மனித உருக் கரு உருப் பெறும் நிலைகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

sadaiyandi hills

மனித உருக் கரு உருப் பெறும் நிலைகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஓர் பொருளைச் செய்யவோ ஓர் பொருளை வளர்க்கவோ பலமான செயல் வலுக்கூடிய பிறகு தான் அந்தப் பொருள் உருப் பெற்று உபயோகமாகின்றது… அதன் பலனையும் பெற முடிகின்றது.

அதே போல இவ்வுயிரான ஆத்மா உருப் பெறவும் பலவற்றில் மோதி பல சக்திகள் பெற்று இப்பிம்ப நிலை பெறுகிறது.

1.தந்தை உடலின் அமிலம்… தாய் தரும் உயிர்த் துடிப்பு… இவற்றுள் கருவாகி வளர
2.தாயின் சத்து நிலையை உணவாகப் பல கோடி உயிரணுக்களை ஜீவ வளர்ச்சி தந்து
3.கர்ப்ப காலத்தில் எடுக்கவல்ல அறு சுவையின் உயிரணுவின் வளர்ப்புக்கு உணவு தந்து
4.கரு தோன்றி வளர்ந்து பிறப்பில் தன் உணர்வின் உயர்வை உணர்வுக்குகந்த உணவூட்டி
5.இவ்வுயிராத்மாவை வளம் பெற வலுத் தரும் இந்த உடலின் கோடானு கோடி அணுக்களுக்கும்
6.உயிராத்மாவின் சேவை நிலை செய்திடல் வேண்டும்.

உடலின் உயிரணுக்களுக்கொப்ப உணர்வு நிலை தோன்றி… உணர்வின் உந்தலில் எண்ணத்தைச் செலுத்தி… அதனதன் தேவைக்குகந்த உணவை அது அது பெறுகின்றது.

உடல் என்ற உருவக் கூட்டில் நமக்கு நண்பனும் உண்டு… எதிரியும் உண்டு.
1.உடலில் உள்ள உயிரணுக்களில் உணர்வுக்கொத்த சேவை நிலையை நம் உயிராத்மா தந்துதான்
2.தான் குடியிருக்கும் ஆலயத்தை பேணி வணங்குகின்றது.

உடலில் ஏற்படும் உபாதைகள் உணர்வில் மோதியவுடன்… இவ்வெண்ணம் மாற்று நிலையில் செல்லாமல்… உணர்வின் வேதனையை உணர்ந்தே உயிரின் ஆத்மாவும் செயல் கொள்ள வேண்டியுள்ளது. அதே போன்று உடலில் ஏற்படும் இன்ப உனர்விற்கும் இவ்வுயிராத்மாவின் செயல் நடக்கின்றது.

உடலின் உணர்வும் உடலில் வளரும் கோடானு கோடி அணுக்களும் உள்ளதென்றால் அவ்வணுக்களில் பல நிலைகள் உண்டு. இந்த உடல் திடம் கொள்ள… ஆறு நிலையான அமிலச் சேர்க்கையின் வளர்ச்சி கூடி ஏழாம் உருவ திடச் செயல் தான் “இப்பிம்பக் கூடு…!”

இந்த உடல் கலவையில் எல்லாமே உண்டு…!

இந்தப் பூமியில் பல இரசாயண அமிலத் தன்மைகள் வளர்ந்துள்ளனவோ அவற்றின் சீரிய குணம் கொண்ட ரசச் சக்தியும் தங்கச் சத்தும் இரும்பின் கருமை நிற அமில சத்தும் காந்த மின் ஒளி நிலையும் இதன் தொடர்பில் பல இரசாயண அமிலங்களும் உண்டு.

நீர் வாயு குண்டு அணு குண்டு போன்றவற்றைச் செய்விக்க பல உலோக மண் கலவைகளில் இருந்து அதனுடைய சத்தை நுண்ணிய அளவில் எடுத்துச் செய்விக்கின்றனர்.

அந்த நுண்ணிய பொருளினால் உலக்த்தையே அழிக்கவல்ல சத்து நிலை எப்படிச் சேர்க்கபப்டுகின்றதோ அதைப் போன்று இந்த உடல் சேர்த்த அமிலத்தில் சில விஷத் தன்மை கொண்ட அமிலச் சத்துகளும் உண்டு.

மனிதன் இட்ட பெயரில் அவ்வமிலத்தின் செயல் இல்லை. (விஞ்ஞானம் இன்னும் அதைக் காணவில்லை)

உயிரணுக்கள் ஜீவ சரீர ஞானச் செயல்… சொல்லாற்றல் கொண்ட… உருவ உணர்வு எண்ணச் சரீரம் அமைய… அதற்கு வேண்டிய அமிலக் கூறுகள் இந்தப் பூமியில் குறிப்பிட்ட சில இடங்களில் உண்டு.

கடலில் மலைப் பிரேதசங்கள் சிலவற்றிலும்… ஆழ் கிணறுகளிலும்… மனிதக் கரு உருப் பெறவேண்டிய அந்த அமிலச் சத்தை இந்தப் பூமி எடுத்து வெளிக்கக்கும் காற்றின் தொடர்பலைக்குச் செயல்பட
1.பல தெய்வத் தொடர்பு கொண்ட சப்தரிஷிகள் செயல் உருவிலேயே
2.பல ஆயிரம் காலங்களுக்கு முன்பே செயல்படுத்தியுள்ளனர்.

Leave a Reply