முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெற முடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

spiritual stiffness

முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறமுடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அகம் புறம் சூட்சமம் இவற்றின் உண்மைத் தத்துவத்தை உணராமல் புற நிலையைக் காணும் வாழ்க்கையின் சுழற்சி ஓட்டம் தான் இன்று உள்ளது. சூட்சமத்தால் வெளிப்படுத்தப்பட்ட பல தத்துவங்கள் மறைக்கப்பட்ட நிலையில் தான் இன்றளவும் உள்ளது.

மனித ஞானம் பக்குவம் பெற்று… வாழ்க்கை என்ற கூட்டமைப்பு நெறி முறை நிகழ்ந்த காலத்திலிருந்தே… மனித ஞானத்தின் வாழ்க்கையின் வழி முறைச் செயலுக்கு “பல பக்குவ ஆரோக்கிய நிலைகளைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்…!”

சமைத்து உண்ணும் உணவைப் பச்சை வாழை இலையில் சூடாகப் படைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தியது சித்தர்கள் தான்…!

உணவின் உஷ்ணம் வாழையிலையின் மீது பட்டு அதிலிருந்து வெளிப்படும் ஆவிச் சத்துடன் உணவை உண்ணும் பொழுது
1.உணவின் சுவையும்…
2.அவ்வாவியிலிருந்து வெளிப்படும் இரசசத்தான அமில குணம் உடலுக்குள் சேர்ந்து
3.உணவின் செரிப்பிற்கும் உடல் ஆரோக்கியத் தன்மைக்கும் வழிகாட்டியாக உள்ளதன் நிலையை உணர்ந்து
4.அந்தப் பக்குவ முறையைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்.

இதைப் போன்று வாழ்க்கை நெறிக்குப் பல உண்மைகளை உணர்த்திச் சென்றார்கள். அதைப் போன்ற சூட்சமத்தால் மறைக்கப்பட்ட பல நிலைகள் இன்றும் உள்ளன வாழ்க்கையில்…!

ஆதி சக்தியின் பரம்பொருளின் சக்தி நிலையைச் சிறிய இவ் இரண்டு கண்களைக் கொண்டு பரந்த கண்ணுக்கெட்டிய பலவற்றையும் பார்க்கும் சக்தி கொண்ட மனிதப் படைப்பு தான் நாம்…!

விஞ்ஞானத்தில்… இன்று ஓர் இடத்திலிருந்து ஒளி பரப்பபடும் உருவத் தொடர் காட்சிகளை இக்காற்றில் கலக்க விட்டுப் பல மைல்களுக்கு அப்பால் அதே உருவத்தின் செயலை அமிலச் சேர்க்கையின் உலோக அலைத் தொடரில் காணும்படி செய்கிறார்கள்.

அதாவது மின் அலையின் மோதலினால் எங்கோ தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சிதனை… காற்றலையில் கலந்து வரும் அந்த அலைத் தொடரை உருவமாக்கி இருந்த இடத்திலேயே பார்க்கச் செய்கின்றனர்.

இதைப் போன்ற ஞானத்தைக் கொண்டு
1.ஆத்ம தியானத் தொடரால் இவ் எண்ணத்தின் உந்தலை எதில் செலுத்துகின்றோமோ
2.அத்தொடரில் உள்ள நிலைகள் அனைத்தும்
3.புருவத்தின் மத்தியில் உள்ள எலும்பு கவன நரம்புகளில் எண்ணிய சுவாச மோதல் ஏற்பட்டவுடன்
4.எதை எண்ணித் தியான நிலை எண்ணம் செல்கின்றதோ
5.அங்கு நடக்கும் நிலையைத் தொலைக்காட்சியில் காண்பதைப் போன்று
6.பக்குவம் பெற்ற ஆத்ம ஞானத்தால் காணவும் ஒலி/ஒளி கேட்கவும் முடியும்.

ஆத்ம ஞானத்தால் முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறமுடியும்…!

சென்ற காலம் நடந்தவை யாவையுமே இக்காற்றலையில் தான் கலந்துள்ளன. உணர்வின் எண்ணத்தைப் பின்னோக்கிய அலைத் தொடரில் செலுத்தப்படும் நிலைக்கொப்ப உயிரணு தோன்றிய காலம் தொட்டே மனித ஞான சக்தியால் எதனையும் காண முடியும்.

நிகழ் நிலையையும் எண்ணத்தைச் செலுத்தும் உணர்வின் மோதலினால் “ஞானதிருஷ்டி” என்று சித்தர்கள் உணர்த்திய நிலையால் நிகழும் காலத்தையும் அறியலாம்.

எதிர் கால நிலையை நாளை நடப்பதை இன்றெப்படி அறிய முடியும்…! என்ற வினா தான் இன்றைய செயலில் உள்ளது.

பிறப்பும் இறப்பும் ஆண்டவன் செயல்… காலதேவனின் கருணை…! என்ற எண்ணம் பக்தி மார்க்கத்தில் உணர்த்துகின்றார்கள்.

அதையே விஞ்ஞானின் அமிலச் சேர்க்கையின் நிலையை இயந்திரச் சாதனங்களின் துணையைக் கொண்டு கால நிலைகளின் மாற்றத்தையும் மண்டலச் சேர்க்கைக் காலங்களில் புள்ளி விவரங்களையும் வைத்து உணர்த்தத்தான் செய்கின்றனர்.

ஒரு இயந்திரத்தால் உணரக்கூடிய எதிர்கால நிலைகளை
1.ஆத்ம ஞான வலுக்கூட்டிக் கொண்ட ஞான சக்தியினால்
2.எதிர் காலத்தில் நடக்கும் நிலைகளை இன்றே உணரக்கூடிய உண்மை பெறும் நிலைய அடையலாம்.

“முக்காலமும் உணரும் பொற்காலமாக..” இவ்வாத்ம காலத்தைப் பக்குவப்படுத்துங்கள் “பொற்கோவிலாக..” ஆத்மாவின் வளர்ப்பில் எவ் ஈர்ப்பின் உணர்வும் மோதாமல் “புடம் போட்ட பொன்னாகப் பக்குவப்படுத்துங்கள்…”

ஈயம் பித்தளை செம்பு தங்கம் இவற்றில் திரவகத்தை விடும் பொழுது மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கம் எப்படித் தனித்து நிற்கின்றதோ அதைப் போன்ற புடம் போட்ட தங்கமாக இவ்வாத்ம வலுவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எக்காலமும் அறியவல்ல ஆற்றலும்… முக்காலமும் உணரும் சக்தி நிலையும்.. இவ்வாத்ம ஞானத்தால் பெறவல்ல சக்தியை.. இந்த உபதேசத்தின் சக்தியால் பெறும் ஜெப தியானத்தால்…
1.என் ஈர்ப்பின் வட்டத்தில் வழி வந்த
2.ஆத்ம தியானம் கொண்ட தம்பதிகள் ஆண் பெண் இருவரும் இணைந்து
3.என் சக்தி நிலையில் உணர்த்தப் பெற்ற உபதேசத்தின் உயர்வை இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் வளர்த்து
4.தன் ஆத்ம தொடர்பு கொண்ட பல ஆத்மாக்களுக்கும் இந்த ஆத்ம தியானத்தின் உண்மைச் சத்தியத்தை உனர்த்தி
5.ஆதி பரம்பொருளின் சக்தியின் படைப்ப்பின் உயர்வுப் படைப்பை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
6.”சக்தியின் சக்திக்கே.. ஆண் பெண் இனம் வளரச் சக்தி தாருங்கள்…!”

 

Leave a Reply