துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரத் தியானிக்க வேண்டிய முறை

polaris - north

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரத் தியானிக்க வேண்டிய முறை

 

அவரவர்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணி… அம்மா அப்பா அருளால் நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால்… அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களையும் “ஒன்றாகச் சேர்த்து”
2.உங்கள் கண்ணின் வழி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் உணர்வை
3.துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கி இருங்கள்.

அதைப் பெற வேண்டும் என்ற இச்சைப் பட வேண்டும். அந்த உணர்வை உங்களுள் கிரியையாக்கி… ஞானத்தின் வழி உங்கள் வாழ்க்கையை வாழ இது உதவும்.

1.உங்கள் உடலுக்குள் உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகத் திரட்டி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கி
3.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அந்த கண்ணின் ஈர்ப்பிற்கே வரும்….!

அந்தச் சக்திவாய்ந்த நிலைகள் ஈர்ப்புக்கு வரும்போது உங்கள் கண் “கனமாக” இருக்கும் வெகு தொலைவில் இருந்து வரக்கூடிய உணர்வை… எண்ணி ஏங்கும்போது…! அது நம் பூமியில் படர்ந்து வருவதை எளிதில் பெற முடியும்.

யாம் (ஞானகுரு) பதிவாக்கிய அந்த உணர்வின் தன்மை பெறச் செய்யும்போது.. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் நோக்கத்துடன் ஏங்கித் தியானியுங்கள் ஒரு இரண்டு நிமிடம்.

இப்பொழுது அந்தச் சக்திகள் உங்கள் கண்ணுக்கே வரும்.
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்துங்கள்.
2.கண்ணை மூடுங்கள்….!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களை இயக்கி கொண்டிருக்கும் “உயிரான ஈசனிடம்” இந்த உணர்வைச் செலுத்துங்கள்.

இவ்வாறு செலுத்துவதனால் உங்கள் உடலுக்குள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை போன்ற வேண்டாத உணர்வு கொண்ட அணுக்கள் இருந்தால்
1.அவைகளுக்கெல்லாம் ஆகாரம் செல்லாதபடி
2.உங்கள் இரத்தத்தில் மாசுபடும் நிலை வராதபடி தடுக்க இது உதவும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

புருவ மத்தியில் ஈர்க்கும் சக்தி வரப்படும்போது இப்பொழுது கனமாக இருக்கும். சிலருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள் உங்கள் புருவத்தில் மோதும்போது ஒளிக் கற்றைகள் தெரிய வரும்.

எனக்கு குருநாதர் எப்படிச் செய்தாரோ அதன் வழிப்படியே உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி உங்களுக்கும் அந்த அரும்பெரும் சக்தி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். அதன் வழியிலேயே நீங்கள் கவருங்கள்.

இப்பொழுது..
1.உயிர் வழி… துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிலிருந்து வரும் பேரருளை அது கவருகின்றது
2.உங்கள் உயிரின் தன்மை அது வலுப் பெறுகின்றது.
3.தீமைகள் புகாது தடைப்படுகின்றது.

உங்கள் மனதில் அமைதி கிடைக்கும்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானிக்கவும்.

வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் நல்லவை எல்லாம் கேட்டறிந்தாலும் இந்த உணர்வுகள் இயக்கணுவாக… உங்கள் இரத்ததில் வந்தவுடனே ஜீவணுவாக மாறுகின்றது.

உங்கள் கண்ணின் நினைவினை அந்த ஜீவணுக்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணும்போது இந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை அந்த உடலில் உள்ள ஜீவணுக்களும் அதைப் பெறுகின்றது.

“ஜீவான்மா…!” இன்னொரு உடலில் விளைந்தது ஆன்மா…! நீங்கள் பாசத்தோடு பண்போடு பிறருக்கு உதவி செய்தாலும் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அவர் உடலில் விளைய வைத்த அந்த வேதனை விஷத் தன்மை கொண்டு உங்கள் உடலுக்குள் வருகின்றது.

ஆக… அந்த ஆன்மாவுக்கு அது மாற்ற முடியாது…. மாற்றத் தெரியாது.

விஷமாக இருப்பதனால் இந்த இரத்தத்தில் இருந்து இரத்தத்தையே மீண்டும் மாசுப்படுத்தி அதனால் வந்த ஜீவணுக்களுக்கு ஆகாரம் கொடுத்து அதை வளர்க்கும் அதன் உணர்வே உங்கள் செயலில் வரும்.

இதைப்போன்ற நிலைகளை மாற்றி அமைக்க துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது உங்கள் உடலில் புது உணர்ச்சி அந்த இரத்த நாளங்களில் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்களில் கலந்து.,.. எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்

1.உங்கள் உடலில் உள்ள அந்த அணுக்கள் அந்தச் சக்தி பெற
2.அந்த அணுக்களை எண்ணி நான் (ஞானகுரு) ஏங்கித் தியானிக்கின்றேன்.

நீங்களும் அதே போல் எண்ணி ஏங்கும் பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் சந்தர்ப்பமும்…
2.அதைக் கவரும் சக்தியும்
3.அது வளரும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் உற்சாகம் அடையும். உங்கள் உடலைச் சுற்றி “ஒரு வெளிச்சம் வரும்…!”

Leave a Reply