சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம்… என்று சபதம் எடுப்போம்…!

light-worlds

சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம்… என்று சபதம் எடுப்போம்…!

1.அருள் ஞானத்தின் நிலைகளையே நீங்கள் பெறுங்கள்….
2.என்றும் அழியாத செல்வத்தையே தேடுங்கள்.
3.என்றும் அழியா ஒளி உடலையே பெறுங்கள்

“உடல் மாற்றும் நிலை” நமக்கு வேண்டாம்…!

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த உடலின் மாற்ற காலங்கள் வருவதற்கு முன் இந்த உலகத்தின் நிலைகள்…
1.இந்தப் பூமியே நிலை தடுமாறப் போகின்றது
2.இன்னொரு ஆயிரம் ஆண்டுகளுக்குள்…!

ஆயிரம் ஆண்டுகள் நாம் வாழ்வோம் என்பதை விட இந்த உயிரின் தன்மைகள் கொண்டு உடலின் மாற்றங்கள் ஆனாலும்… “மனிதனின் நினைவு இருக்காது…!” (உடல் இருக்கும்… மனித சிந்தனை இருக்காது)

ஆகவே அதில் சிக்குண்டு நரக வேதனையை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.

நம் பூமி சூரியனை விட்டு அகண்டு… ஆயிரம் ஆண்டுகளில் இது பிரிந்து சென்றால் இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை முடிந்தது.
1.பூமி முழுவதும் பனிப் பாறைகளாக மாறும்.
2.வியாழன் கோள் போல் விளையச் செய்யும்.
3.இந்தக் குடும்பம் சிதறுண்டு ஓடிவிடும்.

ஆகவே நட்சத்திரங்கள் (நம் பிரபக்சத்தைச் சேர்ர்ந்த 27 நட்சத்திரங்கள்) குடும்பங்களை மாற்றிக் கொள்ளும். எந்தெந்த நட்சத்திரங்கள் பிரிந்து செல்கிறதோ… அது அது முழுமை பெற்று
1.இதிலே சரிபாதிக்கு மேல் தாண்டி விட்டால்
2.அந்த நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியக் குடும்பங்களாக மாறும்.
3.ஒன்றி ஒரு வட்டமாக… 2000 சூரியக் குடும்பத்தில் ஒரு வட்டப் பெருக்காக மாறிவிடும்.

இதைப் போன்று காலம் மாறும் நிலைகள் வருகின்றது.

நம் குருநாதரும்… மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்த இந்த உண்மையின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். இதிலுருந்து விடுபட்டு
1.என்றும் அழியாப் பெருவாழ்வு என்ற நிலையில் ஒளிச் சரீரமாக்கி
2.நஞ்சினை மாய்த்திடும் ஒளியின் நிலைகளைக் கூட்டி அதனின் இயக்கமாக ஆக வேண்டும்.மகரிஷிகள் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்று இதைச் சபதமாக நீங்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும்.

இதைப் படித்துணர்ந்தோர் அனைவரும்
1.இனி எத்தகைய தீமைகளையும் உங்களை அணுக விடாதீர்கள்…
2.அருள் ஞானிகளின் உணர்வைக் கொண்டு அவைகளைத் துரத்தி அடியுங்கள்…!

இந்தப் பழக்கத்திற்கு வாருங்கள்.

அதன் வழி கொண்டு தொடர்ந்து சென்றால் அழியாப் பெரு வாழ்வு என்ற அழியாச் செல்வம் பெறலாம். ஆகவே இந்தச் செல்வத்தைத் தேடிச் செல்லலாம்… அது என்றும் நிலைத்து இருக்கும்…!

மற்ற செல்வம் குணச் செல்வம் இருந்தாலும் கூட அது சிறிது காலமே…! அது அழிந்து விடும். ஆனால் அழியா ஒளிச் சரீரம் என்றும் அழியாது.
1.நீங்கள் அனைவரும் அந்த அழியாப் பெரு வாழ்வு பெறுவீர்கள்.
2.நிச்சயம் அந்த வழியில் செல்வீர்கள்

நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு வாழ்க்கையில் இதை நீங்கள் பயன்படுத்திச் செயல்படுத்த வேண்டும். அனைவரும் ஒரு குடும்பம் என்ற நிலைக்கு வர வேண்டும்.

ஒரு பிரபஞ்சம் எவ்வாறு இயக்குகின்றதோ குரு வழியில் அதாவது…
1.நமது குருநாதர் இயக்கத்திற்குள் பெரும் பிரபஞ்சமாகி
2.உலகில் வந்த தீமைகளை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைந்து
3.தீமைகளை நீக்கிடும் சக்தியாக ஒருக்கிணைந்த நிலையில் நாம் ஒன்றுபடுவோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவோம்… உலகைக் காக்கும் உணர்வை நமக்குள் விளைய வைப்போம்…. நம் பார்வையால் உலகம் தீமைகளில் இருந்து விடுபடும் நிலையாக வளரட்டும்…!

எல்லா மகரிஷிகளையும் வேண்டுவோம்… தியானிப்போம்… தவமிருப்போம்.

Leave a Reply