர்ப்பு ஜீவநிலையுடன்… அது அது வளர்ச்சி கொண்ட அமிலத் தொடர்புக்கொப்ப தொடர் வளர்ச்சி வளர்கின்றது.

இதை எல்லாம் “இயற்கை” என்கின்றோம்.

ஆனால்… எல்லாவற்றையும் பார்த்து… உணர்ந்து… செயல் கொண்டு அறியும் மனிதன்… தன் எண்ணத்தின் உணர்வை இயற்கையின் தொடர்பற்ற “செயற்கையின் நிலையைப் பெறுகின்றான்..”

இதை ஒவ்வொருவரும் உணர்ந்து… தன்னுள் உள்ள ஜீவகாந்த நாத விந்துவை வளர்க்கும் உயர் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செலுத்துவதே மனித வளர்ப்பின் உண்மையான ப்லன்…!

 

Leave a Reply