உயிர் அணுக்களின் வீரியத்தைக் கூட்டி “உயிராத்மாவின் பரிமாணத்தைப் பெருக்கும் செயல்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

humanbody soul

உயிர் அணுக்களின் வீரியத்தைக் கூட்டி “உயிராத்மாவின் பரிமாணத்தைப் பெருக்கும் செயல்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அண்டத்தின் தன்மையை நாம் அறிய முடியும். ஆனால் அண்ட கோளங்கள் நம்மை அறியாது.

உணர்வின் எண்ணத்தைக் கொண்டு மனிதனின் பகுத்தறிவு உணரும் பக்குவத்தில்…
1.ஆதிசக்தியின் படைப்பான உயிர் காந்தத்தில் வளர்க்கப்பட்ட
2.ஆத்ம சரீர உயிர் அணுக்களின் வலுவைக் கொண்டுதான்…
3.சரீர ஆத்ம உயிரின் வலுவின் பரிமாணத்தை
4.மங்காச் செயல் நிலைக்குச் செயல் கொள்ள முடியும்

அதாவது எண்ணத்தின் உணர்வைச் சமம் கொண்டு நாமெடுக்கும் சுவாச உணர்வின் ஜெப அலையில் சேர்க்கப்படும் மகரிஷிகளின் மின் காந்த அலையின் தொடர்பினால் “அது சாத்தியமாகும்…”

தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது அங்கங்கள் உருப்பெறும் காலத்தில் அதற்குகந்த உஷ்ண அலையின் இயக்க உருவக அமைப்பாய் நுரையீரலும் இதயமும் சதையும் மயிர்க்கால்களும் நகமும் பல்லும் உருவாக ஊன் தன்மையின் அலை சக்தியில் ஆவியாகி எலும்பின் வளர்ச்சியைக் கொண்டு உருப்பெற்று அங்கத்தின் கூட்டு இயக்கங்களாய் உயிர் அணுக்களின் வளர்ச்சி பெற்று பிறப்பு நிலை பெற்றோம் அல்லவா…!

அதைப் போன்று… சரீர இயக்கத்தில் மனித உணர்வின் எண்ண வளர்ச்சியில்… ஆத்ம உயிர் இயக்கத்தின் வலு நிலை கூடக் கூட… அங்கங்களின் உயிர் அணுக்கள் வீரியத் தன்மை பரிமாணம் பெறும்.

1.உடலின் பசிக்கு உணவும் உணர்வின் உந்தலுக்குகந்த செயலும் கொள்ளும் தன்மை தான் மனிதச் சரீர இயக்கம் உள்ளது.
2.பல கோடிச் சரீரங்களில் இந்த உயிராத்மா பெற்ற வலுத் தொடரை
3.சரீர வாழ்க்கைத் தொடர்பு காலங்களில் சேர்க்கப்படும் சலிப்பு சஞ்சலத் தொடர்புடன் சரீர வாழ்க்கை முடிவுற்று
4.உயிராத்மாவின் ஒளியைச் சரீர இயக்கமுடன் முடிவுற்று மங்கச் செய்யாமல்
5.ஆதியிலே எந்த ஒலி கொண்டு ஒளி பெற்று ஆத்ம உயிரின் உயிர் அணுக்கள் வளர்ந்து…
6.ஒலி… ஒளி… சுவை… உணர்வு… மணம்… குணம்… ஆகியவற்றை இச்சரீரம் பெற்றதோ
7.அத்தன்மையில் வளர்ச்சியின் வலுத் தொடரை மனித வாழ்க்கையில்
8.அடுத்த நிலைக்கு உணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு வலுவாக்கினால்
9.மனிதத் தன்மையின் சித்துத் தன்மையைச் செயலில் ஒவ்வொருவரும் காண முடியும்.

சாதாரண வாழ்க்கை நிலையில் கிடைக்கும் ஞான வளர்ச்சி… ஆரோக்கிய நிலை… அங்கங்களின் செயல் தன்மை… இவற்றின் நிலையைக் காட்டிலும்
1.ஜெப சக்தியின் உயிர் அணுவின் வீரிய வளர்ச்சியின் செயலைக் கொண்டு – “ஒளி பாய்ச்சி”
2.நினைத்ததை மனிதன் செயலாக்கக் கூடிய வலு வீரியத் தன்மை செயல் கொள்கின்றது.

ஆங்காங்கு உள்ள சிற்றாறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் கடலாகச் செயல்படுகிறது. அதைப் போன்று நம் செயலின் தன்மையில் வேகத்தைக் கூட்டும் பொழுது “துரிதத் தன்மை” ஒவ்வொன்றிலும் ஏற்படுகிரது.

ஆக… இச்சரீர இயக்கத்தின் உயிர் அணுக்களை வீரியப்படுத்த வேண்டும் என்றால்
1.ஒலி நாதத்தைக் கொண்டு ஒளி பாய்ச்சி
2.எண்ணத்தின் கூர்மையால் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும் வீரியப்படுத்தி
3.“உயிரின் பரிமாணத்தின் வளர்ச்சி கொள்ள…” எண்ணத்தால் எடுக்கும் தியானத்தைக் கொண்டு
4.மங்காத் ஒளித் தன்மையைப் பெற முடியும்.

 

Leave a Reply