வெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்

gnana bhoomi m- earth

வெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று அன்றைய ஞானிகள் சொன்னதை நாமும் ஓதிக் கொண்டே உள்ளோம்.

நம் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான்… அண்டத்தின் ஆற்றல்களை எடுத்துப் பிண்டத்திற்குள் ஒளியாக மாற்றி இன்றும் ஒளியாகத் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எந்நாட்டவரும் பின்பற்றி அந்த அகஸ்தியன் வழிகளிலே எல்லோரும் வளர முடியும்.

1.என் நாடு… உன் நாடு…! என்று நிலை இல்லாதபடி
2.எந்நாட்டவரும் அவன் வழியிலே சென்றால்
3.அருள் ஒளியின் சுடராக அகஸ்தியனைப் போன்று முழுமை அடையலாம்.

இந்த உடலை விட்டு அகன்ற பின்… என்றும் ஏகாந்த நிலையில்… ஏகாந்த வாழ்க்கை வாழும் உணர்வைக் காட்டிய அந்த அகஸ்தியன் அருள் வழியில் நாம் திகழ்தல் வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் யார்… எதை… எப்படி… எந்த வகையில்… குறைகளைக் கண்டாலும்
2.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அந்தக் குறையை வளர்த்திடவே கூடாது.
3.அருள் ஒளி பெருக வேண்டும்…! என்ற உணர்வைத் தான் செலுத்திட வேண்டும்.

குறைகள் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.. தெளிந்திடும் மனம் வேண்டும்… தெரிந்து.. தெளிந்து… தெளிவாக வாழும் அந்தத் திறன் பெறவேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் உருவாக்கிவிட்டால் “பகைமை உணர்வுகள் மாறும்…!”

இதை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது…
1.ஒரு காலம்… அவர்களுக்குள் இருக்கும் தவறை உணர்வார்கள்…!
2.நம்மைப் பற்றி எண்ணும் பொழுது அவர்களுக்குள் சிந்திக்கும் செயலும்… மாற்றியமைக்கும் திறனும் நிச்சயம் வரும்.

ஆகவே மனிதர்கள் நாம் இந்த அருள் ஒளியின் தன்மையைப் பெற்று மற்றவர்களுக்கும் பாய்ச்சிட வேண்டும்.

ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ அதைப் போல் ஒளியான உணர்வுகளை அவர்களுக்குள் நாம் பாய்ச்சும் பொழுது
1.பல தீமையான உணர்வுகளுக்குள் அவர்கள் அடைபட்டிருந்தாலும்
2.நம்மைத் திட்டி அவர்கள் ஏளனப்படுத்தியிருந்தாலும்
3.நாம் பதிக்கும் அருள் உணர்வுகள் ஒரு சமயம் இயக்கப்பட்டு
4.நாம் சொன்ன உணர்வின் நினைவுகள் அவருக்குள் கிளர்ந்தெழுந்து
5.அவருக்குள் இந்த ஒளியின் தன்மை பெறும் தகுதி பெறும்.
6.அவரை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் நிலையும் ஏற்படும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

Leave a Reply